|
தி.மு.க. ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது மு.க. குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும், குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதுமே பயம் தென்பட ஆரம்பித்து விட்டது. சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன.
‘சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களைக் கேட்டு மிரட்டுகிறார், வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார்’ என சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன் ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன. ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை. இவர்களது அநியாயத்திற்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத் துறையினர் ஏங்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும், அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர். அப்போதும் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் மூலம் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பத் தொடங்கினார்கள். சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே, செய்திகள் வந்தன. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டி.வி. நிருபர்கள் தேட ஆரம்பித்ததும்தான் ஊடகங்களுக்குத் தகவல் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தன்னைக் கைது செய்த போலீஸாரிடம், ‘‘நான் யார் தெரியுமா? என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள். என்மீது பொய் வழக்குப் போட்டால் உங்களை சும்மா விடமாட்டேன். டெல்லிவரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்’’ என அவர் மிரட்ட, போலீஸார் அலட்டிக் கொள்ளவே இல்லை. வேறு வழியி ல்லாமல் கடைசியில், ‘‘என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்றுகூட சொல்ல மாட்டீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் சக்சேனா.
‘‘பொய் வழக்கு போடச் சொல்வது உங்கள் பழக்கம். உங்கள் மீது புகார் வந்திருக்கிறது. உங்களைக் கைது செய்து இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள்’’ என்று போலீஸார் சொல்லிவிட்டனர். சக்சேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய, இரவு ஒன்பது மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலீஸார் அவரை ஆஜர்படுத்தினர்.
சச்சேனாவை படம் எடுக்க விடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர். சக்சேனாவும் மாஜிஸ்திரேட்டிடம், ‘‘என்னை அவமானப்படுத்த போலீஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்’’ என்று சொல்ல, மீடியாக்களை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட். வெளியே வந்த பத்திரிகையாளர்கள், ‘‘சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம். அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர். இதுபோல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்துப் போட்டார்கள். நாங்கள் போக மாட்டோம்’’ என்று கோஷம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய, போலீஸார் தவித்துப் போனார்கள்.
மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா, ‘‘என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை’’ என்று சொல்ல, புகாரைப் படித்துக் காட்டினார் மாஜிஸ்திரேட். அதில், ‘‘கந்தன் ஃபிலிம்ஸ் விநியோகஸ்தரிடம், விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்திற்கான விநியோக உரிமையைத் தருமாறு மிரட்டியதாகவும், மேலும், பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியைத் தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு, 82.53 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளதாக புகார் கொடுக்கப்பட் டுள்ளது’’ எனத் தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.
மேலும் 420(மோசடி), 406(கையாடல்), 385(மிரட்டல்), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட், அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதாகச் சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் நடித்து வெளியான ‘காவலன்’ படத்தின் தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு சக்சேனா ஒன்றரைக் கோடி ரூபாய் தராமல் ஏமாற்றுவதாகவும், கேட்டால் வீட்டுக்கு வந்து மிர ட்டுவதாகவும் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. புகார் கொடுக்கப்பட்டதும் ரொமேஷ்பாபுவை, போனில் மிரட்டியுள்ளார் சக்சேனா. ‘‘உனக்கு ரூ.2 கோடி தரமுடியாது. அதற்காக ரூ. 20 கோடிகூட செலவு செய்வேன்’’ என்று சொன்னாராம். அடுத்து, செக்கர்ஸ் ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கும், அடையாறில் தன்னைத் தாக்கியதாக ஒரு பெண் கொடுத்த புகாரும் கிண்டி காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
சன் பிக்சர்ஸ் இதுவரை ‘எந்திரன்’ தவிர வேறெந்த படத்தையும் நேரடியாகத் தயாரிக்கவில்லை. சன் பிக்சர்ஸுக்காக சக்சேனா பல தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. சக்சேனா கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் மீது புகார் கொடுக்க 18 தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். சக்சேனா கைது செய்யப்பட் டதை அடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் திரண்ட நிர்வாகிகளும், விநியோகஸ்தர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சக்சேனா கலாநிதி மாறனோடு லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர். கலாநிதி ‘பூமாலை’ நெட்வொர்க் ஆரம்பித்த காலத்தில் இருந்தே உடன் இருப்பவர். சக்சேனா கைது தொடர்பாக அவரது வழக்கறிஞர் சரவணன், ‘‘எந்தவொரு ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லாமல் சன் குழு மத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் இந்தக் கைது நடந்துள்ளது. போலீஸார் வழக்குகளை ஜோடித்துள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்’’ என்றார்.
வழக்கு தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “சக்சேனா மீது பல புகார்கள் வந்துள்ளன. தயாரிப்பாளரை ஏமாற்றிய பணத்தை இவரே எடுத்துக் கொண்டாரா? அல்லது சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு இதில் தொடர்பிருக்கிறதா? என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இதற்காக இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’’ என்றார்.
சக்சேனா மீது புகார் செய்த செல்வராஜ், ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாராம். அவரை விலைபேசியோ, மிரட்டியோ பணிய வைக்க முயற்சி நடக்கலாம் என் பதால், அவர் இருக்கும் இடம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறதாம்.
விமான நிலையத்தில் சக்சேனா கைது செய்யப்பட்டு, போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இரவு 9 மணிக்கு கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். சிறைக்குச் செ ல்லும்முன், லுங்கியும், புதிய சட்டையும் கொடுத்தனுப்பப்பட்டது. முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்சேனா, அதிர்ச்சி விலகாமல் காணப்பட்டார்.
தி.மு.க.வின் மிக மோசமான தோல்விக்கு, அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும், ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம் மிக முக்கியமான காரணம். தனது குடும்பத் தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு, இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியை விட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
|
Comments
காத்தை களவாண்ட ராசா... வயிரு வலிக்கிது யப்பா...
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.கலசுவடு.சொம்/இச்சுஎ௯3/பகெ58.அச்ப்[/ஃஉஒடெ]
Great info
கடந்த பல வாரங்களாக நம்ம டாப் டென்னில் முதலிடத்திலிருக ்கும் படம் 'அய்யோ கொல்றாங்களே'. முதல்வன் பட பாணியில் ஒரே நாளில் உலகத்தை திருத்துவது போல, 'அய்யோ கொல்றாங்களே' பட நாயகன் ஒரே மணி நேரத்துல உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்துவது போல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த காட்சிக்கு தியேட்டரில் அனைவரும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியதாகவும ், அந்த புண்ணுக்கு வைக்க சுண்ணாம்பு தட்டுப் பாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடுஇரவில் ஒரு பூனை கதாநாயகன் வீட்டில் நுழைய அவர் பழைய நினைவில் 'அய்யோ கொல்றாங்களே' என்று அலறும்போது "உண்மையிலேயே இவனை கொல்லுங்கடா" என்று தியேட்டரில் பலர் முணுமுணுப்பதை கேட்கமுடிகிறது. மொத்தத்தில் 'அய்யோ கொல்றாங்களே'......'எவன் மாட்டுனா எனக்கென்ன'
இந்த வாரம் நம்ம ரேட்டிங்ல 2வது இடத்துல 'கனிந்து அழுகிய மொழி'. தகப்பன் சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக பத்திரத்தில் கைநாட்டு வச்ச நம்ம கதாநாயகி, "அது கைநாட்டு இல்ல,அப்பன் வச்ச ஆப்பு" என்று உணரும் போது அவர் திகாரில் இருப்பதாக நெகிழவைக்கும் காட்சிகளை அமைத்திருக்கிறா ர் இயக்குநர். "20 பர்சண்ட ஆட்டைய போட்ட நானே உள்ள இருக்கேன். 60 பர்சண்ட் ஆட்டைய போட்ட என் பெரியாத்தாவையும ் விடாதீங்க" என்று கதாநாயகி கதறும் இடத்தில் படம் பார்க்கும் தாய்மார்கள் குடம் குடமாக கண்ணீர் வடிப்பதாக தியேட்டரில் வழுக்கிவிழுந்தவ ர் கொடுத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் 'கனிந்து அழுகிய மொழி'...... "நீ போம்மா அங்கிட்டு தள்ளி"
இவர்கள் எப்படி ஒரே சமயத்தில் 5 முதல் 10 படங்கள் எடுக்கின்றனர்? அவை எல்லாமே சன் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படுக்க ின்றன. மேலும் அவை யாவும் சன் டிவியில் நல்ல மதிப்பெண்கள் எப்படி பெறுகின்றன.? ஒரு 5 ஆண்டுகளுக்கு முன் இந்த கல்பாத்தி எங்கிருந்தார்கள ்? கொஞ்சம் விசாரித்தால் என்ன? மேலும் இது போன்று திடிரென்று தோன்றும் புதுப் பணக்காரர்களைப் பற்றி வருமான வரி அதிகாரிகள் யோசிக்க மாட்டார்களா? அவ்வளவு முட்டாள்களா? அல்லது அவ்வளவு கயவர்களா?[/ஃஉஒடெ]
கண்டிப்பாக வருமான வரி துறை என்பது அயோக்கியர்கள் நிரம்பியதுதான்...ஒரு சாதாரண நடுத்தர குடும்பஸ்தர் கடன உடன வாங்கி தன் பிள்ளைய இஞினியரிங் மெடிக்கல் என்று கல்லூரியில் சேர்த்தால் நேரே வந்து பணம் எப்படி வந்ததுன்னு துருவி துருவி விசாரிப்பார்கள் ..இதுவே அப்பன், தாத்தனின் அரசியல் ஊழல் வருமானம் தவிர எந்த ஆதாரமும் இல்லாத உதயநிதியும், தயாநிதியும் கோடிக்கணக்கில் கொட்டி படம் எடுத்தால் அதுக்கு எது பணம் என்று றந்தும் ேக்கமாட்டார்கள் ..மன்னிக்க..மாட்டான்கள் இந்த யோக்கியன்கள்...இளைச்சவனுக்குதா ன் சட்டமும் ஒழுங்கும்...நம்ம ஓட்ட வாங்கிட்டு நம்மையே ஏறி மிதிக்கும் அரசியல் வியாதி நாய்ங்களுக்கு சலாம் போட்டு கால நக்கி பிழைப்பு நடத்துவான்கள் இந்த ஆபீசர்கள்...(சகாயம், நரேஷ் குப்தா போன்ற நேர்மையாளர்கள் தவிர்த்து)
இவர்கள் எப்படி ஒரே சமயத்தில் 5 முதல் 10 படங்கள் எடுக்கின்றனர்? அவை எல்லாமே சன் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படுக்க ின்றன. மேலும் அவை யாவும் சன் டிவியில் நல்ல மதிப்பெண்கள் எப்படி பெறுகின்றன.? ஒரு 5 ஆண்டுகளுக்கு முன் இந்த கல்பாத்தி எங்கிருந்தார்கள ்? கொஞ்சம் விசாரித்தால் என்ன? மேலும் இது போன்று திடிரென்று தோன்றும் புதுப் பணக்காரர்களைப் பற்றி வருமான வரி அதிகாரிகள் யோசிக்க மாட்டார்களா? அவ்வளவு முட்டாள்களா? அல்லது அவ்வளவு கயவர்களா?
இந்த வாரம் நம்ம ரேட்டிங்ல 3வது இடத்துல 'கேடி பிரதர்ஸ்'. ஹேர்பின்ல இருந்து ஏரோபிளேன் வரைக்கும் காலாவதி மாறனும், பயாநிதி மாறனும் எப்படி வகைதொகை இல்லாமல் கொள்ளை அடிக்கிறாங்க என்பதை படம் பார்ப்பவர்களை "சாவடி" அடிச்சு சொல்லியிருக்காங ்க. இந்தியா முழுக்க ஒரு ரூபாயில் பேசலாம் என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தும் பயாநிதி, யாருக்கும் தெரியாம தன்னோட வீட்டுலேயே ஒத்த ரூவா கூட கொடுக்காம ஒரு டெலிபோன் எக்செஞ் நடத்துனத பார்த்து படம்பாக்குறவங்க வாயை பொளப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் 'கேடி பிரதர்ஸ்'........ 'சாருங்களுக்கு திகார்ல ரெண்டு ரூம் ரெடி'
இந்த வாரம் நம்ம ரேட்டிங்ல 4வது இடத்துல இருக்கிற படம் 'நீரா நீ கேடியா'. இந்த படம் ஒரு ஹீரோயின் பேஸ்டு சப்ஜெக்ட். 'காத்தை களவாண்ட' கேசுல ஆணதிக்கத்தை ஒழித்துகட்ட, இந்த படதோட ஹீரோயின் எந்த அளவுக்கு போகிறார் என்பதை படம் பார்ப்பவர்கள் யூகிக்க முடியாத அளவுக்கு திரக்கதை அமைத்திருக்கிறா ர் இயக்குநர். இவரும் 'டாடா'வுக்கு 'டாடா' காட்டிடுவாறோன்ன ு ஒரு டிவிஸ்ட் வச்சி, படம் பார்க்கிறவர்களை சீட் நுனிக்கி கொண்டுவந்து அப்புறம் தள்ளிவிட்டுருக் காங்க. மொத்ததில் 'நீரா நீ கேடியா'.....'மகளிர் மட்டும்'
இந்த வாரம் நம்ம ரேட்டிங்ல 6வது இடத்துல காலாவதி மாறன் கேபிள் போட பள்ளம் தோண்டுனதால குண்டும் குழியுமா இருக்கு.
அதனால அடுத்த இடமான 5வது இடத்தில் 'பால்வா இந்தா அல்வா'. இந்த படத்து ஹீரோ மூக்கை சொறியிரதுக்கு கூட தலையை சுத்தி,ஆள் வச்சு சொறியிறாரு.இந்த ஹீரோ வளர்ந்து பெரிய்ய ஆளானதுக்கு அப்புறமும் இந்த பழக்கம் அவரை விடல. ரொம்பவும் சந்தோஷமா போய்கிட்டு இருக்கிற இவர் வாழ்க்கையில் இவரோட அந்த கெட்ட பழக்கம் எப்படி அவரை 'காத்த களவாண்ட' கேசுல இழுத்துவிடுது என்பதை தான் ஸ்கிரினில் கதற கதற சொல்லியிருக்காங ்க. இந்த படத்தோட ஹைலைட் "இந்த 214 கோடி இங்க இருக்கு.அப்ப கலைங்கர் டீவி கொடுத்த 214 கோடி எங்க?" என்ற சி.பி.ஐ கவுண்டமணி கேள்விக்கு இந்த பால்வா "அது தான்னே இது" என்று அடிக்கும் காமெடியில் தியேட்டரே குளுங்குகிறது. மொத்ததில் 'பால்வா வாயில் அல்வா'.... ஒரு கமெர்ஷியல் பஞ்சாமிர்தம்.
இந்த வாரம் நம்ம ரேட்டிங்ல 7வது இடத்தை பிடிச்சிருக்கும ் படம் 'ஜெகத் கஸ்மாலம் பார்'.இந்த படத்தோட ஹீரோவான ஜெகத் 'தமிழ் மையம், தெலுங்கு ஓரம்,மலையாள வட்டம்,கன்னட சதுரம்' என்று பல அமைப்புகளை நிறுவி கொள்ளை அடிக்கும் ஒரு கூட்டத்தோட தலைவர்.'காத்தை களவாண்ட' கேசுல எல்லாரும் உள்ளே இருக்கும் போது, இந்த பேட்பாதர் மட்டும் எப்படி எல்லாருக்கும் டிமிக்கு கொடுத்துட்டு எஸ்கேப் ஆகுறாரு என்பது தான் மயிர் கூச்செரியும் கிளைமாகஸ். மொத்தத்தில் 'ஜெகத் கஸுமாலம் பார்'.... 'பார்க்க கூடாத ஒரு படம்'
இந்த வாரம் நம்ம ரேட்டிங்ல 9வது இடம் காலியா இருக்கிறதால அந்த இடத்தை ஒரு சதுர அடி 5000 ரூபாய் வரைக்கும் காலாவதி மாறனும், பயாநிதி மாறனும காசே குடுக்காம கிரையம் பண்ணிட்டதா தகவல் வருது.
அடுத்து இடமான 8வது இடத்துல 'சாதிக்க பொறந்த பாட்சா'. இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர். ரஜினி நடிச்ச 'பாட்ஷா' படத்தில் நண்பன் 'மாணிக்கத்துக்கா க' உயிரைக் கொடுத்த 'பாட்ஷா' மாதிரி, தன்னுடைய நணபன் 'காத்தை களவாண்ட ராசா'வுக்கு கழுத்து வலி வரக் கூடாதுன்னு தன்னோட கழுத்துல சுருக்கு மாட்டிகிட்டு செத்து போயிட்டாரு. மொத்தத்தில் 'சாதிக்க பொறந்த பாட்சா'....'சாதிக்காமலே போயிட்டாரு'.
இந்த வாரம் நம்ம ரேட்டிங்ல 10வது இடத்தை பிடிச்சிருக்க படம் 'காத்தை களவாண்ட ராசா'. இந்த படத்தோட ஹிரோ 'விழுப்புரத்துல' பொறந்து, ஒரு வக்கீலா வளருராரு. இரவுபகல் பாராத தன்னுடைய கட்சிப் பணியால இவர் மந்திரியாவும் ஆவுறாரு.ஆட்டை திருடி, மாட்டை திருடி கடைசியில 'காத்தை' கூட நம்ம ஆளு களவாண்டுறாரு. இவரோட வளர்ச்சி பிடிக்காத இவர் கூட்டாளிங்க இவரை ஜெயிலுக்கு அனுப்புறாங்க. ஊரை அடிச்சி உலையில் போட்டாலும், இவரை இவரோட குரு 'ததத்தாய கதிரவன்' என்று பாராட்டும் இடத்தில் தியேட்டரில் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. மொத்தத்தில் 'காத்தை களவாண்ட ராசா'..... 'கம்பி எண்ணும் ராசா'
இந்த வாரம் நம்ம ஜெயிலுக்கு புதுவரவு 'சரத் சக்சேனா'. நரிக்கே நாமத்தை போட்டு வாழ்றாரு ஹீரோ 'சக்சேனா'. ஒரு கால கட்டத்துல அவர் பண்ணின அட்டூழியத்தையெல ்லாம் கூட்டிக் கழிச்சு, அவரை பொடனிலயே தட்டி ஜெயிலுக்கு பார்சல் பண்றாங்க அவரால பாதிக்கப் பட்டவங்க. இறுதியில அவர் என்ன ஆனார் என்பது தான் கிளைமாக்ஸ். இந்த படத்துக்கான நம்ம ரேட்டிங்கை அடுத்த வாரம் பார்க்கலாம்.இப்போ அந்த படத்தில இருந்து சில காட்சிகள்.....
Kalpathi family used to own and run the successful SSI software training institutes in Chennai. They also had a body shopping outfit for a few years in USA before they ventured into property development and films.
புகார் அனுப்பியுள்ளார் .
அப்புகாரில், ‘’உத்தங்குடி நாகர் ஆலயத்திற்கு சொந்தமான தர்ம சாஸ்தன டிரஸ்ட்டுக்கு நாகேந்திர அய்யர் என்பவர் 1936ம் ஆண்டு 23 ஏக்கர் நிலத்தை வழக்கினார்.
அப்போது இந்த நிலத்தை யாருக்கும் விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்ட து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்கலாம் என்று போலியாக ஆவணம் தயார் செய்யப்பட்டது.
அதன் பிறகு கோவையை சேர்ந்த லாட்டரி ஏஜெண்ட் மார்ட்டின் என்பவர் பத்திரத்தை அவர் பெயரில் பதிவு செய்தார். அதன் பிறகு முன்னாள் திமுக அமைச்சர் அன்பழகனின் உறவினர் சுகுமாறன் என்பவருக்கு பவர் பத்திரம் மாற்றி தரப்பட்டது.
இந்நிலையில் தயா சைபர் பார்க் நிர்வாக இயக்குநர் காந்தி அழகிரி பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள து.
இந்த இடம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போலி ஆவணம் தயார் செய்து விற்கப்பட்டுள்ள து.
50 கோடி மதிப்பிலான இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானதாகும். எனவே அதனை மீண்டும் கோவிலுக்கு மீட்டுத்தர வேண்டும்’’ என்று கூறப்படுள்ளது
http://www.kalachuvadu.com/issue-93/page58.asp
என்னை பொறுத்தவரை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மண்டல் கமிஷன் அமல்படுத்திய பிறகு நாம் அவர்களைப்பற்றி பேசுவது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது நாம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தால் நமக்கு அறிவு, அரசியல்,
ஆட்சி அதிகார பலம் இருந்தும் நாம் இன்னமும் வளரவில்லை என்றே தெரிகிறது. அல்லது சரியான அறிவு கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் 5 முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக யார் ஆண்டார்கள் என்பது நமக்கு தெரியும். கிராமப்புற அரசு பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்று நாம் கேட்க முடியவில்லை. பள்ளிகளுக்கு கட்டடம், நாற்காலி,
கரும்பலகை சரியாக இல்லை என்று நாம் போராட முடியவில்லை.
மாணவர்களுக்கு லேப்டாப் தேவை இல்லை, முதலில் அடிப்படை வசதியும், கழிப்பறை வசதியும் தான் தேவை என்று அதிகாரவர்க்கத்த ை கேட்டு நம்மால் போராட முடியவில்லை. நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவு அரசு பள்ளிகள் வேண்டும் என்று நம்மால் அதிகாரவர்க்கத்த ை கேட்டு போராட முடியவில்லை. வீரம் விளைந்த சேர, சோழ, பாண்டிய, நாயக்க, பல்லவர்கள் என்று பறை சாற்றி
கொள்பவர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை. ஆனால் பார்பனர்களை மட்டும் குட்ட்றஞ்சாட்டி பேசுகிறோம்.
ஆனால் பார்பனர்களே, இரண்டு கேள்விகள் ஒன்று : தமிழில் "பிராமண பாஷை" எங்கு இருந்து வந்தது ?
இரண்டு: ஆலயத்திற்கு உள்ளே மக்கள் செல்லும் பொழுது, பொது மக்கள் நிற்கும் இடம் தாண்டி கருவரைக்கு பக்கத்துக்கு அறை வரை சென்று கடவுள் தரிசனம் செய்கிறீர்களே ? உங்களுக்கு வெட்கமாக இல்லையா ??
இவர்கள் எப்படி ஒரே சமயத்தில் 5 முதல் 10 படங்கள் எடுக்கின்றனர்? அவை எல்லாமே சன் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படுக்க ின்றன. மேலும் அவை யாவும் சன் டிவியில் நல்ல மதிப்பெண்கள் எப்படி பெறுகின்றன.? ஒரு 5 ஆண்டுகளுக்கு முன் இந்த கல்பாத்தி எங்கிருந்தார்கள ்? கொஞ்சம் விசாரித்தால் என்ன? மேலும் இது போன்று திடிரென்று தோன்றும் புதுப் பணக்காரர்களைப் பற்றி வருமான வரி அதிகாரிகள் யோசிக்க மாட்டார்களா? அவ்வளவு முட்டாள்களா? அல்லது அவ்வளவு கயவர்களா?
RSS feed for comments to this post