|
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்!
கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது செய்தது.
'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் சக்சேனாவை ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது போலீஸ்.
சக்சேனா மீது புகார் கொடுத்தவர், சேலம் மாவட்டத் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பொருளாளரும், கந்தன் ஃபிலிம்ஸ் உரிமையாளருமான செல்வராஜ். என்ன நடந்தது?
செல்வராஜ் தரப்பில் பேசினோம். ''விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத் தயாரிப்புக்காக அதன் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவுக்கு ஃபைனான்ஸ் செஞ்சோம். அவங்க அந்தப் படத்தை மொத்தமாக சன் பிக்சர்ஸுக்கு வித்துட்டாங்க. படத்தின் சேலம் மாவட்ட உரிமத்தை இனியவேல் குரூப்புக்கு 1.25 கோடிக்குக் கொடுத்தாங்க. ஆனா, அவங்களால் சொன்ன நேரத்துக்கு பணத்தை செட்டில் பண்ண முடியலை. பட ரிலீஸுக்கு முன்பு சேலம் வந்த சன் பிக்சர்ஸ் ஆட்கள் செல்வராஜை அழைத்துப் பேசி, 'உங்களுக்குத் தயாரிப்பாளர் தரப்பில் தர வேண்டிய 1.25 கோடிக்குப் பதிலாக, சேலம் மாவட்ட உரிமத்தை எடுத்துக்கோங்க. படத்தோட வசூலில் உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்துட்டு, மீதியை எங்களுக்குக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.
ஆனா, படம் எதிர்பார்த்த மாதிரி போகலை. மொத்த வசூலே 43 லட்ச ரூபாய்க்குள்தான். செல்வராஜுக்கு தர வேண்டிய மீதி 82 லட்சத்தைக் கேட்டு, பல தடவை அவர்களது அலுவலகத்துக்கு நடந்தார். ஆரம்பத்தில் அமைதியாப் பேசிட்டு இருந்த சக்சேனா ஒரு கட்டத்தில், 'பணம் எல்லாம் தர முடியாது. உன்னால் என்ன முடியுமோ, அதை நீ பார்த்துக்கோ’ன்னு பேச ஆரம்பிச்சிட்டார். நாங்களும் பல தரப்புகளில் இருந்து பேசிப் பார்த்தோம். பணத்தைத் திருப்பிக் கொடுக்குற மாதிரி தெரியலை. அதோட, எங்களுக்கும் மிரட்டல் விடுத்துட்டே இருந்தாரு. வேறு வழி தெரியாமத்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் செஞ்சோம்...'' என்று சொன்னார்கள்.
ஏற்கெனவே இதே சக்சேனா மீது, செக்கர்ஸ் ஹோட்டலைத் தாக்கியதாக ஒரு புகார் உள்ளது. விஜய் நடித்த 'காவலன்’ பட விவகாரம் தொடர்பாகவும் சக்சேனா மீது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சக்சேனாவை கஸ்டடி எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது போலீஸ் தரப்பு. அதே தினத்தில், சக்சேனாவும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, '5-ம் தேதி சக்சேனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
போலீஸ் கஸ்டடி கிடைக்கும்பட்சத்தில், சக்சேனா மீது உள்ள வேறு சில வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறதாம் காவல் துறைத் தரப்பு.
சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் திரிபாதியிடம் பேசினோம். ''சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் செல்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நம்பிக்கை மோசடி, வஞ்சித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து இருக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும்!'' என்று சொன்னார்.
சக்சேனா தரப்பில் சைதை நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம். ''இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இரண்டே பக்க காகிதத்தில் அவசர அவசரமாக இந்த வழக்கை தயாரித்து உள்ளது தமிழக போலீஸ். இதைச் சொல்லி நாங்கள் ஜாமீன் கேட்டோம். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து புதிய வழக்குகள் போட்டுவிடக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறோம். மற்றபடி இது ஜாமீன் தரக்கூடிய சாதாரண வழக்குதான். போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு பெரிய வழக்கு அல்ல. எங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் சொல்வோம்!'' என்று கூறினார்.
சக்சேனா கைது செய்யப்பட்ட அதே தினத்தன்று, அரசு கேபிள் டி.வி. அமைப்புக்கான தலைமை அதிகாரிகளை நியமித்து அரசின் அறிவிப்பும் வெளியானது. ஒரு புறம் அரசு கேபிள் டி.வி-யை துவங்குவதற்கான அதிரடி வேலைகள் ஆரம்பமாகும் நேரத்தில், குறைந்தபட்சம் சில நாட்களாவது கேபிள் ஆபரேட்டர்களிடம் யாரும் பேசி மனதைக் கலைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சக்சேனாவை சிறையில் அடைத்தார்களோ என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
நன்றி ஜுனியர் விகடன்
|
Comments
வீடு- அலுவலகத்தில் சோதனை கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் சேலம் வந்தனர்.
அவர்கள் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே வசிக்கும் சினிமா வினியோகஸ்தர் செல்வராஜின் வீட்டிற்கு சென்றனர். செல்வராஜிடம் உங்களிடம் விசாரிக்க வேண்டும் என கூறி அவரிடம் சம்மனை கொடுத்தனர். இதை வாங்கி பார்த்த செல்வராஜ் விசாரணைக்கு ஒத்துக்கொண்டார் .
கழுகார் பகுதியை சரியாக படித்து இருக்கிறீர்கள்.
அது இனி 'கழுகார்' இல்லை, "கேடியார்" என்று அழைக்கப்படலாம்.
கேடிக்களின் நாடித்துடிப்பு என்று சவுக்கு தலிப்பு போட்டது எவ்வளவு சரியாய் போய்விட்டது பாருங்கள்.
WHEN CHECKERS HOTEL INCIDENT HAPPENED ALSO, JV DID NOT REPORT IT.
JV AND KALUGAR SHOULD HONESTLY ACCEPT THEIR BOSSES ARE KD BROTHERS AND THEY WILL DECLARE THAT THEY WILL SUPPORT KD BROTHERS ATROCITIES AND CORRUPTION.
திமுக மற்றும் முக ஆகியவற்றை அழித்ததில் பெரும் பங்கு இந்த மாறனுக்கு உண்டு.
அடுத்தவன் பணத்தை மோசடி செய்வதையே தொழிலாக வைத்திருந்த ஒருவனை கைதுசெய்தால்
அந்த மோசடி பற்றி எழுதாமல் அரசு கேபிளுக்காக கைது செய்வதாக திசை திருப்புகிறார்க ள்.
சீனிவாச ஐயரே உனக்கு இது தேவையா?
ராஜராஜன்
விகடன் திசை திருப்பப் பார்க்கிறது!... கால காலமாக தமிழ்ப் பத்திரிக்கைகளில ் சிறந்து விளங்கிய விகடன் இப்போ இவங்க கையில் கிடைச்சு விளங்காத விகடாயிடுச்சு!...[/ஃஉஒடெ]
விட்டல் அவன் முரசொலி மாரனின் அக்கா மகன் தானே
சகோதரர்கள் பாசம் வெளிபடுகிறது. மேலும் விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளில் உண்மை இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கிறது இந்த வார ஜூனியர் விகடன் .
1 . ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடன் செய்தி போலவே இல்லை.
2 . "எங்களை மாற்ற நினைத்தால் கட்சி அழிந்துவிடும்" இதுவே ஜூனியர் விகடனின் அட்டை பட வசனம்
இது வீரபாண்டியர் சொன்னதாக எழுதப்படிருக்கி றது . ஆனால் மறைமுகமாக சொல்லப்பட்டிருக ்கும்
எச்சரிக்கையாகவே இதை எடுத்து கொள்ளவேண்டும் .இங்கே விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளை கொஞ்சம் நினைவுபடுதிக்கொ ளுங்கள். யார் யாருக்கு சொன்னது என்பது தி.மு.க வின் தொண்டர்களுக்கு
புரியும்.
3 . கழுகார் செய்தியில் ஸ்டாலின் மற்றும் அழகிரி பற்றிய செய்திகளை நன்கு கவனித்தால் இருவருக்கும் மூட்டிவிட
ஆசை கொண்டவர்களின் தந்திரம் விளங்கும் .
ஆக மொத்தம் ஸ்டாலின் மற்றும் அழகிரியை சண்டை போட வைத்து கழகத்தை கைப்பற்ற முயற்சி எடுக்கப்படுகிறத ு.[/ஃஉஒடெ]
என்னமோ நடக்குதுங்க நாட்டிலே எப்படியோ உண்மைவெளியில்வந ்த சரித்தான்
சகோதரர்கள் பாசம் வெளிபடுகிறது. மேலும் விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளில் உண்மை இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கிறது இந்த வார ஜூனியர் விகடன் .
1 . ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடன் செய்தி போலவே இல்லை.
2 . "எங்களை மாற்ற நினைத்தால் கட்சி அழிந்துவிடும்" இதுவே ஜூனியர் விகடனின் அட்டை பட வசனம்
இது வீரபாண்டியர் சொன்னதாக எழுதப்படிருக்கி றது . ஆனால் மறைமுகமாக சொல்லப்பட்டிருக ்கும்
எச்சரிக்கையாகவே இதை எடுத்து கொள்ளவேண்டும் .இங்கே விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளை கொஞ்சம் நினைவுபடுதிக்கொ ளுங்கள். யார் யாருக்கு சொன்னது என்பது தி.மு.க வின் தொண்டர்களுக்கு
புரியும்.
3 . கழுகார் செய்தியில் ஸ்டாலின் மற்றும் அழகிரி பற்றிய செய்திகளை நன்கு கவனித்தால் இருவருக்கும் மூட்டிவிட
ஆசை கொண்டவர்களின் தந்திரம் விளங்கும் .
ஆக மொத்தம் ஸ்டாலின் மற்றும் அழகிரியை சண்டை போட வைத்து கழகத்தை கைப்பற்ற முயற்சி எடுக்கப்படுகிறத ு.
விகடன் திசை திருப்பப் பார்க்கிறது!... கால காலமாக தமிழ்ப் பத்திரிக்கைகளில ் சிறந்து விளங்கிய விகடன் இப்போ இவங்க கையில் கிடைச்சு விளங்காத விகடாயிடுச்சு!...
எதுக்கு சுத்தி வளைச்சிகிட்டு... நேரா 'நக்கீரன்'ன்னு சொல்ல வேண்டியது தானே?
RSS feed for comments to this post