முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இப்போ இன்னா சார் செய்வ ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 88
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 07 ஜூலை 2011 12:30


 ஒங்க அண்ணாத்தே கலாநிதி லேங்குவேஜ்ல பேசுனாத் தானே சார் ஒனுக்கு நெல்லா புரியும் ? அதுனாலதான் அதே லேங்குவேஜ்….

 dayanidhi_maran

இன்னா தெனாவெட்டா இருந்த சார் நீ ? என்னா நெக்கலு, நையாண்டி ? யாருமே ஒன்ன ஒன்யும் பண்ண முடியாதுன்னு என்னா திமிரு ஒனுக்கு ?

 

நாளு பூரா ரிக்ஷா வலிச்சாலும், சாயங்காலம் ஒரு கட்டிங்குக்கு கூட தேர மாட்டேங்குது… சனியன் இந்த கஸ்மாலத்த உட்டுட்டு, சால்ட் கோட்ர்ஸ்ல மூட்ட தூக்கலான்னு பாத்தா ஒடம்பு கோஆப்பரேட் பண்ண மாட்டேங்குது… கட்டினு வந்த மூதேவி எப்போ பாத்தாலும், துட்டு குடு, துட்டு குடுன்னு கூவிக்கினே கீது… அது பெத்து வெச்சுருக்குற சனியன் பொஸ்தகம் வாங்கனும், பொயல வாங்கனும்னு பேஜார் பண்ணிக்கினு இருக்கு….   பொயப்பு வாயிக்கும் வவுத்துக்கும் கரீட்டாக் கீது….. பொயப்பே போராட்டமா எங்க லைஃப் போயிக்குனுக் கீது….

 

நீங்க இன்னாடான்னா, தெனிக்கும் ஒரு காரு…. ஊரு ஊருக்கு பங்களான்னு வாங்கிக்குனே போறீங்க… ? சரி… எல்லாம் பெரீய்ய எடத்து வெவகாரம்… அவுங்கள்ளாம் பொறக்கும்போதே பணக்காரங்களா கீறாங்க…. நம்ப தலையெயுத்து… இப்டி கெடந்து அல்லாடுறோம்னு நென்சுக்கினு இருந்தேன்….

 

நமக்கு ஒன்யும் படிக்கத் தெரியாது சார்….   ஆனா நம்ப கபாலி தெனிக்கும் தந்தி பேப்பர் படிப்பாம்பா… அதுல பட்சுட்டு சொல்றான்.. எல்லா துட்டும் பேமானித்தனம் பண்ணித்தான் சம்பாரிச்சீங்களாமே…. ? பெருமைக்காக சொல்லிக்கல சார்… இத்தினி நாளா ஒரு கட்டிங்குக்கு கூட துட்டு இல்லாம பேட்டரித் தண்ணியெல்லாம் குட்சுட்டு கவுந்தட்சு பட்துர்க்கேன்.. ஆனா நான் பேமானித்தனம் பண்ணதில்ல நைனா….   போன வெசால கெயமை கூட… “கன்னிம்மா … ஒது கட்டிங்குக்கு துட்டு குடும்மே…” ன்னு கேட்டேன்… “அந்தாண்ட போ… கயுவி மூஞ்சுல ஊத்திடுவேன்… நானே பொயலைக்கு கூட துட்டு இல்லாம அல்லாடிக்கினு கீறேன்.. வந்துட்டாரு” ன்னு திட்டி உட்ருச்சு பா…

 

ஆனா கூட நான் கவுந்தட்சு பட்தேனோ காண்டி, தப்பு காரியம் செய்யல சார்..

 l2007032812742

ஏன் சார்.. நீ பொறக்கும் போதே பணக்காரனாத்தானே பொறந்தே… ? என்ன மாதிரி ஒனக்கு என்ன அன்னாடம் காச்சி பொயப்பா ? அப்புறம் ஏன் சார் இப்புடி திருடித் தின்னே ?   ஒனுக்கு இன்னா சோறு துன்றதுக்கே துட்டு இல்லாமயா இருந்துச்சு…   அமேரிக்காவுலயெல்லாம் போயி பட்சுட்டு வந்தியாமே சார் நீ.. ? அமேரிக்காவுல போயி, அட்தவன் காச எப்டி திருடுறது எப்டின்னுதான் கத்துக்கினியா சார் ?

 

இன்னான்னமோ கதயெல்லாம் சொல்றாங்க சார் ஒன்னயும், ஒங்க அண்ணாத்தேயையும் பத்தி….   ஒங்க அண்ணாத்தே வாயத் தொறந்தா கூவம் நாறீப் பூடுமாமே ? அவ்ளோ கலீஜா பேசுவாராமே? ஒனுக்கு கீழே வேல செய்றவனயெல்லாம் தே… பையான்னு திட்டுவாராமே… ?   அமேரிக்காவுல போயி என்னாத்த பட்சீங்களோ போங்க….

 

அது என்னாமோ ஒங்க தோஸ்து பேரு ஒன்னு சொல்றாங்கப்பா… சாக்ஸோ ஷுவோ…   அந்த ஆளு வேற ஏகப்பட்ட துட்டு அட்சுர்காராமே… ?   அவரு சினிமாக்காரங்க நெறய்ய பேர ஏமாத்தி துட்டு அட்சுட்டாருன்னு சொல்றான் நம்ப டோனி….   ஏகப்பட்ட பேரு கம்ப்ளெயின்ட் குடுக்க ரெடியா கீறாங்களாமே…   அது காண்டி இல்லாம, அந்த சாக்சு, யாரோ பொம்மனாட்டியை கையப் புட்சு இசுத்துட்டு, அதுல கலாட்டா ஆயி, ஓட்டல அட்சு ஒட்சுட்டாராமே…. பட்ச ஒங்கள மாதிரி ஆளெல்லாம் இப்டி ரவுடித்தனம் பண்ணா இந்தப் போலீஸ் காரங்க கண்டுக்க மாட்றாங்க…. இன்னா சார் நாயம் இது ?

 

அப்போ யாரோ கண்ணாயிரம்னு ஒர்த்தர் போலீஸ் கமிஷனரா இருந்தாராமே….   அந்த மன்சன் தான் இந்த சாக்ஸை தொவைக்க விடாம, ச்சை, அரெஸ்ட் பண்ண வெடாமா காப்பாத்துனாராமே… ? என்னா ஒலகம் சார் இது ? ஏயைன்னா ஒரு நாயம்… பணக்காரன்னா ஒரு நாயமா சார் ?

 COMESENAR_Rajanderan

ஒரு தபா, நம்ப ரிக்ஷாவுலோ ஒரு பெர்சு ஏறுச்சு சார்….    எறங்கும் போது அது பைய நம்ப ரிக்ஷாவுலயே வுட்டுட்டு போயிடுச்சு சார்.   நானும் அந்தப் பெர்சு வந்தா குட்துடலாம்னு அந்தப் பைய வெச்சுருந்தேன்.     பையில என்னா கீதுன்னு பாத்தா, ஒரு சுருக்குப் பையில துட்டு, இன்னாமோ பேப்பர்லாம் இர்ந்துச்சு சார்.   சரி… பெர்சு வந்தா பையக் குட்துடலாம்னு, நம்ப இஷ்டாண்டுல இர்ந்த புள்ளாண்டானுங்க கைல சொல்டு சவாரிக்கு போயிட்டேன் சார்..

 

அதுக்குள்ள போலீஸ இட்டாருமா அந்தப் பெர்சு ?   போலீஸ் காரனோட வந்ததும், சார் இந்தா சார் அந்தப் பையின்னு சொல்லிக் குட்த்தேன் சார்..   பைய திருப்பிக் கொடுத்ததுக்குப் போயி, ‘ஏண்டா திருட்டுக் கம்மினாட்டி…   நேரா டேசனுக்கு வராம எங்கடா ஊரு மேயப் போன…. சோமாறின்னு போலீஸ்காரன், செவுட்டுலயே உட்டான் சார் ஒரு அறை. “சார் இல்ல சார்.. சவாரிக்கு தான் சார் போனேன்…. நம்ப இஸ்டான்டுல கூட சொல்லிக்கினு தான் சார் போனேன்” னு சொன்னதுக்கு திருப்பி ஒரு அறை விட்டான் சார்…

 

“….த்தா திருட்டு…………….. பையா….   இப்டி திருடிப் பொயக்கறதுக்கு ஒம்பொண்டாட்டிய கூட்டிக் கொடேண்டா” ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டான் சார்….     அப்டியே கண்ணுல தண்ணி வந்துட்சு சார்…. அன்னிக்கு புல்லா ரிக்ஷா மெறிச்சு, ஒரு கோட்டர் அட்சுட்டு தான் சார் பட்தேன்…..

 

ஒயுக்கமா பைய திருப்பிக் கொடுத்ததுக்கே போலீஸ்காரன், செவுட்டுல அறையறான்…     ஒரு பொம்பளைய கையப் புட்சு இசுத்துட்டு ஓட்டல அட்சு ஒட்சவன, அரெஸ்ட் பண்ணாம, வேடிக்கை பாக்குதே சார் போலீஸ்….   என்னா ஒலகம் சார் இது ?

 harry-potter-and-the-deathly-hallows-premiere-show-stills_29_090330123

அப்பாலிக்கா டோனி இன்னொரு மேட்டர் சொன்னான் சார்… அது என்னாமோ 2ஜியாமே…   நமக்கு வாயக்கா பஜ்ஜிதான் சார் தெர்யும்…. அதுல கோடி கோடியா துட்டு அட்சுட்டீங்களாமே…   அப்டியா சார்… சவாரிக்கு ஒரு முப்பது ரூபா கேட்டா இன்ன பேச்சு பேசுதுங்க தெர்யுமா சாவுகிராக்கிங்க… ? மொத்தம் எத்தினி கோடி அட்சுருப்பாங்கன்னு கேட்டேன்…   அது கணக்கே தெர்யாத அளவுக்கு அட்சுட்டாங்கன்னு சொல்றான்… மொத்தம் எத்தினி கோட்டர்டா டோனி வரும்னு கேட்டேன்…   வாய்க்க முயுக்க குட்சாக் கூட அந்தத் துட்டு தீராதாமே… அவ்ளோ துட்டா சார் நீ அட்ச ?

 

இன்னா சார் நீ… அவ்ளோ துட்ட வச்சு இன்னா சார் பண்ணுவ ?   காலில நாஷ்டாவா 5 இட்லி துண்ணுவியா சார் ?   இல்ல 10 இட்லின்னே வச்சுக்கோ….     அதுக்கு மேல ஒன்னால துன்ன முடியாதுல்ல சார் ?   அப்புறம் எதுக்கு சார், இவ்ளோ துட்ட திருடுன ?   பெரிய பங்களா வெச்சுருக்கியாமே நீ…   பளா பளான்னு நெறய்ய காரு வெச்சுருக்கியாமே….     எல்லா வசதியும் வோனும்னு நெனைக்றது தப்பு இல்ல சார்… அத்த ஒயச்சு சம்பாதிக்க வாணாமா ?     இப்டியா திருடித் திம்ப ?   இன்னா சார் நீ… எவ்ளோ பட்சும் ஒனக்கு புத்தி இப்டி ஆயிடுச்சே சார்……

 
Karunanidhi

ஒனுக்குதான் ஏற்கனவே டிவி நூஸ் பேப்பர்லாம் இருக்குதாமே சார்…   பெரிய்யய பணக்காரனாமே நீ… சன் டிவியே உன்தாமே….. அதுல தலிவர் படமெல்லாம் பாத்ருக்கேன் சார்……   ஒங்க தாத்தா கலிஞரு, எல்லாருக்கும் ப்ரீ டிவி குட்த்தாரு சார்… அப்போல்லாம் குஜாலியா இருக்கும்…. நம்பளயும மத்சு டீவிலாம் குடுக்குறான் புண்ணயவான்னு நென்சேன் சார்…   ஆனா, அந்த டீவியால ஒனுக்குதா லாபமாமே…. அதுனால நெறய்ய துட்டு சம்பாதிச்சுருக்கிறயாமே………   இன்னா சார் பண்ணப் போற அவ்ளோ துட்ட……

 

போன வாரம், வால்டாக்ஸ் ரோடுல, நம்ப சேரிலேயே நமக்கு பக்கத்து வூட்ல கீற கொமரேசு ஆக்சிடெண்டுல பூட்டான் சார்… லாரி வந்து ஏத்திட்சு… அந்த கொமரேசு இன்னா ஆட்டம் போடுவான் தெரியுமா… என்னிக்காவது துட்டு கெட்சுட்டா அவன் பண்ற ரவுசு இருக்கே…   அப்டி ஒரு ரவுசு பண்ணுவான் சார்….   ரொம்ப திமிறா பேசுவான் சார்… யாருக்கம் மருவாதி கொடுக்க மாட்டான்.   இப்போ செத்து பூட்டானே… இன்னா சார் ஆச்சு… இன்னாத்த கொண்டு போனான் ? அது மாதிரி தானே சார் நீயும் என்னிக்கு வேணாலும் சாவ ?   நீ மட்டும் என்னா இர்ந்துக்குனே இருக்க போறியா இன்னா ?

 

எங்க ஆத்தா காரி ஒரு கெயவி ஒன்னு இருக்கும் சார்… இப்போ மண்டைய பூட்சு… அது எப்போ பாத்தாலும் சொல்லும் சார்… ஒத்த காசா இருந்தாலும், ஒயச்சு சம்பாதிக்கனும்னு…..   நமக்கு ஒன்ன மாதிரி பங்களாவெல்லாம் இல்ல சார்….   பெரிய பெரிய ஓட்டலும் தெரியாது சார்.. நமக்கு ப்ளாட்பாரம் தான் வூடு…     எப்போவும் அங்கதான் பட்துருப்பேன்.. நம்ப குட்சையில, எடம் பத்தாது சார்…   பட்த்தா ஒரு நூறு கொசு கடிக்கும்…. நானும் அந்த கொசுவ அடிக்கவே மாட்டேன் சார்… ஏன்னா, நாம குட்சுட்டு போதையில இருக்கோம்… அந்த கொசு நம்பள கட்சுட்டு அதுவும் போதையாவட்டுமேன்ற ஒரு நல்ல மன்சு சார்…. இன்னா சார் சொல்ற ? ஆனா கூட, ப்ளாட்பாரத்துல பட்த்தா கூட தூக்கம் நிம்மதியா வரும் சார்….   எப்பயாவது கட்சி மாநாடு பந்த்னா மட்டும் வூட்டுக்குள்ள போயி பட்துக்குவேன். ஏன்னா, போலீஸ் காரன் பிளாட்பாரத்துல பட்துருக்கவங்கள புட்சுட்டு போயிடுவான் சார்…..

 RRK_6480

அப்பாலிக்கா ஒன்ன என்னமோ வடநாட்டு ஜெயில்ல வெக்க போறாங்களாமே சார்… மொதல்ல நீ போவியாம்.. அப்பாலிக்கா ஒங்க அண்ணன், அண்ணி கூட போவாங்களாமே சார்…     பணக்காரன் பணக்காரன் தான் சார்…   ஜெயிலுக்கு கூட வடநாட்டு ஜெயில்லதான் ஒன்ன வெக்கிறாங்க பாரு…   முந்தாநேத்தி கூட, நம்ப சேரிலேர்ந்து மன்னார புட்சுட்டு போயிட்டாங்க சார் சண்ட கேசுல…. ஆனா நேரா பொயல்ல தான் சார் மன்னார அடச்சாங்க… இப்போ கூட மன்னாரு அங்கதான் சார் இருக்கான்….   நீ பொயலுக்கு போனா கூட, நம்ப மன்னார வுட்டு ஒன்ன நல்லா பாத்துக்க சொல்லுவேன்.. ஆனா நீ வடநாட்டு ஜெயிலுக்குப் போறியே சார்….

 

டோனி இன்னோரு மேட்டர் கூட சொன்னான் சார்….   ஒன்னப் பத்தி நூஸ் வந்துச்சுன்னா அந்த நூஸ் பேப்பர் மேல கேஸ் போடுவியாமே சார்.. அவங்கள மெரட்டுவியாமே.. அப்டியா சார்… என்னா சார் நீ….   நூஸ்பேப்பர் காரங்க அவங்க வேலைய செய்றாங்.. அவங்கள எதுக்கு சார் நீ மெரட்டுற ?   இப்போல்லாம் யாரும் ஒன் மெரட்டலுக்கு பயப்டறதே இல்லன்னு சொல்றான் சார் டோனி…..

 

என்ன மாதிரி படிக்காத டோமருங்க கூட ஒயுங்கா ஒயச்சு வாய்க்கைய ஓட்டிக்கினு கீறாங்க சார்…. ஆனா ஒன்ன மாதிரி பட்சவங்க பண்ற அயோகியத்தனம் அநியாயமா கீது சார்…   அதுவும் நீ அமேரிக்காவுலயெல்லம் பட்ச ஆளு… இப்டியா திருடித்   துன்னுவ ?

 

என்னமோ போ சார்… சொல்லனும்னு தோணுச்சு.. சொல்டேன்.. எனக்கு சவாரி வந்துட்சு சார்.. அப்பாலிக்கா கண்டுகறேன் சார்..


 

Comments  

 
0 #122 amul ravi 2011-08-22 16:28
ivanukalukelam citizen padam madri theerpu koduthal nalla irukum ivanuka adikra panam ivanukalukaga matum alla pontati pillaikal sonthakararkalu kum sethu than athanal ivalrkalathu kudiyurimai parikapada vendum.
athu
Quote
 
 
0 #121 amul ravi 2011-08-22 16:27
ivanukalukelam citizen padam madri theerpu koduthal nalla irukum ivanuka adikra panam ivanukalukaga matum alla pontati pillaikal sonthakararkalu kum sethu than athanal ivalrkalathu kudiyurimai parikapada vendum
Quote
 
 
0 #120 Vandimurugan 2011-07-20 12:31
சொன்னாலும் சொன்னீங்க.... பலிச்சுனு உன்மைய சொன்னீஙக.....
Quote
 
 
0 #119 muralitharan 2011-07-15 14:00
super machi
Quote
 
 
+2 #118 Bob Albert 2011-07-13 22:46
சோக்கா சொன்ன மாமு...

ஆனா இன்னாவேணா சொல்லு...
இந்த டொமருஙகளுக்கு...
எவ்லோ திருடினாலும் பத்தாது...
எவ்லோ திட்டினாலும் உரைக்காது...!!!

மொத்தத்தில்... சவுக்கடி...! செருப்படி...!!!
Quote
 
 
+2 #117 குடுகுடுப்பை 2011-07-12 13:17
சங்கரு..நீ இன்னா சொல்லி இன்னா ஆவ போகுது..? இந்த டோமரு புர்ஞ்சுப்பான்ன ு நெனிக்கிரியா? உனிக்குதான் டைம் வேஷ்டு...எல்லாம் முட்ஞ்சு போச்சு..அப்பால ஜெயில்தான் களிதான்..அதான் சொல்லிக்கீறாரே நம்ம மீசைக்காரரு.."பட்சவன் சூதும் புரட்டும் பன்னுனான்காட்டி யும் போவான் போவான் ஐயோன்னு இஸ்துகினு போவான்னு'..அதுதான் இனி நட்கபோவுது...அல்லாரும் கண்டுகிடுங்க..
Quote
 
 
+1 #116 xxx 2011-07-11 14:36
இந்திய அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக ராஜினாமா செய்தார் தயநிதி

இதனை கொண்டாடும் விதமாக தமிழக வரலாற்றில் புதிய கட்சியை தொடங்குகின்றார் . எப்படி பாஸ் டையாக்.....
Quote
 
 
+1 #115 சிபிசந்தர் 2011-07-11 08:44
ஊழல் செய்தால் பதவிபறிப்பு விசாரனை திஹார் சிறைச்சாலை இவற்றை எல்லாம் தாண்டி ஊழல் வாதியின் சொத்துக்கள் பாரபட்சம் இல்லாமல் பறிமுதல் செய்யப்படுவதுதா ன்...தண்டணையாக இருக்கமுடியும்....
Quote
 
 
+1 #114 Richard Juan Maxtor 2011-07-11 01:53
[ஃஉஒடெ நமெ="டிரவிடன்"]இவந்தாம்பா, வைகொவை ஒன்டிக்கு ஒன்டி வான்னு கூப்பிட்டவன்.[/ஃஉஒடெ]
அவனா இவன் :-x :-x :-x
Quote
 
 
0 #113 Richard Juan Maxtor 2011-07-11 01:33
செம சவுக்கடி கபாலி :lol:
Quote
 
 
0 #112 iyyavu 2011-07-11 00:25
என்னமோ போ சார்… சொல்லனும்னு தோணுச்சு.. சொல்டேன்.. சார்..
Quote
 
 
+1 #111 iyyavu 2011-07-11 00:24
//ஏன் சார்.. நீ பொறக்கும் போதே பணக்காரனாத்தானே பொறந்தே… ? என்ன மாதிரி ஒனக்கு என்ன அன்னாடம் காச்சி பொயப்பா ? அப்புறம் ஏன் சார் இப்புடி திருடித் தின்னே ? இல்லாமயா இருந்துச்சு… ்லாம் போயி வந்தியாமே சார் நீ.. ? போயி, அட்த எப்டி திருடுறது எப்டின்னுதான் கத்துக்கினியா சார் ?//
Quote
 
 
0 #110 ஊர்நாட்டான் 2011-07-10 05:53
மாமு வயெரு எரிதுப்பா!! எதினே தபா ஏங்கிருப்போம் நம்மசனங்கலபத்தி சொல்லமட்டானுகலா ன்னுடு??
Quote
 
 
+9 #109 Kovai shiva 2011-07-09 21:15
அட பண்ணாடைகளா ,உங்க அப்பன் சாவ கிடந்த போது, எங்கள் வரி பணத்தில் உங்கள் அப்பனுக்கு எவ்வளவு கோடி பணம் மருத்துவ செலவுக்காக நாங்கள் அழுதோம் !உண்ட வீட்டுகே ரெண்டகம் செயலாமா ,உங்க பரம்பரைகே நல்ல சாவு வராதடா !
Quote
 
 
+2 #108 தமிழ் எனது மூச்சு 2011-07-09 18:42
இவர்கள் சோத்துக்கு தண்டம் பூமிக்கு பாரம், முக்கியமாஇந்திய ாவுக்கு. இவர்களை நாடு கடத்துங்கள். அனைவரது குடியுரிமையை திரும்பப்பெர வேண்டும்.
Quote
 
 
+2 #107 pakku mandaiyan 2011-07-09 15:47
சாவுடா சக்ஸஸ்....................
Quote
 
 
+3 #106 jk 2011-07-09 15:09
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது மீண்டும் உண்மையென நிரூபிக்கப்பட்ட ுள்ளது. ஆனால் என்ன பயன்..இவர்களால் பாதிக்கப்பட்டவர ்கள், துன்பமடைதவர்கள் , உயிர் உடமைகளை இழந்தவர்கள், தூக்கத்தை தொலைத்தவர்கள் பட்டியலும் மிக நீலமகதான் இருக்கும். இவர்கள் அனுபவித்த இன்னல்களுக்கு என்ன பதில்! விதியலும் எழுதபடாத பிரச்சினைகளை சந்தித்த மக்களுக்கு ஒரே ஆறுதல்...."தர்மத்தின் வாழ்வதனை....மீண்டும் தர்மம் வெல்லும்" என்ற வரிகள் மட்டுமே!
Quote
 
 
+1 #105 REBEL 2011-07-09 14:58
மெட்ராச் பாஷையில திட்னா உறைக்குமா? எல்லா பஷையிலும் திட்னா கூட மண்டைல ஏறாதெ.
Quote
 
 
+3 #104 Rajram 2011-07-08 21:21
இபபடி பொழ்க்கிரதுக்கு பிட்ஷ எடுக்கலாம்
Quote
 
 
0 #103 Rajram 2011-07-08 21:18
Ippadi polikirathavida koilela ninu pitchai yedukkalam. yethinaperoda sothai miratti parchirupano athaum visarikkanum
Quote
 
 
+5 #102 kalpana 2011-07-08 17:50
இவரிடமும் திமுகவிடமிருந்த ு முதலில் சொத்துக்களை வாங்கியப்பின் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.
Quote
 
 
0 #101 Abdul Razak 2011-07-08 14:52
Justice Never Fails.
Quote
 
 
+18 #100 பம்பிங் 2011-07-08 13:28
அண்ணாத்தா கரெக்கிட்டா சொன்னோப்பா... திஹார் ஜெயில் இப்படி கலைஞரோட குடும்பத்து ஜெயிலா மாறுமுன்னு நான் கனவுல கூட நெனச்சிப் பார்க்குலேப்பா....

ஆனா ஒண்ணு அண்ணாத்தா. இதே மாதிரி நீ நிறைய செய்திகளைச் சொன்னீன்னா நான் ஒனக்கு என்னால முடிஞ்ச கட்டிங்க வாங்கிக் கொடுக்கிறேன்பா... வர்ட்டா... படா பெஜாரா கீதுப்பா...இந்த நீயூச படிச்சிட்டு
Quote
 
 
+5 #99 vinci 2011-07-08 13:24
சவுக்கு எனது மனமார்ந்த நன்ட்ரி
Quote
 
 
+13 #98 kk 2011-07-08 12:20
அப்படி போடு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருப ்பதையடுத்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்த செய்தி பரவியதும் பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உள்பட அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த செய்தி வெளியான போது பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஆ.ராசா, அங்கு இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண ்டார்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும் ராசா வழங்கிய லட்டை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதா க செய்திகள் தெரிவிக்கின்றன.

அறிவாலய வளாகத்தில் நேற்று மாலையில் திரண்டிருந்த திமுகவினரும் மாறன் கைது செய்தியை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டன ர். கலைஞர் டிவியிலும் ஊழியர்கள் இதனை வரவேற்று மகிழ்ந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Quote
 
 
0 #97 iniyan 2011-07-08 12:02
:sad: :-* :cry: :-? :-x :eek: :zzz :P :lol: :lol: :D :sigh: ;-) :lol: :-| :-*
Quote
 
 
+6 #96 iniyan 2011-07-08 12:01
மானம் கெட்ட ஜென்மஙள்.... குடம்பத்டன் சாகலாம்
Quote
 
 
+8 #95 T G Ramamurthy 2011-07-08 11:15
ஒரு சில பேர்கள் ஒருசில நாட்கள்
உண்மையின் கண்களை மறைத்து வைப்பார்
பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய
கண்களைத் திறந்து வைப்பார்.
Quote
 
 
+5 #94 keerikutti 2011-07-08 10:59
End of Sun Group of companies.... Ha Ha Haa....
Quote
 
 
+14 #93 sudesh 2011-07-08 10:19
சோக்கா கீது மாமு. திகார் இனி மிருகக் காட்சிசாலையா மாற போகுது மாமு
Quote
 
 
+9 #92 Trinity 2011-07-08 10:11
இந்த மாதிரி (உன் பரிதாப நிலைமையை பார்த்து) பின்னூட்டம் எழுதுற தீவிர சவுக்கு வாசகர்கள் இருக்கின்ற வரை தமிழ் நாட்டுல, ஏன் இந்தியாவிலேயே உன்னை காப்பாத்த யாராலும் முடியாது.
Quote
 
 
+3 #91 PattukkottaiKaran.. 2011-07-08 10:03
:lol:
Quote
 
 
+12 #90 chandran 2011-07-08 09:53
கவலபடாத அன்னாத்தெ அடிச்ச கோடிகல அல்லிவுட்டா அடுத்தவாட்டி ஆட்சிய புடிச்சிரலாம்
Quote
 
 
+16 #89 sasi 2011-07-08 09:24
[ஃஉஒடெ நமெ="பட்மன்"]“….த்தா திருட்டு…………….. பையா…. இப்டி திருடிப் பொயக்கறதுக்கு ஒம்பொண்டாட்டிய கூட்டிக் கொடேண்டா”


மேற் சொன்ன வார்த்தைகள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். இந்த திருட்டுப்பயல்க ள் செய்த தவறுக்கு எப்படி பெற்றத் தாயையும், கட்டிய மனைவியையும் குறை சொல்ல முடியும்? மனித உரிமையைப் பற்றி பேசும் சவுக்குக்கு இது மனித உரிமை மீறல் எனத் தெரிய வில்லையா?

வரம்பு மீறிய உங்கள் வார்த்தைகளுக்கா க சவுக்கு வாசகனாகிய நான் மிகவும் வருந்துகிறேன்.

/ பத்மநாபன்[/ஃஉஒடெ]

இது போலிசு சொல்ர மாதிரி தானே வருது. பரவா இல்ல.
Quote
 
 
+11 #88 Boobalan 2011-07-08 08:36
ப்[ஃஉஒடெ நமெ="பட்மன்"]“….த்தா திருட்டு…………….. பையா…. இப்டி திருடிப் பொயக்கறதுக்கு ஒம்பொண்டாட்டிய கூட்டிக் கொடேண்டா”


மேற் சொன்ன வார்த்தைகள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். இந்த திருட்டுப்பயல்க ள் செய்த தவறுக்கு எப்படி பெற்றத் தாயையும், கட்டிய மனைவியையும் குறை சொல்ல முடியும்? மனித உரிமையைப் பற்றி பேசும் சவுக்குக்கு இது மனித உரிமை மீறல் எனத் தெரிய வில்லையா?

வரம்பு மீறிய உங்கள் வார்த்தைகளுக்கா க சவுக்கு வாசகனாகிய நான் மிகவும் வருந்துகிறேன்.

/ பத்மநாபன்[/ஃஉஒடெ]
பாஸ், அவர் அந்த போலீஸ்காரங்க சொன்னதா சொல்லி இருக்காரு!! தப்பா புரிஞ்சிகிட்டீங ்க!!

அந்த பாஷைலையே சொல்னமுனா: அண்ணாத்தே, அவரு அந்த போல்சுகாரனுங்கள பத்தி சொல்லிக்கினாரு! ! நீ தான்பா தப்பா புரிஞ்சிகின!!
Quote
 
 
+8 #87 Vijay123 2011-07-08 08:12
Seruppadi!
Quote
 
 
-21 #86 Padman 2011-07-08 00:53
“….த்தா திருட்டு…………….. பையா…. இப்டி திருடிப் பொயக்கறதுக்கு ஒம்பொண்டாட்டிய கூட்டிக் கொடேண்டா”


மேற் சொன்ன வார்த்தைகள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். இந்த திருட்டுப்பயல்க ள் செய்த தவறுக்கு எப்படி பெற்றத் தாயையும், கட்டிய மனைவியையும் குறை சொல்ல முடியும்? மனித உரிமையைப் பற்றி பேசும் சவுக்குக்கு இது மனித உரிமை மீறல் எனத் தெரிய வில்லையா?

வரம்பு மீறிய உங்கள் வார்த்தைகளுக்கா க சவுக்கு வாசகனாகிய நான் மிகவும் வருந்துகிறேன்.

/ பத்மநாபன்
Quote
 
 
+27 #85 Diravidan 2011-07-08 00:21
இவந்தாம்பா, வைகொவை ஒன்டிக்கு ஒன்டி வான்னு கூப்பிட்டவன்.
Quote
 
 
+15 #84 வெத்துவேட்டு 2011-07-07 23:52
தலீவா ்பச்சிட்டு மேர்சிலாயிட்டேன ் தெர்மா. எல்லாம் சவுக்குக்கு ஒரு பிகி்ல் அடிங்கப்பா .
Quote
 
 
+8 #83 van 2011-07-07 22:45
Its a wonderful decision but y not CBI arresting non of the congress parties like manmohan, sonia...they r the root for all these corruption
Quote
 
 
+4 #82 Tirupurvakkil 2011-07-07 22:00
பிரிர்கின்னா முர்பகல் செய்ய தமக்கின்னா பிர்பகல் தாமே வரும்.
Quote
 
 
+6 #81 elango kovai 2011-07-07 21:56
கொஞமாவது வருதப்படரானான்ன ு பாருஙக சார்,னல்ல குடும்பதுல பொரந்திருன்டல் தனெ
Quote
 
 
+1 #80 kans 2011-07-07 21:47
Super pa,aana enna than namm a kural koduthaalum namba nilama maarathupa..un commends romba superpa..

:sad:
Quote
 
 
+9 #79 rama.pillappan 2011-07-07 21:31
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா!ஊரும் சதமில்லை உற்றார் சதமில்லை பிள்ளையும் சதமில்லை பென்டிரும் சதமில்லை பெற்ற பேறும்சதமில்லை.
உலகே மாயம் வாழ்வே மாயம்.உலகில் நாம் கானும் சுகமே மாயம்.
இவற்றில் எதுவுமே தெரியாதா உங்களுக்கு ?
Quote
 
 
+5 #78 BOOVARAGAN 2011-07-07 21:18
At Last Sonia has won the contest.
She has taken revenge for murder of her husband former prime minister rajiv Gandhi.
Now M.K's Family is going to Jail one by one and M.K. is having Puthira sogam.
Well done Sonia.
Quote
 
 
+6 #77 prabhu18 2011-07-07 21:04
சூப்பரு தலைவா :lol:
Quote
 
 
+6 #76 iranian 2011-07-07 20:53
super, ena language... adada... sabash savukku :lol:
Quote
 
 
+30 #75 mughil 2011-07-07 20:40
(அகிலன்)ஆனா ஒன்னு எம் மக்கள் பதைக்க பதைக்க படு கொலை பன்னும்போது உண்ணூடைய சுன் டிவி ல ஒரு நாளாவது எம் மக்கள் படுகொலைய பத்தி போட்டிய டா டே உனக்கெல்லாம் என்ன மரியாதை டா அதிகாரம் இருகிரதுனு எதுவேனா பன்னுவியா டா டுபுக்கு எங்கலுடைய வரி பனத்தை தின்ன இல்ல நாய நியேல்லாம் நல்ல கெதிக்கே போகமாட்ட
Quote
 
 
+3 #74 jan 2011-07-07 20:37
KD: nee epdi thitinallum asinga padithnallum enakku valiikathae.
Savukku & Makkal : Domaru...Tihar podi mavena kadhu valiya kambiya uttu kaka pora valliya eduka poranuga....
Quote
 
 
+17 #73 pondumani 2011-07-07 20:29
Dayanidhi did not study in US. What he attended was "Owner/President management program ( OPM)". Please note that, he did not say graduated/obtained a degree etc, instead he says truthfully "attended"; That's all it is, "attended". It is more like a networking event. Anyone with money to burn can attend it, claiming a owner of a business. It is like SriSri's art-of living-programmes. It is a shame that this guy is listing this as if he studied MBA in Harvard. He is a product of Loyola, Nungambakkam. He is a local thug; It should be obvious from English/Tamil.

http://dmaran.nic.in/biodata.htm
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 54 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1919
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week61084
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month273903
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796022