முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆமாம் விதிவிலக்கல்ல... தினமணி தலையங்கம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 09 ஜூலை 2011 09:14

எப்போதோ நடந்திருக்க வேண்டியது, காலதாமதமாக இப்போது நடந்திருக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை ஐயம்திரிபற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் செயல்பாடுகளில் இருந்த தவறை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகுதான் வேறு வழியே இல்லாமல் அவரது பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தே தனது கடமையைப் பிரதமர் நன்கு செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

 

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்க திமுக முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது, தயாநிதி மாறனுக்குத் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவி. அந்தப் பேராசைதான் இப்போது அந்தக் குடும்பத்தினர் ஒருவர்பின் ஒருவராக திகார் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட வழிகோலியிருக்கிறது.

 

அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் தயாநிதி மாறன்? 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது லாபம் கொழிக்கும் ஒன்றாக மாறத் தொடங்கியது. அதுவரை குறைந்த அளவிலான செல்பேசிகள் இருந்ததுபோய், ரிக்ஷா ஓட்டுநரும், காய்கறி வியாபாரியும், விவசாயியும், கட்டடத் தொழிலாளியும்கூட செல்பேசியும் கையுமாக இந்தியாவை ஒளிரச் செய்யத் தொடங்கிய காலகட்டம் அது.

 

1994-ல் செல்பேசி சேவையில் ஈடுபடத் தொடங்கிய சிவசங்கரன் என்பவரின் "ஏர்செல்' நிறுவனம் 1999 முதல் சென்னையைத் தவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் சேவைக்காக உரிமம் பெற்றது. 2003-ல் சென்னையிலும் சேவையில் ஈடுபட உரிமம் பெற்றதுடன், 2004-ல் விண்ணப்பித்திருந்த இந்தியாவின் 10 வெவ்வேறு பகுதிகளில் 7 பகுதிகளுக்கான உரிமத்தையும் பெற்றது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தயாநிதி மாறன் 2004-ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகிறார்.

 

தான் விண்ணப்பித்திருந்த மீதமுள்ள 3 பகுதிகளுக்கு உரிமம் பெற தலைகீழாக நின்றும் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறார் அமைச்சர் தயாநிதி மாறன். ஏர்செல் நிறுவனம் மீதமுள்ள 3 உரிமங்களையும் பெற்றுவிட்டால் தொலைக்காட்சி டிடிஎச் சேவையைத் தொடங்கக்கூடும், அதனால் தங்களது குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் பாதிக்கப்படக்கூடும் என்பதுதான் தயாநிதி மாறனின் தயக்கத்துக்கான பின்னணி.

 

அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் பணியாற்றுவேன் என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தயாநிதி மாறனின் அடுத்தகட்ட நடவடிக்கை அதைவிட மோசமானது. ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் இழுத்தடித்து சிவசங்கரனை உருட்டி மிரட்டி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்கிற நிறுவனத்துக்கு விற்றுவிடச் செய்திருக்கிறார் அமைச்சர் தயாநிதி மாறன்.

 

ரூ. 36,000 கோடி விலை மதிப்புள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ. 3,600 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனத்துக்கும் (74%), அப்போலோ குழுமத்துக்கும் (26%) வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டன. இந்த விற்பனை முடிந்ததுதான் தாமதம், முறையான கட்டணத்தைப் பெறுவதற்குக்கூட காத்திராமல் ஏர்செல் நிறுவனத்துக்கு மீதமுள்ள 3 உரிமங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 62 கோடி செல்பேசி வாடிக்கையாளர்களின் வியாபாரத்தைப் பெறும் வாய்ப்பை புதிய நிர்வாகத்தின்கீழ் உள்ள ஏர்செல் நிறுவனம் பெற்றது. இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்கிற நிறுவனம் சன் குழுமத்தின் டிடிஎச் சேவையிலும் எப்எம் சேவையிலும் ரூ. 600 கோடி முதலீடு செய்திருக்கிறது என்பது சிவசங்கரனின் குற்றச்சாட்டு.

 

அத்துடன் நின்றுவிடவில்லை தயாநிதி மாறனின் முறைகேடுகள். 2006-ல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர்களின் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற நிதியமைச்சகத்தின் கருத்தைப் பிடிவாதமாக எதிர்த்து, அது தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்கிற முறையில் தனது தனிப்பட்ட உரிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்றிருக்கிறார் தயாநிதி மாறன். ஒருவேளை, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.

 

மாறன் சகோதரர்களின் முறைகேடான வியாபார வழிமுறைகள் என்றாவது ஒருநாள் அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிர்பாராத ஒன்றும் நடந்திருக்கிறது. மாறன் சகோதரர்களின் தாத்தாவான முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் விசித்திரமான வியாக்கியானம்தான் அது.

 

"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும்தானே. காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது!

 

 

நன்றி தினமணி

 

Comments  

 
0 #16 janarthanan 2011-07-14 17:45
தி மு க என்னும் கட்ஷி தமில்னட்டில் இருகவெகோடது. ஜனா
dmk is eleminate in tamilnadu.,to banned the party in future elections. very very worst fellows in chief of this party ,they sold tamilnadu by districtwise.
Quote
 
 
0 #15 Vaedhampudhidhu 2011-07-11 23:03
Kalaingnaruku oru paadam.

Serupu oru boomerang, adhai aduthavar meedhu veesinal kaala sularchiyil sulandru saani sagadhi endru eduthukondu vandhu namadhu thalailayae sema adi adikum, adhu thaan SERUPADI, edha olunga padi.
Quote
 
 
+7 #14 victor 2011-07-10 19:39
வினைவிதைத்தவன் வினையறுப்பான். கருணாநிதி உண்மை யிலேயே தயாநிதி மாறனுக்கு பரிந்து பேசவில்லை அவரை கலாய்க்கிறார்! மீடியாவின் தாதாவே அவனுங்கதான் இதுல யார சொல்றாரு...ஏற்கனவே கனிமொழிய களி தின்ன விட்டுட்டு இருக்கிற வெறுப்புல குசும்பு பேசறாரு கருணா.
Quote
 
 
+14 #13 senthil mani 2011-07-10 17:07
திமுக ஆட்சியில் இது மாதிரி காமெடி தானே தினமும் அரங்கேறியது!
கருணாநிதியிடம் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை பற்றி கேள்வி கேட்டால் சம்பந்தமே இல்லாத பதிலை சொல்வர், அவருடைய பிரஸ் கான்பெரென்ஸ் எல்லாமே பிடுங்கி தனமாக அதாவது மக்களை முட்டாள் என்று நினைத்து எழுதப்பட்ட தாக இருக்கும். அதனை இவர்களுடைய மீடியா வே ஏதோ அறிவியல் நுணுக்கம் வாய்ந்த ஒன்று என்பதுபோல் காட்டுவார்கள். கலைஞர் என்ற முகமூடியை வைத்து, அவரது குடும்பமே கொள்ளையும், ஆதிக்கமும் செய்வார்கள், இது தான் நிதமும் அரங்கேறிய நாடகம். இதனால் வரும் துன்பங்களை இவர்களது மீடியா வெளியே சொல்லவே சொல்லாது. தமிழனுக்கு நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல், டிவி கொடுத்து விட்டார்கள், அவர்களிடமே பணத்தை வாங்கி அவர்களது மீடியா வருமானத்தை பெருக்கி கொண்டார்கள்.

என்றைக்குமே முட்டாள்களின் நடுவில் சிறிது அறிவு இருக்கின்ற ஒருவன் குரலை உயர்த்தி தான் பேசுவான். முட்டாள் திருடர்களின் நடுவில், சிறிது படித்த திருடன் அதிகமாக கொள்ளை அடிப்பான். இவர்களுக்கு வோட்டு போட்ட, இன்றும் நம்பி கொண்டு இருக்கின்ற முட்டாள் தமிழனை தான் பொறுப்பு.
Quote
 
 
-14 #12 anniyan 2011-07-10 09:00
கொஞ்சம் பிளேடு போடறத கொறச்சுக்கறது..
Quoting வால்டர் வணங்காமுடி:
மீடியாக்கள் ஆட்சி தான் இந்தியாவில் ந்டப்பதால் "கலைஞ்ர் டீவி,சிரிப்பொலி ,செய்திகள்,முரச ொலி,ரைசிங் சன்,சன் டீவி குழுமத்தில் உள்ள 20 சானல்கள்,மாறனின ் பத்திரிக்கைகள், எம் எம்கள்" இவற்றை தவிர மற்ற அனைத்த ஊடகங்களை எல்லாம் நடுநிலை அற்ற ஊட்கங்கள் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

இப்படிக்கு
தமிழ் ஈனத் தலைவர்
'அய்யோ கொல்றாங்களே' புகழ் குருணாநிதி.
Quote
 
 
+15 #11 திலக் 2011-07-09 22:47
டி.ஆர். பாலு ஏன் இன்னும் சிக்கல...? அவர் கப்பல் துறை ல நெறயா ஊழல் பன்னதா கேள்வி பட்டேனே.....
Quote
 
 
+25 #10 வால்டர் வணங்காமுடி 2011-07-09 21:35
மீடியாக்கள் ஆட்சி தான் இந்தியாவில் ந்டப்பதால் "கலைஞ்ர் டீவி,சிரிப்பொலி ,செய்திகள்,முரச ொலி,ரைசிங் சன்,சன் டீவி குழுமத்தில் உள்ள 20 சானல்கள்,மாறனின ் பத்திரிக்கைகள், எம் எம்கள்" இவற்றை தவிர மற்ற அனைத்த ஊடகங்களை எல்லாம் நடுநிலை அற்ற ஊட்கங்கள் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

இப்படிக்கு
தமிழ் ஈனத் தலைவர்
'அய்யோ கொல்றாங்களே' புகழ் குருணாநிதி.
Quote
 
 
+8 #9 santhosh 2011-07-09 17:40
ஹய்யோ ஹய்யோ சாியான காெமடி புசூயா இந்த ெகழவன்
Quote
 
 
+20 #8 Suresh Raja 2011-07-09 17:23
திமுக வில் (அதாம்பா கருணா குடும்பம்) எல்லாரும் திகர்ல அடைக்க படணும்... கட்டாயம் நடக்கணும்.... அவுங்க சொத்துக்கள் நாட்டுடமை ஆக்கபடனும்.... இதுல சந்தேகமே இல்ல... ஆனா ஒரு விஷயம் இடிக்கிது...
மத்த மாநில அமைச்சர்களோ காங்கிரஸ் அமைச்சர்களோ யாரும் இதுவரை புடிபடலையே!!!! சிதம்பரம் எல்லாம் கொள்ளை கூட்ட தலைவன்.... சரத்பவார், கபில் சிபில் எல்லாரும் யாருக்கும் கொரஞ்சவுங்க இல்ல... அவுங்களை ஏன் யாரும் சீந்த கூட மாட்டிக்கிறாங்க ? :zzz :zzz :zzz :zzz :zzz :zzz
Quote
 
 
+13 #7 su raghuraman 2011-07-09 15:17
இன்று குய்யோ முறையோ என்று அடித்து கொள்ளும் கருணாநிதிதான் தயாநிதி மாறனின் இன்றைய நிலைக்கு காரணம். ராஜா மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தபோது இந்த ஆள் சும்மா இல்லாமல் டெலிகாம் லைசென்சிங் பாலிசி வந்தபோது இருந்த பழைய அமைச்சர்களையும் (பிஜேபி) விசாரிக்க வேண்டும் என்று சொன்னார். இப்போ என்ன ஆச்சு ? ப்ரோமோத் மகாஜன் உயுருடன் இன்று இல்லை. அருண் ஷோரி மேல் எந்த குற்றமும் இல்லை என்று சிபிஐ சொல்லிவிட்டது. கடைசியில் நம்ம ஜகதல பிரதாபன் தயாநிதி மாட்டி கொண்டார். கருணாநிதி பிள்ளையார் பிடிக்க நினைத்து அது கடைசியில் குரங்கை முடிந்தது. ஒரு வேளை இவர் வேண்டும் என்றே செய்துருக்கலாம் . இவர் தான் பெரிய "ராஜ தந்தரி" ஆட்சி. இத்தனையும் செய்து விட்டு இப்போ மீடியா மீது எரிந்து விழுந்து என்ன பிரயோஜனம் ? இனியும் வாயை தொறந்தால் அழகிரியும் உள்ளே போய்டுவார். ஜாக்ரதை
Quote
 
 
+8 #6 REBEL 2011-07-09 14:31
மீடியா இவன் கிட்ட இருந்தா என்னவேணூமானாலும ் பண்ணுவானாம்.அதே மீடீயா இவ்ன உட்டுடுவாஙகளா? யோசிக்க மாட்டானாம் இவன்?
Quote
 
 
+4 #5 Yethir Katchi 2011-07-09 12:51
சட்டம் அதன் கடமையை செய்யும் என்ற நம்பிக்கை இப்பொது தான் வந்துள்ளது.

ஹ்ட்ட்ப்://நச்டெலன்டொ.ப்லொக்ச்பொட்.சொம்/

நாமும் நம் கடமையை செய்வோம்.
Quote
 
 
+8 #4 aariyan 2011-07-09 11:31
மாப்பு உனக்கு வெட்சிட்டாங்கடா ஆப்பு
Quote
 
 
+10 #3 vijay.S 2011-07-09 10:49
லெட்டா வந்தாலும் சரியான அடி. மானம் கெட்ட திமுக க்கு புத்தி வருமா. குடும்பம் வெரு கட்சி வெரு யென பிரிக்கமுடுயாத இயக்கம். நான் வெலியெ வந்துடென்,இது சமூக இயக்கம் அல்ல, குடும்ப இயக்கம்.
Quote
 
 
+18 #2 elango kovai 2011-07-09 10:48
இதெல்லாம் ஒரு பொழெப்பு ! இப்படி ஒரு பொரப்பு !
Quote
 
 
+59 #1 குடுகுடுப்பை 2011-07-09 09:28
"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று கருத்துத் தெரிவித்திருக்க ிறார் கருணாநிதி
அதுக்காக நீங்க ஊரான் பணத்தை கொள்ளை அடிச்சு திம்பீங்க ..உங்கள எல்லோரும் கை கட்டி வேடிக்கை பாக்கனுமா பெரிசு? காடு வா வா ங்குது..வீடு போ போ ங்குது..ஆனா பேச்சை மட்டும் குறைக்கவே மாட்டேன்குறீயே..என்னவோ போ..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 131 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8204
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week65106
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month267838
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12789957