முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஸ்பெக்ட்ரத்தில் சிக்கிய ஜாபர் சேட்.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 50
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011 22:29

 

01பாஸ்... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...’’ 

இப்படியொரு ரிங் டோன் வைத்திருந்தார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்!. தேர்தலுக்கு முன்பு வரையில் அவர் பெயரைக் கேட்டாலே தி.மு.க.வினர் முதல்  உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அத்தனை பேருக்கும் நடுங்கத்தான் செய்தார்கள். 

தமிழகத்தின் நிழல் முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வளர்ப்பு மகன் என்று இவரைச் சொன்னாலும், முதல்வருக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருந் தார் ஜாபர் சேட். அது எப்படி சாத்தியமானது என்பது மல்லிகை நடிகைக்குத் தெரியுமாம். அத்தனை அதிகாரங்களும் பொருந்திய முதல்வர் கருணாநிதியே கூட, எந்தப்  பிரச்சனையாக இருந்தாலும், “ஜாபர் கிட்ட சொல்லுய்யா’’ என்று சொல்லும் அளவுக்கு முழுக்க முழுக்க கருணாநிதியின் நம்பிக்கையைப் பெற்று அவரின் கண்களாகவும்  காதுகளாகவும் திகழ்ந்தார். கருணாநிதியோடு 40 ஆண்டுக் கால நட்பு கொண்ட அமைச்சர்களே ஜாபரைக் கண்டால் மிரட்சியாகத்தான் பார்ப்பார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளி வந்ததும், ஜாபர் சேட் மீதான புகார்கள் தேர்தல் ஆணையத்தின் முன் குவியத் தொடங்கின. ஜாபர் சேட்டை நேரில் வரவழைத்த ஆணையம்,  நேரடியாக விசாரணை நடத்தி, மேற்கு வங்கத்திற்கு பார்வையாளராகச் செல்லும்படி உத்தரவிட்டது.   அதனை ஏற்க மறுத்த ஜாபர் சேட், விடுப்பில் சென்றார். எப்படியும்  தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்று நம்பிய ஜாபர் சேட், தொடர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.  

தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதும், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார்.  

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உளவுத் துறையின் தலைவராக இருந்த போது ஜாபர் செய்த காரியங்கள் அவரை இன்று சிக்கலில்இழுத்து விடப்போகின்றன.   நாட்டையே  உலுக்கிக் கொண்டுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் ஜாபருக்கான தொடர்பு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும், மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை முடுக்கி விட்டு ள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “ஜாபர் சேட்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு பல்வேறு தகவல்கள் வந்து  கொண்டுதான் இருந்தன. காலம் கனியட்டும் என்று காத்திருந்தோம்’’ என்றார்.  உளவுத்துறை வட்டாரங்கள் ஜாபரைப் பற்றி தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளது.

ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானதும், லஞ்சமாக ஏராளமான பணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களால் கொடுக்கப்பட்டது.  இந்தப் பணத்தை தமிழகத்திற்குக் கொண்டு வந்தபோது அந்தப் பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதற்கு ஜாபர் உதவி புரிந்திருக்கிறார்.  ஸ்பெக்ட்ரம் ஊழல்  பணத்தில் ஜாபருக்கு மட்டும்  பங்குத் தொகையாக ரூ. 300 கோடி கை மாறி உள்ளதாம். இந்தப் பணத்தை முதலீடு செய்வதில், ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள்,  தமிழ் மையத்தின் ஜெகத் கஸ்பர் மற்றும் பத்திரிகையாளர் காமராஜ் ஆகியோர் ஒரு டீமாக செயல்பட்டுள்ளனர்..  

இந்தப் பணத்தின் முதலீட்டில் ஒரு பகுதியாக சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ், தன் மனைவி  பர்வீன் ஜாபர் பெயரில், திருவான்மியூரில் ஒரு வீட்டுமனையை கரு ணாநிதியிடம் இருந்து பெற்றார். அந்த வீட்டுமனையில், இவரும், கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் என்பவரும் சேர்ந்து  ‘டிம்பர்ட்டன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் 12 அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகின்றனர். இது தவிரவும், சென்னை தியாகராய நகரில் சில அடுக்குமாடி கட் டடங்கள் ஜாபர் சேட்டுக்காக கட்டப்பட்டு வருகின்றன என்கிறார்கள்.

ஜாபர் சேட்டும், இவரது பினாமியாக இருக்கும், அண்ணா நகர் ஜீவன் பீமா நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரும், அமர் என்பவரும் சேர்ந்து ‘லேண்ட் மார்க் கன்ஸ் ட்ரக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஜெய்சங்கர் பெயரில்  ஜாபருக்குச் சொந்தமாக பி.எம்.டபிள்யூ மற்றும் ஜெடா என்ற 2 சொகுசு கார்கள்  இருக்கின்றன.    

பினாமி பெயரில் ஜாபர், அவருக்குக் கிடைத்த ஸ்பெக்ட்ரம் பணத்தை துபாயில் முதலீடு செய்திருக்கிறார்.  இந்த முதலீட்டுக்காக, பலமுறை துபாய் சென்று திரும்பியி ருக்கிறார்.  ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் ஒருவர், வெளிநாடு செல்வதென்றால் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதியையும் மீறி, உளவுப்  பணி தொடர்பாக ரகசிய அலுவலாகச் சென்று வந்தது போல, துபாய் சென்று வந்துள்ளார்.

அதே போல ஜாபர், சங்கர், ஜீவல் இருவரும் லண்டன் சென்றபோது இலங்கை தூதரக அதிகாரி அம்சாவை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான போர் நடந் தபோது, தமிழகத்தில் இருந்து புலிகளுக்கு ரத்தம் கொண்டு செல்லாமல் பார்த்ததற்காகவும், புலி ஆதரவாளர்கள் போனை ஓட்டுக் கேட்டு, தகவல் சொன்னதற்கும் அங்கு  அவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்பட்டதாம். 

ராசா பெற்றுத் தந்த ஸ்பெக்ட்ரம் லஞ்சப் பணம் அத்தனையையும் நிர்வகித்தவர் ஜாபர் சேட்டே என்று அடித்துக் கூறுகிறார்கள் உளவுத் துறை வட்டாரத்தில். இது  தொடர்பாக பலமுறை டெல்லி சென்றிருக்கிறார் ஜாபர்.  டெல்லி சென்று, தமிழ்நாடு இல்லத்தில் தங்கினால், அவரைப் பார்க்க வருபவர்கள் யார் என்பது தெரிந்துவிடும்  என்பதற்காக, ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலில் தங்கினார் என்கிறார்கள். ராசாத்தி அம்மாள் சார்பில், டாடா குழுமத்திடம் பேசி,  கைமாறாக, அண்ணா சாலையில்  உள்ள வோல்டாஸ் நிலத்தை பெற்றுத் தந்ததோடு அல்லாமல், அந்த நிலத்தை முதலில் டாக்டர் சண்முகநாதன் என்பவர் பெயருக்கு பதிவு செய்ததும் ஜாபர்தான். 

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாகத் தொடங்கியதும், அந்த விசாரணைக்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கும், தடயங்களை அழிப்பதற்கும் ஜாபர் சேட் பிரம்மப் பிரயத்தனம்  செய்துள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பரில் காமராஜ் மற்றும், ஜெகத் கஸ்பர் இல்லங்களை சி.பி.ஐ. ரெய்டு செய்தது முதல், ஜாபரின் தடயங்களை அழிக்கும் பணி  தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.  

கலைஞர் டி.வி.யில் நள்ளிரவு சோதனை நடந்தது முதல், தயாளு அம்மாளையும், கனிமொழியையும் சி.பி.ஐ. விசாரணை செய்தது வரை, அத்தனை நடவடிக்கைகளையும்  உன்னிப்பாக கவனித்து, சி.பி.ஐ.க்குத் தவறான தகவல்களைத் தந்து விசாரணையை தவறான வழியில் போகச் செய்ய ஜாபர் செய்த ஏற்பாடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கடும்  எரிச்சலோடு கவனித்து வந்திருக்கிறார்கள். சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டிருந்த சமயத்தில், சென்னையில் உள்ள இணை இயக்குநர், டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி.  அந்தஸ்தில் உள்ள அத்தனை அதிகாரிகளின் தொலைபேசிகளையும் ஜாபர் ஒட்டுக் கேட்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, எத்தனை மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள்  வரப்போகிறார்கள் என்பதை துல்லியமாக கருணாநிதிக்குச் சொன்ன விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். 

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராசாவோடு இன்றும் தொடர்பில் இருக்கிறாராம். டெல்லியில் உளவு வேலை பார்க்கும் தேவதாஸ் என்ற போலீஸ்காரர்,  ராசாவைப் பார்த்து போன் போட்டு ஜாபரிடம் பேச வைக்கிறாராம். பல்வாவிடமும் இப்படி ஜாபர் பேசியிருக்கிறாராம்.

2ஜி விவகாரத்தில் முக்கியப்  பங்கு வகித்த சாதிக் பாட்சா மரணத்தில், காமராஜுக்கும், ஜாபருக்குமான தொடர்புகள் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  சாதிக் இறந்த கடைசி வாரத்தில், காமராஜ் சாதிக்கோடு தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். சாதிக்கின் மர்மமான மரணம் குறித்து ஜாபருக்கு பல தகவல்கள் தெரியும் என்றே  சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜாபரின் பங்கை மத்திய உளவுத்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறதென்றால், மாநில உளவுத்துறை தமிழகத்தில் ஜாபர் செய்த தகிடுதத்தங்களை  விரிவாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக ஜாபர் இருந்தபோது, பத்திரிகையாளர் காமராஜுக்கு  நெருக்கமான தொழிலதிபருக்கும், செங்கல்பட்டு ஏரியாவில் கட்டப் பஞ்சாயத்து செய்து  கொண்டிருந்த பூவான பிரமுகருக்கும் ஏற்பட்ட உரசல், காவல்துறை வரை போயிருக்கிறது. திருமழிசை சாலையிலும், திருத்தணியிலும் நடந்து கொண்டிருந்த கட்டுமானப்  பணிகள் தொடர்பாக அந்த உரசல் ஏற்பட்டிருக்கிறது.  காமராஜ், ஜாபர் சேட்டை அணுகியதும், அந்தப் பிரமுகரையும் அவர் ஆட்களையும், பல பொய் வழக்குகளைப்  போட்டு, சிறையில் அடைத்திருக்கிறார் ஜாபர். அப்போது தொடங்கிய ஜாபர் சேட் காமராஜுக்கிடையிலான நட்பு, இன்று வரை தொடர்கிறது.   

ஜாபருக்குப் பிடிக்காத அதிகாரிகள் மீது, அவருக்கு நெருங்கிய நண்பரும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்த சுனில்குமார் மூலமாக  பொய் வழக்குப் போடு வது வழக்கம். இதற்கு உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது தொடர்ந்த பொய் வழக்கை, உதாரணமாக சுட்டிக் காட்டுகின்றனர்.

வேண்டாதவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது ஒரு பக்கம் என்றால், உண்மையான ஊழல் வழக்கில் சிக்கிய மதுரையைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்  ஜெயஸ்ரீயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழகிரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த வழக்கை மூடியது மட்டுமல்லாமல், அந்த வழக்கின் விசாரணை  அதிகாரி இசக்கி ஆனந்தனை இடமாற்றம் செய்ததையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஜாபருக்கும், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பாண்டியன், விநோதன், கணேசன் ஆகியோருக்கும் வீட்டு வசதி வாரிய மனைகளை ஒதுக்கியது  தொடர்பாக செய்தி ஒளிபரப்பிய ஒரு ஆங்கில சேனலின் மீது கடும் கோபம் அடைந்த ஜாபர் சேட், அந்தச் சேனலின் நிர்வாகிகள் மீது, காமராஜை வைத்து வழக்குப்  போட வைத்ததையும் குறிப்பிடுகின்றனர்.  

அமிர்தத்தின் மகன் குணநிதி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலின் வாட்ச்மேனை துப்பாக்கியால் சுட்ட, 15-வது நிமிடத்தில் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த ஜாபர் சேட், குணநிதியைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதையும் மாநில உளவுத்துறை விசாரித்து வருகிறது.  

பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று ஏராளமானோரின் தொலைபேசிகளை இரண்டு தனியார் நிறுவனங்களைப்  பயன்படுத்தி ஒட்டுக் கேட்டதும், அதற்காக உளவுத் துறையின் ரகசிய நிதியிலிருந்து பெரும் தொகையை ஜாபர் சேட் கொடுத்ததும் அவருக்கு பெரும் தலைவலியை உ ண்டு பண்ணும் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள். 

ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த நபரைச் சுற்றி இன்று மத்திய உளவுத்துறையும், மாநில உளவுத்துறையும் ஒரே நேரத்தில் வளையத்தை இறுக்குவதை  காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

 

நன்றி குமுதம் ரிப்போர்டர்

 

Comments  

 
0 #34 Suman 2011-07-20 07:24
""["தூயவன்"]

சவுக்கு இது ஜூ.வி க்காக நீ எழுதியதுதானே... ஜூ.வி-ல படிச்ச உடனே நீ அதை இங்க பேஸ்ட் பண்ணுவேன்னு நேத்தே எதிர் பார்த்தேன்.. இப்பல்லாம் நீ கொஞ்சம் சோம்பேறி ஆஹிட்டே.. ரெண்டு நாள் லேட் ...[]""

அட நாதாரி "நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்" நு போட்டு இருக்குதே கவனிக்க மாட்டியா நாதாரி?
Quote
 
 
+3 #33 ram prasath 2011-07-16 01:50
இந்த பேடி பையல தூக்கில் போடணும்
பொறம்போக்கு..! இவன எல்லாம் சும்மா விட கூடாது....
Quote
 
 
+6 #32 pa. iravi 2011-07-15 00:33
குமுதம் ரீபோர்ட்டர படிக்கும்பொது அப்படியே சவுக்கு கட்டுரை படிப்பது போலவே இருக்குது. நிச்சயமா சவுக்கின் பங்கு இந்த கட்டுரையில் இருக்கும் என நம்புகிரேன்.
Quote
 
 
+3 #31 T G Ramamurthy 2011-07-14 20:29
ஆட்சியின் திமிராலெ அகந்தையின் செய்லாஉலெ ்சூட்சியும் வஞ்சமும் திரும்பியதடா
Quote
 
 
+4 #30 All in all Alakuraja 2011-07-14 13:19
வாழ்க சவுக்கு. என்ன சொல்லி திட்டருதுன்னு தெரியலை இந்த ஈனப் பிறவிகளை. என்ன திட்டினாலும் உறைக்கப்போவதில் லை. :oops: :-*
Quote
 
 
+18 #29 சிறுவண்டு 2011-07-13 23:45
பன்னிவாயன், கழுவாத மூஞ்சி, கரிச்சட்டி மண்டையன் இந்த ஜாபர்சேட்டை நாடுவிட்டு நாடு அரசியல் பண்ற அளவுக்கு வளர்த்துவிட்டது யார் ? சுயலம்பிடித்த ஒருவகை பிராணி கலைஞர் தானே. இந்த மாதிரி இன்னும் எத்தனை பேரை வளர்த்தாரோ ? அதுகள் என்னென்ன பண்ணிக்கிட்டு இருக்கோ. ஒரேஒரு 7 ரிக்டர் நிலநடுக்கம் கலைஞர் வீட்டுக்கும், ஒரேஒரு 9 ரிக்டர் நிலநடுக்கம் காந்தி குடும்பத்துக்கு ம் வந்தா போதும்.
இந்தியாவுக்கும் , இலங்கைக்கும் விடிவுகாலம் வரும்.
Quote
 
 
+7 #28 chfhggfjhgkj 2011-07-13 22:28
ஐந்து வருடம் செய்த பாவட்ர்கு கிடைத டன்டனை.....
Quote
 
 
+23 #27 வால்டர் வணங்காமுடி 2011-07-13 20:12
பிரபாகரனின் முட்டாள்தனத்தால ும்,விடாப்ப்டிய ாலும் தான் பல லட்சம் மக்கள் இறந்ததாக பல் இணையங்களில் பலர் சூடம் அணைத்து சத்தியம செய்தனர். அவர்கள் இது போன்ற கட்டுரை படித்தால் ஒருவிச்யம் பளிச்சென்று தெரியும். ஒரு கூட்டமே சலனமின்றி எம் இனத்திற்கு எதிராக திரைமறைவில் காய் நகர்த்தியுள்ளது என்பது துல்லியமாக தெரிகிறது.
Quote
 
 
+8 #26 pokkathavan 2011-07-13 19:20
[ஃஉஒடெ நமெ="பத்தாம் பசலி!!"]அந்த "மல்லிகை" நடிகை யாருன்னு சொல்லுங்கப்பா!! [/ஃஉஒடெ]

அதுதனெ அது தெரியாட்டி ரொம்ப கஷ்டமாயிடும்
Quote
 
 
+16 #25 Suresh Raja 2011-07-13 17:37
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்... :cry: :cry: :cry: :cry:

திருடன் போலீஸ் விளையாட்டு சின்ன வயசுல விளையாடிருக்கேன ்... இதென்ன "திருடனே போலீஸ்" விளையாட்டு????? புதுசா இருக்கே! :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
Quote
 
 
+11 #24 Ramesh K R 2011-07-13 16:24
இந்த ஜாஃபர் சேட்டுக்கு முதலில் வையுங்களப்பா ஒரு பெரிய ஆப்பு!
Quote
 
 
+14 #23 மிஸ்டர் அடோர் 2011-07-13 14:40
\\அது எப்படி சாத்தியமானது என்பது மல்லிகை நடிகைக்குத் தெரியுமாம்//

இந்த நியூஸ் எல்லாம் பழசுப்பா, ஆனால் இந்த மல்லிகை நடிகை நியூஸ் புதுசா இருக்கே அது யாருப்பா ?
Quote
 
 
+14 #22 mathan Dubai 2011-07-13 13:48
சக்சேனாவை கலைஞர் தெரியாதவர் அல்ல. சென்னை சைதாப்பேட்டையில ் இருக்கும் செக்கர்ஸ் நட்சத்திர ஓட்டலில் 100 ஆட்டோக்களை அனுப்பி அடித்தவர் சக்சேனா. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் கேட்ட போது எப்.ஐ.ஆர். போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி எந்த ஆக்‌ஷனும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவுப்போட்ட, அந்நாள் முதல்வர் கேட்கிறார்…இந்த கேள்வியை.

என்ன சொல்லி இருக்க வேண்டும் தயாநிதி? “எல்லாம் பொய் வழக்கு?” என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?

என்ன சொன்னார் என்று கட்சி சீனியர்கள் சொன்னது இதுதான்.

”பெரிய ஏமாத்துக்காரனா இருக்கான் தாத்தா. 400 கோடி சுருட்டியிருப்ப ான் போல” என்று சொல்லி எல்லாரையும் திகைக்க வைத்திருக்கிறார ் தயாநிதி.

அடடா… கதை இப்படி போகிறதா ? என்று நீங்கள் கேட்கலாம். அப்படித்தான் போகும்.

இன்னும் சில ரகசியங்கள் விரைவில் வெளியே வரும். சக்சேனா அப்ரூவர் என்ற செய்தி வரும். அப்போது, சக்சேனா மீதே சன் டிவி புகார் தரலாம்.

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்ப்பா…
Quote
 
 
+24 #21 **** 2011-07-13 13:45
திமுகவை பற்றி நீங்கள் எழுதும் தொகுப்புகள் அனைத்தும் அருமை.
அதற்கு என் வாழ்த்துக்கள்.

இருந்தும் ஒரு சந்தேகம்.
நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் எந்த தவறும் நடக்கவே இல்லையா அல்லது நீங்கள் எழுதுவது இல்லையா?
இதை பற்றியும் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.
Quote
 
 
-5 #20 பட்டுக்கோட்டைகாரன். 2011-07-13 12:56
:லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :லொல்: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+40 #19 VVN 2011-07-13 12:22
அதே போல ஜாபர், சங்கர், ஜீவல் இருவரும் லண்டன் சென்றபோது இலங்கை தூதரக அதிகாரி அம்சாவை சந்தித்துள்ளனர் . விடுதலைப் புலிகளுடனான போர் நடந் தபோது, தமிழகத்தில் இருந்து புலிகளுக்கு ரத்தம் கொண்டு செல்லாமல் பார்த்ததற்காகவு ம், புலி ஆதரவாளர்கள் போனை ஓட்டுக் கேட்டு, தகவல் சொன்னதற்கும் அங்கு அவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்பட்டதா ம்

அதுக்கு பதிலா பொண்டாட்டிய அம்சாகிட்ட கூட்டி கொடுத்து காசு பாத்திருக்கலாம் இந்த மாமா பசங்க...
Quote
 
 
+16 #18 பத்தாம் பசலி!! 2011-07-13 12:16
அந்த "மல்லிகை" நடிகை யாருன்னு சொல்லுங்கப்பா!!
Quote
 
 
0 #17 Bharathanban 2011-07-13 12:05
:P
Quote
 
 
+8 #16 VANANGA MUDI 2011-07-13 12:05
""MISSION COMPLETED"" FOR SAVUKKU..
Quote
 
 
-5 #15 தூயவன் 2011-07-13 11:57
சவுக்கு இது ஜூ.வி க்காக நீ எழுதியதுதானே... ஜூ.வி-ல படிச்ச உடனே நீ அதை இங்க பேஸ்ட் பண்ணுவேன்னு நேத்தே எதிர் பார்த்தேன்.. இப்பல்லாம் நீ கொஞ்சம் சோம்பேறி ஆஹிட்டே.. ரெண்டு நாள் லேட் ...
Quote
 
 
+3 #14 nanduvaakkili 2011-07-13 11:37
@ advice, This article was written by Savukku long ago. Kumutham added some masala in savukku article. or it may be written by Savukku in Kumutham too...Please Dont use word "thiruttu", u rascal....
Quote
 
 
+42 #13 சிலம்பு ஆசான் 2011-07-13 11:12
நீங்கள் எதற்கு "நன்றி: குமுதம் ரிப்போர்டர்" என்று போடுகிறீர்கள். ரிப்போர்டரில் தான் "நன்றி: சவுக்கு" என்று போட வேண்டும்.
Quote
 
 
+10 #12 jagan t 2011-07-13 11:09
மேற்கு மண்டல ஐ.ஜி. யாக இருந்த சிவனாண்டி மீது நில அபகரிப்புக்கு உடந்தை என வழக்கு பதிவு செய்யப்பட்டிருக ்கிறதாமே?
Quote
 
 
-12 #11 advice 2011-07-13 10:35
Instead of Register comment here please register in the orginal portal. why you are encourgaing the copy/past activity. savukku should stop these type THIRTU ASAP.
Quote
 
 
+5 #10 nandhu 2011-07-13 10:29
Nalla sonninga thambi ..
k k k vasanam nalla karpani ...

ivangalukku peenava kaila keduthutta braman nu nenappu ..yellaru thalai yelluthaium mathidalam nu nenakiranga ..
ooruku or nayam sankaruku oru nayamma ?
departmentla irrukura yella file , ragasiyam yellathaum thirudi athu vachu thane intha website nadathura ...?

yenna mo savakku website nalathan DMK thothahu mathiri buldup kuduthitinga ..

yethu sankar ithu mathiri velaiya vittutu ..samuthayathuku thevaiyana visayangala unga websitela podunga ..tamil nadu arasiyal news podama intha website unganala nadathave mudiyathu ..ithu than yethartham ...
Quote
 
 
+9 #9 sriram123 2011-07-13 10:20
சூப்பரப்பு ......
Quote
 
 
+55 #8 gjjp 2011-07-13 10:05
சவுக்கு ,
குமுதம் ரிப்போர்டரில் நேற்று வந்ததை தான் , தாங்கள் 6 மாதத்திற்கு முன்பே சொல்லிவிடீர்கள் .
என்ன கொஞ்சம் மசாலா தற்போதைய ட்ரென்ட் சேர்த்து விட்டார்கள்.
ஆனால் credit என்னமோ உங்களுக்கு தான்.
Quote
 
 
+26 #7 ~J 2011-07-13 09:39
பத்த வச்சுட்டியே பரட்டை...

நீ வழக்கம் போல் சுழற்று உன் சவுக்கை...

அப்பறம், இன்னா வாத்தியாரே.... உன்னோட சைட்ல கவுண்டவும் பாது இம்மா நாலு ஆச்சு..

ஒரு கவுண்டவும் போடு வாத்தியாரே இந்த கம்னாட்டிக்கு...
Quote
 
 
+22 #6 Appachi 2011-07-13 09:12
இந்த ஆர்டிகிலை எழுதியது யார்??? சவுக்கு எழுத்தின் நெடி அதிகமாக அடிக்குது!
Quote
 
 
+1 #5 prabhusss 2011-07-13 08:26
chumma thatti vidunga ..sankar kaasa panama ..
niga kudathan departmentla irrunthukittu ottu kettu jail ku poittu vanthinga ...niga pannuna thappu illa ya ...yenna mo ponga ..kekkuravan kena payana irruntha keralavla k tv la k.r vijaya vettula nei vadium ingra kathaiya la irruku ....
Quote
 
 
-34 #4 mohamed rafi 2011-07-13 07:41
நல்ல கர்பனை.............
Quote
 
 
+19 #3 நடு நிசி நாயகன் 2011-07-13 05:20
ங்கொப்புரானே கருணா நிதிக்கே உண்டான மொள்ள மாரித்தனம் அனைத்தும் உள்ள
Quote
 
 
+13 #2 kadaval 2011-07-13 05:00
This guy should be terminated and arrested immly. He's the culprit bastard.
Quote
 
 
+46 #1 Sundarwipro 2011-07-13 01:51
தயாநிதி மாறன் ஒரு தண்டசோறு, அப்படிப்பட்டவரை தான் கருணாநிதி தான் அவரு வல்லவரு நல்லவரு என்று மத்திய மந்திரி ஆக்கினார். இன்று அவர் அவரது குடும்பத்தை வளர்த்து, தாத்தாவின் மகளுக்கே ஆப்பு வைத்து இன்று தானும் தீகார் ஜெயிலின் வாசலில் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார். கலைஞ்சருக்கு இது தேவை "கூட நட்பு கேடி முடியும்".
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 77 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7596
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week40055
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month242787
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12764906