முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
வாழ்த்துக்கள் ரஞ்சிதா….. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 56
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011 14:42

 

1992ல் நாடோடித் தென்றலில் பாரதிராஜா அறிமுகப் படுத்திய இந்த ஸ்ரீவள்ளி என்கிற ரஞ்சிதா தமிழ்த்திரையுலகில்  அறிமுகமானாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இருக்கும் அற்ப ஆயுளைப் போல, இவரும், சிறிது காலத்திற்குப் பிறகு, சின்னத் திரையில் தலை காட்டி விட்டு, திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

 K14l

கடந்த ஆண்டு மார்ச் 2010ல் புலனாய்வு பத்திரிக்கை என்று தன்னை அழைத்துக் கொள்ளும், நக்கீரனும், சன் டிவியும், தினகரனும், ரஞ்சிதா நித்யானந்தா என்ற சாமியாரோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஒளிபரப்பிய பிறகு, ரஞ்சிதாவின் வாழ்க்கை சரி செய்ய முடியாத வகையில் புரட்டிப் போடப்பட்டது.

 

சன் டிவி ஒளிபரப்பிய அந்தக் காட்சிகள், குடும்பத்தோடும், குழந்தைகளோடும் உட்கார்ந்து பார்க்க முடியாத வகையிலான மோசமான காட்சிகள்.   ப்ரைம் டைமில், அனைவரும் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் காட்சிகளை சன் டிவி ஒளிபரப்பியது.

 

நக்கீரன் இதழோ, நடிகை திரிஷா குளிக்கும் காட்சியை எப்படி ஃப்ரேம் ஃப்ரேமாக போட்டு காசு பார்த்ததோ அதே போல, இந்தக் காட்சிகளையும் வண்ணப் படங்களாக போட்டு காசு பார்த்தது. தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளேடும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

இந்தச் சமூகம் சாமியார்களிடம் வாழ்வுக்கான தீர்வுகளைத் தேடி செல்லும் வரை பல நித்யானந்தாக்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.   ஆன்மீகம் என்பது, இன்று பல்லாயிரம் கோடிகளை அள்ளித் தரும் ஒரு வளமான வியாபாரம். தனது சிந்தனைகளை நிறுவனமயப்படுத்தி வியாபாரம் ஆக்காத யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, அத்தனை சாமியார்களும் வியாபாரிகளே… இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புரண்டு கொண்டு ஆன்மீக வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கும், ஜக்கி வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட. நமது பிரச்சினைகளுக்கான தீர்வை நம்மை விட வேறு யார் கண்டறிந்து விட முடியும் ? பிரச்சினைகளுக்கான எளிதான இன்ஸ்டன்ட் தீர்வை தருவார்கள் என்று இந்த சாமியார்களை நம்பினால் அவர்கள் ஏமாற்றத் தானே செய்வார்கள் ?

 

நித்யானந்தாவை நம்பி அவர் பின்னால் அலைவதும், அவருக்கு நன்கொடை வழங்குவதும், அவர் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருந்தார் என்று தெரியவந்ததும், அவர் படத்தை செருப்பால் அடித்து, அவர் ஆசிரமத்தை கொளுத்துவதும், மூடர்கள் செய்யும் செயலல்லவா ?

 7

இந்தச் சாமியாரை அம்பலப் படுத்துகிறேன் பேர்விழி என்று, ரஞ்சிதா என்ற பெண்ணை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் ?

 

நேற்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், நக்கீரன் காமராஜின் புகைப்படத்தோடு, ஜாஃபர் சேட் தொடர்பாக வந்த ஒரு கட்டுரைக்காக இரண்டு நாட்களாக தையா தக்கா என்று குதித்திருக்கிறார் காமராஜ்.   அவரும் ஜாபரும் கூட்டு சேர்ந்து கொண்டு, கடந்த ஆட்சியில் ஆட்டம் போட்டார்கள் ? புகைப்படத்தோடு ஒரு செய்தியை வெளியிட்டதற்காக இப்படி குதிக்கும் காமராஜ், ரஞ்சிதாவை இப்படி சித்தரிக்கையில் சிந்தித்திருக்க வேண்டாமா ?

 

நாமும் ஒரு பெண் வயிற்றில்தானே பிறந்தோம்…. ?   எத்தனை பெண்களோடு பழகுகிறோம் ?   ஒரு பெண் நடிப்பை தொழிலாக கொண்டுள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக, அவர் படுக்கையறையில் எட்டிப் பார்க்கும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது ? இந்தக் காட்சிகள் ஊடகங்களில் வெளியான உடனேயே சவுக்கு, “எனக்கு வேற வழி தெரியல“ என்ற சிறுகதை மூலமாக தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தது.

 

நேற்று மாநகர ஆணையாளரிடம் தினகரன், நக்கீரன் மற்றும் சன் டிவி மீது புகார் அளித்துள்ளார் ரஞ்சிதா.   புகார் அளித்து விட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஞ்சிதா, தமிழ்நாட்டுக்கு வந்தால் தான் கைது செய்யப் பட்டு விடுவோம் என்று மிரட்டப் பட்டதாக தெரிவிக்கிறார். இவரை மிரட்டியது தினகரன், நக்கீரன் மற்றும் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்தவர்களே என்று கூறுகிறார்.

 

நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நித்யானந்தா, 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி அந்தப் பேரம் 60 கோடிக்கு படிந்ததாகவும், நேற்று தெரிவித்தார். நித்யானந்தா சிடி வெளியானது எப்படி என்று ஜுன் மாதத்தில் வெளிவந்த சவுக்கு கட்டுரையில் உள்ள தகவல்களை நித்யானந்தாவின் கூற்று உண்மையாக்கியிருக்கிறது.

 

நித்யானந்தா ஒரு தந்திரக்கார சாமியார் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.   இன்றைக்கு ரஞ்சிதாவுக்கு ஓரளவுக்கு ஆதரவு வரத் தொடங்கியிருந்தாலும், மார்ச் 2010ல் ரஞ்சிதாவின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

 

இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய உடன் யார் மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ?   இந்தக் காட்சியை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது தானே ?   ஆனால், ரஞ்சிதா மீதும், நித்யானந்தா மீதும், சென்னையில் சில விஷமக் கார வழக்கறிஞர்கள் கண்ணாயிரத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், நித்யானந்தா ஏமாற்றி விட்டார் என்றும், ஆபாசமாக நடந்து கொண்டு தமிழ்க் கலாச்சாரத்தை சீரழித்து விட்டார் என்றும், அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு புகார் கொடுக்கச் சென்ற வழக்கறிஞர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது சவுக்குக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பரபரப்புக்காக இது போன்ற ஒழுக்க சீலர் வேஷம் போட்டு, தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஊளையிடுகிறார்கள்.

 

அந்தப் புகார் அப்போது கமிஷனராக இருந்த கண்ணாயிரத்தைச் சென்று அடைவதற்கு முன்பாகவே, கல்யாணி என்ற வழக்கறிஞர், சன் டிவி, நக்கீரன், தினகரன் மற்றும் தமிழ் முரசு ஊடகங்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை சரக்கடித்து விட்டு வாயைத் துடைக்கும் டிஷ்யூ பேப்பராக பயன்படுத்திய கண்ணாயிரம், வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். வழக்கு பதிவு செய்தார்.  

dinakaran_complaint_1_Page_1

nakkheran_complaint_Page_1

nakkheran_complaint_Page_2

 

sun_tv_complaint_1_Page_1


sun_tv_complaint_1_Page_2

 

வழக்கு பதிவு செய்ய உத்தரவிடும் முன்பாக, கண்ணாயிரத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இது போல படம் பிடித்துக் காட்டினால் எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும்.   அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்ச் விஸ்கியை பருகிய பிறகு, அவர் அடித்த கூத்துக்களை படம் பிடித்து சன் டிவியில் ஒளிபரப்பினால் எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா ?

 RAJENDRAN

ஆனால், தாமதமாக இருந்தாலும் தற்போதாவது ரஞ்சிதா புகார் கொடுக்க முன் வந்தார் என்பதில் மகிழ்ச்சியே… இந்தப் புகாரின் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகைள் தனி நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறி ஆபாசமான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும்.

 ranjitha-38240-680x1024

எழுத்தாளர் ஞாநி ஓ பக்கங்களில் ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக, ரஞ்சிதாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தை பிரசுரிப்பது பொருத்தமாக இருக்கும்.

 

அன்புள்ள ரஞ்சிதாவுக்கு,  முதலிலேயே  உங்களுக்கு  ஒன்றைத்  தெளிவுபடுத்த  விரும்புகிறேன்.  வீடியோவில் காட்டியபடி  நித்யானந்தனுடன்  நீங்கள்  கொண்டிருந்த  உறவை  நான் ஆபாசமானதாகக்  கருதவில்லை.  அதில் எந்தக்  குற்றமும்  நீங்கள்  செய்யவில்லை. அந்த  வீடியோவை  ஒளிபரப்பிய  தொலைக்காட்சியை  நடத்துபவர்களாகட்டும், வெளியிட்ட  பத்திரிகையாளர்களாகட்டும்,  பார்த்த  எண்ணற்ற  பொதுமக்களேயாகட்டும்  அவர்கள்  யார்  வீட்டுப்  படுக்கையறைக்குள்  கேமராவைக் கொண்டு  போய்  வைத்தாலும்,  அது  பதிவு  செய்யக் கூடிய  காட்சி  இதே  போலவோ இதைவிட  ‘கிளுகிளுப்பாகவோ’ தான்  இருக்க  முடியும்.  ஆண் & பெண்  பாலுறவு என்பது  அப்படித்தான்  இருக்கும்.

தனியறைக்குள்  நடந்ததை  படம்  எடுத்துக்  கொண்டு  வந்து  ஓயாமல்  36  மணி  நேரம் காட்டியதும்,  அதை  அச்சிட்டு  விற்று வியாபாரம்  செய்ததும்தான்  ஆபாசம் என்று நான் கருதுகிறேன்.

உங்களுடைய  தனி நபர்  உரிமைகள்  மிக மோசமாக  மீறப்பட்டிருக்கின்றன.  நீங்கள்விரும்பும்  ஆணுடன்  உறவு  கொள்வது  முழுக்க  முழுக்க  உங்கள்  உரிமை.  தங்களை அது பாதித்தாலன்றி,  அதில் தலையிடவோ,  விமர்சிக்கவோ  யாருக்கும்  உரிமை கிடையாது.  அப்படிப்  பார்த்தால்  அது  அதிகபட்சம்  உங்கள்  குடும்பப்  பிரச்சினையாக இருக்கலாமே  தவிர  சமூகத்தின்  பொதுப்  பிரச்சினையே  அல்ல.

இதுவே  மேலை  நாடாக இருந்தால்,  நீங்கள் உங்கள்  அந்தரங்கத்தில் அத்துமீறியதற்காக  அத்தனை  ஊடகங்கள், பத்திரிகைகள்  மீதும் வழக்கு  தொடுத்து  பெரும்தொகைகளை  இழப்பீடாகப்  பெறுவதற்கான  சட்டப்பூர்வமான  உரிமைகள் தெளிவாக  இருக்கின்றன.  நம் நாட்டில்  அவையெல்லாம்  இன்னும்  சரியாக வடிவமைக்கப்படவில்லை  என்பது  வருத்தத்துக்குரியது.

நித்யானந்தா என்ற ஆன்மீக வாதி, ஊருக்கெல்லாம்  பிரும்மச்சரியத்தை போதித்துவிட்டு  தான்  அதைப்  பின்பற்றாத ஒரு போலி மனிதன் என்று அம்பலப்படுத்த ஒருவர்  விரும்பினால்,  அதற்கு  அவருக்கு  முழு  உரிமை இருக்கிறது.  அரசியல்  முதல்  ஆன்மீகம்  வரை, டி.வி.  முதல் பத்திரிகை  வரை, சொல்  ஒன்றும்  செயல் ஒன்றுமாக பொது  வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அம்பலப்படுத்த  நடக்கும்  முயற்சிகளை நான் ஆதரிப்பேன்.

அதே  சமயம்  அந்த  வீடியோவில்  உங்கள்  முகத்தை  மறைத்துவிட்டு வெளியிடுவதுதான்  நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும்.  ஏனென்றால்  அம்பலப்படுத்தப்பட வேண்டிய  போலி  நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.

அந்த  வீடியோவில் உங்களுக்கு  பதில்  வேறு  ஏதோ  ஊர்  பேர்  தெரியாத பெண் அல்லது  ஏதோ  ஒரு  அதிகாரி,  தொழிலதிபர்,  அலுவலர் வீட்டுப்  பெண்இருந்திருந்தால்  இந்த  அளவு  மீடியா  ஆனந்த  தாண்டவம்  ஆடியிருக்காது. நடிகை என்பவள்  நம்  சமூகத்தில்  இன்னமும்  பெருவாரியாகப் பலராலும் தேவடியாளாகவேக்  கருதப்படுகிறாள். அவளைத்  துகிலுரியவும்,  அதை ரசிக்கவும் கொன்டாடவும்  மனநிலை  இருக்கிறதே  தவிர, அவளை  மதிப்பதில்லை. புவனேஸ்வரி  கைதின்போது  வெளியான  அவதூறு செய்திகளுக்காக  வெறியாட்டம் ஆடிய  நடிகர்  சங்கமும்  நடிக & நடிகைகளும்  இப்போது  உங்கள்  விஷயத்தில்  உரத்த மௌனம்  சாதிப்பது  வெட்கக்கேடானது.  நீங்கள்  ஒன்றும் விபசாரம்  செய்ததாக அந்த  வீடியோ  சொல்லவில்லை.  உங்களுக்கு  விருப்பமான ஒருவருடன் உறவுகொள்கிறீர்கள்.  அவ்வளவுதான்.

யாருடன்  உறவு  கொள்ள  வேண்டும்  என்பது  முழுக்க  முழுக்க  உங்கள் உரிமை. ஆனால்  என்னைப்  போன்றவர்களுக்குப்  புதிராக  இருப்பதெல்லாம்  உங்களைப் போன்ற  பல பெண்கள்  ஏன் சாமியார்களிடம்  போய்  சிக்கிக்  கொள்கிறீர்கள் என்பதுதான்.  இப்போது  கூட ஒரு உயர் பெண் அதிகாரி, ‘சுவாமிஜி  இந்த சோதனையை எல்லாம் கடந்து வருவார்’ என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

பலருக்கும்  அப்படிப்பட்ட  முட்டாள்தனமான  பக்தி இருக்கிறது.  அப்படி  இந்தசாமியார்கள் நமக்கு அளிப்பதாகக் கூறும் மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும்அவர்கள்  சொல்லும் வழிகள்  மூன்றுதான். யோகா, மூச்சுப்  பயிற்சி, தியானம்.இந்த  மூன்றையும்  கற்க  கடவுளும்  தேவையில்லை.  மதமும்  தேவையில்லை. சடங்குகளும்  தேவையில்லை.  கிருஷ்ணமாச்சாரியாரின்  யோக  மந்திரம்  போன்றபல  அமைப்புகள்  ஒரு பள்ளிக்கூடம்  போல  இவற்றை  சொல்லிக்  கொடுத்துவிடுகின்றன.  கடவுள் நம்பிக்கையற்றவர்  என்று தன்னைக் கூறிக் கொள்ளும் நம்முதலமைச்சர் கூட இவற்றால் பயனடைய முடிந்திருக்கிறது.

நீங்கள்  எங்கே  என்ன  படித்தீர்கள்,  உங்கள்  குடும்பப்  பின்னணி  என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால்  பெருவாரியான  ஆண்களும் பெண்களும்  சாமியார்களிடம்  தஞ்சமடைவதற்குக்  காரணம்,  நம் குடும்பங்களும்கல்வி முறையும்தான்.

பத்து  வாழ்க்கைத்  திறன்கள் நம்  ஒவ்வொருவருக்கும்  தேவை  என்று உலக  சுகாதாரநிறுவனம்  வரையறுத்திருக்கிறது.  தன்னை அறிதல்,  தன்னைப் போல்  பிறரைஉணர்தல்,  இன்னொருவருடன்  சரியாக உறவாடக்  கற்றல், உரையாடக்  கற்றல்,எதையும்  கேள்வி  கேட்கப்  பழகுதல், எதற்கும்  நாமே  பதில்  தேடப்  பழகுதல், தெளிவாக  முடிவெடுத்தல்,  சிக்கல்களை  அவிழ்த்தல்,  உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளுதல்,  அழுத்தங்களை  லேசாக்குதல்  என்ற  பத்து  வாழ்க்கைத் திறன்களைப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிமையாகிவிடும்.

இந்த  வாழ்க்கைத்  திறன்களை  நம்  குடும்பத்தில்  கற்கலாம்.  பள்ளியில்  கற்கலாம். ஆனால்  அதற்கு  மாறாக  ஒவ்வொரு பிரச்சினை  வரும்போதும்  கடவுள்,  கோவில், சாமியார்,  மடம்  என்று  குடும்பமே  நம்மை  வேறு  திசைக்கு  இழுத்துப் போய் விடுகிறது. செக்ஸ்  எப்படி  முழுக்க  முழுக்க  அந்தரங்கமான  விஷயமோ  அதே போல  கடவுள்  நம்பிக்கை  என்பதும்  முழுக்க  முழுக்க  அந்தரங்கமானதாக  மட்டுமே இருந்தால்  போதும்  என்ற  பார்வையை  நாம் பெறுவதில்லை.

இதன் விளைவு உங்களைப் போன்றவர்கள் தன்னைத்தானே நம்பாமல்,சாமியார்களை நம்பத் தொடங்குகிறீர்கள்.

பல வருடம் நம்முடன் பழகிய பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ,ஆசிரியர்களோ  காட்டாத  வழியை  முன்பின்  தெரியாத  ஒரு  சாமியார்  காட்டுவார் என்பதே  பெரும்  மூட  நம்பிக்கைதான்.  இதைத்தான் தங்கள் முதலீடாக சாமியார்கள்வைத்துக் கொள்கிறார்கள்.

பேச்சுத்  திறமை  இருந்தால்  அரசியலுக்குப் போய்  பிழைத்துக்  கொள்ளலாம்  என்ற நிலை இப்போது  இல்லை. அங்கே வாய்ப்புகள்  குறைந்துவிட்டன. குடும்பத்துக்குள்ளேயே  போட்டா போட்டி  போடும் அளவுக்கு நெரிசலாகிவிட்டது.

எனவே  சாமியாராவது  நல்ல  மாற்றுத் தொழிலாக  இருக்கிறது.  கொஞ்சம் யோகா,கொஞ்சம் தியானம், கொஞ்சம் சடங்கு, பத்து வாழ்க்கைத்  திறன்களிலிருந்தும் கொஞ்சம்  கிள்ளியெடுத்து  பேச்சில் தெளித்தல்,  இத்துடன்  காவி  காஸ்ட்யூம் சேர்த்தால்  சாமியார்  தயார்.  கறுப்புப்  பணத்தை  கொண்டு  வந்து  கொட்டத் தொழிலதிபர்கள்  தயாராக  இருக்கிறார்கள்.  அதனால்தான் எந்த சாமியாரும் பின்தங்கிய  ராமநாதபுரம்  மாவட்டத்துக்குப்  போவதில்லை.  ஈரோடு,  கோவை  என்று வளமான  பகுதிகளில்  மடம் வைக்கிறார்கள்.

அடுத்த  ஸ்டெப்  அரசியல்  செல்வாக்கு.  உங்கள்  நண்பர்  நித்யானந்தா  அதிலேதான் வழுக்கிவிட்டார்.  அரசியல்  செல்வாக்கு  இருக்கும்  எந்த சாமியாரும் இதுவரை அம்பலப்பட்டதில்லை.  பெரும்  கூட்டத்தை  திரட்டி  அரசியல்வாதிகளை பயமுறுத்தினால், கூட்டணிக்கு  வந்து விடுவார்கள்.  வீட்டுக்கே  அழைத்து  ஆசி கேட்பார்கள்.  ஒரு  கூட்டணி  சிக்கலானால்  இன்னொரு  கூட்டணி  அரசியலில் அமைப்பது  போல  இதிலும் அமைக்கலாம். அப்போது  எதிலாவது  சிக்கினாலும் வழக்கு சாட்சிகள்  கூட பல்டி அடிப்பார்கள்.

இந்த தந்திரங்களை  இன்னும் நித்யானந்தா  சரியாகப் பழகிக்  கொள்ளாததால் அடிபட்டுவிட்டார்.  கூட சேர்ந்து  நீங்களும் அடிபட்டிருக்கிறீர்கள்  என்பதுதான் பாவமாக இருக்கிறது.

சாவித்திரி முதல் காஞ்சனா,  கனகா,  நீங்கள்  வரை  நடிகைகளின்  வாழ்க்கை பெரும்பாலும்  சோகமும்  வேதனையும்  நிரம்பியதாகவே  முடிகின்றன.  அதற்குக் காரணம்  கல்வி  இல்லாதது, தப்பானவர்களையே நம்புவது,  எது  உண்மையான ஆனந்தம் என்ற  அறிவை  வளர்த்துக்  கொள்ளாதது,  தற்காலிக  மகிழ்ச்சிகளில் தன்னைத் தானே  தொலைத்துக்  கொள்வது  இவையெல்லாம் தான்.

ranjitha-18220-680x1024

உங்கள்  அனுபவங்களை  நீங்கள்  பகிரங்கமாகச்  சொல்ல  முன்வரவேண்டும்.அதிலிருந்து  வருங்கால  நடிகைகள்  மட்டுமல்ல,  ஒவ்வொரு  பெண்ணும்  கற்றுக்கொள்ள  நிறைய  பாடங்கள் இருக்கும்  என்று  நான்  நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கையை  இன்னொருத்தர் தீர்மானிக்க  விட்டுவிட்டால்  என்னவெல்லாம் கஷ்டங்கள்  ஏற்படும்  என்பதை ஒவ்வொருவரும்  உணர  வேண்டும்.  என்  வாழ்க்கை என் கையில்  என்ற  உறுதியோடு  நம்  சமூகத்தில்  ஒவ்வொருவரும்  வளர,  உங்கள் பங்களிப்பாக  உண்மைகளை  உரக்கச் சொல்லுங்கள்.

உங்களைச்  சூழ்ந்துவிட்ட  இழிவிலிருந்து  விடுதலை  பெற அது  ஒன்று தான்  வழி.

அன்புடன்

ஞானி

தற்போது, ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா கொடுத்துள்ள புகார்களின் மீது பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்தப் படுவதோடு மட்டுமல்லாமல், ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி உத்தரவிட்டும், வழக்கறிஞர் கல்யாணி அளித்த புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தன் கடமையில் இருந்த தவறிய காரணத்துக்காக அப்போதைய கமிஷனர் கண்ணாயிரத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.   ஜெயந்திரர் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா, இதையும் செய்வார் என்று நம்புவோம்.

 

 

 

 

Comments  

 
0 #57 nalan virumbe 2011-08-08 13:08
you are not correct person to publish this savuku you are compromised with ranjitha and your site is to banned because are you most dangerous then terrorist
Quote
 
 
+2 #56 Suresh Raja 2011-07-21 14:15
Quoting Sakthivel_tup:
[ஃஉஒடெ நமெ="ஸுரெஷ் றஜ"]சவுக்கு, தங்களின் இந்த பதிவிற்கு எதிர்மறையான கருத்துக்கள் நான் கொண்டுள்ளேன். சன் டிவியோ பக்கீரனோ இதை ஆபாச படுத்தாமல் இருந்திருக்கலாம ் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக ரஞ்சிதாவை உத்தமி போல் சித்தரிப்பதை கண்டிக்கிறேன். விபச்சாரி மனம் உவந்து தான் பலருடன் உறவு கொள்கிறாள். அதற்காக நாம் விபச்சாரத்தை ஆதரிக்க முடியாது. நமக்கென்று சில வாழ்க்கை முறை உள்ளது, மேலை நாடுகளோட அதை ஒப்பிட கூடாது.


இவ்வளவு பேசும் அந்த நடிகை, சிக்கியவுடன் என்ன சொன்னார்? அந்த சாமியார் என்னை வசியம் செய்துவிட்டார்... சிறிது நாள் கழித்து, அந்த படத்தில் இருப்பது நான் இல்லை!!!! ராம்நகர் காவல் துறை அவர் தான் என்று தொழில்நுட்ப உதவியுடன் உறுதி செய்த பிறகும்....
முன்னுக்கு பின் முரணாக பேசும் இவரை ஆதரிக்க நான் விரும்பவில்லை.[/ஃஉஒடெ]

///////////விபச்சாரி மனம் உவந்து தான் பலருடன் உறவு கொள்கிறாள். அதற்காக நாம் விபச்சாரத்தை ஆதரிக்க முடியாது.///////////////

வானம் திரைப்படம் பார்த்தீர்களா நண்பரே? அதில் வரும் பாலியல் தொழிலாளி போலத்தான் மற்ற பாலியல் தொழிலாளிகளும். கருணைக்கும், பரிதாபத்திற்கும ் உரியவர்கள். மனமுவந்து கலவி கொள்கிறவர்கள் கள்ளக்காதலிகளும ், ***யில் கொழுப்பேறிய காளையர்களும்தான ். போகிற போக்கில் அடுத்த மனிதர்களின் வாழ்வியல் வருத்தங்களை எள்ளி நகையாடுகின்ற உங்களுக்கான சிறப்பு காட்சிதான் சன் தொலைக்காட்சியில ் ஒளிபரப்பப்பட்ட கலவிக்காட்சிகள் . தண்டிக்கப்படவேண ்டியவர்களில் நீங்களும் ஒருவரே.

நண்பரே, எவ்வளவோ தொழில்கள் உள்ளன. உடலை விற்று பிழைப்பவர்களை நியாயப்படுத்தாத ீர்கள். இவ்வளவு பேசும் நீங்கள் விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்க சம்மதிப்பீர்களா ? எத்தனை இளஞர்கள் பாழாகிறார்கள் என்பதை எண்ணி பாருங்கள். அந்த நடிகை செய்தது ஒரு வகை விபச்சாரம் தான். சரியாக சொன்னால் அது கள்ளக்காதல். அதை வீடியோவாக காட்டியது குற்றமென்பதில் மறுப்பில்லை.
ஒரே கேள்வி, உங்களுக்கு தெரிந்த எந்த பெண்ணும் கணவனை தவிர பிறருடன் உறவு வைத்தால் இப்படி தான் ஆதரிப்பீர்களா? ஆம் என்றால் உங்களை விட கேவலமான மனிதன் யாருமில்லை.
Quote
 
 
0 #55 aha 2011-07-19 18:24
It cud be their wish.But as a society we need to bash it as we do for smoking and drinking.Not only for women but for men too.

Quoting Raj 26:
விபசாரியாகவே இருந்தாலும் அது அவர்கலுடய தனிபட்ட விருப்பம் என்பது என் கருத்து.
Quote
 
 
+1 #54 aha 2011-07-19 18:22
comedy pannaathenga baasu.
Quoting valvil ori:
இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_03.html
Quote
 
 
+1 #53 aha 2011-07-19 18:17
if u lose money to fake saints, u can sympathize.How can u sympathize with ppl who have enjoyed with him?Tell me.Is Ranjitha a baby and doesnt know a saint should not do all these things?It doesnt mean SUN TV did a correct thing or Nakkeeran did a correct thing.But Nithi or Ranjitha has no moral character.
Quote
 
 
+4 #52 Raj 26 2011-07-19 08:41
விபசாரியாகவே இருந்தாலும் அது அவர்கலுடய தனிபட்ட விருப்பம் என்பது என் கருத்து.
Quote
 
 
+6 #51 KADHAR ALI 2011-07-19 06:08
அக்கா ரஞ்சிதா நீங்கள் தான் கடவுள் நம்பிக்கையே இல்லையென்று கூரிவிட்டிர்கலே பின் ஏன்?இந்த பரதேசியிடம் மாட்டி விட்டிர்கள்.நீங்கள் மட்டுமல்ல பிரபல உலகப்புகழ்[!]எழ ுத்தாளர் சாரு மனைவி அவந்திகாவும் இதே கதிதான். .இதை எல்லாம் நீங்கள் நன்றாக தெரிந்திருந்தூம ் நித்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறிர ்கள்.இன்னும் நீங்கள் சுதாரிக்கவில்லை என்றால் சைக்கோ நித்தியின் தீராத இடஞ்சலில் மாட்டிக்கொள்விர ்கள்.பின் உங்களை காப்பாற்ற ஆளே இல்லாமல் போய் விடும்.
Quote
 
 
+5 #50 Sakthivel_tup 2011-07-18 23:35
[ஃஉஒடெ நமெ="ஸுரெஷ் றஜ"]சவுக்கு, தங்களின் இந்த பதிவிற்கு எதிர்மறையான கருத்துக்கள் நான் கொண்டுள்ளேன். சன் டிவியோ பக்கீரனோ இதை ஆபாச படுத்தாமல் இருந்திருக்கலாம ் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக ரஞ்சிதாவை உத்தமி போல் சித்தரிப்பதை கண்டிக்கிறேன். விபச்சாரி மனம் உவந்து தான் பலருடன் உறவு கொள்கிறாள். அதற்காக நாம் விபச்சாரத்தை ஆதரிக்க முடியாது. நமக்கென்று சில வாழ்க்கை முறை உள்ளது, மேலை நாடுகளோட அதை ஒப்பிட கூடாது.

ஒரு திருட்டு கம்முனாட்டி சாமியார் இருக்கிறான். அவனின் யோக்கிதை தெரிந்தால் அதை அவரே வெளிப்படுத்தியி ருக்கலாம். பலரின் வாழ்க்கை, பல குடும்பம் பாழாவதை தடுத்திருக்கலாம ். அதை விடுத்து தான் சுகங்களுகாக மூடி மறைப்பது தவறு...

இவ்வளவு பேசும் அந்த நடிகை, சிக்கியவுடன் என்ன சொன்னார்? அந்த சாமியார் என்னை வசியம் செய்துவிட்டார்... சிறிது நாள் கழித்து, அந்த படத்தில் இருப்பது நான் இல்லை!!!! ராம்நகர் காவல் துறை அவர் தான் என்று தொழில்நுட்ப உதவியுடன் உறுதி செய்த பிறகும்....
முன்னுக்கு பின் முரணாக பேசும் இவரை ஆதரிக்க நான் விரும்பவில்லை.[/ஃஉஒடெ]

///////////விபச்சாரி மனம் உவந்து தான் பலருடன் உறவு கொள்கிறாள். அதற்காக நாம் விபச்சாரத்தை ஆதரிக்க முடியாது.///////////////

வானம் திரைப்படம் பார்த்தீர்களா நண்பரே? அதில் வரும் பாலியல் தொழிலாளி போலத்தான் மற்ற பாலியல் தொழிலாளிகளும். கருணைக்கும், பரிதாபத்திற்கும ் உரியவர்கள். மனமுவந்து கலவி கொள்கிறவர்கள் கள்ளக்காதலிகளும ், ***யில் கொழுப்பேறிய காளையர்களும்தான ். போகிற போக்கில் அடுத்த மனிதர்களின் வாழ்வியல் வருத்தங்களை எள்ளி நகையாடுகின்ற உங்களுக்கான சிறப்பு காட்சிதான் சன் தொலைக்காட்சியில ் ஒளிபரப்பப்பட்ட கலவிக்காட்சிகள் . தண்டிக்கப்படவேண ்டியவர்களில் நீங்களும் ஒருவரே.
Quote
 
 
-1 #49 aha 2011-07-18 22:31
ithellam overu.avamaanathukku payanthava en cinemaala nadikkanum.en saamiyaaroda ponum?sattappadi athu sariyaa irukkalaam.niyaayappadi alla.handling of jeyendrar by jj shwed her madness.ingeyaavuthu nadkai.ange oru cancer patient.savukku is bcomig a politician
Quote
 
 
+3 #48 Savvukku Fans 2011-07-18 20:43
Hi, We all here from bangalore are your biggest fans!! Why there is no update for a long time. We miss you!!!!!!!!
Quote
 
 
-4 #47 viki 2011-07-18 17:57
தேவையற்ற உணர்ச்சி ஆவேசங்களை கழட்டிவிட்டு அறிவுபூர்வமாக நீங்கள் எழுதிய இந்த கட்டுரைதான் நீங்கள் எழுதியவைகளிலேயே சிறந்ததேன்பேன்.ஞானியின் கட்டுரையை அப்போதே நான் படித்துவிட்டேன் என்றாலும் இப்போது அதை பொருத்தமாக நீங்கள் பயன்படுத்தியது பாராட்டத்தக்கது .
Quote
 
 
-10 #46 msn85 2011-07-18 17:45
ஜக்கி வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இவெர்கல் எல்லாம் கெட்டவெர் என்னு சொல்லுவது தவரு என்பது என் கருத்து .....
Quote
 
 
+8 #45 செருவை சுந்தர் 2011-07-17 23:42
இந்த உலகத்தில் அனைத்துமே தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு மத்தியிலேயே நடக்கிறது. இதில் ஆன்மீகத் திருடர் நித்தியானந்தாவோ அல்லது அவரால் திருடப்பட்ட ரஞ்சிதாவோ அல்லது உலக மகா யோக்கியவான்களான (!?)நக்கீரன் கோபால் கூட்டமும் மற்றும் கொடூர குள்ளநரியான சன் டி.வி-யும் எப்படி அடங்காமல் போகும்?
Quote
 
 
+6 #44 bas 2011-07-17 23:05
ஒரு வழியாக ரஞ்சிதாவின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது - சன் டி.வி., தினகரன் மற்றும் நக்கீரன் மூலமாக! அதை எப்படி மாற்ற முடியும் ரஞ்சிதாவால்! நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடத்தே ஆகவேண்ட
Quote
 
 
+7 #43 gokul 2011-07-17 23:04
சாமியார் ஒழுக்கம் இல்லதவன் தான் ...அனால் அதை வைத்து காசு பார்த்தவர்கல்
பினந்தின்னிகல் ப்லுஎ ஃபில்ம் எடுப்பவர்கலுக்க ும் இவர்கலுக்கும் என்னெ விட்தியசம்
Quote
 
 
-12 #42 syed ibu 2011-07-17 18:18
நீஙகள் என்ன் செய்கிறோம் என்று புரியாமல் செய்து கொன்டு இருக்கிர்கள் என்று இதை படித்து பார்ததாளே புரிந்து விடும்,

உஙகளூக்கு நடு நிலமையை விட மு.க குடும்பதினர் மேல் உள்ள் வெறுப்பு தான் அதிகமதிகம் உள்ளது.
Quote
 
 
+27 #41 Xavier 2011-07-17 18:07
//வீடியோவில் காட்டியபடி நித்யானந்தனுடன் நீங்கள் கொண்டிருந்த உறவை நான் ஆபாசமானதாகக் கருதவில்லை. அதில் எந்தக் குற்றமும் நீங்கள் செய்யவில்லை உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் உறவுகொள்கிறீர்க ள். அவ்வளவுதான்..//

//யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை//

If everyone accepts above statement, why police raid Lodge and arrest unmarried couple? They also, to be released and The officer who raided will be punished to expose personal offers !!!!
Quote
 
 
-12 #40 Ramamoorthy, Dubai 2011-07-17 15:57
Savuku,

Please do not paint a wrong pictures on Sri sri ravi sanakr, Jagdev & all....
R u in the same line with Nakeeran, Thuklak & Junior vikadan?
So before compare something & think twice, since UR articles are followed by many sincere followers.
The way UR handling caste based issues, Samacheer kalvi & these will not reflect the wright things.
as per some one comment here , UR also doing the unethical things by naming as investigate journalism.
Quote
 
 
+2 #39 manudan 2011-07-17 14:00
If any thing happened in their house, the t.v media will publish?In the name of media some bogus media are doing like that.any how the media persons will show his bedrooms for money.please make alert to their respective wifes.
Quote
 
 
+14 #38 குடுகுடுப்பை 2011-07-17 12:01
தமிழகத்திலேயே பெரிய ஸ்திரீ லோலன் யார்னு எல்லோருக்கும் நல்லா தெரியும்...மனைவி துணைவி இணைவின்னு பொதுக்குழு ரேஞ்சுக்கு பல போஸ்டிங்குகள போட்டு கும்மாளம் அடிக்கும் கயவனைத்தான் முதல்ல உள்ள தள்ளனும்...அரசியல்வாதிகள்த ான் மக்கள்கிட்ட வோட்டுகள வாங்கிட்டு கண்டபடி ஏமாத்திட்டு திரியுறானுங்க..சாமியார்கள்கிட் ட நாமளாதான் போயி விழுகிறோம்..ஆகவே முதல்ல தண்டிக்கப்படவேண ்டியது அரசியல்வியாதி நாய்கள்தான்..
Quote
 
 
+3 #37 கோபி 2011-07-17 10:55
அதிமேதாவியின் வக்காலத்தும் மனுஷ்யபுத்திரனி ன் விளக்கமும்:

’திரு. அதிமேதாவி’ அவர்கள் கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டிற் கு ஃபேஸ்புக்கில் இப்படி வக்காலத்து வாங்குகிறார்:

//எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்தை பிளாட்பாரத்துலே விட்டு வெச்சிருக்கோம். கலைஞர் மட்டும்தான் அவர் குடும்பத்தை கோபுரத்துலே வெச்சிருக்காரு :-)//

அதற்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இது போன்ற குழந்தைகளுக்குப ் புரியும் படி ஒரு விளக்கம் அளித்துள்ளார்:

டியர் யுவா..உங்கள் கருத்தில் இரண்டு திருத்தங்கள். நீங்கள் சொலவ்து குடும்பத்தை காப்பாற்றுவது பற்றி. கலைஞரின் பிரச்சினை குடும்பங்களைக் காப்பாற்றுவது பற்றி. உங்கள் குழந்தைகளுக்கும ் என் குழந்தைகளுக்கும ் பொம்மைக் கார் வாங்கித் தந்தாலே போதுமானது. கலைஞரின் குழந்தைகளுக்கு அவர் கார் கம்பெனியையே வாங்கித் தரவேண்டும். மற்றபடி அவரவர் செலவில் அவரவர் குடும்பங்களை காப்பாற்றினால் நமக்கென்ன ஆட்சேபணை?
Quote
 
 
+17 #36 sasikuma 2011-07-17 10:39
சன் டி வி யும் நக்கீரனும் கேடிகள் அதற்க்காக நித்தியும் ரஞ்சியும் யோக்கியர்கள் இல்லை........
Quote
 
 
+9 #35 sugumaran 2011-07-17 09:21
இந்த விஷியதில் சவுக்கு நித்யனந்தவிர்கு வாதடுவது விசிதிரமாக உள்ளது.நித்யனந்த ஒரு கேடு கெட்ட பெண் பித்தர்.
Quote
 
 
+3 #34 valvil ori 2011-07-17 07:45
இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_03.html
Quote
 
 
+4 #33 tvraj 2011-07-17 07:33
நித்யனந்தாவுக்க ு தான் முதலில் தன்டனை கொடுக்க வேன்டும்.
Quote
 
 
0 #32 G.Ravi 2011-07-17 07:18
ரஞ்ஜிதா புகார் வரவேற்கத்தக்கது . ரஞ்ஜிதா விடுவிக்கப்பட வேண்டும். நித்யானந்தா தண்டிக்கப்பட வேண்டும்.
Quote
 
 
+8 #31 ஜாபர்தீன்,அபுதாபி 2011-07-17 01:12
நித்யானந்தா& ரஞ்சிதா விவகாரங்களில்சக ோதரர் ராமராசு, தரணி, பத்மன் ஆகியோரின் கருத்தே என் கருத்தும் கலாச்சார சீரழிவிற்கும் கல்ல உறவுகளுக்கும் வக்காலத்து வாங்குவது இதுதான் காலத்தின் கோலம் (களிகாலம்) என்பார்களே அதுதான் இதுவோ என்று தோன்றுகிறது.ச்வுக்கு நடுநிலை தவருகிறது கவணம் தேவை.....
Quote
 
 
0 #30 ~J 2011-07-16 23:00
Welcome Back Savukku... well done...

நீங்கள் உயர்ந்துகொண்டிர ுக்கிரீர்கள்...

இது அதன் ஆதாரம்...

"First They Ignore, then they argue, and (when) they attack, you won"

எங்கேயோ படித்தது...
Quote
 
 
+3 #29 சவுக்கு படிப்பவர் 2011-07-16 11:32
நீங்கள் எப்படியாவது கண்ணாயிரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறீர் கள். நீங்கள் நினைப்பது போல போலீஸ் துறையை மாற்ற முடியாது. கண்ணாயிரம் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி நியாயமானது. உங்கள் சொல் பேச்சுபடி ஜெயலலிதா போலீஸ் துறையை நிர்வாகம் முடியாது மன்னிக்கவும்.
Quote
 
 
+3 #28 சிபிசந்தர் 2011-07-16 08:58
அதிகார எல்லை என்பது இல்லறத்தின் தனிமைக்குள்ளும் பாயும் என்கிற கேவலமான கலாச்சாரத்தை செய்துகாட்டிய அதிகார மற்றும் பண பூர்ஷ்வாக்களை வேரோடு பிடுங்கி எறியும் வல்லமை இந்திய சட்ட அமைப்புக்கு இல்லை என்பதுதான் ...கொடுமை வேதனை ..தண்டனைகள் கடுமையாக்கப்படு ம்வரை ஒண்ணும் புடுங்கமுடியாது ...
Quote
 
 
+23 #27 raamarasu 2011-07-16 08:11
சவுக்கின் ஆதாரத்துடனான புலனாய்வு என்பது பலரும் பாராட்டத்தக்க ஒன்று. திரட்டும் ஆதாரங்கள் அனைத்தும் தங்களது திறமையால் என்றாலும் அந்தந்த துறையில் உள்ள, சவுக்கின் எழுத்திற்கு ஆதரவு தரும் ஒருவரின் உதவியால்தான் அந்த ஆதாரங்கள் கிடைத்திருக்கும ். அப்படி பார்க்கும்போது அந்த நபர் அந்த துறைக்கு செய்யும் துரோகம் என்பதாகவே சொல்லலாம். புலனாய்வு என்பதே அடுத்தவரின் அந்தரங்கத்தில் நுழைந்து, அம்பலப்படுத்துவ துதானே. நித்தியானந்தாவை பொறுத்த வரையில் சாமியார், சந்நியாசி, துறவி என்ற போர்வையில், ஆன்மிகம் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருந்ததாக அந்த தொலைக்காட்சி அவர் மீதான குற்றச்சாட்டை வைத்தது, ஓளி பரப்பியது. நித்தியானந்தாவை ஏமாற்று பேர்வழி என்று ஒத்துக்கொள்ளும் சவுக்கு ரஞ்சிதா என்ற நடிகைக்கு, பெண் என்பதாக ஆதரவு சொல்வது ஆச்சரியமாக உள்ளது...! ஏனென்றால் ரஞ்சிதா என்ற பிரபலமான நடிகையை பார்த்து இன்னும் பல பெண்கள் நித்தியானந்தாவி ன் சீடராகி இருக்கலாமே. இன்னும் பலபேர் பாதிப்படையாமல் இருக்க சன் தொலைகாட்சியின் ஒளிபரப்பு உதவியிருக்கலாமே - அது உண்மையாக இருக்கும்பட்சத் தில். இதற்கு முன் எத்தனையோ பெண்கள் பற்றி / நடிகைகள் பற்றிய அவதூறுகள் பத்த்ரிகைகளிலும ், தொலைகாட்சியிலும ் வந்துள்ளன. அப்போது எதுவும் சொல்லாத சவுக்கு இவருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது ஏன்...? ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஒருவர் செய்த அநியாய அந்தரங்களை, படம் பிடிக்காமல் எப்படித்தான் நிரூபிப்பது...! சொல்லுங்கள் சவுக்கு அவர்களே. மொத்தத்தில் சவுக்கின் நோக்கம் ஒரு பெண்ணை கேவலப்படுத்துவை குறை சொல்வது அல்ல.. சன் தொலைகாட்சியை, தினகரனை, அதன் ஆதரவு அரசியல் கட்சியை குற்றவாளியாக காட்டுவதே. இதில் திரு ஞானியை உங்களுக்கு ஆதராமாகக் காட்டிக்கொண்டது உங்களது சாமார்த்தியம் என்று சொல்லலாம். சவுக்கு திறமையானவர்தான் , நேர்மையானவர்தான ் சந்தேகமே இல்லை. ஆனால் சவுக்கு மட்டுமே திறமையானவர், திறமையானவர் என்று சொல்லமுடியுமா....!
Quote
 
 
+17 #26 அன்பன் 2011-07-16 07:11
ஒரு பெண்ணை பாலியல் வன்புண்ர்வு செய்து இருந்தால் அது சட்டப்படி குற்றம்... ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வது எந்த ஊர் குற்றம்.. நித்தயானந்தா எனும் 32 வயது இளைஜன் ஒரு பெண்ணின் விருப்பத்துடன் உறவு வைத்துக்கொள்ளும ்போது அதை படம் பிடித்தது தான் சட்டப்படி குற்றம்.. சாமியார் என்றாலே அனைவரும் போலிகலே..அவர்களின் இவர் போலி இவர் நிஜம் என பிரிதறிய இயலாத ஒன்று... சுருஙக சொன்னால்... பாலியல் வ்ன்புணர்வு செய்த பிரெமானந்தா செய்தது குற்றம், ஒரு பெண்ணுடன் அவளின் விருப்பத்தோடு உறவு கொண்டது எவ்வகையிலும் குற்றம் அல்ல..
Quote
 
 
+10 #25 jamuna.m 2011-07-16 06:32
சன் தொலைக்கட்சிக்கோ அல்லது நக்கிரனுக்கோ பிறருடைய அந்தரங்க வாழ்க்கையை திருட்டு தனமாக ஒளிப்பதிவு செய்ய யார் அதிகாரம் கொடுத்தது?
ரஞ்சிதா நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தே ஆகவேண்டும்.
Quote
 
 
+14 #24 Ram prasad 2011-07-16 02:57
ஆணாதிக்க பிற்போக்குத்தன சமூகத்தின் இன்னுமொரு அறிகுறி. வருடாவருடம் திருட்டுத்தனமாக அடர்ந்த காட்டுப்பகுதியி ல் கேரள அரசின் உதவியோடு ஏற்றப்படும் தீயை, ஐயப்பனின் ஜோதி என்று பொய் கூறி லட்சக்கணக்கான அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தை கேள்விகேட்க தைரியமில்லாத ஒரு அரசாங்கம், நீதிமன்றம், ஒரு சிலையை பெண் தொட்டுவிட்டார் அதனால் இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டத ு என்கிறது. சவுதி வ-ஹாபிக்கள் தோற்றுவிடுவார்க ள். திருடர்கள், பொய்யர்கள், ஊரை ஏமாற்றுபவர்கள் ஏற்றும் இந்த தீயைக் காணச் சென்ற 104 அப்பாவி மக்கள் கூட்ட நேரிசில் இறந்த பிறகும் அதைப் பற்றி விசாரிக்க உத்தரவிடாத அரசாங்கம் ஜெயமாலா ஐயப்பனை தொட்டு தீட்டிழைத்து விட்டார் என்று கூறுவதை என்னவென்று விமர்சிப்பது. கொடுமை....http://www.ndtv.com/article/india/actress-jayamala-gets-court-summons-in-sabarimala-case-119556
Quote
 
 
+15 #23 pa. iravi 2011-07-16 02:36
தனி மனித சுதந்திரத்தை அனுபவிப்பதில் எல்லோரும் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோமோ அந்த அளவுக்கு தனி மனித ஒழுக்கத்தை கடை பிடிப்பதிலும் இருக்க வேண்டும். நம் எல்லோருமே நம்மை நல்லவர்களாக காட்டி கொள்ள முயர்ச்சிக்கிறோ மே ஒழிய நல்லவர்களாக வாழ முயற்ச்சிப்பதில ்லை. தான் ஒழுக்க சீலன் என்று எந்த சாமியாரும் சொன்னதில்லை. ஒழுக்க உபதேசங்கள் எல்லாம் அடுத்தவருக்கு மட்டுமே. நித்தியானந்தா யாரையும் கற்பழித்து விடவும் இல்லை. ரஞ்சிதா கற்பழிக்கபடவும் இல்லை. நித்தியானந்தா மீதான பெரும்பாலோரின் கோபமும் சாமியார் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற இவர்களது இலக்கணத்தை அவர் மீறி விட்டதாக கருதுவதே. நம்முடைய பிரச்சினைகளூக்க ு சாமியார்களிடம் தீர்வு உள்ளது என்று அவர்களிடம் செல்வது சாமியார் குற்றமா அல்லது நம் குற்றமா?
இது பற்றிய விழிப்புனர்வை மக்களிடம் தகுந்த முறையில் எடுத்து வைத்திருப்பதுதா ன் ஊடகத்தின் கடமையாக இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து அடுத்தவர்களின் அந்தரங்கத்தை குடும்பங்களின் கண் முன் பல மணி நேரம் உலவ விடுபவர்களின் உள் நோக்கம் என்ன? எத்தனை பிஞ்சுகளின் மனங்களில் இவர்கள் நஞ்சை கலந்திருக்கிறார ்கள் தெரியுமா?.
Quote
 
 
+3 #22 இரண்டுமுகம் 2011-07-16 01:50
இந்த வழக்கில் சவுக்கு ஒன்றும் தவறு செய்வதாக தோன்றவில்லை,

பத்திரிக்கை சுதந்திரத்தை விட தனி மனித சுதந்திரமே மேலானதாகும்,


சாமியாரின் படுக்கை அறையில் வைத்த கேமரா நம் படுக்கை அறையில் வைத்தால் நமக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க வேண்டும்

அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறந்து விட்டார்களா அல்லது அவர்கள் ஏற்கனவே ஊர் மேய்கிரார்களா என்று தெரியவில்லை


இந்த விசயத்தில் தண்டிக்கப்படவேண ்டியவர்கள் வீடியோ காட்சிகளை 36 மணி நேரம் தொடர்ந்து குழந்தைகள் பார்க்கும் விதமாக ஒளிபரப்பியவர்கள ் தான்.

18 வயது அடைந்த எந்த ஒரு ஆணும பெண்ணும் தனக்கு விருப்பமானவருடன ் உடலுறவு கொள்வது தவறாகாது,

இன்னும் சில உதாரணங்கள் புராணத்தில் உள்ளது, அதை இங்கு பதிவு செய்து சாதி மத உணர்வுகளை புண் படுத்த வேண்டாம் என்று விடுகிறேன்.
Quote
 
 
+7 #21 tharani 2011-07-16 00:57
நன் சவுக்கை வன்மயாக கன்டிக்கிரென்,ர ஞ்த,னிதியானந்தா இல்லமல் பேட்டி கொடுது உன்மையை ஒதுக்கொன்டிருந் தால் நாம் ஆதரிக்கலம் ஆனால் மோசடி சாமியாருடன் வந்து முலு புசனிகாயை மரைப்பதுபொல போலி சமியாரையும் காபாத நினைப்பது சமூகதிர்கும் பென் இனதிர்கும் செஇயும் துரோகமெ இப்படி கன்னைமோடிக்கொன் டு சவுககு ஆதரிதால் விரைவில் மூடு விழா கொன்டாடவென்டியத ுதான்.
Quote
 
 
-20 #20 Ram viswa 2011-07-16 00:36
இந்தச் சாமியாரை அம்பலப் படுத்துகிறேன் பேர்விழி என்று, ரஞ்சிதா என்ற பெண்ணை அவமானப்படுத்துவ து எந்த வகையில் நியாயம் ?

சவுக்கு, இந்த ரஞ்சிதாவுக்கு நியாயம் கேக்றென் என்று சாமியாரை அவமானப்படுத்துவ து எந்த வகையில் நியாயம் ?
Quote
 
 
+9 #19 jai 2011-07-16 00:18
அது ஒன்னும் இல்லைங்க அய்யா, நம்ம கலாநிதி டிவி சூர்யா (மலையாளம்) எப்பவும் அந்த படம் போடுவாங்க, அதே பதில இதையும் வீடியோ எடுத்துட்டாங்க ... இதே மாதிரி ஒரு விடாயோவை மாறன் வீட்லயும் வச்சு எடுக்கணும்....
Quote
 
 
+31 #18 Padman 2011-07-16 00:10
என்ன சொல்ல வருகிறீர்கள் சவுக்கு?

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூற்றுக்கு உரம் சேர்ப்பதுபோல் உள்ளது உங்கள் கட்டுரை. நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக எழுதியது போல் தெரியவில்லை... சன் டிவி மற்றும் நக்கீரன் வார இதழை எதிர்க்க ஏதாவது காரணம் தேடுகிறீர்கள் அதற்கு அதற்கு இந்த பெண் விவகாரம் வகையாக உங்களுக்கு மாட்டியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த போலி எப்படியோ வசியப்படுத்தி சீரழித்தான்... அதை இந்தப் சாக்கடைப் பன்றிகள் வியாபாரமாக்கிவி ட்டது.

நீங்கள் என்ன திருவண்ணாமலையை சேர்ந்த இந்த ராஜசேகரின் சீடனா? சன் டிவி மற்றும் நக்கீரன் போலதான் இந்த போலி சாமியாரும். அவனைப்பற்றி மேம் போக்காக கடிந்து எழுதிவிட்டால் மட்டும் போதுமா... ?

சன் டிவி மற்றும் நக்கீரன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல் இந்த சாமியார் மீதும் எடுக்கப்பட வேண்டும். அவனிடம் அடிமைப்பட்டுக் பாலியல் துன்பங்களை எதிர்கொள்ளும் பெண்களை மீட்க வேண்டும். அன்று இந்தப்போலிக்கு எதிராக மட்டும் நடந்துகொண்ட காவல்துறையும் கண்டிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு பெண்ணை சீரழித்த இந்த போலி சாமியாருக்கு ஆதரவு கொடுக்கும் காவல் துறையும் சேர்த்தே நீங்கள் கண்டித்திருக்க வேண்டும். முந்தையக் கட்டுரையில் வெளியிட்ட படத்தைப் பார்க்கும் போது எல்லாப் பத்திரிக்கைகாரர ்களும் அவனிடம் ஆசி வாங்க போனது போல் இருக்கிறது. இதைப்பற்றியும் கண்டித்திருக்க வேண்டும். இனிமேலும் இந்த போலி சாமியார் இங்கு வரக்கூடாது. அதற்கு வழியிருந்தால் எழுதுங்கள்.

எப்பொழுதும் ஒரு தலைப்பட்சம் வேண்டாம்!!!
Quote
 
 
+10 #17 இராசராச சோழன் 2011-07-15 23:37
சூத்திர சாமியார் என்பதால் ஆதரிக்கலாம்... அதுவும் அவர் செய்யும் நன்மையை பொருத்து...
காவி பூண்டு தமிழின பண்பாட்டிற்கு கேடாய் கட்டற்ற கலவி கொண்ட கயவனை எக்காலத்திலும் மன்னிக்கவே முடியாது... எதிரிக்கு எதிரி நண்பன் என்பது கேடாய்தான் முடியும்... இவன் அகற்றப் படவேண்டியவன்... படிக்கவேண்டிய காலத்தில் கஞ்சா சுற்றியவன் இவன்
Quote
 
 
0 #16 iniyan prabakaran 2011-07-15 23:29
gnaniyin karuthil enakku 100%udanpadu undu.thani manitha sudhandhirathil thalayida yarukum/entha oodakathirkum urimai illai.adhesamayam kavi kattiya samiyaruku padukai arai sudhanthiram enbathe illai.so intha visayathil sammanthapatta medias seythathu asal thevediyal thanam.one more think unmayil ranjithavodu videovil illaina nithi edhuku 60 crs kudukanum?sex research pannomnu nithi arikai vittarey adhu enna aachu?
Quote
 
 
-16 #15 TRUTH 2011-07-15 22:38
நித்தியானந்தா சாமி பற்ரி எழுதுபவகர்கல், அவர் சொல்லும் தியான முரைகலை எதெனும் ஒன்ரை பயர்ச்சி செய்து அப்பரம் எழூங்கல். பிரகு தெரியும் அவர் யாரென்ரு. என்னுடய தனிப்பட்ட அனுபத்தில் சொல்கிரென், என்னுடய வாழ்க்கை முரை முட்ரிலும் மாரிவிட்டது நல்லபடியாக. நிஙகலும் முயர்சி செழ்துபாருழகல். ஒம் நம சிவாய!!!
Quote
 
 
+10 #14 iyyavu 2011-07-15 21:49
உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவேண்டும்.அதிலிருந்து வருங்கால , ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கையை இன்னொருத்தர் தீர்மானிக்க விட்டுவிட்டால் என்னவெல்லாம் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். என் வாழ்க்கை என் கையில் என்ற உறுதியோடு நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் வளர, உங்கள் பங்களிப்பாக உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள். சவுக்கு

உங்களைச் சூழ்ந்துவிட்ட இழிவிலிருந்து விடுதலை பெற அது ஒன்று தான் வழி.

அன்புடன்
Quote
 
 
+4 #13 iyyavu 2011-07-15 21:43
நாமும் ஒரு பெண் வயிற்றில்தானே பிறந்தோம்…. ? எத்தனை பெண்களோடு பழகுகிறோம் ? ஒரு பெண் கொண்டுள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக, சவுக்கு, “எனக்கு வேற வழி தெரியல“ மூலமா தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தது.
Quote
 
 
+24 #12 samy9 2011-07-15 21:41
இந்த பிரச்சனினையில் செய்தி படங்களை வெளியிட்டவரகள் குற்றவாளிகள் என்றால் சாமியார் போர்வையில் கூத்தடித்த நித்தி அடைவிட கொடிய குற்றவாளி.ரஞ்சிதா விவகாரம் வெ ளியே வந்ததால்தானே அந்த கபடனின் முகம் வெளியே வந்தது.
நித்தியானந்தாவு ம் ரஞ்ஜிதாவும் உண்மையை ஒத்துக்கொண்டு தங்களின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய யதாற்க வேண்டுமானால் வழக்கு போடலாம்,ஆனால் மார்பிங் கிராபிக்ஸ் என்று தங்களை இன்னும் மகாபுனிதர்கள் போல காட்டுவதற்கு சவுக்கு போன்ற சமுக பொறுப்புள்ள இணையத்தளம் முயற்சிக்க வேண்டாம்.
Quote
 
 
+19 #11 கோபி 2011-07-15 20:47
ஞானியின் கடிதம் அருமை; தெளிவு.... துணிவு......
Quote
 
 
-16 #10 Savukku Fan 2011-07-15 20:34
ரஞ்சிதாவுக்கு ஆதரவு / நக்கீரனுக்கு எதிர்ப்பு என்ற பெயரில், சவுக்கு தவறான பாதயில் செல்ல துவங்குகிறதா???????
Quote
 
 
+31 #9 raguஊ 2011-07-15 20:10
ரஞ்சிதா ஒன்னும் படி தாண்டா பத்தினியும் இல்லை நித்தி ஒன்னும் உத்தமனும் இல்லை.
Quote
 
 
+40 #8 Anjan 2011-07-15 19:37
வெறுமேவா நக்கீரன் ஈணைய தளத்தில் இந்த வீடியோவைக் காட்டினார்கள்? காசு வேறு வசூலித்தார்கள்? எனவே கோபாலும் காமராசும் செய்தது விபசார வியாபாரம். பலான படத்தைப் போட்டுக் காட்டி காசு சம்பாதித்திருக் கிறார்கள். இதற்குக் கடுமையான தண்டனை தரவேண்டும். இவர்கள் பத்திரிகை விபசாரிகள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 85 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2662
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week48452
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month282499
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13198866