முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வறட்டுப் பிடிவாதமன்றி வேறு என்ன ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 20 ஜூலை 2011 10:39

  

சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமச்சீர்க் கல்விக்கான பாடதிட்டங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு ஏற்படுத்திய பொம்மைக் கமிட்டி எவ்விதமான உருப்படியான ஆய்வையும் செய்யவில்லை என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாகவே கண்டுபிடித்திருக்கிறது.

 

அந்த பொம்மைக் கமிட்டிக்கான வரைவு அறிக்கையையும், இதர வேலைகள் அனைத்தையும் செய்தவர், பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் சபிதா ஐஏஎஸ் என்பதை தெளிகாவச் சுட்டிக்காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

 
high_court

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 2 முதல் 5 வகுப்புகளுக்கும், 7 முதல் 10 வகுப்புகளுக்கும், சமச்சீர்க் கல்வியை எப்படி இந்த ஆண்டே அமல்ப்படுத்துவது என்பதை அலசி ஆராயவே கமிட்டி அமைத்ததே தவிர, இருக்கும் புத்தகங்கள் மோசம் என்று சொல்வதற்கு கமிட்டி அமைக்கவில்லை அதனால், பாடப்புத்தகங்கள் மோசம், இந்த ஆண்டு அமல்ப்படுத்த இயலாது என்ற அறிக்கை வரம்பை மீறிய ஒரு அறிக்கை.

 

மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பாக நியமிக்கப் பட்ட இரண்டு உறுப்பினர்களான டாக்டர் மல்லா பிரசாத் மற்றும் பேராசிரியர் திரிபாதி ஆகிய இருவரும், இந்தப் பாடப்புத்தகங்களை ஆராய்ந்து, பாடப்புத்தகங்களில் சில குறைகள் இருந்தாலும், பெரும்பாலும், மிகச் சிறப்பாகவே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். மற்றொரு உறுப்பினராக விஜயலட்சுமி சீனிவாசன், மெட்ரிகுலேஷன் மற்றும் சமச்சீர் கல்வி ஆகிய இரண்டுமே, தேசிய கல்விக் கொள்கை வகுத்தது போல இல்லை, ஆனால், சமச்சீர் கல்வியின் பெரும்பாலான பாடத்திட்டங்கள் சிற்சில குறைகளைத் தவிர ஏற்புடையதாகவே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

 

டிஏவி பள்ளிகளின் முதலாளி, ஜெய்தேவ், சமச்சீர் கல்வி சிறப்பான நோக்கமாக இருந்தாலும், தற்போது உள்ள தரத்தை குறைப்பது அதற்கு தீர்வாகாது. ஆனால் இப்போது இருக்கும் புத்தகங்களை பார்த்தால், தரம் குறைந்து சமச்சீர் கல்விக்கான நோக்கமே வீழ்த்தப் பட்டு விட்டது என்பது புரிகிறது என்கிறார்.

 

திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி என்ன கூறுகிறார் தெரியுமா ? தற்போது உள்ள அனைத்து சமச்சீர் பாடப்புத்தகங்களும் மோசம். அனைத்தையும் மொத்தமாக திருத்த வேண்டும்.   இது உடனடியாக முடியாது குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகளாகவது ஆகும்.   அதைச் செய்து விட்டு சமச்சீர் கல்வியை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.   வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் என்று சவுக்கு எழுதியிருந்தது இதைச் சுட்டிக் காட்டித் தானே ?

 

சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்துவது என்பது நோக்கமாக இருந்தால், அதில் உள்ள குறைகளைச் சரி செய்வதற்கு வழி சொல்லுவார்கள். சமச்சீர் கல்வி வரவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பவர்களை கமிட்டி உறுப்பினர்களாகப் போட்டு ஒரு பொம்மைக் கமிட்டியை நியமித்தால் இப்படித் தான் கருத்த சொல்வார்கள். ஆனால், உயர்நீதிமன்றம், இந்த பொம்மைக் கமிட்டியின் முடிவுக்கு பெரும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.

 

மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், சமச்சீர் கல்வித் திட்டம், அவசர கோலத்தில் அமல்படுத்தப் பட்டுளளது என்ற வாதத்தை முன் வைத்தன. இந்த வாதம் சரியா என்பதை ஆராய்வதற்காக, முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாத என்று தொடுக்கப் பட்ட வழக்கின் கோப்பு தற்போது மீண்டும் ஆராயப் பட்டது. அதை ஆராய்ந்த போது 2006ம் ஆண்டு முதல் முழுமையான ஆராய்ச்சிக்களை மேற்கொண்ட பின்னரே, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

 

பள்ளிக் கல்வித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவிலும், கடந்த ஆட்சி அறிமுகப் படுத்திய காரணத்தினாலேயே, இந்தப் பாடத்திட்டம் சரியில்லை, 200 கோடி ரூபாய் தவறான கொள்கைகளால் வீணடிக்கப் பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

 

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த நேரத்திலே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“ஓட்டு வாங்குவதற்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நடந்து கொள்ளும் அரசியல் கட்சிகளைக் கண்டால் எங்களுக்கு கவலையாக இருக்கிறது.   அரசியல் அமைபுச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசாகவே அவர்களைப் பார்க்கிறது என்பதை காண மறுக்கிறார்கள்.   ஆட்சிக்கு வரும் ஒரு அரசியல் கட்சி ஏற்கனவே இருந்த ஒரு அரசு எடுத்த முடிவை, அந்த முடிவு மற்ற மாநிலங்களையோ, தேசத்தையோ எப்படி பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாமல், எளிதாக ரத்து செய்யக் கூடாது. பெரும்பாலானவர்களை கலந்து ஆலோசித்து அரசு நிர்வாகத்தில், எடுக்கப் பட்ட ஒரு முடிவை, அந்த முடிவு அரசியல் முடிவாக இல்லாத பட்சத்தில், அடுத்து வரும் அரசாங்கம் அந்த முடிவை செயல்படுத்த வைக்கப் பட வேண்டும்.”

 

மாநில அரசு, சமச்சீர் கல்விலை நாங்கள் கைவிடவில்லை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்துவோம் என்று தெரிவிக்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றம், இந்த அண்டு செயல்படுத்துவதற்கான வழி வகைகளை ஆராயச் சொல்லித் தான் தீர்ப்பளித்திருக்கிறதே தவிர, அடுத்த ஆண்டு எப்படிச் செயல்படுத்துவத என்பதைப் பற்றிப் பேசவில்லை.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு கமிட்டியை அமைத்தாலும், அந்தத் தீர்ப்பை சரியாக புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

 

இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்துவது என்பதை ஆராயுங்கள் என்றுதான் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததே ஒழிய, இந்தப் பாடப்புத்தகங்களை ஆராயுங்கள் என்று சொல்லவேயில்லை. ஆனால், கமிட்டியின் (பொம்மைக் கமிட்டி) முதல் கூட்டம் நடந்த அன்றே, உச்ச நீதிமன்றம், பாடப்புத்தகங்களை ஆராயச் சொன்னதாகவே புரிந்து கொண்டு, அந்த நோக்கத்திலேயே கமிட்டி செயல்பட்டிருக்கிறது.

2011-2012 கல்வி ஆண்டுக்கு இந்தப் பாடப்புத்தகங்களை பயன் படுத்த முடியுமா என்று ஆராயுங்கள் என்று சொல்லாத போது, கமிட்டி அதைத்தான் செய்தது. அது மட்டுமல்ல, இந்தக் கமிட்டியின் பெரும்பாலான வேலைகளையும், அந்தக் கமிட்டியின் வரைவு அறிக்யையும் மாநில அரசின் கல்வித்துறைச் செயலாளரே தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

 2502862

தேர்தல் முடிவுகள் மே 13 அன்று வெளியானது. 16 மே அன்று புதிய அரசு பொறுப்பேற்றது.   முதல் கேபினெட் கூட்டம் 22 மே அன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சமச்சீர் கல்வி உட்பட பல்வேறு விஷயங்கள் ஒரு மணி நேரம் விவாதிக்கப் பட்டுள்ளன. உடனடியாக 23 மே அன்று, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கைவிடுவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய புத்தகங்கள் அச்சடிக்க ஆணை வழங்கப் பட்டுள்ளது என்பதை மறந்து விடக் கூடாது.

சமச்சீர் கல்விக்கு பதில் பழைய புத்தகங்களையே பயன்படுத்தலாம் என்ற மாநில அரசின் முடிவு எந்த விதமான நிபுணர் குழுவின் ஆய்வுக்கும் உட்படுத்தப் படாமல், மறு ஆய்வு செய்யப் படாமல் எடுக்கப் பட்டது என்பது தெரிய வருகிறது. சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க வேண்டும் என்ற இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம், தள்ளி வைப்பது என்ற போர்வையில் சமச்சீர் கல்வியை கைவிடுவது என்றே எண்ணத் தோன்றுகிறது.   உண்மையில் சமச்சீர் கல்வி கைவிடப் படவில்லை என்று அரசு நினைத்திருக்குமேயானால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அது அமல்படுத்தப் படும் என்பதை சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை என்பதே, சமச்சீர் கல்வியை கொண்டு வந்த அந்த சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதே நோக்கம் என்பது புலனாகிறது.

சமச்சீர் கல்வியை தள்ளி வைக்கும் சட்டத் திருத்தம் செயல்படுத்தப் படுமேயானால், இளம் உள்ளங்களில் அது பெரும் குழப்பத்தை எற்படுத்தும், ஆகையால் நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.

தனித்தனியாக கருத்து தெரிவித்த கமிட்டி (பொம்மைக் கமிட்டி) உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. கமிட்டி கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த தமிழக அரசு தேர்ந்தெடுத்த ஒரு உறுப்பினர் (விஜயலட்சுமி சீனிவாசன்) சமச்சீர் கல்வி காலத்தின் தேவை என்றும், தற்போது உள்ள, ஆங்கிலோ இந்திய மெட்ரிகுலேஷன் பள்ளி முறைகள் முழுமையானதல்ல என்றும், தேசிய கல்விக் கொள்கையின் படி அமைந்தவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவரது கருத்து கமிட்டியின் இறுதி அறிக்கையில் இடம் பெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது.

 

டாக்டர் முத்துக்குமரனின் கமிட்டி ஒரு நீண்ட ஆய்வுக்குப் பின்னரே சமச்சீர் கல்விக்கான இந்த அறிக்கையை அளித்திருக்கிறது.   அந்தக் கமிட்டியின் அறிக்கையும் அப்படியே அமல்படுத்தப் படவில்லை. முத்துக்குமரன் கமிட்டியின் அறிக்கையை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு நபர் கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டு, அந்தக் கமிட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பல்வேறு பள்ளிகளை ஆய்ந்து அறிந்த பிறகே, 2010ல் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தலாம் என்று முடிவெடுக்கப் பட்டது. அதனால், மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், சொல்வது போல, அவசர கோலத்தில் எடுக்கப் பட்ட முடிவு இது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

 

இந்தக் காரணங்களால், சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தலாம் என்ற சட்டத் திருத்தம் ரத்து செய்யப் படுகிறது.

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை பள்ளிகள் 22 ஜுலை 2011க்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

உச்ச நீதிமன்றமும், கமிட்டி உறுப்பினர்களும் குறிப்பிட்டது போல, தேவையற்ற பாடப் பகுதிகளை நீக்கி விட்டு உரிய பாடப்புத்தகங்களை அரசு வழங்க வேண்டும்.

மாணவர்கள் தான் இந்த தேசத்தின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாநில அரசு நல்ல முடிவுகளை எடுக்கும் என்று நம்புகிறோம்.

 

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்தத் தீர்ப்பை அடுத்து, இரண்டு இடது சாரிக் கட்சிகளுமே மேல் முறையீடு செய்யாதீர்கள் என்று ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டுள்ளன.

 

எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பாடப் புத்தகங்கள் தரப்படாததால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். எந்தப் பாடத் திட்டத்தையாவது வைத்தால் போதும் என்கிற நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே, உடனடியாகப் புத்தகங்களை விநியோகித்து மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

 

கல்வி தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் விரிவான கல்விச் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

 

சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாடத் திட்டத்தில் நீக்க வேண்டியதை நீக்கியும், சேர்க்க வேண்டியதை சேர்த்தும் மூன்று மாதத்துக்குள் துணைப் பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இத்தீர்ப்பு வழி செய்துள்ளது.

 

இந்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கிவிட்டுப் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஆனாலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரும், கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும், உச்ச நீதிமன்றம் விரைந்து, மேல் முறையீடு செய்துள்ளனர்.

 

அரசியலில், பிடிவாதம் பிடிப்பதும், போட்டா போட்டி போடுவதும் சகஜம் தான். ஆனால், இவர்களின் பிடிவாதத்தால் ஒன்றேகால் கோடி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் படுகிறது எனும் போது, இந்தப் பிடிவாதத்தை கண்டிக்காமல் எப்படி இருப்பது ?

 

ஒரு முழுமையான மாதத்துக்கு, எவ்வித பாடத்திட்டமும் கொடுக்கப் படாமல், மாணவர்கள் தினந்தோறும், வகுப்பறையில் ஆட்டமும் பாட்டமும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இதற்குக் காரணமாக ஒரு மாநில அரசு இருக்கிறதென்றால் அந்த அரசு யாருக்கான அரசு ?

 

அந்த ஆசிரியர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்… … !! இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த மாணவர்களுக்கு இது போல பாடத்திட்டம் வழங்காமல் இருந்தால், மீதம் உள்ள காலத்துக்குள் அத்தனைப் பாடப்பகுதியையும் எப்படி முடிப்பார்கள் ? அவசர கோலத்தில் பாடப்பகுதிகள் முடிக்கப் படும் அல்லது, மாணவர்களின் விளையாடும் நேரம் பறிக்கப் பட்டு, அந்த நேரத்தில் பாடம் எடுக்கப் படும். எப்படி இருந்தாலும் இழப்பு மாணவர்களுக்குத் தானே ? இதனால் மாணவர்ளுக்கு ஏற்படும் கடும் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பாக முடியும் ?

 31812484

மேலும், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போதே, தமிழக அரசு, புதிய பாடப்புத்தகங்களை அச்சடித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. இவ்வாறு பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் செயலே, தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து செயல்பட்டதைக் காட்டியது.

 

சமச்சீர் கல்விக்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களுக்கு ஆன செலவு ஒரு புறம் இருக்கட்டும். சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாட்டேன் என்று தமிழக அரசின் சார்பில் வாதாட, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய பி.பி.ராவுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் வாதாடினால் 5 லட்ச ரூபாய் பீஸ்.   இது போக அவருக்கு சென்னைக்கு வருவதற்கு, முதல் வகுப்பில் விமான டிக்கெட், அவர் ஜுனியருக்கும் முதல் வகுப்பில் விமான டிக்கெட், சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கான அறை என்பது போன்ற விவகாரங்களுக்கு ஆகும் செலவுகளும் மக்களின் வரிப்பணம் தானே.. ?

 

தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் அடங்கிய குழு, தற்போது டெல்லி சென்றிருப்பதும், மக்களின் வரிப்பணத்தில் தானே ? இவர்களுக்கு ஆகும் குறைந்த பட்ச செலவான 30 லட்ச ரூபாயும் மக்கள் வரிப்பணம் தானே ?

 

தமிழகத்தின் உரிமையை காவிரி நடுவர் மன்றத்தில் நிலைநாட்ட வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் பீஸ் கேட்கும் வழக்கறிஞரைக் கூட அமர்த்தலாம்.   ஆனால், தற்போது தமிழக அரசு செய்யும் இந்த தண்டச் செலவு, ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட்டில் இருக்கையில் ஏற்படும் கூடுதல் தண்டச் செலவு தானே….     இத்தகைய செலவுகளை வறட்டுப் பிடிவாதத்திற்காக தமிழக அரசு செய்கிறதென்றால், தமிழனுக்கு என்றுமே விடிவு காலம் கிடையாதா என்று தலையில் அடித்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.

 

கூட்டணிக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் ஒரே குரலில் மேல் முறையீடு செய்யாதீர்கள் என்று குரல் கொடுத்து விட்டார்கள்.   சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் என்று மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தி விட்டன.   தினமணி நாளேடு தலையங்கம் எழுதியது. ஊடகங்கள் குரல் கொடுத்தன.

 

பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், தமிழக அரசின் தேவையற்ற வழக்கு காரணமாக, கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

 

இதையெல்லாம் மீறி, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்குக் காரணம், வறட்டுப் பிடிவாதமாக இல்லாமல், வேறு என்னவாக இருக்க முடியும்.

 

அய்யன் வள்ளுவனின் வாக்கை ஜெயலலிதா படித்திருப்பாரா என்று தெரியவில்லை. இருந்தாலும், அவருக்கு அதைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.

 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

 

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

 

Comments  

 
+2 #52 வழிகாட்டி 2011-07-31 23:55
@Rajesh11,

Condemns on the Government School Teachers that we are not accountable is not fair. We are producing good results as well in the board exams inpite of the fact that many students in our schools are coming to schools just to get SSLC mark lists. Even their parents are requesting us not to pressurise them ( accroding to them pressure means even trying to impart them the passion for education).

As far as promoting students up to eighth standard without any screening is the policy decision of the government (it is being done to avoid dropouts) for which blaming the Teachers is not fair.
Quote
 
 
-2 #51 rajesh11 2011-07-25 20:51
@வழிகாட்டி
"Nevertheless, without any proper defense to the reply, she (along with Rajesh11, battle boy, anamika…) tries to simply blame the Government school teachers which seem to be like ‘those fruits are soaring’."

The problem with the Govt. school teachers is not about whether they are qualified or not, but about whether they are accountable. They don't have any pressure or accountability to the students and their parents. They don;t care if students dont study well or even learn the basics. Everyone is made to pass to the next class even if they are very poor in terms of the knowledge in the previous class. Finally when they sit for the public exam, it strikes the students and parents that they are not good enough. My house is in a semi-rural area and my Mom and Dad takes tution for more than 20 students from govt. school and initially we were shocked to see their condition. A 6th standard boy doesnt even know multiplication tables for more than number 5, a 7th standard student is not even able to read an English paragraph fluently.

When asked about their school situation, all they say is that the teachers simply write everything in the board and ask them to write it (they dont care about mistakes or anything). When exam comes, they simply get some list of questions and only very few people are made to fail in the lower classes. This is because if more students fail, there will be pressure on these teachers on why so many are failing.
With private schools, atleast there is a minimum standard that you can expect as a parent even with less qualified teachers. But once these same teachers join govt. schools, there is no accountability at all because there is little pressure from the management or from the parents who keep thimnkimg that their kids are doing fairly well.
"ithu aariya ,paamarar por than."
Lol !! What can I say to those who still believe in the Aryan invasion theory humbug.. Get real guys..
Quote
 
 
0 #50 Thomas Raja 2011-07-25 20:27
அன்புள்ளஙளே, முடிந்தவரை ஆஙகிலத்தில் அல்லது தங்லிஷில் எழுதுவதை தவிர்த்தால் நலமாக இருக்குமே....தயவு செய்து முயற்சியுங்கள், நன்றி.
Quote
 
 
+1 #49 abufaheem 2011-07-25 18:32
கடந்த ஆட்சியின் அனைதுமே சரியல்ல யென ஜெயலலிதா அரசு சொல்வது நாகரிகமல்லா
Quote
 
 
0 #48 டங்குவாரு அந்துரும் 2011-07-25 11:07
Quoting iniyan prabakaran:
i agree with mr.sibichandar.ithu aariya ,paamarar por than.oru visayathai ellorum gavanikanum...ida othukeetai yar ethirkiraarkalo avarkalthan samacheer kalviyayum ethirkirarkal.savuku..,oru doubt,iit,ias,n ational competitaonla ellam perform panrathukku samacheer pothathu std therathunnu avallam solrale athula thuliyavathu unmai iruka pls answer me..


Dear Mr. Iniyan Prabhakaran,
The fact is that the new education system will be a drawback for those who cannot think but only mugg-up and vomit in the exams. If this system is implemented the true colour of the skills of the aryan-children will be seen. That's why these people are making foul cry against it.
Quote
 
 
0 #47 iniyan prabakaran 2011-07-25 00:01
i agree with mr.sibichandar.ithu aariya ,paamarar por than.oru visayathai ellorum gavanikanum...ida othukeetai yar ethirkiraarkalo avarkalthan samacheer kalviyayum ethirkirarkal.savuku..,oru doubt,iit,ias,n ational competitaonla ellam perform panrathukku samacheer pothathu std therathunnu avallam solrale athula thuliyavathu unmai iruka pls answer me..
Quote
 
 
0 #46 வழிகாட்டி 2011-07-24 00:19
@ Thanammal:

Dear Madam,
Yourself have stated, 'no body has checked whether the teachers are capable enough for the new system' but then on what basis you are claiming 'The standard of govt school teachers is abysmally low (in many cases).'

Do you mean to say,
1. the recruitment process (of Government school teacher) is not good. Or
2. you are advocating not to recruit those who scored good marks in the TRB exams and rather place the remaining?

Because, the private schools teachers whom you are defending are those remaining (who couldn't get good marks in the TRB exams).


Don't you know the Government school teachers are supposed to produce good results (even though we do not get as much studious as the private school teachers are getting). With what sense you are saying that there is 'no accountability' for Govt. school teachers.

simply blabbering something wouldn't serve any purpose.
Quote
 
 
0 #45 வழிகாட்டி 2011-07-24 00:02
I simply don’t understand the perception of the people (perhaps some) about the Government school teachers. I request those people to bear in their mind that, teachers working in the private schools are those who tried, tries and continues to try to get posted as a Government school teacher. In other words, Government school teachers are those who could succeed in their job hunt ahead of these private school teachers. But, still you people consider the private school teachers to be more talented, which is baseless. It is true that in general parents prefer to put up their children in private schools simply because of competitive ambience, better infrastructure, etc. Teachers like us are no way responsible for the poor infrastructure in the Government schools; in fact, all these are under the purview of the administrative wing of the Department of School Education. More importantly, scope of the private school is to admit good students only, get good results in the board exams, increase their visibility, increase their fees and the cycle continues. On the other hand the scope of the Government schools is to educate whom so ever willing to join there. So one to one comparison of these schools with different scopes is like comparing apple with orange.
In one of my earlier comments, individuals like thanammal had been replied suitably. Nevertheless, without any proper defense to the reply, she (along with Rajesh11, battle boy, anamika…) tries to simply blame the Government school teachers which seem to be like ‘those fruits are soaring’.

--
B.T. Assistant (Tamizh)
Quote
 
 
0 #44 K G Ramachandran 2011-07-23 19:03
Tamil Nadu is not a property of Karunathi or Jayalalitha's property. What people are thinking they least bothered. Whether she has consulted hes own Party nor she has put forth in front of the Parties
who allied at the election.This type of Dictatorship will Spoil the faith in Jaya, before the Election.
Quote
 
 
0 #43 arakkonathaan 2011-07-23 14:52
இவர் சொன்ந்து சரி
நாயகன் 201107௧9 14:53
{முபரக் குநைட்) அவர்கலெ நல்ல நாகை புடுன்கிகிர மதிரி கெட்டிங பொங...

சன்கர் ஜெயலலித யெதிர்ப்பு யென்ட்ர பெயரில் விரைவில் ஒரு உப்பு சப்பு இல்லத பதிவை ....பொடுவர் ..

அதை படிதி விட்டு சவுக்கு ஒரு நடுனிலை பதிரிகை யென்டு நம் நினைதுகொன்டு பொகவென்டும் ... ...ஒஹ் இப்பொது புரிகிரது நகேரன் ட்ம்க் சுப்பொர்ட் ...சவுக்கு ...புர்ர்ர் ஓஒப்ச்
Quote
 
 
+1 #42 sasti 2011-07-23 14:07
@khan:anna , neenga mattum enna elizabeth perana, if u r confused, im not responsible. if u are really confused means, u should have avoided commenting. from this itself i can understand about you. (hey.......u..........)see i am not here to prove my english, i know what i am capable of and stop commenting about me(even u dont know this basic manners and ur commenting me........). discuss only on the subject.
competition doesnt mean who is 1 or 2(for school boys like u competition always means who is 1 or 2).think maturely then start commenting on the public sites like this.
u r saying "why the CBSE and MATRICULATION boards havnt created noble prize winners"..ok i accept ur point. but u must assure that uniform education can create lot of Nobel laureates. no one can assure that a particular system can create Nobel winners, it depends on the individuals not on a system.
i cant understand u people, why are you segregating education based on rich and poor. dont create cruelty in the minds of people.
u r portraying matric schools like robbers, ok partly it is true.but what is the problem with the syllabus. better abolish private schools,fees payment, but not the syllabus.
u should think of this basic logic that why all parents prefer matric, cbse even after knowing that they are costly. the reason is the quality.
directly if u go on to make a new system compulsory then for sure it is going to spoil the life's of children. because we dont know the goods and bads of the new syllabus, once u introduced a system,we have no other go rather than to follow it even it is bad.
and khan first read my earlier comment completely, understand it first, then comment,if ur still confused, better avoid commenting on my comments. i dont want to create unnecessary arguments.
Quote
 
 
-2 #41 ANAMIKA 2011-07-22 08:47
SMACHEER KALVI NALLA VISHAYAM THAN. ANAL ADHAI ORU KURIPPITAVARKAL IN PRADHABATHHAI PROPOGATE SEYYA PAYAMPADUTHUVAD HU SARIYALLAVE. sIR ISSAC NEWTON ,EINSTIEN, EDISON MATTRUM NAM NAATU MEDAIKALAANA RAMANUJAM, MAHAKAVI BHARADHI, ARINGNAR ANNA, THANDHAI PERIYAR, ABDUL KALAAM PONDRAVARKAL ORE MURAIYANA (SAMACHEER KALVI) YA PAYINDRARGAL? EDHU EPPADI IRUPPINUM NAMADHU OPTIMUM POTENTIAL(MUZHU THIRAMAYAYUM)MU ZHUMOOCHAGHA PAYANPADUTHUNAA LE ENDHA MURAI KALVIYILUM VETTRI PERALAM, SAADHIKKALAM.
Quote
 
 
0 #40 BATTLEBOY 2011-07-22 08:35
SAMACHEER KALVI NALLA VISHAYAM DHAN . IRUNDHALUM ENDHA MURAI KALVI AANALUM ADHAI SOLLI THARUBAVARKALUM , ADHAI KARPAVARKALUM 'OPTIMUM UTILIZATION OF THEIR TALENT' IRUNDHAL THAAN EDHAYUM MULUMAYAKA KARKA MUDIYUM.EINSTIEN, EDISON, RAMANUJAM ABDUL KALAM , ARINGNAR ANNA MATRRUM THANDHAI PERIAR PONDRA MEDAIKAL ELLORUM SAMACHEER KALVIYA PAYINDRARKAL?
Quote
 
 
+1 #39 BATTLEBOY 2011-07-22 08:21
hi i have checked with one of my friend who she is working in Governemnt school as MATHS AND ENGLISH TEACHER. WHAT SHE SAYS IS SAMACHEER SYLLABUS IS HARD FOR VILLAGE CHILDREN . EVEN THEY FIND DIFFICULT IN PICKING UP STATE GOVERNEMNT SYLLABUS. SO WHAT JJ IS DOING IS RIGHT. BECAUSE OF THIS SAMACHEE VILLAGE CHILDREN WILL GET AFFECTED
Quote
 
 
+2 #38 Rajesh11 2011-07-22 02:13
While the government should have been sensible, I find many it amazing that so many people believe that Samacheer kalvi will bring in equality in education among people.. It will be better if they understand that it is not the syllabus that is causing inequality, but the poor quality if public education throughout India that causes it.. Investment in infrastructure, improving the enrollment and maintaining the students in schools, demanding accountability from teachers are all what is needed.. not a fight on which syllabus to follow.. We need to get the priorities right first..
Quote
 
 
+1 #37 Khan 2011-07-21 22:19
@Sasti, common man.. don't try to bamboozle everybody with your funny English. What you are trying to say 'euphemistically ' as 'Competition' of syllabus is maintaining 'Varnaashrama' in education, so that some 2 Laksh 'Rich' students would be able get good for nothing 'Matriculation' education paying high fees, while 1 crore poor students should suffer the shame of 'State Syllabi' ( Now you may star an argument like Senthil, as to whether 1 is bigger or 2 is bigger). Again, why is it that 'Matriculation' schools are so afraid of 'Samachcheer sylabus'? The simple answer is not because 'Matriculation' is better, but because they cannot rob anymore. If 'CBSE' and 'Matriculation' is so good our country should have had so many 'Noble Prize Winners'. But our country is filled with copy-cats. The best thing that came out of the whole exercise by Jeyalalitha is that we all know the complete 'Idiocy' of DAV owner, PSBB robber YG Parthasarathy and IAS officers Sabitha and Chief Secretary. From now on nobody will respect these guys. From now on Jeyalalitha should implement 'Samachcheer Kalvi'. Period. And by the way 'Jeyalalitha' and her chosen bunch of 'IAS Idiots' would be busy with their next folly of 'Shifting of Legislative Assembly' from now on, until another 'Shocker' of a Judgment would rock their boats. Adieu.
Quote
 
 
-1 #36 thanammal 2011-07-21 21:19
The standard of govt school teachers is abysmally low (in many cases).There is no accountability and feedback audit unlike the private institutions. no body has checked whether the teachers are capable enough for the new system. Let us wait and implement the system after fair and comprehensive analysis without prejudice
Quote
 
 
0 #35 sasti 2011-07-21 18:36
(please forgive me for typing in english, i havent learn typing in tamil). i have a very big doubt that from which source the people fighting for uniform education got the information that uniform education is going to standardize our education system. every system has system has its own advantage and disadvantage. so making a particular system compulsory means, the people are left with no choice and they have to follow that system whether it is good or bad. so if we have a multiple system people can choose from many, based one's comfort. at the same time i am against a dominance of single system. so give more attention to the system which is weaker and make it in par with others. creating competition between systems and giving equal importance to every system will create healthy educational environment in the country. so my conclusion is "uniform education does not mean, every child should learn the same book, rather in my opinion it means every child should have a healthy knowledge in par with world standards". so please avoid fighting and useless politics and comments. don't spoil children future. instead provide education to orphan's, children with poor economy.
force the goverment to give education to each and every child in this country. even after taking all this measures, if we need uniform eduaction badly, we shall fight for uniform education. "first provide education to all then we will think of uniform education to all". savukku i didnt expect this kind of article from you. you should rethink on your stand.(forgive me if anything told by me hurts anyone's feelings)
Quote
 
 
+17 #34 பிடிவாதம் 2011-07-21 08:52
அப்பீல் பண்ணி காலம் கடத்துவதற்கு இது ஒண்ணும் சொத்துக்குவிப்ப ு வழக்கு அல்ல
பிள்ளைகளின் கல்விச் சொத்து குறித்த வழக்கு .
அம்மாவுக்கு யாராவது ஞாபகப்படுத்தினா ல் நல்லது .
Quote
 
 
+15 #33 சிபிசந்தர் 2011-07-20 23:47
பழிவாங்கும் கேடுகெட்ட அரசியலை மாணவ மாணவியரிடம் திணிக்கும் இப்போக்கு .அரசியலை தாண்டி பாமரர்களுக்கும் ஆரியர்களுக்கும் நடக்கும் யுத்தமாகவே பார்க்க தோன்றுகிறது ...கல்வியை மறுப்பதும் ஒரு தேச விரோத செயலே ....
Quote
 
 
+4 #32 வழிகாட்டி 2011-07-20 23:26
@Student; @thanammal; @Gopalakrishnan ; @RANA....
Dear friends,
I would like to emphasize that the proposed uniform syllabus is definitely betterment than the existing State Board, Matriculation syllabii *(I don't know much about Oriental and Anglo Indian Syllabii, I am a matriculation passed out B.T. Assistant, Tamizh). The existing ones insist monologue delivery of facts from the teachers and the students must listen/study, whereas, the proposed syllabus expects active participation from the students during the class activities. More scope for the students to learn the subjects rather than simply studying. The content in the text book has been reduced in a way to accommodate other class activities I agree but, the students would now be forced not to be restricted within the text books. They will have to get information from other sources like library/internet etc. I hope you all would appreciate this because, in the higher education the same system is in place. Most of the extra-curricular activities like writing own essays, group discussion etc. are part of the proposed uniform syllabus; this definitely would increase the communicating capability of the students at the school level itself. Thus, I would conclude strongly by saying ‘please welcome the uniform syllabus’, definitely the upcoming generation would reap the fruit.
Hope Mr. RANA would at least be satisfied with the level of English proficiency of a Government school Tamizh teacher. I would like to remind him that English is just a language. It is neither knowledge nor intelligence. Please don’t under estimate the present government school teachers. We have come up to this position after getting through strong competition in the TRB exams.
Quote
 
 
+6 #31 pa. iravi 2011-07-20 22:03
என்றைக்கு கல்வியில் அரசியல் புகுந்ததோ அன்றே அதன் வளர்ச்சிக்கு சமாதி கட்டியாகிவிட்டத ு. இனி இளம் தலைமுறையினருக்க ு தரமான கல்வி என்பது கனவே.
Quote
 
 
+6 #30 செந்தமிழன் 2011-07-20 22:01
நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதை தான் நினைவுக்கு வருகிறது. வேறு என்னத்த சொல்ல!
உச்சநீதி மன்றத்திற்கு போய் மூக்குடை பட்டு திரும்பும் போது தான் புத்தி வரப்போகிறது. இப்போது கருணாநிதிக்கு ரொம்பவே சந்தோசமாக இருக்கும். கண்டிப்பாக ஜெயலலிதாவின் இந்த போக்குக்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாடம் புகட்டக்கூடும். அப்போது மக்கள்மீது வெறுப்பு வந்து சம்பாதிக்கும் வரை சம்பாதித்து மக்களை சுரண்டுங்கள் என்று ரத்தத்தின் ரத்தங்களை அவிழ்த்து விட போகிறது அ.தி.மு.க தலைமை. ஆக...போண்டி மக்கள் தான் கடைசியில்!
Quote
 
 
+6 #29 RANA 2011-07-20 21:50
சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் வேளையில், அந்த பாடத்திட்டத்தை நடத்த எத்தனை அரசு ஆசிரியர்களுக்கு திறமை, தகுதி இருக்கும். சவுக்கு அவர்களே, ஒரு 1000 ஆசிரியர்களை அழைத்து அவர்களில் எத்தனை பேருக்கு சரளமாக ஆங்கிலம் பேச வரும் என்று கேளுங்கள். அல்லது அவர்களின் குழந்தைகள் யாராவது அரசு பள்ளிகளில் படிக்கிறார்களா என்று கேளுங்கள். அல்லது இந்த அரசியல் வாதிகளின் குழந்தைகளாவது அரசு பள்ளிகளில் படிக்கிறார்களா என்று கேளுங்கள். ஆசிரியர்களும், பள்ளிகளும் சமமாகதபோது கல்வி மட்டும் எப்படி சமச்சீர் ஆகும். ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த கருணாநிதி என்ன மந்திரகோள் ஏதாவது வைத்துள்ளாரா.
Quote
 
 
+17 #28 காய்ஞ்சி போனவன் 2011-07-20 20:18
நீதியரசர் மல்லிகார்ஜுனய்ய ா அவர்களே,

அம்மா 27-ஆம் தேதி உங்க முன்னாடி பெங்களூர் கோர்ட்ல ஆஜரானா தயவு தாட்சண்யம் பாக்காம உள்ள தூக்கிப் போடுங்க.

அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.
Quote
 
 
+2 #27 நியாயத் தராசு 2011-07-20 20:10
சவுக்கின் முந்தய (சமசீர் கல்வி) கட்டுரையில் தெரிவித்தது போலவே இந்த ஜெயதேவும், ஒஇ.ஜி.பார்த்தசாரதியும ் கருத்து தெரிவித்து இருக்கிரார்கள். அப்போது இந்த நயவஞ்ஜக நரிகளுக்காக வாதாடிய சிலர் இப்போதாவது திருந்தி இருந்தால் சரி.

இன்னும் திருந்தாவிடில் இது சம்மந்தமாக வினவு இணையதளத்தில் வெளிவந்த கட்டுரையை படித்து தெளிவுர வேண்டுகிறேன்.

http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/
Quote
 
 
0 #26 thanammal 2011-07-20 20:08
THERE WAS A RUMOR THAT THE PRO SAMACHEER KALVI LOBBY IS SPONSORED BY THE MANUFACTURERS OF GUIDES..THEY HAVE ALREADY PRINTED NOTE GUIDES WORTH 800 CRORES BEFORE POLLS ANTICIPATING ITS IMPLEMENTATION. SINCE IT HAS GONE WRONG THEY ARE ON THE FOREFRONT OF THIS CAMPAIGN..WHO WILL ANSWER TO THIS CHARGE
Quote
 
 
+12 #25 suji 2011-07-20 19:56
அமைதியாக ஆட்சி நடந்தால் சுவாரசியம் இருக்காது எனபதற்காக இப்படியா மாணவச் செல்வங்களின் எதிர்காலத்துடன் விளையாடுவது?
Quote
 
 
0 #24 Student 2011-07-20 19:39
Thats good, but the standard is very low while comparing with the other states. It could cause major impact while appearing national level competition like IISC,ISB,IITs,I IMs. Atleast minimum 100 students from Andhra Pradesh are there each IIT. Better to educate the teachers first and prepare the students to their high expectations.
Quote
 
 
+11 #23 gokiraj 2011-07-20 16:10
ella status students yum equal syllabus padikiradhu sila idiots ku pudikamatengudh u
Quote
 
 
+24 #22 Vijay123 2011-07-20 14:58
இப்போ தான் ஜெயலலிதா அவங்க பழைய பார்முக்கு வந்து இருக்காங்கன்னு தோணுது.
Quote
 
 
+22 #21 Anjan 2011-07-20 14:45
சிறந்த தீர்ப்பு.
நல்ல கட்டுரை.
அருமையான கார்ட்டூன்.

கார்ட்டூனில் சேர்க்கவேண்டியத ு.

"எங்களுக்கு சமச்சீர் அரசு வேண்டும்!"
கருணா ஜெயா இருவருமே வரட்டுப் பிடிவாதங்களால் ஆளும்போது நாட்டைக் குட்டிச்சுவராக் குகிறார்கள்.

புதிய அகராதி:

கருணாநிதி = ஊழல், குடும்ப ஆட்சி.
ஜெயலலிதா = ஆணவம், தன்னிச்சையான முடிவுகள், ஜனநாயக விரோதப் போக்கு.
Quote
 
 
+19 #20 Tamizh magan 2011-07-20 14:23
முதலில் கல்வி சமச்சீரானால்,பி ன்பு அனைத்தும் சமச்சீர் ஆகும்
Quote
 
 
+13 #19 snake babu 2011-07-20 14:21
அம்மா முடிவு எப்பவுமே உறுதியாகதான் இருக்கும். என்ன இப்ப தவறான முடிவு... ....... கொடுமையான விஷயம் மற்றவர்கள் கருத்தை கேட்கமாட்டார்கள
Quote
 
 
+10 #18 Gopalakrishanan 2011-07-20 14:17
என்னதான் தீர்வோ எதைதான் படிப்பதோ, யார்தான் முடிவு சொல்வதோ
Quote
 
 
+7 #17 Gopalakrishanan 2011-07-20 13:39
தற்போது எது தான் தரமான கல்வி என்ற குழப்பம் வந்துள்ளது.இது வரை இருந்த கல்வி முறை சரியா அல்லது வரும் கல்வி முறையாவது சரியா இதுக்கு எது அளவுகோல் யார்தான் சரியான அளவுகோல் கொன்டு ஆராய்ந்து சரி என்று சொல்வார்கள். இதற்கு மேல் நாட்டினர் எண்ன செய்கிறார்கள்
Quote
 
 
+6 #16 manomaruthi 2011-07-20 13:01
அருமையான கட்டுரை; சமச்சீர் பாடங்கள் தரம் குறைவாக இருந்தாலும் இப்போது உடனடியாக அதில் மாற்றங்கள் செய்வது இயலாத காரியம். அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தலாம். அம்மாவுக்கு ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன. பெற்றோர்களும் மாணவர்களும் ஏதாவது பாடம் இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். அரசு சிந்திக்க வேண்டும்.
Quote
 
 
+6 #15 KK 2011-07-20 12:54
Savukku,
Matriculation and Anglo Indian Schools are teaching Tamil and following the syllabus. Once Samacheer is introduced all this schools will switch to CBSE and students study Hindi as second language and not study Tamil.
These schools would never bracket with village and Govt schools in syllabus. Unless the samacheer syllabus is brought on par with CBSE syllabus,this will lead to failure and also our children will stop learning Tamil
Quote
 
 
+4 #14 mercury 2011-07-20 12:29
இது தான் நம் நிலமை நம்மால் என்ன செய்ய முடியும்.
Quote
 
 
+20 #13 தூயவன் 2011-07-20 12:27
சவுக்கு உனக்கு ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய ஒரு வாய்ப்பு .. உன் நடுநிலையை உனர்த்த உதவும்...!!! :lol:
Quote
 
 
+25 #12 su.raghuraman 2011-07-20 11:50
உயர் நீதி மன்றத்தில் சொன்ன அதே தீர்ப்பை உச்ச நீதி மன்றம் உறுதி செய்தால், அரசு ஐ நா சபைக்கு செல்லுமா ? தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று எவ்வளவு காலம் தான் சொல்லமுடியும் ? வறட்டு கெளரவம் பார்க்காமல் செயல் பட்டால் உங்கள் அரசின் மேல் நல்ல நம்பிக்கை வரும்.
Quote
 
 
+3 #11 Maamallan 2011-07-20 11:46
Let us hope for the best judgement from SC soon.
Quote
 
 
+12 #10 nanduvaakkili 2011-07-20 11:30
கல்வியிலும் அரசியலை புகுத்திய நாதாரி கருநரியால் வந்த இந்த பிரச்சினை இன்று மதவெறி பிடித்த நாய்கள் (அந்த மொட்டைதலை பத்திரிக்கையாளர ் ) கையால் இன்னும் பெரிதாக்கப்பட்ட ு கொண்டே இருக்கிறது...இப்படியே போனால் தமிழ்நாட்டில் எல்லோரும் நக்சலைட் ஆ மாறி இந்த அரசியல் வியாதிகள் எல்லோரையும் போட்டு தள்ள போகிறார்கள் பாருங்கள்...
Quote
 
 
+4 #9 Jk 2011-07-20 11:25
Nallaa puthikku ooraikara maathiri sollunga
Appaiyavathu mandaila earutha parkalam
Quote
 
 
+24 #8 மன்னர் மன்னன் 2011-07-20 11:23
சிறந்த நடுனிலையான கட்டுரை. புரிய வேண்டியவர்களுக் கு புரிந்தால்தான் நாடு உருப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடம் புகட்டினால் தான் திருந்துவார்கள் . அய்யாவுக்கு ஆப்பு வைத்ததுபோல் அம்மாவுக்கும் ஒன்று வைத்தால்தான் திருந்துவார்கள் போல்தெரிகிறது.
Quote
 
 
+31 #7 அன்பு 2011-07-20 11:22
இது ஜெயலலிதாவின் வறட்டு பிடிவாதமா? அல்லது
தனியார் பள்ளி முதலாளிகளிடம் காட்டும் விசுவாசமா?
அல்லது
கல்வி எனபது எங்களுக்கு மட்டுமே என்ற குல புத்தியா?
இவர் சமுதாயத்திற்கு மிக ஆபத்தானவர் என்பதில் அய்யம் இல்லை.
Quote
 
 
+13 #6 Covai Jaffer 2011-07-20 11:17
[ஃஉஒடெ நமெ="ஜகன் ட்"]நல்ல கட்டுரை. இந்த வறட்டு பிடிவாதமே ஜெ. வின் மைனஸாக இருக்கிறது. சரி செய்து கொள்ளாவிடில் மீண்டும் மக்கள் இவரையும் துரத்திவிடுவார் கள்.[/ஃஉஒடெ]

ஆமாம் - உள்ளாட்சி தேர்தல் விரைவில் கண்டிப்பாக இதன் எதிரொலி இருக்கும்
Quote
 
 
-3 #5 boopathi 2011-07-20 11:16
சவுக்கின் இந்த பதிவு தான் உல்னொக்கம் இல்லாத பதிவு...
Quote
 
 
+15 #4 Covai Jaffer 2011-07-20 11:16
முதல் ஆப்பை அவரே தேடிகொண்டரோ என்று தான் தோணுது?
Quote
 
 
+8 #3 CATHERINEWONG 2011-07-20 11:16
Dear Savukku Shankar

Your Investigative Journalism has been exemplary and outstanding as per all Indian Journalism standards, Appreciate it.

As far as the Information goes, Sabeetha I.A.S has been the proxy promoting Peri Software Company and also promoting Everonn company as a Sales person. Although a dynamic IAS officer, she has been in the limelight and good books of Dr.M.K when she was with GISS, TIDCO and other bodies to woo her own business and harness/augment her business. Her Husband being IPS officer she knows. It is very very surprising how this corrupt lady who has supplied non-working IP phones to the govt through peri software and made huge money to Saurav Periasamy of peri software and also instrumental in promoting Peri institute of technology. This lady has received huge money from schools when she was independent during election time and convincing Madam Jayalalitha to safeguard her purse. It is extremely surprising that she is retained as the school secretary who has failed miserably taking into consideration of the lakhs of students of the state of Tamilnadu. These bureaucrats are playing with the lives of students of tamilnadu is shameful, disgraceful and you as a social economist, activist should bring out more truths in this Sabeetha affair linking with samacheer kalvi.

Heartfully appreciate your laudable efforts and incredible information you are providing which has changed the fate of one government.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 136 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday13606
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week56333
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month259065
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12781184