|
பெரியார் துவங்கியது சுயமரியாதை இயக்கம். அதன் வழி வந்தவன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் கருணாநிதி இன்று நடத்திக் கொண்டிருப்பது அவமரியாதை இயக்கம். யார் என்ன சொன்னாலும், என் குடும்பமே பிரதானம் என்று காண்டாமிருகத் தோலோடு தள்ளு வண்டியில் ஊர்ந்து வரும் ஒரு பிறவியை என்னவென்று சொல்வது ?

குடும்ப ஆட்சியின் காரணமாக ஆட்சியை இழந்து இன்று முட்டுச் சந்தியிலே முக்காடிட்டு இருக்கிறோம் என்பதை இன்னும் உணராத ஒரு பிடிவாதம் பிடித்த கிழவனை என்னவென்று சொல்லி விமர்சிப்பது ? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அல்லவா ? எத்தனை சூடு பட்டாலும் கொஞ்சமும் உறைக்காமல் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல இருக்கும் நபரைப் பற்றி எழுதவே எரிச்சலாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இதை பதிவு செய்யாமல் விட முடியவில்லை.
தமிழ்நாட்டின் வரலாற்றில் திராவிட இயக்கம் என்பது, தவிர்க்க முடியாத ஒரு அம்சம். இந்த திராவிட இயக்கத்தை கண் முன்னே ஒரு கிழவன் தன் குடும்பத்திற்காக குழி தோண்டி புதைக்கிறான், அதை திமுக தொண்டன் வேடிக்கைப் பார்க்கிறான் என்பதை காண மனம் சகிக்க மறுக்கிறது.
கொட்டும் மழையிலே ராபின்சன் பூங்காவிலே, திமுகவை தொடங்கி வைத்துப் பேசிய அண்ணா என்ன பேசினார் தெரியுமா ?
“பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான், ஆயாசம் கொண்டவன் நான். அது மட்டுமல்லன். நான் ஒதுங்கி விடுகிறேன் என்ற எண்ணத்தை, நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். பேதம், பிளவு, மனத்தாங்கல், மோதல் கூடாது. நல்லதன்று என்று கருதும் போக்கும், மனப் பண்பும் படைத்தவன் நான். எனவே, என் வரையில் பெருந்தன்மையாக கட்சிப் பணியிலிருந்து விலகுவது நல்லது என்று முடிவு கட்டியிருந்தேன்.

என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக், அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, கண்டித்தனர், கதறினர், வேண்டாம் என்றனர் வேதனை உள்ளத்தோடு.
நான் மனதார தீமை என்று கருதிய ஒன்றை, நல்லதல்ல என்று தெரிந்த ஒன்றை பகுத்தறிவுக்கு புறம்பானது என்று பாமரரும் ஒப்பும் ஒன்றைத் தெரிவித்தது குற்றமா ?
பெரியார் சமாதானம் சொல்லி விட்டார் என் சொந்த விஷயம் எதிர்ப்போர் சுயநலமிகள் சதிக் கூட்டத்தினர் என்று மனப்புண் ஆறவில்லை. மக்கள் அப்படிப் பட்ட தலைவருடன் சேர்ந்து பணியாற்ற மாடோம் என்று கூறினர். செவிசாய்க்கவில்லை தலைவர். விலகுவார் என்று பார்த்தனர். விலகவும் இல்லை. அவரோடு சேர்ந்து பணி புரிய முடியாத நிலையிலுள்ள பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள், கூடிப் பேசி ஒரு முடிவு செய்தனர். அந்த முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழக தோற்றம். இது போட்டிக் கழகமல்ல.
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிகோள், அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.

கொள்கை பிடிக்காமலோ, கோணல் புத்தி படைத்தோ அல்ல நாங்கள் விலகியது, வெளியேறியது. கொள்கை வேண்டும். அதுவும் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும். நாடும், மக்களும் நலம் பெறும் முறையி,ல கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியத்திற்கு பக்க பலமாக இருந்து பணியாற்ற முடியாது என்ற நிர்பந்த நிலையிலேதான் விலகினோம். விலக நேரிட்டது. பெருந்தன்மை வேண்டுமென்ற ஒரே காரணத்தினால் தான், மோதரைத் தவிர்த்து கழகத்தை கைப்பற்றும் பணியை விடுத்து விலகுகிறோம். அது மட்டுமல்லாமல் தலைவர், எல்லார் மீதும் நம்பிக்கையில்லை. நம்ப முடியாது என்று வேறு கூறியிருக்கிறார். சோம்பேறிகள், செயலாற்ற முடியாத சிறுவர் கூட்டம், உழைக்கத் தெரியாதவர்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். யாரைப் பார்த்து ? உழைத்து உழைத்து கட்சியை, கழகத்தை உருவாக்கிய உண்மைத் தொண்டர்களை, தம் வாழ்வையும் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களைப் பார்த்து.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றத் தொடங்கி இருக்கிறோம். நான் மிகவும் சோம்பேரி, பெரியாரைப் போல உழைக்க முடியாது என்று கூறுகிறார்கள். நான் ஒப்புக் கொள்ளுகிறேன். பெரியார் போல் உழைக்க முடியாது என்று, ஏன் ? அவருக்கு உழைக்கும் சக்தி போதுமான வசதி இருக்கிறது. அவ்வளவு வசதியும் சக்தியும் பெற்றவனல்ல நான் என்பது மட்டுமல்ல, பெரியால் போல் உழைப்பது தவறு கூடாது, தேவையற்றது என்ற கருத்துடையவன் நான். அது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல, முரண்பட்டது என்ற கருத்துக் கொண்டவர். ஒரே மனிதர், தானே, எல்லாப் பொறுப்பையும் வகிப்பது தவறு. பிறருக்கும் சந்தர்ப்பம் வசதியளிக்க வேண்டியது கடமை என்ற போக்கை கொண்டவன். சோம்பேறி என்று கூறுவது தான் எனக்குப் பொருந்துமா என்று பாருங்கள். எட்டு ஆண்டுகளாக நான் ஒரு வார இதழ், திராவிட நாடு, நடத்தி வருகிறேன். இது சோம்பேறித் தனத்தின் விளைவா ? என்று கேட்கிறேன். இந்தப் பத்திரிக்கையிலே ஓரிரு பக்கங்களை தவிர மற்றவை யாவும் என்னாலே எழுதப்படுபவை. இதுவும் சோம்பேறித்தனத்தின் விளைவா ? மாலைமணி சென்னையிலும், திராவிட நாடு காஞ்சியிலும், நடக்கின்றன. மாலை மணி தினப்பத்திரிக்கை இரண்டுக்கும் நான் ஆசிரியன் வேலை பார்க்கிறேன். இது சோம்பேறித்தனத்தின் விளைவா ?

திராவிடர் கழகமாகட்டும் திராவிட முன்னேற்றக் கழகமாகக்டடும். படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்தியத்திற்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழிததுச் சமதர்மப் பூங்காவை, திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும், அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை மலர்ச்சியைத் தான் குறிக்கும். இரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. எது புஷ்புத்தாலும் மாலையாகப் போவது திராவிடத்துக்குத் தான் என்ற எண்ணம் வேண்டும். அதை விட்டு நள்ளிரவிலே பூங்காவின் வேலி தாண்டிப் பாதியை அழிக்கும் வேலி தாண்டிகள் வரக் கூடாது.
மழை பெய்து நின்று, கறுத்த வானம் வெளுத்திருப்பது போல், இன்று புதுக் கழகம் அமைத்து, முன்னேற்ற வேகத்துடன் மோதல் இன்றிப் பணியாற்றப் புறப்பட்டு விட்டனர்.

நம்மிடம் பணமில்லை. இந்தப் பயல்களிடம் பணம் ஏது ? கொஞ்ச நாள்களுக்குக் கூச்சல் போட்டு அடங்கி விடுவார்கள். பணமில்லாமல் என்ன செய்ய முடியும் ? என்று பேசப்படுகிறதாம். அதே நேரத்தில் பணம் சம்பாதிக்கிறான். நல்ல பணம் சம்பாதிக்கிறான். சினிமாவுக்கு கதை எழுதுகிறான் என்று தூற்றப் படுகிறேன் நான். இந்த இருவகைப் பேச்சுக்களையும் காணும் பொழுது, நான் உண்மையிலேயே மகிழ்கிறேன். நம்மிடம் பணம் இல்லை கட்சி நடத்த. ஆனாலும் வழிவகை இருக்கிறது. பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. நான் சம்பாதித்தது உண்மையோ, பொய்யோ, அது பற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று அந்த வழியைக் கடைபிடித்தேனும் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்று தைரியம் பிறக்கிறது. பணம் என்பது ஒரு சாதனமே. அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீர வேண்டும் எல்லாக் காரியங்களுக்கும் என்ற நிர்பந்தம் தேவையில்லை. நமது உழைப்பின் மூலம் உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையை நிறுத்தலாம், குறைக்க முடியும்.”
இதுதான் அண்ணாவின் உரை. “நம்மிடம் பணம் இல்லை கட்சி நடத்த” என்கிறார் அண்ணா. இன்றைக்கு திமுகவின் நிலை அதுவா ? பணத்திலே, அதுவும் ஊழலிலே சம்பாதித்த பணத்திலே திளைக்கிறதே….
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும், கடுமையாக விமர்சிப்பதின் நோக்கம், திமுகவை அழிக்க வேண்டும் என்பதல்ல… திமுக இருக்க வேண்டும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ரத்ததிலும், உழைப்பிலும், உருவான ஒரு திராவிட இயக்கம் சீரழிந்து போய் விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில்.
எத்தனை எழுதி விட்டன ஊடகங்கள் ? பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்து விட்டனவே !!! மக்களும், திமுகவை ஊதி ஒதுக்கி புறந்தள்ளி விட்டனரே…!!! இதற்குப் பிறகும், திமுகவை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பொதுக்குழுவில் நான் தான் தலைவன் என்று பிடிவாதம் பிடிக்கும் இந்தக் கிழவனை என்ன சொல்லித் திட்டினால் தகும் ?

2ஜி வழக்கில் ஊழல் புரிந்த ராசா, கத்தை கத்தையாக பணத்தை கொண்டு வந்து தந்த போது, அதை வாங்கி தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க சொத்துக்களாக வாங்கிக் குவிக்கத் தெரிந்த கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தினருக்கும், ராசா 130 நாட்களாக சிறையில் இருந்த போது தெரியாத வலி, கருணாநிதியின் மகள் சிறைப் பட்ட உடன் தெரிகிறதே…!!!!
ராசா கைது செய்யப் பட்ட போது, காங்கிரஸ் கூட்டணியை முறிக்க வேண்டுமா என்று சிந்திக்காத கருணாநிதிக்கு, தன் மகள் கைது செய்யப் பட்டவுடன் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டத் தோன்றுகிறதே…!!!
தன் மகள் சிறைபடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கத்தை கத்தையாக பணத்தை அள்ளிக் கொடுத்த ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்று வழக்கறிஞரை வைத்து வாதாட வைத்த கருணாநிதியை கழுவிலேற்ற வேண்டாமா ?
குடும்ப ஆட்சியின் விளைவாக மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்து கூடக் கொடுக்காமல், மூன்றாவது நிலைக்குத் தள்ளிய பின்னரும், செயற்குழுவில், ராசாத்தி அம்மாளை பக்கத்திலேயே அமர வைத்துக் கொண்டு செயற்குழுவை நடத்தும் கருணாநிதியைப் போன்ற கேடுகெட்ட மனிதரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?

திமுக எஃக்குக் கோட்டையைப் போன்றது என்று இன்று உறுமும் கருணாநிதி, அந்த எஃக்குக் கோட்டையின் அடியிலே, வெடி வைத்து 2011 தேர்தலிலே மக்கள் தகர்ததன் காரணத்தை ஏன் உணர மறுக்கிறார் ?
திமுகவுக்கு இருந்து 3 கேபினெட் அமைச்சர்களில் இருவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களுக்கு பதில் வேறு ஒருவரை நியமிப்பதில் கருணாநிதி இத்தனை நாளாக சுணக்கம் காட்டுவது, அவர் குடும்பத்திலிருந்து ஒருவரும், அமைச்சர் பதவிக்கு தயாராக இல்லை என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

கனிமொழி சிறையிலிருந்து வெளி வரும் வரை, வேறு எவரையும் மத்திய மந்திரி ஆக்குவதில்லை என்று கருணாநிதி முடிவெடுத்திருக்கிறார் என்ற தகவல், இவர் எப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதர் என்பதையல்லவா காட்டுகிறது ?
ஊர் ஊராகப் பேசுவதற்கு தொண்டன். கூட்டம் கூட்டுவதற்கு தொண்டன். தலைவனுக்கான தீக்குளிப்பதற்கு தொண்டன். போலீசிடம் அடிபடுவதற்கு தொண்டன். பதவிக்கு மட்டும் குடும்பமா ?
இப்படிப் பட்ட காண்டாமிருகத் தோல் படைத்த கருணாநிதியை விட கேவலமான பிறவிகள் யார் தெரியுமா ? திமுகவின் தொண்டர்கள் தான். இத்தனை அயோக்கியத்தனங்கள் கண் முன்னே அரங்கேறியும், கட்சியை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தன் குடும்ப நலனுக்காக லட்சக்கணக்கான தொண்டர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மீண்டும் நான்தான் தலைவர் என்று பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் வாளாயிருக்கும் திமுகவின் செயற்குழு உறுப்பினர்களைப் போன்றவர்களை என்னவென்று சொல்வது ?
ஆயிரக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தின் அடிப்படையில் வளர்ந்த திமுகவை ஒரு பிடிவாதம் பிடித்த கிழவன் கண்முன்னே அழிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக தொண்டன், கருணாநிதியின் அயோக்கியத்தனத்துக்கு துணை செல்பவன் இல்லையா ?

இந்தப் பொதுக்குழு நடப்பது எதற்காக ? நடந்து முடிந்த தேர்தல் தோல்வியை ஆராய்வதற்காகவா ? இரண்டு மகன்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போரின் விளைவல்லவா இந்தப் பொதுக்குழு ? இதற்காக ஆயிரக்கணக்கானோரை கூடச் செய்து, குடும்ப அரசியலை கொலு மண்டபத்தில் ஏற்றி அழகு பார்க்கிறார் கருணாநிதி.

இந்த கொலு மண்டப நாடகத்தை ஆட்டு மந்தைகள் போல, வேடிக்கைப் பார்க்கின்றன பொதுக்குழு உறுப்பினர்களான ஆடுகள். அழகிரியிடமோ, ஸ்டாலினிடமோ தலைமைப் பொறுப்பே போனால் மட்டும், திமுகவை வீழ்ச்சியிலிருந்து தூக்கி நிறுத்தி விட முடியுமா என்ன ? இவர்கள் இருவருமே, இன்றோ, நாளையோ, சிறைக் கொட்டடியில் கால்பதிக்க காத்திருப்பவர்கள் தானே ? இவர்களை நம்பி கட்சியை ஒப்படைத்தால், நாளை மீண்டும் சந்தி சிரிக்கத் தானே செய்யும் ?
திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு தொண்டனாவது நினைப்பானேயென்றால், திமுகவை விட்டு வெளியேற வேண்டும். வேறு அரசியல் கட்சியில் சேராவிட்டாலும் பரவாயில்லை. திமுகவில் இருக்கக் கூடாது. கருணாநிதியின் குடும்பம் எப்போது திமுகவை விட்டு விலக்கப் படுகிறதோ, அப்போது தான் திமுக தொண்டன் திமுக பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
அப்படி செய்யாத திமுக தொண்டன், பெரியார் பெயரையோ, அண்ணா பெயரையோ உச்சரிக்க தகுதியில்லாதவன்.
கருணாநிதி திருந்துவார் என்று திமுக தொண்டன் மனப்பால் குடிக்க வேண்டாம். ஒரு நாளும் கருணாநிதி திருந்தப் போவதில்லை.
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பாக்கனும்
தப்பை செய்தவன் வருந்தியாகனும்
என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளெல்லாம், சூடு சொரணையுள்ளவர்களுக்கு. கருணாநிதி போன்ற காண்டாமிருகத் தோல் படைத்தவர்களுக்கு அல்ல. பட்டுக் கோட்டையார் தான் இடது சாரி. கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான வாலி சொன்னதாவது கருணாநிதிக்கு உரைக்குமா ?
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
|
Comments
//பல ரிஷிகளும் பிராமணர் இல்லாதவர்களே. வால்மீகி தலித். நாராயண குரு தலித்.// இந்த கருத்துக்கு நான் வரவில்லையே..மதத்தை பிராமணர்கள் மட்டும்தான் வளர்த்தார்கள் என்று சொன்னேனா ( என்னை பிராமண எதிர்பாளன் என்று நினைத்து கொண்டீர் போலும் )பிராமணரை அண்டி பிழைப்பவர் என்று சொல்லவில்லை..அப்படி பார்த்தால் எல்லா சாதியுமே அண்டி பிழைப்பதுதான்...சத்திரியன் என்று வந்தால் பொன்னும் பொருளும் கொடுப்பது கடைமையாகி விடுகிறது....உயிர் தியாகம் செய்பவன் சத்ரியன் என்றால், இது அவன் பிள்ளைகளுக்கு வம்சத்திற்கும் இது பொருந்துமா?இல்லை மண்டையை போட்டால் தான் சத்திரியன் என்றால் யாரும் சத்திரியனாக வாழ முடியாது..அப்படியா...
௧) சத்ரியனை விட பிராமணர் உயர்ந்தவர் என்று சாஸ்திரம் கிடையாது. திரிபு இருக்கலாம் . எல்லா சாஸ்திரங்களும் சத்திரியன் பிராமணனை விட உயர்ந்தவன் என்றே சொல்கின்றன. நாட்டுக்ககா, இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவன் எக்குடிப்பிறப்ப ினும் சத்ரியனாகிறான். அதுவே நான் திருக்குறளை எடுத்துக்காட்டி சொல்ல வந்தது. பகவத் கீதையில் இருந்தும் இதையே நிரூபிப்பேன். வேண்டுமென்றால் பௌத்த நூல்களிலிருந்து கூட நிரூபணம் செய்கிறேன். "தம்மபட்ட சூத்ரா" படித்துள்ளீர்கள ா? 12 செய்யுள்கள், சத்ரியன் உயர்ந்தவன், பிராமணன் அடுத்து..என்று வந்துள்ளன. (அம்பேத்கர் பௌத்தத்துக்கு மாற காரணம் அதில் சாதி இல்லை என தெரிவித்தது நினைவுக்கு வருகிறதா?) . திருக்குறளில் இருந்து இன்னொரு ஆதாரம் :
உறின்உயிர் அஞ்சா *மறவர்* இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர்
இதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில ்லை என்றால், சேரமான் மட்டுமல்ல, திருவள்ளுவரும் ஜாதி வெறியர் என்றாகிவிடும்.
௨) பல ரிஷிகளும் பிராமணர் இல்லாதவர்களே. வால்மீகி தலித். நாராயண குரு தலித்.
௩) தொல்காப்பியர் சாதி, மறவர், பார்ப்பனர், புலையர், பறையர் என்று எழுதி இருக்கிறார். நீங்கள் தொல்காப்பியம் நிச்சயம் படித்திருப்பீர் கள். அப்போது தொல்காப்பியரும் சேரமான் மாதிரி சாதி வெறியரா?
௪) கபிலர் பிராமணர். மரவர்க்கெல்லாம் மறவர் என்று பாரியை புகழ்கிறார். "தேனில் வறுத்து வரையாடு கொடுப்பான்" என்று கையறு நிலை பாடுகிறார். அதனால் நீங்கள் "பிராமண குலத்திலிருந்து சத்ரியன் வரவேண்டும்..சைவமாக இருக்கவேண்டும்" சொன்னது தவறு என்று ஆகிறது.
)பிராமணர் அரசரை அண்டி பரிசிலுகககப் பிழைக்கவில்லை, வந்தோமா, கடமையை சென்ஜோமா, போனோமா என்று இருந்திருக்கிறா ர்கள் என்பதை நிரூபிக்கிறேன். வேறு பக்கத்தில் கேளுங்களேன்.
சரி வாங்க.. திருவல்லிக்கேனி லேர்ந்து சித்திரகூடம் வரைக்கும் நாளைக்கு காலம்பற உஞ்சவிருத்தி பண்ணி பிச்சை எடுக்கலாம்..
இவ்ளோ வியாக்கியானம் கொடுக்கறீங்களே, இதோ கலப்பு மகன் சொன்ன இதுக்கு பதில் சொல்லுங்களேன்:
//பிராமணர் வாதம்..சக்கிலியன் இருக்கிறான் என்று ஒத்து கொள்வார்களே ஒழிய யாரையும் சத்திரியன் என்று சொல்ல மாட்டார்கள்..சத்திரியன் இலக்கணம் என்ன..அவன் பிராமணர் குளத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்..பூணூல் அணிய வேண்டும் , சைவமாக இருக்கவேண்டும்..ஈம காரியங்களை சாஸ்திரப்படி செய்ய வேண்டும்..பிராமணர்களுக்கு அள்ளி கொடுக்க வேண்டும்..அதுவும் சந்திர வன்சி, சூர்யா வன்சி, நாக வன்சி , யது வன்சி மரபில் இருந்து வந்திருக்க வேண்டும் சத்திரியர் அப்படி யாரும் தென் இந்தியாவிலேயே இல்லை ..அவர்களிடம் பிராமண மரபணு ற்1ஆ1 இருக்க வேண்டும் நாயரை மட்டும் ஒத்து கொள்கிறார்கள்//
ஆமா... இவரு ரொம்ப பிசி.. இவரு ஐநா செயலாளர்.. போய் ஆணி புடுங்கப்போராறு ..
வணக்கம்! தேன் வார்த்தைகளில் மயங்கவில்லை, ஒரு சில பார்ப்பனர்கள் அந்நியன் போல தமிழுணர்வுடன் உள்ளனரே என்ற பூரிப்பு! உம் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையவையே! அந்நியனின் கருத்தும் ஒரு சில தவிர்த்து நம்முடன் ஒத்து போகிறதே! அந்த ஒரு சில முரண்பாடு விளக்கத்தினால் சரி செய்ய முடியும் என்பதே என் எண்ணம்![/ஃஉஒடெ]
சோழன் அண்ணே,
எனக்கும் அன்னியனுக்கும் எனத வாய்க்கால் தகராறும் கிடையாது. அவரது கருத்துகளை பலகாலம் கவனித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். கருத்தியல் வாதம் செய்வது என்றால் அவருக்கோ, அவரது கூட்டத்துக்கோ என்னவென்றே தெரியாது. தெரிந்ததெல்லாம் 'தனிநபர் தாக்குதல்' மட்டுமே. (அதற்கு உதாரணங்களை நீங்கள் இங்கேயே பார்க்கலாம்). அவர் பேசுவது 'பார்ப்பணிய எதிர்ப்பு' பற்றி தான். ஆனால் அதை மற்றவர் பேசும்போது (சவுக்கு உட்பட) முதலில் வந்து அதை எதிர்ப்பது இவரது கூட்டம் தான். அதாவது 'பார்ப்பனிய எதிர்ப்பு' என்பதை இவர்கள் லாபி செய்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் 'திராவிட இயக்கம்' பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ எதாவது கட்டுரை வந்தால் அதை வசைபாடுவது இவரது கூட்டத்துக்கு கைவந்த கலை. இது தான் இவர்களது நடுநிலை !!!.. ஒரே ஒரு முறை கருத்தியல் ரீதியான வாதம் என்றால் என்ன என்று அறிய 'வினவு' பக்கமோ, 'கீற்று' பக்கமோ சென்று வாருங்கள். இந்து மத அட்டூழிஙகள் குறித்து ஒரு கட்டுரை வந்தால் அதை கருத்திய ரீதியாக முதலில் ஆதரிப்பவர் ஒரு இந்துவாகத் தான் இருப்பார். அது தான் நடுநிலைமை. அன்னியனின் தேன் போன்ற வார்த்தைகளில் மயங்கிவிட வேண்டாம். அனைத்தும் விஷம். அது உங்களுக்கு போகப்போக தெரியும்.
உமக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். உம்ம கூட்டம் இங்கு சவுக்கிற்கு என்ன நோக்கத்திற்காக வருகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். தக்க நேரத்தில், தக்க இடங்களில் வழக்கம்போல் உங்கள் டவுசர்கள் (கருத்தியல் ரீதியாக) கிழிக்கப்படும். மற்றபடி 'தனிநபர் தாக்குதல்' தொடுத்து பக்கத்தை நிரப்பும் வித்தை எனக்கும் தெரியும். ஆனால் அதை செய்வதற்கில்லை. பிழைத்து போவுங்காணும்.
--குருஷேத்திர டுபுக்கு.
பிராமணர்கள் மன்னர்களிடம் கையேந்தியே இருந்தார்கள் என்பது முரட்டு வாதம்.. வேதம் ஓதுவதும் நீதி பகர்வதும் அவர் செயல்.. //
அந்நியன் அவர்களே! பிரமாணர்களின் குடியிருப்பு பகுதியில் அரசரின் சட்டமே செல்லாது என்ற காலங்கள் உண்டு..நான் பிராமணர்களை கையேந்தினார்கள் என்று எங்கே கூறி உள்ளேன்? உண்மையில் பிராமணர்களை நான் தாழ்த்தவே இல்லை..நன்றாக பாருங்கள்..அப்படி பிரமானர்களை தாழ்த்தினால் அதிவும் சாதியம் தான்.. ஆனால் பிராமணர் என்று சொன்னால் இந்திய முழக்க இருக்கும் எல்லா பிராமணரையும் சேர்த்துதான்..வாடா இந்தியாவில் போய் எவனாவது நான் சத்திரியன் என்று சொல்லட்டும் பார்ப்போம்..ஆஎன் நம் பிராமணர்களே முன்னாள் விட்டு பின்னால் வேறு பேசுவார்கள்..அப்படி இல்லாவிட்டாலும் ஒருவன் சத்திரியன் என்று சொன்னால் அவன் பிராமணனை உயர்தவன் என்று ஒத்துகொண்டான் என்பது தானே அர்த்தம்... இனி வரும் காலங்களிலாவது ஆவது சத்திரியன் , சூத்திரன் பிராமணன் வழக்கு வேண்டாம் என்பது என் ஆவல்.சாதியை எதிர்பவன் பிராமன் எதிரி என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்வது .."வேளாண் சிறுபதம் " என்ற வார்த்தையே சாதியை உணர்வை தூண்டுவதுதான். அடிமைகளான வெள்ளாளர்(வேளாண ் ) சமைத்த சிறுபதம் தை உண்பதை விட இறப்பதே மேல் என்று சொன்ன சேரன் பக்கா சாதி வெறியன்...அவன் கருத்தைக் மற்ற மன்னர்கள் எப்படி மாறி இருப்பார்கள் நினைத்து பாருங்கள்..
அன்னியன், ஒர் பிராமணன் என்கிற முறையில் சொல்கிறேன் - பிராமணன் பிக்ஷை எடுத்துத்தான் வாழவேண்டும் என்ற நியதி உமக்குத் தெரியாதா? அதுமட்டுமல்ல, அவன் சொத்தும் சேர்த்து வைக்கக்கூடாது என்றிருந்தது. ஓருசிலர் உஞ்சவிருத்தி செய்தே வாழவேண்டும் என்றிருந்தது - அதாவது, முதல் வீட்டில் பிக்ஷை கிடைக்காவிடில் அந்த வேளை பட்டினியாகவே கழிக்கவேண்டும். இவ்வாறு வாழ்க்கையை ஓட்டிய காலம் ஒன்று இருந்தது.
அதுவே அக்கிழவனுகக்கு அதிகம்..அது ஒரு உயிரினமே அல்ல..
அன்பு நண்பர் சோழன் ,
வணக்கம்.
ராஜாஜி கருணாநிதியிடம் வீடு தேடி மது விற்பனை வேண்டாம் என்று சொல்லி மன்றாடியவர். தானே சாப்பாட்டைக் குறைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்றவர்.. அவ்வளவு குரூரமாக அவர் சொல்வாரா? சர்வ சாதாரணமாக நம்புகிறீர்களே? ராஜாஜி நயவஞ்சகராக இருந்தாலும், அதிபுத்திசாலி ஆதலால் சாமர்த்தியமாக ஏமாற்றி இருக்கக்கூடும். இவ்வாறு வெளிப்படையாக சொல்லி மாட்டிக்கொள்வார ா ? சிந்திக்க வேண்டாமா? சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ள இதை படியுங்கள்: http://www.jeyamohan.in/?p=11070 இதில் கீழ் பகுதியில் ராஜாஜி பற்றி காமராஜர் படத்தின் அருகே உள்ளதை படித்துப் பின் உங்கள் கருத்தை எனக்கு சொல்லுங்கள்.
மற்றபடி பிராமணர்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்பது மிகவும் தவறான புரிதல்.. ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய அவர்களே ஆதிக்கம் செலுத்தியது தவறுதான்.. ஆனால் காட்டிக்கொடுத்த னர் என்றே சொன்னால், தயவு செய்து வரலாற்றுப் பதிவுடன் சொல்லுங்கள். பெரியார், கருணாநிதி போன்றவர்கள் நேரிடையாகவே சுதந்திரத்துக்க ு எதிராக இருந்துரிக்கிரா ர்கள். முகமது அலி ஜின்னாவுக்கு ஜால்ரா அடித்திரிக்கிரா ர்கள். பாரதி தாசன் இவற்றை தான் நடத்திய குயில் பத்திரிகையில் பயங்கரமாகக் கண்டித்து இருக்கிறார்.
இந்தக் காலத்தில் யார்தான் வஞ்சகம் இல்லாமல் பழகுகிறார்கள்? மலையாளி எமாத்தாறான். தெலுங்கன் ஏமாத்தறான். கன்னடத்தான் தவிச்ச வாய்க்கு தண்ணி தரமாட்டேன்றான். உங்களை பிராமணர் அல்லாதோர் யாருமே ஏமாற்றியதில்லைய ா ? துரோகம் செய்ததில்லையா ?
//ஆனால் நீங்கள் கூறும் சாத்திரம் நல்லவையை போதித்தாலும் ஏற்றத்தாழ்வுகளை திணிக்கிறது! அதில் நல்லது மட்டும் எங்களுக்கு போதும்!// -- எனக்கும் அப்படியே !!
பிராமணர்கள் மன்னர்களிடம் கையேந்தியே இருந்தார்கள் என்பது முரட்டு வாதம்.. வேதம் ஓதுவதும் நீதி பகர்வதும் அவர் செயல்.. கையேந்தாமல் இருந்த பிராமணர்கள் , தமிழ்ப் புலவர்கள் அதிகம்.. ஆதாரம் இருந்தால் அநேக பிராமணர் கைஎந்தினர் என்று நிரூபியுங்கள்.. சவுக்கின் புதிய பதிவுகளை படிக்கவேண்டி இருப்பதால் வேறு பக்கங்களில் பேசிக்கொள்வோமா?
Quoting கலப்பு மகன்:
டொக்கு வணங்காமுடி,
பலகாலமாய்ப் படித்ததாக சொல்லும் நீங்கள் என் திருந்தவில்லை? சோழன் வேண்டுமானால் ஏமாளியாக இருக்கலாம் என்று சொல்கிறீர்களே, உங்களைத் தவிர யாருக்குமே அறிவில்லை என்று நினைக்கிறீர்களா ?
சத்ரிய வியாக்கியானம் தமிழில் இருந்தைதை அப்படியே சொன்னேன். ஒருவன் பிராமணனாகப் பிறப்பதால், பிரபாகரனை புகழும் தகுதியைக் கூட இழந்துவிடுகிரான ா?
Quoting வால்டர் வணங்காமுடி:
பெரியாரைப் பற்றி வளவளவென்று எழுதினீர்களே, ஒன்றுக்காவது "ஏன்?" என்ற விளக்கம், ஆதாரம், சுட்டிகள் கொடுத்தீர்களா? நீங்கள் சொன்னாலே அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? அது ஆணவமில்லையா ?
சோழன்,
இப்போது சொல்லுங்கள்.. பிரபாகரன் சத்ரியன் என்று பெருமைப் படுத்திச் சொன்னாலே, குறை கண்டுபிடித்து விஷம் கக்கும் திராவிடரிடம் ஒரு சராசரி ஹிந்து எப்படி அக்கறையாக இருப்பான்?
Quoting கலப்பு மகன்:
வணக்கம்! உம் கருத்துக்களை ஏற்கிறேன்! ஆனால், வெள்ளையன் காலத்தில் என் இன சிங்கம் பாரதியை போல சிலர் இருந்தாலும், காட்டி கொடுத்து ஆதாயம் அடைந்த பிராமணர்கள் ஏராளம்! அதன் பிறகு முதலமைச்சராகி அதே ஜாதிய வெறியுடன் 2000 பள்ளிகளை மூடி குருக்குல கல்வியே தமிழகத்தில் தொடரும் என்று அறிவித்த ராசாசியின் ஆணவப்போக்கை பார்த்து எத்தனை தமிழர்கள் வெகுண்டு இருப்பார்கள்? ராசாசி மட்டும் அல்ல, அன்று இருந்த பிராமண ஆதிக்கத்தில் தொண்ணூறு சதவிதத்தினரின் போக்கு அப்படியே இருக்கவும் தான் அவ்வளவு வெறுப்பை சம்பாதித்தார்கள ்! இன்று இருக்கும் சிறு இடவெளியிலும் (ச்பசெ) பிராமணர்களின் அராஜகம் ஈஈட் கதையை படித்தால் புரியும்! இவை அனைத்தும் ஒரு ஜாதியின் மீதான வெறுப்பு என்பதை விட, இப்படி பட்ட (சோ, ஹிந்து ராம் .... போன்ற நாய்கள் போன்ற) மனிதர்கள் மீதான வெறுப்பு என்பதே உண்மை!
இன்னொன்று:
புறநானூற்றையும் சத்திரிய, பிராமண சூத்திரத்தையும் ஒன்று கலக்க வேண்டாம் என்பது என்னுடைய சிறு வேண்டுகோள்! கருத்துக்களை சேருங்கள், இது போன்ற கோட்பாடுகளை வேண்டாம்! ஏன் என்றால் புறநானூறு என்றுமே பிரிவினையை போதிக்கவில்லை ஏற்றத்தாழ்வுகளை போதிக்கவில்லை! ஆனால் நீங்கள் கூறும் சாத்திரம் நல்லவையை போதித்தாலும் ஏற்றத்தாழ்வுகளை திணிக்கிறது! அதில் நல்லது மட்டும் எங்களுக்கு போதும்!
நன்றி!
எத்தனையோ மனிதநேயமற்ற பிராமணர்களிடையே அந்நியன் போன்று ஒரு சிலரை பார்ப்பது கடினம் தானே?
வணக்கம்! தேன் வார்த்தைகளில் மயங்கவில்லை, ஒரு சில பார்ப்பனர்கள் அந்நியன் போல தமிழுணர்வுடன் உள்ளனரே என்ற பூரிப்பு! உம் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையவையே! அந்நியனின் கருத்தும் ஒரு சில தவிர்த்து நம்முடன் ஒத்து போகிறதே! அந்த ஒரு சில முரண்பாடு விளக்கத்தினால் சரி செய்ய முடியும் என்பதே என் எண்ணம்!
====
அபே சாலே , தும்ஹார ஜெயசே சூத்திய லோக் நஹி தமிழ் லோக்...
“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது . இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.[/ஃஉஒடெ]
=========================
ஐயா காந்தியையும் நேருவையும் மட்டுமே தலிவர்களாக நிலை நிறுத்த முயலும் பார்பனர்களை எங்களுக்கு தெரியும்..இதைதான் பார்பனீயம் என்கிறோம்..காந்தி பெரிய தில்லாலங்கடி தான். எங்கள் கருத்து வேறு . இது தமிழர்கள் கருத்தது ..இது ஆரியமும் அல்ல திராவிடமும் அல்ல.."ஆரிய கருத்தாளன் ஆட்டு திருடன், திராவிடம் பேசுபவன் மாட்டு திருடன் " இதுதான் எங்கள் நிலைபாடு
“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது . இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.
கண்ணியம் என்பது அறவே அண்ணாவிடம் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. அன்றைக்கு அண்ணாவின் கட்சியில் பேச்சாளராக இருந்த மூடர்கள் சற்றும் தயங்காமல் அண்ணாவின் இந்த வசனத்தை மேடை தோறும் மறு ஒலிபரப்பு செய்து மகிழ்ந்தார்கள்
உம்ம கருத்துகளை பல காலமாக படித்தவன் நான் என்கிற முறையில் சொல்கிறேன். நீங்கள் என்னதான் நடுநிலை வேஷம் போட்டாலும் உம்மை அறியாமலெயே உம்மளுடைய பூணூல் வெளியே பல் இளிப்பது அனைவருக்கும் தெரியும். நல்லவர் வேஷம் போட்டு ஊரை ஏமாற்ற வேண்டாம். நீர் எந்த நேரத்தில் எப்படி வந்து, என்ன மாதிரியான கமெண்டுக்களுக்க ு, எப்படி எல்லாம் பதில் அளிப்பீர் என்பது எனக்கு நன்கு தெரியும். சோழன் வேண்டுமென்றால் உம்முடைய தேன் வார்த்தைகளில் ஏமாந்திருக்கலாம ். ஆனால் மற்றவர்களுக்கு தெரியும் நீர் யார் என்று. உம்முடைய 'சத்திரிய' வியாக்கியானம் எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துகொள்ளும். தேவை இல்லாமல் என்னை வம்புக்கு இழுக்கவேண்டாமே...!!! அப்புறம் (வழக்கம்போல) சிரமம் உங்களுக்கு தான்.
--குருஷேத்திர டுபுக்கு.
முரசொலியில் தமிழின கொலைஞரின் கடிதத்திலிருந்த ு
//இதோ இரண்டொரு மாதங்களுக்கு முன் ஏமாந்த தமிழ் நாட்டு மக்களால் //
ஏமாந்தது தமிழர்களா தமிழை பேசியே மக்களை ஏமாற்றிய திமுகவா
திரு வணங்காமுடி,
இப்போது நீங்கள் பிரபாகரன் மட்டுமே தமிழின தலைவர், சமர் (போர்), தியாகம் என்று பேசுகிறீர்கள்.
இதையே நான் "பிரபாகரன் சத்ரியன்" என்று சொன்ன போது நான் சாதி வெறியைத் தூண்டுவதாக சொன்னீர்கள்.
‘’குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே’’ ’(புறநானூறு-74 )
அதாவது குழந்தை இறந்தே பிறந்தால்,விழுப ்புண் மரணம் மட்டுமே குழந்தையை வீரனாக(சத்ரியனா க) பெரும்பேரடைய வைக்குமென்று வாளால் வெட்டி விடுவார்கள்.
அவ்வாறு வாளால் வீரமாக சாகதவன் தினம் தினம் சாகிறான், வீரமாக செத்தவன் ஒருமுறையே சாகிறான், பின்பு என்றென்றும் வாழ்கிறான் என்பது ஐதீகம்.
ஷேக்ஸ்பியர் கூட ஜூலியஸ் சீசரில் 'Cowards die many times before their deaths;
The valiant never taste of death but once' என்று எழுதியுள்ளார்.
என்னைமுன் நில்லன்மின் பலர் என்னை
முன்நின்று கல்நின் றவர்
(அதிகாரம்: படைச் செருக்கு)
(எம் முன் போருக்கு நிற்காதீர்.. எம் முன் நின்ற பலர் கல்லாய் நிற்கிறார்கள்)
போரில் எதிர்த்து நிறுக்கும் வீரன் கொல்லப்பட்டு அவனுக்கு நினைவுக்கல் வைக்கப்படும். அந்தக் கல் அவனது குடும்பத்துக்கு நீத்தார் வழிபாட்டுக் கல்லாகிறது. ஒரு பெரும் வீரன், தன் கிராமத்தையே காக்கும் வகையில் எதிரிகள் பலரை வீழ்த்தி விழுப்புண்ணோடு இறந்தானானால், அவனுக்கு கல் வைக்கப்பட்டு கிராமமே வழிபடுகிறது. பல தலைமுறைகளாக கிராம மக்களின் மனங்களில் தெய்வமாக வாழ்கிறான். இதைத்தான் சத்ரியனுக்கு சாவு இல்லை என்கிறோம்.
தமிழன் இறந்தும் புகழோடு வாழும் நிலையையே சத்ரியன் என்று சொன்னேன்.
நீங்கள் சொன்னால் சரி, நான் சொன்னால் வெறியா?
அன்புள்ள சோழனுக்கு,
தங்களின் புரிந்துணர்வுக் கு மிக்க நன்றி. நீங்கள் பாராட்டுமளவுக்க ு நான் ஏதும் செய்துவிடவில்லை . வாழ்க்கையில் பல துன்பங்களுக்குப ்பின் அனைத்தையும் "வாடிய பயிரைக் காணும்போதெல்லாம ் வாடினேன்" என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். அவ்வளவே. பாரதியார், வள்ளலார் போன்ற ஞானிகளைத் தவிர, இதர சாதாரண மனிதர்களில் துன்பமடையாதவர்க ள் பிறர் துன்பங்களைக் கண்டு வாடுவதில்லை. நிச்சயமாக இந்தியா சிமெண்டில் டைரக்டராக இருப்பவனுக்கும் , மல்டி நேஷனல் கம்பெனியில் CEO வாக இருப்பவனுக்கும் , ஏசி காரில் செல்பவனுக்கும் பிறரின் துயரம் தெரியாது. பிறரின் துயரம் புரியாதவன் பிராமணன் இல்லை. மனிதனே இல்லை.
உங்கள் கருத்துக்கள் முழுமையும் ஏற்புடையதே. பெரும்பாலானவர்க ள் ஈழத் தமிழர் பற்றி கவலைப் படவில்லை என்னும் உங்கள் கருத்தும் உண்மைதான். காரணம் என்ன என்பது உங்களுக்கும் தெரியும், சவுக்குக்கும் தெரியும். 1988 ல் அரசினர் பள்ளிகளில், அமைதிப்படை ஓநாய்களை நல்லவர்களாகவும் , விடுதலைப் புலிகளை கெட்டவர்களாகவும ் சித்தரித்து வீடியோ காட்டி காசு வசூல் செய்தார்கள். கோமகன் ராஜீவ் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலிகளின் மேல், இலங்கைத்தமிழர் மேல் வெறுப்பு வளர்ந்தது. பத்திரிகைகள் மேலும் மோசமான செய்தியை வழங்கின. இதனால் பொதுவாக எல்லாருக்கும் வெறுப்பு வளர்ந்தது. அது பிராமணனுக்கு அதிகம் வெறுப்பாகக் காரணம் இல்லாமலில்லை. விடுதலைப் புலிகளின் வன்முறை, பத்திரிக்கை செய்திள்கள், கூடவே நீ தமிழன் அல்ல.. வந்தேறி, வடவன், நீ தமிழ கெடுத்தவன் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிர ுந்தால், பிராமணனுக்கு தமிழில் பற்று எப்படி வளரும்?
"பாப்பானை பூணூலை அறுத்து துரத்துவோம், இராமருக்கு செருப்பு மலை போடுவோம்" என்று சொல்பவன், அடுத்த வாக்கியமாக "இலங்கைத் தமிழரைக் காப்பாற்றுவோம்" என்று சொன்னால், ஏதோ இலைங்கத்தமிழர் என்றால் நாத்திகன் போல ரவுடி போல. இவங்க கும்பல்போல இருக்கிறது, "இவனுங்களுக்கு என்ன ஆனால் என்ன" என்ற எண்ணம் ஒரு ஆஸ்திகனுக்கு வரத்தான் செய்யும். ஆனால் பக்குவமடைந்த மனதில் மின்னல்போல் கோபம் ஒரு நொடியே வரும். மற்ற நேரத்திலெல்லாம் அன்பே மழையாய்ப் பெருகும். அந்த மனதுடையவந்தான் பிரம்மத்தை தேடமுடியும். பிராமணனாக முடியும். இது இன்னும் பலருக்கு பிறக்கவேயில்லை. முத்துக்குமார் இறந்தபோது சுப்பிரமணியம் சுவாமி நெஞ்சில் ஈரமே இல்லாமல் இது மூளைச்சலவையால் ஏற்பட்ட நிகழ்ச்சி என்றார். இதற்குக் காரணம் உண்மையில் சுப்பிரமணியம் சுவாமியின் மூளை சலவை செய்யப்பட்டு இருப்பதுதான்; அதற்குக்காரணம் "THE HINDU" மற்றும் இதர பத்திரிகைகள். நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். மற்ற சாதிகளிலும் இருக்கிறார்கள். ஒரு திராவிட நண்பர் ஏதோ ஒண்ணும் ஒண்ணும் இரண்டுங்கரமாதிர ி சிம்பிளா, "அவனுங்க அடிச்சுகிட்டு, கல்பாக்கத்துல குண்டு போட்டா என்ன ஆகும்? அதனால இந்தியா அவனுங்க அழியறதுக்கு சப்போர்ட் பண்றதுதான் லாஜிகலா சரி.. போர்னா மரணமில்லாம இருக்குமா?அவ்ளோதான் .. இப்ப என்ன சொல்லிட்டேன்னு கண்கலங்கறீங்க?" என்றார். (அனேகமாக அவர் இதைப் படிக்கக் கூடும்)
இனிமேல் சேனல் 4 வீடியோவை பார்த்து அழுது, தாங்கள் தமிழர் என்ற அடையாளத்தைப் புரிந்து கொண்டு என்ன கிழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. "நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா " என்னும் கவியரசின் வார்த்தைகள் தான் நியாபகம் வருகின்றன. .
உங்கள் புரிந்துணர்வுக் கு மீண்டும் நன்றி.
நீ தமிழன், நான் தமிழன், 'நாம் தமிழர்'.[/ஃஉஒடெ]
வணங்காமுடி, நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.. இன்னும் எத்தனை நாளுக்கு நாம் திராவிடன் என்னும் பொய்ச் சொல்லுக்கு நம்பி அடிமைப்பட்டு இருக்கப் போகிறோம்?
One of Mr MKs friends in Madurai is my friend , I told him a few years back , this Dravidan Aryan game will be seen through by the real Tamilians in maximum about ten years time , he said Stalin & Dayanidhi Maran will make sure that they will rule Tamil Nadu forever by suppessing such feelings cleverly , by always pointing fingers at you people ( I mean Brahmins )
However even if Tamilians understand the Dravidian game in Tamil Nadu , this will be of no use , as there are Telugus & Kannadigas in various castes in Tamil Nadu and whenver any politician like Mr.Ramadoss talks openly about this matter, very quickly they are sidelined forever.Will any Telugu or Kannada guy in Tamil Nadu ever vote for PMK ?
You guys lost your chance in 1949, whether you accept it or not , to make a real Tamil state within India. If that had been done, you will not be having this situation in Sri Lanka today, please understand ultimately only blood ties matter, as we have seen in Tamil Nadu politics in 2009.
You find Mr MK still asking Dravidian youth to unite in one banner (DMK), recently. Is AIADMK Brahmins party ?No it is a party of Mukkalathors, Kongu Vellala Gounders and Dalits.
If you yourself openly talk about Tamil nationalism in Tamil Nadu, very quickly you will also be sidelined in this State by the Dravidians.
As far as we Brahmins are concerned, already we keep a low profile as you mentioned and anyway most of us move outside the state.
But the irony is we came during Tholkappiam time , thousands of years ago to Tamil Nadu and the guys who came from AP five hundred years back are calling us Vandheris, this is finger pointing at its best !Not that we worry about it, we have got used to it for fifty years now.
Regards
KKR
I have written many times that Cho Ramaswamy and Hindu Ram are arrogant, insensitive, selfish ,totally crooked fellows and a few persons like this bring bad name to entire Tamil Brahmin community. These fellows cannot be called human beings, as even after seeing our blood brethern dying in a cruel fashion by the thousands in Sri Lanka, they have not changed.It is high time we form a Brahmin association and publicly condemn such fellows.You must be knowing I am a Brahmin from my previous posts.
Regards
kkr
Do you mean 'EGG SHELL' கோட்டை
சவுக்குக்கு நல்ல மனசு...
[ஃஉஒடெ நமெ="இட்ல்ய்வட"]என்ன இருந்தாலும் அவன் இவன் என்பது கொஞ்சம் அநாகரீகமாக தெரியல்லையா தோழர் ???[/ஃஉஒடெ]
திருத்தத்திற்கு நன்றி! நண்பர் அன்னியநிற்காக "பார்ப்பன" என்று குறிப்பிட்டேன்! பார்ப்பனியம் இன்று "பார்ப்பன" என்று தான் பலரால் அர்த்தம் கொள்ளப்படுகிறது ! தங்கள் "திராவிட - ஆரிய" கருத்து அனைவருக்கும் ஏற்புடையதே! நன்றி!
நீ தமிழன்! அதை நான் சொல்ல வேண்டியதே இல்லை! உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன்! உம்மை நினைத்து பெருமை கொள்கிறேன்!
பிரிவினை, அதன் மூலம் ஆதாயம் அடையும் நாய்கள் இருக்கவே செய்கின்றன! உங்களுடைய தமிழுணர்வையும் உங்களுடைய இன உணர்வையும் நான் நீண்ட நாட்களாக கவனித்தே உள்ளேன்! பார்பனர்களின் நிலை குறித்த தங்கள் உணர்வை வெளிப்படுத்தியத ையும் நான் அறிவேன்! உங்கள் உணர்வு நியாயமானதே! நானும் பல பார்ப்பனர்களின் நிலையை பார்த்து மிகவும் வருந்தியுள்ளேன் ! உங்களைப்போன்றோர ் பாரதியைப்போல் எம் தமிழினத்தாரே! அதில் யாருக்கும் எவ்வளவும் ஐயமில்லை!
ஆனால் அந்நியனை போன்று இன உணர்வுள்ள மொழி உணர்வுள்ள பார்ப்பனத்தமிழன ் எத்தனைப்பேர் என்று நீங்கள் சிந்தியுங்கள்! மிகவும் சொற்பமானதே! அதிலும் ஈழத்தில் நடந்தது தமிழருக்கு கிடைத்திருக்க வேண்டியது தான் என்று காத்து பட பேசியவர்கள் எத்தனையோ பேர்! இன்னும் கேவலமாக, இதுபோன்ற இரக்கமற்ற (இங்கு இன உணர்வு இரண்டாம் பட்சம்) பின்னூட்டங்கள் எத்தனை எத்தனை! தாங்கள் அறியாததா?
இது போன்ற சில பொறுப்பற்றவர்கள ின் பேச்சுக்களால் தான் பார்ப்பனத்தமிழர ்கள் மீது இந்த வெறுப்பு, தூற்றுதல் நடைபெறுகிறது என்பது என்னுடைய கருத்து! (இப்படி தூற்றுவதும் தவறே, என்பது என்னுடைய கருத்து).
நன்றி,
வாழ்க தமிழினம்!
இதை அறிந்தால் மிக வருத்தப்பட நேரிடுமே அந்த பால் கொடுக்கும் இனம்.
RSS feed for comments to this post