முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புழுதி படிந்த புறநானூற்று வீரம்.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 25 ஜூலை 2011 06:42


'வீசப்படும் கணைகளைக் கேடயம்கொண்டு தடுப்பதா​லேயே... நம்மிடம் வில்லும் அம்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்துவிடப்போவதும் இல்லை. வில்லுக்கும் அம்புக்கும் வேலை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்றால்... உடன்பிறப்பே! அப்போது நாம் கோழையாக இருக்கப்போவதில்லை!’ என்று 'முரசொலி’யில் 14-1-74 அன்று கடிதம் தீட்டியவர் கலைஞர்.

'அமைப்பு ரீதியான கழகம், ஆடை அணிந்துள்ள உடலைப்போல. அதில் ஆவி நிகர்த்தது கொள்கை. பதவி என்பது அணிகலன். அணிகலன் இன்றி வாழ முடியும். கொள்கை இல்லையேல், ஆவி இல்லை. ஆடை இல்லையேல், மானம் போகும்!’ என்று 6-1-76 முரசொலியில் பொருள் பொதிந்த விளக்கம் தந்த அரசியல் வித்தகர் கலைஞர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதுதான், ஈழத்தில் எம் தமிழர் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டனர்; வாய் திறந்து சொல்ல​வோ, ஏடெடுத்து எழுதவோ முடியாத வன்கொடுமைகளுக்கு ஆளாகி அன்றாடம் அல்லலுற்று அலைக்கழிக்கப்பட்டனர். நம் இனத்தை ஈழத்தில் அழிக்க எல்லா வகையிலும் இலங்கை ராஜபக்ஷே சகோதரர்களுக்கு இந்திய அரசு வெளிப்படையாகத் துணை நின்றது. உலகம் முழுவதும் உருக்குலைந்து விழி நீர் வழிய நின்ற தமிழர்கள், 'கலைஞரின் சாணக்கிய வியூகத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு, இன அழிவு தடுக்கப்பட்டுவிடும்!’ என்று நம்பிக்கையுடன் கோபாலபுரத்தின் திசை நோக்கித் தவம்கிடந்தனர். கலைஞரோ காந்தியிடம் இருந்த குரங்குச் சிலைபோல், கண் மூடி, காதடைத்து, வாய் பொத்தி, மௌனத் தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

மௌனத் தவம் இருந்த கலைஞரின் மனவெளியில் 27 ஏப்ரல், 2009 அன்று புலர்காலைப் பொழுதில்,

இளஞ்சூரியன் கதிர் பரப்பும் நேரத்தில் மகாத்மா காந்தி தரிசனம் தந்தார். உண்ணாவிரத ஆயுதத்தை மத்திய அரசுக்கு எதிராக ஏந்தும்படிப் பரிந்துரைத்தார். கலைஞர் காரில் ஏறி, கடற்கரையில் கண் மூடி உறங்கும் அண்ணா சமாதிக்கு அருகில் வந்து இறங்கினார். எதிரே கடலலைகள் எழுப்பிய ஆரவாரக் குரல் காற்றின் மீது அமர்ந்து கலைஞரின் காதுகளில் நுழைந்தது. 'ஈழத் தமிழரின் கண்ணீரில்தான் கடல் நீர் உப்பானது!’ என்று அண்ணா சொன்னதை அது கலைஞருக்கு நினைவுபடுத்தியது. மகாத்மா ஒரு பக்கம், அண்ணா மறுபக்கம் கலைஞரின் நெஞ்சில் நிழலாடினர். அவ்வளவுதான். ஈழத்தில் போர் நிற்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கலைஞர் அறிவித்தார். வில்லுக்கும் அம்புக்கும் முதல்வர் கலைஞர் அகிம்சை வடிவில் வேலை கொடுக்க முடிவெடுத்துவிட்டார் என்ற செய்தி ஊடகங்கள் உதவியால் உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. கோட்டைக்காக அல்ல, கொள்கைக்காகப் பிறந்தவர் கலைஞர் என்று தமிழினம் தாளாத மகிழ்ச்சியில் புகழ் மாலை சூட்டி, பூரித்துப்போனது. இந்து - முஸ்லிம் ரத்தப் புனலைத் தடுத்து நிறுத்த, காந்தி தன்னுடைய 78-வது வயதில் உண்ணாவிரதம் இருந்தார். எங்கள் கலைஞரோ, ஈழத் தமிழரின் குருதி குடிக்கும் சிங்கள ராணுவப் போரை நிறுத்தத் தன் 86-வது வயதில், 'இருப்பது ஓர் உயிர். அது போகப்போவதும் ஒரு முறைதான். அந்த உயிர் என் இனம் காக்கப் போகட்டும்!’ என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுவிட்டார் என்று மக்கள் மாய்ந்து மாய்ந்து பேசியபடி மெரினா கடற்கரைக்குப் புறப்பட்டனர்.

 

அண்ணா சமாதிக்கு அருகில் பந்தல் விரிந்தது. மெத்தை, தலையணை, கட்டில் வந்து சேர்ந்தது. கடற்காற்றின் வெம்மையில் வியர்வை வழியாதிருக்க ஏர் கூலர்கள் குளிரூட்டத் தொடங்கின. குடும்ப உறவுகள் சோகத்துடன் சுற்றிச் சூழ்ந்தன. முதல்வர் கலைஞர் கண்களில் படுவதற்காகப் பொய்யான சோகத்தை முகத்தில் பூசியபடி அமைச்சர் குழாமும், அதிகார வர்க்கமும், பாராட்டிப் பாடுவதற்குப் பல்லவியும் சரணமும் சிந்தையில் சேர்த்தபடி கவிஞர் கூட்டமும், பாசம் பொங்கத் திரண்டு வந்த உடன்பிறப்புகளும் அணிவகுத்தனர். கழகத்தின் மூச்சே வெற்றுப் பேச்சில்தான் என்ற கூற்றைப் பொய்யாக்காமல் ஒலி பெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது. கலைஞரின் 'தியாகம்’ குறித்துக் கட்டியங்கூறும் வாய்ப்பறைகள் வரிசையாக வாழ்த்தொலித்தன. உண்ணாவிரத முடிவு குறித்துக் கலைஞர் உணர்ச்சி நரம்புகளின் மெல்லிய முனைகளைக் கிள்ளிவிடுகிறாற்போல் தழுதழுத்த குரலில் உரையாற்றினார். தமிழ் கூறும் நல்லுலகம் அளவற்ற ஆர்வத்துடன் செவிமடல்களைத் திறந்துவைத்தது. மன்மோகன் சிங்கின் மத்திய அரசுப் புலனாய்வுத் துறை மறைந்து நின்று மௌனமாய் ஒவ்வொன்றையும் பதிவு செய்தது.

'இலங்கையில் இருந்து நல்ல செய்தி வராவிடில், என் உயிரை இலங்கைத் தமிழருக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டேன். உறக்கமற்ற பல இரவு​களைக் கழித்த நான், இன்று வைகறைப் பொழுதில் என் வாழ்வை அர்ப்பணிக்க நானாகவே சிந்தித்து இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். என் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்​களுக்கும்கூடத் தெரிவிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் நான் ஈடுபட்டதன் மூலம், இலங்கைத் தமிழரின் இன்னல்களுக்குத் தீர்வு காண முடிந்தால் மகிழ்வேன். என் இறுதி மூச்சு உள்ள வரை, நான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். 'தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார், தமிழீழம் காண உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபன் கல்லறைகளுக்குப் பக்கத்தில் என் கல்லறை அமையட்டும். இந்த உறுதிமொழியை என் தமிழின் பெயராலும், என் அரசியல் ஆசான்களான அண்ணா, பெரியார் இருவரின் பெயராலும் ஆணையிட்டு அறிவிக்கிறேன்’ என்று கலைஞர் உணர்வு ததும்ப உரைத்தபோது, கூடிய கூட்டம் கலங்கித் தவித்தது.

'இனிமேல் என் ஒவ்வோர் அடியும் என்னுடைய கல்லறையை நோக்கியே எடுத்துவைக்கப்படும். என் ஒவ்வோர் அசைவும் என் இனத்தின் முன்னேற்றத்திற்காகவே அமையும். ஒவ்வொரு துளி வியர்வையும் என் நசுக்கப்பட்ட இனத்தின் பெருமையை வளப்படுத்தும். என் கண்ணீர், ரத்தம், மூச்சுக் காற்று, எலும்பு, தசை அனைத்தும் இந்த இனத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்படும்’ என்று தன் 'நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் கலைஞர் எழுதியதையெல்லாம் தமிழினம் நினைத்து கண்ணீரில் நனைந்தது.

ஈழத் தமிழருக்கு எதிராக 1981-ல் சிங்கள ராணுவம் நடத்திய நர வேட்டையை எதிர்த்துப் போராடிச் சிறை சென்று இரு வாரங்களுக்குப் பின்பு கலைஞர் விடுதலையானதையும், இலங்கை முழுவதும் திட்டமிட்டு 1983 ஜூலையில் தமிழினம் மிக மோசமாகத் தாக்கப்பட்டதை எதிர்த்துப் பேரணி நடத்திய கலைஞர், பேராசிரியர் அன்பழகனுடன் எம்.எல்.ஏ., பதவியைத் தூக்கியெறிந்ததையும், தன்னுடைய 62-வது பிறந்த நாளில் (3-6-1986) ஈழப் போராளிகளுக்கு நிதி திரட்டியதையும் நினைவில் கொண்டுவந்த தமிழர்கள், கலைஞர் உண்ணாவிரதத்தின் மூலம் இலங்கைப் போருக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார் என்று உறுதியாக நம்பினர். உண்ணாவிரதம் எத்தனை நாட்கள் நீடிக்குமோ என்று நெஞ்சு நடுங்கினர்.

பேராசிரியர் சரசுவதி தலைமையில், ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி ம.தி.மு.க. தலைமை அலுவலகம் தாயகத்தின் வாசலில் தரையில் அமர்ந்தபடி பெண்கள் 13 நாட்கள் உடல் வருந்த, உயிர் சிதைய உண்ணா விரதம் இருந்தனர். அவர்களுக்கு ஊடக வெளிச்சம் இல்லை. ஏர் கூலர் வசதி இல்லை. அலையலையாய் மக்கள் அணி திரண்டு ஆதரவு முழக்கத்தில் ஈடுபடவில்லை. ஆனால், அவர்களிடம் உண்ணாவிரதத்தின் உண்மையான உத்வேகம் இருந்தது.  கலைஞர் தொடங்கிய உண்ணா விரதத்தில் உண்மையான உணர்வைத் தவிர, மற்ற எல்லா நாடக மேடை அம்சங்களும் நிறைந்திருந்தன. ஒரு நாடகம் அதிகப்பட்சம் மூன்று மணி நேரம் நடக்கும். கலைஞர் கடைப்பிடித்த உண்ணா விரதம் சரியாக மூன்று மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இருந்து கலைஞருக்குத் தொலைபேசியில் போர் நிறுத்தச் செய்தி வந்து சேர்ந்ததாம். சோகத்தின் சுவடு அழிந்து, மகிழ்ச்சியால் முகம் மலர, எழுந்து மெத்தையில் அமர்ந்த கலைஞர் ஒலிபெருக்கியில் போர் நிறுத்தம் குறித்துப் பிரகடனம் செய்தார். கூடியிருந்த கூட்டம் கலைஞரின் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு ஆர்ப்பரித்தது. தமிழருக்காகத் தண்டவாளத்தில் தலைவைத்த தீரத்துடன், பாளையங்கோட்டைச் சிறையில் தனிமைத் தவம் இருந்த தியாகத்துடன், ஈழத் தமிழருக்காக 3 மணி நேரம் உண்ணாமல் இருந்த உயரிய தியாகமும் கலைஞரின் வீர வரலாற்றில் நீங்கா இடத்தைத் தேடிக்கொண்டது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு​விட்டதாக அக மகிழ்வுடன் அறிவித்து​விட்டு அண்ணா சமாதியில் இருந்து கலை​ஞர் புறப்பட்டார். கல்லறைக்குள் இருந்த அண்ணாவின் இதயம் இந்த அரசியல் நாடகம் கண்டு அதிர்ந்தது. கலங்கரை விளக்கத்துக்குப் பக்கத்தில் நின்றிருக்கும் காந்தியின் சிலை கண்ணீர் வடித்தது. ஈழத்தில் போர் முன்பைவிட உக்கிரமாக முடுக்கிவிடப்பட்டது. 'நீங்கள் அறிவித்தபடி, போர் ஈழத்தில் இன்னும் நிற்கவில்லையே?’ என்று நிருபர்கள் கேட்டபோது, 'மழை நின்ற பின்பும் தூவானம் தொடரும்...’ என்று கவிதை நயத்துடன் கலைஞர் குறிப்பிட்டார். கலைஞர் வருணித்த 'தூவானம்’ ஒரே நாளில் எம் குலத் தமிழரில் 40 ஆயிரம் பேரை முள்ளி வாய்க்காலில் அழித்தொழித்து ஊழிக் கூத்தாடியது. ஒரு லட்சம் உயிர்களைப் பலிவாங்கியது. மூன்று லட்சம் தமிழர்களை முள் வேலிக்குள் முடக்கியது.

கொள்கை... ஆடை; பதவி... அணிகலன் என்று எழுதியவர் இன்று இரண்டையும் இழந்து நிற்கிறார். 'எதிர்காலம் வீர வரலாறுகளை மறப்ப​தில்லை’ என்று 1-9-74 அன்று முரசொலியில் கலைஞர் எழுதினார். உண்மைதான். எதிர்காலம் வீர வரலாறுகளையும் மறப்பதில்லை; இனத் துரோகங்களையும் மறைப்பது இல்லை!

 

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
+6 #18 Bala_the Broadcaster 2011-07-27 18:00
என்ன செய்ய.. அரசவைக் கவிஞராக அமர்த்தியிருக்க வேண்டியவரை, அரசாளும் அமைச்சராக ஆக்கியதுதான் பெரும் பிரச்சினையாகித் தொலைத்துவிட்டது ..வாய் மட்டும் இல்லாட்டி கருணாநிதியை நாய் தூக்கிட்டுப் போயிருக்கும்... :lol: :lol: :lol:
Quote
 
 
+2 #17 KCR 2011-07-27 08:01
எப்படி இந்த கட்டுரை மட்ரும் வாசகர் பதிவுகலை கருனானிதியை படிக்க வைப்பது? கன்டிப்பாக இந்த ராட்சசன் இதை படிக்க வென்டும்
Quote
 
 
+14 #16 G.K.நாடார் 2011-07-26 17:39
கொத்து கொத்தாய் விழுந்தது
குண்டுகள் மட்டுமல்ல

என் தமிழீழ மக்களின் உடலும் தான்

உடல் சிதைந்து, கை இழந்து

கால் இழந்து, கருவிழந்து

கடைசியில் உயிரிழந்து குருதி சேற்றில்

விழும் போது மனது நினைக்கிறது

கடவுளே கருணை காட்டு...

கடவுள் சொன்னார்

உனக்குத்தான் இரண்டு "கருணா" கொடுத்தேனே...

ஆம்

ஒன்று கூட இருந்து குழி பறித்த "கருணா"

மற்றொன்று

தொலைவில் இருந்து தலையில் கல்லை போட்ட

இந்த" கருணா " நிதி


பாவம் இது தமிழனின் விதி
Quote
 
 
0 #15 jos 2011-07-26 14:05
very good
Quote
 
 
+20 #14 வால்டர் வணங்காமுடி 2011-07-26 13:52
யோவ் சவுக்கு...
இனிமேலும் இந்த கருணாநிதி மூஞ்சியையோ, அல்லது கட்டுரையோ போடாத... போட்ட... மானிட்டருன்னு கூட பார்க்காம இந்த ஆளு மூஞசில காறி துப்பிடுவேன். என் மானிட்டர் கறைபட்ட பாவம் உன்னை தான் சேரும்.
Quote
 
 
+20 #13 வால்டர் வணங்காமுடி 2011-07-26 13:46
சென்ற வாரம் ஹிலாரி கிளின்டன் ஜெயலலிதாவை சந்தித்து சென்ற பிறகு, பதறிஅடித்துகொண் டு ஜெயலலிதாவை பின்பு சந்தித்தார் 'பிரசாத் காரியவம்ச' என்ற இலங்கை தூதுவர். அவர் உரையாடலின் போது ஜெயலலிதா அவர்கள் சொன்னது: "பாருங்க. நான் தேர்தலில் வெற்றிபெற இரண்டாவது முக்கிய காரணம் இலங்கை தமிழர் பிரச்சனையும், அதற்கு முந்தைய ஆட்சியின் மீது இருந்த மக்களின் அதிருப்தியும் தான். அதனால் இந்த பிரச்சனையில் கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமலோ, தமிழர்களுக்கு எதிராகவோ என்னால் தனித்து எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லியிருக்கிற ார். அதன் அடுத்த நடவடிக்கையாக 'சானல் 4'ன் 'சிறிலங்காவின் கொலைகளம்' தமிழ்படுத்தப் பட்டு, ஜெயாடீவியில் ஒளிபரப்பபட இருக்கிறது. ஆனால் பாருங்கள்... 'தமிழினத் தலைவருக்கும்' கிட்டத் தட்ட 20 சானல்கள் உள்ளன. ஒன்றில் கூட இதுபற்றி இதுவரை வாய்திறக்கவில்ல ை. எப்படி இருப்பினும், திமுக களிசடைகள் செய்திருக்க வேண்டிய ஒரு செயலை, ஜெயலலிதா தனிஒருவராய் செய்ய முன்வந்திருப்பத ு பாராட்டுக்குறிய து. வெகுவிரைவில் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக் கு எதிரான பாரதூரமான எழுச்சியை ஜெயா டீவி உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம ்.
Quote
 
 
+2 #12 Madurai Raja 2011-07-26 13:38
Quoting anniyan:
இனிமேல் என் ஒவ்வோர் அடியும் என்னுடைய கல்லறையை நோக்கியே எடுத்துவைக்கப்ப டும். ஏன்பா இன்னிக்கு என்ன படம் ப்ரீவியூ ? ஒவ்வொரு துளி வியர்வையும் என் நசுக்கப்பட்ட இனத்தின் பெருமையை வளப்படுத்தும். கொஞ்சம் ஏசி அதிகம் பண்ணுப்பா. என் ஒவ்வோர் அசைவும் என் இனத்தின் முன்னேற்றத்திற் காகவே அமையும். இந்தா, கால்பக்கம் ஒரு தலைகாணி வை..அப்ப்படியே படுத்துக்கறேன். என் கண்ணீர், ரத்தம், மூச்சுக் காற்று, எலும்பு, தசை அனைத்தும் இந்த இனத்தின் முன்னேற்றத்திற் காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட ும். சோனியாஜியோட செகரட்ரிஜியோட ப்ரெண்டு ராடியாஜி கேட்டதெல்லாம் பண்ணிடுங்க.

Wonderful sarcasm !
Quote
 
 
+23 #11 வால்டர் வணங்காமுடி 2011-07-26 13:38
கருணாநிதி (தேர்தலுக்கு முன்): "கட்சத் தீவை மீட்பது என்பது விவாதத்துக்குரி ய விச்யம்"

ஜெயலலிதா (தேர்தலுக்கு பின்): "கட்சத் தீவை மீட்க வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றபடுகிற து"

கருணாநிதி (நேற்று கோவை திமுக கூட்டத்தில்): "கட்சத் தீவை திரும்பபெற வேண்டும்".

அதாவது ஆட்சியில் இருந்தபோது மீட்காத கட்சத் தீவை, எதிர்கட்சியாக இல்லாத ஒரு சோதா திமுக கட்சி மீட்கப் போகுதாம். எப்பபவோ சுனாமி வந்துச்சு. மகராசன் 'உண்ணாவிரதம்னு' அண்ணா சமாதில படுத்தபோது சுனாமி வந்திருக்க கூடாதா...? இயற்கை கூட தமிழனுக்கு எதிராத் தான் இருக்கு.
Quote
 
 
-9 #10 iyyavu 2011-07-26 09:59
'வீசப்படும் கணைகளைக் கேடயம்கொண்டு தடுப்பதா​லேயே... நம்மிடம் வில்லும் அம்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்துவிடப்போவ தும் இல்லை. வில்லுக்கும் அம்புக்கும் வேலை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்றால்... நாம் கோழையாக இருக்கப்போவதில்
Quote
 
 
+20 #9 tamillinux 2011-07-26 09:12
இந்த நுற்றாண்டின் தமிழின துரோகி இந்த கருணாநிதி தான்.
Quote
 
 
+16 #8 veeraragavan 2011-07-25 23:17
1968 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் வந்தேறி வடுகன் கோபாலகிருட்டிண நாயுடு என்ற தெலுங்கனால் 18 மள்ளர்கள், 26 பறையர்கள் என 44 தமிழர்கள் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்க ள். இது நடந்தது அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், 44 தமிழர்களை எரித்துக் கொன்ற ஆந்திர அகதி, தெலுங்கன் கோபாலகிருட்டிண நாயுடு உள்ளிட்ட 23 கொலைகாரர்களையும ், தான் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கர் மு.கருணாநிதி திட்டமிட்டு விடுதலை செய்தார். வெண்மணி நிகழ்வீல் தீக்காயம் பட்டு உயிர் தப்பிய தேவேந்திர குல மக்களை நாகை அரசு மருத்துவனையில் நேரடியாக நலம் விசாரிப்பது போல் சென்று, அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வைத்தார் இந்த கருணாநிதி. அப்பகுதித் தேவேந்திர குல மக்கள் கம்யூனிசுடு கட்சியின் வாக்கு வங்கயி‘கத் திகழ்ந்ததால், தெலுங்கர் மு.கருணாநிதி தனது தமிழர் விரோதத்தை இவ்வாறு பழி தீர்த்துக் கொண்டார்.
Quote
 
 
+17 #7 Suresh Raja 2011-07-25 17:39
இந்த கட்டுரையை படிக்கும் போது கண்ணீர தான் வருகிறது... கேடுகெட்ட கிழவன்.
Quote
 
 
+16 #6 Ganpa 2011-07-25 10:44
உயிருமின்றி உடையுமின்றி அம்மணமாக திரியும் மானம் கெட்டவனுக்கு சரியான செருப்படி நன்றி திருமாவேலனே!
கண்பா,சிங்கப்பூ ர்
Quote
 
 
+23 #5 chozhavanthan 2011-07-25 10:05
/கலைஞர் வருணித்த 'தூவானம்’ ஒரே நாளில் எம் குலத் தமிழரில் 40 ஆயிரம் பேரை முள்ளி வாய்க்காலில் அழித்தொழித்து ஊழிக் கூத்தாடியது. ஒரு லட்சம் உயிர்களைப் பலிவாங்கியது. மூன்று லட்சம் தமிழர்களை முள் வேலிக்குள் முடக்கியது./

அட போஙகப்பா இவ்வளவு செஞ்சும் இந்த ஆளுக்கு தமிழ் நாட்டுல எல்லாரும் ஒட்டு போட்டு எம் பி தேர்தல்ல ஜெயிக்க வச்சிட்டாஙக.. மிக பெரிய ஹிமாலய ஊழல் எல்லாம் செய்ய வச்சிட்டஙக
Quote
 
 
+24 #4 Tamizh magan 2011-07-25 09:40
உண்மைதான். எதிர்காலம் வீர வரலாறுகளையும் மறப்பதில்லை; இனத் துரோகங்களையும் மறைப்பது இல்லை!
Quote
 
 
+9 #3 Suresh Ramasamy 2011-07-25 09:10
Thanks for sharing this powerful,hard hitting article.
Quote
 
 
+30 #2 vvn 2011-07-25 09:05
கண்ணுக்கு தெரியாத அலைகற்றை காசுக்காக தன் இனத்தையே பிணகுழியில் தள்ளியவர்களுக்க ு துணை போனவன்..இவன் ஒரு பிணம் தின்னி..
Quote
 
 
+32 #1 anniyan 2011-07-25 08:18
இனிமேல் என் ஒவ்வோர் அடியும் என்னுடைய கல்லறையை நோக்கியே எடுத்துவைக்கப்ப டும். ஏன்பா இன்னிக்கு என்ன படம் ப்ரீவியூ ? ஒவ்வொரு துளி வியர்வையும் என் நசுக்கப்பட்ட இனத்தின் பெருமையை வளப்படுத்தும். கொஞ்சம் ஏசி அதிகம் பண்ணுப்பா. என் ஒவ்வோர் அசைவும் என் இனத்தின் முன்னேற்றத்திற் காகவே அமையும். இந்தா, கால்பக்கம் ஒரு தலைகாணி வை..அப்ப்படியே படுத்துக்கறேன். என் கண்ணீர், ரத்தம், மூச்சுக் காற்று, எலும்பு, தசை அனைத்தும் இந்த இனத்தின் முன்னேற்றத்திற் காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட ும். சோனியாஜியோட செகரட்ரிஜியோட ப்ரெண்டு ராடியாஜி கேட்டதெல்லாம் பண்ணிடுங்க.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 33 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1892
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24264
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237083
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759202