|
மத்தியில் ஆளும் மன்மோகன் சிங்கின் அரசு போன்ற மானங்கெட்ட அரசை உலகில் எங்குமே பார்க்க முடியாது போலிருக்கிறது.

சேனல் 4ன் ஆவணப்படம், உலகின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. கண்டவர் மனதை கதற வைத்திருக்கிறது. ஆனாலும், இலங்கையின் இந்தப் போருக்கு உதவி செய்து தன் கரங்களில் ரத்தத்தோடு இருக்கும் மத்திய அரசாங்கம் மவுனம் சாதிக்கிறது.
இலங்கையிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும், அமெரிக்க அரசாங்கத்தின் காங்கிரஸ் கமிட்டி, இலங்கை மீது உள்ள போர்க்குற்றங்களுக்காக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. அருகில் உள்ள, வல்லரசு ஆக வேண்டும் என்ற நப்பாசை உள்ள மத்திய அரசாங்கமோ, திருடனுக்கு தேள் கொட்டியது போல கனத்த மவுனத்தோடு இருக்கிறது.
இது மட்டுமல்ல, ஊழலுக்கு மேல் ஊழலாக புற்றீசல் போல கிளம்பியிருக்கும் புகார்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், கர்நாடகத்தில் பிஜேபியின் ஊழல், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் ஊழல் என்று சாவகாசமாக சவடால் பேசிக் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, ஊழல், பணவீக்கம், கோஷ்டி மோதல், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி என்று அனைத்து பக்கங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் அரசாங்கம்.
ஆனால் காங்கிரசின் நல்ல நேரம், பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி, சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக் கொண்டு இருக்கிறது. ஆட்சியில் இல்லாத போதே அக்கட்சியின் கோஷ்டி மோதலால் நிலைகுலைந்து எழுந்திருக்க முடியாமல் இருக்கிறது.

இது தவிரவும் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தால் பல முறை கண்டிக்கப் பட்டு வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றி ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அப்போது, வேலைக்குச் செல்லாமல், வீட்டு வேலையில் இருக்கும் பெண்களை, பிச்சைக்காரர்கள், விலை மகளிர், சிறைக் கைதிகள் வரிசையில், பொருளாதார ரீதியாக பயனற்றவர்கள் என்று வகைப்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. “மக்கட் தொகை கணக்கெடுப்பில் இந்த பாரபட்சம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சமைப்பது, பாத்திரம் கழுவுவது, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது, தண்ணீர் சேகரிப்பது, சுள்ளி பொறுக்குவது போன்ற வேலைகளைச் செய்யும் பெண்களை பிச்சைக்காரர்களோடு வகைப்படுத்தப் பட்டுள்ளனர். வீட்டு வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலைகளை செய்வதன் மூலம், அலுவலகத்தில் சென்று வேலை பார்க்கும் பெண்கள் அங்கு செலவிடும் நேரத்தை வீட்டில் செலவிடுகின்றனர். அரசு கடைபிடித்துள்ள இது போன்ற பாரபட்சமே, அவர்களை சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக ஒடுக்கி, வறுமையில் வைததிருப்பதற்கான காரணம்” என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.
ஆகஸ்ட் மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவோடு ஒரு நாளைக் கழிக்கும் ஒரு தேசத்தில், உணவு தானியங்கள் கெட்டுப் போக அனுமதிப்பது, கிரிமினல் குற்றமல்லவா என்று கேள்வி எழுப்பி விட்டு, இது போல வீணாகும் தானியங்களை வீணாகும் முன்பாக ஏழை மக்களுக்கு வழங்கவும் என்று கூறியது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த உணவு அமைச்சர் ஷரத் பவார், உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை ஏற்க முடியாது என்றார். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, உச்ச நீதிமன்றம், இது எங்களது ஆலோசனை அல்ல. உத்தரவு. உங்கள் அமைச்சரிடம் இது உத்தரவு என்று சொல்லுங்கள் என்று கூறியது.
அக்டோபர் 2010ல், மற்றொரு வழக்கில், பணம் இல்லாமல் எதுவுமே இந்நாட்டில் நகராது என்று தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும், டி.எஸ் தாக்கூர் ஆகியோர். நீதிபதிகள் கிண்டலாக, “பேசாமல் ஊழலை சட்டபூர்வமாக, இது இதற்கு இவ்வளவு கட்டணம் என்று அறிவித்து விட்டால் என்ன ?” என்றும் கேட்டு விட்டு, ஒரு மனிதனின் வழக்கை முடிப்பதற்கு 2500 ரூபாய் என்று அறிவித்து விட்டால், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக தெரியும் அல்லவா ? பேரம் பேச வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா ? அரசு ஊழியர்களையும் குறை சொல்ல முடியாது. பண வீக்கத்தை சமாளிக்க வேண்டுமல்லவா ? என்று கிண்டலாக கேட்ட நீதிபதிகள், நாட்டில் ஊழல் கடுமையாக பெருகி விட்டது. குறிப்பாக, வருமான வரித் துறை போன்ற வரி விதிக்கும் துறைகளில் ஊழல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது என்றனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு நவம்பர் 2010ல் விசாரணைக்கு வந்த போது, 11 மாத காலமாக சுப்ரமணிய சுவாமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மன்மோகன் சிங்கின் நடவடிக்கையை கண்டித்த உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது, கவலை அளிக்கிறது என்றனர். மூன்று மாதங்களுக்குள் அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால் 11 மாதம் என்பது மிக நீண்ட காலம் என்றனர் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர்.
ஜனவரி 2011ல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இழப்பு என்று சொல்லுவது, முழுக்க முழுக்க தவறானது. அடிப்படை இல்லாதது என்றும், ஜீரோ லாஸ் என்றும் கூறிய கருத்துக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தது உச்ச நீதிமன்றம். அமைச்சரின் இந்தக் கருத்த துரதிருஷ்ட வசமானது. அமைச்சர் என்பவர் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியது. கூறியதோடு அல்லாமல், இது போன்ற எந்தக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளாமல், சிபிஐ தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறிய அன்றே தன் பதவியை கபில் சிபல் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்யும் காரியமல்லவா ?

மத்திய அரசுக்கு மிகப் பெரிய அவமானமாக அமைந்தது, மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸின் நியமனத்தை ரத்து செய்தது தான். தாமஸின் நியமனம் சரியே என்று வெட்டியாக வறட்டுத் தனமாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மன்மோகன் அரசுக்கு பெரும் பின்னடைவாக அது அமைந்தது. பாமாயில் இறக்குமதி ஊழலில் 8வது குற்றவாளியாக, குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் பட்டிருந்த தாமஸை எப்படி ஊழல் ஒழிப்பு ஆணையராக்க முடியும் என்று சங்கடமான பல கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம்.
பிப்ரவரி 2011ல் அமர் சிங்கின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இது போல சட்டவிரோதமாக ஒருவர் உரையாடலை ஒட்டுக் கேட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைசென்சுகளை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. “ஒட்டுக் கேட்க வேண்டும் என்று அனுப்பப் பட்ட கடிதத்தில் அத்தனை தவறுகள் உள்ளது வெளிப்படையாக தெரிகிறதே… உடனடியாக அந்நிறுவனத்தின் லைசென்ஸை ரத்து செய்திருக்க வேண்டாமா ? யாருடைய உரையாடல்களை வேண்டுமானாலும் ஒருவர் ஒட்டுக் கேட்க முடியும் என்றால் எவ்வளவு ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதைப் பாருங்கள். எவ்வளவு ஒரு மோசமான சூழல் ஏற்பட்டு விட்டது. இவ்வளவு ஒரு முக்கியமான ஒரு விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி விட்டது. நீங்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து இதைச் செய்கிறீர்கள். நீதிமன்றம் தான் உங்கள் எல்லாருக்கும் இளப்பமாகத் தோன்றுகிறது” என்று கடுமையான கருத்துக்களை பதிவு செய்தனர்.
சமீபத்தில் இந்த மாதம், நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென்று அமைக்கப் பட்ட சிறப்பு காவல்படையை கலைக்க உத்தரவிட்டும், உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை மத்திய அரசு மீதும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.
கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டும் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது, மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி. ஆனாலும், சூடு சொரணையற்ற அரசு, அந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்றுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறது மத்திய அரசு என்பதையே காட்டுகிறது.
கண்மூடித்தனமாக பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றி நடத்தர ஏழை மக்களை மோசமான வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது மத்திய அரசு.

எதிர்க்கட்சியான இருக்கும் பிஜேபி கூடாரம் கல கலத்துப் போய் இருக்கும் சூழலில், மூன்றாவது அணி அமைய வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையிலும், கூட்டணிக் கட்சிகளை ஊழல் புகாரில் சிக்க வைத்து பலவீனமாக்கி வேறு வழியில்லாத காரணத்தால் இன்று ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
பிஜேபி கட்சியோ, இந்துத்வாவா இல்லையா ? ஊழல் எதிர்ப்பா இல்லையா ? கட்சி இருக்கிறதா இல்லையா ? ஆர்எஸ்எஸ் பேச்சைக் கேட்பதா இல்லையா ? என்ற குழப்பத்திலே ஆழ்ந்து கொண்டிருக்கும் போது, அவ்வப்போது தலை தூக்குகிறது எடியூரப்பாவின் பிரச்சினை. ஊழலில் ஊறித் திளைத்து, முடை நாற்றம் எடுக்கும் அளவுக்கு கர்நாடக பிஜேபி அரசு நாறிக் கொண்டிருந்தாலும், ஒரு மாநில முதலமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க வக்கில்லாத நிலையில் தான் பிஜேபி இருக்கிறது. கர்நாடகத்தின் சுரங்க வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ரெட்டி சகோதரர்களின் ஊழலை ஆவணத்தோடு கர்நாடக லோக் ஆயுக்தா அம்பலப்படுத்தினாலும், அந்த ஊழலைப் பற்றிப் பேச மாட்டேன், ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றித் தான் பேசுவேன் என்று இரட்டை வேடம் போட்டு வருகிறது பிஜேபி. ஊழலை மூடி மறைப்பதில், காங்கிரசுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை, டெஹல்கா விவகாரத்தை பிஜேபி கையாண்ட விதம் வெளிப்படுத்தியது.
என்னை கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பிஜேபி கதறினாலும், எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும், பிஜேபியை சேர்த்துக் கொள்ள தயாரில்லாத ஒரு நிலையில், அனாதையாக அரற்றிக் கொண்டிருக்கிறது பிஜேபி. அதனால் 2016ல் கூட, பிஜேபி, காங்கிரஸ் அரசை வீழ்த்தும் என்ற நம்பிக்கை இல்லை. மேலும், பிஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்.


இந்நிலையில் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த இடது சாரிகள், மக்கள் மனதை சரியாக கவனிக்கத் தவறி, எந்த முதலாளித்துவத்தை எதிர்ப்பதை கொள்கையாக வைத்திருந்தார்களோ, அந்த முதலாளியின் காலை வருடி, ஏழை உழைப்பாளி மக்களை போலீசை விட்டு அடித்தார்கள். ரத்தன் டாடாவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து, உழைப்பாளி மக்களை தாக்கியதன் விளைவே, 30 ஆண்டு கால இடது சாரிகளின் தகர்ந்த கோட்டை.

ஆனாலும், இன்று நம்பிக்கை அளிக்கும் சக்தியாக விளங்குவது, இடது சாரிகள் மட்டுமே. இந்த இடது சாரிகள் இன்று மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், எதிர்க்கட்சியாக இருப்பது, அவர்கள் சுயபரிசோதனை மேற்கொண்டு, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டு எழுந்து வருவார்கள் என்பதே ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பார்ப்பு.
அவ்வாறு எழுந்து வரும் இடது சாரிகள், சோனியா காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவிற்கும் ஒரு மாற்றாக உருவாகும், மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
ஈழத் தமிழரின் ரத்தம் தோய்ந்த கைகளைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை கருவறுக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழர்களுக்கு இந்த காங்கிரஸ் செய்த துரோகத்தை மறக்காமல், நினைவில் வைத்திருந்து, தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை துடைத்து எறிய வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று சொன்னால் அடி விழும் என்று அஞ்சும் நிலையை உருவாக்க வேண்டும். இந்த காங்கிரஸ் கட்சியை பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டிருக்கும், திமுகவை அந்த காங்கிரஸ் கட்சியே அழித்து ஒழித்து விடும். மீதம் உள்ள வேலையை கருணாநிதி செய்து முடிப்பார். அதனால் திமுக பற்றி கவலைப் படத் தேவையில்லை.
காங்கிரஸ் ஒழிக்கப் படும் நாளே, முள்ளிவாய்க்காலில் உயிரை விட்டவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
|
Comments
"நாய் வாழ நிமித்த முடியுமா?..."
பஜ்ரங் தல்லை தீவிரவாத அமைப்பு என்று சொல்லும் போதே இந்த செய்தியின் உள்னோக்கம் புரிகிறது.. நியாயத் தராசு சொன்னதை போல நன்றாக விசாரித்து பார்த்தால் விவரம் தெழிவாகும்..[/ஃஉஒடெ]
அன்பர் Rajesh11 அவர்களே,
பஜ்ரங் தள் தீவிரவாத (extremist) அமைப்புதான். தங்கள் கோட்பாட்டை தீவிரமாக அமல் படுத்த விரும்பும் இயக்கம்தான். RSS, முஸ்லிம் லீக், நக்சல், வுல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவில் இருக்கின்றன. அல்-ஃக்வைதா, லஷ்க்ர்-ஈ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா, அல்-உம்மா, இந்தியன் முஜாஹிதீன், SIMI போன்ற பயங்கரவாத (terrorist) அமைப்புகளே பல இந்தியாவில் உள்ள போது பஜ்ரங் தள் இருப்பதில் என்ன தவறு.
ஆகையால் யாராவது 'பஜ்ரங் தள் தீவிரவாத அமைப்பு' என்று கூறினால் வருத்தப் பட வேண்டாம். I.N.A. கூட தீவிரவாத அமைப்புதான் என்று பதிலளித்துவிடுங ்கள்.
பெங்களூருவில் நைட்-க்ளப்களில் அராஜகம் செய்தார்கள் என்று சொன்னால், இளைய சமுதாயத்தை முடக்கி, நாட்டை சூனியம் ஆக்க அனுமதிப்பதைவிட விட அராஜகம் செய்வதே மேல் என திருப்பிச் சொல்லுங்கள்.
புஷ்ரா சம்பவம்: பொதுவாக வெவ்வேறு மதத்தினர் காதல் திருமணம் செய்யும் போது கணவன் மதத்திற்கு மனைவி மாறுவதை நான் கண்டிருக்கிறேன் . ஆனால் இங்கே, பிரசாந்த் செட்டி, புஷ்ராவை மணப்பதற்க்காக இசுலாமியராக மதம் மாறியதாகக் கூறப் பட்டிருக்கிறது. இதில் ஏதோ விவகாரம் அடங்கியிருக்கிற து என்பதாலேயே இந்த புஷ்ரா சம்பவத்தை தீர விசாரிக்க வேண்டும் எனக் கூறினேன். எது எப்படி இருப்பீனும் கட்டாயத்தின் பேரில் மதம் மாற்றம் செய்வது தவரானதுவே.
I may be a 'fanatic' and 'foolish' because I support Mr.Narendra Modi who,
1. has been elected by the same Gujarat people repeatedly,
2. has been and is being supported by the same Gujarati Muslims (please refer to the election results in the Muslim dominated areas of Gujarat in particular),
3. is being 'the most hatred', by the heavenly Congress men and the Communist comrades,
4. had been endorsed by the social reformer Mr. Anna Hazare (but had gone back due to political reasons),
5. more importantly, has been making the Gujarat, a vibrant state which is thriving for its excellence in all the spectrums.
Dear all,
In the independant India, we have come come across mass riots in many instances. While in some instances the then governments have taken aggressive foot, in some other instances the goverments have taken defensive foot. In all the instances, the Goverments had been criticised strongly. In Gujarat riot case, which happened after the suspicious accident which killed ~55 swayam/kar sevaks, Narendra Modi had taken a defensive foot which had been politically convienient at that point of time. By the way, I dont say that Narendra Modi is IMMACULATE but, waiting for an immaculate person is hypothetical. Are we going to wait or support the best amongst available.
"All these right wing parties spew venom and are primitive in their mindset. It's an irony that fools like Niyayatharasu are supporting this bastard party. Narendra Modi is culpable under Genocidal crime. And yet he goes scottfree."
Oh is it ? One more person brainwashed by Media propoganda.. UPA is ruling from 2004. Why couldnt they prove a single thing against Modi ? If they have any proof, they could have filed charges against him long back. Even the supreme court appointed SIT couldnt find anything against him. And still, our seculars and liberals will keep shouting against him..
For a change, go through the following about the secular 'activists' and their claims..
http://dailypioneer.com/356020/Teesta-seeks-anticipatory-bail-in-false-affidavit-case.html
http://www.deccanherald.com/content/58606/naroda-riots-case-doc-says.html
http://www.sandeepweb.com/2009/04/14/teesta-it-hit-your-face/
"What have these people got right to rule over this country and what have they achieved so far?"
NDA's rule from 98-2004 proved that they are far better than congress in every aspect.. they are not perfect, but so much better in terms of governance and corruption.. Roads were constructed 10 times faster, a lot of development in infrastructure etc. their rule in Gujarat, MP, Bihar etc have proved they achieve better results than any of the congress ruled states..
If you want a 100% honest Agmark branded politician, keep dreaming.. there won;t be one.. In the mean time, sane people will chose the 'lesser evil' than the monster congress..
"நாய் வாழ நிமித்த முடியுமா?..."
பஜ்ரங் தல்லை தீவிரவாத அமைப்பு என்று சொல்லும் போதே இந்த செய்தியின் உள்னோக்கம் புரிகிறது.. நியாயத் தராசு சொன்னதை போல நன்றாக விசாரித்து பார்த்தால் விவரம் தெழிவாகும்..
Saadhanai Tamizhar endraal Ivar andro ?
Congress Sonia and Mr MK did not respect even this great son of India and denied him second term Presidency.What a pity ?
I endorse your comments. Every single Tamilian should support the cause of decimating Congress, the traitor of Tamils cause, in Tamilnadu to the extent that it sh'ld be its Waterloo. But the B.J.P is also a communal party which is also to be kept away. I find here some fanatical people supporting BJP, which is not surprising because they may have links with the right wing the half-trouser clad party - RSS. All these right wing parties spew venom and are primitive in their mindset. It's an irony that fools like Niyayatharasu are supporting this bastard party. Narendra Modi is culpable under Genocidal crime. And yet he goes scottfree. Basically both the BJP & Congress are in the same category. It's only Congress is a soft-core hindutva and is disguised. What have these people got right to rule over this country and what have they achieved so far?
Then why the FUCK since 60 yrs after freedom india is a poor country, though we have abundant resource in all the fields?, As a congreess supoter please ask ur leader the KGB agent to open her mouth about where she looting our contry economy too?. I'm not a BJP activist or any other parties...
We paying tax for no reason simply blindly and madly. Take Petrol price it has been sky rocket nowdays, I dont want to live in shit under the illusion created in the name of recesion / inflation. Even Japan hit by tsunami within 3 months they are back to the stage, even though they do farming in ships, think ABOUT US...
Kattayap paduththi yaar madha maatram seidhaalum sariyalla. Ingae 'Kattaayap paduththi' enbadhu uyir bayam mattumalla panam koduththu aasai vaarththai kooruvadhuvumae . BJP aalaadha mattra maanilangalil aenaiyor seivadhaiyum marakkak koodaathu.
Indhap penn vivakaaraththil kooda, hindu mathaththil irundhu oru muslimai manappadharkkaa ga madham maariyaver pol therikiradhu, satru porumaiyudan visaariththup paarththaal pala unmaigal velivarum. adhai viduththu 'NAAY VAAL' endru kooruvadhu sariyaagadhu.
What about the following in Karnataka, Rajesh?... நாய் வாழ நிமித்த முடியுமா?...
"கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக முஸ்லிம் பெண் புகார்"
http://www.inneram.com/2011072017972/muslim-woman-accuses-bajrang-dal-of-forced-conversion-urges-igp-to-take-action
Quoting rameshh:
எதிரியின் எதிரி நமது நண்பன் .
பிஜேபி எதிர்ப்பு நிலை மாற வேண்டும்
மா[/ஃஉஒடெ]
நீங்கள் பிஜேபிக்கு ஜால்ரா அடியுங்கள். ஆனால் போகிறபோக்கில் தமிழ் ஈழம் அமைய பிஜேபிக்கு வாக்களிக்கயுங்க ள் என்ற உங்கள் காமெடி தான் கேவலமாக உள்ளது. உங்களுக்கு சிலவற்றை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன ். 1) யாழ்கோட்டையில் கிட்டத் தட்ட 20000 சிஙகள இராணுவ ஆட்கள் புலிகளினால் சுற்றிவளைக்கப் பட்டபோது, அப்போதைய சிஙகள அதிபர்,அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயிடம் உதவி கேட்டார். உடனே வாஜ்பாய் தேசிய தலைவருக்கு அனுப்பிய பதில் "அவர்களை விட்டுவிடு. இல்லை என்றால் இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள தயாராய் இரு" 2) 2009ல் போர் உக்கிரமாக நடந்தபோது கூட பிஜேபி தமிழீழத்தை அங்கீகரிக்க முடியாது, ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப் பட்வேண்டும் என்று தான் தன் நிலையை வெளியிட்டது. ஆக, பிஜெபி, காங்கிரஸ் இரண்டுமே ஒன்று தான்.
"ஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்."
Are you serious ? BJP is ruling in many states.. Is it butchering minorities there ? Asking for POTA when terror attacks keep happening is not 'communal' you seculars.. No wonder that congress has managed to rule this country for so long....
"ஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்."
Are you serious ? BJP is ruling in many states.. Is it butchering minorities there ? Asking for POTA when terror attacks keep happening is not 'communal' you seculars.. No wonder that congress has managed to rule this country for so long....
காரணங்கள் இதோ ..
ஜனாதிபதி தகுதி :
--------------------
முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
குற்ற பின்னணி உடையவர்.
பிரதமர் :
----------
முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர்.
இதோ சில தெரியதுகள் ...
1) 2க் ஊழலா .. தெரியாது
2) சொம்மென் நெஅல்த் கமெச் ஊழலா .. தெரியாது
3) ஆடர்ஷ் ஊழலா .. தெரியாது
4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கேட்டு போகிறதா ? தெரியாது.
5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.
6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.
தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.
1) மோனியோ பூந்தி
2) சு சாமி
3) ச சாமி
4) பிரேமா தாசன்
5) இஸ்ரவேல்
6) பெரியண்ணன்
7) மேலே உள்ள அனைவரும்
ப்லெஅசெ டிச்க் தெ சொர்ரெச்ட் அன்ச்நெர்.[/ஃஉஒடெ]
'சிரிக்க தெரியாதவரை' விட்டுவிட்டீங்க ...
எதிரியின் எதிரி நமது நண்பன் .
பிஜேபி எதிர்ப்பு நிலை மாற வேண்டும்
மா
எதிரியின் எதிரி நமது நண்பன் .
பிஜேபி எதிர்ப்பு நிலை மாற வேண்டும்
1) மோனியோ பூந்தி
2) சு சாமி
3) ச சாமி
4) பிரேமா தாசன்
5) இஸ்ரவேல்
6) பெரியண்ணன்
7) மேலே உள்ள அனைவரும்
Please tick the correct answer.
நேற்று லண்டன் லார்ட்ஸ் விளையாட்டு அரங்கிற்குள், இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டை பார்க்க, பஞ்சாப்பு சிங்கு ஒருவன், கத்தியோடு (குறுவாள்) உள்ளே செல்ல முயன்றானாம். ஆனால், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவனை, பாதுகாப்பு காரங்களுக்காக, அந்த சர்தார்ஜியை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்களாம். உடனே, அவன் அரங்கு வாயிலில் நின்று எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டான்.
இதை கேள்விப்பட்ட நம்ம மண்ணு மோகன் சிங்கத்துக்கு ரத்தம் எப்படி கொதித்து இருக்கும்??? மீசை எப்படி துடித்து இருக்கும்??? கோபத்தில் நரம்பு எப்படி புடைத்து இருக்கும்???
ஆனால், நம்ம மண்ணு கோபப்பட்டாரா??? ம்ஹூம்..... இல்லவே இல்லையே!!! எவ்ளோ நல்லவரு?? அவரைப் பற்றி இப்படி தப்பாக எழுதுகிறாரே??
ஈழத் தமிழர்களின் அழு குரல் அவருக்கு காதில் விழவில்லை என்று கோபப்படுகிறீர்க ளே!!! அவருக்கு எப்படியா கேட்கும்?? எப்படி கேட்கும்?? அவர்தான் பத்து மீட்டர் துணியை வைத்து தலையையும் - காதையும் சேர்த்து சுற்றி சுற்றி கட்டி வைத்து இருக்கிறாரே!!!! பிறகு எப்படி கேட்கும்??
இவ்வளவு பேர் இவ்வளவு திட்டுகிறோமே!! எதற்குமே கோபப்படாமல், கல்லுளி மங்கன் மாதிரி சிரித்துக் கொண்டு இருக்கிறாரே! ஏன் தெரியுமா?? அதெல்லாம் பொறுமை காரணம் கிடையாது... அவருக்கு காது கேட்காதைய்யா... காது கேட்காது....
காரணங்கள் இதோ ..
ஜனாதிபதி தகுதி :
--------------------
முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
குற்ற பின்னணி உடையவர்.
பிரதமர் :
----------
முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர்.
இதோ சில தெரியதுகள் ...
1) 2G ஊழலா .. தெரியாது
2) Commen Wealth Games ஊழலா .. தெரியாது
3) Adarsh ஊழலா .. தெரியாது
4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கேட்டு போகிறதா ? தெரியாது.
5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.
6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.
தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.
-----------------
மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.
உள்துறை அமைச்சர் :
-----------------------
வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.
முன்னாள் உள்துறை அமைச்சர் :
---------------------------------
தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.
தொலைதொடர்பு துறை :
--------------------------
முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு ). 2க் "ஜீரோ லாஸ்" என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.
விவசாய அமைச்சர் :
-------------------------
இந்த நபர் எதற்கு அமைச்சர் என்பது எல்லாருக்கும் தெரியும் (கிரிக்கெட்). உணவுக்கிடங்கில் பல்லாயிரம் டன் உணவு கெட்டுபோகிறது. ஆனால் கொள்ளை அடிப்பதிலும், கிரிக்கெட் தலைவராக இருப்பதிலும் குறியாக உள்ளான்.
இவர்களின் தலைவர் :
-----------------------
என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் பிழ்ழ விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.
-----------------------
என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் பிழ்ழ விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
-------------------------------------
பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.
முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
-----------------------------------------
இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.
கருப்பு பணம் தலைவர் :
-------------------------
இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.
பாண்டிசேரி ஆளுனர் :
----------------------
மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.
பக்கத்துக்கு மாநிலங்களில் கனிமவள கொள்ளை.
தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.
எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.
தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள்.
மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.
.
.
நீங்க வேற அவுரு தலித் வீடுகளில் அவுங்களே ஒரு வேலை சாப்பாட்டுக்கு கஞ்சியோ கூழோ வைத்திருப்பார்.அதை புடுங்கி இவன் சாப்பிடுறான்.இது எவ்வளவு இழிவான விஷயம்?
பாரதீய ஜனதா மதவாத கட்சி இல்லையாம்....நாட்டாமை தீர்ப்பை மாத்திசொல்லு.... இல்ல அநியாயத் தராசுன்னு பேர் வெச்சுக்கோ...
கபில்சிபல் : கப்பல் அந்த பக்கம் வந்தாலே பஞ்சர் ஆகிடுது அவ்வளவுதான் மீனவர்களை வேண்டும் என்றால் சோமாலிய கடற்பகுதியில் வரச்சொல்லுங்க, பிடித்து கொடுத்து விடலாம் அப்படி செஞ்சால் ஸிரே லாஸ்..
தமிழன் : யாருகிட்ட கொள்ளையர்களிடமா ? ,,#$%@&&
http://www.janataparty.org/pressdetail.asp?rowid=60
http://www.janataparty.org/letter.pdf
நாயை பாஸ்டன் ஏர்போர்ட்ல் கணக்கில் வராத டாலர்களை வைத்து இருந்ததாக அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டான். பணம் ஏது எனக்கேட்ட போது பெபெப்பே என முழித்தான் இந்த தண்டக்கருமாந்தி ரம். இவனெல்லாம் இந்தியாவின் எதிர்கால பிரதமராக வந்து 120௦ கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயம் செய்தால் என கதி ஆகும்.
பெரிய மயிறு மாதிரி உபியில் போய் கஞ்சியைக்குடித் துவிட்டு விவசாயிகளின் நண்பன் என போஸ் கொடுக்கிறான். அடிக்கிற கொள்ளையில் இவனுக்கும், இவனின் வந்தேறி ஆத்தாளுக்கும் பங்கு கொடுத்துவிட்டு, மேற்படியாக பெண்களையும், போதை மருந்துகளையும் இந்த தறுதலை நாய்க்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு ஆயிரங்கணக்கான கோடிகளை கொள்ளை அடிக்கிறார்கள்.
தலைமையில் உள்ள கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூட்டம் தான் 120 கோடி இந்திய மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. சுதந்திர நாட்டில் ஒரு நூறு கடைந்தெடுத்த அயோக்கியர்களின் அடிமைகளாக இருப்பதற்கு, ஒவ்வொரு இந்தியனும் வெட்கி தலை குனியவேண்டும். அப்படி உள்ள அயோக்கியர்களின் கொட்டத்தை தட்டிகேட்க முடியாமல் தானுண்டு தன குடும்பம் உண்டு, தொழில் உண்டு என நாம் எல்லோரும் இருந்தால், ஆங்கிலேயன் நமக்கு சுதந்திரம் கொடுக்குபோது "இந்த இந்தியர்கள் எத்தனை நாளைக்கு இந்த சுதந்திரத்தை வைத்து நன்றாக வாழ்வார்கள் என்ப்பார்க்கலாம ்" எனக் கூறிய சாபம் கூடிய விரைவில் பலித்து விடும்.
இந்த கபில் சிபல் டுபுக்கு அப்புறம் ரப்பர் வாயன் மனிஷ் திவாரி வெறி பிடித்த திக்விஜய் சிங் அப்புறம் நம்ம சிவகங்கை சீமான் ஐயோ நாடு உருப்பட்டாப்புல தான்
RSS feed for comments to this post