முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆடிய ஆட்டமென்ன ? பேசிய வார்த்தை என்ன ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 48
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011 15:32

அன்பார்ந்த உறவுகளே….   நமக்கும் ஜாபர் சேட்டுக்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பதை அறிவீர்கள். இந்த ஜாபர் சேட்டை நாம் தீவிரமாக எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் ஏற்கனவே பல முறை பதிவு செய்திருக்கிறோம். ஜாபரும், நம்மை விடாமல் என்னென்ன தொல்லைகள் செய்தார் என்பதையும் நாம் படித்திருக்கிறோம்.

 jaffer

அதிகார துஷ்பிரயோகம் என்பதன் மொத்த உருவம் ஜாபர் சேட் தான். தான் ஒரு அரசு ஊழியர் என்பதையும் மறந்து சர்வ வல்லமை பொருந்திய கடவுளைப் போல உணர்ந்தார்.   கடவுளைப் போல அதிகாரங்கள் கிடைத்தாலும், அவற்றை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்த ஜாபர் தவறினார்.

 

உளவுத்துறையின் வரலாற்றில், ஜாபரைப் போன்ற அதிகாரம் படைத்தவர்கள் யாருமே இல்லை எனும் அளவுக்கு ஜாபர் கோலோச்சிக் கொண்டிருந்தார். அவரின் அதிகாரத்திற்கு எல்லையே இல்லை என்னும் அளவுக்கு ஒரு சக்ரவர்த்தி போல தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

 

அப்படி அவருக்கு வழங்கப் பட்ட அதிகாரத்தை தனக்கு சொத்து சேர்த்துக் கொள்ளவும், அதிகார மையங்களில் உள்ளவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், அவர்கள் அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்ளவும், எதிர்ப்பவர்களை என்கவுண்டர் செய்தும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும், பிடிக்காத அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து வழக்கு போட்டும், இந்த ஜாபர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப் பட்டோரின் பட்டியல், அண்ணா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலை விட பெரியது.

 

அப்படி ஆடிய ஆட்டத்திற்குத் தான் இன்று விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜாபர் சேட். ஒரு மனிதனின் வீழ்ச்சியில் உலகமே மகிழ்வதைப் போன்ற ஒரு வேதனையான தருணம் இருக்க முடியாது. இது போன்ற மனிதனின் வீழ்ச்சியில் ஊரே மகிழ்ந்த ஒரு தருணம் என்றால், நக்கீரன் காமராஜ் வீட்டிலும், ராசா வீட்டிலும், சிபிஐ சோதனை நடத்திய போதும், தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்த போதும் தான்.

 

அதே போல இன்று ஜாபர் சேட் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை நடைபெற்றது என்ற தகவலை தெரிந்ததும், பத்திரிக்கையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது… அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

7-3

 

ஆரம்பக் கட்டத்தில் வந்த செய்திகள் ஜாபர் சேட் வீட்டோடு, காமராஜ் வீட்டிலும், ட்ராலி பாய்ஸ் பாண்டியன், விநோதன் மற்றும் கணேசன் வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகிறது என்று தான். ஆனால் பின்னால் சரிபார்த்ததில், அவ்வாறு நடைபெற வில்லை என்று தெரிய வருகிறது.

தலைமைச் செயலாளருக்கு மே 2011ல் அளிக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.

 

Jaffer_Complaint_Page_1

 

Jaffer-Complaint_Page_2

இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜாபர் சேட் மற்றும் மற்றவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120-B, 420, மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் 13 (c) மற்றும் 13 (d) மற்றும் 13 (2) ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து கீழ் கண்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

 

1)  ஜெய்சங்கர் மேற்கு மாம்பலம் (ஜாபர் சேட் பினாமி)

2)  பால்ராஜ் ஜான்சன், திருவான்மியூர்

3)  கஸ்தூரி ராஜ், அண்ணா நகர்

4)  நஜிம்முதின், எழும்பூர்

5)  பர்னாஸ் இன்டர்நேஷனல், வேப்பேரி, சென்னை

(ஆளுனர் பர்னாலாவின் மகனின் நிறுவனம்)

6)  ஜாபர் சேட் வீடு, அண்ணா நகர்

7)  துர்கா சங்கர், கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின்

மகன்

8)  லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், தி.நகர்

9)  ஜாபர் சேட்டின் மாமனார், பெரியக்குளம்

 

இந்த வழக்குகளை ஒட்டி, ஜாபர் சேட் எந்த நேரமும், பணி இடை நீக்கம் செய்ய படுவார்.

 

ஜாபர் சேட்டின் ஆணவத்தின் விளைவு என்ன தெரியுமா ? அவரின் மனைவி பர்வீன் மீதும், மகள் ஜெனிபர் மீதும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எத்தனையோ பேர் வயிற்றில் அடித்து, அவர்கள் மனதார இட்ட சாபமும், ஈழப் போரின் போது, அப்பாவித் தமிழர்களை பிடித்து செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாமில் அடைத்ததால் அவர்கள் விட்ட சாபமும், ஈழத் தமிழர்களுக்கு மருந்து கடத்துவதற்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் சேகரித்து வழங்கிய பணத்தை, அவர்களிடமிருந்து கொள்ளையடித்த சாபமும், ஈழத் தமிழருக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த ரத்த உறைகளை அழித்தற்காக விட்ட சாபமும்தான் இன்று ஜாபரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.

 cartoon-for-Jaf

ஜாபருக்கு கண்ணதாசனின் வரிகளைத் தான் நினைவூட்டத் தோன்றுகிறது.

 

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன...?

 

Comments  

 
0 #93 muthuraman 2011-08-01 18:35
இப்படி கெவலமான பொழப்பு பிழைக்கதான் இவனெல்லம் IPS oo.....nana?
Quote
 
 
-1 #92 தஞ்சை குணா 2011-08-01 12:40
சவுக்கு ஐயா, நீங்கள் நினைத்ததை சாதித்துவிட்டீர ்கள்..வாழ்த்துக்கள்..உங்கள் மீதான குற்றச்சாச்சாட் டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட ு மீண்டும் பணியமர்த்தப்பட் டால் நீங்கள் இப்போது போல் சுதந்த்திரமாக செயல்பட முடியாதே. நாங்கள் இனிமேல் சவுக்கை இப்போழுது படிக்கும் சுவாரஸ்யத்தில் வருங்காலத்தில் படிக்க முடியாதோ????
Quote
 
 
+1 #91 elango2010 2011-07-30 13:59
a long struggle will end . savukku hearts up....
continue ur job sir....
we are behind with you..
Quote
 
 
+1 #90 கலப்பு மகன் 2011-07-30 13:40
சவுக்கு கை வைத்த விஷயம் வீனாய் போகாது..அடுத்து "நக்கினார் நக்கி " க்கு ஆப்பு .....
Quote
 
 
+1 #89 Raj Venkatesa nadar 2011-07-30 02:17
sir,
I am not able to type in tamil. my engilish is also not good. please read.

Indha madiri arasanda naykalai thi mu ka ennum kollaikara kootathaiyum ninaithale thamil nadu nadungugirathu. Indha kootathukum idi aminukkum pakistanin ISI Taliban enra kootathukkum enna verupadu. ellam pinam thinnum koottam. kollayo kollai. nalla kalam dravida nado suyatchiyo kidathirundhal indha koottam tamil nattil oru pennaiyum vittirukkadu. kalaignar kudumbam poala elloraiyem pottu katti vittirukkum

Peymani paya karunanidhi vekkam ketta rascal. avan kudumbame oziyanum
Quote
 
 
+1 #88 Arunkumar 2011-07-29 14:30
அன்று பாவத்தை விதைத்திர்கள்........
இன்று அறுவடை செய்யுங்கள்....
Quote
 
 
+1 #87 மோகன் 2011-07-29 12:40
வாழ்த்துக்கள் சவுக்கு!
Quote
 
 
+3 #86 prabhakaran.v 2011-07-29 10:59
அப்படி ஆடிய ஆட்டத்திற்குத் தான் இன்று விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார ் ஜாபர் சேட். ஒரு மனிதனின் வீழ்ச்சியில் உலகமே மகிழ்வதைப் போன்ற ஒரு வேதனையான தருணம் இருக்க முடியாது. இது போன்ற மனிதனின் வீழ்ச்சியில் ஊரே மகிழ்ந்த ஒரு தருணம் என்றால், ,வீட்டிலும், சிபிஐ சோதனை நடத்திய போதும், செய்த போதும்
Quote
 
 
-2 #85 கும்பிடுறேன் சாமி 2011-07-28 20:55
இதனால் சங்கர் அடைந்த பலன் என்ன வென்று யாராலும் சொல்லமுடியவில்ல ை.ஊழல் செய்த ஜாபர் மாட்டிக்கொண்டார ் .. சரி.. ஆனால் சங்கருக்கு மீண்டும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா?
Quote
 
 
+2 #84 kitcha 2011-07-28 20:01
Mr Savukku,
Great Job sir.... you have done it..
Please enlighten us about your position on the case.
We need honest officers like you.
Quote
 
 
+3 #83 Anjan 2011-07-28 19:49
///பின்னூட்டம் இடும் நம்மில் எத்தனை பேருக்கு மேற்சொன்ன ஆட்களை வழக்கில் சிக்கவைக்க, தண்டனை வாங்கிகொடுத்து ஊழல்களை தடுக்க மன தைரியம் உள்ளது.///
நண்பரின் இந்தக் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். என்னை நானே கேட்கிறேன். நான் ஒரு சிறிய ஊழலுக்குத் தணடனை பெற்றுத் தந்திருக்கிறேன் . ஆனால் தனிப்பட்ட முறையில் அதற்குக் கொடுத்த விலை அதிகம் ஆகும்.
Quote
 
 
+4 #82 Tamil Ponnu 2011-07-28 14:38
சவுக்கு todays Dinamalar its written that Shankar from Chennai has complained to Chief secretary about Jafars undergnd work:) Neega tana athu? watever it is keep up the good work but be safe.....
Quote
 
 
+2 #81 சீனு 2011-07-28 14:32
http://thatstamil.oneindia.in/news/2011/07/28/adgp-jaffer-sait-taped-karunanidhi-his-family-members-aid0091.html
Quote
 
 
+8 #80 Melur_Kannan 2011-07-28 13:32
சவுக்கு தொடர்ந்து போராடி வெற்றி அடைந்தது போல், மற்றவர்களும் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும். அரசியல் வாதிகள் மட்டும் தான் ஊழல் வாதிகள் என்பது தவறான கருத்து. அதிகாரிகள், ஏன் பொது மக்களே ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்தால் தண்டனை இருக்க வேண்டும். இல்லையென்றால், எவனுக்கும் பயம் வராது.

ஊழல் செய்த ஜாபர் சேட் மட்டுமில்லை, அதை அனுபவிக்கும் அவர் மனைவி, குடும்பத்தாரையு ம் தண்டிக்க வேண்டும். ஊழல் பணத்தை அவர்களும், சேர்த்து தானே அனுபவிக்கிறார்க ள். அவர்களும் அதற்கு உடந்தைதானே.

இன்றைக்கு ஊழல் எல்லா இடத்திலும் பரவி விட்டது. அரசியல் வாதிகள், போலீஸ் மட்டும் இல்லை. இதைப்பற்றி தான் அதிகம் பத்திரிக்கையில் வருகிறது. நீதித்துறை ஊழல் மிக மோசம். அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இருப்பதால், இது வெளியில் வருவதில்லை. பத்திரப்பதிவு துறையில் கூட மிக மோசமாக ஊழல் நடக்கிறது. பத்திரிக்கை துறையிலும் ஊழல் நடக்கிறது.

தமிழக மக்கள் இந்த முறை திமுகவின் ஊழலுக்கு ஓட்டு போட்டது வரவேற்க கூடியது. அதிமுக இதே தவறை திருப்ப செய்ய கூடாது.
Quote
 
 
+3 #79 கரிகாலன் 2011-07-28 13:24
வாழ்த்துக்கள் சவுக்கு!
சாதித்து விட்டீர்கள்

சாதனைகள் மென்மேலும் தொடர மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
Quote
 
 
+8 #78 உங்களில் ஒருவன் 2011-07-28 13:22
சவுக்கு அவர்களே,
ஒரு சிறு சந்தேகம். நேற்று(27-7-11) ஜாபர் சேட் இல்லத்தில் நடத்திய ரெய்டில் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும ் பேசிய உரையாடலை
ஒட்டு கேட்ட CD இருந்ததாகவும் லேப்டோப்களையும் கைப்பற்றியதாக செய்தி வெளியாகி உள்ளது. கண்டிப்பாக இவ்வளவு ஆவணங்களை
வெளிப்படையாக வைக்குமளவுக்கு ஜாபர் முட்டாள் இல்லை. இதை பற்றி தங்கள் விளக்கங்களை எதிர்பார்க்கிறே ன். முடிந்தால் ஜாபர் வீட்டில்
நடந்த ரெயிட் பற்றி ஒரு பதிவு போடவும். நன்றி.
Quote
 
 
+3 #77 vimalra 2011-07-28 12:54
ஜாபர் கைது எப்போது சவுக்கு sir
Quote
 
 
+2 #76 Thiruvalluvar 2011-07-28 09:45
Great Work. Keep it up
Quote
 
 
+5 #75 VIJAY_USA 2011-07-28 01:24
ஜாபர் நீ இனிமேல் டாபர்!
Quote
 
 
+12 #74 Vaedhampudhidhu 2011-07-28 00:13
சவுக்கு சங்கர் சாதித்து விட்டார். ஒரு கடைநிலை ஊழியன் ஒரு கிளாஸ் 1 IPS அதிகாரிக்கு வச்சான் அப்பு. powerfull CM's right hand Inteligence ADGP demolished by an office assistant. முயற்சி திருவினையாக்கும ். 3 ஆண்டு போராட்டம் இன்று வெற்றி பெற்றது. வாழ்த்துக்கள் நண்பா.சவுக்கு சங்கர் சாதித்து விட்டார். ஒரு கடைநிலை ஊழியன் ஒரு கிளாஸ் 1 IPS அதிகாரிக்கு வச்சான் அப்பு. powerfull CM's right hand Inteligence ADGP demolished by an office assistant. முயற்சி திருவினையாக்கும ். 3 ஆண்டு போராட்டம் இன்று வெற்றி பெற்றது. வாழ்த்துக்கள் நண்பா.


From Dinamalar... why dont u start a social activism?
Quote
 
 
+7 #73 Unmaithamizhan 2011-07-27 21:34
சவுக்கின் சேவை.. நாட்டுக்கு அவசியம் தேவை..
Quote
 
 
+10 #72 Unmaithamizhan 2011-07-27 21:33
சவுக்கின் சாதனை மைல் கல்.. தொடரட்டும் உங்கள் சேவை.. நாட்டுக்கு தேவை..
Quote
 
 
+5 #71 vennai 2011-07-27 20:33
whats siezed in jaffers house.Pls share the info savukku.You are the best so you should be the first - to report
Quote
 
 
+4 #70 iyyavu 2011-07-27 19:15
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வரு
Quote
 
 
+5 #69 iyyavu 2011-07-27 19:08
அப்படி ஆடிய ஆட்டத்திற்குத் தான் இன்று விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார ் ஜாபர் சேட். ஒரு மனிதனின் வீழ்ச்சியில் உலகமே மகிழ்வதைப் போன்ற ஒரு வேதனையான தருணம் இருக்க முடியாது. இது போன்ற மனிதனின் வீழ்ச்சியில் ஊரே மகிழ்ந்த ஒரு தருணம் என்றால், ,வீட்டிலும், சிபிஐ சோதனை நடத்திய போதும், செய்த போதும்
Quote
 
 
+5 #68 iyyavu 2011-07-27 18:50
உங்களின் விடாத போராட்டத்திற்கு இன்றுதான் பலன் கிடைத்திருக்கிற து. இது தொடக்கமே!! வாழ்த்துக்கள்.
Quote
 
 
+4 #67 Engoyo Ketta Kural 2011-07-27 18:38
சவுக்கு, பால்ராஜ் ஜான்சன் யார்? அவருக்கும் இந்த ரைட்டில் என்ன சம்பந்தம்? நன்ரி.
Quote
 
 
+4 #66 buhary 2011-07-27 17:25
HE IS NO A MUSLIM...HAVING GOLD CHAIN AND GOLD RING..
Quote
 
 
+4 #65 NELLAI SINGAM 2011-07-27 17:06
இன்று ஜாபர் சேட் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை நடைபெற்றது என்ற தகவலை தெரிந்ததும், பத்திரிக்கையாளர ்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது… அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது..........
Quote
 
 
+6 #64 Savukku Reader 2011-07-27 16:54
I feel guilty of reading your magazine for free. You are risking your life! Atleast for that reason I would like to contribute some amount monthly.

It will benefit the society if savukku readers are given a chance to support savukku.
Quote
 
 
+7 #63 mani123 2011-07-27 15:42
மாப்பு.....வச்சமுல்ல ஆப்பு............

இப்போ என்ன செய்யுவ...? இப்போ என்ன செய்யுவ....?
Quote
 
 
+13 #62 aNu 2011-07-27 15:18
ஊழலின் முகத்திரையைக் கிழித்து உலகுக்கு காட்டியதற்கு ஒரு சபாஷ்!
Quote
 
 
0 #61 Tamil Ponnu 2011-07-27 14:27
Savukku, nan unga pakatha padikama poierunthena, Jaffer sait veetula lanja olipu thurai pochu na enna periya visayam nnu nenachu eruppen. But since i have read ur comments wen i saw dis news sterday i was thinking abt ur count down only.Ur doing a good job Savukku keep rocking!!!!Summ a kattam katti thukku elathaiyum....
Quote
 
 
+8 #60 kannand 2011-07-27 14:17
இவன் தான் இவரை போன்ற நேர்மையான நல்ல அதிகாரிகளை (லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டவரான சங்கர்) தனது பதவியை தவறாக பயன் படுத்தி சஸ்பெண்ட் பண்ணுகிறான். தயவு செய்து இப்பொழுது உள்ள அதிகாரிகள் சவுக்கு இணைய தள சங்கர் அவர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும், அப்பொழுது தான் இவர்கள் செய்யும் அதிகார துஷ்பிரயோகம் வெளியே தெரியும் நன்றி சங்கர் அவர்களுக்கு
Quote
 
 
+14 #59 nadagapriyan 2011-07-27 13:57
சவுக்கின் வெற்றி நீதிக்காக போராடும் எல்லோருடைய வெற்றி ஆகும். இது சவுக்கின் வாழ்வில் ஓர் மைல் கல். நாமால் என்ன செய்துவிட முடியும் என்று அங்கலாய்த்து கொள்வோருக்கு ஓர் பாடம்! நிச்சயம் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஒரு நிகழ்வு!
Quote
 
 
+7 #58 ramsunder 2011-07-27 13:36
நல்ல வேலை செய்து விட்டீர்கள். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Quote
 
 
+5 #57 சீனு 2011-07-27 13:20
அண்ணே...ஜாபர் கன்னத்துல (அவரு கன்னத்துல தான்) கை வெச்சிகிட்டிருக ்கிற போஸ் இருக்கும் போட்டோவ போடவும். ரசிகர்களின் வேண்டுகோள்... :lol:
Quote
 
 
+4 #56 Maanudan 2011-07-27 13:10
News from Dinamalar. Savukku Shankar's name is mentioned in the news :lol:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=282992

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில், தேர்தல் கமிஷன் நெருக்கடி காரணமாக இவர் விடுப்பில் சென்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், ஜாபர் சேட் விடுப்பு முடிந்து மீண்டும் வந்தார். அப்போது, மண்டபம் அகதிகள் முகாமை கவனிக்கும் கூடுதல் டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், இவர் மீது பல புகார்கள் எழுந்தும், "பவர் புல்' இடத்தில் இருந்ததால், எந்த புகாரிலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்ல ை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஜாபர் சேட் மீது, புகார்கள் வரத் துவங்கியுள்ளன.
லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டவரான சங்கர், :லொல்: சமீபத்தில் தமிழக தலைமைச் செயலரிடம் புகார் ஒன்றை அளித்தார்.



அதில் கூறப்பட்டுள்ளதா வது:கடந்த 2008ம் ஆண்டு, சென்னை திருவான்மியூர், காமராஜர் நகரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டு மனை எண் 540, தி.மு.க., அரசால் ஜாபர் சேட்டிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அவரது மகள் பெயருக்கும், இறுதியாக மனைவி பர்வீன் ஜாபர் பெயருக்கும் மாற்றப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், சிலரது உதவியுடன் குற்றம் செய்யும் நோக்கில் சதித் திட்டத்தில் ஈடுபட்ட ஜாபர் சேட், முக்கிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.



மனைவி பர்வீன் ஜாபர் மூலம், அப்பகுதியில் மனை ஒதுக்கீடு பெற்றிருந்த முன்னாள் முதல்வரின் செயலராக இருந்த ராஜமாணிக்கத்தின ் மகன் துர்கா சங்கருடன் சேர்ந்து, தி.நகரில் உள்ள லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து, இந்த மனையை கட்டடமாகக் கட்டியுள்ளார். இந்த விஷயத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றி, ஜாபர் சேட் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் சுயலாபம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்த து.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=282992
Quote
 
 
+5 #55 KOVAI PRIYAN 2011-07-27 13:00
நன்பருக்கு வணக்கம் ...உஙகள் மதிப்பும் பொருப்பும் பலமடஙுகு கூடிவிட்டது ..மேலும் நான் வீரபான்டி ஆருமுகதின் பினாமி ஒருவரின் மேல் அளிதத புகாரின் மேது காவல் துரை எந்த நடவடிக்கையும் எஅடுக்கவில்லை .ஆய்வாள்ர் ஒரு சார்பாக உள்ளார். மேற்கொன்டு நான் என்ன் செய்ய வேண்டும்? உங்கள் ஆலோசனை வேன்டும். எனது அலைபேசி எண் ..9443139423
Quote
 
 
+4 #54 idlyvada 2011-07-27 12:24
அப்பு ! நல்ல இருப்பே நீ ....சம்சன் கோலியாத் கத கேட்டுருக்கியா ???
சாச்சுபுட்டாய ....வீர வணக்கம் ....தோழா ....
Quote
 
 
+7 #53 Abubackar 2011-07-27 12:03
லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டவரான சங்கர், சமீபத்தில் தமிழக தலைமைச் செயலரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=282992

சவுக்கு இனி தான் தீயா வெலை செய்யனும்.
Quote
 
 
+4 #52 AADHAVAN 2011-07-27 11:33
SIMPLY SUPER. IT IS A LESSON FOR ALL CORRUPT AND USELESS OFFICERS
Quote
 
 
+4 #51 velavan 2011-07-27 11:31
இது போல எத்தனையோ திருடனுங்க
Quote
 
 
+5 #50 gnanaveln 2011-07-27 11:18
கடந்த தி.மு.க., ஆட்சியில், இவர் மீது பல புகார்கள் எழுந்தும், "பவர் புல்' இடத்தில் இருந்ததால், எந்த புகாரிலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்ல ை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஜாபர் சேட் மீது, புகார்கள் வரத் துவங்கியுள்ளன.
[ப்]லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டவரான சங்கர், சமீபத்தில் தமிழக தலைமைச் செயலரிடம் புகார் ஒன்றை அளித்தார்.[/ப்]

Hi Savukku becareful hereafter all medias are reveal your name publicly...anyway my hearty wishes to you Savukku...
Quote
 
 
+9 #49 Iridium Cobra 2011-07-27 10:50
(தொடர்ச்சி....)
எனவே சொந்த காரணத்திற்காக சிக்கலில் சிக்கிய ஒரு நபர், அந்த சிக்கலின் கொடூரத்தை கண்கூடாக பார்த்து, மனம் நொந்து, இப்படிப்பட்ட உலகிலா நாம் அனைவரும் வாழ்கிறோம், நாம் பட்ட துன்பத்தை வேறு ஒருவர் அனுபவிக்க கூடாது என்ற சிறந்த மனதுடன் போராடும் போது தான் ஒரு சமூக ஆர்வலர், புரட்சியாளர் தோன்றுகிறார். வாழ்க்கையில் எந்த விதமான சமூக சிக்கலில், சட்ட சிக்கலில் சிக்காதவர்கள் தாமாக முன்வந்து, அரசாங்கத்தையும் , நீதி துறையையும், காவல் துறையையும் எதிர்த்து, ஊழல்களை, முறைகேடுகளை ஒழிக்கிறேன் எனக்கூறிக்கொண்ட ு ஊழல் செய்யும் காவல் அதிகாரிகள், நீதிபதிகள், IAS அதிகாரிகள், RTO ஆபீசர்கள், தாசில்தார்கள், VAO கள், ரேஷன் கடை ஊழியர்கள், பத்திரபதிவு ஆபீசர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், கல்வி என்ற பெயரில் கொள்ளை அடிக்க துணை போகும் மாவட்ட கல்வி அதிகாரிகள், பணம் வாங்கிக்கொண்டு கழிவு நீரை, சாயநீரை ஆற்றில் கலக்க உதவும் அதிகாரிகள், மணல் & அரிசி கடத்த உதவும் சுங்கவரி அதிகாரிகள், பொய் ரசீது கொடுத்து ஏற்றுமதி செய்ததாக அரசிடம் மானியம் வாங்க உதவும் அதிகாரிகள், பணம் வாங்கிக்கொண்டு மின்சாரதிருட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள், சமூகநலத்துறை என்ற பெயரில் அரசின் எல்லாவிதமான உதவித்தொகயிலும் 25% கமிசன் பெற்று உதவி வழங்கும் ஆட்கள், மற்றும் ஏனய அரசு அலுவலர்களின் மீது வழக்கு போட்டு அவர்களை சட்டத்தின் முன்னாள் நிறுத்தி, தண்டனை வாங்கிகொடுக்க நமக்கு தைரியம் இருக்கிறாதா என நாம் அனைவரும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பின்னூட்டம் இடும் நம்மில் எத்தனை பேருக்கு மேற்சொன்ன ஆட்களை வழக்கில் சிக்கவைக்க, தண்டனை வாங்கிகொடுத்து ஊழல்களை தடுக்க மன தைரியம் உள்ளது.
Quote
 
 
+4 #48 Iridium Cobra 2011-07-27 10:49
///புகார் கொடுத்துப் போராடி, ஒரு ஊழலை வெளிக்கொணர்ந்து தக்க நடவடிக்கைக்கு வித்திட்ட தேசசேவையை தொடரவேண்டும். விருப்பில்லாமலவ ேண்டியவர்,வேண்ட ாதவர்,இன்ன மதம் இன்ன சாதி என்று பாராமல் தொடர்ந்து இதுபோன்ற ஊழல்களை வெளிக்கொணர்ந்து தக்க நடவடிக்கைக்குப் போராடா விட்டால், இந்த நடவடிக்கை சொந்த வெறுப்பால் எடுக்கப் பாட்டதாகிவிடும் ////

நண்பர் கூறியது போல பொது நலத்திற்காக உழைப்பவர்கள், மக்களுக்கு நல்லது கிடைக்க போராடுபவர்கள்,ய ாரும் அவர்களின் சொந்த வாழ்க்கையில் அடிபடாமல், பாதிக்கப்படாமல் தானாகாவே பொதுக்காரியங்கள ் செய்ய முடியாது, தெரியவும் செய்யாது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் தேசத்தந்தை காந்தி. அவர் வக்கீலுக்கு படித்து தென்னாபிரிக்காவ ில் வேலை செய்து கொண்டு இருந்த போது, ரயிலில் சென்ற போது, கருப்பர்கள் முதல் வகுப்பில் செல்லக்கூடாது என அவரை பிடித்து வெளியே தள்ளிய இனவெறி பிடித்த வெள்ளைகாரனின் ஆணவ செயலைக்கண்ட பின்னர் தானே இனவெறியின், ஆங்கில அடக்கு முறையின் கொடுமைகளை காந்தியால் உணர முடிந்தது. அதன் பின்னர் நடந்தவை வரலாறு. எனவே காந்தி இனவெறியின், ஆங்கில அடக்குமுறையின் கொடுமையை அனுபவிக்காமல் போயிருந்தால் அப்படி ஒருவர் நம் நாட்டிற்கு கிடைத்து இருக்க மாட்டார், நம் நாடும் சுதந்திரம் அடைந்து இருக்காது.
Quote
 
 
+5 #47 இனியவன் 2011-07-27 10:46
நல்லது நடந்திருக்கிறது . சவுக்குக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களின் பேராதரவு கண்டிப்பாகக் கிடைக்கும். தாங்கள் செய்திருக்கும் இப்பணி இன்றைய சூழ்நிலையில் கண்டிப்பாகத் தேவை. தங்களின் இத்திருப்பணியை மனமுவந்து பாராட்டுகிறோம். மேலும் தொடரட்டும் தங்களின் திருப்பணி. உங்களைப் போன்றோர்கள் உள்ளதனால் தான் இன்றும் நீதி நிலை பெற்றுக் கொண்டிருக்கிறது . உள்ளம் நிறைந்திருக்கிற து. மேலும் இவரைப் போன்ற கயவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பின்னர் தக்க தண்டனை தர வேண்டும். பிறகே அமைதி நிலவும் அனைவர் உள்ளங்களிலும். ராசா, கருணா, கனிமொழி, அழகிரி, ஸ்டாலின் உட்பட அனைவரின் சட்டத்துக்குப் புறம்பாக சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும். சொக்கத் தங்க சோனியாவை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும். சோனியா உள்ளவரை அது சோனியா கட்சியாகத் தான் இருக்கும். ஈழத் தமிழர்களின் எண்ணங்கள், கோபங்கள், ஆவிகள் மற்றும் தமிழகத் தமிழர்களின் ஆதரவு, உணர்ச்சிகள் சோனியாவையும், அவருடைய குடும்பத்தினரைய ும் பழி வாங்கியே தீரும். இன்று நாம் காணும் செல்லாக் காசுகளாகிய கருணா, தயா, ராசா, கனிமொழி, ஜாபர் செட் போன்று சோனியாவும், மண் மொக்கையும் மண் திங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
தோழமையுடன்
இனியவன்
Quote
 
 
+3 #46 M.S.Chagla 2011-07-27 10:33
அரசன் அன்ரு கொல்லும், தெய்வம் நின்ரு கொல்லும். This bastard Jaffar sait deserves more and more along with K.D brothers, Rajathi ammal, kilatu thayoli karunanidhi, K.N.Nehru, Ramajayam etc. Investigate some of the shaddy deals about these mother fuckers. At the same time, Congress also sh'ld not be spared- especially the corporate lawyer P.Chidambaram.

Hats off to you.
Quote
 
 
+2 #45 r83sathish 2011-07-27 10:32
Pls continue the work,very impressed with ur work..
Quote
 
 
+2 #44 karthik910 2011-07-27 10:26
இந்த புகார் சவுக்கு சங்கரால் கொடுக்கப்பட்டது ... சரிதானே சவுக்கு????
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 91 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9362
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week30561
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month233293
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12755412