முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 5 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 44
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 27 ஜூலை 2011 16:53

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவர் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத்  தொடங்குவார்கள். இவர் தற்கொலைச் சம்பவத்தில் புகழ்பெற்ற தாதா. ‘‘நண்பர்கள்னா உயிரக் கொடுப்பேன். எதிரின்னா தலையை எடுப்பேன்’’ என்பதுதான் இவர் அடிக்கடி  பயன்படுத்தும் வாசகம். திரைப்படத் துறையில் இவரிடம் ஃபைனான்ஸ் வாங்காதவர்களுமில்லை, பாதிக்கப்படாதவர்களும் இல்லை. இன்று பயந்து நடுங்கியபடி கைதுக்கு  அஞ்சி மருத்துவமனையில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக...  

‘‘சொந்தத் தம்பிய சிறையில போட்டுட்டாங்க. நானும் உடம்பு சரியில்லன்னு கணக்குக் காட்டி இப்போ அப்போன்னு ஒரு மருத்துவமனையில அட்மிட்டாகிக் கிடக்கிறேன்.  அந்த மருத்துவமனையின் முக்கிய புள்ளிக்கு எங்க ஊர் மருதயில ஒரு தியேட்டர் இருக்கு. அந்த தியேட்டருக்கும் நான் ஃபைனான்ஸ் செய்திருக்கேன். அந்த நன் றிக்காக என்னை இந்த இக்கட்டான நிலையில மருத்துவமனைல வச்சு காப்பாத்திக்கிட்டிருக்கார் அவர்.

ஆனா எனக்கு இப்படி ஒரு நிலை வரும்னு நான் நினைக்கவேயில்ல. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்பு மருதயில சாதாரண தண்டல் தொழில் நடத்திக்கிட்டிருந்தேன்.  அப்புறம் வட்டி, கந்து வட்டின்னு வளர்ந்தேன். கொஞ்ச நாள்ல லோக்கல்ல என் பேரு ஃபேமஸாயிடுச்சு. அந்த நேரத்துல ஓடி ஒளிஞ்சிக்கிட்டிருந்த வளர்ப்பு மகன் ஒரு வருடன் தொடர்பு கிடைக்க அவரோட காசும் என்கிட்ட கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுடுச்சு. பணத்த எடுத்துக்குனு சென்னைக்கு ரயிலேறினேன். அவ்வளவுதான், பெரிய  தொழிலதிபராயிட்டேன். சென்னைக்கு சினிமா படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ண ஆரம்பிச்சதும் பணம் கொட்டத் தொடங்கிடுச்சு. அப்போ கார்டனுக்கு நெருக்கமானவங்க  ஒருத்தர் பேரச்சொல்லி அவங்க பினாமி நான்னு சொல்லிவச்சேன். யாரும் எதிர்த்துப் பேச பயந்தாங்க. 

நான் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே எங்க ஊர்ல இருக்கிற என் வீட்ல இன்கம்டேக்ஸ் ரெய்டு நடந்தது. உடனே ஸ்பாட்டுக்கு பறந்து போயி, வந்த அதிகாரிகளை  அடிச்சு ஓடவிட்டேன். அதிலிருந்து என் பேரும் புகழும் கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சது. அடுத்து கமல், ரஜினி, விஜய்னு பெரிய பெரிய ஹீரோக்களை வச்சு  படமெடுத்த தயாரிப்பாளர்ஜிக்கு ஒரு படத்துக்காக ஃபைனான்ஸ் பண்ணினேன். அவரால எங்கிட்ட வாங்கின பணத்த திருப்பிக் கொடுக்க முடியல. அவர் ரொம்பவும்  சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் காலையில அவர் வீட்டுக்கு நானும் என் அழகான தம்பியும் போய் இறங்கினோம். வீட்ல சோபாவுல உட்கார்ந்திருந்த அந்த ‘ஜி’ யை இழுத்துப் போட்டு அடிச்சோம். சட்ட, வேட்டியெல்லாத்தையும் உருவிட்டு வெறும் ஜட்டியோட நடு ஹால்ல குத்த வச்சு உட்கார வச்சேன். அவரு பொண்டாட்டி என்  கால்ல விழுந்து அழுதாங்க. ஒரு வாரத்துல பணத்த கொடுக்கறதா சொன்னாங்க. நாங்க வந்துட்டோம். இரண்டுநாள் கழிச்சு தற்கொலை செய்துக்கப் போயிட்டாரு அந்த ‘ஜி’.  அவங்க மனைவிதான் காப்பாத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அவரால படம் தயாரிக்கவே முடியல. இந்த விஷயம் சினிமா துறைக்கு பரவியதும் சினிமாக்காரங்க என்னைப்  பார்த்து பயப்படத் தொடங்கிட்டாங்க.

அடுத்ததுதான் அந்தத் தயாரிப்பாளர் மரணம். இந்தச் சம்பவத்துக்கு அப்புறம்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் என் கட்டுப்பாட்டுல வந்துடுச்சுன்னு சொல்லலாம்.  தங்கமான ஒரு படத்த எடுத்த அந்தத் தயாரிப்பாளர், என்கிட்ட ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார். அந்தப் பட வினியோகம் சம்பந்தமா ஒரு சிக்கல் ஏற்பட்டுச்சு. அதை  கேக்கச் சொல்லி நான் ஒரு கைத்தடிய அனுப்பினேன். அந்த கைத்தடி, தயாரிப்பாளரை மிரட்டியிருக்கு. போலீஸ்ல புகார் கொடுத்த தயாரிப்பாளர், கைத்தடிய கைது பண் ணவச்சிட்டாரு. இதை கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் நான் எகிறிக் குதிச்சேன். அந்த நேரம் பார்த்து அந்தத் தயாரிப்பாளர் மனைவி கொடைக்கானல்ல டூர்  வந்திருக்காங்க. இத கேள்விப் பட்டு நேரா அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் அவங்கள ரூம்ல வச்சு என் கஸ்டடிக்கு கொண்டு வந்துட்டேன். ‘ரெண்டு நாள்ல  பணத்த கொடு, இல்லன்னா இங்க உன் மனைவியை ‘சுத்தமாக்கி’ உட்கார வச்சு மானத்த வாங்கிடுவேன்’னு போன்ல மிரட்டினேன். அவங்க மனைவியும் அவர்கிட்ட அ ழுது புலம்பினாங்க. ரெண்டு நாள்ல பணம் கொடுக்க முடியாத கொந்தளிப்பால் தூக்குல தொங்கிட்டாரு. அவருக்கு நான் கொடுத்த பணத்துக்கு வட்டி போட்டு, அவரோட  சொத்துக்கள எல்லாம் எழுதி வாங்கிடலாம்னு கணக்குப் போட்டு வச்சிருந்தேன். மனுஷன் தொங்கிட்டாரு. அதுக்கப்புறம் நான் வைக்கறதுதான் சினிமா ஃபீல்டுக்கே சட் டம்னு ஆயிடுச்சு.

எந்த நடிகர், நடிகை படமாக இருந்தாலும் யார் தயாரிச்சாலும் என்கிட்டதான் ஃபைனான்ஸ் வாங்கணும்ங்கிற நிலைமை உருவாயிடுச்சு. 

சொந்த ஊர்ல கந்து வட்டி வசூல் செய்த கும்பல அப்படியே சென்னைக்கு ஓட்டினு வந்துட்டேன். அதனால் எப்பவும் என்னைச் சுத்தி கூட்டம் வச்சிகிட்டேன். ஊர்ல  பரோட்டா கடை மணிகண்டனையும், அழகான உடன்பிறப்பையும் தங்க வச்சு சினிமா வாங்கறது, விக்கிறதுன்னு தொழில் பார்க்க வச்சேன். கொஞ்ச நாளுக்கப்புறம் உட ன்பிறப்ப மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிட்டு பரோட்டா கடையை சென்னைக்கு அழைச்சுகிட்டு வந்துட்டேன்.

அந்த பரோட்டா கடை சென்னையில போட்ட ஆட்டம்தான் இன்னைக்கு இந்த அளவுக்கு எங்களுக்கு எதிரிகள உருவாக்கிடுச்சு. நான் ஃபைனான்ஸ் விஷயத்துல  பயங்கர ஸ்டிரிக்ட்டா இருப்பேன். ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறார்னு கேள்விப்பட்டா முதல்ல அவர்கிட்ட போய் ஒரு ஐம்பது லட்ச ரூபாயை நாலு வட்டிக்கு கொடு த்துருவேன். அதுக்கப்புறம், சேட்டிலைட் ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ்னு ஒண்ணு ஒண்ணா புடுங்கி கடைசியில அந்தத் தயாரிப்பாளர நடுத்தெருவுல நிக்க வச்சுடுவேன். ராஜா  மாதிரி வசூல் செய்ய வேண்டிய சில படங்கள் வசூல் இல்லாமல் போவதற்கும் ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தி பரபரப்பா இருந்த ஒரு தயாரிப்பாளர் பல  நாட்கள் தனியறையில் அடைக்கப்பட்டு ஆண்டியாகிப் போனதுக்கும் நான்தான் காரணம். 

அதேபோல பணம் வசூல் செய்யறதிலேயும் என்பாணி தனிதான். பணம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் கடைசியா அவங்களுக்கு ஒரு டைம் கொடுத்துடுவேன்.  அவங்க வாங்கின பணத்துக்கு வட்டிக்கு வட்டின்னு போட்டு ஒரு பெரிய தொகையை அவங்க கொடுக்க வேண்டியதா ஒரு கணக்கும் கொடுத்துருவேன். அவங்களால  அந்தப் பணத்த கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் அவங்கள தூக்கினு வந்து என் பங்களாவுல இருக்கிற ரூம்ல சுத்தமாக்கி உட்கார வச்சுடுவேன். பொம்பளயா இருந் தாலும் சரி, ஆம்பளயா இருந்தாலும் சரி ஒரே ட்ரீட்மெண்ட்தான். அவங்கள அப்படி சுத்தமாக்கி உட்கார வைக்கற வரைக்கும் என் கைத்தடிங்க செய்து முடிப்பாங்க.  கடைசியா நான் மட்டும் அந்த ரூம்ல போய் எதிர்ல சேர்ல உட்கார்ந்து அவங்க நாண்டுக்கினு சாவற மாதிரி அசிங்க அசிங்கமா அரைமணிநேரம் கத்துவேன். அவ்வள வுதான். அவங்க ஏற்கெனவே வாங்கி வச்சிருந்த சொத்தயெல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க.

அதே நேரத்துல அது எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும், எவ்வளவு அழகியா இருந்தாலும் அந்த ரூம்ல அடைபட்டு இருக்கும் போது கூட நான் அவங்கள  தொடவே மாட்டேன். அவங்கள மிரட்டி அசிங்கப்படுத்தி பணத்த வாங்கிடணும்னுதான் நான் அழுத்தமாயிருப்பேனே தவிர, இவங்கள தொட்டுட்டா வரவேண்டிய பணத் துக்கு கணக்குக் காட்டிடப் போறாங்கன்னு பயப்படுவேன். அதே நேரத்துல இதுபோன்ற ஃபேமஸான பெரிய கதைகளை படிக்கிறதுக்கு எனக்கு அவ்வளவு பிடிக்காது.  அப்பப்போ சின்னச் சின்ன துணுக்குகள படிச்சுட்டுப் போயிடுவேன்.

ஆனா என்கூட இருந்த பரோட்டா கடையும், உடன்பிறப்பும் இந்த விஷயத்துல பயங்கர மோசம். என்னோட பனிஷ்மெண்டுக்கு முன்னாடியே அவங்க பனிஷ்மெண்ட  கொடுத்திட்டிருப்பாங்க.

ஒரு முறை மூன்று ரோஜாக்களை உற்பத்தி செய்த அந்த தொடை நடிகை, எங்கிட்ட ஃபைனான்ஸ் வாங்கி திருப்பித் தரல. அப்ப அவங்க பீக்ல இருந்தாங்க. நான்  வழக்கம்போல அவங்கள தூக்கினு வர வச்சு சுத்தமாக்கி உட்கார வக்க சொல்லிட்டேன். நான் போய் பார்த்தப்பதான் தெரிஞ்சது. அந்த நடிகைய எங்க பசங்க ரணகள மாக்கிட்டிருந்தாங்க.

அதே மாதிரி ஆனி நடிகையையும், ஒரு ஃபைனான்ஸ்  விஷயத்துல தூக்கினு வரச்சொன்னபோதும் பசங்க பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க. இந்த விவரங்கள அவங்களும்  வெளியில சொல்ல முடியாது, நாங்களும் சொல்ல முடியாதுங்கறதால எல்லாமே சத்தமில்லாம அமுங்கிடுச்சு.

அதுக்கப்புறம் ஆட்சி மாற்றம் வந்ததும் நான் கார்டன் பேரை வாபஸ் வாங்கிகிட்டு மருதயிலேயே வாரிசை கையில போட்டுக்கிட்டேன். இளவட்டமான அவருக்கு ஜாலியா  இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். அவரும் அட்டாக்கும் சாயந்தரமானா என் ஆபீஸுக்கு வந்து உட்கார்ந்துடுவாங்க. பரோட்டா கடை அவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு  செய்து கொடுக்க, அவங்களும் சந்தோஷமா கிளம்பிடுவாங்க. இந்த அஞ்சு வருஷத்துல ஃபைனான்ஸ் வேலையைக் கொஞ்சம் கொறச்சுகிட்டு மத்த விவகாரங்கள்ல  தலைதூக்க ஆரம்பிச்சுட்டேன்.

எங்க ஊர் பக்கத்துல காரியம் நடத்துற பட்டியில சுமார் 180 ஏக்கர் வில்லங்க நிலத்த வில்லத்தனமா வாங்கிப் போட்டேன். அதுல ஒரு காலேஜை கட்டிட்டு கல்வித் தந் தையா உருவாயிடணும்கிறதுதான் எனது எதிர்காலத் திட்டம். அதுக்குள்ள ஆட்சி மாற்றமும் வந்துடுச்சு. கடந்த ஆட்சியில வாரிசை கைல வச்சுகிட்டும், மாணிக்க மந்திரிய  மடக்கி வச்சுகிட்டும் நாங்க அடிச்ச எல்லா கூத்தையும் ஆதாரங்களோடு எடுத்து வச்சிருக்காங்க.

நான் ஏற்கெனவே கார்டன் பேரச் சொல்லி ஏமாத்திவிட்டதாலே இப்ப அவங்க பேரையும் பயன்படுத்த முடியல. இன்னைக்கோ, நாளைக்கோ என்னை தூக்கிடுவாங்கன்னு  தெரியுது. அதுக்குள்ள உங்ககிட்ட மனம் திறந்து பேசறதுக்கு வழிசெய்தீங்க. ரொம்ப நன்றி!’’

 

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

 

Comments  

 
+2 #40 Raghu J 2011-08-04 18:31
Encounter death. file close
Quote
 
 
+1 #39 iniyan prabakaran 2011-08-02 22:38
aan kadavul padathula first nadikaratha irunthadu ajith.balavukum ajithukum prachinai. advance-i thirupi vaanga bala idhey anbu koodathan kootani potu ajith-i nadu kadal kappalla vechu mirati vanginatha apo periya talk irunthathu.athu pathi ithula news varliye?thavira enaku kooda nadigaikaloda anthrangam savukil varuvathil udanpadu illai.savukin tharam veraga iruku.iniyum irukanum.
Quote
 
 
+6 #38 மழை துளி 2011-08-02 18:47
ஒரு விஷயம் எனக்கு புரிய வில்லை ..சினிமாவில் உள்ள பெருந்தலைகள் எல்லாம் என்ன செய்கிறார்கள் ? சினிமாவிலிருந்த ு ஆட்சியாளர்கள் இருக்கும் ஒரு மாநிலத்தில் ஒருவர் கூடவா இந்த மிருகத்தை அழிக்க முயற்சி செய்யவில்லை ? படிக்கும் நமேக்கே கதி கலங்கி விடுகையில் அந்த உயிர்கள் என்ன பாடு பட்டிருக்கும் ? இவனால் எத்தனை பேர் மனநோயாளி ஆனார்களோ.எத்தனை பெண்களை சூறை யாடிநானோ .. இந்த நாயை அணு அணுவாக சித்திரவதை செய்து நடுவீதியில் கல்லால் அடித்து கொல்ல வேண்டும். அதை அவனால் பாதிக்க பட்ட எல்லோரும் காண வேண்டும்.

சவுக்கு...நீங்கள் செயும் பணி மகத்தானது ..ஆனால் மிக மிக ஆபத்தானதும் கூட ..மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவும்...இதுவே மேலை நாடாய் இருந்தால் உங்களை கொண்டாடி இருப்பார்கள் ..

ஆனால் அது நம் தலை விதி - ஜாக்கிரதையாக இருக்க தான் சொல்ல முடிகிறது ..!
Quote
 
 
+1 #37 Rami 2011-07-30 14:41
யார் இந்த மதுரை ஃபினன்சியர் சொல்லுங்கல்
Quote
 
 
+1 #36 aha 2011-07-30 13:33
Are all true having evidences or wildly exaggerated?The events surely are surpassing cinema villains. GV is brother of Mani ratnam, a top director and so had links with Kamal too.Would they not have helped him if he was molested by goons?
Quote
 
 
+2 #35 சவுக்கு 2011-07-29 16:15
அன்பான வால்டர் வணங்காமுடி, நீங்கள் எழுதிய கருத்தில் நியாயம் உள்ளது. கவனிக்காமல் விட்ட காரணத்தினாலேயே அந்த கருத்து நீக்கப் பட்டது. 94 ஹிட் போகும் வரைக்கும் என்றால், அது கவனக்குறைவே, அதற்குத் தான் மன்னிப்பு. தாங்கள் சொல்வது நியாயமாகவே இருக்கிறது. இனி, இந்தத் தொடர் மறு பதிப்பு செய்யப் படாது. நன்றி தோழரே.....
Quote
 
 
-1 #34 வால்டர் வணங்காமுடி 2011-07-29 14:55
[ஃஉஒடெ நமெ="சவுக்கு"]தவறுதலாக நடிகைகள் பெயர் வெளியிடப்பட்டு விட்டது. மன்னிக்கவும் சித்திரகுப்தன். தற்பொழுது சரிசெய்யப் பட்டு விட்டது.[/ஃஉஒடெ]

யோவ் சவுக்கு,
கமெண்டை நீக்கிட்ட. நல்ல விஷயம். ஆனால் சில விச்யத்தை மறந்திட்டியே...
1. 94 ஹிட் போறவரைக்கும் எதற்கு வெயிட் செய்தீர்கள்? உடனேயே நீக்கி இருக்கலாமே?
2. சரி அது கூட போகட்டும். இப்போதாவது நீக்கியது மகிழ்ச்சியே. ஆனால் கட்டுரையில் இன்னும் அந்த நடிகைகளின் பற்றிய விவரம் உள்ளதே. அதை ஏன் நீக்கவில்லை?
3. அதை நீக்க உங்களுக்கு உரிமை இல்லை என்றால் அப்படி பட்ட கட்டுரை எதற்கு பிரசுரிக்கவேண்ட ும்? நடிகைகளை பற்றிய ஸ்கூப் போட்டுவிட்டு, அவர்களை பற்றி எவரும் பேசக்கூடாது என்பது என்ன நியாயம்?
4. இப்படி உங்களது வாசகர்களின் தரத்தை நடிகைகளின் அந்தரங்கத்தை பற்றி விவாதிக்கும் இடமாக மாற்றியதற்கு யார் பொறுப்பு?
Quote
 
 
-1 #33 சவுக்கு 2011-07-29 12:36
தவறுதலாக நடிகைகள் பெயர் வெளியிடப்பட்டு விட்டது. மன்னிக்கவும் சித்திரகுப்தன். தற்பொழுது சரிசெய்யப் பட்டு விட்டது.
Quote
 
 
+3 #32 sithirakuthan 2011-07-29 11:34
அந்த நடிகைகள் பெயரை தவிர்த்திருக்கல ாம்.இது சவுக்குக்கு அழ்கல்ல.நடிகைகள் நமக்கு முக்கியமல்ல.இது அன்பான,கண்டிப்ப ான ,அக்கறையான வேண்டுகோள்.தாங்கள் படித்த்வர்.புரிந்துகொள்வீர ்கள் என நினைக்கின்றேன்.
Quote
 
 
+9 #31 TamilSreedhar 2011-07-29 08:09
தம்பி பெயர் : அழகர்
பரோட்டா கடை : ஐயப்பன் (Saxena பினாமி)
Quote
 
 
+11 #30 Bk 2011-07-28 23:12
இவனை யெல்லாம் அனு அனு வா சித்திரைவதை செய்து கொல்ல்னும். இதுவரை இவர்கள் படுதிய யெல்லொரது பாவமும் ஒன்னா ஸேர்ந்து அனுபவிககனும். இந்த நாய்கள் வாழதகுதியில்லாத வர்கள்
Quote
 
 
+4 #29 பார்த்திபன் 2011-07-28 22:20
பரோட்டா கடை மற்றும் உடன் பிறப்பு யார்?
Quote
 
 
+1 #28 Raj2011 2011-07-28 21:08
[ஃஉஒடெ நமெ="றம்சுன்டெர்"]"சுத்தமாக்கி"ன்னா என்ன ?[/ஃஉஒடெ]

NAKED lah
Quote
 
 
+4 #27 king of chennai 2011-07-28 15:52
என்ன தான் ஆட்டம் போட்டாலும் கடைசி ல அவன் நிலம இப்படி தான்
Quote
 
 
-3 #26 Veerasekar 2011-07-28 12:14
[ஃஉஒடெ நமெ="ருபென்"]மானிக்க மந்திரி?[/ஃஉஒடெ]
Manik Thakoor. He is an MP.
Quote
 
 
+8 #25 ஊர்குருவி 2011-07-28 12:09
அன்பு, அட்டாக் பாண்டி எல்லாம் மதுரைய பொறுத்த வரை ஊளை பயளுக ...குஞ்சா நெஞ்சன் கூட இருந்ததால நாய் கொலச்சுக்கிட்டு இருந்தது...மதுர,திருநெல்வே லி, தூத்துக்குடி ஆளுங்ககிட்ட எல்லாம் இவனுங்க எதுவும் வச்சுக்கிறல ...இல்லாட்டி வாயிலேயே குண்டு போட்டுருப்பானுங ்க.. பணம் இருந்தாலும் ஆள் பலம் இல்லாத சென்னை ஆளுங்க கிட்டதான் இவனுங்க பாச்சா எல்லாம்..
Quote
 
 
+11 #24 ஊர்குருவி 2011-07-28 12:04
இதுல முக்கியமான விஷயம்..இந்த அன்புசெழியன் பயலால 'சுத்தமாக்கி' 'பாக்கத்தான்' முடியும்..பயலுக்கு இன்ஸ்ட்ருமென்ட் அவுட்...அறுக்க மாட்டாதவன் பொ..சுல நூத்தியெட்டு அருவாளுங்கற மாதிரி இவனுக்கு ரெண்டு பொண்டாட்டி வேற..இவன் பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுக்க வந்தசௌராஷ்டிரா இனத்து பொண்ணை கரெக்ட் பண்ணி செகண்டா கட்டிகிட்டான்...செஞ்ச பாவத்துக்கு அட்வான்ஸ் மாதிரி இப்போதைக்கு இன்ஸ்ட்ருமென்ட் போச்சு ...இனிமே எல்லாமே போகும்..
Quote
 
 
+2 #23 Ramsunder 2011-07-28 09:39
"சுத்தமாக்கி"ன்னா என்ன ?
Quote
 
 
+13 #22 அன்பு 2011-07-28 09:24
வட்டிக்கரனிடம் காசு வாங்கி நடிகைகளின் துணியை உருவி அவர்களின் சதையை காட்டி காசு சம்பாரிக்கும் சினிமா தயாரிப்பாளர்கள் ,
முடிவில் அதே வட்டிக்காரனிடம் துணியை இழந்து, மானம் இழந்து நிற்பதை படிக்கும் போது ஒரு சொல் ஞாபகத்திற்கு வருகிறது,

'வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்'
Quote
 
 
+14 #21 jkjk 2011-07-27 23:21
என்கவுன்டெரில் இவன்கலை கொல்லனும்.
Quote
 
 
+7 #20 ruben 2011-07-27 22:54
மானிக்க மந்திரி?
Quote
 
 
+13 #19 saamiyaadi 2011-07-27 22:35
அடப்பாவி உனக்கு இதயமே கிடையாதா? ஜி.வி எவ்வளவு பெரிய மனிதன் அவ்ரைப்போய் அம்மணமாக்கி இருக்கிறாயே. நீ விளங்குவியா. சசிகலா கூட உனக்கு உடந்தையா. அம்மா இப்போ என்ன செய்வார்கல் எனத்தெரியவில்லை யே. சசி மீண்டும் பர்சென்டேஜ் வாங்கிவிடுவாரா...
Quote
 
 
+10 #18 kkr 2011-07-27 21:52
அது சரி , பரொட்டா கட யாரு ?
Quote
 
 
+24 #17 Vaigaiselvan 2011-07-27 20:41
அய்யா வால்டர் வணங்காமுடி, இப்படி புட்டு புட்டு வைக்கரீஙளே.. சபாஷ்..
Quote
 
 
+37 #16 Suresh Raja 2011-07-27 19:47
அவன் இருக்குற ஆஸ்பத்திரிலேயே அவனுக்கு ஒரு குட்டி ஆபரேசன் பண்ணி விட்ரனும்... கைத்தடிகளுக்கு எல்லாம் கையே இல்லாம பண்ணிடனும்.. அப்போ தான் மத்தவுங்களும் பயப்படுவாங்க.... தயவு தாட்சணம் எதுவும் பாக்க கூடாது. மனித உரிமைன்னு யாரும் வரக்கூடாது... இவுங்க மிருகங்கள். :eek: :eek: :eek:
Quote
 
 
+12 #15 kkr 2011-07-27 19:43
இளவட்டமான அவருக்கு ஜாலியா இருக்கிறது ரொம்பப் பிடிக்கும். அவரும் அட்டாக்கும் சாயந்தரமானா என் ஆபீஸுக்கு வந்து உட்கார்ந்துடுவா ங்க. பரோட்டா கடை
அவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து
கொடுக்க, அவங்களும் சந்தோஷமா கிளம்பிடுவாங்க.

கொல்,கொல்,கொல் !!!
Quote
 
 
+5 #14 RISHAB 2011-07-27 19:35
I think it's Anbu.
Quote
 
 
+6 #13 rami 2011-07-27 19:21
தங்கமான ஒரு படத்த எடுத்த அந்தத் தயாரிப்பாளர்.............. யார் இவர்??
Quote
 
 
+4 #12 செந்தமிழன் 2011-07-27 19:21
:ஏக்:முக்கொலத்த ு சிங்கம் அண்ணன் அன்பு செழியன் ........எல்லாம் அழகிரி கைங்கர்யம் !
Quote
 
 
+6 #11 manthira 2011-07-27 19:02
http://thatstamil.oneindia.in/news/2003/05/05/gv1.html
Quote
 
 
+6 #10 johny 2011-07-27 18:51
he is financier anbu chezhian... :o his brother is iyappan who is arrested with saxena for threatening the producers
Quote
 
 
+5 #9 johny 2011-07-27 18:50
he is financier anbu
Quote
 
 
+6 #8 venkateshan 2011-07-27 18:34
அன்பு
Quote
 
 
+3 #7 Viswanath 2011-07-27 18:22
அன்பு செலியன்
Quote
 
 
+1 #6 Sidumunji 2011-07-27 18:10
யர்ரு அந்த ஆனி நடிகை ??
Quote
 
 
+4 #5 G.K.Nadar 2011-07-27 18:05
யார் இந்த மிருகம்
Quote
 
 
+4 #4 AKM Vetriyur Kolkata 2011-07-27 17:50
அய்யோ... யாருன்னே தெரியலையே...
Quote
 
 
+7 #3 வால்டர் வணங்காமுடி 2011-07-27 17:43
//ராஜா மாதிரி வசூல் செய்ய வேண்டிய சில படங்கள் வசூல் இல்லாமல் போவதற்கும் ஒரு இந்திய தயாரிப்பு நிறுவனத்தையே நடத்தி பரபரப்பா இருந்த ஒரு தயாரிப்பாளர் பல நாட்கள் தனியறையில் அடைக்கப்பட்டு ஆண்டியாகிப் போனதுக்கும் நாந்தான் காரணம்//

எங்கடா 'கிங்', 'மனமதன்', 'திருடா திருடி'ன்னு போடுபோட்ட அந்த 'இந்தியன் ஆர்டிஸ்ட்' தயாரிப்பாளரை ஆளையே காணோம்னு பார்த்தேன். இப்போ தானே தெரியுது... அவ்ருக்கு என்ன நடந்தது என்று...
Quote
 
 
+5 #2 manthira 2011-07-27 17:34
who is this???
Quote
 
 
+11 #1 Vaigaiselvan 2011-07-27 17:26
இவனெல்ல்லாம் சாகும் போது நரக வேதனையில் தான் சாவான்..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 135 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5609
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week38068
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month240800
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12762919