முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
தமிழக மருத்துவ மனை பணியாளர்கள் திடீர் போராட்டம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 41
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2010 12:55

 தமிழகத்தில் அரசு மருத்துவ மனையைச் சேர்ந்த ஸ்ட்ரேச்சர் தள்ளுபவர்கள் அனைவரும் போராட்ட அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்க ளும் போராட்டத்தில் குதிக்க இருப்பதாக சவுக்குக்கு பிரத்யேக தகவல்கள் வந்துள்ளன.

இந்தப் போராட்டத்துக்கான காரணம், தமிழக முதல்வரின் வண்டியைத் தள்ளிச் செல்லுபவர்களில் ஒருவரான பாண்டியன் என்ற டிஎஸ்பிக்கு, சிறப்புப் பணிக்கான பதக்கம் வழங்கப் பட்டுள்ளதை அடுத்தே இந்த போராட்ட அறிவிப்பு என்று தெரிகிறது.

 pandi_2

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கருணாநிதியை வண்டியில் வைத்து தள்ளிச் செல்வதற்காக பாண்டியன் என்ற டிஎஸ்பிக்கு முதல்வர் பதக்கம் வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

ஏற்கனவே, வண்டியை தள்ளிச் செல்வதற்காக, பாண்டியனுக்கு முகப்பேரில் 2 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கியுள்ள நிலையில், மீண்டும் ஒரு சலுகையை இது போல வழங்கியிருப்பது, தமிழக அரசின் மருத்துவப் பணியாளர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

 

மருத்துவ மனைகளில் வண்டியை தள்ளுபவர்களில் ஒருவர் சவுக்கிடம் பேசும் போது, “சார், அவரு 2 வருஷமாத்தான் வண்டி தள்ளுறாரு. நான் 20 வருஷமா வண்டி தள்ளிக்கிட்டு இருக்கிறேன். எனக்கு மெடல் குடுக்காம 2 வருஷம் வண்டி தள்ளுறவருக்கு குடுக்கறது என்னா சார் ஞாயம் ? “ என்று கேட்கிறார்.

 

பொது மருத்துவமனையின் வெளியே, வண்டியில் வாழைப்பழம் விற்று வரும் முனியாண்டியும் இதே கருத்தை பிரதிபலித்தார்.

Paandi1 

ராயப்பேட்டை மருத்துவமனையின் சவக்கிடங்கில் பணியாற்றும், லோகநாதன் சவுக்கிடம் பேசும் போது, சார் பாண்டியனாவது உயிரோட இருக்கற ஆளத் தான் சார் வண்டியில வச்சு தள்றாரு. நான் என் பெரண்ட்சு எல்லாம், பொணத்தையே வண்டியில வச்சு 10 வருஷமா தள்ளிகிட்டு இருக்கோம் சார். எங்களுக்கு மெடல் குடுக்கா அவருக்கு மட்டும் குடுக்கறது அநியாயம் சார் என்றார்.

 

பாண்டியனைப் போலவே வண்டி தள்ளும், விநோதகன், மற்றும் கணேசனும், பாண்டியனுக்கு மட்டும் மெடல் வழங்கியதில் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 pandi_3

பாரிமுனையில் வண்டி தள்ளுவோர் சங்கமும், வண்டியில் குல்பி ஐஸ் விற்போர் சங்கமும், வண்டியயில் காய்கறி விற்போர் சங்கமும், வண்டியயில் பழைய பேப்பர் எடுப்போர் சங்கமும், பாண்டியனுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க இருப்பதாக சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.

 

அனைத்து போராட்டங்களையும் திறம்பட சமாளிக்கும் கருணாநிதி, பாண்டியனுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Comments  

 
+1 #22 madurai raja 2010-10-11 00:18
Dear savukku,Iam a new reader of your satirical writings.My best wises to Savukku.the trouble in reading is the tamilfonts.Will it be changed soon?It takes a lot of time to read an article and the comments that follow.Pl.do the needed change.
Quote
 
 
+1 #21 Ambrose 2010-10-07 21:44
-HIGHLIGHT-
பாண்டியனாவது உயிரோட இருக்கற ஆளத் தான் சார் வண்டியில வச்சு தள்றாரு. நான் என் பெரண்ட்சு எல்லாம், பொணத்தையே வண்டியில வச்சு 10 வருஷமா தள்ளிகிட்டு இருக்கோம் சார்.
Quote
 
 
-1 #20 Savukku Vasagar 2010-10-03 18:49
http://www.vikatan.com/jv/2008/sep/24092008/jv0501.asp

Evargalai kurithu Junior Vikatanil vantha seithiyai padikkavum
Quote
 
 
0 #19 lakshmidharan 2010-10-03 12:16
KOLAIGNARAI KUSI PADUTHIRAVARGAL ANA 'MANADA MAYILAD' VARGALUKKUM ,ENNUM SILAI THUNAI NADIGAIKALUKKUM VIRUDU VAZANGA ERUPPADAGA KELVI PADUGIROMEY ...EDHU SARIYA...SAVUKKU AVARGALEY.... ADHUSARI KUSHBOO VUKKU TITLE THARANUMEY SPECIALAAGA...
Quote
 
 
+1 #18 Guna 2010-10-03 08:55
Dear Savukku,
All the private deemd university in tamilnadu is totally doing a great business. They are not running the education institution instead they are running "Off set Prinnting Company". Kindy write an article about Deemed university in Tamilnadu... intha kalvi thanthaigalin vandavalathai savukkil pathiyungalen....
Quote
 
 
0 #17 பாரி 2010-10-03 07:36
Ayya Savukku...We will build you a temple, if you come and probe into Bharathidasan University...a great University now in the hands of brokers. You will get very very many news and there are plenty of Kurumaraj and Jaffar Sets in Bharathidasan University, which you must definitely write. We thank you for writing about the way Information Commission treated Annamalai University specially. Please save Bharathidasan University - A Public Property as it is a State University and not the private property of Bharathidasan University.
Quote
 
 
0 #16 தமிழன் 2010-10-02 18:01
சார் அதிகபட்ச குறும்பு .. ஆனால் எல்லை மீரா வேண்டாம் .விசயம் என்னவோ சரிதான்
Quote
 
 
+5 #15 மானஸ்தன் 2010-10-02 15:53
குட்டு பட்டாலும் மோதிர விரலில் குட்டிப்பட வேண்டும், அது போல வண்டி தள்ளினாலும் முதல்வர் வீட்டில் வண்டி தள்ளனாதாம்பா மவுசு... பாரு ரெண்டு கோடி யாரு கொடுப்பா ப்லாட்பாரதுல வண்டி தள்ளுனா...என்ன அப்பன் வீடு காசா...யாரு வீட்டு எழவோ பாய போட்டு அழுவு...
Quote
 
 
+1 #14 balasubramani 2010-10-02 12:35
அயர்ன் வண்டி தள்ளுபவர்களை விட்டுவிட்டீர்க ளே.
மிகச்சரியான உதாரணம் சாய்பாபா வண்டி தான்.
பக்திக்கு பக்தியும் ஆச்சு,கலெக்ஷனும ் ஆச்சு.
பாண்டியணின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா.
ஆமா தினமனி கார்ட்டூனில் வந்த கலைஞர் படத்தின் தலைப்பு
என்ன?குள்ள நரிக்கூட்டமா?
Quote
 
 
0 #13 jeevan 2010-10-02 11:35
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: sir edhukku eppadi kamedy enru ninaikkamal unmaiyakave oru purachi pathaikku vazi pottolladhu shabhash;....,,,,,
Quote
 
 
0 #12 maniayn 2010-10-02 11:22
Neenga pinnunga boss
Quote
 
 
+2 #11 maniyan 2010-10-02 10:24
pandi_2

வண்டி பஞ்சராச்சுன்னா பாண்டி என்ன பண்ணுவாரு,
Quote
 
 
+1 #10 வரி கட்டும் அப்பாவி 2010-10-02 07:54
எங்கே செல்லும் இந்த பாதை யாரறிவாரோ
Quote
 
 
+2 #9 Kumar.T 2010-10-02 02:10
சும்மா வண்டி தள்லுனத்துக்கு இவ்வளவு சன்மானம் கொடுக்க மாட்டாரு, கூடவே
" ராஜாதி ராஜா, ராஜா மார்த்தாண்ட, ராஜா கம்பீர, ராஜா குலோத்துங்க, பராக்கிரம மாமன்னர் வருகிறார்...வருகிறார்" அப்டிநு சவுண்டு கொடுத்துக்கினே தள்ளிருப்பாரு
Quote
 
 
0 #8 MDMK 2010-10-01 23:39
yarudaya varippanam? theeya sakthi sagum mun nallathe seiya matara?
Quote
 
 
-1 #7 maniyan 2010-10-01 20:51
நான் சவுக்கின் தொடர்ச்சியான வாசகன், ஆனால் நான் இங்கு குறிப்பிடும் கருத்துக்கும் கட்டுரைக்கும் சபந்தமில்லை. நாலுபேர் சிந்திக்கவேண்டு ம் என்பதற்காகவும் பொது அபிப்பிராயத்தை அறியவேண்டுமென்ப தற்காக வும் பினூட்டத்தில் குறிப்பிடுகின்ற ேன், சமீபத்தில் நெற்றில் ''சிந்துசமவெளி'' என்று ஒரு சினிமாப்படம் பார்த்தேன் நயமாக அந்தப்படத்தை எடுத்திருக்கிறா ர்கள், ஆனால் அப்படத்தின் கதை என்னை மிகமோசமாகப்பாதி த்து நிம்மதியில்லாமல ் இனம்புரியாத ஏதோ ஒன்று எங்கோ தள்ளிவிட்டதுபோல ் உணர்கின்றேன், நடந்தகதையாகவிரு ந்தாலும் மோசமான சமுதாயச்சீர்கேட ான கதையாகவே என்னால் உணரமுடிகிறது, இப்படியொரு சினிமா தேவைதானா என்பதே எனது மனது திரும்பத்திரும் ப கேட்டுக்கொண்டிர ுக்கிறது, செகஸ் படத்தையும் பார்க்கும் மனநிலையுள்ள எனக்கு குடும்பப்பாங்கா ன ஒருகதையில் இப்படியொரு திருப்பம் தேவையா என்று அமைதியிழக்கவைத் திருக்கிறது அந்தப்படம், சவுக்கின் அபிப்பிராயத்தைய ும் பொது மக்களின் அபிப்பிராயத்தைய ும் வேண்டி நிற்கிறேன்,
Quote
 
 
0 #6 rukku 2010-10-01 20:08
பாண்டியம் செத்த பிணத்தையா வண்டியில் வைத்து தள்ளுகிறார். இந்தியத்துணைக்க ண்டத்திலுள்ள ஒருமானிலத்தின் தலைவிதியையல்லவா சளைக்காமல் தள்ளிக்கொண்டிரு க்கிறார்,
அரசவிருது, பட்டம், பதக்கம். அவார்ட், எல்லாம் எல்லோருக்கும் சும்மா தூக்கிக்கொடுத்த ுவிட முடியுமா என்ன. களவெடுதாயா, ஊழல்செய்தாயா, கட்டுக்கட்டாக பொய்யும் பித்தலாட்டமும்ச ெய்தாயா,குறைந்த து ஐயாயிரம் கோடி சொத்து வைத்திருக்கிறாய ா மெடல் பெறுவதற்கு, மூண்டு பொண்டாட்டி மட்டும் வைத்திருந்தால் கருணாந்தியன் றேஞ்சுக்கு ஓத்துப்போக முடியுமா,
Quote
 
 
+1 #5 தண்ணிவண்டி 2010-10-01 19:54
//தமிழக முதல்வரின் வண்டியைத் தள்ளிச் செல்லுபவர்களில் ஒருவரான பாண்டியன் என்ற டிஎஸ்பிக்கு,//

வண்டி தள்ள டி.எஸ்.பியா??? ஏன் சாதாரண போலீஸால தள்ள முடியாதா???
என்ன கொடும சரவணன் இது?????
Quote
 
 
+1 #4 Dr.C.Subramanian 2010-10-01 18:39
Ayya Savukku...We will build you a temple, if you come and probe into Annamalai University...a great University now in the hands of brokers. You will get very very many news and there are plenty of Kurumaraj and Jaffar Sets in Annamalai University, which you must definitely write. We thank you for writing about the way Information Commission treated Annamalai University specially. Please save Annamalai University - A Public Property as it is a State University and not the private property of Annamalai University.
Quote
 
 
0 #3 anbu 2010-10-01 17:18
savkku..careful savukku..but we are with you dont worry anbu
Quote
 
 
+1 #2 ராம் சரண் 2010-10-01 15:54
என்னதான் பிரச்னை என்றாலும் லொள்ளு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. அதிகமான லொள்ளூ அதிகபிரங்கித்தன மான லொள்ளாக மாறுகிறது. சற்றே கவனமாக எழுதவும்.
Quote
 
 
+2 #1 தமிழ் உதயன் 2010-10-01 15:51
ஏங்க, உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச்சா?.... ஏற்கனவே இந்த மதுரையை ஆண்டவர், அந்த சோழனின் பெயரை சொல்லி சில பஞ்சாயத்துக்கள் முடித்துள்ளதாக ஜுனியர் விகடன் சில மாதங்களுக்கு முன்பு எழுதியது. இன்றைக்கு என்னடானா இந்த பாண்டிய மன்னர் தள்ளுவண்டிக்கார ர்கள் வயிற்றி அடித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளிர ்கள்.

என்னமோ போங்க
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 142 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4543
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week50333
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month284380
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13200747