முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ரஞ்சிதாவின் பிரத்யேக பேட்டி. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 61
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 30 ஜூலை 2011 15:36

ரஞ்சிதா.. பாரதிராஜாவின் அறிமுகத்தில் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ரஞ்சிதா அறிமுகமான புதிதில் எப்படி பரபரப்பை ஏற்படுத்தினாரோ, அதை விட பரபரப்பு ஏற்பட்டது, நித்யானந்தாவோடு இருந்ததாக கூறப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பான போது.

 

பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்திருந்த ரஞ்சிதாவை சவுக்கு சார்பாக சந்தித்தோம். சவுக்கில், ரஞ்சிதாவுக்கு நடந்த அநியாயங்களை கண்டித்து எழுதியிருந்ததை படித்திருந்த ரஞ்சிதா, சவுக்குக்கு பேட்டி என்றதும், உடனே ஒப்புக் கொண்டார். ஆட்சி மாறியவுடன், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரஞ்சிதா தான் பட்ட வேதனைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

  

சன் டிவியிலும், நக்கீரனிலும் இந்தக் காட்சிகள் வெளியான போது எப்படி உணர்ந்தீர்கள் ?

 

இந்தக் காட்சி வெளியான போது, நான் கேரளாவில் ஷுட்டிங்கில் இருந்தேன்.   முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. நான் சம்பந்தப் பட்டதாக சித்தரித்து வெளியிடும் காட்சியை என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் எப்படி வெளியிடுவார்கள் என்ற அதிர்ச்சி தான் மேலோங்கியது. நம்பர் ஒன் சேனல் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சேனலில் இப்படிப் பட்ட ஒரு காட்சியை எப்படி ஒளிபரப்புவார்கள், அதுவும், சம்பந்தப் பட்ட நபர்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலா ஒளிபரப்புவார்கள் என்று முதலில் நம்பவவே முடியவில்லை.

 pic12

நான் சினிமாவில் ஹீரோயினாக இருந்த காலத்திலேயே பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காத காரணத்தால் இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. உடனடியாக எனக்கு மனதில் தோன்றியது, சென்னைக்கு திரும்பி, என்னுடைய தரப்பை சொல்லி, பொது மக்களிடம் இது உண்மையல்ல என்று சொல்லி இதை மறுக்க வேண்டும் என்பதே.   ஆனால், என் நண்பர்களும், உறவினர்களும், சென்னைக்கு திரும்பாதே என்று உறுதியாக தடுத்து விட்டார்கள்.

 

சினிமா நடிகை என்பதால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம் அவள் வாழ்கையை நாசப்படுத்தலாம் என்ற உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. என்னைப் போல எத்தனை பெண்களுக்கு இந்த கொடுமையிலிருந்து வெளியேறி வரும் துணிச்சல் இருக்கும் ? இவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் இப்படிச் செய்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.   இந்த கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது.

 

இந்த காரணத்தினாலேயே நான் எந்தப் பத்திரிக்கைக்கும் இது வரை பேட்டி அளிக்காமல் இருந்தேன்.

 

என்னுடைய அடையாளத்தையே அழித்து விட்டார்கள்.   எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு ஏதாவது உள்ளதா ?

 

 

இந்த காட்சிகள் ஒளிரப்பப் படும் முன்பு மிரட்டப் பட்டீர்களா ?

 

சன் டிவியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப் படும் முன்பு போனில் அழைத்து, நித்யானந்தாவின் மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கப் போவதாகவும், அவரின் திருவண்ணாமலை ஆசிரமத்தில் போதைப்பொருட்களை வைத்து அதை கைப்பற்றப் போவதாகவும், என்னை விபச்சார வழக்கில் கைது செய்யப் போவதாகவும், நித்யானந்தா மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப் போவதாகவும் கூறினார்.

 

இதையடுத்து என் குடும்பம் மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியது. மிகுந்த அச்சத்திற்கு ஆளானார்கள். நான் உடனடியாக கிளம்பி அமெரிக்கா சென்று விட்டேன்.

 

அதற்கு முன்பாகவே பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே லெனின் மூலமாக மிரட்டல் தொடங்கியது.   நேரடியாக என்னையும், ஆசிரம நிர்வாகிகளையும் லெனின் மிரட்டத் தொடங்கினார்.   ஏற்கனவே நித்யானந்தா அவர்கள் சொல்லியது போல முதலில் 100 கோடிக்கு தொடங்கிய பேரம் 60 கோடியில் வந்து நின்றது.

 ranjitha-46248-680x1024

நீங்கள் சொல்வது போல, அந்த காட்சிகள் பொய்யாக இருந்தால் நீங்கள் எதற்காக பேரம் பேச வேண்டும் ?

 

எங்களை மிரட்டிய ஸ்ரீதர் என்ற வழக்கறிஞர் உள்ளிட்ட நபர்கள், அவர்கள் ஒரு மிகப் பெரிய மனிதர் சார்பாகவே பேரம் பேசுவதாக தெரிவித்தனர்.   அந்தப் பெரிய மனிதர் யாரென்று தெரிந்து கொள்ள விரும்பினோம்.   அது தெரியாவிட்டால், நாளை இந்த மிரட்டல் தொடர்ந்து நடக்கும் என்றே நினைத்தோம்.   அந்தப் பெரிய மனிதரை ஆசிரமத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே 25 லட்ச ரூபாய் பணம் வாங்கிச் சென்றனர். ஆனால் சொன்னபடி பெரிய மனிதர் வரவில்லை, மார்ச் மாதத்தில் சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டதுதான் தெரியும்.

 

உங்கள் மீது தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டதா ?

 

என் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை. ஆனால் நித்யானந்தா அவர்கள் மீது சென்னை நகர காவல்துறையால் வழக்கு பதியப்பட்டது.   யாரோ சில வழக்கறிஞர்கள், நித்யானந்தா எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதாக அறிந்தேன்.

 

அது தவறு என்று நினைக்கிறீர்களா ?

 

காவல்துறை என்பது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா ? அந்த காட்சிகள் ஒளிபரப்பான போது, இது போன்ற காட்சிகளை ஒளிபரப்பியது தவறு என்று சென்னையைச் சேர்ந்த கல்யாணி என்ற வழக்கறிஞர் சென்னை நகர காவல்துறையிடம் சன் டிவி மீதும், நக்கீரன் மீதும், தினகரன் மற்றும் தமிழ் முரசு மீதும் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லையே ?  நித்யானந்தா மீது நான் எந்தப் புகாரும் கொடுக்காத நிலையில் எதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி நியாயமாக நடந்து கொள்ளும் காவல்துறையாக இருந்திருந்தால், வழக்கறிஞர் கல்யாணி மீதான புகாரின் மீதும் அல்லவா வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் ?

 

தமிழ்நாட்டுக்கு வந்தால் கைது செய்யப் படுவேன் என்று அப்போது செய்திகள் பரப்பப் பட்டன.   இது போன்ற கீழ்த்தரமான காட்சிகளை ஒளிபரப்பி அச்சில் ஏற்றிய பத்திரிக்கைகளை கைது செய்யாமல், இதனால் பாதிக்கப் பட்டுள்ள என்னை கைது செய்வேன் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு உண்மையில் இந்நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமே எனக்கு ஏற்பட்டது.

 

தேர்தல் முடிவுகளைப் பற்றி என்ன நினைத்தீர்கள் ?

 

எனக்கு ஏற்பட்ட அவமானமும் துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது. என்னுடைய வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தவும் முடியாது.     எனக்கு ஏற்பட்ட இந்த அநீதி களையப்படுவதற்காகவாவது ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறே நடந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

 

இந்தச் சிக்கலில் இருந்து எப்படி வெளிவந்தீர்கள் ?

 ranjitha-27229-680x1024

எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு.   பகவத் கீதையும் ஆன்மீகமும் எனக்கு இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற தைரியத்தை வழங்கியது.   இதற்கு உரிய தண்டனை சம்பந்தப் பட்டவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் நம்பினேன்.

 

நக்கீரன் பத்திரிக்கையை சார்பாகவும் மிரட்டப் பட்டீர்களா ?

 

நக்கீரன் சார்பாகவும் ஒருவர் என்னை நேரடியாக மிரட்டினார்.   பணம் கொடுத்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டப் பட்டேன்.   நக்கீரன் இதழில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆசிரமத்தில் ஒரு நாய் இறந்துவிட்டது என்றும், அதை என்னுடைய கணவரோடு தொடர்பு படுத்தி, என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிடுவது எந்த வகையில் நியாயம்.   துளி கூட எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இவர்கள் தானே பொறுப்பு.

என் தொடர்பாகவும், நித்யானந்தா தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்ட காமராஜ் என்பவர், தினகரன் நாளிதழ் எரிப்பு தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் மார்ஃபிங் செய்வது நக்கீரன் பத்திரிக்கைக்கு வழக்கமே என்றும், பெண் உடலில் ஆண் தலையைப் பொறுத்தி உண்மை போல செய்திகளை வெளியிட்டிருக்கிறோம் என்றும், தினகரன் சம்பவம் தொடர்பாக அட்டைப் படத்தில் வெளியான புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப் பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சாட்சியம் அளித்திருக்கிறார். இப்படிப் பட்ட பத்திரிக்கையை நடத்தும் ஒரு நபர், என்னைப் பற்றி கேள்வி எழுப்பி செய்திகள் வெளியிடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

 

அந்தக் காமராஜ் என்வரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது, நீரா ராடியா என்பவர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அவர் மனைவி ஜெயசுதா வேலை பார்ப்பதாக செய்தி வெளியிட்டதற்காக மான நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிந்தேன்.   வேலை பார்க்காத ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாக வந்த செய்தி மான நஷ்டம் ஏற்படுத்தினால், எனக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்கு ஈடு உண்டா ?   தன் மனைவியைப் பற்றி வந்த செய்தியால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை போல பல மடங்கு எனக்கு ஏற்படும், ஏற்பட்டிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டாமா ? தன் மனைவியைப் போலத்தான் ஊரில் உள்ள மற்ற பெண்களும் என்று நினைத்தால், இது போன்ற செய்திகளை வெளியிட மாட்டார்கள்.

 K14l

இது தவிர வேறு யாரும் மிரட்டினார்களா ?

 

இந்தக் கட்சிகள் ஒளிபரப்பான பிறகு, இவற்றை நியாயப் படுத்துவதற்காக, ஒவ்வொரு ஊரிலும், நித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிராக பொது மக்களே போராட்டம் நடத்துவதாக சன் டிவியைச் சேர்ந்தவர்கள் அவர்களே போராட்டங்களை உருவாக்கி நடத்தினார்கள்.   என்னுடைய நண்பர்கள் கூட தாக்கப் படுவோம் என்று அஞ்சினார்கள்.   அவர்கள் விரும்பாததால் பலரின் பெயரைக் கூட நான் இப்போது குறிப்பிட இயலாது.   அந்தச் செய்தியை திரித்து, திரித்து தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக சன் டிவி மற்றும் நக்கீரன் வெளியிட்டு வந்தார்கள்.   இப்படி எட்டு மாதங்களாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதிலேயே இவர்களின் உள்நோக்கம் எனக்கு நன்கு புரிந்தது.

 

அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

 

நான் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்.   இந்த புதிய அரசின் நிர்வாகத்தின் கீழ் நியாயம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.   அந்த தைரியத்தின் அடிப்படையில் தான் நான் புகார் அளித்தேன்.   நான் எனக்காக மட்டும் இந்தப் புகாரை அளிக்கவில்லை.   எனக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு காரணமானவர்கள், தண்டிக்கப் பட்டால் தான், இது போல மற்ற பெண்களை தவறாகச் சித்தரித்து, அதன் அடிப்படையில் இழிவான வியாபார லாபம் தேடும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.     எனக்கு ஏற்பட்ட இந்த அவமானமும் துன்பமும், வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கிறேன்.   என் விவகாரம் மூலமாக இது போன்ற அநியாயங்கள் என்றுமே அரங்கேறக் கூடாது என்றும் நினைக்கிறேன்.

 

பேட்டியை முடித்து வெளி வரும் போது, ஒரு உறுதியான ரஞ்சிதாவை பார்க்க முடிந்தது.

 

Comments  

 
+3 #98 பூபாலன் 2011-08-03 21:37
யோவ் சவுக்கு, நான் நடு நிலையாதானே பின்னூட்டம் போட்டிருந்தேன்.. ஏன் அதை வெளியிடல?
Quote
 
 
-1 #97 Italian 2011-08-03 16:21
நாம் இரு தரப்பு நியாயமனங்கலை கெட்க வென்டும்; ரஞித தரப்பை சவுக்கு பதிவு செய்துல்லது...அவ்வலவுதன்
Quote
 
 
0 #96 minky 2011-08-03 13:10
well said mr ram prasad. :lol: i agree with yu. exactly what u siad is needed for our society now .
Quote
 
 
+2 #95 afsan 2011-08-02 20:31
அப்பாடா இப்போ தான் சவுக்கின் நிஜமுகம் வெளிவந்துள்ளது. இதுவரைக்கும் இங்கு வெளியிட்டதை நம்பியது மிகப்பெரிய தவறு...
Quote
 
 
+3 #94 ASSISTANT PROFESSOR 2011-08-02 18:23
These kind of interviews and article will spoil our aim savukku....... If you dont have any article as worthy then not necessary to upload everyday.......
Quote
 
 
+10 #93 charles 2011-08-02 15:00
I have a great respect to you Mr. Savukku but don't support this two cheats, fooling others that the persons in the video are not them,
Quote
 
 
+22 #92 ஆதித்தன் 2011-08-02 05:07
சவுக்கு சமூக பொறுப்புள்ள தளமாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பு. தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூக சிந்தையுடன் செயற்படும் ஒர் பத்திரிகை இவ்வாறான செய்திகளை தவிர்த்திருக்கல ாம் என்பதே எனது கருத்து. ரஞ்சிதாவின் மீள்வருகையின் பின்புலத்தில நிச்சய்மாக ஒரு அரசியல் சித்து விளையாட்டு இருப்பது யாருக்கும் தெரியாதது அல்ல. இந்த சில்லறைதனமான செய்திகளுக்காக சவுக்கு நேரத்தை விரயமாக்குவதை தவிர்த்து தொடர்ந்தும் சவுக்கு சவுக்காகவே இருக்க வேண்டுமே அல்லாமல் சாமரையாக அல்ல.
Quote
 
 
-14 #91 Baski77 2011-08-02 03:06
நீதி கிடைகட்டும்.... ஒரு பெண்னின் உரிமை இல்லாமல் அவரின் அந்தரஙதை வெளியெடுவது பெரும் தவறு...
Quote
 
 
+10 #90 sathish123 2011-08-01 23:08
சவுக்கு கும் நக்கீரன் கும் இனிமேல் எந்த வித்தியாசமும் இல்லை. சவுக்கு வருங்காலத்தில் தமிழகத்தில் ஜால்ராவில் எல்லா பத்திரிக்கையும் மிஞ்ஜி விடும். அரசனை நம்பி (சவுக்கு) புருசனை (ஆன் லைன் பத்திரிக்கை) கைவிட்ட கதை தான் எனக்கு.
Quote
 
 
+8 #89 Rajesh Kumar 2011-08-01 20:50
i don't belive this.
i felt savukku is not true.
hereafter i won't enter your site.

i spend so much time with savukku. but now all are wast.
Quote
 
 
+13 #88 Aargeeyen 2011-08-01 20:25
If savukku is going to behave like this, i will definitely stop reading this site..

Please never ever try to make people fool. Then there is no difference between you and others..

I really felt shame on you after reading this article.

You are also become one among the cheaters.

Let us give you a chance to change yourself...
Quote
 
 
-25 #87 RaBaSha 2011-08-01 19:28
நண்பர்களே, இந்த பேட்டியில் எங்கும் சவுக்கு நித்தியானந்தா செய்வது/செய்தது சரி என்று கூறவில்லை. ரஞ்சிதா தரப்பில் உள்ள ஆதங்கத்தை / நியாயத்தை மட்டுமே வெளிக்கொணர முற்பட்டுள்ளார் . படுக்கையறையில் கேமராவை வைப்பது, அதை வைத்து மிரட்டுவது... இதெல்லாம் தவறு என்று மட்டுமே கூறமுற்படுகிறார ் என்று மட்டுமே நாம் எடுத்துக்கொள்ளவ ேண்டும்.
Quote
 
 
+25 #86 Ulagalandhaperumaal 2011-08-01 19:17
சமீப காலமாகத்தான் சவுக்கை படிக்க ஆரம்பித்திருக்க றேன் ..
பொறுப்பாக எழுதுங்கள் சார்..
குற்றவாளிகளை, ஏமாற்றுக்காரர்க ளை, நாதாரிகளை நியாயப்படுத்தாத ீர்கள்
Quote
 
 
+15 #85 bharathinesan 2011-08-01 17:41
கூடா நட்பு என்று ஒருத்தர் சொன்னாரே அது இது தான்.
இந்து மதத்தைப் பற்றி அறிய கண்ணதாசனின் " அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தக வரிசையைப் படிக்கவும். எந்த மதத்தையும் தாக்கி எழுத யாருக்கும் உரிமை இல்லை. தெரியாத ஒன்றைப் பற்றிப்பேச நினைப்பது வருத்தத்தை அளிக்கின்றது.
இந்த பேட்டி தேவை இல்லாதது. ஒரு கோமாளி,ஒரு பணத்துக்காக எதையும் செய்பவன், ஒரு மிரட்டல்வாதி நடத்திய நாடகம். இதில் மக்கள் நாம் தான் முட்டாளக்கப்படு கிறோம் என்பதை உணர வேண்டும்.
Quote
 
 
+14 #84 katturaja 2011-08-01 15:30
we dont expect these type of interviews from savuku. dont waste your precious time.its a humble request from your sincere wellwisher.
Quote
 
 
+11 #83 rms 2011-08-01 14:18
Your articles have been interesting and truthful. Two minuses do not make a plus. All of us are aware of these pseudoswamiji's and all their illegal activities. Please do not try to justify their actions.
Quote
 
 
-17 #82 dhass 2011-08-01 14:12
காமராஜ் வீட்டு பெட்ரூமிலும், கலானிதி பெட்ரூமிலும் இந்த காட்சி தானே கேமரா வெச்சா பதிவாகும் . அதையும் இப்டி வெளியிடுவாங்கலா ? பனத்துக்காக அதயும் செய்வாங்க .இது அப்பட்டமான உரிமை மீறல்.
சவுக்கு சார் எங்க பொள்ளாச்சிக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி
Quote
 
 
-8 #81 vennai 2011-08-01 13:27
ரன்சிதா நல்லவரா கெட்டவரா என கேட்பது தேவயற்றது. தனி மனித செயல்கள் டிவியில் ஒலிபரப்பபடுவது குற்றம். அப்படி செய்வது பரவாயில்லை என்றால் அதற்கென்று தனி 24 மனி நேர சேனல் தேவைப்படும்.
Quote
 
 
+5 #80 வெத்துவேட்டு 2011-08-01 12:22
எங்கே சவுக்கு என்னோட பின்னூட்டமே காணோமே .
Quote
 
 
-10 #79 kalappu 2011-08-01 10:51
ஊடக துறையில் நடக்கும் அவலங்களை சுட்டி காட்டும் சவுக்கு, சமீபத்தில் நடந்த மிக கேவலமான இந்த விஷயத்தை அலசுவது சரியே...அதுவும் ஒரு பெண்ணின் படுக்கை காட்சிகளை கூவி கூவி விற்றவர்களே கயவாளிகள்..இதே சம்பவம் அமெரிக்காவிலே மற்ற பண்பட்ட நாடுகளிலோ நடந்து இருந்தால் அந்த பத்திர்க்கைகள் கிழிக்கப்பட்டு இருக்கும்..ரஞ்சிதா கருத்து போட்டவர்களில் யாருக்கு துரோகம் செய்தார் ? துரோகம் பற்றி பேச அருகதை உள்ளவர் ரஞ்சிதாவின் கணவர் தான்.. இதில் கொடுமை என்ன வென்றால் கற்பு என்பது பெண்ணடிமை யின் ஆரம்பம் என்று சொல்லும் திகவினர் இந்த விஷயத்தை பெரியாதாக்கியவர ்கள் ..அந்த பெண் மீது தவறு இல்லை என்று தன கொள்கை படி சொல்ல திராணியற்றவர்கள ்...அடேய் குஞ்சாமணி பெரியார் வழியில் நின்று சொல் ...அந்த பெண் மீது விழும் சொல்லடிகள் நியாமனாதா?
Quote
 
 
+21 #78 Ramani 2011-08-01 10:51
சவுக்கு உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் சன் டிவி, எப்படி சட்டப்படி தவறு செய்தது என்று எடுத்து சொன்னது போல், நித்தியானந்தாவி ன் போலித்தனத்தை பற்றி எழுத வேண்டும். உங்கள் பத்திரிக்கை தர்மம் பற்றி அனாவசியமான சந்தேகம் வராது.

நித்தியானந்தாவை தோலுரித்து காண்பிக்கப்பட வேண்டும். ஆனால், சன் டிவி செய்த முறை தவறு. அதே போல், நித்தியானந்தாவை வைத்து நிறைய பேர் ஆதாயம் அடைந்துள்ளனர். பத்திரிக்கை உலகம், சினிமா உலகம் எனப்பலர், அந்த ஆள் வீசிய காசுக்கு சேவகம் செய்துள்ளனர். அவர்கள் தோலை உறியுங்கள் (சட்டத்தின் எல்லைக்குள்)...
Quote
 
 
+11 #77 puli 2011-08-01 10:48
சவுக்கு உங்க்ளூக்கு இது தேவை இலலாத வேலை. எவ்வலவு பனம் வாங்கினாய்
Quote
 
 
-11 #76 Ramani 2011-08-01 10:39
இங்கே நிறைய பேர், சவுக்குக்கு தன் கண்டனத்தை தெரிவித்தார்கள் . சவுக்கு பேட்டியை இரண்டு மூன்று முறை படித்தேன். சவுக்கின் கேள்விகள் நியாயமானவை. நடிகை ரஞ்சிதா சொன்னதை அப்படியே எழுதி இருக்கிறார். இதில் சவுக்கு ரஞ்சிதா ஆதரவு எங்கே என்று தெரியவில்லை.

சன் டிவி அந்த காட்சிகளை அப்படி ஒளி பரப்பியது சட்டப்படி குற்றம். நித்தியானந்தா முகத்திரையை கிழிக்கிறேன் என்று, ரஞ்சிதாவை காட்டி இருக்க தேவையில்லை. ரஞ்சிதாவின் முகத்தை காட்டியது, தனி மனித உரிமையில் தலையிடுவது சட்டப்படி குற்றம். விலை மாதுவை கைது செய்தால் கூட, அவர் கஸ்டமரிடம் இருந்ததை வீடியோ எடுத்து காண்பிக்க தேவையில்லை. ஆனால், அந்த வீடியோ முழுக்க முழுக்க உண்மை. இதை நிறைய லேப் உறுதி செய்துள்ளது. இதை ரஞ்சிதா, நித்தியானந்தா மறுப்பது சன் டிவியின் தவறை வைத்து மறைக்கப்பார்க்க ிறார்கள்.

நித்தியானந்தா ஒரு போலிச்சாமியார். அதிசயம் என்னவென்றால், அவருக்கு இன்னும் கூட்டம் இருப்பதுதான். அவர்(ன்) பக்தர்களின் வீக்னெஸை பயன்படுத்தி கொண்டார்(ன்). சுருக்கமாக சொன்னால், இதில் யாரும் யோக்கியம் இல்லை. சன் டிவி செய்தது சட்டப்படி குற்றம். தனி நபரின் அனுமதி இல்லாமல், அப்படி ஒளி பரப்பியது. அவர்களுக்கு பரபரப்பு தேவை. நக்கீரன் ஆட்கள் இந்த வீடியோவை வைத்து மிரட்டியது சட்டப்படி குற்றம். நித்தியானந்தா தன்னை பேச்சிலர் என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றியது தவறு. சட்டப்படி குற்றமா என்று தெரிய வில்லை. ஏனென்றால், அந்த ஆள் பக்தர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு இந்த வேலையை செய்துள்ளான். ரஞ்சிதா இந்த மாதிரி ஆட்களிடம் போய் சேர்ந்துள்ளது, பணத்திற்குதான். உண்மையாக உழைத்து பிழைக்க நிறைய வழிகள் உண்டு. இவர் சொகுசு வாழ்க்கைக்கு மயங்கி இருந்து இருக்கிறார்.

சன் டிவி, நக்கீரன் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பக்தர்கள் மற்றும் சமூகம் தான் நித்தியானந்தாவை யும், ரஞ்சிதாவை தண்டிக்க முடியும்.
Quote
 
 
+20 #75 nadagapriyan 2011-08-01 09:05
சவுக்கு உங்களுக்கு பேட்டி எடுக்கவேண்டும் என்றால், சமூக போராளிகள் எத்தனையோ பேர் உள்ளனர், அவர்களில் பலர் வெகு ஜன தொடர்பின்றி உள்ளனர். தயவு செய்து அத்தகையோரை நேர்காணல் செய்து சவுக்கில் வெளியிடவும்.இதனால் அவர்களின் போராட்டம் மற்றும் பிரச்சனைகள் வெளி உலகிற்கு தெரிந்து ஆதரவும் கிடைக்கும்.சவுக்கை போன்ற போராளியிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். ஒரு அளவிற்கு மேல் நீங்கள் இந்த விவகாரத்தில் தனிமனித உரிமை மீறல் என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள் ஆனால், ஜாபர் விசயத்தில் நீங்கள் அவர் பணி மற்றும் ஊழல் சார்ந்த குற்றங்கள் தவிர்த்து, ரேவ் பார்டி நட்சத்திர ஓட்டல் விவகாரங்கள் பற்றி எழுதியதும் தனி மனித உரிமை மீறல் அல்லாமல் வேறு என்ன? எனவே உருப்படியான விஷயங்களை பற்றி மட்டும் எழுதவும்! ரஞ்சி, நித்தி போன்ற "உருப்படிகளை" பற்றி எழுதாதீர்கள் !
Quote
 
 
-10 #74 அன்பு 2011-07-31 23:00
இங்க கருத்து சொல்லிருக்குரவங ்க எல்லோரும் சரியாத்தான் சொல்லிருக்கீன்க ளா?
எவ்வளவு பெரிய அயோக்கியர்களாக இருந்தாலும் அவர்களுடைய படுக்கையறையை எட்டி பாக்க யாருக்கும் உரிமை கிடையாது...
உடனே பொது வாழ்க்கை, பொது மனிதர்னு யாராவது சொல்லாதீங்க...
இவங்க தப்பானவங்கதான்... சவுக்கு சொல்ல வந்தது மனித உரிமை மீறல் பற்றி...
அது புரியாம.........
Quote
 
 
+8 #73 yolk 2011-07-31 21:44
i doubt Savukku is also slowly going into paths of Nakkeraan..savukku's credibility is in question with this article..
Quote
 
 
+14 #72 Vira 2011-07-31 21:23
சவுக்கு இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி இருக்க வேண்டாம். பல கோடி மக்களை ஏமாற்றியவனை பற்றி நினைக்க வேண்டுமே தவிர, இதனை மனித உரிமை மீறலாக எடுத்துக்கொளளக் கூடாது.
Quote
 
 
+16 #71 Mohanraj Subramani 2011-07-31 21:15
கடவுள் பெயரை சொல்லி உலகை ஏமாற்றுபவன் அந்த நிதியாணந்தா
அவனை நீங்களுமா ஆதரிக்கிறீர்கள்
அவனும் அவளும் ஒன்றாக இருப்பது வேண்டுமானால் அவர்களுடைய சொந்த விஷயமாக இருக்கலாம்
அதற்காக அந்த மோடீ மாஸ்தானை ஆதரிக்க கூடாது
குற்றங்களைலேயே மற்றவனுடைய அறியாமையை பயன்படுத்துவதுத ான் மிக அதிகமான குற்றம்
அதை செய்யும் இதை போன்ற போலிகளை மூச்ந்தியில் வைத்து கொள்ள வேண்டும்
Quote
 
 
+16 #70 Suresh Raja 2011-07-31 20:59
என்னோட கமென்ட ஏன் போடல? கமெண்ட் போடுவதும் போடாததும் உங்க உரிமை... ஆனா ஏன்னு கேட்டா பதில் சொல்றதும் உங்க கடமை. இந்த கட்டுரை உங்க மேல இருந்த மதிப்ப வெகுவா கொறச்சிடுச்சு.... இந்த மாதிரி ரெண்டு கட்டுரை இனி வந்தா நீங்க பாதி தோழர்களை இழக்க வேண்டி வரும், என்னையும் சேத்து... :oops: :oops:
Quote
 
 
+13 #69 Dhanasekaran 2011-07-31 19:08
You will loose one reader, If u continue like this msgs............ Don't support fakes (Nithyanandha)......
Quote
 
 
+13 #68 savukku not good 2011-07-31 18:15
நான் சவுக்கை ஒரு நடு நிலையான, நியாத்துக்கு போராடும் ஒர் ஷக்தி ஆக நினைத்தேன்.... ஆனால் இதை படித்த பின்பு அப்படி நினக்கவில்லை. சவுக்கு மற்றவரர்களின் தவறுகலை விமர்சனம் செய்தது.... இப்போழுத சவுக்கின் தவறை யார் விமர்சனம் செயவது.
Quote
 
 
+33 #67 shanmuganathan 2011-07-31 17:56
I WISH TO REPEAT Mr.Mubarak mohameds words.Pl.remember your viewers are common. pl.be support to the fact.Quoting Mubarak mohamed:
சமீப காலமாகத்தான் சவுக்கை படிக்க ஆரம்பித்திருக்க ிறேன் ..
பொறுப்பாக எழுதுங்கள் சார்..
குற்றவாளிகளை, ஏமாற்றுக்காரர்க ளை, நாதாரிகளை நியாயப்படுத்தாத ீர்கள்...
Quote
 
 
+9 #66 பொட்டு அம்மன் 2011-07-31 17:17
நன்றாக சொன்னீர்கள் திரு ராம் பிரசாத் அவர்களே! வள்ளலாரை நினைத்துபார்க்க நீங்களும் ஒருவர் இருகிறீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது..வள்ளலாரை அன்று தமிழகம் பின்பற்றி இருந்தால் இன்றைக்கு ஏற்ற தாழ்வு இல்லாத ஒருமைப்பாட்டு உரிமையுள்ள நல்ல சமுதாயமாக மாறி இருக்கும். தமிழர்கள்தான் என்றைக்கும் நல்லதை பின்பற்ற தெரியாதவர்கள் ஆயிற்றே ...போலி சாமியார்களையும் சினிமா நடிகர்களையும் நம்பியே ஏமாறுபவர்கள் இந்தியாவில் நம் தமிழர்கள் மட்டுமே...
Quote
 
 
-4 #65 Ram Prasad 2011-07-31 14:21
I wish i can afford to buy a land rover and a helicopter like Jaggi. http://www.tehelka.com/story_main50.asp?filename=hub060811You_me.asp
Quote
 
 
+42 #64 raguஊ 2011-07-31 14:06
ரஞ்சிதா சொல்வது சரியென்று நினைத்தால் உங்களோடு வைத்து கொள்ளுங்கள் .தேவையில்லாமல் அவரை சரியான நபர என்று முன்னிலை படுத்தவேண்டாம் .
Quote
 
 
+16 #63 Ram Prasad 2011-07-31 13:44
எந்தச் சாமி நல்லச்சாமி எந்தச் சாமி கள்ளச்சாமி என்று யாரும் கூறமாட்டீர்களா? எனக்குத் தெரிந்தவரையில் இந்து மதத்தில் சாமியார்கள் என்றால் சொத்து பத்தெல்லாம் எதுவும் இருக்காது, துறவறம் மேற்கொள்வார்கள் . திருமணம் செய்து கொண்ட சாமியார்கள் வரிசையில் ஜாக்கி வாசுதேவ், வேதாத்திரி போன்றவர்கள்.....கோடிக்கணக்கில் சொத்து எதுவும் இல்லாமல் எத்தனை சாமியார்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சாமியார் பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டால் அது கள்ளச்சாமி, ஆனால் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருந்தாலும ் காம உணர்வை வெளிப்படுத்தாமல ொ அல்லது மூடி மறைத்தோ இருந்தால் அது நல்லச்சாமியா? கட்டிபுடி அம்மா சாமி, ஜாக்கி சாமி, சாய்பாபா சாமி, ஆர்.எஸ்.எஸ் ரவிஷங்கர் சாமி, மேல்மருவத்தூர் அம்மா சாமி, ஜாதி வெறிபிடித்த உடுப்பி சாமிகள் என்ன எல்லா சாமிகளும் கோடி கணக்கில் சொத்து வைத்திருக்கிறார ்கள். அவர்களெல்லாம் நல்லச்சாமிகலாம் , நித்தி கள்ளச்சாமியாம். யூதர்களை கொத்து கொத்தாக -ஹிட்லர் கொலை செய்த பொழுது வந்து காப்பாற்றாத சாமி இன்னமும் வருமென காத்துக் கொண்டிருக்கும் யூத நம்பிக்கையாலர்க ளிருந்து, இலங்கையில் கொத்து கொத்தாக மக்கள் கொலை செய்யப்பட பொழுது வரை எந்த அப்பாவிகளையும் காப்பாற்ற வக்கில்லாத கடவுளர்கள் நம்மை நம் கஷ்டத்திலிருந்த ு காப்பாற்றிவிடும ் என நம்புவதே சுயநலமில்லையா? நித்தியானந்தா ரஞ்சிதாவை பாலியல் தொந்தரவு செய்திருந்தாலோ, அல்லது சின்னஞ் சிறு பெண்களை நம்பவைத்து ஏமாற்றி இருந்தாலோ நித்தியானந்தா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யலாம். பல் இருக்கறவன் பக்கோடா சாப்புடறான். பிறகு இது ரஞ்சிதாவின் குடும்ப விவகாரம். வன்முறையோ, பாலியல் தொந்தரவோ எதுவும் நடக்காத இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நம் நாட்டிற்குத் தேவை கடவுளர்களும், கோயில்களும், சாமியார்களும் இல்லை. நல்ல மனோதத்துவ நிபுணர்கள். வாழ்க்கையில் யாருக்குத்தான் பிரச்சனையில்லை. மன நிம்மதி கிடைக்க வேண்டுமென்றால் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நமது வாழ்க்கையை நாம் தீர்மானித்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கில் Software engineer களை உருவாக்கும் நம் சமூகத்தில் நிறைய மனோ தத்துவ நிபுணர்களும், அறிவியல் அறிஞ்சர்களும், விஞாநிகளும் உருவாக்கப்பட வேண்டும். எந்தக் கோயிலும் எந்தச் சாமியும் நமக்குத் தேவைப்படாது.
Quote
 
 
+40 #62 singam 2011-07-31 13:40
கேள்விகள் நடுநிலையாக இல்லை ரஞ்சிதவிற்கு அதரவு அளிப்பதாக மட்டுமே உள்ளது நடந்தது என்னவென்று தெரியாத போது இது போன்ற கேள்விகள் தேவையா சவுக்கு அண்ணா
Quote
 
 
+36 #61 அன்பு 2011-07-31 12:46
தனி மனித ஒழுக்கத்தை பற்றி சவுக்கின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றி தெளிவாக சொல்லவும்.
.

இந்த விசயத்தில் நக்கீரன், சன் டிவி, நித்தி, 'ரஞ்சிதா அனைவரும், கேவலமான விசயங்கள் புரிந்ததில் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் இல்லை.

சவுக்கு அதிகமாக படிக்கும் திருக்குறளில் ஓழுக்கத்தை பற்றி ஏதும் படித்ததில்லையா?

சவுக்கிற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
Quote
 
 
+15 #60 Rajiv Rengasamy 2011-07-31 12:37
Plz jus for sake writing against Kalaingar & Co. plz dont write a article like this and all....I have a gr8 respect for u.....
Quote
 
 
+16 #59 Rajasekar 2011-07-31 12:22
Hi Savukku,
If this is an interview, then its ok. But it shows you are supporting to Ranjitha. Pl don't do that
Quote
 
 
-19 #58 ALAGAR 2011-07-31 12:10
GOOD
Quote
 
 
-21 #57 நித்தில் 2011-07-31 12:03
இந்த பதிவில் எங்குமே நித்தியை நியாயபடுத்தவில் லை என்று நினைக்கின்றேன்.மத்தபடி ரஞ்சிதாவை, நீ ஒன்றும் உத்தமியில்லையே என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை,கொஞ ்சம் மரியாதையாக சொன்னால், எந்த நாய்கும் உரிமையில்லை.
Quote
 
 
+12 #56 AdiTamilar 2011-07-31 11:59
முதலில் அவர்கள் நிரூபிக்கட்டும் அப்புறம் இந்த மாதிரி பண்ணலாம் சவுக்கு அவர்களே
Quote
 
 
+9 #55 Rangaraj Rajendran 2011-07-31 11:49
Dear Savukku,you want to expose SUN TV and Nakkeeran.OK.Then to defame any person in the shield of media freedom is totally condemnable.OK.But,do Ranjitha and Nithyandha have any morality to conduct press meet?To support the privacy of women and to act against the atrocities on women is correct.But,Dont get into the net of Nithyanandha by supporting Ranjitha.Does she speak truth.Even now she participated in the so called Gundalini programme? Even now she is in the net of Nityananda and she is operated by him beyond the matters we dont know.If not,why dont she deliberately accept the affair with Nithyananda.But they want to fool all the people and media that the Video is bocus.Savukku,We accept the charges against SUN TV,Nakkeeran.Please dont support all these immorals in the name of privacy.
Quote
 
 
+38 #54 உங்களில் ஒருவன் 2011-07-31 11:44
நாங்கள் உங்கள் நேர்மையை சந்தேகப்படவில்ல ை, உங்களின் சில கொள்கைகளில் நாங்கள் மாறுபடுகிறோம். சவுக்கு செய்தாலும் அது குற்றமே, சவுக்கு சொல்கிறதே என எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் மாக்கள் இல்லை, சிந்திக்கும் அறிவு அதிகமாவே பெற்ற சவுக்கு வாசகர்கள் என்ற மக்கள்.

இதற்க்கு மேலும் தாங்கள் ரஞ்சிதாவை ஆதரிப்பதை மட்டும் செய்து அவர் கூறும் பொய்களையும் நித்யானந்தாவின் லீலைகளையும் விமர்சிக்காவிட் டால், தங்களை பற்றிய எங்கள் விமர்சனங்கள் தொடரும், தங்களின் நேர்மையை பற்றி எங்களுக்கு சந்தேகமும் எழும். சவுக்கு இவற்றிற்கு இடம் கொடுக்கவேண்டாம் என விரும்பி கேட்டுகொள்கிறேன ், நாங்கள் சவுக்கிடம் எதிர்பார்ப்பது இவை போன்ற செய்திகளை அல்ல.


நன்றி,

உங்களில் ஒருவன்.
Quote
 
 
+43 #53 உங்களில் ஒருவன் 2011-07-31 11:41
சவுக்கு அவர்களுக்கு,

ஜாபர் சேட் போன்ற கயவர்களை எதிர்க்கும் நீங்கள் ரஞ்சிதாவை ஆதரிப்பது போல் பேட்டி கண்டு செய்தி வெளியிடலாமா?
நாங்கள் சவுக்கிடம் எதிர்பார்ப்பது இதை அல்ல. நெற்றிக்கண்ணை திறந்திருக்கும் போது யார் செய்தாலும் குற்றமே.

நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் உண்மையே, அவை சித்தரிக்கப்பட் டவை அல்ல(இது லேப் மூலம் உறுதியானது)
அவர்களின் அந்தரந்தங்களை அம்பலப்படுத்திய து மனித உரிமை மீறலே(நக்கீரன், சன் முதலியானோர் இதில் குற்றவாளிகள்)
மீண்டும் மீண்டும் அந்த டேப் பொய் என்று ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் கூறுவதை ஏன் சவுக்கு கண்டிக்கவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை?
தவறு செய்யவில்லை என்றால் ஏன் 25 லட்சம் கொடுக்கவேண்டும் அந்த பெரிய மனிதரை பார்க்க?
குண்டலினி சக்தி என்பது யோகா கலையை முற்றிலும் அறிந்தவர்கள் பெரும் சக்தி என்பர். அக்கலையை பயன்படுத்தி அந்தரத்தில் மிதக்க வைப்பேன் என்று கூறி நித்யானந்தா நடத்திய கேலிக்கூத்தை சவுக்கு காணவில்லையா இல்லை கண்டுகொள்ளவில்ல ையா?
நக்கீரன் சன் ஆகியோர் குற்றவாளிகள், அதேபோல் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் குற்றவாளிகளே, இதற்கான வாதங்களை ஏன் சவுக்கு எழுதவில்லை? இப்படி செய்வதன் மூலம் நித்யானந்தாவின் திருட்டுதனங்களை யும் எமாற்றுதனத்தையு ம் ரஞ்சிதாவின் பொய்யையும் சவுக்கு ஆதரிப்பது போல் ஆகாதா? சாதாரண வாசகனான எனக்கே இப்படி தோன்றும்போது சவுக்குக்கு இது தோன்றாதா?
மனித உரிமைக்காக ரஞ்சிதாவை ஆதரிப்பது சரியே, அதேபோல் அவர் பொய் சொல்லுவதையும் ஏமாற்றுவதையும் ஏன் சொல்ல மறுக்கிறீர் சவுக்கு?
Quote
 
 
+25 #52 Thlieep 2011-07-31 11:01
Savukku, this is really not good, dont lose your way.. please..
Quote
 
 
+12 #51 ebey 2011-07-31 10:59
Dear Savukku,

This is the first time i'm posting comment in your site, but i used to read your articles for a long time...

It was really a amazing job you doing. There is no doubt on that. I have recommended and encouraged many friends to read also...

Most of the time I feel you are Mr.Right...But some time I think your article are biased and trustworthy...

By publishing this kind of interview and supporting them is really questionable.
Hope you know the authenticity of this tape is proved in both hydrebad and delhi government lab. This is also known to everyone...

I admire by the way you usually publish the proof for each case to make allegation on them..

If the tape is morped, please show the same kind of proof from any lab and defend her...don't spoil your name by blindly support this kind of people like how other journalist doing...

This is my kind advice, hope you consider this comment.
Quote
 
 
+4 #50 நேதாஜி 2011-07-31 10:49
நித்யானந்த ரஞ்சிதா சம்பவம் உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது..... ஆனால் இங்கு தண்டிக்க பட வேண்டியவர்கள் பணம் என்றால் பிணத்தை கூட கட்டி தழுவ விரும்பும் சன் குழுமம் தான்.... சன் தொலைகாட்சியில் தினமலர் மைக் அழிக்க பட்டு காண்பிக்க படுகிறது, இதில் இருந்தே எவ்வளவு கீழ்த்தரமான சில்லறை புத்தி கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது ..... இவர்களை விட்டால் தமிழினமே நாழி அழிந்து விடும்...... கேடி மாறன்களை சிறையில் அடித்தால் மட்டுமே தமிழ் நாடு உருப்படும் ....
Quote
 
 
+33 #49 shanmugamsiva 2011-07-31 10:29
நான் சவுக்கின் நேர்மையை கடுமையாக சந்தேகிக்கிரேன் . நக்கீரன்,சன் டீவி யை பழி வாங்குவதாக எண்ணி இது போல் பேட்டி வெளியிட்டு நித்தியானந்தா போன்ற கள்ளச்சாமிகளை சமூகத்தின் முன் நியாயப்படுத்த முயலக்கூடாது. 'ரஞ்சிதா மீது பரிதாபம் ஏற்பட்டலும்,நித ்தியானந்தரின ஏமாற்று தில்லாலங்கடி கண்கட்டு வித்தைகளை உண்மையானவை என்று நியாயப்படுத்தும ் வரை 'ரஞ்சிதாவும் குற்றவாளிதான்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 84 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2606
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49421
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262240
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784359