முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சுப்ரமணியன் சுவாமி என்கிற பாசிஸ்ட்… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 71
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 30 ஜூலை 2011 23:27

வேறு எந்த வார்த்தையாலும் சுப்ரமணியன் சுவாமியை வர்ணிக்க முடியவில்லை.   கடந்த ஆகஸ்ட் 16 அன்று மும்பையிலிருந்து வெளி வரும் டிஎன்ஏ என்ற நாளிதழில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில், இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற போக்கில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருக்கும் 370 என்ற சிறப்புப் பிரிவை நீக்க வேண்டும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் மசூதியை நீக்க வேண்டும், அது போல 300க்கும் அதிகமாக இந்தியாவில் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை நீக்க வேண்டும், இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுவதை தடை செய்ய வேண்டும், பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஒரு பகுதியை ஆக்ரமிக்க வேண்டும், இந்துக்கள் போர்க்குணத்தோடு மாற வேண்டும், இந்துக்கள் 83 சதவிகிதம் இருக்கும் இந்தியாவில் இந்துக்கள் ஆட்சி நடைபெற வேண்டும் என்று எழுதியிருந்தார். இது போன்ற கட்டுரையை சுப்ரமணிய சுவாமி எழுதுவதற்கான பின்புலம், மும்மையில் நடந்த குண்டு வெடிப்பு.

swamy

வெடிகுண்டு வைத்து, அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொலை செய்யும் பாதக செயலைச் செய்பவர்களை நாம் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், இதற்கெல்லாம் காரணம் இசுலாமியர்கள் தான் காரணம் என்று கூறுவது விஷமத்தனமானது.

இந்தியாவில் தீவிரவாதம் பரவ, அதன் வேரில் நீர் விட்டு, வளர்த்தது இந்திய ஆட்சியாளர்கள் தான்.   காஷ்மீரில், ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதா, பாக்கிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடாக இருப்பதா என்று முடிவெடுக்க, இந்தியா கொடுத்த வாக்குறுதியை அது இன்று வரை நிறைவேற்றவில்லை.   370வது அரசியல் சட்டப் பிரிவு என்பது, காஷ்மீர் மக்களுக்கு அன்றைய பாரதப் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி.  

இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் மிகுந்ததற்கு முக்கிய காரணம், 1992ல் நடந்த பாப்ரி மசூதி இடிப்பு. 1991ம் ஆண்டு சோம்நாத்தில் தொடங்கிய அத்வானியின் ரதயாத்திரை இந்தியாவில் தீவிரவாதம் பரவுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இது போன்ற குண்டு வெடிப்புகளால், அப்பாவிகள் உயிரிழப்பதோடு, நின்று விடுவதில்லை. அதற்குப் பிறகு நடக்கும் காவல்துறையின் விசாரணைகளால், எண்ணற்ற முஸ்லீம் குடும்பங்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஒரு சிறந்த ஜனநாயக நாடாக, வளர்ந்த பக்குவப்பட்ட மக்களாக வளருவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால் சுப்ரமணியன் சுவாமி செய்யும் பிரச்சாரமானது, ஹிட்லரின் கோயபல்ஸ் செய்யும் பிரச்சாரத்திற்கு நிகரானது.

300க்கும் அதிகமான, கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற கருத்து, மதநல்லிணக்கம் என்ற இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அடி நாதத்திற்கே வெடி வைப்பதாகும்.

ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்குப் பிறகும், முஸ்லீம்கள் தான் காரணம் என்று இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதை, சுப்ரமணியன் சுவாமி போன்ற நபர்கள் செய்து வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் நல்லிணக்கத்தை வளர்க்க உதவாது. மாறாக, இரு பிரிவினருக்கிடையே வன்முறையைத் தூண்டுவதாக மட்டுமே அமையும். குண்டு வெடிப்பினால், சாதாரண மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை வன்முறையாக மாற்றுவதற்கு சுவாமி முயன்றிருக்கிறார்.

இசுலாமியத் தீவிரவாதத்தின் நோக்கம், இந்துக்களை கொல்வது என்று சுவாமி கூறுகிறார். ஆனால், நெருக்கடியான மார்க்கெட் போன்ற இடங்களில் வைக்கப் படும் குண்டு, இந்துக்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. இந்துக்களே இல்லாத, இந்தோனேசியா, நார்வே, அமேரிக்கா போன்ற இடங்களில் கூடத்தானே குண்டுகள் வெடிக்கின்றன ? தீவிரவாதத்துக்கு மதமோ நிறமோ கிடையாது.

சுப்ரமணியன் சுவாமியைப் போன்ற நபர்களே, தீவிரவாதத்துக்கு உரமாக இருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்களால், அமைதி குலைந்து, வன்முறை தாண்டவமாட வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப் படும் குண்டுகளை செய்யும் காரியங்களை, சுவாமி போன்றவர்கள் தங்கள் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் செய்கிறார்கள்.   இசுலாமியர்கள், இந்தியா இந்துக்களின் நாடு என்பதை ஒப்புக் கொண்டு வாழ வேண்டும் என்பது எத்தகைய விஷமத்தனமான பிரச்சாரம் ?

இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்களான அக்பர் மற்றும் ஷாஜஹானுக்கு மதநல்லிணக்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவே, 1947ல் இந்தியாவில் 75 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருந்தனர்.   300 மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற சுவாமியின் கோரிக்கை, சாதாரண இசுலாமியர்களை தீவிரவாதிகளின் பக்கம் கொண்டு சேர்க்காதா ?

கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதைத் தானே சுவாமியின் கட்டுரை நிரூபிக்கிறது ?   படித்த படிப்பு ஒரு மனிதனை பண்படுத்தாமல், மற்ற சமூகத்தின் மேல் விஷத்தை கக்குவதை சொல்லிக் கொடுத்தால், அதை விட கல்லாத பாமரன் எவ்வளவோ மேல் அல்லவா ?

இந்தியாவில் இசுலாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்து சாமியார்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வார் டாக்டர்.சுவாமி ?

கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதை கவனமாக பயன் படுத்த வேண்டும்.   கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாம், எழுதி விடலாம் என்பதும், ஜனநாயத்திற்கு மிகுந்த ஆபத்தில் போய் முடியும்.

சுப்ரமணியன் சுவாமியும், அவரின் விஷம் கக்கும் கட்டுரையை வெளியிட்ட டிஎன்ஏ நாளேட்டின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹாவும், வன்மையான கண்டனத்திற்கு உரியவர்கள்.   சுவாமியின் கட்டுரையைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில, சிறுபான்மையினர் கமிஷன், டாக்டர்.சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

சுவாமி போன்ற நபர்களின் கோயபல்ஸ் வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்கள், வன்மையான கண்டனத்திற்கு உரியன.

Comments  

+9 #331 AIYYO 2011-08-22 19:18
டெல்லி: டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.

நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை . மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை . எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

-- WHATZ YOUR RESPONSE Mr. SAVUKKU
Quote
 
+2 #330 Unmaniaa!! 2011-08-08 11:50
Quoting Geeyar:
4 #307 Unmainaa!!

///innum tholai dhoora thamizhnattil, maravar, thevar, koundar matrum inna pira meil jaathi hindukkal theendaamaiyai muzhumaiyaga kadaipidikkiraa rgalae, avangalai, 2%il serpeengala alladhu, 81%il serpeengala ?//

தேவர் மறவர் கவுண்டர் மற்றும் இன்னும் பிற சமுகத்தவர்கள் பிராமணர்களை போல் தீண்டாமை கொடுமையை செய்தாலும், எந்த ஒரு நிலையிலும் தனக்கு ஆதரவாக தன்னை விட கீழ் சாதிகளை துணைக்கு சேர்த்துக்கொள் வதில்லை பிராமணர்களைப் போல்.

எங்கள் பகுதியில் தேவர் சமுதாயத்திற்கும ் முஸ்லிம் மதத்தினருக்கும் சண்டை ஏற்பட்டது. இன்னும் நடைபெற்றுக்கொண ்டுதான் இருக்கிறது. ஆனால் அது தேவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான சண்டையாகத்தான் நடைபெறுகிறது. பெரும்பான்மை இந்துக்களை அடித்துவிட்டான் என்று எந்த தேவரும் எங்களையோ பிற சமுகத்தினரையோ துணைக்கு அழைக்கவில்லை.

ஆனால் பிராமணர்கள் ஏன் இஸ்லாமியரை எதிர்க்க மட்டும் பெரும்பான்மை மதம் என்று பிற சாதிக்களை துணைக்கு அழைத்து ஆனால் உண்மையில் உடைந்த கண்டாடியைப் போலவே மற்ற சாதியினரிடையே நட்பு கொண்டு இருக்க வேண்டும், என்பதே என் கேள்வி.

Naanga eppavo kara sendhuttom, neengathaan innum thannila nikkareenga!! Ungaloda comments thaan adhukku saatchi.. Oorukku elaichavan paappaan athanaala kai ongareenga. Naagareegam karudhi naanga kai ongaradhillai. Thevar aiyaa kitta omma pappu vegathu, nallaaa purinju pochchu..
Quote
 
-2 #329 Kuchi 2011-08-07 22:31
[ஃஉஒடெ நமெ="ஊர்குருவி"]தமிழர்களே தமிழர்களே...தயவு செஞ்சு இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வாங்க...இன்னும் எத்தன நாள் இப்பிடியே கருத்து எதிர்கருத்துனு போட்டுகிட்டே இருப்பிங்க..கருத்து சொன்ன சூனா சாமி அடுத்த குழப்பத்த பாக்க போய்ட்டார்..இந்த விவாதத்த ஆரம்பிச்சு வச்ச சவுக்கு அடுத்தடுத்த பிரசினைகள பாக்க போய்ட்டார்.. நீங்க மட்டும் இன்னும் எத்தன நாளைக்கு இதே டாபிக்க போட்டு பிரிச்சு மேஞ்சுக்கிட்டு இருக்கறது? கமான் கைஸ்...லெட்ஸ் மூவ் ஆன் டு தி நெக்ஸ்ட் இஷ்யு.[/ஃஉஒடெ]

இது 3% சூழ்ச்சிக்கார பிரமின வந்தேரிகளுக்கும ் 90% இந்தியாவின் பூர்விக குடிகளான அப்பாவி திராவிடர்களுக்க ும் உள்ள பல யுக பிரச்சினை ( மீதி மற்ற வந்தேறிகள் ) . திராவிடர்கள் எல்லோரும் கல்வியறிவும் , பொருளாதார வளர்ச்சியும் பெரும் பொது தீருவதற்கு வாய்ப்புள்ளது .
Quote
 
+1 #328 ஊர்குருவி 2011-08-07 12:49
தமிழர்களே தமிழர்களே...தயவு செஞ்சு இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வாங்க...இன்னும் எத்தன நாள் இப்பிடியே கருத்து எதிர்கருத்துனு போட்டுகிட்டே இருப்பிங்க..கருத்து சொன்ன சூனா சாமி அடுத்த குழப்பத்த பாக்க போய்ட்டார்..இந்த விவாதத்த ஆரம்பிச்சு வச்ச சவுக்கு அடுத்தடுத்த பிரசினைகள பாக்க போய்ட்டார்.. நீங்க மட்டும் இன்னும் எத்தன நாளைக்கு இதே டாபிக்க போட்டு பிரிச்சு மேஞ்சுக்கிட்டு இருக்கறது? கமான் கைஸ்...லெட்ஸ் மூவ் ஆன் டு தி நெக்ஸ்ட் இஷ்யு.
Quote
 
+4 #327 ஜமதக்னி 2011-08-07 10:47
பிராமணன் வெள்ளைக்காரனுக் கு ஜால்ரா போட்ட கூட்டம் என்று கூச்சலிடும் Geeyar மற்றும் அனைவருக்கும்

சேலம் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் விவாதிப்பதற்காக , அண்ணாதுரை தயாரித்து அனுப்பிய ஒரு தீர்மானத்திலிரு ந்து ஒரு பகுதி கீழே.

“நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவி செய்து வந்ததும், குறிப்பாக சென்ற ஐந்தாண்டுக் காலமாக நடந்து வரும் உலகயுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு வரும்படியான நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெரும் கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரச்சாரம் முதலியவை நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது."

மேலே குறிப்பிடப்பட்ட ிருக்கும் "சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்கள்" என்பது பிராமணர்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சி (என்று பொய்ப்பிரச்சாரம ் செய்யப்பட்ட) காங்கிரஸ் என்பதை நினைவில் கொள்ளவும்.
Quote
 
+3 #326 ஜமதக்னி 2011-08-07 08:09
To Geeyar

High level என்பது எதுவரை Low level என்பது எதுவரை என்பதற்கு ஒரு வரையறை வைத்துக்கொள்ளலா ம?
High level என்பது PM, President, CM, Governor, Chief Justice etc என்று வைதுக்கொண்டால், ஆயிற்றே, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்தப் பதவிகளில் அமர்ந்தாயிற்றே? இன்னும் சொல்லப்போனால் 1.76 லட்சம் கோடி இன்னும் எந்த பிராமணனும் கண்ணால் பார்த்ததாய்க் கூட செய்தி இல்லயே.

Low level என்று பார்த்தால் ஒழுங்கீனம், பெண்ணின்பம், கொலை வழக்கில் சிறை செல்வது என்று வைத்துக் கொள்ளலாம். இங்கும் இருக்கிறார்களே...கமலஹாசன், தேவநாதன், ஜயேந்திரர் போன்றோர்?

இப்பொழுது மாடுகளின் கால் கட்டுக்களை அவிழ்த்து விடலாமா?
Quote
 
+8 #325 ஜமதக்னி 2011-08-07 07:40
Quoting Kuchi:
இந்தியாவில் இந்து என்பவன் பிராமணன் மட்டுமே என்பதை எல்லோருக்கும் நினைவூட்டுகிறேன ் .

இந்தியாவில் முஸ்லிம் என்பவன் terrorist மட்டுமே என்பது உண்மையானால் இந்து என்பவன் பிராமணன் மட்டுமே.
Quote
 
+4 #324 ஜமதக்னி 2011-08-07 07:38
Quoting Geeyar:
4 ஜமதக்னி
இது தான் பிராமணனின் அறிவு. நேருக்கு நேர் விவாதங்களை தவிர்த்துவிட்டு தனிநபர் விமர்ச்சனம் அதுவும் உனக்கு அறிவு கம்மி உனக்கு ஆங்கிலபுலமை இல்லை என்று டிராக் மாறுவது.

தவறு. டங்குவாரின் ஆஙகில அறிவைப் பார்த்து எனக்குப் பொறாமையக இருக்கிறது என்றல்லவா நான் புலம்பியிருக்கி றேன்?
யார் தனி நபர் விமர்சனம் செய்திருக்கிறார ்கள் என்பது இங்கே இருக்கும் கருத்துக்களை random sample பார்த்தாலெ புரியும்.
மற்றபடி பிராமணர்களின் அறிவைப் பற்றி உஙகளுடைய ஆராய்ந்த ("இதுதான் பிராமணனின் அறிவு" என்று) முடிவில் குற்றம் காணும் பக்குவம் எனக்கு இல்லை என்று கருதுகிறேன்.
Quote
 
+4 #323 ஜமதக்னி 2011-08-07 07:20
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"][ஃஉஒடெ நமெ="ஜமதக்னி"]பட் ஒன் திங் மிஸ்டர் டங்கு 
ஒங்க கம்பிட்டற் நாலச் அப்றம் யிங்லிஷ் பேஸ்ற ஷ்டைல் எல்லாம் பாத்து எனக்கு வயத்தெரிச்சலா இருக்கோனு நீங்க நெனைக்கறது புரியுது

ப்ச்...ப்ச்...லைட்டா[/ஃஉஒடெ]

டொ யொஉ தின்க் சொ? டிச்க்ரசெஃபுல்.
ஆரெ யொஉ சுச் அ நர்ரொந் மின்டெட் பெர்சொன்?[/ஃஉஒடெ]

It shouldn't be a surprise to you. Haven't you shouted before from hte top of the roof about Brahmin's narrow mindedness.

Using Vadivelu's comedy lines is an attempt to give you taste of your own medicine.
Quote
 
-3 #322 Kuchi 2011-08-06 20:03
இந்தியாவில் இந்து என்பவன் பிராமணன் மட்டுமே என்பதை எல்லோருக்கும் நினைவூட்டுகிறேன ் .
Quote
 
+1 #321 Geeyar 2011-08-06 20:00
4 ஜமதக்னி
இது தான் பிராமணனின் அறிவு. நேருக்கு நேர் விவாதங்களை தவிர்த்துவிட்டு தனிநபர் விமர்ச்சனம் அதுவும் உனக்கு அறிவு கம்மி உனக்கு ஆங்கிலபுலமை இல்லை என்று டிராக் மாறுவது.
Quote
 
-1 #320 Geeyar 2011-08-06 19:54
4 #311 su.raghuraman
//"Every cycle has maximum and minimum limits." It is applicable to all not only to a particular community.//

All other communities are goes from lower level to higher level. still now they did not touch the max limit.

But Brahmins move high level to low and also they yet not touch the low level.

///Though they are minority (3 - 4%), they don't demand any quota, like other minorities in the society. Their strength is their intelligence.///

I never need new post for these words, so i review my old post from Idlyvadai.
மந்தைக்கு மேயச் செல்லும் மாடுகளில் முந்திச் செல்லும் மாட்டினை கட்டையை கட்டி அதன் வேகத்தை குறைப்பார்கள்.

மேலும் நடக்க முடியாத கன்றினை தோழில் சுமந்து செல்வர்

அப்பொழுதுதான் மேய்ப்பனால் அனைத்து மாடுகளையும் அரவணைத்து செல்ல முடியும். இறுதியாக வரும் மாடு இலக்கினை அடையட்டும். நிச்சயம் கட்டுகள் விலக்கப்படும்.

////Your abuses and hatred will more and more strengthen their will and encourage in their upliftment. They come forward on their own merits without any reservation in education or in job.

When the knowledge of light is with them, what the Night will do them ?////
பிராமணர்களை மிகுந்த அறிவாளிகள் என்பதை மறுக்க இயலாது. ஆனால் அவர்கள் செய்யும் குள்ளநரி தனத்தை எப்படி சகித்துக்கொள்வ து.

வெள்ளையர்கள் வந்தபோது தன் அறிவால் விரைவாக ஆங்கிலம் படித்த பிராமணர்களின் அறிவை பாராட்டுவதா. அந்த அறிவை நாட்டைகாக்க பயன்படுத்தாமல் வெள்ளையர்களுக்க ு ஜீங்கியடித்து இடைத்தரகர் வேலை பார்த்த அவலத்தை பார்ப்பதா.
Quote
 
+4 #319 Geeyar 2011-08-06 19:39
4 #307 Unmainaa!!

///innum tholai dhoora thamizhnattil, maravar, thevar, koundar matrum inna pira meil jaathi hindukkal theendaamaiyai muzhumaiyaga kadaipidikkiraa rgalae, avangalai, 2%il serpeengala alladhu, 81%il serpeengala ?//

தேவர் மறவர் கவுண்டர் மற்றும் இன்னும் பிற சமுகத்தவர்கள் பிராமணர்களை போல் தீண்டாமை கொடுமையை செய்தாலும், எந்த ஒரு நிலையிலும் தனக்கு ஆதரவாக தன்னை விட கீழ் சாதிகளை துணைக்கு சேர்த்துக்கொள் வதில்லை பிராமணர்களைப் போல்.

எங்கள் பகுதியில் தேவர் சமுதாயத்திற்கும ் முஸ்லிம் மதத்தினருக்கும் சண்டை ஏற்பட்டது. இன்னும் நடைபெற்றுக்கொண ்டுதான் இருக்கிறது. ஆனால் அது தேவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான சண்டையாகத்தான் நடைபெறுகிறது. பெரும்பான்மை இந்துக்களை அடித்துவிட்டான் என்று எந்த தேவரும் எங்களையோ பிற சமுகத்தினரையோ துணைக்கு அழைக்கவில்லை.

ஆனால் பிராமணர்கள் ஏன் இஸ்லாமியரை எதிர்க்க மட்டும் பெரும்பான்மை மதம் என்று பிற சாதிக்களை துணைக்கு அழைத்து ஆனால் உண்மையில் உடைந்த கண்டாடியைப் போலவே மற்ற சாதியினரிடையே நட்பு கொண்டு இருக்க வேண்டும், என்பதே என் கேள்வி.
Quote
 
+2 #318 kongu 2011-08-06 16:39
சண்ண்ண்ண்ட போடாதீங்க ஏட்டய்யா!!!
Quote
 
-2 #317 danguvaaru andhurum 2011-08-06 01:47
Quoting ஜமதக்னி:
பட் ஒன் திங் மிஸ்டர் டங்கு 
ஒங்க கம்பிட்டற் னாலச் அப்றம் யிங்லிஷ் பேஸ்ற ஷ்டைல் எல்லாம் பாத்து எனக்கு வயத்தெரிச்சலா இருக்கோனு நீங்க நெனைக்கறது புரியுது

ப்ச்...ப்ச்...லைட்டா

Do you think so? Disgraceful.
Are you such a narrow minded person?
Quote
 
-3 #316 danguvaaru andhurum 2011-08-06 01:42
Quoting ஜமதக்னி:
மிஸ்டர் டங்கு
வடிவேல் டயலாக்கை அங்கங்கே தெளித்து நீங்கள் என்னை ஏளனப்படுத்த நினைப்பது இங்கே உங்களுக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத்தரலாம் at the cost of ridiculing me.....பட் இந்த டீல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு 
intellectual debate க்கு என்று வந்தால் இரு சாராரும் தயார் செய்துகொண்டு வரவேண்டும் இருவரில் ஒருவர் சும்மா வந்துவிடுவாராம் மற்றவர் இவருக்கு reference குடுக்கணுமாம் இவர் டிக்கிலோனா டிக்கிலோனா ன்னு பின்னாலேயே வந்து லோல் குடுத்துருவாராம ் போய் குஞ்சாமணிட்ட விடுதலை குடியரச வாங்கி படிச்சுட்டு prepare பண்ணிட்டு வரணும் படிக்காமலேயே வாத்தியாராகணும் னா எப்பூடி? நல்லா கேக்றான்யா டீட்டெய்லு
தொப்பி இங்கதான் எங்கயாவது உளுந்துருக்கும் தேடிப்பாத்து தூசி தட்டி இனிமேயாச்சு சூதானமா வச்சுக்கப்பா உனக்கு பில்டிங் ஸ்டாங்கு ஆனா பேஸ்மட்டம் ரொம்ப வீக்கு 

Since I felt that the statement "என்ன ஒரு வில்லத்தனம்?" is too strong, I quoted it as Vadivel's dialogue.
நீங்கள் பட்டியலிட்டவை பெரியாரின் கருத்து என்பது உங்களுடைய 'CLAIM'. Unless otherwise you prove that your claim is true by providing proper reference, how can you expect me to defend?
When I requested for the reference, you are the one who tried to ridiculed me, that's why I had to reply.
It wasn't my intention to either 'ridicule you' or 'to get fans', perhaps yours. That's why you are repeating.
முதல்ல உங்க claim-ஐ prove பண்ணுங்க தொப்பி யாருக்குன்னும், யாருக்கு எது strong எது weak-னும் அப்புறம் பாக்கலாம்.
Quote
 
-4 #315 danguvaaru andhurum 2011-08-06 00:50
Quoting ஜமதக்னி:
காமெண்ட் # 301 copy/paste ல் கொஞசம் jumbled up ஆகி விட்டது. அதை இவ்வாறாக படிக்கவும்.

டங்கு வின் நகைச்சுவை:

அதுசரி மலேசிய தமிழர்கள் மீது தங்களுக்கு என்ன கோபம்? ஒருவேளை தங்களின் அடுத்த இலக்கோ? டொமெச்டிச் பிரச்சனையாய் இருப்பதை இவர்களை எல்லாம் உசுப்பேற்றி, பெரிய போராட்டம் நடத்தி, பெரிய ரசிஅல்/சொம்முனல்/இன்டெர்னடிஒனல் இச்சுஎ ஆக்கி அவர்களையும் நாடு நாடாக அகதிகளாக அலைய விட வேண்டுமா? வடிவேலு பாணியில் சொன்னால் [ப்]"என்ன ஒரு வில்லத்தனம்?" [/ப்][/ஃஉஒடெ]

எனது பதில்:

ஈழத் தமிழர்களை வீதியில் நிறுத்திய பெருமை LTTE க்கும் முட்டாள்தனமான அதன் தலைமைக்கும் மற்றும் தமிழ்நாட்டிலுள் ள சில emotional idiotsக்குமே உரித்தானது. இந்த deadly combination அவர்களை நெருங்காதவரை மலேசியத் தமிழர்கள் கவலைப்படத் தேவையல்லை.
எனக்கு மதுரைத் தமிழனும் மட்டக்களப்புத் தமிழனும் மலேசியத் தமிழனும் massachusetts தமிழனும் ஒன்றே. உங்களில் பலரைப் போல் selective affection கிடையாது.

ஒரே கேள்விக்கு எத்தனை முறை பதில் சொல்வது.
Quote
 
+1 #314 ஜமதக்னி 2011-08-05 20:46

0 #313 டங்குவாரு அந்துரும் 2011-08-05 15:41
அன்பர் ஜமதக்னி,

வெட்கங்கெட்டவனே என்ற தலைப்பில் வெளியான கேலிச் சித்திரத்திற்கு கண்டனம் தெரிவித்து மைனுச் 51 ரேட்டிங் பெற்றுள்ளார் ஆகையால், #292-ல் "மன்மோகன் சிங்-ஐயும் கருணாநிதியையும் சவுக்கு தரம் தாழ்த்தி......" என்பதற்க்கு பதில், "கருணாநிதியை சவுக்கு தரம் தாழ்த்தி ......" என்று மட்டும் மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
Quote
 
+2 #312 bala_the broadcaster 2011-08-05 15:09
சவுக்கு.. நாமும் இந்தக் கருணாநிதி மாதிரி பூணூல் அது இது என்று பேசி கழிசடை அரசியல் செய்யவேண்டாம் என்று நினைக்கிறேன்.. பிராமணர் அல்லாதோர்,இன்னு ம் தாழ் நிலையில் இருப்பதற்கு பிராமணர்களே காரணம் என்று கூறுவது கோழிப்பார்வை மட்டுமே காரணம்.. நாடு சுதந்திரம் அடைந்து 60 வருடங்களுக்கு மேலாக இப்போதுதான் மெதுவாக வளர்ச்சியடைய ஆரம்ப்பித்திருக ்கிறோம்..பிராமணர்கள் செய்த ஒரே தவறு,தீண்டாமை..இப்போது,எந்தப் பிராமணரும் அதைக் கடைபிடிப்பதில்ல ை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் பிராமண உயர் அதிகாரிதான் எனக்கு சிறுகச் சிறுக வேலை கற்றுக் கொடுத்தார்..பிராமணர்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள் என்பதால்தான் அவர்கள் அதிகமாகப் படித்திருப்பது வெளியில் தெரிகிறது.உதாரணத்திற்குக் கேரளாவை எடுத்துக்கொள்ளல ாம்.. அங்கு எந்த பிராமணனும் அதிகமாக இல்லை..பிறகு எப்படி நாயர்களும்,மேனன ்களும் அரசு அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது..ஏனென்றால்,அவர்க ள் விழிப்புணர்வு அடைந்து படித்துக்கொண்டி ருந்த காலத்தில், நாம் ஹிந்தி எதிர்ப்பு என்ற உணர்ச்சி சார்ந்த அரசியலுக்குப் பலிகடா ஆக்கப்பட்டிருந் தோம்., தீண்டாமையை பாரதிதானே எதிர்த்தான்? ஆஷ்துரையை வாஞ்சி நாதன் தானே சுட்டுக்கொன்றான ்? பீமாராவ் ராம்ஜியின் தீண்டாமைப் புண்ணுக்கு மருந்திட்டது அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர் அன்றி வேறு யார்? ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம். வளர்ச்சி சார்ந்த அரசியல் மட்டும்தான் இனி நம் நாட்டை மேம்படுத்த முடியும்.. உணர்ச்சி சார்ந்த அரசியலை பிராமணன்,சூத்தி ரன் என்று கூறி முன்னெடுத்துச் சென்றால், பிராமணனைப் பிராண்டி அவன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதைத் தவிர நாம் வேறு எதுவும் செய்துவிட முடியாது..இப்படிக்கு, மதுரை லோக்கல்பையன்(டெ ல்லியிலிருந்து)
Quote
 
+3 #311 su.raghuraman 2011-08-05 13:07
Quoting Geeyar:
4 #278 rajesh.v
//Actually they are the present backward class when compared to us.//
This is not enough Mr Rajesh.V, They touch the limit SC, and below. Because every cycle has maximum limit and minimum limit. They come from max limit to min limit. Now they come to evening. Night is come as follow.

Dear Geeyar, thanks for your wishes, but Your dream will never become true.

"Every cycle has maximum and minimum limits." It is applicable to all not only to a particular community.

Though they are minority (3 - 4%), they don't demand any quota, like other minorities in the society. Their strength is their intelligence.

Your abuses and hatred will more and more strengthen their will and encourage in their upliftment. They come forward on their own merits without any reservation in education or in job.

When the knowledge of light is with them, what the Night will do them ?
Quote
 
+2 #310 su.raghuraman 2011-08-05 12:43
Quoting ஜே ஜே:
அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள் சவுக்கு, இங்கு பின்னுட்டம் இருக்கும் டவுசர் பாண்டிகளும், கிராஸ் பெல்ட் வகைராக்களும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு சவுக்கு தளத்தை பார்வை இடும் மக்கள் சுமார் இருபது ஆயிரம் (பார்க்க வருகை தந்தவர்கள் விவரம் ) பாசிஸ்ட் சுவாமி பற்றிய கட்டுரைக்கு அதிக பட்சமாக ஒரு நூறு கிராஸ் பெல்ட் டவுசர் பாண்டி வகையறாக்கள் பல்வேறு பெயர்களில் வந்து வித விதமாக சவுக்கு எதோ தவறாக எழுதி விட்டது என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்க படு பாடு பட்டு வரகின்றது இந்த குடுமி வகையறாக்கள். இந்த கலுசடைகளை கணக்கில் எடுத்து கொள்ளாமல் உனது பணியை செவ்வனே செய்.

நன்றி
ஜே ஜே

ஐயா ஜெ ஜெ, சவுக்கு தன் கருத்தை எழுதினார். மற்றவர்களும் அந்த பதிவுக்கு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். கழிசடைகளை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம் என்ற அறிவுரை தேவை இல்லை. ஏனெனில் உங்கள் கருத்தையும் வெளியிட்டு அந்த சந்தேகத்தை சவுக்கு போக்கிவிட்டது
Quote
 
+6 #309 su.raghuraman 2011-08-05 11:31
திரு டங்குவாரு அவர்களே, LTTE ஐ பற்றி நீங்கள் உங்கள் கருத்துகளை கூறுவதை போல் தான் சோ ராமசாமியும் தன் கருத்தை கூறுகிறார். அதில் என்ன தப்பு ? உங்களுக்கு ஒரு சாரார் மீது இத்துணை காழ்புணர்வு இர்ருக்கும் போது, சு சுவாமி எழுதினால் அவர் FASCIST ஆனால் நீங்கள் சமூகவாதி. ஜெயேந்திரர் மீது கேஸ் நடக்கும் போதே, நீங்கள் தீர்ப்பை எழுதிவிட்டீர்கள ். நல்லது. அவரை பற்றி சவுக்கு தன் பதிவில் ஜாதியை பற்றி குறிப்பிடவில்லை ஆனால் உங்களை போன்று நல்ல உள்ளம் கொண்ட பலர் அவரை ஜாதியை சொல்லி எழுதினார்கள். சவுக்கு, ஜபார் சேட்டை பற்றி எழுதும்போது ஜாதியை பற்றி எழுதவில்லை. கருத்தை பதிவு செய்பவர்கள் ஒரு சாராரை பற்றி என்ன வேணாலும் கிண்டல் நக்கல் செய்யலாம். இல்லையா ? நீங்கள் வெறுப்பதால் அவர்கள் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. ஆனால் இன்னும் எத்தனை காலம் தான் நீங்கள் பழைய பல்லவியையே பாடிகொண்டிருக்க போகிறீர்கள்.

ராஜீவ் காந்தியை LTTE கொல்லவில்லை என்று உங்களின் கூற்று காந்தியை கோட்சே கொல்லவில்லை வெள்ளைகாரந்தான் கொன்றான் என்று சொல்வது போல் இருக்கு. நல்ல நகைச்சுவை உங்களிடம் உள்ளது.

நீங்கள் சாதியை மற்றும் பார்ப்பதால் நீதி உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. ஜெவிஷ் மக்களை மற்றவர்கள் (இனத்தை சொல்ல விரும்பவில்லை ஏனெனில் நீங்கள் என்னையும் FASCIST என்று சொல்வீர்கள்) எத்துனை விரட்டினார்கள் தங்களுக்கு என்று சொந்த நாடு கூட கிடையாது என்று நாதிட்ட்ரவர்களா க பட்ட இன்னல்களை வெகுவாக மறந்துவிட்டீர்க ளே ?

எல்லா அயோகியர்களும் பிராமணர்களும் அல்ல . எல்லா பிராமணர்களும் அயோகியனும் அல்ல.
Quote
 
-1 #308 புத்தா 2011-08-05 10:17
Quote:
இந்த கலுசடைகளை கணக்கில் எடுத்து கொள்ளாமல் உனது பணியை செவ்வனே செய்.

திராவிடக் கழிசடைகளை யாராலும் திருத்த முடியாது. இவர்களெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை.

ஜெ.ஜெ போன்ற திராவிட வெறியர்களை ஒன்று திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட த் தளம் தான் இது. ஊழல் ஒழிப்பு என்று வெளி வேசம் போடுகிறார்கள்.

சிங்களவனை விட மோசமானவர்கள் இவர்கள்.
Quote
 
+3 #307 Unmainaa!! 2011-08-05 09:55
Quoting Geeyar:
4 #282 Unmainaa!!
Jaathi veri is not by paarpaan, but Jaathi veri is an Indian disease. Everyone is infected by this.
ஜாதி வெறியை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை , தீண்டதகாதவர்கள் என கூறி பல கொடுமைகளை தந்துவிட்டு (இன்னும் தர தயாராக இருந்துகொண்டு) இன்று நாங்கள் எல்லாம் ஒன்று என கூறும் சு.சாமி போன்றோரின் விந்தையான செயலைதான் சுட்டினேன்.

Nalla sutti kaanbicheenga oththukiraen. Aaana, innum tholai dhoora thamizhnattil, maravar, thevar, koundar matrum inna pira meil jaathi hindukkal theendaamaiyai muzhumaiyaga kadaipidikkiraa rgalae, avangalai, 2%il serpeengala alladhu, 81%il serpeengala ?
Quote
 
+4 #306 ஜமதக்னி 2011-08-05 09:52
பட் ஒன் திங் மிஸ்டர் டங்கு 
ஒங்க கம்பிட்டற் னாலச் அப்றம் யிங்லிஷ் பேஸ்ற ஷ்டைல் எல்லாம் பாத்து எனக்கு வயத்தெரிச்சலா இருக்கோனு நீங்க நெனைக்கறது புரியுது

ப்ச்...ப்ச்...லைட்டா
Quote
 
+1 #305 Unmainaa!! 2011-08-05 09:47
Quoting Geeyar:
4 #278 rajesh.v
//Actually they are the present backward class when compared to us.//
This is not enough Mr Rajesh.V, They touch the limit SC, and below. Because every cycle has maximum limit and minimum limit. They come from max limit to min limit. Now they come to evening. Night is come as follow.

Crib, Crib, Crib is all that you can do.. Continue to crib....
Quote
 
+2 #304 Unmainaa!! 2011-08-05 09:44
Quoting Geeyar:
4 #283 Unmainaa!!

Atleast 2% are raising their voice, else 81% will be silent like lambs and get butchered. What to do...

நரி(2%) எதுக்கு ஊளையிடுகிறது என பரிக்கு(81%) தெரியும்.

Nari, Pari, sori nnu, edhugai monaila pesinavangallam ippo Kali thinnum nilaila irukkanga.. ennaththa solla... :cry:
Quote
 
+3 #303 ஜமதக்னி 2011-08-05 09:32
மிஸ்டர் டங்கு
வடிவேல் டயலாக்கை அங்கங்கே தெளித்து நீங்கள் என்னை ஏளனப்படுத்த நினைப்பது இங்கே உங்களுக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத்தரலாம் at the cost of ridiculing me.....பட் இந்த டீல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு 
intellectual debate க்கு என்று வந்தால் இரு சாராரும் தயார் செய்துகொண்டு வரவேண்டும் இருவரில் ஒருவர் சும்மா வந்துவிடுவாராம் மற்றவர் இவருக்கு reference குடுக்கணுமாம் இவர் டிக்கிலோனா டிக்கிலோனா ன்னு பின்னாலேயே வந்து லோல் குடுத்துருவாராம ் போய் குஞ்சாமணிட்ட விடுதலை குடியரச வாங்கி படிச்சுட்டு prepare பண்ணிட்டு வரணும் படிக்காமலேயே வாத்தியாராகணும் னா எப்பூடி? நல்லா கேக்றான்யா டீட்டெய்லு
தொப்பி இங்கதான் எங்கயாவது உளுந்துருக்கும் தேடிப்பாத்து தூசி தட்டி இனிமேயாச்சு சூதானமா வச்சுக்கப்பா உனக்கு பில்டிங் ஸ்டாங்கு ஆனா பேஸ்மட்டம் ரொம்ப வீக்கு 
Quote
 
+2 #302 Unmainaa!! 2011-08-05 09:04
Quoting danguvaaru andhurum:
Quoting Unmainaa!!:
Atleast 2% are raising their voice, else 81% will be silent like lambs and get butchered. What to do...

ஆணிய புடுங்க வேண்டாம்.

Aania pudungatti, septic aaidum.. Pakistanla aanaa maadhiri.. Mr. Dinguvaaru..
Quote
 
+2 #301 ஜமதக்னி 2011-08-05 07:48
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அன்துரும்"][ஃஉஒடெ நமெ="ஜமதக்னி"]ஈழ முழக்கமிட்டு வீரவசனம் பேசி புலி போல் சீறும் வைகோ தம் உரிமை கேட்டுப் போராடும் மலேசிய இந்துத் தமிழர்கள் விஷயத்தில் பூனை போல் பதுங்குவதேன்? அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா அல்லது மலேசிய இஸ்லாமிய அரசைக்கண்டு நடுக்கமா? இங்குள்ள இஸ்லாமிப ஓட்டு போய்விடுமோ என்ற கவலையா? 
[/ஃஉஒடெ]

ஈழத் தமிழர்களை வீதியில் நிறுத்திய பெருமை LTTE க்கும் முட்டாள்தனமான அதன் தலைமைக்கும் மற்றும் தமிழ்நாட்டிலுள் ள சில emotional idiotsக்குமே உரித்தானது. இந்த deadly combination அவர்களை நெருங்காதவரை மலேசியத் தமிழர்கள் கவலைப்படத் தேவையல்லை.
எனக்கு மதுரைத் தமிழனும் மட்டக்களப்புத் தமிழனும் மலேசியத் தமிழனும் massachusetts தமிழனும் ஒன்றே. உங்களில் பலரைப் போல் selective affection கிடையாது. 

அதுசரி மலேசிய தமிழர்கள் மீது தங்களுக்கு என்ன கோபம்? ஒருவேளை தங்களின் அடுத்த இலக்கோ? டொமெச்டிச் பிரச்சனையாய் இருப்பதை இவர்களை எல்லாம் உசுப்பேற்றி, பெரிய போராட்டம் நடத்தி, பெரிய ரசிஅல்/சொம்முனல்/இன்டெர்னடிஒனல் இச்சுஎ ஆக்கி அவர்களையும் நாடு நாடாக அகதிகளாக அலைய விட வேண்டுமா? வடிவேலு பாணியில் சொன்னால் [ப்]"என்ன ஒரு வில்லத்தனம்?" [/ப்][/ஃஉஒடெ]
Quote
 
+1 #300 ஜே ஜே 2011-08-05 02:12
அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள் சவுக்கு, இங்கு பின்னுட்டம் இருக்கும் டவுசர் பாண்டிகளும், கிராஸ் பெல்ட் வகைராக்களும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு நாளைக்கு சவுக்கு தளத்தை பார்வை இடும் மக்கள் சுமார் இருபது ஆயிரம் (பார்க்க வருகை தந்தவர்கள் விவரம் ) பாசிஸ்ட் சுவாமி பற்றிய கட்டுரைக்கு அதிக பட்சமாக ஒரு நூறு கிராஸ் பெல்ட் டவுசர் பாண்டி வகையறாக்கள் பல்வேறு பெயர்களில் வந்து வித விதமாக சவுக்கு எதோ தவறாக எழுதி விட்டது என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்க படு பாடு பட்டு வரகின்றது இந்த குடுமி வகையறாக்கள். இந்த கலுசடைகளை கணக்கில் எடுத்து கொள்ளாமல் உனது பணியை செவ்வனே செய்.

நன்றி
ஜே ஜே
Quote
 
-1 #299 danguvaaru andhurum 2011-08-04 23:23
Quoting ஜமதக்னி:
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"][ஃஉஒடெ நமெ="ஜமதக்னி"]திச் ஒனெ ஃபொர் ம்ர். டஙு

கற்பு பற்றிய நாயக்கரின் கருத்தைப் பறறி தவறாள வியாக்கியானம் தந்திருக்கிறீர் கள்

அந்தக் கருத்துக்கும் கைம்பெண் மறுமணததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவருடைய கருத்து பெண் விடுதலை என்ற கோணத்தில் வாரியிறைக்கப்பட ்ட அப்பட்டமான ஒழுங்கீனப் பிதற்றல் [/ஃஉஒடெ]

ப்லெஅசெ கிவெ மெ ப்ரொபெர் ரெஃபெரென்செ ஈ நில்ல் கொ த்ரொஉக்ஹ் இட். ஆஃப்டெர் ரெஅடிங் ஈ நில்ல் அட்ஜுட்கெ தெ சமெ அன்ட் ஷல்ல் ரெபொர்ட் தெ சமெ இன் "சவுக்கு" நிதொஉட் ஃபைல்.[/ஃஉஒடெ]

அணுக வேண்டிய முகவரி
குஞ்சாமணி, சென்னை

Is this a proper reference? If yes, I am giving up. YOU HAVE WON HANDS DOWN ON INTELLECTUAL BASIS....

TOPPI.... TOPPI....
Quote
 
+2 #298 danguvaaru andhurum 2011-08-04 23:17
Quoting Unmainaa!!:
Atleast 2% are raising their voice, else 81% will be silent like lambs and get butchered. What to do...

ஆணிய புடுங்க வேண்டாம்.
Quote
 
0 #297 Geeyar 2011-08-04 21:43
4 #278 rajesh.v
//Actually they are the present backward class when compared to us.//
This is not enough Mr Rajesh.V, They touch the limit SC, and below. Because every cycle has maximum limit and minimum limit. They come from max limit to min limit. Now they come to evening. Night is come as follow.
Quote
 
0 #296 Geeyar 2011-08-04 21:38
4 #283 Unmainaa!!

Atleast 2% are raising their voice, else 81% will be silent like lambs and get butchered. What to do...

நரி(2%) எதுக்கு ஊளையிடுகிறது என பரிக்கு(81%) தெரியும்.
Quote
 
0 #295 Geeyar 2011-08-04 21:26
4 #282 Unmainaa!!
Jaathi veri is not by paarpaan, but Jaathi veri is an Indian disease. Everyone is infected by this.
ஜாதி வெறியை பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை , தீண்டதகாதவர்கள் என கூறி பல கொடுமைகளை தந்துவிட்டு (இன்னும் தர தயாராக இருந்துகொண்டு) இன்று நாங்கள் எல்லாம் ஒன்று என கூறும் சு.சாமி போன்றோரின் விந்தையான செயலைதான் சுட்டினேன்.
Quote
 
+2 #294 danguvaaru andhurum 2011-08-04 21:05
Quoting ஜமதக்னி:
ஈழ முழக்கமிட்டு வீரவசனம் பேசி புலி போல் சீறும் வைகோ தம் உரிமை கேட்டுப் போராடும் மலேசிய இந்துத் தமிழர்கள் விஷயத்தில் பூனை போல் பதுங்குவதேன்? அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா அல்லது மலேசிய இஸ்லாமிய அரசைக்கண்டு நடுக்கமா? இங்குள்ள இஸ்லாமிப ஓட்டு போய்விடுமோ என்ற கவலையா? 

அதுசரி மலேசிய தமிழர்கள் மீது தங்களுக்கு என்ன கோபம்? ஒருவேளை தங்களின் அடுத்த இலக்கோ? domestic பிரச்சனையாய் இருப்பதை இவர்களை எல்லாம் உசுப்பேற்றி, பெரிய போராட்டம் நடத்தி, பெரிய racial/communal/international issue ஆக்கி அவர்களையும் நாடு நாடாக அகதிகளாக அலைய விட வேண்டுமா? வடிவேலு பாணியில் சொன்னால் "என்ன ஒரு வில்லத்தனம்?"
Quote
 
-4 #293 ஜமதக்னி 2011-08-04 21:04
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"][ஃஉஒடெ நமெ="ஜமதக்னி"]திச் ஒனெ ஃபொர் ம்ர். டஙு

கற்பு பற்றிய நாயக்கரின் கருத்தைப் பறறி தவறாள வியாக்கியானம் தந்திருக்கிறீர் கள்

அந்தக் கருத்துக்கும் கைம்பெண் மறுமணததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவருடைய கருத்து பெண் விடுதலை என்ற கோணத்தில் வாரியிறைக்கப்பட ்ட அப்பட்டமான ஒழுங்கீனப் பிதற்றல் [/ஃஉஒடெ]

ப்லெஅசெ கிவெ மெ ப்ரொபெர் ரெஃபெரென்செ ஈ நில்ல் கொ த்ரொஉக்ஹ் இட். ஆஃப்டெர் ரெஅடிங் ஈ நில்ல் அட்ஜுட்கெ தெ சமெ அன்ட் ஷல்ல் ரெபொர்ட் தெ சமெ இன் "சவுக்கு" நிதொஉட் ஃபைல்.[/ஃஉஒடெ]

அணுக வேண்டிய முகவரி
குஞ்சாமணி, சென்னை
Quote
 
+1 #292 danguvaaru andhurum 2011-08-04 21:02
அன்பர் ஜமதக்னி அவர்களே,
"I will respect you more even while refuting you" என்று கூறியதற்கு முதலில் எனது நன்றி. ஆனால், தங்களின் விளக்கம் பொருத்தமாய் இல்லை. மன்மோகன் சிங்-ஐயும் கருணாநிதியையும் சவுக்கு தரம் தாழ்த்தி எழுதுவதாலோ, சோ கலைஞர் என்று எழுதுவதாலோ என்னை 'வாடா' 'போடா' என்று எழுதுவதை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நாளைக்கே சோ தனது கட்டுரையில் கருணாநிதி என்று எழுதுகிறார் என்றால் நான் தங்களை டேய் ஜமதக்னி என்று எழுத உரிமை வந்து விடுமா. சுய பட்சாதாப முயச்சியோ தங்களிடம் யாசகமோ நான் கேட்கவே இல்லை. சக மனிதனை மரியாதையுடன் பேச வேண்டுமென்பது அடிப்படை நாகரிகம் அவ்வளவுதான். நீங்கள் ஒருமையில் பேசுகிறீர்கள் என்று சுட்டி மட்டுமே காட்டினேன். சரிசெய்து கொள்வதும் கொள்ளாததும் தங்களின் முடிவே.

"near honest opinion" அந்த near-ன் தூரம் "ஜெயேந்திர சரஸ்வதியும், சோ-வும் மற்றும் சு.சாமியும்" தானே? இருக்கட்டும் பரவாயில்லை. இவர்களை வெறுப்பதற்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமென்று எண்ணுவது தவறாகும். மன்மோகன் சிங்-ஐயும் கருணாநிதியையும் சவுக்கு தரம் தாழ்த்தி எழுதியபோது துடிக்காத தங்கள் இரத்தம், ஜெயேந்திர சரஸ்வதி பற்றியும், சோ பற்றியும், சு.சாமியை fascist என்ற உடனும் துடிக்கிறதே, அதற்க்கு என்னென்ன காரணங்கள் உண்டோ அத்துணை காரணத்துக்காகவு மே இவர்கள் அனைவரும் 'பொதுவாக' வெறுக்கப் படுகிறார்கள். ஈழத் தமிழர் பிரச்சனையில் கூட, தமது சுயலாபத்திர்க்க ாக (congress தலைமையை வேறுசிலருக்கு பெற்றுத்தர) ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டு பழியை LTTE -யினர் மீது போட்டு லாவகமாக தப்பித்த சு.சாமியும் அதை மறைமுகமாக வக்காலத்து வாங்கும் சோ-வும் எவ்வளவு மோசமானவர்கள்? முதலாம் உலக யுத்தத்தில் வெற்றியின் விளிம்பிலிருந்த ஜெர்மானியப் படையின் தாகத்தை பொய்ப் பிரச்சாரத்தின் வாயிலாக தகர்த்து, உள்நாட்டு மக்களே கூட போர் தேவையில்லை என நம்பவைத்து, அவர்களை தோல்வியுறச் செய்த Jewish-பத்திரிக்கையாளர ்களை விட கொடியவர்கலல்லவா . அதற்காக Jews பெற்ற வெகுமதியான Israel, இன்னொரு இனத்தின் கொலைக்களமாக இருக்கிறது. How dangerous these cascading effects are.
Quote
 
+3 #291 ஜமதக்னி 2011-08-04 18:43
[ஃஉஒடெ நமெ="க்க்ர்"]ஆய்ய ஜமடக்னி ஆவர்கலெ,

ஏண்காளாஈ போண்றோறே வாறூடா காணாக்காஆகா ஸாமூட்ஹாஆயா ணாள்ளீணாக்காட்ஹ ூ பாஆடூ பாடூவாட்ஹாஈ, ஊண்காளாஈ போண்றோறே ஓறூ ணாஆளீள் மூடீட்ஹூ காட்டீகீறூற்காள ்.

ணேஏண்காள் வாஆழ்ஹ்கா வாளாமூடாண்.

பெச்ட் றெகர்ட்ச் அன்ட் நிஷெச்
க்க்ற்[/ஃஉஒடெ]

நீங்கள் எடுத்த ச்மாதான நல்லிணக்க முயற்ச்சிகளை பட்டியலிட முடியுமா?
யார் என்ன அவதூறாகப் பேசினாலும் பரவாயில்லை என்று வாயை மூடிக்கொண்டு இருப்பதரற்குப் பெயர் சமாதானம் அல்ல.
அதுபோல் அமைதியாக வாழும் ஒரு சாராரை வசை பாடி (targeted attack) அதில் ஒரு அற்ப சுகம் காண்பவர்கள் வீரர்களும் அல்லர்.
வீரம் என்பது நாம் உண்மை என்று உறுதியாக நம்புபவற்றை எந்த நிலையிலும் எந்த இடத்திலும் உரைக்கும் துணிவே.
சட்டத்தை எரித்துவிட்டு வெறும் காகிதத்தை தான் கொளுத்தினோம் என்பதல்ல. சமூக நீதி பார்ப்பனர்களால் தான் சீர்கெட்டது என்று கூச்சலிட்டுவிட் டு பாப்பாத்திக்கு 'சமூக நீதி காத்த வீராஙனை' என்று பட்டம் கொடுப்பதல்ல.
பிராமணியம் என்பது சாதியும் அல்ல எல்லா பிராமனர்களும் யோக்கியர்களும் அல்லர் - just like any other community.
Quote
 
0 #290 kkr 2011-08-04 17:08
Ayya Jamadagni Avargale,

ENGALAI PONRORE VARUDA KANAKKAAKA SAMUDHAAYA NALLINAKKATHU PAADU PADUVATHAI, UNGALAI PONRORE ORU NAALIL MUDITHU KATTIGIRURGAL.

NEENGAL VAAZHGA VALAMUDAN.

Best Regards and Wishes
KKR
Quote
 
+2 #289 danguvaaru andhurum 2011-08-04 15:55
Quoting ஜமதக்னி:
this one for mr. dangu

கற்பு பற்றிய நாயக்கரின் கருத்தைப் பறறி தவறாள வியாக்கியானம் தந்திருக்கிறீர் கள்

அந்தக் கருத்துக்கும் கைம்பெண் மறுமணததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவருடைய கருத்து பெண் விடுதலை என்ற கோணத்தில் வாரியிறைக்கப்பட ்ட அப்பட்டமான ஒழுங்கீனப் பிதற்றல் 

Please give me proper reference I will go through it. After reading I will adjudge the same and shall report the same in "savukku" without fail.
Quote
 
+4 #288 ஜமதக்னி 2011-08-04 12:54
this one for mr. dangu

கற்பு பற்றிய நாயக்கரின் கருத்தைப் பறறி தவறாள வியாக்கியானம் தந்திருக்கிறீர் கள்

அந்தக் கருத்துக்கும் கைம்பெண் மறுமணததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவருடைய கருத்து பெண் விடுதலை என்ற கோணத்தில் வாரியிறைக்கப்பட ்ட அப்பட்டமான ஒழுங்கீனப் பிதற்றல் 
Quote
 
+1 #287 டங்குவாரு அந்துரும் 2011-08-04 12:47
Also, rating option for a comment should be available only when there is genuine reply for the respective comment.
Quote
 
+2 #286 டங்குவாரு அந்துரும் 2011-08-04 12:44
Quoting kkr:
Mr Danguvaar,
Thanks , as you can see I am getting zero or negative marks for my comments like you and Mr Walter !!!
Regards
KKR

Mr. Shankar may consider to provide values for both thumbs-up and thumbs-down together instead of the net value alone.
Quote
 
0 #285 ஜமதக்னி 2011-08-04 12:24
இங்கு பவருக்கு சோ மீதும் சுவாமி மீதும் ஏன் இவ்வனவு வெறுப்பு? ஏனென்றால் இவர்கள இருவரும் புலி எதிர்ப்பாளர்கள் அவுவளவே. புலிகளே தமிழர் தமிழரே புலிகள் என்ற மாயையில் தமிழகத் தமிழரை வைத்திருப்பதே வேதனை. இதற்குக் காரணம் வாய்ப்பந்தல் வீரர்களாம் திருமா வைகோ மற்றும் சைமன் (சீமான்) போன்றோரே
சில கைள்விகள்
1 ஈழ முழக்கமிட்டு வீரவசனம் பேசி புலி போல் சீறும் வைகோ தம் உரிமை கேட்டுப் போராடும் மலேசிய இந்துத் தமிழர்கள் விஷயத்தில் பூனை போல் பதுங்குவதேன்? அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா அல்லது மலேசிய இஸ்லாமிய அரசைக்கண்டு நடுக்கமா? இங்குள்ள இஸ்லாமிப ஓட்டு போய்விடுமோ என்ற கவலையா? 
2 பொழுது விடிந்தால் ராஜபக்ஷவை தூக்கிலிடு என்று கூவம் திருமா இலங்கை சென்ற போது அவரைச் சந்தித்தபோது எதிர்ப்பைக் காட்டியிருந்தால ் வரலாற்றில் இடம் பிடித்திருக்கலா மே? அதை விட்டு அவனிடம் பல்லைக்காட்டிப் பரிசு வாங்கியதைப் பாரக்கும் போது அது இருவருக்கும் பொதுவானதான பௌத்த மதம் சார்ந்த அன்பின் வெளிப்பாடோ என்று எழுந்தடங்கும் கேள்வி நியாயமானது தானே?
3 ஆறரைக் கோடி தமிழர் வாழும் தாய்த் தமிழகத்தில் கிடைக்காத கதாநாயகி சிங்களத்தி pooja வில் கிடைத்தாள் என்று படம் காட்டும் கயவன் சைமனை (சீமான்) பற்றி அதிகம் எழுதுவது நேரவிரயம் என்று கருதுகிறேன்
Quote
 
-5 #284 ஜமதக்னி 2011-08-04 11:47
ஒருமையல் பேசியதால் என் முன்னோர்களிடமிர ுந்து மேலாதிக்க எண்ணம் வந்ததாகக் கருதும் டங்குவார் நண்பரின் கவனத்திற்கு சில கேள்விகள்

பாரதப் பிரதமரை அவர் என்னதான் ஒரு மாங்கொட்டையாக இருந்தாலும்,  “வெட்கங்கெட்டவ னே“ என்று தலைப்பில் விளிக்கும் மமதை சவுக்கிற்கு எந்த முன்னோரிடமிருந் து வந்தது?
எவ்வனவுதான் மு.க மீது கோபம் இருந்தாலும் அவரது வயதுக்குரிய மரியாதை கூட சிறிதுமில்லாமல் தகாத வார்த்தைகளால் விமர்சித்திருக் கும் ஆணவம் எந்த முன்னோர் தந்தது? 

இதற்கு இணையாகவோ இதைவிட கேவலமாகவோ அப்படி என்ன சொல்லிவிட்டேன் உங்களை? எதற்காக இந்த 'ஐயோ கொல்றாங்களே' type self pity? 
உங்களுக்கு ஒன்று தெரியுமா? மு.க வை கடுமையாக விபர்சிக்கும் சோ கூட துக்ளக்கில் கருணாநிதி எனறு குறிபபிடுவதிலலை கலைஞர் என்றே குறிப்பிடுகிறார ் வயதுக்கும் அனுபவத்துக்கும் தரும் மரியாதை அது. இப்படி தனிமனிதனையும் அவர்தம் செயலையும் இருவேறு கூறுகளாகப் பகுத்தறியும் பண்பு சோ போன்ற வெகுசிலருக்கு மட்டுமே உண்டு. சோ போன்றவர்களை விமர்சக்கும் யோக்யதை நம்மில் பலருக்கு இல்லை. 
Quote
 
-1 #283 Unmainaa!! 2011-08-04 11:33
[ஃஉஒடெ நமெ="கேயர்"]அனைத்து பிராமணர்களுக்கு ம்,

இஸ்லாமியர்களை எதிர்க்க கிறிஸ்தவர்களை எதிர்க்க மட்டும் 83% (81+2)இந்துக்கள் என எங்களை சேர்க்கும் நீங்கள் ஏன் பிற விசயங்களில் எங்களை விட்டுவிட்டு ஓடி விடுகிறீர்கள். 83% ல் அந்த 2% மட்டும் அதிமுக்கியத்துவ ம் பெறுவதேன். விகிதப்படி பார்த்தால் சிறுபான்மை 2% அல்லவா பெறும்பான்மை 81% திடம் கேட்டுப் பெறவேண்டும். ஆனால் இன்னும் மேட்டுநிலங்களுக ்கு அணை போட்டு நீர்பாச்சுவதுபே ால் இட ஒதுக்கீடு என்னும் அணை போட்டு அல்லவா பெரும்பான்மை 81% தனக்கு வேண்டியதை பெற வேண்டியதிருக்கி றது.
உதாரணம் தமிழக கிரிக்கெட் அணியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 81% சதவீதம் பெற்றது என்ன? 2% பெற்றது என்ன?
, இன்னும் அரசு அலுவலகங்களில் முக்கியமான பெஞ்சை தேய்த்துக் கொண்டு இருக்கும் 2% எத்தனை? 81% எத்தனை?

சும்மா 83% சதம் இந்துக்கள் என இன்னும் பேசாதீர்கள். முதலில் இந்து மதத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.

ஹோமம் வளர்த்து ஆகம விதிகளை பின்பற்றும் 2%தை இந்துக்கள் என்றால் ஆடு கோழி பலியிட்டு சாமியாடி குறி சொல்லி சாமி கும்பிடும் 81%தை வேறு நல்ல பெயரிட்டு அழைக்க வேண்டும். இவங்க சண்டைக்கு மட்டும் எங்களை கூப்பிடுறாங்க. மற்ற சம்ரதாயம் ஏதுனா எங்களுக்கு அல்வா கொடுத்திடுறாங் க.

கணக்கு பார்த்தா முஸ்லிம், கிறிஸ்டியன், பெளத்தம் இன்ன பிற என அனைத்தைவிடவும் இவங்கதான் மைனாரிட்டியா இருப்பாங்க. ஆனா எங்க தலையையும் சேர்த்து எண்ணி பெரும்பான்மை பெருபான்மை என நாகூசாமல் கூச்சலிடுகிறார் கள்.[/ஃஉஒடெ]

Atleast 2% are raising their voice, else 81% will be silent like lambs and get butchered. What to do...
Quote
 
+4 #282 Unmainaa!! 2011-08-04 11:27
@Geeyar, @SSS

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=15899&Itemid=263

See for yourself. Jaathi veri is not by paarpaan, but Jaathi veri is an Indian disease. Everyone is infected by this.
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 206 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8699
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week51426
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month254158
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12776277