முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
உத்தரப்பிரதேச உத்தமப் புத்திரன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 44
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 03 அக்டோபர் 2010 09:39

சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில், சுனில் குமார் என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக இருக்கும் ஒரு அதிகாரி ஊழல் பேர்விழி என்றும், ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார் என்றும் சவுக்கில் எழுதப் பட்டிருந்தது.

 

அந்தப் பதிவுக்குப் பிறகு, சவுக்குக்கு கடும் கண்டனங்கள்.   சுனில் குமார் ஒரு நேர்மையான அதிகாரி, அவரைப் பற்றி எப்படி எழுதலாம், வாய்க்கு வந்த படி ஒரு அதிகாரியைப் பற்றி எழுதவது தவறு, பிடிக்காத அதிகாரி என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா, என்றெல்லாம் கடும் கண்டனங்கள் எழுந்தன.

 

சவுக்குக்கு பிடித்த அதிகாரிகள், பிடிக்காத அதிகாரிகள் என்று யாரும் கிடையாது. வாய்க்கு வந்தபடி, விசாரணை நடத்தாமல், சவுக்கு என்றுமே எழுதியது கிடையாது. சவுக்குக்கு சாதி துவேஷமும் கிடையாது என்பது சவுக்கைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.

 

இந்த சுனில் குமார், ஒரு கபட வேடதாரி.   மிக மிக கவனமாக, தான் ஒரு நேர்மையான அதிகாரி போன்ற வேடத்தை பல ஆண்டுகளாக பராமரித்து வருபவர். ஆனால் இவர் உண்மையில் நேர்மையான அதிகாரி இல்லை என்ற விபரத்தைத் தான் சவுக்கு பதிவு செய்திருந்தது.

sunil_2

 

சவுக்குக்கு வேண்டிய அதிகாரிகள், வேண்டாத அதிகாரிகள் என்ற பாகுபாடு எதுவுமே கிடையாது. சவுக்குக்கு வேண்டியதெல்லாம், அதிகாரிகள், நேர்மையாக மனசாட்சிப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.

 

அதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்பதற்கு அயோத்தி வரலாறே ஒரு சான்று.   அந்த டிசம்பர் மாத நள்ளிரவில், 1949ல், 50 பேர் கொண்ட ஒரு கும்பல், மசூதியின் உள்ளே புகுந்து, சிலைகளை வைக்கிறது. இந்தத் தகவலை கேள்விப் பட்ட நேரு, உள்துறை அமைச்சரை அழைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்ற உத்தரவிடுகிறார்.   அவரும், பைசாபாத் டெபுடி கமிஷனராக இருந்த கே.கே.நய்யாரிடம், சிலைகளை அகற்றுமாறு உத்தரவிடுகிறார். நேரு சிலைகளை அகற்ற உத்தரவிட, அவர் சொன்ன காரணம், “மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான முன்னுதாரணம் இது“.

 

ஆனால், பைசாபாத் டெபுடி கமிஷனர் கே.கே.நய்யார், சிலைகளை அகற்ற மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம், “சிலைகளை வைப்பதற்கு பின்னால் உள்ள உணர்வுகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது “ என்பதுதான் அது. இந்த கே.கே.நய்யார், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பிஜேபியின் அப்போதைய வடிவமான ஜன் சங்கின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது துணை செய்தி.

 

அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போது உணர்கிறீர்களா ? அன்று, கே.கே.நய்யார் மனசாட்சிப் படி நடந்து கொண்டு, சிலைகளை அகற்றியிருந்தால், இன்று 60 ஆண்டுகளாக, இந்துக்களும், முஸ்லீம்களும் இப்படி எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்களா ? இந்த பிரச்சினைதான் இப்படி ஒரு வடிவத்தை பெற்றிருக்குமா ?

 

அதனால்தான் சவுக்கு, அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

 

இப்போது மீண்டும் சுனில் குமாருக்கு வருவோம்.

 

சுனில் குமாருக்கு நெருக்கமான ஒரு உயர் அதிகாரி, சவுக்கிடம், சுனில் குமார் ஊழல் செய்துதான் இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்று சொல்ல முடியாதே, அவருடைய தகப்பனார் ஒரு ஓய்வு பெற்ற டிஜிபி.   அதனால், அவர் இயல்பாகவே செல்வந்தராக இருக்கலாமே என்று ஒரு கேள்வி எழுப்பினார். சுனில் குமார் நேர்மையான அதிகாரி தானா, பரம்பரையாக வந்த சொத்தில் தான் அவர் இவ்வாறு சொத்து சேர்த்துள்ளாரா என்று சவுக்கு ஆராய்ந்த போது, சுனில் குமாரின் வசூல் வேட்டைகள், 2006ல் அவர் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பொழுது துவங்கியது என்று தெரிகிறது. இந்த வசூல் வேட்டைகள், அவர் கோவை மாநகரின் ஆணையராக ஆன பின், கொடி கட்டிப் பறந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.

 

அடுத்த விஷயத்துக்கு வருவோம். சவுக்கு, சுனில் குமாரைப் பற்றி ஆதாரங்கள் இல்லாமல் எழுதியதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

 

கீழே உள்ள இந்த ஆவணத்தை பாருங்கள்.

 

sunil_0001

 

sunil_0002


sunil_0003

 

(வட்டமிட்டிருக்கும் இடத்தில் உள்ளதுதான் அனந்த் ராமின் இடம்)

இந்த ஆவணத்தின் படத்தில் உள்ளவர் பெயர் அனந்த் ராம். படத்தைப் பார்த்து விட்டு, உங்கள் வீட்டின் அருகில் உள்ள அடகுக் கடை மார்வாடி என்று நினைத்து விடாதீர்கள்.

இவர் சுனில் குமாரின் மாமனார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வு பெற்று, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஊட்டியில் வந்து அரை ஏக்கர் வாங்க வேண்டிய அவசியம் என்ன ? அதுவும், சுனில் குமார் போக்குவரத்து கூடுதல் ஆணையராக ஆன மூன்றாவது மாதம் டெல்லியிலிருந்து வந்து வாங்க வேண்டிய அவசியம்  என்ன ? இதற்கான விளக்கத்தையெல்லாம் சுனில் குமாரிடம், போலா நாத் கேட்டால் நன்றாக இருக்கும். மேலும் சொத்துக்களின் பட்டியலை சவுக்கு வெளியிட்டு விட்டது. எனக்கு சொத்தே இல்லை என்று சொல்லும் நபரின் மேல் சொத்துக் குவிப்பு வழக்கை தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை, இத்தனை சொத்துக்களை வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரை, அந்த துறைக்கே இணை இயக்குநராக வைத்திருப்பது என்ன நியாயம் ?

 

சுனில் குமார், சவுக்கை, “This fellow, a bloody subordinate, is blasphemously bitching about senior officers” என்று கூறியிருக்கிறார்.

 

சுனில் குமார் சார், உங்களைப் பற்றி புறம் பேசுவது சவுக்கின் வேலை அல்ல. அப்படிப் பேசுவதற்கு சவுக்குக்கு நேரமும் கிடையாது. மேலும் சீனியர் ஆபீசர் என்ற மரியாதை, உங்கள் நடத்தையை வைத்து வர வேண்டும். 20 வருடம் சர்வீஸ் ஆனால் நீங்கள் சீனியர் ஆபீசர் ஆகி விட மாட்டீர்கள். உங்கள் சொத்துக்களின் பட்டியலை சவுக்கு வெளியிட்டிருந்ததே..   அதை நீங்கள் இது வரை மறுக்கவில்லை. ஆனால், மற்ற அதிகாரிகளிடம், இல்லாததையும், பொல்லாததையும் எழுதியிருக்கிறார்கள் என்று கோபப் பட்டிருக்கிறீர்கள். உங்கள் சொத்துக்கள் என்று சவுக்கு வெளியிட்டிருந்த பட்டியல் இதோ.

 

  1. வேலூர் மாவட்டம் ஏலகிரியில் சுனில் குமார் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
  2. மணப்பாக்கத்தில் இரண்டு கிரவுண்டுகள் நிலம்.
  3. காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமத்தில் குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
  4. சோழிங்கநல்லூரில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.
  5. காரப்பாக்கத்தில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.
  6. ஊட்டியில் மூன்று இடங்களில் தலா அரை ஏக்கர் நிலம் சுனில் குமார் குடும்பத்தினர் பெயரில் (மொத்தம் ஒன்றரை ஏக்கர்)
  7. குற்றாலத்தில் குடும்பத்தினர் பெயரில் 25 சென்ட்டுகள் நிலம்.
  8. ஓசூர் அருகே குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
  9. கோவைப்புதூரில் குடும்பத்தினர் பெயரில் 20 சென்ட்டுகள் நிலம்

 

சுனில் குமார் சார், உங்களுக்காகவும், உள்துறை செயலாளர் ஞானதேசிகனுக்காகவும் (சார் நீங்க கூட புது போலீஸ் ட்ரெயினிங் ஸ்கூல் பக்கத்துல 1000 ஏக்கர் வாங்கியிருக்கீங்களாமே ?) தலைமைச் செயலாளர் மாலதிக்காகவும், (மேடம் உங்க மேல FIR போட சொல்லி DE 52/2001/PUB/HQ என்கொயரில, லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்திருந்ததாமே, அது என்ன மேடம் ஆச்சு ?) லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலாநாத்துக்காகவும், இந்த சொத்துக்களின் புகைப்படங்கள் வெளியிடப் படுகிறது.   நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

42_DSCN0411

44_DSCN0414

(கோவைப்புதூரில் 20 சென்டுகள்) 

 

 

2_DSC_1867

8_DSC_1874

(குற்றாலத்தில் 25  சென்டுகள்)

 

51_DSC_0019_copy

 

68_DSC_0003_copy

 

(ஓசூர் அருகே, ஒரு ஏக்கர் நிலம் )

 

IMG_1118

(காரப்பாக்கத்தில் 4 கிரவுண்டுகள்)

 

12_DSC07714

13_DSC07715

(கோத்தகிரியில் அரை ஏக்கர்) 

 

15_DSC07720

(ஊட்டியில் மற்றொரு அரை ஏக்கர்)

IMG_1120

IMG_1124

IMG_1125

(சோழிங்கநல்லூரில் சிறப்பு சாலையோடு 4 கிரவுண்டுகள்)

IMG_1131

IMG_1128

 

IMG_1127

(சிறப்பு தார்ச் சாலையோடு, தையூரில் ஒரு ஏக்கர் நிலம்)

 

சற்று முன் வந்த தகவல்

 

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும், செல்வநாயகி என்ற உதவியாளருக்கு,  பேனல் எதுவும் இல்லாமலேயே, உரிய தகுதி இல்லாமலேயே, சிறப்பு உதவியாளராக சுனில் குமார் பதவி உயர்வு வழங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன

இப்போது சொல்லுங்கள், இவர் உத்தரப் பிரதேசத்தின் உத்தமப் புததிரன் தானே ?


 

Comments  

 
0 #52 Ravikanth 2011-01-09 13:45
Quoting அதிர் வேட்டு:
யோவ் வெத்துவேட்டு, முதல்ல நீ பொறந்ததுக்கான அர்த்தத்த நாலு வரி வேண்டாம் நாலு வார்த்தைல சொல்லு பாப்போம். தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான். ஓ அப்பன் வீட்டுப்பணமும் ஏ அப்பன் வீட்டுப் பணமும் தான்யா போகுது ஏ இதே!


Your tax money is going in corruption.

Dont complain your road is bad, No school, No hospital, no water, No transport, bad trains, Bad goverment service etc etc.

All the money ment for public work is eaten by corruption.

It is your money,My Money and all of our money that is going to some peoples pocket
Quote
 
 
0 #51 hema 2011-01-03 22:13
ஊழலை அம்பலப்படுத்தின ாலும் என்ன பயன். பணத்தை கொடுத்து கரையை உடைத்துவிடுவார் கள்.ஒருவேளை இவர்கள் செய்த குற்றத்திற்கு சிறைதண்டனை கொடுத்தாலும் சிறையில் இவர்களுக்கு சோகுசான வாழ்க்கைதான் கிடைக்கும்.
Quote
 
 
+2 #50 raaj 2010-10-15 15:46
Golden hair minsiter forced to transfer his college to allakai alagiri,

Kanimozhi is forced Pongal Minister to hand over the college which is i Karuna Name.

Rasathi forced and got a Masala factory from (Muruan's wepon) minsiter. From this only they are selling masla to ration shops

SNJ Distilleries ( Stalin, Nehru , Jagath ratchagan) The invstement is from other but stalin is enjoyiong the share. They are the official suppliers for tasmak.

Another Distillary Licence is given to Martin Lottery Ownner, where Allakai alagiri will be enjoying the sahre with out investment
Quote
 
 
+3 #49 கீரா 2010-10-11 20:23
எழுத நினைத்தும் துவண்டு கிடக்கிற எத்தனையோ கைகளின் வீரியத்தோடு பூமியின் பரப்புகளை வளம் வரும் உங்களோடு கை கோர்க்க எங்களை போன்ற பாமரன் வருவான் ..அதிக்க வேர்களை பிடுங்கி நடுவோம் வாரீர் சவுக்கை சுழற்றுவோம் வாரீர்
Quote
 
 
+2 #48 APPANMANI 2010-10-10 14:48
சவுக்கு அவர்களே,

தீய சக்தி கட்சி தளபதி கோவையில் இடம் வாங்கி இருப்பதாக செய்தி கேள்வி பட்டேன் ப்ருக்பாண்ட் ஃபாக்டரி உள்ள இடம் தான் அது. விலை என்ன தெரியுமா ரூ 800 கோடி .
மேலும் அந்தமானில் ஏகப்பட்ட இடமாம் போ......அடிக்கடி போவதிலிருந்தே
தெரியுதே. கொஞ்சம் பாருஙகளேன்.‌
Quote
 
 
0 #47 Ambrose 2010-10-07 20:55
Amazing !!! Excelent !!!
Thank You Savukku !!!!

Well done !!!
Quote
 
 
+2 #46 balukandan 2010-10-07 16:31
Mr. Sauvukku uou are doing a wonderful job.continue it.
Quote
 
 
+5 #45 mugavai k sivakumar 2010-10-06 18:06
இந்திய ஆட்சி பணியில் சேர்பவர்கள் சொந்த நலனை பேணக் கூடாது என்பதால்தான் சொந்த மாநிலத்தில் பணிகளை அளிக்காமல் வேறு மாநிலங்களில் பணி அளிக்கப்படுகிறத ு. ஆனால் இவர்கள் என்னவென்றால் பணியாற்றும் மாநிலத்தையே சொந்தமாநிலமாக்க ி, அங்கேயே டேரா போட்டு, ஓய்வு பெற்ற பிறகும் சகல செல்வாக்குடன் இருக்கின்றனர். இதில் வடநாட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் அடித்த கொள்ளைகளை வெளியே கொண்டுவர ஆயிரம் சவுக்குகள் வேண்டும் என்பதே உண்மை. முகவை.க.சிவகுமார்
Quote
 
 
+2 #44 premkumar 2010-10-06 13:13
savvukkunu peru romba sari
Quote
 
 
+2 #43 கரிகாலன் 2010-10-05 23:54
சவுக்காரே, வாழ்த்துக்கள். அருமையான பதிவு. உங்கள் கொள்கை யில் இருந்து தவறி விடாதீர்கள்.என்றும் உங்கள் நல விரும்பி.
Quote
 
 
+1 #42 Pradeep_P 2010-10-05 22:00
இவ்வளவு கஷ்டப்பட்டு பதிவு போட்டும் இந்த ஆட்சியில் எதுகும் நடக்குமா ??????????? இல்லை
Quote
 
 
+4 #41 Nikumkumhwa 2010-10-05 09:33
பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது.. சிறு உளியாக நின்று பெரிய மலையை உடைகிறீர்கள்.... உங்களுக்கு என் வாழ்த்துகள்
Nikumkumhwa Singapore
Quote
 
 
+3 #40 Kings 2010-10-05 06:28
Quoting Ramanan:
Its atrocious to write about such an officer who has been an upright officer fighting corruption in his entire career. Owning property by any police officer doesn't mean that he acquired them by corrupt means. It's a tragedy that this perverted blog for the Tamil perverts is causing damage to the reputation of even honest officers. It is not Sunil Kumar alone who has bought properties in Tamil Nadu, there are hundreds of Police officers who have invested on land in the state. what's wrong in genuine investments. Whats is the proof that this money was corrupt money? These perverted surmises by you is filth and unpardonable.




சுனில் குமார், சவுக்கை, “This fellow, a bloody subordinate, is blasphemously bitching about senior officers” என்று கூறியிருக்கிறார ்.
இந்த இரண்டுக்கும் ஒற்றுமை கண்டுபிடிக்க முடிகிறதா? எனக்கு என்னமோ இரண்டும் ஒருவர் தான் எழுதியதாக தெரிகிறது. (உத்தம புத்திரன்)
Quote
 
 
0 #39 Ramanan 2010-10-04 23:40
Its atrocious to write about such an officer who has been an upright officer fighting corruption in his entire career. Owning property by any police officer doesn't mean that he acquired them by corrupt means. It's a tragedy that this perverted blog for the Tamil perverts is causing damage to the reputation of even honest officers. It is not Sunil Kumar alone who has bought properties in Tamil Nadu, there are hundreds of Police officers who have invested on land in the state. what's wrong in genuine investments. Whats is the proof that this money was corrupt money? These perverted surmises by you is filth and unpardonable.
Quote
 
 
+1 #38 rukku 2010-10-04 21:37
சவுக்கு நீங்கள் வெளியிட்டிருக்க ும் ஆதாரங்களை வைத்து உத்தமபுத்திரனை விசாரணை வலையத்துக்குள் சட்டம் கொண்டுவருமா, அல்லாது கனகவேல்தான் பேனா முறித்து சங்கூதவேண்டிவரு மா?
Quote
 
 
+4 #37 ரவி, அமெரிக்கா 2010-10-04 21:30
வெல் டன் சவுக்கு!
Quote
 
 
+1 #36 Raj12 2010-10-04 20:31
Well done Savukku
Quote
 
 
+1 #35 Raj 2010-10-04 20:06
Savukku,
you are really great. I always wonder, how good your network should be to get such evidences and information. Hats off!
I have been passing your blog to many of my friends and some could not read as it was in tamil. Now you have started it in English too. This will surely help you to reach to a lot more audience! Keep going.
Quote
 
 
0 #34 savukku adimai 2010-10-04 19:57
Quoting வெத்துவேட்டு:
சவுக்கு, உங்களுக்கு இதனால் கிடைக்கும் லாபம் என்ன்? என்று நாலு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்

YAI VETHU VETTU i will tell in 2 words "jai Hind"
Quote
 
 
+2 #33 தமிழன் 2010-10-04 19:55
நண்பர் வெத்துவேட்டு பெயரிலேயே விடையுடன் கேள்வி கேட்டுள்ளார்.. தயவு செய்து யாரும் பொருட்படுத்த வேண்டாம்..
Quote
 
 
0 #32 savukku adimai 2010-10-04 19:54
savukku hats up. you please put some rate to read this articls in online so you can manage the site very well and do more reports we are ready to pay as much we can. (instead of paying waste to JV) JAI HIND
Quote
 
 
+1 #31 தமிழ் 2010-10-04 19:33
லஞ்சம் வாங்கி ஊழல் செய்த அதிகாரியின் முகத்திரையை கிழித்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள். அப்படியே, கொடநாடு, சிறுதாவூர், ஹைதரபாத் தோட்டங்கள் பற்றியும் ஆதாரத்துடன் வெளியிட்டால் தெரிந்து கொள்வோம்.
Quote
 
 
0 #30 ஜானகி.இராசா 2010-10-04 18:18
வாழ்த்துக்கள்.சவுக்கு சரியன பாதைக்கு திரும்பியுள்ளது . இதே அனுகுமுறையினை கடைபிடிக்க வேண்டுகிறேன்.
Quote
 
 
+1 #29 karthik.s 2010-10-04 17:19
Great effort!!!!!!!! hats off!!!!!
Quote
 
 
0 #28 பொன்சந்தர் 2010-10-04 11:21
நான் குற்றாலம் அருகில்தான் இருக்கிறேன்....போட்டோல எந்த இடம்-ன்னு தெரியலை.....
Quote
 
 
+2 #27 viji g 2010-10-04 09:59
how u can get this evidence really ur superrrrrrrrr well done
Quote
 
 
+1 #26 je.Gopi 2010-10-04 09:15
Well done "Savukku" we are getting correct news from you. i know how hard to collect the news(true one), and publish!!
Vikatan groups getting money from me and giving false newses!!!! hearts of Savukku.
gopi
Quote
 
 
+4 #25 அதிர் வேட்டு 2010-10-04 01:25
யோவ் வெத்துவேட்டு, முதல்ல நீ பொறந்ததுக்கான அர்த்தத்த நாலு வரி வேண்டாம் நாலு வார்த்தைல சொல்லு பாப்போம். தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான். ஓ அப்பன் வீட்டுப்பணமும் ஏ அப்பன் வீட்டுப் பணமும் தான்யா போகுது ஏ இதே!
Quote
 
 
-14 #24 வெத்துவேட்டு 2010-10-03 23:16
சவுக்கு, உங்களுக்கு இதனால் கிடைக்கும் லாபம் என்ன்? என்று நாலு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்
Quote
 
 
+1 #23 reporter 2010-10-03 23:15
good.. you always updated. this is very very good quality... kep it up
Quote
 
 
+2 #22 suresh 2010-10-03 22:19
Dear Savukku Shankar,

You are doing a great social work with lots of risk. we sincerely appriciate you for bringing out such a culprits who are destroying our country.tears r coming out from our eyes if we imagine our country's status after ten years if thease politicians still occupy the place

Suresh
Quote
 
 
+1 #21 KUMARESAN 2010-10-03 20:15
super,super,sup er keep it up.
Quote
 
 
+1 #20 Anand 2010-10-03 18:47
அருமை...வாழ்த்துக்கள்...
Quote
 
 
+12 #19 Kumar.T 2010-10-03 17:53
பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது.. சிறு உளியாக நின்று பெரிய மலையை உடைகிறீர்கள்.... உங்களுக்கு என் வாழ்த்துகள்
Quote
 
 
-2 #18 எந்திரன் 2010-10-03 17:36
ஹலோ சவுக்கு... கவலைப்படாதே... இந்த நிலப்பிரபுக்களை பற்றி டைரக்டர் ஷங்கரிடம் சொல்லுங்கள்... நிச்சயம் படம் எடுப்பார்
Quote
 
 
+15 #17 rukku 2010-10-03 17:23
Quoting பாண்டியன்:
சுனிலை இப்படியே விட்டால், தமிழ்நாட்டில் பாதி இடத்தை வளைத்துவிடுவார் .பிறகு என் தலைவன் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும ் சொத்து வாங்க உத்தரபிரதேசம் போக முடியுமா... ஆகவே, அவரை அவரது சொந்த மாநிலத்துக்கே அனுப்பி வைப்பது நல்லது.

அருமையான ஐடியா பாண்டியன், கருணாநிதி அறிந்தாரென்றால் உங்களுக்கு ஐந்து பவுணில் மெடல் உறுதி,
Quote
 
 
+4 #16 rukku 2010-10-03 17:19
தலையைச்சுத்தி இருட்டிக்கொண்டு வருகுதே, தமிழ்நாட்டில் ஒரு மண்ணும் உருப்படியா இல்லையா, எந்தத்துறையைப்ப ார்த்தாலும் குப்பையும் கூழமுமாத்தானே இருக்கு, அப்பிடியென்றால் என்னதான் உருப்படியா தமிழ் நாட்டிலை இருக்குன்னு சொல்லிறீங்க, இந்தியா,தமிழ் நாட்டைப்பொறுத்த ளவில் அரசாங்கம் அரசியல் என்பதெல்லாம் சாக்கடை, பொலிஸ் மற்றும் பாதுகாப்புத்துற ை குப்பை, அலுவலகங்கள் அதிகாரிகள் ஊழல்க்கால்வாய், ஆஸ்பத்திரி (கல்லீரல் மண்ணீரல், கண் ,காது, சிறுநீரகம்) திருடர்கள் குகை, அரசியல் குடும்ப பொக்கிஷம், கோவில்கள் விபச்சாரவிடுதி, சினிமாத்துறை பாலியல்ப்பயிற்ச ி மற்றும் காமக்களியாட்ட நிலையம், மடங்கள் பாலியல் டிஸ்கோத்தே நிலையங்கள், பள்ளிகள் கல்லூரிகள் வியாபாரம் மற்றும் விபச்சார நிலையங்கள், பத்திரிகைத்துறை இவையெல்லாவற்றைய ும் விஞ்சிய கொடூர விற்பன்னர்கள், நாடு திருவோடு தாங்கி நிற்கிறது, நடுநாயகமாக கருணாநிதி நாளொரு பொண்ணும் பொழுதொருவீடும், அவனது வாரிசுகளும் அதேவழியில் இவையெல்லாவற்றின ும் ஊற்றுவாயாகி உல்லாசமாக இருக்கிறார்கள், என்னதான் உத்தேசம் நல்ல மக்களும் தமிழ்நாட்டில் வாழுவதால் கேட்கிறேன் யாரிடமாவது பதிலுண்டா??????????,
Quote
 
 
+1 #15 raj 2010-10-03 17:05
netrikkan pathirikkai padipathu mathiri irukku unga website. romba naal thangathu
Quote
 
 
+1 #14 raj 2010-10-03 17:04
netrikkan pathirikkai padippathu mathiri irukku.
Quote
 
 
+1 #13 Surya 2010-10-03 16:04
paavam indha sunil. saga adhigaarigaluda n pesumpodhu, thannaippatri enna ezhudhi kizhikkap pogiraargal endrenni, romba thullivittaar. unmaiyil matravargaludan oppidumpodhu ivar paravaayillaidh aan. aanaal, vaaykkozhuppum, varattu jambamum ivarukku ippadi oru nilamaiyai yerpaduththivit tadhu ! nunalum than vaayaal kedum !
Quote
 
 
+1 #12 anbu 2010-10-03 15:22
savukku...very good artical..anbu
Quote
 
 
+1 #11 MELINA,DUBAI 2010-10-03 14:49
DEAR SAVUKKU,

YOU GREAT,YOUR DETECTIVE ARTICLE WITH EVIDENCE IS APPRECIATLE.

WELL DONE.KEEP IT UP AND MY WISHES ALSO.

MELINA,
Quote
 
 
+1 #10 Unmaiyin unmai 2010-10-03 13:46
Im just newly joind in ur savukku , really ur site is very supper, i proud of to joined ur site, ungal sevai thodarnthu thodara vaazthukkal ......
Quote
 
 
+5 #9 பாஸ் என்ற பாஸ்கரன் 2010-10-03 13:22
டியர் சவுக்கு... நான் கூட சுனில் குமார் ஐ.பி.எஸ். அவர்களை, நேர்மையின் சின்னம் என்றே நினைத்திருந்தேன ். காரணம், என் நண்பன் சொன்ன விஷயம்தான். சில வருடங்களுக்கு முன்பு, சென்னையின் ஓட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிட வந்த சுனிலிடம் ஓட்டல்காரர்கள் காசு வாங்கவேயில்லை. ஆனால், அவர் வற்புறுத்தி கொடுத்ததை நேரில் பார்த்தானாம் என் நண்பன். இப்பத்தான் தெரியுது... சுனிலுக்கு சின்ன சின்ன விஷயங்களை கொள்ளையடிக்கத் தெரியாதுன்னு?
Quote
 
 
+5 #8 தமிழரசு 2010-10-03 13:12
மிகவும் கஷ்டப்பட்டு வழங்கப்பட்டதாக இப்பதிவு தெரிகின்றது.

உங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்குரி யது..
Quote
 
 
+1 #7 lakshmidharan 2010-10-03 12:44
LET ALL SAVUKKU STORIES WITH DETAILS PUBLISHED IN BITNOTICES AND DISTRIBUTED AMOUNG THE TAMIL PEOPLE OR MADE POSTERS DURING THE ASSEMBLY ELECTIONS TIME SO THAT PEOPLE WILL KNOW TE ADMINISTRATION OF KOLAIGNER KARUNANIDHI AND HIS FAMILY MEMBERS. SOME THING HAS TO BE DONE TO STALL THE FORWARD MARCH OF KARUNANIDI GOVT.
Quote
 
 
+10 #6 பாண்டியன் 2010-10-03 12:07
சுனிலை இப்படியே விட்டால், தமிழ்நாட்டில் பாதி இடத்தை வளைத்துவிடுவார் .பிறகு என் தலைவன் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும ் சொத்து வாங்க உத்தரபிரதேசம் போக முடியுமா... ஆகவே, அவரை அவரது சொந்த மாநிலத்துக்கே அனுப்பி வைப்பது நல்லது.
Quote
 
 
+9 #5 சவுக்கின் விசிறி 2010-10-03 11:50
இவர் லஞ்ச ஒழிப்புத்துறையி ன் இயக்குனரா அல்லது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் துறையின் இயக்குனரா?
ஆமாம்.. சுனில் சார்... இத்தனை சொத்துக்களை குடும்பத்தின் பெயரில் வைத்துக் கொண்டு, இரண்டு சொத்துக்களை மட்டுமே வைத்திருக்கும் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லி, வழக்கு போட்டிருக்கிறீர ்களே... நீங்க வின்னர் வடிவேலுவா?
Quote
 
 
+1 #4 Raj 2010-10-03 11:44
Its really great Mr.Savukku. The work which you have done is tremandous
Quote
 
 
0 #3 kadheroli 2010-10-03 11:07
unnudan nan irukiren enpathu enakku perumayaka irukku savukku.. unnudaya ovvaru sularchiyilum ovvaru athikariyin vandavalangakal suluvathu un thiramai .. vaalka palandu ni irukkum kalathil nan irukiren perumayudan
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 187 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4391
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week37031
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month249850
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12771969