முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே…!!!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 05 ஆகஸ்ட் 2011 15:01

அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே..   நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீதும், இணை ஆசிரியர் காமராஜ் அவர்கள் மீதும், தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.   நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா தொடர்பான ஒளிப்படக் காட்சிகளை ஒளிபரப்பும் முன், ஒரு ஹோட்டலில் வைத்து, பணம் கேட்டு மிரட்டினார்கள் என்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப் படாமல் இருக்க, கோபால் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

 

இந்நிலையில், திரு கோபால் அவர்கள், பத்திரிக்கை அதிபர்களை தொடர்பு கொண்டு, நக்கீரன் இதழை முடக்கவும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் நோக்கத்திலும், இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இதற்காக போராட்டம் நடத்துமாறும் கேட்டு வருகிறார் என்று அறிகிறோம்.

 DSC_0133_1

அவரின் கோரிக்கையில் உள்ள நியாயங்களுக்குள் செல்லும் முன்பாக, இவர்கள் மீது பதியப் பட்டுள்ள வழக்கு எப்படிப் பட்ட வழக்கு என்பதைப் பார்ப்போம். பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு என்று இன்று பேசும் கோபால், தனி மனித சுதந்திரத்தை பறித்ததைப் பற்றி ஏன் யோசிக்க மறந்தார். அந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியான நக்கீரன் இதழை குழந்தைகளுக்கு படிக்கக் கொடுக்க முடியுமா ?

 

அப்படியே, அதை வெளியிடுவதைக் கூட ஒரு பக்கம் வைத்துக் கொண்டால், அதை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு பேரம் நடத்தப் பட்டது என்றல்லவா புகார் வந்திருக்கிறது.   இந்தப் புகாரில் உண்மை என்ன என்பதை விசாரிக்க வேண்டாமா ? ஒரு வேளை அந்தப் புகார் உண்மையாக இருந்தால், அதை எந்த இதழியல் நெறிகளில் சேர்த்துக் கொள்ள முடியும் ?

 

இது போல எத்தனை தனி மனித உரிமை மீறல்களை செய்திருக்கிறது நக்கீரன் என்ற ஊடகம் ?   எந்த விதமான இதழியல் நெறிகளிலும் பொருந்தாமல், திமுகவையும், கருணாநிதியையும் ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தானே நக்கீரன் இதழ் கடந்த 5 வருடங்களாக நடத்தப் பட்டு    வந்தது ?

 

கடந்த ஐந்து வருடங்களாக நக்கீரன் இதழ், திமுகவுக்கு ஜால்ரா அடித்ததை விட வேறு என்ன செய்திகளை உருப்படியாக மக்களுக்கு தந்திருக்கிறது ?   கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட, கனிமொழி மத்திய மந்திரி ஆகிறார் என்று கூசாமல் பொய்ச் செய்தியைத் தானே வெளியிட்டார்கள் ?

 

துளியாவது நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்கள், இப்படிப் பட்ட செய்திகளை ஏற்றுக் கொள்ள முடியுமா ? கருணாநிதிக்கு ஆதரவு தர வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெற வில்லை என்று பச்சைப் பொய்யை செய்தியாக வெளியிடும் நக்கீரன் இதழை எப்படி பத்திரிக்கை என்று ஏற்றுக் கொள்ள முடியும் ? தேர்தல் கருத்துக் கணிப்பு எதுவும் நடத்தாமலேயே, நடத்தியதாக செய்தி வெளியிட்டு, 120 சீட்டுகளில் திமுக வெல்லப் போகிறது என்று கருணாநிதியின் மனதை குளிரவைக்க செய்தி வெளியிடும் நக்கீரன் எப்படி பத்திரிக்கை வரிசையில் வரும் ?

 

அதிமுக ஆட்சியின் ஒரு ஊழல் குறித்த செய்திகளை வெளியிட்டு, அதற்காக இன்று நக்கீரன் இதழ் பழிவாங்கப் படுகிறதென்றால், நமது மனமாச்சர்யங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு, நக்கீரனுக்காகவும், பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும், போர்க்குரல் கொடுக்க யாரும் தயங்கப் போவதில்லை. கடந்த காலத்தில், அதிமுக ஆட்சியில், நக்கீரன் பழி வாங்கப் பட்ட போது, அதுதான் நடந்தது.   தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களும் திரண்டு நின்று நக்கீரனுக்கு தோள் கொடுத்ததார்கள்.

 

ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது ?   ஜெயலலிதா எதிர்ப்பு என்ற நக்கீரனின் நிலைபாடு, திமுக ஆதரவு என்பதில் அல்லவா சென்று முடிந்தது ? கருணாநிதிக்கு ஜால்ரா போடுவது மட்டுமல்லாமல், ஜாபர் சேட் சொல்படி அல்லவா பத்திரிக்கையை நடத்தினார் காமராஜ் ?

 

கருணாநிதியோடு தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, வீட்டு மனை ஒதுக்கீடு பெறுவதும், லாபம் சம்பாதிப்பதையுமே ஐந்தாண்டுகளாக செய்து கொண்டிருந்தவர்கள், ஒரு பெண்ணை ஆபாசமாக படமெடுத்து வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரல் கொடுப்பது எள்ளி நகையாடுவது போல உள்ளது.

 Gopal_Nakkeeran

அது மட்டுமின்றி, கடந்த காலங்களிலே, தின பூமி ஆசிரியர் கைது சம்பவத்தின் போதும், தினமலர் லெனின் கைது சம்பவத்தின் போதும், ஜுனியர் விகடனை பொட்டு சுரேஷ் மிரட்டிய போதும், சீமான் கைதின் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்ட போதும், ஊடகத்துறையினர் போராட்டம் நடத்திய போது, எங்கே இருந்தார்கள் காமராஜும், கோபாலும் ?   சக பத்திரிக்கையாளனை அடித்து நொறுக்கும், ஒடுக்கும் ஒரு அரசுக்கு ஆதரவாக அல்லவா குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ?

 

இன்று தங்களுக்கு நெருக்கடி என்றதும் பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரலெழுப்புவது நியாயமற்ற செயலல்லவா ?   கோபாலும், காமராஜும், உங்கள் அனைவரின் ஆதரவை தேடக் கூடும்.   போராடுங்கள் என்று அழைக்கக் கூடும்.

 

ஆனால் நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள், சிந்தித்து செயல்படுங்கள்.   அக்கிரமத்துக்கு துணை போன குற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வினையை விதைத்தவர்கள், இன்று வினையை அறுக்கிறார்கள்.   அவர்களைக் காப்பாற்றுவது நமது வேலை இல்லை.

 

Comments  

 
0 #37 B.K.Pillai 2011-12-14 15:29
வீரப்பன், பிராப்கரன் போன்ரவர்கலை பெரிய ஹரொ வக காட்டி பத்ரிக்கயை விபசசாரம் சீ , ஒரு பக்கம் கூட நல்ல சேய்திகலை பொடுவதில்லை, கொலை, கர்பழிப்பு, கழவு தான் எப்பொதும், சிருபான்மமைஇனர் பட்ரி எதுவம் எழுதுவதில்லை
Quote
 
 
0 #36 nk 2011-08-11 16:57
:sad: :cry: :lol: :D :-) ;-) 8) :-| :-* :oops: :sad: :-x :-? :eek: :zzz :P :roll: :sigh:
Quote
 
 
+1 #35 elango2010 2011-08-10 11:17
பத்திரிகை விபச்சாரம் செய்யும் நக்கீரன் பத்திரிகைக்கு பத்திரிகை உலக நண்பர்கள் எந்த விதமான ஆதரவும் தர கூடாது .சென்ற அதிமுக ஆட்சியல் நக்கீரன் அடக்குமுறையை சந்தித்த பொழுது நாம் அனைவரும் நமது தார்மிக ஆதரவை தந்தோம் .ஆனால் நக்கீரன் நமக்கு தந்தது என்ன ? பொய்யும் புனைவுகளும் மட்டுமே .நாம் ஏமாந்தோம் என்பதை விட ஏமாற்றப்பட்டோம் என்பதே உண்மை .மீண்டும் ஒரு முறை ஏமாற நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை பத்திரிகை உலகம் தமிழகத்திற்கு காட்ட வேண்டிய நேரம் இது . தனிப்பட்ட மனிதர்களின் படுக்கை அறையில் நுழையும் நக்கீரன் , கோபால் & காமராஜ் விட்டு படுக்கை அறைக்குள் நுழைய வேண்டியது தானே ? என்று
நாம் கேட்க மாட்டோம் .ஏனென்றால் நாம் மனிதர்கள் ,பிறரின் தனிமையை உணர்ச்சியை மதிப்பவர்கள்.
மனிதர்களை அவர்களது குறைகளுடன் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும் ...அதை விட்டு நமது விருப்பதை அவர்கள் மேல் திணிக்க கூடாது .. நித்யானந்த - ரஞ்சிதா உறவு அவர்களது தனிப்பட்ட விருப்பம் ..அது தவறு என்று கூற நக்கீரன் யார் ? அப்படித்தானே கூறினாலும் நக்கீரன் புகழ் உலகம் முழுவதும் இணைய முகப்பில் காரி உமிழப்படுகிறது ....
சீனா பழமொழி ஒன்று உண்டு ...அது நக்கீரன் கோப்பை்
"தவறான பாதைஇல் எவ்வுளவு தூரம் சென்றாலும் பாராவை யல்லை
திரும்பி வந்து விடுங்கள் ".
Quote
 
 
0 #34 vinothkumarm 2011-08-08 20:35
எனக்கு தெரிந்த ஒரு நிருவனத்தில் நக்கிரன் நிறுபர் என கூறியவார், பத்திரிக்கைக்கு நன்கொடையாக ஒரு தொகை தரவேண்டும், இல்லை என்றால் உங்கள் நிறுவனததை பற்றி தவறாக தகவல் தருவோம் என மிரட்டினார்.

பணம் தரமுடியாது என்றவுடன் அதே போல பத்திரிக்கையில் தகவல் வந்தது.
Quote
 
 
+2 #33 veera337 2011-08-08 10:43
Mr.gopal was torutured badly in Jalaylalitha rule the entire family was subjected to humiliation and atrocious acts... so he supported DMK ..dinamalar s an anti-Tamil paper publishng news continusly against Tamil nationalism
. y do not u write about their stand... To all brothers of Ranjitha here, hw many of u did not see the video and enjoy it...... first clean urselves nd talk abt others.....
Quote
 
 
+3 #32 கண்ணன்,சென்னை 2011-08-07 20:35
சொல்வதெல்லாம் உண்மை பகுதியில், கோபால் மற்றும் காமராஜ் பற்றிய உண்மைகள்
எப்போது?
Quote
 
 
+2 #31 sora.ilaiyavan 2011-08-07 18:18
பெரம்பலூர் சாதிக் மரணத்தின் போது சாதிக்கின் புரோக்கர் மானேஜர் சுப்புடு தமிழக அரசியல் நிருபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் போது காமராஜ் ரசித்து கொண்டிருந்தாரே அப்போது அது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக காமராஜ்க்கு தெரியவில்லையா?. தாக்குதல் நடந்த இரவு காமராஜிக்கு திருச்சியில் புரோக்கர் வேலை செய்யும் ஒருவன் எப்படி அடி என்று ஊருக்கு எல்லாம் மெசேஜ் கொடுத்தானே அப்போது தெரியவில்லையா அது எல்லாம் பத்திரிக்கைக்கு எதிரான தாக்குதல் என்று ? :oops:
Quote
 
 
+4 #30 krishna bangalore 2011-08-07 00:56
சிடிகளை ஒலிபரப்பிய சன் டிவி அரை மனிநேரத்தில் எப்படி எல்லா நித்யானந்த
ஆச்ரமகளுக்கு சென்ரது .கலவரத்தை காட்டியது.நாக்கீரனும் சன்டிவியும் இனைந்து எல்லா இடஙகளிலும் ரவுடிகளையும் கேமரா மேனையும் வைத்ததோ. மத்திய மானிலத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனியார் தொலைபேசி லைஙளை உபயோகித்து அரசுக்கு 400 கோடீ இளப்பு உன்டாக்கிய சன் டிவியையும் முடக்க வேன்டும்
Quote
 
 
+6 #29 krishna bangalore 2011-08-07 00:41
நக்கீரன் ஒரு மஞசள் பத்திரிகை. வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியப் போது பல கோடி ரூபாய்களை சுருட்டியவர்கள் . ஒவ்வொரு முறையும் வீரப்பனிடமிந்து சிடி வந்தால்
அது சன் டிவி உதய டிவியில் மட்டும் ஒலிபரப்பாகும். இவர் செல்வதோ அரசு
சார்பில்.இந்த்க்கேசில் மஞகல் டிவியான
சன் குளுமத்தையும் முடக்க வேன்டும்.
Quote
 
 
+4 #28 su.raghuraman 2011-08-06 11:45
அன்னா ஹசாரே போன்று பொது நலனுக்கு போராடி சிறை செல்பவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம். ஆனால் பத்திரிக்கையாளர ் என்ற போர்வையில் கட்ட பஞ்சாயத்து, ஆளும் கட்சியின் ஆதரவு தந்த தெம்பில் செய்த அடாவடி தனத்திற்கு, எல்லாதிற்கும் மேல் நித்தியானந்தா விசயத்தில் ப்லச்க் மைல் செய்து பேரம் பேசியது என்று ஒன்று விடாமல் செய்த குற்றத்திற்கு இன்று தண்டனை கிடைத்திருக்கிற து. தனது தனி மனித ஒழுங்கீனதிர்க்க
இன்று பத்திரிக்கையளர் களை ஆதரவு கேட்கும் இவரை என்னவென்று சொல்வது. பத்திரிக்கை படிக்கும் எங்களுக்கே இவரை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாதபோது, பத்திரிக்கையாளர ்களுக்கு என்ன அபிப்ராயம் இருக்கபோகிறது. ? பாவத்தின் சம்பளம் மரணம். முற்பகல் செய்தார். பிற்பகலில் அனுபவிக்கிறார்.
Quote
 
 
+3 #27 muralikrishnan 2011-08-05 22:52
this nakkeeran is always yellow magazine use to publish and know pretty well that how they can make money through common people or bpl line or HNI'S. more over please add on that at poonamallee road SAME GOPAL has got share of BILLROTH HOSPITAL also dear savukku please do ur research team on this issue
Quote
 
 
-1 #26 கடற்கரைவாசி 2011-08-05 21:53
Quoting கல்கியின் நந்தகி:
கருப்பு பணம்

Black money from India revealed by Wikileaks

http://t.co/34U0W4z



What happened to the follow up of 995 people, any links?...
Quote
 
 
+6 #25 sundara.kumaresan 2011-08-05 21:34
நக்கீரன் காமராஜ் முன்னிலையிலே பெரம்பலூர் சாதிக் மரணத்தின் போது சாதிக்கின் புரோக்கர் மானேஜர் சுப்புடு தமிழக அரசியல் நிருபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் போது காமராஜ் ரசித்து கொண்டிருந்தாரே அப்போது அது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக காமராஜ்க்கு தெரியவில்லையா?. தாக்குதல் நடந்த இரவு காமராஜிக்கு திருச்சியில் புரோக்கர் வேலை செய்யும் ஒருவன் எப்படி அடி என்று ஊருக்கு எல்லாம் மெசேஜ் கொடுத்தானே அப்போது தெரியவில்லையா அது எல்லாம் பத்திரிக்கைக்கு எதிரான தாக்குதல் என்று ? சாத்தான் வேதம் ஓதுகிறதா?
Quote
 
 
+6 #24 kannan+ 2011-08-05 21:14
Number one pimp in D.M.K regime. Number one of the criminal in media. Always loyal to Mr. Karuna. and earned lot fron Veerappan . He one of the AGENT for veerappan. he is the mediator for veerappan and Karuna.
Quote
 
 
+8 #23 சவுக்கு 2011-08-05 19:27
அன்பார்ந்த இர்பான் அவர்களே... சமச்சீர் கல்வி குறித்த சவுக்கின் "வறட்டுப் பிடிவாதம் தானே" என்ற கட்டுரையை படித்து விட்டு கருத்து கூறுங்கள்.
Quote
 
 
-14 #22 Irfan 2011-08-05 19:21
சவுக்கு அவர்களே,

தாங்களும் தயவு செய்து தற்சமயம் தி மு க எதிர்ப்பு நிலை மாறி, அதி மு க ஆதரவு நிலையை எடுத்த மாதிரி தான் தோணுது.
கடந்த மூன்று மாதமாக பள்ளி குழந்தைகள் எந்த பாட புத்தகத்தை வைத்து படிப்பது என்பது தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில்,
இந்த ஆட்சியின் சீர்கெட்ட நிலைபாட்டை , பாரபட்சம் இல்லாமல் விமர்சித்து எழுதங்கள் பார்க்கலாம்.
Quote
 
 
+5 #21 naan kadavul 2011-08-05 18:09
முதலில் கோபால் சென்ற ஆட்சிக் காலத்தில் அவர் பேசியதையும்,எழு தியதையும் அவரிடம் உண்மை,மனச்சாட்ச ி இருந்தால் சிந்திக்கட்டும் .பணம்,விற்பனை, விருதுகளுக்காக விலை போனதை எப்படி நாம் மறக்க முடியும்.
Quote
 
 
+11 #20 AKM Vetriyur Kolkata 2011-08-05 17:55
பத்திரிக்கை அதிபர்கலின் மெயில் ஐடி கொடுங்க சவுக்கு... அவங்கலுக்கு, சப்போர்ட் பன்னாதீங்கன்னு நாஙக மெயில் அனுப்புரோம் ...
Quote
 
 
+6 #19 beggar 2011-08-05 17:47
//தின பூமி ஆசிரியர் கைது சம்பவத்தின் போதும், தினமலர் லெனின் கைது சம்பவத்தின் போதும், ஜுனியர் விகடனை பொட்டு சுரேஷ் மிரட்டிய போதும், சீமான் கைதின் போது பத்திரிக்கையாளர ்கள் தாக்கப் பட்ட போதும், ஊடகத்துறையினர் போராட்டம் நடத்திய போது, எங்கே இருந்தார்கள் காமராஜும், கோபாலும் ? //
million Rupees question.. Are they wanting 'free press' only for their magazine?
Quote
 
 
+6 #18 bharathinesan 2011-08-05 17:15
காசே தான் கடவுளடா...... இவஙக கிடடப் போய் தர்மம், நியாயம்... எதிர் பார்ப்பது நமக்கு ஏமாற்றத்தைத் தான் தரும். கருணாநிதியின் வசனப்படி இவர்கள் திசை மாறிய பறவைகள்.......
Quote
 
 
+6 #17 sugumaran 2011-08-05 16:54
Well said Savukku
They don't deserve any sympathy,as you rightly said they were a support of all atrocities done by the past DMK government against scribes.
Quote
 
 
+3 #16 RayJaguar 2011-08-05 16:50
well said savukku :-) :-) :-) :-) :-)
Quote
 
 
+6 #15 suthiran 2011-08-05 16:32
I totally agree with the views expressed in this article by Savukku . While the personal liberty and rights of Ranjita and Nityananda can be trespassed by this Gopal. Kamaraj and Kalanidhi with total impunity under the protection of erstwhile Govt, there is no justification by these scoundrels to claim that their fundamental rights and freedom of the press are now being violated by the ADMK Govt . Why two different yard sticks to measure the very same fundamental rights of Ranjita and Niti as well? The anticipatory bail appclication should be rejected forthwith
Quote
 
 
+8 #14 tamil2175 2011-08-05 16:29
கருனா புத்தி அப்படியே இந்த ரென்டு நாய்கல் கிட்டயும் இருக்கு. பத்திரிக்கை துரை நன்பர்கலே ஏமாந்து விடாதீர்கல்.
Quote
 
 
+15 #13 tamillinux 2011-08-05 16:26
நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை. இதுக்கு போய் யாரும் ஆதரவு கொடுக்கலாமா.
Quote
 
 
+17 #12 TG Ramamurthy 2011-08-05 16:21
ஒரு பெண்ணை ஆபாசமாக படமெடுத்து வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரல் கொடுப்பது எள்ளி நகையாடுவது போல உள்ளது.

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன்செயலை பார்த்து சிரிப்பு வருது,
Quote
 
 
+8 #11 balajii 2011-08-05 16:03
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Quote
 
 
+5 #10 Yaaroo 2011-08-05 15:41
ஸுப்பர் சவுக்கு.
Quote
 
 
+4 #9 கல்கியின் நந்தகி 2011-08-05 15:40
கருப்பு பணம்

Black money from India revealed by Wikileaks

http://t.co/34U0W4z
Quote
 
 
+5 #8 gopal, madurai 2011-08-05 15:33
nakkiran gopal arrest siavendum
Quote
 
 
+6 #7 gopal, madurai 2011-08-05 15:32
nakkiran gopali arrest siaa vendum :-?
Quote
 
 
+12 #6 subramaniv 2011-08-05 15:19
//இந்த வழக்கில் கைது செய்யப் படாமல் இருக்க, கோபால் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள் // இந்த பசஙலுக்குள்ள என்னவோ இருந்திருக்கு !! பாரேன்.
Quote
 
 
+20 #5 Sundarwipro 2011-08-05 15:17
நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை, அடுத்தவர் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை எட்டி பார்த்து செய்தி போடுவதில் வல்லவர்கள். தன்னிடம் பத்திரிகை இருக்கிறது என்று அராஜகம், கட்டபஞ்சயாத்து, மிரட்டல் செய்து பொய் செய்தி வெளியிடுவதில் கேடு கெட்டவர்கள். இவர்களை எந்த பத்திரிகைகாரனும ் ஆதரிக்க மாட்டான். கோவாலு டங்குவாரு கீளியிர நேரம் நெருகிடிச்சி மாமு.
Quote
 
 
+2 #4 thamilazhan 2011-08-05 15:17
Dear Savukku Readers,

Nakkeeran Gopal has piled huge wealth in Veerappan case and he discarded the entire journalistic community. Both Gopal and kamaraj do not have the basic courtesy or colleagueship to treat the journalist and Gopal and Kamaaraj were acting like ex-officio DGP in lot of cases. many families hve got ruined due to these combo and never allowed any one except DMK members. Gopal/kanimozhi/KPP Samy[Fisheries Minister]/jaffer sait combination behind the scenes have done lot of damage to squeeze the blood of common and poor people who cannot even afford Rs.100 per day. Gopal should be put under goondas act and kamaraj should be put under terrorist act for threatening lot of people. they have some agents like A.P.SURESH kumar [R3 pictures], and some kunjamanis for their threatening point. Beware about these scoundrals.
Quote
 
 
+11 #3 jagan t 2011-08-05 15:12
நக்கீ. யும் பத்திரிக்கைதான் . ஆனால் யெல்லோ பத்திரிக்கை. நீல பத்திரிக்கை. இவர்களின் எல்லா வண்டவாளங்களும் தெரிந்த நல்ல பத்திரிக்கையாளர ்கள் இவர்களை ஆதரிக்கமாட்டார் கள்.
( நம்ம டார்ச்லைட் சாரி, நக்கியசலைட் சார்தான் இனிமேல் எடிட்டரா?)
Quote
 
 
+9 #2 danguvaaru andhurum 2011-08-05 15:08
காமராஜ் அவர்களே,
நாலு பேரு படிக்கிராங்கங்க ரதுக்காக என்ன வேண்னா எழுதலாமா...

டொங்.டொ.டொங்.டொ.டொங்.டொ.டொங்.
Quote
 
 
+10 #1 danguvaaru andhurum 2011-08-05 15:06
நாலு பேரு படிக்கிராங்கங்க ரதுக்காக என்ன வேண்னா எழுதலாமா...... டொங்.. டொ. டொங்.. டொ. டொங்.. டொ. டொங்..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 99 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6207
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week6207
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month208939
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12731058