முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வேலிக்கு ஓணான் சாட்சி….. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 05 ஆகஸ்ட் 2011 18:47

ஜாபர் சேட் ஒரு இசுலாமியர், அவர் பழிவாங்கப் படுகிறார் என்று அங்கலாய்த்து ஒரு நீண்ட அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.   கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு.

 

“கடந்த கால திமுக  ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை.  வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று  அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பது தான் அவர் மீது குற்றச்சாட்டு.  அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ.தி.மு.க. ஆட்சியிலேதான்.


 முதல் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவீத வீடுகள் அல்லது மனைகளைத்தான் விருப்புரிமை அடிப்படையிலே அரசு வழங்கலாம் என்று இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு  1991ம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில் விருப்புரிமை 10 சதவீதம் என்பதை 15 சதவீதம் என்று உயர்த்தி வழங்கலாம் என்று முடிவெடுத்ததும் அவர்கள்தான்.

வீட்டு  வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவீதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் மீதியுள்ள 15  சதவீதத்தை  அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.  அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில்  ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.

விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால்  அரசு அதனைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று  7.12.2010ல் கழக அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறி, அது ஏடுகளிலேயே வெளி வந்துள்ளது.

DSC_3886

ஜெயலலிதா ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் வீட்டு மனைகளை விருப்புரிமை  அடிப்படையிலே  பெற்றவர்கள் தலைமைச் செயலாளராக இருந்த என். நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு  1993ம் ஆண்டு 4115 சதுர அடி. தற்போது அமைச்சராக உள்ள கே.ஏ.செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசனுக்கு  பெசண்ட் நகர் பகுதியில் 1995ம் ஆண்டு 4535 சதுர அடி.



முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமீலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993ம் ஆண்டு  2559 சதுர அடி. நாடாளுமன்ற உறுப்பினர்  தம்பிதுரை மனைவி பானுமதி தம்பிதுரைக்கு அண்ணா நகரில் 7  கிரவுண்ட்  நிலம்.    அ.தி.மு.க.வின் தொழிற்சங்கப் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்.



அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.எம். வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில்  1993ம் ஆண்டு  வீடு. அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் காவல் துறை அதிகாரிகளிலேயே  தேவாரம்,  கே. விஜயகுமார்,  ஆர். நடராஜ்,  பி. காளிமுத்து, இக்பால் முகமது, ஏ.பி. முகமது அலி, கே.ராதாகிருஷ்ணன், வி.பாலசந்திரன், சி. சைலேந்திரபாபு, எஸ்.வி. கருப்பசாமி,  சிற்றரசு,  ஆர். திருநாவுக்கரசு.  எப்.எம்.உசேன்,ஜி.சம்பத்குமார் செந்தாமரைக் கண்ணன், கே.சண்முகவேல், பி. சின்னசாமி,  சஞ்சய் அரோரா,  தமிழ்ச் செல்வன், கோபாலகிருஷ்ணன், பெரியய்யா,  அசோக் குமார் போன்றவர்கள் வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளையோ வீடுகளையோ பெற்றிருக்கிறார்கள். ஆனால் இதில் எதையும்  தி.மு.கழக ஆட்சியிலே தவறு என்று சுட்டிக் காட்டவில்லை.



ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் மாலிக் பெரோஸ்கான், பி.ஏ. ராமையா,  எஸ். கபிலன், ராகவன், சியாம் சுந்தர், சீனிவாசன், லால் ரெய்னா சைலோ, வி. ராமு, வி. வரப்பிரசாத ராவ், டி. நடராசன் (இவர் ஜெயலலிதாவிடம் துணைச் செயலாளராகப் பணியாற்றியவர் கழக ஆட்சியில் இவர் வீட்டிற்குச் சென்று சோதனை செய்யவில்லை),  எம். தேவராஜ்,  சையத் முனீர் ஹோடா (இவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு மனை வாங்கியவர்கள் ஆயிற்றே என்று கருதாமல் நான் முதல்வராக இருந்த போது என்னிடம் செயலாளராகவே இவர்கள் பணியாற்றினார்கள்) போன்றவர்கள்.

இவர்கள் தவிர அரசியல்வாதிகள் பட்டியல் வேறு உள்ளது. இரண்டு மனை பெற்றவர் களின் பட்டியலும்  உள்ளது. இத்தனை பேர் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அந்த ஆட்சிக் காலத்திலும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மனைகளைப் பெற்றிருக்கிறார்கள்.   இதில் குறி பார்த்து ஒருசிலர் மீது மட்டும் தற்போது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுப்பது என்பது பழி வாங்கும் செயலா அல்லவா?



இந்த அதிகாரிகள் அந்த இடங்களைப் பயன்படுத்தி கூட்டுப் பொறுப்பில் வேறு சில தனியாரோடு சேர்ந்து பெரிய கட்டிடங்களாகக் கட்டி  பிறருக்கு விற்று கோடிக் கணக்கிலே சம்பாதித்து விட்டார்கள் என்று ஏடுகளிலே செய்தி வெளியிடுகிறார்கள். இந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்காக வாரியம் குறிப்பிடும்  தொகையை முழுவதுமாகக் கட்டி விட்டால்  அந்த இடங்கள்  அவரவர்களுக்குச் சொந்தமாகி விடும். சொந்தமாகி விட்ட  அந்த இடங்களை இப்படி இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்று  யாரும் கூற முடியாது அதற்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லை.



ஜாபர் சேட் இந்த மனையை முதலில்  தன் பெண் பெயரிலே வாங்கிவிட்டு,  பிறகு அதைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, அதன் பிறகு  தன் துணைவியார் பெயரிலே  அதே மனையைப் பெற்றிருக்கிறார். ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு மனையை வாங்கினால் தான் தவறு.  இது ஒரே மனையை  தன் குடும்ப சூழ்நிலை கருதி மற்றவர் பெயருக்கு மாற்றியதிலே  என்ன பெரிய தவறு இருக்க முடியும்? மனைவி, மகள்  பெயர்களையும் இதிலே இழுத்து வழக்கு தொடுக்கிறார்கள் என்றால்;  அது வேண்டுமென்றே குடும்பத்தையே பழிவாங்குகின்ற செயல்தானே?

form_2-3_pg_9-24_121-136_1_Page_11

அந்த அதிகாரி மீது வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் நள்ளிரவிலே  அவரைப்  பணியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம்  செய்து  அ.தி.மு.க. அரசு  நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது  அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு  நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கைகள்? 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில்  கவனம் செலுத்துமா? இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்குவதிலே நிர்வாகத் திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது“ இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

இவர் ஜாபருக்கு ஆதரவு தருவதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டாரா, இல்லை என் குடும்ப ரகசியங்களை வெளியிட்டு விடாதே என்று ஜாபரிடம் மன்றாடி இந்த அறிக்கையை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. கருணாநிதியைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், கருணாநிதி எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டார் என்பது நன்கு தெரியும். தன் சொந்த மகனையே தலைவர் பதவிக்கு வர விடாமல் தடுப்பவர், ஜாபருக்காக இப்படி வக்காலத்து வாங்குகிறார் என்றால் வேறு உள் காரணங்கள் இருக்கும்.

 

காவல் துறை அதிகாரிகள் தேவாரம்,  கே. விஜயகுமார்,  ஆர். நடராஜ்,  பி. காளிமுத்து, இக்பால் முகமது, ஏ.பி. முகமது அலி, கே.ராதாகிருஷ்ணன், வி.பாலசந்திரன், சி. சைலேந்திரபாபு, எஸ்.வி. கருப்பசாமி,  சிற்றரசு,  ஆர். திருநாவுக்கரசு.  எப்.எம்.உசேன்,ஜி.சம்பத்குமார் செந்தாமரைக் கண்ணன், கே.சண்முகவேல், பி. சின்னசாமி,  சஞ்சய் அரோரா,  தமிழ்ச் செல்வன், கோபாலகிருஷ்ணன், பெரியய்யா,  அசோக் குமார் ஆகியோர் வீடு பெற்றிருக்கிறார்கள் என்று கருணாநிதி கூறுவது உண்மையை திரித்துக் கூறுவது.

 

ஜாபருக்கு கருணாநிதி கொடுத்தது வீட்டு வசதி வாரிய இடத்தில் தனது விருப்புரிமை ஒதுக்கீட்டில். இந்த ஒதுக்கீடுக்கு ஜாபர் சேட் உள்ளிட்ட அதிகாரிகள் விண்ணப்பித்து, தங்களுக்கு வீடு வேண்டும் என்று கேட்டுப் பெற்றது.

 

கருணாநிதி பட்டியலிடும் அதிகாரிகளுக்கு, வீரப்பனை சுட்டுக் கொன்றார்கள் என்று அந்த அதிகாரிகள் விட்ட கதைக்காக அரசு ஒதுக்கியது. அந்த வீட்டு மனைகள் அந்த அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கப் பட்டது. இதையும், ஜாபரின் கதையையும் கருணாநிதி முடிச்சு போடக் கூடாது.

 

“ஜாபர் சேட் இந்த மனையை முதலில்  தன் பெண் பெயரிலே வாங்கிவிட்டு,  பிறகு அதைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, அதன் பிறகு  தன் துணைவியார் பெயரிலே  அதே மனையைப் பெற்றிருக்கிறார். ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு மனையை வாங்கினால் தான் தவறு.  இது ஒரே மனையை  தன் குடும்ப சூழ்நிலை கருதி மற்றவர் பெயருக்கு மாற்றியதிலே  என்ன பெரிய தவறு இருக்க முடியும்? மனைவி, மகள்  பெயர்களையும் இதிலே இழுத்து வழக்கு தொடுக்கிறார்கள் என்றால்;  அது வேண்டுமென்றே குடும்பத்தையே பழிவாங்குகின்ற செயல்தானே ?”

 

இது போல வேறு எந்த அதிகாரிக்கு கருணாநிதி இது போன்ற சலுகையை செய்திருக்கிறார் ? ஒரே வீட்டு மனையை முதலில் தன் பெயருக்கும், பிறகு தன் மகள் பெயருக்கும், பிறகு மனைவி பெயருக்கும் மாற்றி மாற்றி ஒதுக்கீடு பெறுவது வேறு யாருக்காவது சாத்தியமா ? மேலும், ஜாபரின் மகளும், மனைவியும், ‘சமூக சேவகர்’ என்று சான்றிதழ் ஒன்று கொடுத்துள்ளார்களே…. அதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார் கருணாநிதி ?

 

அரசு ஒதுக்கிய வீட்டை குறைந்த விலைக்கு பெற்று, அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பது தவறில்லையென்றால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குறைந்த விலைக்கு பெற்று, அதிக லாபத்துக்கு விற்ற ஸ்வான், யூனிடெக் மற்றும் டாடா நிறுவனங்கள் செய்ததும் தவறில்லைதானே ? பிறகு எதற்காக சிபிஐ அந்த நிறுவனங்கள் மீத நடவடிக்கை எடுத்துள்ளது ?

 

அடுத்ததாக “அந்த அதிகாரி மீது வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் நள்ளிரவிலே  அவரைப்  பணியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம்  செய்து  அ.தி.மு.க. அரசு  நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது  அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு  நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கைகள் ? “

 

தவறை மறைக்க எதற்கெடுத்தாலும், சாதியையும் மதத்தையும் கேடயமாக பயன்படுத்தவதில் கருணாநிதி சமர்த்தர். ராசா மீது குற்றச் சாட்டு சுமத்தப் பட்டதும் இப்படித்தான் ‘தலித் இனத்தின் தகத்தகாய கதிரவன், பொட்டல் காட்டில் பூத்த ரோசா’ என்று வாழ்த்தினார். தற்போது ஜாபர் சேட்டுக்கும் இதே ஆயுதத்தை எடுத்துள்ளார்.

 

இவர் ஆட்சி காலத்தில் மற்றொரு தலித் அதிகாரியான உமா சங்கரை உப்பு சப்பில்லாத காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யவில்லையா நீங்கள் ? அப்போது எங்கே போனது உங்களின் தலித் மீதான கருணை ?

 

ஜாபர் சேட் மீது பதியப் பட்டுள்ள வழக்கு, உரிய விசாரணைக்குப் பிறகு, ஆவணங்களை பரிசீலித்த பிறகே பதியப் பட்டுள்ளது. அவரை இசுலாமியர் என்ற காரணத்துக்காகவெல்லாம் யாரும் பழி வாங்கவில்லை. அரசுப் பணத்தையும், மக்கள் பணத்தையும் திருடித் திருடி பழக்கப் பட்டு, அதிலேயே ஊறிப் போன கருணாநிதிக்கு எதுவுமே தவறில்லை. தன் மகள் லஞ்சப் பணமாக 214 கோடி ரூபாயை வாங்கினாலும் தவறில்லை. தன் மகன் பத்திரிக்கை அலுவலகத்தில் ஆட்களை அனுப்பி 3 பேரை கொலை செய்தாலும் தவறில்லை. தனக்கு விசுவாகமாக இருந்த மாவட்டச் செயலாளரை தன் மகன் கொலை செய்தாலும் தவறில்லை.

 

நீங்கள் ஜாபர் சேட்டுக்காக வெளியிட்டுள்ள அறிக்கை, வேலிக்கு ஓணான் சொல்லும் சாட்சியே…

 

Comments  

 
-1 #68 Duman 2011-08-11 12:27
Savukku is the most worst and biased website I have ever seen. To support that too, lot of sombus... cheeii... this savukku and it's readers have to first look at their back for their dirty.

Why savukku only targets DMK. Never writes anything about ADMK. Because, molla maari savukku does not have that much courage...
Quote
 
 
0 #67 மண்ணாங்கட்டி 2011-08-10 17:42
மு(ட்டாள்) கருணானிதி தமிழர்களையும் முட்டாளாக நைனைக்காதே
Quote
 
 
+3 #66 Dr. S. Kaliappan 2011-08-09 12:50
It is disgusting that the Former CM thinks the Tamil people would be sparing culprits just because they are scheduled caste or muslims. This country men knows what had happened to minorities and to scheduled caste people during his ruling. The Former CM defended his Minister Suresh rajan who attacked a Dhalith Deputy Collector in a public meeting. Kept his fingers crossed when DMK MLA MALAIRAJA attacked the office of the vice-chancellor, Anna University, Tirunelveli.
By blowing his 1960's style "caste, Language and religious cards" he attempts to divide the people of this state.

It 21st Century, Let us show what this generation symbolize

Prof.Kaliappan
Former Vice-Chancellor
Quote
 
 
+2 #65 krishnan T.R. 2011-08-09 11:13
தினமனியில் பழ நெடுமாரன் கருனானிதிக்கு
பகிரஙக கடிதங்கல் நிரைய எழுதுகிரார் அவைகல் அதனையும் புத்தகமாக பொட்டு பொது மக்கல் அனைவருக்கும் வினியொகிக்க
வென்டும் .
கிரிஷ்னன் டி ஆர்
Quote
 
 
+3 #64 je 2011-08-08 21:26
இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.
http://deviyar-illam.blogspot.com/2011/08/blog-post_07.html
Quote
 
 
+4 #63 Prema 2011-08-08 18:02
சாக போற நேரத்ததுல இப்படிதான் நிறைய பேசுவாங்க .... தன்னோட importance காட்றதுக்காக...
Quote
 
 
+10 #62 endrum tamizhan 2011-08-08 17:11
எதற்கு எடுத்தாலும் சாதி பெயரையோ அல்லது மதத்தின் பெயரையோ சொல்லி தமிழனை முட்டாள் என கருதி இந்த தீய சக்தி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

ஐயா,
தமிழன் என்றோ விழித்து கொன்டான்.
உங்க பப்பு இனி இங்க வேகாது.....
Quote
 
 
+4 #61 Nanban 2011-08-08 13:39
When will this come to an end? When will he stop playing politics in all govt affiars? Dont we have any law to punish people like this specimen who is trying to create a politically motivated communal imbalance in the society?
Savukku please do something to put an end to these kinds of creatures...There are many many supporters with you like this.
http://point-pandi.blogspot.com/
We expect a lot more from you savukku.
Quote
 
 
+2 #60 Raja Murugan 2011-08-08 13:09
Raja was a dalit so he is being victimised. Jaffer Sait is a muslim so he is victimized. The cases against DMK men is a conspiracy by brahmins. When will this man stop blabbering atrocious nonsense. Doesn't he realize that people cannot be fooled anymore. If corrupt people are brought to justice he uses caste and community card. When he wants to commit scams he uses his so called love for the Tamil people and Tamil language card. Why can't this man retire at this ripe age and enjoy his ill-gotten wealth?
Quote
 
 
+3 #59 உங்களில் ஒருவன் 2011-08-08 12:09
இன்றைய தினமணியில் வந்துள்ள செய்தி, சமச்சீர் தவிர்த்து இது ஓரளவுக்கு நல்ல அரசு என்பதுக்கு சான்று இது:

காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 6,007 மெகாவாட், எப்போதும் ஒரே அளவில் கிடைப்பதில்லை. காற்று அதிகமாக உள்ள ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத் தேவை குறைவாக உள்ள இரவு நேரங்களில் தான் அதிகமாக கிடைக்கும். எனவே, பல நேரங்களில் இவ்வாறு கிடைக்கக் கூடிய மின்சாரத்தைப் பயன்படுத்த இயலாமல் போய் விடுவது உண்டு. இதன் காரணமாக, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்போர், அந்த மின்சாரத்தை, விற்க இயலாத நிலை ஒரு பக்கமும்; மின்சாரத் தேவை உள்ளோர் அதனைப் பெற இயலாத சூழ்நிலை ஒரு பக்கமும், நிலவுவது உண்டு. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க இயலாது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். எனவே, மின்சாரத் தேவை குறைவாக உள்ள நேரங்களில் கிடைக்கப் பெறும் அதிக அளவு மின்சாரத்தை, தேவை உள்ளவர்களுக்கு வழங்குவது தான் சிறந்த மின் நிர்வாகம் ஆகும்.

ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் அதிக அளவு மின்சாரத்தை தற்போது பயன்படுத்த எனது தலைமையிலான அரசு ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி, காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் சுமார் 100 மெகாவாட் மின்சாரம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக் கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 20 விழுக்காடு மின் தடையை விலக்கிக் கொண்டு வழங்கப்படும். காற்றாலை மூலம் இவ்வாறு பெறப்படும் மின்சாரம் முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இந்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள இசைவு தெரிவிப்பவர்களு க்கு இது வழங்கப்படும். இந்த செயல் திட்டம் இன்று, அதாவது, 8.8.2011 முதல் நடைமுறைப்படுத்த ப்படும். இதன் மூலம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக் கு சுமார் 100 மெகாவாட் அளவுக்கு நிவாரணம் கிடைப்பதுடன், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்பவர்கள் அந்த மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பதன் மூலம் பயன் பெறுவர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மின் தேவை மற்றும் மின் பயனீட்டு அளவுக் கட்டணமாக சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும்.
Quote
 
 
+3 #58 A Brahmin 2011-08-08 10:04
Enna KadarkaraiVaasi ...... If this article is about Brahmins, you would have been the first person to genralize, like all Brahmins are like this.. we have to drive them away from India... But unfortunately this is against a Muslim.. so you won't genralize. i know about your Munna thunna's boss
Quote
 
 
+8 #57 நாக்குப்பூச்சி 2011-08-07 13:47
”உங்க ஆட்சில நீங்க செஞ்ச எதையாவது நான் கேள்வி கேட்டேனா? நீங்க மட்டும் ஏன் இப்படியெல்லாம் சேய்றீங்க”ன்னு மன்றாடியிருக்கா ர். பாவம் பச்சப்புள்ளைய போட்டு மிரட்டிக்கிட்டு ..
Quote
 
 
+4 #56 Mala 2011-08-07 13:34
கருனானிதி ஒரு சுயனலவாதி
Quote
 
 
+4 #55 aNu 2011-08-07 11:48
மு க விற்கு ஒருவரை இனிமேல் தேவைபடாது என்று தெரிந்தால் மிகவும் சாதுர்யமாக மாட்டிவிட்டு விடுவார். ஜாஃபர் போன்ற அல்லகைகளும் இது தெரியாமல் விசுவாசத்துடன் கொள்ளையடித்து விடுவார்கள.பிறகு தேவையில்லாத போது மு.க எதிர்க்கட்சி ஆட்களிடம் ' எங்க ஆள் மேல கைய வெச்சு பாருடா தெரியும்' என்று உசுப்பி விட்டு அல்லகைகளை ரணமாக்கி விடுவார். அதே பாணியை இப்போது ஸ்டாலின் செய்கிறார்.
Quote
 
 
+9 #54 தமிழன்பன் 2011-08-07 03:01
ஆடே மடபேயல கருணாநிதி,

நல்ல எதுகை மோனையில பேசின மட்டும் போதது சிந்தித்து பேச கத்துக்கோ...


தமிழன்பன்
தமிழா...விழி...எழு...போராடு
Quote
 
 
+9 #53 thamizh kudimagan 2011-08-06 23:56
இந்த தீய சக்தி எப்போது தான் போய் சேருமோ....
Quote
 
 
+6 #52 muthuraman 2011-08-06 22:01
இந்த நாரப்பய குடும்பம் அடிச்ச சொத்துக்கலை பரிமுதல் பன்னுங்கப்பா
Quote
 
 
+29 #51 புரவி 2011-08-06 17:26
கருணா(நிதி) அவர்களுக்கு,
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரும் தமிழரின் ஒரு அடையாளமாக இருக்கும் அப்துல் கலாமை ஏன் அய்யா குடியரசு தேர்தலில் புறக்கணித்து பிரதீபா பாட்டிலுக்கு வாக்கு செளுத்நீர்கள்?
செம்மொழி மாநாட்டிலும் கலாமை புரகநீதீரே?
அது மட்டுமா, கோவை குண்டு வெடிப்பில் அப்பாவி இஸ்லாமியர்களை தானே கைது செய்தீர்கள்?. இன்னும் சிறையில் வாடிகொண்டிருகிர ார்களே.
இவர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிய மாட்டேன்கிறதே அது எப்படி.
எப்பொழுதும் அயோகியர்களுகுதா ன் வாதாடுவீர்களா அய்யா?
நீங்கள் பிறக்காமல் போயிருந்தால் தமிழ் இனம் ஒரு வேலை காக்கபட்டிருக்க ும்
.
என்றும் அன்புடன்
புரவி
Quote
 
 
+11 #50 thirumathi.balagiri 2011-08-06 16:05
அய்யா புலவரெ, எதெர்கெடுதாலும் சாதியை இழுக்கும் உம் மீது ப்ரமனர்கல் வன் கொடுமை புகார் கொடுபதில்லை?
Quote
 
 
+4 #49 kongu 2011-08-06 12:04
யப்பா!!.... இப்போவே கண்ண கட்டுதே..!!!!!!..
Quote
 
 
+28 #48 சைதை அஜீஸ் 2011-08-06 12:01
IPS அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ....
அதான் கல்கத்தாவிற்கு தேர்த்தல் பார்வையாளராக போக மறுத்து, விடுப்பில் சென்றான்.

அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அதிமுக ஆட்சியிலேதான்....
சின்ன குழந்தைகள் தப்பு செய்தால் நாம் அவர்களை பின்வருமாறு திட்டுவதுதான் ஞஅபகம் வருது
அவன் பீ சாப்பிட்டா நீயும் சாப்பிடுவியா?

....இதில் எதையும் திமுக ஆட்சியில் தவறு என்று சுட்டிக்காட்டவி ல்லை...
அப்போ நீயே ஒத்துக்கொள்கிறா ய், கடந்த 5 ஆண்டுகளில் நீ ஒன்றும் புடுங்கவில்லை என்று

வாரியம் குறிப்பிடும் தொகையை கட்டி சொந்தமாகி விட்ட இடங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று யாரும் கூறமுடியாது/நிபந்தனைகளும் இல்லை.....
இவனெல்லாம் நம்மை ஆண்ட முதலமைச்சர்!!!க ஷ்டம்டா சாமி...
T நகர், ரங்கநாதன் சாலையில் நான் ஒரு இடம் வாங்கி அதை என் இஷ்டம் போல கட்ட முடியுமா அல்லது SIDCOவில் ஒரு இடம் முழு பணமும் கொடுத்து வாங்கி அதை FLAT கட்டி விற்றுக்கொள்ள முடியுமா?
இந்த நாய்களே பணம் வாங்கி IDEA கொடுக்குதுங்க... இதுலே IPS அதிகாரி, இஸ்லாமிய சமூகம் என்கிற லொள்ளு வேற. எந்த மனிதனும் தான் படித்த படிப்புக்கும், சார்ந்த சமுதாயத்துக்கும ் ஏற்ப நடக்கவில்லை என்றால், தவறு அவன் மீதுதானே தவிர சமுதாயமோ படிப்போ அல்ல. அதை கூறி தப்பிவிடலாம் என்பது முட்டாள்தனம்.

இப்போது ஞாபகம் வரும் இஸ்லாம், ரம்ஜான், கன்ஜி எல்லாம் அல் உம்மா தீவிரவாதிகளை தேடுகிறோம் என்று ஒவ்வொரு அப்பாவி இஸ்லாமிய வீட்டில் சோதனை போட்டபோது புத்தி பீ தின்ன போச்சுதோ?

இஸ்லாமியன் எப்போதோ இந்த நாய்களை கட்டம் கட்டிவிட்டான். எவ்வளவு குரைத்தாலும் எங்கள் காதில் விழப்போவதில்லை. அது தெரிந்துதானே சேப்பாக்கத்திலி ருந்து திருவாரூருக்கு ஓடியது. இப்போது நீலிக்கண்ணீர் விடுது.
Quote
 
 
+3 #47 KK 2011-08-06 11:09
Scoop for Savukku readers

Sonia diagnosed with cervical cancer
New Delhi, Aug 5, DHNS:

Congress president Sonia Gandhi is understood to have undergone a surgery for cervical cancer at Memorial Sloan—Kettering Cancer Center (MSKCC) private hospital—in New York on Thursday.


The surgery, said informed medical sources, was successful and Sonia is now in the hospital’s intensive care unit and recuperating well.

The surgery, conducted by a team of doctors led by leading Indian-American physician Dattatreyudu Nori, took about an hour, said the sources. Sonia may have to spend up to a month’s time for post-surgery follow-up treatment. It is not clear if she will be spending time in MSKCC for the whole duration of the post-surgical treatments.

The sources said the nature of the post-surgical follow-up treatment, including radiation therapy, would be known in a day or two, on the basis of cystography reports.
Quote
 
 
+12 #46 குடுகுடுப்பை 2011-08-06 10:27
பிச்சகாரனுக்கு செக்குரிட்டி பிச்சகாரனே...பலே..
Quote
 
 
+9 #45 கடற்கரைவாசி 2011-08-06 10:08
Quoting KKR:
Dear AKM/Sahul /Kadarkaraivasi Avargale,

Only a very few persons like this in any religion, almost all of the citizens of India whether Hindus, Christians or Muslims are very good at heart.

Indian Soldier Havildar Abdul Hamid who showed utmost bravery in Indo Pak war of 1965 and got the highest possible award of Param Vir Chakra after his death , is one of the greatest patriots of modern India and is a living legend in the Indian Army history.

Sagodharargale , we have to just ignore the very few bad examples in any religion and maintain our traditional brotherhood among all our communities in our State & Country.This is very important for peace and economic progress.
Regards
KKR



Very glad to see some understanding people with the right reasoning...
Quote
 
 
+24 #44 prabhakaran.v 2011-08-06 09:53
மு.க. இசுலாமியர்களை ஜா.சேட்டுக்கு ஆதரவாக தூண்டிவிட்டு குளிர்காய முயல்கிறார். ஜா.சேட் மீது கூறப்படும் குற்றங்கள் அனைத்தும் உண்மையென்றால், ஜா.சேட் இசுலாமியன் என்ற தகுதியை என்றோ இழந்துவிட்டார். இதில் ரமலான், நோன்பு என்றெல்லாம் மு.க. பசப்புவது இசுலாமியர்களை ஏமாற்றும் வேளை.கருணாநிதியோட பல ரகசியங்கள் இந்த ஜாபருக்கு தெரியும் போல இருக்கு. அது தான் இந்த கிழடு பயப்படுகிறது, ஜாபர் போட்டு கொடுத்துடுவானோ என்று.
Quote
 
 
+17 #43 mariappan 2011-08-06 09:34
முசுலீம், இந்துக்கல், தமிழர்கல் எல்லாரும் தெலிவாகத்தான் இருக்கிரொம். ஒரு குடும்பத்துக்கு த்தான் பனப்பேய் பிடித்திருக்கிர து. அதனால் தான் கல்லச்சாமி ஆடுகிரது. நாம் ஓட்டிடுவோம் சிரைச்சாலைக்கு.
Quote
 
 
+4 #42 aha 2011-08-06 08:55
Aha.Neenga athavathu kalaignar tv nadathara maathiri binami perla vaangi irukkaaru.avaru sambalatha , kalaga arasu avar pondati perla kuduthuthaa?Indianla vara dialog maathiri 'athula enna thappunnu' kekareenga.It could be silly for u among the big blunders u hav committed.
Quote
 
 
+5 #41 kula sekharan v 2011-08-06 08:48
68. சாய்பாபாவுக்கும ் கருணாநிதியின் குடும்பத்​துக்க ும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்கா க ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட ்டார் என்கிறார்கள்.

''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும் . காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.விகடன்.சொம்/அர்டிச்லெ.ப்ஹ்ப்?ஐட்=9074&சிட்=251&மிட்=2
Quote
 
 
+8 #40 kula sekharan v 2011-08-06 08:48
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தி ல் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில ் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இஞினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்கு ச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்கு த் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையத ே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்கு ப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
Quote
 
 
+7 #39 kula sekharan v 2011-08-06 08:46
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்ற த்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரி ல் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில ் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -

3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
Quote
 
 
+6 #38 kula sekharan v 2011-08-06 08:44
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர ் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34.
Quote
 
 
+5 #37 kula sekharan v 2011-08-06 08:42
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்த ில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தி ல் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தி ல் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
Quote
 
 
+7 #36 kula sekharan v 2011-08-06 08:39
ஓ... மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

பிரதமரை மிரளவைத்த ஃபெர்னாண்டஸ் பத்திரிகை!








கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!

'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம் .



அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக் கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்ப ட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காக க் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.
அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
Quote
 
 
+5 #35 raghunathan m s 2011-08-06 07:09
IF THE ALLOTMENTS MADE BY THE JAYALALITHA'S GOVERNMENT IN ITS REGIME IS WRONG AND AGAINST THE RULES AND REGULATIONS, WHY KARUNANIDHI WHO SUCCEEDED HER IN 2006 BRING THIS TO LIGHT AND CANCEL THE SAME AND FILE CASES AGAINST THE CONCERNED ALLOTTEES AND OFFICIALS OF THE TNHB AND IAS OFFICERS WHO FACILITATE THE ALLOTMENT. BY THIS KARUNANIDHI HAS FAILED TO PROTECT THE INTERESTS OF THE STATE AND FINANCIALS OF THE STATE. THE MOOT QUESTION WHICH KARUNANIDHI HAS TO ANSWER IS WHETHER THE LAND/PLOT ALLOTMENT RECEIVED BY MR JAFFAR SAIT/HIS WIFE/DAUGHTER IS AS PER THE NORMS PRESCRIBED BY GOVERNMENT. HE WILL NOT BE ABLE TO ANSWER THE SAME SINCE HE VER WELL KNOWS HE IS WRONG IN RAISING THE CCUSATION AGAINST THE GOVT. EVEN IT IS NOT LATE. MR KARUNANIDHI CAN FILE A CASE IN HUGH COURT ABOUT THE IRREGULAR ALLOTMENTS MADE BY JAYALALITHA AND GET BACK THE SAME TO TNHB. IF HE DOES IT THEN IT WILL BE A GREAT SERVICE TO THE TAMIL PEOPLE.
Quote
 
 
+9 #34 jai 2011-08-06 06:06
சரியானா சவுக்கு அடி
Quote
 
 
+21 #33 anniyan 2011-08-06 04:52
பெரும்பாலான இஸ்லாமியர் குண்டு வைப்பவர்களையும் , கொள்ளை அடிப்பவர்களையும ், ஜாபர் மாதிரி திருடர்களையும் நிச்சயம் வெறுப்பார்கள். கருணாநிதி குறிப்பிட்டு சொல்ல, ஜாபர் என்ன குல்லா போட்டுக்கொண்டு தினமும் நமாஸ் பண்ணிக்கொண்டிரு க்கிற தீவிர பக்தியுள்ள முஸ்லீமா என்ன?

கருணாநிதி எப்படி முஸ்லீம்களை தூண்டி விடுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. மற்றபடி முகமது அலியை இவர் மாட்டிவிட்டது போல் ராஜதந்திரம் வேறு எவருக்குமே வராது. இதையும், உமாசங்கர் IAS ஐ பழிவாங்கியதையும ் சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு நன்றி.

அரசாங்கம் இஸ்லாமியர்க்கு கல்வி போதித்து அவர்களை உயர்த்துவதில், அறிவு மிக்க குடிமகனாக்குவதி ல், வேலைவாய்ப்பில் அக்கறை காண்பிக்கவேண்டு ம். கருணாநிதி மாதிரி தூண்டிவிட்டுக்க ொண்டிருந்தால் எல்லாருக்கும் நஷ்டம்.
Quote
 
 
+24 #32 Suthiran 2011-08-06 04:42
கருணா நிதியைப் போன்ற ஓர் அயோக்கிய மனிதரைப் பார்ப்பது இனியும் அரிது ! இவருக்கு ஒருவரைப் பிடிக்காதென்றால ் அதுவும் பிராமணர் வகுப்பைச் செர்ந்தவரென்றால ் உடனே "பூணூல்" "குல்லுகபட்டர்", "அவாள்""இவாள்" என்று மடத்தனமாக இளக்காரம் செய்வதாக எண்ணி உளறிக் கொட்டுவார்! இவருக்குப் பிடித்த அயோக்கிய சிகாமணிகளை," தகத்தகாய கதிரவன்", "இசுலாமிய அன்பர்" என்று ஜாதி, மதத்தை வேண்டுமென்றே இழுத்து ஊலறுவார் !
Quote
 
 
+23 #31 காய்ஞ்சி போனவன் 2011-08-06 00:44
//அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக ் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டத ு? ஏன் இப்படிப்பட்ட பழி வாங்கும் நடவடிக்கைகள்? //

மாத்திப் புழுகாத கருணா. தொலைதூரத்துல மண்டபத்தில இருந்த ஜாபர ரம்ஜானை முன்னிட்டு குடும்பத்தோட இருக்கத்தான் சஸ்பண்ட் பண்ணி வீட்டுக்கு அனுப்பியிருக்கா ங்க.
Quote
 
 
+15 #30 காய்ஞ்சி போனவன் 2011-08-06 00:40
//இவர்கள் தவிர அரசியல்வாதிகள் பட்டியல் வேறு உள்ளது. இரண்டு மனை பெற்றவர் களின் பட்டியலும் உள்ளது. இத்தனை பேர் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அந்த ஆட்சிக் காலத்திலும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மனைகளைப் பெற்றிருக்கிறார ்கள். இதில் குறி பார்த்து ஒருசிலர் மீது மட்டும் தற்போது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுப்பது என்பது பழி வாங்கும் செயலா அல்லவா?
//

ஏய் ரெண்டு பேரும் அதிகாரத்த தவறா பயன்படுத்தினீங் க. அந்தம்மாவாச்சும ் ஏதோ ஒன்னு, ரெண்டு பேர நோண்டுது. நீ அதையாச்சும் செஞ்சியா? சொல்லு கருணா சொல்லு.
Quote
 
 
+17 #29 காய்ஞ்சி போனவன் 2011-08-06 00:37
//ஆனால் இதில் எதையும் தி.மு.கழக ஆட்சியிலே தவறு என்று சுட்டிக் காட்டவில்லை.//

ஏன்? என்ன காரணத்துக்காக?
Quote
 
 
+16 #28 காய்ஞ்சி போனவன் 2011-08-06 00:35
//
விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்த ால் குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால ் அரசு அதனைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று 7.12.2010ல் கழக அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி செய்தியாளர்களிட ம் கூறி, அது ஏடுகளிலேயே வெளி வந்துள்ளது.
//

இதுக்கப்பறம் பெரிய லிஸ்ட் போட்டியே. அவுங்களுக்கெல்ல ாம் முறைகேடா இடம் ஒதுக்கினாங்கன்ன ு இப்ப சொல்றியே. அப்படின்னா ஐ.பெரிசு இடிச்சபுளி மாதிரி சும்மா இருந்தது எதனால? தவறு செஞ்சவங்கன்னு தெரிஞ்சும் நடவடிக்கை எடுக்காத நீயும் குத்தவாளிதானே? சொல்லு கருணா சொல்லு, பதிலச் சொல்லு.
Quote
 
 
+15 #27 காய்ஞ்சி போனவன் 2011-08-06 00:30
//
வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவீதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் மீதியுள்ள 15 சதவீதத்தை அரசு, தனது விருப்புரிமையின ் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்ப ட்டு வரும் முறையாகும். அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன வோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.
//

நீ திருடந்தாங்கறத மறுக்கல. ஆனா அவனும் திருடன்னு சொல்ல வர்ற. அப்படித்தானே?
Quote
 
 
+17 #26 காய்ஞ்சி போனவன் 2011-08-06 00:28
// அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ.தி.மு.க. ஆட்சியிலேதான்.


முதல் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவீத வீடுகள் அல்லது மனைகளைத்தான் விருப்புரிமை அடிப்படையிலே அரசு வழங்கலாம் என்று இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 1991ம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில் விருப்புரிமை 10 சதவீதம் என்பதை 15 சதவீதம் என்று உயர்த்தி வழங்கலாம் என்று முடிவெடுத்ததும் அவர்கள்தான்.//

அதுக்கென்ன இப்போ? அஞ்சு வருசம் ஆட்சியில செரச்சிகிட்டா இருந்த? திரும்பவும் 10ஆ மாத்தியிருக்க வேண்டியது உன்னோட வேலைதான?
Quote
 
 
+16 #25 காய்ஞ்சி போனவன் 2011-08-06 00:25
//“கடந்த கால திமுக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தா ன் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட் டார் என்பது தான் அவர் மீது குற்றச்சாட்டு. //

கருணா: தப்பா சொல்லீட்டேன். அரசுக்கு என்று வரும் இடங்களில் எனக்கு என்று திருத்திப் படிக்கவும்.
Quote
 
 
+15 #24 KKR 2011-08-05 23:38
Dear AKM/Sahul /Kadarkaraivasi Avargale,

Only a very few persons like this in any religion, almost all of the citizens of India whether Hindus, Christians or Muslims are very good at heart.

Indian Soldier Havildar Abdul Hamid who showed utmost bravery in Indo Pak war of 1965 and got the highest possible award of Param Vir Chakra after his death , is one of the greatest patriots of modern India and is a living legend in the Indian Army history.

Sagodharargale , we have to just ignore the very few bad examples in any religion and maintain our traditional brotherhood among all our communities in our State & Country.This is very important for peace and economic progress.
Regards
KKR
Quote
 
 
+23 #23 sagamanithan 2011-08-05 23:37
/*
ஒனான் இல்லங்கோ இது சாக்கடையில் புரலும் பன்னிங்கோ பன்னி

*/

கருணாநிதியை பன்னியுடன் ஒப்பிட்டு பன்றியை கேவலப்படுத்திய வடக்குப்பட்டி ராமசாமியை வன்மையாக கண்டிக்கிறேன்.

:-)
Quote
 
 
+12 #22 china ahamed 2011-08-05 23:34
கருணாநிதியோட பல ரகசியங்கள் இந்த ஜாபருக்கு தெரியும் போல அல்ல மொத்தமா தெரியும் மொத்தமா குடும்பம் உள்ள போனால் கட்சியும் போயிரும் வெலியயும் வர முடியாது அந்த பயம்தான் அய்யாவ பேச வச்சிருக்கு
Quote
 
 
+16 #21 KARTHEESWARAN 2011-08-05 23:09
வாரியம் குறிப்பிடும் தொகையை மொத்தமாக கட்ட டாபரிடம் அவ்வளவு தொகை ஏது? அதை பற்றி யேன் இந்த டுபாக்கூர் முக பேச மாட்டேங்கிறான்? இதுல இந்துவா இருந்தா என்ன? முஸ்லிமா இருந்தா என்ன? தப்பு தப்பு தான... ஸ்டாலின் எப்பொ இவனை கொல்ல போறானு தெரியல? சீக்கிரம் செத்தா நல்லா இருக்கும்..
Quote
 
 
+30 #20 sahul 2011-08-05 22:05
இந்த ஜாபர் சேட்ட இஸ்லாமியர்னு சொல்லவே வெக்கமா இருக்கு..
Quote
 
 
+68 #19 கடற்கரைவாசி 2011-08-05 21:19
இந்த மு.க ஏன், தேவையில்லாம எங்கள (இஸ்லாமியர்களை) இழுக்குது...

ஜாபர் சேட் போட்டு குடுத்துருவான்ன ு பயம் இருந்தா, வெறும் வல்லவர் நல்லவர்னு சொல்லி நிறுத்த வேண்டியதுதானே...

அது என்ன இஸ்லாமியர், ரமழான் மாதம், நோன்பு அது இதுன்னு...

இந்த ஜாபர் சேட்ட இஸ்லாமியர்னு சொல்லவே வெக்கமா இருக்கு..

திருக்குரான் 2:188
"உங்களிடையே (ஒருவருக்கொருவர ்) உங்கள் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியை பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை கொண்டு செல்லாதீர்கள்"

இத ஒழுங்கா புரிஞ்சி படிச்சிருந்தா இந்த சனியன் லஞ்சம வாங்கி இருக்குமா?

நம்ம முஸ்லிம் ஆச்சே, இருக்குறதே விரல் விட்டு என்னுற அளவுக்கு தானே பெரிய அதிகாரிங்களா இருக்கோம், நம்ம எதாச்சும் தப்பு செஞ்சா ஒட்டு மொத சமுதாயத்துக்கும ் கெட்ட பேராச்சே அப்டின்னு யோசிச்சா இந்த நாதாரி இந்த அக்கிரமம், அணியாயம் பண்ணிச்சு...

என்னன்னா அநியாயம் பண்ணுச்சு, அப்ப இல்லாத சமுதாய அக்கற இப்ப எங்க?...

இந்த ஜாபர் சேட், படிப்புல பின் தங்கி இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்த சேர்ந்த எத்தன பேர படிக்க வச்சுருக்கும், எவ்வளவு பேருக்கு உதவி செய்திருக்கும்... அட ஏழைநிதி (ஜகாத்) ஒழுங்கா குடுத்திருக்கும ான்னே இறைவனுக்குத்தான ் வெளிச்சம்...

அப்ப இல்லாத சமுதாய அக்கற இப்ப எங்க வந்துச்சாம்?...

திருட்டுப்பய, மொள்ளமாரி, முடிச்சவுக்கி, கடைசில மட்டிபோம்னு தெரிஞ்சவுடன, இருக்குற கொஞ்ச நஞ்ச சமுதாயத்தோட நல்ல பேரையும் அடகு வைங்கய்ய...

இந்த நாதாரி செஞ்ச, இஸ்லாத்திற்கு எதிரான தப்புக்கு, இஸ்லாம் குற்றவாளிக்கூண் டில் ஏற வேண்டுமா?

ஐயா கருணையில்லாத கருணாநிதி, ஒரு முறை ஒரு கலவர பிரச்சினைக்காக, உன் வீட்டு வாசலுக்காக வந்தவர்களிடம், நீ என்ன சொன்னன்னு தெரியும்யா...

பிரியாணி, செண்டு தானே கொண்டு வருவாங்க, இந்த பாயிங்க, இப்ப என்ன கம்பிலயின்ட் கொண்டு வந்திருக்காங்க, அதெல்லாம் வாங்க முடியாதுன்னு சொல்லி அனுப்பு, அப்டின்னு சொன்னா ஆளுதானய்யா
நீர், கருணையில்லாத, நிதியை கோடி கோடியாய் கொள்ளையடித்த கருணாநிதி...

எங்கள ஏமாத்துனது போதும், நாங்களும் ஏமாந்தது போதும்...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 241 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday14291
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week57018
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month259750
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12781869