முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
இழந்ததே அதிகம்….. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 107
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 09 ஆகஸ்ட் 2011 13:23

டிவிக்கள் என்றால் மூன்றே மூன்று ப்ராண்டுகள் மட்டும் தான்.  சாலிடேர், டயனோரா மற்றும் ஈசி டிவி.   அதுவும் கருப்பு வெள்ளை தான்.   வண்ணத் தொலைக்காட்சிகளை பார்ப்பது அரிதிலும் அரிது.  செல்போனெல்லாம் கிடையாது.  லேண்ட் லைன் வாங்குவதற்கே பதிவு செய்து விட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.  அதுவும், உங்கள் எக்சேஞ்சில் இடமில்லை என்றால், எக்சேஞ் எப்போது விரிவுபடுத்தப் படுகிறதோ, அது வரை காத்திருக்க வேண்டியதுதான்.

 

இரு சக்கர வாகனங்கள் என்று எடுத்துக் கொண்டால், டிவிஎஸ் 50க்கு அடுத்த படியாக ஸ்கூட்டர் மட்டும் தான்.  பஜாஜ் ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களை, உயர் நடுத்தர வகுப்பினர் என்று கருதுவார்கள். அவர்களுக்கு அடுத்த படியாக பைக் வைத்திருப்பவர்கள்.  எஸ்டி, என்     ஃபீல்ட் தவிரவும், எண்பதுகளின் இறுதியில் அறிமுகப் படுத்தப் பட்டது, சுசூகி பைக்.  பெரும் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாங்க முடியும்.

 

கார்களை எடுத்துக் கொண்டால், அம்பாசிடர் பியட் தவிர்த்து, பணக்கார கார் என்று மாருதி அழைக்கப் படும்.  மாருதி 800 வைத்திருப்பது ஸ்டேட்டஸ் சிம்பல்.

 

வெளிநாட்டுப் பொருட்கள் அவ்வளவு சாமான்யத்தில் கிடைக்காது.   வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டுமென்றால் பர்மா பஜார் தான்.   அங்கே சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.  அந்தப் பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும்.

 

கொக்கோ கோலா கிடையாது. கோல்ட் ஸ்பாட்டும், தம்ஸ் அப்பும், பன்னீர் சோடாவும் உண்டு.   மெக்டோனால்டும், கேஎஃப்சியும் கிடையாது.   மல்டி ப்ளெக்சுகளும், மால்களும் கிடையாது.

 

இந்த நிலையில் தான், 1991ல் நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்கிறது.  புதிய அரசு வந்ததும், சந்தைப் பொருளாதாரம், தாராளமயமாக்கல் கொள்கை என்பதை வெளிப்படையாக அறிவித்தது.  இந்தக் கொள்கைகைள் நடைமுறைக்கு வருவதை, இடது சாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. டங்கல், காட் போன்ற ஒப்பந்தங்கள் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை சீரழிக்கும் என்று தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தின.

 

ஆனாலும் அத்தனை போராட்டங்களையும் மீறி, சந்தைப் பொருளாதாரம் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த சந்தைப் பொருளாதாரம் அறிமுகப் படுத்தப் பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.  இணையதள வசதியும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், எண்பதுகளில் இல்லாத வகையில் அபிரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அன்று வெளிநாடுகளில் வாழும் உறவினர்களை தொடர்பு கொள்ள இருந்த சிரமங்கள் இன்று இல்லை.  நொடியில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு தகவல் தொடர்புச் சாதனங்கள் வளர்ந்துள்ளன.  ஆனால், அருகாமையில் இருக்கும் நபரோடு நமக்கு இருக்கும் தொடர்பு தான் அறுந்து போயிருக்கிறது.

 

முதலாளித்துவம் சார்ந்த சந்தைப் பொருளாதாரம், நாட்டில் தேனையும் பாலையும் ஓட விடும் என்று அப்போது அறிவிக்கப் பட்டது.  இன்று என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டி உள்ளது.

 

அர்ஜுன் சென்குப்தா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 77 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வாழுகின்றனர். என்.சி.சக்சேனா கமிட்டியின் அறிக்கையின் படி, இந்தியாவில் 50 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழே வாழுகின்றனர்.

 18730177

இந்தியாவின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,  35.5 % வங்கி சேவையை பயன்படுத்தியுள்ளார்கள்.   35.1 % வானொலி வைத்துள்ளனர் 31.6 % தொலைக் காட்சி வைத்துள்ளார்கள், 9.1 % தொலைபேசி வைத்துள்ளனர் 43.7 % சைக்கிள் வைத்துள்ளனர் 11.7 % ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர் 2.5 % கார் வைத்துள்ளனர், 34.5 % இவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்கின்றனர்.

 

விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நமது பொருளாதாரத்தை வணிக மயமாக மாறவேண்டும் என்பதற்காக, வழக்கமான உணவுப் பொருட்களை பயிரிட்டு வந்த விவசாயிகளை, பணப்பயிர்களை பயிரிட அரசு ஊக்குவித்தது.  வழக்கமான பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, அந்த விளைபொருட்கள் விற்காவிட்டாலும், அந்த உணவு தானியங்களை வைத்து பட்டினியை தவிர்க்க முடிந்தது.  ஆனால், பருத்தி போன்ற பணப்பயிர்களை பயிரிட்டு, உரிய விலை கிடைக்காத விவசாயிகள், கடும் வறுமையில் சிக்கி, தற்கொலையை நோக்கி தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

Poor_Children_in_India

 

அரசே ஒப்புக் கொண்ட புள்ளி விபரங்களின் படி, 1997 முதல் 2007 வரையிலான காலத்தில் மட்டும் 2 லட்சம் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்க கண்டத்தை விட அதிகமாக இருக்கிறது.

 

இந்தியாவில் உள்ள பணக்காரர்களை எடுத்துக் கொண்டால், 2007ம் ஆண்டு உள்ள கணக்கின் படி, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம்.  இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

 

இன்று விதவிதமான கார்கள் இருக்கின்றன.  தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கக் கூடிய ஐபோன்களும், ப்ளாக் பெர்ரிகளும் இருக்கின்றன.  அமெரிக்காவில் இன்று அறிமுகப் படுத்தப் படும், கார்கள் அடுத்த வாரமே இந்தியாவில் கிடைக்கின்றன.   விதவிதமான பைக்குகள் இருக்கின்றன, எல்சிடி டிவிக்கள் இருக்கின்றன.

 

எங்கு பார்த்தாலும் மல்டி ப்ளெக்சுகள் புற்றீசல் போல தோன்றி வருகின்றன.  உங்களுக்கு கடன் கொடுத்து, தெருவில் நிறுத்த, கடன் அட்டைகளையும், பர்சனல் லோன்களையும் வழங்க வங்கி ஏஜென்டுகள், உங்களை போனில் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

 sathyam_escape_cinemas_chennai_express_avenue_01

இணையத்தில் சினிமா டிக்கெட் முதல், ரயில்வே டிக்கட் வரை அனைத்தையும் வாங்கும் வசதிகள் பெருகி விட்டன.   மடிக் கணிணி போய், டேப்ளெட் பிசி என்ற கையடக்க கருவிகள் வந்து விட்டன. சுவற்றில் மாட்டக் கூடிய எல்ஈடி டிவிக்கள் வந்து விட்டன.   தெருவுக்கு தெரு பீட்சாக்கள்  கிடைக்கின்றன, மெக்டொனால்டு கடைகள் உள்ளன, கேஎப்சிக்கள் உள்ளன.

 

இவையெல்லாம் நமக்குக் கொடுத்தது என்ன ?   ஒன்றே ஒன்றுதான் பேராசை.   பேராசையை ஏராளமாக வளர்த்து விட்டுள்ளது இந்த சந்தைப் பொருளாதாரம்.

 

இந்தியாவில் மற்றும் வெளி நாடுகளில் புழக்கத்தில் உள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான கருப்புப் பணம் மட்டும் 70 லட்சம் கோடி என ஒரு மதிப்பீடு கூறுகிறது.   ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி, காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என்று ஒரு பக்கம் ஊழல்களின் பட்டியல் மலைக்க வைக்கிறது.

 

மற்றொரு பக்கத்தில். தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பத்தினரின் சொத்துப பட்டியல் மலைக்க வைக்கிறது.  திமுகவினர் ஈடுபட்டுள்ள நில அபகரிப்பு குற்றச் சாட்டுகளின் பட்டியல் மிக மிக நீளமாக இருக்கிறது. நாட்டில் நிலத்தின் மீதான மோகம் எந்த அளவுக்கு தலை விரித்தாடுகிறது என்பதையே இது காட்டுகிறது.

 

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’ என்று சொன்ன புத்தரும், உலகத்திற்கே தத்துவத்தை கற்றுத் தந்த பல்வேறு அறிஞர்களும் பிறந்த இந்த பூமியில், அந்த பூமியின் மீதான ஆசை வெறியாக மாறி, சுயநலத்தைத் தவிர வேறு எந்த நலனும் முன்னிற்க முடியாது என்கிற அளவுக்கு மாறியிருக்கிறது.

 

உளவியல் ரீதியாக இந்த சந்தைப் பொருளாதாரம், இந்திய சமூகத்தின் மீது தொடுத்திருக்கும் தாக்குதலானது, மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக மோசமான ஒரு சூழலுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.  அடுத்தவரை நேசிக்கக் கூட நேரமில்லாமல் சொத்து சேர்க்க கற்றுக் கொடுத்திருக்கிறது.  சக மனிதரிடம் ஒரு வார்த்தை பேசுவதால் என்ன நடக்கப் போகிறது, அதனால் நமக்கு என்ன லாபம் என்று சிந்திக்க இந்த சந்தைப் பொருளாதாரம் கற்றுக்  கொடுத்திருக்கிறது. உறவுகளின் மீது இருந்த அன்பு, பொருட்களின் மீது மாறிய ஒரு வேதனையான தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

சந்தைப் பொருளாதாரத்தின் வீச்சு எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்றால், தொண்ணூறுகளில் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைக்காக பெரும் போராட்டங்களை முன்னெடுத்த இடது சாரிக் கட்சிகளே, ஒரு பெரு முதலாளிக்காக ஏழை விவசாயிகள் மீது துப்பாக்கிச்  சூடு நடத்தும் அளவுக்கு மாறிப் போகும் அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

 

இந்தியாவில் முக்கிய அரசியல் முடிவுகளையும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களையும், அரசின் தொழிற்கொள்கைகளையும் நிர்ணயம் செய்யும் அளவுக்கு இன்று பெருமுதலாளிகள், இந்திய அரசியலின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.  அந்த முதலாளிகளின் ஏவலுக்கு ஏற்ப கொள்கைகளை வடிப்பவர்களாக அரசியல்வாதிகள் மாறிப் போயிருக்கிறார்கள்.

 

உறவுகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு, நுகர்பொருட்களால் வீடுகளை நிரப்பியிருக்கிறோம்.    உணர்வுகளை கொன்று விட்டு, பேராசைக்கு உரமிட்டுக் கொண்டிருக்கிறோம்.   இன்றைய நமது தலைமுறையே இப்படி பேராசையோடு இருக்குமானால், நாளைய சந்ததி எப்படி இருக்கும் என்ற அச்சமே மேலாங்குகிறது.

 

இந்த இருபது ஆண்டுகாலத்தில் நமது உளவியலிலும், வாழ்கை முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்த சந்தை பொருளாதாரத்தால் நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்றே எண்ணத் தோன்றுகிறது….

 

இருப்பவருக்கும் இல்லாதவருக்கும், இடையயே பெருகியுள்ள இடைவெளியின் வெளிப்பாடே லண்டன் கலவரங்கள்.  நாமும் அது போன்ற ஒரு எரிமலையின் மீதுதான் அமர்ந்திருக்கிறோம்.

bf6cc6d0-32c8-4fea-a883-55ade6b56feeHiRes

riot_london

 

Comments  

 
0 #122 Luxmy 2011-09-14 17:07
மாற்றம் என்ற சொல்லைத் தவிர ஏனைய அனைத்தும் மாறும் எது சரி என்று யார் சொல்லமுடியும் கட்கலத்தை விரும்பிய பலர் அது சரி என்பார்கள் இடைகலத்தை விரும்பிய பலர் இது சரி என்பார்கள் நாகரீக வளர்ச்சி மாறிகொன்டிருகிற து போதும் என்று நினைக்க யாரும் இல்லை இங்கு தவிர்கமுடியது முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனை இது நம் வாழும் காலம் மட்டுமே நமக்கு தெரியும்
Quote
 
 
0 #121 sip 2011-09-12 13:11
dd
Quote
 
 
+1 #120 tamilachi 2011-08-16 11:39
நல்ல விழிப்புனர்வு கட்டுர்ரை.
Quote
 
 
+2 #119 evano oruvan 2011-08-15 14:53
என் யோகா மாஸ்டர் கூறுவார். ஒரு சிறிய வட்டத்தினுள் உடலை அடக்கி அமர்வது சுகம், அதுதான் யோகம் என்று. அது போல, கருப்பு வெள்ளைத் டீவியில் இருந்த நிம்மதி இப்போது இல்லை என்பது உண்மையே. இந்தியர்களில் பெரும்பாலானோர் சுயநலவாதிகள். ஒரு நாடு முன்னேறாமல் இருப்பதற்கு வெறும் அரசியல்வாதிகள் காரணமில்லை. சுயநலமிக்க மக்களாலும் தான் அது பின்னடைவு அடைகிறது. அதான் அரசியல்வாதிகளால ் ஒன்றும் கிழிக்க முடியவில்லை என்பத் தெரிகிறதல்லவா? ஏன் மக்களாகிய நாம் நம்மாலான முயற்சியை செய்யக்கூடாது? உதாரணத்திற்கு:

1) சைனாவிலிருந்து வரும் பொம்மைகள் மற்றும் ஹேர் பேண்டுகள் உபயோகப்படுத்தப் பட்ட ஆணுறையினால் தயாரிக்கப் படுபவை என்று ஒரு அறிக்கை வந்துள்ளது. இந்தியர்கள் சைனா தயாரிப்பை வாங்குவதை நிறுத்தினால் அது பேக் ஃபயர் ஆகி அப்பொருட்கள் மேற்கொண்டு வருவதை தடுக்க முடியும்.

2) பெட்ரோல் விலை கூடிக்கொண்டே போகிறது? இனி இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்கள் மின்சார வண்டிகளை வாங்கத் தொடங்கினால் ஆதரவு தந்து தானே ஆக வேண்டும்? பெட்ரோல் போடுவது படிப்படியாய் குறைந்தால் தானே விலையும் இறங்கி விடுமல்லவா? எத்தனையோ அறிவுமிக்க மெக்கானிக்கல் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஊக்கத் தொகை கொடுத்து தரமிக்க எலக்ட்ரிகல் வண்டிகள் செய்யப் பயன்படுத்தலாமே?
Quote
 
 
+2 #118 virutcham 2011-08-13 19:34
நல்ல கட்டுரை. //உறவுகளைத் துரத்தி விட்டு நுகர்பொருட்களால ் வீட்டை நிரப்பி இருக்கிறோம்.// நேரடியாக இது ஓன்று நம்மால் மாற்றக் கூடியது.
Quote
 
 
+1 #117 தஞ்சை குணா 2011-08-13 11:08
கம்யூனிசம்,சோசல ிசம் தோற்றுவிட்டது போல் தெரிகிறது. கம்யூனிசத்தை பின்பற்றிய ரஷ்யா கேப்பிட்டலிச பாதைக்கு திரும்பிவிட்டது . சைனா கேப்பிட்டலிச பாதைக்கு வந்த பின்னர் தான் இன்று உலக அளவில் வலிமை மிக்க சக்தியாக உருவாகி இருக்கின்றது. மேற்குவங்கம், கேரளத்தில் கம்யூனிச ஆட்சி தோற்கடிக்கப்பட் டுள்ளது. இதுவே கம்யூனிசம் தோற்கடிக்கப்பட் டுள்ளதை உறுதி செய்கின்றன.

எதிர்காலத்தில் கேப்பிட்டலிசம் தனது வெற்றியை தக்கவைத்துக்கொள ்ளுமா ?

முடியாது என்பது எனது கருத்து.

முன்பு உலகின் 80 % வளங்களை மேலை நாடுகளில் வாழ்ந்த 20 % மக்கள் அனுபவித்தார்கள் . இன்று கீழை நாடுகளில் மக்கள் மேலை நாட்டு பாணியில் வாழத்தொடங்கிவிட ்டார்கள். தேவை அதிகரித்துவிட்ட தால் அத்தியாவசிய பொருள்களின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கிவிட்டது.

மேலும் மேலும் வளரும் போது பிரச்சனை பெருகத்தான் போகின்றதே அன்றி குறையப்போவதில்ல ை.

தொழிலாளர்கள் மத்தியில் தொழில்புரட்சி ஏற்பட்ட காலத்தில் உண்டான நெருக்கடி இப்போதும் தோன்றுவதற்கான அறிகுறிகள் உண்டாகிவிட்டது.

அமெரிக்காவில் பணக்காரர்களுக்க ு கூடுதலாக வரிவிதிக்க அரசாங்கம் தயங்குகின்றது. தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய கட்டயப்படுத்தப் படுகிறார்கள். மறுப்பவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுகின்ற ார்கள். வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகின்றத ு.

இந்தியாவிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கூடுதலான நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப ்படுகிறார்கள். இது இப்போது இருப்பதை விட அதிகரிக்கத்தான் போகும்போல் தெரிகின்றது.

எதிர்காலத்தில் கேப்பிட்டலிசம் தனது வெற்றியை தக்கவைத்துக்கொள ்ளுமா ?
Quote
 
 
+1 #116 uப்பாவி 2011-08-13 10:11
//இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் , இடையயே பெருகியுள்ள இடைவெளியின் வெளிப்பாடே லண்டன் கலவரங்கள். நாமும் அது போன்ற ஒரு எரிமலையின் மீதுதான் அமர்ந்திருக்கிற ோம்.//
நூறு சதவிகிதம் உண்மை.
புலிவருது..புலிவருது..கதை தான் ஞாபகம் வருது.
Quote
 
 
+9 #115 தம்பித்துரை 2011-08-13 00:30
நான் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்ய போகிறேன், ஏன் என்றால் நான் படித்த பட்டய படிப்பு கணினியை பற்றியே. ஆனால் எனக்கு ஒரு யோசனை.. நான் என் சம்பளத்தில் ஒரு சிறிய பங்கை, விவசாயதத்திற்கு தானம் செய்யலாம் என்றிருக்கிறேன் ..

என்னால் விவசாயம் இப்போது செய்ய இயலாது..ஏனென்றால் எனக்கு விவசாயத்தில் அனுபவாமோ, விவசாய செய்முறைகளோ தெரியாது.. ஆனால் என் போல் உள்ளவர்கள், தங்களின் வருமானத்தில் ஒரு சிறிய பங்கை விவசாயதத்திற்கு அளித்தாள்ல் விவசாயத்தை அழிவின் விளம்பில் இருந்து மீட்க முடியும் என்று நினைக்கிறேன்..
Quote
 
 
+8 #114 Ravi 2011-08-12 19:46
நீங்கள் உதாரணம் காட்டிய இநாட்டில் வாழ்ந்து வருகிறேன். உங்களின் கருத்து பெருமளவு சரிதான். ஆனால் நாம் அடைந்த அத்தனை இழிவிற்கும் உலக மயமாக்கலை மட்டும் குற்றம் சொல்வது சரியாகாது. உலகமயமாக்கல் வருவதற்கு முன்பு நமது நாட்டு திட்டங்களெல்லாம ் சாதாரண மக்களைச் சென்றடைந்ததா? இல்லையே? அப்போதும் பேராசைகாரர்கள் கையில்தானே இந்த நாடு இருந்தது? அன்றும் இந்த டாடாவும் பிர்லாவும் அம்பானியும்தானே மத்திய "பெர்மிட்" ராஜை வளைத்து தங்களை வளர்த்துக் கொண்டனர். இன்று ராசா அன்று இந்திராவும் ஜெகஜீவன்ராம். அம்புடுதான். மேலும் அந்த காலகட்டத்தில்தா ன் மிக அதிகமாக சிவிஸ் வங்கிக்கு நம் அரசியல்வாதிகள் பணத்தை கடத்தினர். ஆக பேராசை நமது பிறவி குணம். இது கட்டபொம்மன் காலமானாலும் சரி அல்லது மன்மோகன்சிங் காலமானாலும் சரி..நம்மை அழிக்க வெளியே ஆள் தேட வேண்டாம். நாமே போதும். கர்ணனை போற்றும் நம் நாட்டில் எத்தனை பேர் தம் வருமானத்தில் 1 சதவிகிதமாவது மற்றவருக்கு கொடுத்திருக்கின ்றனர்? கேட்டால் கோவிலுக்கு கொடுத்தேன் என்பார்கள். அதிலும் தமக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற சுயநலத்தால்தான் கொடுப்பார்கள். அதை விடுத்து ஒரு சேவை நிறுவனத்திற்கு கொடுப்போம் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள தவறி விட்டோம். நாம் சொல்வதும் போற்றுவதும் ஒன்று. ஆனால் நாம் செயல்படுத்துவது வேறொன்று. அதுதான் இந்தியா/தமிழ்நாடு. இப்ப்டி இருக்கும் சமுதாய்ம் இன்னும் எத்தனை காலமானாலும் முன்னேறுமா?
ரவி/இங்கிலாந்து.
Quote
 
 
+4 #113 NELLAI SINGAM 2011-08-12 18:42
இவையெல்லாம் நமக்குக் கொடுத்தது என்ன ? ஒன்றே ஒன்றுதான் பேராசை. பேராசையை ஏராளமாக வளர்த்து விட்டுள்ளது இந்த சந்தைப் பொருளாதாரம்...............
Quote
 
 
0 #112 கடற்கரைவாசி 2011-08-12 17:39
[ஃஉஒடெ நமெ="சொவை முருகன் "][ப்]சங்கர் அண்ணா "ஞாபகம் வருதே" பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் இந்த நகர வாழ்க்கையால் அந்த கிராமத்தை ரொம்ப இழந்து விட்டேன் (எனக்கு வயது 30 )...மேலும் என்னுடைய 7 வயது குழந்தைக்கு அவசரமான மற்றும் மரத்துப்போன மனமுள்ளவர்களின் ஒரு உலகத்தைதான் காட்ட முடியுதே தவிர ....நான் ஓடி விளையாடிய கரும்பு தோட்டங்கலையோ, இல்லை குதித்து விளையாடிய கிணறுகலையோ அவளுக்கு டிவியில் மட்டுமே காட்ட முடிகிறது ...மேலும் அந்த பழைய கிராமத்து மக்களின் அன்பையோ பாசத்தையோ அவளுக்கு புரிய வைக்கவும் முடியாது ....உண்மையில் நாம் வாழ்வில் ஒரு நடைபிணமாகதான் இருக்கிறோம் உயிரை மட்டும் தொலைத்துவிட்டு [/ப்] :சட்:[/ஃஉஒடெ]

@Covai Murugan and Similar others,

According to the author of "Last Child in the Woods: Saving Our Children from Nature-Deficit Disorder", Richard Louv (http://www.amazon.com/Last-Child-Woods-Children-Nature-Deficit/dp/1565123913)

one of the causes for the childrens disease of ADHD (Attention deficit hyperactivity disorder) is lack of exposure to the nature... and it is essential for the kids to have exposure and interact with the nature...

You can read more by googling "ADHD" or the book.
Quote
 
 
0 #111 anamika 2011-08-12 15:04
இழக்கூடாத மனிதனேயத்தை இழந்து கார்களில் பவனி வருகின்றார்கள்.

இன்னொரு பாரதி வேண்டும்.

என்று தணியும் இந்த அடிமையின் மோகம்?
Quote
 
 
+7 #110 Suriya 2011-08-12 14:15
தவறாக எதுத்துக் கொள்ள வேண்டாம், இந்த உலகமயமாக்களில் என் கிராமத்து வாழ்கையை தொலைத்து விட்டேன், சொந்தங்களை இழுந்து விட்டேன் என்று இங்கே ஆதங்க படுபவர்களுக்கு ஒரு கேள்வி, நீங்கள் கடைசியாக உங்கள் சொந்த ஊருக்கு சென்றது எப்போது, உங்கள் சொந்தங்களை சந்தித்தது எப்போது . விவசாயம் பொய்த்து விட்டது என்று புலம்புவர்கலக்க ு ஒரு கேள்வி, கண்டிப்பாக தங்கள் தந்தை, பாட்டனார் விவசாயகிளாக தான் இருந்திருப்பார் கள், நீங்கள் ஏன் அதை செய்ய வில்லை. இந்த உலகமயமாக்களில் உறவுகளையும் , கிராமங்களையும் தொலைத்து விட்டோம் என்று சொல்ல வேண்டாம், அவைகள் அங்கேதான் இருக்கின்றன . நாம்தான் நம் மனதை சுருக்கி கொண்டோம். அப்புறம் இந்த அரசியல் வாதிகள். யாரையும் புண்படும்படி என் வார்த்தைகள் இருந்தால் மன்னிக்கவும்.
இந்த வாரம் படித்தது... தாத்தா , பாட்டி, பெரியப்பா, மாமா ,சித்தப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்த கூட்டுக் குடும்பம் என்று போய்,
அப்பா அம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்று ஆகிவிட்டது இன்று.
Quote
 
 
+2 #109 Calins 2011-08-12 13:29
மிகவும் நல்ல கட்டுரை. அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டிய தருணம்.
Quote
 
 
+2 #108 பிரபாகரன் 2011-08-12 10:21
அவசியமான ஒரு கருத்து
Quote
 
 
+2 #107 Sara 2011-08-11 20:24
Savukku,

Nice article. Please perform much detailed study to make people aware of what could happen if giant MNC retailers get into India.

This is much MORE dangerous than our corrupted politics happening in our country. Once they enter, they destroy small retailers and they force farmers to go with genetically modified crops which is said to be a main reason for producing cancer in many developed countries.

Let us save our sons & daughters from this evil. Again, please continue to publish articles on this topic to create awareness among people. Please savukku.
Quote
 
 
+9 #106 givehimafairchance 2011-08-11 18:02
வெளியே வராத செய்தி. ஜெயா ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கு அளிக்கப்படும் மின்சார வசதியை நிறுத்தினர். ஆனல் துரோஹி காங்கிரஸ் ஆந்திரா அரசு மூலம் minsaram அளிக்கிறது கருணாநிதி காலத்தில் இலங்கைக்கு மின்சாரம் அளித்தது . தமிழகம் வழியாக இலங்கைக்கு கடல் மார்க்கமாக மின் வினியோகப்பணி ஆட்சி மாறியவுடன் ரத்து செய்யப்பட்டு,ஆந ்திரா வழியாக பணி துவங்க உள்ளது. மத்திய அரசின் "பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம்,பாக் ஜலசந்தி கடல்பகுதியில் மின் வினியோகத்திற்கா க மண் ஆய்வுப்பணியை 16.12.2010ல் மண்டபம் பகுதியில் துவங்கியது. ஆய்வு முடிந்த பின்னர், திட்ட மதிப்பீடு ஒதுக்கப்பட்ட உடன் இந்தியாவிலிருந் து தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சார வினியோகம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்குப்பி ன் ஆட்சி மாறிய பின் தற்போது இலங்கைக்கு மின் வினியோக திட்டம் நிறுத்தப்பட்டு, தற்போது, ஆந்திரா மாநிலம் கடல் வழியாக இலங்கைக்கு மின்வினியோகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Quote
 
 
+2 #105 esShanmugam 2011-08-11 17:29
ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு...............
அப்சல் குரு ... கசாப் ... எப்போது தூக்கு ? நம்ம ஜனாதிபதிக்கு தைரியம் வருமா ???டவுட்டு ..
Quote
 
 
+2 #104 Force 2011-08-11 15:16
கொள்ளையடித்த பணம் சுவிஸ் லாக்கரில், கொள்ளையடித்தவர் கள் திஹார் லாக்கரில்.
ஆளவந்தவர்கள், அந்நியரின் பொம்மையாய் இருக்கும் வரை இந்திய மக்கள் அடிமை வாழ்வு தான் வாழ வேண்டியிருக்கும ். குற்றப்பணங்கள் மதிப்பிழந்தால் மட்டுமே குற்றம் குறையும். தேர்ந்தெடுக்கும ் நாம், திரும்ப அழைக்கும் அதிகாரம் கொண்டிருந்தால், இந்த அளவுக்கு அரசியல்வாதிகள், நாட்டின் துரோகிகள் ஆகியிருக்க மாட்டார்கள். அந்நிய நாட்டில் பணம் வைத்திருக்கும் அனைவரையும் "தேசத் துரோகிகள்" ஆக்கி எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்து கடைநிலை சிறையில் தள்ள வேண்ட்டும்.
Quote
 
 
+1 #103 தஞ்சை குணா 2011-08-11 14:44
சாதாரண மக்களின் ஓட்டை வாங்கி ஆட்சியை பிடிக்கும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்களுடன ் கூட்டணி அமைத்துக் கொண்டு நாட்டை கொள்ளை அடிக்கின்றான். தொழிலதிபர்கள் லாபி செய்து காரியத்தை முடித்துவிடுகிற ார்கள். ஏழைக்கு லாபி செய்ய யார் இருக்கின்றார்.

அம்பானிக்கு தொலைத்தொடர்பு துறையில் ராஜாவிடமும் அதிகாரிகளிடமும் லாபி செய்ய ராடியாவல் முடியும். சாதாரண மக்களுக்கு எந்த ராடியா இருக்கின்றார்?

வரவுக்குள் செலவு செய்யவேண்டும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன கருத்து. இன்றைய பொருளாதாரம் கடன் வாங்கி அனுபவிக்க தூண்டுகின்றது. இந்தவகை பொருளாதாரத்தை பின்பற்றிய மேலை நாடுகள் அதன் விளைவுகளை இன்று அனுபவிக்கின்றது . அதே வழியில் நாமும் சென்றுகொண்டு இருக்கின்றோம்.
Quote
 
 
-1 #102 sattamilan 2011-08-11 14:31
சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே எங்களை ஊக்கப் படுத்தும். அநானிகளும், வரவேற்கப் படுகிறார்கள்.
Quote
 
 
-1 #101 susrila 2011-08-11 14:15
பண்ணுகிற பாவங்களை எல்லாம் பண்ணிவிட்டு நித்யானந்தாக்கள ை (ஒன்று அல்ல பல) நோக்கி ஓடும் கூட்டம் பெருகியதன் காரணம் இது தான். 1980கலில் 500 ரூபாய்க்கு இருந்த மதிப்பு இன்று ஐந்து லட்சத்திற்கு கூட இல்லை என்பது தான் உண்மை.
Quote
 
 
0 #100 ramk 2011-08-11 13:25
////இவையெல்லாம் நமக்குக் கொடுத்தது என்ன ? ஒன்றே ஒன்றுதான் பேராசை. பேராசையை ஏராளமாக வளர்த்து விட்டுள்ளது இந்த சந்தைப் பொருளாதாரம்.//// மிகச்சரியான வரிகள்
Quote
 
 
+1 #99 givehimafairchance 2011-08-11 13:10
35 மெட்ரிக் பள்ளிகள் CBSE முறைக்கு மாறி விட்டன. ஹிந்தி ஆதிக்க CBSE முறையை தமிழர்கள் ஆதிக்க வில்லை. ஜெயா வின் உண்மையான என்னத்தை புரிந்து கொள்ள வில்லை . சமசீர் கல்வி வந்தடல் CBSE முறைக்கு லாபம் In the wake of Samacheer Kalvi being implemented in the state, parents have started admitting their children in CBSE schools due to which more matriculation schools have started CBSE schools. The state school education department has cleared the proposals for 35 such schools in the state this year with more such schools being in the pipeline. An administrator of a private matriculation school in the city said parents are clamouring for quality school education, which may not be available in the present samacheer kalvi syllabus that was drafted by the previous DMK regime. This has pushed parents to take transfer certificates from matriculation schools and admit their children in nearby CBSE schools. “If this situation continues the school will be empty in a couple of years. To avoid such a scenario we have applied to the school education department for a noobjection certificate to start a new CBSE school next to the present matriculation school“, the administrator said. Ramesh, a parent, said many of the candidates who are getting selected for civil services studied in the matriculation stream. “The syllabus in the matriculation schools is better than samacheer kalvi syllabus. But with the introduction of the uniform schooling system we apprehend that our children might not get quality education and so we are shifting them to CBSE schools”, he said. When contacted, officials in the school education department confirmed that they had received over 50 applications to start new CBSE schools of which the department had cleared 35 proposals this year.
Quote
 
 
+1 #98 Ranjani 2011-08-11 12:57
The article is incomplete and places the blame at the wrong side while the problem lies within ourselves. Like someone said earlier, we Indians do not have basic human values and that is the root cause of all the evils of our society. I have seen people yelling at pallavan driver for stopping and giving way for ambulance. That was one example and there are many I can cite. How many of us help fellow citizens when we see someone in an accident??? How many of us follow the systems and procedures even when visiting a temple??? All of us would like to know a priest or someone to go see god earlier than other in queue.

These values influence our childrens and ultimately the society. What better can we expect from others when we ourselves have such a value system????

I know people will be upset with me, but this is the fact and someone have to tell it in public.

I for one dont like the service I receive from any of the government maintained industry or department or service. Take it bus transportation or train or Air India or RTO or registration or ration, none of the so called public servents dont serve the public. Why do you think we need to give them more power and authority to make things better????

More power to the people and more individual responsibility is the way to go. I know people will take time to accept this new concept, but slowly this is the direction we need to go and there is no way going back to a situation where we need to register for 5 years to get a scooter while the wealthy and persons of influence can get it within months.

Lets the market be open and anyone can produce whatever he can so that he can contribute to the society and eventually mankind.
Quote
 
 
+5 #97 உங்களில் ஒருவன் 2011-08-11 11:23
நீங்க சொன்னதெல்லாம் ரைட்டு சவுக்கு ஒத்துக்குறேன், நீங்க சொல்ற வார்த்தைகள்ல சிலத நீங்க கடைபிடிக்கலாமே..?

மத துவேஷ கருத்துக்களால தனிமனித தாக்குதல்கள்ளைய ும் சவுக்கு வாசகர்கள் ஈடுபடுரத நீங்க வரவேர்க்கின்றீர ்களா?

சவுக்கு தளத்துல ஏன் முஸ்லிம்கள இந்து சகோதரர்கள் பழித்து பேசணும், இந்துக்கள முஸ்லிம் சகோதரர்கள் பழித்து பேசணும்? நூற்றுக்கணக்கில ் அல்லது ஆயிரக்கணக்கில் இருக்கும் உங்கள் வாசகர்களில் அதிகபட்சம் ஒரு நூறு பேர்தான் கமெண்ட் போடுவார்கள்.
அவர்களில் துவேஷ கருத்துக்கள் போடுபவர்கள் இருபது பேர் இருக்கலாம், அந்த இருபது பேர்களைக்கூட உங்களால் உங்கள் கருத்துக்களால்
துவேஷ எண்ணங்களை விட்டொழியுங்கள் என்று அறிவுரை கூறி அவர்களை அதன்படி நடக்க வைக்க முடியவில்லைஎன்ற ால்
நீங்களே அவற்றை வளர்க்க உதவுகின்றீர்கள் என்று அர்த்தம் அல்லவா?

சவுக்கின் வேலை வெறும் கட்டுரை எழுதுவதில் மட்டும் முடிந்துவிட்டதா ? மத நல்லிக்கினக்கத் தை வலியுறுத்தி சாமியின் கட்டுரையில் நான் இட்டிருந்த பின்னூட்டத்தை காணவில்லையே? சவுக்கின் வாசகர்கள் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும், மனிதத்தை தாண்டி மதம் நம்முள் வளர விட வேண்டாம். பிற மதத்தினரிடம் வித்யாசங்கள் பல இருக்கும், ஆனால் அனைவருக்கும் பொதுவானது பரிமாறிக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அது அன்பு. இனியாவது சவுக்கு தளத்தில் மத துவேஷ தனிமனித தாக்குதல்களை நிறுத்திக்கொள்வ ோம். நன்றி.
Quote
 
 
0 #96 js 2011-08-11 10:45
ரொம்பவும் அருமை
உறவுகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு, நுகர்பொருட்களால ் வீடுகளை நிரப்பியிருக்கி றோம். உணர்வுகளை கொன்று விட்டு, பேராசைக்கு உரமிட்டுக் கொண்டிருக்கிறோம ். இன்றைய நமது தலைமுறையே இப்படி பேராசையோடு இருக்குமானால், நாளைய சந்ததி எப்படி இருக்கும் என்ற அச்சமே மேலாங்குகிறது.
It reflects how the present generation is and also it reflects the feelings of middle class and also middle age persons mind. Thanks.
Quote
 
 
0 #95 GSR 2011-08-11 10:35
இதற்கு காரணம் மக்கள் தான் .....அவர் அவர் கடமையை ஒழுங்காக செய்தால் தான் இதற்கு தீர்வு கான முடியும்...
Quote
 
 
0 #94 Seval 2011-08-11 09:38
தலைவா சவுக்கு

சோவியத் ரஷ்யால கம்யுனிஷம் பத்தி ஒருவர் சொன்னது:

அரசாங்கம் சம்பளம் தார மாறி நடிக்குது. நாங்க வேலை செய்ற மாறி நடிகிரோம்

இப்ப புரியுதா கம்யுனிஷத்தோட தோல்வி எங்கனு.

உனக்கும், சரோஜா தேவில கத எழுதுற ஒருத்தனுக்கும், எழுதுரிங்கனு சொல்லி ஒரெ சம்பளம்னு சொன்னா நீ மகிழ்ச்சியா தரமா எழுதுவியா? அப்படி சொல்லுருதது தான் கம்யுனிஷம்.

இன்தியால நடக்குர அக்குரமத்துகு காரணம் அரசியல்வாதி, அதிகாரி மற்றும் சில கார்போரேட் முதலாலிகளோட பேராசை தான் காரணம். இவனுகல --- அடிச்சா எல்லாம் சரியா போகும்.

அதனால பிரச்சனை காப்பிட்டலிசத்த ில் இல்ல.

இது ஒரு நல்ல பதிவு...
Quote
 
 
0 #93 கார்த்திகேயன் 2011-08-11 07:15
நல்ல பல கருத்துகளை கொண்ட இந்த வலை தளத்துக்கு வாழ்த்துகள்.
Quote
 
 
+1 #92 Thangavel M 2011-08-11 00:45
@Ranjani : capitalism is a way to have only 2 worlds. haves and have nots. Economically you cannot be able to prove capitalism coz there is nothing called as saturation in it. In capitalism a product will be replaced by another. But in real world we don't have replacements for ethics, values and other things like minerals, oil etc...

Now we have a situation like this,

1. We have polluted the world with all kinds of pollution.

2. We have generated enough weapons to kill the entire population in Mother Earth N no of times.

3. It is true that open market has got so many things for us. But at what cost? When most of the citizens of this country go to sleep without food, can't afford education, medical facilities then what for the system is?

4. Capitalism is not a solution it is a begining for an end. We had opened a pandora box without knowing the contents inside.

5. What happened due to open market? we have universities to sell degrees and the colleges churn out literates who are not educated and employable human resources.

i can give more and more examples but economics is very weird subject. It is very simple yet very complicated. If you have a vision and plan nothing like that. Just because western countries embrace capitalism we shouldn't have done it.

I support Savvukku and i wonder why he is mis understood by his own fans.
Quote
 
 
+1 #91 நடராசன் 2011-08-10 22:45
இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் , இடையயே பெருகியுள்ள இடைவெளியின் வெளிப்பாடே லண்டன் கலவரங்கள். நாமும் அது போன்ற ஒரு எரிமலையின் மீதுதான் அமர்ந்திருக்கிற ோம்.
பொன் வரிகள்
Quote
 
 
0 #90 நடராசன் 2011-08-10 22:35
இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் , இடையயே பெருகியுள்ள இடைவெளியின் வெளிப்பாடே லண்டன் கலவரங்கள். நாமும் அது போன்ற ஒரு எரிமலையின் மீதுதான் அமர்
ந்திருக்கிறோம்.......பொன் வரிகள்
IN OUR MOTHER COUNTRY:- Under-nourishment kills around 25 lakh children annually
- Malaria – Over 900,000
- Air pollution – 527,700
- Tuberculosis – 400,000
- Road Accidents – Over 100,000
Just between these avoidable causes of death the overall figure translates into roughly 12000 Indians dying every day. I don’t know of any conflict anywhere in the world- in Africa, the Middle East or even in Pakistan or Kashmir where the daily toll of lives runs so high.
Quote
 
 
0 #89 shankarpuli 2011-08-10 21:40
not only the open economy and the politicians are wrong.but the people attitude of becoming rich and running back of the money and property is also wrong.people has forgotten what is life.
Quote
 
 
0 #88 Correction 2011-08-10 21:20
Hello Boss, Fiat is expensive than Maruthi.. Please correct it. Maruthi was described as soap dubba car those days....
Quote
 
 
0 #87 aha 2011-08-10 18:43
When u are saying we hav lost more, you have to compare what we have gained previously.PVN opened the market because India couldnt repay the debt.Compare the job situation now.U hav to mention the poverty before 1990 and the suicides.Nobody says we are in heaven.But its far more better than the socialist regime.Still we need to better plan or open up the medicine domain.Overall TN, only 2000+ doctors are coming every year.I dont think TN has that much less capability.
Quote
 
 
0 #86 reader 2011-08-10 18:24
திறந்த பொய்ருளாதாரத்தை க் கொண்ட நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் எப்படி மக்களைப் ஏழமையிலிருந்து மீட்டெடுத்தன?

யோசியுங்க மக்களே.
Quote
 
 
0 #85 reader 2011-08-10 17:40
//அவரது பேத்தி " யார் இந்த வயசானவ? நம்ம வீட்டுல என்ன வேலை? எனக்கு இவளைப் பிடிக்கலை" அப்படின்னு ஆங்கிலத்தில் போட்டுதாம்.//

யாரு? எப்போ?
பேத்திய விடுங்கோ. நம்ம ஊருல மகனே பெத்த அம்மாவ தொரத்தரானே. அதுக்கு என்ன சொல்ரீங்க?
Quote
 
 
-2 #84 mohamed_muba 2011-08-10 17:40
தனி மனித ஒழுக்கம் வலர இஷ்லாதை பின்பட்ர வேன்டும்
Quote
 
 
-1 #83 reader 2011-08-10 17:38
//ஒரு நல்-மர்ட் வந்தால் அமெரிக்காவில் ஆயிரம் குடும்பம் அழியும் என்பார்கள்...
//

அதே வால்மார்ட்னால ஆயிரம் குடும்பங்கள் சைனா, வியட்னாம், தாய்லாந்து, இந்தியா அப்படின்னு வாளுதே எப்படி?

புரியலையா, அங்கிருந்து தான் வால்மார்ட் இறக்குமதி செய்யுது?
Quote
 
 
0 #82 prabhakaran.v 2011-08-10 16:00
கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள இடைவெளி மிகவே அதிகமாகிவிட்டது .

சில குடும்பங்களில் மாத வருமானம் ஒரு லட்சம், சிலவற்றிலோ வெறும் இரண்டாயிரம் ரூபாய். பன்னாட்டு சந்தைப் படுத்துதலும், சந்தைப் பொருளாதாரமும், நம் மக்களை வர்க்க ரீதியாகப் பிளவு படுத்திவிட்டன.

உண்மை. நாம் இந்றைய லண்டனிலிருந்து வெகு தொலைவில் இல்லை.அற்புதமான கட்டுரை. எங்கே போகின்றது தேசம்.யாருக்காக அரசாங்கம்.இதன் முடிவு புரட்சியாகத்தான ் இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் .நன்றி.
Quote
 
 
0 #81 வால்டர் வணங்காமுடி 2011-08-10 15:44
[ஃஉஒடெ நமெ="குமர்.ட்"]//சக மனிதரிடம் ஒரு வார்த்தை பேசுவதால் என்ன நடக்கப் போகிறது, அதனால் நமக்கு என்ன லாபம் என்று சிந்திக்க இந்த சந்தைப் பொருளாதாரம் கற்றுக் கொடுத்திருக்கிற து.//

உண்மையே... முன்பு ஒரு வாரம் காத்திருந்து அரை மணி நேரம் ஒளியும் ஒலியும் பார்க்கும் சுகம் இப்போது எவ்வளவு சானல் வந்தாலும் இல்லை.. மற்றவர்களை கெடுப்பதையே குறி கோளாக கொண்ட மெகா சீரியல் இல்லை... உறவுகளின் மேன்மை வலு பெற்றிருந்தது...
பையில் கிரெடிட் , டெபிட் கார்டுகள் இல்லை என்றாலும் மனதில் சந்தோசம் இருந்த காலகட்டம் அது... ஆனால் இந்த பொருளாதார மோகம்
மற்றும் நுகர்வு கலாச்சாரமானது கொள்கைகளை வேட்டியாக கருதிய சில பெரியமனிதர்களைய ே அதை கக்கத்தில் வைத்து கொள்ள வைத்து விட்டதே அதுவும் சொந்த இனம் அழியும் போது... :சட்:[/ஃஉஒடெ]


சவுக்கு கட்டுரை எழுதி கண்கலங்க வைக்கிறார் என்றால், குமார் அண்ணே உங்கள் பங்கிற்கும் கண்கலங்க வைக்கிறீர்கள். மனது ஒரு பத்து வருடம் பின்னோக்கி நகர்ந்து, அந்த கால நாட்களை அசைபோடுகிறது. ஒரு சாலிடர் டீ.வி வாங்கி, ஒரு ரிக்ஷா வண்டியில் வைத்து வீட்டிற்கு எடுத்துவரும்போத ு, அந்த ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது,பின்ன ாடியே வந்தது. மொழி புரியாமல் பல சீரியல்கள் (சாந்தி,ஜுனூன், அமுல் சுரபி) பார்க்கவே திருவிழா போல அப்போது கூட்டம் கூடும்.
Quote
 
 
0 #80 வால்டர் வணங்காமுடி 2011-08-10 15:39
[ஃஉஒடெ நமெ="விகடகவி"]'உங்கள் முன்னோர்கள் போட்டுள்ள பாதையில் செல்லாமல், அந்நிய கலாச்சாரத்தை பேராசையுடன் பின்பற்றினால் இந்தியா சில வருடங்களில் அழிந்துவிடும்' என்று விவேகானந்தர் கூறினார். இப்போது இந்தியர்களும் பாதை மாறி செல்ல முயல்கிறார்கள். சிதோஷனத்திற்கு ஒவ்வாத உடைகள் மற்றும் உணவுகள், போலி நாகரீகம் என்று செல்கிறார்கள். தனிமனித ஒழுக்கம், நேர்மை, வியாபாரத்தில் நேர்மை என்பதெல்லாம் அறிதாகிவருகிறது .

அந்த காலத்தில் நேர்மையாக உழைத்துவிட்டு கூழையும் கஞ்சியையும் குடும்பத்தோடு குடித்துவிட்டு கோயிலுக்கும் திருவிழாக்களுக் கும் சென்று நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

இப்போதோ எவன் எப்போ ஏமாத்துவான் என்கிற பயத்திலேயே வாழவேண்டியிருக் கிறது. பேப்பர் போடுறவன் முதல் பிரதமர் வரை ஏமாத்துறாணுக.

சோறு போடுகின்ற விவசாயியை ஏமாற்றுகின்ற சமூகம் சந்தோஷமாக இருப்பது கஷ்டம் தான்.[/ஃஉஒடெ]



சத்தியமான வார்த்தைகள் விகடகவி அண்ணே.
Quote
 
 
+1 #79 கங்கையரசன் 2011-08-10 15:27
வணக்கம் தோழா
உங்கள் கட்டுரை படித்தேன் ஏகாதிபத்தியத்தை தோலுரிக்கிறது உங்கள் கட்டுரை நான் எனது ப்ளாகிலும் இந்த கட்டுரையை இணைக்க விரும்புகிறேன் உங்கள் பெயரில்தான் நன்றி
Quote
 
 
+1 #78 சவுக்கின் விசிறி 2011-08-10 14:32
நல்ல கட்டுரை. இது இன்றைய அரசியல்வாதிகளுக ்கும் தெரியும். பொருளாதார சந்தையை அறிமுகப்படுத்தி ய நேற்றைய அரசியல்வாதிகளுக ்கும் தெரியும். அதை ஏற்றுக் கொண்டிருக்கும் மக்களில் 30 சதவிகிதம் பேருக்கும் உண்மை தெரியும். ஆனால், அப்பாவி ஏழை மக்களும், சம்பளத்தை நம்பி வாழும் நடுத்தர வர்க்கத்தினரும் என்ன செய்வது.
முன் ஏர் செல்லும் போது பின் ஏர் எப்படி செல்லுமோ, அதை பின்பற்றி செல்லும் மாடுகளாக இருக்கும் மக்களை நினைத்து அழுவதா... சிரிப்பதா சொல்லுங்கள்.
Quote
 
 
+2 #77 Ravi_TTP 2011-08-10 14:16
ஒரு விஷயம். மனித இனம் வந்து பல லட்சகணக்கான ஆண்டுகள் ஆகியும் கடந்த சில 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அழிவு போல நடந்தது இல்லை மூல காரணம் முதலாளித்துவம் மட்டுமே.
Quote
 
 
0 #76 chennai_venkat 2011-08-10 14:07
நல்ல கட்டுரை!
வரையறுக்கப்பட வளர்சி என்றும் பாதுகாப்பானது!
Quote
 
 
0 #75 Sanyo 2011-08-10 14:00
This Society is functioning on two basis. One is Materialistic and other one is Spiritual.

These are two waves which will come one by one.

Now its materialistic waves time.So we....

already killed over love towards other fellow people and Measuring every one with money.

Vedanta says you can't stop this. This is a never ending chain reaction and can't put every one is same platform.
Quote
 
 
+3 #74 covai murugan 2011-08-10 12:03
சங்கர் அண்ணா "ஞாபகம் வருதே" பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் இந்த நகர வாழ்க்கையால் அந்த கிராமத்தை ரொம்ப இழந்து விட்டேன் (எனக்கு வயது 30 )...மேலும் என்னுடைய 7 வயது குழந்தைக்கு அவசரமான மற்றும் மரத்துப்போன மனமுள்ளவர்களின் ஒரு உலகத்தைதான் காட்ட முடியுதே தவிர ....நான் ஓடி விளையாடிய கரும்பு தோட்டங்கலையோ, இல்லை குதித்து விளையாடிய கிணறுகலையோ அவளுக்கு டிவியில் மட்டுமே காட்ட முடிகிறது ...மேலும் அந்த பழைய கிராமத்து மக்களின் அன்பையோ பாசத்தையோ அவளுக்கு புரிய வைக்கவும் முடியாது ....உண்மையில் நாம் வாழ்வில் ஒரு நடைபிணமாகதான் இருக்கிறோம் உயிரை மட்டும் தொலைத்துவிட்டு :sad:
Quote
 
 
+1 #73 சுழ்ச்சிகள் ஒழிக 2011-08-10 11:40
[ஃஉஒடெ நமெ="நெல்லைக்குமரன்"]
இதை கவனியுங்கள். சென்னையில் மெட்ரோ தொடர்வண்டி திட்டம் சுமார் 14 ,500 (பதினான்கு ஆயிரத்து ஆயிநூறு கோடி ) செலவில் கட்டப்படுகிறது. நல்லது. புதிய முதல்வர், தனது கனவு திட்டமான, மோனோ ரயில் திட்டம் வேண்டும் என்கிறார். திட்ட மதிப்பு சுமார் 11000 கோடி ரூபாய்.

ஆக, சென்னையில், சுமார் 25000 கோடி ரூபாய், இன்னும் சில ஆண்டுகளில், தொடர் வண்டிக்காக மட்டும் செலவு செய்யப்படுகிறது (!!!). தமிழகத்தின் பிற பகுதிக்கு ஒரு 500 கோடி ரூபாய் ஒதுக்க முடியாதா ?[/ஃஉஒடெ]
தலைவா, சென்னையில் வசூலிக்கும் வரி பணம் மற்றும் வருமானம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா ? இங்கே வரும் வருமானத்தால்தான ் அங்கே ப்ரீ டிவி , ப்ரீ ஆடு ப்ரீ மாடு ஆக கெடைக்குது. ப்ரீ டிவி , ப்ரீ ஆடு ப்ரீ மாடு வேண்டாம் என்று சொல்லுங்க முதல்லே, அப்புறம் "தமிழகத்தின் பிற பகுதிக்கு ஒரு 500 கோடி ரூபாய் ஒதுக்க முடியாதா ?" என்று கேட்கலாம் !!! 1.76 லட்சம் கோடி + ச்ந்க் புகழ் மத்திய அரசை(காங்கிரஸ்+ ட்ம்க் ) நாம் கேட்கவேண்டிய கேள்வி என்ன ? சொலலுங்கள் பார்க்கலாம் !!


பிரிட்டிஷ்காரன் செய்த சுழ்ச்சி ஒழிக
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 185 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10959
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week68536
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month290796
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13207163