முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சொல்வதெல்லாம் உண்மை பாகம் 8 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 33
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 09 ஆகஸ்ட் 2011 16:49

06

 

ராமேஸ்வரத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது ஆச்சரியப் பார்வை பட வைத்தவர் அப்துல்கலாம் என்றால், வேறொரு குக்கிராமத்தில் பிறந்து  உலகையே இந்தியாவின்மீது அதிர்ச்சிப் பார்வையை பட வைத்தவர் இவர். லஞ்சம், ஊழல், கொள்ளை என்ற தனித்தனி வார்த்தைகளுக்கு ஒருங்கிணைந்த பொருளாய்  உருவெடுத்தவர். கட்சியின் கோடியிலிருந்து வளர்ந்து கட்சிக்கு கோடிகளை கொள்ளையடித்துக் கொடுத்தவர். ஆண்டி மடம் கட்டிய கதை நமக்குத் தெரிந்திருந்தாலும் இவர்  ஆன்ட்டிகளுக்கு மடம் கட்டிய கதை பலருக்குத் தெரியாததுதான். இவரால் கட்சியிலிருந்து கழற்றிவிடப்பட்டவர்களின் பட்டியல் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்க... கட் சியே இவரை இப்போது கழற்றி விட்டுவிட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த இவர், இப்போது கம்பி எண்ணும் ஒரு வேலையில் மட்டுமே  கவனம் செலுத்தி வருகிறார். தனியாக ஒரு சிறிய அறை. எல்லாமும் அங்கேயேதான். உதவிக்கு ஒருவருமில்லை. இதுதான் இவரின் இன்றைய நிலை. ஓரத்தில் ஓய்வெடு த்து படுத்துக் கொண்டிருந்த அவரின் மனசாட்சியை தட்டி எழுப்பி பேசினோம். அதன்  வாக்குமூலம் உங்களுக்கே.

‘தகவல் துறையில் படு பிஸியாக இருந்த நான்’ இப்போது எனது தகவல்களால் பத்திரிகைகளைப் படிப்பதில் பிஸியாக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது நான் வெளியில்  வந்தாலும் போலீஸார் என் பாதுகாப்புக்கு வருவார்கள். இப்போதும் நான் வெளியில் வந்தாலும் போலீஸார் பாதுகாப்புக்கு வருகிறார்கள். வித்தியாசம் என்னவெனில்,  அப்போதெல்லாம் என்னைச் சுற்றிலும் ஒரு கூட்டமும், வாழ்க கோஷத்தின் கூச்சலும் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்போது வெளியில் கூட்டமில்லை. உள்ளம்தான்  கூச்சலிடுகிறது. என் பேச்சைக் கேட்கக்கூட ஒருவருமில்லை. அப்போது அரசுப் பணத்தில் ராஜ சாப்பாடு சாப்பிட்டேன். இப்போதும் அரசுப் பணத்தில்தான் அளவுச்  சாப்பாடு சாப்பிடுகிறேன்.

நான்கு வருடம் மட்டுமே தகவலுக்கு வந்துபோன நான் போட்ட ஆட்டங்களை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று நான் ஒருபோதும்  நினைக்கவில்லை. என் வளர்ச்சியும் வீழ்ச்சியுமே பல அரசியல்வாதிகளுக்குப் பாடமாக அமையலாம். அவ்வளவு நெளிவு சுளிவுகளைக் கொண்டது என் அரசியல்  பயணம்.

தமிழகத்தின் மையப் புள்ளியான திருச்சியிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஊரின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் நான். வறுமையின் பிடியிலிருந்த விவசாயக் குடும்பம்.  இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்தவர்களில் எங்களின் குடும்பமும் ஒன்று. அரசுப் பள்ளியில் உதவித்தொகையுடன் படிப்பை முடித்து, முசிறி அண்ணா  கலைக்கல்லூரியில் பட்டம், மதுரையில் சட்டம் என கல்வியை முடித்து தொழிலுக்கு வந்தேன். வள்ளுவனை நம்பியிருந்தவரிடம் ஜூனியராக சேர்ந்து கொண்டேன்.  அப்போதெல்லாம் வழக்காடும் லாகவம் எனக்கு வசப்படவில்லை. எனவே, வாய்தா வாங்குவதற்கு மட்டுமே நான் அனுப்பி வைக்கப்பட, ‘வாய்தா வக்கீல்’ என்றே  அழைக்கப்பட்டேன். 

பின்னர் தனியாக எனக்கு ஆபீஸை திறந்து கொண்டு ஓட்டையாய் வாங்கிய பழைய லேம்ப்ரட்டா ஸ்கூட்டரில் தினமும் நீதிமன்றம் சென்று வந்தேன். அப்போது எனது  அலுவலகத்தில் தொலைபேசிக்கான ஒரு லேண்ட்லைன் இருந்தது. அதற்கான பில்பணத்தைக் கட்ட முடியாமல் அதன் இணைப்பைத் துண்டித்துவிட்டனர் தொலைபேசித்  துறையினர். எதிர்காலத்தில் நான் தொலைபேசித் துறையையே சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வேன் என்பது அவர்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆனாலும்  அன்றைய என் பொருளாதார நிலை அதுதான்.

அந்தச் சூழ்நிலையில் கட்சியிலிருந்து புறப்பட்டது புரட்சிப் புயல். அப்போது ஐயா கட்சியின் நகரச் செயலாளராக இருந்தார் டாக்டர் ராஜதேவன். அவருக்கும் புயல் குரூப்புக்கும் ஏற்பட்ட பிரச்னையால் டாக்டர் கைதாக, அவருக்கு வாதாட எனது சீனியரிடம் வந்தார்கள். அவர் பிஸியாக இருந்ததால் ஜூனியரான என்னை அந்த  வழக்கைப் பார்க்கும்படி சொன்னார். நான் ராஜதேவனுக்கு வாய்தா வாங்கப்போனேன். இதுதான் எனக்கும் கட்சிக்காரர்களுக்கும் ஏற்பட்ட முதல் பழக்கம். அது முதல் அந்த  டாக்டர் அலுவலகத்தில் தினமும் மாலையில் உட்கார, என்மீது கட்சிவாடை வீசத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்காரர்களின் அறிமுகமும் கிடைத்தது.

இந்த நிலையில், என் சமுதாயத்தைச் சேர்ந்த குதிரை இளவரசர் கட்சியில் நல்ல பவரில் இருந்தார். என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ராஜதேவன். கொஞ்ச  நாட்கள் அந்தக் குதிரையின் வால் பிடித்தபடி கட்சியின் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துச் செல்வேன். எனக்கு திருமணத்தை முன்நின்று செய்து வைத்தது அந்த குதிரைதான்.

அதன்பிறகு அம்மாவின் முதல்முறை ஆட்சி முடிந்து அரியணையில் ஏறினார் ஐயா. அப்போது டெல்லி செல்வதற்கான தேர்தல் வந்தது. சீட் கேட்பதில் கட்சிக்குள் பெ ரும் போட்டி. எனக்கும் சீட் கேட்க சிலர் தூண்டினார்கள். என்னை தலைமைக்குப் பரிந்துரை செய்யக்கூட பக்கத்தில் ஒருவரில்லை. கையில் பத்A_Raja_0098துப் பைசா காசுமில்லை.

எங்கள் ஏரியாவில் பவர்ஃபுல்லாக இருந்த மீசைக்கார சுழல்விளக்கின் மாமா, கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்தார். அவர் காலில் விழுந்து ஒரு கடிதம் கேட்டேன்.  அப்போது இலங்கையில் பிரச்னை நடந்து கொண்டிருந்தது. அதைக் கருத்தில் கொண்ட மீசைக்காரரின் மாமா, எனது சமுதாயத்திலிருந்து ஒருவருக்கு பிரதிநிதித்துவம்  தரலாம் என்பதையும் அதிலும் நான் இலங்கை அகதிக் குடும்பம் என்பதையும் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தைக் கண்டதும் தலைமை என்னை  அழைத்தது. நான் நேரில் சென்றேன். அதுதான் தலைமையை நேருக்கு நேர் நான் முதன் முதலில் சந்தித்தது. தலைமையின் எதிரிலிருந்த மேசையின் உயரத்திற்கு மடிந்து  வணங்கி நின்றேன். என் பணிவையும் பவ்யத்தையும் உண்மை என நினைத்து, தலைமை என்னை தட்டிக் கொடுத்தது. சீட்டும் கிடைத்தது. வெற்றியும் கிடைத்தது. அதிலி ருந்து எனக்கு ஏறுமுகம். லோக்கல் கட்சியினருக்கெல்லாம் இறங்குமுகம். மூன்று வருடம் கூட கட்சியில் தீவிரமாக இல்லாதவனுக்கு டெல்லிக்கு சீட்டு, விமானத்தில்  டிக்கெட்டு என்பதெல்லாம் எங்கள் கட்சியில் நடக்காது. ஆனால், எனக்கு நடந்தது. அதுவரை சாதாரண சிசர் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்த நான், அப்போதுதான்  முதன்முதலாக பஞ்சுவைத்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன். புதிய பதவி கிடைத்ததும் கிருஷ்ணரின் அளவுக்கு மூர்த்தி பெற்றிருந்த ஒரு டாக்டரின் கிளினிக்கின் ஒரு  பகுதியில் வாடகை அலுவலகத்தை அமைத்தேன்.

மாலை விஷயங்களிலும், சேலை விஷயங்களிலும் எனக்கு தனி மஜா உண்டு. என் பார்வையில் பதிய வேண்டுமென்றாலே குறைந்தபட்சம் அவருக்குத் திருமணமாகியி ருக்க வேண்டும். அதுதான் முதல் தகுதி. வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எனது பாதுகாப்பு எண்ணமாகக்கூட அது இருக்கலாம். ஆனால் அதுவே எதிர் காலத்தில் வில்லங்கமாகும் என்று எதிர்பார்க்கவில்லை.

எனக்கு அலுவலகம் ஒதுக்கித் தந்த டாக்டரின் மனைவியை நான் ஒதுக்கிக் கொண்டேன். அவர் கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்க,  நான்  அவரின் துணைக்கு வீட்டில் வைத்தியம் செய்தேன். விவரம் அறிந்து என்னை விரட்டி விட்டார் டாக்டர். பிற்காலத்தில் ஒரு பையனின் தேர்வு விவகாரத்தில் நீதிபதி ஒருவர் மிரட்டப்பட்டதாக பரபரப்பு கிளம்பியதல்லவா! அதில் என் பெயரும் பிரதானமாக அடிபட்டது. அந்தப் பையன் வேறு யாருமில்லை. இந்த மருத்துவத் துணையின்  மைந்தன்தான். நான் ஆண்களுக்காக அல்ல, பெண்களுக்காக வில்லங்கத்தில் சிக்கிக்கொண்டதுதான் அதிகம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
A.Raja_20100127
இந்த நிலையில் முதன் முதலில் டெல்லிக்குச் சென்ற எனக்கு சுகாதாரம் கொடுக்கப்பட்டது. என் தலைமை செய்த தவறுகளில் முக்கியமானது இதுதான். சிந்தனையிலும்  சரி, செயல்களிலும் சரி கொஞ்சமும் சுகாதாரமற்ற எனக்கு சுழல் விளக்கு அந்தஸ்து தரப்பட்டதற்கு தலைமையின் குடும்பத்தார் தனித்தனியே பட்டிமன்றம் போட்டுப்  பேசினார்கள். அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் நான் கவலைப்பட்டதில்லை. அப்போது எனது ஊரைச் சேர்ந்த ஆசியாவின் பெயர் கொண்ட இஸ்லாமியப் பெண்  ரஷ்யாவில் மருத்துவம் முடித்து சென்னை திரும்பியிருந்தார். ரஷ்யாவில் மருத்துவம் படித்தவர்கள் இங்கு ஒரு தேர்வு எழுத வேண்டும் என்பது சட்டம். அவர் மருத்து வர், நான் சுகாதாரம் என்ற நிலையில் என்னைச் சந்திக்க வந்த அவரை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். தேர்வுக்காக வந்தவரை நான் தேர்வு செய்து  கொண்டேன். வெளியூரில் தனியாக இடம் வாங்கி அவருக்காக வீடு கட்டி அங்கேயே அவரை வைத்துவிட்டேன். என்னிடத்தில் வந்ததிலிருந்து அந்தப் பெண்ணைக்  காணவில்லை என்று அக்கம்பக்கத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.

 

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

 

Comments  

 
-1 #31 ck 2011-08-15 17:18
காத்த(ல)வ(ட்டிய )ராயன்
Quote
 
 
0 #30 P. Chellapandi 2011-08-12 21:27
If you don't write about Kanimozhi, then this article is not complete & it would look like you are trying to protect the prodigal duaghter.
Quote
 
 
+1 #29 RajaMurugan 2011-08-12 12:50
When will Savukku write about B.Ranganathan ex DMK MLA, one of the biggest extortionists, Dada, rowdy and bootlegger all rolled into one.
Quote
 
 
+1 #28 ungal Nanban 2011-08-11 16:46
கதை விருவிருபாக உல்லது வால்ஹ ராஜா புகல்
Quote
 
 
0 #27 Yaaroo 2011-08-11 16:10
:ஏ அடப்பாவி!!!. யெவலவு பெரிய திருடன் இவன். முழிய பாரு. பரதேசி. கோழி திருடன் மாதிரி.
Quote
 
 
+2 #26 Ramss 2011-08-11 12:52
I visit savukku.net daily, yesterday total visits 21495 but no new update, if you are busy you can publish politics news from other sites (example Junior Vikatan - Kazhukaar, Kazhukaar Pathilkal, Kumudam Reporter) hope you have account those sites

Thanks & Regards
Ramesh
Malaysia
Quote
 
 
+8 #25 சி, தங்கவேல் 2011-08-11 12:32
நக்கீரனில் ரஞ்சிதா பற்றி வந்த கட்டுரையை விமர்சனம் செய்கிறீர்கள். சரி. ராசாவுடன் தொடர்பான பெண்ணைப் பற்றி வந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறீர்கள் இது என்ன பத்திரிக்கை தர்மம்
Quote
 
 
+1 #24 manthiraa 2011-08-11 10:17
என்ன கனி பத்தி ஒன்னும் இல்லை???!!!!!
Quote
 
 
+7 #23 தர்ஷன் 2011-08-10 19:53
குதிரை இள்வரசர் - பரிதி இளம் வழுதி
டாக்டர் ராஜதேவன் - டாக்டர் தேவராஜன்
மீசைக்கார சுழல் விளக்கு - கே.என். நேரு

அப்போது பெரம்பலூர் திருச்சி மாவட்டத்தில் தான் அடக்கம்.
Quote
 
 
+3 #22 NELLAI SINGAM 2011-08-10 18:12
அதுவரை சாதாரண சிசர் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்த நான், அப்போதுதான் முதன்முதலாக பஞ்சுவைத்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன்..........
Quote
 
 
+4 #21 People of Cuddalore 2011-08-10 17:58
வாழதகுதியற்ற மாவட்டத்தில் இருந்து ஒரு குடிமகனின் வேண்டுகோள் ,SIPCHEM என்று கேள்வி பட்டு இருபிர்கள் சில மாதங்களுக்கு முன் , விசவாய்வு பலர் மயங்கி விளிந்தர் cuddalore மாவட்டத்தில். இந்த SIPCHEM சில் வைக்கபட்டது அனால் மீனுடும் திறகபட்டது , இதன் பினன்னி KaniMozhi அந்த தொழிற்சாலையின் பங்குதாரர் என்று கேள்வி, அனால் Comedy என்னவென்றால் அவரும் ஆய்வு குழுவில் வந்து ஆய்வு செய்தவர். எங்களையும் வாழவிடுங்கள் என்று கடலூர் மக்கள் போராட்டம் செய்தலும் என்தே ஆட்சியையும் கண்கொண்டு கொள்ளவில்லை,
Quote
 
 
+9 #20 நாதன் 2011-08-10 17:19
இவன மாதிரி கேவலமான ஜென்மத்துக்கு முன்னுரை கொடுக்க ஒரு உயர்ந்த மனிதரோட(கலாம்) பெயர உபயோகிக்கிறது அபத்தமா இருக்கு, தயவு செய்து இந்த மாதிரி விஷயத்துக்கு இனிமே நல்லவங்க பெயர உபயோக படுத்தாதீங்க. :sad:
Quote
 
 
+1 #19 dhayanandan.b 2011-08-10 16:16
what about the illicit connection with fruitlanguage. expecting in detail.
Quote
 
 
+3 #18 வெத்துவேட்டு 2011-08-10 10:54
குமுதம் ரிபோர்டர்ல மத்தவங்க எல்லாருக்கும் ஒரே ஒரு எடிசன் ன்னா நம்ம ஆண்டிமுத்து ராசாக்கு மட்டும் Unlimited Editon. இது இந்த இதழோட முடியலாம் . தொடருதாம். ராசா ராசா தான். இனி ராச லீலா தொடரும்.
Quote
 
 
+2 #17 Chandrakanthan 2011-08-10 10:21
இந்து நேசன் லெவலுக்கு போய்கொன்டிருக்க ிரீர்கள்.................
Quote
 
 
+6 #16 கனிமொழி கபடநிதி 2011-08-10 10:16
நூலை போல சேலை, அது போல தலைவனை போல தான் தொண்டன்... அதுவும் கொள்கை பரப்பும் தொண்டன்
Quote
 
 
+4 #15 unmai virumbi 2011-08-10 03:14
அடன்கொக்கமக்க
Quote
 
 
+12 #14 Thendral 2011-08-09 23:02
திருடர் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர்...
Quote
 
 
+7 #13 RANA 2011-08-09 21:57
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
Quote
 
 
+29 #12 வால்டர் வணங்காமுடி 2011-08-09 21:50
அலைக்கற்றையில் திருடியதால் அன்று முதல் இந்த கூஜா 'காத்தை களவாண்ட ராசா' என்று அன்போடு அழைக்கப் படுவார்.
Quote
 
 
+18 #11 வால்டர் வணங்காமுடி 2011-08-09 21:49
ராசாவின் அம்மா(வீட்டில்) : "இவனை பெத்ததுக்கு பதிலா....."


ராசாவின் அப்பா(வயக்காட்ட ில்): ".......செகன்ட் ஷோ சினிமாவுக்கு போயிருக்கலாம். ஆனா கரண்டு கட்டு. என்னத்த சொல்ல?"
Quote
 
 
+14 #10 sathyshk 2011-08-09 21:43
ok. Please write about politicians having clean image(if anybody exists?) too. So we can support and promote them.
Quote
 
 
+7 #9 ravi 007 2011-08-09 21:40
தொடருமா? கன்னி ட்த்வு சிந்துபாத் கதை பொல.
Quote
 
 
-4 #8 dhayanandan.b 2011-08-09 21:34
who is this bikkari?
Quote
 
 
+6 #7 Iyyavu 2011-08-09 21:06
மனசாட்சியை தட்டி எழுப்பி அதன் வாக்குமூலம் உங்களுக்கே.
Quote
 
 
+16 #6 sagamanithan 2011-08-09 19:28
அடப்பாவி சண்_ளா நீ ஆண்ட்டி பார்ட்டியா?
Quote
 
 
+7 #5 arabshaik 2011-08-09 19:20
raja raskal.......
Quote
 
 
+18 #4 Suresh Raja 2011-08-09 18:30
அடடா... பாதியிலேயே நிப்பாட்டிங்க?????? மீதி எப்போ? சுவாரசியமே இனிமே தானே!!!! :-) :-) :-)
Quote
 
 
+9 #3 Ram12321 2011-08-09 18:18
The contents is finished in the middle... looking forward for second part.
Quote
 
 
+7 #2 ramss 2011-08-09 18:11
I expect much more about him but you wrote only few, why???
Quote
 
 
+13 #1 AKM Vetriyur Kolkata 2011-08-09 17:21
என்ன அதுக்குல்லார முடிந்துவிட்டது ...

இது தொடர் மாதிரி இருக்கு...

தொடர்தானா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 182 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7355
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week51355
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month273615
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13189982