|
ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் அதன் பின்னர் நடந்த விசாரணை, அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் படுகொலையை ஒட்டி நடந்த விசாரணையை நினைவுபடுத்துகிறது.

14 ஏப்ரல் 1865ல் லிங்கன் கொலை செய்யப் படுகிறார். அதன் பின்னர் நடந்த கைதுகளும், விசாரணைகளும் அப்போது இருந்த மக்கள் மனநிலையை பிரதிபலிக்கின்றன. கொலைக்கு காரணமானவராக அறியப்பட்ட ஜான் வில்கின்ஸ் பூத் என்பவரோடு தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்டவர்களுக்கு சாதாரணமாக நடக்கும் நீதிமன்ற விசாரணைக்கு பதிலாக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அந்த ராணுவ நீதிமன்றத்தின் 9 உறுப்பினர்களும், அமெரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். ஏழே வாரங்களில் விசாரணை முடிந்து குற்றம் சாட்டப் பட்ட எட்டு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப் பட்டது. அந்த வழக்கில் தண்டிக்கப் பட்ட மேரி சூரத் என்ற ஒரு பெண்ணை தூக்கிலிட வேண்டாம் என்று அந்த வழக்கில் தீர்ப்பு எழுதிய நீதிபதிகளில் ஐந்து பேர், அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியும், அவர் தூக்கிலிடப்பட்டார். சாதாரண நீதிமன்ற நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்காமல் அவசர கோலத்தில் அந்த விசாரணை நடத்தி முடிக்கப் பட்டு, தூக்கிலிடப் பட்டனர்.
ஏறக்குறைய அதே முறையில் தான், ராஜீவ் காந்தி கொலைவழக்கின் விசாரணையும் நடைபெற்றது. தடா சட்டம் என்ற ஒரு கொடுங்கோல் சட்டத்தின் கீழ் இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் கைது செய்யப் பட்டு, 60 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப் பட்டார்கள். இந்த சமயத்தில், இவ்வழக்கில் கைது செய்யப் பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதை சொல்லில் அடங்காது.
இன்று தூக்கு மேடையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன் வார்த்தைகளிலேயே கேட்போம்.

“தரைத்தளத்துக்கு அழைத்து வரப்பட்டு ஜட்டியோடு நிற்க வைக்கப் பட்டேன். அப்போது சுந்தரராஜன் என்ற இன்ஸ்பெக்டரும் மற்றும் பெயர் தெரியாத இரண்டு பேரும் வந்து என்னை கையால் அடித்தனர். ஒருவர் என் கால் விரல்களை ஷுக்காலால் நசுக்கினார். சுந்தரராஜன் என் விதைப்பையில் உதைத்தார். வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து கதறினேன்.
அடுத்த நாள் மல்லிகை கட்டிடத்தின் மேல் மாடியில் சித்திரவதைக் கூடம் என்று அழைக்கப் பட்ட இடத்துக்கு, கொண்டு செல்லப் பட்டேன். அங்கே மாதவன், ரமேஷ், செல்லதுரை என்ற இன்ஸ்பெக்டர்களும், சிவாஜி என்ற டிஎஸ்பியும் இருந்தனர். இவர்கள் சித்திரவதைக்கு பெயர் போனவர்கள். எனக்கு உணவும் தண்ணீரும் கூட மறுக்கப் பட்டன. சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்கப் படவில்லை.
இன்ஸ்பெக்டர்கள் மாதவனும் ரமேஷும் என்னை நாற்காலியில் அமர்வது போன்ற பொசிஷனில் கையை தலைக்கு மேல் உயர்த்தி நிற்க வைத்தார்கள். பிவிசி பைப்பில் சிமென்டை நிரப்பி என் உடல் முழுவதும் அடித்தனர். இன்ஸ்பெக்டர் செல்லதுரை அவதூறான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே என்னை அடித்தார்.“
இது போல, அறிவின் சித்திரவதை அனுபவங்கள் தொடர்கின்றன. இப்படிப் பட்ட சித்திரவதையை ஒரு நபர் தொடர்ந்து 60 நாட்களுக்கு அனுபவித்தால் எந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டார் ?
இது போல தொடர்ந்து 60 நாட்கள் சித்திரவதை செய்யப் பட்டு, ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. தடா சட்டம் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டது என்பதால், காவல்துறை முன்பு கொடுக்கும் வாக்குமூலங்கள் செல்லும் என்பது அறியாமலேயே, அந்த வாக்குமூலங்களில் கையெழுத்திட்டுள்ளனர். சித்திரவதை செய்யப் பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது என்பதை 11.02.1992 மற்றும் 26.08.1992 ஆகிய நாட்களில் அளித்த மன மூலம் அறிவு தெளிவாக குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் தீர்ப்பு எழுதிய நீதிபதிய வாத்வா, “சித்திரவதையோ, அல்லது மிரட்டியோ வாக்குமூலம் பெறப்பட்டது என்பதற்கான எந்த புகாரையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வாக்குமூலத்தில் சந்தேகப் பட எதுவுமில்லை” என்கிறார்.

இந்த வழக்குக்கு தடா சட்டம் பொருந்தாது என்று வழக்கின் இறுதி விசாரணையில் தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் ஒப்புக் கொண்டாலும், தடா சட்டத்தின் கீழ் நடந்த கீழ் நீதிமன்ற விசாரணையையும், தடா சட்டத்தின் கீழ் காவல்துறையில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டது, வினோதத்திலும் வினோதம்.
மேலும் 1865ல் அமெரிக்காவில் ஆப்ரகாம் லிங்கன் கொலை வழக்கு விசாரணை நடந்தது போலவே, இந்த வழக்கு விசாரணையும், ரகசியமாக, பொதுமக்கள் அனுமதிக்கப் படாமல், நடத்தப் பட்டது.
தடா சட்டம் இந்த வழக்குக்கு பொருந்தாது என்று முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், சாதாரண சட்டத்தின் படி, கீழ் நீதிமன்றத்துக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ள அல்லவா அனுமதித்திருக்க வேண்டும் ? ஆனால், தடா சட்ட விதிமுறைகளின் படி, கீழ் நீதிமன்றத்துக்குப் பிறகு, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு மறுக்கப் பட்டது.
இப்படி இந்த வழக்கை ஆராய்ந்தால், ஆரம்பம் முதல், தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. இப்படி குளறுபடிகளோடு நடத்தப் பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் மூன்று உயிர்களை தூக்கிலிடுவது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
சிங்களக் கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் கூட காப்பாற்ற மறுக்கும் மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் தமிழின விரோதப் போக்கின் வடிவமாகவே, குடியரசுத் தலைவரின் இந்த முடிவை பார்க்க வேண்டியிருக்கிறது.
ராஜீவ் காந்தி என்ற ஒரு நபர் கொலை செய்யப் பட்டதற்காக மூவர் தூக்கிலிடப் பட வேண்டும் என்றால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்று அழித்த சிங்களக் காடையர்களுக்கு ஆயுதமும் பணமும், பயிற்சியும் கொடுத்து உதவிய மன்மோகன் சிங்குக்கும், சோனியாவுக்கும் என்ன தண்டனை கொடுப்பது ?
தமிழினம் என்றாலே மாற்றாந்தாய் மனப்பான்மையேடு அணுகும் மத்திய அரசின் இந்தப் போக்கை ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பது அனைவரது கடமை.
மூவரின் உயிரைக் காப்பாற்ற நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு புறம் இருந்தாலும், உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்கள், இந்த அநீதிக்கு எதிராக தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்வது அவசியம். |
Comments
ஆனால் ராஜீவ்-ஐ சுற்றி எந்த ஒரு தமிழ்நாட்டு தலைவர்களும் இல்லையே!! எங்கே சென்றார்கள்??
2. ராஜீவ், பொதுமக்கள், கொலையாளிகள், காவலாளிகள் என பலர் செத்தனர். ஆனால் ஒரு காங்கிரஸ்காரன் கூட சாகவில்லையே!! ஏன்??
3 ராஜீவ் இறந்த 3 மாதங்களுக்கு பின்னர், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி சவான் (காங்கிரஸ்) பாராளுமன்றத்தில ் சொன்னது: " ராஜீவ்-ஐ கொன்றது சில அயல்நாட்டு சக்திகள், விடுதலைபுலிகள் அல்ல ".
4. அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் ராஜீவ். ஆனால் ராஜீவ் இறந்து 3 மாதத்திற்குள் அமெரிக்காவுடன் அதே ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தானது . அது எப்படி?
5. ராஜீவ் கொலையில் அமெரிக்காவிற்கு ம் தொடர்பு உண்டு என ஜெயலலிதா, சுப்ரமணியசாமி மற்றும் பலர் வெளிபடையாக கூறி வருகின்றனர். அவர்களை பிடித்து சி.பி.ஐ விசாரிக்கலாமே?? ஏன் செய்ய வில்லை??
6. ராஜீவ் கொலையான ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்த ில் சாதாரண வக்கீலாக இருத்தவர் சிதம்பரம், அதுவரை டெல்லியை பார்த்திராதவர், அடுத்த சில மாதங்களில் இந்திய அரசியலில் மிக உச்சத்தை அடைந்தார் ...அது எப்படி?
7. 9வொல்ட் பட்டெர்ய் வாங்கி கொடுத்தார் என்ற காரணம் சொல்லி, பேரறிவாளன் என்ற நபரை குற்றம் சாட்டியுள்ளனர். கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் பாம் (பெல்ட் பொம்ப்) யார் செய்தது என்ற கேள்விக்கும் இன்னும் விடை இல்லை.
8 . ராஜீவ்-ஐ கொல்ல சிங்களர்களும் முயற்சி செய்தனர். ஒரு வேளை, அவர்களே கொலை செய்திருக்கலாமே ??
9 . சதி தீட்டினார்கள் என்ற பெயரில் மூன்று தமிழர்களை 21 வருடம் சிறையில் கொடுமை படுத்திவிட்டு, இப்போது மரண தண்டனையும் கொடுக்க வேண்டும் என்கிறீர்களே?? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்ன நியாயம்??
இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு விடை இல்லை .
ஆனால் விடுதலைபுலிகள்த ான் காரணம் என இன்னும் கூறி கொண்டு உள்ளனர் சில ஞானிகள்(??) ..
Savukku, kindly go through last week's newspapers. God has already given the punishment
அந்த கூட்டாளியின் பெயர் என்ன? முதலில் நீங்க ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் ? பயமா பாசமா?
சட்டத்தைக் காட்டி, வளைத்து மரண தண்டனையை இன்று நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் பொய்யும் புரட்டும் ஒரு நாளும் தப்பாது.
கெடு குடி சொல் கேளாது,
சாகிறவன் மருந்து குடியான்.
வாழ்க தமிழர்.
WHY MURUGAN DID NOT WRITE THE TRUTH ABOUT RAJIV KILLING?
IS THERE ANY ANY ROLE FOR SONIA ?
HOW SAJAY GANDHI AND MADAVA RAO SCINDIA DIED?
IF SONIA IS NOT INTERESTED IN POLITICS WHY SHE WENT ALONG WITH INDIRA GANDHI TO RUSSIA FOR 20 POINT AGREEMENT WITH RUSSIA?
IS THERE ANY ANSWERS?
EVEN IF SOMEBODY WANTS TO PUNISH THE THREE, IS 20 YEARS IN JAIL NOT ENOUGH?
ARE YOU NOT SATISFIED?
JAYALALITHA SHOULD SUPPORT FOR OUR / KRISHNA IYER'S DEMAND.
வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16115:2011-08-13-22-08-30&catid=1:articles&Itemid=264
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிர்களைக் காக்குமாறு, ஜெயலலிதாவிற்கு வி.ஆர். கிருஷ்ணஅய்யர் கடிதம்
இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன். அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட ுள்ளதாவது:
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,
இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன்.
அநியாயமாகக் கொல்லப்பட்ட திரு.இராசிவ்காந்தி அவர்களின் மனைவி சோனியா அவர்களும் இவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாகக் கூறினார். இவர்களின் உயிரைக் காக்க நான் மேற்கொண்ட அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட் டன.
அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன்.
தங்களின் பரந்த மனத்தோடு, மனிதநேய அடிப்படையிலும் கருணை அடிப்படையிலும் இம்மூவர் உயிர் காக்க வேண்டுகிறேன்.
இந்த மனிதநேயச் செயலுக்கு வையம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.
தங்களின் நல்லாட்சி சிறக்கவும் தங்களின் புகழ் பரவவும் அந்தக் கடவுள் உங்களுக்கு அருள்வாராக!
வாழ்த்துகளுடன்
தங்கள் உண்மையுள்ள,
(வி.ஆர். கிருஷ்ண அய்யர்)
பெறுநர்
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா
முதல் அமைச்சர், தமிழ்நாடு
போயஸ் தோட்டம்
சென்னை
தமிழ்நாடு
Plea to cancel the death sentence wrongly given to innocent Perarivalan:
http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan
ஹிந்தியர்களின் நாட்டில் நாம் இருப்பது காலத்தின் கட்டாயம். நாசமாய் போகட்டும் கொடுங்கோலர்கள்.
Quoting உண்மை விரும்பி .:
நாம குடுக்க வேண்டாம் தண்டனை பாவம் நக்சல் என்று முத்திரை குத்த பட்ட போராளிகள் பாத்து கொள்ளுவார்கள் ஆக மொத்தம் அந்த ராஜீவு குடும்பம் இப்படி அடி பட்டே தான் சாவாங்க அது ஒரு சாபகுடும்பம் ராஜேஷ் தேவேந்திரன் நெல்லை மாவட்டம்
Please try and start an E-Petition we will urge atleast a crore people to sign
and will try to attract international attention and save atleast three lives of tamils
பேரறிவாளனின் தூக்கு தண்டனைக்கு எதிராக கையெழுத்திடுங்க ள் நண்பர்களே..
http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan
if you dont get this link go to http://www.change.org and search perarivalan then vote for him , atleast we do this for him
Regards
Ramesh
கன்டன முரையை கூரவும்
well said sankar.Real independence for india is at the end of CONGRESS
Please try and start an E-Petition we will urge atleast a crore people to sign
and will try to attract international attention and save atleast three lives of tamils
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=15007&lang=ta&Itemid=107
மேற்கண்டச் சுட்டியில் திருச்சி வேலுச்சாமியின் பகிரங்க பேட்டியுள்ளது. முழுவதும் கண்ட பின்னர், சு.சாமிக்குக் காவடி தூக்குங்கள் கனவான்களே!
இந்த இரண்டுபேரையும் சாகும்வரை தூக்கில் போடவேண்டும்.இனி ஒரு போதும் காங்கிரஸ் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது.காங்கிரஸ் மறுக்கப்பட்ட கட்சி அல்ல,வெறுத்து ஒதுக்கி குப்பையில் வீசியெரியப்பட்ட கட்ச்சி
danu and sivarasan already were killed.
the remining acuused need not be hanged.
they spent already 20 years in jail.
this entire episode is due to cunningness of chidambaram and sonia.
please see this video one time, How Sonia Inc. Looting India.
http://truthdive.com/2011/08/08/genocide-of-tamils-sonia-gandhi-affeted-by-cancer-due-to-curse.html
Let bombs explode
Strewn with bodies
Let all your streets
Become a grave yard
Let cancer grow
In those mouths
Which shamelessly announced
False demands for cease fire
Let you vomit blood
Whenever you open the mouth.
You ruled sitting over our skeletons
Let your chairs
Breakdown
Let your men become impotent
Let the wombs of your women are torn
You humiliated our people
Wander nude
Let your parents turn mad
And run on the streets
Tearing their cloth
You tortured our youth
Sending electric shocks
Let the lightning and thunder
Fall on your head.
You celebrated from the
Palaces of Sinhalas
Who raped our sisters
Let your food turn toxic.
And Let your women
sleep with neighbors
.
You cannibals
Let all your nerves
Stretch out of your body
Let no grass or plant
Ever crop out of your soil
For another millennia
Let tsunami erupt
To take away all.
Let your place disappear
Let it be destroyed
With nothing forever.
(PS. I cannot curse your babies
Wherever may be
Babies are just babies
When our babies cry
Let your babies smile
Let your babies smile
http://truthdive.com/2011/08/08/genocide-of-tamils-sonia-gandhi-affeted-by-cancer-due-to-curse.html
A CURSE
O India
So many atrocities
You committed on my Tamil Race
In so many ways we begged moved
Fell at your feet ,cried, and self immolated
In vain.
For You who turned deaf ears
I have a last word to tell
On seeing our infants
Wilted and died out of hunger, I
With swollen eyes Delirious sleep
Untied hair, out of my inner blaze
Throw a Black curse
From the land of Kannagi
Grown on the rules of Kural
Living a righteous life
I can sing a Virtue
You made me to call you a demon
From the same mouth
Which called you Mother
We are not the same anymore.
O India
You supplied weapons
Sent spy crafts
To drop bombs
Descending on innocent heads
Let your head explode
To hundreds of pieces.
For the souls of our children
Died asking for a drop of water
To rest in peace
Let all your rivers dry up
For a century to come
Let your clouds quickly disperse
To far away lands
You pushed us to run
For a handful of Rice
Let your fields and forests
Burn down
Whichever grains harvested
Shall go waste
You chased our people
Like herds
Let all your mountains
erupt like volcanoes
to become a mount of ashes
O the devils who mercilessly
Dropped chemical bombs
Let your blood dry
Let your smell
Burn your neighbors too
Let your foes surround you
To take away your sleep
(continued)
Sinha, who was External Affairs Minister during the NDA regime, criticised Prime Minister Manmohan Singh for his reported remarks that India cannot impose economic sanctions against Sri Lanka as it would encourage China to displace it as a strategic and trading partner of the island nation.
This shows mere helplessness that we have lost all out clout and friends and that we have to surrender ourselves to China. It is a matter of shame for our country and it is matter of greater shame for the government, he said. Singh, the BJP leader said, made the remarks when Vaiko met him last week demanding economic sanctions against Sri Lanka. Sinha suggested to Vaiko to organise a rally in Tamil Nadu in which he would also participate. I'll also join you and we'll all set sail for Sri Lanka and go there and tell the world that India is with you. We'll mount an unarmed attack on Sri Lanka. We would like to tell the world that Indians are solidly behind the Eelam Tamils, he said. We are not going to give up till all those people involved in genocide are brought to justice, Sinha said. Ecohing his views, Paswan said the LJP would raise its voice for the cause of Sri Lankan Tamils both inside and outside Parliament.
பேரறிவாளனின் தூக்கு தண்டனைக்கு எதிராக கையெழுத்திடுங்க ள் நண்பர்களே..
http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan
if you dont get this link go to http://www.change.org and search perarivalan then vote for him , atleast we do this for him
Regards
Ramesh
இலங்கைக்கு இந்திய கொலை படையை அனுப்பி கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வெறியாட்டம் போட்டது மட்டும் சரியா?... ராஜீவ் காந்திக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது..? கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல இவர் சாவு காலத்தின் கட்டாயம்...
//தமிழகத்தையும் ஈழத்தையும் இணைத்து ஒரு புது நாடு உருவாவதை எவனாலும் தடுக்க முடியாது.//
சும்மா வாயில சொல்லிகிட்டே நிக்காதீங்கய்யா . ஈழ தமிழனுங்களாட்டம ் சண்டை போடுங்கப்பா. நாங்க அதை காரணம் காட்டி ஐரோப்பாவிலயோ இல்ல கனடாவிலயோ குடியுரிமை வாங்கி செட்டில் ஆயிடுரோம்.நீங்க தமிழ்நாட்டுல அடிச்சிட்டு சாவுங்க!
At a protest rally here organised by MDMK chief Vaiko to protest the Centre’s “silence” on the U.N. report, BJP’s Yashwant Sinha and LJP chief Ram Vilas Paswan criticised the government for citing China’s growing influence as a reason for India’s engagement with Sri Lanka.
Mr. Sinha, who was External Affairs Minister during the NDA regime, criticised Prime Minister Manmohan Singh for his reported remarks that India cannot impose economic sanctions against Sri Lanka as it would encourage China to displace it as a strategic and trading partner of the island nation.
“This shows mere helplessness that we have lost all out clout and friends and that we have to surrender ourselves to China. It is a matter of shame for our country and it is matter of greater shame for the government,” he said.
Dr. Singh, the BJP leader said, made the remarks when Mr. Vaiko met him last week demanding economic sanctions against Sri Lanka.
Mr. Sinha suggested to Mr. Vaiko to organise a rally in Tamil Nadu in which he would also participate.
“I will also join you and we will all set sail for Sri Lanka and go there and tell the world that India is with you.
We will mount an unarmed attack on Sri Lanka. We would like to tell the world that Indians are solidly behind the Eelam Tamils,” he said.
“We are not going to give up till all those people involved in genocide are brought to justice,” Mr. Sinha said.
Ecohing his views, Mr. Paswan said the LJP would raise its voice for the cause of Sri Lankan Tamils both inside and outside Parliament.
Rafi neenga kaetkiradhil niyayam iruku, Rajiv gandhiya padukolai panninadhu thapputhaan, padu bayangaramaana kolai panirukanum.. Vita Kasabuku Peace noble price kodukanumnu soluveenga pola...
This is asshole thinking of Savukku. I strongly condemn this. You think that Muslims would be against the hanging of Afzal Guru, who is a terrorist. By saying this you're simply creating bad name to all the muslims. Stop this nonsense.
ராஜீவ் காந்தி என்ற ஒரு நபர் கொலை செய்யப் பட்டதற்காக மூவர் தூக்கிலிடப் பட வேண்டும் என்றால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்று அழித்த சிங்களக் காடையர்களுக்கு ஆயுதமும் பணமும், பயிற்சியும் கொடுத்து உதவிய மன்மோகன் சிங்குக்கும், சோனியாவுக்கும் என்ன தண்டனை கொடுப்பது ?
மேலே எழுப்பப்பட்டிரு க்கும் கேழ்விகளுக்கு யாரிடம் பதிலை எதிர்பார்ப்பது???????
RSS feed for comments to this post