முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நெருக்கடி நிலை ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 45
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011 19:04

 5605168488_a49df5c585_b

1968ல் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 45 ஆண்டுகள் கடந்தும் சட்டமாகாமல் இருப்பது அன்னா ஹசாரேவின் குற்றமா ?  இன்று காங்கிரஸ் சார்பாக பேட்டியளிக்கும் தலைவர்கள் சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை, அதை ஒரு பூங்காவில் போராட்டம் நடத்துவதன் மூலமாக முடிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்களே….    1968 முதல் ஒரு 10 ஆண்டுகளைத் தவிர்த்து, தொடர்ந்து ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தானே  ?  என்ன செய்து கொண்டிருந்தார்கள் இத்தனை ஆண்டுகளாக ?

 

காங்கிரஸ் எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நாம் ஏற்கனவே பல முறை விவாதித்திருக்கிறோம்.   அதன் கோர வடிவத்தைத் தான் இப்போது பார்க்கிறோம்.  இந்திரா காந்தி கொல்லப் பட்ட பிறகு, டெல்லி வீதிகளில் 3000த்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு காரணமான தலைவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் அளவுக்கு வக்கிர புத்தியுடையது காங்கிரஸ் கட்சி. அந்த வக்கிர புத்தியின் ஒரு வடிவமே இன்றைய கைது நடவடிக்கை.

 

ஏன் இந்த லோக் பால் மசோதாவைப் பார்த்து காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது ?  ஏனென்றால், இந்த மசோதா சட்டமானால், பெரும்பாலான  காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிறைக்குள்ளே இருக்க வேண்டும் என்ற அச்சமே…. ஒவ்வொரு தேர்தலை சந்திப்பதற்கும், கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி, அதற்கு கை மாறாக, பதவிக்கு வந்ததும், கார்ப்பரேட்டுகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இத்தனை ஆண்டுகளாக கட்சி நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு, இந்த லோக்பால் மசோதா, பயத்தை உருவாக்கியுள்ளது.

 

இந்த மசோதாவை சட்டமாக்காமல், அதற்கு பதிலாக வலுவற்ற ஒரு சட்டத்தை உருவாக்கும் தீய நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி அத்தனை அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றியிருக்கிறது.  மார்ச் மாதத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்கிய போது, நாடு முழுவதும் திரண்ட ஆதரவைப் பார்த்து ஆடித்தான் போனது காங்கிரஸ் கட்சி.   அந்த அச்சத்தின் காரணமாகத் தான், அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கலந்து  ஆலோசனை நடத்தி சட்ட வரைவை உருவாக்குவது என்று முடிவெடுக்கப் பட்டது.

 

அரசு சார்பில், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபல் மற்றும், சல்மான் குர்ஷீத் ஆகியோரும், மக்கள் சார்பாக சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், சந்தோஷ் ஹெக்டே, அன்னா ஹசாரே, மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இருப்பது என்று முடிவெடுக்கப் பட்ட முதலாகவே, மக்கள் சார்பாக இருந்த குழுவை சிதைக்க அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் காங்கிரஸ் கட்சியினர்.  முதலில், தந்தையும் மகனும் ஒரு குழுவில் இருக்கக் கூடாது என்றனர்.  பின்னர் சாந்தி பூஷண் மீது குற்றம் சுமத்தும் வகையில் அவர் பேசியதாக ஒரு ஆடியோ உரையாடலை தயாரித்து, டெல்லி பத்திரிக்கைகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர்.  அந்த உரையாடல் பொய் என்று சாந்தி பூஷண் மறுத்ததும், ஒரு சோதனைக் கூடம், அதை சோதித்து உண்மையான சிடி என்று அறிக்கை வெளியிட வைத்தனர்.  பின்னர் சாந்தி பூஷண் நொய்டா மாகாணத்தில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்று ஒரு குற்றச் சாட்டுகளை சுமத்தினர்.  இந்த தந்திரங்கள் எதுவுமே பலிக்காமல் போனதும், இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை நிராகரித்து, பேச்சுவார்த்தையை முடிவுக்கு வந்தனர்.  பேச்சு வார்த்தை நடப்பதை அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என்று  மக்கள் குழு கோரியதை, நிராகரித்து, அந்த பேச்சுவார்த்தைகளையும் ரகசியமாக நடத்தினர்.

 

இன்னும் ஒரு படி கீழே போய், அன்னா ஹசாரே ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் மீது ஏதேனும் குற்றச் சாட்டுகள் உள்ளதா என்று விசாரித்தார்கள். அன்னா ஹசாரே ராணுவத்தில் அப்பழுக்கில்லாமல் பணியாற்றினார் என்பது தெரிய வந்ததும் அதை கைவிட்டார்கள்.

 

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கபில் சிபலும், ப.சிதம்பரமும், ஒரு சிலவற்றைத் தவிர அன்னா ஹசாரே கேட்டுக் கொண்ட அத்தனை ஷரத்துக்களையும் உள்ளடக்கியே லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றார்.  அவர் குறிப்பிட்ட அந்த ஒரு சில தானே முக்கியமானவை ?

 

மக்கள் மசோதா பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறது, அரசு மசோதா கூடாது என்கிறது.  மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் அனுப்பும் புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று அரசு மசோதா கூறுகிறது.  மக்கள் மசோதா, தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும் என்கிறது.  லோக்பால் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்கிறது அரசு மசோதா.  மக்கள் மசோதா, லோக் பால் அமைப்புக்கு வழக்கு தொடரவும், நீதிமன்றத்தில் வழக்கை நடத்தவும் அதிகாரம் வேண்டும் என்கிறது.   அரசு மசோதா, லோக்பாலுக்கு எப்ஐஆர் போடும் அதிகாரம் கூடாது என்கிறது.  மக்கள் மசோதா, எப்ஐஆர் போடும் அதிகாரம் வேண்டும் என்கிறது. லோக்பால் அமைப்பு தனியாகவும், சிபிஐ தனியாகவும் வேண்டும் என்கிறது அரசு மசோதா.   இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்கிறது மக்கள் மசோதா.  குறைந்த பட்ச தண்டனை 6 மாதங்கள் என்றும் அதிகபட்ச தண்டனை 7 வருடங்கள் எனவும் கூறுகிறது அரசு மசோதா.   குறைந்த பட்ச தண்டனை 10 வருடங்கள் எனவும், அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்றும் மக்கள் மசோதா கூறுகிறது.

 

இவைதான் ப.சிதம்பரம் குறிப்பிட்ட ‘ஒரு சில’.  இந்த ஷரத்துக்கள் மொத்த சட்டத்தையுமே அல்லவா மாற்றி விடுகிறது ?   அதிக பட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்று இப்போது உள்ள லஞ்ச ஒழிப்புச் சட்டமே சொல்கிறதே… பிறகு எதற்கு புதிய சட்டம் ?    சிபிஐ போன்ற அமைப்புகளை தனியாக வைத்திருந்தால் தான், தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டவும், வேண்டியவர்களை குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்றவும் முடியும் என காங்கிரஸ் அரசு நினைப்பதே, சிபிஐ அமைப்பு தனியாக இருக்க வேண்டும் என்பது.

 3528675790_d50293b1dc_z

காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களைப் போல பெரும்பான்மையான மக்கள் ஊழல் பேர்விழிகள் அல்ல என்பதே….   ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் விளையாட்டு ஊழல்களைப் பார்த்த மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.    நாட்டை சுரண்டும் இந்த ஊழலை ஒழிக்கும் காலம் வந்து விட்டதாகவே கருதுகிறார்கள்.    அதனால் தான் அன்னா ஹசாரே கைது செய்யப் பட்டவுடன், நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

 

மக்கள் காங்கிரஸ் கட்சியின் அயோக்கியத்தனங்களை தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.     இன்று வீதிக்கு வந்து போராடும், மக்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.   படித்த இளைஞர்கள்.   வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் இருந்து தன்னிச்சையாக போராட வீதிக்கு வந்து சிறைக்கும் செல்கிற இந்த இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை மன்னிக்க மாட்டார்கள் என்பதை உணரத் தவறியதே, இன்றைய அன்னா ஹசாரேவின் கைது நடவடிக்கை.

 ar

உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த உடனேயே 5000 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் 3 நாளைக்கு மேல் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்றும் நடைமுறைச் சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதித்தால், யார்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும் ?  ஒரு ஜனநாயக நாட்டில், வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக ஒரு போராட்டம் நடத்துவதை விட, வேறு எந்த முறை சிறந்த முறையாக இருக்க முடியும் ?  இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தித் தானே காந்தி சுதந்திரம் பெற்றார் ?  காந்தி தனது ஒவ்வொரு போராட்டத்துக்கும் பிரிட்டிஷாரிடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற்ற பின்பா நடத்தினார் ?  காந்தியின் பெயரை கூறிக் கொள்ளும் இந்த காங்கிரஸ் தலைவர்கள், இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைப்பது ஒரு வகையில், காங்கிரஸின் அசல் முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.  இது காங்கிரஸை தனிமைப் படுத்துவதற்கு உதவவே செய்யும்.

இந்தியாவையே மாற்றப் போகிறேன் என்று கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பிய ராகுல் காந்தியின் கனத்த மவுனம், அவர் எப்படி மாற்றப் போகிறார் என்பதை உணர்த்துவதாகவே உள்ளது. 

கொள்கை மாறுபாடுகளை மறந்து, ஒரு நியாயமான நோக்கத்துக்காக, இடது சாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடிக் கட்சி மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் ஒன்றாக ஒரு அணியில் நின்று காங்கிரஸ் கட்சியை நெருக்கடிக்கு ஆளாக்க முயன்றிருப்பது, வரவேற்கத் தக்க விஷயம்.    மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை அமலுக்கு கொண்டு வர முனையும் காங்கிரஸ் கட்சியை, ஒழித்துக் கட்டுவதற்கு, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

 

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை கருவறுக்கும் பணி, தமிழர்களாகிய நமக்கு கூடுதலாகவே இருக்கிறது.

 

Comments  

 
+7 #91 Franklin 2011-08-19 07:44
இனி காங்கிரஸ் க்கு வோட்டு போடுற எவனும் ஒரு அப்பன் ஆத்தாளுக்கு பொறந்தவன் இல்லை.அப்படி போடுறவன் அந்த புத்து நோய் வந்த இத்தாலி நாயோட பொய் சுடுகாட்டுல படுக்க வேண்டியது தான்.................
Quote
 
 
+4 #90 Rajesekher 2011-08-19 02:42
அன்னா அறிஞர் அண்ணா ஆகிவிட்டார்!
அறிஞர் அண்ணாவின் தம்பி என்று கூறி அலைகிற "நடைப்பிணம்" அவர் பெத்துப் போட்ட "பன்னிகுட்டிகள்" எல்லாவற்றையும் வாய்க்குள் போட்டுக்கொண்டு அல்லாடுகின்றன!.
Quote
 
 
+1 #89 RaBaSha 2011-08-18 23:44
Many of us our questioning the selection and autocrity of the Lokpal panel... here is what janlokpal says on the selection of the committee...

Selection of members and Chairperson of Lokpal and Lokayukta:
a) The ten members and the chairperson of Lokpal are appointed by a Selection Committee that comprises of the Prime Minister, Leader of the opposition in Lok Sabha, two youngest judges of Supreme Court (SC), two youngest Chief Justices of High Courts, Comptroller and Auditor General (CAG), Chief Election Commissioner (CEC) and the immediately outgoing members of Lokpal.
b) The Selection Committee makes the above appointment from a pool of shortlisted candidates that has been identified by a “Search Committee”.
c) The “Search Committee” is a 10--‐member committee formed as follows. First, the Selection Committee selects five members from ex--‐CECs and ex--‐CAGs who have unimpeachable integrity, no connection with government or political parties. These five members then select another five members from the civil society. This completes the 10--‐member
SearchCommittee .
d) The Search Committee will choose from the people of India, three times the number of vacancies to be filled for the position of Lokpal member and chairperson. Such selection will be based on strict criteria to filter out people with any doubtful integrity or connections with any government body or political party. This list is then forwarded to the Selection Committee which then makes the selection from this pool.
e) After the selection, the names are forwarded to the President of India, who will then immediately appoint the recommended Lokpal members. f) The entire process of selection of Lokpal is publicly transparent via website. All the meetings of the Search Committee and Selection Committee shall be video recorded that will be made public.
Quote
 
 
+3 #88 RISHAB 2011-08-18 22:29
Dear Savukku,

Why don't you try to expose and bring to light the infamous rise and scandals of P.C? Only you can do it.
Quote
 
 
+1 #87 RaBaSha 2011-08-18 20:39
மேலூர் கண்ணன், சட்டத்தை பாராளுமன்றத்தில ் தான் இயற்ற முடியும். ஆனால் அந்த சட்டம் ஏற்புடையதாக இருக்க நாம் தெருக்களில் தான் விவாதிக்க முடியும் (அதுவும் அரசு அதற்கு ஒத்துக்கொள்ளாத பட்சத்தில்). நமது (மக்கள்) பிரதினதிகள் எல்லாம் திருடர்கள், அவர்களை ஒழிக்கத்தான் இந்த சட்டமே... அதை எப்படி அவர்கள் அனுமதிப்பார்கள் .

இப்போதுள்ள சட்டங்களில் பல ஓட்டைகள், அதனால் தான் மக்களுக்கும் பயமின்றி (எப்படியும் தப்பித்துக்கொள் ளலாம்) போய்விட்டது. இதுவரை ஊழல் புரிந்த அரசியல்வாதியோ, எம.எல்.ஏ.எம்பி, IAS,IPS அதிகாரிகள் யாரும் தண்டனை பெற்றதில்லை. மக்களும் ( நீங்க சொன்ன மாதிரி) மாறவேண்டும் (உத்திரவாதமில்ல ை) அதனால் சட்டங்களின் ஒட்டைகளும் அடைத்து ஊழல்வாதிகள் தண்டனை பெறவேண்டும்... அந்த பயத்திலாவது மக்கள் திருந்த வாய்ப்புண்டு.

when in parliament there are around 200 criminals sitting as MPs with various charges how do you expect them to agree to this lokpal bill and pass them. That is why they (both Cong and BJP) are opposing.

Lokpal has enough provisions to remove any person (like Jaffer Sait) sitting in the panel. The panel will consist people from judiciary, ruling party, opposite party, NGOs and some representatives from Civil Society. There are checks and balances. There might be some pitfalls still - but still something is better than nothing.

நாம் இதற்கு மேல் இழக்க ஒன்றுமில்லை. அதனால் ஜன்லோக்பாலை ஆதரியுங்கள்.
Quote
 
 
+2 #86 anonymous 2011-08-18 20:32
நன்ரு
Quote
 
 
+1 #85 madhu 2011-08-18 20:24
JAI HINDH
Quote
 
 
+1 #84 Jaisankar 2011-08-18 16:11
Friends ! Let congress be the doomed party of India and let it become the place for all Corrupt and Racial / Holocaust-maniacs. Atleast this way the next generation will understand Congress is the Sewage of Indian Politics.
If something further goes wrong, Sonia might not even return to India. I pray to God for that wonderful day.
Quote
 
 
+11 #83 MDMK 2011-08-18 12:02
Who is the leader of youth of INDIA .....................

ARVIND KEJRIVAL:-
Mechanical Engineer -IIT Kharagpur

Job :-Tata Steel
Former IRS resigned from the Govt job(posted IT Commisioner's office)

Social Activist:-
Man behind (Right to Information Act).
LokPal bill

Awards Various Ashoka Fellow, Civic Engagement.
2005: 'Satyendra Dubey Memorial Award', IIT Kanpur for his campaign for bringing transparency in Government
2006: Ramon Magsaysay Award for Emergent Leadership.
2006: CNN-IBN, 'Indian of the Year' in Public Service
2009: Distinguished Alumnus Award, IIT Kharagpur for Emergent Leadership.
2010: Policy Change Agent of the Year, Economic Times Corporate Excellence Award along with Aruna Roy.
Fighting against corruption
.............He left his job in IRS to fight against corruption.
RAHUL GANDHI :-
Education- failed to secure passing grades in National Economic Planning and Policy graduated by any how
job: Got ancestral political power and running through it
Award: he is making awards not getting it
Fight against Indians sentiments

For him Terror attacks are common thing...
we should not be worried of that.....let it happen(since they have z class security)

he will never talk about Govt. policies....and planning....since he
is not intelligent enough to grasp that.(claimed to be most eligible to be PM)

Won't talk about black money and corruption.

will never talk in Parliament.

No political vision and goals for nation .

Trained well to fool poor villagers with safed kurta ..nd khadhi(doing same in UP and other places.)

Achievements:-
Grandson OF Nehru,
Grandson of Indira Gandhi....
Son Of Rajiv gandhi....
FRom Gandhi Family.....
till now zero...

..............Claimed to be nxt PM of INDIA ..Future face of congress.
Quote
 
 
+5 #82 alexpillai 2011-08-18 12:02
ஊழல் சோனியா ஒழிய வேன்டும்
Quote
 
 
+8 #81 M.Pandiarajan 2011-08-18 11:22
காங்கிரஸ் ஒரு நாசகர சக்தி. காங்கிரஸ் இந்திய அரசியலிலிருந்து துடைத்தெரியப்பட வேண்டும். மக்களை குழப்பியடித்தல் , ஏமாற்றுதல், பிரித்தாளுதல், சுய நலத்திற்காக தீய சக்திகளை வளர்த்துவிடுதல் , வஞசகம் செய்தல் ஆகியவை காங்கிரஸின் அரசியல் கலாச்சாரம். தற்போது ஆணவமும் சேர்ந்து கொண்டது.
Quote
 
 
+4 #80 Nanban 2011-08-18 10:45
no the government has not arrested Anna....looks like anna has arrested the government \n

http://point-pandi.blogspot.com/
\n

Hope it will come to an end with all our support.
Quote
 
 
+5 #79 CorruptionFree India 2011-08-18 09:26
[ஃஉஒடெ நமெ="உங்களில் ஒருவன்"]அன்னாவை திகாரில் அடைத்திருக்கும் காங்கிரஸ் அரசுக்கு ஒரு கேள்வி:

உங்கள் தலைவி சோனியாவை விபச்சாரம் செய்பவர்களோடு ஜெயிலில் அடைத்தால் பொருத்துக்கொள்வ ீர்களா?[/ஃஉஒடெ]
விபச்சாரிகள் ஓத்துக்கொள்வார் களா?
Quote
 
 
+6 #78 நடுநிசி நாயகன் 2011-08-18 06:50
தமிழ் நாட்டில் வந்தேறி தெலுங்கன் அவனைச சார்ந்த கொள்ளைக்காரக் கும்பல் எல்லோரையும் அடையாளம் காட்டி தமிழ் மக்கள் அவனுகளை எல்லாம் கூண்டோடு கைலாசம் அனுப்பியது போல இந்த காங்கிரஸ் கழிசடையை காலம் காலமாக இந்திய மக்களை ஏமாற்றி வந்த இத்தாலியக் கும்பலும் அவளுக்குத் துணைபோகிற ப.சி. கபில் சிபல் கும்பலையும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தாமாகவே திஹாருக்கு ஓடி கதவை சாத்தி தாழ்ப்பாள் போடா வைக்காவிட்டால் நாம் வீணாகப் போய்விடுவோம். இந்த தக்காளி ராசீவுக்கு லட்சம் கோடி கருப்பு பணம், ப.சி க்கு ஏழாயிரம் கோடி, பார்த்தால் வயிறு எரியவில்லை?
Quote
 
 
+6 #77 Bharathinesan 2011-08-18 00:39
ஜெயந்தி நடராசன் அப்பிடின்னு ஒரு அமைச்சர் சொல்லராங்க " காங்கிரஸ் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி". அது என்னிக்கு ஒடைஞ்சதோ அன்னிக்கே இந்திரா காங்கரஸ் ஆயிடுச்சு. அப்புறம் எப்படி இந்திய தேசிய காங்கரஸ் ஆகும்? 55 வருஷம் ஆண்ட பதவி மோகம்,பணச்சுருட ்டல்,ஆடம்பரம் ஒரு நாள்ல விட முடியுமா? காந்தியே காங்கரஸை கலைக்க சொன்னதா செய்தி.அவர் பேச்சையே கேக்கலை. அன்னா ஹஸாரே சொல்லியா கேப்பாங்க!!! இவனுங்களை வீட்டுக்கு அனுப்புனாத்தான் புரியும். இல்லைனா சும்மா வெட்டி வாதம் பண்ணிக்கிட்டு கொள்ளை அடிக்கிறதைப் பாத்துக்கிட்டு நம்மை சுரண்டிக்கிட்டு இருப்பாங்க! வரட்டும் அடுத்த தேர்தல்!!!!
Quote
 
 
+5 #76 thuyamurthy 2011-08-18 00:07
உண்மயான கருத்துக்கள். அனைவரையும் சிந்திக்க தூண்டுகின்ட்ரன. வாழ்த்துக்கள்.
Quote
 
 
+15 #75 Franklin 2011-08-17 23:14
காங்கிரஸ் தானாக அழியும் காலம் வந்து விட்டது. எந்த ஒரு செயலுக்கும் ஒரு முடிவு உண்டு என்பது நீயுட் டன் விதி.. லட்சக்கணக்கான மக்கள் சிறிலங்காவில் உடல் சிதறி இறந்த போது இங்கு சொகுசாக பங்களாவில் உட்கார்ந்து கொண்டு ரசித்த இத்தாலி பரதேசி நாயும்...நாயின் கழிவை உண்டு வாழும்
ஈன பிறவிகளுக்கும் முடிவு வந்து விட்டது.இனியாவது ஒரு புது இந்தியாவை உழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்..... அன்னாவை ஆதரிப்போம்... வாழ்க தமிழ்நாடு... வாழ்க இந்தியா
Quote
 
 
+5 #74 Pamaran 2011-08-17 20:52
It is high time that congress should be defeated in all elections from now so that Sonia will dismantle it. For this all people should come out in open to raise their voice against corrupted congress men.
Quote
 
 
+6 #73 நெல்லைக்குமரன் 2011-08-17 20:27
மாநில பிரச்சினைகளுக்க ு நாம் தான் போராட வேண்டும். நம்மால் ஒரு வார்டு உறுப்பினரைக்கூட கேள்வி கேட்க முடியவில்லை. உங்களால், உங்கள் தொகுதி MLA அல்லது MP யை சந்திக்க இயலுமா ?

சென்னை, அடையாரில் , நமது தோழர்கள் ஐம்பது பேர் இரண்டு நாட்களாக உன்ன நிலை போராட்டம் இருக்கிறார்கள்.

முகவரி :
153, LB Road, Adyar Depo,
Near HDFC Bank.

ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளையவர்கள், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்கள் உள்ளனர். அனைவரும் வருக. மாற்றத்தினை உருவாக்குவோம்.
Quote
 
 
-16 #72 Melur Kannan 2011-08-17 20:09
சவுக்கு,

உங்களின் வாதம் சரியில்லை. நீங்கள் எதிர்பார்த்தது போல், இங்கே உங்களை விரும்பும் கூட்டம் ஆமாம் சாமி போட்டு அன்னா ஹசாரே சொல்வது சரி என்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறது. இதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும்.

1) லோக்பால் குழுவினர் தவறு செய்தால் எப்படி நீக்குவது? உங்கள் பாணியில் சொல்லப்போனால், நாளைக்கு ஒரு ஜாபர் சேட் மாதிரி ஆள் அந்த இடத்தில் போய் உட்கார்ந்து விட்டால், எப்படி நீக்குவது?
2) மக்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரியில்லை. ஹிட்லருக்கு ஜெர்மன் மக்கள் ஆதரவு எக்கசக்கம். அவர்கள் செய்தது சரியா?
3) பார்லிமென்ட்டில ் இருப்பவர்கள் மக்களால் பெரும்பான்மையில ் தேர்ந்து எடுக்கப்பட்டவர் கள். அதுதான் பெரும்பான்மை மக்களின் விருப்பம். அன்னா ஹசாரே சொல்வது போல், ஒரு சில அறிவாளிகளை வைத்து லோக் பால் செய்து விட்டால், அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிராக போகலாம் இல்லையா?
4) அன்னா ஹசாரே மக்கள் செல்வாக்கு உள்ளவர் என்றால் எதாவது எம்.பி தேர்தலில் நிக்கட்டும். எப்படியும் யாராவது 6 மாதத்திற்குள் இறப்பார், இல்லை ராஜினாமா செய்வார். அந்த இடத்தில் அன்னா ஆதரவாளர்கள் நின்று எம்.பியாகி மசோதா தாக்கல் செய்யட்டும். அதை எதிர்ப்பவர்களை மக்களுக்க்கு அடையாளம் காட்டட்டும். இவர் மீடியா பலத்தில் குறுக்கு வழியில் போகிறார். மக்களின் ஆதரவு உள்ளவர், மக்கள் பலத்துடன் பார்லிமென்டுக்க ு போகட்டும். ஏன் தயக்கம்?

மீடியாக்கள் இதை தூக்கி எழுத காரணம்? இது பரபரப்பாக இருந்தால் நாலு காசு மீடியாவுக்கு கிடைக்கும்.
Quote
 
 
+13 #71 Modified India 2011-08-17 19:34
[ஃஉஒடெ நமெ="ஜய"][ஃஉஒடெ நமெ="கனெஷ் டமிலன்"]முதல் தவறு வெள்ளைக்காரனிடம ் இருந்து பல உயிர்ப்பலிகள் கண்டு மீட்ட இந்த தேசம் நேரு என்ற மனிதனின் சுயநலத்தால் காங்கிரஸ் வசமானது, அடுத்த தவறு நேருவின் வாரிசுகள் நாட்டை ஆள வந்தது. அடுத்த தவறு காந்தி என்ற மகாத்மாவின் கதரை மட்டும் உடுத்திக்கொண்டு அவரின் மற்ற கொள்கைகளை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு கொள்ளை அடிக்கும் கும்பல் காங்கிரஸில் நிறைந்து இருப்பது, அடுத்த தவறு போபர்ஸ் ஊழல் செய்து இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட ராஜீவ் காந்தியை இறந்த ஒரே காரணத்தால் புனிதனாக போற்றிக்கொண்டு, சாலைகளுக்கு, விமான நிலையங்களுக்கு, ரயில் நிலையங்களுக்கு அவன் பெயரை வைத்து அவனை ஏதோ சரித்திர நாயகனை போல் கொண்டாடுவது, அடுத்த தவறு மிகப்பெரிய தவறு அந்த இந்திய ஊழலின் முதல் தந்தையான ராஜீவ் காந்தியின் வெளிநாட்டு மனைவி அந்தோனியோ மொய்நோவை காங்கிரஸ் தலைவியாக்கி இந்தியாவின் மானத்தை காங்கிரஸ் கழிவு பிண்டங்கள் கப்பல்யேற்றியது அது மட்டும் இல்லாமல் அந்த வெள்ளைக்கார கழிவின் கழிவான ராகுலை அடுத்த பிரதமர் என்று வெட்கமே இல்லாமல் சொல்லி இந்தியர்களை கேவலப்படுத்துகி றார்கள் இந்த காங்கிரஸ் சனியன்கள், ஆகா வெள்ளைகரனிடம் இருந்து மீட்ட நாட்டை காங்கிரஸ் சனியன்கள் கொள்ளைக்கார வெள்ளைக்காரியின ் காலில் அடகு வைத்து விட்டார்கள். இந்தியா மீள்வது எப்போது? மானம் ரோசம் சூடு சொரணை உள்ள ஒரு இந்தியன் இந்த நாட்டை ஆள்வது எப்போது.?[/ஃஉஒடெ
எ௯செல்லென்ட் சொம்மென்ட்.கோட்.[/ஃஉஒடெ]

Modi is the answer
Quote
 
 
-1 #70 saakkadai 2011-08-17 19:02
If you are not ready to put the comments which is against you and Anna, then what is the democracy that you are speaking.
Quote
 
 
-10 #69 saakkadai 2011-08-17 18:54
உலகமயத்தை எதிர்க்காத, தாராளமயத்தை கண்டிக்காத பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலைக் கண்டிக்காத அண்ணாவை ஆதரிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.
Quote
 
 
+7 #68 வேல் 2011-08-17 18:06
நாட்டுநலன் கருதி அண்ணா ஹசாரே வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Quote
 
 
+2 #67 வேல் 2011-08-17 18:03
தமிழருவி மணியன்,சீமான் பற்றி
Quote
 
 
+5 #66 நடுநிசி நாயகன் 2011-08-17 17:49
வாராது வந்த மாமணி போல அண்ணா ஹசாரே நீதி நிலை நாட்டவும் ஊழல் என்ற மாபெரும் நோய் நம்மை விட்டு விலகவும் நேர்மை துலங்கவும் உண்மையான் எண்ணத்தில் உண்ணாவிரதம் என்ற ஒரு மகத்தான ஆயுதத்தை கையில் எடுத்து மருத்துவர் பணி போல ஆபரேஷன் செய்யத் துவங்கும் பொது காங்கிரஸ் மற்றும் தி. மு. க. கச்சை கட்டிக்கொண்டு தொந்தரவு செய்ய ஆரம்பிப்பது ஒன்றும் புதியதோ நமக்குத் தெரியாததோ அல்ல. மன்மோகன், ப.சி. கபில் சிபல் எல்லாருமே தீவிரவாதிக்கு இணையான் நபும்சகன்களே. ஒரே வழி தான் எனக்குத்தெரிகிற து. உச்சநீதி மன்றத்தின் துணையுடன் களை எடுக்கும் பணி தொடங்காவிட்டால் இந்த மாதிரி கூத்துகளையும் தமாஷாக்களையும் பார்த்த்தான் தீர வேண்டும். என்றைக்கு பி/ஜே.பி மாற்று ஆட்சியராக வருவது எப்போது நாம் பெருமூச்சு விட்டு நிம்மதி அடைவது. நமக்குத் தெரிந்த அளவில் பி.ஜே.பி ஒன்றும் புனிதம்மானதும் இல்லை, நம் தொ ல்லை தீர புனிதப்படுத்தும ் சாத்தியக் கூருக்களும் தொலைதூரத்துக்கு த் தெரியவில்லை.
Quote
 
 
+2 #65 chennai_venkat 2011-08-17 17:11
கட்டுரைக்கு நன்றி!
Quote
 
 
+5 #64 jot 2011-08-17 16:59
ஊழலை அடியொடு விரட்ட(congress , dmk-no no-Kalaizhar family] வேன்டும்.becuase we are all support to Anna
Quote
 
 
+7 #63 RayJaguar 2011-08-17 16:30
i am always with anna hazare.... Jai Hind
Quote
 
 
+20 #62 jaya 2011-08-17 16:27
[ஃஉஒடெ நமெ="கனெஷ் டமிலன்"]முதல் தவறு வெள்ளைக்காரனிடம ் இருந்து பல உயிர்ப்பலிகள் கண்டு மீட்ட இந்த தேசம் நேரு என்ற மனிதனின் சுயநலத்தால் காங்கிரஸ் வசமானது, அடுத்த தவறு நேருவின் வாரிசுகள் நாட்டை ஆள வந்தது. அடுத்த தவறு காந்தி என்ற மகாத்மாவின் கதரை மட்டும் உடுத்திக்கொண்டு அவரின் மற்ற கொள்கைகளை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு கொள்ளை அடிக்கும் கும்பல் காங்கிரஸில் நிறைந்து இருப்பது, அடுத்த தவறு போபர்ஸ் ஊழல் செய்து இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட ராஜீவ் காந்தியை இறந்த ஒரே காரணத்தால் புனிதனாக போற்றிக்கொண்டு, சாலைகளுக்கு, விமான நிலையங்களுக்கு, ரயில் நிலையங்களுக்கு அவன் பெயரை வைத்து அவனை ஏதோ சரித்திர நாயகனை போல் கொண்டாடுவது, அடுத்த தவறு மிகப்பெரிய தவறு அந்த இந்திய ஊழலின் முதல் தந்தையான ராஜீவ் காந்தியின் வெளிநாட்டு மனைவி அந்தோனியோ மொய்நோவை காங்கிரஸ் தலைவியாக்கி இந்தியாவின் மானத்தை காங்கிரஸ் கழிவு பிண்டங்கள் கப்பல்யேற்றியது அது மட்டும் இல்லாமல் அந்த வெள்ளைக்கார கழிவின் கழிவான ராகுலை அடுத்த பிரதமர் என்று வெட்கமே இல்லாமல் சொல்லி இந்தியர்களை கேவலப்படுத்துகி றார்கள் இந்த காங்கிரஸ் சனியன்கள், ஆகா வெள்ளைகரனிடம் இருந்து மீட்ட நாட்டை காங்கிரஸ் சனியன்கள் கொள்ளைக்கார வெள்ளைக்காரியின ் காலில் அடகு வைத்து விட்டார்கள். இந்தியா மீள்வது எப்போது? மானம் ரோசம் சூடு சொரணை உள்ள ஒரு இந்தியன் இந்த நாட்டை ஆள்வது எப்போது.?[/ஃஉஒடெ
excellent comment.good.
Quote
 
 
+14 #61 jaya 2011-08-17 16:25
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சரியே. இவனுங்கள் பன்னேடுங் காலம்மை அடித்த கொள்ளைகள் கணக்கில் அடங்கா. இதில் காந்தி என்ற ஆடை மொழி வேறு. சோனியா காந்தியும் நம் தேசபிதாவும் ஒன்றா.? இந்த திருடர்கள் கையில் இருந்து இந்த நாடு எப்போ மீல்கிறதோ அப்போதுதான் இந்த நாடு உருப்படும். மேலும் அன்ன ஹழரே என்ன தப்பு செய்தார். உன்ன விரதம் என்பதே காந்தி சொன்னது தானே. துப்பாக்கி எடுத்து இருந்தால் திகார் இல் அடைத்தது சரி.படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில். இந்த ஊமையன் (மன்னுமுட்டி மோகன் ) அடிக்கும் ஜோக்ஸ் எல்லாம் சிரிக்க முடியலை. எல்லாமே நாடகம்.
Quote
 
 
-10 #60 Devi 2011-08-17 15:54
Somebody pls clarify this: Why did anna heap praise on the states Guj&Bihar and spoke bad on them(like Gujarat is corrupted to the core, soaked in liquor), just after a few weeks later?why double standards?
Quote
 
 
+17 #59 நெல்லைக்குமரன் 2011-08-17 14:25
சென்னை, அடையாரில் , நமது தோழர்கள் ஐம்பது பேர் இரண்டு நாட்களாக உன்ன நிலை போராட்டம் இருக்கிறார்கள்.

முகவரி :
153, LB Road, Adyar Depo,
Near HDFC Bank.

ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளையவர்கள், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்கள் உள்ளனர். அனைவரும் வருக. மாற்றத்தினை உருவாக்குவோம்.
Quote
 
 
+17 #58 chozhavanthan 2011-08-17 13:43
Prisoner - Ennapa 2G case'a?
Anna Hazare - Mm.. Hmmm..
Prisoner - CWG scam'a?
Anna Hazare - illa..
Prisoner - Engaiyavathu bomb vachiya??
Anna Hazare - Hmm.. illa...
Prisoner - Pinna enna thaan thappu pannina??
Anna Hazare - Naattukku nallathu panninen...
Prisoner - Appo ulla thalla vendiyathu thaan
Anna Hazare - Hahaha!
Quote
 
 
+14 #57 naana kadavul 2011-08-17 13:09
சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசை கலைக்கும்படி காந்தி சொன்ன போது,நேரு மறுத்து விட்டார். இன்று சோனியா தலைமையில் மன்னர் குடும்ப ஆட்சி நடக்கிறது. காந்தீயம் பேசியவர்கள்,தமி ழ்நாட்டில் காந்தீயம் பேசுபவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஈழத்தமிழர் இனப்படுகொலையை நியாயப்படுத்திய மன்மோஹன், ஹசரே கைதையும் நியாயப்படுத்துக ிறார். சோனியா,மன்மோஹன் ஹிற்லர் ஆட்சி நடத்துகிறார்கள் .முதலில் தமிழ்நாட்டில் காங்கிரசை துடைத்து எறிய வேண்டும்,உண்மைய ான காந்தீயம் பேசும் காங்கிசார்.
Quote
 
 
+9 #56 K S Ramesh 2011-08-17 12:57
I request Savukku to start English & Hindi Versions so that other non-tamil people also can come to know about these culprits.Now savukku is called as tamilnadu-wikileaks.It can become Indian-wikileaks.
Quote
 
 
+8 #55 http://koothadivedda 2011-08-17 12:48
ஒரு நாடு தன்னிறைவு அடைந்துவிடக்கூட ாது என்பதற்கு காங்கிரஸின் இந்த அடக்குமுறை ஒரு நல்ல உதாரணம். கடுமையான சட்டம் ஒன்று அறிமுகமாகிவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகள் கவன்மாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு தனிமனிதனாக அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் பெருந்தீயாக பரவுவதற்கே காங்கிரஸ் அறிமுகப்படுத்தி யிருக்கும் நெருக்கடி நிலை உதவும். வடக்கே காங்கிரஸின் வழியில் நில ஆக்கிரமிப்பு வழக்குகளை சட்டப்படி சந்திக்க பயப்பிடும் கருணாநிதியின் ஒப்பாரியும் காங்கிரஸின் அதிகாரத்துடனாயா ன அடக்குமுறையும் இந்தியா என்றைக்கும் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் சனம் வறுமையில் இருக்கவேண்டும் என்பதே நோக்கம். இந்நிலை நொருக்கி உடைக்கப்படவேண்ட ும்.
Quote
 
 
+9 #54 கொக்கமக்கா 2011-08-17 12:40
மத்திய அமைச்சரவையில் வீற்றிருக்கும் சிதம்பரம் உள்ளிட்ட கனவான்கள் லோக்பால் மசோதாவில் ஒரு சில சரத்துகளை தவிர ஏனைய அனைத்தையும் ஏற்றுக் கொள்ள தயாரக இருப்பதாக மார் தட்டுகின்றனர். அவர்கள் குறிப்பிடுகின்ற ஒரு சில சரத்துகள் எது தெரியுமா?
1. மக்கள் மசோதா பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறது, அரசு மசோதா கூடாது என்கிறது.
2. மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் அனுப்பும் புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என்று அரசு மசோதா கூறுகிறது. மக்கள் மசோதா, தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும் என்கிறது.
3. லோக்பால் ஆலோசனை கூறும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்கிறது அரசு மசோதா. மக்கள் மசோதா, லோக் பால் அமைப்புக்கு வழக்கு தொடரவும், நீதிமன்றத்தில் வழக்கை நடத்தவும் அதிகாரம் வேண்டும் என்கிறது.
4. அரசு மசோதா, லோக்பாலுக்கு எபைஆர் போடும் அதிகாரம் கூடாது என்கிறது. மக்கள் மசோதா, எபைஆர் போடும் அதிகாரம் வேண்டும் என்கிறது.
5. லோக்பால் அமைப்பு தனியாகவும், சிபிஐ தனியாகவும் வேண்டும் என்கிறது அரசு மசோதா. இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்கிறது மக்கள் மசோதா.
6. குறைந்த பட்ச தண்டனை 6 மாதங்கள் என்றும் அதிகபட்ச தண்டனை 7 வருடங்கள் எனவும் கூறுகிறது அரசு மசோதா. குறைந்த பட்ச தண்டனை 10 வருடங்கள் எனவும், அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்றும் மக்கள் மசோதா கூறுகிறது. கவனித்தீர்களா நண்பர்களே...அந்த ஒரு சில சரத்துகளை பார்த்தீர்களா எவ்வளவு முரண்பாடுகளுடன் தயாரித்துள்ளார் கள். அதுவும் சி.பி.ஐ. யினை லோக்பாலுக்கு கொண்டு வர ஏன் அரசுக்கு இத்தனை தயக்கம் என்பது நமக்கு தெரியாமல் இல்லை. மத்திய அரசு தனக்கு பிடிக்காதவர்களை யும் எதிர்க்கட்சியின ரையும் மிரட்டும் ஆயுதமாக தானே இவ்வளவு காலமாக சி.பி.ஐ. யினை கூடவே வைத்துள்ளது. தற்பொழுதைய இளவரசராகவும் நாளை மன்னராகவும் முடி சூட காத்திருக்கும் அதே வேளையில் நவீன இந்தியாவை உருவாக்க போகிறேன் எனவும் மார்தட்டி கொண்டிருக்கும் ராகுல் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார். மொத்தத்தில் சுதந்தர போராட்டதுக்கு பிறகு இப்பொழுது மீண்டும் சாமன்ய மக்களும் வீதிக்கு இறங்கி போராட தயாராகிவிட்டார் கள் என்பதை எப்பொழுது இந்த அரசு முழுமையாக உணரும்? நன்றி அமனுல்லா!
Quote
 
 
+7 #53 js 2011-08-17 12:27
Very good Article. I support Mr.Anna. He can be a threat to congress and other political parties .
Quote
 
 
+20 #52 சைதை அஜீஸ் 2011-08-17 12:25
[ஃஉஒடெ நமெ="றபஸ்ஹ"]பிஜேபி ஆதரிப்பதனால் சிறுபான்மையினர் சிலர் ஹன்னாவையும் இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கதையும் எதிர்க்கின்றனர் என்று நினைக்கிறேன்... இந்திய பொதுசனங்களே, இது நமக்கொரு நல்ல சந்தர்ப்பம்... இதை மதத்தின், மொழியின், தாங்கள் சார்ந்துள்ள கட்சி, ஜாதி, இனம் (ஆர்ய, திராவிடர்) பெயரால் பிளவுப்பட்டு கெடுக்காதீர்... அதைத்தான் ஊழல் பெருச்சாளிகள் எதிர்ப்பார்க்கி ன்றனர். நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு இந்த இயக்கத்தை வெற்றிப்பெறவைப் போம். மேலும் ஒரு சிலரின் கருத்துபடி ஹன்னாவே ஊழல்வாதி என்றாலும் இதே சட்டத்தின் மூலம் அவரும் தண்டனை பெற வழியுண்டு என்பதை மறக்காதீர். ஊழல் செய்பவன் எவனாயினும் (மு.க., ஜாபர் சேய்ட், ஜெஜெ, அண்புமனி,எதியூர ப்பா,ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு,லாலு ,சோனியா, ராகுல்,கல்மாடி, ஜார்ஜ் பெர்னான்டஸ்,அத் வானி) அவனுக்கு சாவுமணியடிப்போம ். அடுத்த சந்ததியினராவது ஊழலற்ற இந்தியாவில் வாழ வழிவகுப்போம். வாழ்க பாரதம்.[/ஃஉஒடெ]
மிகவும் சரியான கருத்து
Quote
 
 
+8 #51 kk 2011-08-17 12:09
JAITLEY PUTS CONGRESS TO SHAME

Jaitley to PM: Does your govt have the political will to fight corruption?

Civil society and the opposition wants you to know they have the right to campaign and crusade, protest and dissent. Your government is here to scuttle that. And we are opposed to that.


--------------------------------------------------------------------------------

11:55 AM
Jaitley addresses the government/PM: You don't need a magic wand. You need political will. You bring in the necessary laws, the country will support you.

On the one hand you send ministers to receive Baba Ramdev and in the night you unleash the police on the gathering. Political spokesmen are being used as hitmen.

You cannot stand up and say these are the compulsions of alliances. The more arrogant you are, the earlier you disappear.


--------------------------------------------------------------------------------
11:52 AM
Jaitley in RS: India is exasperated with the government which has no solutions to corruption. This government is responsible for the most monumental scams. India is fed up with corruption. Action taken against corruption was not voluntary. You were forced to take action.

People in the country are becoming restless.




--------------------------------------------------------------------------------
11:49 AM BJP in RS: Defining moment on I-day was Anna, not :
Leader of the Oppostion in the Rajya Sabha Arun Jaitley speaks. He says the PM has posed a question before Parliament -- who drafts and makes the laws.

Jaitley says, "But I am wondering who runs this country. We find that the political leadership of the country is hiding behind the men in uniform. The most defining moment on Independence Day was not the PM's speech, but that Anna had gone to Rajghat."
Quote
 
 
+12 #50 AUCTUSKPS 2011-08-17 11:46
ஊழல் பெருச்சாளி காங்கிரஸ் கரு அறுக்கப்பட வேண்டும். காங்கிரஸ் திருடர்கள் விரட்டப்படவேண்ட ும்.ஒன்று பட்டுப் போராடுவோம்.
Quote
 
 
+4 #49 thirudan 2011-08-17 11:42
http://www.indiaagainstcorruption.info/2011/07/antonia-maino/
Quote
 
 
+6 #48 drsivabalaa 2011-08-17 10:42
brothel velai seiyum congress ai karuvarukka ovvora tamizhanum thunai nirpom
Quote
 
 
+26 #47 உங்களில் ஒருவன் 2011-08-17 10:23
நண்பர்களே, சற்று கடுமையான வார்த்தைகள் உள்ளன என் karuththil, மன்னிக்கவும்

திகார் சிறையில் அடைக்குமளவுக்கு அப்படி என்ன தவறு செய்துவிட்டார் அன்னா ஹசாரே? இந்திய நாட்டிற்காக நாட்டு மக்களுக்காக போராடியது தவறா? ஆம், காங்கிரஸ் ஆட்சியை பொறுத்தவரை தவறுதான், அவர்கள்தான் மன்னுமோகன் என்னும் இந்தியனை வைத்து இத்தாலி ஆட்சி நடத்துகின்றனரே.

இதே ராகுல் காந்தி ஒரு இத்தாளிக்காரியை மணந்துகொண்டு இத்தாலி அதிபர் ஆக முடியுமா?

இந்தியர்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை, இது காங்கிரஸ்காரர்க ளுக்கு ஒட்டு கேட்டு வரும்போதும் தேர்தல் முடிவு வரும்போதும் தெரியும்,

எம் தாய்த்திரு நாட்டில் பறக்க வேண்டியது பாரத கொடியே, இத்தாலி கொடி அல்ல.

அன்னாவை திகாரில் அடைத்திருக்கும் காங்கிரஸ் அரசுக்கு ஒரு கேள்வி:

உங்கள் தலைவி சோனியாவை விபச்சாரம் செய்பவர்களோடு ஜெயிலில் அடைத்தால் பொருத்துக்கொள்வ ீர்களா?
Quote
 
 
+9 #46 MLA 2011-08-17 09:40
\\..இதை மதத்தின், மொழியின், தாங்கள் சார்ந்துள்ள கட்சி, ஜாதி, இனம் (ஆர்ய, திராவிடர்) பெயரால் பிளவுப்பட்டு கெடுக்காதீர்... அதைத்தான் ஊழல் பெருச்சாளிகள்..\\..
இந்த குட்டையில தான கேடு கெட்ட காங்கிரஸ், மு.க, லல்லு போன்ற பச்சோந்திகள் மீன்பிடிக்குதுங ்க...
Quote
 
 
-14 #45 prasannakrishnan123 2011-08-17 09:39
உங்க காமடிக்கு அலவே இல்லயா :lol:
Quote
 
 
+3 #44 V Subbiah 2011-08-17 09:28
Most of the politicians are corrupt irrespective of the party. Left to the politicians, they will not come up with a powerful Lokpal. Therefore, it is our duty to stand by Anna Hazare. I do not know whether he is also corrupt but his intentions appear to be good and noble. Therefore, every Indian should support him in establishing a powerful Lokpal. This is the most opportune time. If we do not support him now, we may not get any opportunity at all in the future.
Quote
 
 
+5 #43 Bharath Arunachalam 2011-08-17 09:18
What else can you expect from the bitch from Italy?
Quote
 
 
+7 #42 Vijay123 2011-08-17 08:38
காங்கிரஸ் கட்சி ஒழிய வேண்டும் அதில் மற்று கருது இல்லை. லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும், அதிலும் மற்று கருத்து இல்லை. ஆனால்
இந்த லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் யார்? அவர்களும் பணம் வங்கி கொண்டு ஊழல் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை தவிர்க்கவும் அதில் ஏதேனும் வழி உண்டா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 63 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3249
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week35889
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month248708
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12770827