முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நீதி தேவன் மயக்கம் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 89
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 06 அக்டோபர் 2010 23:32

 

நீதிதேவன் மயக்கம். அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். அந்த நாடகத்தை அறிஞர் அண்ணா என்ன நினைத்து எழுதினாரோ.. இன்று அது உண்மையாகி விடுமோ என்று அஞ்ச வைக்கிறது.

கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும், கலாநிதி மற்றும் தயாநிதி ஆகியோர், கருணாநிதியை விட எப்படி மிகப் பெரிய தீயசக்தி என்று சவுக்கு ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தது.   அது மீண்டும் மீண்டும் உண்மை ஆகி வருகிறது.

 

kalanidhi-dayanidhi-maran

 

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு யுகப்புரட்சி நடந்து விட்டது போல, எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன் என்ற கோஷமும், சன் டிவியை திறந்தால், எந்திரன் திருட்டு விசிடியை ரசிகர்கள் கண்டு பிடித்தனர் என்று செய்தி. இது பத்தாது என்று, மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஸ்ரீதர் வேறு பேட்டி கொடுக்கிறார்.   எந்திரன் திருட்டு டிவிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று. (ஸ்ரீதர் சார், நீலப்படம் விற்றால் பாயாதா சார் ?)   கருணாநிதியோடு, கேடி சகோதரர்கள் பிணக்கில் இருந்த காலத்திலேயே, தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு வேலைகளை கேடி சகோதரர்களால் செய்ய முடிந்தது.   கோவையில், பைபர் ஆப்டிக் இழைகளை சன் டிவி நிர்வாகத்தார் அறுத்து எரிந்த போது, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என்று, ஒரு ஐஏஎஸ் அதிகாரி எழுதி அனுப்பிய கடிதம் குப்பையில் போடப் பட்டது. ஆனால், எந்திரன் பட சிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று ஒரு காவல் துறை அதிகாரி சன் டிவிக்கு பேட்டி கொடுக்கிறார் என்றால், எந்த அளவுக்கு, அரசு நிர்வாகத்தை மடக்கிப் போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

 

ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்தது போல, ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்று அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்து விட்டு, நீதித்துறையையும் கபளீகரம் செய்ய கேடி சகோதரர்கள் முதல் முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும், அதற்கு நமது நீதிமான்கள் துணை போயிருக்கிறார்கள் என்பதையும் சவுக்கு வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

 

நேற்று (செவ்வாய்) இரவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Four Frames என்ற தியேட்டரில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 24 நீதியரசர்கள், தங்கள் குடும்பத்தினருடன், எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்திருக்கிறார்கள் என்ற தகவலை சவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

endhiran-01

 

நீதிபதிகள் என்றால் அவர்களுக்கு ஆசா பாசம் இருக்கக் கூடாதா, ஏன் அவர்கள் சினிமா பார்க்கக் கூடாதா என்று கேள்வி எழும். நீதிபதிகள் சினிமா பார்க்கலாம். குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால், யார் செலவில், யார் அழைப்பில் என்பதுதான் கேள்வி.

 

சென்னையில் மட்டும் 36 தியேட்டர்களில் எந்திரன் படம் ஓடுகிறது.   தங்களின் Security Officer ம் சொன்னால், டிக்கட் எடுத்து தரமாட்டார்களா ?   டிக்கட் எடுத்துப் படம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாமல் நீதிபதிகள் வறுமையில் இருக்கிறார்களா ?   அப்படியே வறுமையில் இருந்தாலும், அப்படி என்ன சினிமா வேண்டிக் கிடக்கிறது ?

 

Movie_Endhiran00

 

Four Frames என்ற திரையரங்கம், பொது மக்கள் பார்ப்பதற்கானது அல்ல. Preview ஷோ என்றழைக்கப் படும் பிரத்யேக திரையிடலுக்கான தியேட்டர் அது.   அந்தத் தியேட்டரில் நீதிபதிகளுக்கான பிரத்யேகத் திரையிடல் இருக்கிறது, நீதிபதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் சார்பில், அழைப்பிதழ் வழங்கப் பட்டதாகவும் அதை ஏற்று 24 நீதிபதிகள் குடும்பத்துடன் எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

four_frames

சன் பிக்சர்ஸ் சார்பாக, நாளை ஏதோ ஒரு வழக்கு வருகிறதா இல்லையா என்பது அடுத்த விஷயம். இரண்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இருக்கும், மங்குணி கண்ணாயிரத்தால் இது வரை கைது செய்யப் படாத துவைக்காத சாக்ஸ் என்று பிரபலமாக அழைக்கப் படும் சக்சேனாதான் சன் பிக்சர்ஸுக்கு தலைமை அதிகாரி என்பது அந்த 24 நீதிமான்களுக்கு தெரியுமா ?   அந்த இரண்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, அப்பாவி ஆட்டோ டிரைவர்களைத் தவிர, வேறு யாருமே கைது செய்யப் படவில்லை என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ? Four Frames திரையரங்கில் நீதிமான்களை வரவேற்றவர்களுள் துவைக்காத சாக்ஸும் அடக்கம் என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ?

ஒரு தேடப்படும் குற்றவாளியோடு சேர்ந்து இரவுக் காட்சி பார்க்கும் இந்த 24 நீதிமான்களை என்னவென்று சொல்வது ? நம்மை யாருமே கேள்வி கேட்க முடியாது, நாம் கடவுளுக்கு நிகரானவர்கள், அதனால்தான் நம்மை “மை லார்ட்“ என்று அழைக்கிறார்கள் என்ற அகந்தை தானே காரணம் ?

யாருமே கேள்வி கேட்க முடியாது என்ற அகந்தை தானே, பாதிக்கப் படப் போகும் பெற்றோர்களை பற்றி சற்றும் நினைக்காமல், மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக தீர்ப்பளிக்க தைரியம் அளித்தது ?

ஆனால், இதையெல்லாம் சரிக்கட்ட Judicial Standards and Accountability Bill 2010 என்ற புதிய சட்டம் வர இருக்கிறது. இதன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும், இதன் வரம்பில் வருவார்கள்.   ரொம்பவும் கடுமையான சட்டம் போல இது தோன்றாவிட்டாலும், எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று பரவாயில்லை அல்லவா ?   முதலில் இந்தச் சட்டம் வரட்டும். அதன் பிறகு, இச்சட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்து, செம்மையாக்குவோம்.

 

எந்திரன் படத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

 

அடுத்த எந்திரன் செய்தி. டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், தினமணி நாளிதழும், எந்திரன் என்ற திரைப்படம் எப்படி ஏகபோக முதலாளித்துவத்தை வளர்க்கிறது, சிறிய படங்கள் எப்படி இதனால் நாசமாக்கப் படுகின்றன என்று வெளியிட்ட இரண்டு செய்திகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று இன்று சன் பிக்சர்ஸ் சார்பாக இந்த இரண்டு நாளிதழ்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால் கிரிமினல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படுமாம்.

முதலமைச்சருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை விட்டு விட்டு, குடும்பத்தினர் சகிதமாக எந்திரன் படம் பார்த்துவிட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சன் பிக்சர்ஸ் இப்படி படம் எடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது என்னையே நான் பாராட்டிக் கொள்வது போலாகும் என்று கூறும், ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் இருக்கும் போது, கேடி சகோதரர்களுக்கு திமிருக்கு என்ன குறைச்சல் ?

 

அந்த இரு செய்திகளும், சவுக்கு வாசகர்களுக்காக இதோ.

41335238

05_10_2010_002_009

 

05_10_2010_002_026

05_10_2010_002_034

இப்போது சவுக்கு மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரட்டும். கேடி சகோதரர்களுக்கு மானமே இல்லை. இல்லாத மானத்தை எப்படி நஷ்டப் படுத்த முடியும் என்று பதில் வழக்கு சவுக்கு தொடுக்கும். கேடி சகோதரர்களின் வரலாறு, கலாநிதிக்கும் காவேரி கலாநிதிக்கும் திருமணம் ஆன சூழல், கலாநிதியின் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சந்தியில் கொண்டு வந்து சவுக்கு நிறுத்தும்.

 

கேடி சகோதரர்களே….. உங்கள் பருப்பு பகவான் சிங்கிடம் வேகலாம். ஆனால், சவுக்கிடம், எந்த குக்கரில் வேகவைத்தாலும் வேகாது.

 

குறிப்பு

vani

 

சவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது. உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.

 

Comments  

 
0 #137 sitrai anandam 2010-12-23 17:35
No one is clean. Rama wasnot above board. He was also accused. Neither was Krishna Spared. Saukku Sankar cannot find one good soul who isnot blameworthy. Instead of merely accusing the society of debauchery, corruption, nepotism, favortism and making such allied accusation, why not try to find a solution? Turnyour mind and vision to healthy developments. Make suggestion that will remove the ills. I am sure you will not mistake this young lawyer for coming out with this suggestion. While i appreciate your big heart and mind to wish jaffer, i would be happy if you could also forgive the poor dalit Chief Justice. He is after all finding ways and means to uplift his family, who are otherwise incapable and useless.
Quote
 
 
0 #136 Kuruman 2010-12-04 10:22
Very nice
Quote
 
 
0 #135 saravanavasan 2010-11-29 21:21
mr. savukku i appriciate ur thill becuase u commended in high court judges 99 percent people are correpted its knone to all tamil people thank u so much and hands off u
Quote
 
 
0 #134 Thennarasu 2010-11-19 20:51
Oru manithani ulazhikka thundukiravan than nalla thalivan annal avannukku kudikka sarakkum uthi kodukirargal ukkarnthu parkka TV um kodukirargal.
Quote
 
 
0 #133 Thennarasu 2010-11-19 20:46
thamilahathil thamilan edukiran thiru oodu! athai thenavuttaga parthu sirikiran thaliyel onnum illtha mandai oodu!
Quote
 
 
0 #132 Ramesh Abi 2010-10-30 13:43
ok
Quote
 
 
+1 #131 RAHIMGAZALI 2010-10-13 17:40
இந்த சுட்டியில் என் கட்டுரையை படிக்கலாம்
http://ragariz.blogspot.com/2010/10/blog-post_12.html
Quote
 
 
0 #130 RAHIMGAZALI 2010-10-13 17:34
சன் டி.வி.பற்றியும் இந்திரன் பற்றியும் என் வலைத்தளத்தில் நான் எழுதிய இந்த கட்டுரையையும் படியுங்கள்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா சன் நிறுவனமும், எந்திரனும்
Quote
 
 
0 #129 telugukaran 2010-10-11 21:02
கலைஞர் கேட்டவர் தான்
அம்மா நல்லவரா?
அம்மா ஆடிய ஆட்டம் நாம் மறக்கவில்லை...
மூன்று பேரை தர்மபுரியில் உயிருடன் கொளுத்தியதை ; நாம் நம் வீடு குழந்தைகளாக இருந்தால் மன்னிப்போம?
இந்த இருவருக்கும் யார் மாற்று?
உனக்கு வேறு வழியே இல்லையட தமிழா ...
உனக்கு சாவு கத்தியா இல்லை துப்பாக்கியா என்று மட்டும் தேர்வு செய்யடா ...
Quote
 
 
0 #128 Babu 2010-10-11 19:01
Please publish article regularly.
Quote
 
 
0 #127 rukku 2010-10-11 18:04
தமிழ்ச்சினிமா உலகத்தரத்தில் முன்னணிக்கு வரவேண்டு இதில் இரு வேறுபட்டகருத்து எவருக்கும் இருக்காது.1948ல் வெளிவந்ததாக கூறப்படும் சந்திரலேகா(பார் க்க கிடைக்கவில்லை)வ ரலாறு பதித்ததுபோல அடிக்கடி இதுபோன்றபடம் வரட்டும், ஆனால் எந்திரனுக்கு இவ்வளவு செலவழித்திருக்க த்தேவையில்லை என்று படுகிறது,அத்துட ன் சிறிய தயாரிப்புபடங்கள ை ஒடுக்கி தியேட்டர்களை கையகப்படுத்தி ரிக்கற்றை 10 மடங்காக்கி மறைமுகமாக பொதுமக்களின் பையில் கை வைத்து பணத்தை பறிப்பது போன்ற முன்னுதாரணத்தை அதிகாரத்தை பயன்படுத்தி செய்திருப்பது, தமிழ்நாட்டில் ஊழலை எந்த வழியிலும் செய்யலாம் என்பதை முதலமைச்சரே முன்னின்று அறிமுகப்படுத்தி க்கொண்டிருக்கிற ார் மக்கள்தான் சிந்தித்து நிச்சியம் முடிவு கட்டவேண்டும்.
Quote
 
 
0 #126 சவுக்கு வாசகன் 2010-10-11 15:43
என்ன ஆச்சு சவுக்கு, ஒரு பதிவும் இல்லை.

”கே... பிரதர்ஸ்” உங்களை ஏதாவது செய்து விட்டார்களா.
20 இணைய தளங்களில் எந்திரனை முடக்கிவிட்டதாக செய்தி வெளியிட்டார்கள் .

2740 பேர் இப்போது வரை இன்றைக்கு மட்டும் சவுக்கை பார்வையிட்டுள்ள னர். பலர் பல தடவை.

REPLY PLEASE..........
Quote
 
 
0 #125 Indian 2010-10-11 15:41
nalla savukku visaringa vazhthugal
Quote
 
 
0 #124 rukku 2010-10-11 14:31
தீயசக்தியின் வாரிசு ஒன்றிற்கும் கேடி பிரதர்ஸுக்கும் முட்டிக்கொண்டுவ ிட்டதாக ஒரு தகவல் உண்மையா என்பதை உறுதிப்படுத்தமு டியவில்லை யாராவது உறுதிப்படுத்தி விபரியுங்கள்,ப் ளீஸ்,,
Quote
 
 
0 #123 தமிழன் 2010-10-11 14:30
தோழரே எங்கள் பதிவு கூட மிகவும் தாமதம் ஆகிறது ஏன் ? எதேனும் பிரச்சினையா ?? உடனே தெரியபடுத்துங்க ள் ?
Quote
 
 
0 #122 balanmct 2010-10-11 11:43
neethimandra avamathippu vazhakku thodarappadalam ,
Quote
 
 
+3 #121 தமிழன் 2010-10-11 11:32
தோழரே.. இவ்வளவு நாள் தாமதம் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது ? உடனே அடுத்த பதிவை LOAD செய்யவும். தினசரி காலை மட்டும் படித்து வந்தோம். இப்போது ஒரு நாள்ளுக்கு 15 முறை தேட வேண்டி உள்ளது .உங்கள் பதிவும் படிப்பதோடு நமது தோழர்கள் பதிவும் படிக்க வேண்டி உள்ளது .எங்களை சோதிக்காமல் தினசரி காலை உங்கள் பதிவு இருக்க எற்பாடு செய்ய அன்புடன் உத்திரவு இடுகிறோம் ...
Quote
 
 
+2 #120 Annian 2010-10-11 11:26
சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போ டு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர் களை களங்கப்படுத்துவ தோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் ’எந்திரன்’கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

”இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கா ன சினிமா!”
Quote
 
 
+1 #119 Annian 2010-10-11 11:25
எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான ் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்தி ற்கு கதைகள் அல்ல! பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.
Quote
 
 
0 #118 Annian 2010-10-11 11:24
மொத்த தமிழ்ச்சினிமாவை யும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார் . சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறத ு.
Quote
 
 
0 #117 அனானி 2010-10-11 09:19
என்னாச்சு சவுக்கு? அஞ்சு நாளா ஒன்னையும் காணோம். பீவர் ஆர் பியர்? சீக்கிரம் வாங்க அண்ணாச்சி...
Quote
 
 
-6 #116 Saravanan_d 2010-10-11 05:29
Romba overa peserenga, ungalukku vera velaiya illaiya, mathavangala kurai solradhudhan velaiya. Pongaiya poi urupadiya vera velai parunga. Istam irundha padathai parunga, illai na parkatheenga. Mathavanga sampadicha vairu romba eriyumo.
Quote
 
 
-2 #115 brother 2010-10-11 00:07
unmai dhan pa. idhu nyayame illai. nee padam parthuttiya. nalla irukkiya. enkooda pesa maattiya.
Quote
 
 
+5 #114 victor 2010-10-10 22:01
Quoting gGanesh:
//நேர்மை ஒன்றே தங்களின் குறிக்கோள் என சொல்லும் நீங்கள், படத்தை திருட்டுத்தனமாக பார்க்கச் சொல்லுவது முரணாய் தோன்றுகிறது. இந்த பதிவிற்கு நிறைய பின்னூட்டங்கள் கிடைத்தாலும், நடுனிலையான பலரின் ஆதரவை நீங்கள் இழப்பீர்கள் என்றே தோன்றுகிறது.//

நாங்கள் திரையரங்கில் பார்க்க வேண்டுமானால் அனைவரும் பார்க்கும் அளவிற்கு விலை இருக்க வேண்டும்.. சும்மா ரெண்டு வருஷம், பிரம்மாண்டம் என பரபரப்பை காட்டி ஒரு குப்ப படத்த கொடுத்தா மக்கள் எப்படி அவ்வளவு காசு கொடுத்து பாப்பாங்க.. மக்கள் வயித்துல அவங்க புளிய கரைக்கும் போது அவங்க வயித்துல மக்கள் புளிய கரைக்க நினைக்கிறது தப்பில்ல


நண்பரே ,சில நேரங்களில் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் ,அதனால் தரவிறக்கம் செய்து பார்ப்பதில் தவறில்லை.
Quote
 
 
0 #113 jai 2010-10-10 18:28
savukku thodarndhu idhu pola kedi sagodharargalin attuliyangalai makkalukku kaataa vendum..... tamil ilaingyargalin aadharavu endrum savukku thaan .......
Quote
 
 
+5 #112 gGanesh 2010-10-10 16:51
//நேர்மை ஒன்றே தங்களின் குறிக்கோள் என சொல்லும் நீங்கள், படத்தை திருட்டுத்தனமாக பார்க்கச் சொல்லுவது முரணாய் தோன்றுகிறது. இந்த பதிவிற்கு நிறைய பின்னூட்டங்கள் கிடைத்தாலும், நடுனிலையான பலரின் ஆதரவை நீங்கள் இழப்பீர்கள் என்றே தோன்றுகிறது.//

நாங்கள் திரையரங்கில் பார்க்க வேண்டுமானால் அனைவரும் பார்க்கும் அளவிற்கு விலை இருக்க வேண்டும்.. சும்மா ரெண்டு வருஷம், பிரம்மாண்டம் என பரபரப்பை காட்டி ஒரு குப்ப படத்த கொடுத்தா மக்கள் எப்படி அவ்வளவு காசு கொடுத்து பாப்பாங்க.. மக்கள் வயித்துல அவங்க புளிய கரைக்கும் போது அவங்க வயித்துல மக்கள் புளிய கரைக்க நினைக்கிறது தப்பில்ல
Quote
 
 
0 #111 Rajesh pillai 2010-10-10 13:35
அன்புள்ள சவுக்கு, தயவு செய்து 498ஏ ,
விவாகரத்து poi valaku partey sollavum.
Quote
 
 
0 #110 0xffffffffffffffffff 2010-10-09 22:01
You can see Enthiran on http://santhan.org
Quote
 
 
0 #109 thooyavan 2010-10-09 20:00
very nice keep it up. :zzz
Quote
 
 
+5 #108 Savukku Vasagar 2010-10-09 17:47
இந்த கொள்ளை கும்பலை நாட்டை விட்டே துரத்த வேண்டும்.அதற்கு முன் அவர்கள் சேர்த்த பணத்தை பறிமுதல் செய்து கோவணத்துடன் ஓட ஓட விரட்டனும்.ஐந்து தலை முறையாக தொழில் செய்யும் டாடாவும் பிர்லாவும் சம்பாதிக்காததை இவர்கள் தங்களின் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பத்தே ஆண்டுகளில் சம்பாதித்து இருக்கிறார்கள்.காசை வாங்கி கொண்டு ஓட்டை போடும் மடையர்களும் இவர்களுக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கிற கட்சிக்காரர்களு ம் உண்மையை உணர வேண்டும்.இவர்களுக்கு துணையாக நிற்கும் கூட்டணி கட்சி காரர்கள் கடும் தண்டனைக்குருயர் வர்களே.
Quote
 
 
0 #107 Pradeep_P 2010-10-09 15:28
எங்களுக்கு எப்பவும் dvd தான்.
Quote
 
 
+3 #106 rukku 2010-10-09 13:31
Quoting Shekar:
ஐயா: நீங்கள் அடுத்தவரைப் பற்றி எழுதும் அருகதையை கண்டிப்பாக இழந்துவிட்டீர்க ள். ஒருவன் தவறு செய்தால், அதை தட்டிக்கேட்க, நாமும் பதிலுக்கு மற்றொரு தவறை செய்வதும், மற்றவர்களை அந்த தவறை செய்வதற்க்கு அழைப்பதும், ஒரு தரம் கெட்டவனின் நினைப்பாகும். மற்றவர்களை 'எந்திரன்' பார்ர்க்காதீர்க ள், படத்தை ஒதுக்குங்கள் என்று கூறலாமே தவிர, அதை திருட்டு வி.சி.டியில் பாருங்கள் என்று கூறுவது எந்த விதத்திலும் நியாயமே கிடையாது. (திரு காந்தி மேல் உங்களுக்கு மதிப்பு இல்லையெனினும்) காந்தி அவர்கள் கூறியது போல் 'ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்று இவ்வுலகில் அனைவரும் நினைத்தால், இந்த உலகமே குருடர்களாகிவிட ும். அது மட்டுமில்லாமல், தாங்கள் மாற்றவர்களை மேலும் தவறு சேய்யவும் தூண்டுகிறீர்கள் . ..

நஞ்சை நஞ்சாலதான்யா அழிக்கணும், வைரத்தை வைரத்தால தான்யா வெட்டணும், நாய்க்கு நாய் மூலமாத்தான்யா கருக்கட்ட வைக்கணும்,

பேய்க்கு பேயத்தான்யா முடிச்சு வைக்கலாம், மயிலே மயிலே இறகு போடுவாயான்னு வாயைப்பொளந்து நின்னா திருக்குவளை தீயசக்திகளின்

கூட்டம் மயில முளுங்கியிடும்.
Quote
 
 
0 #105 கனி மொழி.கபடநிதி, 2010-10-09 13:16
சவுக்குக்கும் டமில் நாட்டு சாவுக்கிராக்கி சனங்களுக்கும் ஒரு எச்சரிக்கை
நீங்க எல்லோரும் எங்க குடும்பத்தின் மீது வெறுப்பேத்தி எங்களையும் எங்க கனவுச் சினிமாவான தந்திரனையும் புறக்கணித்தீர்க ளானால் பாரிய

விளைவை சந்திக்கவேண்டிவ ரும், தியேட்டர்களை நீங்கள் புறக்கணித்தால் உங்கள் பொழுது போக்குக்கு எங்கள் ரீவீ க்களைத்தான் நாடவேண்டிய

கட்டாயத்திலிருக ்கிறீர்கள் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள ்ளுகிறோம்,பழிதீ ர்க்கும் நடவடிக்கையாக முதலில் தீயசக்தியின்

கதைவசனத்தில் கேடீ பிரதர் தயாரிப்பில் அஞ்சாநெஞ்சனின் டைரக்க்ஷனில் திருட்டுப்பாதிர ி கனிமொழி இணைந்து நடிக்கும் ''தந்திரவிந்து''என்ற

படத்தை தயாரித்து தியேட்டர்களுக்க ு வினியோகிக்காமல் நேரடியாக சன், கலைஞர்,கேரிவி, மற்றும் எம் நண்பர்களின் ரிவி களான தங்கபாலுவின்

மேஹா ரீவீ பிரதர் ராமதாசுவின் மக்கள் ரீவீ மற்றும் எங்கள் கிளை ரிவீ எல்லாவற்றிலும் தந்திரவிந்து மற்றும் எந்திரன் இரண்டையும் மாறி மாறி

ஒளிபரப்பி எங்கள் பளியைத்தீர்த்து விடுவோம் என்பதை தெரியப்படுத்துக ிறோம்
Quote
 
 
0 #104 venky 2010-10-09 12:17
SAVUKKU THE GREAT.

SAVUKKU ROCKS.

THIRUKUVALAI THEEYASAKTHI OLIGAA.

THANK YOU SAVUKKU.AS PER YOUR ADVICE I WATCH IN ONLINEI DONT LIKE TO GIVE EVEN 1 PAIASA TO KEDI BROTHERS.

Venky,Dubai
Quote
 
 
0 #103 தமிழ் டைப்பிங் 2010-10-09 11:17
சவுக்கு தமிழில் தட்டச்சு செய்ய

http://thoppithoppi.blogspot.com/2010/10/widgets.html
Quote
 
 
0 #102 Easakimuthu 2010-10-09 11:01
வாழ்த்துக்கள்
இந்த மாதிரி தமிழ்நாடு ல இருக்குற எல்லாரும் அவனுகளுக்கு எதிரா திருப்பனும் அவனுக ல வேரடி அடிக்கணும் . இந்திய யா வாய் குடிசுவர் ஆகிடநிங்க
Quote
 
 
+1 #101 karthik.s 2010-10-09 10:58
My dear brothers namellam vivathichi sandapodra alavukku andha padam illa pa.. sariyaana mokkai... edho oru english pada copy may be "Robin williams - bicentinnnial man - 1999"
Quote
 
 
+2 #100 கனி மொழி.கபடநிதி, 2010-10-09 10:43
தெரியாமல்த்தான் கேக்கிறேன் எந்திரன் யாருக்காவது மனதைக்கவர்ந்து நல்ல படமா இருந்ததா, 30 வருடங்களுக்கு முன் வந்த ஏபி நாகரஜனின் கந்தன் கருணையைவிட எந்திரனில் என்ன பிரமாண்டம் நுணுக்கம் பண்ணியிருக்கிறா ர் சங்கர், கந்தன் கருணையில் இல்லாத பிருமாண்டமும் நட்சத்திர வலுவும் இமையத்தை கரைய வைக்கும் இசையின் இனிமையும் காட்சியமைப்பும் சிறப்பான நடிப்பும், எந்திரனால் கிட்ட வரமுடியுமா, ஒரு கொமடி கிராபிக் காட்டூன் லெவலுக்கு பேய்க்காட்டியிர ுக்கிறர் சங்கர் ஒரு பாட்டாவது பாட்டாவா இருக்கு, ரகுமான் செம்மொழி சீரழிவுக்கு போட்ட புரியாத மெட்டை தந்திரனிலும் புகுத்தி திருப்திப்பட்டி ருக்கிரார், சங்கரும் ரஹ்மானும் ஓய்வெடுக்க வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டனர்,
Quote
 
 
+1 #99 Kumar.T 2010-10-09 09:55
Quoting நந்தா:
மதிப்பிற்குரிய சவுக்கு,

உங்களது blog-ஐ தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால் நீங்கள் புது படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பதை நியயபடுவதை ஒத்துகொள்ள முடியவில்லை. உங்களது இந்த கட்டுரை மொத்தமாக சினிமா துறையின் நன்மைக்காக எழுதப்பட்டது என்றால், நீங்கள் படங்ககளை download செய்ய சொல்லி அனுப்பியது மட்டும் சரியான செயல் என்று எப்படி எடுத்துகொள்வது. நீங்கள் இந்த படத்தை தவிர மற்ற எல்லா படங்களையும் தியேட்டரில் மட்டுமே பார்பவரா? உறுதி செய்யவும்.


ஏற்கனவே "திருக்குவளை தீயசக்தி" மூலம் பல சலுகைகளை அனுபவித்து வரும் திரை உலகம் நியாயமான விலை வைத்தால் இந்த பிரச்சினைக்கு இடம் இல்லை, டிக்கெட் விலை 500,1000 என்றால் அது அவர்களின் பேராசையின் வெளிப்பாடு. இது ஒரு சுரண்டல் மற்றும் சமூக பிறச்சினையாக தான் பார்கவேண்டும். விலை வைப்பது அவர்கள் உரிமை என்றால் , அரிசி, மின் கட்டனா உயர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டு ம்???
இல்லை என்றால் நியாயமாக அரசிடம் பெற்ற சலுகையை திருப்பி செலுத்தி விட்டு இவர்கள் இஷ்டத்துக்கு விலை வைக்கட்டும்
Quote
 
 
+4 #98 thuva.k 2010-10-09 04:42
robot watch online @ :D http://www.novamov.com/video/g4z4jlf4v5vef
Quote
 
 
+3 #97 நல்லவன் 2010-10-09 00:54
அப்பாடா! நன்றி சவுக்குவின் அனானி. அஞ்சு பைசா செலவில்லாமல் ஒரு குப்பைப் படம் பார்த்தோம். தேவையில்லை என்றாலும் இலவசமாய் பார்த்த மகிழ்ச்சி.
Quote
 
 
-1 #96 நந்தா 2010-10-08 23:46
மதிப்பிற்குரிய சவுக்கு,

உங்களது blog-ஐ தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால் நீங்கள் புது படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பதை நியயபடுவதை ஒத்துகொள்ள முடியவில்லை. உங்களது இந்த கட்டுரை மொத்தமாக சினிமா துறையின் நன்மைக்காக எழுதப்பட்டது என்றால், நீங்கள் படங்ககளை download செய்ய சொல்லி அனுப்பியது மட்டும் சரியான செயல் என்று எப்படி எடுத்துகொள்வது. நீங்கள் இந்த படத்தை தவிர மற்ற எல்லா படங்களையும் தியேட்டரில் மட்டுமே பார்பவரா? உறுதி செய்யவும்.
Quote
 
 
-12 #95 Raj 2010-10-08 21:21
Shame on you. You don't even have guts to reveal your identity and you are bashing all B.S's on the powerful family. Even a person who is having few pennies more try to suppress the ones who are economically below him. How come these multi-millionaires won't do the same ? The marketing strategy for the movie was great. Whatever quality movie it is, 100 days or even 50 days is tough ask nowadays. So, they released in almost 75% of the theatres in TN and had grossed money (returns for their investment). If people did not like to watch, they should have stayed home. On top of it, I see lots of people are very grudging and swearing on rich people and powerful people. Is it "STOMACH FIRE" ? What a shameful attitude of Tamilians !!!
Quote
 
 
0 #94 kannan Sun TV - Tech 2010-10-08 20:59
Dear Savukku,

What ever u mentioned in this article is more than 100% correct. Because Still i am working in the Bad team.

With Sad,
Kannan - Technical Department - Sun TV
Quote
 
 
-3 #93 Kadaval 2010-10-08 20:33
Neenga ormba nermai yana vara? n
Quoting ஜெகதீஷ்:
நேர்மை ஒன்றே தங்களின் குறிக்கோள் என சொல்லும் நீங்கள், படத்தை திருட்டுத்தனமாக பார்க்கச் சொல்லுவது முரணாய் தோன்றுகிறது. இந்த பதிவிற்கு நிறைய பின்னூட்டங்கள் கிடைத்தாலும், நடுனிலையான பலரின் ஆதரவை நீங்கள் இழப்பீர்கள் என்றே தோன்றுகிறது.
Quote
 
 
+2 #92 Kadaval 2010-10-08 20:30
Nee enna loosea?
Quoting Sudhakar:
Rajini is the GOD of Tamil Cinema !!!
yaru vayirerinchalum edhuvum aha poradhu illa :roll:
Cinema itself a business. If anybody want to preach anything do with your own money :lol:

Dont delete the positive comments about our Thalaivar if you have guts. Everyone is an INDIAN CITIZEN first Tamil,Telugu,Hi ndhi,Malayalam ..... ellam next.

Tamil is an INDIAN language thats it.
Proud to be an INDIAN !!!
Quote
 
 
0 #91 Kadaval 2010-10-08 20:24
Very true
Quoting magdoum ali:
I SAW THE MOVIE ONLY IN THE NET BUT IN HINDI VERSION... VERY BAD MOVIE.. I THINK SHANKAR SHOULD TRY MAKE LOSES TO THESE KD BROTHERS BY SPENDING SOME LAVISH EXPENDITURE TO MAKE THEM LOSING MONEY. BUT PEOPLE R CRAZY THOUGH THE FILM IS FLOP THEY STILL WANTED TOSEE THEM.
MAGDOUM JEDDAH, SAUDI ARABIA.
Quote
 
 
+1 #90 Kadaval 2010-10-08 20:23
8) Rajnikanth he does not know, how to act all are graphics!. Please download from internet and watch the movie, don't go to theatres. Currently camera print is available. we are eagerly awaiting release of DVD print.
Quote
 
 
+5 #89 கனி மொழி.கபடநிதி, 2010-10-08 19:39
கடைசித்தகவலின்ப டி எந்திரன் என்னும் தந்திரன் சினிமாக்காரடின் பாஷையில் லண்டன் ஜெர்மனி ஆகிய இடங்களில் ஊத்திக்கொண்டு விட்டது ஐரோப்பவில் ஒவ்வொரு தியேட்டரிலும் ஐந்துபத்துப்பேர ்தான் மூணு நாள்களில் படம் திரும்பி சன் பிக்க்சர்ஸுடம் பவுத்திரமா வந்து சேரும் ,
Quote
 
 
0 #88 Raman 2010-10-08 19:06
Who is this NeethiDeven? Does he belongs to our caste Devar?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 109 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4421
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week62804
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month196762
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12718881