முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அதிகார மமதை ! தினமணி தலையங்கம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 12
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011 08:03

எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது நமது நாடாளும் முறைமை.

 

ஊழல் மிகப்பெரிய தடைக்கல் என்று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால்,  உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது. உதாரணத்துக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?

 

லோக்பால் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள நிலையில் அது  தொடர்பாகப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்கிற புதிய காரணங்களை  மத்திய அரசு சொல்கிறது. இதைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி, ""மகளிர் மசோதாவும்தான் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. அது தொடர்பான போராட்டம் நடத்தக்கூடாதா?'' என்று கேட்டுள்ள எதிர்வாதத்துக்கு இதுவரை பதில் இல்லை.

 

இந்த நாட்டின் விடுதலை, தெரு முழக்கங்களாலும், திடல்களில் நடந்த கூட்டங்களாலும், சிறைக் கூடங்களாலும், நொறுக்கப்பட்ட எலும்புகளின் ஓசையாலும், வாரக்கணக்கில் உண்ணாநோன்பு இருந்ததாலும்தான் பெறப்பட்டதே தவிர, எடுத்த எடுப்பில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து பெறப்பட்டதல்ல என்கிற இந்திய விடுதலை வரலாற்றை இவர்களுக்கு யாராவது பாடம் எடுத்தால் தேவலாம்.

 

பிரதமரே தனது விடுதலை நாள் பேருரையில் ஊழலை ஒப்புக்கொள்கிறார். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அதிகாரிகளின் சட்டைப்பைக்குப் போகிறது என்கிறார். அம்பலமாகியுள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார். வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.

 

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்யும்; நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு ரகளை நடக்கும். நாடெங்கும் ஆங்காங்கே அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள், ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தும் என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல. அவர்கள் தெரிந்தேதான் இதையெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள், அவ்வளவே.

 

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி எல்லோரும் கூச்சல் போட்டார்கள். ஊடகங்கள் அதைத் தவிர, வேறு எதையும் பேசவில்லை. ஆனால், இன்று என்ன ஆயிற்று? அந்த வழக்கு நீர்த்துக்கொண்டே வருகிறது. ஏர்செல் நிறுவனம் - தயாநிதி மாறன் விவகாரத்தை ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால், என்ன ஆயிற்று? மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே தள்ளிப்போடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும், எல்லாமும் மறக்கப்படும் என்று.

 

சாவந்த் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.2.2 லட்சத்தை அண்ணா ஹசாரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தினார் என்று பற்றவைத்த நெருப்பை ஊதிக் கொழுந்துவிட்டு எரியச் செய்தால், இவருக்கு யார் ஆதரவு? இந்தக் கூட்டத்தின் மொத்த பலம் என்ன? பார்த்துவிடுவோம் என்கிற ஒரே எண்ணம்தான் இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் காரணம். காங்கிரஸ் கட்சி நம்புகிறது. எல்லாமும் மாறும். எல்லாமும் மறக்கப்படும் என்று.

 

எதிர்க்கட்சிகளைப் பற்றி காங்கிரஸýக்கு ஒரு தனி மதிப்பீடு உள்ளது. ""எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாம் செய்யும் இதையேதான் அவர்கள் செய்வார்கள். அதை நாம் செய்தால் காந்தியப் போராட்டத்தை காங்கிரúஸ அடக்குவதா என்று விமர்சிப்பார்கள்,  அவ்வளவுதான்'' என்று காங்கிரஸ் தலைமை நம்புகிறது. இதில் மக்களின் மனவோட்டம் என்ன என்று சோதித்துப் பார்க்கிறது. அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எத்தனை போராட்டங்கள் நடைபெறப் போகின்றன, எவ்வளவுபேர் திரள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

 

அண்ணா ஹசாரே குழுவினரின் உள்நோக்கத்தை யாரும் சந்தேகிக்க இடமில்லை. அவர்களின் எண்ணத்தில் நேர்மை இருக்கிறது. சிந்தனையில் நல்லெண்ணம் இருக்கிறது. அதேநேரத்தில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும், நாடாளுமன்றமும் இருக்கும்போது, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று நடைமுறைக்கு ஒவ்வாத சில அம்சங்களை லோக்பால் சட்ட மசோதாவில் சேர்க்கச் சொல்லி அடம்பிடிப்பதில் நியாயம் இல்லைதான். அரசுத் தரப்பு கோருவதுபோல, பதவியில் இருக்கும் பிரதமரும், நீதித்துறையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதில் பல சிக்கல்களும், ஆபத்துகளும் இருக்கிறது என்பதும் உண்மை.

 

சில தவறுகளுக்கிடையிலும் அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.

 

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக்கொண்டே, ரகசியமாக லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்பவன்தான் இந்தியன் என்று காங்கிரஸ் முழுமனதாக நம்புகிறது. அதனால், மக்கள் அண்ணா ஹசாரேவுக்காக ஒன்று திரளமாட்டார்கள் என்று கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒன்றை மறந்துவிட்டது. இந்தியச் சுதந்திர வேள்வியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினர் மட்டுமே! அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது.  சரி, இன்றைய இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள்?

 

காங்கிரஸ் கருதுவதைப்போல - பொய்முகம் அணிந்தவர்களா? இல்லை, காந்தியவாதிகள் நினைப்பதைப்போல - முகத்திரை கிழிப்பவர்களா?

நன்றி தினமணி

 

Comments  

 
0 #26 Iyyavu 2011-08-20 19:55
சவுக்கு மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசினால் எப்படி இருக்கும்?
Quote
 
 
-2 #25 SATHIYAN 2011-08-19 09:15
Quoting father:
I belive Right Wing Middle Class and Its Media is behind this hungama is Anna Hazare can assure if he and his team have some authority they will not benifit from that. Courreption is in every socity all over the globe. No any law can prevent but a clean human socity can make the differnce. Why so called devine law (Sharia as 50% world population belive) could not prevent currption in its own sands. Finaly the curroption will be there untill end of the world



Podaa pikkalippayale....
Quote
 
 
0 #24 SATHIYAN 2011-08-19 08:19
[ஃஉஒடெ நமெ="வஎதம்புதிது"]ஈனிமலெ டமில் நாடுல எவனவது அன்னை சொனிஅ, வென்னை சொனிஅ, தியக திருவிழகுனு, ஓருகஎ குது விழகுனு சொல்லடும் அபுரம் இருகு..[/ஃஉஒடெ]

ore oru vilakku....thevidiya soniya-nnu venumna sollalaam..
Quote
 
 
0 #23 indian thatha 2011-08-18 23:50
olalai atirtu poraduvathu thavru enral antha thavrai meendum saivom indiavukkaga
Quote
 
 
+2 #22 http://koothadivedda 2011-08-18 23:48
""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவத ில்லை'' ஆனால் மைதானங்களில் உருவெடுக்கும் போராட்டங்கள்தான ் மிகப்பெரிய பேரரசுகளை கட்டுக்குள் கொண்டுவந்து தகுந்த சட்டங்களை இயற்றவைத்தது. எதுவும் ஆகாயத்திலிருந்த ு கொட்டி கிடைப்பதல்லவே, எத்தனை சைபர் என்று பெரித்த படிப்பாளிக்கும் புலப்படாத ஊழல் ஒரு சிலரால் குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்டி ருக்கிறது. பொருளாதாரம் அனைத்தும் அரசியல்வாதிக்ள் கையில் என்பது தெரிகிறது, தெரிந்தும் பிரதமரால் கட்டுப்படுத்த முடியாது என்றால் பதவியை ராஜினாமா செய்துகொள்ளுவது தர்மம். தப்பையும் தண்டிக்க மாட்டோம், அதற்கான மந்திரக்கோல் இல்லை என்று கூறும் இந்த பொருளாதார(மந்தை க்கு) ஏன் பிரதமர் என்ற வெட்டு வேத்து, http://koothadiveddai.blogspot.com/
Quote
 
 
0 #21 gunasekarn 2011-08-18 16:00
therthal varatum parthukkalam
Quote
 
 
-1 #20 father 2011-08-18 14:56
ந்[ஃஉஒடெ நமெ="ம்ட்ம்க்"]டொ ஷொந் யொஉர் சுப்பொர்ட் ஃபொர் ஆன்ன ஹழரெ அன்ட் ஜன்லொக்பல் பில்ல் – எம்ப்லொயேச் ஒஃப் வரிஒஉச் ஒர்கனிழடிஒன்ச் ஹவெ டெசிடெட் டொ நெஅர் ப்லச்க் ட்ரெச்ச் ஒன் 19த் ஆஉகுச்ட் அட் நொர்க். ப்லெஅசெ ச்ப்ரெஅட் தெ மெச்சகெ டொ யொஉர் சொல்லெஅகுஎச் அன்ட் நெஅர் ப்லச்க் ட்ரெச்ச் ஒன் 19த் ஆஉகுச்ட் ந்ஹென் யொஉ சொமெ டொ நொர்க். யொஉ மய் அல்சொ நெஅர் அ ப்லச்க் அர்ம் பன்ட் இஃப் யொஉ நிஷ். ஸ்ஹொந் யொஉர் சுப்பொர்ட் அகைன்ச்ட் சொர்ருப்டிஒன்.
திச் இச் தெ லெஅச்ட் யொஉ சன் டொ எவென் இஃப் யொஉ சன் ஜொஇன் தெ ப்ரொடெச்ட் பெசௌசெ ஒஃப் யொஉர் ஒஃப்ஃபிசெ நொர்க். ளெட் உச் மகெ இட் சுச்செச்ச்ஃபுல் .

தெ கொவெர்ன்மென்ட் ஹச் புட் சொன்டிடிஒன் டொ கெட் 25 ச்ரொரெ பெஒப்லெ டொ சுப்பொர்ட் ஜன்ளொக்பல். டொ கிவெ யொஉர் சுப்பொர்ட் ஜுச்ட் கிவெ மிச்செட் சல்ல் டொ 02261550789 (அச் கிவென் ப்ய் கிரன் பெடி) ஃப்ரொம் யொஉர் மொபிலெ நொ. யொஉர் சல்ல் நில்ல் டிச்சொன்னெச்ட் அஃப்டெர் 1 ரிங் அன்ட் யொஉர் நொ ரெகிச்டெரெட் ஔடொமடிசல்ல்ய். யொஉ நில்ல் கெட் அன் ஸ்ம்ஸ் சொன்ஃபிர்மிங் திச். டொ இட் அலொங் டொ அல்ல் யொஉர் ஃப்ரிஎன்ட்ச். ஃபொர்நர்ட் டொ அச் மன்ய் பெஒப்லெ அச் யொஉ க்னொந் .. வெர்பல்ல்ய், ப்ய் மைல்ச், ப்ய் மெச்சகெச். ஸுப்பொர்ட் ஆன்டிஸொர்ருப்டி ஒன் சம்பைக்ன் லெஅட் ப்ய் ஆன்ன ஹழரெ ...ஜை ஹின்ட்.[/ஃஉஒடெ]
நம்ம நாட்டு மக்கலின் அரியமை புரிந்துகொல்ல முடியவில்லை. யரவது குப்பாடு பொட்டல் நாமும் ஷெர்ந்து பொட வேன்டும். யான் யதர்க்கு
Quote
 
 
+1 #19 Kathir 2011-08-18 14:29
உங்கள் வாசகர்களை சென்னையில் நடக்கும் உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கு பெற சொல்லலாமே!
Quote
 
 
+1 #18 MDMK 2011-08-18 12:57
To show your support for Anna Hazare and Janlokpal Bill – employees of various organizations have decided to Wear Black Dress on 19th August at work. Please spread the message to your colleagues and wear black dress on 19th August when you come to work. You may also wear a black arm band if you wish. Show your support against Corruption.
This is the least you can do even if you can join the protest because of your office work. Let us make it successful.

The Government has put condition to get 25 crore people to support JanLokPal. To give your support just give missed call to 02261550789 (as given by Kiran Bedi) from your mobile no. Your Call will disconnect after 1 ring and your no registered automatically. You will get an SMS confirming this. Do it along to all your friends. Forward to as many people as you know .. verbally, by mails, by messages. Support Anti-corruption campaign lead by Anna Hazare ...Jai Hind.
Quote
 
 
+3 #17 Sara 2011-08-18 09:05
எலெக்சன் வரட்டும்...காங்க்ரசுக்கு ஆப்பு வப்போம்...
Quote
 
 
0 #16 Richard Maxtor 2011-08-18 02:01
[ஃஉஒடெ நமெ="ற். ஆர்விவழகன்"]இங்கே நிறைய பேர் ஊழலைப்பற்றி ரொம்ப புத்திசாலித்தனம ா எழுதி இருக்கிறார்கள். ஆனால் இந்த மூடர்களுக்கு ஒன்று புரிவதில்லை. இந்தியாவில் ஊழல் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. பத்திரிக்கை துறையில் ஊழல் (என்.டி.டி.வியின் பர்க்கா தத் 2 - ஜி ராஜாவுக்கு மந்திரி பதவி வாங்க அரும்பாடு பட்டவர். அவர் இன்னைக்கு ஊழல் பற்றி முழக்கமிடுகிறார ்), நீதித்துறையில் ஊழல் (இப்பதான் வெளிச்சத்துக்கு வருது. ஏன்னா அவங்க தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்ய கூடாது), சினிமா துறையில் ஊழல் (சில வருடம் முன் சினிமா நடிகைகள் பற்றி கட்டுரை வந்தது. குதி குதி என்று நடிகர்கள்/ நடிகைகள் குதித்தார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்த வனிதா சொன்னவுடன் கப் சிப்), மருத்துவத்துறைய ில் ஊழல், சாமியார்கள் ஊழல் ( நித்தியானந்தா) இப்படி இந்த நாடு ஊழலில்தான் திளைக்கிறது. சும்மா கூப்பாடு போட்டா போதுமா?

பொது மக்களிடம் அந்த உணர்வு இல்லை. உரிமைய பற்றி வாய் கிழிய பேசும் மக்கள் கடமையை பற்றி பேசுவது இல்லை. அப்புறம அரசியல் வாதிய சொல்லி என்ன பிரயோசனம்?[/ஃஉஒடெ]

bharka dutt idhukku oru blog/web page la explanation vera thandhaa!!!!

NDTV bongress benami

thiruthavae mudiyadhavai indraya soozhnilaigal, aana maatram vendumae, thalaiezhuthu, yaarai pin patrruvadhu? nichayama thaniee mandhanaal saadhippadhu ippodhaikku no chance!!!!
Quote
 
 
+4 #15 R. Arvivazhagan 2011-08-17 23:13
இங்கே நிறைய பேர் ஊழலைப்பற்றி ரொம்ப புத்திசாலித்தனம ா எழுதி இருக்கிறார்கள். ஆனால் இந்த மூடர்களுக்கு ஒன்று புரிவதில்லை. இந்தியாவில் ஊழல் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. பத்திரிக்கை துறையில் ஊழல் (என்.டி.டி.வியின் பர்க்கா தத் 2 - ஜி ராஜாவுக்கு மந்திரி பதவி வாங்க அரும்பாடு பட்டவர். அவர் இன்னைக்கு ஊழல் பற்றி முழக்கமிடுகிறார ்), நீதித்துறையில் ஊழல் (இப்பதான் வெளிச்சத்துக்கு வருது. ஏன்னா அவங்க தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்ய கூடாது), சினிமா துறையில் ஊழல் (சில வருடம் முன் சினிமா நடிகைகள் பற்றி கட்டுரை வந்தது. குதி குதி என்று நடிகர்கள்/ நடிகைகள் குதித்தார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்த வனிதா சொன்னவுடன் கப் சிப்), மருத்துவத்துறைய ில் ஊழல், சாமியார்கள் ஊழல் ( நித்தியானந்தா) இப்படி இந்த நாடு ஊழலில்தான் திளைக்கிறது. சும்மா கூப்பாடு போட்டா போதுமா?

பொது மக்களிடம் அந்த உணர்வு இல்லை. உரிமைய பற்றி வாய் கிழிய பேசும் மக்கள் கடமையை பற்றி பேசுவது இல்லை. அப்புறம அரசியல் வாதிய சொல்லி என்ன பிரயோசனம்?
Quote
 
 
+1 #14 Vaedhampudhidhu 2011-08-17 22:01
Inimale Tamil naatula evanavathu annai sonia, vennai sonia, thiyaga thiruvizhakunu, oorukae kuthu vizhakunu sollatum apuram iruku..
Quote
 
 
0 #13 Vaedhampudhidhu 2011-08-17 22:00
Enaku oru doubt sonia gandhi, rahul gandhi,menaka gandhi, etc.. ellarum nehru ku porandhavanga thaanae??? yaen katchi padhavi jaathi madham ellam vaenam nu sonna Gandhi yoda paera Surname a use panraanga? by birth engayoo mistake nadandhirukaa?
Quote
 
 
0 #12 RANA 2011-08-17 21:23
மறதி ஒரு தேசிய வியாதி
Quote
 
 
+4 #11 நெல்லைக்குமரன் 2011-08-17 20:29
மாநில பிரச்சினைகளுக்க ு நாம் தான் போராட வேண்டும். நம்மால் ஒரு வார்டு உறுப்பினரைக்கூட கேள்வி கேட்க முடியவில்லை. உங்களால், உங்கள் தொகுதி MLA அல்லது MP யை சந்திக்க இயலுமா ?

சென்னை, அடையாரில் , நமது தோழர்கள் ஐம்பது பேர் இரண்டு நாட்களாக உன்ன நிலை போராட்டம் இருக்கிறார்கள்.

முகவரி :
153, LB Road, Adyar Depo,
Near HDFC Bank.

ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளையவர்கள், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்கள் உள்ளனர். அனைவரும் வருக. மாற்றத்தினை உருவாக்குவோம்.
Quote
 
 
+17 #10 அலார்ட் ஆறுமுகம் 2011-08-17 14:37
நான் ஒரு பொம்மை...

எனக்கு கீழே திருட்டு கூட்டம்..

எங்களுக்கு எதிரா சட்டம் நானே கொண்டு வருவேனா.?

அட முட்டாள் மக்களே ... காத்திருங்கள்.. உங்களுக்கு இழவு காத்த கிளி கதை ஒன்னு சொல்றேன். ..

சொல்ல போவது யார்?
Quote
 
 
+16 #9 நெல்லைக்குமரன் 2011-08-17 14:25
சென்னை, அடையாரில் , நமது தோழர்கள் ஐம்பது (50) பேர் இரண்டு நாட்களாக உன்ன நிலை போராட்டம் இருக்கிறார்கள்.

முகவரி :
153, LB Road, Adyar Depo,
Near HDFC Bank.

ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளையவர்கள், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்கள் உள்ளனர். அனைவரும் வருக. மாற்றத்தினை உருவாக்குவோம்.
Quote
 
 
+13 #8 Bharathinesan 2011-08-17 13:38
அதிகார ஆட்டம் போட்ட கூட்டம் இப்ப அடங்கிக்கிடக்கு து. மத்தியிலே இன்னும் விஷயம் புரியலே- மக்கள் சக்திகேசன் சக்தின்னு. ஆடுகின்ற ஆட்டமெல்லாம் அடங்கும் காலம் வரும்.
Quote
 
 
-1 #7 Bharathinesan 2011-08-17 13:29
Quoting father:
I belive Right Wing Middle Class and Its Media is behind this hungama is Anna Hazare can assure if he and his team have some authority they will not benifit from that. Courreption is in every socity all over the globe. No any law can prevent but a clean human socity can make the differnce. Why so called devine law (Sharia as 50% world population belive) could not prevent currption in its own sands. Finaly the curroption will be there untill end of the world

STOP THIS NON-SENSE. YOU ARE A LACKEY AND YOU DO NOT KNOW WHAT FREEDDOM AND RIGHTS ARE. IF YOU DO NT HAVE THE BACKBONE, STAY AT HOME. NOTHING IS WON WITHOUT A STRUGGLE. IT DOES NOT MEAN THAT THERE WILL BE NO INJUSTICE. WE MUST STRUGGLE TO EVOLVE TO BE BETTER.IF YOU CAN NOT ACT, PLEASE STOP PREACHING FATHER.
Quote
 
 
-2 #6 father 2011-08-17 11:31
I belive Right Wing Middle Class and Its Media is behind this hungama is Anna Hazare can assure if he and his team have some authority they will not benifit from that. Courreption is in every socity all over the globe. No any law can prevent but a clean human socity can make the differnce. Why so called devine law (Sharia as 50% world population belive) could not prevent currption in its own sands. Finaly the curroption will be there untill end of the world
Quote
 
 
+6 #5 Then Paandi singam 2011-08-17 11:30
சபாஷ் தினமணி
Quote
 
 
+4 #4 V Subbiah 2011-08-17 10:17
It is a very good and balanced editorial. I am in complete agreement with the views expressed.
Quote
 
 
+12 #3 சைதை அஜீஸ் 2011-08-17 10:07
மறைந்த முன்னாள் பிரதமர் ராவால் அரசியலுக்கு அறிமுகமான இன்னாள் பிரதமர் சிங், தன்னுடைய குருவை அப்படியே பின்பற்றுகிறார் . ராவும் எந்த விஷயத்திலும் முடிவெடுப்பதை தவிர்த்துவந்தார ். பாபரி மசூதி இடிக்கப்பட்டபோத ும் அனைத்து அதிகாரம் பெற்ற பிரதமர் ராவ் எந்த முடிவும் எடுக்காமல், ஆரப்போட்டால் நம் மக்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்க ள் என்று கருதி வாழ்ந்து மறைந்தார். அதையே சிங்கும் தொடர்கிறார்.
எல்லாம் மாறும்....மறக்கப்படும்...
நிச்சயம் இவர்கள் நம் அடுத்த தலைமுறைக்கு தவறான முன்னுதாரணத்தை விட்டுச் செல்கின்றனர்.
நாம் இவர்களை அதிகாரத்தில் அமர்த்தியது, நாம் அனைத்தையும் மறந்து தானாக அனைத்தும் மாறும் என்பதற்காக அல்ல. மாறாக இவர்கள் "இயங்கி" அனைத்தையும் சாதிக்கவேண்டும் என்பதற்காகவே!
இவர்கள் "இயங்க" மறுத்தால் நாம் மத்தியில் ஆள்பவர்களுக்கும ், மாநிலத்தை ஆண்டவர்களுக்கு தந்த, அதே கசப்பு மருந்தை மிக விரைவில் தந்து ஓய்வு கொடுப்போம்.
மறக்கமாட்டோம்!
மாறுவோம்!!
பாடம் புகட்டுவோம்!!!
Quote
 
 
+7 #2 satheesh 2011-08-17 10:06
Mistakes which is made by each and every individual and we are now responsible to clear this mess. Even i pay bribe a couple of times to complete my job done in govt offices. Now I'm not doing that and trying to complete with out paying any bribe.. Please stop this and if not our future India will be a hell...
Quote
 
 
+13 #1 Ananaya 2011-08-17 10:02
சே என்ன கேவலமான் அரசியல் வாதிகள்.
இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 48 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1624
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week60789
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month273608
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795727