|
இதற்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு இதை நிறைவேற்ற வேண்டும்.
யார் இந்த நீதிபதி ? கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் சவுமித்ரா சென். இவர்தான் இன்று ராஜ்யசபையில் ஆஜராகி வாதாடியவர். என்ன குற்றச் சாட்டுகள் இவர் மீது ?

1983ம் ஆண்டு, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கும், ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கும் இடையே ஒரு வழக்கு. இந்த வழக்கில், ஆர்.என்.பைன் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, 1984ம் ஆண்டு, ஏப்ரல் 30 அன்று, அப்போது மூத்த வழக்கறிஞராக இருந்த சவுமித்ரா சென்னை ரிசீவராக நியமிக்கிறார். சென்னின் பணி, இரும்பு உருக்கு ஆலையில் இருந்த தள்ளுபடி செய்யப் பட்ட பொருட்களை, விற்பனை செய்து, அவற்றுக்குண்டான தொகையை வசூல் செய்து கணக்கு வைக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் தொகைக்கான கணக்கை ஒவ்வொரு 6 மாதத்துக்கும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த ஆணையில் விற்பனையாகும் மொத்த தொகையில் 5 சதவிகிதத்தை சவுமித்ரா சென் தனக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், மீதம் உள்ள தொகையை தனியாக ஒரு வங்கிக் கணக்கில் போட்டு வைக்க வேண்டும் என்றும், அந்த தனி வங்கிக் கணக்கில் இவருக்கு எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிடப் படுகிறது. 1 ஜனவரி 1993 முதல், 1 ஜுன் 1995 வரை சவுமித்ரா சென் 33,82,800 ரூபாய் வசூல் செய்கிறார். 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்.
இவ்வாறு வசூல் செய்த பணத்தை சவுமித்ரா சென் ஏஎன்இஸட் க்ரின்ட்லேஸ் வங்கியில் தன்னுடைய பெயரில் ஒரு அக்கவுன்டிலும், அலஹாபாத் வங்கியில் தன்னுடைய பெயரில் ஒரு வங்கியிலும் போட்டுக் கொள்கிறார்.
இந்நிலையில் 2003ல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுகிறார் சவுமித்ரா சென். உயர்நீதிமன்ற நீதிபதியான பின்னும், 1994ல் தான் நியமிக்கப் பட்ட ரிசீவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில், 1983ல் தொடரப்பட்ட வழக்கு என்னதான் ஆயிற்று என்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, மீண்டும் அந்த வழக்கை உயிர்ப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் எடுத்து வருகிறது.
அனைத்து ஆவணங்களையும் வரவழைத்து விசாரித்தால், சவுமித்ரா சென் 33 லட்ச ரூபாயையும், வரவு வைக்கவில்லை என்பதும், 6 மாதங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டிய கணக்குகளையும் சமர்ப்பிக்க வில்லை என்பதும் தெரிய வருகிறது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா தொடர்ந்த வழக்கில், நீதிபதியாக அமர்ந்திருந்த சவுமித்ரா சென்னுக்கு நேரடியாக, மொத்த விற்பனை தொகை எவ்வளவு, அதை எந்த வங்கியில் முதலீடு செய்திருக்கிறார் ஆகிய விபரங்களை சமர்ப்பிக்கச் சொல்லி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால், அந்த உத்தரவை வாங்கி காற்றில் பறக்க விட்டு விட்டு விடுகிறார் சென்.
இந்த உத்தரவை அமல்படுதத் முடியாத வண்ணம் ஏப்ரல் 2006 வரை இழுத்தடிக்கிறார் சென்.
எரிச்சலடைந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, 17.05.2006 அன்று, அன்றைய தேதி வரை வட்டியோடு சேர்த்து 52 லட்ச ரூபாயை சவுமித்ரா சென் கட்ட வேண்டும் என்று உத்தரவிடுகிறார். உத்தரவிட்டதோடு அல்லாமல், ஒரு நீதிபதியாக இருந்து கொண்டு, இப்படி வரைமுறை இல்லாமல் நடந்து கொண்ட சவுமித்ரா சென்னின் நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறார். இதையடுத்து சவுமித்ரா சென், 40 லட்ச ரூபாயை கட்டுகிறார். கட்டி விட்டு, தன் தாயார் மூலமாக, மீதம் உள்ள 12 லட்ச ரூபாயை கட்ட கால அவகாசம் கேட்கிறார்.
இதன் நடுவே, சவுமித்ரா சென்னின் மீதான புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் செல்கிறது. அவர் ‘சென்’னை அழைத்து, இந்தப் புகார்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சென் இந்தப் புகார்களுக்கு பதிலளிக்க எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்கிறார். கேட்டு விட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலேயே தன் தாயார் மூலமாக டிவிஷன் பென்ச் முன்பாக, தன் மீது கூறப்பட்ட கண்டனங்களை நீக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்கிறார். இவ்வாறு மேல் முறையீடு செய்கையில், சம்பந்தப் பட்ட ஷிப்பிங் கார்பரேஷன் மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து, இதை நீக்குவதற்கு உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்டு, அவ்வாறு இல்லை என்று அவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில், அந்த கண்டனங்கள் நீக்கப் படுகின்றன.

இதை எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சென்று, பாருங்கள் என் மீதான கண்டனங்கள் நீக்கப் பட்டு விட்டன என்று கூறுகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பட்நாயக், ஆர்.எஸ்.லோதா மற்றும் ஏ.பி.ஷா ஆகியோர் அடங்கிய ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, சவுமித்ரா சென் மீதான புகார்களை விசாரிக்கச் சொல்லுகிறார்.
அவர்கள் அந்தப் புகார்களை விசாரித்து உண்மை என்ற அறிக்கை அளிக்கின்றனர். அவர்கள் முன்பாக ஆஜரான சவுமித்ரா சென், இந்தப் புகார்களுக்கான உங்கள் பதில் என்ன என்று கேட்டால், நான்தான் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டேனே… இதில் என்ன தவறு இருக்கிறது என்று திருப்பிக் கேட்டார்.
இதன் நடுவே, கொல்கத்தா பேன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சவுமித்ரா சென் ரிசீவராக நியமிக்கப் பட்ட பொழுது மேலும் ஒரு 70 லட்ச ரூபாயை ஆட்டையைப் போட்ட விபரமும் தெரிய வந்தது. அப்போதைய தலைமை நீதிபதி, இவரை ராஜினாமா செய்யச் சொன்ன போது மறுத்த காரணத்தால், ராஜ்ய சபையில் 58 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு, இவர் மீதான பதவி நீக்க தீர்மானம் எழுப்பப் பட்டது. அதன் பின், நீதிபதிகள் மீதான விசாரணைச் சட்டத்தின் படி, ஒரு தலைமை நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுனர் அடங்கிய குழு சென் மீதான குற்றச் சாட்டுகளை மீண்டும் விசாரணை செய்தது. மீண்டும் விசாரணை செய்த இந்தக் குழு, சவுமித்ரா சென் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன என்று முடிவுக்கு வந்தது.
இதையடுத்தே இன்று ராஜ்யசபை முன்பு ஆஜராகி, சவுமித்ரா சென், தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். இதற்குப் பிறகு, ராஜ்யசபையில் வாக்கெடுப்பு நடந்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒன்றாகக் கூடி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், இந்த பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே, சவுமித்ரா சென் பதவி நீக்கம் செய்யப் படுவார். இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.
இதுதான் இன்றைய நிலைமை. அரசியல் அமைப்புச் சட்டம் நீதிபதிகளுக்கு அப்படி ஒரு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. நீதிபதிகள் நேர்மையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.
ஆனால், இன்றைய நிலைமை, அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்த காலத்தில் உள்ளது போலவா இருக்கிறது ? இன்று நீதித்துறையில் உள்ள ஊழல்கள் அதிகமாகி விட்டன என்பதை நீதிபதிகளே ஒப்புக் கொள்கிறார்களே….!!!
சவுமித்ரா சென் விஷயத்தில், வங்கி ஆவணம் மற்றும் மற்ற ஆதாரங்கள் தெளிவாக இருந்ததால் அவர் மீதான குற்றச் சாட்டுகளை இத்தனை கட்ட விசாரணையையும் தாண்டி எடுத்துச் செல்ல முடிந்தது. அதற்காக இன்று நாட்டில் உள்ள அத்தனை உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்ல முடியுமா ? எல்லா நீதிமன்றத்திலும் கருப்பு ஆடுகள் இருக்கின்றனவே….!!!
இந்த கருப்பு ஆடுகளை அடையாளம் காண்பதற்காகத் தானே லோக்பால் மசோதாவில் நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள் ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் கடமை, ஒவ்வொரு சட்டத்துக்கும் உண்ணா விரதம் இருந்தால் பாராளுமன்றம் எதற்கு இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் இன்று நீண்ட விளக்கத்தை பாராளுமன்றத்தில் அளித்தார். சட்டம் இயற்றும் கடமை உள்ள பாராளுமன்ற வாதிகளால் கடந்த 15 ஆண்டுகளாக மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்க முடியவில்லையே…. மற்ற சட்டங்கப் பற்றியும், மசோதாக்களைப் பற்றியும் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்துகிறார்களா ?
லோக்பால் மசோதாவைத் தவிர இந்த பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப் படுத்த இத்தனை மசோதாக்கள் இருக்கின்றனவே….
|
The National Food Security Bill, 2011
|
|
The Narcotic Drugs and Psychotropic Substances (Amendment) Bill, 2011
|
|
The Prevention of Money Laundering (Amendment) Bill, 2011
|
|
The Benami Transactions (Prohibition) Bill, 2011
|
|
The Constitution (Scheduled Tribes) Order (Amendment) Bill, 2011
|
|
The Indecent Representation of Women (Prohibition) Amendment Bill, 2011
|
|
The Agriculture Bio-Security Bill, 2011
|
|
The Nuclear Regulatory Authority Bill, 2011
|
|
The Biotechnology Regulatory Authority of India Bill, 2011
|
|
The Regional Centre for Biotechnology Bill, 2011
|
|
The Electronic Service Delivery Bill, 2011
|
|
The Warehousing Corporation (Amendment) Bill, 2011
|
|
The Companies (Amendment) Bill, 2011
|
|
The Wildlife (Protection) Amendment Bill, 2011
|
|
The Indian Stamp (Amendment) Bill, 2011
|
|
The National Commission for Human Resources for Health Bill, 2011
|
|
The Customs Law (Amendment and Validation) Bill, 2011
|
|
The Boarder Security Force (Amendment) Bill, 2011
|
|
The National Academic Depository (Amendment) Bill, 2011
|
|
The National Council for Higher Education and Research Bill, 2011
|
|
The Universities for Innovation Bill, 2011
|
|
The Press and Registration of Books and Publications Bill, 2010
|
|
The Inter State Migrant Workmen [Regulation of Employment & Conditions of Service] (Amendment) Bill, 2011
|
|
The Administrator’s General (Amendment) Bill, 2011
|
|
The Mines and Minerals (Development and Regulation) Bill, 2011
|
|
The Emigration Management Bill, 2011
|
|
The Damodar Valley Corporation (Amendment) Bill, 2011
|
|
The Passengers Security Bill, 2011
|
|
The Rajiv Gandhi National Institute of Youth Development Bill, 2011
|
|
The National Sports Development Bill, 2011
|
|
The Land Acquisition, Rehabilitation and Resettlement Bill, 2011
|
இந்த மசோதாக்களை நாங்கள் சொல்வது போலத்தான் உருவாக்க வேண்டும், நாங்கள் சொல்வதுதான் சட்டமாக வேண்டும் என்று யார் அடம் பிடிக்கிறார்கள்.. ?
காங்கிரஸ் அரசின் விருப்பப் படி, ஒரு வலுவில்லாத லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்து, அந்த மசோதா, ஏற்கனவே உள்ள துருப்பிடித்த லஞ்ச ஒழிப்புச் சட்டத்தைப் போல உருவாக்கி, ஸ்பெக்ட்ரம், காமல்வெல்த் விளையாட்டுக்கள் போல பல்வேறு ஊழல்களைப் புரிந்து அதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு வருமானம் 467 கோடி என்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்களே…

அது போல ஊழல் புரிய வேண்டும் என்பதற்காகத் தானே லோக்பால் மசோதாவை எதிர்கிறார்கள்…..

இதற்காகத் தானே வரவேண்டும் லோக்பால் ? |
Comments
http://in.lifestyle.yahoo.com/10-corrupt-indian-politicians-134933044.html
3 out of 10 members in the list belongs to Tamilnadu. Both Karunanidhi and Jayalalitha along with A Raja are in the list.
Maharastra and UP are tied in second and third positions with two members each.
Both the Yadavs along with Mayavathi decorate the list.
Yeddiyurappa is in the last position but hopefully he will improve his position in the future.
Karunanidhi is the oldest surviving corrupt politician in India
இனிமேலும் பல ராஜாக்களும், கனிமொழிகளும் உருவாகிவிடாமலிர ுக்கா அவசியம் வேண்டும் லோக்பால்.
ஏற்கனவே ஊழலை தடுக்க நிறைய அமைப்புகள் உள்ளன (சி.வி.சி, சிபி.ஐ, சி.ஏ.ஜி). இந்த சி.ஏ.ஜி கண்டு பிடித்ததுதான் 2 ஜி ஊழல், காமன் வெல்த் ஊழல் எல்லாம். லோக் பால் என்பதும் இன்னொரு அமைப்புதான். ஏற்கனவே சி.வி.சி, சி.ஏ.ஜி, சி.பி.ஐ எல்லாம் நியமிக்கும் முறை கிட்ட தட்ட லோக் பால் மாதிரிதான். அன்னா ஹசாரே ஜன் லோக் பால் வேண்டும், அதில் உள்ளவர்களை பிரதமரே நினைத்தால் கூட நீக்க முடியாது. குறைகள் இருந்தாலும், பாராளு மன்றத்தில்தான் மக்களின் கருத்து முழுமையாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் எண்ணங்கள் பிரதி பலிக்கின்றன.
நாளைக்கு அன்னா ஹசாரே சொல்லுவது போல், ஒரு லோக் பால் போட்டு, அது பார்லிமென்டால் கூட நீக்க முடிய வில்லை என்றால் யார் நீக்குவது?
சவுக்குக்கு ஜாபர் சேட் ரொம்பவே அனுபவம். சவுக்கு பாணியில் கேட்கிறேன். நாளைக்கு ஜாபர் சேட் மாதிரி ஆள் அங்க(லோக் பால்) வந்து சேர்ந்தால், பார்லிமென்டால் கூட எடுக்க முடியலனா, என்ன நடக்கும்? யோசிக்கணும். அரசியல் வாதி தப்பு பண்ணா 5 வருடத்தில் தூக்கலாம். இங்க அப்படி இல்லை
ஊழல் பற்றி மக்கள் எரிச்சல் ஆவது நியாயமனது. இப்ப தமிழ் நாடு சிபிசிஐடி சரியில்லை என்று வேறு ஒரு அமைப்பு தொடங்கினால் என்ன ஆகும்? அதும் கொஞ்ச நாளில் ஊழல் வழி போகும். லோக் பால் அமைப்புக்கும் வரும் மனிதர்கள், நம் சமுதாயத்தில் இருந்து வருபவர்கள். வேற்று கிரகத்தில் இருந்து இல்லை.
தீர்வு. நீதித்துறையில் சீர் திருத்தம் வேண்டும். அரசியல் வாதிகளின் ஊழல் வழக்குகளுக்கு சிறப்பு கோர்ட் கொண்டு வரட்டும். 2 வருடத்தில் முடிக்க சட்டம் கொண்டு வரட்டும். இந்தியாவை கெடுத்து கொண்டிருப்பது நீதித்துறைதான். தீர்ப்புகள் வர 20 வருடம் கூட ஆவதால் மக்கள் நம்பிக்கக் இழக்கிறார்கள். அதில் சீர் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
லோக் பால் ஒரு மந்திரமும் செய்யாது.
சவுக்குக்கு ஒரு வேண்டுகோள்: முதலில் உங்கள் கட்டுரைகள் நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் இருந்தது. வர வர ரொம்ப மோசம். கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுதுங்கள். இன்னும் உங்கள் மீது நம்பிக்க வைத்து உள்ளேன்.
Here is a youtube video:
http://www.youtube.com/watch?v=RR6fmPWnUDE&feature=related
the guys is awesome, we need people like anna, kejriwal and needless to say, our own savukku Sankar.
http://idlyvadai.blogspot.com/2011/08/blog-post_18.html
Savukku, which is true?
Selection of members and Chairperson of Lokpal and Lokayukta:
a) The ten members and the chairperson of Lokpal are appointed by a Selection Committee that comprises of the Prime Minister, Leader of the opposition in Lok Sabha, two youngest judges of Supreme Court (SC), two youngest Chief Justices of High Courts, Comptroller and Auditor General (CAG), Chief Election Commissioner (CEC) and the immediately outgoing members of Lokpal.
b) The Selection Committee makes the above appointment from a pool of shortlisted candidates that has been identified by a “Search Committee”.
c) The “Search Committee” is a 10--‐member committee formed as follows. First, the Selection Committee selects five members from ex--‐CECs and ex--‐CAGs who have unimpeachable integrity, no connection with government or political parties. These five members then select another five members from the civil society. This completes the 10--‐member
SearchCommittee .
d) The Search Committee will choose from the people of India, three times the number of vacancies to be filled for the position of Lokpal member and chairperson. Such selection will be based on strict criteria to filter out people with any doubtful integrity or connections with any government body or political party. This list is then forwarded to the Selection Committee which then makes the selection from this pool.
e) After the selection, the names are forwarded to the President of India, who will then immediately appoint the recommended Lokpal members. f) The entire process of selection of Lokpal is publicly transparent via website. All the meetings of the Search Committee and Selection Committee shall be video recorded that will be made public.
http://www.youtube.com/watch?v=nSYLuGd44uk
1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான ் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதா ன் இவர்கள் பணி.
2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது .இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.
3.கால் வெயிட்டிங்கிற்க ுப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்
பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.
4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.
5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்
இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்ட ு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம ் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.
இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள் . அந்நிகழ்ச்சியின ் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக ்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள ் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா ? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதா ன்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும் . ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார ்கள்.
எ
எ௯செல்லென்ட்[/ஃஉஒடெ]
கண்டிப்பாக தமிழன் ஆட்சி நடைபெறும், வந்தேறி தெலுங்கு கூட்டத்தை சீக்கிர்மே விரட்டுவோம்.
சவுக்கு சொல்லுங்கலேன் எப்போ இன்னு ?
கேளிர் இன்னா உறவினர்கள். இவங்க சொல்ற கேளீர் - கேளுங்கள்.....
எவனால எல்லாம் தமிழ் பிழைச்சுது இன்னு சொல்ற் நாய்களை எல்லாம் செருப்பால அடிக்கணும்.
but WE Indians looted double as double ... with in 65 years.. looks like British are way better. only thing was we were not independent....
Salute to British, even British did not kill Mr.M.K.Gandhi, we Indians killed him. I Really Shame to be an Indian.
அரசியலுக்கு வந்து நெறைய ஆட்டய போடலாம்னு நினைச்சா வுட மாட்டிகியேயா
இது உனக்கே அடுக்குமா
ARE WE GOING TO GIVE OUR CHILDRENS
A CORRRUPT SOCIETY TO LIVE WITH
KINDLY VIEW THIS
http://www.youtube.com/watch?v=giAqjxvyRLw
please come to 153 SURENDRA DEVELOPERS,
LB ROAD, ADAYAR, NEAR HDFC ROAD AND SUPPORT ANNA HAZARAE CAUSE
ஏன்? ஏன்?? ஏன்???
சரி, அரசு கொணர்ந்துள்ள லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (ணொன் கொவெர்ன்மென்ட் ஓர்கனிசடிஒன்ச்) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன. ஆனால், அவற்றை அண்ணா ஹஜாரேயின் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத்தொண்ட ு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்?
மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல் மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானது கூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள து. மிக அண்மையில் இந்த டிரஸ்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக ் கண்டுபிடிக்கப்ப ட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?
தன்னார்வத்தொண்ட ு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்த ு நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிரு ந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (அதொச்) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர ். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.
இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அண்ணா சொல்வது ஏன்?
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்து மில்லை. ஆனால், அதை ஒழிக்க அண்ணா ஹஜாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!
ஏப்ரல் மாதம் தொடங்கி, இன்று வரையில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தேடுவதில் செலவழித்த நேரத்தில், ஒருவராவது ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிர ுப்பார்களா? இம்முறை உண்ணாவிரதம் முடிந்ததும், அடுத்த உண்ணாவிரதம் வரைக்கும் கைகளைக் கட்டிக்கொண்டு, "அண்ணா என்ன சொல்கிறார் பார்ப்போம்?" என்று காத்திருக்கப் போகிறார்களா?
சென்னை, அடையாரில் , நமது தோழர்கள் 300 பேர் இரண்டு நாட்களாக உன்ன நிலை போராட்டம் இருக்கிறார்கள்.
முகவரி :
153, LB Road, Adyar Depo,
Near HDFC Bank.
ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளையவர்கள், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்கள் உள்ளனர். அனைவரும் வருக. மாற்றத்தினை உருவாக்குவோம்.
Most of the Indians are angry with the corrupt system but they were not able to do anything against corruption. When somebody like Anna Hazare took up this issue, they were ready to join the fight. This is the most opportune time. If we do not utilise this opportunity, then we may not get any chance at all in the future to fight corruption, So, let us all unite and back Anna Hazare to the hilt though some of his views do not appear to be completely acceptable. No body is perfect in this world. Anna Hazare is the best bet now. Long live Anna Hazare. India Zindabad.
எ
excellent
http://www.youtube.com/watch?v=nSYLuGd44uk
Sonia son-in-law behind 2G and CWG scam
"யாதும் ஊரே , யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனார் எழுதிய கவிதையில் இருந்து அதன் அர்த்தத்தை கொஞ்சமும் அறியாமல் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று ஓர் ஊளறல் கவிதையை செம்மொழி மா நாட்டுக்கு எழுதிய தமிழ் அறியாக் கவியை , நல்ல இலக்கண சுத்தமாக உள்ள ஒரு கவிதையை எழுதச் சொன்னால் எப்படி முடியும்? இது போலத்தான் காங்கிரஸ் அரசியல்வாதிகளை உத்தமர் ஆகுங்கள் என்று கேட்டுக்கொள்வது ம், ஜன் லோக் பால் சட்டத்தை ஆதரியுங்கள் என்று வேண்டுவதும்!
Ewlo paavam panina cancer varama sugar cane a varum...
RSS feed for comments to this post