|
நீங்க அமேரிக்காவுல பொருளாதாரம் படிச்சவரு. நாலு அஞ்சு டாக்டர் பட்டமெல்லாம் வாங்குனவரு. நெறய்ய படிச்சவருன்னு என் மவன் சொல்றான். ஆனா இவ்ளோ படிச்சுட்டு நாட்ட குட்டிச்சொவரு பண்ணதே நீங்கதான்னு சொல்றாங்கய்யா. நாங்கள்ளாம் படிக்காதவங்க. பூமிய தெய்வமா நெனைக்கறவங்க. சூதுவாதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அடுத்தவங்களுக்கு துரோகம் நெனைக்க மாட்டோம். துரோகம் பண்ணவங்கள மன்னிக்கவும் மாட்டோம்.
ஆனா நீங்க துரோகம் பண்ணவங்களோடவே சேந்து இருக்கீங்கன்னு என் மவன் சொல்றான் அய்யா. இந்திரா அம்மா செத்தப்போ டெல்லில உங்கள மாதிரி தலப்பா கட்னவங்க எல்லாத்தையும், அவங்க பொண்டாட்டி கொழந்தைங்க எல்லாத்தையும், ஆடு மாடு மாதிரி வெட்டிக் கொன்னாங்களாமே… குழந்தைங்களையெல்லாம் தீய வெச்சு எரிச்சாங்களாமே…. அதுக்கு காரணமே காங்கிரஸ் கட்சிக் காரங்கத்தானாமே… அதே காங்கிரஸ் கட்சியில 1991ல ஒங்களுக்கு பதவி கொடுத்தப்போ வெக்கமே இல்லாம ஏத்துக்கிட்டீங்களாமே..? எங்களுக்கெல்லாம் மானம்தான்யா பெருசு.. மீதி எல்லாமே அப்புறம் தான். இப்புடி சொந்தக் காரங்களை கொன்னவங்க கூட உயிரே போனாலும் கூட்டணியெல்லாம் வைக்கவே மாட்டோம்யா. ஆனா அமெரிக்காவுல போயி படிச்சுட்டு, எப்படி மான ரோசத்தையெல்லாம் அத்துப் போட்டுட்டு இருக்கீங்களோ தெரியலையே அய்யா…

இந்தியா இன்னைக்கு நாசமாக போனதுக்கு காரணமே நீங்கதான்னு சொல்றான்யா என் மவன். 91ல நீங்க நிதி அமைச்சரா வந்த பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியவுக்குள்ள வந்துச்சுன்னு சொல்றான் அய்யா. கிழக்கு இந்தியா கம்பேனின்ற ஒரு வெளிநாட்டு உள்ள வந்துதானேய்யா நம்ப நாட்டையே அடிமையாக்குச்சு ? அப்புடி இருக்கும் போது வெளிநாட்டு நிறுவனங்கள தாறுமாறா இந்தியாவுக்குள்ள வந்ததுனால நமக்கு ஆபத்து வராதா அய்யா ? இன்னைக்கு எங்க ஊருல கூட வெளிநாட்டு டிவியெல்லாம் தெரியுது. எங்க ஊருலேயே பல பேரு வெளிநாட்டு காரெல்லாம் வெச்சுருக்காங்க. கம்ப்யூட்டரெல்லாம் வந்துருச்சு. எங்க ஊருல எல்லாரும் கலர் கலரா செல் போனெல்லாம் வெச்சுருக்காங்க. ஆனா நெல்லுக்கு போதுமான வெல கெடைக்க மாட்டேங்குதேய்யா ? இன்னும் நம்ப நாட்டுல சோத்துக்கு இல்லாதவங்க கோடிக்கணக்குல இருக்காங்களாமே… சோத்துக்கு இல்லாதவங்க இத்தனை பேரு இருக்கும் போது, வெளிநாட்டுக் காரும், செல் போனும் என்னத்துக்குய்யா ? எங்க ஊருல பெரிய பெரிய கவிஞருங்க, மகானெல்லாம், பசிச்சவனுக்கு சோறு போடணும்னுதான் சொல்லிருக்காங்க. எங்க ஊரு கவிஞர் பாரதி, ஒரு ஆளுக்கு சோறு இல்லன்னா ஒலகத்தையே அழிக்கலாம்னு சொல்லிருக்காரு. இதெல்லாம் கிராமத்துல இருக்கற படிக்காத தற்குறியான எனக்கே தெரியும் போது, வெளிநாட்டுல படிச்சுட்டு டாக்டர் பட்டம் வாங்குன ஒங்களுக்கு எப்புடி அய்யா தெரியாம போச்சு ?
உங்களோட செல்போனும், வெளிநாட்டு காரும், மஹாராஷ்ட்ராவுல தற்கொலை பண்ணிக்கிட்ட 10 ஆயிரம் விவசாயிங்கள காப்பாத்தலேயே அய்யா ?
இந்தியாவுல ஊழலை எப்படி உரம் போட்டு வளக்கறதுன்னு நீங்கதான் திட்டம் போட்டு செயல்படுத்தினீங்கன்னு என் மவன் சொல்றான் அய்யா. 100 நாள் வேலைத் திட்டம்னு ஒன்னு கொண்டு வந்தீங்களே…. அத நீங்க என்னன்னு நெனச்சு கொண்டு வந்தீங்கன்னு தெரியாது. ஆனா, அது கிராமத்துல பெரிய பிரச்சினைய உண்டு பண்ணிடுச்சு அய்யா. எங்க நெலத்துல வெதைக்கவும், அறுக்கவும், களையெடுக்கவும், மருந்து தெளிக்கவும், கூலிக்கு வந்துகிட்டு இருந்த ஆளுங்கல்லாம் இப்போ வர்றது இல்ல. ஏன்னா, வயலுக்கு வந்தா வேலை செய்யணும். ஆனா 100 நாள் வேலை திட்டத்துல வேலை யாருமே செய்யறது இல்ல. ஆளை வெச்சு வேலை செய்யணும்னு திட்டம் போட்டீங்க. ஆனா, எல்லாரும் போயி மரத்துக்கு கீழே படுத்து தூங்கிட்டு சாயங்காலம் அந்த ஆபீசருங்களுக்கு ஒரு பங்கு குடுத்துட்டு, பணத்த வாங்கிட்டு வந்துடுறாங்க. அதிகாரிங்களும் அவங்க பங்க வாங்கிட்டு, மெஷின வெச்சு வேலையை முடிச்சுட்றாங்க. ஒங்களோட இந்த 100 நாள் வேலை திட்டம், கிராமப் பொருளாதாரத்தோட மென்னிய ஒடச்சுடுச்சு தெரியுமா ?
அப்புறம் ஒங்கள உங்க கட்சிக்காரங்க எல்லாம் நேர்மையான மனிதர்னு சொல்றாங்களாம். அத என் மவன் ஒத்துக்கவே மாட்டேங்குறான். ஏண்டான்னு கேட்டேன். 2004ல ஒங்க கட்சி ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து தான் ஊழல் பெரிய அளவுல நடந்ததுன்னு சொல்றான். உங்க கூட்டணி கட்சியா இருக்கற திமுக 2004லேர்ந்து அடிச்ச கொள்ளை இந்தியாவுல யாருமே அடிச்சுருக்க முடியாதுன்னு சொல்றான். நானும் கேள்விப் பட்டேன் அய்யா. திமுக மந்திரிங்கள சகட்டு மேனிக்கு கொள்ளையடிக்க விட்டீங்களாமே.. டிஆர்.பாலு, ராசா, தயாநிதி மாறன் அப்டின்னு ஒரு பெரிய கூட்டமே சேந்து கொள்ளையடிக்க நீங்க உதவி பண்ணது உண்மை தானே அய்யா ? அப்புறம் என்ன நீங்க நேர்மையானவரு ? அந்த ஊழலெல்லாம் உங்களுக்கு தெரியாம நடந்துருக்கும்ணு என் மவன் கிட்ட சொன்னேன். அவன் சொல்றான். உளவுத்துறை ஒங்க கையில இருக்கதுனால, ஒங்களுக்கு தெரியாம ஒன்னுமே நடக்காதாமே… அப்பிடி இருக்கும் போது இத்தனை பேத்த இவ்ளோ கொள்ளையடிக்க விட்டுட்டு வேடிக்கை பாத்த நீங்கதானே அய்யா முதல் குற்றவாளி ? திமுக அமைச்சருங்க மட்டும் இல்லாம, ஒங்க கூட்டணியில இருக்கற சரத் பவார் கொள்ளையடிக்கறத இன்னைக்கு வரைக்கும் வேடிக்கை பாத்துகிட்டு தானே இருக்கீங்க.. ?

அதக்கூட விடுங்க அய்யா. 2008ல ஒங்களுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி, ஆதரவ வாபஸ் வாங்கிட்டாங்க. ஒங்க ஆட்சிய காப்பாத்தறதுக்காக எத்தனை எம்பி.க்கள விலைக்கு வாங்கினீங்க ? இது நேர்மையான ஆளு செய்யற காரியமா அய்யா ? கம்யூனிஸ்ட் கட்சிங்க, திமுக மாதிரி, ஸ்பெக்ட்ரத்துல பணம் குடுக்கலன்னா வாபஸ் வாங்குனாங்க ? அமெரிக்காவோட நீங்க போட்ட ஒப்பந்தம் சரியில்லன்னுதானே வாபஸ் வாங்குனாங்க ? இந்த மாதிரி ஒரு ஒப்பந்தம் போட்டா, இந்தியாவுக்கு ஆபத்துன்னு அவங்க சொன்னது என்ன அய்யா தப்பு ? ஒங்களுக்கு மட்டும்தான் இந்தியா மேல அக்கறையா ? அவங்களுக்கு இல்லையா ? அவங்க ஆதரவ வாபஸ் வாங்குனதும் ஒங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது ? அமெரிக்காவ யாராவது தப்பா சொன்னா ஒங்களுக்கு அவ்வளவு கோபம் வருதே… நீங்க இந்தியாவச் சேர்ந்தவரா … இல்ல அமெரிக்காவச் சேந்தவரா ? நாங்க குடுக்கற வரிப்பணத்துல தானேய்யா நீங்க வாழறீங்க..
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழல் நடந்துச்சுன்னு மக்களுக்கு தெரிஞ்சு கொதிச்சுப் போயி, எப்ப நடவடிக்கை எடுப்பாங்கன்னு ஏங்கிகிட்டு இருந்தப்போ, ஊழலே நடக்கலன்னுதானே உங்க கட்சிக் காரங்க பேசுனாங்க ? ராசா என்னுடைய மதிப்பு மிக்க அமைச்சரவை சகான்னுதானே நீங்க அவரப் பத்தி சொன்னீங்க ? இன்னைக்கு கோர்ட்டுல ராசா, எல்லாமே பிரதமருக்கு தெரிஞ்சுதான் நடந்துச்சுன்னு சொல்றாரு.. ஆனா நீங்க எதுவுமே தெரியாத மாதிரி உக்காந்துகிட்டு இருக்கீங்களே அய்யா ? உங்க கட்சி ஆட்சியில இல்லாம, வேற கட்சி ஆட்சியில இருந்துருந்தா, உங்கள சிபிஐ சும்மா விட்டுருக்குமா ? சிபிஐ உங்க கட்டுப்பாட்டுல இருக்குதுன்னு தானே இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க ?

அந்தப் பெரியவரு அன்னா ஹசாரே என்னய்யா அப்புடி தப்பா கேக்கறாரு ? இந்தியாவுல இவ்வளோ ஊழல் பெருகிப் போச்சே… இத சரிப் பண்றதுக்கு ஒரு சட்டம் கொண்டு வாங்கன்னு கேக்கறது அவ்வளவு தப்பா ? அவரு ஜனவரி மாசத்துலேர்ந்து கேட்டுக்கிட்டுதானே இருக்கறாரு ? நீங்கதானே அவருகிட்ட போயி பேசுனீங்க ? சரி வாங்க பழகலாம்னு நீங்கதானேய்யா கூப்டீங்க ?
அவர கூப்புட்டு உக்கார வச்சு பேசிட்டு, அதுக்கப்புறம் அவரு சொல்றத எதயுமே கேக்காம உங்க இஷ்டத்துக்கு ஒரு சட்டத்த கொண்டு வந்தீங்க. இதையெல்லாம் மக்கள் பாத்துக்கிட்டு தானேய்யா இருந்தாங்க. அவங்களுக்கு நீங்க நடத்துற நாடகம் ஒன்னுமே தெரியாதுன்னா நெனச்சுகிட்டு இருக்கீங்க ?
மக்களோட சக்திய ரொம்ப கொறச்சு மதிப்பிட்டுட்டீங்க அய்யா நீங்க. உங்ககிட்ட இருக்கற அரசியல் அதிகாரத்த பயன்படுத்தி அன்னா ஹசாரேவ ஏதாவது ஒரு குற்றச் சாட்டுக்கு ஆளாக்கி இந்தப் பிரச்சினையை முடிச்சுடலாம்னு நீங்க போட்ட திட்டம் இன்னைக்கு உங்களை பெரிய சிக்கல்ல இழுத்து விட்டுருச்சு.
அந்தப் பெரியவரப் பத்தி என்னல்லாம் தப்பா பேசுனாங்க உங்க கட்சிக் காரங்க ? அவுரே ஊழல் பண்ணிருக்காரு. 2 லட்ச ரூபாயை பிறந்த நாளுக்காக செலவு பண்ணாருன்னாங்க. உங்க கட்சிக் காரங்க மாதிரி கோடிக்கணக்கான ரூபாயவா ஆட்டையப் போட்டுட்டாரு அந்தப் பெரியவரு ? இவ்ளோ ஊழல் பண்ண ஆளுங்களையெல்லாம் உங்க மந்திரி சபையில வச்சுக்கிட்டு, 2 லட்ச ரூபாய் ஊழல்னு நீங்க பேசுனா அதக் கேக்கறதுக்கு மக்கள் என்ன அவ்வளோ முட்டாள்களா ?

அந்தப் பெரியவருக்கு உங்கள மாதிரி அரசியல்வாதிகளப் பத்தி நல்லாவே தெரியுது அய்யா. அதனாலதான் உங்கள நம்பாம அவரு மக்கள நம்பி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொன்னாரு. எவ்வளவு நாள் முன்னாடியே, அவர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாரு ? உண்ணாவிரதத்துக்கு வெறும் 5 ஆயிரம் பேர்தான் வரணும்னு சொல்றது உங்களுக்கே நியாயமா இருக்கா ? உங்க தலைவி சோனியா காந்தி பேசுற கூட்டத்துக்கு வெறும் 5 ஆயிரம் பேர்தான் வரணும்னு போலீஸ் உத்தரவு போட்டா ஒத்துக்குவீங்களா ? உங்கள பெரிய மனுஷன்னு நெனச்சு, டெல்லி போலீஸ் போட்ட நிபந்தனைய உங்ககிட்ட தானே சொன்னார் அந்தப் பெரியவர். உங்களுக்கு லெட்டர் குடுத்தா, போயி டெல்லி போலீசுக்கிட்ட கேளுன்னு பதில் எழுதுனது உங்க திமிர்தானே ? அப்புறம் தடைய மீறி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொன்னதும், உங்க போலீசை விட்டு அவர உடனே கைது பண்ணீங்களே… அது நியாயமா அய்யா ? உத்தரப்பிரதேச மாநிலத்துல உங்க தலைவியோட மகன் போனப்போ, தடை உத்தரவு தானே இருந்துச்சு ? அவரு தடைய மீறலயா ? ஆனா, அன்னா ஹசாரேவ மட்டும் வீட்லேர்ந்தே கைது பண்ணீங்களே…. அது எந்த விதத்துல அய்யா நியாயம் ? அவரை கைது பண்ண அன்னைக்கு, எங்க ஊரு அமைச்சர், டெல்லியில பத்திரிக்கைகாரங்களெயெல்லாம் கூப்புட்டு, உங்க கவர்மென்டுக்கும் அன்னா ஹசாரே கைதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ரெண்டு மணி நேரம் பேசுனாரு. அன்னைக்கு சாய்ங்காலமே, நீங்க எல்லாம் கூடி பேசிட்டு, அவரை விடுதலை பண்றேன்னு சொன்னது நீங்க அந்தப் பெரியவரப் பாத்து பயந்தீங்கன்றதத் தானே காட்டுது ? இப்புடி பயப்படற ஆளு எதுக்கு அவர கைது பண்ணணும் ? அந்தப் பெரியவர் ஜெயில விட்டு வெளிய வர மாட்டேன்னு சொன்னதும், ஒன்னுமே பண்ண முடியாம, அவரு காலுல விழுந்து கெஞ்சுறீங்களே…. இப்பிடி ஒரு பொழைப்பு ஒங்களுக்கு தேவையா அய்யா ?
மக்களோட மனநிலைய ரொம்ப தப்பா புரிஞ்சு வெச்சுருக்கீங்க அய்யா. இன்னைக்கு மக்களுக்க உங்க கட்சி மேல மட்டும் இல்லாம, எல்லா கட்சிங்க மேலயும், இந்த ஊழல் காரணமா கடுமையான கோபம் இருக்கு. இன்னைக்கு அந்தப் பெரியவருக்கு ஆதரவா வீதியில வந்து நிக்கறதுல பெரும்பாலும் கட்சிய சேந்தவங்க கிடையாது. எல்லாரும் படிச்சவங்க. நடுத்தர வர்க்கத்த சேந்தவங்க. அவங்க எல்லாருக்கும் இந்த லஞ்சத்த ஏதாவது பண்ணணும்னு ஒரு ஆதங்கம் இருக்கு. அந்த ஆதங்கத்த ஒரு பெரியவர் வெளிப்படுத்தும் போது அவரு கூட எல்லாரும் சேந்து நிக்கறாங்க. இன்னைக்கு அவருக்கு ஆதரவா கூட்டம் போட்ருக்கவங்க எல்லாருக்கும் லோக்பால்னா என்னன்னு கேட்டா, என்ன மாதிரியே தெரியாமக் கூட இருப்பாங்க. ஆனா அவங்க அத்தனை பேருக்கும் லஞ்சம்னா என்னன்னு தெரியும். அவங்க அத்தனை பேரும், அவங்க வேலைகளுக்காக லஞ்சம் கொடுத்துருக்காங்க. கொடுத்துக்கிட்டும் இருக்காங்க. எங்க ஊர்ல இந்தியன்னு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படத்துல, ஒரு பெரியவரு, லஞ்சம் வாங்குற ஆளுங்கள கொல பண்ணுவாரு. அந்தப் படம் என்னா ஹிட்டு தெரியுமா ? லஞ்சம் வாங்கற ஆளுங்கள அந்தப் பெரியவரு கொலை பண்ணும் போது தியேட்டர்ல விசில் பறக்கும். மக்கள் அப்பிடி ரசிச்சாங்க. அந்தப் பெரியவரு மாதிரியேதான், அன்னா ஹசாரேவையும் மக்கள் பாக்கறாங்க.

எங்களால செய்ய முடியாததை அந்தப் பெரியவரு செஞ்சா, நாங்க அவரு கூட நிப்போம்னு சொல்றாங்க. இன்னைக்கு அந்தப் பெரியவரு திஹார்லேர்ந்து வெளியில வந்ததும் என்னா கூட்டம் பாத்தீங்களா ? நீங்க 2011 தேர்தலுக்காக, கோயம்பத்தூர் வந்து பேசுனப்போ, 300 பேர் கூட இல்லை. அதுவும் காசு குடுத்து கூட்டுன கூட்டம். ஆனா அந்தப் பெரியவருக்காக, ராத்திரி பகலா, ரோட்டுல காத்திருக்குது பாருங்க மக்கள் கூட்டம்.
ஊருல இத்தனை பேருக்கு புரிஞ்சத ஒங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குதுன்னு என் மவன் கிட்ட கேட்டேன். அவன் சொல்றான், நீங்க தலைவரே இல்லையாம். ஏதோ உலக வங்கின்னு இருக்குதாமே… அந்த வங்கியோட க்ளார்க்காம். அதனால தான் மக்களை சந்திச்சு தேர்தல்ல ஜெயிக்காம, குறுக்கு வழியில எம்.பி ஆனீங்கன்னு சொல்லுதான் என் மவன்.
என்னமோ அய்யா… எனக்கு சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். தப்பு இருந்தா மன்னிச்சுக்கங்க சாமி….
இப்படிக்கு
கும்பக்கரை கருப்பண்ணசாமி |
Comments
1. பூம்பூம் மாடு போல சொன்ன இடத்தில் கையெழுத்து போடும் ஒரு அடிமை.
2. சீக்கியர்களால் தனது மகனுக்கோ,மகளுக் கோ எந்த உயிராபத்தும் வந்துவிடகூடாது என்ற எண்ணம்.
I apologize for making a sweeping comment that we get driving license in an improper way. I appreciate you taking time to get your DL in a fair way.
My point is very simple. Yes Dr. Manmohan Singh did not take action in right time. But the whole country works in corrupt manner. How can you expect him alone to change? I think we as Indians confuse democracy and Anarchy. Freedom does not mean you can do whatever you want. Unfortunately we have evolved such a way that everyone thinks I will do whatever we want, but I want the other person to be clean.
Change has to be all levels in bottom levels. To be fair Manmohan Singh has done a lot to this country.
To some extent, good looks, clever talk is more appreciated than genuine words. This is why we tend to appreciate Actors and Actresses. It is well known that most (again I am careful here and say "most") of our actors have low morals. But people run after them. It shows our mindset of our society.
Change will not happen unless it happens in Society level
The first on Dr.Manmohan Singh can be called as tunnel vision. Whoever that son, the father is referring, should hang his heads in shame for being myopic. Two PM's can be called as new architects. They are:
1. Rajiv Gandhi for introducing IT, Panchayati Raj and bringing in many eminent people. He had a great vision. I changed from sympathizer to hater of LTTE for plotting the murder of a great leader who would've taken India to great heights.
2. Narasimha Rao for listening to the eminent people while moving the political coins correctly. With a minority government he achieved a lot.
Unfortunately corruption has got ingrained in our blood for which Dr.Manmohan Singh cannot be the sole reason. Without his policies India would not have transformed from highly indebted country to one of the leading creditors.
Your article highlights poverty while another one is condemning NREGS. So, there are poor who don't want to work but live on freebies. Apart from differentially abled persons, illiterate women, aged & kids, I don't have any sympathy for others. There is a saying in Tamil, 'Thirai kadal odiyum Thiravium Thedu'. Why don't you quote that along with Bharathi.
Last but not the least, the way UPA handled Lokpal and Anna is un-precedented. In this case, Dr.Singh is between rock and hard place.Unfortunately when you involve people like Pawar in the Lokpal drafting committee and Ambani's what do you expect and what can he do. Moreover, how do you know that he is not indirectly supporting Anna.
I respect your opinions but I feel some are totally baseless and ignorant.
ஒரு சில ரோடு சரியில்லை ஒத்துக்கிறேன். ஆனா சென்னை முதல் பெங்களூர் (என்.ஹச். 4) மற்றும் கன்யாகும முதல் டில்லி (என்.ஹச். 7) ரோடு தரமான 4 வழிச்சாலை. ஆனா நம்ம ஆளுங்க பண்ற அட்டகாசம் அளவில்லை. எதிர்க்க வந்து ஆக்சிடென்ட் பண்றது. இரண்டு லேன் இருக்கும். ஆனா ஒரு லேன் உள்ள போகாம, இரண்டுக்கும் நடுவில போறது. இப்படி அட்டகாசம். சும்மா அடுத்தவன் மீது புகார் சொல்லி பழக்கம் ஆகி விட்டது நமக்கு. .
சும்மா மன் மோஹனை சொல்லி பிரயோசனம் இல்லை. சுருக்கமா சொன்னா நம்ம ஜனங்களூம் நிறைய சமயம் (எருமை மாட்டு ஜனம் தான்) ஆனா எந்த அரசியல் வாதியும், பத்திரிக்கையும் சொல்ல மாட்டாங்க. அரசியல் வாதி சொன்னா ஓட்டு போகும். பத்திரிகை சொன்னா வியாபாரம் படுத்து விடும்.
முதல்ல நம்ம தெருவை சுத்தமா வைச்சிக்க தெரியாமா, சும்மா மன் மோஹன் சரியில்லை அது இல்ல அந்த புண்ணாக்குன்னு புலம்பக்கூடாது. தமிழ் நாட்டுல ஒரு சில பணக்காரன் இருக்கறவன் தெருவத்தவிர எங்கயாவது சுத்தமா இருக்கா? ஒரு சின்ன பஞ்சாயத்து கூட நேர்மையா, நியாயமா நடக்க்குதா? எவனாவது தைரியமா சொல்ல முடியுமா? இருந்தா ஒரு 5 சதவீதம் இருக்கும்.
இந்தியா ஒரு பெரிய நாடு. ஆயிரம் இழு பறிகள் உண்டு. அதுல எக்க சக்க பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதுல எந்த மா நில மக்கள் புத்தி சாலித்தனமா இருக்கானோ, அவன் நல்ல தலைவனை தேர்ந்து எடுப்பான், முன்னேறுவான். குஜராத், பீகார் எல்லாம் போட்டி போட்டு கிட்டு முன்னேறுல. இத்தனைக்கும் இந்த மா நிலத்துல மத்ய அரசுக்கு எதிர் கட்சிகள் தான் இருக்குது. இருந்தாலும் முன்னேறுல.
சும்மா எதுகை மோனையோட எழுதுறதுதான் புத்தி சாலித்தனமா நெனச்சிக்கிட்டு இங்க வந்து வாந்தி எடுக்க கூடாது.
இங்க இவ்வளவு பேசற எவனுக்காவது தைரியம் இருக்கா? ஒரு பஞ்சாயத் எலெக்சன் இல்லை வார்டு தேர்தல்ல நின்னு மாற்றம் கொண்டு வர முடியுமா? சும்மா பேசற்து ரொம்ப சுலபம்
Kindly publish this article in English.
பாவம் சார், அவரு பாட்டுல அவரு உண்டு அவரு வேல உண்டுன்னு, அப்டியே யாரோ சொல்ல சொல்ல செஞ்சுகினு கீறாரு, இன்னா விசுவாசமான மனுஷன் தெரியுமா சார்... அவரைப்போய் இப்டி சொல்லிகினு கீறியே வாத்தியாரே...
யாருடைய செயல்திட்டத்திற ்கோ அவர் பலிகடா ஆக்கப்பட்டிருக் கிறார்... அவருக்கு ரெண்டு வழி உண்டு,
*ஒன்னு சொன்னத கேக்கணும், இல்லாங்காட்டி பதவி வெலகனும், ரெண்டாவது வழியான பதவி வெலகுறது நல்லதுன்னு கூட தெரியாத அம்மாஞ்சி சார் அவரு...
அவசரம் சார் உங்களுக்கு, இப்பத்தான் சார் ஆரம்பிசுருக்கோம ், ஒன்னு ஒண்ணா தொடரலாம் சார், One at a Time, First Things First...
Corruption is top of the list
I Support Anna All the way buddy, as long as he support Anti-corruption and middle class
*திருமணம், விசேஷங்களில், பேரொலி கருவிகள் (loud speaker) கொண்டு ஒலிமாசு செய்கிறோம், இருதய நோயாளி, பரீட்சைக்கு படிக்கும் மாணவன், பச்சிளம் சிறார்களை, கண்ணக்கில் கொள்ளாமல்..., இன்னும் நமது சந்தோசத்திர்க்க ாக பட்டாசு வெடித்து, பலபேர் சுவாசத்தோடு விளையாடுகிறோம்...
* நாம் நமக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால், லஞ்சம கொடுக்கிறோம்,
(ஸ்டான்லி மருத்துவமனையில் , நோயாளிகள் நூற்றுக்கணக்கில ், கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிந்தவர்கள், etc, வரிசையில் நிற்க, ஸ்கூட்டரில் டிப் டாப்பாக குடுகுடுன்னு ஓடி வந்து ஒரு ரூ.5 அல்லது ரூ.10 லஞ்சம கொடுத்து, முதல் ஆளாக மருத்துவச் சீட்டு வாங்கிக்கொல்கிற ோம்...)
"மேலூர் கண்ணன்", சொன்னது நாட்டு நடப்பு தானே..., அது என்ன சார், ரோட்ட ஒழுங்கா போடா சொல்லு, நான் ஒழுங்கா வண்டி ஓட்டறேன், அதத்தான் அரசியல்வியாதியு ம் சொல்றான், மக்களை ஒழுங்கா இருக்க சொல்லு நானும் ஒழுங்கா இருக்கறேன்னு,
இப்டி சொன்னா அந்த பீடைக்கும் நமக்கும் என்ன சார் வித்தியாசம்...
"தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக்கொள்ளும ் வரை, அச்சமுதாயத்தில் உள்ளதை இறைவன் மாற்ற மாட்டான்..." அல்-குரான் 13:11
இந்த தலைவலிகள், i mean, தலைவர்கள், சட்ட திட்டங்கள் மாறவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்து ம் இல்லை...
நமது தலைவலிகள்,மாறவே ண்டும் என்று எண்ணுகிற நாம் முதலில் நம்மையும் மாற்றிக்கொள்ள வேண்டும்...
தமிழிலே "பழக்க வழக்கம்" என்றொரு சொல் உண்டு... நமது பழக்கங்களே வழக்கங்கள் ஆகிவிடுகின்றன என்பதற்கு அதை விட அழகான உதாரணம் காண முடியாது...
இவர்கள் எல்லாம் பழகிப்போய் தற்போது வழக்க்க்னால் ஆகிவிட்டன... நம்மில் எதனை பேர் மற்றவர்களை, மற்றவர்களின், உரிமைகளை, மதித்திருக்கிறோ ம், என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்...
*குப்பைகளை வீதியில் எறிகிறோம், அடுத்தவர்களுக்க ு என்ன ஆகும் என்பதை பற்றிக்கவலைப்பட ாமல்...
*வயதானவர்கள் சாலையில் குறுக்கே வந்தால் அவர்களுக்கு உதவி செய்வதை விட்டு, "இந்த பெரிச எல்லாம் யாருப்ப ரோட்டுல நடக்க விட்டது" என்கிறோம்...
Whether village people aware of these things? they see only thinagaran paper n always see only sun tv. yerkanave avanga maanam kodila parakudu...
அய்யா… எனக்கு சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன். தப்பு இருந்தா மன்னிச்சுக்கங்க
ஆனா நீங்க துரோகம்
நீங்க சொல்ற மாதிரி தலைவனுக்கு நல்ல பண்பு இருக்கணும். மன்மோஹனுக்கு இருக்கு. அவர் வந்த்தாலதான் இந்தியா இந்த அளவுக்கு உயர்ந்து இருக்குது. சவுக்கு வலைத்தளத்தில் கருத்து சொல்ற அளவுக்கு வந்திருக்குது. சவுக்கு சொல்ற மாதிரி இல்ல. கிராமத்தில கூட கை தொலை பேசி வைச்சிருக்கான். அன்னிய முதலீடு வேண்டாங்கறவன முதலில் செல் போன், டூ வீலர் எல்லாம் தூக்கி போடச்சொல்லு. சும்மா வெட்டு உடான்ஸ் உடக்கூடாது
உண்மை. மற்ற பிரதமர் மாதிரி மன் மோஹன் அரசியல் வாதியில்லை. அதுதான் பிரச்சினை. ஒரு மனிதன் எல்லா விவகாரத்திலும் கெட்டியாக இருக்க முடியாது. மன் மோஹன் அவருக்கு அரசியல் வாதி மாதிரி எதுக மோனயா பேச வராது. மன் மோஹன் திமுக மந்திரிய அரெஸ்ட் பண்ணினா அவங்க சப்போர்ட் உருவியிருப்பாங் க. அரசு விழுந்திருக்கும ். உடனே உங்க மாதிரி ஆளுங்க அரசாங்கம் திடம் இல்லை அப்படிம்பீங்க. அவர் செய்தது ராஜ தந்திரம். உலகமே பொருளாதார நெருக்கடியில் இருந்த போது இந்தியாவுக்கு அந்த நிலை இல்லை. அதுக்கும் மன் மோஹனோட திறமையும் காரணம். தனிப்பட்ட முறையிலும் நேர்மையானவர். அவர் நினைத்திருந்தால ் பேசாம யூ.என் இப்படி வேலைக்கு போய் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக் கலாம். அவர் அரசாங்க வேலையில் தான் இருந்தார். ஊழல் குற்ற சாட்டு இல்லை. இதெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போவுது. சும்மா டீ குடிச்சிட்டு, எதையும் புரியாம கமென்ட் பண்றது தானே நம்ம பழக்கம்.
மன் மோஹன விடும். என் பேர் இருந்த காமராஜ் ஒரு சுதந்திர தியாகி. கல்யாணம் பண்ணிக்காதவர். தமிழ் நாட்டுல கல்விக்கண்ணை திறந்தவர். அவர் இல்லன்னா இவ்வளவு பள்ளிக் கூடம் இல்லை. அவர் காலத்தில் தான் அத்தனை அணையும் கட்டியது (அதுக்கப்புறம் இல்ல. போய் கவர்மென்ட் ரெக்கார்ட் எடுத்து பாரும்). அவர் பாத்துதான் கிண்டியில் தொழிற் பேட்டை, திருச்சியில் பெல், சென்னையில் ஐ.ஐ.டி என்று கொண்டு வந்தார். நம்ம என்ன பண்ணனும். அந்த மனிதனை தோற்கடித்தோம். அவர் வுட்ட சாபம் தான் நல்ல அரசியல் வாதி வர்ற்து இல்லை. நல்ல அரசியல் வாதி எப்படி வருவான். நீ வளர விட்டாதானே? நீதான் சினிமா பாத்து விஜய காந்த் சுவத்துல உதக்கறதுதான் அரசியல் வாதிக்கு தகுதின்னு நினைக்கறயே?
குற்றம் யார் மேல்?
பெருமைக்குரிய பெருமகள் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று. எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் ஒன்றும் இல்லையே. எங்கே போனீங்க நீங்க. எங்கே போனீங்க நீங்க.
யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள் . காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன் இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா.
என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள் . சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர ்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள் . என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா.
யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன ். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள்
சேமன
மன் மோஹன் நல்ல நிதி அமைச்சர். ஆனால் பிரதமராக இருக்க முடியவில்லை. அவர் இந்த பிரச்சினை வந்த போது 2 வருடம் முன்னே ராஜினாமா பண்ணியிருந்தா வேற யாராவது நல்ல ஊழல் அரசியல் வாதி பிரதமரா வந்து நல்லா இனிக்க இனிக்க பேசி மக்களை அடக்கி வைச்சிருந்தா நம்ம மக்கள் வாயையும், பின்னாடியும் பொத்தி கிட்டு போய் இருப்பான். அவர் கண்ணியமான ஆள். அது தான் பிரச்சினை.
நம்ம ஆள் இந்தியாவில பெரிய சட்டம் பேசுவான். இதே அரேபிய நாடுகள்ல நம்ம ஆட்களுக்கு இரண்டாம் தர குடியுரிமைதான், ஆனாலும் அங்க பொத்தி கிட்டுதான் இருப்பான். பொறுப்பே இல்லாம மத்தவன குறை சொல்லி வாழணும்னா, இந்தியாதான் அதற்கு அருமையான இடம்.
மன்மோஹன் அரசில் ஊழல் அளவில்லாம போயிட்டது. அவரும் முடிவு சீக்கிரம் எடுக்காம போனதுக்கு காரணம், நம்ம தமிழன் (புத்தி சாலி தமிழன்), 2004 சீட் திமுக அணிக்கு கொடுத்து அண்டி இருக்கும் சூழ் நிலை பண்ணதும் ஒரு காரணம். காங்கிரஸ் மந்திரிகள் மீது புகார் வந்தப்ப சீக்கிரம் முடிவு எடுத்துட்டாங்க (அசோக் சவான், சுரேஷ் கல்மாடி, சசி தரூர்), ஆனா திமுக அமைச்சர் விவகாரத்தில் முடியலை. இதுதான் அடிப்படை.
நாம சும்மா இங்க வளைஞ்சி வளைஞ்சி கதை அளக்கிறோம். நான் ஊழலுக்கு ஆதரவு செய்ய வில்லை. ஆனால் மன் மோஹனை இப்படி சவுக்கு தரா தரம் இல்லாம பேசறதும், இங்க ஒரு கூட்டம் அடிப்படை இல்லாம கண்ட மேனிக்கு பேசறதும் சில்லறைத்தனமா இருக்கு.
ஊழலை ஒழிக்கணும்னா நீயும் எதாவது செய், அப்புறம் பேசு. பேசறது சுலபம்.
நம்ம மக்கள் கிட்ட தட்ட ஆட்டு மந்தை கூட்டம்தான். அதனால தான் நம் அரசியல் நாறுகிறது. தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க நம் மக்களுக்கு தகுதி இல்லை. இதுதான் அடிப்படை பிரச்சினை
முதலில், தமிழ் நாட்டில் நிறைய ஆக்சிடென்ட் நடக்கிறது (தினம்). நன்றாக கவனித்தால் அங்க ஒரு கூட்டம் சேர்ந்துக்கும். யார் சரி தவறுன்னு யோசிக்க மாட்டான். டிரைவர் வெளியூர்னா அவனுக்குதான் அடி கிடைக்கும். சைக்கிள், இரு சக்கர வாகனத்தில் வருபவன் உள்ளூர் காரனாக இருந்தால் வெளியூர் ஆளுக்குதான் அடி. சரி தப்புன்னு பாக்கற்து இல்லை. இங்கே ஒரு கூட்டம் சவுக்குக்கு ஆதரவா பேசற கூட்டமும் அப்படிதான்.
இன்னும் ஒரு எடுத்து காட்டு. சுமார் 20 வருடத்துக்கு முன் பொது மக்கள் முன் உள்ள பேச்சு இப்படித்தான் இருக்கும். அரசாங்க பணம் சென்னையில் (மா நில) இல்லை டில்லியில் (மத்ய அரசு) இருந்து வருவதற்குள் முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் எடுத்து கொண்டுதான் இங்கு வருகிறது என்று. பஞ்சாயத் ராஜ் என்று ஒரு சட்டம் வந்தவுடன், ஊராட்சி, பேரூராட்சி, யூனியன், நகராட்சி, மா நகராட்சி என்ற அமைப்புகளுக்கு நேரடியாக மக்கள் தொகை அடிப்படையில் அனுப்பப்படுகிறத ு. இதில் யாரும் நடுவில் கை வைக்க முடியாது. உங்களுக்கு எல்லாம் தெரியும் ஊராட்சி, பேரூராட்சி, யூனியன், நகராட்சி, மா நகராட்சி களில் நடக்கும் ஊழல் ஏராளம். இதில் உறுப்பினராக இருப்பவர்கள் தமிழ் நாடு முழுவதும் 1 லட்ச்த்தை தாண்டும். முதலமைச்சர், பிரதமரை குறை சொல்லி பழக்கப்பட்ட நம்மால ஒரு சின்ன ஊரில் கூட நேர்மையாக ஆட்சி நடத்த முடிய வில்லை. ஏன்? அடிப்படையில் நம் சமுதாயம் ஊழலில் மூழ்கி விட்டது. பத்திரிக்கை துறையில் லஞ்சம். நக்கீரன் எப்படி பணம் சம்பாதித்தது என்று? சவுக்கு நக்கீரனை தோல் உரித்தாலும் மற்ற பத்திரிக்கைகள் சும்மா இருக்கல. அரசியல் வாதிகள் லஞ்சம் பற்றி குறை சொல்லும் பத்திரிக்கைகள் தன் சக பத்திரிக்கையான நக்கீரன் பத்தி அன்னைக்கு சொல்லவில்லை. ஏன்?
இன்னைக்கு ஊழல் பத்தி பேசற தகுதி 90% மக்களுக்கு இல்லை. மன் மோஹனுக்கு கொஞ்சம் செல்வாக்கு குறைந்து விட்டது (கூட் இருந்த மந்திரிகள் பண்ண ஊழலினால்), உடனே எல்லா பத்திரிக்கைகளும ் சொல்லி வைச்ச மாதிரி மன் மோஹனை செத்த பாம்பு மாதிரி அடிக்குது.
You had mentioned that proper roads are not available and this is why people do not follow rules. A thief never admits his treachery.
If you drive from Chennai to Bangalore (NH4) or Kanyakumari to Bangalore (NH7), we have proper 4 lane road. On par with international standard. But still there are many 2-wheelers drive in opposite direction (because they don't want to take U-turn which may take extra 0.5 Km). So many violations even when there is not traffic.
Let me tell you. We all know how people get Driving License. Our public is careless and selfish, this is why get so many selfish politicians
I accept this article story except that 100 days works, its a good plan but people missuse u said that public give commission to officers i ask u why they give and why they get the money without work, u see corruption started where , every indian should fight against corruption then only we can destroy the corruption otherwise never
Regards
Ramesh
absolutely right.
மன்மோகன் சிங், ஒரு தனி மனுஷன் அப்படி சொல்ற உங்க கருத்தே ஏத்துக்க முடியாத ஒன்னுங்கு.
ஒரு நாட்டோட தலைவனுக்குனு மிக முக்கியமான பண்புகளும், கடமைககளும் இருக்கணும்,
ஏன்ன ஒரு தனி மனிதனோட தவறு அவனோட முடிந்துடும் அதிக பட்சம் ஒரு சில பெரு அவதி படுவாங்க.
ஒரு நட்டு நிர்மானிகர தலைவன் எப்படி இறுக்கணம், தன்ன சுத்தி என்ன தவறு நடந்தாலும் எனக்கு என்னோட பதவி மட்டும் தான் அப்படி இருக்கலாமா.
ஒரு காலத்துல ரயில்வே மந்திரி இருந்தவங்க, எங்கயோ பெரிய ரயில் விபத்து நடந்தா, நம்போட தலைமைல இருக்கிறன்ற துறை தவறு செய்தா உடனே பொறுப்பு ஏத்துக்கிட்டு ராஜநாமா செய்தாங்க, இப்ப என்ன நடக்குது, எவ்வளவு பணம் கொடுத்தாவது பதவிய காப்பதுறாங்க.
இத தான் நாங்க வன்மைய கண்டிக்கிறோம். உங்களுக்கு புரியலன தயவு செய்து ஒதுங்கி போங்க அப்படி இல்லன்ன, என்ன நடக்குதுன்னு கேட்டு தெரிஞ்சி கிட்டு பேசுங்க, அத விட்டுட்டு என்னோட கருத்துன்னு ஒரு மிக தவறான கறுத்த ஏன் பதிவு செய்றிங்க.
உண்ணாவிரதத்துக் கு வெறும் 5 ஆயிரம் பேர்தான் வரணும்னு சொல்றது உங்களுக்கே நியாயமா இருக்கா ? உங்க தலைவி சோனியா காந்தி பேசுற கூட்டத்துக்கு வெறும் 5 ஆயிரம் பேர்தான் வரணும்னு போலீஸ் உத்தரவு போட்டா ஒத்துக்குவீங்கள ா ?
டெல்லி போலீஸ் போட்ட நிபந்தனைய உங்ககிட்ட தானே சொன்னார் அந்தப் பெரியவர். உங்களுக்கு லெட்டர் குடுத்தா, போயி டெல்லி போலீசுக்கிட்ட கேளுன்னு பதில் எழுதுனது உங்க திமிர்தானே ? அப்புறம் தடைய மீறி உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொன்னதும், உங்க போலீசை விட்டு அவர உடனே கைது பண்ணீங்களே… அது நியாயமா அய்யா ? உத்தரப்பிரதேச மாநிலத்துல உங்க தலைவியோட மகன் போனப்போ, தடை உத்தரவு தானே இருந்துச்சு ? அவரு தடைய மீறலயா ? ஆனா, அன்னா ஹசாரேவ மட்டும் வீட்லேர்ந்தே கைது பண்ணீங்களே…. அது எந்த விதத்துல அய்யா நியாயம் ?
இங்க எழுதற எல்லாம் யோக்கியம் மாதிரியும், மன் மோஹன் ஒரு சில்லறை மாதிரியும் நிறைய கமென்ட்ஸ்.
உங்களில் (கண்ட படி கமென்ட்ஸ் எழுதும் முட்டாள்கள்) எத்தனை பேர் யோக்கியம்?
//
"ஆட தெரியாதவன் மேடை கோணல்னு சொன்னானாம்" அந்த மாதிரி தான் இருக்கு உங்களோட பின்னூட்டம்.
படிச்ச நாங்கலாம் சாலைவிதிகளை கடைபிடித்து தான் போறோம் ஆனால் சாலைன்னு ஒன்னு ஒழுங்கா போட்டாதானே சாவை தடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் சாலையில் மீன்பிடி போராட்டமெல்லாம் நடந்தது. சட்டங்கள் வலிமையின்றி தனிமனிதனால் ஊழலை எதிர்த்து போராட முடியாது என்பதை நினைவில் வைக்கவும்.
சிங்கப்பூரில் ,
1 ) இரவு 10 மணிக்குமேல் சாலையில் 4 பேர் சேர்ந்து நடந்து போனால் அவர்களை கைது செய்யலாம்.
2 ) ஒரு முறை தண்டனை அனுபவித்தும் தொடர்ந்து திருட்டுகளில் ஈடுபடுவோரின் கால் நரம்பு அறுவை செய்து செயலிழக்க செய்துவிடுவார்க ள் இப்பொழுது இல்லை திருடர்கள் என்றே சொல்லலாம்.
3 ) போதை மருந்து கடத்தலில் பிடிபட்டோரை வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றுவார்க ள். ஒரு முறை இங்கிலாந்து இளைஞன் போதை மருந்துடன் பிடிபட்டு இரவோடு இரவாக (புதியதோர் நடமாடும் நீதிமன்றம் அமைத்து)மரண தண்டனை நிறைவேற்றினார்க ள். ஏன் ? மறுநாள் இங்கிலாந்து அரசு அவனை நிச்சயமாக மீட்டுவிடுவார்க ள்.
சென்னையைவிட பரப்பளவில் சிறிய சிங்கப்பூருக்கே இத்தனை வலுவான சட்டங்கள் இருக்கிறது. ஜனத்தொகை அதிகம் கொண்ட நாம் இதைவிட வலுவான சட்டங்கள் வைத்திருந்தால் மட்டுமே அமைதியாக, நிம்மதியாக பட்டினி இன்றி வாழமுடியும்.
"ஓட்டு நீங்க தான போட்டிங்கன்னு கேக்கலாம் " ஒருத்தன நம்பி ஓட்டு போட்டு பதவில உட்க்காரவச்சா, அவன் ஊழல் செய்து சேர்த்த பணத்தையும், சட்டத்தில் இருக்கிற ஓட்டைகளை பயன்படுத்தி சொகுசாக வாழ்கிறார்கள். ஓட்டு போட்டவன் பட்டினியால் சாகிறான்.
மண்ணுமோகன் சிங்கை இன்னும் அசிங்கமாகூட திட்டலாம். எதை கேட்டாலும் அது எனக்கு தெரியாது, அது என்னுடைய துறை கிடையாதுன்னு சொல்றான்.
பதவி விலகிய ராசாவை முதுகில் தட்டிகொடுத்தவன் தானே இந்த கிழவன்.
சவுக்கு உங்கள் கட்டுரைகள் ஆக்க பூர்வமாக இருக்க வேண்டும். சும்மா தனி மனித தாக்குதல் எக்க சக்கம். கிட்ட தட்ட நக்கீரன் மாதிரி எதுகை மோனை மாதிரி எழுதி வருகிறீர்களே தவிர சரக்கு இல்லை. இங்க வர்ற கமென்ட்ஸ் எல்லாம் "சோனியா காலை நக்கினவன்" அவன் இவன் கண்ட மேனிக்கு பேச்சு. முதலில் நக்கீரன் மாதிரி தராதரம் இல்லாமல் மாற்றிக்கொள்ள வேண்டாம்.
இங்க எழுதற எல்லாம் யோக்கியம் மாதிரியும், மன் மோஹன் ஒரு சில்லறை மாதிரியும் நிறைய கமென்ட்ஸ்.
உங்களில் (கண்ட படி கமென்ட்ஸ் எழுதும் முட்டாள்கள்) எத்தனை பேர் யோக்கியம்?
- நீங்கள் சாலை விதியை கடை பிடிப்பதுண்டா? 95 % இல்லை. இதனால் எத்தனை பேர் சாவுறான் தெரிய்மா?
- உங்கள்ல எத்தனை பேர் மளிகை சாமான் வாங்கும் போது பில் போடாம வாங்கற பழக்கம் உண்டு. வேற வழியில்லாம பில் போடறதுதான் பழக்கமே தவிர, விருப்பபட்டு இல்லை
- உங்கள்ல எத்தனை பேர் ஊழலை எதிர்த்து சண்டை போட்டு இருக்கிங்க (சவுக்குக்கு இந்த தகுதி உள்ளது). நிறைய பேசாம பணத்த கொடுத்துட்டு வர ஆளுங்க தான்
சும்மா அடுத்தவன் மீது குறை சொல்றதை நிறுத்தணும். ஊழல் மெதுவா தான் ஒழியும். மன் மோஹன் மட்டும் தனி ஆளா ஒழிக்க முடியாது. சும்மா சூரப்புலி மாதிரி கம்யூட்டர் முன்னாடி பேசறது பெரிய விசயம் இல்லை[/ஃஉஒடெ]
இவர் சொல்வது சரிதான். ஆனால் ஒரு தப்பு இருக்கிரது. அது என்ன. சவுக்கு ஒரு மொல்லமாரி. அம்மாவின் கூஜா தூக்கி
வெண்ண தமிழ் நாட்டு தேர்தல் முடிவு யாரால்?
பட்ட்யலை குடுப்பிர்கலா?
சவுக்கு உங்கள் கட்டுரைகள் ஆக்க பூர்வமாக இருக்க வேண்டும். சும்மா தனி மனித தாக்குதல் எக்க சக்கம். கிட்ட தட்ட நக்கீரன் மாதிரி எதுகை மோனை மாதிரி எழுதி வருகிறீர்களே தவிர சரக்கு இல்லை. இங்க வர்ற கமென்ட்ஸ் எல்லாம் "சோனியா காலை நக்கினவன்" அவன் இவன் கண்ட மேனிக்கு பேச்சு. முதலில் நக்கீரன் மாதிரி தராதரம் இல்லாமல் மாற்றிக்கொள்ள வேண்டாம்.
இங்க எழுதற எல்லாம் யோக்கியம் மாதிரியும், மன் மோஹன் ஒரு சில்லறை மாதிரியும் நிறைய கமென்ட்ஸ்.
உங்களில் (கண்ட படி கமென்ட்ஸ் எழுதும் முட்டாள்கள்) எத்தனை பேர் யோக்கியம்?
- நீங்கள் சாலை விதியை கடை பிடிப்பதுண்டா? 95 % இல்லை. இதனால் எத்தனை பேர் சாவுறான் தெரிய்மா?
- உங்கள்ல எத்தனை பேர் மளிகை சாமான் வாங்கும் போது பில் போடாம வாங்கற பழக்கம் உண்டு. வேற வழியில்லாம பில் போடறதுதான் பழக்கமே தவிர, விருப்பபட்டு இல்லை
- உங்கள்ல எத்தனை பேர் ஊழலை எதிர்த்து சண்டை போட்டு இருக்கிங்க (சவுக்குக்கு இந்த தகுதி உள்ளது). நிறைய பேசாம பணத்த கொடுத்துட்டு வர ஆளுங்க தான்
சும்மா அடுத்தவன் மீது குறை சொல்றதை நிறுத்தணும். ஊழல் மெதுவா தான் ஒழியும். மன் மோஹன் மட்டும் தனி ஆளா ஒழிக்க முடியாது. சும்மா சூரப்புலி மாதிரி கம்யூட்டர் முன்னாடி பேசறது பெரிய விசயம் இல்லை[/ஃஉஒடெ]
சார், மன் மோஹன ஊழல ஒழிக்க சொல்லல தலைவரே...ஊழல ஒழிக்க உருப்படியா ஒரு சட்டம் தான் கொன்டு வர சொல்ரோம். அதுக்கு யேன் இந்த ஆலு நடுங்குராரு?
சரி வாங்க பழகலாம்னு நீங்கதானேய்யா கூப்டீங்க ?
கிழக்கு இந்தியா கம்பேனின்ற ஒரு வெளிநாட்டு உள்ள வந்துதானேய்யா நம்ப நாட்டையே அடிமையாக்குச்சு ? அப்புடி இருக்கும் போது வெளிநாட்டு நிறுவனங்கள தாறுமாறா இந்தியாவுக்குள் ள வந்ததுனால நமக்கு ஆபத்து வராதா அய்யா ?
நீங்க தலைவரே இல்லையாம். ஏதோ உலக வங்கின்னு இருக்குதாமே… அந்த வங்கியோட க்ளார்க்காம்.
உத்தரப்பிரதேச மாநிலத்துல உங்க தலைவியோட மகன் போனப்போ, தடை உத்தரவு தானே இருந்துச்சு ? அவரு தடைய மீறலயா ? ஆனா, அன்னா ஹசாரேவ மட்டும் வீட்லேர்ந்தே கைது பண்ணீங்களே…. அது எந்த விதத்துல அய்யா நியாயம் ?
KINDLY TRANSLATE AND PUBLISH IT IN THE
SAVUKKU ENGLISH VERSION
RSS feed for comments to this post