முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011 11:05

 “உச்சிதனை முகர்ந்தால்”  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி.  கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை கிருஷ்ண கான சபாவில் அந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் புகழேந்தியைப் போன்ற ஒரு உணர்வுள்ள மனிதரை காணுவது அரிதிலும் அரிது.   தான் செய்யும் பணிகள் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து செய்யும் மனிதர்.   ஈழப் போர் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில் இந்த மனிதர் தனி நபராக செய்து, காரியங்கள் சொல்லி மாளாது.  எப்படியாவது இந்தப் போரை நிறுத்த முடியாதா ?  ஒரு நாலு உயிரையாவது காப்பாற்றி விட மாட்டோமா என்று இந்த மனிதர் கண்ணீரோடு அல்லாடியது இவரது நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.  ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கூட, அந்த நெருக்கடியான நேரத்திலும் கூட, பணம் பண்ண வேண்டும் என்று புகழேந்தியை ஏமாற்றியவர்கள் உண்டு. 

 

pugalenthi

அன்புத் தோழர் புகழேந்தி

ஆனால், அவர்கள் மீது தன் கோபத்தைக் கூட காட்டாமல் உதாசீனப் படுத்தி விட்டு தன் பணியை தொடர்ந்து செய்தவர் புகழேந்தி.  இறுதிப் போரின் போது, போரை நிறுத்து என்ற கோரிக்கையோடு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களின் பின்னணியில், ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தோழர் புகழேந்தி என்பது பலருக்குத் தெரியாது.

 1

அந்தப் புகழேந்திதான் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.  செய்தித்தாளில், புனிதவதி என்ற 13 வயது ஈழச் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை படித்த உடன் புகழேந்தி மனதில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பே இந்தத் திரைப்படம்.

 

திரைப்படம் என்பது, பொழுதுபோக்கு ஊடகம் என்று ஒரு கருத்து இருக்கிறது.  வணிக ரீதியாக வெற்றியைத் தருவதற்கு, பெரும்பாலான மக்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பொழுது போக்கு அம்சங்களை நிறைத்துத்தான் திரைப்படங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன.  அதே நேரத்தில், உலக சினிமா என்ற பிரிவில் இருக்கும் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை காண்கையில், திரைப்படம் பொழுதுபோக்கு அல்ல.  இறந்து போன உணர்வுகளை மீட்டு எடுக்கவும், மீண்டும் நம்மை மனிதர்களாக்கவும் இந்த ஊடகத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நிரூபித்திருக்கின்றன.

திரைப்படம் எடுத்து, வணிக ரீதியாக அதை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர் அல்ல புகழேந்தி.  அவர் எப்படிப்பட்ட திரைப்படத்தை எடுப்பார் ?  அவர் எப்படிப்பட்ட மனிதரோ, அப்படிப்பட்ட திரைப்படத்தைத் தான் எடுப்பார்.  அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் உச்சிதனை முகர்ந்து.

 sm

இந்தத் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்த பிறகு, புனிதவதி பாத்திரத்திற்கு சரியான குழந்தை கிடைக்காமல் தாங்கள் பட்ட சிரமத்தையும், பிறகு ஒரு நாள் புனிதவதியே நேரில் வந்தது போல கிடைத்த குழந்தையையும், அந்தக் குழந்தைக்கு நீநிகா (நீர், நிலம் காற்று) என்று பெயர் வைத்ததையும் விரிவாக பேசினார் புகழேந்தி.    இந்தத் திரைப்படத்துக்கு இசை அமைத்த இமான் கொடுத்த ஒத்துழைப்பை குறிப்பிட்ட புகழேந்தி, இசை அமைப்பதற்கான தொகையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், என்ன முடியுமோ, அதைக் கொடுங்கள் என்று கூறி விட்டு, இந்தத் திரைப்படத்துக்கு இழைத்து இழைத்து இசையமைத்திருப்பதை குறிப்பிட்டார்.

 

சத்யராஜ், சீமான் மற்றும் நாசர் ஆகியோர் இந்தத் திரைப்படத்துக்கு அளித்த ஒத்துழைப்பையும், ஒளிப்பதிவாளர் கண்ணன் மற்றும் அவர் உதவியாளர்கள் ஆகியோர் அளித்த உழைப்பைக் குறிப்பிட்டார்.

 2

கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் கலைஞர்களின் பங்கு குறிப்பிடத் தக்கதாக இருந்திருக்கிறது என்றார்.   பொதுவாக திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வழக்கம் இல்லாத காசி ஆனந்தன், புகழேந்தியின் இந்தத் திரைப்படமும் ஒரு போராட்டம் என்பதால் பாடல் எழுத ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டார்.  திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பங்கு போராட்டத்தில் எத்ததையது என்பதை தேசியத்தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருந்தார் என்பதைக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், பிரபாகரனோடு சபையர் தியேட்டரில் “Operation Day Break” என்ற திரைப்படத்தை பார்த்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

 

தன் சொந்த ஊரான மட்டக்களப்பு பற்றிய நினைவுகளில் ஆழ்ந்த காசி ஆனந்தன், அந்த ஊரின் உப்பேரியைப் பற்றிக் குறிப்பிட்டார்.   அந்த உப்பேரியில் படகில் செல்லும் போது, அந்த துடுப்பு நீரில் இருக்கையில், அந்தத் துடுப்பின் நுனியில் காதை வைத்தால் எழும் ஓசை, மீன் பாடுவது போன்று இருக்கும் எனவும், அதனாலேயே மட்டக் களப்புக்கு மீன் பாடும் தேனாடு என்ற பெயர் உண்டு என்று குறிப்பிட்டார்.

 

சமீபத்தில் ஈழத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார்.  ஒரு மர்ம நபர், இரவு நேரங்களில் முகாம்களுக்கு வந்து, பெண்களை கத்தியால் கீறி கொலை செய்வதைக் குறிப்பிட்ட அவர், உலகம் இலங்கையின் போர்க்குற்றத்தை மவுனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாலும், இலங்கை முகாம்களுக்குள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருந்தாலும், “நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்லி முடித்தார்.

 

தோழர் சத்யராஜ் பேசுகையில், எடுத்த எடுப்பிலேயே, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக துடிக்கும் இதயங்களுக்கு வணக்கம் என்றார்.   கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை புரிந்து கொண்ட சத்யராஜ், அப்போது, அவர்களுக்காக துடிக்காத இதயங்களுக்கு வணக்கம் இல்லையா என்றால், அவர்களுக்காக துடிக்காத இதயம் இதயமே இல்லை, பிறகு எதற்கு வணக்கம் என்றார்.   திரைப்படத்தில் நடிப்பது பணத்துக்காக என்றாலும், எப்போதாவது ஒரு முறைதான் மனத்திருப்திக்காக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், உச்சிதனை முகர்ந்து அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் என்று குறிப்பிட்டார்.

 pugal

அதன் பிறகு இயக்குநர் ஆர்.சி.சக்தி, தோழர் மணியரசன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  நிகழ்ச்சியில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “உச்சிதனை முகர்ந்தால்” மற்றும், “இருப்பாய் தமிழா நெருப்பாய்”  என்ற பாடல்கள் மேடையில் பாடப்பட்டன.  இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடல், நடனக்கலைஞர்களால் மேடையில் காட்சியாக்கப் பட்டது.

 

இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களையும் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.

 

உச்சிதனை முகர்ந்தால், உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி என்ற பாடல், ஒரு மிகச் சிறந்த மெலடி.  இந்தப் பாடலின் வரிகளும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலின் வரிகளையும் வடித்த காசி ஆனந்தன்,  பாடலைக் கேட்கையில் இப்பாடல் வரிகளின் சுவையால், தமிழ் என் தாய் மொழி என நினைத்து பெருமைப் பட வைக்கிறார்.

 

அந்தப் பாடலின் வரிகளோடு முடிப்பது பொருத்தமே…

 

இருப்பாய் தமிழா நெருப்பாய்  நீ….

இழிவாய் கிடக்க செருப்பா நீ….

ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே…

ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிதே…

துடித்துத் துடித்து உடல் சிதைகிறதே….

தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே….

என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்…

அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்…….

 

Comments  

 
0 #40 rajesh s 2012-08-11 04:09
all the best in pugalendhi brother your

Best film in movie

surely this movie reach all the sections
of people of this country.

By Your Brother
RAJESH S
Quote
 
 
0 #39 rajesh s 2012-08-11 04:07
புகலந்தி அன்னா என்னுடைய வனககம் உன்னுடைய அன்பு தம்பி rajesh
Quote
 
 
0 #38 Tamil Magan 2011-08-28 17:22
அப்துர்ரக்மானின ் ஆதஙம் புரிகிரது. இதனால்தான் அரசு சினிமாவிர்க்கு எந்த உதவையும் செய்யக்கோடாது என நான் உல்பட பலர் கருட்துக்கலை முன்வைக்கிரொம். நல்ல சினிம மட்டும் பிலைக்கட்டும். கெட்ட சினிம சாகட்டும். விஜய் அஜித் சிம்பு சூர்யா சினிமாக்கலால் யாருக்கு என்ன லாபம்? வால்க்கைஇக்கு ஒவ்வாத கர்பனைகலை சினிமா என்ட்ரு காட்டி விட்டு கஷ்டப்பட ரசிகர்கல் பாக்கட் மனியில் பெனர் ஓர்வலம் படொடபம் காட்டிவிட்டு இவர்கல் பனக்காரன் ஆகிரார்கல் . ஆனால் இவர்கல் ரசிகர்கலான மக்கலுக்கு பிரச்ஷினை என்ட்ரால் கொலைகலாக ஓடி ஒலிகிரார்கல்.
Quote
 
 
-1 #37 vijaykumar 2011-08-25 21:21
புகழேந்தியின் உழைப்புக்கு பங்கேற்பது என்பது நிதி வகையில் உதவி செய்வதே. தலைக்கு ரூ 5000 என பண உதவி செய்தால், 5000 பேரின் தொகை 25 000 000 என்ற ஒரு பெரும் தொகை சேரும். அதை புகழேந்தியின் வைப்புக் கணக்கில் அவரே வைத்துக் கொண்டு தேவைக்கு மேல் இருப்பின் மற்ற முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
நண்பரே காற்றுக்கேன்னவே லிதிரைப்படத்தின ிரண்டாம்பாகமெடு ப்பதாகவும் திரைக்கதை புத்தகம்முன்கூட ்டியே தறுவதகசொல்லி பலபேரிடம் பில் போட்டு வாங்கிய தொகை போதாதா ?
Quote
 
 
+2 #36 Yavarum Nalam 2011-08-25 16:55
Congrats to all of you in the team. I wish you all the best.
Quote
 
 
-20 #35 suresh1981 2011-08-25 01:14
இந்த கிறுக்கு பய புள்ள படம் நம்ம மிக பெரிய அளவில் இரண்டு நாட்களில் தியேட்டரிலிருந் து தூக்கி எறிய பட வேண்டும்
Quote
 
 
+13 #34 வால்டர் வணங்காமுடி 2011-08-24 13:29
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஈழப் போராட்டம் இன்னும் உயிர்ப்புடன் தொடர்வதன் காரணம் புரிகிறது. வெளியில் தெரிவது என்னவோ ஒரு பிரபாகரன்,ஒரு பொட்டு,ஒரு பால்ராஜ்,ஒரு திலீபன் தான். ஆனால் நிழலில் சத்தமின்றி பணியாற்றும் புகழேந்தி போன்றோர் தான் ஆணிவேர்கள். வாழ்க புகழேந்தி. தமிழ் கூறும் நல்லுலகம் உம்மையும், உம் சந்ததியையும் வாழ்த்தும்.
Quote
 
 
+6 #33 மாமள்ளன் 2011-08-24 13:19
உச்சிதனை முகர்ந்தால் அணிக்கு பல கோடி நன்றிகள்..
Quote
 
 
+8 #32 Solan 2011-08-24 02:23
இப்படத்துடனாவது உலகத்தமிழர்களுக ்கு சூடு, சொரணை வருகின்றதா என்று பார்ப்போம்.
திரு புகழேந்தி அவர்களுக்கும் நோர்வே தயாரிப்பாளர்களு க்கும் எனது நன்றிகள். படம் தூள் கிளப்புவதோடு உலகத்தமிழனின் உணர்வையும் தட்டியெழுப்பும் என்பதி ஐயம் இல்லை.
யாருக்காவது நோர்வே தயாரிப்பாளர்களை தெரிந்தால் தயவுசெய்து எனக்கு அறியத்தரவும். நாம் எல்லோரும் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள ்.
Quote
 
 
+13 #31 Vizhi 2011-08-23 11:15
வனக்கம் .... இந்த படம் உங்கலை மட்டும் அல்ல எங்கலை போன்ட்ர முகாம்கலில் வாழும் அகதி பென்கலையும் கவுரவிக்கிரது .. மிக்க நன்ட்ரி அனைத்து நல்ல உல்லன்கலுகும்
Quote
 
 
+3 #30 KKR 2011-08-23 09:30
Anbargal USV /Nanari Avargale,
Vanakkangal.
I understand your messages.
Brahmins have to do a lot for the Tamil community now, not that others need not do.Kindly do not mistake my post.I honestly feel bad about our community role in last many decades, we have to make amends for all these things.

I again request Mr Shankar to inform the bank details of Mr Pugalendi, so that we all can start contributions directly into the account.
Now I am giving a call to all Tamilians irrespective of caste or religion.Let us unite for all such noble causes.
Let us not divide ourselves by caste or religion, first and last we are all Tamilians,let us all remember that always.
Regards
KKR
Quote
 
 
+7 #29 தனியன் 2011-08-23 06:31
திரு. புகழேந்தி அவர்களுக்கு எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள். வாழ்த்துக்கள்.
Quote
 
 
+6 #28 USV 2011-08-23 01:30
KKR - I really appreciate your idea but... why did you have to say brahmin friends? why not tamil friends? the first identity of one is their mother tongue because that is the language we speak before we even know what caste / religion we belong to. when you go to north india or outside no one knows u as a brahmin or devar or chettiar.. you are a madarasi!!
Quote
 
 
-7 #27 nellai tamilan 2011-08-22 16:15
“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தை (வெளிவந்த பிறகு) பார்க்க மனமில்லை!!
Quote
 
 
+6 #26 Thozar 2011-08-22 14:17
HATS OFF TO MR.PUGAZENDHI IYA AND THE PRODUSERS STEVEN, SRI BALA, SIVAGANESH, RAMANAN & VIJAYSHANGAR.
Quote
 
 
+6 #25 Eezhappiriyan 2011-08-22 12:28
நோர்வே தயாரிப்பாளர்கள் மேலும் பல தமிழ் உணர்வுள்ள திரைப்படங்களைத் தயாரிக்கவேண்டும ் என எனது வாழ்த்துகளைத் தெரிவீத்துக்கொள ்ளுகிறேன். இப்படிப்பட்ட படநிறுவனங்களை மக்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். வாழ்க வளர்க
Quote
 
 
+6 #24 nanari 2011-08-22 12:21
why req. Brahmin friends why not Mudali, chetti, nadan , sc st etc?????? Quoting KKR:
Request to all Brahmin friends :
Time has come for Brahmin friends to show some real support for Mr Pugalendi and Savukku.
Let us all make a good contribution for this film. Earlier the better please.
My own suggestion is to get the bank account details of Mr Pugalendi and all of us can remit directly into this accout.Someone can maintain the list of contributors from our community.
Guys let us do something fast , not only just read Savukku every day.
Please remember our Sri Lanka brethern are depending on our support. Atleast we can support Mr Pugalendi who is working for this noble cause.Please carry the message also to your other friends.
Regards
KKR

Mr Savukku Shankar, please inform the bank account details of Mr Pugalendi (bank name, his exact bank account name and account number etc ) by a separate post.We know you will not accept any contribution, let us all help atleast Mr Pugalendi.
Quote
 
 
-12 #23 srikandarajah 2011-08-22 04:31
பாவம் அப்துல் ரஹுமான் துபாயி வெய்யிலில் குழம்பி இருக்குமாப்பொல ...
Quote
 
 
+13 #22 Solan 2011-08-22 01:07
புகழேந்தி ஐயாவின் பணி மிகப்பெரிய பணி. அவரை வைத்து இந்தப்படத்தை எடுத்த நோர்வே நாட்டு தயாரிப்பாளர்களு க்கு எமது நன்றி. மிகத்துணிவாக அவரை நம்பி மிகப்பெரிய தொகையை முதலீடு செய்டுள்ளனர்.
Quote
 
 
+15 #21 சிறுவண்டு 2011-08-21 23:54
சவுக்கு மூலமாக திரு.புகழேந்தி போன்ற நெஞ்சம் நிறைந்த அன்புகொண்டோரை அறிய முடிகிறது.

"அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்...."
அப்பாவி சகோதர, சகோதரிகள் தன் கண்முன்னே அழியும்போது துக்கத்தில் வடிக்கும் வார்த்தைகள்.
உயிர்கள் கொடுமையாக பறிபோகும் சூழலிலும்கூட தங்கள் "தாய் மண்ணை" என்ன செய்ய முடியும் என்று வார்த்தைகள் தெறிக்கிறது, உயிரை விட தாய்மண் உயர்ந்தது என்பதை சொல்கிறார். ரத்தத்தில் சுதந்திர வேட்கை கலந்துவிட்டது. அருமை அருமை
Quote
 
 
+4 #20 Pothi 2011-08-21 22:48
நல்ல முயற்சி.
Quote
 
 
+17 #19 KKR 2011-08-21 21:56
Request to all Brahmin friends :
Time has come for Brahmin friends to show some real support for Mr Pugalendi and Savukku.
Let us all make a good contribution for this film. Earlier the better please.
My own suggestion is to get the bank account details of Mr Pugalendi and all of us can remit directly into this accout.Someone can maintain the list of contributors from our community.
Guys let us do something fast , not only just read Savukku every day.
Please remember our Sri Lanka brethern are depending on our support. Atleast we can support Mr Pugalendi who is working for this noble cause.Please carry the message also to your other friends.
Regards
KKR

Mr Savukku Shankar, please inform the bank account details of Mr Pugalendi (bank name, his exact bank account name and account number etc ) by a separate post.We know you will not accept any contribution, let us all help atleast Mr Pugalendi.
Quote
 
 
+28 #18 bharathinesan 2011-08-21 19:24
இழக்க கூடாததை இழந்து விட்டோம்.புகழேந்திக்கு இருக்கும் உணர்வு நம்மிடம் எங்கே? ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்று கூறிய தமிழனைப் பிரித்தது யார்? ஒரு தலைவன் தவறான வழியில் சென்றதால், அவனின் சுயநலத்தால் நாம் இழந்தது திரும்பப் பெறுவோமா? புகழேந்திக்கு தமிழகம் தலை வணங்கட்டும். அவர் சொல்லியது ஒரு கதை. சொல்லாதது எத்தனை கண்ணீர் கதைகள்?????
Quote
 
 
+17 #17 நடுநிசி நாயகன் 2011-08-21 19:08
புகழேந்திக்கு எனது சிரம் சார்ந்த வணக்கங்கள். வாழ்த்துகள். சினிமா என்பது மரணக்கிணறு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. படத்தை எடுப்பதற்கு அவர் எடுத்த முயற்சியைக் கானும் போது நாம் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்க முடியாதா என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. புகழேந்தியின் உழைப்புக்கு பங்கேற்பது என்பது நிதி வகையில் உதவி செய்வதே. தலைக்கு ரூ 5000 என பண உதவி செய்தால், 5000 பேரின் தொகை 25 000 000 என்ற ஒரு பெரும் தொகை சேரும். அதை புகழேந்தியின் வைப்புக் கணக்கில் அவரே வைத்துக் கொண்டு தேவைக்கு மேல் இருப்பின் மற்ற முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
Quote
 
 
+16 #16 நந்திதா 2011-08-21 19:03
அனைவருக்கும் வணக்கம்.
எனல்லோரும் தம் புகழை ஏந்தி வருவார்கள். தமிழகத்தில் ஒருவர் இருக்கிறார். அவரைப் புக ஏந்த வருகிறது, அவர் தான் திரு புகழேந்தி.
அன்னாருக்கும் திருவாளர்கள் இமான் சத்தியராஜ் மற்றும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் வாழ்க நீவிர் பல்லான்டு,
என்றும் மாறாத அன்புடன்
நந்திதா
Quote
 
 
+18 #15 danguvaaru andhurum 2011-08-21 18:55
இந்த விழாவில் கலந்துகொண்ட பேறு எனக்கு வாய்த்தது. மிகவும் நாகரீகமாக நடந்த விழா. [ப்]இயக்குனர் நல்ல பாந்தமான மனிரதராகத் தெரிகிறார் அவரது படைப்பும் ஒரு நல்ல தாக்கத்தை தமிழரிடம் விதைக்கும் என நம்புகிறேன்.[/ப்]
//திரைப்படம் எடுத்து, வணிக ரீதியாக அதை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர் அல்ல புகழேந்தி.//

உண்மைதான் அவருக்கு பணவசதி இருப்பதாகத் தெரியவில்லை. இசை அறிமுக விழாவில் கூட நேரடியாக பாடல் இசைக்கப் படவில்லை என்றே நினைக்கிறேன். இதை குறையாக கூறவில்லை மாறாக, [ப்]இதுபோன்ற படங்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவே தயாரிப்பாளர்களு க்கு உற்சாகம் அளிக்கும்[/ப்]. அவர்களை பயமின்றி செலவு செய்து மேலும் இத்தகைய படங்கள் கிடைக்கும். மற்ற காப்பியடித்த படங்களை DVD-யிலோ download செய்தோ பார்ப்பது போலல்லாமல் தியேட்டர்களில் பார்த்தாலும் அது "இன உணர்வின் வெளிப்பாடாகவே கருதுகிறேன்".

இந்த விழாவினைப் பற்றி எனக்கு தெரிவித்த "சவுக்கு" மற்றும் "May 17" நன்பர்களுக்கும் என் நன்றி.
Quote
 
 
+19 #14 Thamizh Eezham 2011-08-21 18:55
quoting ungalil oruvan



நண்பர்களுக்கு ஒரு நற்ச்செய்தி, சோனியா ராஜீவிற்கு கர்ப்பப்பை புற்று நோய் என கேள்வி பட்டிருந்தோம், கர்ப்ப வாய் புற்று நோய் என்று கூட கேள்விப்பட்டிரு ந்தோம்,

ஆனால் சற்று முன் கிடைத்த ஒரு உருதியான தகவல், அவருக்கு ஸ்பீணாள் சோற்ட் சாண்சேற் என்பது.

பிற உயிர் துன்புற்றிருக்க நாம் இன்பம் காண்பது தவறுதான், ஆனால் எம்மின மக்கள் பட்ட அவஸ்தையை அவர் உணர்வார் அல்லவா?

atleast now will she realise her mistakes
Quote
 
 
+16 #13 Thamizh Eezham 2011-08-21 18:52
மின்னலின் தொடர்ச்சி இடியாகும்

இன்னலின் தொடர்ச்சி விடிவாகும்


விடிவு என்ட்ருதான் வருமோ
Quote
 
 
+14 #12 givehimafairchance 2011-08-21 17:14
ALL savukku readers must watch with family and friends. Tamil websites like uyirvani,tamilw ire should not put the pirtated cd on their websites.
All tamil magazines caring for Tamil should give good publicity for the movie.It needs to be a commercial success.
Quote
 
 
+13 #11 jagan t 2011-08-21 16:07
@ Abdul Rahman - Dubai - சேற்றில் சில செந்தாமரைகளும் மலர்வதுண்டு.
Quote
 
 
+19 #10 pottu aman 2011-08-21 16:02
இந்த படமும் நாம் ஈழத்தை அடைவதற்கான ஒரு கருவிதான்... படம் வெற்றிபெற எல்லாரும் உழைப்போம்..
Quote
 
 
+8 #9 Announcements 2011-08-21 16:02
http://www.tamilthai.com/?p=24588


நடந்த எப்படி? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்
Quote
 
 
+12 #8 Poona Kutty 2011-08-21 13:58
waiting for the movie
Quote
 
 
+26 #7 http://koothadivedda 2011-08-21 13:26
தமிழ் உணர்வாளர் புகழேந்திக்கு எனது தலை சாய்ந்த உணர்வான வணக்கங்களும் வாழ்த்துக்களும் .
வெல்க தமிழ்.
வளர்க உங்கள் பணி.
நன்றி,
Quote
 
 
+29 #6 உங்களில் ஒருவன் 2011-08-21 12:59
தேர் இழுக்க ஊரே கூடவிட்டாலும், கூடியிருக்கும் உணர்வாளர்களை வைத்து முயற்சி செய்திருக்கும் திரு.புகழேந்தி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
தனி ஒரு மனிதனாய் பல போராட்டங்களுக்க ு பின் நின்று, அத்தகைய ஒரு போராட்டத்தை போலவே ஒரு திரைப்படமும் எடுத்திருக்கிறா ர்.

நம்மாலான ஒரு சிறு உதவி, குறைந்தது சவுக்கின் வாசகர்கள் 5000 பேராவது இருப்போம் தமிழ்நாட்டில். இத்திரைப்படம் பார்க்க நாம் அனைவரும் குறைந்தது ஒருவரையாவது அழைத்து செல்ல வேண்டும்.

நண்பர்களுக்கு ஒரு நற்ச்செய்தி, சோனியா ராஜீவிற்கு கர்ப்பப்பை புற்று நோய் என கேள்வி பட்டிருந்தோம், கர்ப்ப வாய் புற்று நோய் என்று கூட கேள்விப்பட்டிரு ந்தோம், ஆனால் சற்று முன் கிடைத்த ஒரு உருதியான தகவல், அவருக்கு SPINAL CORD CANCER என்பது.

பிற உயிர் துன்புற்றிருக்க நாம் இன்பம் காண்பது தவறுதான், ஆனால் எம்மின மக்கள் பட்ட அவஸ்தையை அவர் உணர்வார் அல்லவா?
Quote
 
 
+23 #5 சவுக்கின் விசிறி 2011-08-21 12:54
”இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ” பாடல் தமிழ்நாட்டில் நிச்சயம் சூறைக்காற்று போல சுழற்றி அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பாடலை ஒரு முறை கேட்டுப்பாருங்க ள்... அதில் இருக்கும் வலியும் தெரியும். வலிமையும் புரியும்
Quote
 
 
+15 #4 RayJaguar 2011-08-21 12:48
all the best for the movie :-) :-) :-)
Quote
 
 
+17 #3 Abdul Rahman - Dubai 2011-08-21 12:40
FONT மட்டுமல்ல. படத்தின் தலைப்பும்கூட ஒத்திருக்கிறது. கன்னம் = உச்சி!! முத்தமிட்டால் = முகர்ந்தால்!!

"கன்னத்தில் முத்தமிட்டால்....." என்ற ஒரு பாடல் அற்புதமான ஓர் இசையிலும், அருமையான காட்சிகள் மற்றும் நடிப்பில் வந்து இருந்தாலும், இன்றுவரை அந்த திரைப்படத்தையோ - அல்லது பாடலையோ நான் முழுமையாக பார்த்ததும் கிடையாது - முழுமையாக கேட்டதும் கிடையாது.

பார்க்கும்போதும ் - கேட்கும்போதும், உள்ளதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் - பாரம் - கவலை - கோபம் - ஆதங்கம் - வெறி - அழுகை - ஏமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளும் ஒன்று கூடிவிடும்.

மீண்டும் அந்த உணர்வை கிளற விரும்பவில்லை. எனவே, “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தை (வெளிவந்த பிறகு) பார்க்க மனமில்லை!!

என்ன சார் படம் எடுக்குறீங்க?? வெறும் பத்து கிலோ எடை உள்ள கதாநாயகன், வானத்தில் இருந்து சும்மா சர்ர்... சர்ர்ன்னு... பறந்து வந்து நூற்றி ஐம்பது கிலோ எடை உள்ள வில்லன்களை, ஒரே குத்தில் எட்டு பேரை சாய்க்க வேண்டாமா?? AK-47 துப்பாக்கியால் சுட்டால்கூட, அத்தனை தோட்டாக்களையும் பற்களால் பிடித்து, மென்று துப்ப வேண்டாமா??

அந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க தெரியாம.... கெளம்பீட்டாங்க.... நாங்களும் படம் எடுப்போம்ன்னு ஒரு கூட்டம்...
Quote
 
 
+22 #2 Abdul Rahman - Dubai 2011-08-21 12:22
இத்திரைப்படத்தி ன் எழுத்துரு ( FONT ) "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படத்தின் எழுத்துருவோடு ஒத்திருக்கிறதே! !! அதுவும் ஓரளவு ஈழம் சார்ந்த ஒரு கதைதான். இவ்விரண்டு திரைப்படங்களுக் கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா??

கொல்லன் பட்டறையில், காசி ஆனந்தன் ஊசி விற்க வந்துள்ளார் - பார்ப்போம்.

அதாவது, ஆடு செத்தா... மாடு செத்தா... மனுசன் செத்தா... அட்றா... அட்றா... நாக்க முக்க... நாக்க முக்க... நாக்க முக்க... நாக்க முக்க... என்ற காவியத் தமிழில் / செந்தமிழில் (!!??) பாட்டு கேட்டு பழகிய எங்களிடம், ஏதோ, எங்களுக்கு புரியாத ஒரு மொழியில் "இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ….இழிவாய் கிடக்க செருப்பா நீ…." என்று காசி ஆனந்தன் சொல்கிறார். எந்த அளவிற்கு எடுபடுகிறது என்று பார்ப்போம்.

ம்ஹூம்... என்னத்தே சொல்ல...???
Quote
 
 
+13 #1 Rangaraj Rajendran 2011-08-21 12:07
long live Pugalendhi thangaraj.His effort should be made success commercially and this film should reach all the sections of people of this country.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 124 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4206
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week49996
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month284043
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13200410