|
அன்னா ஹசாரே போராட்டம் தொடர்பாக தொலைக்கட்சி சேனல்களில் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள்,
அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா ?
இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டும் தானே ?

நடுத்தர வர்க்கம் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதிகளா ?
அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா ?
15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலையில்லையா ?
120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இந்தப் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா என்பதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை.
ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்குகளை நிர்ணயிப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அந்த நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் இந்த ஊடகங்கள் புறக்கணிக்க முடியாது. டெல்லி விமானநிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது, ஏசி வகுப்பில் கட்டணம் குறைக்கப் பட்டுள்ளது, மல்டி ப்ளெக்சுகளில் சுகாதாரம் இல்லை, கேஎப்சி சிக்கனில் கொழுப்பு அதிகமாக உள்ளது, ஐஐடியில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளது போன்ற விபரங்கள், இந்த ஊடகங்களால் செய்தியாக்கப் படுவதற்கான காரணம் இதுதான்.
ஆனால் இந்த ஊடகங்களால்தான் இந்தப் போராட்டமே நடக்கிறது என்கிறா வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை தகவல்களுக்காக பார்த்துத் தெரிந்து கொண்டு, தன்னெழுச்சியாக வரும் கூட்டமே அதிகம். மும்பையில் வேலை நிறுத்தம் செய்யும் டப்பாவாலாக்கள் அர்னாப் கோஸ்வாமியைப் பார்த்துத்தான் போராட்டத்தில் குதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் போராட்டத்தை லைவாக கவர் செய்வதால், தங்கள் டிஆர்பி ரேட்டிங் கூடும் என்ற சுயநல நோக்கத்தாலேயே இப்படி லைவ் கவரேஜ் செய்கிறார்கள்.
இதே புதுதில்லியில், நாட்டின் பல மூலைகளிலும் இருந்து, பல்வேறு மலைவாழ் மக்கள், விவசாயிகள், போன்றவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்தப் போராட்டங்கள் இந்த தொலைக்காட்சிகளின் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரணம், நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு, மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை.

இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டுமே என்றால் இருக்கலாம் அதில் என்ன தவறு என்றுதான் கூற முடியும். ஏழை மக்களை விட நடுத்தர மக்கள், இந்த ஊழலால் மிக அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். கிராமப்புரங்களில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஏழை விளிம்பு நிலை மக்களை, ஊழல் பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஏனெனில், ஊழலை அவன் நேரடியாக சந்திக்கும் நேர்வுகள் குறைவு. ஆனால் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள், லஞ்சத்தை நேரடியாக பல நேர்வுகளில் சந்திக்கிறார்கள். பைக்குகள், கார்கள் வாங்குகையில் ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, வீட்டு மனை மற்றும் வீடுகள் வாங்குககையில் பல்வேறு அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுப்பது வரை, இவர்கள் நேரடியாக லஞ்சத்தை சந்திக்கும் நேர்வுகள் அதிகம் என்பதால், இவர்கள் போராட்டத்தில் குதிப்பதில் வியப்பில்லை.

ஏழை விளிம்புநிலை மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரலாமா என்ற கேள்விக்கு தர வேண்டும் என்பதே பதில். ஏனெனில், விளிம்புநிலை மக்கள் நேரடியாக பாதிக்கப் படாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பாதிக்கப் படுவது, பன்னாட்டு நிறுவனங்களால். உதாரணமாக, காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடக்கையில், டெல்லியிலிருந்து 20 ஆயிரம் ஏழை மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர். சென்னையில், உயர் விரைவு பாலம் கட்டும் விவகாரத்தில், ஆயிரக்கணக்கான சேரி மக்கள் அப்புறப் படுத்தப் பட்டார்கள். இந்த இரண்டு விவகாரங்களிலுமே, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் காரணமாக நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏழை மக்களே. இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும், புதிய லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் படுவார்களேயானால், அதனால் பயனடையப் போவது ஏழை விளிம்பு நிலை மக்கள் தானே…. ? இது தவிரவும், சுற்றுச் சூழலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறு தொழிற்காலைகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் பட்டால், அதனால் சுற்றுச் சூழல் பாதிக்காமல் தடுக்கப் பட்டால் அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் தானே பலனடைவார்கள் ?
நடுத்தர மக்கள் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியா என்றால், நடுத்தர மக்களும், இந்தியாவின் பிரதிநிதிகளே…. நடுத்தர மக்களை ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால், விளிம்பு நிலை மக்களை மட்டும் இந்தியாவின் பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகளாக ஏற்றுக் கொள்வார்களா என்ன ? ஏழை விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று உள்ளார்களா என்ன ? குறைந்தபட்சம் அந்த மக்களின் வறுமையைக் கூட போக்கவில்லையே இந்த அரசியல்வாதிகள்…!!!!

இது நடுத்தர மக்களின் போராட்டம், ஆனால் நடுத்தர மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், எதற்காக காங்கிரஸ் அரசாங்கம் அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது ? நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை, ஆகையால் நாங்கள் உங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று எளிதாக சொல்லியிருக்க முடியுமே …..
சரி, நடுத்தர வர்க்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், இன்று பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகளா என்ன ? பிரதமர் மன்மோகன் சிங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இல்லையே ? மக்களவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் அவர்கள் மட்டும் என்ன 120 கோடி மக்களின் பிரதிநிதிகளா என்ன ?
இவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்றார்களா என்ன ? தேர்தலில் வாக்குப் பதிவே 60 சதவிகிதம் தானே… ? அதிலும் பாதியைத்தானே பெற்றிருக்கிறார்கள் ? இவர்கள் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதியா ?

அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா ?
இதை தலைகீழாக அல்லவா பார்க்க வேண்டும் ? அண்ணா ஹசாரே குழுவினர், ஆயுதம், அரசு அதிகாரம் ஏதும் இல்லாமல், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அரசு அல்லவா டெல்லி போலீசை வைத்து அன்னா ஹசாரே குழுவினரை மிரட்டப் பார்த்தது ? இந்தியா முழுவதையும் ஆளும் ஒரு கட்சி, காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்கலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா ? எங்களுக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை என்று இரண்டு மணி நேரம் பேசினாரே ப.சிதம்பரம் ? சரி. மிரட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி மிரட்டியே இந்த அரசு, பணியாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறதென்றால், மிரட்டாமல், கோரிக்கை மனு கொடுத்தால் செவி சாய்த்து விடுவார்களா என்ன ? மேலும், இந்த பிரச்சினை இப்போது தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம், ஏப்ரலில் வலுப்பெற்றது. அதன் பிறகு, அன்னா ஹசாரே குழுவினரோடு ஏறக்குறைய 100 மணி நேரத்துக்கும் மேல் இந்த அரசின் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களே… இப்போது காட்டும் இந்த வேகத்தை ஏப்ரல் மாதம் முதல் காட்டியிருந்தார்களேயானால், இன்று இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே…
15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?

மனமிருந்தால் மார்க்கமுண்டு. 15 நிமிடங்களில் 17 சட்டங்களை நிறைவேற்றியது இதே பாராளுமன்றம் தான். அதற்காக லோக்பால் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப் பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லையே….. விவாதித்து நிறைவேற்ற இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் போதாதா ? மேலும், அரசு நினைத்தால், பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட இயலுமே… இத்தனை நாள் செய்யாததை இப்போதாவது செய்யுங்கள் என்று எழுந்துள்ள கோரிக்கை நியாயமற்றது அல்லவே.
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை இல்லையா ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை என்பதை யாருமே மறுக்கவில்லையே.. அந்த வேலையைச் செய்யுங்கள் என்றுதானே கேட்கிறார்கள். 40 ஆண்டுகளாக ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே துருப்பிடிக்க வைத்த காரணத்தாலே தானே இன்று போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே…. மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 15 ஆண்டுகளாக சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே… இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் லட்சணம்.
120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?

ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக மஹாத்மா காந்தியை பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளவில்லையா ? அவ்வாறு ஏற்றுக் கொண்டுதானே காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ? மேலும், ஏற்கனவே கூறியது போல, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பிரதிநிதி அல்லவே !! உதாரணமாக ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் வாக்களிப்பவர்கள் 6 லட்சம். சராசரியாக, அன்றைய தேர்தல் நிலைமைகளைப் பொறுத்து, இந்த 6 லட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றதில்லையா ? அவ்வாறு வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றாலும் அவரைத்தானே அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக கருதுகிறார்கள். வெறும் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்ட ப.சிதம்பரம் இன்று அமைச்சராக இல்லையா ?
சோனியா காந்தி தலைவராக உள்ள தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) கூட பல்வேறு சட்டங்களின் வரைவுகளை தயாரித்துத் தருகிறதே… அந்த அடிப்படையில் உருவான சட்டம் தானே ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ? அந்த தேசிய ஆலோசனைக் குழு 120 கோடி மக்களின் பிரதிநிதியா என்ன ?
இன்று நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது, கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல்களை செய்து விட்டு, அதை மறைக்க கடும் முயற்சிகளை எடுத்த இந்த அரசாங்கத்தின் மீதானது. ராசா தவறே செய்யவில்லை, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு ஜீரோ லாஸ் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு, கூச்சமில்லாமல் லோக்பால் மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி மக்கள் நம்புவார்கள் ? ஊடகங்கள் எழுதும் வரை, அரசாங்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஊழலே நடைபெறவில்லை என்றுதானே சாதித்துக் கொண்டு இருந்தது ? இந்த அன்னா ஹசாரே பிரச்சினை எழுவதற்கு முன்பு கூட, ஷீலா தீக்ஷித்தைக் காப்பாற்றத் தானே காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து கொண்டு இருந்தது. தயாநிதி மாறனை கடைசி வரை காங்கிரஸ் காப்பாற்றவில்லையா ?

சோனியாவின் குடும்ப நண்பர் ஒத்தாவியோ கொட்டரோச்சியை காப்பாற்றி, பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டீசை சத்தம் போடாமல், நீக்கி, முடக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய வெளிநாட்டு வங்கிக் கணக்கை சத்தமில்லாமல் ரிலீஸ் செய்து, சோனியாவின் நண்பரை காப்பாற்றியது அத்தனையும் சிபிஐ தானே ?
எதை வைத்து நம்பச் சொல்கிறார்கள் இந்தக் காங்கிரஸ் அரசை ?
|
Comments
ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அவர் முன் நிறுத்தும் விஷயம் ஊழல்.
இதனால் பாதிக்க பட்டவர்கள், மொழி,இனம்,மாநில ம் மற்றும் நாடு தாண்டிய அணைத்து மக்களும் என்பதை மறக்க முடியாத என்பது உண்மை.
மற்ற போரட்டங்கள் எல்லாம் மேற் சொன்ன கோட்பாட்டுகுள்ள ே அடங்கி விடுபவை என்பது மறைக்க முடியாத உண்மை .
மேலும் அவைகள் பக்கத்துக்கு வீட்டு எழவு போல் .
ஊழல் என்பது நம் வீட்டு துயரம் போல் எல்லார் மனதிலும் உள்ளது .
அதன் வெளிபாடுதான் அன்னா ஹசாரே விற்கு பெருகி வரும் ஆதரவு.
இது எளிதில் அடங்காது , எதிர்பவர்களை அடித்துதான் செல்லும்.
41 ஆண்டுகள் இந்த மசோதாவை தொடாத அரசியல் வாதிகள் . அதை பேசவும் தகுதி அற்றவர்கள்.
தயவு செய்து அரசியல் பேச்சு பேசாதீர்கள்.
'அற செயல்' செய்வோம் வாருங்கள் .
100 கோடி = 1 திமுக எம்.எல்.ஏ
100 திமுக எம்.எல்.ஏ. = 1 காங் எம்.பி.
100 காங் .எம்.பி. = 1 ராடியா
100 ராடியா = 1 கல்மாடி
100 கல்மாடி = 1 பவார்
100 பவார் = 1 ராஜா
100 ராஜா = 1 கருணாநிதி
100 கருணாநிதி = 1 சோனியா
100 சோனியா = இனி பிறக்கப்போகும் ராகுல் வாரிசு[/ஃஉஒடெ]
கனிமொழிய விட்டுடீங்ககலே! !
Anbu naalaikae unga kudumbathayae congress / government ammanama road la pitchai eduka vaichaalum adhu nanmaikaenu thaan neenga eduthukanum purinjitha.. govt ewlo nalladhu panuthu..
100 கோடி = 1 திமுக எம்.எல்.ஏ
100 திமுக எம்.எல்.ஏ. = 1 காங் எம்.பி.
100 காங் .எம்.பி. = 1 ராடியா
100 ராடியா = 1 கல்மாடி
100 கல்மாடி = 1 பவார்
100 பவார் = 1 ராஜா
100 ராஜா = 1 கருணாநிதி
100 கருணாநிதி = 1 சோனியா
100 சோனியா = இனி பிறக்கப்போகும் ராகுல் வாரிசு
அன்னா கமினா
ஐரோம் சரிமிளா போல...!!!
நல்லவன் வாழ்க என்பதாலேயே ஒருவன் நல்லவன் ஆகிவிடமுடியாது, அவன் செய்யும் தீய செயல்களை ஒழித்தால்தான் முடியும், சூர்யா ஷாருக்கான் போன்றவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என சொல்ல முடிமா? அத்தனை பணத்தையும் வெள்ளையாக வாங்குகிறார்கள் என சொல்ல முடிமா? அவர்களிடம் கருப்பு பணமே இல்லை என சொல்ல முடிமா?
என்னை பொறுத்தவரை அன்னா ஹசாறேவின் போராட்டம் இன்றைய தேவை. அது அனைத்து தரப்பினரையும் கேள்வி கேட்ககூடிய தண்டனை அளிக்ககூடிய லோக்பாலை அமல்படுத்த வலியுறுத்த வேண்டும்.
"லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்" என சவுக்கு வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் சவுக்கு வேலை பார்த்தவர்களில் ஒரு சிலர் தவிர எழுபத்தைந்து சதவிகிதம் லஞ்சம் வாங்குபவர்களே. சவுக்கால் இதை மறுக்க முடிமா? சாதாரண கான்ஸ்டபிள் முதல் ஐஜி வரை அவரவர் அளவிற்கு லஞ்சம் வாங்குகின்றனர்.
அன்னா ஹசாறேவின் போராட்டம் ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே, இதனால் மொத்த ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முடியாது, ஆனால் சிறு அளவிற்கேனும் அவற்றில் ஈடுபடுபவர்களுக் கு பயத்தை கொடுக்க முடியும்.
தண்டனை கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும், "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால ் திருட்டை ஒழிக்க முடியாது"
ஆமா நீங்களும் பண்ண மாட்டிங்க பன்னுறவங்களையும ் இது மாதிரி ஏதாவது சொல்லி அடக்கக பார்ப்பீங்க. இப்ப என்ன அன்னாவையும் லோக்பாலின் கீழ் கொண்டு வந்து விசாரிங்க போதுமா?
\\அன்னா ஹசாரே ஒரு பொம்மை மட்டும் தான், அதன் கயிரு பி.ஜெ.பி இடமும் அம்பானிகளிடமும் உள்ளது...//..
அன்னாவிற்கு பதிலாக அப்துல் கலாம் உண்ணவிரதம் இருந்திருந்தாலு ம் தப்புகண்டுபிடிப ்பீர்கள் உங்கள என்னத்த சொல்ல?
Please have a look at the link that I attached here. Its about the culprit sonia. and please translate and post it on Savukku so every one will know more about her.
http://infinitytimes.com/2011/08/23/the%E2%80%9D-true%E2%80%9Dstory-of%E2%80%9D-fake-leader%E2%80%9D-sonia-gandhi-alias-antonia-maino-by-satyamitra/
Thanks
Regards
Prabhu
But why you are doing the same by displaying the writings of some LUNATICS. It is cutomary for these eunuchs to ask why in the past no protest against this and that. Saukku must support Anna's efforts to fight corruption without delving deep into one or two minor demands of the Team.
ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்கா க அண்டா கட்டி சமையல்:
தட்ஸ்தமிழ் செய்தி
அன்னாவைப் பார்க்க வரும் ஆதரவாளர்களுக்கா க அங்கு அண்டா கட்டி சமையல் செய்யப்படுகிறது . இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கப்பட்டுள் ளது.
அன்னாவின் ஆதரவாளர்களான மகேந்திர கோயல், பாரத் பூஷன் மற்றும் அனில் ஜெயின் ஆகிய 3 பேரும் சேர்ந்து அன்னாவின் சமையல் அறையைத் துவங்கி ராம்லீலா மைதானுக்கு வருபவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
இது குறித்து கோயல் கூறியதாவது,
இது வரை 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளித்துள்ளோம். ஷிப்ட் முறையில் 200 சமையல்காரர்கள் பணிபுரிகின்றனர் . அன்னா ராம்லீலா மைதானில் இருக்கும் வரை மக்களுக்கு உணவளிக்கத் திட்டமிட்டுள்ளோ ம். சமையலுக்குத் தேவையான மாவு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பலர் நன்கொடையாக அளிக்கின்றனர் என்றார்.
நேற்று முந்தினம் மட்டும் 200 குவிண்டால் அரிசி சமைக்கப்பட்டுள் ளது என்றார் ஜெயின்.
டன் கணக்கில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த பல மினி டிரக்குகளை நேற்று ராம்லீலா மைதானில் காணமுடிந்தது.
இந்த மூவர் தவிர்த்து ஹரியானாவைச் சேர்ந்த ஜன் சன்ஸ்தான் சேவா சங்க் அமைப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இதுவரை 20 ஆயிரம் பேருக்கு உணவளித்துள்ளது.
******
ம்ம்ம்ம் நல்லா சாப்புட்டு, தெம்பா கோசம் பொடுங்க...
உங்க தேசபக்திய நெனச்சா புல்லரிக்குது,, ,,
அவ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்
இதை படித்துவிட்டு யாரும் அவர் 2 லட்சம் தானே திருடினார் என்று சப்பை கட்டு கட்டவேண்டாம்!
அப்போது அவரால் திருட முடிந்தது அவ்வளவு தான்,
இந்த போராட்டம் அறிவித்த பிறகு வந்த டொனேசனில் நன்றாக கல்லா கட்டியிருப்பார் .
அவர் உன்மையிலேயே யோக்கிய சிகாமணியாகா இருந்தால், அவருடைய இயக்கத்துக்கு வந்த நன்கொடை விபரங்களை பற்றி சொல்லட்டுமே!
கேட்டால், காங்கிரஸ் சொல்லட்டும் நான் சொல்லரேன்னு சொல்லுரார்! காங்கிரஸ்தான் திருடன்னு எல்லாருக்கும் தெறியுமே!
தன்னார்வத்தொண்ட ு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்த ு நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிரு ந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர ். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.
இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அன்னா சொல்வது ஏன்?
ஏனெனில், அப்படி வந்தால் அவர்தான் முதலில் உள்ளே செல்வார்! ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"ல் ஊழல் செய்ததற்கு இதுவரை அவர் எந்த தண்டனையும் அனுபவிக்கவில்லை !
நன்றி
http://settaikkaran.blogspot.com/2011/08/blog-post_15.html
இதுவும் தவறு,
Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கு ம் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள் ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரி ய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதன் மர்மம் என்ன?
அரசியல்வாதிகளுக ்காவது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு என்ற அங்குசம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது..! ஆனால்... இவர்களை எப்படி அடக்குவது..? இவர்கள் மொத்தமாக ஒரு வெளிநாட்டிடம் அடகு போய் விட்டால் அப்புறம் நம் நாட்டின் நிலை..?
பிரதமரை கேள்வி கேட்கலாம், ஆனால் ஜன் லோக்பாலில் உள்ளவர்களை கேள்வி கேட்க முடியாது? என்ன விசித்திரமான சட்டம்??? நாளை இவர்கள் தான் நம் நாட்டை ஆளப்போகின்றார்க ள் என்றால், பின் நீதிமன்றம் எதற்கு? தேர்தல் எதற்கு?
தஙளின் கருத்து முற்றிலும் தவறானது,
ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கி றார்கள்.
"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும ். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அன்னா ஹசாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்,' என்று சொல்வது மக்களை ஏமாற்றுகிற வேலை.
மன்மோகன் அரசாங்கத்திற்கு உள்ள புரியாத புதிர், இந்தப் போராடும் நடுத்தரவர்க்கமு ம் ஊழல்களால் பலனடையக் கூடியவர்கள் என்பது அந்த நடுத்தரவர்க்கத் துக்கு தெரியுமா தெரியாதா? இவ்வளவு அரைகுறைகளாக இருக்கிறார்களே. அரைகுறைகளைச் சமாளிப்பது மிகவும் கடினம்தான்.
ஆனால் உழைக்கும் மக்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கும் போலிஸ் இங்கும் ஒரு சுற்று லத்தியைச் சுற்றி, கையில் விலங்கை மாட்டினால் இந்தப் புரட்சியாளர்கள் ஓடி ஒளிந்துகொள்வார் கள். விடிந்தால் காருக்கோ, பைக்குக்கோ தவணை கட்டவேண்டிய கட்டாயத்தில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவ து.
ஊழலின் அடிப்படை தெரியாத நடுத்தரவர்க்கத் தின் போராட்டம் என்பதுதான் குற்றச்சாட்டு. நடுத்தரவர்க்கம் போராடக் கூடாது என்று சொல்லவில்லை. ஏன் உயர்வர்க்க சீமான்கள் கூட போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் . கார்ப்பரேட் ஊடகங்கள் கூட ஆதரவு கொடுக்கின்றன. ஆக உயர்வர்க்கம் போராடக் கூடாதா என்றால் திருடனே எப்படித் திருட்டுக்கு எதிராகப் போராட முடியும்? இந்த கார்ப்பரேட் உயர்வர்க்கம் திருடன் என்றால் இந்தத் திருடர்கள் மூலம் பலனடையக் கூடியதுதான் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ள நடுத்தரவர்க்கம் .
இயற்கை வளங்களையும், உழைக்கும் மக்களையும் சுரண்டுவதற்கு வேண்டிய லைசன்ஸ் பெருவதில் ஊழல் - இதனால் உயர்வர்க்கம் ஊழலுக்கு எதிராக போராடுகிறது. ஆக இவர்களின் நோக்கம் ஊழலே இல்லாமல் வளங்களைச் சுரண்ட வேண்டும்.
இப்படிச் சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள், முதலாளிகளிடம் வேலை பார்த்து பலன் பெறும் நடுத்தரவர்க்கம் அவர்களின் முதலாளிகளிடம் விலைபோன அரசின் அன்றாட பணிகளில் சந்திக்கும் ஊழல் - இதனால் நடுத்தரவர்க்கம் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறது. இவர்களின் நோக்கம் சுரண்டுபவனிடம் நாங்கள் பணி புரிந்து பலன் பெறுவோம். ஆனால் எங்களின் அன்றாட வேலைகளான மின்சார பில் கட்டுவது, தொலைபேசி பில் கட்டுவது, பிறப்புச் சான்றிதழ் பெறுவது போன்றவை ஊழலில்லாமல் நடைபெற வேண்டும்.
விலை கொடுத்தாலும் இந்த ஊழல்களால் பலன் பெறுபவர்கள் கார்ப்பரேட்டுகள ும் அவர்களை அண்டிப் பிழைக்கும் இந்த நடுத்தர வர்க்க புரட்சியாளர்களு ம்.
அரசாங்கத்தாலும் , அரசாங்கச் சொத்துகளை விற்பதால் பயன்பெறக் கூடிய தனியார்களாலும் கைவிடப்பட்ட விளிம்பு நிலை மக்கள்தான் இந்த ஊழல்களால் எவ்விதப் பலனையும் அடையாதவர்கள். தொடர்ந்து பாதிப்புக்கு ஊள்ளாகுபவர்கள்.
ஜன் லோக்பால் சட்டம் வந்துவிட்டால் நாட்டில் பாலாரும் தேணாரும் ஓடும் என்று பத்திரிக்கைகள் கதை விடுகிறது!//
நீங்களாகவும் எதுவும் செய்ய மாட்டீர்கள், செய்யும் ஆட்களையும் குறை சொல்லமட்டும் ஆயிரம் காரணம் கண்டுபிடுத்து விமர்சனம் செய்ய வருவீர்கள். அன்னா அவர்களின் லோக்பால் ஊழலை ஒழிக்க முடியாது என் நீங்கள் கூறினால்,அதனை முற்றிலும் ஒழிக்க என்ன சட்டம் கொண்டு வரவேண்டும் என நீங்கள் கூறுங்கள். நங்கள் அனைவரும் உங்கள் பினால் நிற்கிறோம். நீங்கள் சொன்ன மாதிரி வாஜ்பேயி கேட்டால் அவர் கேட்டகவா போகிறார் என அன்னா அவர்கள் சும்மா வீட்டில் உட்கார்ந்து வியாக்கியானம் பேசாமல் மகாராஷ்டிரா அரசை எதிர்த்து பல வகையில் நல்லது செய்ய வழி செய்து உள்ளார். குடுமப பிரச்னைகளை கிரிமினல் வழக்குகளாக மாற்றி பணத்தைக்கொள்ளை அடிக்கும் மனைவிகள், அவர்களின் வீட்டு ஆட்கள், பொய் கேஸ்களைப்போட்டு மிரட்டும் போலீஸ், துணை போகும் வக்கீல்கள் அரசியல்வாதிகள்
ஆகியோரை எதிர்த்து போராடும் கணவர்களின் இயக்கத்தில், வெறும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தி ன் மூலம் மட்டுமே சாதாரண ஆட்களான ஒரு 50 பேர், இதுவரையிலும் கீழ்கண்ட பதவிகளில் இருந்த ஆட்களை வழிக்கு கொண்டு வந்து கதற கதற மன்னிப்பு கேட்க வைத்து உள்ளோம். 1.தமிழகத்தின் முன்னாள் உள்துறை செயலாளர்(அனைத்த ு போலீஸ் அதிகாரிகளின் பாஸ் ஆகா இருந்தவர்).2. CBCID யில் டெபுடி கமிசனாராக இருந்து கொண்டு 7 மாவட்ட போலிசின் மூலம் கணவனின் குடும்பத்தை மிரட்டி போய் வழக்கு போட்டவர்.(அடித்த அடியில் நொந்து போய் குடும்பத்தை அனாதையாக விட்டு மாரடைப்பால காலமாகி விட்டார்) 3. CBCID யில் இன்ஸ்பெக்டராக இருந்து கொண்டு, முன்னாள் அமைச்சரின் 2 கைத்தடிகளை மச்சான்களாக கொண்டு, கணவனின் குடும்பத்தை 8 பொய் கேஸ்கள் போட்டு படாதபாடு படுத்தியவர்.
First all government should corruption free and more over present UPA fails most of the corruption issues ,they are in the coalition government PM himself declared coalition Dharma(will adjust partners),Its clearly means he don't have individual decision making powers
Secondly Anna team this type indefinite fasting bad example for future generation... why .... Because should understand our parliamentary democracy already UPA have majority in the house
how we expect they will pass full lokpal bill .... ok how will implement or make the law for this bill
Through next general election Anna team & our media's should emphasize include this bill to their (party's) election manifesto & their top priority agenda for next new government
Now our turn we should select which party willing to pass this Jan lokpal, we should vote for them,
Election & our vote power only we will see the reform
unfortunately urban population only knows(shows interest) this bill & corruption's because more agitation happening from urban side. Rural India not much echo but Anna team should create awareness(lokpa l) among them then only we will see the real Impact.
நன்பரின் பதில் கருத்துக்கு மிக்க நன்றி!
ஊழலை ஒழிப்பேன் என்று புறப்பட்டவர் நேர்மையானவரா?
"இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக 2003இல் பி.பி.சாவந்த் கமிட்டியால் அன்னா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும் , அன்னாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று சவடால்விட்டார்!
அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளு க்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அன்னா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக ்கிறேன்.((I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அன்னாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட ்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?
இவருக்கு நேர்மையயை பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது?
எனக்கும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதற்கு நாம் முன்னிருத்தும் நபர் நேர்மையானவரா என்பதில் தான் கருத்து வேறுபாடு.
அடுத்ததாக நீங்கள் சொன்ன "நீங்கள் போய் வாஜ்பாயியை கேட்டு இருக்கலாமே?" அப்படியே நான் கேட்டு இருந்தாலும், என்னோட பேச்சை கேட்டு விட்டுதான் அவர் மறு வேலை பார்ப்பர்! என்னா சார் நீங்க?
ஜன் லோக்பால் சட்டம் வந்துவிட்டால் நாட்டில் பாலாரும் தேணாரும் ஓடும் என்று பத்திரிக்கைகள் கதை விடுகிறது!
அன்னாவின் ஆதரவாளர்களும் மக்களை முட்டாளாக மாற்றுகிறார்கள் .
உதாரனமாக,
"அன்னாவின் ஜன் லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும்!" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர ் கிரண் பேடி
Future India in youngster Hand
Vande mataram.........................
Future India in Youngster Hand.
DR.APJ
Vande Mataram............
http://www.box.net/shared/h8lfn3k0zk39rs8z21t3
http://www.box.net/shared/h8lfn3k0zk39rs8z21t3
இதுவும் தவறு,
ப்ரெவென்டிஒன் ஒஃப் சொர்ருப்டிஒன் ஆச்ட் (ப்சா) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கு ம் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (புப்லிச் ஸெர்வன்ட்ச்) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (ஈப்ச்) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள் ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரி ய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதன் மர்மம் என்ன?
அரசியல்வாதிகளுக ்காவது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு என்ற அங்குசம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது..! ஆனால்... இவர்களை எப்படி அடக்குவது..? இவர்கள் மொத்தமாக ஒரு வெளிநாட்டிடம் அடகு போய் விட்டால் அப்புறம் நம் நாட்டின் நிலை..?
ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்பது, என்னை வீட்டுக்குள்ள விட்டு போகும்போது கட்டி போட்டுட்டு போங்க, இல்லைனா நான் திருடிருவேன் என்பது போலத்தான்.
இந்தக்கருத்து ஊழலுக்கு மட்டும்தான், உடனே அறிவு ஜீவிகள், அப்போ கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கும ் சட்டம் தேவையில்லையா என்று சண்டைக்கு வராதீர்கள். ஊழல் என்பது அதிக சதவிகிதம் தனிமனித ஒழுக்கத்தை சார்ந்தது.
தஙளின் கருத்து முற்றிலும் தவறானது,
ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கி றார்கள்.
"டொ இன்ச்லுடெ அன்ய்திங் மடெ புனிஷப்லெ உன்டெர் சப்டெர் ஈ௯ ஒஃப் தெ ஈன்டிஅன் பெனல் சொடெ ஒர் உன்டெர் தெ ப்ரெவென்டிஒன் ஒஃப் சொர்ருப்டிஒன் ஆச்ட் (ப்சா), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும ். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அன்னா ஹசாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்,' என்று சொல்வது மக்களை ஏமாற்றுகிற வேலை.
நன்பரின் பதில் கருத்துக்கு மிக்க நன்றி!
ஊழலை ஒழிப்பேன் என்று புறப்பட்டவர் நேர்மையானவரா?
"இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக 2003இல் பி.பி.சாவந்த் கமிட்டியால் அன்னா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும் , அன்னாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று சவடால்விட்டார்!
அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளு க்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அன்னா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக ்கிறேன்.(ஈ ஹவெ இன்டிச்டெட் ஆன்ன ஹழரெ ஃபொர் சொர்ருப்டிஒன்) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அன்னாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட ்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?
இவருக்கு நேர்மையயை பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது?
எனக்கும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதற்கு நாம் முன்னிருத்தும் நபர் நேர்மையானவரா என்பதில் தான் கருத்து வேறுபாடு.
அடுத்ததாக நீங்கள் சொன்ன "நீங்கள் போய் வாஜ்பாயியை கேட்டு இருக்கலாமே?" அப்படியே நான் கேட்டு இருந்தாலும், என்னோட பேச்சை கேட்டு விட்டுதான் அவர் மறு வேலை பார்ப்பர்! என்னா சார் நீங்க?
ஜன் லோக்பால் சட்டம் வந்துவிட்டால் நாட்டில் பாலாரும் தேணாரும் ஓடும் என்று பத்திரிக்கைகள் கதை விடுகிறது!
அன்னாவின் ஆதரவாளர்களும் மக்களை முட்டாளாக மாற்றுகிறார்கள் .
உதாரனமாக,
"அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும்!" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர ் கிரண் பேடி
ஒன்று, அன்னா ஹசாரேவின் போராட்டம்.
இரண்டு, ஊடகங்களின் பங்களிப்பு.
இந்தப் போராட்டம் சரியா தவறா அல்லது தேவையா தேவையற்றதா என்பதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
ஆனால் இதில் ஊடகங்களின் பங்களிப்புதான் மிகத்தவறான முன்னுதாரணமாகிற து.
ஏற்கனவே நம் மக்கள் ஆட்டு மந்தைகளைப் போன்று ஒரே பக்கம் சாய்பவர்கள். இந்தத் தன்மையை மேலும் இவர்கள் அதிகப்படுத்துகி ன்றனர்.
ஊடக உலகில் இப்போது போட்டி அதிகரித்துவிட்ட து. இவர்களுக்கு வருமானத்திற்கு விளம்பரங்கள் தேவைப்படுகின்றன . அதற்கு TRP RATING மிக முக்கியம். சமூக சிந்தனைப் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்ல ை.
உண்மையிலேயே ஊழலை ஒழிக்க ஊடகங்கள் நினைத்தால்...
KD சகோதர்கள் கதை என்ன ஆனது?
சக்சேனா புகார்/விசாரணை என்ன ஆனது?
போஃபோர்ஸ் குத்ரோச்சி என்ன ஆனார்?
மதுகோடா என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
ப சிதம்பரம் உண்மையிலேயே வெற்றி பெற்றாரா?
போபால் விஷ வாயு கசிவு தீர்ப்பு என்ன ஆனது?
சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாளர் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட சாவுகளுக்கு யார் காரணம்?
நீதிபதி தினகரன் ராஜினாமா செய்து பின் திரும்பப்பெற்றத ு ஏன்?
இதுபோல நீண்ட பட்டியலுக்கு காரணம் தேடி போராடுங்கள்.
இன்று மட்டும் அன்னா ஹசாரே போராட்டம் இல்லாமலிருந்தால ், ஊடகங்களின் தலைப்புச்செய்தி யாக இந்திய கிரிக்கெட் இருந்திருக்கும் . எவ்வளவு கேவலமாக தோற்று இருக்கிறார்கள்? 4-0. நான் குப் போட்டிகளில் எதுவும் முழுவதுமாக ஐந்து நாட்கள் நடைப்பெறவில்லை. அனைத்து ஊடகங்களும் தோனியை கிழித்திருப்பார ்கள். ஆனால் ஊடகங்களுக்கு இப்போது அதற்கு நேரமில்லை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிற ார்கள்.
விஞ்ஞனி அப்துல் கலாமின் இன்றைய SCHEDULE என்ன? அவருடைய 2020 திட்டம் எந்த அளவில் வெற்றி பெற்றுள்ளது அல்லது நடைமுறைபடுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது ?
இதெல்லாம் யாருக்குத் தேவை? இதனால் TRP RATING கூடுமா?
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி. ஆனால் இன்று ஊடகங்களோ தங்களுடைய வெற்றிக்காக ஊரையே இரண்டாக்குகின்ற ன. பின்னர் அதில் கூத்தாடியைவிட கேவலமாக குளிர்காய்கின்ற னர்.
RSS feed for comments to this post