|
நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது, உயர்ந்து கொண்டிருக்கிறது. போராட்டம் நடக்கவில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப் பட்டது சிறிய முணுமுணுப்புக்களை தவிர போராட்டம் ஏதும் நடக்கவில்லை. இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் வகையில், அமெரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது யாரும் பேசவில்லை.
இது போல இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்கள், ஒரு கிழவன் உண்ணாவிரதம் இருந்தால் அவர் பின்னால் சென்று விடுவார்களா என்ற இறுமாப்பே….
காங்கிரஸ் கட்சி தனது தந்திரமான உபாயங்களை பயன்படுத்தி இந்த இயக்கத்தை சிதைக்கலாம் என்று தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கிறது.
ஈழத்தில் போர் தொடங்கிய காலம் முதலாக ரகசியமாக சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளை செய்து வந்தது, அம்பலப்படுத்தப் பட்டது முதலாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. ஜனவரியில் முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு, ஒட்டு மொத்த தமிழகமுமே கொதித்து எழுந்தது. தமிழகமெங்கும் போராட்டங்கள் கிளம்பின. ஆனாலும், திமுகவின் தயவால், 2009 பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தமிழக மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழ் மக்களை அழித்தது காங்கிரஸ் கட்சி.
அதே போல ஒரு தந்திரத்தை அன்னா ஹசாரே விவகாரத்திலும் கடைபிடித்து வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கட்சி கையாண்ட உத்தி, இந்த விவகாரத்தில் பலிக்காமல், கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது.
அன்னா ஹசாரேவிடம் இருக்கம் நேர்மையில் ஒரு துளி கூட இல்லாத பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றும், 1000 ரூபாய் நோட்டை ஒழித்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று அற்புதமான யோசனைகளை தெரிவித்த ஒரு நபரை, தன் அமைச்சர்களை அனுப்பி, விமான நிலையத்திலிருந்து வரவேற்று, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு அந்த நபரை இரவோடு இரவாக கைது செய்து முகத்தில் கரியைப் பூசிக் கொண்டது காங்கிரஸ். இந்துத்வா பின்னணி உள்ள ஒரு மோசடிப் பேர்விழியை நள்ளிரவில் கைது செய்தபோது எழுந்த எதிர்ப்பைப் பார்த்த உடனேயே காங்கிரஸ் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், தன் அகந்தையை கைவிடாமல், உச்சானிக் கிளையின் அமர்ந்து கொண்டு, அதே ஆணவத்தோடு அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒழித்து விடலாம் என்று நினைத்ததாலேயே இன்று கடும் நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறது காங்கிரஸ்.

அன்னா ஹசாரே, ஏப்ரல் மாதத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கிய உடனேயே, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி மழைக்காலக் கூட்டத் தொடரில் வரைவு மசோதாவை அறிமுகப் படுத்துவோம் என்று உத்தரவாதம் அளித்தது காங்கிரஸ். அதன் பிறகு தொடர்ச்சியாக நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்த எந்த யோசனைகளையும் ஏற்க மறுத்தது. மாறாக, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மீதும் ஏதாவதொரு புகாரை தெரிவித்து, அவர்களை இழிவுப் படுத்தி அதன் மூலம் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற தவறான அணுகுமுறையைக் கடைபிடித்தது.
இந்த தந்திரமான உத்திகளை காங்கிரஸ் கட்சி கையாள நினைத்த அதே வேளையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலை எழுந்திருப்பதை கவனிக்கத் தவறியது. ஐந்து நிமிடம் வெயிலில் நடக்கக் கூட சம்மதிக்காத உயர் நடுத்தர வர்க்கம், மழை வெயிலைப் பொருட்படுத்தாமல், சாலையில் இறங்கிப் போராடும் என்பதை காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியது.
இன்றைய சந்தைப் பொருளாதார, நுகர்வுக் கலாச்சாரச் சூழலில், தன் பக்கத்து வீட்டுக் காரனுக்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவி செய்ய மறுக்கும் ஒரு மோசமான சமூக சூழலில், பொதுப்பிரச்சினைக்காக யார் போராடப் போகிறார்கள் என்ற மாயையில் காங்கிரஸ் ஆழ்ந்திருந்தது.
உலக வரலாற்றில், நெருக்கடி முற்றும் போது மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள், அந்த போராட்டத்தின் முன்னே எப்படிப்பட்ட ஆணவம் மிக்க அரசுகளும் அடி பணிந்து தான் ஆக வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியது. சுதந்திரம் கிடைத்த பிறகு முதலில் வெளி வந்த முந்த்ரா ஊழல் முதல், இன்று வரை தொடர்ந்து நடக்கும் ஊழல்களைப் பார்த்து புழுங்கிக் கொண்டிருந்த மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அன்னா ஹசாரே வெளிப்பட்ட போது, மக்கள் தன்னெழுச்சியாக அவர் பின்னால் அணி திரளத் தொடங்கினர். இன்று தேசத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினைகளில் பலவற்றில் மக்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.
சாதீய ஒடுக்கு முறைக்கு எதிராக போராட அழைத்தால், நகரத்தில் வாழும் மக்கள், அது எங்கள் பிரச்சினை இல்லை என்பார்கள். விவசாயிகளின் தற்கொலைகள், அவர்கள் மனசாட்சியை உலுக்குவதில்லை. விலைவாசி உயர்வைப் பார்த்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று உறுதி பூணுவார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே ஒன்றுபடும் தளம் ஒன்று உண்டு என்றால் அது ஊழல் தான். பிறப்புச் சான்றிதழ் வாங்குவதிலிருந்து, சுடுகாட்டில் எரியூட்டுவது வரை, அன்றாடம் பல்வேறு வேலைகளுக்கு தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை லஞ்சமாக தருவது யாருக்குமே ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும், தங்கள் தலையெழுத்தை நொந்து கொண்டு, லஞ்சம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த லஞ்சத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன் என்று எல்லோராலும் நம்பப் படும் ஒரு நபர் கிளம்பிய போது, தேசம் அவர் பின்னால் அணி திரண்டதில் ஆச்சர்யம் இல்லை.
மக்களின் அந்தக் கோபத்தை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி, அவர் மீது சேற்றை வாரிப் பூசுவதன் மூலமாக போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தது. “தலை முதல் கால் வரை ஊழல் பேர்விழியான ஒருவர் ஊழலைப் பற்றி பேசுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று அன்னா ஹசாரேவைப் பற்றி மனீஷ் திவாரி கூறினார். அதே மனீஷ் திவாரி இன்று மன்னிப்புக் கேட்டுள்ளார். நேற்று வரை திமிராக பேசிக் கொண்டிருந்த கபில் சிபல், ப.சிதம்பரம், அம்பிகா சோனி போன்றோரை ஆளையே காணவில்லை.
உண்ணாவிரதம் தொடங்கும் நாளன்று காலையில் அன்னா ஹசாரேவைக் கைது செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்று அன்னா ஹசாரே என்ன சொன்னாலும் கேட்கிறோம் என்று சரணாகதி அடைந்துள்ளது. நல்ல அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சமே இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி இப்படி அந்தர் பல்டிகள் அடிப்பதற்காக காரணம். ஏறக்குறைய அன்னா ஹசாரவின் அத்தனை கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வந்துள்ளது.
இந்தக் கோரிக்கைகளை போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தையின் மூலமாக ஏற்றுக் கொண்டிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரையாவது தவிர்த்திருக்கலாமே…. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இயல்பு இதுதான். துரோகங்களின் வரலாறே காங்கிரஸ் கட்சி.
நாளை பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில், காங்கிரஸ் அல்லாத கட்சிகள், இந்த தேசத்தின் மக்கள் இருக்கும் மனநிலையை புரிந்து கொண்டு விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும். மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளத் தவறிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இருக்கும் நிலைமையை மற்ற கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அன்னா ஹசாரே போராட்டம் உணர்த்தும் செய்தி.
|
Comments
super mathu
[ஃஉஒடெ நமெ="குனசெகரன் ற. ட்"]அன்பு மதுவுக்கு, கோர்ட்டில் கட்டும் பணம் , குறைவாகவும் நியாயமாகவும், பணம் கட்டுவதற்காண காலம் வீணாகம்ல், விரைவில் கட்டுவத்ற்கு ஒரு முறை (ஆன் லைன் ) இருந்தால் , 2 வது பாயின்டே சரி.
ஊழலை ஒழிக்க டெக்னாலஜி உதவி மிக தேவை. டெக்னால்ஜி வளர்ந்திட்ட இந்த நேரத்தில் ஊழலை ஒழிப்பது எளிது.[/ஃஉஒடெ]
ஊ
ஊழலை ஒழிக்க டெக்னாலஜி உதவி மிக தேவை. டெக்னால்ஜி வளர்ந்திட்ட இந்த நேரத்தில் ஊழலை ஒழிப்பது எளிது.
why u r angry about RSS. whoever come to support anna Hazere accept their accept.
Your religious leader Buakri said why anna not fast Gujrathi muslims. Then why not savukku asking Anna not fasting for Elem Tamils. but Sauvkku not asking like that he support for Anna.
Pl try to support him or else keep quiet. Corruption is general issue every body affected by this one
உங்க சண்டையில அந்த கருப்புப் பண விவகாரத்த மறந்துடாதீங்க...
14 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு வரவும் நடவடிக்கை தேவை..
anna vazga
தமிழக கிராமங்களில், ‘நல்லவன் வருகிறான், சொம்பை ஒழித்து வை’ என்றொரு சொல்லாவடை வழக்கத்தில் உண்டு. அது போன்ற நல்லவர்களை பெருமளவில் இந்தியாவிற்கும் , உலகத்திற்குக்கு ம் வழங்கி செவையாற்றுவதில் ஆரெஸெஸ் இயக்கத்தின் பங்கு ஈடு இணையற்றது.
அத்தகைய ‘நல்லவன்களில்’ ஒரு ‘நல்லவனான’ அன்னா ஹஜாரே, இப்போது பல்வேறு அரசியல் தலைவர்களை சந்த்தித்து ஏற்கெனவே, சட்டமாக இருக்கும் ‘லோக்பால்’ மசோத எதோ தன்னால் தான் வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்று வருவதாக அரசியல் அவதானிகள் கருதும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இந்திய ஒரு பல்வேறு பட்ட கலாச்சாரம் மற்றும் மொழியை கொண்ட நாடு என்ற அடிப்படையில் ‘பெடரல்’ (ஃபெடெரல்) தத்துவத்தில் ‘மத்தியில் பொதுவாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று இயங்கும் உண்மையை அறியாமல் ‘உளறிய’ ‘அன்னா ஹாஜாரேக்கு பாஜக எஜமானர்ககள் உரிய முறையில் குட்டு வைத்த
"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா !
மோதி மிதித்து விடு பாப்பா ! அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா !"
It is a great tragedy to have such uncivilised people as our Parliament member ! Shame on you Mr Manish Tiwary ! A mere apology will not be sufficient for people like you ! You deserve a harsher punishment ! Though the great poet has written such an inspiring poem to egg the young children to spit on the faces of evil forces, you consider yourself lucky to escape such a treatment mainly because the "dharma" of non -violence !
RSS-mercinary-Anna Hazarae-snubbed-meeting-his-BJP- bosses-
பாஜக தலைவர்களால் அடக்கப்பட்ட அன்னா ஹஜாரே : அளவுக்கு மீறிய குலைப்பு
புது டில்லி ஜூலை 2 : ‘காந்தி தோல் போர்த்திய ஆர்எஸ்எஸ் கைக்கூலியான ‘அன்னா ஹாசரே’ தனது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எஜமானர்களுடன் சந்திப்பு நடத்தி, பேச்சுவார்த்தை நடத்தி மூக்குடை பட்டுள்ளது தெரியவந்துள்ளது .
தமிழக கிராமங்களில், ‘நல்லவன் வருகிறான், சொம்பை ஒழித்து வை’ என்றொரு சொல்லாவடை வழக்கத்தில் உண்டு. அது போன்ற நல்லவர்களை பெருமளவில் இந்தியாவிற்கும் , உலகத்திற்குக்கு ம் வழங்கி செவையாற்றுவதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பங்கு ஈடு இணையற்றது.
அத்தகைய ‘நல்லவன்களில்’ ஒரு ‘நல்லவனான’ அன்னா ஹஜாரே, இப்போது பல்வேறு அரசியல் தலைவர்களை சந்த்தித்து ஏற்கெனவே, சட்டமாக இருக்கும் ‘லோக்பால்’ மசோத எதோ தன்னால் தான் வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்று வருவதாக அரசியல் அவதானிகள் கருதும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இந்திய ஒரு பல்வேறு பட்ட கலாச்சாரம் மற்றும் மொழியை கொண்ட நாடு என்ற அடிப்படையில் ‘பெடரல்’ (Federal) தத்துவத்தில் ‘மத்தியில் பொதுவாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று இயங்கும் உண்மையை அறியாமல் ‘உளறிய’ ‘அன்னா ஹாஜாரேக்கு பாஜக எஜமானர்ககள் உரிய முறையில் குட்டு வைத்தனர்.
அங்குள்ள அலுவலகங்களில் இருந்து தகவல்கள் கிடைத்த உடன் ஒட்டுமொத்தமாக விசாரணை தொடங்கப்பட இருக்கிறது. தனது அறக்கட்டளை நடத்தும் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.1,100 கோடிக்கு வர்த்தகம் நடப்பதாக பாபாராம்தேவ் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் உள்ள வங்கிக்கு ரூ.40 லட்சமும், லண்டனில் உள்ள ஒரு வங்கிக்கு ரூ.1.5 கோடியும் அனுப்பப்பட்டுள் ளது. அந்த பணம் ராம்தேவ் அறக்கட்டளை மூலம் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதா? அல்லது வேறு யாருக்காவது அனுப்பப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
First of all I make a humble request to Anna ji sir AND all the the people who fasts along with him to end his fast for the sake of the nation because the we don’t want to loose you.
My age is 42 years. I have also participated in the anna hazare movement in Chennai as an Indian citizen to support the anti corruption movement.
My solution to this impasse
1. 1. TODAY OR TOMORROW MORNING Convene a all party meeting in which include social activist Anna sir ji also let he be on fasting while in meeting
2. Let THIS MEETING be his last fasting HOURS for this nation’s sake. We THE PEOPLE OF INDIA should not let this gandhian and those who fasts along with him in various parts of this country to suffer any more.
3. In the meeting let parties discuss issues and set a strict time frame unanimously I mean STRICT TIME FRAME SAY 2 or 3 days and let ALL PARTIES AGREES TO IT. (I think it is more than enough already lot has been discussed on it (consider the age of the bill is 43 years) ) Discuss the DRAFT BILLs and pass the BEST ONE that will have the strong anti-corruption LAW either through CONSTITUTIONAL AMENDMENT or through an ACT.
4. AFTER THE MEETING ANNA SHOULD END HIS FAST IN THAT MEETING ITSELF
5. PLEASE DO NOT QUOTE ANY RULES BECAUSE ALL RULES ARE FOR BENEFIT OF PEOPLE ONLY AND THESE RULES ARE MADE MY PARLIAMENTARIAN S AND MP ARE CONTROLLED/ WHIPPED BY THEIR RESPECTIVE PARTY WHATEVER RULE IS HINDERING THEM THEY CAN OVERRULE BY PRESENT PARLIAMENT
6. May be HONOURABLE MEMBERS OF PARLIAMENT may be allowed to vote as per their conscience
7. And if the bill is not passed in this time frame as agreed by all parties ALL THE MEMBERS OF THE PARLIAMENT SHOULD RESIGN AND THEY SHOULD GO FOR A FRESH MANDATE FROM THE PEOPLE.
MY NEIGHBOUR IS A WIDOW. HER FATHER WAS A RAILWAY EMPLOYEE AND HIS WIFE PREDECEASED HIM. HENCE THERE WAS NO FAMILY PENSION IN THE EVENT OF THE DEATH OF THE PENSIONER. THE GOVT HAS NOW ANNOUNCED THAT IN THE EVENT THE WIFE OF THE PENSIONER PREDECEASED HIM, THE WIDOW DAUGHTER WILL BE ENTITLED TO FAMILY PENSION IF SHE IS NOT RECEIVING ANY OTHER PENSION. THE WIDOW DAUGHTER HAS TO SUBMIT CERTAIN PAPERS TO THE RLY DEPT WHICH SHOULD BE GIVEN BY LOCAL VAO. AFTER SPENDING A LOT TIME AND OF COURSE
For all tamil speaking community in this world, cancelling the death sentence given to perarivalan, santhan and muruan is much more important than Jan Lokpal Bill or citizens' ombudsman bill.
காங்கிரஸின் அடாவடிகளான பசி,கபில் சிபல்,ஊமை பிரத்மர் சோனி ராகுல் ஆகியோரையாவது விரட்டினால் நாடு தப்பிக்கு,.http://koothadiveddai.blogspot.com/
அவனால் செய்ய முடியுமென்றால், அவனே செய்யட்டும், யாராலும் செய்ய முடியாது என்றால்
“ஆணியே புடுங்க வேண்டாம்”
அன்னா ஹசாரேக்கிட்டையோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமோ ஈழப் பிரச்சனைனா என்னனு கேளுங்க? ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டாங்க ளே, அதைப் பற்றி தெரியுமான்னு கேளுங்க.
அப்புறம் அணு சக்தி ஒப்பந்தம் பற்றி கேளுங்க..அணு சக்தி இல்லாம இந்தியாவை வல்லரசாக்க முடியாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது சரின்னுதான்னு இந்தக் கூட்டம் சொல்லும்.
தேசியக் கொடியைப் புடிச்சுக்கிட்ட ு வந்தே மாதரம் இப்ப சொல்றது எளிது. வெள்ளைக்காரன் காலத்துல சொல்லியதுதான் கஷ்டம். இப்ப அதே தேசியக்கொடி பெயரில் இந்திய அரசின் அடக்குமுறைகளுக் கு எதிராக கோஷம் போடுற போராட்டம்தான் கஷ்டம்.
காங்கிரசும் சரி, பிஜேபியும் சரி. இருவருமே அன்னாவை ஆதரிக்கவில்லை. ஊழல் என்பது வளர்ச்சி என்பதுதான் முதலாளித்துவ தத்துவம். ஊழல் மேல் மட்டத்தில் மட்டும் இருக்க வேண்டும், கடைசி வரைச் செல்லக் கூடாது என்பதுதான் முதலாளித்துவத்த ின் வளர்ச்சிக்கான ஃபார்முலா. மன்மோகனும் அதைத்தான் முயற்சிக்கிறார் . அன்னா ஹசாரேவும் அதைத்தான் முயற்சிக்கிறார் .
முதலாளித்துவ ஆதரவாளர்களும் அதற்கு எதிரான கொள்கை கொண்டவர்களும் மோதிக்கொள்ள வேண்டிய ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் முதலாளிகளே இரு குழுக்களாக பிரிந்து போராடிக்கொண்டிர ுக்கிறார்கள். திருடர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து திருட்டை ஒழிப்பதற்காகப் போராடும் காமெடிப் போராட்டம். அரசியல் லாபத்துக்காக காங்கிரசைப் பதவியிலிருந்து தூக்கியெறியலாம் . ஆனால் இவர்கள் ஊழலை ஒருபொழுதும் ஒழிக்கப் போவதில்லை. கீழ் நிலை மக்களுக்கு ஒழுக்கம் போதித்துவிட்டு மேலே இவர்கள் சுரண்டிக்கொண்டி ருக்கப்போகிறார் கள். வறட்டு தேசியம் வளர்வதுதான் மிச்சம்.
லஞ்ச ஊழல் பற்றிய விழிப்புணர்வை இன்னும் கூடுதலாக பரப்பவும்,
லஞ்ச ஊழலுக்கெதிராக குரல் கொடுத்து செயல்படுத்திடும ் வகையில் தொடர்ந்து போராட வேண்டும். அதுவே வலிமையான இந்தியாவாக மற்றி, உலக அளவில் இந்
Anna mainly argues adding lower bureaucracy under lokpal. If they spare it, the higher bureaucracy ll comfortably scapegoat the lower bureaucracy for the default done by the higher officials. Support Anna..
சுதந்திரம் கிடைத்த பிறகு முதலில் வெளி வந்த முந்த்ரா ஊழல் முதல், இன்று வரை தொடர்ந்து நடக்கும் ஊழல்களைப் பார்த்து புழுங்கிக் கொண்டிருந்த மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அன்னா ஹசாரே வெளிப்பட்ட போது, மக்கள் தன்னெழுச்சியாக அவர் பின்னால் அணி திரளத் தொடங்கினர். இன்று தேசத்தைப் பீடித்திருக்கும ் பிரச்சினைகளில் பலவற்றில் மக்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.
லஞ்சத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன் என்று எல்லோராலும் நம்பப் படும் ஒரு நபர் கிளம்பிய போது, தேசம் அவர் பின்னால் அணி திரண்டதில் ஆச்சர்யம் இல்லை.
மக்களின் அந்தக் கோபத்தை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி, அவர் மீது சேற்றை வாரிப் பூசுவதன் மூலமாக போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தது.
“தலை முதல் கால் வரை ஊழல் பேர்விழியான ஒருவர் ஊழலைப் பற்றி பேசுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று அன்னா ஹசாரேவைப் பற்றி மனீஷ் திவாரி கூறினார். அதே மனீஷ் திவாரி இன்று மன்னிப்புக் கேட்டுள்ளார். நேற்று வரை திமிராக பேசிக் கொண்டிருந்த கபில் சிபல், ப.சிதம்பரம், அம்பிகா சோனி போன்றோரை ஆளையே காணவில்லை.
அப்பப்பா
சரியான கட்டுரை
அருமையான பதிவுகல்
காங்கிரசுக்கு சரியான சவுக்கடி
பரப்புரை செய்யலாமே இக்கட்டுரையை
நோட்டீஷ் மூலம்
RSS feed for comments to this post