|
அன்பு உறவுகளே….. சென்னை உயர்நீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்ட இந்த மகிழ்ச்சியான தருணத்தில்,
தமிழக சட்டப் பேரவையில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து, சட்டப் பேரவையில் தீர்மானத்தை தமிழகத்தின் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றியுள்ளார். ஜெயலலிதா முன் மொழிந்த தீர்மானத்தை, சட்டப் பேரவை ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த தீர்மானம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று பின்னர் பார்ப்போம்.
முதலில், நாம் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு தெரியுமா ? முருகன், சாந்தன் மற்றும் அறிவு ஆகியோருக்கும் தான். அவர்களுக்கு எதற்கு நன்றி ?
என்றுமே நடக்காத வகையில், தமிழினத்தை ஒன்று பட்டு அநீதிக்கு எதிராக கொதித்து எழ வைப்பது சாதாரண காரியமா என்ன ? எது நடந்தாலும் எனக்கென்ன என்று இருக்கும் தமிழகத்தை பார்த்து வருத்தப்பட்டதுண்டு. ஆனால், மூவருக்கும் தூக்கு என்ற செய்தியைக் கேட்டவுடன், அத்தனை அன்பு உள்ளங்களும், கொதித்து எழுந்தன. ஏதாவது செய்து அந்த மூவர் உயிரைக் காப்பாற்ற மாட்டோமா என்று தவித்தன. சமூக வலைத்தளங்களில், இந்த மூவருக்காக கண்ணீர் விட்ட நெஞ்சங்களைக் காண முடிந்தது. மாணவர்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒரு சேர குரல் கொடுத்தனர். பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டி கோரிக்கை வைத்தன. குறிப்பாக "மதுரை தினகரன் அலுவலகத்தில் இறந்த மூன்று பத்திரிகையாளர்களின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மட்டும் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்றால், இவர்களும் மன்னிக்கப்படத்தான் வேண்டும்." என்று தலையங்கம் எழுதிய தினமணியின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. இந்தத் தலையங்கம், சட்டமன்றத் தீர்மானத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. தமிழகத்தின் அத்தனைக் கட்சிகளும், ஒரே குரலில், மூவர் உயிரைக் காப்பாற்று என்று உரத்துப் பேசின. ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும், இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு சேர மூவர் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கோரியது எவ்வளவு மகிழ்ச்சியளித்தது தெரியுமா ?
இன்று இந்த மகிழ்ச்சியான சமயத்தில் ஒரே ஒரு நெருடல், தோழர்.செங்கொடியின் மரணம் தான். அந்தத் தோழர் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கக் கூடாதா ? நீதிமன்றங்கள் இருக்கின்றன. போராட, கோடானு கோடி தமிழ் உறவுகள் இருக்கின்றன… அப்படியா மூவர் உயிரைப் பறிக்க விட்டு விடுவோம் ?

மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப் பட்டு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்ற வரலாறு காணாத அளவுக்கு கூட்டம். வழக்கு நடந்த 4வது நீதிமன்றத்தின் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு நெரிசல். நீதிமன்ற அறைக்கு வெளியே 500 பேர் திரண்டிருந்தனர். நீதிமன்றத்துக்கு கீழே, 2000த்துக்கும் அதிகமானோர் திரண்டு முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.


மூவர் சார்பாக, புது தில்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, காலின் கான்சால்வேஸ் மற்றும் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மூச்சு விடக் கூட இடமில்லாத அந்த நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி தன் வாதத்தை தொடங்கினார்.
11 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து சாவகாசமாக குடியரசுத் தலைவர் அலுவலகம் இந்தக் கருணை மனுவை நிராகரித்திருக்கிறது. 2 வருடங்கள் தாமதமாக நிராகரித்த நேர்வுகளில் கூட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டிருக்கிறது. எதற்காக இந்தத் தாமதம் என்பதை அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். முதன் முறை மாநில அரசிடம் கருணை மனு சமர்ப்பித்த போது 5 மாதங்களில் நிராகரித்திருக்கிறார்கள். இவருக்கு எதற்காக 11 ஆண்டுகள் ? ஒரு மனிதனை அவன் இருக்கும் சிறையிலிருந்து வெளியே எடுத்து தூக்கிலிட 30 வினாடிகளே ஆகும். இந்த 30 வினாடிகளை மூன்று பேர் 11 ஆண்டுகளாக அனுபவத்துக் கொண்டிருப்பதை எண்ணிப் பாருங்கள். என்று வாதிட்டார்.
அவருக்கு பிறகு வாதாடிய காலின் கான்சால்வேஸ் பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் கூறி, ஏன் இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.
இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர், மத்திய அரசு 8 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, 8 வாரங்களுக்கு மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்தத் தகவல் கீழே குழுமியிருந்த தோழர்கள் காதில் விழுந்ததும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தனர் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அய்யா நெடுமாறன், சீமான், அறிவின் தாயார் அற்புதம் அம்மையார் ஆகியோர் கீழே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அற்புதம் அம்மையார், குழுமியிருந்த கூட்டத்தையும், கோஷங்களையும் கண்டு தன் மகனைச் சாக விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், வழக்கறிஞர்கள் என்று அத்தனை முகங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்தத் தீர்ப்புக்கு முன்னரே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அந்தத் தீர்மானம் பின்வருமாறு
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து
ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.
அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.
மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம்
""தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."
முடிவுரை:
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.“
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது, சட்டப் பேரவையில் இருந்த ஒரே காங்கிரஸ் உறுப்பினர் விஜயராணி. என்ன நடக்கிறது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போதே தீர்மானம் பலத்த கரவொலியோடு நிறைவேற்றப் பட்டது. “என்னடா இது… இப்படி ஒரு தீர்மானம் போட்டு விட்டார்களே…. எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று பார்த்தால், பேச்சு துணைக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை” என்ற யோசித்தவர், தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பிறகு, வெளியே வந்த அவர், பத்திரிக்கையாளர்களை அழைத்து, காங்கிரஸ் கட்சி இதை எதிர்க்கிறது என்று கூறி விட்டு, மீண்டும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை. மூவரை தூக்கிலிட வேண்டும் என்ற முடிவை எடுத்ததன் மூலம், தமிழ் நாட்டில், இப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. சரி, ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் கட்சி ஒழிந்தால் நமக்கு என்ன கசக்கவா போகிறது….. காங்கிரஸ் கட்சி சுத்தமாக அழிந்து போனதும், சத்யமூர்த்தி பவனை செங்கொடி நினைவகமாக மாற்றுவோம்.

இன்று சட்டப் பேரவை இயற்றியிருக்கும் தீர்மானத்தினால் என்ன பயன் விளையப் போகிறது ?
ஒரு மாநில அரசின் சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மீறி குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரிக்க முடியாது. அப்படியே, நிராகரித்தாலும் அந்த மூவரை மாநில அரசுக்கு அவர்கள் விண்ணப்பம் அளித்தால், மீண்டும் மாநில அரசு அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 161ல் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நிச்சயம் இந்த தண்டனையை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டப் பேரவையில் மார்ச் 1991ல் மத்திய அரசு மாநில அரசுக்கு எழுதிய ஒரு விளக்க கடிதத்தின் படி, குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த ஒரு நேர்வில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த குறிப்பிட்ட கடிதத்தில் சொல்லப் பட்டிருப்பது இதுதான்.
“... ...
2. The Government of India, on an examination of the matter, and after taking all relevant constitutional aspects into view, direct in terms of article 257(1) of the Constitution of India that in cases of death sentences where a petition for grant of pardon etc. has earlier been rejected by the President of India in exercise of his powers under article 72 of the Constitution of India, it would not be open for the Government of a State to seek to exercise similar powers under article 161 in respect of the same case. However, if there is a change of circumstances or if any new material is available, the condemned person himself or any one on his behalf may make a fresh application to the President for reconsideration of the earlier order. Once the President has rejected a mercy petition, all future applications in this behalf should be addressed to and would be dealt with by the President of India.”
வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்த பிறகு சவுக்கு அறிவது, மாநில அரசுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கியுள்ள அதிகாரமானது உச்ச பட்சமானது. ஒரு நிர்வாக ரீதியான அறிவுரைக் கடிதத்தை வைத்து, அந்த அதிகாரத்தை தடுக்க முடியாது. மேலும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் படும், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 257 (1) என்ன கூறுகிறது என்றால்
257. Control of the Union over States in certain cases (1) The executive power of every State shall be so exercised as not to impede or prejudice the exercise of the executive power of the Union, and the executive power of the Union shall extend to the giving of such directions to a State as may appear to the Government of India to be necessary for that purpose.
அதாவது இந்த ஷரத்து என்ன சொல்கிறதென்றால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் போது, மத்திய அரசின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்யாத வகையில் பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறது. உதாரணத்திற்கு, தற்போது, மூவரின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதென்றால், அப்போது குறுக்கீடு செய்யும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் கருணை மனுவை ஏற்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தை வழங்கும் பிரிவு 72 (3) என்ன கூறுகிறது தெரியுமா ?
(3) Nothing in sub-clause (c) of clause (1) shall affect the power to suspend, remit or commute a sentence of death exercisable by the Governor of a State under any law for the time being in force.
அதாவது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு நிலுவையில் இருக்கும் போது கூட, மாநில அரசுக்கு 161ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க இயலாது என்பதுதான்.
ஆகையால், மூவர் உயிரை அத்தனை எளிதில் பறித்து விட முடியாது. மேலும் மீண்டும் குடியரசுத் தலைவர் இந்தக் கருணை மனுக்களை நிராகரித்தால் கூட, மீண்டும் மாநில அரசு மரண தண்டனையை ரத்து செய்ய முடியும்.
வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே……
|
Comments
சவுக்கு நீங்கள் பத்திரிக்கை நடத்த வந்தீர்களா? சார்பு நிலை அரசியல் நடத்த வந்தீர்களா?
திரு வைகோ வின் அனுகுமுறைகள் சில மக்களால் ஏற்று கொள்ள முடியமல் போனது நிதர்சனம். ஆனால் உங்கள் கட்டுரை எதை சொல்லி இருக்க வேண்டுமோ அதை தவறி விட்டதாய் உணர்கிறோம். உங்களது பாரபட்சமான எழுத்து இந்த இருட்டடிப்பு களைகளை உரம் இட்டு வளர்ப்பது போல இருக்கிறது.
இதை தொடர்ந்து பிரசுரிக்கப்பட் ட யாவையும் வாசிப்பதற்கு எங்கள் மணம் ஏற்க்கும் நிலையில் இல்லை. ஜு.வி நக்கீரன் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி [ப்]இருக்கிறது?
நீங்கள் இதழியல் தர்மத்தை எதற்க்காகவோ தெரிந்தும் தொலைத்திருக்கிற ீர்கள்.
நீங்களாய் மாற்று கட்டுரை வெளியிடும் வரை இந்த வாசகர்கள் உங்களை நாடி வரப்போவதில்லை. உங்கள் தவறால் பல நல்ல இதயம் கொண்ட முகம் காணா நட்பை நீங்கள் இழப்பது உறுதி.
--- கிருஸ்--
Quoting சதீஷ், சென்னை:
களா ?
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.டெஹெல்க.சொம்/ச்டொர்ய்_மைன்50 .அச்ப்?ஃபிலெனமெ=ணெ100911சச்ரெட்.அச்ப்
சங்கரராமன் கொலை வழக்குல இருந்து தப்பிக்க, சாட்சிகளை கலைக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், காவல் துறை அதிகாரியிடம், சுமார் நான்கு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது. பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?
இப்போ, நீதிபதியிடம் விலை பேசுறான். பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?[/ஃஉஒடெ]
மனுதர்மப் படி ஒரு பிராமணன் கொலை செய்தால் அவனை உடல் நோகாமல் உயிர்வாழத் தேவையான அனைத்து செல்வத்தையும் கொடுத்து நாடுகடத்த வேண்டும். மற்ற வர்ணத்தார் செய்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை தான். எல்லாம் சரியா தானே நடக்குது. என்ன பிரச்சனை உங்களுக்கு?
கட்டுரையின் சாராம்சம் எல்லாம் சரிதான். ஆனால், ராம்ஜெத் மலானியை கொண்டு வந்து வாதாடிய வை.கோ வை தாங்கள் புறக்கணிப்பதின் நோக்கம் சுயநலமாக இருப்பின், உண்மையிலேயே தலைகுனிவேன் இத்தனை நாள் சவுக்கின் விசிறியாய் இருந்தமைக்கு. முதலை கருநாயின் திருட்டுத்தனத்த ை வெளியிடும் போதெல்லாம் மகிழ்ந்தேன் ஆளும்கட்சிக்கு எதிரான சவுக்கு இது என்று எண்ணி. இப்பொழுது அம்மாவின் ஆட்சிக்கு தாங்கள் கூழை கும்பிடு போடுவதுபோல் உள்ளது. வை.கோ என்னும் ஆளுமையினை தவிர்த்து ஈழம் தொடர்பான போராட்டங்களை நோக்குவது கண்ணை மூடி காட்டில் நடப்பது போன்று. எத்தனை பேர் நீங்கள் வைக்கோவை புறக்கணித்தமைக் கு எதிர்ப்பு தெரிவித்தனர், எவற்றிற்குமே தாங்கள் மறு கருத்து வெளியிடவில்லையே ? ஒருவேளை நான் அப்படிதான் எழுதுவேன் வேண்டுமானால் படி என்று நினைப்பீரேயானால ், உங்களின் பின்னால் ஒரு காலத்தில் முகமே தெரியாமல் அணிவகுத்த நண்பர்களை வெகு விரைவில் இழப்பீர்கள். எத்தனையோ நண்பர்களுக்கு நமது தளத்தை நடுநிலை தளம் என்று பரிந்துரைத்தேன் , இப்போது அவர்களை காண கூசுகிறது மனம்.
இதை பற்றிய உங்களின் கருத்தை அறிய ஆவல். என்றுமே ஈழத்தின்பால் தாங்கள் கொண்டுள்ள நிலையில் எனக்கு சந்தேகமில்லை என்பதை நினைவிற்கொள்க.
என்றும் அன்புடன்,
சதீஷ் முருகன்.
9944094164
பட்சமாக சவுக்கு செயல் படுவது நல்லதா?
இந்த முன்று பெயரின் தண்டனைனை ரத்து செய்ய அண்ணன் வைகோ பட்டபாடு
உலகம் உணர்துள்ளது, வாதட வந்த இந்தியா தலை சேர்ந்த வக்கீல் திரு.ராம்ஜெத்மாலினி
அவர்களே வைகோ வை பாராட்டுங்கள் என்று சொல்லயுள்ளார், ஆனால் சவுக்கு அந்த வார்த்தைக்கு சமாதி கட்டுவது நல்லதா? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நாங்கள் விழ,விழ, எழுவோம், கடந்தகாலங்களை மறவாதீர், ஜெயா புத்தி நெரந்தரம் இல்லை என்பதை உனுருங்கள், இனி அண்ணன் வைகோ கையசைவிலே தான் தமிழக அரசியல் களம் மெத்தனை, எத்தனை சுழுச்சிகள், எத்தனை,எத்தனைகய வர்களின் காட்டிகொடுப்புக ள்! என்றுபகைவர்களால ் தரபட்டாலும வெற்றி நோக்கியே பயணம் தொடரும்[/ஃஉஒடெ]
பல்லாவரம் சம்பத் அண்ணே,
என்று ஈழப்போராட்டத்தி ன் நியாயமும், அதில் ஒட்டு மொத்த தமிழனின் பங்கு என்ன என்றும் மிகச் சரியாக "ஓட்டு வங்கிகள்" என்று சொல்லப் படும் இங்குள்ள தமிழக மக்களுக்கு கொண்டுசெல்லப் பட (முதலில் ஜெயாவும்,மத்திய அரசும்,கருணாவும ் அனுமதிக்க வேண்டும்..!!!) போகிறதோ அன்று வைகோ போன்றோர் நாடாள்வது நிச்சயம். கவலை விடுங்கள். வீழ்ந்துவிட்டோம ் என்று நினைத்தார்கள். எழுந்தோம். "என்ன தான் நீதிமன்றத்தில் வாதாடினாலும், இவர்களுக்கு தூக்கு நிச்சயம்" என்று உளறிய சோ,சு.சாமி,தினமலம் போன்ற நாதாரிகளின் முகத்தில் தற்போது கரி. இவர்கள் போன்றோர் என்ன வாந்தி எடுக்கிறார்கள் என்பதை ஒரு பொருட்டாக கொள்ளாமல் இலக்கு நோக்கி பயணிப்போம். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
நான் உண்ணா விரதம் நடந்த அணைத்து நாட்களும் அங்கு தான் இருந்தேன், வைகோ போன்ற நல்ல தலைவைரை இதுவரை சந்திக்காமல் இருந்ததற்காக மிகவும் வருந்தினேன், என்ன ஒரு உழைப்பு !!! .. அவர் எந்த நேரத்தில் உறங்குகிறார் என்று அறிந்து கொள்ள அவ்வளவு ஆசைப்பட்டேன், முடியவில்லை.
நம் இனத்திற்காக போராடும் அணைத்து தோழர்கள் , நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல.
களா ?
http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne100911sacred.asp
சங்கரராமன் கொலை வழக்குல இருந்து தப்பிக்க, சாட்சிகளை கலைக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், காவல் துறை அதிகாரியிடம், சுமார் நான்கு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது. பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?
இப்போ, நீதிபதியிடம் விலை பேசுறான். பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?
Why u r not understanding the ground reality of vaiko in this matter.
முத்துக்குமாரின ் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு படிக்க வேண்டிய கட்டுரை - எல்லோரும் கட்டாயமாக படிக்க வேண்டியது - மீண்டும் மீண்டும் - தமிழர்களே சிந்தியுங்கள், விழித்தெழுங்கள்
http://www.eelamwebsite.com/?p=1440
சீமான் எல்லாம் பெயருக்கு வந்தவர்...உண்மையான் அக்கறை எவருக்கும் இல்லை.... சவுக்கு இது போன்று இருட்டடிப்பு செய்து வெளியிட்டால் உங்களின் நற்பெயர் பாதிக்குமே தவிர...வைகோவின் மேன்மையான முயற்சி மக்களுக்கு தெரியாமல் போகாது.... தமிழகதின் அப்பழுக்கற்ற ஒரு தலைவனை போற்ற வில்லை என்றாலும் பரவாயில்லை..இவரின் உழைப்புக்கு மையாதை கொடுங்கள்.....நன்றி....[/ஃஉஒடெ]
சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன். செங்கொடி மரணத்திற்கு பின் , காஞ்சி ஓரிக்கையில் நெடுமாறன், வைகோ,திருமா,சீம ான் , பா ம க மணி ஆகியோர் ஓன்று கூடி இறுதி ஊர்வலம் எப்படி செய்வது என்று பேசினார்கள். சீமான் , செங்கொடியின் உடலை எடுத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்சென்று மக்களுக்கு ஒரு எழுச்சியை உருவாக்க வேண்டும் என்று கூறினார். அனால் அதை மற்ற அனைவரும் ஒருமனதாக எதிர்த்தார்கள். அதேபோல் இவர்கள்தான் முத்துக்குமாரின ் உடலை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லவேண்டும் என்ற அவரின் மரண சாசனத்தின் படி செய்யாமல் சட்டக்கல்லோரி மாணவர்களை அடித்து உதைத்து முத்துகுமாரின் உடலை கைப்பற்றி உடனே எரித்தவர்கள் இவர்கள். ஆக வைகோவும், திருமாவும், நெடுமாறனும் , ராமதாசும் ஒட்ட்ருமையாக இருந்து தமிழினத்தின் எழுச்சியை தடுக்கிறார்கள்.
முத்துக்குமாரின ் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு படிக்க வேண்டிய கட்டுரை - தமிழர்களே சிந்தியுங்கள், விழித்தெழுங்கள்
http://www.eelamwebsite.com/?p=1440
முடியும் என்றால் உங்களை நான் பாராட்டுகிறேன். இல்லை என்றால் அவர்கள் சரியானவர்கள் தான் என்று இன்னொரு முரை உருதி செய்து கொள்ளுங்கள்.
I agree with you MR..Hard to find people like you
Part1:
http://www.youtube.com/watch?v=rXUhzxYFWoQ
Part2:
http://www.youtube.com/watch?v=nblKjkwyeN4&feature=related
Part3:
http://www.youtube.com/watch?v=-hxcEDC95cU&feature=related
Part4:
http://www.youtube.com/watch?v=mFuT6h_nlts&feature=related
Part5:
http://www.youtube.com/watch?v=KpigfTxWbC4&feature=related
Part6:
http://www.youtube.com/watch?v=enWPADWo4rk&feature=related
Part7:
http://www.youtube.com/watch?v=tVXZduKNgKA&feature=related
Part8:
http://www.youtube.com/watch?v=1K4G26NR4Ck&feature=related
Part9:
http://www.youtube.com/watch?v=1gwbteDZlIU&feature=related
Thanks to JJ
Tamilscafe.blogspot.com
Thanks to JJ.
ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில், இதில் வைகோவின் பங்கைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல் விட்டு உங்களது ஒரு சார்பு நிலைமைய வெளிப்படுத்திட் டீஙக.
வைகோ இவர்களின் உயிரைக் காக்க எவ்வளவு போராடினார், போராடிக்கொண்டு இருக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். இரவு பகல் பாராமல் எங்கெஙகல்லாம் போராட்டம் நடக்கிறதோ அங்கெல்லம் சென்று தான் ஒரு கட்சியின் தலைவன் என்ற எந்தவித அகந்தயும் இல்லாமல் அவர்களுடன் கூடி நின்று முழக்கமிட்டு, அவர் தமிழர்களுக்கு ஆற்றும் தொண்டு அளவிட முடியாதது.
வைகோ-வால் இங்கு வாதாட வந்தேன் என்று ராம்ஜெத்மாலனியே கூறிவிட்டார். அதற்குப் பிறகும் வைகோவைப் பாராட்ட உஙகளுக்கு மனம் இல்லை. என்னவென்று சொல்வது?
கெட்டவர்களைத் தூற்றினால் மட்டும் போதாது. தூய உள்ளத்துடன் தமிழர்களுக்காக போராடும் தலைவர்களையும் இனம் கண்டு பாராட்ட வேண்டும். அதுதான் இதழியல் தர்மம்.
http://youtu.be/LNIYtzwGf7c
இந்த இரு வாரங்களில், இந்த போராடத்தின் பின் இருந்து வழி நடத்தியவர்கள் யாவரும், தாங்கள் நடத்திய போராட்டத்தில் எந்த இடத்திலும் தங்கள் இயக்கத்தின் அடையாளத்தை காட்டி கொண்டதில்லை (அது, மே 17 ஆகட்டும், பெரியார் தி கா ஆகட்டும், மதிமுக ஆகட்டும், அல்லது காஞ்சி மக்கள் மன்றம் ஆகட்டும்.... ) .. ஒருமித்த கருத்து கொண்டு , அரசியலை கடந்து , நம் 3 சகோதரர்களின் உயிர் காக்க இவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற இது முக்கிய காரணம்.....இத்தகைய ஒருங்கிணைப்பை , உடைத்தெறிய சிலர் பெரிதும் முயற்சிக்கிறார் கள்....தமிழினமே உஷார்!
i love my TAMILNADU
/////////////மனசாட்சியை தொட்டு சொல் . உண்மையாக இந்த மூன்று உயிர் காக்க முயற்சிதாயா ?//////////
விட்டா எல்லா உண்மையும் இப்போவே சொல்லிடிவீங்க போலிருக்கு
தகுதி இல்லாதது பிரமாண்டமாக தெரிந்தாலும்
என்றேனும் ஒரு நாள் அழிந்தே தீரும்
சீக்கியர்களை கொன்ற அத்தனை பேருக்கும் தூக்கு தண்டனை கொடுத்து விட்டீர்களா ?
குமரன்சிஎன்டிச் ட்ச்
நானும் ஒரு சாதாரண வாசகன் தான். பின் ஊட்டம் எழுதிய நிறைய நண்பர்கள், வைகோ வை சவுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டதாக எழுதுகிறார்கள்.. அப்படிப்பட்டவர் கள் இந்த கட்டுரையில் இ்ணைக்கப் பட்டுள்ள படத்தைப் பாருங்கள் அதில் வைகோ இருக்கிறாரா? இல்லையா?
நாம் பெரும்பாலும், படிப்பதையும், கேட்பதையுமே செய்கிறோம். ஓவியுமும், ஒளிப்படங்களை சொல்கிறவற்றை கவணிக்கத்தவறுகி றோம்..
சீமான் எல்லாம் பெயருக்கு வந்தவர்...உண்மையான் அக்கறை எவருக்கும் இல்லை.... சவுக்கு இது போன்று இருட்டடிப்பு செய்து வெளியிட்டால் உங்களின் நற்பெயர் பாதிக்குமே தவிர...வைகோவின் மேன்மையான முயற்சி மக்களுக்கு தெரியாமல் போகாது.... தமிழகதின் அப்பழுக்கற்ற ஒரு தலைவனை போற்ற வில்லை என்றாலும் பரவாயில்லை..இவரின் உழைப்புக்கு மையாதை கொடுங்கள்.....நன்றி....
முதலில் congress dmk udan irukkum uravai vidavendum. indha rajiv kolayil dhimukavin pangu miga periadu. Mu Ka vudan kai korthu kollai adithu kodigalai suruttia indha katchikku muruganium marravargaliyum kolvadarku munnal indha mukavai odukki thalli kuppaiyil pottal tan congressin manam pizahikum
selvaraj
உம்முடைய துறை ரீதியிலான வழக்குகளில் வெற்றி பெறவும் உயர் அதிகாரிகளின் எதிர்ப்பையும் ஆளும் கட்சிக்கு எதிராக துணிச்சலாக ஒரு சமயத்தில் தைரியமாக இருந்ததற்கும் சவுக்கு என்ற ஒரு நேர்மையான துணிச்சலான நபர இருந்தார் என்ற எண்ணத்துடன் வாழ்த்துக்கள் கூறி வெளியேறுகிறேன்.
நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்குப் பின்னர் வெளியே வந்த ராம்ஜேத்மலானியி டம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நான் இங்கு நிற்க முதல் காரணம் வைகோதான். அவர் எனது நெருங்கிய நண்பர். அவருக்காகத்தான் வந்தேன். இன்று இங்கு நீதி நிலை நாட்டப்பட்டுள்ள து. நிச்சயம் நீதி சாகாது என்றார் ராம்ஜேத்மலானி.
திராவிட பேரியக்கத்தின் தளபதி, கருஞ்சால்வை வைகோ வை சாதீயரீதியாக பிரித்து பார்க்கும், சாதிவெறி தமிழ் தேசியர்களுக்கு சவுக்கடி!வாழ்க வைகோ
THEN THERE ARE PEOPLE INDULGING IN ONEUPMANSHIP IN EELAM TAMIL. UNFOTUNATELY PRESS AND VISUAL MEDIA VERY ABLY SUCCEED IN IMAGE BUILDING OF THESE SEF-SERVING PERSONA.. BUT I HAVE BEEN OBSERVING SINCE 1985 THAT VAIKO IS CONSITENTLY UPHOLDING THE CAUSE OF TAMILS INSIDE AND OUTSIDE OF PARLIAMENT. HE IS A TRUE POLITICIAN BUT ABOVE PETTY POLITICS.. LET THE TAMIL WORLD KNOW THE TRUTH ONEDAY.
If you want blame vaiko you are publishing separate article.while you are in the position to appreciate ,you are not at all doing.
VAIKO has done lot of things to release this three tamil youths,thats why Ram Jethmalani told to press ,you are gratefull to VAIKO, not to me.
RSS feed for comments to this post