|
மூன்று தமிழர்களை தூக்குக் கொட்டடியிலிருந்து காக்க வேண்டும் என்று சவுக்கில் கட்டுரை எழுதிய போது, ஒரு சில தோழர்கள், ஏன் அப்சல் குருவுக்காக குரல் கொடுக்கவில்லை என்று கேட்டிருந்தனர். மரண தண்டனை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும் என்பதே சவுக்கின் நிலைபாடு. அஜ்மல் கசாப் கூட தூக்கிலிடப் படக் கூடாது. அஜ்மல் கசாப் தீவிரவாதி, தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறான் என்றால், அவனை தூக்கிலிடுவதன் மூலம், நாமும் நாகரீகத்திலிருந்து பிறழ்ந்து, தீவிரவாதியாகிறோம்.
உலகில் அரபு நாடுகளை விடவும் நாம் நாகரீக சமுதாயமாக திகழ்கிறோம் என்பதில் சந்தேகம் கிடையாது. அரபு நாடுகள் மற்றும் சீனாவில் 2010ம் ஆண்டில் மட்டும் எத்தனை பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். சீனா 5000, ஈரான் 252, வட கொரியா 60, ஏமன் 53, அமெரிக்கா 46, சவுதி அரேபியா 27, லிபியா 18, சிரியா 17. இந்தியாவில் 2004க்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப் படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
மரண தண்டனை என்பது ஒரு மனிதாபிமானமற்ற ஒரு செயல் என்பதில் எந்த விதமான மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. “கண்ணுக்கு கண் என்றால் உலகமே குருடாகி விடும்” என்ற காந்தியின் வரிகளை விட, எளிமையாக விளக்குவது முடியாது.
அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். 1948ம் ஆண்டில் லாஸ் ஏன்ஜெலிஸ் நகரில் ஒரு நபர் கைது செய்யப் படுகிறார். அவர் பெயர் கேரில் செஸ்மேன். (Caryl Chessman) 1947 முதல் லாஸ் ஏன்ஜலீஸ் நகரில், தொடர் கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு நபர் சிவப்பு விளக்கை சுழல விட்டுக் கொண்டு காரில் செல்பவர்களை மறிப்பார். காவல்துறையினர் என்று நினைத்ததும் பொதுமக்கள் வண்டியை நிறுத்துவார்கள். வண்டியை நிறுத்தியதும், துப்பாக்கியை எடுத்து, வண்டியில் உள்ளவர்களிடம் காண்பித்து, பணத்தையும், நகையையும் எடுங்கள் என்று கொள்ளையடித்துச் செல்வார். இவ்வாறு நடக்கையில் இரு சம்பவங்களில் இரு பெண்களை பாலியல் பலாத்காரமும் செய்திருந்தார்.

கேரில் செஸ்மேன்
இதன் பிறகு ஒரு நாள், ஒரு கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கின்றனர் என்ற தகவல் அறிந்து காவல்துறையினர் அவர்களை துரத்திப் பிடிக்கையில், அதில் பிடிபடும் நபரின் காரிலிருந்து சிகப்பு சுழல் விளக்கையும், துப்பாக்கியையும் கைப்பற்றுகின்றனர். இவன்தான் சிவப்பு விளக்கு கொள்ளையன் என்று முடிவு செய்கின்றனர். அவ்வாறு போலீசாரால் பிடிபட்ட நபர்தான் கேரில் செஸ்மேன்.
1948ல் அந்த வழக்கு விசாரணை சந்தேகத்திற்குரிய முறையில் நடைபெறுகிறது. செஸ்மேன் துன்புறுத்தப் பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு கட்டாயப் படுத்துகிறார். பின்னாளில் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் மறுத்தாலும், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் தண்டிக்கப் படுகிறார். வழக்கு விசாரணை முடிவடையும் முன்பாக, அந்த விசாரணையை பதிவு செய்து கொண்டிருந்த நீதிமன்றத்தின் சுருக்கெழுத்தர் இறந்து போகிறார். அரசு வழக்கறிஞரின் உறவினர் சுருக்கெழுத்தராக நியமிக்கப் படுகிறார். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். குற்றம் சாட்டப் பட்டவரின் ஒப்புதலைக் கூட பெறாமல், அவர் விசாரணையை பதிவு செய்கிறார். அந்த பதிவின் அடிப்படையில்தான், செஸ்மேனுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களைப் போலவே, செஸ்மேன் மரண தண்டனையை எதிர்நோக்கி 12 ஆண்டுகள் காத்திருக்கிறார். இவரின் மரண தண்டனை 8 முறை, இறுதி நேரத்தில் தடை விதிக்கப் படுகிறது. இவரின் மரண தண்டனைக்கு தடை விதிக்கப் பட்ட போதெல்லாம், நேற்று டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில் அர்னாப் கோஸ்வாமி “எப்படி மரண தண்டனையை நிறுத்தலாம் ?” என்று கேள்வி கேட்டது போலவே, அமெரிக்க மக்கள் கேட்டார்கள். நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 8 முறை இவ்வாறு நிறுத்தியதன் மூலம், உலகப் புகழ் பெற்றார் செஸ்மேன்.
கலிபோர்னியா மாகாணத்தில், மரண தண்டனை விஷ வாயு மூலம் நிறைவேற்றப் படும். மரண தண்டனை விதிக்கப் பட்ட நபர், ஒரு அறைக்குள் அடைக்கப் பட்டு, நாற்காலியோடு சேர்த்துக் கட்டப் படுவார். அந்த அறைக்குள் விஷ வாயு வீசப்படும். அந்த விஷவாயுவை சுவாசித்த நபர் இறந்து போவார். இதுதான் நடைமுறை.
நான்கு முறை, விஷவாயு அறைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பின் செஸ்மேனின் மரண தண்டனை நிறுத்தப் பட்டிருக்கிறது. ஒரு முறை அந்தச் சிறையின் தலைமை வார்டன், உன்னால் உண்மையிலேயே மரண தண்டனையை நிறுத்த முடியும் என்று நம்புகிறாயா என்று கேட்டார். அதற்கு செஸ்மேன் அளித்த பதில் “வெறுப்போடு எனது தொடர்பு முடிந்து விட்டது. நீதிமன்றத்தின் மூலமாக என் உயிர் பல முறை காப்பாற்றப் பட்டு விட்டதால், எனக்கு எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. மரணம் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வாழ்வது எப்படி இயல்பானதோ, அதே போல மரணமும் இயல்பானதாகி விட்டது” என்று கூறினார்.
செஸ்மேனுக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டது. நாளை காலை விஷவாயு அறைக்கு செஸ்மேன் அழைத்துச் செல்ல வேண்டும். கலிபோர்னியா மாகாண கவர்னர் எட்மன்ட் ப்ரவுன் என்பவர் செஸ்மேனின் வழக்கு பற்றிய விபரங்களை முழுமையாக பார்வையிடுகிறார். அவ்வாறு பார்வையிட்டதும், மரண தண்டனையை ஏன் ஒழிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரக் கூடாது என்று அவருக்கு தோன்றுகிறது. சட்டம் இயற்றுவதற்காக ஒரு சிறப்புக் கூட்டத்தொடரை அறிவிக்கிறார். அந்தக் கூட்டத் தொடரில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறலாம் என்றும், அதன் பொருட்டு இரண்டு மாத காலத்துக்கு செஸ்மேனின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடுகிறார்.
அவ்வளவுதான்…. கலிபோர்னியான மாகாணமே கொதித்து எழுந்தது. பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டின. பொதுமக்கள் கூட்டம் போட்டு எட்மன்ட் ப்ரவுனை கண்டனம் செய்தார்கள். இறுதியாக அந்தக் கூட்டத் தொடர் நடந்த பொழுது, 16 மணி நேரம் விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பங்கேற்ற கிறித்துவ பாதிரிமார்கள், மரண தண்டனை என்பது கடவுளின் சித்தம் என்றனர். காவல்துறை அதிகாரிகள் மரண தண்டனையை ரத்து செய்தால், குற்றங்கள் அதிகரிக்கும் என்றனர். ஆனால் எட்மன்ட் ப்ரவுன் அசையவில்லை. இந்த முயற்சியால் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறோம் என்பது தெரிந்தும் இறுதியாக நடந்த வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மரண தண்டனை ஒழிக்க வேண்டும் என்ற சட்ட மசோதா தோல்வி அடைந்தது.
இதன் நடுவே, ஒரு கைதி, அதுவும் மரண தண்டனைக் கைதி இப்படி தண்டனையிலிருந்து தப்பி வருகிறானே என்று பெரும்பாலான மக்கள் நடுவே கோபம் கிளம்பியது. இது அமெரிக்கா முழுக்க பெரும் விவாதமாக கிளம்பியது.
கேரில் செஸ்மேன், தன்னேடு இருக்கும் சக மரண தண்டனைக் கைதிகளைப் பற்றி கூறுகையில், ஒவ்வொருவரும், மரண தண்டனையை ஒவ்வொரு வகையில் அணுகுவர். மரணக் கொட்டடிக்கு அழைத்துச் செல்கையில், ஒருவர் அனைவரையும் திட்டி, மரண ஓலமிடுவார். ஒருவர் வெற்றிக்கான வி சைகையை காண்பித்த படி செல்வார். ஒருவர் பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு பைபிள் வசனங்களை முணுமுணுத்தபடி செல்வார். ஒவ்வொருவரையும் மரணம் ஒவ்வொரு வகையில் பாதிக்கிறது என்றார்.
இறுதி நாட்களில் அவரைச் சந்திக்க சென்ற பத்திரிக்கையாளர் அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது, சிறையில் உங்களுக்கு தொலைக்காட்சி வழங்கப் பட்டுள்ளதா என்று கேட்ட போது… “மரண தண்டனைக் கைதிகளுக்கு மட்டும் இந்த வசதி உள்ளது. ஆனால் அதன் நிகழ்ச்சிகள் உங்களுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். அடுத்த வாரம் முதல் புதிய தொடர் என்று அறிவிப்பு வரும் போது, அதை பார்க்க நான் இருக்க மாட்டேன் என்று தோன்றும். தினசரி செய்திகள் நமக்கு சம்பந்தம் இல்லாதது போலத் தோன்றும். எந்தச் செய்தியைக் கேட்டாலும், அப்போது நான் இருக்க மாட்டேனே என்றுதான் தோன்றும்” என்றார்.
உங்களக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் முழுக்க சிறையை விட்டு வெளியே வரமுடியாத தண்டனை என்ற வாய்ப்பு கொடுத்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்ட போது “வாழ்க்கை தான்.. உயிரோடு இருப்பது தான். என் வாழ்நாளின் இறுதி நாள் வரை எனக்கு வேலை இருக்கிறது. ஒரு சிறந்த எழுத்தாளனாக உருவாகுவேன். என் மனதில் நான்கு நாவல்களுக்கான கரு இருக்கிறது. அவற்றை எழுதி முடிப்பேன்” என்றார்.
அந்தப் பத்திரிக்கையாளர் அவரோடு தொடர்ந்து உரையாடுகிறார். அவர்களுக்குள்ளான நட்பு வளர்கிறது. அப்போது, ஒரு நாள் தன்னால் அடக்க முடியாததால் நேரடியாக அவர் செஸ்மேனைப் பார்த்துக் கேட்கிறார்.
“இப்படி அறிவாளியாக இருக்கும் நபரான நீங்கள் எப்படி, துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்யத் துணிந்தீர்கள் ? “
அதற்கு பதிலளித்த செஸ்மன், “லாஸ் ஏன்ஜெலீஸ் போலீசார் ஒரு நாள் இரவு என்னை பலவந்தமாக சிவப்பு விளக்கு கொள்ளையனால் பாதிக்கப் பட்ட ஒரு பெண் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் நான்காவது மாடியில் இருந்தார். நாங்கள் தரையில் இருந்தோம். அந்தப் பெண்ணை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கச் சொன்ன போலீசார், அந்தப் பெண்ணிடம் அது நான்தானா என்று அடையாளம் காட்டச் சொன்னார்கள். இரண்டு நாட்களாக காவல்துறையின் கட்டுப் பாட்டில் இருந்த நான் குளிக்கவில்லை. ஷேவ் கூட செய்யவில்லை. போலீசார் அடித்த அடியில் எனது மூக்கு உடைந்திருந்தது. இரண்டு போலீசாருக்கு நடுவே நின்றிருந்த என்னை காண்பித்து, அது நான்தானா என்று கேட்டார்கள். அந்தப் பெண் சரியாகக் கூட பார்க்காமல் ஆம் என்றார். அப்படித்தான் நான் சிகப்பு விளக்கு கொள்ளையன் ஆனேன்” என்றார்.
எதற்காக பின்னர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, இரண்டு நாட்களாக தொடர்ந்து துப்பாக்கியின் பின்பக்கத்தால் முகத்தில் அடியும், பூட்ஸ் கால்களால் வயிற்றில் உதையும் வாங்கிக் கொண்டிருந்தால், எதை வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வீர்கள் என்றார்.
மரணக் கொட்டடிக்குச் செல்ல கேரில் செஸ்மேனுக்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில் நியூயார்க்கைச் சேர்ந்த அர்கோஸி என்ற புலனாய்வு மாத இதழ், வில்லியம் வுட்பீல்ட் என்ற தனது தலைச்சிறந்த புலனாய்வு நிருபரை செஸ்மேனைச் சந்திக்க அனுப்புகிறது. அந்த நிருபர், சிறையில் செஸ்மேனைச் சந்தித்து விட்டு வெளியில் வரும் போது, செஸ்மேன் நிச்சயம் தவறு செய்யவில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்.
வந்தவர் தனது பத்திரிக்கை நிர்வாகத்திடம் இத்தகவலைச் சொன்னதும், நிர்வாகம், அவருக்கு உதவியாக மற்றொரு நிருபரை பணிக்கு அமர்த்தி உடனடியாக இந்த விவகாரத்தில் புலனாய்வு மேற்கொள்ளச் சொல்கிறது.
அவர்களின் புலனாய்வில் கிடைத்த விஷயங்கள் மிகுந்த அதிர்ச்சிகரமாக இருந்தன…… செஸ்மேன் காப்பாற்றப் பட்டாரா ? அடுத்த பாகத்துக்காக காத்திருங்கள்.
தொடரும்.
|
Comments
https://www.facebook.com/notes/sulthan-ahamed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-/256683941032392
SMALL CORRECTION: It should be M.K.Narayanan.
http://www.ethirinews.com/?p=16321
அருமையான கேள்வி. இருப்பினும் ராஜபக்ஷேவுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அதற்கான மதிப்பை கெடுக்க கூடாது.அப்படியானால் என்ன செய்யலாம்? முஸ்லீம்நாட்டில ் என்ன செய்வார்களோ, அது போல செய்ய வேண்டும். நிற்க. உடனே அதுக்கு இது சரியா போச்சு என்று இந்த மூவரின் தூக்கு தண்டனையை நியாயப் படுத்தகூடாது. ராஜிவ் கொலை குற்றவாளிகள் கல்லால் அடித்தே கொல்லப் படவேண்டும். ஆனால் என்னுடைய கேள்வி "யார் உண்மையான குற்ற்வாளிகள்" என்பதே. ஒரு பஞ்சாயத்து தலைவராக கூட இல்லாத சுப்ரமணிய சாமிக்கு எதுக்கு பூனைப் படை பாதுகாப்பு? ஒருவேளை இந்த சு.சாமிக்கு நார்கோடிக்ஸ் அனாலிஸ் செய்து, அவன் வாயாலயே உண்மையை கக்கும்போது, அவன் நெற்றியை நோக்கி எறியப் படும் பல கற்களில் என்னுடையதும் ஒன்றாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்( ல்)கிறேன்.
1. Rajiv Gandhi canvassed for Maragatham. But Maragatham was not on the diaz.
2.The meeting was convened by the Congress men. But fortunately none of the congress men was not on the diaz and killed.
3.What precluded the investigating team to look into these matters.
4.One of the ruling party (state) leaders was reported to have said in a meeting that some unforeseen incident would take place and concluded the meeting abruptly.
5.Why was the place of meeting was selected in a secluded area. Who were responsible for this?
6. Why did not Sonia who never failed to accompany Rajiv Gandhi was not able to come along with Rajibv Gandhi. What was her schedule during her husnand visit to Sriperumbuthur.
7. There are so many doubts which no one cares to raise and answer.
தொஉக்ஹ்ட் ப்ரொவொகிங்
கோட்[/ஃஉஒடெ]
Its meaning less quote...Please think present crime rate and the punishment in India..try to think what is happening around us...don't praise such idoitatic phrases...
Part1:
http://www.youtube.com/watch?v=rXUhzxYFWoQ
Part2:
http://www.youtube.com/watch?v=nblKjkwyeN4&feature=related
Part3:
http://www.youtube.com/watch?v=-hxcEDC95cU&feature=related
Part4:
http://www.youtube.com/watch?v=mFuT6h_nlts&feature=related
Part5:
http://www.youtube.com/watch?v=KpigfTxWbC4&feature=related
Part6:
http://www.youtube.com/watch?v=enWPADWo4rk&feature=related
Part7:
http://www.youtube.com/watch?v=tVXZduKNgKA&feature=related
Part8:
http://www.youtube.com/watch?v=1K4G26NR4Ck&feature=related
Part9:
http://www.youtube.com/watch?v=1gwbteDZlIU&feature=related
செயல்படுவது தான். எந்த ஒரு வழக்கும் மிகவும் தாமதமாவதும் இதனால்தான். எல்லோருக்குக்கு ம் தாங்கள் நிரபராதிகள் என நிரூபிப்பதற்கான
வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்ற ன. இந்த ராஜீவ் படுகொலை வழக்கிலும் சட்டப்படி உள்ள எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டுவி ட்டன. அப்போது எல்லாம்
வராத அரசியல் தலைவர்கள் எல்லாம் (அவர்கள் எல்லாம் வசதியான ஆட்சியாளர்களாக இருந்த காரணத்தால்) இப்பொழுது அரசியல் முதலேடுப்பதற்கா க இறங்கியுள்ளார்க ள், ஏமாளிகளான
பொது மக்களை மேலும் ஏமாற்றுவதற்காக. குற்றங்கள் செய்வது என்பது சமூக காரணங்கள் கொண்டு மட்டும் அல்ல, உளவியல் மற்றும் மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்பதர்க்க்காக வும் தான் என்பதையும் எண்ண வேண்டும். குரங்கு கூட குச்சியை கண்டால் தான் பயப்படுகிறது, வலிமையான சிங்கம் கூட சாட்டையுடன் இருக்கும் சர்கஸ்
காரரை கண்டு அடங்கும். அதே போல் தான் கடுமையான சட்டங்களும் குற்றங்களை குறைக்க பயன்படும். சவுதி அரேபியாவில் சிக்னலில் நிற்காமல்
சென்றால் 24 மணி நேரம் சிறை, மற்றும் 5000 ரூபாய் தண்டம். அதனால் பெரும்பாலும் யாரும் மீறுவதில்லை. இந்தியாவில் பாருங்கள் எந்த ஒருவரும்
சிக்னல் கோட்டுக்குள் நிற்பதில்லை. தண்டனைகள் குற்றம் நடக்காமல் தடுப்பதில்லை என்றாலும், குற்றங்களை ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்பது மறுக்க முடியாதது.
இங்க மரண தண்டனை வேண்டாம் என்கின்ற என்கின்ற நண்பர்களை கேட்கிறேன் உங்கள் குழந்தைங்களுக்க ு இப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?
தொஉக்ஹ்ட் ப்ரொவொகிங்
கோட்[/ஃஉஒடெ]
என்ன தாட் புரவோக்கிங்....!!!! உலகத்துல உள்ள எல்லாரும் அயோக்கியன்னு சொல்லியிருக்கார ் எதையாவது உளறிகொட்டி காந்தி பொரியார்னு அடியில போட்டா அது பெரிய புரட்ச்சி கருத்தாயிடும்
Few months back savukku is opposing DMK cos they are doing wrong, mistakes and DMK has been punished by people. Those who did mistake should be punished. As for as Elam Tamil is concerned three people are freedom fighters but As for as India is concerned they are murderers, pre planned execution. How would u escape from punishment?. If they are freedom fighters they should give there life for there land (Elam tamil) like Bhagat singh, Kattabomman and tripur kumaran in India not applying for mercy plea. If they are applying for mercy plea, they are not freedom fighters and they are murderes. conclusion is U cannot escape from ur deed U have to ripe it. Even after death !!!
What happened to you. why you are thinking like mad... i would say probagate something good.. no need to publish this kind of articles.. i had great admiration on you in other articles...
you can't justify planned murder, raping of minors or child...and we don't want to keep them in jail and spend our tax money... who will pay that..
simply extremenist must be hanged until death... no doubt in it..
justice should not be unjustice...
தூக்கு தண்டனை கண்டிப்பாக வேண்டும்..
ஆனால் தூக்கில் இடப்படுபவன் உண்மையான குற்றவாளியாக இருக்க வேண்டும்.
குற்றவாளி மீது ஒரு சிறு சந்தேகம் இருந்தாலும் அவசரப்பட்டு விட கூடாது..
இன்று நூறு முறை திருடி சிறை சென்றவன் மீண்டும் திருடி சிறை செல்வது சாதனையாக நினைக்கிறான். திருடிய ஒருவன் கையை வெட்டினால் அதை பார்த்து ஆயிரம் திருடர்கள் திருந்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை..
முப்பது வயதான ஒரு பெண்ணின் அப்பா தன பெண்ணின் திருமணம் நடத்த தனது கிட்னியை விற்று கையில் ஒரு லட்சம் பணம் கொண்டு போகிறார் அவரிடம் ஒருவன் பணத்தை திருடி விடுகிறான். இப்போது அவரின் நிலை என்ன? மகள் திருமணம் நிற்கிறது . மகள் தற்கொலை பண்ணி கொள்கிறாள்.
ஆறு மாதம் கழித்து திருடனை பிடிக்கிறார்கள் .. இப்போ அந்த அப்பா தான் நீதிபதி ... அவர் அந்த திருடனுக்கு என்ன தண்டனை வழங்கினால் திருப்தி ஆவார்.??
ஒரு தண்டனை பாதிக்க பட்டவரின் மனதை நிறைவு செய்ய வேண்டும்.. அதனால் நீதி என்பது பாதிக்க பட்டவரின் நிலையில் இருந்து வழங்க படுவதே சிறந்தது.
நாகரீகத்திற்கும ் தண்டனைக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக நினைத்தால் குற்றவாளிகளுக்க ு லீ மெரிடியன் ஹோடேலில் ரூம் போட்டு கொடுத்து வாசலில் ஒரு செக்யூரிட்டி நிறுத்தி வையுங்கள்..
http://koothadiveddai.blogspot.com/
இங்கே அவர்கள் செய்த செயலை நான் எந்த இடத்திலும் சரியென்றோ அல்லது தவறில்லை என்றோ சொல்லவில்லை. தூக்குத்தண்டனை விதித்து அவர்களை பதிலுக்கு கொலைசெய்யும் அளவிற்கு அவர்கள் கொலை குற்றவாளிகள் அல்ல. ஒரு தீ விபத்தை ஏற்படுத்தியவர்க ள் மட்டுமே அன்றி மூன்று அப்பாவி மாணவிகளை திட்டம் தீட்டி கொலை செய்ய சென்றவர்கள் அல்ல.
இரு தமிழின விரோதிகளின் சதியால் (முக மற்றும் காங்கிரஸ்) மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள து. அதுவும் சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாரான நேரத்தில் தொண்டர்களை சோர்வடைய செய்யும் நோக்கத்திலேயே வழங்கப்பட்ட தவறான தண்டனை.
ஆனால் அதற்க்காக தூக்கு தண்டனையே கூடாது என்பது சரியான நிலைப்பாடு அல்ல.
அஜ்மல் ஹசாப் செய்த குற்றம் தெளிவான , திட்டமிட்ட அநீதியான படுகொலை . தான் பிடிபட்டால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே செய்திருக்கிறார ் .தான் செய்வதுதான் சரி என்றும் , அதனால் தனக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் சரியே எனும் சித்தாந்தம் உள்ள ஒருவர் தூக்குத் தண்டனையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .
இன்னும் , சிறுமியைப் பலாத்காரம் செய்து கொல்வது , பல பெண்கலைக் கற்பழித்துக் கொல்வது , அப்பாவிகளை கலவரத்தில் உயிரோடு எரித்துக் கொள்வது ( பெஸ்ட் பேக்கரி எரிப்பு , தர்மபுரி பேருந்து எரிப்பு) ஆகிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவது சரியே
நான் நிச்சயமாக தூக்குத்தண்டனைக ்கு ஆதரவானவனே!
யோசித்துப் பாருங்கள்...
3 வய்துப் பிஞ்சுக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறாள ். அந்த மிருகத்துக்கு என்ன தண்டனை? ஜெயலலிதாவிற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பினால் கொந்தளித்து 3 மொட்டுக்களை பேருந்தோடு சேர்த்து எரித்த கயவர்களுக்கு என்ன தண்டனை? எத்திராஜ் கல்லூரியிலிருந் து வந்தவளை "ஏவாள் தொல்லை" செய்து கொன்றவனுக்கு என்ன தண்டனை?
அஃப்சல் குருவுக்கும் கசாப்புக்கும் ஏன் தூக்கத் தண்டனை கொடுக்கக் கூடாது? எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்! இதற்கு யார் பொறுப்பு?
அரபு நாடுகளை விட நாகரீகமான அமேரிக்கா எத்தனை மனித உயிர்களைப் கொன்று குவித்துக்கொண்ட ு இருக்கிறது தினம்தோறும்?
ஏன் நாம் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்க ு இவ்வளவு பரிந்துப் பேசுகிறோம்...
அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றா அல்லது நம் மொழி பேசுவதாலா? இல்லை நண்பர்களே!
அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதால ் தான்.
அதேபோலத்தான் மேலே உள்ள செஸ்மேன் கூட. அவனுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள் ளது.
கண்ணுக்குக் கண் என்றால் உலகமே குருடாகிவிடும் என்றால்....அரபுலகம் இன்றும் பார்வையுடனேதான் உள்ளது, மறந்துவிடாதீர்க ள். இதே காந்திதான் கூறினார், "இஸ்லாமிய சாம்ரஜ்ஜியத்தின ் இரண்டாம் கலிஃபாவின் ஆட்சி போல ஆட்சிகள் நடந்தால் உலகம் முழுவதும் சிறந்துவிடும்" என்று. இவற்றை நாம் சுலபமாக, தேவைக்கேற்ப மறந்துவிடுகிறோம ்.
யாருடைய 3 வயது பிஞ்சு கொல்லப்பட்டதோ அல்லது மொட்டு எரித்து சாம்பலாக்கப்பட் டதோ அவரிடம் கேளுங்கள் அந்த கயவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று. நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், தூக்கு என்பது மிகவும் குறைந்த பட்ச தண்டனையே! அதைவிட பயங்கர தண்டனையை அவர்களுக்கு தர வேண்டும் என்பார்கள்.[/ஃஉஒடெ]சைதை அஜீஸ் உங்கள் வாதம்சரியானது ஆனால் அட்சர புள்ளி பிசிறில்லாமல் எந்த தலையீடுமில்லாமல ் குற்றம் நிரூபிக்கப்படவே ண்டும். அப்படியா இந்தியாவின் நீதித்துறை மற்றும் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளுகின ்றனர்.
THOSE CHRISTIAN PASTORS HAD BEEN IGNORANT TO SAY SO. BECAUSE THE NEW TESTAMENT BIBLE TELLS US TO FORGIVE AND LOVE YOUR ENEMIES. THE NEW TESTAMENT BIBLE OPPOSES REVENGE.
thought provoking
good
நான் நிச்சயமாக தூக்குத்தண்டனைக ்கு ஆதரவானவனே!
யோசித்துப் பாருங்கள்...
3 வய்துப் பிஞ்சுக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறாள ். அந்த மிருகத்துக்கு என்ன தண்டனை? ஜெயலலிதாவிற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பினால் கொந்தளித்து 3 மொட்டுக்களை பேருந்தோடு சேர்த்து எரித்த கயவர்களுக்கு என்ன தண்டனை? எத்திராஜ் கல்லூரியிலிருந் து வந்தவளை "ஏவாள் தொல்லை" செய்து கொன்றவனுக்கு என்ன தண்டனை?
அஃப்சல் குருவுக்கும் கசாப்புக்கும் ஏன் தூக்கத் தண்டனை கொடுக்கக் கூடாது? எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்! இதற்கு யார் பொறுப்பு?
அரபு நாடுகளை விட நாகரீகமான அமேரிக்கா எத்தனை மனித உயிர்களைப் கொன்று குவித்துக்கொண்ட ு இருக்கிறது தினம்தோறும்?
ஏன் நாம் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்க ு இவ்வளவு பரிந்துப் பேசுகிறோம்...
அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றா அல்லது நம் மொழி பேசுவதாலா? இல்லை நண்பர்களே!
அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதால ் தான்.
அதேபோலத்தான் மேலே உள்ள செஸ்மேன் கூட. அவனுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள் ளது.
கண்ணுக்குக் கண் என்றால் உலகமே குருடாகிவிடும் என்றால்....அரபுலகம் இன்றும் பார்வையுடனேதான் உள்ளது, மறந்துவிடாதீர்க ள். இதே காந்திதான் கூறினார், "இஸ்லாமிய சாம்ரஜ்ஜியத்தின ் இரண்டாம் கலிஃபாவின் ஆட்சி போல ஆட்சிகள் நடந்தால் உலகம் முழுவதும் சிறந்துவிடும்" என்று. இவற்றை நாம் சுலபமாக, தேவைக்கேற்ப மறந்துவிடுகிறோம ்.
யாருடைய 3 வயது பிஞ்சு கொல்லப்பட்டதோ அல்லது மொட்டு எரித்து சாம்பலாக்கப்பட் டதோ அவரிடம் கேளுங்கள் அந்த கயவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று. நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், தூக்கு என்பது மிகவும் குறைந்த பட்ச தண்டனையே! அதைவிட பயங்கர தண்டனையை அவர்களுக்கு தர வேண்டும் என்பார்கள்.
RSS feed for comments to this post