முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மரண தண்டனையை ஒழிப்போம் 3 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 03 செப்டம்பர் 2011 10:43

 

13 டிசம்பர் 2001.  காலை 11.30 மணி. பாராளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது.  ஆயுதம் தாங்கிய 5 நபர்கள் ஒரு அம்பாசிடர் காரில் பாராளுமன்ற வளாகத்துக்குள் அதிரடியாக நுழைகிறார்கள்.   பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது தாக்குதலை தொடுக்க, தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த 5 தீவிரவாதிகளும் கொல்லப் படுகிறார்கள்.  அவர்கள் போக 8 பாதுகாப்பு அதிகாரிகளும், ஒரு தோட்டக் காரரும் கொல்லப் படுகிறார்.

 par1

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப் படுகிறது.  தேசம் கொதித்து எழுகிறது.  நாடெங்கும் கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன.   பிரதமர் வாஜ்பாய் செப்டம்பர் 19ல் அமெரிக்காவின் மீது நடந்த தாக்குதலோடு இத்தாக்குதலை ஒப்பிடுகிறார்.

 

மற்ற தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுபவர்களைப் போல அல்லாமல், இறந்து போன தீவிரவாதிகள் தங்கள் சட்டைப் பையில், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், மற்றும் உலர்ந்த பழங்களை வைத்துள்ளனர்.  மும்பாய் தாக்குதலின் போது சிக்கிய தீவிரிவாதிகளிடமிருந்து உலர்ந்த பழங்களைத் தவிர வேறு எந்த ஆவணமும் கைப்பற்றப் படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

அதிசயமாக தில்லி போலீசார் மறு நாளே, முக்கிய தடயங்கள் கிடைத்திருப்பதாக அறிவித்தனர்.  முக்கிய நபர்கள் பிடிபட்டதாக தெரிவித்தனர். மறுநாள் லஷ்கர் ஏ தொய்பா மற்றும் ஜெய்ஷ் ஏ முகம்மது என்ற இரு தீவிரவாத இயக்கங்கள் சேர்ந்து நடத்திய தாக்குதல் என்றும், இது தொடர்பாக சையது அப்துல் ரகுமான் கிலானி, ஷவுகத் ஹுசைன் குரு மற்றும் முகம்மது அப்சல் மற்றும் ஷவுகத்தின் மனைவி அப்சான் குரு ஆகியோர் இது தொடர்பாக கைது செய்யப் பட்டனர்.

 

பாரதீய ஜனதாவின் ஆட்சியில், பாகிஸ்தானின் மீது போர் அறிவிப்பு செய்து, “தேசபத்தியை” வளர்ப்பதற்கு அருமையான வாய்ப்பாக சங் பரிவார் அமைப்புகள் இத்தாக்குதலை கருதின.   21 டிசம்பர் அன்று பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைத்தது. பாகிஸ்தானுடனான வான் வழி, தரைவழி போக்குவரத்துக்களை நிறுத்தியது. போருக்கான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியது. 70 ஆயிரம் துருப்புக்கள் எல்லையில் குவிக்கப் பட்டன.  பதிலுக்கு பாகிஸ்தான் 30 ஆயிரம் துருப்புக்களை குவித்தது. ஈரான் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முன் வந்தது.   ஐநா செயலர் கோபி அன்னான் அமைதி பேணுங்கள் என்று அறிவுரை வழங்கினார். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவாகியது.   இரு நாடுகளும் அணு ஆயுத வல்லமை படைத்திருப்பதால், எந்நேரமும் அணு ஆயுதப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்தப் போர் தயாரிப்புக்கு இந்தியா 10 ஆயிரம் கோடி செலவழித்தது.

 Indian-Parliament-attack

13 டிசம்பர் 2001 அன்றே எப்ஐஆர் போட்டாலும், வழக்கில் எப்படியாவது தண்டனை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 19 டிசம்பர் அன்று, இந்த வழக்கில் போடா சட்டப் பிரிவுகள் சேர்க்கப் பட்டன.

இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, அப்சல் குரு, செய்தியாளர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டு, தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வதாக வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்பட்டன என்பதை அப்சல் குரு தெரிவிக்கிறார். “பத்திரிக்கைகள் முன்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு முன், “பல்வேறு முறை வீடியோவில் பதிவு செய்து ஒத்திகை பார்த்தார்கள்.  அதற்கு முன்பாக இரண்டு நாட்கள் கடுமையான சித்திரவதைகள் நடந்தன.   என் வாயில் சிறுநீர் கழித்தார்கள்.  இரண்டு நாட்கள் முழுமையாக நிர்வாணமாக இருந்தேன்.   கயிற்றில் கட்டி தொங்க விடப் பட்டேன். மறுநாள் காகிதங்களில் எழுதப் பட்ட வாக்குமூலத்தை மனப்பாடம் செய்யும் படி, ராஜ்பீர் சிங், என்ற உதவி ஆணையர் என்னிடம் கூறினார்.   இதில் எதையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது என்றும், எனது சகோதரர் ஹிலால் காஷ்மீர் போலீசார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதையும், அவர் குடும்பத்தினர் எந்நேரம் வேண்டுமானாலும், கைது செய்யப் படுவார்கள் என்பதையும் ராஜ்பீர் சிங் கூறினார்.  இது போல 6 முறை ஒத்திகை பார்க்கப் பட்டது. 6 ஒத்திகைகளும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டன.” என்று கூறினார் அப்சல்.

shaukat_sar_geelani_mohamed_afzal_20061030

ஷவுகத்இ கிலானி மற்றும் அப்சல் குரு

இவ்வாறு ஒத்திகை பார்த்த பின்புதான் அப்சல் குரு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டார்.  ஆனால், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, இந்த ஒத்திகை ஒத்துழைப்புக் கொடுக்க வில்லை.   ஒத்திகை பார்த்த சமயத்திலேயே அப்சல் குரு, கிலானியைப் பற்றி கேள்வி வரும்போது திணறினார்.   போலீசார் கிலானிக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறச் சொன்ன போது தடுமாறினார்.  ஆனால் ராஜ்பீர் சிங், கிலானி பற்றி கேள்வி எழுந்தால் அமைதியாக இருக்குமாறு அப்சல் குருவை கண்டித்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது, சீராக சென்று கொண்டிருந்தது.  ஒரு பத்திரிக்கையாளர் கிலானியைப் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, “கிலானி குற்றமற்றவர்” என்று அப்சல் குரு பதில் அளித்தார்.  இதைக் கேட்டு கடும் கோபமடைந்த ராஜ்பீர் சிங், பத்திரிக்கையாளர் முன்பாகவே, “வாயை மூடு” என்று அப்சல் குருவைப் பார்த்து உரத்த குரலில் கத்தி விட்டு, இந்தச் செய்தியை ஒளிபரப்ப வேண்டாமென்று பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.   பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் டெல்லி போலீசார் சொல்படியே நடந்தனர்.  ஆனால், ஆஜ்தக் தொலைக் காட்சி, எடிட் செய்யாமல் முழுமையாக இதை ஒளிபரப்பியது.  இந்தக் காட்சியே கிலானிக்கு விடுதலை பெற்றுத் தந்தது.  ஆஜ் தக் நிறுவனத்தின் அந்த செய்தியாளர் எதிரித் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்துக்கு வரவழைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டார்.   பின்னாளில் உயர்நீதிமன்றத்தில் டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

காவல்துறையினரின் வழக்குப் படி தாக்குதலின் போது இறந்து போன தீவிரவாதிகளிடமிருந்து 4 செல்போன்களும், 6 கைப்பற்றட்டன.   இந்த செல்போன்களின் தொடர்பு எண்ணாக 9841148429 என்ற எண் கொடுக்கப் பட்டிருந்தது.  முகம்மது என்ற இறந்து போன தீவிரவாதியும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார் என்று தெரிய வந்தது.   இந்த எண் அப்சல் குருவினுடையது என்பதுதான் காவல்துறையின்வழக்கு.   இந்த எண்ணிலிருந்து 9810081228 என்ற எண்ணுக்கு டிசம்பர் 9 அன்று ஒரு அழைப்பு போயிருப்பதாக காவல்துறை தெரிவித்தது.  இந்த எண் தான் புது தில்லி பேராசிரியர் கிலானியுடையது.

வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே, ஊடகங்கள் தீர்ப்பையே எழுதி முடித்து விட்டன.  அந்தத் தாக்குதல் நடந்த வாரத்தில் வந்த தலைப்புச் செய்திகள் எப்படி இருந்தன தெரியுமா ?

'Case Cracked: Jaish behind Attack'
The Hindustan Times, Dec 16, 2001: Neeta Sharma and Arun Joshi

"In Delhi, the Special Cell detectives detained a Lecturer in Arabic, who teaches at Zakir Hussain College (Evening)...after it was established that he had received a call made by militants on his mobile phone." Another column in the same paper said: "Terrorists spoke to him before the attack and the lecturer made a phone call to Pakistan after the strike."

'DU Lecturer was terror plan hub'
The Times of India, Dec 17, 2001

"The attack on Parliament on December 13 was a joint operation of the Jaish-e-Mohammed (JeM) and Lashkar-e-Toiba (LeT) terrorist groups in which a Delhi University lecturer, Syed A.R. Gilani, was one of the key facilitators in Delhi, Police Commissioner Ajai Raj Sharma said on Sunday."

'Varsity don guided fidayeen'
The Hindu, Dec 17, 2001: Devesh K. Pandey

"During interrogation Geelani disclosed that he was in the know of the conspiracy since the day the 'fidayeen' attack was planned."

'Don lectured on terror in free time'
The Hindustan Times, Dec 17, 2001: Sutirtho Patranobis

"Investigations have revealed that by evening he was at the college teaching Arabic literature. In his free time, behind closed doors, either at his house or at Shaukat Hussain's, another suspect to be arrested, he took and gave lessons on terrorism..."

'Professor's proceeds'
The Hindustan Times, Dec 17, 2001

"Geelani recently purchased a house for 22 lakhs in West Delhi. Delhi Police are investigating how he came upon such a windfall...".

'Aligarh se England tak chaatron mein aatankwaad ke beej bo raha tha Geelani (From Aligarh to England Geelani sowed the seeds of terrorism) 
Rashtriya Sahara
, Dec 18, 2001: Sujit Thakur


Trans: "...According to sources and information collected by investigation agencies, Geelani has made a statement to the police that he was an agent of Jaish-e-Mohammed for a long time.... It was because of Geelani's articulation, style of working and sound planning that in 2000 Jaish-e-Mohammed gave him the responsibility of spreading intellectual terrorism."

'Terror suspect frequent visitor to Pak mission'
The Hindustan Times, Dec 21, 2001: Swati Chaturvedi

"During interrogation, Geelani has admitted that he had made frequent calls to Pakistan and was in touch with militants belonging to Jaish-e-Mohammed...Geelani said that he had been provided with funds by some members of the Jaish and told to buy two flats that could be used in militant operations."

'Person of the Week'Indian-Parliament-attack
Sunday Times of India, Dec 23, 2001:

"A cellphone proved his undoing. Delhi University's Syed A.R. Geelani was the first to be arrested in the December 13 case—a shocking reminder that the roots of terrorism go far and deep..."

இப்படித்தான் இருந்தன அந்த தலைப்புச் செய்திகள்.    அதாவது எஸ்ஏஆர்.கிலானி மற்றும் அப்சல் குரு, ஆகிய இருவரும், இந்தியாவின் மிக மிக மோசமாக தீவிரவாதிகள்.  அவர்களை நாளையே தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் இருந்தன அந்த தலைப்புச் செய்திகள்.

பொது மக்களின் கருத்தாக்கத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு மிக மிக முக்கியமானது.   ஒரு பத்திரிக்கையாளர் என்பவர், தனது நிதானத்தை எப்பொழுதும் இழக்கக் கூடாது.  எப்படிப் பட்ட மோசமான சூழலிலும் ஆதாரம் என்ன என்பதை ஆராய வேண்டும்.   தனக்கு இருக்கும் தனிப்பட்ட கருத்தை பொதுக் கருத்தாக திணிக்கக் கூடாது.  இதழியல் நெறிகளில் இது மிக மிக முக்கியமானது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் போலீசார் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விட, போலீசார் கை காட்டும் குற்றவாளிகளை ஊர்ஜிதப்படுத்தும் வேலையை பிரதானமாக செய்தன ஊடகங்கள்.    இரண்டே நாட்களில் எப்படி அத்தனை குற்றவாளிகளையும் கண்டுபிடித்தீர்கள், வெற்றிலையில் மை போட்டுக் கண்டு பிடித்தீர்களா, எப்படி இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரிய வந்தன என்பது போன்ற எந்தக் கேள்விகளையும் பத்திரிக்கையாளர்கள் கேட்கத் தவறினர்.

வழக்கு விசாரணை தொடங்கியது.    பாராளுமன்றத் தாக்குதலின் காரணமாக நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு அலைகள், வழக்கறிஞர் சமுதாயத்தையும் தாக்கத் தவறவில்லை.   வழக்கறிஞர்கள் ஒருவர் கூட அப்சல் குருவுக்காக ஆஜராக மறுத்தனர்.   எந்த வழக்கறிஞரும் ஆஜராக மறுத்ததால், நீதிமன்றமே, நீதிமன்றத்தின் நண்பராக (Amicus Curiae) ஆலம் என்ற வழக்கறிஞரை நியமித்தது.  2001 ஜனவரி முதல் நாள் ஆலம் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்ற தகவல் அவருக்கு போயிருக்க வேண்டும்.  ஆனால் அவருக்கு தகவலே போகவில்லை.   ஆகையால் அவர் வரவில்லை.   அடுத்த கட்டமாக சீமா குலாத்தி என்ற வழக்கறிஞரை நீதிமன்றம் நியமித்தது.   அப்சல் குரு, சீமா குலாத்தியின் நியமனத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருகிறார். சீமா குலாத்தியே, தன்னால் இந்த வழக்கில் ஆஜராக முடியாது, இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான கிலானிக்காக ஆஜராகிறேன் என்று தெரிவிக்கிறார்.   இதையடுத்து, சட்டம் படித்து ஒரு சில ஆண்டுகளே ஆன நீரஜ் பன்சால் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தின் நண்பராக (இவர் சீமா குலாத்தியின் ஜுனியர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத் தக்கது) நியமிக்கப் படுகிறார்.   8 ஜுலை 2002ல் நீதிமன்ற விசாரணை தொடங்குகிறது.

அப்சல் குரு,  வழக்கின் முதல் நாள் தனக்காக வழக்கறிஞர் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோருகிறார்.  தனது கடிதத்தில் அவர் “இந்த நீதிமன்றம் என்னை நடத்தும் விதத்தை பார்த்தால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை.  எனக்காக அஷோக் அகர்வால், பண்டிட் ஆர்.கே.நசீம், ஆர்.கே.தாம் அல்லது தவுபில் ஆகிய யாராவது ஒருவரை வழக்கறிஞராக நியமித்தால் தான் எனக்கு இவ்வழக்கில் நியாயம் கிடைக்கும்” என்று கடிதம் எழுதுகிறார்.

அப்சல் குருவின் இந்தக் கடிதத்தின் மீது முடிவெடுக்காமல், நீதிமன்றம் சாட்சிகளின் விசாரணையை தொடர்கிறது.  12 ஜுலை  2002 அன்று நீதிபதி அப்சல் குருவின் மனுவின் மீது தீர்ப்பளிக்கிறார்.   பல்வேறு வழக்குகளுக்காக இந்த நீதிமன்றத்தின் முன்பு ஆஜரான தாம், மற்றும் ஆர்.கே.நசீம் ஆகியோரைக் கேட்ட போது, அவர்கள் இந்த வழக்கில் ஆஜராக முடியாத தங்கள் இயலாமையை தெரிவித்து விட்டனர்.  அஷோக் அகர்வால் மற்றும் தவுபில் ஆகியோர் ஏற்கனவே, இவ்வழக்கில் ஜாமீன் மனுக்களுக்காக ஆஜராகியிருந்த விபரம் தெரிய வந்ததால் அவர்களால் நீதிமன்றத்தின் நண்பனாக இவ்வழக்கில் இருக்க முடியாது.

குற்றவாளிக்கு தனக்கு பிடித்த வழக்கறிஞர் வேண்டுமென்றால், அவர் வைத்துக் கொள்ளலாம்.   நீதிமன்றத்தின் நண்பனாக ஒரு வழக்கறிஞரை வைக்க வேண்டுமென்றால், இந்நீதிமன்றத்தின் முன்பு உள்ள பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களில் ஒருவர் தான் நியமிக்கப் படுவார்கள். அப்சல் குரு வேண்டுமானால், அவரே சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யலாம்.  நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டுள்ள நீரஜ் பன்சல், தொடர்ந்து இவ்வழக்கில் உதவி புரிய கேட்டுக் கொள்ளப் படுகிறார்.  ஆனால் அவர் அப்சலுக்காக வாதாட முடியாது” என்று தீர்ப்பளித்தது.

M_Id_228390_Afzal

இவ்வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளுக்காக வாதாட வழக்கறிஞர்கள் இருந்தார்கள் என்றாலும், அப்சல் குருவின் சார்பில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய எந்த வழக்கறிஞரும் இல்லாத நிலையிலேயே இவ்வழக்கின் விசாரணை நடத்தி முடிக்கப் பட்டது.

எப்படிப் பட்ட குற்றத்தை இழைத்திருந்தாலும், அந்தக் குற்றாவளிக்கு நியாயமான, சட்டபூர்வமான வகையில் தன்னை தற்காத்துக் கொள்ள போதுமான சட்ட உதவிகள் வழங்கப் பட வேண்டும் என்பதுதான் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் உள்ள நடைமுறை.   ஒட்டு மொத்த இந்தியாவே கோபம் கொள்ளும் ஒரு வழக்கு என்பதற்காக, அந்த குற்றவாளிக்கு மட்டும் எந்த வழக்கறிஞரும், ஆஜராக மறுத்து, அந்தக் குற்றவாளிக்கு தூக்கு விதிக்கப் போகிறோம் என்பது நாகரீக மனித சமுதாயம் செய்யும் செயலா ?

நீங்களே உங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று ஒரு குற்றவாளிக்கு நீதிமன்றம் அளிக்கும் உரிமையை நியாயமான நடைமுறையாக எடுத்துக் கொள்ள முடியாது.   அப்சல் குரு மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நியாயமாகவே நடந்து கொண்டது போலக் காட்டுவதற்காக நீதிமன்றம் அப்சல் குரு, எவ்வித குறையும் இல்லாமல், சாட்சிகளை தானாகவே குறுக்கு விசாரணை செய்வதற்கு ஒப்புக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளது.  பொதுவாக, குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆட்பட்டிருக்கும் நபர்களிடம், வழக்கறிஞர்களே சொல்லும்  அறிவுரை, “ட்ரையல் ஜட்ஜ பகைச்சுக்கக்  கூடாது” என்பது. அது எதற்காகவென்றால், வழக்கை நடத்தும் நீதிபதி கோபித்துக் கொண்டார் என்றால் தண்டனை கொடுத்து விடுவாராம்..!!!!!

90 சதவிதிம் கீழமை நீதிபதிகள் அரசின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கின்றனர்.  குற்றம் சாட்டப் பட்டவர்கள் வைக்கும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களைப் பொறுத்துதான் உண்மையான நியாயம் கிடைக்கும்.  எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வலிமையைப் பொறுத்தும், அரசுத் தரப்பு தரும் நெருக்கடியைப் பொறுத்தும் தான் தீர்ப்பு அமையும்.  இதில் நாடு முழுக்க இருக்கும் ஊடகங்கள் தங்கள் பங்குக்கு மீடியாவில் விசாரணை நடத்தத் தொடங்கினால் அதோகதிதான்,

ஒரு குற்றவாளி, நீதிமன்ற விசாரணை நடைபெறும் பொழுது, எனக்கு வழக்கறிஞர் வேண்டாம், நானே எனது வழக்கை நடத்திக் கொள்கிறேன் என்று முடிவெடுத்தால் அது வேறு.  எனக்கு வழக்கறிஞர் வேண்டும் என்று கேட்டு, அவருக்கு யாருமே ஆஜராக மறுத்தால் அது வேறு.  அப்சல் குருவைப் பொறுத்தவரை இரண்டாவதுதான் நடந்தது.

குற்றம் சாட்டப் பட்டவருக்கு வழக்கறிஞர் வழங்கப்  பட வேண்டும் என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டும் சொல்லும் உரிமை அல்ல.   சர்வதேச அரசியல் மற்றும் சிவில் உரிமைக்கான ஒப்பந்தத்தின் படியும், வழக்கறிஞர் வைத்துக் கொள்வதற்கான உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.  குற்றவாளிக்கு வசதி இல்லையென்றால் அரசு செலவில் வழக்கறிஞர் வைத்துக் கொடுப்பது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை.

வழக்கறிஞர் உதவி இல்லாமல் தானே வழக்கை வாதிடும் ஒரு நபர், சட்டம் படித்த, அனுபவம் மிக்க ஒரு வழக்கறிஞருக்கு இணையாக சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவே முடியாது.    வழக்கறிஞர் வேண்டுமா, வேண்டாமா என்பதை சம்பிரதாயமாக கேட்டு, தனது கடமையை விசாரணை நீதிமன்றம் முடித்துக் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது.

என்னதான் நடந்தது இந்த வழக்கில்......

 

தொடரும்.

 

Comments  

 
0 #35 tamil_muslim 2011-09-09 15:58
உன்மை
Quote
 
 
+3 #34 மழை துளி 2011-09-08 03:48
நான் சொன்னது நடந்தே விட்டது ! டெல்லி யில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முதலில் அடிபடுவது இந்த குருவை ரிலீஸ் செய்வது தான்.. அது நிரூபிக்கபடுமோ படாதோ ஆனால் இவனை வைத்து
எல்லா காரியமும் செய்வர்...பிறகு பத்திரமாக பாகிஸ்தான் கொண்டு சென்று Martyr யென்ற பட்டதோடு ஒரு புது இயக்கம் புது தாக்குதல்கள் ..
நாம் இங்கு உட்க்கார்ந்து கொண்டு அவனுக்கு வாதாட ஆள் இல்லை என்றும் நாகரீகம் இல்லாத செயல் என்றும் பீற்றி கொண்டு இருப்போம்...என்ன அடித்தாலும் நமக்குதான் வலிக்காதே ?
Quote
 
 
+1 #33 gopalasamy 2011-09-07 13:31
Quoting naan kadavul:
ஒட்டு மொத்த இந்தியாவே கோபம் கொள்ளும் ஒரு வழக்கு என்பதற்காக, அந்த குற்றவாளிக்கு மட்டும் எந்த வழக்கறிஞரும், ஆஜராக மறுத்து, அந்தக் குற்றவாளிக்கு தூக்கு விதிக்கப் போகிறோம் என்பது நாகரீக மனித சமுதாயம் செய்யும் செயலா ?
இந்த வாசகத்தை நினைவு கொள்ள வேண்டும்.உங்களில் எவராவது தவ்று செய்யாதவர் இருந்தால் முதலில் கல்லெறியட்டும் என்ற ஜேசுவின் வாசகமும் எண்ணத் தக்கது.மனிதர்கள் எல்லோருமே ஏதோ வகையில் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள்.நம்மில் எவரும் புனிதர்கள் இல்லை.
சவுக்கின் நேர்மைக்கும் தூக்குத் தண்டனைக்கு எதிராக போராடும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும ் மனிதர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள்.

YES. AS PER YOUR STATEMENT EVERYBODY IS PLANNING TO ATTACK PARLIMENT. EVERYBODY IS TERRORIST.YESTERDAY I KILLED ONE COCKROACH. SO MYSELF AND KAZAB ARE EQUAL.
Quote
 
 
0 #32 gopalasamy 2011-09-07 13:27
AFZAL GURU SHOULD BE RELEASED IMMEDIATELY.
KAZAB ALSO SHOULD BE RELEASED IMMDEIATELY.
THE RELATIVES OF THE POLICE STAFF WHO WERE KILLED IN PARLIMENT ATTACK SHOULD BE KILLED AS THEY PREVENT THE TERRORIST ATTACK.
ANY INDIANS CAN BE KILLED. IT IS TERRORIST'S RIGHT.
BUT THEY SHOULD NOT BE PUNISHED AS THEY DID NOT ACCEPT THEIR CRIME.
SAVUKKU. YOU ARE DOING A GOOD JOB.
Quote
 
 
-1 #31 naan kadavul 2011-09-07 12:40
அன்பான சவுக்கு,மனித நேயம் மிக்கவர்கள் காட்டுமிராண்டித ் தனமான தூக்குத் தண்டனைக்காக குரல் கொடுத்து வரும் நிலையில்,எதிராக கருத்து சொல்பவர்கள் பற்றி கவலை வேண்டாம்.ஆரிய மூட மத நம்பிக்கைகளிலும ்,ராம நாமத்திலும் ஊறிப் போன நம் தமிழர்கள் என்ன தான் எழுத முடியும்.வாதாட முடியாது எத்தனை வேற்று மதத்தினரை கழுவில் ஏற்றி கொன்றவர்கள் தூக்குத் தண்டனைக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தான் செய்வார்கள்.திருக்குறள் காட்டிய தமிழர்களின் உண்மையான மதத்தை ஏற்பவர்கள் நிச்சயம் இந்த காட்டுமிராண்டி தனமான தூக்குத் தண்டனையை எதிர்த்து குரல் கொடுப்பார்கள்.உலகம் முழுவதும் எழும் இந்தக் குரல் நிச்சயம் உறங்கும் மனிதனினை தட்டி எழுப்பும்.மனிதம் வெல்லும்.
Quote
 
 
0 #30 su. raghuraman 2011-09-07 11:44
சவுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? பயம் இல்லாமல் போனால் குற்றம் செய்பவர்கள் அதிகம் ஆவார்கள். நீங்கள் அடித்தவர்களையும ் அவர்களுக்கு கிடைத்த தண்டணையை மற்றும் பார்கிறீர்கள். ஆனால் அவர்களால் பாதிக்க பட்டவர்களின் உணர்வுகளையும், அவதிகளையும் ஏன் பார்க்க மறுக்கிறீர்கள் ? பாரளமன்றத்தில் இறந்த காவலர்களின் குடும்பங்கள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியுமா ? ராஜீவ் காந்தியின் உடன் இறந்த பாதுகாப்பு அதிகாரிகளின் குடும்ப நிலை தெரியுமா ? இந்த கொலைகார்களுக்கு மற்றவர்களின் உயிரை எடுக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை இவர்கள் உயிரை எடுக்க அரசுக்கு உள்ளது.. இன்று இந்த 3 பேரின் குடும்பத்தருக்க ாக வருந்தும் நீங்கள், என்றாவது சம்மந்தமே இல்லாமல் படுகொலை ஆனவர்களின் குடும்பத்தை பற்றி யோசனையாவது செய்ததுண்டா ? தனகென்று வந்தால் தெரியும் வலி.
Quote
 
 
+6 #29 மழை துளி 2011-09-06 19:24
தமிழ் மகனாரே ! நீங்கள் விசாரணை பத்திரிக்கை முழுவதும் அறிந்தவர் என்றால் இங்கே அளிக்கவும் ..பிறகு பேசலாம்..
அந்த அப்சல் ஒரு surrender ஆன தீவிரவாதி ! அவனே மீண்டும் மீண்டும் சொன்னது - ' முஹம்மத் என்பவர் அவருக்கு அறிமுக படுத்தப்பட்டு அவனை வெளிநாடு செல்ல டெல்லிக்கு செல்ல துணை செய்தேன்'. ஏனய்யா இவர் என்ன Travel agency நடதுபவனா இல்லை பாஸ்போர்ட் அதிகாரியா ? கடைசி வரைக்கும் இவருக்கு தெரியாமல் இவர் துணை போனாரா ? ஒரு பழைய தீவிரவாதிக்கு முன்பின் தெரியாத நபரை அதுவும் வெளிநாடு செல்ல அழைத்து போக டெல்லிக்கு செல்ல துணை புரிவது ஆபத்து என்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை ! தெரியாமல் செய்ததாக சொல்லுவது வடிகட்டின பொய் ! இவருக்காக வாக்கு வாதாட ஆள் இல்லை என்றால் இப்படி வடிகட்டின பொய்யை சொல்லும் ஒரு அரக்கனுக்கு யாரும் வாதாட வர மாட்டார்கள் ..ஏன் வர வேண்டும் ? தெரிந்தே இவன் துணை போனான் அதுவும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து செய்து விட்டு நம் நாட்டை கூரைபோட குழப்பும் ஒரு துரோகிக்கு ஏன் இறக்கம் காட்ட வேண்டும் ?
Quote
 
 
+6 #28 சீனு 2011-09-06 15:29
வர வர எரிச்சலா இருக்கு, இதை போன்றவற்றை படிக்க. எவ்வளவு அழகா வாதாடறீங்க, அப்சலுக்காக.

மரண தண்டனை வேண்டாமென்றால் அது நேர்மையான முறையில் பிரசாரம் செய்யப்படவேண்டு ம். இப்படி 'வினவு'த்தனமாக இல்லை.
Quote
 
 
-7 #27 naan kadavul 2011-09-06 12:23
ஒட்டு மொத்த இந்தியாவே கோபம் கொள்ளும் ஒரு வழக்கு என்பதற்காக, அந்த குற்றவாளிக்கு மட்டும் எந்த வழக்கறிஞரும், ஆஜராக மறுத்து, அந்தக் குற்றவாளிக்கு தூக்கு விதிக்கப் போகிறோம் என்பது நாகரீக மனித சமுதாயம் செய்யும் செயலா ?
இந்த வாசகத்தை நினைவு கொள்ள வேண்டும்.உங்களில் எவராவது தவ்று செய்யாதவர் இருந்தால் முதலில் கல்லெறியட்டும் என்ற ஜேசுவின் வாசகமும் எண்ணத் தக்கது.மனிதர்கள் எல்லோருமே ஏதோ வகையில் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள்.நம்மில் எவரும் புனிதர்கள் இல்லை.
சவுக்கின் நேர்மைக்கும் தூக்குத் தண்டனைக்கு எதிராக போராடும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும ் மனிதர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள்.
Quote
 
 
-1 #26 Tamil Magan 2011-09-06 11:02
indian - first of it wasn't Afzal Guru said that in public. If you read your own link properly Gonzalves has given clean chit on the rumor; instead the blame is on another lawyer Nanditha. if you want to take Ramjetmalani's clean chit to Gonzalves, why can't you take same Ramjetmalani's position on Afzal Guru? Now watch what Ramjetmalani says http://www.youtube.com/watch?v=c-XKrdKxA7Y
Quote
 
 
+1 #25 MunnaThunaa 2011-09-06 09:02
Where is Walter and KadarkaraiVaasi ..... Avenga alluku Vakalathu vaanga varuvaarkaleeee eee....... Remeber BJP is for Hindus and not for Brahmins only...... Support BJP, only then Hindus will get what they deserve, else the fake-secular congress can win hands-down and f**k our back even in next elections
Quote
 
 
-2 #24 Tamil Magan 2011-09-06 05:14
It is not about the culprits accepting their involvement, but is about government proving the culprits' complicity. In these cases government didn't come up with any evidence of involvement and knowingly participating in a crime. That is what is important. Without such a link how can they be punished? There is no reason why Omar Farook is supporting these folks as Omar Farouk is directly in conflict with pro-pakistani elements. You have to look at the evidences carefully and not jump into conclusions. We are the people who vote to wrong kind of people and support wrong kind of governments and we should know our capacity to make judgements. I'm not asking to give clean chit, rather all I'm asking to give fair trial. Attacking parliament is as criminal as anybody can put it. My point here is only those involved and proven guilty should face punishment. If these kind of judgments let to occur, one of us are safe. Tomorrow it could be you just because you happend to do something unknowingly or accidentally happened to be in a place.

Please use common-sense.
Quote
 
 
+3 #23 Tamil Magan 2011-09-06 04:31
Again and again people fail to understand the position. Punish who are really involved in the crime. Don't punish innocents just because you have to punish somebody. I am asking those whoever asking to hang these people, how many of you read the investigation report? I you have read, any of you can tell what is the compelling factor you have found in these cases that warrants death sentence to these? Without knowing the basic facts in the case, why are you people jumping into wrong side of the judgement? Judgement against Perarivalan in the case of Rajiv murder and Absal Guru in the parliament attack are truly fabricated. Since the government is incapable of punishing the true culprits, government is punishing somebody just to mislead us. Please understand the fact. I am ready for the debate. if I'm proven wrong I'm open to change my position. My love to my country India is unquestionable, but never going to support a wrong in the name of my country, even in the name of my own mother. If we fail to do justice, we loose the moral highness forever.
Quote
 
 
+14 #22 TEx 2011-09-06 00:42
தமிழ் அரசியல் நன்றாக நடக்கிறது. உங்க போதைக்கு தமிழை ஊறுகாய் ஆக்காதீர்கள். தமிழன் மட்டும் அல்ல எவன் தப்பு செய்தாலும் தண்டனை பெறவேண்டியவர்கள ே. 18 தமிழனும் செத்து இருக்கான். காங்கிரஸ் எதிர்ப்பை காட்ட இந்த கேவலமான அரசியலில் ஈடு படுவது, தன் வினை தன்னை சுடும் போல் ஆகிவிடும்.
Quote
 
 
+4 #21 இந்தியன் 2011-09-05 23:43
http://www.humanrightsjournal.com/index2.php?option=com_content&do_pdf=1&id=135

மேலே உள்ளது காலின் கன்சால்வேஸின் கடிதம்.
Quote
 
 
+12 #20 இந்தியன் 2011-09-05 23:37
அப்சல் குரு அப்பாவியல்ல.அவருக்கு வ்ழக்கறிஞர் உதவவில்லை என்பது பொய்
காலின் கன்சால்வேஸ் அப்சலின் பொய்யை அம்பலப்படுத்திய ுள்ளார்.கூகுளில் தேடவும்.
பாரளுமன்றத்தை தாக்கி எம்.பிக்கள்,அமைச்சர ்களை கொல்ல திட்டம் தீட்டியவர்களுக் கு உதவியவரை தூக்கில் போடுவதில் என்ன தப்பு.தீவிரவாதிகள் தாக்கிய போது தடுத்து போராடி உயிர்நீத்த 7 பேரின் உயிர்கள் என்ன கிள்ளுக்கீரையா.
உங்களுக்கு வேண்டியவர்களை யாரவது கொலை செய்தால் அக்கொலையாளிகளுக ்கும்ம் ஆயுள் தண்டனை போதும் என்று எழுதுவீர்களா.
நெஞ்சைத்தொட்டுச ் சொல்லுங்கள்.
Quote
 
 
-1 #19 naan kadavul 2011-09-05 23:30
மரண தன்டனை கூடவே கூடாது. தூக்குத் தண்டனை கொடுத்தால் அவன் உடனே செத்து தொலைந்து விடுவான்.பின் அவனுக்கு என்ன தண்டனை. தண்டனை தேவை,கடுமையான தண்டனை.ஆனால் குற்றமற்றவர்கள் தண்டனை பெறக் கூடாது.ஈழத் தமிழர்களை சித்திரவதை செய்து,மானபங்கப ் படுத்தி,கற்பழித ்த ராஜபக்சேக்கு சித்திரவதை வேண்டாமா?தூக்குத் தண்டனை கொடுத்து ஒரு சில நிமிடங்களில் செத்துப் போக வேண்டுமா?வாழ்நாள் முழுவதும் ராஜபக்சே கண்ணீர் வடித்து தண்டனை பெற வேண்டுமா.ராஜிவை கொலை செய்ததாக குற்றம் செய்யாமலேயே குற்றம் சாட்டப்பட்டவர்க ளுக்கு தூக்குத் தண்டனை என்றால்,பதினைந் தாயிரம் ஈழத் தமிழர்களை கொன்றும்,சித்தி ரவதை செய்த ராஜிவிற்கு என்ன தண்டனை?
Quote
 
 
+16 #18 Rajan S 2011-09-05 19:50
அன்பு சவுக்கு
மனித உரிமை மனிதர்கலுக்கு மட்டுகம்தான்.
தனி மனிதனின் பார்வை சட்டடத்தின் பார்வை ஆக கூடாது. சவுக்கு தனது கருத்தை தினிக்க வேன்டாம்.
Quote
 
 
+15 #17 மழை துளி 2011-09-05 18:43
இது சுத்த பேத்தல் ! ஒரு நாட்டின் இதயமாக கருதபடும் பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்துவது அந்த நாட்டையே கேவலபடுத்துவதும ் இறையாண்மையை அவமானபடுத்துவது மாகும் ! நாடு எனும்போது அது நம் எல்லோரும்தான் ! இது அந்த தாக்குதலை நடத்தியவர்கள் தெரிந்துதான் பார்லிமென்ட்-ஐ தேர்ந்தெடுத்து தாக்கினர் ! அவர்களுக்கு தெரிந்தது கூட உங்களுக்கு தெரியவில்லையா ? இது ஒன்றும் தனி நபர் தாக்குதலும் இல்லை -அரசியல் காழ்புணர்ச்சியு ம் இல்லை ...மத வெறியோடு சேர்ந்த பிரிவினைவாத தாக்குதல் அது...ஒட்டு மொத்த நாட்டையும் நாட்டு மக்களையும் அசிங்க பட வாய்த்த நிகழ்ச்சி....

மேலும் ரெண்டு நாட்களில் துப்பு கிடைப்பதும் தூண்டி விட்டவர்கள் கைதாவதும் மீதும் ஏன் சந்தேக பார்வை பார்க்க வேண்டும் ? அது ஒன்றும் இயலாத காரியம் அல்லவே...ராஜீவ் கொலை நடந்த மறு நாளே அதில் சம்பத்தப்பட்ட எல்லா குற்றவாளிகளும் கண்டுபிடிக்க பட்டார்களே அல்லது பெயர்கள் அளவிலாவது குறுப்பிட பட்டார்களே ...? ஒரு கொலை அல்லது தீவிரவாத தாக்குதலின் வீரியத்தை பொறுத்து விசாரணை துரிதமாக நடக்கும் ...அதற்காக விசாரணை தவறாக முடியாது ..

கிலானியை விடுவித்தவர்கள் குருவை விடாததற்கு அவந்தான் குற்றவாளி என்பது தெள்ளதெளிவு ..என்னை
கொடுமை செய்தார்கள் என்று கூவுவது பொட்டு சுரேஷ் கூட தான் சொல்லுவான்.. அதற்காக அவன் சொல்லுவதை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது ..எல்லா குற்றவாளியும் தான் சொல்கிறார்கள்...சவுக்கு - ஒன்று நினைவில் கொள்ளுங்கள் ...இவர்களின் மரண தண்டனை ரத்து செய்வது நம் மேல் நாமே மண்ணை அள்ளி போட்டு கொள்ளுவது ..இவன் ஏற்கனவே பாகிஸ்தாந்ல் மிகவும் பிரபலம் ..பிறகு வேறு எதாவது கடத்தல் நாடகம் ஆடி இவர்களை விடுவிக்க வைத்து விடுவார்கள்...தூக்கில் போட்டால் தான் தீவிரவாதிகளுக்க ு தெரியும் - இந்தியா இறையாண்மை மீது அடித்தால் நாம் பொறுக்க முடியாது என்பதை....
Quote
 
 
-13 #16 Pearl Inbam 2011-09-05 14:09
Dear brothers Pls understand the Q&A
1)When parliment attack happened?BJP Government make corruption on kargil war fighters body boxes.(Means dead kargil fighters body to send his home town so they bought aircon boxes. BJP government make corruption on this) So opposite party members know about corruption and make agitation on parliment and ask to resign the BJP government. this is situation. Suddenly muslim terrorists came to attack the parliment.(Why muslim terrorist not attacking when muslim got suffer? Muslim terrorist attacking while BJP government suffer.)
Pls see the DVD, AFSALYAI THUKKIL EDA KUDATHU YEN? Spoke BY MR.Mohamed Yusuf B.L,POPULAR FRONT INDIA, My hindu brothers we are convert islam due to brahminism only.
We are also before may be pallan ,parayan,thevar or nadar. Still kayalpattanam people following pillaimar procedures after marriage /By pearl inbam
Quote
 
 
+9 #15 HumanRace 2011-09-05 12:31
Dear Savukku,
Don't detail on afzal guru's case. People might call you a traitor. In this forced nationalism, facts doesn't matter. You are good even if you kill million innocents, as long as you do it with an nationalistic flavor. Look at the number of people commented on this..
Quote
 
 
+22 #14 nadinilai vathi 2011-09-05 10:49
சவுக்கின் பதிவு கடும் கண்டனதகுரியது நிச்சயமாக ஒரு குற்றவாலி தண்டிக்கபட வேண்டும் இல்லாவிட்டால் சட்டமும் தேவையில்லை நீதிமன்றமும் தேவையில்லை
Quote
 
 
+13 #13 நல்லூரான் 2011-09-05 09:10
இந்தப் பதிப்பை பாகிஸ்தான் மக்களுக்கு அனுப்பி வைக்கவும். மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.
சவுக்கு அவர்களே, தேசப் பாதுகாப்பும்(நா டாளுமன்றம்), தனி விரோதப் படுகொலைகளும்(ரா ஜிவ்) ஈடானவை அல்ல.
Quote
 
 
+17 #12 Prabhu Sg 2011-09-05 08:45
அப்படின்னு பார்த்தா, எவனும் தான் செஞ்ச குற்றத்த ஒத்துக்க மாட்டங்க. எல்லாரும் தப்பு (கொலை, குண்டு வெடிப்பு, தாக்குதல்) செஞ்சுட்டு நான் செய்யவே இல்லன்னு தான் சொல்வான். குற்றம் குறைய மரண தண்டனை அவசியம். இதில் எந்த மாற்று கருத்தும் குற்றம் செய்தவர்களால் பாதிக்க பட்டவர்களுக்கு கிடையாது.
Quote
 
 
+10 #11 m s raghunathan 2011-09-05 08:26
When the assasins of Rajiv were tried in Tamilnadu all the advocates who are now shouting over the top of roof against sentence were unwilling to appear for any of the accused except Mr Duraisamy. In fact they organised demonstrations in front of his house. Now suddenly tamil love has dawned on these people. Lawyers should behave like lawyers.
Quote
 
 
-5 #10 Tamil Magan 2011-09-05 03:38
Dinamalar spilling beans. Until DMK was in power, Dinamalar acted like pro-tamil website. Read this article http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295. Snake cannot hide its poisonous wangs.
Quote
 
 
0 #9 chindukaruppasamy 2011-09-04 23:06
Hi,

I don't beleive history of Gandhiji. this may be another game played by a political party Indian National Congress. I only beleive what is happening at this moment. Vadivalu will tell in a film that "100 Varusathuku peragu varravan namma epdi irunthomnu theriyava poguthu"
Quote
 
 
-1 #8 naan kadavul 2011-09-04 13:00
மரண தண்டனையை மட்டுமல்ல,காவலி ல் விசாரணைக்காக எடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்க ளை காவல்துறையினர் கொடுமையாக தாக்கி சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்குவதையும் தடுக்க வேண்டும். குற்றமற்ற அப்பாவிகள் கூட இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொலீசாருக்கு,பு லனாய்வுத் துறையினருக்கு திறமை இருந்தால் துப்புத் துலக்கலாமே.துப்புத் துலக்க வக்கில்லாத காவல் துறை தமிழ்நாட்டின் சிறந்த காவல்துறை என்று கூறிக் கொண்டு செய்யும் இந்த சித்திரவதையும் மனித உரிமை மீறலே.
Quote
 
 
+8 #7 gopal 2011-09-04 08:18
Are you expecting the culprits to self agree with their criminal activities and then only they should be punished?

No where it will happen like that. Edioyorappa is telling that he is innocent. Raja, Kanimozhi are also telling that they are innocent. Then why are they put in to jail.

You mean to say that the police and court should wait till the culprits, themselves agree to their own mistakes.

What is this?

Many people in tamilnadu have shown their symphathy in this case is only due to the time it took for the government to implement the hanging order. Otherwise, tamilnadu people are very clear and they are not ready to accept these three culprits as innocent people as projected by vaiko and their groups.
Quote
 
 
-3 #6 Tamil Magan 2011-09-04 08:09
Ramjetmalani's website used to have the detail investigation report on the case involving Absal Guru. What happend to Perarivalan happened to Absal Guru as well. Unfortunately we people also jump into conclusion by completely believing into whatever government reports on. What we fail to understand is that the government is misleading. Government is using innocents to go about with its agenda. We are being fooled again and again. For parliamentary attack the hindu right-wings wants some muslim blood, and Absul Guru got inbetween. There is a big difference between Kassab and people like Perarivaalan and Absal Guru. Unfortunately we people don't want to think in depth. We don't want to investigate. We don't want to ask why, what, when, how and where. We don't want to spend any effort to achieve truth. We want to live in our own imagination about truth. It is shame. It is shame. It is shame.
Quote
 
 
+10 #5 natarajan.k 2011-09-03 21:30
50 லட்சம்,1 கோடி, 25 கோடி, 1000 கோடி, 1,00,000 கோடி ஊழல், வரிஏய்ப்பு, என லட்சகணக்கான மக்களை வறுமையில் தள்ளி கொன்றவர்களை என்ன பண்ணலாம். அதிகாரி, அமைச்சர், பிரதமர் ஆக்கலாமா?
Quote
 
 
+5 #4 subramaniyam navanee 2011-09-03 21:16
அமைதி நிலவ வேண்டும் அகிலம் வாழ வேண்டூம் ஆயுதம் சாயவேண்டும் அன்பு நதி பாயவேண்டும் வாழ்க பாரதம்
Quote
 
 
+12 #3 sabarivel 2011-09-03 19:09
அப்சல், பேரறிவாளன், இவிகெள்லாம் ரொம்ப நல்லவங்க... இந்திய அரசு, பாஜக இவிகெள்லாம் தீவிரவாத போக்கு கொண்டவை. தமிழன், முகம்மதியர்கள் இவிகெள்லாம் தப்பு செய்தால்... அடஙொய்யா.. இப்படி எல்லாங்கூடவா நெனக்க முடியுது?

இப்படி நெனச்சாலே அது இந்துத்வமோ, ஆரிய சூழ்ச்சியாவோ இல்லினா பூணூல்காரன் தந்திரமாவோத்தான ் இருக்கணும்... அதனால அப்சல், பேரறிவாளன் இவங்கல எள்ளாம் தூக்குல போடக்கூடாது.

ஆனால் ராசபக்சே கைல கெடச்சா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.

என்ன புரியலையா? ஒக்காந்து யோசி.. புரிஞ்சுடும்.. அப்படியும் புரியலைன்னா யோசிக்கரத என்கிட்ட விட்டுடு. நான் சொல்ரபடி மட்டுஞ் செய்...போதும்.
Quote
 
 
-12 #2 arunsundar 2011-09-03 16:06
Thats the state of this Land of Mahatma. The investigation is never honest.

Good Mahatma is not here to see all this violence conducted by the state.

The useless Hindian (its never Indian its always hindian) media never talks the truth.

Satya meva Jaythe....????
Quote
 
 
+19 #1 Tamilmagan 2011-09-03 13:08
அப்சல் குரு , முகமது கசாப் , சாந்தன், பேரறிவாளன்,முரு கன் மற்றும் தருமபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் இவர்கள் யாவரும் கருணை இன்றி கொல்லப்பட வேண்டியவர்கள் . அரபு நாடாக இருந்தால் நடு ரோட்டில் வைத்து தூக்கு போட்ருபங்க
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 269 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday665
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week33124
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month235856
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12757975