முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கெட்டிக் கார ரெட்டிக்களும், பிஜேபியின் இரட்டை வேடமும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 05 செப்டம்பர் 2011 13:03

கர்நாடக சுரங்கத் தொழிலின் தாதாக்களான ரெட்டி சகோதரர்களில் சீனிவாச ரெட்டி மற்றும், ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.  சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தியதாக இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  சிபிஐ யிடம் சிக்கிய இரண்டாவது ரெட்டி இவர்கள்.  முதல் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி.

 

கர்நாடகாவின் அசைக்க முடியாத சக்தியாக இவர்கள் விளங்கிக் கொண்டிருந்தார்கள்.    யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ?

 REDDY_BROTHERS

தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் கால் பதிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பிஜேபிக்கு ஆபத் பாந்தவனாக வந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள்.   ஆந்திராவைச் சேர்ந்த இந்த ரெட்டி சகோதரர்களின் தந்தை ஒரு சாதாரண தலைமைக் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000 ஆண்டில், “Ennoble India“ என்ற சீட்டுக் கம்பெனி நடத்தி மக்கள் 200 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்கள் தான் இவர்கள். 


கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய மூன்று சகோதரர்கள் போக, ஸ்ரீராமுலு என்று அவர்கள் குடும்பத்தின் அங்கமாகவே கருதப்படும் 4 பேரும் தான் இன்று கர்நாடகாவை ஆட்டிப் படைக்கிறார்கள். 1999ல் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள் ரெட்டி சகோதரர்கள். அதிலிருந்தே, பெல்லாரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், பிஜேபியை வெற்றி பெறச் செய்வதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.



ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சி, இரும்பு தாது சுரங்கத்தில்தான் தொடங்கியது. “ஓபாலபுரம் சுரங்க நிறுவனம்“ என்று தொடங்கி, கர்நாடக மாநிலத்தின் எல்லை அருகே ஆந்திராவில் இரண்டு லைசென்ஸுகள் பெற்று உள்ளனர் ரெட்டி சகோதரர்கள். 

2005ம் ஆண்டில் ஆண்டுக்கு 5 லட்சம் டன்களுக்கு முதலில் லைசென்ஸ் பெற்றவர்கள், குறுகிய காலத்திலேயே 60 லட்சம் டன்கள் எடுக்க உரிமம் பெற்றார்கள். இது எப்படி சாத்தியமாகியது என்பது புரியாத புதிர். தோராயமாக கணக்குப் பார்த்தால் ஒரு டன் 3000 ரூபாய் விற்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 டன்கள் எடுக்கும் ரெட்டி சகோதரர்களின் ஒரு நாளைய வருவாய் 6 கோடி. ஆண்டுக்கு 1800 கோடி. 

இந்த வருமானத்தில்தான், திருப்பதி வெங்கடாசலபதிக்கு 45 கோடி செலவில் கிரீடம் வாங்கி காணிக்கை செலுத்தினர் ரெட்டி சகோதரர்கள். 

tirupathi-crown-313

இந்த ரெட்டி சகோதரர்கள் தான்  கர்நாடகாவில் எல்லாமே. இவர்கள் அன்றி ஒரு அணுவும் அசையாது.


 2010ம் ஆண்டு, தென் மாநிலங்கள் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நிலையில் 15 நாட்களாக ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து, டெல்லியில் “கட்டப் பஞ்சாயத்து“ நடத்தி வந்திருக்கின்றனர். முதலில் கட்டப் பஞ்சாயத்து செய்த ராஜ்நாத் சிங் கின் பஞ்சயாத்தின் படி, ரெட்டி சகோதரர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் ஷோபா மற்றும் சில அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சமரசம் எட்டப் பட்டது.



தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள இதற்கு சம்மதித்த எடியூரப்பா அதற்கு பின்பு அளித்த டிவி பேட்டியில், முதலைக் கண்ணீர் வடித்து, என்னை நம்பியவர்களை மோசம் செய்து விட்டேன், வெள்ள நிவாரணப் பணிகளை பார்க்காமல் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியது தவறு, ஆண்டவன் என்னை மன்னிக்க மாட்டார் என்று அரற்றி விட்டு, அப்போதும் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்க்காமல், தன் நாற்காலியைக் காப்பாற்றியதற்காக, காஷ்மீர் மாநிலத்திலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று நன்றி செலுத்தினார்.

19VBG_YEDDYURAPPA_311619f

b-s-yeddyurappa-2011-7-31-7-40-33

 கண்ணீர் வடிக்கும் முதலை

 


இதற்குப் பிறகாவது, படம் முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிரச்சினை முடிந்து விட்டது என்று எடியூரப்பா பேட்டி அளித்தார். முடியவில்லை, எடியூரப்பாவை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று ரெட்டி பேட்டியளிக்கிறார். 

பார்வையாளர்களின் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போனது. இந்த நிலையில்தான், களத்தில் இறங்குகிறார் சுஷ்மா சுவராஜ். பிஜேபி தலைவர்களாலேயே முடியாக ஒரு விஷயத்தை, தான் முடித்துக் காட்டுவதன் மூலம், கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள, ரெட்டி சகோதரர்களையும், எடியூரப்பாவையும் தன் வீட்டுக்கு அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.


இதற்குப் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் இருக்கிறதே. அடடா…. எடியூரப்பா ரெட்டிக்கு கேக் ஊட்டும் அந்தக் காட்சி இருக்கிறதே. காணக் கண் இரண்டு போதாது.

KARNATAKA__11529a
2008ல் நடந்த தேர்தலில் பிஜேபி 110 சீட்டுகளை வெல்வதற்கு, கருணாகர ரெட்டி, சோமசேகர் ரெட்டி, ஜனார்தன ரெட்டி, ஆகியோர் எடியூரப்பாவின் ஆட்சியைக் காப்பாற்றியதற்காக அமைச்சர்களாக்கப் பட்டனர்.

ரெட்டி சகோதரர்களின் அரசியல் வளர்ச்சி, அவர்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை ஒட்டியது.     சர்வதேச சந்தையில் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு ஏற்பட்ட தேவையை கணக்கில் கொண்டு, தாறுமாறாக சுரங்கத் தொழிலில் இறங்கினர் ரெட்டி சகோதரர்கள்.  கர்நாடகா, ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

2001-2002 ஆண்டில் தான், ரெட்டி சகோதரர்கள் தங்களின் ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தை தொடங்குகின்றனர்.  ஆன்ஜநேயா என்பவர், ரெட்டி சகோதரர்களின் ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணி புரிந்தார். இவர் இந்திய சுரங்கத் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை இணைந்து வழங்கும் சுரங்க தொழிலில் நிபுணர் என்ற சான்றிதழை வைத்திருக்கிறார். எதற்காக ஆஞ்சநேயாவை ரெட்டி சகோதரர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், இது போல மத்திய அரசு, சான்றிதழ் பெற்ற நபர் வேலையில் இருந்தால் தான், இந்தியாவின் சுரங்கச் சட்டங்களின் படி, கனிம வளங்களை வெட்டி எடுக்க முடியும்.  ரெட்டி சகோதரர்களின் ஓபாலபுரம் கனிம நிறுவனத்தில், அந்தாரா கங்கம்மா கோண்டா என்ற இடத்தில் ஆஞ்சநேயா பணியாற்றி வருகிறார்.

 ARVJANARDHAN_REDDY__12263f

திடீரென்று 9 டிசம்பர் 2009 அன்று, ரெட்டி சகோதரர்களின் சுரங்க நிறுவனத்தை சிபிஐ சோதனையிடப் போவதாக தகவல் வருகிறது. ஆஞ்சனேயாவின் அலுவலகம், ஒரு மலையின் அடிவாரத்தில், இரும்பு ஷீட்டுகளால் கட்டப் பட்ட அலுவலகம்.   அந்த இடத்தில் தனது உதவியானர் லட்சுமி பிரசாத்துடன் ஆஞ்சனேயா பணியாற்றி வருகிறார்.   வழக்கம் போல, டிசம்பர் 9 காலை தனது அலுவலகத்துக்கு சென்ற ஆஞ்சநேயாக அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவரது அலுவலகம் இருந்ததற்கான தடயமே இல்லை. அதற்கு முதல் நாள் இரவு, ஒரு கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்தது.  அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அத்தனையும் அந்த ஸ்கார்ப்பியோவில் ஏற்றப் பட்டன.  அந்த அலுவலகத்தில் இருந்த தளவாடங்கள் ஒரு வாகனத்தில் ஏற்றப் பட்டன.   ஒரு பொக்லேன் எந்திரம் வந்து, அந்த அலுவலகம் இருந்த இடத்தை அடியோடு மாற்றப் போட்டது.

எரிச்சலடைந்த ஆஞ்சனேயா, நேராக தனது நிறுவனத்தின் எம்டி சீனிவாச ரெட்டி அலுவலகத்துக்கு செல்கிறார்.   “எனது அலுவலகம் எங்கே, ஆவணங்கள் எங்கே” என்று கேட்கிறார்.   சீனிவாச ரெட்டி அமைதியாக, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறுகிறார்.   ஆனால், ஆஞ்சனேயா, சிபிஐ யிடம் தங்களை போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று பயந்த ரெட்டி சகோதரர்கள் அவர் குடும்பத்தின் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்தனர். ஆஞ்சநேயா ஒரு முறை தற்கொலைக்குக் கூட முயன்றார்.

ஆந்திர கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பெல்லாரி மாவட்டம், மிக மிக வளமையான கனிம வளங்களைக் கொண்டுள்ளது. சாதாரணாக அரசு அனுமதித்துள்ள அளவுக்கு கனிம வளத்தை எடுத்தால் 30 ஆண்டுகளுக்கு எடுக்க முடியும்.    ஆனால் ரெட்டி சகோதரர்கள் இன்று எடுக்கும் அளவில், 6 ஆண்டுகளில் மொத்த வளமும் தீர்ந்து போகும் அபாயம் உள்ளது.

REDDY_30186f

சிறிய வயதில் தன் வீட்டில் ஒரு காவலரின் மகனாக வளரும் பொழுதே, ஜனார்த்தன ரெட்டிக்கு பணத்தின் முக்கியத்துவம் புரிந்தது.  பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.   அதன் விளைவாகவே பணத்தின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு கொண்டு வந்தார். தொடக்க காலத்தில் ஒரு பத்திரிக்கையை வேறு தொடங்கினார் ரெட்டி.  அந்தப் பத்திரிக்கையை தொடங்கியதால், பத்திரிக்கைகளின் மீதான பயம் அறவே போய் விட்டது ரெட்டிக்கு.

இந்த ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பர், இறந்து போன ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி.   இந்த ராஜசேகர ரெட்டி ஓபாலபுரம் கனிம நிறுவனத்துக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார்.  அதற்கு கைமாறாக, அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை உடைப்பதற்கு உண்டான அத்தனை உதவிகளையும் செய்தனர் ரெட்டி சகோதரர்கள்.   இன்று சிபிஐ ரெட்டி சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணம்.  ஒரு வேளை, ஆந்திராவில் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை ரெட்டி சகோதரர்கள் எடுத்திருப்பார்களேயானால், இந்த வழக்குகள் வராமல் போயிருக்கும்.

With_Family

திருட்டுக் குடும்பம்

ரெட்டி சகோதரர்கள் மீது இவ்வளவு தாமதமாக நடவடிக்கை எடுப்பதற்காக காரணம், காங்கிரஸ் கட்சி, எப்படியாவது இந்த ரெட்டி சகோதரர்களை ஜெகன் மோகனுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு, எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாததே காரணம்.

ஆயிரக்கணக்கான கோடிகளை, சட்ட விரோத கனிம வளக் கடத்தலினால் சம்பாதித்த ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியில் மிகப் பெரிய சொகுசு மாளிகையை கட்டியுள்ளனர்.  60 அறைகளைக் கொண்ட இந்த வீடுகளை 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய தனியார் பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர்.  ஹெலிகாப்டர் வந்து இறங்க ஹெலிபேடோடு இந்த வீடு கட்டப் பட்டுள்ளது.  இருபது ஹெலிகாப்டர்களை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு, ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற புதிய தொழிலை தொடங்கவும் ரெட்டி சகோதரர்கள் உத்தேசித்திருந்தனர்.

kar_265999a

கர்நாடகாவில் சுரங்கம் தோண்டுவதற்கான லைசென்ஸ் கிடைத்து, மேற்கொண்டு முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் சுரங்கங்களைப் பார்த்து அந்தச் சுரங்கங்களையும் ரெட்டி சகோதரர்கள் வளைத்தனர்.   இரும்புத் தாதை வெட்டி எடுத்து செல்லும் போது, கூடுதலாக எடுப்பதன் மூலம் கொள்ளை லாபம் அடித்தனர்.  ஒரு சிங்கில் ஆக்சில் லாரியில் 15 டன் கனிமம் ஏற்ற முடியும்.  ஒரு டபிள் ஆக்சில் லாரியில் 25 டன் ஏற்ற முடியும்.  அனால் ரெட்டி சகோதரர்கள் சிங்கள் ஆக்சில் லாரியில் 25 டன்களும், டபிள் ஆக்சிள் லாரியில் 50 டன்களும் ஏற்றி 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்துக்கு அனுப்புவார்கள். ஒரு இது போல லாரிகள் ஓவர் லோடு ஏற்றிக் கொண்டு செல்வதை போக்குவரத்துத் துறையினரோ, காவல்துறையினரோ தடுக்க மாட்டார்கள்.   கர்நாடகத்திலும் தடுக்க மாட்டார்கள், ஆந்திராவிலும் தடுக்க மாட்டார்கள்.  இவ்வாறு சட்ட விரோதமாக கடத்துவதன் மூலம், ஒரு நாளைக்கு ரெட்ட சகோதரர்கள் ஈட்டும் லாபம் 20 கோடி.  ஒரு நாளைக்கு 20 கோடி என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். நாளைக்கு 10 ஆயிரம்  லாரிகள் செல்கின்றன. 10 ஆயிரம் லாரிகளை ஓட்டுவதற்கு, லைசென்ஸ் உள்ள லாரி டிரைவர்கள் கிடைக்காததால் கிளீனர்களை வைத்து லாரிகளை ஓட்டியுள்ளனர்.

 

New2520Year2520Wishes2520from2520Kum.2520Shobha2520Karandlaje2520and2520others

எடியூரப்பாவின் நெருங்கிய தோழி ஷோபாவுடன் எட்டி

ஒரு டன் இரும்புத் தாது எடுக்க 400 முதல் 500 வரை செலவு ஆகிறது.   அந்த ஒரு டன் இரும்புத் தாது 7000 ரூபாய்க்கு விற்கப் படுகிறதென்றால் இவர்களின் லாபத்தை கணக்குப் போட்டுப் பாருங்கள். ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்றால், பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட எல்லைகளை மாற்றும் அளவுக்கு இருந்தது.

கர்நாடக அதிகாரிகள் சோதனைக்கு வந்தால், எல்லைக் கற்கள் ஆந்திர எல்லையை நோக்கி நகர்த்தப் படும்.  ஆந்திர அதிகாரிகள் வந்தால் கற்கள் கர்நாடகாவை நோக்கி நகர்த்தப் படும். பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட ஒரு எல்லைக் கல், பூமியில் பல அடி ஆழத்தில் புதைக்கப் பட்ட பெரிய கல்.   அதில் எல்லை எந்த ஆண்டு அளவிடப் பட்டது என்பது போன்ற விபரங்கள் பொறிக்கப் பட்டிருக்கும்.  அந்தக் கல்லை வெடி வைத்து தகர்த்திருக்கின்றனர் ரெட்டி சகோதரர்கள்.

கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் அறிக்கையின் படி,  போக்குவரத்துத் துறை, கனிம வளத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, வணிக வரித் துறை, சுற்றுச் சூழல் துறை, தொழிலாளர் நலத் துறை மற்றும் எடை அளவுத் துறையைச் சேர்ந்த 617 அதிகாரிகளுக்கு, லஞ்சமாக மட்டும், 2 கோடியே 46 லட்சம் கொடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

C.M.Programme-Photo

காந்திக்கு மாலை போடும் திருடன்

அன்னா ஹசாரே போராட்டத்தின் போது, பரிசுத்த ஆவியாக கொதித்தெழுந்து போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த, பிஜேபி கட்சி, ரெட்டி சகோதரர்கள் போட்ட பிச்சையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ரெட்டி சகோதரர்களின் சுரங்க நிறுவனத்திடமிருந்து, கர்நாடக பிஜேபியின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன்கள் நடத்தும் ட்ரஸ்ட் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுக்கப் பட்டிருக்கிறது.  மேலும் பெங்களுரில் 1 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நிலத்தை, ரெட்டி சகோதரர்கள் 20 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.  இந்த இரண்டு சம்பவங்களும், நேரடியாக ரெட்டி சகோதரர்களிடமிருந்து பெறப்பட்ட லஞ்சம் என்று லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றியும், ஊரில் உள்ள அத்தனை ஊழல்களைப் பற்றியும் குரல் கொடுத்து வழக்கு போடும் சுப்ரமணிய சுவாமி, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சுரங்க ஊழலைப் பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டார்.

ஊழல் என்று வந்தால், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை.  இவ்வாறு, காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையே நடக்கும் மோதலால், ஏற்படும் நல்ல விளைவுகளில் ஒன்றுதான் இன்றைய ரெட்டி சகோதரர்களின் கைதும்,  வழக்குகளும்.

கைது நடவடிக்கை எடுக்கப் பட்ட உடனேயே,  பிஜேபி, “ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிப்பார்கள்” என்று அறிக்கை வெளியிடுகிறது.  ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிப்பது இருக்கட்டும்  அது வரை அவர்களை கட்சியிலிருந்து நீக்க பிஜேபி தயாரா ?

 

Comments  

 
0 #36 jalal 2011-09-21 01:46
ஊழலை ஒழிக்க் ஒரு வழி மட்டும்தான். அது மொழி வாரியாக நாட்டை பிரித்துவிடுவது தான்
Quote
 
 
0 #35 italian 2011-09-15 02:17
தமிழ் நாட்டில் வைகோ-வை ஆதரிக்க முடியாது. தமிழ் நாட்டை இனி தமிழரே ஆள வேண்டும்.

அதற்காக படித்த, பண்பான தமிழர்கள் அறபணிப்போடு பொது வாழ்விற்கு வரவேண்டும்.[/ஃஉஒடெ].
நான் தமிழன் இல்லை என்பதில் பெருமை அடைகிரென்.
தமில் ஜாதி இல் பிரக்க வில்லை.
ஜாதி வெரி பிடித்த நாய் இல்லை என்பதில் நான் பெருமை அடைகிரென்.
ஊனர்வால் தமிழன் ஆனதர்ர்கு சிருமை அடைகிரென்...

உன்னை பொன்ட்ரவர்கல் இருக்கும் வரை தமிழன் தாழ்மை அடைவான் என்பது உருதி...
ஜாதி வெரி பிடித நாயெ....

வாஅழ்க இட்டாலி....
Quote
 
 
-2 #34 உண்மை தெரிஞசாகணும் 2011-09-11 07:22
காந்திக்கு மாலை போடும் எடியுரப்பா திருடன் என்றால்
அண்ணாதுரைக்கும் ராமசாமி நாயக்கருக்கும் "மாலை அணிவித்து மரியாதை" (?!!) செய்யும் மு.க யார்?
அம்பேத்கருக்கு "மலர் தூவி அஞ்சலி" (அடேஙகப்பா) செலுத்தும் திருமா யார்?
ஒரு உளவுத்துரை அதிகாரி மேல் இருந்த தனிமனித துவேஷத்தைத் தீர்ப்பதற்காக இணையதளம் ஆரம்பித்து சந்தடி சாக்கில் ஒரு குறிப்பிட்ட மத தீவிரவாதிகளுக்க ு வக்காலத்து வாங்குவதில் ஆரம்பித்து அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று தேசப் பிரிவினை வரை பேசிக்கொண்டிருக ்கும் சவுக்குதான் யார்?
Quote
 
 
-1 #33 உண்மை தெரிஞசாகணும் 2011-09-10 10:17
[ஃஉஒடெ நமெ="சிலந்த்ய்"]@ உண்மை தெரிஞ்சாகணும்
20110906 19:28 "ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றியும், ஊரில் உள்ள அத்தனை
ஊழல்களைப் பற்றியும் குரல் கொடுத்து வழக்கு போடும் சுப்ரமணிய சுவாமி,
கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சுரங்க ஊழலைப் பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டார்."

>

வாருங்கள் பாப்பார பருப்பு அவர்களே.ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்
உங்களுக்கு நாளே நாலு பேர் தான் கிடைத்தார்களா?
இன்னும் சிலர் உள்ளனர் என்ற பருப்பு வேகாது.
இன்னும் சிலர்தான் பலர் அல்ல.
அம்பிகளா நீங்க என்னக்கிடா களத்துல எறங்கியிருக்கீங ்க?
பலி கொடுக்க ஆயிரம் பிற்பட்ட,தாழ்த் தப்பட்ட மக்கள் இருக்கும்போது
என்னடா கவலை உங்களுக்கு?
நடந்த அத்தனை கலவரங்களிலும் இந்த படிப்பறிவில்லா சகோதரர்களை
களத்தில் இறக்கி சொந்த விரலை வைத்து கண்ணை குத்துவது போல்
செய்துதானே காவிக்கொடியை பறக்க வைக்க முயற்சி செய்கிறீர்கள்?
பாப்பான் ரொம்ப இன்டெலுச்டுஅல்.படிக்கும் சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள்.[/ஃஉஒடெ]

முட்டாள்தனமான பதில்.
ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம ். ஒரு சிறு துளி அளவில் இருக்கும் ஒரு கூட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள பல கோடி பிற்படுத்தப்பட் ட தாழ்த்தப்பட்ட மக்களை பல நூறு ஆண்டுகள் அடிமைப்படுத்திவ ிடத்தான் முடியுமா? முடியும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினால் அதைவிட உங்கள் அறிவீனத்தை அளவிட வேறு அளவுகோல் தேவையில்லை. சும்மா வெறுமெனே தி.க மேடைப்பேச்சு பொலப்பேசி உங்கள் பிராமண எதிர்ப்பு வெறியைப் பதிவு செய்வதால் நிங்கள் சொல்வது உண்மையாகிவிடாது .
Quote
 
 
-3 #32 arivumathi 2011-09-08 20:24
டாக்டர் பாண்டியன், நான் சொல்லுவதும் அதுதான்... அணால் நீங்கள் சொல்லுவது போல பி ஜே பி என்பது நிச்சயமாக இந்தியாவில் உள்ள எந்த கேடுகெட்ட அரசியல் கட்சியையும் போல ஒரு இயக்கம் தான். ஆணால் இத்தாலி இந்தியா கம்பேனி (காங்கிரஸ்) இன்றய நிலையை ஒப்பிட்டு பார்கணும்.
அது போல் இன்றய நிலையில் தமிழகம் போன்ற மாநிலங்களில் பார்பணன் ஒரு செத்த பாம்பு. அந்த பாம்பு இனி எந்த நிலையிலும் படம் எடுத்து ஆட முடியாது. நாம் உஷாராக இருந்தால்.... தினமலம் எப்படி நம் மக்களை மூளை சலவை செஇகிறது? இந்து எப்படி மூளை சலவை செஇகிறது? 3 பேரின் மரண தன்டனை விஷயத்தில்... அதை நம் மக்கள்.. இன்னும் சொல்ல போனால் உழைக்காமல் படித்த அறிவு ஜீவிகள் தானே படிக்கிறார்கள்? அதனை படிக்கும் முன் ஒரு கருத்தும், அதனை படித்த பின் ஒரு கருத்தும் சொன்ன அரச் உயரதிகாரியை சமீபத்தில் சந்தித்தேன்..

பார்ப்பான் என்ற செத்த பாம்பை காட்டியே நம்மை வெள்ளைக்கார பரங்கியன் ஆளக்கூடிய நாள் மிக விரைவில் வரும்.. நாமும் இந்த செத்த பாம்பு வித்தைக்கு மயங்கும் வரை....

பார்ப்பனை பற்றி பேசகூடாது என்பது கருத்து அல்ல.. செத்த பாம்பை அடித்துகொன்டே வாய் பிளந்து நிற்க்கும் ஓ நாயை பட்டிக்குள் விட்டுவிடக்கூடா து அன்பரே...
Quote
 
 
+4 #31 Dr. V. Pandian 2011-09-08 18:00
பி. சே. பி-யை விமர்சித்தவுடன் சிலருக்கு வெப்பம் அதிகமாகிறது.

இந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் இறையாண்மை பெற்று, European Union போல, Indian Union உருவாவது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும ான ஒரே தீர்வு.

இன உணர்வோடு செயல்படும் சிறிய தேசங்கள் தான், இயல்பான தேசங்கள். அங்கு தான் ஊழல் குறைவாக இருக்கும். அங்கு தான் வளர்ச்சி இருக்கும். 115 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை ஒற்றை மத்திய ஆட்சி ஆள்வதே சிக்கலுக்கான காரணம். எனவே, இந்தியா உடைவதே இவற்றிற்காண முஉழுமையானத் தீர்வு.

இது பார்ப்பானுக்குப ் பிடிக்காது.

தமிழ் நாட்டில் வைகோ-வை ஆதரிக்க முடியாது. தமிழ் நாட்டை இனி தமிழரே ஆள வேண்டும்.

அதற்காக படித்த, பண்பான தமிழர்கள் அறபணிப்போடு பொது வாழ்விற்கு வரவேண்டும்.
Quote
 
 
0 #30 Badri 2011-09-08 15:23
Savukku,I read almost all ur articles eventhough some of them are Craps.I am a Brahmin,i pay all my taxes correctly(somet imes more also and i never begged(or got incl TV,Free rice etc) for any freebies or reservation.So,i am an uncorrupt person in ur standards,so i have every right to comment abt ur article).Plz say one reason what Advani did wrong,he is much more clean person than all IUML's put together as he wasnt involved in any Icecream Parlour case or Hawala Transactions they do.When he was named in hawala he imme resigned got his name cleared then came back(unlike ur friend(yes i say coz indirectly u support Congress) Manmohan Singh,Sonia clan).Coming to Mining scandal i read an article which clearly implicates Ex-Karnataka Minister Shivakumar,his brother Prakash,Kondaia h etc why dont u get information abt them alone or why dont u write abt CBI which is now slowly but steadily letting off Maran and Karunanithi Clan of robbers(is it coz of caste preference u give).Brahmins constitute only 7% of population who are fed up with this system but 90% are correct unlike others whose track record is far worse esp ur favorite Thiruma(ur article of "Thirunthunga Thiruma" proves u hv great soft corner for person who is equally corrupt by playing caste politics,get money from Saudi and Western Countries and act/dance accordingly(if u r correct person research abt my accusation on ur fav leader and if its false chop of my head def i wont run away).If i were in Thiruma's place i wudnt hv visited Srilanka suppose if had gone wud hv jst visited affected places and wud come back without laughing with Rajapakse(this proves a brahmin guy has more commitment to tamilian cause than ur fav leader).The day learnt abt Tamilian Genocide by IPKLF in 80's i took a vow to myself i wud do my part to root out congress from TN(i promise i am doing it and wud def stick to it and wudnt hv aligned wth them even it cost my life unlike ur fav Thiruma).So,research correctly.BJP alwayz better
Quote
 
 
0 #29 silandhy 2011-09-07 22:10
@ உண்மை தெரிஞ்சாகணும்
2011-09-06 19:28 "ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றியும், ஊரில் உள்ள அத்தனை
ஊழல்களைப் பற்றியும் குரல் கொடுத்து வழக்கு போடும் சுப்ரமணிய சுவாமி,
கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சுரங்க ஊழலைப் பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டார்."

>

வாருங்கள் பாப்பார பருப்பு அவர்களே.ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்
உங்களுக்கு நாளே நாலு பேர் தான் கிடைத்தார்களா?
இன்னும் சிலர் உள்ளனர் என்ற பருப்பு வேகாது.
இன்னும் சிலர்தான் பலர் அல்ல.
அம்பிகளா நீங்க என்னக்கிடா களத்துல எறங்கியிருக்கீங ்க?
பலி கொடுக்க ஆயிரம் பிற்பட்ட,தாழ்த் தப்பட்ட மக்கள் இருக்கும்போது
என்னடா கவலை உங்களுக்கு?
நடந்த அத்தனை கலவரங்களிலும் இந்த படிப்பறிவில்லா சகோதரர்களை
களத்தில் இறக்கி சொந்த விரலை வைத்து கண்ணை குத்துவது போல்
செய்துதானே காவிக்கொடியை பறக்க வைக்க முயற்சி செய்கிறீர்கள்?
பாப்பான் ரொம்ப inteluctual.படிக்கும் சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள்.
Quote
 
 
-3 #28 arivumathi 2011-09-07 19:38
மேலும் பி ஜே பி யில் ரெட்டிகளும் எட்டிகளும் இருக்கலாம். ஆணால் நிச்சயமாக உஙகள் மனசாட்சியை ஒரு முறை கேட்டுபாருஙகள்... இன்றய இந்தியாவின் கேடுகெட்ட நிலைக்கு யார் காரணம்? எப்படி ஒரு ராசிவ் கொலையை வைத்தே புலி புலி என்று பூச்சாண்டி காட்டியே தமிழரினத்தையே அழித்தார்களோ, அதே போல் பி ஜே பி , பாபர் மசூதி இடிப்பு என்ற பூச்சாண்டியை காட்டியே நம்மை இளிச்சவாயர்களாக ஆக்குகின்றனர் அறிவி ஜீவிகளும், போலி மதசார்பின்மை வாதிகளூம்.முச்லிம் லீகோடு கூட்டணி வைத்து கொன்டு அதனை மத சார்பற்ற அணி என்று அறிவித்து ஓட்டு கேட்கும் அறிவிஜீவிகளையும ், அதனை நம்பி ஓட்டு போடும் அறிவாளிகளையும் கொன்ட நாடு தான் இந்தியா..
இன்று காங்கிரசில் முகர்ஜி, அபிஷேக் மனு சிங்வி, மனொஜ் திவாரி,என் டி திவாரி இன்னும் பல பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். ஆனால் அவர்களால் எந்த ஒரு பொது நிறுவனதையோ அல்லது கட்சியையோ நிர்வகித்து நடத்த முடியாது இன்றய நிலையில். அவர்கள் பாணியில் சொன்னால் இன்றய இந்தியாவின் ஆக்சிஜனே ஷத்திரியர்களும் சூத்திரர்களும் தான். அவர்களால் தான் பி ஜே பி யும் நிச்சயமாக இயஙுகிறது. உஙகள் மனசாட்சியை உன்மையாக தொட்டு சொல்லுங்கள்.. இன்றய நிலையில் பி ஜே பி யை தவிற வேறு ஏதாவது கட்சி இந்தியாவை நல்லாட்சி செய்ய வாஇப்பு உண்டா? வாஜ்பாயின் ஆட்சியின் நிலையும் இன்றய இத்தாலி இந்திய கம்பேனி ஆட்சி நிலையும் ஒன்றா? உடனே அத்வானி என்று பூச்சாண்டி காட்டுவார்கள்... அதுவும் ராசிவ் கொலையை காட்டியே நம் உறவுகளை அழித்தது போலவே நம் மொத்த இந்தியாவையும் அழித்து விடுவார்கள்.. அப்புறம் இந்து முஸ்லிம் எல்லாரும் அந்த கம்பேனிக்கு அடிமை தான்....
இதனை பிரசுரம் செய்வீர்களா? தெரியாது...
Quote
 
 
+1 #27 arivumathi 2011-09-07 19:10
பொதுவாக தமிழனை ஏமாற்ற பயன்படும், பயமுருத்த பயன்படும் சொல் தான் இன்றய காலகட்டத்தில் பார்ப்பனன் என்பது... அதே சொல்லை வைத்து தான் தோழர்களும் சரி, இத்தாலி இந்திய கம்பேனி காங்ரசும் சரி... மக்களை ஏமாற்றி வருகிறது. பி ஜே பி அய்யர் கட்சி... அது ஆட்சிகு வரகூடாது.. வந்தால் நம்மை எல்லாம் பிரிச்சிடுவாங... இந்து என்றால் எவ்வளவு அடிச்சாலும் தாஙகனும்... வாய் பேசகூடாது, என்று எல்லாம் பேசவும் எழிதவும் செய்தால் மட்டும் தான் தமிழ்னாட்டில் ஒரு சமூக ஆர்வலராக அடையாளம் காட்டப்படுவர். இந்த இலக்கணத்தில் சவுக்கும் பல நேரஙளில் விதி விலக்கு அல்ல.
நான் எல்லா கருத்துகளோடும் சவுக்கோடு ஒத்து போவேன். ஆணால் இந்து மத எதிர்ப்பு என்ற ஏமாற்றுத் தனமான போலி மதசார்பற்ற பேச்சு தவறானது என்பது நல்ல சிந்தனையாளரான சவுக்குக்கும் தெரியும். இந்த விஷயத்தில் நியாயமான சிந்தனையை வெளிப்படுத்தினா ல் அது தமிழக திராவிட அறிவு ஜீவிகளால் ஏற்கபடாது என்பதால் அதனை அவரும் போலி மத சார்பின்மையை பின்பற்றுகிறார் போலும்.

மேலும் நான் எப்போதும் பிராமணர்களின் கொள்கைக்கும் அவர்களின் சில செயல்களுக்கும் எதிரானவன்.ஆணால் இந்துக்களின் தலைமை என்பதோ இந்துக்களின் அடையாளமோ நிச்சயம் பிராமணர்களிடம் இல்லவே இல்லை. அவர்களும் இந்துக்களில் உள்ல மிகச்சிறிய பிரிவினர் மட்டுமே. ஆணால் இந்த பிரிவினர் இந்துலக்களை பல நூரற்றாண்டுகள் பல வகையில் ஏமாற்றி வந்தனர் என்பது உண்மை.
Quote
 
 
+7 #26 Tamilscafe.blogspot 2011-09-07 15:33
Savukku (I was a big fan of you once)

1 What is a need of writing about Karnataka reddies and PJB, why don’t you compare Gujarat and Tamil nadu? A car company chose Gujarat instead Tamilnadu, why don’t you write about this?

2 I supported ADMK during the last election, but do you think there is no corruption at all in ADMK (if you are so against of corruption)??

3. I think you hate PJB, because of their anti Muslim propagandas? Am I correct? If not then let us know your stand on this?

4. As per your opinion, which political party should we support?

5. What about VAIKO, he seems supporting Tamils more than anyone else? But you don't talk about him much at important times.

I know probably you won't publish this comment, its because of question against PJB, I too don't support them but give us a concrete reason not to support them, please don't give this corrupted reddies because we know congress, much worse than anything else.
Quote
 
 
+2 #25 அடப்பாவி 2011-09-07 12:23
[ஃஉஒடெ நமெ="ஜய"]மொத்தத்தில் கர்நாடக ஆந்திரா வும் ஊழலில் சளைத்தது இல்லை என்று தெரிகிறது. நம் நாட்டின் வளத்தை இப்படி கொள்ளை அடிப்பவர்களி முச்சந்தியில் நிற்கவைத்து சவுக்கால் அடிக்க வேண்டும்.

........இதுவரை எத்தனைபேரை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடித்திருக்கிறோ ம்?
Quote
 
 
+1 #24 gnaansan 2011-09-07 12:21
BJP has been considered to be a stiff competitor for Congress in the past. Now the instances tend to indicate it is also in line with the ruling parties in matters of irregularities of late. We have to curse our fate .
Quote
 
 
+2 #23 ARUNyog 2011-09-07 10:41
இந்த ஊழலில் காங்கிரஸ்சுக்கு ம் பெரிய பங்கு இருக்கிறது.

ஜனாத்தனன் ரெட்டி அவ்வளவு கனிமங்களையும் மாட்டு வண்டியில் வைத்தா அள்ளியிருப்பார் ???

அத்தனை தாதுக்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தின் வழியாகத்தான்
ஏற்றுமதி செய்யப்பட்டிருக ்கிறது

அது மட்டுமில்லாமல் ஒபலாபுரம் மைனிங் கம்பெனியில் ஜெகன் மோகன் ரெட்டி 50 சதவீத

பார்ட்னர் நம்ம கலைஞரய்யா ஷாகித் பல்வா டெக்னிக் மூலம்
Quote
 
 
0 #22 thamizh eezham 2011-09-07 09:21
ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்றால், பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட எல்லைகளை மாற்றும் அளவுக்கு இருந்தது.

கர்நாடக அதிகாரிகள் சோதனைக்கு வந்தால், எல்லைக் கற்கள் ஆந்திர எல்லையை நோக்கி நகர்த்தப் படும். ஆந்திர அதிகாரிகள் வந்தால் கற்கள் கர்நாடகாவை நோக்கி நகர்த்தப் படும். பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட ஒரு எல்லைக் கல், பூமியில் பல அடி ஆழத்தில் புதைக்கப் பட்ட பெரிய கல். அதில் எல்லை எந்த ஆண்டு அளவிடப் பட்டது என்பது போன்ற விபரங்கள் பொறிக்கப் பட்டிருக்கும். அந்தக் கல்லை வெடி வைத்து தகர்த்திருக்கின ்றனர் ரெட்டி சகோதரர்கள்.


அடேங்கப்பா


கேடி சகோதரர்கலை காபி அடித்திருப்பார் கலோ

இன்ட்ரைய நமது எம்ஜிஆர் நாலிதலில் இவர்கலை பட்ரி ஒரு சூப்பர் கவிதை வந்துல்லது
Quote
 
 
+2 #21 thamizh eezham 2011-09-06 20:31
ஆந்திர கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பெல்லாரி மாவட்டம், மிக மிக வளமையான கனிம வளங்களைக் கொண்டுள்ளது. சாதாரணாக அரசு அனுமதித்துள்ள அளவுக்கு கனிம வளத்தை எடுத்தால் 30 ஆண்டுகளுக்கு எடுக்க முடியும். ஆனால் ரெட்டி சகோதரர்கள் இன்று எடுக்கும் அளவில், 6 ஆண்டுகளில் மொத்த வளமும் தீர்ந்து போகும் அபாயம் உள்ளது.

ஆங்கிலேயன் எவ்வலவோ பரவாயில்லை போலிருக்கிரது
சொந்த நாட்டையே இப்படி சுரன்டுகிரார்கல
Quote
 
 
+4 #20 உண்மை தெரிஞ்சாகணும் 2011-09-06 19:28
"ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றியும், ஊரில் உள்ள அத்தனை ஊழல்களைப் பற்றியும் குரல் கொடுத்து வழக்கு போடும் சுப்ரமணிய சுவாமி, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சுரங்க ஊழலைப் பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டார்."

எங்கிருந்து வந்தது சாமி பற்றி பேச்சு? பி.ஜே.பி ஒரு பார்ப்பனர்களின் கட்சி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சவுக்கு முயற்ச்சிப்பது புரிகிறது.

சில கேள்விகள்.
1. மோடி பார்ப்பனரா?
2. பொன்.ராதாகிருஷ்னன் பார்ப்பனரா?
3. ராஜ்நாத் சிங் பார்ப்பனரா?
4. எடியுரப்பா பார்ப்பனரா?
இன்னும் பலர் இருக்கிறார்கள் பார்ப்பனர் அல்லதோர்.

எல்லாப் பிரச்சனைகளையும் சாமியே கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில ேயே தெரிகிறது சாமியின் தேச சேவையின் அளவு.
வாழ்க சாமி.
Quote
 
 
+9 #19 dilip kumar 2011-09-06 17:27
ஒருவேளை சாப்பாட்டிர்க்க ு அல்லாடும் கடினமாக உழைக்கும் ஏழை மக்கள் கோடிக்கணக்கானவர ் இந்த நாட்டில் உள்ளபோது நாட்டின் வளங்களை இப்படி சுரன்டும் அரசியல்வாதிகளை ஒழிக்க எகிப்து புரட்சி போல் இந்தியாவிலும் ஒரு புரட்சி வந்தால் தான் விடிவு வரும். சிபிஐ வழக்கு விரைவில் ஒன்ருமில்லாமல் போய்விடும்
Quote
 
 
+1 #18 நவி 2011-09-06 17:15
ரொட்டி விக்க கூட லாயக்கு இல்லாத பசங்க எல்லாம் அரசியலுக்கு வந்த இது தான் நிலை....
Quote
 
 
+5 #17 Nellai Kumaran 2011-09-06 16:30
காதல் தோல்வியால் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக நின்று பெட்ரோல் ஊற்றி பொது மக்கள் இருக்கும் இடத்தில் தன்னையே எரியூட்டுவார்கள ா? கொஞ்சாமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா இந்த மானங்கெட்ட தினமலர்.

உங்கள் கண்டனத்தை எந்த வழியிலாவது பதிவு செய்யுங்கள்

தின மலர் கட்டுரையை எழுதிய ரங்கராஜ் பாண்டேவின் தொலைபேசி எண். 9952409258.
---
99443 09600
98940 09200
98940 09400

98940 09007

044 - 2841 3553
044 - 2855 5783
Quote
 
 
+2 #16 KK 2011-09-06 11:20
Savukku you did not publish my comment yesterday. Right now the battle is with congress. You can't fight two enemies with the same time. You need BJP to kick out congress. But by downsizing BJp you are indirectly supporting congress. Now let us be clear - who is your first enemy and make the battle stratergies accordingly.
Now Govt says 2g there is no loss and entire jail birds are going to come out. You don't have any article on that. Your fight should be with congress .You can take BJp later on
Quote
 
 
+2 #15 manasatchi 2011-09-06 10:06
சிபிஐ யிடம் சிக்கிய இரண்டாவது ரெட்டி இவர்கள். முதல் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி.

சவுக்கு ANDHARA FORMER CHIEF MINISTER Y S RAJASEKARA REDDY NOT JANARTHANA REDDY
PLEASE CHANGE THE NAME SAVUKKU THAPPU SEIYA KOODATHU
Quote
 
 
+2 #14 Editor 2011-09-06 09:50
ஜெகன் மோகன் ரெட்டி, ராஜசேகரரெட்டி மகன். ஜனார்த்தன ரெட்டி மகன் இல்ல.
Quote
 
 
+3 #13 thamizh eezham 2011-09-06 09:14
அன்னா ஹசாரே போராட்டத்தின் போது, பரிசுத்த ஆவியாக கொதித்தெழுந்து போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த, பிஜேபி கட்சி, ரெட்டி சகோதரர்கள் போட்ட பிச்சையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.


சவுக்கிர்கு அனைத்து மதங்கலிலும் வாசகர்கல் மட்ரும் ரசிகர்கல் உல்ல நிலையில் கிரிச்துவ மத நம்பிக்கையை விமர்சிப்பதை சவுக்கு தவிர்த்தால் சவுக்கு மீதான மதிப்பு மேலும் உயரும்

Savukku has earned fans and readers belonging to all the religions, including non-believers of God, because of it's different and unique writing style, genuineness of the facts, immediate and fast presentation of facts and punch dialogues.

If Savukku avoids such words which may seem to criticise Christian beliefs Savukku's image will go to still higher level.

This is only a suggestion to Savukku.

Savukku may take it's own decision.


The cover story is very good. I went through the same for 6 times.
Quote
 
 
+1 #12 Tamil Magan 2011-09-06 08:02
What can you expect from those making politics using hate alone? What can you expect from those doing politics without no concern for the downtrodden indians? What can you expect from those who are trying to make lies true? Their nationalism is based on exclusion; Their nationalism is based on the benefits of uppercaste. While they try to force south indians practice north indian religious festivals, I dare them to take our mutthaaramman koil festivals, subramaniyaswam i soorasamharam festivals to north india. will they? they attempts to ban tamil symbols and they are trying to forcefully thrust hindutva through our lungs. Lies, cheats and deceits as practiced by their ancestors and the same they practice in the name of politics. At the end they care only about themselves. The poor downtrodden adhivasis, tribals, slum dwell indians are needed only when they want to use violence against their opponents.
Quote
 
 
+7 #11 suthiran 2011-09-06 00:59
இதைப் படிக்கும்பொழுது ரத்தம் கொதிக்காமல் இருக்கமுடியாது ! நம் நாட்டில் இந்தக் கேவலமான , அயோக்கியத் திருடர்களுக்கு வர வர சட்டத்தையும் , நேர்மையான வழிமுறைகளையும் காலில் போட்டு நசுக்கும் அளவுக்கு திமிரும் , கொழுப்பும் இந்தக் கேடு கெட்ட காங்கிரஸ் மற்றும் பி ஜே பி கட்சிகளின் மானம் கெட்ட ஊழலுக்குப் பேர் போன தலைவர்களால் தான் ஏற்பட்டன ! இவர்களோடு இந்தக் கிரிமினல் தலைவர்களையும் சேர்த்து உள்ளே தள்ளவேண்டும்!
Quote
 
 
+4 #10 http://koothadivedda 2011-09-05 21:11
கட்டுரையின் சாராம்சப்படி பார்த்தால் காங்கிரஸுக்கு இந்த திருட்டு றொட்டி சகோதரர்கள் சப்போட் பண்ணியிருந்தால் சிபிஐ தலையிட்டிருக்கா து. கைது நடந்திருக்காது,
இனியும் என்ன மிஞ்சி மிஞ்சி போனாலும் இந்த முதலைகளிடமிருக் கும் பணத்தின் மூலம் வெட்டியாடி வெளிவந்துவிடத்த ான் போகிறார்கள்.

என்ன ஒரு அரசியல் என்னே ஒரு ஜனநாயகம்.புல்லரிக்கிறது. ஜன் லோக்பால் ஒருவேளை அமூலுக்கு வந்தால். இப்படியான சாபக்கேடு முடிவுக்கு வரலாம்?

நான் இதுவரையில் நினைத்திருந்தேன ் நம்ம தாத்தாதான் படு பயங்கரமான ஊழல் கில்லாடி தில்லாலங்கடி முதலை என்று எடியூரப்பு தாத்தாவுக்கே காத்தடிச்சிடுவா ர் போலிருக்கு
Quote
 
 
0 #9 rajnyc 2011-09-05 20:23
This is small scale. the main reason is Congress. All other parties need money to fight out congress, this is the reason. Let congress die all other parties will be good as normal.
Quote
 
 
+9 #8 rajnyc 2011-09-05 20:21
கங்கிரசின் திறமை பிஜேபிக்கு இல்லை என்பது தெரிகிரது. 2ஜி கொள்ளையர்கள் எல்லாம் எஸ்கேப்... மாறன் - சோனியா தெறமெ இல்ல இவுஙலுக்கு.
Quote
 
 
+12 #7 araj 2011-09-05 20:06
மாறன் ப்ரதர்ஸ் அவ்வளவுதானா? அம்மாவோட கூட்டனி!

அன்பர் சவுக்கு எதிர்பார்த்தது நடக்காது போல
Quote
 
 
+2 #6 lenin prabhu 2011-09-05 16:47
small correction in this story , that jegan mohan reddy father name is Y.rajasekhara reddy not janardhan reddy
Quote
 
 
+11 #5 Ramss 2011-09-05 15:19
திருட்டுக் குடும்பம்
தமிழ் நாட்டில் மாறன் சகோதரர்கள் மற்றும் கருணா அங்கே ரெட்டி சகோதரர்கள் மற்றும் எடியூரப்பா.................
Quote
 
 
0 #4 gopal 2011-09-05 15:01
In this case, Cong played a very very tactical game.

It allowed reddy brothers to fight with Ediyorappa. ( BJP's name got spoiled).
After the spoiling game is successfully implemented, now it is arresting reddy brothers.
What to do?
As of now, Cong is leading in karnataka politics.
Quote
 
 
0 #3 ji 2011-09-05 14:37
ஹும் என்னத்த சொல்ல ! அவின்களுக்கு இவநுன்க பரவா இல்லை அப்புடின்னு நினைத்துக்க !
Quote
 
 
+2 #2 jaya 2011-09-05 14:24
மொத்தத்தில் கர்நாடக ஆந்திரா வும் ஊழலில் சளைத்தது இல்லை என்று தெரிகிறது. நம் நாட்டின் வளத்தை இப்படி கொள்ளை அடிப்பவர்களி முச்சந்தியில் நிற்கவைத்து சவுக்கால் அடிக்க வேண்டும்.
Quote
 
 
+5 #1 thamizhan 2011-09-05 14:19
There is a benamy/proxy for these people in chennai, who has indra air, helicopter taxi operations in the benamy name of Ms.Padmini whose brother s.Venkatramana is the benamy and black money controller of Jagan mohan reddy present and YSR money. JAGAN mohan reddy often visits chennai to convert black money through this company dream castle services, Why CBI is silent on these counts. Venkataramana is also into money laundering of YSR and jagan mohan reddy money through malaysia through the channel of software exports. Why is CBI silent and not investigating. Indra Air is the proxy of Reddy and Jagan mohan reddy investment ?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 288 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2039
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week2039
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month283414
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12805533