முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 07 செப்டம்பர் 2011 18:18

 

இந்தியாவில் வழக்கமான குண்டுவெடிப்பு மீண்டும் அரங்கேறியிருக்கிறது. மீண்டும் 11 அப்பாவி மக்கள் தங்களின் உயிரை இழந்திருக்கிறார்கள்.  குண்டுவெடிப்புகளும், உயிர்ப்பலிகளும், அதைத் தொடர்ந்த விசாரணைகளும், தண்டனைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  ஆனால், குண்டுவெடிப்புகள் நின்றபாடில்லை.

 blast16-16

மற்ற நேரங்களில் வெடித்த குண்டுவெடிப்பை விட, புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் வெடித்த இந்த குண்டுவெடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  ஏனென்றால் அது வெடித்த நேரம்.   குண்டுவெடிப்புக்கு பிறகு, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு தடை செய்யப் பட்ட ஹூஜி என்ற அமைப்பிடமிருந்து ஈமெயில் வந்துள்ளது.  அந்த ஈமெயிலில், டெல்லி குண்டு வெடிப்பிற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.   அப்சல் குருவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப் பட வேண்டும், இல்லையென்றால், முக்கிய உயர்நீதிமன்றங்களையும், உச்ச நீதிமன்றத்தையும் குண்டு வைத்து தகர்ப்போம் என்று அந்த மின்னஞ்சலில் எழுதப்பட்டுள்ளது.

 BLAST_SIDE_OF_DELHI_775203g

அப்சல் குருவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் எந்த அமைப்பும், இந்த நேரத்தில் குண்டு வைத்து, இப்படிப்பட்ட ஒரு முட்டாள்த்தனத்தை செய்யாது.  முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவில் இன்று மரண தண்டனை ஒரு விவாதமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.   மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டுமா என்ற விவாதம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில், அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய் என்று வெடிகுண்டை வைத்து, 11 உயிர்களை பறித்தால், இதனால் அப்சல் குருவின் தண்டனை ரத்து செய்யப் படுவதற்கு மாறாக, அப்சல் குருவை உடனே தூக்கில் போடு என்ற குரலே வலுத்து ஒலிக்கும் என்பது கூட தெரியாத தீவிரவாத இயக்கங்கள் கிடையாது.  குண்டு வைப்பது ஸ்திரத்தன்மையை குலைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க முடியுமே ஒழிய, அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதாக இருக்க முடியாது.

 

இன்று மத்திய அரசு சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. தினம் தினம் புதுப்புது நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.  கடைசியாக கிளம்பிய புது நெருக்கடி அமர் சிங் விவகாரம்.    அமர் சிங் விவகாரத்தை எப்படியாவது மூடி மறைக்க காங்கிரஸ் அரசு விரும்பியது.   இந்த விவகாரம் விக்கிலீக்குகளில் வெளியான போது, இது தொடர்பாக விசாரிக்கவென்று ஒரு பாராளுமன்றக் குழுவை அமைத்தது.  அந்தக் குழு விசாரித்து, யார் மீதும் நடவடிக்கை எடுக்க  போதுமான ஆதாரங்கள் இல்லை என முடிவு செய்தது.   மன்மோகன் சிங்கும், அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று, யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலாது என்று தெரிவித்தார்.  இந்தப் பிரச்சினை இதோடு முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியாக இருந்த மன்மோகன் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் பீதியைக் கிளப்பி விட்டது.  “இது வரை ஏன் கைது செய்யவில்லை ?  விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம் ?”  என்று சராமாரியாக கேள்விகள் எழுப்பியதும், வேறு வழியின்றி அமர்சிங்கையும் இன்னும் இரண்டு பேரையும் கைது செய்தது.

 DelhiBlast-070911-ra9

இந்தக் கைதுகளைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சி, இந்த பணப்பரிமாற்றத்தால் பயனடைந்தது யார் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.  ஜுலை 2008ல், நூலிழையில் வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு தப்பியது அனைவரும் அறிந்ததே.  அவ்வாறு வாக்கெடுப்பில் தப்பிப்பதற்கு, மன்மோகன் சிங் அரசுக்காக கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக வழங்கப் பட்டது வெளிப்படையான விஷயம்.    அமர் சிங் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டால், அது மன்மோகன் சிங் அரசின் தலையில் விடிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

 

இது தவிரவும், அன்னா ஹசாரேவின் போராட்டம் வேறு நாடெங்கும் காங்கிரஸ் அரசுக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த அவப்பெயர் போதாதென்றால், ஆ.ராசா வேறு அவர் பங்குக்கு ப.சிதம்பரத்தையும், மன்மோகன்சிங்கையும் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.  கனிமொழியும் ராசாவின் வழியை பின்பற்றுகிறார்.

 

2ஜி வழக்கின் விசாரணை சூடுபிடிக்க சூடு பிடிக்க, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகியுள்ளன.  கூட்டணிக் கட்சியின் தலைவரான மம்தா பேனர்ஜி வேறு தன் பங்குக்கு முறுக்கிக் கொண்டுள்ளார்.  ஜெகன்மோகன் ரெட்டி மீதும், ஜனார்த்தன ரெட்டி மீதும் பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகள், காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் ராஜசேகர ரெட்டியின் ஊழல்களை அம்பலப் படுத்த உள்ளன.

 

தங்கள் சொந்தக் கட்சியின் அமைச்சர் அஜய் மக்கான் கொண்டு வந்த விளையாட்டு வாரிய வரைவு சட்டத்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் சரத் பவாரின் நெருக்கடியால் வாபஸ் பெற நேர்ந்தது.    ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை தூக்கில் போடலாம் என்று பார்த்தால், அதுவும் முடியவில்லை.   சரி அப்சல் குருவையாவது போடலாம் என்றால், அதற்குள்ளாகவே ஓமர் ஷரீப் எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளார்.

 

மூவரின் கருணை மனுவை நிராகரித்து, அப்சல் குருவின் மனுவையும் நிராகரித்தால்,  இந்தியா இந்து முஸ்லீம், என்று இரண்டாக பிளவு படும், அவ்வாறு பிளவுபட்டால், அந்தப் பிளவில் குளிர் காய பாரதீய ஜனதா கட்சி முனையும், அப்போது இஸ்லாமியர் ஆதரவு வேஷம் போட்டு, அப்சலை தூக்கில் போடும் விருப்பம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று பசப்பலாம்.  பிஜேபிக்கு இந்துத்துவா வாக்கு வங்கியை பாதுகாக்க வேறு வழி இல்லாததால், அப்சல் குருவை உடனே தூக்கில் போடு என்று கோரிக்கை வைக்க வேண்டும்.   இஸ்லாமியர்கள் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆதரவை அளிப்பார்கள்.  2ஜி, 3ஜி, சிடபிள்யூஜி என்று அத்தனை ‘ஜி’க்களும் மறைந்து போகும், நிம்மதியாக குளிர் காயலாம் என்று திட்டம் போட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டார் அன்னா ஹசாரே என்ற 74 வயதுக் கிழவர்.

 THAVD_BLAST_3_775201g

அந்தக் கிழவர் 2 வார காலம், தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க ஊழல் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை எழுப்பினார்.  இந்த விவகாரத்தில், வழக்கமாக பிளவு பட்டிருக்கும் எதிர்க்கட்சிகள், ஒற்றுமையாக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தின.

 

தமிழக  வரலாற்றில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் நினைவு கூறத் தக்கது.   திமுக ஆட்சி காலத்தில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆடிட்டர் ஒருவர் போயஸ் கார்டனில் வைத்து செருப்பால் அடிக்கப் பட்டதாக புகார் கூறினார். அந்தப் புகார் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.   மறுநாள் சட்டசபை தொடங்கியது. தொடங்கியதும், அதிமுக உறுப்பினர் தாமரைக்கனி திமுக உறுப்பினர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதுகில் வேகமாக அறைந்தார்.  திரும்பிப் பார்த்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்தில் ஒரு பெரிய மோதிரத்தை வைத்துக் குத்தினார்.   வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

 

இந்தச் சம்பவம் நடந்ததும் ஆடிட்டரை செருப்பால் அடித்த விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வீரபாண்டி ஆறுமுகம் தாக்கப் பட்ட விவகாரமே பிரதான செய்தியாக வந்தது.

 

இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான மொசாட், அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ போன்ற நிறுவனங்கள், வெடிகுண்டு வைத்து நாச வேலையில் ஈடுபடுவதில் கை தேர்ந்தவை.   1973ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், இஸ்ரேலின் விளையாட்டு வீரர்கள் வெடி வைத்து கொல்லப் பட்டதற்கு பழிவாங்கும் விதமாக, இஸ்ரேல், அந்தத் தீவிரவாதிகள் ஒவ்வொருவராக தேடித் தேடிக் கொன்றழித்த விபரத்தை, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் “ம்யூனிக்” என்ற திரைப்படத்தில் அழகாக சித்தரித்திருப்பார்.

 

இது போல மொசாட் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட சம்பவங்கள் ஏராளம்.   இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனமான ரா (RAW – Research and Analysis Wing)ன் முக்கிய பணி, உளவு சேகரிப்பதோடு அல்லாமல், பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது வழக்கமே.  காஷ்மீரில், இந்திய உளவுத்துறை (INTELLIGENCE BUREAU) இது போன்ற தீவிரவாதச் செயல்களைத் தான் செய்து கொண்டிருக்கிறது.  ஒரு மாதத்துக்கு மத்திய உளவுத்துறைக்கு கொடுக்கப் படும் ரகசிய நிதி மட்டும் 50 லட்ச ரூபாய்.  இந்த  பணத்தை வைத்து, ஆயுதம் வாங்குவது, புதிய தீவிரவாதிகளை உருவாக்குவது, எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று தலைப்புச் செய்திகளை உருவாக்குவது போன்ற வேலைகளில் தான் ஈடுபட்டு வருகிறது.

 

காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் நெருக்கடியினால், ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தால், தேசத்தின் ஒட்டு மொத்த கவனமும், குண்டு வெடிப்பில் திரும்பும்.   தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த நேரத்தில், அரசை விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்று ஊடகங்கள் குரல் எழுப்பும்.   அர்னான் கோஸ்வாமி, “THE NATION DEMANDS AND ANSWER. INDIA REACTS STRONGLY TO TERROR ACT.  HANG AFZAL GURU IMMEDIATELY.  என்று உச்ச ஸ்தாயில் கத்துவார்.

 

IMG_9169116

 

மற்ற ஊடகங்கள் டிஆர்பி ரேட்டிங் போய் விடுமே என்ற பயத்தில், அர்னாப் கோஸ்வாமி சொன்னதை வேறு வார்த்தைகளில் சொல்லும். பத்திரிக்கைகள் தலையங்கம் தீட்டும்.   நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் ட்விட்டரிலும், பேஸ் புக்கிலும், கூகிள் ப்ளஸ்ஸிலும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள்.

 

இந்தியா வசதியாக மற்ற எல்லா விஷயங்களையும் மறந்து விடும்.     இதுதானே காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும் ?  ஊடகங்கள் மற்றும், ஆங்கில செய்தித்தாள்களை வாசிக்கும் மக்களுக்கு தீனி போடும் வகையில், யாராவது சில இளைஞர்களை பிடித்து, டிவி முன்பாக, “டெல்லி குண்டு வெடிப்பை நாங்கள் தான் திட்டமிட்டோம்.    எங்களுக்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வந்துள்ளது.   பாகிஸ்தானில் பயிற்சி எடுத்திருக்கிறோம்.  டெல்லி செங்கோட்டை, உச்ச நீதிமன்றம் போன்ற முக்கிய ஸ்தலங்களை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்தோம்” என்று வாக்குமூலம் அளிக்க வைப்பார்கள்.    அந்தத் தீவிரவாதிகளை கைது செய்கையில், அவர்களிடமிருந்து சில புகைப்படங்கள், வரைபடங்கள், ஒரு ஆட்டோமேடிக் பிஸ்டல், பாகிஸ்தான் ரூபாய் நோட்டுக்கள் போன்றவை கைப்பற்றப் பட்டுள்ளன என்று தகவல் தெரிவிப்பார்கள். இரண்டு மாதங்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படும். வேறு எந்த இடத்தில் குண்டு வெடித்தாலே, ஆஜராகாமல் எதிர்ப்புத் தெரிவிக்கும் வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்றத்தின் அருகிலேயே குண்டு வெடித்திருப்பதால், ஒருவரும் ஆஜராகாமல் மறுப்பார்கள்.  வழக்கறிஞர்களே இல்லாமல் எதிரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் படும்.   மீண்டும் ஒரு விவாதம் இருக்கும்.    அப்போதும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்.

 
DelhiBlast-070911-ra9

நாமும் அடுத்த செய்தி வந்ததும் அனைத்தையும் மறந்து விட்டு, வேறு வேலைகளை பார்க்கப் போய் விடுவோம்….  இதுதானே வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ?

 

Comments  

 
+2 #80 Thinker 2011-09-09 18:10
அப்போ பல கொலைகளை செய்த மஹின்டா & கொதபயாவுக்கு மரணதைண்டணை வென்டாமா ?
Quote
 
 
+1 #79 mrvenky 2011-09-09 16:17
ஒன்னும் புரியல யாருக்கும் எதுவுமே புரியக்குடாது எனும் என்னத்தில் எழுதப்பட்ட கட்டுரை! ஒண்னு மட்டும் உறுதி இது வென்னை தடவும் கட்டுரை! சில மத பிரியகர்களுக்கு மட்டும்!
Quote
 
 
+2 #78 lal 2011-09-09 13:43
yes , you may be right. there is a possibility. you can not stop this and nobody wil support you.because your statement against our Gov ( con). if u right , who wil answer for 15 people dead????????????? they simply pay 1 or 2 lak for each dead people family.... actually RAW s/b punish .... who can do that.......... and in the another way ........ what pak will say for this ???
if any Boom blast by pak , they will say, it is not by us ( pak) , it is done by RAW only..... so we need a clear gov to save Indian
Quote
 
 
+5 #77 ss 2011-09-09 13:33
[ஃஉஒடெ நமெ="பெருல என்ன இருக்கு?"]கட்ச தீவ குடுத்து இலங்கையோட கால நக்குன மாதிரி காஷ்மிர குடுத்து பாகிஸ்தானையும் அருணாச்சல் பிரதேஷ குடுத்து சீனா வையும் நக்க வேண்டியதுதான? இதுல என்ன வெக்கம் வேண்டி இருக்கு? பக்கத்துக்கு நாட்டோட இறையாண்மை தானடா உங்களுக்கு முக்கியம்?[/ஃஉஒடெ]

அஸ்ஸாமில் 111 கிராமங்களை பங்களாதேசத்துக் கு சென்ற வாரம் நமது பிரதமர் தாரை வார்த்திருக்கிற ார். பெருமைப் படுவோம்.
Quote
 
 
-2 #76 மண்ணடி அம்ஜத் 2011-09-09 12:52
சவுக்கு நீங்கள் உண்மையை எழுதுகிறீர்கள்..

உண்மை நிறைய பேருக்கு கசக்க தான் செய்யும்..

இந்தியாவில் அமெரிக்க அடிமைகள் அதிகம்... அமெரிக்காவிற்கு வால் பிடிக்கும் மீடியாக்கள் தான் இங்கே உள்ள அனைத்தும். அவர்கள் எடுக்கும் வாந்தியை சுவைக்க விரும்புபவர்கள் பெரும்பான்மை இந்தியர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

குண்டு வைத்தவன் யாராக இருந்தாலும் அவனை அரசு கண்டம் துண்டமாக வெட்டினாலும் அது வரவேற்க தக்கது.

ஆனால் குண்டு வாய்த்த உடன் ஒரு ஈமெயில் ... ஒரு முஸ்லிம் பெயரில்.. எதாவது ஒரு ப்ரொவ்சிங் சென்டரில் இருந்து மெயில் அனுப்புவது உலகிலேயே ரொம்ப கஷ்டம் பாருங்க..

மலேகான் ல குண்டு வெடித்த உடன் மீடியாக்கள் முதலில் என்ன கூவின? பின்ன என்ன ஆச்சு? அப்போ சிதம்பரம் கூட காவி தீவிரவாதம் என்று கூறினார். ஆனால் இப்போ கூட ஒரு மதத்தை தீவிரவாததொடு இணைத்து கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல் துறையில் ஒரு கார்க்கரே ... தேர்தல் கமிசனில் ஒரு குரியிசி ஒரு பிரவின் குமார் இது போன்ற நேர்மையான அதிகாரிகள் ஒரு ஒரு துறையிலும் இருந்தால் ... உண்மை வெளி வரும்.. இந்தியர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கலாம்..
Quote
 
 
-1 #75 வன்னி காட்டு சுடலை 2011-09-09 11:14
[ஃஉஒடெ நமெ="அன்பு"]அன்பின் சவுக்கு,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா நாடுகளை இயக்குவது அந்தந்த நாட்டின் உளவுத்துறை தான், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் வைத்தது தான் சட்டம், சில சமயங்களில் யார் ஆட்சிக்கு வருவது என்பதையும் அவர்கள்தான் முடிவு செய்வார்கள், ஓட்டுப்பதிவுக்க ு எந்திரங்களை கொண்டுவந்ததும் அதனால் தான்.

உளவுத்துறை பற்றிய உண்மைகளை சொல்லும் போது, இதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள், ஏனெனில் ஓட்டுப்போடும் ஒவ்வொருவனும் தன்னுடைய ஓட்டுதான் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிப்பதாக எண்ணி கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவனிடம் உன்னை ஆட்டுவிப்பவன், உன் கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவன் என்கிற உணமையை சொல்லும் போது அவன் மனம் அதை ஏற்பதில்லை. ஆண்டாண்டு காலமாக தான் ஏமாற்றப்பட்டு வருவதை அவ்வளவு எளிதாக யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
பத்திரிகை துறையில் முதல் முறையாக நீங்கள் "ரா"((றாந்) வைப்பற்றிய உண்மையையை போட்டு உடைத்துள்ளீர்கள ், அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள், இனி நீங்கள் உங்கள் பாதுகாப்பில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இறைவன் உங்களுக்கு துணை இருக்கட்டும்.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்தே தீரும்.[/ஃஉஒடெ]

காமெடி பீச் சவுக்குக்கு இந்திய உளவு அமைப்பினால் தொல்லையா???
ஐஐயோ அடன்கவே மாட்டீன்களாடா??
உண்மையிலேயே வயிரு வலிக்குதுடா மக்கா உன்களுடைய கருத்துகள் எல்லாம் படிச்சு..
Quote
 
 
+6 #74 manithan 2011-09-09 11:01
மீண்டும் ஒரு தேசிய பிரச்னையை எழுத நினைத்து கையை சுட்டு கொண்டு இருக்கிறீர்கள்... உங்களுக்கு தேசிய அரசியல் வராது என ஏற்கனவே சுட்டியுள்ளேன்... ஆகவே தேசிய அரசியலை தவிர்த்துவிட்டு , கலைஞ்சர் குரூப் பற்றி சூடான தகவல் வெளியிட்டு வாசகர் கைதட்டலை பெற முயற்சி செய்யவும்...
Quote
 
 
-9 #73 அன்பு 2011-09-09 05:58
அன்பின் சவுக்கு,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா நாடுகளை இயக்குவது அந்தந்த நாட்டின் உளவுத்துறை தான், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் வைத்தது தான் சட்டம், சில சமயங்களில் யார் ஆட்சிக்கு வருவது என்பதையும் அவர்கள்தான் முடிவு செய்வார்கள், ஓட்டுப்பதிவுக்க ு எந்திரங்களை கொண்டுவந்ததும் அதனால் தான்.

உளவுத்துறை பற்றிய உண்மைகளை சொல்லும் போது, இதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள், ஏனெனில் ஓட்டுப்போடும் ஒவ்வொருவனும் தன்னுடைய ஓட்டுதான் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிப்பதாக எண்ணி கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவனிடம் உன்னை ஆட்டுவிப்பவன், உன் கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவன் என்கிற உணமையை சொல்லும் போது அவன் மனம் அதை ஏற்பதில்லை. ஆண்டாண்டு காலமாக தான் ஏமாற்றப்பட்டு வருவதை அவ்வளவு எளிதாக யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
பத்திரிகை துறையில் முதல் முறையாக நீங்கள் "ரா"((RAW) வைப்பற்றிய உண்மையையை போட்டு உடைத்துள்ளீர்கள ், அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள், இனி நீங்கள் உங்கள் பாதுகாப்பில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இறைவன் உங்களுக்கு துணை இருக்கட்டும்.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்தே தீரும்.
Quote
 
 
+6 #72 maayavi 2011-09-09 00:15
absolutely irresponsible article. you don't have any guts to write about islamic terrorism savukku. why? are you scared of life that you will be the target if you do so? understandable
Quote
 
 
+4 #71 sukumar 2011-09-08 21:57
சு.சாமிய மிஞ்சிட்டார் சவுக்கு.. இப்படி எல்லாம் தமாஷ் பண்றதுல...
Quote
 
 
+6 #70 perula enna irukku? 2011-09-08 20:52
கட்ச தீவ குடுத்து இலங்கையோட கால நக்குன மாதிரி காஷ்மிர குடுத்து பாகிஸ்தானையும் அருணாச்சல் பிரதேஷ குடுத்து சீனா வையும் நக்க வேண்டியதுதான? இதுல என்ன வெக்கம் வேண்டி இருக்கு? பக்கத்துக்கு நாட்டோட இறையாண்மை தானடா உங்களுக்கு முக்கியம்?
Quote
 
 
+1 #69 பெருசு 2011-09-08 19:30
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]ஆக நாட்டில் குண்டுவைத்து விட்டு அதை கண்டுபிடிக்க ஒரே ஒரு 'இமெயில் ஐடி' ஆதாரம் மட்டுமே போதும். அப்படி தானே? விசாராணை குழுவே அந்த ஆதாரம் மட்டும் போதாது என்று சொல்லும்போது, அர்நாப் போன்ற ஆட்கள் தீர்ப்பே சொல்லி சாமி ஆடுகிறார்களே. அதெப்படி? யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது?. ராஜிவ் கொலையில் குண்டுவெடித்து, விசாரணை கமிஷன் என்ற ஒன்று ஆரம்பிக்கும் முன்பே, ஒரு சில மணி நேரத்திலேயே 'கொன்றது புலிகள் தான்' என்று சட்ட அமைச்சர் சுப்ரமணிய சாமி சொன்னான். சொல்கிறார்.அதையே இன்றுவரை அனைத்து இந்திய ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. அதன் அடிப்படையில் விசாரணையும், மூவருக்கு தூக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. இதுவே இந்த லட்சணத்தில் நடந்துள்ளது. இந்த டெல்லி குண்டுவெடிப்பை பற்றி கேட்கவா வேண்டும். யார் கண்டா? இன்னைய தேதிக்கு இந்தியாவின் பெரிய்ய தலைவலி 'அன்னா ஹசாரே' தான். இந்த குண்டுவெடிப்புக ்கு காரணம் அவர் தான் என்று காங்கிரஸ் சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. காங்கிரசுக்கு இது ஒன்றும் புதிதில்லையே. தவிர 'அன்னாவுக்கு' கு*டி கழுவி விட்டான் என்று யாரையாவது பிடித்து அவர்களை தூக்குக்கு அனுப்பினால் தீர்ந்தது பிரச்சனை. காங்கிரஸ் "ராஜதந்திரங்கள்" அனைத்தையும் கரைத்து குடித்த ஒரு கட்சி அல்லவா? அதிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?[/ஃஉஒடெ]

தம்பி வால்டரு, உன்னால சாமிய திட்டாம ஒரு கருத்து கூட சொல்ல முடியலையேப்பா...இதுலேந்தே தெரியுது சாமி உன்ன மாதிரி ஆளுஙகளோட தூக்கத்த எப்புடி கெடுக்கறாருன்னு ...சாமி நல்லா இருக்கணும்.
Quote
 
 
0 #68 unarvu 2011-09-08 18:52
i agree 100%
Quote
 
 
-3 #67 velmurug 2011-09-08 17:42
சித்ம்பரம், சொனியஎ, மன்னு மான்மொஹன் வேடுகலில் குன்டு வைஇக்க வென்டும்.
Quote
 
 
-1 #66 dna 2011-09-08 15:56
Naam naduliyodu sinthithal savukku ezhuthiathu 100% true. No doubt at all. Sonia, Manmohan, Pranab & Chidambarm are the biggest terrorists in india.
Quote
 
 
+3 #65 kamals 2011-09-08 15:16
லூசுத்தனமா இருக்கு உஙகலொட கட்டுரை...
Quote
 
 
+3 #64 Jambazaar Jagu 2011-09-08 14:31
[ஃஉஒடெ நமெ="வேரப்பன்"]சவுக்குதான் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கியது. தமிழ் நாடு சட்ட சபை தீர்மானம் போட்டது (அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க). இதை ஜம்மு காஷ்மீர் காரன் கேட்டான். ஏன் அப்சல் குருவுக்கு தண்டனையை குறைக்க கூடாதுன்னு.

விடுதலைப்புலிகள ் ராஜீவ் காந்தியை நம் மண்ணில் கொன்றது குற்றம். ராஜீவ் காந்தி இந்திய மக்களின் பிரதி நிதியாக முடிவெடுத்தார். தனிப்பட்ட மனிதனாக அல்ல.

ஆனால் இதை புரியாத பதறுகள் தண்டனையை குறை வெங்காயம் என்று வாதாடி நிறுத்தி விட்டது. இப்ப டில்லி ஹை கோர்ட்டில் குண்டு போட்டவனும் எனக்கு தண்டனை கொடுக்க கூடாது அப்படிம்பான். இது இப்படியே நீளும். நாளைக்கு கர் நாடகாவில் இருப்பவன் எனக்கு தண்டனையை குறை அப்படிம்பான்.

ராஜீவ் காந்தி வழக்கில் கீழ் கோர்ட்டில் தண்டனை கொடுத்து, ஹை கோர்ட்டில் தண்டனை கொடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தண்டனை கொடுத்து நிறுத்தறம்னா நம்ம முட்டாள் தனத்த என்னனு சொல்றது. அப்ப தர்மபுரி பஸ் வழக்கில் எரித்தவனையும் விட்டுறலாம். கொலை செய்யறவனை விட்டுறலாம். கற்பழிப்பு செய்யறவனை விட்டுறலாம். என்னய்யா முட்டாள் மக்கள் கூட்டம்.[/ஃஉஒடெ]

தல பின்னிடீஙக. :lol:
Quote
 
 
+14 #63 Sivak 2011-09-08 14:29
ஒரு வேளை இந்த குண்டு வைத்தவன் நாளை பிடிபட்டால், நாம் எல்லோரும் சேர்ந்து, அ வனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று, சிறுபான்மையினர் என்ற அடிப்படையிலும், குண்டு வைத்தவன் குடும்பத்தினர் அநாதை ஆகி விடுவார்கள் என்ற மனித நேய அடிப்படையிலும், கோரிக்கை விடுத்து போராடுவோம்.
Quote
 
 
+12 #62 Tamilscafeblogspot 2011-09-08 13:54
சவுக்கு,

நானும் உன்னைமாதிரிதான் இவங்கள லாஜிக்கலா யோசிக்ரவங்கன்னு நினைச்சேன்,

அப்படி இருந்தா எந்த முஸ்லிமாவது மசூதியிலயே பாம் வைப்பானா??

பாகிஸ்தான்லயும் rss இல்ல pjb தான் குண்டு வைக்கறாங்களா??

ஏன் அங்கயும் அவங்க ஆட்சி அமைக்கனும்னா??

pjb யோ rss இதில் சம்பந்த பட்டிருப்பின் காங்கிரஸ் சும்மா விடுமா??

புனித போர் பற்றியோ, இல்ல brotherhood நா என்னான்னோ யாரையாவது நல்ல இமாம பார்த்து கேட்டு தெரிந்து கொள்ளவும்,

சவுக்குக்கு,

கட்டறது கை மண் அளவு
கல்லாதது உலகளவு

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் கேட்ப்பதறிவு

நான் முஸ்லிம் மதத்திற்கோ அதை சார்ந்தவர்களுக் கோ எதிரி இல்லை, தீவிவாதிகள் அவர்களின் மத கோட்பாடை சாதகமாக பயன்படுத்துவதை எதிர்ப்பவன், தவறை தைரியமாக, நீங்களும் சுட்டிகாட்டுங்க ள் அதைதான் சவுக்கிடம் நாங்கள் எதிர் பார்ப்பது..

Tamilscafe.blogspot.com
Quote
 
 
+10 #61 gounder 2011-09-08 13:52
ம் அப்சல் குருக்கும் துக்கு தண்டனை ரத்து செய்ய சொல்லி போரட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது.இனி உங்க வேலை ஆரம்பிங்க
Quote
 
 
+3 #60 KKR 2011-09-08 13:21
Dear Savukku Avargale,
I suggest you highlight only Congress Govt wrongdoings and misdeeds.Let us not divert the issue to other things like Hindu or Muslim extremists, as the main issue of removing Congress Govt is getting sidetracked.
Basically 99.99 % of Hindus and Muslims want only peace , only one person in one lakh may have mind of the terrorist (whether Muslim or Hindu).
Also please do not put such photos in your articles, this can build up hatred against particular communities.Please remove this photo if possible.
Regards
KKR
Quote
 
 
+7 #59 neo 2011-09-08 13:12
savukku, If you have guts publish this! what are you trying to convey? Your article seems to be a translation of Islamic terror apologist's speeches i.e. Everything bad in the world is because of CIA-MOSSAD-RAW. It's well know to the world that Islam has a pan-International agenda i.e.Islamization from spain to Indonesia and India is one of the major blocks. why do you sing the tunes of Jihadi terrorists? I'm baffled how you fail to recognize this even after 1000 years of blood shed in this country.
Quote
 
 
0 #58 saran 2011-09-08 13:09
how long we secure overall indian union
Quote
 
 
0 #57 saran 2011-09-08 13:07
please be careful every body
Quote
 
 
0 #56 saran 2011-09-08 13:07
when we r solve the problems
Quote
 
 
0 #55 ss 2011-09-08 13:05
காஷமீர் முதல்வர் பெயர் ஒமர் அப்துல்லா - ஒமர் ஷெரிஃப் அல்ல !
Quote
 
 
-4 #54 gulam 2011-09-08 13:04
உண்மையை தோலுரித்து காட்டும் சவுக்குக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் பணியை தொடரவும்.
Quote
 
 
+11 #53 சீனு 2011-09-08 12:52
அப்சல் குருவின் மனுவையும் நிராகரித்தால், இந்தியா இந்து முஸ்லீம், என்று இரண்டாக பிளவு படும் என்றால், என்ன நடக்கிறது என்று நினைவில் கொள்ளுங்கள். இது தான் முஸ்லீம்களின் உண்மையான முகம்.
Quote
 
 
-4 #52 kk 2011-09-08 12:40
I did not belive Savukku yesterday.But today it may be some what true. Today just now Arnab Goswami has broken two stories one on Boeing scam and other on Petroleum scan both are indicted by CAG. Now no one is covering except Arnab. Others are focussed on bomb blast/
Savukku's observations need not be dismissed
Quote
 
 
-2 #51 Vijay123 2011-09-08 12:21
We can't deny that this can be a politically motivated blast as Savukku rightly says. Home ministry is not that weak to have let a trial blast in May and a one real blast now. Instead of answering or dealing with so many issues that they are facing, it's better to answer/deal with this single blast issue in the name of national security. People who don't believe this, still think that Sanjay Gandhi and YSR died in an accident and no political leaders knew beforehand about Rajiv's murder plan.
Quote
 
 
+5 #50 வன்னி காட்டு சுடலை 2011-09-08 12:08
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"][ப்]அர்னாப் கோஸ்வாமி [/ப்]ஒரு மகா அயோக்கியன்,[ப்] “பாஈட் ணேந்ஸ் றேஆடேற்"[/ப்]. அவனுடைய நடிப்பு செவாலியே சிவாஜி கணேசன் அவர்களையே தூக்கி சாப்பிட்டுவிடும ். இவனைப் பற்றி எல்லாம் படம் போட்டு விளம்பரப் படுத்தி இருக்கீங்களே சவுக்கு.[/ஃஉஒடெ]
அர்னாபிடம் வைக்கோ சொன்னது பொய். ரஜிவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அறுவரை தவிர பிறரை விடுதலை செய்தது என்று வைக்கோ கூறினார். தீர்ப்பின் படி அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்ததனால் தான் விடுவிக்கபட்டனர ். அப்பிடியானால் அவர்கள் குற்றவாளிகள். இதை மறைத்தார் வைக்கோ. யார் வேண்டுமானாலும் தீர்ப்பை எடுத்து பார்க்கலாம். அர்னாப் இதை கூறவும் கோபம் கொண்டு வைக்கொ எழுந்து சென்றார். விடுவிக்கபட்டவர ்கள் நிரபராதிகள் இல்லை. போலீசின் மேல் களங்கம் சொல்லும் சவுக்கு தனது வாழ்வில் இது போன்ற குற்றன்களினால் பாதிக்கப்பட்டால ் அப்பொழுது அதன் வலி தெரியும்.
Quote
 
 
+1 #49 வால்டர் வணங்காமுடி 2011-09-08 12:06
ஆக நாட்டில் குண்டுவைத்து விட்டு அதை கண்டுபிடிக்க ஒரே ஒரு 'இமெயில் ஐடி' ஆதாரம் மட்டுமே போதும். அப்படி தானே? விசாராணை குழுவே அந்த ஆதாரம் மட்டும் போதாது என்று சொல்லும்போது, அர்நாப் போன்ற ஆட்கள் தீர்ப்பே சொல்லி சாமி ஆடுகிறார்களே. அதெப்படி? யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது?. ராஜிவ் கொலையில் குண்டுவெடித்து, விசாரணை கமிஷன் என்ற ஒன்று ஆரம்பிக்கும் முன்பே, ஒரு சில மணி நேரத்திலேயே 'கொன்றது புலிகள் தான்' என்று சட்ட அமைச்சர் சுப்ரமணிய சாமி சொன்னான். சொல்கிறார்.அதையே இன்றுவரை அனைத்து இந்திய ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. அதன் அடிப்படையில் விசாரணையும், மூவருக்கு தூக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. இதுவே இந்த லட்சணத்தில் நடந்துள்ளது. இந்த டெல்லி குண்டுவெடிப்பை பற்றி கேட்கவா வேண்டும். யார் கண்டா? இன்னைய தேதிக்கு இந்தியாவின் பெரிய்ய தலைவலி 'அன்னா ஹசாரே' தான். இந்த குண்டுவெடிப்புக ்கு காரணம் அவர் தான் என்று காங்கிரஸ் சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. காங்கிரசுக்கு இது ஒன்றும் புதிதில்லையே. தவிர 'அன்னாவுக்கு' கு*டி கழுவி விட்டான் என்று யாரையாவது பிடித்து அவர்களை தூக்குக்கு அனுப்பினால் தீர்ந்தது பிரச்சனை. காங்கிரஸ் "ராஜதந்திரங்கள்" அனைத்தையும் கரைத்து குடித்த ஒரு கட்சி அல்லவா? அதிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
Quote
 
 
-3 #48 http://koothadivedda 2011-09-08 11:57
Concentrate on the militants in Kashmir. E-mail message has been made, have been obliged to find a terrorist movement across the country to believe so is maintaining the normal flow of communication. Everything the government's conspiracy. Even without a laptop is convenient to a e-mail is, how.
Quote
 
 
+2 #47 muniandi 2011-09-08 11:36
[ஃஉஒடெ நமெ="வேரப்பன்"]சவுக்குதான் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கியது. தமிழ் நாடு சட்ட சபை தீர்மானம் போட்டது (அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க). இதை ஜம்மு காஷ்மீர் காரன் கேட்டான். ஏன் அப்சல் குருவுக்கு தண்டனையை குறைக்க கூடாதுன்னு.

விடுதலைப்புலிகள ் ராஜீவ் காந்தியை நம் மண்ணில் கொன்றது குற்றம். ராஜீவ் காந்தி இந்திய மக்களின் பிரதி நிதியாக முடிவெடுத்தார். தனிப்பட்ட மனிதனாக அல்ல.

ஆனால் இதை புரியாத பதறுகள் தண்டனையை குறை வெங்காயம் என்று வாதாடி நிறுத்தி விட்டது. இப்ப டில்லி ஹை கோர்ட்டில் குண்டு போட்டவனும் எனக்கு தண்டனை கொடுக்க கூடாது அப்படிம்பான். இது இப்படியே நீளும். நாளைக்கு கர் நாடகாவில் இருப்பவன் எனக்கு தண்டனையை குறை அப்படிம்பான்.

ராஜீவ் காந்தி வழக்கில் கீழ் கோர்ட்டில் தண்டனை கொடுத்து, ஹை கோர்ட்டில் தண்டனை கொடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தண்டனை கொடுத்து நிறுத்தறம்னா நம்ம முட்டாள் தனத்த என்னனு சொல்றது. அப்ப தர்மபுரி பஸ் வழக்கில் எரித்தவனையும் விட்டுறலாம். கொலை செய்யறவனை விட்டுறலாம். கற்பழிப்பு செய்யறவனை விட்டுறலாம். என்னய்யா முட்டாள் மக்கள் கூட்டம்.[/ஃஉஒடெ]சூப்பர்ப் ! சூப்பர்ப் !
Quote
 
 
0 #46 வால்டர் வணங்காமுடி 2011-09-08 11:32
காங்கிரஸின் இன்றைய நிலை "ஆப்பசைத்த குரங்கு". எந்த ஆப்பை அசைத்தாலும், அது மீண்டும் தனக்கே பெரிய்ய்ய்ய்ய்ய ்ய்ய ஆப்பாக திரும்பி வைக்கப் படுவதை காங்கிரஸ் இன்னும் உணரவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் காணாமல் போனது போல, அகில இந்தியாவிலும் அது காணாமல் போகும்.
Quote
 
 
+10 #45 MLA 2011-09-08 11:12
ஓரு விதத்தில் கலைஞரின் பேட்டி போல இருக்கு.. உங்கள் கட்டுரை..
உங்கள் எண்ணம் முழுக்க முழுக்க காங்கிரஸை எதிர்க்க வேண்டும். அதுவ‌ரை ஓகே! ஆனால் அதற்காக பிரச்சனையை திசை திருப்ப தம் மக்களை தாமே கொன்று அழிக்கும் என்ற கூற்று எந்த கையில் சரியாக் இருக்கும்
Quote
 
 
-4 #44 nanban 2011-09-08 11:02
#37 .
சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட் ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.

இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள ்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகள ை உறுதிப்படுத்திக ் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.

இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறா ர். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது .
அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும ்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு , அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றன ர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளை ப் பயன்படுத்துவர்.
Quote
 
 
-7 #43 Mohamed Rafi 2011-09-08 10:47
நல்ல வேலை கலைகர் இன்வல்வெ பன்னாம
போனிகலே thanks........
Quote
 
 
+6 #42 Cuteindian 2011-09-08 10:34
Savukku has become boneless. You urself know u r doing the best minority appeasement better than congress..Have you ever studied Kuran or Ramayan fully? Have you attended islamic preachings or hindu preachings? Your article shows you know nothing in detail. Do you know what periyar told about islam in the later stages of his life? Will you dare to publish his comments if you are really a periyar follower? Try to become neutral and true to ur conscience and then write your articles..
Quote
 
 
+10 #41 Chinnan 2011-09-08 10:28
100% உண்மை.. காலம்காலமாக இந்த ஃபார்முலா தான் உபயோக படுத்தபடுகிறது. நான் அறிந்தவரை கார்கில் போரும் அப்படித்தான்.
Quote
 
 
0 #40 danguvaaru andhurum 2011-09-08 10:18
அர்னாப் கோஸ்வாமி ஒரு மகா அயோக்கியன், “PAID NEWS READER". அவனுடைய நடிப்பு செவாலியே சிவாஜி கணேசன் அவர்களையே தூக்கி சாப்பிட்டுவிடும ். இவனைப் பற்றி எல்லாம் படம் போட்டு விளம்பரப் படுத்தி இருக்கீங்களே சவுக்கு.
Quote
 
 
+7 #39 வன்னி காட்டு சுடலை 2011-09-08 10:13
[ஃஉஒடெ நமெ="கும்பிடுறேன் சாமி"]நீங்கள் சொல்ல வருவது தான் என்ன. இந்த பாழை போன காங்கிரஸ் அரசு இருக்கனுமா? வேண்டாமா? இவனுங்களுக்கு மனசாட்சியே இல்லையா? இறப்பது அப்பாவி மக்கள் அல்லவா? அதை என் இந்த த்தே. பயலுகள் நினைக்க மாட்டேன் என்கிறார்கள். ? இந்த ஆட்சிக்கு யார் தான் முடிவு கட்டுவாது?[/ஃஉஒடெ]

அடஙகுடா!!! நான் பேரை மாததியாச்சு. சவுக்குக்கு என் பேர் பிடிக்கலை. அதுக்கு பேரறிவாளன், சிவராஜனுடன் பஞ்சு மிட்டாய் தான் வித்தான் சொன்னால் தான் பிடிக்கும். அற்புதம் அம்மாளும், பார்வதி அம்மாளும் பெத்தால் தான் பசங்கள். மனித நேயத்தின் சுடுகாடு, சாரி, தொட்டில் ஈழம்....இப்பிடியெல்லாம் எழுதினால் பதிவை வெளியிடும்.
Quote
 
 
+8 #38 ponns 2011-09-08 08:45
ஒப்பனிங் நல்லதான் இருககு ஆன ஃப்னிஷிங் நல்ல சரி இல்ல மாமு.
Quote
 
 
+19 #37 TEx 2011-09-08 08:34
உங்கள் கருத்து தவறானது. காங்கிரஸ் எதிர்ப்பில் நீங்கள் போகும் பாதை சரியானதல்ல.

ஆதாரதுடன் பேசினால் நன்றாக இருக்கும். கூட்டம் வருகிறது என்பதற்காக ஆதாரமின்றி பேச வேண்டாம்.
Quote
 
 
+4 #36 senthil blr 2011-09-08 07:55
It is well known congress is soft on islam terror. Also they are on the brink of introducing new terror law, which will pave the way for taking action on governments(esp ecially BJP ruling) which take tough action on islamic terrorists. But your today article highly bullshit.
Quote
 
 
+19 #35 kumarnow 2011-09-08 07:02
தெலுங்கு படம் பார்த்த எபக்ட் இருக்கு

வேற ஒன்றும் சொல்வதற்கு இல்லை
Quote
 
 
+5 #34 Padman 2011-09-08 06:36
குண்டு வெடிப்பும் இது போன்ற விமர்சன கட்டுரையும் செவிடன் (காங்கிரஸ் மற்றும் மக்கள்) காதில் ஊதிய சங்கு...
Quote
 
 
+10 #33 naan kadavul 2011-09-07 23:38
தமிழனின் கருத்து.... இந்தப் பதிவின் சாராம்சம் என்னவென்றால், மத்திய அரசே திட்டமிட்டு மக்களை திசை திருப்புவதற்காக , குண்டு வெடிப்பை நடத்தி மக்களைக் கொன்று பழியை தீவிரவாதிகள் மீது போட்டிருக்கிறது . தீவிரவாத இயக்கத்தின் பெயரால் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கி றது. இதற்கு முந்தைய குண்டுவெடிப்புக ளும் அரசு திட்டமிட்டு நடத்தியவைதான். ஏன். கசாபே காங்கிரஸ் அனுப்பியவந்தான் .........தமிழனின் இந்தக் கருத்து சரியானதே. உண்மையை சொல்லி இருக்கிறார்.இலங்கை அன்று செய்ததை புலிகளின் மீது சுமத்தி பயங்கரவாதிகளாக ஆக்கியது போல், சோனியா காங்கிரஸ் சரிந்து வரும் ஆட்சியை நிலை நிறுத்த இப்படியான செயல்களை செய்து வருகிறது. தன் ஊழலிருந்து தப்ப கருணாநிதி சோனி யா காங்கிரசுக்கு தப்பு தாளம்,ஈழப் படுகொலையின் போது, போட்டு அப்போது தப்பித்துக் கொண்டது போல் இன்று காங்கிரஸ் தீவிரவாதத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறத ு. அதனால் அப்பாவி மக்களை மறந்து விட்டது.அதிகாரத்தை கைப்பற்ற காப்பாற்ற இவர்கள் சோனியாவைப் போல் ராஜீவைப் போல் கருணாநிதி போல் எதையும் செய்வார்கள்..காந்தி சொன்னது போல் அன்று காங்கிரசை கலைத்திருந்தால் இந்த நிலை நமக்கு வந்திருக்குமா?
Quote
 
 
+11 #32 SavukkuHater 2011-09-07 23:09
Savukku has gone mad.He is hysterical and can't believe that jihadi terrorists have striked once again.The govt is spineless,brain less and congress is a piece of shit and failed to protect the country but your defense for terrorism is appaling.You are a traitor.Left liberals are always traitors.If this was RSS conspiracy imagine how Sankar would have written the same article.
Quote
 
 
+5 #31 பெருசு 2011-09-07 22:53
மக்கள தெச திருப்பணுமாம், அதுனால காங்கிரஸ்காரன் குண்டப்போட்டானா ம். என்னய்யா சுத்த வெவஸ்த கெட்டத்தனமா இருக்கு?

மார்ச் மாசம் ஜப்பான்ல சுனாமி வந்துச்சே..எனக்கென்னமோ இந்த காங்கிரஸ்காரன் எல்லாம் கூடிப்பேசி எல்லாரும் ஒரே நேரத்துல ஒண்ணூக்கு அடிச்சுருப்பானு வளோன்னு சந்தேகமாவே இருக்கு. அத கொஞ்சம் என்னான்னு உளவு பாத்து சொல்லுப்பா சவுக்கு.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 146 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5927
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week16014
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month218746
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12740865