முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தில்லி குண்டு வெடிப்பும் அப்சல் குருவும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 09 செப்டம்பர் 2011 20:43

 

2011 செப்டம்பர் 7 அன்று பல உயிர்கள் பலியான ஒரு சில மணி நேரங்களிலேயே, அப்சல் குருவின் பெயர் இந்த விவசாரத்தில் இழுக்கப் பட்டுள்ளது.    உண்மையானதா என்று சரிபார்க்கும் முன்பே, ஒரு மின்னஞ்சல் அப்சல் குருவை தூக்கில் போடாதே என்ற கோரிக்கையோடு வந்ததாக ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.

 54257_BnHover

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவை அல்ல.  24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களை கட்டுப் படுத்தி அவை ஊடக தர்மங்களை கடைபிடிக்கின்றனவா என்று கண்காணிக்கவும், அவற்றை ஒழுங்குமுறை படுத்தவும் இந்தியாவில் எந்த விதமான அமைப்பும் இல்லை.   ஊழலைப் பற்றி உரத்த குரலில் மின்னணு ஊடகங்கள் பேசினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஊழலைப் பற்றிப் பேசவும், பொறுப்பற்ற அதிகாரம் படைத்த இந்த ஊடகங்கள் தயாராக இல்லை.

 

தேச பக்தி என்பது, பாதுகாப்பு அதிகாரிகள், கார்ப்பரேட் மீடியாக்களின் செய்தியாளர்கள் மற்றும், இந்துத்துவா சக்திகள் ஆகியோரின் தனிப்பட்ட சொத்து போல, அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசும் அனைவரையும் ஊடகங்கள் இந்தியாவின் துரோகியாக காட்டுகின்றன.

 

அப்சல் குருவை காப்பாற்றுங்கள் என்ற எங்களது கோரிக்கை கீழ்கண்ட விஷயங்களை முன்னிறுத்தியது.

புலனாய்வு செய்யும் நிறுவனங்களில் நிலவும் ஊழலும், அந்நிறுவனங்களின் திறமையின்மையும் வெளிப்பட்டன.  பாராளுமன்றத் தாக்குதல் வழக்கை விசாரித்த அதிகாரிக்கு பல விருதுகளும், பதக்கங்களும் தரப்பட்டன, ஆனால், அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தின் காரணமாக சுட்டுக் கொல்லப் பட்டார்.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக சிறப்புப் படையில் நிலவும் ஊழல்களின் மீதான கவனம் திசை திரும்பி விடும்.   

2.  இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்ததிலிருந்தே, ஊடகங்கள் தங்களின் ஆதிக்கத்தை உச்ச நீதிமன்றம் வரை செலுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது.   ஒருவரை தூக்கிலிடுவதற்கு, சட்ட ரீதியான காரணமாக இது அமைய முடியாது.    அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக, நாளை இந்துத்துவா சக்திகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் திருப்தி செய்வதற்காக யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட முடியும்.

 Picture_002_1

3.    பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பான குற்றப் பத்திரிக்கை 3 பாகிஸ்தானியர்களை குற்றம் சாட்டியது.    மவுலானா மஸுத் அஸார், காஸி பாபா மற்றும் தாரிக் அகமது ஆகியோர் இத்தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் இவர்கள் கடைசி வரை பிடிக்கப் படவேயில்லை.    இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர்.   அப்சல் இத்தாக்குதலுக்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவருக்கு மரண தண்டனை எப்படி வழங்க முடியும் ?  அவர் இத்தாக்குதலுக்கான மூளையும் அல்ல.    அல்லது அதில் பங்கேற்கவும் இல்லை.  உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முக்கியப் பணியில் இருந்து நழுவுவதற்காகவும், தீவிரவாதத்தின் உண்மைக் காரணங்களை மறைப்பதற்காகவுமே, அப்சல் தூக்கிலிடப் படுகிறார்.

 

4.        மனித உரிமை ஆர்வலர்கள் பாராளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் நிரபராதிகள் என்று நிரூபித்தனர். இந்த இருவருள்,  சிறையில் குழந்தையைப் பெற்ற கர்ப்பமான ஒரு சீக்கியப் பெண்மணி அடங்குவார்.  அவர் வாழ்க்கை முழுமையாக சீரழிந்து விட்டது.    நமது தொலைக்காட்சிகளில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் பார்க்கவே இல்லை.   இவ்வாறு நமக்கு தெரியாமல் போனது, சில இந்தியக் குடிமகன்களைப் போல, எப்படி சிலரை சாதாரணமாக காவு கொடுக்கலாம் என்பதை உணர்த்தியது.

 

5.    டெல்லியில் கூட, உண்மையை பேசும், நியாயத்தின் பக்கம் நிற்கும், நீதியைத் தேடும், மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே அவர்களோடு இணைந்து அப்சலுக்காக குரல் கொடுத்தோம்.   காஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே இது போன்ற மக்கள் அமைத்திருக்கும் அந்தச் சன்னமான பாலத்தை அப்சல் குருவின் மரண தண்டனை உடைத்து விடும்.

 

6.         அப்சல் குருவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறவேயில்லை.  வழக்கறிஞர்கள் விரும்பாததால், அவருக்கு, நியாயமான வழக்கறிஞர்களும் அமர்த்தப் படவில்லை.   அப்சலைத் தூக்கில் போடுவதன் மூலமாக நாம், நியாயமான நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கும்  நம்பிக்கையையும் குலைப்போம்.

 

பாராளுமன்றத் தாக்குதல் நமக்கு இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளின் பலவீனத்தை உணர்த்திய அதே நேரம், நம்பிக்கை உள்ள ஒரு சிறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஜனநாயகத்தைக் காப்பதற்காக வேலை செய்தால் அது வெற்றி பெறும் என்பதையும் நிரூபித்திருக்கிறது.

 


D71C2A658B2B738C890EB29892CB

 

ஒரு வேளை அப்சல் குரு தூக்கில் போடப்பட்டால், இந்துத்துவா சக்திகள் மகிழ்ச்சி கொள்ளும்.   கொண்டாடும்.    கார்ப்பரேட் மீடியாக்கள் அதன் புகழ்பாடும்.   ஆனால், இந்தியாவின் ஜனநாயகம் இறந்து போகும்.  இதற்காகத் தான் அப்சலை தூக்கில் போடாதீர்கள் என்று வேண்டுகிறோம்.

 

அப்சலின் அறிக்கையை இத்துடன் இணைக்கிறேன்.   அப்போதாவது இம்மனிதனின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.

 

9 செப்டம்பர் 2011

 

இப்படிக்கு

 

என்.டி.பன்ச்சோலி

 

திஹார் சிறையிலிருந்து அப்சல் குரு அளித்த அறிக்கை

திகார் சிறை எண் 3

தில்லி நீதிமன்றத்தில்  இதயம் பதைபதைக்கும், நெஞ்சை உறைய வைக்கும் வெடிகுண்டு வைத்த ஒரு குற்றத்தை சில சமூக விரோத சக்திகள் செய்துள்ளன என்பது கவலை அளிக்கக் கூடியது.    இந்த கோழைத்தனமான காரியம் அனைவராலும் கண்டிக்கப் பட வேண்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது.    எந்த மதமும், அப்பாவிகளைக் கொல்வதை அங்கீகரிப்பதில்லை.

 

இந்த குற்றத்தில் தேவையற்ற முறையில் என்னுடைய பெயர் இழுக்கப் பட்டிருப்பது குறித்து நான் வருத்தம் அடைகிறேன்.   மோசமான விளையாட்டாக சில சக்திகளும், சில குழுக்களும், என்னுடைய பெயரை தவறாக இதில் இழத்திருக்கின்றன. கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபடும் சில விஷம சக்திகள் தேவையற்ற முறையில் என்னுடைய பெயரை இது போன்ற சம்பவங்களில் இழுப்பது இது முதல் முறையன்று.   எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும், என்னைக் களங்கப் படுத்துவதற்காகவும், எனக்கு எதிராக பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்காகவும், அதில் என் பெயரை இழுப்பது ஏறக்குறைய வழக்கமாகவே ஆகி விட்டது.

 

எனது வழக்கறிஞர் திரு.என்.டி.பன்ச்சோலி அவர்கள் மூலமாக எனது இந்த அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு அளிக்கிறேன்.  இதை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

இப்படிக்கு

 

அப்சல் குரு

 

Comments  

 
0 #39 ஷேக் அமீன் 2012-04-19 17:30
குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த மாதமாக இருந்தாலும் எவ்வளவு ‎பெரிய சக்தியாக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் ‎எவ்வித பாரபட்சமில்லாமல ் .‎
Quote
 
 
0 #38 ஷேக் அமீன் 2012-04-19 17:26
இருந்தாலும்
Quote
 
 
0 #37 purachi 2011-09-19 11:56
2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்க ள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம ் இந்து மதவெறியர்களுக்க ு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந ்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்க ளின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும ் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவத ில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின ் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்ட ிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்க ள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள் . சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது
Quote
 
 
0 #36 மோதித்வா 2011-09-17 18:58
[ஃஉஒடெ நமெ="ஷைக் மொஹமெட் அலி"]அஃப்சல் குரு வை விரைவில் விடுதலை செய்ய வென்டும்..[/ஃஉஒடெ]

அதற்கு நீ உன் பெயரை அப்சல் குரு என்று மாற்றிக்கொண்டு பிக்பாக்கெட் கேசில் உள்ளே போக வேண்டும். அப்போதுதான் ஒரு சின்ன அபராதத்தோடு நீ விடுதலை ஆகி வெளியே வர முடியும்.
Quote
 
 
-2 #35 purachi 2011-09-15 17:35
#352002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளன. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும ் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக்கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக ் கொண்டு நடப்பிலிருக்கும ் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில்கூட போட்டிருக்க முடியும். குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”

தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்த ில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார ். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்ததையும் கூறியிருப்பதோடு , இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக ்கிறார். ("குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி" என வெளிப்படையாகக் குற்றம் சாட்டி குஜராத்தின் முன்னாள் ட்க்ப் ஜெனரல் ஸ்ரீகுமார், பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசியிருந்தறார் .
Quote
 
 
0 #34 niyaayam 2011-09-15 16:46
#34 நடுவண் அரசின் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளாரகச் செயற்பட்ட முன்னாள் மூத்த அதிகாரி மோகன்ராஜ், அண்மையில் குமுதம் வார இதழுக்கு ஒரு நேர்காணல் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் ஸீபீஐ புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயன், "உண்மைக் குற்றவாளிகள் பிடிபட்டுவிடக்க ூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் திட்டம் போட்டுக் கொடுத்தவர்கள்,
1. சந்திராசாமி
2. சுப்பிரமணியசாமி
3. குமரன் பத்மநாபா

ஆகிய மூவருமாவர். இதுவரை இம்மூவரில் ஒருவரைக்கூட ராஜீவ் காந்திக் கொலை வழக்குக்காக யாரும் விசாரிக்கவில்லை . 'கேபி' என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாபாவை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரித்தால் ராஜீவ் காந்திக் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் யாவர் என்ற மர்ம முடிச்சு அவிழ்ந்துவிடும் ; எவரும் எதிர்பாராதவர்கள ் கைதாவர் என்று மோகன்ராஜ் உறுதியாகக் கூறுகிறார்
Quote
 
 
-2 #33 Cuteindian 2011-09-13 16:01
Pathetic article. Please write about the status of women in islam and write about the lack of birth control among muslims if you are really neutral.
Quote
 
 
-1 #32 shaik mohamed ali 2011-09-12 21:41
அஃப்சல் குரு வை விரைவில் விடுதலை செய்ய வென்டும்..
Quote
 
 
0 #31 kalid 2011-09-12 15:23
thanx nanba
Quote
 
 
+3 #30 sulthan ahamed 2011-09-12 13:24
thats for u MR. KK

jihad misunderstood term

The word Jihad is derived the word “juhd” meaning exertion or striving .Literally ,it means maximum struggle or effort towards a goal. However ,in juridical religious sense ,it signifies exertion of ones power to the utmost of ones capacity in the way of Allah.
It is an all round struggle which Is obligatory for a Muslim, to exercise all his powers ,may be the form of intellectual or physical capacities off his gift of speech or his moral strength ,orcourage and steadfastness or his worldly riches in the face of hardship .
Kinds of Jihad:
A struggle of maximum exertion against a visible enemy .
Struggle against evil forces in all forms
The greatest jihad is the fight against evil passions and a struggle against the passion and carnal desires of the “self”
The prophet Muhammed (p.b.u.h) said: “The greatest jihad is the fight against evil passions of one self”(Trimdhi).
Thus, jihad covers all kinds of exertion or effort ,physical, mental or material undertaken in the way of Allah.
The believer may fulfill this struggle in 4 ways ,by heart, by tongue ,by hand ,by sword.
This implies that a Muslim should develop his sensativities to the point of excellence, so much so that nothing which is evil ,should find his way either in his heart or in his mind ,he should develop a deep rooted aversion against evil and a strong desire to fight it tooth +nail, whether it his self or in the world outside.
Then comes to the power of speech and persuasion . The prophet Muhammed(p.b.u.h) struggled for 13 years in Makkah to invite the pagans to Islam and persuade them to leave idol worship. The Quran says :
“Invite all to the way of thy Lord with wisdom and beautiful preaching ,and argue with them in ways that are best and most gracious.”
cont on next comment
Quote
 
 
0 #29 Mohamed Rafi 2011-09-12 13:13
இங்கு அப்சல் குருவுக்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்தவர்கள் உச்சநீதிமன்றத்த ின் தீர்ப்பின் சரஹம்சத்தை கவனிக்க தவறுகிறார்கள்.
இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம ் -- உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம் தாக்கப்பட்டது அதை செய்தவர்கள் தூக்கில் இடனும் என்பதில் யாருக்கும் எந்த வித மாற்று கருதுமில்லை. ஆனால் ஒரு அப்பாவியை தூக்கில் இடுவதை தான் எதிர்க்கிறோம். நீதியின் அடிப்படையில் தான் ஒருவர் தூக்கில் இடவேண்டுமே தவிர ஒரு நாட்டின் மனசாட்சியின் அடிப்படையிலோ அல்லது விருப்பத்தின் அடிப்படையிலோ இருக்க கூடாது.
குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது -நீதி
Quote
 
 
-3 #28 kassime 2011-09-11 23:30
அருமையான கட்டுரை!
இந்தியாவில் வர வர சொந்தமாய் யோசிக்க மறுக்கும் மனிதர்கள் பெருக ஆரம்பித்து விட்டார்கள். இதை பயன்படுத்தி பார்ப்பன மீடியாவும் ஆட்சியாளர்களு்ம ் மனு நீதியை நிலைனாட்ட பார்க்கின்றனர்.
ஏதோ உங்களை போல ஒரு சிலர்தான் உண்மைகளை உரக்க சொல்கின்றீர்கள்
நன்றிகள்!
அப்ஸல் குருவுக்கு மட்டுமல்ல கசாப்புக்காகவும ் விடுதலை வேண்டி அல்லாவிடம் துஆ செய்வோம்
இன்ஷா அல்லாஹ்!
Quote
 
 
-4 #27 ஜெயா 2011-09-11 21:54
இங்கே ஒருவர் , நாடு பிடிக்கும் ஆசையில் இஸ்லாமிய மன்னர்கள் நடத்திய போரைக்கூட ஜிகாத்தோடு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிற ார் . ஒரு வரலாற்றுப் போரைக்கூட தீவிரவாதமாகச் சொல்லும் போதே அவரது வரலாற்று அறிவு என்னவென்று தெரிகிறது . இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஆசாமியின் ஞானம் கொப்பளிக்கும் கருத்தை சில ஜால்ராக்கல் ரசிக்கிறார்கள் . அவரது பாணியிலேயே சொல்வதென்றால் இந்திய தேசம் முழுக்க ரத்த வாடை வீசுமளவுக்கு நமது மன்னர்கள் செய்த போரை எந்தக் கணக்கில் சேர்ப்பது ???? வைணவும் , சைவமும் , அடித்துக் கொண்டதை கழுவிலேற்றிக் கொன்றதையும் , பெளத்தம் எங்கே செல்வாக்குப் பெற்றிடுமேவென பெளத்தர்களைக் கொன்றும் , அவர்தம் வழிபாட்டுத்தலங் களையும் கொன்று குவித்ததை எந்தத் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பது ? :)மகாத்மாவைக் கொன்றதலிருந்து , சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு வரை உயிர்ப்புடனும் இன்னும் வெறிகொண்ட உத்வேகத்துடனும் இருக்கும் இந்துத் தீவிரவாத்தை பட்டியலிடட்டுமா நண்பரே
Quote
 
 
+2 #26 Anto 2011-09-11 16:42
*sigh* I'm Lost!!! Savukku :(
Quote
 
 
-2 #25 Raamasubba ayyan 2011-09-11 16:28
காவி பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்து விட்டதே, அதற்கு காயடிக்க யாருமே வர மாட்டிங்களா? என்னுடைய ஒரு மாத சம்பளம் வேனா தரேண்பா!
Quote
 
 
+1 #24 Raamasubba ayyan 2011-09-11 16:13
இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம ் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தால், இப்படியாக மற்றொரு சாராரின் மனசாட்சியையும் திருப்திபடுத்த அத்துவானி என்கிற தட்டுவானி, மோடி என்கிற பேடி மற்றும் உள்ள லிஸ்டையும் தூக்கிலிட சொல்ல உச்ச நீதிமன்றத்துக்க ு ஆண்மை! இருக்கின்றதா?
Quote
 
 
+5 #23 naveed 2011-09-11 15:51
@ KK
very sad. but true indeed. ours is a religion with no flexibility
Quote
 
 
+6 #22 naveed 2011-09-11 15:51
@ KK
very sad. but true indeed. ours is a religion with no flexibility
Quote
 
 
0 #21 MS 2011-09-11 13:05
neegna vita kasab kku kooda thuku thandanai vendam nu article ezhuthuveenga pola iruke
Quote
 
 
0 #20 MS 2011-09-11 13:03
dont like this article.
Quote
 
 
+4 #19 vasudevan 2011-09-10 22:08
இனிமெலி யார் கொலை செதுவிட்டு இப்படி இரு அர்ரிகை குடுதால் பொதும் இல்லையா அவரை விடுவிக்க சவுக்கு போராடும் அதுவும் அவர் இசுலமியரக இருந்தால் பொதும் மன்னிகவும் சவுக்கு நிஙகலும் போலிமதசர்பீன்மை உடயவர் போல இருகிரிர்கல் :sad:
Quote
 
 
+9 #18 kk 2011-09-10 19:43
ISLAMIC JIHAD LIST CONTINUED
The Jihad against Germany (1945 onwards)
The Jihad against Rumania (1350 to 1699)
The Jihad against Russia (1500 to 1853)
The Jihad against Bulgaria (1350 to 1843)
The Jihad against Serbs, Croats and Albanians (1334 to 1920)
The Jihad against Greeks (1450 to 1853)
The Jihad against Albania (1332 – 1853)
The Jihad against Croatia (1389 to 1843)
The Jihad against Hungarians (1500 to 1683)
The Jihad against Austrians (1683)
Jihad in the Modern Age (20th and 21st Centuries)
The Jihad against Israelis (1948 – 2004 ongoing)
The Jihad against Americans (9/11/2001)
The Jihad against the British (1947 onwards)
The Jihad against Denmark (2005 Cartoon Controversy onwards)
The Jihad against Netherlands (2006 onwards)
The Jihad against the Filipinos in Mindanao(1970 onwards)
The Jihad against Indonesian Christians in Malaku and East Timor (1970 onwards)
The Jihad against Russians (1995 onwards)
The Jihad against Dutch and Belgians (2003 onwards)
The Jihad against Norwegians and Swedes (2003 onwards)
The Jihad against Thais (2003 onwards)
The Jihad against Nigerians (1965 onwards)
The Jihad against Canadians (2001 onwards)
The Jihad against Latin America (2003 onwards)
The Jihad against Australia (2002 onwards)
The Jihad against Latin America (2003 onwards)
The Jihad against Europeans (2005 onwards
Quote
 
 
+10 #17 kk 2011-09-10 19:41
ISLAMIC JIHAD WHICH DESTROYED CIVILIZATION AND CULTURE-SAME IS BEING TRIED IN INDIA
How Islam killed other cultures and religions.Brought to you by "the
religion of peace". There are many smaller jihads absent from this, but it
covers the major ones:


The Jihad against Arabs (622 to 634)
The Jihad against Zoroastrian Persians of Iran, Baluchistan and Afghanistan
(634 to 651)
The Jihad against the Byzantine Christians (634 to 1453)
The Jihad against Christian Coptic Egyptians (640 to 655)
The Jihad against Christian Coptic Nubians – modern Sudanese (650)
The Jihad against pagan Berbers – North Africans (650 to 700)
The Jihad against Spaniards (711 to 730)
The Reconquista against Jihad in Spain (730 to 1492)
The Jihad against Franks – modern French (720 to 732)
The Jihad against Sicilians in Italy (812 to 940)
The Jihad against Chinese (751)
The Jihad against Turks (651 to 751)
The Jihad against Armenians and Georgians (1071 to 1920)
The Jihad against Mongols (1260 to 1300)
The Jihad against Hindus of India, Pakistan and Bangladesh (638 to 1857)
The Jihad against Indonesians and Malays (1450 to 1500)
The Jihad against Poland (1444 to 1699)


Continued
Quote
 
 
+7 #16 gopalasamy 2011-09-10 12:34
DEAR SAVUKKU,

WHY YOU WANT TO ESTABLISH AFZAL IS INNOCENT AND OUR COURT PROCEDURES ARE WRONG?

CAN YOU ASK AFZAL WHETHER HE BELIEVS OUR CONSTITUTION?

PEOPLE LIKE YO ARE SUPPORTING THE WRONG PERSON, THEREBY ENDANGERING ALL PEOPLE LIVES.

THERE IS AGREAT DIFFERENCE BETWEEN THE THREE TAMILS CASE AND AFZAL'S CASE.

WHEN YOU ARE AFFECTED, YOU WROTE AGAINST SOME POLICE OFFICERS. WHEN SOME PEOPLE ARE KILLED, YOU ARE SUPPORTING A KNOWN TERRORIST.

VERY PATHETIC.
Quote
 
 
-1 #15 senthil blr 2011-09-10 11:51
this savukku is a anti nationalist website. everyone know apsal guru never requested from hanging. also from savukku views even after this delhi bomb blast police should not arrest any jegadist untill an eyewitness is availbale. i never read ur website again.
Quote
 
 
+1 #14 tamilneyan 2011-09-10 11:31
நீதியின் பக்கம் நாம் நின்று போராடுவோம்,அப்ப ாவி அப்சல் குருவின் தூக்கு கயிறு அறுப்படட்டும்
Quote
 
 
+7 #13 A.Thanammal 2011-09-10 11:23
AFZAL IS NO SAINT ..HE SHOULD BE PUNISHED.HIS CRIME IS HEINIOUS..SAVUKKU DONT SUPPORT
Quote
 
 
+9 #12 ramss 2011-09-10 10:59
Media is very strong now, Like NDTV , and they avoid most of news example Srilanka kiiling Innocent tamil people, y they dont show channel 4 video clip abt srilanka, media also in corruption
Quote
 
 
+2 #11 பெருசு 2011-09-10 09:39
தமிழன் ஒரு emotional idiot னு சவுக்கு மாதிரி ஆளுங்களுக்கு தெரியும். அதுனாலதான் அப்பப்போ இந்த மாதிரி ஒரு கட்டுரை.

நாமல்லாம் சில விஷயத்த நெனச்சுப் பாக்கறதே இல்ல. உதாரணத்துக்கு,

ஒரு மனுஷனுக்கு மரண தண்டன விதிக்கறதுங்கறத ு யாரோ ரெண்டு மூணு மீடியாக்காரன் முடிவெடுக்கறதில ்ல. முறையான நீதி விசாரண நடந்து, ரெண்டு தரப்பு நியாயத்தயும் கேட்டு, அப்பீலுக்கு மேல அப்பீல் போட்டு அதயும் பரிசீலன பண்ணி, கவர்னர் ஜனாதிபதினு கருண மனுப் போட்டு அதயும் ஆராய்ஞ்சு அப்பறமா முடிவு பன்ற விஷயம்.

தண்டன குடுத்து அத நிறைவேத்தற சமயத்துல அவன் என் சாதிக்காரன், என் ஊர்க்காரன், என் மொழி பேசறவன் அதுனால அவனுக்கு தண்டன குடுக்காதன்னு கொடி புடிச்சு ஊர்வலம் போனா, அப்புறம் இந்த நாட்டு நீதி மன்றத்த எல்லாம் இழுத்து மூடிடலாமா? சரி அத விடுங்கப்பா, ராஜீவ் கூட சேந்து செத்துப்போனானே, மத்தவன் - அவனும் தமிழந்தானே, அவன் சாவுக்கெல்லாம் ஒரு நீதி வேண்டாமா?
Quote
 
 
0 #10 பெருசு 2011-09-10 08:27
[ஃஉஒடெ நமெ="ணெல்லை குமரன்"]பயங்கரவாதம் என்றால் என்ன ? - அம்பிகளே தெரிந்து கொள்ளுங்கள்.

சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் - அரசு செய்தது பயங்கரவாதம்.

ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் - இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.

அம்பிகளே புரிகிறதா ?[/ஃஉஒடெ]

உங்க பேச்சுப்படி பாத்தா, தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்குப் போறவன் விஷயத்துல எல்லாமே ஒண்ணு தப்பு பண்ணதா சொல்லப்பட்டவன் பயங்கரவாதி இல்லன்னா வழக்கு விசாரணைல அவ்ன் நிரபராதினு தீர்ப்பு வந்துட்டா சர்க்கார் பயங்கரவாதி. அப்பிடித்தான் இருக்கு நீங்க சொல்றது
Quote
 
 
0 #9 http://koothadivedda 2011-09-10 08:12
I know of victims to punish the real criminals in India is very low.

To hide the people who are satisfied with the weakness of the rulers of some culprit left a prison escape in the community can be deceiving.
Make some money and buy the poor are guilty or proxy. One reason for this fearlessness of criminals

Also my opinion that the term Hindutva extremism. To chanting verses from the ban on Hindutva. If you make that induce terror in a way that people of different ethnic chanting verses.
Quote
 
 
-9 #8 பொது ஜனம் 2011-09-10 05:59
சோனியாவை கொன்னுட்டு, முருகன் மற்ற இருவரையும் தூக்கிலிடாதே என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்..
நாட்டை பிடிச்ச சனியன் ஒழியும்.
Quote
 
 
+2 #7 Mathu Nellai 2011-09-10 03:23
அருமையான பதிவு . இந்துத்வ ஆரதவு ஊடகங்களும் , இந்துத் தீவிரவாத அமைப்புகளும் “ அப்சல் குருதான் பாராளுமன்றத் தாக்குதலின் மொத்த உருவம் “ என பாமரனின் மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பொதுப்புத்தியின ் விளைவே , அப்சல் குருவின் தூக்குத் தண்டனைக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்களை தேச துரோகிகள் , தீவிரவாதிகள் எனக் கருதும் படி தூண்டுகிறது. என்ணிக்கையில் சிறிய பார்ப்பனர்களே எல்லா அதிகார மையங்களும் திரை மறைவு தீவிரவாதங்களில் ஈடுபடுவதாகவே தெரிகிறது . மிகச் சமீபத்திய உதாரணம் , புதிய தலைமுறை தொலைக்காட்சியில ் சுப.வீர பாண்டியனுக்கும் , சு.சாமிக்கும் நடந்த விவாதம் “ நாங்கதான் எல்லாம் , எங்களை மீறி எதுவும் நடக்காது” என சு.சாமி கொக்கரிப்பதிலிர ுந்தே தெரிகிறது , இந்நாட்டை ஆளுபவர்கள் பார்ப்பனர்களே அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலுமே.
Quote
 
 
+1 #6 பாரதி பாட்டுக்கோட்டை 2011-09-10 00:35
விசாரணை முறையை்யும் நீதித்துறையையும ் கேள்விக்கு உட்படு்த்தக்கூட ாது என்ற போலி ஜனநாயகவாதிகளை புறந்தள்ளி, தொடர் கட்டுரைகளை வழங்கியதற்கு நன்றி.
Quote
 
 
+3 #5 neo 2011-09-09 23:59
" அப்சல் இத்தாக்குதலுக்க ான சதித்திட்டத்தில ் ஈடுபட்டிருந்தால ும் கூட,"!!!!!!!!!!!!!!??????
Quote
 
 
+2 #4 Nellai Kumaran 2011-09-09 23:57
பயங்கரவாதம் என்றால் என்ன ? - அம்பிகளே தெரிந்து கொள்ளுங்கள்.

சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் - அரசு செய்தது பயங்கரவாதம்.

ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் - இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.

அம்பிகளே புரிகிறதா ?
Quote
 
 
+4 #3 suthiran 2011-09-09 23:54
"பாரளுமன்றத் தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை! எனவே அஃப்ஸலுக்குத் தூக்குத் தண்டனை நியாயமற்றது " இந்த மடத்தனமான விவாதம் எப்படி ஒரு ரத்தக்களரியை உண்டாக்கிய ஒரு பயங்கரவாத அதுவும் நம் நாட்டின் பாராளுமன்றத்தைய ே தாக்கி கடும் உயிர்சேதத்தை விளைவித்த குற்றத்திற்குப் பொருந்தும் ! முதலில் இந்த அஃப்ஸல் குருவைத் தூக்கிலிட வேண்டும்! இவன் பிடி பட்ட பிறகு , இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது தான் இந்தச் சதியில் ஈடு பட்டதற்கு மனம் வருந்தவே இல்லை ! இந்த ஈனப் பிறவிக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதிய சவுக்குக்கு என் மனமார்ந்த வருத்தங்களையும் , ஏமாற்றங்களையும் தெரிவித்துக்கொள ்ளுகிறேன்
Quote
 
 
+5 #2 sell 2011-09-09 22:58
சவுக்கு உம்மை பாராட்டுகிறேன் இந்த கட்டுரையை நான் படிக்க நேர்ந்திருக்கவி டில் நான் சகோதரர் அப்சலை ஒரு தீவிரவாதியாகத்த ான் கருதியிருப்பேன் . ஆனால் நமது அரசும் அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டவருக ்கு தான் குற்றவாளி இல்லை என அவர் தரப்பை எடுத்துச் சொல்ல வாய்ப்பை மறுத்துள்ளார்கள ் இது நீதி இல்லை.
Quote
 
 
+11 #1 niyaayam 2011-09-09 21:32
#1நடு நிலையான ஓர் ஊடகத்தின் அவசியம் மனித நேயம் பாராட்டும் மனிதர்களால் எப்போது நினைவு கூரப் படுகிறதென்றால் மனித உருவில் உலா வரும் மனித மிருகங்கள் செய்யும் அடாவடித் தனங்கள் அதிகமாகிக் கொண்டு போகும் போதுதான். நெல் வயலில் களையெடுக்க வேண்டிய காலத்தில் களையெடுக்க வேண்டும். ஓரிரண்டு களைகள்தானே என்று கவனயீனமாகும் விவசாயி அறுவடையில் கோட்டைவிட்டு விசமருந்தும் நிலைக்குத் தள்ளப் படுவான். இப்படியான மனித மிருகங்களை VIP களாக உலவ விடுவதன் மூலம் அரசுகளும் தமது நாட்டையே குட்டிச்சுவராக் குகின்றன. பெரும்பான்மையின ் வாக்குகளை மனதில் கொண்டு நிழலுக்குப் பயந்து வீட்டைத் தீக்கிரையாக்குக ின்றன. நாட்டு நலனை மனதில் கொண்டு இயங்கும் தலைவர்கள் இல்லாத ஒரு நாடாக இந்தியா ஆகி விட்டதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. புத்தி ஜீவிகளின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகி வருவதே இதற்குக் காரணம். அவர்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அவர்களின் தகுதிசார் கூட்டத்தில் மட்டும் பேசிவிட்டுப் போகிறார்கள். தமது கடமை முடிந்து விட்டது என்ற திருப்தி அவர்களுக்கு/நாட்டில் நீதி நிலைநிறுத்தப் படவேண்டும். உண்மைக் குற்றவாளிகள் உரிய வகையில் தண்டிக்கப் படவேண்டும்.அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் குற்றவாளிகள் தண்டிக்கப் படாவிட்டால், நடைமுறையிலிருக் கும் சட்டங்கள் மக்களிடம் மதிப்பிழந்து விடும்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 214 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7493
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week50220
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month252952
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12775071