|

1999ம் ஆண்டு ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ததிலிருந்தே இவ்வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். 2000ம் ஆண்டில் நளினியின் கருணை மனுவை மட்டும் சோனியா மற்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் மோகினி கிரி ஆகியோரின் பரிந்துரையின் படி, தமிழக ஆளுனர் பரிசீலித்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். ஆனால் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் கருணை மனுவை ஆளுனர் நிராகரித்தார்.
இதையடுத்து இம்மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர். 11 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து, திடீரென்று குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து செய்தி அனுப்பியதையடுத்து அதிர்ச்சி அலைகள் பரவின. தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துக் கிளம்பியது கட்சிகளை அப்பாற்பட்டு மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று உரத்த குரலில் கோரிக்கை வைத்தனர்.
நீதிமன்றத் தடையுத்தறவு ஏதும் இல்லாததால் ஆகஸ்ட் 26ம் தேதி, தமிழக அரசின் உள்துறை, சிறைக் கண்காணிப்பாளர் மூலமாக மூவருக்கும் செப்டம்பர் 9ம் தேதி அன்று தூக்குத் தண்டனை விதிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கும் கடிதத்தை மூவருக்கும் அளித்தார். உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் இடைக்காலத் தடை விதித்து 30ம் தேதி உத்தரவிட்டதையடுத்து தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 9 என்று தேதி நிர்ணயம் செய்யப் பட்ட பிறகு, வேலூர் சிறை நிர்வாகம் தூக்கிலிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியது. தூக்கிலிடும் இடத்தைச் சுற்றி தடுப்புகள் எழுப்பப் பட்டன. லோக்கல் காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, அதிரடிப் படை, மற்றும் சிறைத் துறையின் கமாண்டோப் படை ஆகிய நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறையைச் சுற்றிச் செய்யப் பட்டன. சிறையின் வெளிப்பகுதியில், கண்காணிப்பாளரின் வண்டியை நிறுத்தும் இடத்தில், தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப் பாட்டு அறை தற்காலிகமாக ஏற்படுத்தப் பட்டது.
இந்நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, இந்த தூக்கு தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, சிறைத்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தன் பெயர் குறிப்பிட விரும்பாத அவர் “வேலூர் சிறையில் பொது மக்கள் மனு பார்க்கும் இடத்துக்கு பின்புறம் தூக்கிடப் படும் இடம் இருக்கிறது. அது சிறை வளாகத்துக்கு உள்ளே அமைந்திருக்கிறது. கைதிகளை பார்வையிட வரும் பொது மக்கள் அதைக் காண முடியும். அந்த தூக்கிலிடும் இடத்தைப் பார்க்கும் வகையில் சிசிடிவி எனப்படும் ஒரு அதி நவீன காமெரா பொருத்தப் பட்டுள்ளது. அந்த காமெரா நேரடியாக தூக்கிலிடும் இடத்தை கவர் செய்யும் வகையில் அமைந்துள்ளது. தூக்கிலிடப்படும் போது தூக்கிடப்படுபவரை 15 அடி தூரத்திலிருந்து அழைத்து வரும்போதே இந்தக் காமெரா மூலம் பார்க்க முடியும்.
சிறை நிர்வாகத்திற்கு சிறைக்கு வெளியே காமெராவைப் பொருத்துவதற்கு மட்டும் தான் உரிமை உள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கூட சிறைக்கு உள்ளே காமெராவைப் பொருத்துவதற்கு விதிகளில் இடம் இல்லை. அப்படியே பாதுகாப்புக் காரணங்களுக்காக பொருத்துவதாக எடுத்துக் கொண்டாலும் தூக்கிடும் இடத்தைப் பார்த்து பொருத்த வேண்டிய அவசியம் என்ன ? அதுவும், செப்டம்பர் 9 அன்று தூக்கு என்று முடிவெடுத்த 26ம் தேதி அறிவித்தனர். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு 28 அன்று, இந்தக் காமெராவைப் பொருத்த வேண்டிய தேவை என்ன ? இந்தக் காமெராவை, மத்திய உளவுத் துறையின் உத்தரவின் படியே பொருத்தப் பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் காமெராவைப் பொருத்தும் பொழுது, மத்திய உளவுத்துறையினர் நேரடி மேற்பார்வை செய்தனர் என்றும் தெரிகிறது.
தற்போது காமெரா பொருத்தப் படும் இடத்தின் அருகில் சிறைக் கண்காணிப்பாளருக்கான புதிய அறை கட்டும் பணி கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தூக்கு தண்டணைக்கு நாள் குறித்து ஆணை சிறைக்கு வந்த பிறகு, அந்தக் கட்டுமானப் பணிகள் முழுவதும் திடீரென்று நிறுத்தப் பட்டன. இதன் பிறகுதான் இந்தக் காமெரா 28ம் தேதி பொருத்தப் பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து, அவர்களின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் கருத்து கேட்டோம். “21 ஆண்டுகளாக, நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன், வெளி உலகத்தையே காணாமல் தனிமைச் சிறையில் இருக்கின்றனர். இவர்களை சிறையிலிருந்து வெளியே விடக் கூடாது என்று எந்த சக்தி விரும்பிகிறதோ, அந்த சக்திதான் இந்த விஷமத்தனமான சம்பவத்திற்கு காரணமாக இருக்கக் கூடும்” என்றார்.
தொடர்ந்து, “ஒரு வேளை நீதிமன்றத்தில் தடை கிடைக்காமல், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் தூக்கிலிடப்பட்டால் அவர்கள் படும் வேதனையையும், அவர்களின் இறப்பையும் நேரடி ஒளிபரப்பில் கண்டு களிக்கலாம் என்று சில மனித நேயமற்றவர்கள் விரும்பியிருக்கக் கூடும். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், எந்த நாட்டில் இருந்தாலும், மருத்துவமனையில் இருந்தாலும் கூட, கம்ப்யூட்டர் மூலமாக நேரடி ஒளிபரப்பைக் காண இயலும் வசதி வாய்ப்புகள் இருக்கும் போது, இந்தக் கொலைக் காட்சியை காண விரும்பியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இது நடந்திருக்கலாம் என்றார். இல்லையென்றால் மத்திய உளவுத்துறை இது போன்ற காரியத்தில் ஈடுபடுவதற்கான அவசியமே இல்லை.”
இது தொடர்பாக சிறைத் துறை கூடுதல் டிஜிபி எஸ்கே.டோக்ரா விடம் பேசிய போது, ”நாங்கள் அனைத்தையும் விதிப்படியே செய்தோம். சிறைப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் தூக்குக் கைதிககளிடமோ, தூக்கிடப் படும் இடத்தின் அருகிலோ நெருங்க முடியாது. நீங்கள் சொல்லும் விஷயத்துக்கு அடிப்படை ஏதுமில்லை” என்று முடித்துக் கொண்டார்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது கூட, தூக்கிலிடுவதை புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்கவில்லை. அரபு நாடுகளில் தான், மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும். ஆனால், இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், இது போல மரண தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்வதை நாகரீகம் உள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நன்றி மீடியா வாய்ஸ் |
Comments
என்னது இந்தியா ஜனநாயக நாடா? சொல்லவே இல்ல....
நல்ல ஏற்பாடு இதை மக்கள் பாக்கணும் அப்போதான் பயம் வரும் . குற்றம் செய்ய நினைக்கும் போது இந்த காட்சி மனசுல வரணும் . பயம் பயம் பயத்துனால மட்டும்தான் மனுசன திருத்த முடியும் மத்திய உளவுத்துறை கு பாராட்டுகள் .[/ஃஉஒடெ]
பேரை மாத்துங்க பாஸ். 'தமிழ் மகனாம்'ல..?
· Mrs. Sonia gandhi (vincci)
o 5th std. educated
o Italian citizen name - Antonia Maino
o Was a waitress. She met Rajiv Gandhi, who was enrolled in Trinity College at the University of Cambridge in 1965 at a Greek restaurant (Varsity Restaurant) while working there, as a waitress to make ends meet
o Then sales executive in UK
o Holds a fake degree in English of Cambridge university
This is the qualification of the lady, who is governing India (beneficiary of 6 biggest scams in Indian history including Boforce, KGB, 2G, Equity sales fraud, Hawala and Swiss accounts)...Sonia Gandhi is currently in Switzerland not in USA to move their black money from their Swiss accounts. She and Congress are fooling people of India that she is in USA for some surgery/operation. She can have an operation/surgery in India also. India has worlds’ best hospitals and medical facilities available now. She can even call any doctor from world to India as visiting doctor to take opinion on her surgery/operation but as it is all fake story to fool India and its innocent people to transfer Black money before Indian people demands government to act and get it black money back to India. Government is also protracted and not acting on black money now till all politicians take out their money from their swiss accounts.
இந்த மூனுபேரை தூக்குல போடுவதை லைவ் ரிலே பண்றதெல்லாம் இருக்கட்டும் பாஸு. 'ராஜிவ்' செத்ததை லைவ்'வா பதிவு பண்ணி, அந்த டேப்பை இன்னிக்கு வரைக்கும் பார்த்து பரவசம் அடையும் ஆட்களை பத்தி ஏன் எந்த 'இந்தியனும்' பேச மாட்டேங்கிறான்? அவன் மட்டும் பாத்தா பரவாயில்லை. அவன் கூட்டாளிகளிங்க எல்லாத்துக்கும் போட்டு காட்டுறான். அப்படி அந்த டேப்பை பாத்தவங்க எல்லாருமே இன்னிக்கு மத்தியில் செல்வாக்கான துறைகளில் இருப்பதாகவும் ஒரு வதந்தி இருக்கே. இதை பத்தி ஏன் எந்த மான்ம் வெக்கம் உள்ள எந்த 'இந்தியனும்' பேச மாட்டேங்கிறான்? அமெரிக்காவுக்கு புடிக்காத எவனும் உயிரோடவே இருக்க முடியாது. ஆனால் அமெரிக்காவுக்கு புடிக்காத அந்த 'டேப் மாறி' இன்னும் எப்படி இந்தியாவின் ஆளுநரா இருக்கான்? அப்படி அந்த டேப்பில என்ன தான் இருக்கு? சி.பி.ஐ கேட்டே அந்த டேப்பை குடுக்கல்ன்னா, அந்த டேப்பில சி.பி.ஐயையே ஆட்டிப் படைக்கும் ஏதோ மேட்டர் இருக்குன்னு தானே அர்த்தம்? ஏன் அந்த டேப்பை வாங்க எவனும் எந்த முயற்சியும் எடுக்கல?
2. சி.பி.ஐ விசாரித்த அனைத்து கோப்புகளும் அதன் வலைதள்த்தில் கிடைக்கும் ராஜிவ் கொலைவழக்கை தவிர.
3. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு எவருக்கும் தெரியாமல் ஒரு இருட்டு சட்டத்தின் கீழ் மர்மமாக நடைபெற்றது.
டேய் பொறம்போக்குகளா.... அப்படி என்ன எழவு மர்மத்தைடா நீங்க ராஜிவ் கொலை வழக்கில் பேணிக் காத்துகொண்டு இருக்கிறீர்கள்? ஏன் எவனும் அதை பத்தி பேச மாட்டேங்கிறான்? காந்தி செத்ததையும்,இந் திரா காந்தி சாகும் பிண்ணனியும் வைத்துகூட படம் வந்திருக்கு. ஏன் இராஜிவ் காந்தி கொலை பற்றி எந்த படத்தையும் வரவிடமாட்டேங்கு றீங்க? ஏன் புலிகள் தான் இதை செய்தார்கள் என்கிற் ரீதியில் வரும் படத்தை மட்டும் அனும்திக்கிறீர் கள்?
2.இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். விசாரணை வெளிப்படையாக நடந்தது.கொலையாளி சார்ந்த மக்களோ இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.
3.ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
— விசாரணை வெளிப்படையாக நடைபெறவில்லை. சி.பி.ஐயின் வலைப் பக்கத்தில் கூட அவர்கள் கையாண்ட அனைத்து வழக்குகளின் விவரங்களு உண்டு. இராஜிவ் வழக்கை தவிர.
— கொலையாளி சார்ந்த மக்கள் ஒன்றறை லட்சம் பேர் இதற்காக பழிவாங்கப் பட்டார்கள்.
காரணம் ‘தமிழன் இளிச்சவாயன். பணம் கொடுத்தால் காட்டிகொடுக்கும ் ஆட்கள் அதில் உண்டு’ என்பதால்.
மில்ச்சஃபெ.ப்லொக்ச்பொட்.சொம்
மில்ச்னடு.ப்லொக்ச்பொட்.சொம்[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="டமில்ச்னடு.ப்லொக்ச்பட்]என் ன ஒரு மனித தன்மையற்ற மிருக கூட்டம், பேட்டரி வாங்கி கொடுத்தான்னு ஒருத்தனை தூக்கில் இட செய்வது உச்ச கட்ட மனித உரிமை மீறல்.
இது கயிரை தான் பிடிதென் மரு முனைஇல் மாடு இருந்ததை பார்கல என்பது பொல தான்
இந்த புத்தகத்தின் 208 பக்கத்தில் முன்னால் CBI Director ரகோத்தாமன் CBI-Special Investigation Team குற்றப் பின்னனி உள்ள மற்றும் கொலைச் சதியில் ஈடுபட்ட அனைவரையும் விசாரிக்கவில்லை என்பதனை ஒப்புக் கொண்டுள்ள பின்னும் இவர்களை தூக்கிலிட வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை. அதே வேளையில் இவர் ஒன்றும் தானாக முன்வந்து ஒப்புக் கொள்ளவில்லை, ஜெயின் கமிஷன் அறிக்கையில் உள்ளதை ஏற்றுக் கொண்டிருக்கிறார ் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
CBI-SIT யின் கூற்றுப் படி இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என்று ஏற்றுக் கொண்டாலும், மேற்கூறிய அனைவரையும் முறையாக விசாரித்திருந்த ால் இம்மூவரின் குற்றப் பங்கைவிட மறைக்கப் பட்ட மற்றவர்களின் பங்கு அதிகமாக கருதப் பட்டு இவர்களுக்கு குறைவான தண்டணையே கிடைத்து இருக்கும். ஆகவே இம்மூவரையும் தூக்கில் இடுவது முறையற்றது.
அப்படிக் கேட்கும் சுப்ரமணிய சாமி உட்பட சிலருக்கு CBI-MDMA முடுக்கி விடப்பட்டு விடுமோ, தாங்கள் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம்தான் காரணம். இது மிகப் பெரிய கொலைச் சதி என்று தெரிந்த பின்னும் இவர்கள் மூவரை தூகில் போட வேண்டும் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுவே.
இங்கே அதுபோன்று கருத்துக்கள் உண்மை தெரியாமல் பதிவு செய்பவர்களுக்கு குறிப்பாக “நீங்களும் ஏமாந்து எங்களையும் ஏமாறச் சொல்லதீர்”, தெரிந்தே சொல்பவர்களை (அதற்கு பல காரணங்கள் உண்டு) திருத்தமுடியாது விட்டு விடுங்கள்.
இவுங்களா சயனைடு சப்பி செத்த அது தியாகம்...
தற்கொலை கொண்டு கட்டி 100 பேரை கொன்னுட்டு செத்தா அது வீரம்...
எதிர் சமரில் சுட்டு கொன்னால் அவரு மாவீரரு...
செய்த கொலைக்காக...சட்டம் கொன்றால்...அது மட்டும் தப்பு...
என்னடா உங்க நியாயம்...
Excellent comment. Savukku is biased.
It is only Rs. 130
Much pacier than a crime novel
These fellows must be hanged.
Tamilscafe.blogspot.com
Tamilsnadu.blogspot.com
DON,T PUBLISH LIKE THIS TYPE OF NEWS .AS OUR
INDAN IPC LAWS THIS IS NOT POSSIBLE
He stated in his article:
"It was my misfortune to have presided over the Supreme Court bench which pronounced the judgement as per which the four accused were sentenced to death." and
"But, unfortunately neither government nor public pay its attention to the issue of human issue of reformation. They know only short-cut; liquidate the criminal and rejoice in the wild pleasure that brings about. Let me caution you from my long experience. It’s quite possible that guilty could be found innocent by court. But, sometimes, though very rarely only, even innocent might be found guilty. This is the consequence of sensationalisat ion of cases."
link is
http://www.asianage.com/ideas/death-penalty-nothing-brutal-murder-state-814
in which
நல்ல ஏற்பாடு இதை மக்கள் பாக்கணும் அப்போதான் பயம் வரும் . குற்றம் செய்ய நினைக்கும் போது இந்த காட்சி மனசுல வரணும் . பயம் பயம் பயத்துனால மட்டும்தான் மனுசன திருத்த முடியும் மத்திய உளவுத்துறை கு பாராட்டுகள் .
RSS feed for comments to this post