முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பரமக்குடி சம்பவம் - உண்மை அறியும் குழு அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 32
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011 20:09

பரமக்குடி வன்முறைச் சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்த மக்கள் கண்காணிப்பகக் குழுவின் இடைக்கால அறிக்கை. (காவல்துறையின் அதிகாரிகளை சந்திக்க முடியாததால் இது இடைக்கால அறிக்கை) 

ஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று, கொண்டாடப் படும் தலித் தலைவர் இமானுவேல் சேகரனின் நினைவு நாள், நினைவு நாளாக மட்டும் இல்லாமல், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதீய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலியாகவும் ‘கலாச்சார வெளிப்பாடாகவும்’, ஆதிக்க சாதியின் தலைவராக கருதப்படும் முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக கொண்டாடப் படுகிறது. பரமக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூடு காரணமாக 7 தலித்துகள் உயிரிழக்க இதுவே காரணமாக அமைந்தது.

 THSHK_PARAMAKUDI_1_779809g

சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, பரமக்குடி மட்டுமல்லாமல், மதுரை சிந்தாமணி மற்றும் இளையான்குடியில் துப்பாக்கிச சூடு நடக்கையில், சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை விரும்புவோர், சட்டம் ஒழுங்கு தொடர்காக உத்தரவுகளை பிறப்பிப்பது யார் என்று சந்தேகம் கொள்கின்றனர்.   சாதாரணமாக, மாவட்ட நீதி நடுவராக இருக்கும் மாவட்ட ஆட்சியர்தான் ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு.   காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கும் நடத்தை விதிகளின் பிரிவு 4 இவ்வாறு கூறுகிறது. “சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டும் போது, காவல்துறையினர், கூடுமான வரையில், பேச்சுவார்த்தை, அறிவுரை, எச்சரிக்கை, ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.  பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற நெருக்கடி உருவாகும் போது, எவ்வளவு குறைந்த பலத்தை பிரயோகிக்க வேண்டுமோ, அவ்வளவு குறைந்த பலத்தை பிரயோகிக்க வேண்டும்.” தமிழக காவல்துறைக்கும், குடிமக்கள் சாசனத்தை (Citizens Charter) பின்பற்றி பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில், தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 1990ம் ஆண்டின் காவல்துறையினருக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் இது போன்ற சூழல்களில் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து விளக்கப் பட்டுள்ளது.  ஆனால், சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகள் !!

 

ஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று தலித் சமூகத்தினரால் தங்கள் தலைவருக்கு செலுத்தப் படும் அஞ்சலி நிகழ்ச்சியானது இதே போன்ற மற்றொரு சமூகத்தின் தலைவருக்கு அக்டோபர் 30 அன்று நடைபெறும் இதே போன்ற விழா அரசு விழாஎன்பதை மறந்து விடக்கூடாது.   கடந்த ஆண்டு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு, பேசும் போது அதிமுக ஆட்சிக்கு வருமேயானால்,  தேவர் குரு பூஜை அரசு விழாவாக கொண்டாடப் படும் என்று பேசியிருக்கிறார்.   அதே ஆண்டு அக்டோபர் 2010ல் மத்திய அரசு, முத்துராமலிங்கத் தேவரை சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும், மனித உரிமைக் போராளியாகவும் கவுரவப் படுத்தி தபால் தலையை வெளியிட்டது.  இதைத் தொடர்ந்து பல தலித் தலைவர்கள் தற்போதைய தமிழக முதல்வர் மே 2011ல் பதவியேற்றவுடன், இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர்.  ஆனால், அது நடக்கவில்லை.

 

வழக்கமாகவே, செப்டம்பர் 11 அன்று, அரசியல் கட்சித் தலைவர்கள் காலையில் இமானேவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர்.   மாலையில் தலித் குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவர்.    இந்த ஆண்டு பிரச்சியின் தொடக்கம் என்னவென்றால், இந்த ஏற்பாடுகளின் படி வைக்கப் பட்ட ஒரு ப்ளெக்ஸ் போர்டு பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது.  அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் எஸ்சி எஸ்டி பிரிவு ஒரு ப்ளெக்ஸ் போர்டை வைக்கிறார்கள்.  அந்த ப்ளெக்ஸ் போர்டில் “தேசியத் தலைவர், தெய்வத் திருமகனார் இமானுவேல் சேகரன்” என்று வைத்துள்ளனர்.   இது தேவர் சாதியினரால் எதிர்க்கப் படுகிறது.   மறத் தமிழர் சேனை என்ற அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் செப்டம்பர் 7 அன்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். இமானுவேல் நினைவு தின விழாக் குழுவினர் காவல்நிலையத்துக்கு பேச்சுவார்த்தைக்காக அழைக்கப் படுகிறார்கள்.  தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தெய்வத்  திருமகன் என்ற பட்டம் முத்துராமலிங்கத் தேவருக்குச் சொந்தமானது, அதை வேறு எவரும் பார்க்கக் கூடாது என்று கூறுகின்றனர்.  இதை தலித் அமைப்பினர் எதிர்க்கின்றனர்.  பேச்சுவார்த்தை முறிகிறது.   பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையின் டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர், தலித் அமைப்பினரைப் பார்த்து, சமாதானத்துக்கு ஒப்புக்  கொள்ளாததால்,  இந்த வருடம் விழாவிற்கு தங்களின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று கூறுகின்றனர்.

 

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், பச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் படிக்கும் தலித் மாணவன் பழனிக்குமார் என்பவன் அன்று நாடகம் பார்த்து விட்டு திரும்பி வரும் வேளையில், ஒரு கூட்டத்தால் செப்டம்பர் 9 அன்று இரவு படுகொலை செய்யப் படுகிறான்.   பச்சேரியைச் சேர்ந்த தலித்துகள் கடும் கோபமடைந்து தங்கள் தலைவர் ஜான் பாண்டியனை (தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர்) வருகை தருமாறு கோருகின்றனர்.  ஜான் பாண்டியனும், செப்டம்பர் 11 அன்று இமானுவேல் சேகரனின் நினைவு தினத்துக்காக வருகை தருகையில், இறந்தவர் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்வதாக உறுதி அளிக்கிறார்.

 

ராமநாதபுரத்துக்கு வருகை தரும் இந்த முடிவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் எதிர்க்கப் படுகிறது. (ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் தான் இருப்பார்) ஜான் பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கள் நுழையக் கூடாது என்று உத்தரவிடுகிறார்.   செப்டம்பர் 13 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்  படும் வரை ஜான் பாண்டியன் கைது செய்யப் பட்டு வைக்கப் பட்டிருக்கிறார்.

 

செப்டம்பர் 11 அன்று காலை ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.  அதே நாளன்று காலை பரமக்குடியில் வழக்கம் போல, ஒவ்வொரு செப்டம்பர் 11 அன்றும் நடப்பது போல கடைகள் அடைக்கப் பட்டன, அஞ்சலி செலுத்தும் இடம் இருக்கும் சாலையில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்தனர்.   சரியாக காலை 12.45 மணிக்கு 30 நபர்கள், பெரும்பாலும் பெண்கள், ஆயுதம் ஏதுமின்றி, ஐந்து ரோடு சாலையில், ஜான் பாண்டியனை விடுதலை செய் என்ற கோரிக்கையோடு சாலை மறியலில் அமர்ந்தனர்.

 

அதற்குப் பிறகு பின் வருமாறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

 

1)    இப்போது ஊடகங்களில் வெளிவருவது போல, சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு கலைந்து செல்லுமாறு எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.    சாலையின் ஒரு புறம் வருவாய் அதிகாரிகளும், மறுபுறம், அடையாறு துணை ஆணையர் செந்தில் வேலனும் (இவர் இது போன்ற சம்பவங்களை கையாளுவதில் திறமையானவராம் !!!) நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர். காவல்துறை இருந்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, பொது மக்கள் குறைவாகவே இருந்தனர்.   காவல்துறை இருந்த எண்ணிக்கையை வைத்து இந்தப்  பொதுமக்களை எந்த வித பலப்பிரயோகமும் இல்லாமல் குண்டுக்கட்டாக அப்புறப் படுத்தியிருக்க முடியும்.

 

2)       மறியல் செய்தவர்கள் மட்டும் தடியடிக்கு ஆளாகவில்லை.  சாலையில் போவோர் வருவோரெல்லாம் தடியடிக்கு உள்ளாகினர்.  தடியடியைத் தொடர்ந்து செந்தில்வேலனும், இன்ஸ்பெக்டர் சிவக்குமாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் உடனடியாக மூவர் உயிரிழந்தனர்.  முதலில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, தண்ணீரைப் பீய்ச்சுவது போன்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை.

 

3)    ஒரு குழு உடனடியாக கிளம்பி, இளையான்குடி சாலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆம்புலன்சுகள், வஜ்ரா வாகனம் போன்றவற்றுக்கு தீ வைத்தது. இந்தக் குழுவும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

 

4)       சம்பவ இடத்திலிருந்து ஓடியவர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக விடித்து வந்து, அவர்களை ஐந்து சாலை சந்திப்பில் வைத்து லத்திகளாலும், ரைபிளின் பின்புறத்தாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.     ஐக்கிய நாடுகள் அவையின் சித்திரவதைக்கு எதிரான ஷரத்து 1ன் படி, இது காவல்துறையின் சித்திரவதையே ஆகும்.   காவல்துறையின் இந்தத் தாக்குதலே நூற்றுக் கணக்கான தலித் இளைஞர்கள் படுகாயமடைந்து, சரியான மருத்துவ வசதி கூட இல்லாமல் இன்று மருத்துவமனைகளில்,இருக்கிறார்கள்.  இவர்கள் மீது காவல்துறை  பல்வேறு கிரிமினல் வழக்குகளை புனையப் போவதும் அவர்களுக்கு தெரியும்.   நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும், வீடியோ ஆதாரங்களும் (நீதி விசாரணையின் போது சமர்ப்பிக்கப் பட உள்ளதால் இப்போது பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது) இரண்டு நபர்கள், காவல்துறையால் கடுமையாக தாக்கப் பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கின்றன.  இது ஒரு அப்பட்டமான கொலையே தவிர வேறு ஒன்றும் இல்லை.  ஜனநாயக இந்தியா இது போன்ற ஒரு படுகொலையை பார்த்தது இல்லை.

 

5) இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அருகாமையிலுள்ள மாவட்டங்களான சிவகங்கை மற்றும் மதுரையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.  ‘மேலிட உத்தரவு’ காரணமாக, போலீஸ் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற உத்தரவு சொல்லாமல் சொல்லப் பட்டது.    தென் மண்டல ஐஜியாக இருக்கும் ராஜேஷ் தாஸின் வரலோரே இது போல பல்வேறு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியவர் என்பதுதான்.  1996ல் இவர் உதவிக் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, இதே போல துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஆவணங்களில் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்தும் என்று ஒரு தவறான நம்பிக்கை உள்ளது.

 

இந்த மொத்த விவகாரத்தில் வருத்தம் அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால், இந்த சம்பவத்தால் இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த, எந்த தலித் தலைவருக்கும்  அனுமதி வழங்கப்படவில்லை என்பதுதான்.

 

போலி என்கவுன்டர்கள், தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணத்தை தயாரித்த க்ரிஸ்டாவ் ஹெயின்ஸ் தனது முதல் அறிக்கையில், இது போன்ற ஆர்ப்பாட்டங்களை எப்படிக் கையாள்வது என்று கூறியுள்ளார்.  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது போன்ற ஒரு அளவுகோல்களை கையாள்வது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டத்தை கையாள்வதற்கு உதவி செய்வதோடு, அனைத்து உயிர்களை பாதுகாக்கவும் உதவும் என்று கூறியுள்ளார்.

 

1)    ஒரு அரசுக்கு ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற வகையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பாதுகாப்பான, ஆபத்தற்ற ஒரு பொது இடத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

 

2)    உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்கக் கூடிய அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் இடையே பேச்சுவார்த்தை ஏற்படுவது மிக அவசியம்.   அடக்குமுறை சட்டங்கள் பயன்படாது.

 

3)    ஜனநாயக சமூகத்தினை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தவர் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் போதுமான, நியாயமான நிபந்தனைகளை விதிக்கலாம்.   அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீதித்துறையின் அமைப்பு அவசியம்.

 

4)    ஆர்ப்பாட்டம் நடக்கும் போது, சட்டம் ஒழுங்கைப் பற்றி மட்டுமே மாநில அரசின் நிர்வாகிகள் கவனத்தில் கொள்ளாமல், அமைதியை காப்பதும், மக்களைக் காப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

5)       காவல்துறையினர் பலத்தை பிரயோகிக்க நேர்ந்தால், சர்வதேச தரத்தில் எப்படி தேவையான அளவு மட்டும் பிரயோகிக்கப் படுகிறதோ, அவ்வாறே பிரயோகிக்க வேண்டும்.   இறப்பை தடுக்க மட்டுமே துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும்.  உயிரைக் காக்க மட்டுமே துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும், மற்ற நேர்வுகளில், பெரும் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

6)    ஒன்று கூடும் உரிமை, பலப்பிரயோகம் குறித்த கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து, போராடுபவர்கள் முடிவெடுக்க ஏதுவாக வெளிப்படையாக தெரிவிக்கப் பட வேண்டும்.

 

7)       தேவையற்ற முறையில் பலப்பிரயோகம் ஏற்பட்டாலோ, துப்பாக்கிகள் அவசியமற்ற முறையில் பயன்படுத்தப் பட்டிருந்தாலோ, அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உரிய வழி முறைகள் ஏற்படுத்த வேண்டும்.

 

அப்பட்டமாக மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்தும், துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக கடைபிடிக்க வேண்டிய பல்வேறு சட்ட நடைமுறைகளை பின்பற்றாதது குறித்தும் கடும் கவலையடைந்த மக்கள் கண்காணிப்பகம், பரமக்குடிக்கும், அரசு மருத்துவமனைக்கும் உண்மை அறியும் குழுவை அமைத்தது.    பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த குழு மறு நாளே (செப்டம்பர் 12) அன்று சம்பவ இடங்களை சுற்றிப் பார்த்து, இந்த இடைக்கால அறிக்கையை அளிக்கிறது.   வழக்கறிஞர் குழுவும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு மக்களை சந்தித்து, அவர்களின் கண்ணீர் கதைகளை பதிவு செய்து வருகின்றனர்.   இந்த உண்மை அறியும் குழுவில் தமிழ்நாடு மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான திட்டம் (Tamil Nadu Program on Human Rights and Democracy) அமைப்பின் இயக்குநர் சி.ஜே.ராஜன், மாநில கண்காணிப்பு அதிகாரி பழனியம்மாள், தலைமை வழக்கறிஞர் பாண்டியராஜன், ஊரக ஒருங்கிணைப்பாளர் அனந்தக்குமார், மற்றும் அய்யப்பன், மற்றும் குப்புசாமி ஆகியோர் இருந்தனர்.

 

இந்தக் குழு கள ஆய்வு செய்த போது தெரிந்த விஷயங்கள், சென்னையில் இருந்த நபர்கள் – அரசிலும் அரசுக்கு வெளியேயும் – இந்த சம்பவத்தில் முக்கிய பங்கு ஆற்றியிருப்பதை காண முடிந்தது.  இந்தக் குழு பேசிய பல போலீஸ் அதிகாரிகள் “எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு” என்று சொன்னதை காண முடிந்தது. பெரும்பாலான பொதுமக்களிடம் சாதாரணமாக, முதல்வருக்கு தெரிந்தோ, தெரியாமலோ, சசிகலா இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கிறார் என்று பேசிக்கொள்வதைக் காண முடிந்தது. திட்ட அமலாக்கத் துறையில் இருக்கும் பன்னீர் செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் அதிகாரங்களும் செயல்பாடுகளும், பல்வேறு தரப்பினரால் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.  இந்த பன்னீர் செல்வம், 1995ல் கொடியங்குளத்தில் தலித்துகள் மீது நடத்தப் பட்ட தாக்குதலின் போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

தமிழக முதல்வர் 9 செப்டம்பர் அன்று இரவு 15 தலித் குடியிருப்பான பச்சேரியைச் சேர்ந்த தலித் சிறுவன், அருகாமையிலுள்ள தேவர் குடியிருப்பான முத்துராமலிங்கபுரத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி சுவற்றில் தவறான வாசகம் எழுதப்  பட்டிருப்பதனாலேயே தலித் சிறுவன் கொல்லப் பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது.  இந்த கிராமத்தில் தலித்துகள் இன்று கூட காலணி அணிந்து கொண்டு நடக்கக் கூட முடியாது என்ற நிலையில், ரேஷன் கடைக்கு செல்வது போல நடந்து சென்று சுவற்றில் முத்தராமலிங்க தேவரைப் பற்றி எழுதினார்கள் என்ற காவல்துறையின் உண்மைக்கு மாறான கூற்றை நம்பியதாகவே தெரிகிறது.

 

மக்கள் கண்காணிப்பகம், அரசு உடனடியாக கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும் என்று விரும்புகிறது.

 

1)    உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்

 

2)    7 தலித்துகள் பலியானதற்கு தலித் சமூகத்திடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும். இது இரு சமூகத்தினரிடையே நிலவி வரும் வெறுப்பை குறைக்க உதவும்.   காவல்துறையினர் எந்த வித தலையீடும் இல்லாமல், சுதந்திரமாக விருப்பி வெருப்பின்றி செயல்படும் என்று முதலமைச்சர் தமிழக மக்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.

 

3)    மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல், காவல்துறையின் அதிகாரிகள், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட, சட்டம் ஒழுங்கு தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

 

4)       நீதி விசாரணை என்பது, தற்போது பணியில் இருக்கும் நீதிபதியாக இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் இப்போது இருக்கும் அமைப்புக்கு உள்ளேதான் செயல்பட வேண்டும்.  காவல்துறையின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஆவணங்கள் இருக்கும் சூழலில், இப்போதே பெரும்பாலான ஆவணங்கள் திருத்தப் பட்டிருப்பதற்கான வாய்ப்பு, குறிப்பாக வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு  நடத்தப் பட்டதாகவும், முன் அனுமதி பெற்றே துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாகவும் ஆவணங்கள்  தயாரிக்கப் பட்டிருக்கும். தாமிரபரணி சம்பவத்தில் அமைக்கப் பட்ட மோகன் விசாரணை ஆணையமே இதற்கு சான்று.  உண்மையில் கண்டு பிடிக்கப் பட வேண்டிய விஷயம், தென் மண்டல ஐஜியை, மாவட் ஆட்சியரை மீறி, கட்டுக்கு மீறி செயல்பட வைத்த சென்னையைச் சேர்ந்த அந்த மர்ம கரம் எது என்பதுதான்.  இதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பு விசாரணை நடத்துவது அவசியம்.  எனினும், தற்போது விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டு விட்டதால், தமிழக அரசை நீதி விசாரணைக்கு பதிலாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரப்படுகிறது.

 

5)    ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச் சட்டம் சரியான முறையில் பயன்படுத்தப் படுகிறதா என்பதையும், முதல்வருக்கு நெருக்கமான மர்மக் கரம் தடுக்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

 

6)    தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, மாநில அரசுக்கு பரிந்துரைகள் செய்வதோடு, சம்பவத்திற்கு காரணமான நபர்களை கண்டறிந்து அவர்கள்  மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்ய வேண்டும்.

 

7)       மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், பாதிக்கப் பட்ட, காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உத்தரவாதப் படுத்த வேண்டும்.  தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

8)    உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகளின் படி, காவல்துறையை சீரமைக்க ஒரு வரைவு சட்டத்தை உருவாக்கி, அதை பொதுமக்களின் கருத்துக்கு சுற்றில் விட வேண்டும்.  அப்போதுதான் காவல்துறை எந்தவிதமான தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட முடியும்.

 

இதனிடையே இன்று மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் மையம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது.

 IMG_0518

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய வழக்கறிஞர் திரு.விஜயக்குமார் அவர்கள் பரமக்குடியில் நடந்த சம்பவம் ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவம்.  சமூகத்தை நேசிக்கக் கூடிய அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும் என்றார்.  அதன் பொருட்டே, சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்று கூடி, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளதாகவும்,  அடுத்த கட்டமாக 22 செப்டம்பர் அன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

 IMG_0517

இவரை அடுத்த பேசிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ஒரு கூட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கட்டுப் படுத்த முடியாத போலீஸ் போலீசே அல்ல.  அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடலாம்.  போலீசாக இருப்பதற்கே அவர்கள் தகுதி இல்லாதவர்கள்.  அரசு நியமித்துள்ள சம்பத் கமிஷன், போதுமானதல்ல.   ஓய்வு பெற்ற நீதிபதிகளை விட, பதவியில் இருக்கும் நீதிபதிகளே நியமிக்கப் பட வேண்டும்.  தலைமை நீதிபதியை அரசு அணுகினால், நிச்சயம் நீதிபதிகள் ஒதுக்கப் படுவார்கள்.

 

மேலும், தற்போது உயிரிழந்தவர்களுக்கு கொடுக்க பட்டிருக்கக் கூடிய ஒரு லட்ச ரூபாய் இழப்பீடானது மிக மிக குறைவானது.  ஒரு ராணுவ அதிகாரி சுட்டதால் சிறுவன் உயிரிழந்த தில்ஷன் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் வழங்கும் முதலமைச்சர், இது போன்ற காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு உடனடியாக கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

 IMG_0516

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும், நடந்திருப்பது ஒரு கொலை ஆகையால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்  சொன்னார்.

 

மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் பேசுகையில், மிக மிக வருத்தத்திற்குரிய சம்பவம் இது. ரயில்வே விபத்தில் இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் தரும் அரசு, தலித்துகள் இறந்தால் 1 லட்சம் கொடுக்கிறது என்றார்.   ஓய்வு பெற்ற நீதிபதிகள் எப்போதுமே ஓய்வு பெற்ற நீதிபதிகள் தான்.  ஆகையால் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்.

 

Comments  

 
+1 #67 selva kutti 2011-10-25 20:52
:D :D :-? :D
Quote
 
 
+1 #66 selva kutti 2011-10-25 20:49
:o
Quote
 
 
0 #65 devendhra 2011-10-03 16:48
http://www.change.org/petitions/dismiss-and-convict-police-who-executed-paramakkudi-massacre
Quote
 
 
-2 #64 தண்டல்காரன் 2011-09-26 13:07
அடேய் தனியன் என்கிற கருத்து கந்தசாமி, இந்த லிங்க பாருடா. வெண்ணை கருத்து சொல்றதுக்கு முன்னாடி வெவரத்த தெரிஞ்சுகிட்டு சொல்லுடா பரதேசி.
http://www.stampsofindia.com/lists/stamps/fdc/2010/fdc2188.jpg

http://www.stampsofindia.com/lists/brochures/2010brochure2188.jpg
Quote
 
 
-2 #63 Thaniyan 2011-09-26 11:02
///அதே ஆண்டு அக்டோபர் 2010ல் மத்திய அரசு, முத்துராமலிங்கத ் தேவரை சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும், மனித உரிமைக் போராளியாகவும் கவுரவப் படுத்தி தபால் தலையை வெளியிட்டது.,///
நடுநிலை தவறும்போது இப்படி பொய் அதுவாகவே வரும் என்பது சவுக்கிற்க்கும் வருகிறது போலும்!
http://en.wikipedia.org/wiki/List_of_people_on_stamps_of_India
http://www.indiapicks.com/stamps/Gallery/H/G1995.htm
http://www.travelindia-guide.com/indian-stamps/collection/1995.php#
Quote
 
 
+1 #62 thamilar 2011-09-22 13:10
I appreciate your write up, this is also given to you by Peoples Watch team members is it correct? I am not belong to any of the above castes you largely quote in this article. I request the Thevar, Kallar community people to give up your hatred and oppression against the SC people. Do not spoil tamil unity which is very essential now. Allow SC people to respect their own leader, it is nothing harm in these respecting ceremonies. Mr. Senthilvelan is a Thevar official, not police official. it is irony that north indian IPS also join hands with these local caste officials in harassing SC people.Already there is strong feeling about AIADMK which was considered as dalits party, during Jaya rule become Kallar and Thevar party. Jaya must understand that there are other castes and communities who are majority than thevar or kallar community, Tamilnadu belongs to all communities. Humanitarian and peace loving kallar and thevar community people should educate their fellow community men to give up hatred and keep on oppressing, harassing, abusing SC people hereafter. Let us live together respecting each other as TAMILS.
Quote
 
 
+3 #61 Anto 2011-09-22 12:15
[ஃஉஒடெ நமெ="காற்ட்ஹேஏஸ்நாறா ண்"]அந்த பைத்தியம் முத்து ராமலிங்கத்தை பற்றீ தெரிய வேண்டுமென்றால், தினகரன் எழுதிய "முதுகளத்தூர் கலவரம்" என்ற நூலை படியுக்கள்.. தினகரனும் மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான்..[/ஃஉஒடெ]

No ... its K.P. Kandasamy Nadar!!!
Quote
 
 
0 #60 Anto 2011-09-22 12:04
Quoting iraa.ச.இமலாதித்தன்:
தேவரின மக்களில் இன்னமும் பாதி பேருக்கும் மேலாக, உங்களை மாதிரியான சூழ்சசி வலைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை அறியாமல், வெள்ளாந்தியாக மிகுந்த மனித நேயத்துடன் தமிழகத்தில் "சாதி வெறியன்" என்ற அடைமொழியோடு மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

இன்றைக்கு நீங்கள் வளர்ந்து தேவரின மக்களை வசை பாடுகிறீர்கள். காலம் ஒரு நாள் மாறும். அப்போது இதற்கான பதில் அனைவருக்கும் கிடைக்கும். அதுவரையிலும் நானும், என் சாதியை சார்ந்த ஒவ்வொரு மக்களும் "சாதி வெறியனாகவே" இருந்துவிட்டு போகிறோம். அதுவரை நீங்கள் உங்களது சூழ்சிகளை, இது போன்று பல கட்டுரைகளின் வழியாக கட்டவிழ்த்து விடுங்கள்.

பிராமணர்களை எதிர்த்தார்கள்; அவர்கள் பல் தலைமுறையாக படித்தே வளர்ந்ததால் கொஞ்சம் தப்பித்து கொள்கிறார்கள். ஆனால், என் தேவரின மக்கள் இன்னமும் படித்து முன்னுக்கு வராமல் கீழே கிடக்கும் வரை எங்களை விட நீங்கள் புத்திசாலியாகவே தான் இருப்பீர்கள்.

அறிவாள் தூக்க தெரிஞ்ச எம் மக்களுக்கு உங்களை மாதிரியான அறிவால், சாதிவெறியன் என்ற வார்த்தையை தூக்க தெரியலையே! :(



that was the reason why we are being ruled by other state boons, the one & only tamilan and tamil leader is K.Kamaraj!!

sharpen your brain rather than sharpening your tool!!
Quote
 
 
0 #59 Anto 2011-09-22 11:57
Jaadi 2 oliya verillai pappa!! kula talchi yuarvo sollal paavam .. jaadi veriya saadum savukku-iku en valthukkal!!

nellai tamilan ... nee marangthu vittai nanba!!
Quote
 
 
0 #58 karuna prebha lingam 2011-09-22 06:43
so far i thought that i am THAMIZHAN .But now, i feel i'm similar to srilankan THAMIZHAN. rajabakshe and his govt killed tamils, in the same way jeyalalitha and her police killed their own tamils in paramakudi. where is nedumaran,seema an,vaiko and so called tamil supporters. this incident exposed their true colors and all those caste biased commentors in savukku.
Quote
 
 
+1 #57 chockar 2011-09-21 18:56
இப்ப புரியுதா சாதாரன மக்களை இந்த அரசியல் வாதிகள்,ஊடகங்கள ் தங்கள் சுய நலத்திற்கு பயண்படுத்திட்டு நம்மளை ஜாதி சண்டை போட விட்டுட்டாங்க.ஒருத்தரை ஒருத்தர் இழிவா பேசரத விட்டுட்டு அறிவு திறமையில முன்னேற வழி பாருங்க.உலகத்தில யாரும் குறைந்தவர்களில் ளை.சுய நல அரசியல் வாதிகள்,ஒரு நிலை சார்ந்து எழுதும் பத்திரிகைகள் பேச்சை கேட்காதிர்கள்
Quote
 
 
+3 #56 vijay_dl 2011-09-21 15:52
கண்டிப்பாக பின்வரும் எனது கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்க மாட்டார்கள் , அதிகபட்சம் ஆதிக்க சாதியின் ஆணவம் என்றும், பிரச்சனையை திசை திருப்புகிறேன் என்றும் அல்லது அவரவர் மன நிலைக்கு ஏற்ப என்னை திட்டுவார்கள் , நியாயமும் பொறுமையும் உங்களிடம் இருந்தால் பதில் சொல்லுங்களேன்

1) ஜான் பாண்டியனும் இம்மானுவேல் சேகரரும் இந்துக்களா அல்லது கிறித்துவர்களா ?
2) கிறித்துவத்திலே குரு பூஜை உண்டா ?
3) எத்தனை ஆண்டுகளாக இம்மானுவேல் சேகருக்கு குரு பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது ?
4) குரு பூஜை என்றால் என்ன ?
5) தாழ்தபட்டவர்களு க்காக அல்லது ஒடுக்கபட்டவர்கள ுக்காக ஜான் வந்தார் என்றால் உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் வன்னிய கிறித்துவர்களுக ்கும் தலித் கிறித்துவர்களுக ்கும் இடையே நடந்த பிரச்சனயில் போலீஸ் துப்பாக்கி சூடு , உயிர் பலி நடந்த பொழுது இவர்கள் எங்கே போனார்கள் அல்லது வட தமிழகத்து தலித் போராளிகள், நடுநிலையாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்கே போனார்கள் ?
Quote
 
 
+2 #55 ஆர்.தியாகு 2011-09-20 11:20
ர்[ஃஉஒடெ நமெ="தென்னவன்"][ஃஉஒடெ நமெ="மோர்ட்ய்"]இமனுவேல் சேகரும் தேவரும் ஒன்றல்ல
தேவர் நாட்டுகாக பாடுபட்டவ்ர்
இவர் தன் சாதிக்காக[/ஃஉஒடெ]

முத்துராமலிஙகம் என்ன நாட்டுக்காக செஞசு சாதிச்சார் நு சொல்ல முடியுமா??[/ஃஉஒடெ]


போய் நிறைய படி! என்ன சாதித்தார் என தெரியும்! ட்

தலித்திற்காக ஓரு தலித் போராடினால் அது சமூக நீதி ! ஓரு அய்யருக்காக ஒரு அய்யர் போராடினால் - ஒரு தேவருக்காக ஓரு தேவர் போராடினால் அது பெயர் ஜாதி வெறியா..? போடா லூஸூ !
Quote
 
 
+1 #54 சவுக்கு, வினவு குழு 2011-09-19 14:50
நாடார்கள் எல்லோரும் நல்லவர்கள்......மற்றவர்களை மட்டும் திட்டுவோம்....எல்லா இணைய தளங்களையும் பத்திரிகை துறையையும் பிடித்து கொள்வோம்...ஜாதி பெயர வெளியே காட்டி கொள்ளமாட்டோம்....கொள்கை மட்டும் நெல்லை ந்டாஇமாரன் என்ற சாதி தலைவரால் உருவாக்க படுகிறது...பார்பனரை திட்டும் பொது மட்டும் தேவர் இனத்தவர் போல காட்டி கொள்வோம்.................சவுக்கு, வினவு குழு
Quote
 
 
-1 #53 Nalliah Thayabharan 2011-09-19 08:22
தலித்துகளுக்குப ் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைதுசெய்வதும், தலித்துக்களால் பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்க ள் என தலித்துகளைக் கைதுசெய்வதும், தமிழகப் பொலிசாரின் கொள்கையாக இருக்கின்றது!!
இம்மானுவேல்சேகர னின் குருபூஜையை தடுத்து நிறுத்தி முத்தராமலிங்கத் தின் குருபூஜைக்கு இணையாக தமிழகத்தில் வளரவிடக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நோக்கமாக இருக்கின்றது!!!
- நல்லையா தயாபரன்
Quote
 
 
+18 #52 தமிழினியன் 2011-09-18 22:52
போதும் நிறுத்துங்கள் உங்கள் சாதிச் சண்டையை,,,,, மறவனும் பறையனும் நாடாரும் கோனாரும் வேளாளரும் பள்ளரும் முதலியாரும் தமிழனாய் வாழ்வது எப்போது.. சாதி எனும் மலத்தை தின்று வாழும் வீணர்களே... உங்களால்தான் தமிழன் தொலைந்து போனான்.. ஈழமும் தொலைந்து போனது.... நீங்கள் இருக்கும் வரை தமிழனை வட இந்தியனும் மலையாள நாய்களும் தெலுங்கு நாயுடுகளும்தான் ஆள்வார்கள்....
Quote
 
 
0 #51 Nalliah Thayabharan 2011-09-18 21:50
தலித்துகளுக்குப ் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைதுசெய்வதும், தலித்துக்களால் பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்க ள் என தலித்துகளைக் கைதுசெய்வதும், தமிழகப் பொலிசாரின் கொள்கையாக இருக்கின்றது!!
தமிழக அரசியல்வாதிகள் ஜாதியின் பெயரால் வாக்குகளை வாங்க எதுவும் செய்வார்கள்!!
இம்மானுவேல்சேகர னின் குருபூஜையை தடுத்து நிறுத்தி முத்தராமலிங்கத் தின் குருபூஜைக்கு இணையாக தமிழகத்தில் வளரவிடக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நோக்கமாக இருக்கிறது!!
- நல்லையா தயாபரன்
Quote
 
 
+2 #50 கதிரவன் 2011-09-18 21:11
தமிழக போலீஸின் சாதி வெறியை தோலுறிக்கும் அறிக்கை.
பகிர்ந்தமைக்கு நன்றி!

இங்கே வரும் பின்னூட்டங்கள் சில, படித்தவர்களின் மனங்கள் இன்னும் சாதி மலத்தில் புரளுவதை காணும் போது வெட்கம்கொள்ள வைக்கிறது. :(

-கதிரவன், துபாய்.
Quote
 
 
+2 #49 anandan 2011-09-18 15:44
ஐயா கருத்து சொல்பவர்களே.... உங்கள் சாயம் தான் வெளுத்துவிட்டது .

கருணா வை எதிர்த்து எழுதிய போதெல்லாம் சவுக்கு நேர்மையின் மறு உருவமாக தெரிந்தார், இப்போ உங்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை , அதன் வலியை, நியாயத்தை எழுதினால் பொத்துக்கொண்டு வருதோ? எனக்கு எந்த சாதிக்காரனாயிரு ந்தாலும் சரி ஒன்றாக கூடும்போது நடக்கும் அக்கிரமங்கள் , எதிர் தரப்பினரை உசுப்பேற்றுதல் வன்முறையில் ஈடுபட்டால் பிடிக்காது. உங்களுக்கு இம்மானுவேல் விழா பிரச்சினை என்றால் மற்ற அனைவருக்கும் தேவர் ஜெயந்தி பிரச்சினை.
ஜான் பாண்டியனை நான் வெறுத்தாலும் அவர் பரமக்குடி வரக்கூடாது என்பது என்ன நியாயம்? தேவர் ஜெயந்திக்கு வாண்டையார்,நடரா ஜன்,கார்த்திக் வரகூடாது என்று சொல்லலாமா?
சுவற்றில் எழுதியதற்காக சிறு பையனை கொல்வதை எந்த அடிப்படையில் ஆதரிப்பீர்கள்?

மற்றபடி ஜான் பாண்டியன் அர்ரெஸ்ட் க்காக பொது மக்களை துன்புறுத்துவதை (பஸ் எரிப்பது, வன்முறை) ஏற்க முடியாது.
தேவர் ஜெயந்திக்கும் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்க்கத்தானே போகிறோம்......
காவல் துறை ஒழுங்காக முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அனைத்தையும் தடுத்திருக்கலாம ்....
Quote
 
 
+1 #48 visakan 2011-09-17 16:12
என்ன கொடுமை சரவணன்!!!! இவங்க இப்படித்தான் பாஸ் எதுக்கெடுத்தாலு ம் ஒன்னு கூடி அடிச்சிக்குவாங் க!
Quote
 
 
+3 #47 KARTHEESWARAN 2011-09-17 15:58
சவுக்கு, ஏற்கனவே சொல்லியிருக்கிற ோம், பலமுறை போனிலும் கண்டித்திருக்கி றோம்.. இன்னும் நீ எங்களை தலித் என்று சொன்னால் உனக்கு நல்லதில்ல.. பார்த்தாலே தீட்டு என்றிருந்த சாணான் உனக்கு நாங்கள் தலித்தா? என்னமோ நல்லவன் மாதிரியும், நேர்மையானவன் மாதிரியும் நடிக்காதே.. ஜெ க்கு நீ நக்கி பிழைப்பதற்காக எங்களை இழிவு படுத்தாதே.. இனியும் இப்படி எங்களை தலித் என்று சொன்னால்.....?
Quote
 
 
+1 #46 KARTHEESWARAN 2011-09-17 15:54
தாழ்த்தப்பட்டவர ்கள் தங்கள் தெருவிற்குள் செருப்போடு வரக்கூடாது, தாங்கள் சொல்பவற்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று கொடுமை படுத்தியவன் தான் இந்த பைத்தியக்காரன் முத்து ராமலிங்கம்.. அந்த மக்களின் எழுச்சிக்காக போராடியதற்காக அவரை அடியாட்களை ஏவி விட்டு கொலை செய்தவன் தான் இவன்.. அவனை போலவே அவன் சமுதாயத்தவர்களு ம் பொய் சொல்வதில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்க ிறார்கள். குற்ற பரம்பரையினர் சொல்பதை கண்டு கொள்ள கூடாது..
Quote
 
 
-1 #45 KARTHEESWARAN 2011-09-17 15:49
அந்த பைத்தியம் முத்து ராமலிங்கத்தை பற்றீ தெரிய வேண்டுமென்றால், தினகரன் எழுதிய "முதுகளத்தூர் கலவரம்" என்ற நூலை படியுக்கள்.. தினகரனும் மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான்..
Quote
 
 
+1 #44 KARTHEESWARAN 2011-09-17 15:46
எவன் நாட்டுக்காக போராடியவன்? ஒரே பொய் வண்டி தான் இந்த முத்து ராமலிங்கம்.. நேதாஜியை பார்த்தேன், இன்னும் வெகு விரைவில் இந்த நாட்டையே பிடிப்பேன் என்று ஊர் ஊராக பொய் சொல்லி திரிந்தவன் தான் இவன்..
Quote
 
 
+2 #43 KARTHEESWARAN 2011-09-17 15:41
முத்துராமலிங்கத ்துக்கு தெய்வ திருமகன் பட்டம் யார் குடுத்தது? கடவுளுக்கா பிறந்தான்? அவனால் சாதி கலவரம் வந்தது தான் மிச்சம்.. மேலும் அவன் சாதி மக்களை அடி முட்டாளாக, அடியாளாக மாற்றியது தான் மிச்சம்..
Quote
 
 
+2 #42 Jagadees 2011-09-17 15:32
பரமக்குடி - துப்பாக்கி சூடு காணொளி ,

http://www.youtube.com/watch?v=cMkulE2cT-g
Quote
 
 
0 #41 கௌதமன் 2011-09-17 14:33
தெய்வத் திருமகன் என்ற பட்டம் முத்துராமலிங்கத ் தேவருக்குச் சொந்தமானது,

இது என்னப்பா கதை? கலவரம் ஆரம்பிக்க காரணம் தேடிக் கண்டு பிடித்துள்ளார்க ள்.அம்புட்டுதென்.
Quote
 
 
+9 #40 Force 2011-09-17 13:44
ஊருக்குள் சாலை வசதி வந்தால் போலிசு பொசுக்குன்னு வந்துருவான், அதுனால சரளைக் கல்லை அள்ளி மாட்டுக்காடியில போடுங்கடா போலிசு ஜீப்பு வந்த, புழுதி தெரியும் போதே ஓடி ஒழிய தோதாகும்டா என்பவர்கள் தான் தேசிய தலைவர்களா?
Quote
 
 
+10 #39 d.tamilanban 2011-09-17 13:22
"மகாத்மா" இமானுவேல், "பெரும் தலைவர்" இமானுவேல், "கர்மவீரர்" இமானுவேல், "புரட்சித்தலைவர் "இமானுவேல், "புரட்சித்தலைவி"இமானுவேல்,"கலைஞர்" இமானுவேல், "மனிதருள் மாணிக்கம்"இமானுவேல்,"அஞ்சாநெஞ்சன்"இமானுவேல்,"அன்னை"இமானுவேல்,"இளையதளபதி" இமானுவேல்,"தல" இமானுவேல்,"சீயான்" இமானுவேல் என இதுப்போன்று நிறைய பட்டம் இருக்க பள்ளர்கள் ஏன் "தேசியத்தலைவர் தெய்வதிருமகன்" எனும் பட்டத்தை போட வேண்டும்? புரிகிறதா தோழர்களே..!!! யார் வன்முறையாளர்கள் என புரிகிறதா.?


சவுக்கு நாடாரே..! தேசியத்தலைவர் தெய்வதிருமகன் பசும்பொன் தேவர் .. நேதாஜியால் பார்வர்ட் பிளாக் சென்னை மகான தலைவராய் நியமிக்கப்பட்டவ ர். பார்வர்ட் பிளாக் கட்சியின் பிரதிநிதியாக சட்டமன்றம் மற்றும் பாராளும் மன்றம் சென்றவர். அவர் ஒரு சாதிய கட்சி நடத்தவில்லை.
தேசியக்கட்சியின ் மகான தலைவர் பிற்காலத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலவராக(துனை) இருந்தவர்.

5000 நாட்கள் ஜெயிலில் இருந்தார் ( இமானுவேல் வழக்கிற்காக 548 நாட்கள் ஜெயிலில் இருந்தார், கவனிக்கவும் ஜாமீனுக்கு வேண்டவே இல்லை, நிரபராதி என நிருபித்து பின் வெளிவந்தார்) மற்ற ஜெயில் நாட்கள் எல்லாம் விடுதலைக்காக...இந்திய விடுதலைக்காக... சுந்திர விடுதலைக்காக... தாய் மண்ணிண் விடுதலைக்காக... நாட்டின் தரித்திரம் ஒழித்து சரித்திரம் சாதிபதற்காக...

சவுக்கு எனும் ஆச்சிமுத்து சங்கர் நாடார் அறிவாரா..? இல்லை இன்னும் தேவர்கள் மீது இருக்கும் வன்மம் தீரும் வரை கட்டுரைகள் வரைவாரா..?

சவுக்கு எனும் ஆச்சிமுத்து சங்கர் நாடார் அவர்களே..! தலித் என்ற வார்த்தையே ஜான்பான்டியனுக் கு பிடிக்காது.. அவருக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் தலித் என போடலாமா..??

கன்னிமாரா நூலகம் போ..! உனக்குள் இருக்கும் கயமை போகும் போ..!!

ட்

Thiyaku aavarkale...mikavum arumaiyai sonneerkal...summa irunthavana vampukku illupinka.. apuram kollama yenna pannuvankalaam
Quote
 
 
+5 #38 jaya 2011-09-17 13:20
[ஃஉஒடெ நமெ="டமில்செல்வம்"]முத்துராமலிங்க தேவர் ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .இவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லவராகவே வாழ்ந்தார்.இன்றும் பசும்பொன் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் எசி குடியுருப்புகளி ல்தான் தேவர் சிலை உள்ளது.அந்த சிலைக்கு இன்று வரை உரிய மரியாதையை எசி மக்கள் குடுத்து வருகின்றனர்.ஆனாலும் வெளியில் உள்ள சிலர் தன்னுடைய சுயலாபத்துக்காக தேவரையும்,இம்மா னுவேல்,அம்பேத்க ார் போன்றவர்களைப் பயன்படுத்தி பெரியவர்களாக நினைக்கின்றனர். அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="டமில்செல்வம்"]முத்துராமலிங்க தேவர் ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .இவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லவராகவே வாழ்ந்தார்.இன்றும் பசும்பொன் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் எசி குடியுருப்புகளி ல்தான் தேவர் சிலை உள்ளது.அந்த சிலைக்கு இன்று வரை உரிய மரியாதையை எசி மக்கள் குடுத்து வருகின்றனர்.ஆனாலும் வெளியில் உள்ள சிலர் தன்னுடைய சுயலாபத்துக்காக தேவரையும்,இம்மா னுவேல்,அம்பேத்க ார் போன்றவர்களைப் பயன்படுத்தி பெரியவர்களாக நினைக்கின்றனர். அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.[/ஃஉஒடெ]
100% TRUE. i AGREE WITH U.
Quote
 
 
+4 #37 TAMILAMUDAN 2011-09-17 12:13
சவுக்கு u r writting the article as if u were there on the spot when things went wrong. DO u have gutz to accept that JOHN PANDIAN is playing a political game in this? chumma dont talk like this. plz . it will reduce ur status. plz stop this.
Quote
 
 
+1 #36 babu the boss 2011-09-17 09:20
All should be punished severely who involved in this case.........................
Quote
 
 
+1 #35 SARAN 2011-09-17 03:32
It is very good article. you exposed what is happening in south.
for communal violence both communities are responsible, but i know how much problems DALIT community people are facing in south and how much rights they have, how much false cases( both communities) they are facing.

IF YOU TAKE FULL VIDEO COVERAGE of WHAT IS HAPPENING DURING DEVAR JEYANTHI and if it is relayed LIVE, then people will come to know,how much problem people are facing at that time & how much violence & atrocity done by those people. No news channel will do these. can police take action at that time?
root cause for all these problems are due to one articular community police only. i want to know that particular community police official ratio in total number of police in these districts.

HOW TO SETTLE THIS PROBLEM?

1)In these communal violence prone districts higher police officials above the rank of sub inspector should be appointed from other than DEVAR & DALIT COMMUNITY only. If govt do this there will never be caste clash in these areas.
2) more industries should come in this area.
3) create more job opportunities, raise the per capita income, raise ecnomic status of these peoples, provide compulsory higher education at free cost,
create more colleges, create SEZ, TAX BENEFITS for new (small) industries opened in RAMNAD, ETC...,
Quote
 
 
+6 #34 Kevin 2011-09-17 01:01
பிரச்னை எப்படியெல்லாம் திசை மாறுகிறது ... மக்களை காக்க வேண்டிய காவல் துறை மக்களை சுட்டு கொள்கிறது ... 11 படிக்கும் மாணவன் ஒருவன் கொள்ளப்படுகிறான ் .. இது எந்த சாதியா இருந்தாலும் தப்பு ..
Quote
 
 
+14 #33 iraa.ச.இமலாதித்தன் 2011-09-16 20:57
உங்களது உண்மையான முகத்தை அறிய தந்தமைக்கு நன்றி. மாற்று புரட்சி என்று நினைத்தேன். நீங்களும் கூலிக்கு மாரடிக்கும் செயலையே செய்கிறீர்கள்.

அது என்னவோ எந்தவொரு கலவரம் நடந்தாலும் அதுக்கு தேவரினத்தையே இழுத்துக்கொண்டு எல்லாவற்றிக்கும ் தேவரின மக்கள் தான் காரணம் என்று பொய் பரப்புரை செய்கிறார்கள். நீங்களும் அந்த வகையில்தான் என்பது இப்போது புரிகிறது. வினவு வரிசையில் உங்களையும் வைப்பதுதான் முறையென்று கருதுகிறேன்.

நேரிலேயே பார்த்து வந்த மாதிரியான திரைக்கதையை எழுதியுள்ள நீங்கள், கூடவே தேவரினத்தை சார்ந்தவர்கள் தான் போலிஸ் காரர்களிடம் உள்ள துப்பாக்கியை வாங்கி அந்த எழு பேரையும் சுட்டு கொன்றார்கள் என்று எழுதி இருந்தால் இன்னும் சரியாக பொருந்திருக்கும ். உங்களது கற்பனை வளம் மிக அதீதமாக உள்ளது.வாழ்த்துகள் :)

உங்களது இந்த மேற்கண்ட பதிவு நடுநிலைமையென்று மனசாட்சியுள்ள யாரும் சொல்ல முடியாது. மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க ஒரு பக்க சார்பாகத்தான் இந்த கட்டுரையை எழுதி இருக்கீங்க. இந்த பதிவுக்கு ஐ.நா அறிக்கை உதாரணம் எல்லாம் ரொம்பவே அதிகம்.

தேவரின மக்களில் இன்னமும் பாதி பேருக்கும் மேலாக, உங்களை மாதிரியான சூழ்சசி வலைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை அறியாமல், வெள்ளாந்தியாக மிகுந்த மனித நேயத்துடன் தமிழகத்தில் "சாதி வெறியன்" என்ற அடைமொழியோடு மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

இன்றைக்கு நீங்கள் வளர்ந்து தேவரின மக்களை வசை பாடுகிறீர்கள். காலம் ஒரு நாள் மாறும். அப்போது இதற்கான பதில் அனைவருக்கும் கிடைக்கும். அதுவரையிலும் நானும், என் சாதியை சார்ந்த ஒவ்வொரு மக்களும் "சாதி வெறியனாகவே" இருந்துவிட்டு போகிறோம். அதுவரை நீங்கள் உங்களது சூழ்சிகளை, இது போன்று பல கட்டுரைகளின் வழியாக கட்டவிழ்த்து விடுங்கள்.

பிராமணர்களை எதிர்த்தார்கள்; அவர்கள் பல் தலைமுறையாக படித்தே வளர்ந்ததால் கொஞ்சம் தப்பித்து கொள்கிறார்கள். ஆனால், என் தேவரின மக்கள் இன்னமும் படித்து முன்னுக்கு வராமல் கீழே கிடக்கும் வரை எங்களை விட நீங்கள் புத்திசாலியாகவே தான் இருப்பீர்கள்.

அறிவாள் தூக்க தெரிஞ்ச எம் மக்களுக்கு உங்களை மாதிரியான அறிவால், சாதிவெறியன் என்ற வார்த்தையை தூக்க தெரியலையே! :(
Quote
 
 
+1 #32 thennavan 2011-09-16 20:19
எந்த தேசியத்தின் தலைவர் முத்துராமலிஙம்?
தெய்வத்திருமகன் பட்டம் எந்த அரசு வழங்கியது?
சாதி வெரியனின் அன்ட புலுஹுக்கு அவர் சார்ந்த கூட்டம் கொடுத்த அல்லக்கை பட்டம் தானே அது!!
Quote
 
 
-1 #31 thennavan 2011-09-16 20:11
[ஃஉஒடெ நமெ="மோர்ட்ய்"]இமனுவேல் சேகரும் தேவரும் ஒன்றல்ல
தேவர் நாட்டுகாக பாடுபட்டவ்ர்
இவர் தன் சாதிக்காக[/ஃஉஒடெ]

முத்துராமலிஙகம் என்ன நாட்டுக்காக செஞசு சாதிச்சார் நு சொல்ல முடியுமா??
Quote
 
 
+3 #30 su. raghuraman 2011-09-16 18:16
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="சுரெஷ்"]"ஆதிக்க சாதியின் தலைவராக கருதப்படும் முத்துராமலிங்கத ் தேவருக்கு" இப்போது புரிகிறது. இந்த 'டுபுக்கு' சங்கர் யார் என்று. இவ்வளவு நாளாக எவ்வளவு நேரத்தை விரயம் செய்திருக்கிறேன ் இந்த ப்ளாக்கை படிப்பதற்காக? நிச்சயமாக எனது ஃபசெபோக் நண்பர்களுக்கு இதை சொல்லி இதற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும. இவருக்கு 'சாதிவெறியன்' சங்கர் என பெயர் வையுங்கள்.[/ஃஉஒடெ]


கெளம்பு...கெளம்பு... காத்து வரட்டும்...[/ஃஉஒடெ]

மாற்று கருத்துக்கும் மதிப்பு கொடுக்க பண்பு வேண்டும். அது இல்லை என்றால் தான் உங்களை மாதிரி அடுத்தவங்களை கெளம்பு கெளம்பு என்று சொல்வார்கள். எல்லாரும் கிளம்பிட்டல் அப்புறம் நீங்களும் சவுக்கும் ஒருதருகொருத்தர் சொரிந்துகொள்ள வேண்டியதுதான். என்ன ? புரியுதா ?
Quote
 
 
+5 #29 su. raghuraman 2011-09-16 18:05
எப்படி சவுக்கு உன்னால் இப்படி ஒரு பொய் சொல்லமுடிகிறது. வேறொன்றும் இல்லை. உன் சாதி பாசம், உன் கண்ணை மறைக்கிறது. அரசு செய்யவேண்டியது என்ன ? என்று இதையும் எழுது.
(1 ) ஜெயலலிதா, மன்மோகன் சிங்க், சோனியா காந்தி, பிரதிபா பாட்டீல், ஒபாமா எல்லோரும் மன்னிப்பு கேட்கவேண்டும். (௨) இறந்தவர்கள் குடும்பங்களுக்க ு 20 லெட்சம் நட்ட ஈடு கொடுக்கவேண்டும் . (3 )துபாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவு அஞ்சலி செலுத்தி, தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டும். (4 மறியலில் ஈடு படுபவர்கள் காவல் துறையினரை தாக்கினால் அவர்களை மயிலிறகால் தடுக்க வேண்டும். (5 அரசு மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் காவல் துறை கை கட்டி பார்த்துகொண்டு இருக்கவேண்டும். கடைசியில், நீயும் மற்றவர்களை போலதான் என்று நிருபித்துவிட்ட ாய். உன் தனி தன்மை குறைகிறது.
Quote
 
 
+3 #28 saran ss 2011-09-16 17:23
இறந்தவர்கள் அணைவரும் தெய்வதிரு என்று போட்டு கொள்வது நடை முறையில் உள்ளது அதற்காக ஒருவனை கொன்றது எந்த வகையில் நியாயம் தோழர்களே
Quote
 
 
0 #27 savukkadi 2011-09-16 16:32
EVERY ONE SHOULD APPROVE THE VIEWS OF THE SH.ANBU. WE CAN NOT EXPECT JUSTICE OR HUMAN APPROACH FROM RAJABAKSHE, KARUNANIDHI,JEY ALALITHA, MANMOHAN SINGH AND SO CALLED SUPPORTERS OF SRILANKAN TAMILS INCLUDING NEDUMARAN,VAIKO ,SEEMAAN,COMMUN ISTS,POLICE OFFICIALS, EVERYONE IN THE TAMIL NADU EXCLUDING DALITHS. THERE IS NO DIFFERENCE BETWEEN RAJABAKSHE, KARUNANIDHI,JEY ALALITHA AND OTHER TAMIL SUPPORTERS, WHEN COMPARE THEIR ATTITUDE TOWARDS THE LIVES OF HELPLESS SRILANKAN TAMILS AND DALITHS OF INDIA. WE ARE ASHAMED WHY WE LIVE AMONG THE AFORESAID ANIMALS.
Quote
 
 
-1 #26 Erumpu 2011-09-16 16:29
இமனுவேல் சேகரும் தேவரும் ஒன்றல்ல
தேவர் நாட்டுகாக பாடுபட்டவ்ர்
இவர் தன் சாதிக்காக
ஏன் ஒன்றல்ல தன் இனமெ தன் சொந்த் நாட்டிடம அடிமை பட்டு இருக்கும் போது தன்
இன மக்களுகாக ட்ஃப்பாடுபட்டது இரன்டும் சமமே இரன்டுமே உரிமை போரட்டாமே
Quote
 
 
+8 #25 Nellai Tamilan 2011-09-16 16:20
கடந்த பதினேழு வருடமாக நான் நினைத்து கொண்டு இருக்கும் ஒரு பிரச்னை. நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிதிருந்தேன ் . படித்து சங்கரன் கோவில் அரசு உயர்நிலை பள்ளியில். சாகரன் கோவிலை பற்றி தமிழ்நாட்டுக்கு நான் சொல்ல தேவை இல்லை. காலம் காலமாக சாதி பிரச்னை உள்ள ஊர். நான் படிக்கும் பொது பள்ளியில் நோட்டு மற்றும் புத்தகம் கொடுப்பார்கள் . எனக்கு கிடைக்காது ஏன் என்றால் நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் ( தேவர், கோனார், நாடார் , முதலியார் ... ) எது வேணாலும் எடுத்துகொள்ளுங் கள் .. எனக்கும் என்னோடு சேர்ந்த மாணவர்களுக்கும் புத்தகம் கிடப்பது அவ்வளவு சுலபம் அல்ல. எதர்க்கு இந்த வேகுபாடு. அன்று இருந்த நிலைமையை வைத்து டாக்டர் அம்பேத்கர் சட்டம் இயற்றினர். அந்த பழைய நிலமை மாறி காலம் கடந்து விட்டது. நான் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன் .எனக்கும் என்னோடு சேர்ந்த மாணவர்களின் பெரும்பாலான குடும்பத்தின் நிலைமையும் இதுதான். அதேநேரம் பொருளாதரத்தில் நல்ல நிலைமயில் உள்ள ஒரு சில மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்கும் . கேட்டால் எங்களுக்கு கோட்டா கிடையாது என்று சொல்லுவார்கள். என்னால் பொறியியர் கல்லூரியில் சேர முடியாததருக்கும ் இந்த பிரச்சனயே காரணம். என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு நல்ல கல்லூரி கிடைக்கும். எனக்கு கிடைக்காது. அங்கும் சொல்லுவார்கள் கேட்டால் எங்களுக்கு கோட்டா கிடையாது என்று .சரி அரசு வேலைக்கு செல்வோம் என்றால் அங்கும் இதே நிலைமைதான் கேட்டால் எங்களுக்கு கோட்டா கிடையாது என்று சொல்லுவார்கள். சாதி வேண்டாம் , சாதியை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லும் எல்லா தலித் தலைவருக்கும் என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிமா?
ஓன்று , இன்று உலகத்தில் தலித் மாணவர்கள், தலித் மக்கள். தலித் பிரச்னை என்று வார்த்தைக்கு வார்த்தை தலித் என்று தலித் சமூகத்தை கூறிக்கொண்டு இருப்பது தலித் தலைவர்களா ? இல்லை ஆதிக்க சாதி என்று சவுக்கு சொல்லும் சமூகத்தின் தலைவர்களா ?
இரண்டு, பள்ளி மற்றும் கல்லூரியில் இட ஒதுக்கிடு படித்த மாணவர்களுக்கு மட்டும் தான் என்று அணைத்து சமூக தலைவர்களும் சொல்ல தயாரா ?
Quote
 
 
+6 #24 Nellai Tamilan 2011-09-16 16:19
வணக்கம் ,நான் நெல்லை மாவட்டத்தில் பிறந்த ஒரு குடிமகன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் சவுக்கின் தீவிர ஆதரவாளன் . என் மூலம் முப்பதுக்கும் மேற்பட்டோர் தற்பொழுது சவுக்கை படித்து வருகின்றனர். நான் விமானம், ரயில் மற்றும் பேருந்து பயணத்தின் பொது என் அருகே இருப்பது படித்த தமிழன் என்றால் நான் உடனே அவர்களிடம் பேச்சுகொடுத்து சவுக்கை பற்றி சொல்லி படிக்க சொல்லுவேன். இந்த ஆட்சி மாற்றத்திர்க்கு சவுக்கு ஒரு காரணம் என்று சொல்லுபவன் நான். அப்படிப்பட்ட நான் இப்போது முதல் முறையாக சவுக்கை விமர்சனம் செய்கிறேன். சவுக்கு ஏன் இந்த சாதி வெறி ?. அதும் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் மேல் ? சவுக்குவிற்கு சாதி வெகுபாடு இல்லையென்றால் சட்ட கல்லூரி பிரச்சனையில் சவுக்கின் கருத்து என்ன. ? அன்று அடி பட்ட மாணவன் எந்த சமுகத்தை சேர்த்தவன் என்று சவுக்குவிற்கு தெரியுமா ? இன்று நீங்கள் ஆதிக்க சாதி என்று சொல்லும் அதே சாதியை சேர்த்தவன் தான். நீங்கள் ஒடுக்க பட்ட சமூகம் என்று சொல்லும் மாணவர்கள் தான் அடித்தது. இதுவே சற்று மாறி நடந்து இருந்தால் அன்று தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் ? சற்று நினைத்து பாருங்கள். தலித் சமூக தலைவர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து குரல், போராட்டம் என்று தமிழ்நாட்டில் ஒரு பெரிய கலவரமே வெடித்து இருக்கும். ஆனால் அப்படி நடக்க வில்லை. என்ன காரணம் ? நினைத்து பார்க்க வேண்டும் சவுக்கு. அடுத்து ஒரு பொதுவான பிரச்சனைக்கு வருகிறேன்.
Quote
 
 
+20 #23 Tamilselvam 2011-09-16 15:36
முத்துராமலிங்க தேவர் ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .இவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லவராகவே வாழ்ந்தார்.இன்றும் பசும்பொன் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் எசி குடியுருப்புகளி ல்தான் தேவர் சிலை உள்ளது.அந்த சிலைக்கு இன்று வரை உரிய மரியாதையை எசி மக்கள் குடுத்து வருகின்றனர்.ஆனாலும் வெளியில் உள்ள சிலர் தன்னுடைய சுயலாபத்துக்காக தேவரையும்,இம்மா னுவேல்,அம்பேத்க ார் போன்றவர்களைப் பயன்படுத்தி பெரியவர்களாக நினைக்கின்றனர். அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
Quote
 
 
-8 #22 Nellai Tamilan 2011-09-16 15:12
[ஃஉஒடெ நமெ="சுரெஷ்"]"ஆதிக்க சாதியின் தலைவராக கருதப்படும் முத்துராமலிங்கத ் தேவருக்கு" இப்போது புரிகிறது. இந்த 'டுபுக்கு' சங்கர் யார் என்று. இவ்வளவு நாளாக எவ்வளவு நேரத்தை விரயம் செய்திருக்கிறேன ் இந்த ப்ளாக்கை படிப்பதற்காக? நிச்சயமாக எனது ஃபசெபோக் நண்பர்களுக்கு இதை சொல்லி இதற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும. இவருக்கு 'சாதிவெறியன்' சங்கர் என பெயர் வையுங்கள்.
Quote
 
 
+2 #21 வால்டர் வணங்காமுடி 2011-09-16 14:45
[ஃஉஒடெ நமெ="சுரெஷ்"]"ஆதிக்க சாதியின் தலைவராக கருதப்படும் முத்துராமலிங்கத ் தேவருக்கு" இப்போது புரிகிறது. இந்த 'டுபுக்கு' சங்கர் யார் என்று. இவ்வளவு நாளாக எவ்வளவு நேரத்தை விரயம் செய்திருக்கிறேன ் இந்த ப்ளாக்கை படிப்பதற்காக? நிச்சயமாக எனது ஃபசெபோக் நண்பர்களுக்கு இதை சொல்லி இதற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும. இவருக்கு 'சாதிவெறியன்' சங்கர் என பெயர் வையுங்கள்.[/ஃஉஒடெ]


கெளம்பு...கெளம்பு... காத்து வரட்டும்...
Quote
 
 
0 #20 Erumpu 2011-09-16 14:29
திரு ஆசிரியர் அவர்கள் சுரேஷ் போன்றவர்கள்கு பதில் சொன்ன நல்ல இருக்கும்
Quote
 
 
+10 #19 Erumpu 2011-09-16 14:21
சுரேஷ் இந்த கட்டுரையில் எதும் மிகை படுத்த வில்லை "ஆதிக்க சாதியின் தலைவராக கருதப்படும் முத்துராமலிங்கத ் தேவருக்கு" இது உண்மை எதைஉம் தெரியாமல் கருத்து சொல்லவேண்டாம்,.
Quote
 
 
+7 #18 A Common man 2011-09-16 13:15
If our CM is really neutral she must avoid participating in Devar jeyanthi and ban it. Otherwise central govt must use 356 on jeya govt. People have voted against DMK for the welfare of TN not warfare of Jeya. These so called high class people's actors created hypes in films saying they are the powerful men. Don't they feel shame to kill a 15 year old boy. Things are evident that it is a pre planned event. Too much for anything is good for nothing. These dravidian parties are using divide and rule. Wipe out those two dravidian parties and let them say where did they found that high n low in human bodies.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 283 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9244
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week19331
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month222063
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12744182