முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 10:47

தாமதமாக தொடங்கினாலும், இந்த சோதனை நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதே.   அதிமுக அரசுக்கு கிடைத்த வாக்குகள், திமுக தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்களின் மீதான கோபத்தின் காரணமாகவும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 IMG_8770

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது.  திமுக அமைச்சர்கள் நம்மை யாருமே எதுவுமே செய்து விட முடியாது என்ற ஆணவத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருந்தனர்.  திமுக அமைச்சர்களுக்கு இருந்த இந்த ஆணவத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை.

 

1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், 1991-1996 வரையிலான காலத்தில், அதிமுக அமைச்சர்கள் பல்வேறு பேர் மீது ஊழல் வழக்குகள் தொடரப் பட்டன.  வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் அல்லாமல், பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்தும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.  இந்த வழக்குகளை விசாரிக்க 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன.  இந்த தனி நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என்று அதிமுக உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தது.   ஆனால் உச்ச நீதிமன்றம், ஒரு அரசுக்கு ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது.

 

இதையடுத்து, சிறப்பு நீதிமன்றங்களில் ஊழல் வழக்கு விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது.  சில நேர்வுகளில் தண்டனையும் கிடைத்தது.

 

ஆனால் 2001ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே, திமுக அமைச்சர்களில் அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் மீது ஊழல் வழக்கு தொடரப் பட்டது.  அந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படாமல், அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப் பட்டன.    இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே உள்ள வேலைப் பளுவோடு இந்த பளுவும் சேர்ந்து, வழக்கு விசாரணை துரிதமாக நடக்காமல் ஜவ்வு போல இழுத்துக் கொண்டு சென்றது.

 

குற்றம் சாட்டப் பட்டவர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி, தங்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளையும் பயன்படுத்த உரிமை உண்டு.  அந்த உரிமைகளை மறுப்பது சட்ட விரோதம்.  உதாரணத்திற்கு, எனக்கு இந்த ஆவணத்தின் நகல் வேண்டும், எனக்கு எதிராக வழக்கு தொடர உரிய அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை என்பது போன்ற மனுக்களை குற்றம் சாட்டப் பட்டவர்கள் தாக்கல் செய்யலாம்.    மாவட்ட நீதிமன்றங்களில் இது போல மனு தாக்கல் செய்யப் படும் நேர்வுகளில், இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிவடைவதற்கே ஆண்டுக்கணக்கில் அவகாசம் பிடிக்கும். அந்த மனுக்களின் மீதான விசாரணை முடிந்து, வழக்கு விசாரணை தொடங்குவதற்குள், அடுத்த ஆட்சி வந்து விடும்.  பிறகு என்ன ?  வழக்குகள் குழிதோண்டி புதைக்கப் படும்.  இதுதான் திமுக அமைச்சர்கள் விவகாரத்தில் நடந்தது. 2001ல் ஒரு வேளை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டிருந்தால், கே.என்.நேரு மீது இன்று சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்வதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது.

 

கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆற்காடு வீராச்சாமி, பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், என அத்தனை பேர் மீதும் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப் பட்டன.  இவ்வாறு  ஏறக்குறைய அனைத்து வழக்குகளிலும், குற்றவாளிகள், நீதிமன்றத்தால், வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று விடுவிப்பு செய்யப் பட்டன. இந்த விடுவிப்பு உத்தரவுகள், திமுக ஆட்சியில் இருந்ததால் நடந்தன என்ற கூற்றை மறுப்பதற்கில்லை.

 

இந்த காரணத்தால், திமுக பிரமுகர்கள் பலருக்கும், சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து எந்த விதமான அச்சமும் இல்லாமல் போய் விட்டது.

 

அந்தத் தவறை இந்த முறையும் நடக்காமல் முதல்வர் ஜெயலலிதா பார்த்துக் கொள்ள வேண்டும்.   தற்போது லஞ்ச  ஒழிப்புத் துறையினர் பணியாற்றுவதில், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும், போதுமான வாகன வசதிகள் இல்லாத காரணத்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

 

இந்த சிரமங்களை நீக்கி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணியாற்ற போதுமான வசதிகளை செய்து தருவதோடு அல்லாமல், உடனடியாக இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.  அந்த நீதிமன்றங்களுக்கு உரிய கட்டிட வசதிகளை செய்து தர வேண்டும்.

 

ஊழல் வழக்குகளை விசாரிக்கையில், அதிமுக வழக்கறிஞர்களாக பார்த்து நியமிக்காமல், விபரம் தெரிந்த திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

 

வழக்குகளை பதிவு செய்து சோதனைகளை நடத்துவது என்பது மிக எளிது.  ஆனால், அந்த ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதென்பது மிக மிக முக்கியம். அவ்வாறு தண்டனை பெறுவதே, மக்கள் சொத்தை கொள்ளையடித்தவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும்.

 

இதை அதிமுக அரசு செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

 

Comments  

 
-1 #24 VSKCANDO 2011-09-20 09:36
JEYA/SASI ALLIANCE JUST FINISHED HER SAND QUARRY AGREEMENT WITH NEW PARTY,NOT OLD ONE WITH 1.5CR PER DAY
Quote
 
 
0 #23 chockar 2011-09-18 12:53
அதிகாரம்,ஆட்சிய ில் இருப்பவர்கள் தஙகள் வேலய மக்களுக்காக ஒழுங்காக செய்தால்
எந்த ப்ரச்சனயும் இல்ல.தவரானவங்க யாரா
இருந்தாலும் தன்டிக்கப்படனும ்.சட்டம் அனைவருக்கும் பொதுவானது.இதில் ஒரு நிலை சார்ந்து ஆதரிப்பது தவருசெய்வதை விட தவரானது.ஒரு நிலை சார்ந்து எழுதுவது நியாய தர்மங்களை மறைத்துவிடும்.அதுதான் இன்றைக்கு நடந்து வருகிறது.வரக்கூடிய தலைமுறைக்கும் நாம் நியாய தர்மங்களை நிலை நிறுத்திவைக்கவே ண்டும்.
Quote
 
 
+1 #22 bas 2011-09-17 23:16
ஜெயலலித மிது உள்ள சொத்து குவிப்பு வழக்கு இருப்பது என்ன
Quote
 
 
+1 #21 GVR1965 2011-09-17 15:58
Dear Savukku,
This is a good subject which you have taken on behalf of the public. However, the public is not going to be benefited with the punishment. Punishment is something which only affects the wrong-doers, it doesn't help the public. The main expectation on behalf of the public should be on recovering the money and using it for the public. Just imagine what the money recovered from politicians can do for the public. We have to fight case by case and recover the huge money which was looted. The inflation is taking a huge toll on living conditions, poor people struggle to cope with costs. Hence, whenever a Politician or Government Servant has been caught, we should rather be keen in recovering the money and using it for public purpose. By this way we can manage the inflation and help the common man to live better. However, punishment can take its course.
Quote
 
 
+5 #20 Force 2011-09-17 13:58
கழகங்கள் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற இயல்பை மாற்ற, ஜெயா நேர்மையாக, தன் தோழியை அரசியலுக்குள் த்லையிட அனுமதிக்காமல் ஒரு அமிலச் சோதனையில் தேறினால், வாழும் நாள் வரை அவர்தான் முதல்வர். தேசியத்திற்கும் செல்ல வாய்ப்பு வரும். அவ்வாறின்றி, "பழைய குருடி, கதவை திறடி"ன்னு திரும்பவும் 2001 டு 2006 ஆனால், ஸ்டாலினோ, உதய நிதியோ, தயாநிதி அழ்கிரியோ வந்து, ஜெயா மீது வழக்குத் தொடர வாய்ப்பு வரலாம். சரியா?
Quote
 
 
+1 #19 Kishore 2011-09-17 13:38
சவுக்கு, இடிந்தகரை கிராமத்தில், கூடன்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கனக்க ான மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 127 பேர் 7 நாட்களாக, தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முதலமைச்சர் மக்களின் கோரிக்கையை பொருட்படுத்தாமல ் அணூ உலை தேவை என்று அறிக்கை வெளியிட்டுலள்ளா ர். இந்தியவில் வேறெந்த மானிலத்தில் நடக்கும் மக்கள் போரட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் சவுக்கு, நம் தமிழகத்தில் நடக்கும், மீனவ, விவசாய விளிம்பு நிலை மக்களின் போரட்டத்திற்கு இன்னும் ஆதரவாக , ஆறுதலாக ஒரு பதிவு வெளியிடாதது வருத்தத்தை அளிக்கிறது.
Quote
 
 
+2 #18 prabu.mp 2011-09-17 12:04
மதிப்பிற்கூரிய சவுக்கு அவர்களே, தங்களுடைய கட்டுரைகள் எங்களை போன்றவர்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் .........கூடங்குளம் அணுமின்நிலையம் எதிர்ப்பு போராட்டம் பற்றி பல விதமாக கருத்து நிலவும் வேளையில்....... தயவு செய்து அதனுடைய உண்மை நிலவரத்தை பற்றி கட்டுரை ஓன்று வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ..........நன்றி
Quote
 
 
0 #17 V Subbiah 2011-09-17 09:40
All corrupt politicians, whatever high position they may occupy, must be punished. Then only the country can march forward.

According to Subramaniaswamy , Sonia Gandhi, Karunanidhi, Jayalalitha and many more top politicians are believed to be in the list.. When will such people be brought to book?
Quote
 
 
+1 #16 mohanraj 2011-09-17 08:44
I welcome your stance in this. I hope that it happens like that. But my pessimistic side (informed by the long history) also thinks otherwise: Maybe Jaya doesn't want them to be punished - because she and her ministers might be in the receiving end after 5 or 10 years. I don't believe that all of Jaya's ministers are doing their duties without corruption right now. I guess both parties are playing a calculated risk game. Each will want to inconvenience the other but not too much because then they will on the receiving end one day.

I know this view is hopeless. I wish it is not like that. I wish corruption gets banished. I wish this is a good start. But I won't be surprised if everything falls back into the same stinking shit. I will be disappointed very much but not surprised.
Quote
 
 
+2 #15 தமிழர் 2011-09-17 00:16
சவுக்கு ஸார் ரொம்ப அப்பாவியாவே இருக்கீங்க.. இந்த ஊழல் வழக்கெல்லாம் ஒரு பேரத்தின் பொருட்டே நடைபெறும். மற்றபடி மக்களின் வரிப்பணம் சூறையாடபட்டதன் பொருட்டு எவரும் தண்டனை பெற்றதாக இதுவரை இந்திய டூபாக்கூர் அரசில் வரலாறே இல்லை. அப்படி மாட்டிக்கொண்டவர ்களும் பங்காரு லட்சுமணன் போன்ற அசடுகள் தான். திமுக தலைவரிலிருந்து அவரது தொண்டன் வரை ஊழல் செய்து தப்பிப்பதில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள். அதைவிட இந்திய குற்றவியல் நீதிமன்றஃ நடைமுறை காலாவதியான விதிமுறைகளை கொண்டுள்ளது. அதைவிடுங்க சக்ஸ்சேனா ஜயப்பன் பத்தின விபரத்தை எழுதுங்கள்.
Quote
 
 
0 #14 ganesh1 2011-09-16 21:38
saxenna should cry till his last breath like a 1 standard kid....
Quote
 
 
0 #13 su. raghuraman 2011-09-16 17:11
Quoting prabhus:
appa tap thiruda ...

mothalla 14 varusamma amma (amma va ____ nu than sollanum) mela irrukura varumanathuku mela sothu (thavaraga padikka vendam) sertha valaku yenna achu nu sollu ...

first poi aajer aaga sollunga thalith ina thalivare ....


>>>>>>
So far in all the cases filed by the DMK against her she won and this one is prolonging. When the lawyers are citing security problem, why the Judge can't conduct the trail through video conference, so that he can ask whatever questions directly to the accused (Amma). Why the court is insisting for her personal appearence ?
Quote
 
 
+1 #12 Murali_C 2011-09-16 17:06
அதிமுக அமைச்சர்களும் தங்கள் சொத்து விவரங்களை 2011_20116 கால கட்டத்தில் வெளியிட வேண்டும்.
Quote
 
 
0 #11 காலி சோடா 2011-09-16 16:38
பிரபல மணல் திருடன் இன்று கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.

பெரியாரின் கொள்கை பேசும் கோழை மணி - இவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆவதற்கு பெரும்பணி ஆற்றி இருக்கிறார்.
Quote
 
 
+6 #10 kavitha.dr 2011-09-16 15:03
wht abt MRK PANNI SELVAM.MY SPELLING S CORRECT.PLS DVAC TURN UR HEAD TO PANNISELVAM.,AND HIS PAS SHNMUGAM AND SRINIVASAN.THT TWO PORUKKIS EARND HUGE AMOUNT FROM TRANSFERS AND ETC.....
Quote
 
 
-4 #9 prabhus 2011-09-16 14:43
appa tap thiruda ...

mothalla 14 varusamma amma (amma va ____ nu than sollanum) mela irrukura varumanathuku mela sothu (thavaraga padikka vendam) sertha valaku yenna achu nu sollu ...

first poi aajer aaga sollunga thalith ina thalivare ....
Quote
 
 
-17 #8 Venkatgk 2011-09-16 14:37
ஊழல் அரசி வாழ்க.
Quote
 
 
+9 #7 Tamilscafeblogspot 2011-09-16 14:11
They should also bring the assets back to government treasury.
Quote
 
 
+3 #6 gnaansan 2011-09-16 14:10
ஆரம்பத்தில் இருந்த சூடு இருந்துக்கொன்டு தான் இருப்ப்துபோலத்த ெரிகிரது. இதுவே தொடரும் என்ட்ருதான் தோன்ட்ருகிரது. சட்டத்தின் ஒட்டைதான் என்ன செய்யுமோ? தன்டனை இருந்தால்தான் மேர்க்கொன்டு தவரு நடக்காமல் நல்லாட்சி தொடரும். ஆட்சியாலர்கல் , தோழமைக் கட்சிகல் தவரு செய்யாமல் இருந்தால் தேய சக்திகல் மரைந்தே போகும்.கட்சியில், ஆட்சியில் கருப்பு ஆடுகல் இல்லாமல் கலைஎடுக்க வேன்டும்.
Quote
 
 
-10 #5 குட்டி சவுக்கு 2011-09-16 13:36
ஆணியே புடுங்க வேண்டாம் .......என்பதே மக்களின் விருப்பம்.
Quote
 
 
+11 #4 dinesh kumar 2011-09-16 12:53
I welcome this.
Quote
 
 
+25 #3 அன்பு 2011-09-16 12:27
ஆம் எல்லா ஊழல் வழக்குகளையும் துரிதமாக நடத்தவேண்டும்,

இனிமேல் ஜெயலலிதா வாய்தா வாங்காமல், உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி, ஒரு முன்னுதாரணமாக திகழவேண்டும்.

அதன் பிறகு, அடுத்த முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தி. மு. க வின் ஊழல் பேர்வழிகளை ஒருவர் விடாமல் தன்டிக்க வேண்டும்.

நாடும் சுபிட்சமடையும்.
Quote
 
 
+13 #2 http://koothadivedda 2011-09-16 12:11
/வழக்குகளை பதிவு செய்து சோதனைகளை நடத்துவது என்பது மிக எளிது. ஆனால், அந்த ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதென்பது மிக மிக முக்கியம். அவ்வாறு தண்டனை பெறுவதே, மக்கள் சொத்தை கொள்ளையடித்தவர் களுக்கு சரியான பாடம் கற்பிக்கும்.

இதை அதிமுக அரசு செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்./

இதைச்செய்வதன் மூலம் நாட்டில் ஒரு புதிய சிந்தனையையும், மக்களிடம் நம்பிக்கையான ஒரு இடத்தையும் புதிய அரசு பிடித்துக்கொள்ள வும் முடியும். அடிப்படையில் நிர்வாக திருத்தமும் உண்டாகும்.
Quote
 
 
+21 #1 JPR 2011-09-16 11:42
Dear Savukku, have you seen the front page of junior vikatan this week?? Saxenna is crying like a 5th standard school kid.... :lol: :lol: :lol: :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 356 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9362
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week53362
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month275622
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13191989