|
ண்டுக்குள் 8.36 சதவிகித வாக்குகளை பெற்ற விஜயகாந்த் இரண்டு கட்சிகளிடமும் மரியாதையை மட்டுமல்ல, அச்சத்தையும் ஏற்படுத்தினார்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்று விஜயகாந்தை புறக்கணித்து விட்டு, தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் கட்சி வெற்றி பெற முடியாது என்னும் நிலைக்கு வளர்ந்தார்.
2011 சட்ட மன்றத் தேர்தலில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று திமுக காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுமே அஞ்சின. ஆகையால், பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் தாண்டி அமைந்தது தான் அதிமுக தேமுதிக கூட்டணி. அன்றைய சூழலில், இறுதி நேரத்தில் கூட்டணி ஏற்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள் கருணாநிதியும், அவர் வளர்ப்பு மகன் ஜாபர் சேட்டும். ஆனால் அத்தனை முயற்சிகளையும் தாண்டி, அந்தக் கூட்டணி அமைந்து அமோக வெற்றி பெற்றது. திமுகவை 3வது இடத்துக்கு தள்ளி முக்கிய எதிர்க்கட்சியாகவும் வெற்றி பெற்றது தேமுதிக.
தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஏற்பட்ட புதிய சட்டமன்றத்தில் பெரும்பாலான நாட்களில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில நாட்களே கலந்து கொண்டு பேசினார். தேமுதிகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் புதியவர்கள். சட்டமன்ற அனுபவம் இல்லாதவர்கள். விஜயகாந்த் சட்டசபையில் இருந்து அவர்கள் அத்தனை பேருக்கும் வழிகாட்டியிருக்க வேண்டும். விஜயகாந்த் மற்றும் அவர் கட்சியினர் முக்கிய விவகாரங்களில் பங்கேற்று விவாதங்களில் பேசியிருக்க வேண்டும். விஜயகாந்த் வராத காரணத்தால், விஜயகாந்த் கட்சியின் எம்எல்ஏக்கள் பேச முற்பட்ட பல நேர்வுகளில், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக ஜெயலலிதா, முதலில் விபரங்களை தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று சட்டசபையில் கூறியிருக்கிறார். இது போன்ற நேர்வுகளில் விஜயகாந்த் அவையில் இருந்திருந்தாரேயானால், தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக குறுக்கிட்டு பேசியிருக்க முடியும். ஆனால், 27 எம்எல்ஏக்கள் கிடைத்த திருப்தி, விஜயகாந்தை, காமராஜரைப் போல படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று எண்ண வைத்து விட்டதோ என்று தோன்றுகிறது.
சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது போலவேதான் தற்பொழுது உள்ளாட்சித் தேர்தலிலும் ஜெயலலிதா நடந்து கொண்டு இருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி ஊர் கூடி இழுத்த தேர். தேமுதிக, இடது சாரிகள், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், செ.கு.தமிழரசனின் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை என அத்தனை கட்சிகள் மற்றும் அந்த கட்சித் தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி. அது இரட்டை இலைக்கு மட்டும் விழுந்த வாக்காக கருதவே முடியாது. ஆனால், ஜெயலலிதா, கூட்டணிக் கட்சிகளை கருவேப்பிலையாக பயன்படுத்தியதை நிரூபித்து விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், விஜயகாந்த் தனது அரசியல் சாதுர்யத்தை பயன்படுத்துவார் என்று எதிர்ப்பார்த்தால், ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதியாக செயல்பட்டிருக்கிறார்.

ஜெயலலிதா தன்னிச்சையாக எடுத்த முடிவால், கடும் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளான, இடது சாரிகளோடு முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சரத்குமார் கட்சியோடும், புதிய தமிழகத்தோடும் பேசியிருக்க வேண்டும். தேவைப்பட்டால் விடுதலைச் சிறுத்தைகளையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் இணைத்துக் கொண்டிருக்கலாம். விஜயகாந்துக்கு இன்றும் பெரிய மனது இருந்தால், வைகோவோடும் பேசியிருக்கலாம். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு மூன்றாவது அணியைக் கட்டி, இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருந்தார்களேயென்றால், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒரு வலுவான மாற்றாக அந்த அணி அமைந்திருக்கும்.
திமுக அல்லது அதிமுகவுக்கு மாற்றாக வேறு கட்சியே இல்லை என்று மருகிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த மூன்றாவது அணி அருமருந்தாக இருந்திருக்கும். இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சிக்கல்கள் இல்லாமல் இருக்காது. சிக்கல்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்தச் சிக்கல்களையெல்லாம் தாண்டி, தொகுதி பங்கீடு நடந்திருக்குமேயென்றால், ஒரு மிகப் பெரிய மாற்று சக்தியாக அந்த அணி உருவாகியிருக்கும். ஓரளவுக்கு கணிசமான தொகுதிகளில் இந்த அணி வென்றால், அதிமுகவின் ஏகபோகத்தை உடைப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கும்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நிர்வாகிகள் எம்எல்ஏக்களை விட மக்களோடு நேரடி தொடர்பு உள்ளவர்கள். அவர்கள் மக்களுக்கு செம்மையான சேவையை செய்வார்களேயானால், அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் இவர்கள் செய்த மக்கள் பணி நிச்சயம் பலனளிக்கும். விஜயகாந்த் ஒரு பக்குவமான அரசியல் தலைவராக உயர்ந்திருப்பார்.
ஆனால் இன்று விஜயகாந்த் முதல் கட்டமாக 9 மாநகராட்சிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததோடு, பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
இது விஜயகாந்தின் அரசியல் பக்குவமின்மையா அல்லது, தனது கட்சி ஏகபோகமாக வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பமா என்பது தெரியவில்லை. ஆனால், இது ஒரு வரலாற்றுத் தவறு என்பது மட்டும் உறுதி.
இந்த தவறால், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து, அதிமுகவுக்கு வெற்றியை தங்கத் தட்டில் வைத்து தரப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
|
Comments
vijayakkanth had taken right decision.
I am disagreeing with you on third alliance. Third alliance have not form because of Vaiko, Ramadoss and thirumalavan.
Vijayakkanth will prove the vote bank of 8% vote. Definitely his vote bank will not reduce.
We couldn't say as simple as, decision taken by him is historical mistake. In future only, it can be decided whose decision went wrong.
Savukku, I agree with your point on "Vijaykkanth have to be act like good opposition party" but at the same time we couldn’t blame the ruling party within 4 months. At least opposition has to wait 6 months to comment on ruling party.
He did the right thing but he should comment on paramakudi incidents. We can give time to him act upon in future. Definitely he will act in coming months.
விஜயகாந்த் பிரிப்பது அதிமுக ஓட்டுகளைத் தான் சவுக்கு. இந்த மட்டத்தில் உங்கள் கணிப்பு தவறு. மீண்டும் அந்த நாசமாய்போன திமுக தான் வரும் உள்ளாட்சி தேர்தலில் (சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ) வெற்றி பெறும். 'மது அருந்திய குரங்காக' மிக மிஞ்சிய போதையில் வலம் வரும் வலம் வரும் அதிமுகவுக்கு அது நல்ல பாடமாக இருக்கும்.
மூன்றாவது இடத்துக்கு போட்டி தேதிமுகவுக்கும் , மதிமுகவுக்கும் தான். மக்கள் பிரச்சினையில் அக்கறை உள்ள ஒரே தலைவர் வைகோ தான். அவர் மூன்றாவது இடத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும். ஒரு வேளை தேதிமுக மூன்றாவ
து இடத்துக்கு வந்து 10 சத வீத வாக்கு வங்கிகளை தாண்டி விட்டால், தேதிமுக திமுகவை இல்லை அதிமுகவை அழிக்க ஆரம்பித்து விடும்.
காங்கிரஸ், பாமக, வி.சி, கம்யூனிஸ்ட்கள் இந்த முறை அழிவார்கள். நல்லதும் கூட. கூடவே சரத் குமார் கட்சி, டாக்டர் கிருஷ்ண சாமி கட்சி என அழிந்தால் நல்லது
அதிமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக்-கை மட்டும் விட்டுவிடீர்கள் ஜாதி வன்மமா..???
நேதாஜியால் தொடங்கப்பட்ட பார்வர்ட் பிளாக் மறந்து போனது ஆனால் சாணான் சரத்குமார் தொடங்கிய கட்சி மட்டும் நினைவில் உள்ளதா??
உன் நாடார் ஜாதி பாசம் உனக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
ஆர்.தியாகு
ஒரு பானை சொத்துக்கு ஒரு சோறு பதம்... அதுதான் பாதமே... ஜெயா பண்ணின நன்மைகளை... பள்ளிக்கூட மாணவர்கள் விஷயத்திலிருந்த ு...
ஜெய மக்களுக்கு செய்த ஒரே நல்ல காரியம்... திருடர்கள் முன்னேற்றக் கழகத்தாரை கைது செய்தது... அது அவரின் சுயநலமே... மக்கள் பொதுநலம் கருதி செய்தாரோ என்பதில் தற்போது சந்தேகம் எழுகிறது...
Primary reason is political vengence, it just so happen, there was a by-product people welfare...
While nobody questions DMK's decision everyone are quick to jump on JJ's decision as arrogance. I just want to remind that JJ has single-handedly kept the party folks together for 2 decades irrespective of her hard-ships. So she cannot be a fool and give credit to her decisions and party governance. There is a saying, in life you can satisfy some for some-time and not all every time.
நன்றி அம்மா ...|!!
என்னங்க சவுக்கு ! சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உங்க பலமான ஜால்ராவை ( காதில் கேட்க முடியாத அளவிற்கு ) அதிமுக - விற்கு பலமாக போட்டு விட்டு இப்ப சொல்றிங்க அதிமுகவின் ஏகபோகத்தை உடைப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கும் என்று //
நீங்க இருக்கிற தமிழக அரசியல் வாதிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவிர்கள் போலிருக்குது ///
இப்ப அதுவும் பத்தாது என்று கேப்டனை உசுப்பு எத்துரிங்க // உண்மையிலும் உங்க அதிமுக ஜால்ராவை இப்ப படித்தாலும் அது கடவுளுக்கே பொறுகாதுங்க
உங்களுக்கு அந்த அரசியல்வாதிகளே பரவயில்லை
மேலும் சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு கருணாநிதிக்கு உபகாரம் செய்யாதமை எனக்கு மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது.
தோழர் சவுக்கு அவர்களின் ஆதங்கம். புரிகிறது. ஆனால் மேலே குறிப்பிட்டிருக ்கும், இடதுசாரிகள் மற்றும் வைகோ ஆகியோரோடு ஆலோசித்திருக்கல ாம். மற்றவர்கள் சரத்குமார், கிருஷ்ணசாமி, இரண்டும் மூன்றாம் அணி அமைக்கும் அளவுக்கு பலமான சக்திகள்தானா என்பதும் கேள்விக்குரியது .
அடுத்து மருத்துவர் ஐயா அவர்களை விஜயகாந்த் இணைத்துக்கொள்வத ற்கு ஜெயலலிதாவுடன் அடிமையாக இருந்துவிட்டுப் போகலாம் வேறு வினை தேவையில்லை.
ஐந்து மாதங்களுக்கு முன் கருணாநிதியையும் காங்கிரஸையும் தமிழநாட்டிலிருந ்து விரட்டுவதற்கு. சவுக்கும், சவுக்கு இணையத்தின் வாசகர்கள் அனேகமானவர்களும் கருத்துவேறுபாடி ல்லாமல் ஒன்றி குரல்கொடுத்திரு ந்தோம், சிறுதுளி பெருவெள்ளமாக அம்மாவும் வெற்றிக்கனியை பெற்று இவ்வளவு சீக்கிரம் வேசம் கலைத்துக்கொள்ளு வார் என எவரும் நினைக்கவில்லை.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற தத்துவத்தை அரசியலில் இவ்வளவு அனுபவம் உள்ள ஜெயலலிதா உணரத்தலைப்படவில ்லை. இதுவே ஜெயலலிதாவில் வீழ்ச்சியின் புள்ளியாக திரும்பி. மக்களை சிந்திக்க இடமளித்துவிட்டத ு,
இடதுசாரிகளுடனும ் வைகோ அவர்களிடமும் ஒரு இணக்கத்தை விஜயகாந்த ஏற்படுத்தவேண்டி ய கட்டம் நிச்சியம் காலத்தால் தோற்றுவிக்கப்பட ும். தவிர்த்து விஜயகாந்த் அவர்களும், குறுகலாக சிந்திப்பாரானால ். திரும்பவும் தாத்தா குடும்பத்திற்கு நல்வாய்ப்பாக அமையும்.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்பது மாநகராட்சிகளிலு ம், நகராட்சிகளிலுமே பாதிப்பை ஏற்படுத்தலாம்.கிராமப் பகுதிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
GOOD DECISION. JEYALALITHA DOESN'T KNOW HOW TO RESPECT ALLIANZ PARTIES. YOU ARE APPRECIATED BY TAMILNADU PEOPLE FOR UR BOLD DECISIONS ONLY. SAVUKKU WAIT & WATCH, IT IS 100% RIGHT DECISION FOR LONG TERM GROWTH OF DMDK.
Savukku Sir- You have not given 6 months for AIADMK and turned against it.
I thought they did not perform badly.
RSS feed for comments to this post