|

இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுன சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் சித்திரவதைகளை செய்தவர்களும், செய்யத் தூண்டியவர்களும், இன்று பதவி மெத்தைகளிலும், அதிகார அரியணைகளிலும், அமர்ந்திருக்கிறார்கள்.
வீரப்பனால் பெயரைக் கூறி பத்திரிக்கை விற்பனையை பெருக்கியும், வீரப்பனுக்கு தருகிறேன் என்று கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களும், அன்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு, நெருக்கமாக, கும்மியடித்துக் கொண்டு, ஆட்சியாளர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உள்ளார்கள்.
வீரப்பனை கொன்று விட்டோம் என்ற மார்தட்டிக் கொண்டு, ஆறு ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலைமை என்ன என்று பார்த்தால், வருத்தமும், ஏமாற்றமும், வீரப்பன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது.
வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ? தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு தைரியம் இருக்குமா ?
வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றான், மரங்களை வெட்டினான் என்றெல்லாம் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், வீரப்பன் என்ற ஒரு நபர் இல்லாத இந்தியாவின் பல்வேறு இடங்களில் சந்தனமும் ரோஸ்வுட் மரமும், தேக்கும் மற்றும் பல்வேறு உயர்வகை மரங்களும் மிக மிக மோசமாக கொள்ளையடிக்கப் பட்டுத்தானே வருகின்றன ? இந்தியாவில் வனங்கள் இருக்கும் பகுதிகளில், மரக்கொள்ளையர்கள் இன்று வரை மரங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துத் தானே வருகின்றனர் ?
ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, விரப்பன் யானைகளை கொல்வதை நிறுத்தி விட்டார் என்பதுதான் உண்மை. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரில், மலைவாழ் மக்களை, கர்நாடக காவல்துறையும், தமிழக காவல்துறையும் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சோளகர் தொட்டி படித்துப் பாருங்கள்… !
வீரப்பன் இருந்த காலத்தில், காட்டுக்குள் வந்து வேட்டையாட பயந்த மரக் கொள்ளையர்கள் வீரப்பன் இருந்த பக்கமே வரமாட்டார்கள் என்றும், வனத்துறையினர் மீது துளியும் பயம் இல்லை என்றும், வீரப்பன் என்றால் அவ்வளவு அச்சம் என்றும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார் என்ற செய்தி டிவியில் வந்ததும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த ஒரு ஆய்வாளர் யார் தெரியுமா ? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் வெள்ளைத் துரை. ஆறு ஆண்டுகளுக்கு முன், என்கவுண்டர் நடந்ததாக சொல்லப் படும் 18.10.2004ம் ஆண்டு, வெள்ளைத் துரை சங்கம் தியேட்டர் எதிரில் இருக்கும் உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பில் குடியிருக்கிறார். 17.10.2004 அன்று இரவு, தன்னுடைய குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளோடு, தரைத் தளத்தில் வண்டி நிறுத்தும் இடம் அருகே வெள்ளைத் துரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது, அந்த குடியிருப்புக்கே தெரியும். மறுநாள் டிவியைப் பார்த்தால், வெள்ளைத் துரை போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
வீரம் என்பது என்ன தெரியுமா ? மோரில் விஷம் வைத்து ஒருவனை கொன்று விட்டு, பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போஸ் கொடுப்பதல்ல. .. 34 ஆண்டு காலம், இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் காவல் படைக்கும், சிம்ம சொப்பனமாக விளங்கி மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம். கடற்கரையின் இருட்டில் உட்கார்ந்திருந்தவனை பேசப் போவது போல் சென்று, கொன்று விட்டு அயோத்திக் குப்பம் வீரமணியை நான்தான் கொன்றேன் என்று மார்தட்டிக் கொள்வது வீரமல்ல….
வீரப்பன் இல்லாத நிலையில், இன்று கேரள எல்லையில், தொடர்ந்து சந்தன மரங்கள் கடத்தப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வீரப்பன் இருந்த வரை, யானைகளையும் வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடக் கூட, வனத்துறையினர் அஞ்சி நடுங்கியதாகவும், இப்போது, பழைய ராஜாக்கள் காலம் போல, வனத்துறையினர், மான்களையும், மற்ற வன விலங்குகளையும், உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வீரப்பனுக்கு, உணவு கொடுத்தோம், உதவி செய்தோம் என்ற காரணத்துக்காக, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான மலைவாழ் மக்கள் கூட, இன்று வீரப்பன் இல்லாததை நினைத்து வருந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.
வீரப்பன் என்ற ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம். வனச் சொத்துக்களை அழித்தான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டலாம். வீரப்பன் வனச் சொத்துக்களை அழித்தான் என்றால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் இயற்கை வளத்தையும், நீராதாரத்தையும் அழித்துச் சுரங்கம் தோண்டும் வேதாந்தா குற்றவாளி இல்லையா ? அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா ? மலைவாழ் மக்களுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு ஆதராவகவும் தீர்ப்பு அளித்த இந்திய தலைமை நீதிபதி கபாடியா குற்றவாளி இல்லையா ?
இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?

வீரப்பன் என்ற மாவீரன் இல்லாததால் தமிழகம் இழந்ததே அதிகம். வீரப்பன் இருந்திருந்தால், வாலாட்டும் வாட்டாள் நாகராஜின் வாலை நறுக்கியிருப்பார். |
Comments
உன் மேல் இருந்த வழக்கு எல்லாம்
ஏறி இருக்குமேபரண்.
சுடப்பட்டதாலே நீ
வீணப்பன்..பிழைத்திருந்தால ் தின்றிருக்கலாமே
மைசூர் கார பன்.
நீ செய்ததோ நூறே கொலை-
உன் உயிரா அதற்கு விலை?
கொன்றவரும் அடித்தார் மொட்டை--
விட்டிருந்தால் காடே மொட்டை!
நீ கண் திறந்தால் ஆனைகள் அதிரும் -
பொறை உன் கண் மூடியதால் அன்றோ
பூனைகளும் புது வீரம் கண்டன?
உன் ராஜராஜாங்கத்தில ் சிறு நரிகளையும்
உலவ விட்டதனால் அன்றோ
எலிகளும் இன்று ஏரியல்-வ்யூ பார்க்கின்றன?
நீ கைமுஷ்டிக்குள் புயலை அடக்குபவன்..
வெறும் தென்றலா உன்னை புரட்டிப் போட்டது?
நீ காட்டையே கட்கத்தில் அடக்கியவன் -
சிறு செடியா உன்னை இடறி விட்டது?
நீ நிறுத்திவிட்டாய ் உன் ஆட்டத்தை--
நானும் நிறுத்துகிறேன் என் பாட்டத்தை.
I first realised this truth, when i saw the serial "santhanak kaadu" in makkal TV..
We are NOT independant india.. rather, the government today is the same colonial government.. only diff is that earlier white people looted us.. not brown people doing the same.. (Vellakkaran poi kollakkaran vanthaacchu)
இவ்வுலகில் நமக்கு என்ன உரிமை
உண்டோ, அதே உரிமை மற்ற அனைவருக்கும், உண்டு. அது நாமாக இருந்தாலும் சரி, மலை வாழ் மக்களாக இருந்தாலும் சரி, ஈழ தமிழனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அணைத்து உரிமையும் உண்டு.
Why don't you expose the corrupt IAS officials like Thanjavur collector M S Shanmugam.
இயற்கை வளங்களை யார் அழிக்கவில்லை ? காட்டில் அழித்தால் மட்டும் தான் இயற்கை வளமா ? நகரத்தில் உள்ள ஏரிகளை தூர்த்து, அதன் மீது, பிளாட் போட்டு விற்று, கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும ், ரியல் எஸ்டேட் காரர்களும் அழிப்பதற்கு பெயர் இயற்கை வளம் இல்லையா ?//
சவுக்கு அவர்களே, நெத்தியடி .....
இருந்தாலும் இந்த பொறுக்கி தேசம் இந்திய அரசியல்வியாதிகள ் திருந்தவ போராயிங்க ?!:(
மக்களின் கதாநாயகனாக வாழ்ந்தது தான் வீரம்.//
வீரம் குறித்த விளக்கம் மிக அருமை தோழர்...
வீரப்பன் அவர்கள் குறித்து தகவல் + நினைவுகூரிய அல்லது நினைவூட்டலுக்கு மிக்க நன்றி தோழர்..
வீரப்பன் தனது இரண்டாவது மகளை -டாக்டர்க்கு படிக்க பெரிதும் ஆசைபட்டார் !!! அதனால் நிறைய பணம் நக்கீரன் ஆசிரியர் -கோபால்கு கொடுத்தார்
ஆனால் வீரப்பன் இரண்டாவது மகள் -எப்போது - பொறியியல் -(Engineering) தான் படிகிறார்.
நக்கீரன் ஆசிரியர் -கோபால் -உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று -உண்டா ?
நன்றி விசுவாசம் -என்று ஒன்று உங்களுக்கு உண்டா ?
-tsekar
வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாட்ட ை விற்றவன் தமிழர் தலைவன்,
ஊழலின் ஊற்றுவாய்க்கு வித்தகன் என்று பேர்,
அண்டப்புளுகும் பொய் வாய்க்கும் காவலன் என்று பேர்,
தமிழரை கொன்று வதைப்பவன் தமிழ்க்காவலன்,
இதுதான் தமிழனின் தலைவிதிஃ
நீங்கள் google-ல் சென்று NHM Writer download செய்து அதை Install செய்யவும்
I am from sathyamangalam.... here many of readers said tat veerapan is a criminal and all... who said he is criminal..... Come and see in sathyamangalam.... he is the real hero....... now also people thinking veerapan is god and all... dont loose ur word without knowing anything,,,, all said he killed wild animals and cutted sandal wood ... but now only tat and all increased while comparinig to veerapan years..... then see who is criminal...
I have a high regard for you for your courage and motive.
ஒரு மரம் கடத்தி எப்படி வீரனான் என்று விவரிக்கவும்.
கெட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கெட்டவனை நேர்மையின்றி கொன்றுவிட்டால் கொன்றவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக கொல்லப்பட்ட கெட்டவன் நல்லவன் ஆகிவிடுவானா?
சவுக்கு சரியான கருத்தைச் சொல்கிறீர்களா?
கருநாயைவிட கனியைவிட ராசாவை விட மோசமான கொள்ளைக்காரன் இல்லை வீரப்பன்(Veerap an's illegal assets would not even match up a 0.0000000000001% of what MK's family had acquired illegaly) அனைவரும் ஒப்புக்கொள்ளலாம ் ஆனால் இந்த ஒரு விடயம் மட்டுமே போதுமா வீரப்பன் நல்லவனாகிவிட?
வழக்கம் போல,
அனானி
You have disappointed me by supporting people like sandal wood smuggler veerapan.
I think you need to clean your glasses.
Thanks,
R. Chakrapani
பிணம் தின்னி என்பதனை நிருபித்து விட்டார்.
WHY YOU ARE NOT SPEAKING ABOUT 'PURATCHI THALAIVI'. FEW PEOPLE THINK THAT YOU ARE BIASED. I KNOW ITS DIFFICULT TO ANSWER READER COMMENTS, BUT PLS.
புதுக்கோட்டை சமணர் குகைக்குன்றுகள ், மதுரை ஒத்தக்கடை யானை மலை, பாலாறு, நெய்யாறு, வைகை (வள்ளல்கள்), தாமிரபரணி ஆற்று நீர் மற்றும் மணல் கொள்ளையர்கள். இன்றைய கொள்ளயர்கள், மீசை வைத்து கட்டம் போட்ட லுங்கியில், கையில் அருவாள்களுடன் இல்லை,
பளீர் வெள்ளை வேஷ்டி, தும்பைபூ நிறச் சட்டை, பால்,வெண்னை வழியும் முகம், காவலதிகாரி புடைசூழ காதுவரை நீண்ட புன்னகை வேஷத்தில் கார்பரேட் கொள்ளையர்கள் வெளிநாட்டு பிஎம்டபிள்யூக ளில் டீவி செய்திகளில் பொய் சிரிப்புடன், பூனை மாதிரி நடந்து வருவார்கள்.
உஷார்.
முன் அறிவிப்பின்றி ஏன் அது நிறுத்தப்பட்டது ....?
வீரப்பனை குற்றவாளி என கூறுகிறவர்களுக் கு ஒரு கேள்வி
ஏன் அவரை குற்றவாளி என்கிறோம். சந்தன மரங்களை கடத்தினார் என்பதற்கா? யானைகளை கொன்று தந்தங்களை கடத்தினார் என்பதற்கா? அப்படியானால் அதை வாங்கியவர்களும் குற்றவாளிகள் தானே ! அவர்கள் எல்லாம் பெரு முதலாளிகள், அரசியல் தலைவர்கள் என்ற பேரில் இன்றும் சுகபோக வாழ்க்கையில்!
வீரப்பனால் என்று தங்களுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையோ அன்றே குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு பின்பு கொல்லபட்டார். இனியாவது மாற்று சிந்தனைக்கு இடம் கொடுப்போம்
பேருக்கு தகுந்த மாதிரி கைப்புள்ளையா இருக்கியே...உங்க தெருக்குள்ள நடக்கிற விஷயம்கூட உனக்கு முழுசா தெரியுமான்னு தெரியல...தினமலர்ல கமெண்ட் போடறதோட நிறுத்திக்கோங்க ..உங்களோட மொக்கைய இங்க போடவேண்டாம்.
சவுக்கு ஒரு விஷயம் நல்லா தெரியுது....நெறைய பேரு தலைவர் பிரபாகரன் மேல விஷத்தகக்குரானு ங்க ? இதுக்கு பேரு தான் கலிகாலமா ?
Would you condone these barbarism in the name of searching for Veerappan ?
Only vedantha,sun tv,manaada mayilaada,relia nce like people are fit to live in this world.Killing veerappan,praba karan makes these activities reach entier population and brain wash everybody to follow them.
தமிழகத்தில் சவுக்கு மட்டுமே உண்மையான, துணிச்சலான பத்திரிகை. ஆனால், அச்சில் வராதது தமிழர்களின் துரதிருஷ்டமே!
“வெள்ளைத்துரை மட்டைப் பந்து விளையாடிக்கொண்ட ிருந்தான்” என்கிற உண்மையை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சவுக்கு வந்துதான் சொல்லவேண்டி இருக்கிறது.
அவமானம். -தமிழ்ப் பத்திரிகைகளுக்க ு.
சோளகர் தொட்டியின் விமர்சனம்:
http://elanko.net/?p=63
நெஞ்சை உருக்கும் சம்பவங்கள்....
இத்தனை பாவம் செய்தவர்களுக்கு பதவி உயர்வு, நிலம்.....
இந்த கூட்டுச் சதியில் தங்களுக்கும் தொடர்பு இருக்கின்ற காரணத்தினாலா?
மக்களுக்கு தேவை மக்கள் ஆட்சி, அதிகாரிகளின் மனிதநேயமற்ற ஆட்சிமுறை அல்ல
RSS feed for comments to this post