முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
முதலை வடிக்கும் கண்ணீர். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 57
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2010 07:47
 

 

போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள்.   அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ?

 1karuna_croc

வேறு யார், தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதியைத் தவிர வேறு யார் ?

 

நேற்று உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியிள்ள கடிதத்தில் ஈழத் தமிழரின் அவல நிலைப் பற்றி கண்ணீர் உகுத்துள்ளார். இது என்ன மாதிரி கண்ணீர் என்பதை உங்களுக்கு சொல்லி உணர்த்த வேண்டியதில்லை.

 

இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும்.   2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வந்து, கருணாநிதியை சந்தித்த சோனியா, 2010ல் விமானநிலையத்தில், 10 நிமிடங்கள் மட்டுமே கருணாநிதிக்கு நேரம் ஒதுக்குகிறார் என்றால், கருணாநிதி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 Tamils-at-Kadirgamh-camp--001

கடந்த ஒன்றரை வருட காலமாக தமிழ்ச் சொந்தங்கள் முள்வேளி முகாமுக்குள் தானே அடைபட்டுள்ளார்கள் ? அப்போதெல்லாம் இல்லாத கரிசனம், கருணாநிதிக்கு இப்போது என்ன ? என்னவென்றால், திமுகவை அனுசரித்து, சட்டசபைத் தேர்தலில் உரிய கூட்டணி வைக்காவிட்டால். திமுக தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்கும், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சூசகமாக உணர்த்துகிறாராம்…..!!!!

 sonia_2

ஆனால், காங்கிரஸ் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. கருணாநிதி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறையை முடுக்கி விட்டு, ஆ.ராசாவின் மென்னியைப் பிடித்து, அந்த விசாரணை, சிஐடி காலனி வரை கொண்டு செல்ல சோனியா காந்திக்கு தெரியும். பெயரில்தான் சோனி இருக்கிறதே தவிர, சோனியா சோனி அல்ல. அவர் சோனி நிறுவனத்தை போல திறமை வாய்ந்தவர். கடைந்தெடுத்த அரசியல்வாதி.   2014ல், ராகுல் காந்தியை பிரதமராக ஆக்கும் வரை மிக கவனமாக காய் நகர்த்தும் அளவுக்கு சாதுர்யம் படைத்த தேர்ந்த அரசியல்வாதி.

 

2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பது, இது வரை இல்லாத அளவுக்கு, காங்கிரஸ் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்ற ஒரு வினோதமான சூழலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச் சூழலை நன்கு அறிந்த கருணாநிதி, அதனால்தான், தன்னுடைய ஈகோவையெல்லாம் கோபாலபுரத்திலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு, மீனம்பாக்கம் சென்று, தன்னுடைய விசுவாசத்தை காட்டிக் கொண்டார்.

 

இந்தப் பின்னணியில்தான், விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப் பட்ட விவகாரத்தை ஆராய வேண்டும்.

 800px-tamil-tigers-flagsvg

2009 மே மாதத்திலேயே விடுதலைப் புலிகள் வீழ்த்தப் பட்டார்கள் என்று சிங்கள அரசாங்கம் அறிவித்தது. தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்றும் அறிவித்தது. இதை நம்பி, இந்திய அரசாங்கமும், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை யாராவது ஒரு சிங்கள தாசில்தாரிடம் வாங்கிக் கொடுங்கள் என்று விண்ணப்பித்தது.

 

ஒரு புறம், இறப்புச் சான்றிதழை தாருங்கள் என்ற இலங்கைக்கு விண்ணப்பித்து விட்டு, மறுபுறம், புலிகள் இயக்கத்தை 2010 மே 14 அன்று தடை செய்து ஒரு அறிவிக்கையை வெளியிடுகிறது.

 

இந்த அறிவிக்கையை சரியா தவறா என்று முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் ஒன்று, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் அமைக்கப் படுகிறது.

 Justice_Sen.Anne-Marie

 

இதே விக்ரம்ஜித் சென்தான், 2008ல், புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்தார்.

இந்நிலையில், இத்தீர்ப்பாயத்தின் இரண்டாவது கூட்டம், சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாகவும், புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கு என்று ஒரு மனு தாக்கல் செய்யப் படுகிறது.

 

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.

 

தனது வாதத்தின் போது, புலிகள் இயக்கம் அழிந்து விட்டாலும், அதன் ஆதரவாளர்களும், அனுதாபிகளும், அந்த இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்று புலிகள் இயக்கத்தை தடை செய்த அறிவிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் ஆதரவாளர்களைப் பற்றி குறிப்பிட்டுருப்பதால், ஆதரவாளர் என்ற முறையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை ஒரு அனுதாபியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதாடினார்.

 

அந்த மனுவை நிராகரித்த நீதிபதி விக்ரம்ஜித் சென் தனது தீர்ப்பில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்பது ஒரு பதிவு செய்யப் படாத அமைப்பு, மேலும், அந்த அமைப்பின் முகவரி முழுமையாக இல்லை (தெருப் பெயர் குறிப்பிட தவறுதலாக விடுபட்டு விட்டது.) என்று இரு பெரும் காரணங்களையும், சட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தான் தீர்ப்பாயத்தின் முன் வர வேண்டும் என்ற ஒரு முக்கியமற்ற காரணத்தையும் குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார் நீதியரசர் விக்ரம்ஜித் சென்.   இந்த முகவரி தொடர்பாக, நீதிபதி சந்தேகம் எழுப்பிய போது, தெருப்பெயர் தவறுதலாக விடுபட்டு விட்டது என்று விளக்கத்தை அவருக்கு அளித்து, திருத்தப் படும் என்று வாக்குறுதி அளித்த பின்பும், முகவரி சரியில்லை என்பதை மனுவை தள்ளுபடி செய்வதற்கு ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளார் என்றால், நீதியரசர் விக்ரம்ஜித் சென்னின் நீதிபரிபாலணத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையடுத்து தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில், மனுதாரரை விசாரிக்காமல், தீர்ப்பாயம் மனுவை தள்ளுபடி செய்தது சட்ட விரோதம் என்றம், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும் வாதிடப் பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் அடங்கிய டிவிஷன் பென்ச் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

 தங்களது தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பாயம் மனுதாரருக்கு உரிய வாய்ப்புகள் அளித்துள்ளதால் (??????) தீர்ப்பாயத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.   இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், இந்த வழக்கின் வாதங்கள் நடந்து கொண்டிருந்த போது, ஜமாத் ஏ இஸ்லாமிக் ஹிந்த் என்ற ஒரு அமைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர் ராதகிருஷ்ணன் குறிப்பிட்டார். இத்தீர்ப்பை தங்களது தீர்ப்பிலும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடுகையில், அந்த தீர்ப்போடு சேர்த்து, லிபர்ட்டி ஆயில் மில்ஸ் என்ற மற்றொரு வழக்கையும் சேர்த்து குறிப்பிட்டுளளனர்.   என்னடா இது சம்பந்தமில்லாமல், ஒரு வழக்கை குறிப்பிடுகிறார்களே என்று ஆராய்ந்தால், ஜமாத் வழக்கு தீர்ப்பின் நகலை நீதிமன்றத்துக்கு வழங்கிய போது, அந்த வழக்கின் தீர்ப்பு முடிந்தவுடன், லிபர்ட்டி ஆயில் மில்ஸ் என்ற அடுத்த வழக்கின் ஒரே ஒரு பத்தி மட்டும் அந்த நகலில் இருந்தது. (தள்ளுபடி பண்றதுல அவ்வளவு அவசரம்….. ம்ம்ம்.) இது ஒரு சாதாரண தவறு என்று விட்டு விடலாம். இது போன்ற ஒரு சாதாரண தவறுதானே, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் முகவரியில் தெருப் பெயர் விடுபட்டுப் போனதும் …. ? பதினோரு ஆண்டுகளாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஒரு மூத்த நீதிபதி, இதை ஒரு காரணமாக சுட்டிக் காட்டி, புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யும் ஒரு அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்கிறார் என்றால், இந்தத் தீர்ப்பாயம், நீதிபரிபாலணம் எல்லாம் எப்படி ஒரு சடங்காக இருக்கிறது என்று பாருங்கள்.

 

தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு ஊட்டியில் 20 அக்டோபர் அன்று நடைபெற்றது.   (ஊட்டியில் என்ன பொட்டு அம்மனும், சூசையும் இருக்கிறார்களா…. எதற்கு ஊட்டியில் என்று அதிகப் பிரசங்கி மாதிரி கேள்வி கேட்காதீர்கள். நீதியரசரும், அவர் பரிவாரங்களும் ஊட்டியை சுற்றிப் பார்க்க வேண்டாமா ?) ஊட்டியில் அமர்வு தொடங்கியதும், விக்ரம்ஜித் சென், சிறிது அதிர்ச்சி அடைந்தார். காரணம், ஊட்டியில் வைத்தால் யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்து வந்தவர், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மதுரையிலிருந்து வந்திருப்பதைக் கண்டார்.

 

சிறைக் கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பின் சார்பாக, அதன் இயக்குநர் புகழேந்தி சார்பாக, ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது.   அந்த மனுவை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நீதிபதி விக்ரம்ஜித் சென்னிடம் அளித்ததும், நீதியரசர் கடுமையாக கோபம் அடைந்தார். “என்ன இது… உங்களுக்கு இதே வேலையாகப் போய் விட்டது. நாங்கள் தீர்ப்பாயத்தை முடிக்க வேண்டாமா. நாங்கள் ஒரு காலகட்டத்திற்குள் இதை முடித்தாக வேண்டும்.   உங்கள் இஷ்டத்துக்கு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தால் நாங்கள் எப்போது இத்தீர்ப்பாயத்தை முடிப்பது“ என்று கோபமாக கூறினார்.

 

ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் சீறியது… “நாங்கள் அளித்த மனுவை படித்துப் பார்க்காமல் இவ்வாறு கூறாதீர்கள். மனுவை ஏற்க மறுப்பதற்கு தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை. மனுவை முதலில் படித்துப் பாருங்கள். இந்த அமைப்பு எத்தனை பொதுநல வழக்குகள் போட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த அமைப்பை இரண்டு ஆண்டுகளாக எப்படி நடத்தியுள்ளது என்பதை அந்த மனுவை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   யாரையுமே அனுமதிக்க முடியாது என்றால் யாருக்காக தீர்ப்பாயம் நடத்துகிறீர்கள் ?   மனுவை படித்துப் பார்த்து விட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள். நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்கிறோம்“ என்று கூறினார்.

 

இதையடுத்து நீதியரசர் விக்ரம்ஜித் சென், மனுவை பொறுமையாக படித்துப் பார்த்தார். படித்து முடித்து விட்டு, அரசு வழக்கறிஞரைப் பார்த்து, இத்தீர்ப்பாயத்திற்கு உதவி செய்வதற்காகவே இவர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்கள். அதனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். (இதத் தானே நாங்க மொதல்லயே சொன்னோம்.   படிக்காமலே அவசரப் பட்டு முடிவெடுக்கக் கூடாது சார்)

 

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான இயக்குநர் பி,கே.மிஷ்ரா என்பவர் சாட்சியாக விசாரிக்கப் பட்டார். அவர் தனது சாட்சியத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்வதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும், வழங்கியது தமிழக காவல்துறை என்று கூறினார். கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று கூறியதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா ?

 

மேலும் அந்த அதிகாரி தனது சாட்சியத்தில், நாடுகடந்த தமிழீழம் அமைக்கப் பட்டுள்ளது என்றும் இதுவும் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான காரணம் என்றும் கூறினார்.   நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தல் நடந்த போது அதன் சிறப்பு பார்வையாளர் யார் தெரியுமா ? அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ராம்சே மெக்டொனால்ட்.   தடைசெய்யப் பட்ட அமைப்பை அமேரிக்க அரசாங்கம் தனது நாட்டில் மாநாடு நடத்த அனுமதிக்குமா ? இது போல இன்னும் பல்வேறு சொத்தைக் காரணங்களை அந்த அதிகாரி கூறினார்.   இவரை குறுக்கு விசாரணை செய்ய வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சிறைக் கைதிகள் உரிமை மையத்திற்கும் நீதியரசர் அனுமதி வழங்கினார்.

 

சாட்சிகள் குறுக்கு விசாரணையை அடுத்து, 28ம் தேதிக்கு அடுத்த அமர்வு ஒத்தி வைக்கப் பட்டது.

 

தனது நலனையும், தன் குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகமே போராடிக் கொண்டிருந்த போது தன்னால் இயன்றதையெல்லாம் செய்து, அந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று பசப்பி லட்சக்கணக்கான தமிழ் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த கருணாநிதி இப்போது மீண்டும் வடிக்கத் தொடங்கியிருக்கும் முதலைக் கண்ணீர், அடுத்த சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தான்.

 

ஆனால், இனியும் உலகத் தமிழர்கள் கருணாநிதியை நம்பத் தயாராக இல்லை.   1991 தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும், இதுதான் எனது கடைசித் தேர்தல், இதுதான் எனது கடைசித் தேர்தல் என்று கருணாநிதி கூறுவார்.

 
karuna_one_eyed_jack

ஆனால் இப்போது சவுக்கு கூறுகிறது. இதுதான் கருணாநிதியின் கடைசித் தேர்தல்.   அவர் முழுமையாக மக்களால் புறக்கணிக்கப் படப் போகிறார். தனது குடும்பத்தை வளர்த்து விட்டு, தமிழகத்தை சூறையாட விட்டு வேடிக்கைப் பார்த்த கருணாநிதியை மக்கள் மன்னிக்கப் போவதே இல்லை.

 

Comments  

 
+2 #90 தமிழ் வேல் 2011-02-22 00:48
என் தமிழ் குல சிங்கங்களே!
வெள்ளைகாரன் வரும் முன்னே தெலுங்கர்கள் நமை ஆண்டார்கள் அவர்கள் தமிழினையும் தமிழ் மொழியையும் கீழ்த்தரமாக நடதினர் (ஆதாரம் "தெய்வத்தின் குரல் " காஞ்சி பெரிய வாள் "தமிழில் பேசினால் தீட்டு அதனால் நான் குளிக்க வேண்டும்.வயதான காலத்தில் என்னால் அடிக்கடி குளிக்க முடியாது .எனவே நான் தமிழில் பேசுவது இல்லை ").
ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் அவர்கள் தமிழர்களை இழிவாக நடத்தினர் கட்டபொம நாயக்கன் அதில் தலை சிறந்தவன்.வெள்ளை காரனுக்கு பின்னும் தமிழனை தமிழன் ஆளவே இல்லை.காமராஜர் ,பக்தவச்சலம் ,பனீர் செல்வம் மட்டுமே தமிழர்கள்.
கருணாநிதி தெலுங்கர் ( சாதி சின்ன மேளம்) இவர் தமிழ்களை தெலுங்கர் களுக்கு அடிமை ஆக்கிவிட்டார்
30 தெலுங்கு M .L .A. ., 5 அமைச்சர்கள். கட்சியில் தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர்கள் தான் முதன்மை இடம் . தமிழ் தாய் மொழி காரர்கள் கட்சியில் செல்வாக்கு கிடையாது . ஆற்காடு வீராசாமி நாய்டு .நேரு ரெட்டி , K K S S R ரெட்டி , நெப்போலியன் ரெட்டி ,

E.V.K.S . இளங்கோவன் கன்னட நாயக்கர் கன்னடர்கள் தமிழனை இழிவாக நடத்துவர் என்பது உலகு அறியும். பெரியார் தமிழ் காட்டு மிர்ரண்டிகளின் மொழி ,தமிழர்கள் தலமைக்கு லாயக்கு அத்தவர்கள்
எனவே நான் அவர்களுக்கு தலைவராக இருகின்றேன்.

யனவே இங்கே நீ அடிமை பின் நீ எப்படி உன் ஈழ சகோதரி உன் கண் முன்னே கற்பழிக்க படுவதை ,
சிங்களன் உன் இன மீனவனை கொல்வதை தடுப்பாய்.
நீ எந்த கட்சில்லும் இரு அனால் தெலுங்கன் ,மலையாளி ,கன்னடன் தலைவனாக இறுக்கும் தமிழ் கட்சியில் இருக்காதே.

அது இன துரோகம் அது இன துரோகம் அது இன துரோகம் அது இன துரோகம்



ஏன் தமிழ் இனம் மீண்டும் எழும்பும்! அப்போது உலகம் நடுங்கும்

கர்ப்ப்ளிக்க பட்ட எம் சகோதரி களுக்காக ரத்த வேள்வி நடத்துவோ
Quote
 
 
+1 #89 robinhood 2011-02-11 19:31
am new to savukku .......your clock is so nice dmk s countdown started .........
Quote
 
 
+3 #88 balayoga 2011-01-13 13:45
Balayoga Yoga R. Balasubramanian
ஏற்கனே சொன்னதை திருப்பி சொல்கிறேன்...


திருக்குவளை நம்மை பிடித்த சர்க்கரை வியாதி...
சர்க்கரை வியாதி வந்தால் வரும் வியாதிகள்..

முதுகு வலி: திருமா

உயர் ரத்த அழுத்தம்: சோனியா,

மலச்சிக்கல்: ராமதாஸ்,

சிறுநீரக பிரச்சனைகள்: காங்கிரஸ்காரர்க ள்,

சொறி சிரங்கு: தமிழ்நாட்டு ஜாதி கட்சிகள்,

ஆரா புண்: ஜெயலலிதா!!!

தயவு செய்து இனிமேல் சர்க்கரை வியாதி வராமல் வரும் முன் காப்போம்.
Quote
 
 
+1 #87 P.SELVARAJ 2010-11-27 11:49
nalla karutthupadam
Quote
 
 
-1 #86 Tirupurvalu 2010-11-23 20:57
நீங்க ரொம்ப தாமசு பார்ட்டியா இருகிங்க .நீங்க தாரசு ஷ்யாம் தானே
Quote
 
 
+2 #85 LGR 2010-11-09 17:12
Hai friends don't get angry with Karunanidhi, just wait for 6 months then he will pass away...

I mean from CM posting. :lol:
Quote
 
 
0 #84 murugurajangam 2010-11-09 00:29
i welcome this web site.i wish this should be updated properly regularly.
Quote
 
 
+6 #83 தேவேந்திரன் 2010-11-03 20:00
இந்த கட்டுரைக்கு COMMENTS கொடுத்து இருக்கும் DHINAKARAN அவர்களுக்கு என்னுடைய பதில் ;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;; ;; உங்க DMK லெட்சணம் தான் உலக நாடு அறிந்த விஷயம் இல்லையா அதனால நாம அதை சொல்லி ஆகனும் அது என் கடமை அல்லவா தினகரன் அலுவலகம் புகுந்து மூன்று அப்பாவி தமிழர்களை கொன்ற உத்தமர்கள் அல்லவா நீங்கள் அது மட்டுமா ஈழத்தில் நம் சகோதரர்கள் 1,0000 அப்பாவி தமிழ் பெண்களின் தாலியை அறுத்தவர்கள் அல்லவா நீங்கள் தினகரன் இல் சம்பளம் வாங்கியதால இப்படி எல்லாம் நீங்க ஜால்ரா அடிக்காதிங்க தெரியும் உங்க லெட்சணம் எல்லாம் எங்களுக்கும் கொஞ்சம் அடங்குங்க பதவி வேணும்னா விமானம் ஏறி போய் இத்தாலி காரியை சந்திப்பதும் ஈழ தமிழர்கள் பிரச்சினை என்றால் கடிதம் எழுதுவதும் எல்லாம் எங்களுக்கும் தெரியும் உங்க கட்சில் பெரியவர்கள் இருக்க நீங்கள் துணை முதல் அமைச்சரை தேர்ந்து எடுத்த லெட்சணமும் நான் அறிவேன் நான் ADMK ஆதரவாளன் கிடையாது
Quote
 
 
-7 #82 dhinakaran 2010-11-03 16:21
ayya savukku editor avarkale neengal ammavidam vaangiya kaasukku mel koovukireerkal ..makkal onnum muttalkal alla neengal sollum anaithum nambuvathrkku..
oru kannadakaarikku jaalra poda ungalukku vetkama illaiya .......dmk is 100% better then admk .
sari oru pechukku sollren ithe jeya aatchiyla irunthu neenga ammava paathi ithupola news potturintha inneram admk kundargal unkala veedu pugunthu koluthi iruppanga aana kalainar amithiyaka irukkirar, "poruthaar poomi aalwaar ponginar kodanadu aalwaar"
ore variyil solla vendum endral "kalainar kodi makkalai vaazhavaikka 100 perai aalippar, aanal amma 100 pera sokusaka vaazha kodi makkalai alippar.
ithu satiyam
Quote
 
 
-7 #81 sudukattusamy 2010-10-31 07:01
காந்தி,நேரு இவர்களை எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர்களாய் பார்ப்பதில்லையா ?
அதைப் போல நம்ம முதல்வரையும் பாருங்கப்பு. எப்பேர்ப்பட்ட தியாகி அவரு...
அவரைப் போயி முதல கண்ணீர் வடிக்கிறார்னு எழுதலாமா?
Quote
 
 
-2 #80 SASIKALA 2010-10-31 03:13
Make sure that nobody knows this site is run for ADMK and by devar caste.

Sasikala
Quote
 
 
+2 #79 THAMBI PRABHA 2010-10-30 21:05
KARUNAAIYIN COUNTDOWN AARAMBITHU VITTATHU. KADANTHA AANDU UYIR NEETHA EM UDANPIRAPUGALIN SAABAM AVANAI SUMMA VIDAATHU. JAYAVAI PATRI SAVUKKU PESAVILLAIYE ENDRU KOORUBAVARGAL ONDRAI VASATHIYAGA MARANTHU VIDUGIRAARGAL.JAYA ORU NER ETHIRI.ENTH KALATHILUM EELATHAMILARAI AATHARITHATHU KIDAIYATHU. SUNDAI MUZHIYAN CHOVIN ALOSANAIYAI PINPATRUM PAARPANA PENMANI.AANAALUM AVAL AATCHI KAALATHIL PULIGALUKKU KUDAICHAL KODUKKAVILLAI. TAMIL NAATIL IYAMGA VIDAAMAL SEITHALE THAVIRA EELAPORUKKU AVALAL THENGU NERAVILLAI. AANAAL THIRUKKUVALAI THEEYASAKTHI MUTHUGIL KUTHIYA THUROGI.SONIAVIRKE INA AZHIPPU PORUKKU THAIRIYAM KODUTHAVAN.IVAN EPPERPATTA PAVATHIRKUM ANJATHAVAN ENBATHAI PURINTHU KONDE KAARIYAM MUDINTHATHUM AAPU VAIKKIRAAN RAGUL.ARAM VELLUM.THALAIVAR VARUVAAR.KARUNAAI UYIRODU IRUKKUM POTHEY EELAM VELVAAR.ITHU KAALATHIN KATTALAI.
Quote
 
 
-6 #78 Nadunilaiyalan 2010-10-30 17:33
ஜெயலலிதா தற்போது மாநிலத்திலும், மத்திய அரசிலும் எந்த செல்வாக்கும் இல்லை..அவர் வெறும் அதிகாரம் இல்லாத எதிர் கட்சி தலைவராக தான் தற்போது உள்ளார். அவரை பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறதுஓகே நான் ஒத்து கொள்கிறேன். ஆனாலும் சவுக்கு ஏன் வீரப்பன் விசயத்துல ஜெயலலிதாவ பத்தி ஒண்ணுமே சொல்லல.காவிரி விசயத்துல ஜெயலலிதா இதுக்கு முன்னாடி என்ன பண்ணினா? ஜெயலலிதா இலங்கை தமிழ் மக்களுக்கு செய்ததை சவக்கு சொல்லலாமே? ஜெயலலிதா மதுரையில் பேசியதும் இங்கே கட்டுரையாக வருவதும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்தல் யார் அந்த அம்மாவுக்கு எழுதி கொடுப்பது என்று தெரியவில்லை. இங்கே உள்ள சில மன்குனிகள் வேண்டுமானால் சவுக்கு நடுநிலை என்று சொல்லலாம். ஆனால் அது உண்மை இல்லை. இவர் ஒரு பக்கா ஜெயலலிதாவின் அனுதாபி. 1991 - 1996 மற்றும் 2001 - 2006 தமிழ்நாடு எவ்வளவு கேவலமான ஆட்சியை கண்டது என்று எல்லாருக்கும் தெரியும். இங்கே பலர் சொன்னது போல கொடநாட்டில் இருந்து எத்தன பொட்டி கை மாறியது இப்படி இந்த ஆட்சியை பத்தி எழுத. உண்மையான பதில் தேவை. Mr சவுக்கு உண்மையான பதில் தேவை மற்றும் ஜெயலலிதா பற்றிய உங்களுடைய உண்மையான நிலை என்ன?
Quote
 
 
+7 #77 zaki 2010-10-27 15:09
முதலை கண்ணீர் கருணா மன்னிக்கவும் திருடர்கள் முன்னேற்ற கழக மங்குனி மன்னா
நீ என்ன மனிதனா எப்படி எல்லாம் நடிக்க கூடாதோ அப்படி எல்லாம் நடிக்கிறாய்
சாகும் போதாவது மனிதனாக வாழ முயற்சி செய் நடிகனே !
Quote
 
 
+1 #76 citizen 2010-10-26 15:29
நமது நாட்டில் திருடன் மொள்ளமாரி முடுச்சு அவுக்கி எல்லாம் கடைசில் அரசிழலில் தான் இர்ருகாங்க . அப்படி இருக்கும் போது அவுங்க எப்படி மக்களை பற்றி நினைபாங்க . ஓட்டு போடும் போதே பணத்த பாக்கிற நாட்டில் முத்திரை போட்ட திருடன் தான் வருவான் . தலை எழுத்த மாத்தறது அவனவன் கையில இர்ருக்கு. ஆனா வெண்ணைய தேடி அலையறதே தலை எழுத்தா போச்சுனு பேசறது பேசனா போச்சு .
Quote
 
 
+13 #75 ராஜேஷ் தேவேந்திரன் 2010-10-25 17:50
[இந்த கட்டுரைக்கு coments குடுத்து இருக்கும் புலி எதிர்ப்பாளன் அவர்களுக்கு நான் கொடுக்கும் பதில் கருத்து -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-= புலி எதிர்ப்பாளன் அவர்களுக்கு ராஜேஷ் தேவேந்திரன் சொல்லுவது என்னவென்றால் உன் அம்மாவையும் அக்காவையும் நிர்வாண படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து பின்பு அவர்களின் பெண் குறியில் துப்பாகியால் சுட்டு கொன்றால் நீ சும்மா இருப்பாயா ? இல்லையெனில் நீ சேலை கட்டிக்கிட்டு அலைவாயா ? ராஜீவ் கொலைக்கு பின்ந்தானே நீங்கள் எல்லாம் புலி எதிர்பாளர்கள் ஆனிர்கள் தனு என்ற அந்த மா மறத்தி இன் சகோதரிகளும் அம்மாவும் இந்தியா ராணுவ படைகளால் கற்பழிக்க பட்டு சுட்டு கொன்றது இதை நேரில் பார்த்த தனு பலி வாங்கினால் அவ்வளவே நீங்கள் கூறலாம் அப்படி பார்த்தால் ராணுவ வீரனை அல்லவே பலி வாங்கி இருக்க வேணும் என்று கேள்வி கேட்பிங்க அதுக்கும் நான் பதில் சொல்றேன் நம் மீது ஒருவன் கல் வீசினால் நாம் அந்த கல்லை தாக்குவோமா ? கல்லை வீசிவனை தாக்குவோமா ? அது தான் அங்கேயும் நடந்தது
Quote
 
 
0 #74 வேலு 2010-10-24 11:04
The very first massacre deals with what took place in Inginiyakala on June 05, 1956 in the aftermath of the Sinhala Only bill passed in the parliament. This was the commencement of Sinhala mob terrorism against unarmed Thamils. The police was ineffective and remained mute spectators.

The book goes to record in detail a further 156 massacres giving detail account of names of victims, occupation and age.

The preface has been written by the well known Thamil activist Dr. Ellyn Shander MD. The book has been published by Manitham Publishers the well known human rights organization based in Chennai. Thamil Nadu.
Quote
 
 
0 #73 வேலு 2010-10-24 11:03
Thamizhina Padukolaigal

These massacres were carried out by the Sinhala armed forces ably aided and abetted by racist Sinhala politicians. The genocidal war against the Thamil people has killed more than 100,000 Thamils since 1956. In the last phase of the Eelam War IV (May, 2009) 25,000 civilians died and twice that number were seriously injured. Sadly some among them are some of those who worked on this project.

Rev. Fr. M.X.Karunaratnam who functioned as the Chairman of the NorthEast Secretariat on Human Rights (NESOHR) was killed in a Claymore attack carried out by the Long Range Reconnaissance Petrol (LRRP) of the Sri Lanka Army on April 20, 2008 in Vanni.
Quote
 
 
+7 #72 dhatchi 2010-10-23 23:25
பொதுவாக கருணாநிதி அரசியல் சாணக்கியர் ( நாதாரித்தனமாகவு ம் நயவஞ்சகமாகவும் சுயனலத்துடனும் யோசிப்பவர் ) இப்போது எல்லாம் அதிகம் படித்து சுயநலமாக இருப்பவர்களைத்த ான் அறிவாளி என்கிறோம் ஆனால் கருணாநிதி அறிவாளிக்கு எல்லாம் அறிவாளி. ஏனென்றால் அவர் அந்த காலத்திலேயே ஓடாத ட்ரெயினில் தலை வைத்து படுத்தவராச்சே. இவர் மக்கள் அடிக்கடி மறக்கும் குணம் கொண்டவர்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார் மேலும் நல திட்டங்களை அறிவிக்கும் போது மக்கள் முன்பு மொட்ட தாத்தா குட்டைல விழுந்த மாதிரி பொத்தாம் பொதுவாக அறிவித்துவிடுவா ர் அப்புறமாகத்தான் இவர் வண்டவாளம் தெரியும் அதற்க்கு சில எடுத்துக்காட்டு கள்....
எல்லாருக்கும் டிவி, நிறைவேற்றுவது 5 ஆண்டுகளில்
2 ஏக்கர் நிலம் அது என்னாச்சு என்று தெரியவில்லை
மின்சாரம் அதை கேக்கவே வேண்டாம்
ஏழை விவசாயகளுக்கு இலவச மின் மோட்டார் அது ஏழைகளுக்கு இல்லை என்று தெரிஞ்சிப்போச்ச
ஏழைகளுக்கு இலவச வீடு அதுவும் விளங்காது.இப்படி சொல்லி கொண்டே போகலாம் இந்த சாணக்கியரின் சாணக்கியத்தனத்த ை..
Quote
 
 
+15 #71 Kumar.T 2010-10-22 23:23
சுயலாபத்துக்காக தமிழ் இனபடுகொலையை கண்டுகொள்ளவில்ல ை என்பதை கூட பொறுத்து கொள்ளலாம், ஆனால் பழி தனக்கு வரக்கூடாது என்பதற்காக கருணாநிதி அடித்த கூத்து தான் கொடுமை.
1. முதலில் கடிதம் எழுதினேன் என்றார்
2. அப்புறம் எல்லோரும் மத்திய அரசுக்கு தந்தி அடியுங்கள் என்றார்
3. அப்புறம் திமுக MP கள் எல்லாம் ராஜீனமா செய்வார்கள் என்றார், ஆனால் ராஜீனமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பாமல் தானே வாங்கி வைத்து கொண்டார் ( சபாநாயகருக்கு அனுப்பினால் பதவி போய்விடுமே...)
4. பின்னர் ஒரு நாள் திடீர் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம்(?) இருந்து உலக சாதனை நிகழ்த்தினார்.

இந்த கூத்தை எல்லாம் மக்கள் நம்புவார்கள் என்று அவர் நம்பினால் மக்களை பற்றிய அவர் கண்ணோட்டம் என்னவாக இருக்கும் ???
Quote
 
 
+1 #70 jahangeer.m.b. 2010-10-22 22:23
savukku sir, sariyaakasonnee rgal.karunavukku ithuthaan kadaisi therthal.
Quote
 
 
+8 #69 ஈழகுழந்தைகள் 2010-10-22 22:15
என்ன நினைத்து எம்மை அழித்தாயோ
ஏனிந்தக்கோலத்தை கொடுத்தாயோ-நாம்
முன்னம் இருந்தநிலை மறந்தாயோ-இன்று
முதலை உருவத்தில் கண் வடித்தாயோ,
காக்கா குருவிகள்போல் எரிந்தோமே
கண்வன் மனைவியையும் இழந்தோமே-குடி
நீரும் கிடைக்காமல் அலைந்தோமே-நீ
குட்டிக்கரணம் போட்டு மகிழ்ந்தாயே,
உன் வாசல் படிக்கதவில் புரண்டோமே
வானில் எங்கள் குரல் பதிந்தோமே
கூனிக்குறுகி நின்றோம் மறந்தாயே-உன்
கொள்கை என்னவென்று உரைப்பாயோ,
Quote
 
 
-4 #68 Puli Ethirppalan 2010-10-22 22:02
Quoting Puli Aatharavaalan:
புலி எதிர்பாளன் அவர்களுக்கு,
கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தமிழில் எழுதலாம். நாம் தான் தமிழில் எழுதுவதற்கு முயல வேண்டும். அடுத்தவர் வந்து கொடுத்தால் தான் எழுதுவேன் என்பதற்கு தமிழ் நமக்கு அந்நிய மொழி அல்ல.

http://www.google.com/transliterate/


நண்பரே நன்றி. இருக்கின்ற வேலைகளில் கருத்து பதியவும் ஆசை. கூகுளே நாடி சென்று கருத்து எழுதி அதை நகல் எடுத்து பதிவதற்கு நேரம் இல்லை. தமிழ் அந்நிய மொழியன்று. ஆசை ஆசையாய் உயிரை வைத்து ஆராதிக்கும் மொழி. மொழியின் மீதும், மொழியை வளர்த்த இனத்தின் மீதும் தீராத காதலும் உண்டு. ஆனால் இந்த புலிகளின் காலத்தில் சமூகத்தின் நுட்பமான உணர்வுகள் அனைத்தும் மழுங்கடிக்கப்பட ்டு ஒரு சர்வாதிகாரத்தின ் பிடியில் ..... அப்பப்பா.
புலிகளின் அழிவிற்கு பிறகு தான் மக்கள் சிறிது உயிர் பயமின்றி வாழ்கிறார்கள்
Quote
 
 
0 #67 rukku 2010-10-22 21:58
ஐயாவின் ஆட்சியில் நீதிமானும் அசாத்திய துணிச்சலுடன் கையில் கிளாஸ் வைனும் வெள்ளைக்கார கேள் பிரண்டும் மிடுக்காத்தான் போஸ்கொடுத்திருக ்கிறார், அரசன் எவ்வழி அதிகாரியும் அதே வழி. ஆண்டவன் தனி வழி,
Quote
 
 
0 #66 Puli Vaankalaioooo 2010-10-22 21:43
[quote name="Puli Aatharavaalan"]Tamils are beggers now in eelam..... Hai GIR flight destruction stories are just like "We defeated the fourth biggest army in the earth". But the truth is there was no strategy to defend the land, people or to desperse to take up the fight at later date. Sat like a duck along with lakh people believed any of these people. Hillary Skirt or Womanising Sarkozy or Big Tongue David Miliband. Asked KP Swear on your mother, will US come to our help or not.... What a leader to lead the nation.....Only some lawyers and law students he is Tamizh Thesiya Gnala Thalaivar. For the people in Eelam, he is Pillai Kari Pithan, Vanni Sudalai Andavan, Coward of The Century & Bunkar Prabha.
Quote
 
 
-7 #65 கோதண்டராமன் 2010-10-22 17:16
வர வர உங்கள் பதிவுகளில் வெரைட்டி இல்லையே சவுக்கு. இப்படியே போனால் ஹிட்சுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்.
Quote
 
 
0 #64 jeeva 2010-10-22 17:04
panelofexpertsr


Please send the details about srilanka misuse and killed the tamil people
Quote
 
 
+2 #63 Puli Aatharavaalan 2010-10-22 16:51
Tamils are beggers now in eelam. Who is the responsible for that?. People like you just simply blaming LTTE but not come to forward and protest against LANKAN and INDIA. We are all the reason for making tamils as beggars. What you did for past 30 yrs to eelam tamils? or What I did for eelam tamils?.The answer is nothing.. LTTE formed the country. But they did not get the Recognization because of INDIA.If tamilnadu is a country, then it will be very helpful to get Recognization from the world. LTTE sacrificed a lot. Gir kind of flight will give more trouble to the tamils. If the flight is flying some distance in the sky, then tamil people ear will be damaged. If the GIR flight pilot reduced the distance, then blood is coming from the tamil people stomach. So LTTE planned and attacked anuraathapuram army airport and destroyed all the GIR flights.
Quote
 
 
0 #62 citizan 2010-10-22 16:36
no words i have thanks for savukku
Quote
 
 
-3 #61 puli ethirppalan 2010-10-22 16:23
Quoting malathi:
Hi Savukku,
The Q branch and SBCID are commenting as Puli ethirpaalan..Plz put moderation.

Noo...Nooo.. I am not CBCID OR Q BRANCH. I belong to NASA, KGB, MOOSAAD. Hai Butter Tamil Ina unarvaalarkalee !!!!, think rationally and use your part in head, may be kidney is placed in your head than brain. Out of 30 years struggle, Coward of the Century, Pillai Kari Pithan, Bunkar Prabha achieved a glorious feet. Entire Vanni people Beggars at the hands of Singalavaaa. You butter searching whether I am belonging to Q Branch or CBCID. Nooooo I am Mooosad, KGB, NASA, why not CIA, FBI But not your grain. BYEE.... NOW, I WILL COME AGAIN IN ANY ARTICLE YOU PRAISE THE COWARD OF CENTURY, PILLAI KARI PITHAN, BUNKAR PRABHA... Karuthurimaiyaa da ....Karuthurimai..... Pechurimaiyaaad a....pechurimai...
Quote
 
 
+8 #60 கஜேந்திரன் பெருமாள் 2010-10-22 15:10
செய்யறதெல்லாம் செய்திட்டு சும்மா நீலி கண்ணீர் வடிப்பார் இந்த எட்டப்பன். இந்த தேர்தல் இவருக்குமட்டும் கடைசியாக இருக்க கூடாது தமிழின துரோகிகள் எல்லாருக்கும் ஆப்பு வைக்கணும். உண்மையான தமிழன் ஒருத்தனும் இவருக்கு மறந்தும் ஓட்டு போட மாட்டன். வரலாறு ஒருபோதும் இவரை மண்ணிக்காது.
Quote
 
 
0 #59 Kumar, Chennai 2010-10-22 14:59
[
Quote
 
 
+6 #58 Puli Aatharavaalan 2010-10-22 14:19
"சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதி ல் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்கா ரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.
இதை ஏன்? கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார் ? என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்க ி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு"
http://perarivalan.blogspot.com/
Quote
 
 
0 #57 Puli Aatharavaalan 2010-10-22 14:18
Hi Malathi,
Why we need to bother about Q branch or SBCID. After all they are also human being. We can reply them. Just read this Para, Continue--
Quote
 
 
+2 #56 Puli Aatharavaalan 2010-10-22 14:05
மாற்று கருத்துகளையும் பிரசுரிக்கும் சவுகிற்கு நன்றி.
Quote
 
 
+1 #55 malathi 2010-10-22 13:49
Hi Savukku,
The Q branch and SBCID are commenting as Puli ethirpaalan..Plz put moderation.
Quote
 
 
+2 #54 jaya 2010-10-22 12:55
savukku-niingal menmelum valara ye etham kaningtha vaalthugal nanri,,,,,, ungalin payanam thodarattum.......jaya,jegathis,
Quote
 
 
+8 #53 ASAI SIVA 2010-10-22 12:15
கருணாநிதி ஒரு இன துரோகி அவன் எப்போது சாகிறனோ அபோதுதான் தமிழனுக்கு தீபாவளி
Quote
 
 
+2 #52 ASAI SIVA 2010-10-22 12:08
:zzz tamizhina thukoki mk
Quote
 
 
+2 #51 Puli Aatharavaalan 2010-10-22 10:21
புலி எதிர்பாளன் அவர்களுக்கு,
கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தமிழில் எழுதலாம். நாம் தான் தமிழில் எழுதுவதற்கு முயல வேண்டும். அடுத்தவர் வந்து கொடுத்தால் தான் எழுதுவேன் என்பதற்கு தமிழ் நமக்கு அந்நிய மொழி அல்ல.

http://www.google.com/transliterate/
Quote
 
 
0 #50 puli ethirppalan 2010-10-22 10:14
Quoting தி.தீயை வெறுப்போர்:
டேய் ஊசிப்போன புளி சோறு. முதல்ல தமிழ்ல எழுதக் கத்துக்கோ. இல்லைன்னா இடத்தை காலி பண்ணு. எதுக்கு தெரு நாய் மாதிரி கூவினு இருக்க? கார்ப்ரேஷன் வண்டி வந்தாலே நீ காணாம பூடுவ.

If savukku provides facility to write in tamil, i can write in tamil. the mistake is in savukku not giving facility to write in tamil.
Quote
 
 
-2 #49 puli ethirppalan 2010-10-22 10:14
Quoting தி.தீயை வெறுப்போர்:
டேய் ஊசிப்போன புளி சோறு. முதல்ல தமிழ்ல எழுதக் கத்துக்கோ. இல்லைன்னா இடத்தை காலி பண்ணு. எதுக்கு தெரு நாய் மாதிரி கூவினு இருக்க? கார்ப்ரேஷன் வண்டி வந்தாலே நீ காணாம பூடுவ.

If savukku provides facility to write in tamil, i can write in tamil. the mistake is in savukku not giving facility to write in tamil.
Quote
 
 
-14 #48 anniyan 2010-10-22 10:03
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் . இதை யாராலும் தடுக்க முடியாது
Quote
 
 
+9 #47 thirumugam 2010-10-22 09:16
நம் துரதிர்ஷடம் எல்லாம் கருணாநிதியின் ஆயுள் நீண்டுகொண்டெயிர ுப்பதுதான்..உண்மை! என்ன செய்வது! தமிழனின் தலைவிதி!
Quote
 
 
+8 #46 VIJAY_USA 2010-10-22 05:53
To All who questions Savukku's silence towards Jayalalitha - the 02 great forces we have are Karuna & Jaya. We all very well know now what Karuna can do! He can't ditch our srilankan tamil brothers more than this. May be Jaya didn't do great during her tenure, but during last MP election, her main assurance was the indepence to form Tamil Ealam. By hook or by crook as she mentioned, citing India leberating Bangladesh. All who know Jaya would agree that, "if Jaya says, she will do it, at any cost". She is not one of the spineless characters we got around from DMK and Congress. So we have no choice, but supporting Jaya to ourst this cut throat Karun this time. Hope the only untained, non-corruoted politician we have today - VAIKO, will lead her in right path.
We have nothing to lose, but plenty to win - so lets be optimistic on Jaya and hope for the best!
Quote
 
 
+6 #45 muhaideen 2010-10-22 01:47
தனது நலனையும், தன் குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகமே போராடிக் கொண்டிருந்த போது தன்னால் இயன்றதையெல்லாம் செய்து, அந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று பசப்பி லட்சக்கணக்கான தமிழ் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த கருணாநிதி இப்போது மீண்டும் வடிக்கத் தொடங்கியிருக்கு ம் முதலைக் கண்ணீர், அடுத்த சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தான்.
ஆனால், இனியும் உலகத் தமிழர்கள் கருணாநிதியை நம்பத் தயாராக இல்லை. 1991 தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும், இதுதான் எனது கடைசித் தேர்தல், இதுதான் எனது கடைசித் தேர்தல் என்று கருணாநிதி கூறுவார்.
Quote
 
 
+5 #44 கசாப்பு, 2010-10-22 00:02
முதலையை வெட்டி கூறு போட்டா எல்லா எட்டப்பனும் கப்பென்னு அடங்கிடுவானுக,
Quote
 
 
+8 #43 வாலி 2010-10-21 23:49
முத்துவேலு ஈன்றெடுத்த பெரு முதலை போற்றி போற்றி
சுற்றும் சுகங்கண்ட சூலாவே போற்றி போற்றி
பெத்தாய் கனிமொழியை பேயே நீ போற்றி போற்றி
தள்ளு வண்டிமீது வரும் தவளையரே போற்றி போற்றி
தமிழ்நாட்டை தின்றழித்த சாத்தானே போற்றி போற்றி
தமிழினத்தின் துரோகமே சண்டாளா போற்றி போற்றி.
Quote
 
 
+8 #42 வாலி 2010-10-21 23:48
முத்துவேலு ஈன்றெடுத்த பெரு முதலை போற்றி போற்றி
சுற்றும் சுகங்கண்ட சூலாவே போற்றி போற்றி

பெத்தாய் கனிமொழியை பேயே நீ போற்றி போற்றி
தள்ளு வண்டிமீது வரும் தவளையரே போற்றி போற்றி
தமிழ்நாட்டை தின்றழித்த சாத்தானே போற்றி போற்றி
தமிழினத்தின் துரோகமே சண்டாளா போற்றி போற்றி.
Quote
 
 
+15 #41 Sakthi 2010-10-21 22:42
Quoting Kumar.T:
இங்கே நிறைய பேரு ஜெயலலிதாவும் புலிகளுக்கு எதிரானவர் தானே என்று கேள்வி கேட்கிறார்கள்..
ஆம், ஜெயலலிதா எதிரி தான் அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்..
எதிரியை நாம் மன்னித்து விடலாம், ஆனால் கருணாநிதி ஒரு துரோகி, உலக தமிழர்களின் ஒரே தலைவர் என்று கூறி கொண்டு தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தவர் அவரை எப்படி மன்னிக்க முடியும்???


திரு குமார் அவர்களுக்கு, மிகவும் சரியாகச்சொன்னீர ்கள். தமிழின துரோகி, நமது மாண்புமிகு முதல்வர் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி (தி.மு.க.)
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 41 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1720
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week60885
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month273704
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795823