முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சவுக்குக்கு பிரத்யேக பேட்டியளிக்கிறார் தொல்.திருமாவளவன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 19:15

 

1.    உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்.

 

2.    ஒரு சாதாரணமான குக்கிராமத்தில், பிறந்த நீங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது இருந்ததா ?

 

3.    தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான தலைமை ஏற்போம் என்று நினைத்தீர்களா ?

 Thol.Thirumavalavan_-_2

4.    சமூக இயக்கமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று நிலை வந்ததற்கு உங்கள் பதில்.

 

5.    தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவதத்தை இரு திராவிடக் கட்சிகளுமே வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

 

6.    ஒரு வலுவான தலித் அமைப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கட்டியமைத்த நீங்கள், அரசியலில் வலுவாக கால் ஊன்றுவதற்கு தடை எது என்று  நினைக்கிறீர்கள்.

 

7.    திராவிட கட்சிகள் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு.  அதே பாணியில் உங்கள் கட்சியும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக பரவலான கருத்த உண்டு.  இது பற்றி என்ன கூறுகிறீர்கள்

 

8.    தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவது சாத்தியமா ?

 

9.    தலித் ஒருங்கிணைப்பு அரசியல் அதிகாரம் அடைவதை சாத்தியப் படுத்துமா ?   அல்லது தமிழ் தேசிய அரசியல் சாத்தியப்   படுத்துமா ?

 

10.   உங்கள் அமைப்பை பலப்படுத்த 2011 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என்று அறிவித்த நீங்கள், அதை செயல்படுத்த தவறியது போலத் தோன்றுவதற்கான காரணம் என்ன ?

 

11.   விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஜனநாயக சக்திகள் வளரவில்லை என்று அறிவு ஜீவிகள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.  இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

 

12.   உங்கள் கட்சியில் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?

 

13.   திராவிடக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான் பரவலாக மக்கள் மத்தியில் அக்கட்சிகளை செல்வாக்கடைய வைத்தார்கள் என்பது வரலாறு.  திராவிடக் கட்சி பாணியை பின்பற்றுவது போலத் தோன்றும் உங்களுக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வளர்வதை பலவீனமாக நினைக்கிறீர்களா ?

.

14.   2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து அழைப்பு வந்தும், அப்பாவி மக்கள் பலியானதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் ? விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் தான் கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் கூட்டணி கிடையாது என்று நீங்கள் கூறினாலும், சோனியாவோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது.  இது குறித்து என்ன கூறுகிறீர்கள்.

 

15.   பெண்களையும், குழந்தைகளையும் நச்சுக் குண்டுகள் வீசி கொலை செய்ய உத்தரவிட்ட ராஜபக்ஷேவை சந்தித்து கை குலுக்கியதை, உலகத் தமிழர்கள், அவர்களுக்கு நீங்கள் செய்த மிகப் பெரிய துரோகமாக கருதுகிறார்கள்.  இது குறித்து உங்கள் கருத்து ?

16.   25 வயது தலித் இளைஞன் திருநாவுக்கரசுவை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பியோடி, தமிழக காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, இன்று அங்கே அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவோடு விருந்துண்டதை உலகத் தமிழர்கள் ரசிக்கவில்லை.   இது குறித்து உங்கள் கருத்து

 

17.   அரசியலுக்காக திமுக தமிழர்களுக்கு செய்த துரோகங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்ட உங்களை, உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணித்தது திமுக. உங்களை தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தலித் வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, தேவையற்ற சமயத்தில் ஒதுக்கி விட்டதாக உணர்கிறீர்களா ?

 

18.   திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடியபோதும் அது குறித்து ஒரு வார்த்தையும் நீங்கள் பேசாமல் இருந்ததனால்,  தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் புகாருக்கும் ஆளாகாத உங்களுக்கு இது தடுமாற்றம் இல்லையா ?

 

19.   வடபழனியில் உங்கள் கட்சி அலுவலகம், ஆக்ரமிப்பு குற்றச் சாட்டின் பேரில் வேறு ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப் பட்டது.  அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று நீங்கள் வழக்காடினாலும், இந்த விவகாரத்தில் உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக எந்த உதவியும் செய்யாமல்,  துரோகம் இழைத்ததாக கருதுகிறீர்களா ?

 

20.   தமிழகத்தில் கணிசமான அளவில் இருக்கும் தலித்துகளை ஒருங்கிணைத்து மற்ற தலித் அமைப்புகளோடு கூட்டணி வைத்து ஒரு வலுவான தலித் அமைப்பை உருவாக்க நீங்கள் முயற்சிகள் எடுக்காததற்கு காரணம் ?

 

21.   ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி கடுமையான துரோகம் இழைத்து விட்டதாக உலகத் தமிழர்கள்  அனைவருமே கருதுகிறார்கள்.   அவ்வாறு இருக்கையில், உங்களுக்கு கிடைக்கும் எம்.எல்.ஏ / எம்.பி சீட்டுக்காகவும், கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளுக்காகவும், கருணாநிதியை  ஆதரித்தீர்கள் என்ற குற்றச் சாட்டுக்கு என்ன கூறுகிறீர்கள் ?

 

22.   சென்னை புல்லா அவென்யூவில், நீங்கள் நடத்திய எழும் தமிழ் ஈழம் என்ற மாநாட்டுக்காக செய்யப் பட்டிருந்த விளம்பரங்களில் ஈழம் என்ற வார்த்தையை கருணாநிதி அரசின் காவல்துறை இரவோடு இரவாக அழித்த போதும், அதற்கு துளி கூட எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணம் என்ன ?

 

23.   ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்த நீங்கள், ஈழப் போருக்கு பெருமளவில் ஆயுதங்களை கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சி இருக்கும்  கூட்டணியில் இருப்பதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள் ?

 

இவை சவுக்கு கேட்க விரும்பும் கேள்விகள். திருமாவிடம் கேட்பதற்கு வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப் படுகின்றன.     அதிக பட்சம் 3 நாட்களுக்கு கேள்விகள் ஏற்றுக் கொள்ளப் படும்.   வாசகர்கள் உங்கள் கேள்விகளை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ newsavukku@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 

 

Comments  

 
+2 #49 vanangamudi kundhani 2011-10-16 13:44
கட்ட பஞ்சாயத்து செய்வதைவிட நல்ல தொழில் பிச்சை எடுப்பது ட்ரை பன்னலாமே, பச்சோந்தி குருமா டேய்
Quote
 
 
+3 #48 anniyan 2011-10-08 13:55
பச்சசோந்தி திருமா
Quote
 
 
+2 #47 venky 2011-10-05 19:01
தமிழ் நாட்டில் அகதியாக இருக்கும் இலஙை தமிழஹ்ர் துயரம் திர்க்க என்ன செய்திர்கள்
Quote
 
 
0 #46 Boobalan 2011-10-05 18:34
question 21 is the only question i wanted to ask!!!

good.. dont cut short any replies from him.. publish it as original!

thanks!!
Quote
 
 
0 #45 Rajabakshe 2011-10-05 09:43
Hello Thiruma, You are aDalit and you know the Dalits are tortured by the shudra Tamils particularly the Kallar and some few others. Then Why do not you work for upliftment of Dalits...and why are you crying for Tamils in Srilanka? ... I don't understand your logic for fighting for the srilankan tamils. First clarify that . Also Srilankan Tamils are also caste fanatics soyour fight for them is useless and betraying the interests of Dalits. Has any sinhalese tortured Dalits? NO. So work for Dalits and then only you will be a leader ...forget about caste fanatic tamil society and they are condemned to live.
Quote
 
 
+2 #44 shankar_t 2011-10-04 15:36
சவுக்கு அவர்களே, உங்களுக்கு கேள்வி கேட்க வேறு ஆட்களே கிடையாதா?
திருமா வை போன்றவர்கள் நாம் எதிர்பார்க்கும் நல்ல பதிலை கொடுத்தாலும், அதுபோல் அவர்
நடப்பார் என்று கனவிலும் நினைக்காதீர்கள் .
திருமா விடம் கேட்பதும் கருணாநிதியிடம் கேட்பதும் ஒன்றுதான்.
Quote
 
 
-1 #43 felix kamalraj 2011-10-04 00:53
தமிழகத்தின் 240 பஞ்சாயத்துகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாக எவிடென்ஸ் கதிரின் அறிக்கை சொல்கிறது. உங்களின் அமைப்பு இதற்காக ஒருமுறையாவது போராடியிருக்கும ா?

தமிழகமெங்கும் தலித் மக்கள் பல்வேறு சாதிக்கொடுமைகளை இன்னும் அனுபவித்தே வருகின்றனர். பெரியார் தன்னால் இயன்றவரை சாதிக்கொடுமைகளு க்கு எதிராகக் குரல்கொடுத்து களத்தில் இறங்கி போராடவும் செய்தார். ஆனால், அவர வழி வந்ததாக சொல்லிக்கொண்டு தனது ஆட்சிக்காலத்தில ் எந்தவொரு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தாத கருணாநிதிக்கு தாங்கள் சமத்துவப் பெரியார் என பட்டம் வழங்கியது நியாயமா?
Quote
 
 
0 #42 manickam.vck 2011-10-03 18:01
Quoting பத்மநாபன்:
ஒடுங்கி கிடக்கும் தலித் மக்களை கரையேற்ற கட்சி தொடங்கியதாக கூறிய திருமா, அவர்களை கரைசேர்க்காமல், அவர்களின் ஓட்டை வைத்துக் கொண்டு ஈன அரசியல்வாதிகளுட ன் கூட்டணி வைத்துக் கொண்டு பிணந்தின்னி கழுகுபோல் திரிகிறார். அடங்க மறு; அத்து மீறு என தனது தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுத்த திருமா, இலங்கைக்கு சென்று இன அழிவுக்கு காரணமாக ராஜபக்சேவுடன் அடங்க மறுக்காமல்; அத்துமீறாமல் விருந்து உண்டு வந்ததை மறக்க முடியுமா? உண்மையான பிரபாகரன் தம்பியாக இருந்தால் ராஜபக்சேவின் கையை குழுக்கியிருப்ப ாரா? அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டிருப்பாரா? இலங்கையில் இலங்கை அரசு கொடுத்த உணவை உண்ணாமலே வந்திருந்தால் அது தான் திருமாவின் உண்மையான உண்ணாவிரதமாக இருந்திருக்கும் . ஆனால் செய்தாரா திருமா?

Mr padmanaban can you think thiruma only can do the upliftment to the entire dalit community? it is possible?Are u aware thiruma can participate the lunch? i read so many article and report he said that he never drink a cup of water in the party
Quote
 
 
+13 #41 Dravidan 2011-10-03 12:39
1.பார்வதி அம்மா, சென்னை விமான நிலையம்
2.இந்தியா- கருணாநிதி, ஈழத்தில்-கருணா
3.ஈழப்போர் தமிழர் உயிரயிழப்பு- முழு காரணம்
தமிழின தலைவர்- கருணாநிதி
தமிழ் குடிதாங்கி -மருத்துவர்.ராமதாசு
தமிழின போராளி -திருமா
Quote
 
 
+1 #40 kpt kodi 2011-10-03 10:59
whether it is thiruma or krishnasamy, they need not establish another idealogy. if they follow dr.br ambedhkar's way and kansiram's idealogy, it is certain that not only the sc/st but also obc,bc,religiou s minority etc will get uplifted. like evr periyar, the above persons must have movements only not political parties. to have materialistic gains ,they run political parties. as long as they depend on dravidian parties,cong etc there is no progress for the socially suppressed class.whatever seats allocated to thiruma,kk were the seats allocated by dr.br ambedhkar not by any party.whether these leaders have raised any question about this .talking in length,they not work for needy society but for 5 to ten seats, they work hard for 5 years as slaves,whereas dr. ramadoss, with self respect, demanded more than 30 seats.dr. ramados is very correct to negotiate for political sharebased on population strength.
Quote
 
 
+12 #39 Harish 2011-10-02 17:11
கடந்த அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்க வேண்டிய பணத்தை புதிய தளமை செயலாகம் காட்ட ஒதுக்கிய தாக குற்ற சாட்டு எழுந்த போத என் மௌனம் சாததிதீர்கள்?

ஈழம் பற்றி எப்போது கேட்டாலும் நீங்கள் ஜெ அல்லது மற்றவர்களை சொல்கிறீர்களே நீங்கள் என் ஒரு முன் உதாரணமாக அந்த கூட்டணி விட்டு நாடள மன்ற தேர்தலில் விலகவில்லை? அல்லது ஜெயித்த உடனே நீங்கள் என் பதவியை ரஜினமா செய்யவில்லை?
Quote
 
 
+29 #38 kanapathy 2011-10-02 05:08
ஒன்றரைக்கோடி சுண்டைகாய் நாடு சிறீலங்காவின் அதிபர் மகிந்த இராசபக்சா நூற்றுப்பத்துக் கோடி இந்திய மக்கள் சார்பாகவும், எட்டுக்கோடி தமிழர் சார்பாகவும் தூதாகச் சென்ற உங்களைப்பார்த்த ு ஏளனமாக‌ "பிரபாகரனோடு இருந்திருந்தால் நீரும் கொல்லப்பட்டிருப ்பீர்" என்று கூறியபோது, "மகிந்தா! உனக்கும் இந்தியா உதவாமல் இருந்திருந்தால் நீயும் கொல்லப்பட்டிருப ்பாய்" என்று பதிலடி கொடுக்கத்தெரியா மல் அவமானப்பட்டு ஏன் வந்தீர்கள்?

கணபதி
ரொறொண்டோ
கனடா
Quote
 
 
+1 #37 VEERAMOHAN 2011-10-02 02:07
நான்தான் உங்களுக்கு முதன் முதலில் இலங்கைத் தமிழர்களையே அறிமுகப்படுத்தி னேன்(1984). எனக்கில்லாத அக்கறை உங்களுக்கு அவர்கள் மேல் என்ன நண்பரே!.
Quote
 
 
+14 #36 R.R.KARTHI 2011-10-01 23:21
இந்த திருமா என்ன தொழில் செய்கிரார். செலவுக்கு பணம் எங்கிருந்து வருகிரது. இவர்கள் அடுத்த சாதிகார்களை வேண்டும் என்றே பி சி ஆர் கேசில் சிக்க வைத்து அதில் கட்ட பன்சாயத்து பண்ணி பணத்தை கொள்ளையடித்து தன் பொழப்பை நடத்தும் இந்த திருமாவிர்க்கு நீதி நியாயம் நேர்மை பத்தி பேசுவதர்க்கு தகுதி கிடையாது. அப்படி திருமாவிர்க்கு ஆதர்வாக பேசுகிரவர்கள் நிச்சயமாக திருமாவின் கூட்டாளி தான். நான் இது போல் நேரடியாக பார்திருக்கிரேன ்.
Quote
 
 
+5 #35 சவுக்கு 2011-10-01 22:20
தோழர் உதய சூரியன், திருமாவளவன், வெளிநாட்டுப் பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். நான்கு நாட்களில் திரும்பி வருவார். வந்ததும் அவரிடம் நேர்காணல் எடுக்கப் பட்டு உங்களோடு பகிர்ந்து கொள்ளப் படும்.
Quote
 
 
+11 #34 udayasooriyan 2011-10-01 22:04
தோழர் சவுக்கு

திருமாவின் நேர்காணலின் செவ்வியை மறக்காமல் இணைத்து வெளியிடவும்
Quote
 
 
+2 #33 shhureshh 2011-10-01 19:09
Dear Thol Thirmaavalan Ji

Can u share your views on the following:
1. The programmes and efforts for the last 6 decades were centered around dalit and suppressed. In this scenario how long do you exepect will it take to remove supression?

2. Do you have any data on the actual requirement for benefits of Govt policies have attained till date?

3. Will you be able to consider and accept the fact that, the benefit of policies and programmes should be made available to a dalit family only once and it should be withdrawn, once the benefit is availed by that family?
Only by doing so you can really achieve what you aim for "equality and equal opportunity".

The benefits can not be enjoyed for generations together.
Quote
 
 
0 #32 manickam.vck 2011-10-01 11:57
[ஃஉஒடெ நமெ="ஸூட்ஹீறாண்"]இவர் ஆரம்ப நாட்களில் இவருடைய சமுதாயத்திற்கு நல்ல முறைகளில் தொண்டு புரிந்த மரியாதைக்குரிய தலைவராகவே விளங்கினார். எப்பொழுது அரசியல் பதவி ஆசைப் பிடித்து சேராத இடங்களான அதிமுக மற்றும் தி மு க பக்கம் சேர்ந்து, ஈழத்தமிழர்களுக் கு எதிராக உள்ள காங்கிரஸுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஓட்டு வேட்டை ஆடினாரோ அன்றே இவர் அரசியலில் "வெறுமா" ஆகிவிட்டார். இவர் தொடர்ந்து ஜாதி அரசியல் தான் செய்ய வேண்டும் . அதில் தவறேதும் இல்லை !ஏனெனில் இவர் சார்ந்த சமுதாயத்தில் இவரை விட்டால் வேறு நல்ல தலைவரே இல்லை. இவருடைய சமுதாயம் இன்னும் முன்னேற இவருடைய உழைப்பு கட்டாயம் தேவை. முதல் முதலில் இவர் அரசியல் ஆசையை கைவிட்டு, இவருடைய பறையர் சமுதாயத்துடன் மற்ற தாழ்த்தப்பட்ட பள்ளர், அருந்ததியர் மற்றும் வண்ணார் சமூகங்களையும் ஒன்றாக இணைத்து , தாங்கள் அனைவரும் ஒரே தாழ்த்தப்பட்ட இனம் , தமக்குள் ஒற்றுமை , சமூக இணைப்பு (திருமணங்கள் உட்பட) சமத்துவம் தேவை என்பதை வலியுறுத்தி உணர வைத்து பாடு பட வேண்டும் ! இவர் நல்ல சிந்தனை வாதி!சொந்த வாழ்க்கையில் எவராலும் இவரைக் குறை கூற முடியாது !சிறந்த பண்பாளர் ! படித்த ,மனித நேயம் உள்ள திறமையாகத் தன் கருத்துக்களை கூற வல்ல தலைவர்! இவரைத் தவிர வேறு எவருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு தலைமை தாங்க அருகதை இல்லை ! இவர் முயன்றால் இது சாத்தியம் ! எப்பொழுது முழு ஒற்றுமை ஏற்பட்டு சுமார் 20% வோட்டு வங்கி இவர் சொற்படி நடக்கத் தொடங்குமோ அப்பொழுது தான் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரைவாக விடிவும் , முன்னேற்றமும் கிடைக்கும் ! செய்வாரா இந்தத் திருமா?[/ஃஉஒடெ] well said brother your comments are correct all three dalit groups are separated each other,this is main reason for their suppression, all three groups thinking they are best, when they realise the truth then only they will come forward
Quote
 
 
-3 #31 வால்டர் வணங்காமுடி 2011-10-01 11:06
[ஃஉஒடெ நமெ="ற். கனி"]திருமா கட்சியில் நிறைய பேர் கட்ட பஞ்சாய்த்து வேலையில் இறங்கி உள்ளனர். அது எப்ப நிக்கும் என்று கேட்கவும்? இவர் வி.சி நிர்வாகிகளை கட்ட பஞ்சாயத்தில் இறங்க வைத்து தான் தலித்துகளை முன்னேற்றுவாரா? வேறு நல்ல வழிகளை போதிப்பாரா?[/ஃஉஒடெ]


திருமாவின் கட்சி கட்டபஞ்சாயத்து செய்வது கண்டத்துக்கு உரியது தான். இருப்பினும் ஒரு சில கேள்விகளுக்கு 'கனி' பதில் சொன்னால் நல்லது?
1. தமிழ்நாட்டில் கட்டபஞ்சாயத்து செய்யாத எந்த கட்சியாவது இருக்கிறதா?
2. அனைத்து கட்சிகளும் கட்ட பஞ்சாயத்தை செய்கிறது என்றால், வி.சி யை மட்டும் கட்டபஞாயத்து கட்சி என்று விளிப்பதன் நோக்கம் என்ன?
Quote
 
 
+6 #30 ranramani 2011-10-01 11:00
Have you done any usefull work to your own community
Quote
 
 
+2 #29 manickam.vck 2011-09-30 22:23
Quoting திமிரன்:
அடிப்பட்ட பாம்பு...... தடவினாலும் தண்ணீர் குடுத்தாலும் எழ முடியாது.... தலித்துக்கு மருத்துவர் கிருஷ்ணசாமிதான் பாதுகாப்பு......

brother dr krishnasamy and dr thiuma must unite together and fight against atrocities among dalit people,we will support them
Quote
 
 
-4 #28 manickam.vck 2011-09-30 22:18
Quoting santhosh thala fan:
தயவு செய்து பச்சோந்தி போல் வாழாமல் மனிதராக வாழ்வீரா திருமா, மக்கள் ஏமாளிகள் அல்ல திருந்துஙகள்

brother u are not uderstood thiruma and his vck
Quote
 
 
-2 #27 manickam.vck 2011-09-30 22:15
Quoting SUTHIRAN:
இவர் ஆரம்ப நாட்களில் இவருடைய சமுதாயத்திற்கு நல்ல முறைகளில் தொண்டு புரிந்த மரியாதைக்குரிய தலைவராகவே விளங்கினார். எப்பொழுது அரசியல் பதவி ஆசைப் பிடித்து சேராத இடங்களான அதிமுக மற்றும் தி மு க பக்கம் சேர்ந்து, ஈழத்தமிழர்களுக் கு எதிராக உள்ள காங்கிரஸுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஓட்டு வேட்டை ஆடினாரோ அன்றே இவர் அரசியலில் "வெறுமா" ஆகிவிட்டார். இவர் தொடர்ந்து ஜாதி அரசியல் தான் செய்ய வேண்டும் . அதில் தவறேதும் இல்லை !ஏனெனில் இவர் சார்ந்த சமுதாயத்தில் இவரை விட்டால் வேறு நல்ல தலைவரே இல்லை. இவருடைய சமுதாயம் இன்னும் முன்னேற இவருடைய உழைப்பு கட்டாயம் தேவை. முதல் முதலில் இவர் அரசியல் ஆசையை கைவிட்டு, இவருடைய பறையர் சமுதாயத்துடன் மற்ற தாழ்த்தப்பட்ட பள்ளர், அருந்ததியர் மற்றும் வண்ணார் சமூகங்களையும் ஒன்றாக இணைத்து , தாங்கள் அனைவரும் ஒரே தாழ்த்தப்பட்ட இனம் , தமக்குள் ஒற்றுமை , சமூக இணைப்பு (திருமணங்கள் உட்பட) சமத்துவம் தேவை என்பதை வலியுறுத்தி உணர வைத்து பாடு பட வேண்டும் ! இவர் நல்ல சிந்தனை வாதி!சொந்த வாழ்க்கையில் எவராலும் இவரைக் குறை கூற முடியாது !சிறந்த பண்பாளர் ! படித்த ,மனித நேயம் உள்ள திறமையாகத் தன் கருத்துக்களை கூற வல்ல தலைவர்! இவரைத் தவிர வேறு எவருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு தலைமை தாங்க அருகதை இல்லை ! இவர் முயன்றால் இது சாத்தியம் ! எப்பொழுது முழு ஒற்றுமை ஏற்பட்டு சுமார் 20% வோட்டு வங்கி இவர் சொற்படி நடக்கத் தொடங்குமோ அப்பொழுது தான் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரைவாக விடிவும் , முன்னேற்றமும் கிடைக்கும் ! செய்வாரா இந்தத் திருமா?

well said brother, u are correct thiruma is only leader for the dalit
Quote
 
 
+26 #26 பத்மநாபன் 2011-09-30 21:16
இப்படிப்பட்ட திருமாவிற்கு அனாவசியமாக சவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது . இவர்களைப் போன்றவர்களை சவுக்கு கையில் எடுத்தால், எங்களைப் போன்றவர்கள் சவுக்கிலிருந்து விடுபட வேண்டியிருக்கும ் என நினைக்கிறேன்.
Quote
 
 
+26 #25 பத்மநாபன் 2011-09-30 21:13
ஒடுங்கி கிடக்கும் தலித் மக்களை கரையேற்ற கட்சி தொடங்கியதாக கூறிய திருமா, அவர்களை கரைசேர்க்காமல், அவர்களின் ஓட்டை வைத்துக் கொண்டு ஈன அரசியல்வாதிகளுட ன் கூட்டணி வைத்துக் கொண்டு பிணந்தின்னி கழுகுபோல் திரிகிறார். அடங்க மறு; அத்து மீறு என தனது தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுத்த திருமா, இலங்கைக்கு சென்று இன அழிவுக்கு காரணமாக ராஜபக்சேவுடன் அடங்க மறுக்காமல்; அத்துமீறாமல் விருந்து உண்டு வந்ததை மறக்க முடியுமா? உண்மையான பிரபாகரன் தம்பியாக இருந்தால் ராஜபக்சேவின் கையை குழுக்கியிருப்ப ாரா? அவர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டிருப்பாரா? இலங்கையில் இலங்கை அரசு கொடுத்த உணவை உண்ணாமலே வந்திருந்தால் அது தான் திருமாவின் உண்மையான உண்ணாவிரதமாக இருந்திருக்கும் . ஆனால் செய்தாரா திருமா?
Quote
 
 
-15 #24 udayasooriyan 2011-09-30 20:26
குறு நரிகளின் வினாக்களுக்கு அரிமா வின் பதில் இங்கே...
http://www.youtube.com/watch?v=ZAkFt2hTBK0&feature=related
Quote
 
 
-25 #23 udayasooriyan 2011-09-30 19:45
இங்கே வாந்தி எடுக்கும் அரைவேக்காடு அறிவு ஜீவிகளுக்கு அண்ணனின் பதில் இங்கே.

http://www.youtube.com/watch?v=jXxriTqSqkw&feature=related
Quote
 
 
+15 #22 R. Kani 2011-09-30 18:48
திருமா கட்சியில் நிறைய பேர் கட்ட பஞ்சாய்த்து வேலையில் இறங்கி உள்ளனர். அது எப்ப நிக்கும் என்று கேட்கவும்? இவர் வி.சி நிர்வாகிகளை கட்ட பஞ்சாயத்தில் இறங்க வைத்து தான் தலித்துகளை முன்னேற்றுவாரா? வேறு நல்ல வழிகளை போதிப்பாரா?
Quote
 
 
+4 #21 T.Indran 2011-09-30 16:08
திருமா ஒரு அறிவாழி நல்ல பேச்சாளர். ஆனால் கலைங்கர் தவறான வழியில் செல்கிறார் என்று நன்கு தெரிந்தும் வகை தொகை இல்லாமல் ஜால்ரா அடித்தது இவர் செய்த பிழை.
Quote
 
 
+10 #20 Veththu VEttu 2011-09-30 14:26
[ஃஉஒடெ நமெ="ராசா"]ராமதாஸ் எப்படி ஒரு ஜாதி வியாபாரியோ அப்படியே இந்த திருமாவளவனும் ஒரு ஜாதி வியாபாரி தான். சவுக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுக்கிறது.[/ஃஉஒடெ]

இந்த ராசா என்ன சாதி. இவர் சாதி மறுப்பு கல்யானம் தான் பன்னுவார். ஒன்னா கூடி குலாவுவார். இவர்கள் எல்லாம் பேப்பர் (கழுதைப்) புலிகள்.
Quote
 
 
+7 #19 kader 2011-09-30 12:09
This questions are help to thiruma.he will prepair good answer for these question.dont leak question.
Quote
 
 
+45 #18 வால்டர் வணங்காமுடி 2011-09-30 11:26
திருமாவிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்:

1. முத்துகுமாரை நினைவிருக்கிறதா ?

2. தாழ்த்தப் பட்ட ச்முகத்தில் உள்ள அனைத்து சாதிகளும் குறைந்த பட்சம் அவைகளுக்குகாகவே சரிசமமாக நடத்தப் படுவதில்லை. உதாரணமாக 'புதிரை வண்ணார்' எனப்படும் தாழ்த்தப் பட்ட சமூகம், 'பள்ளர்' போன்ற மற்ற தாழ்த்தப் பட்ட சமூகத்தினருக்கு அடிமையாகத் தான் இன்றும் நடத்தப் படுகிறது. குறைந்தபட்சம் 'தாழ்த்தப் பட்ட' சமூக மட்டத்திலாவது சமதர்மத்தை நிலைநாட்ட உங்களிடம் வேலைத் திட்டம் உள்ளதா? இது சாத்தியம் இல்லை என்றால் மற்ற சமூகம் 'தாழ்த்தப் பட்ட சமூகத்தின்' மீது நடத்தும் அடிமைத் தனத்தை எதிர்க்க உங்களுக்கோ, உங்களை போன்றோருக்கோ எந்த அருகதையும் கிடையாது. ஒத்துகொள்கிறீர் களா?

3.தாழ்த்தப் பட்ட சமூக பிரதிநிதிகள் எப்போதும் ஒன்று சேரவண்ணம் ந்டத்தப் படும் அரசியியல் விளையாட்டினை நீங்கள் புரிந்துவைத்துள ்ளீர்களா? உதாரணத்திற்கு, "இதுவரை நடந்த எந்த தேர்தலிலும்" நீங்களோ, கிருஷ்ணசாமியோ ஒரே கூட்டணியில் இருந்தது இல்லையே ஏன்? இது எதேச்சையாக நடந்ததா இல்லை திராவிட கட்சிகளின் திட்டமிட்ட செயலா?

4.வன்னியர்கள் இந்திய அரசியல் பணிகளில் குறிப்பாக ஐ.ஏ.எஸ் போன்ற பணிகளில் இடம்பெற மருத்துவர்.ராமதாசு பயிற்சி கூடங்கள் நடத்துகிறார். அதன் பலன் பின்வரும் காலங்களில் தெரியும். அதுபோல 'தாழ்த்தப் பட்ட' ச்மூகத்திற்கு இதுவரை தாங்கள் செய்துவ்ரும் நிகழ்கால,எதிர்க ால திட்டங்கள் எவை எவை?

5.ஈழத்தில் போர் உக்கிரமாக நடக்கும்போது போரின் கவனம் சிதறுவதாலும், உயிர்காப்பு கருதியும், போராளிகளுடனே இறுதிவரை பயணம் செய்த சுமார் 1500 பொதுமக்களை கடல் வழியாக த்மிழகத்தில் தரையிறக்க உங்களுடன் பேசி ஒரு முயற்சி நடந்ததாக சொல்லப் படுகிறது. நீங்களும் 'இதோ கேட்டுசொல்கிறேன ்' என்று 'தமிழின காவலர்' அன்றைய முதல்வர் கருணாநிதியுடன் கலந்தாசித்ததாகவ ும் சொல்லப் படுகிறது. இறுதியில் நீங்கள் எந்த முடிவும் எடுக்காமல் விட்டதாகவும் சொல்லப் படுகிறது. அந்த 1500 பேரும் மரணத்தை தழுவியிருக்கவேண ்டும். இந்த நிகழ்வு குறித்தும், ஏன் எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப் படுத்தவும்.
Quote
 
 
+43 #17 http://koothadivedda 2011-09-30 09:07
திருமா அவர்கள் மீது ஆரம்பகாலத்தில் தமிழகத்திலும் சரி ஈழத்தமிழர்களிடத ்திலும் ஒரு அபார நம்பிக்கை இருந்தது உண்மை. ஆனால் அந்த எழுச்சி ஏற்படுத்திய போதை திருமா அவர்களின் போக்கை மாற்றி பூச்சியத்தில் கொண்டுசேர்த்திர ுக்கிறது. இனி அவரிடம் பேட்டி காண்பது அவருக்கோ மக்களுக்கோ எந்தப்பலனையும் தரப்போவதில்லை.
Quote
 
 
+15 #16 பத்மனாபன் 2011-09-30 07:22
திருமாவின் ச்ந்தர்பவாத அரசிய்லைத் தவிர்தண்து பார்க்க வேர்ண்டும். ஒரு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்பின் பிரதினிதி என்று அச்ச்முதாய மக்க்ளே ஏற்றுக்குகொன்டு ள்ளனர். அவரிடம் பேட்டி கான்பத்ன மூலம். சில உண்மைகளும், நண்மைகளும் வெளிப்படும். தனது தலித் விடுதலை என்பதை அவர் கை கழுவி விட்டது ஏன் என்று கேலுங்கள். எப்போது திருமணம் செய்யப்போகிற்ர் ர் என்பதையும் கேலுஙகல்.
Quote
 
 
+46 #15 sundarwipro 2011-09-30 03:51
சவுக்கு அப்படியே "தமிழகம் முழுவதும் கட்ட பஞ்சாயத்து செய்வதையே ஒரு தொழிலாக செய்து கொண்டு இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை ஏன் கண்டிபதில்லை" என்று ஒரு கேள்வியையும் சேர்த்து கேளுங்கள்.
Quote
 
 
+17 #14 SUTHIRAN 2011-09-30 03:18
இவர் ஆரம்ப நாட்களில் இவருடைய சமுதாயத்திற்கு நல்ல முறைகளில் தொண்டு புரிந்த மரியாதைக்குரிய தலைவராகவே விளங்கினார். எப்பொழுது அரசியல் பதவி ஆசைப் பிடித்து சேராத இடங்களான அதிமுக மற்றும் தி மு க பக்கம் சேர்ந்து, ஈழத்தமிழர்களுக் கு எதிராக உள்ள காங்கிரஸுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஓட்டு வேட்டை ஆடினாரோ அன்றே இவர் அரசியலில் "வெறுமா" ஆகிவிட்டார். இவர் தொடர்ந்து ஜாதி அரசியல் தான் செய்ய வேண்டும் . அதில் தவறேதும் இல்லை !ஏனெனில் இவர் சார்ந்த சமுதாயத்தில் இவரை விட்டால் வேறு நல்ல தலைவரே இல்லை. இவருடைய சமுதாயம் இன்னும் முன்னேற இவருடைய உழைப்பு கட்டாயம் தேவை. முதல் முதலில் இவர் அரசியல் ஆசையை கைவிட்டு, இவருடைய பறையர் சமுதாயத்துடன் மற்ற தாழ்த்தப்பட்ட பள்ளர், அருந்ததியர் மற்றும் வண்ணார் சமூகங்களையும் ஒன்றாக இணைத்து , தாங்கள் அனைவரும் ஒரே தாழ்த்தப்பட்ட இனம் , தமக்குள் ஒற்றுமை , சமூக இணைப்பு (திருமணங்கள் உட்பட) சமத்துவம் தேவை என்பதை வலியுறுத்தி உணர வைத்து பாடு பட வேண்டும் ! இவர் நல்ல சிந்தனை வாதி!சொந்த வாழ்க்கையில் எவராலும் இவரைக் குறை கூற முடியாது !சிறந்த பண்பாளர் ! படித்த ,மனித நேயம் உள்ள திறமையாகத் தன் கருத்துக்களை கூற வல்ல தலைவர்! இவரைத் தவிர வேறு எவருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு தலைமை தாங்க அருகதை இல்லை ! இவர் முயன்றால் இது சாத்தியம் ! எப்பொழுது முழு ஒற்றுமை ஏற்பட்டு சுமார் 20% வோட்டு வங்கி இவர் சொற்படி நடக்கத் தொடங்குமோ அப்பொழுது தான் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரைவாக விடிவும் , முன்னேற்றமும் கிடைக்கும் ! செய்வாரா இந்தத் திருமா?
Quote
 
 
+29 #13 Padman 2011-09-30 03:16
சவுக்கு... நீங்க கேட்க இருக்கிற எந்த கேள்வியும் தலித் மக்களின் துன்பம் துடைக்க துணை போகப்போவதில்லை. இதுபோல் எழுதி வைத்து கேள்வி கேட்பதும், கருணாநிதியின் கேள்வி பதிலும் ஒன்றுதான். நீங்கள் பேட்டி எடுக்கப்போகும் நபரிடம் முதல் கேள்விக்கான பதிலை வைத்துதான் அடுத்த கேள்வி இருக்க வேண்டும்.

என்ன சவுக்கு... எடக்கு மடக்கா எதாவது கேள்வி கேட்டு பிறகு அடங்க மறு அத்து மீறு...
Quote
 
 
+35 #12 USV 2011-09-30 02:43
பிரபாகரன், சே குவேரா , சிறுத்தை போன்ற போஸ்டர்கள் போர் அடித்து விட்டன இந்த வருடம் இடி அமீன், கடாபி, நீல் ஆம்ஸ்ட்ராங் , திமிங்கலம் என்று எதாவது புதுசா ட்ரை பண்ணலாமே?
Quote
 
 
+5 #11 Bharathi s 2011-09-30 00:02
பா ம் க மட்ரும் இன்ன பிர தலித் சிருபான்மை அமைப்புகலை இனைத்து ஆட்சி அதிகாரத்தை கைபட்ர தடயாக இருப்பதென்ன?. ஐந்த கெல்வியும் இனைக்கவும் . அடிமைதனத்தை உடைதெரிய விரும்பும் நேஙல் திராவிட கட்சிகல் இடம் அடிமையாய் பொஇ இருப்பதவிட தனியாக இருந்து வென்ட்ரு காடும் துனிவு இல்லாமல் இருப்பது வீரமா?
Quote
 
 
+29 #10 Nalaya Prime Ministe 2011-09-29 23:50
பில்டிங் ச்ட்ராங், பேச்மன்ட் வீக் - இது வடிவெலுவுக்கு பொருந்துமா இல்லை உஙலக்கு பொருந்துமா.?
Quote
 
 
+66 #9 raasaa 2011-09-29 23:22
ராமதாஸ் எப்படி ஒரு ஜாதி வியாபாரியோ அப்படியே இந்த திருமாவளவனும் ஒரு ஜாதி வியாபாரி தான். சவுக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுக்கிறது.
Quote
 
 
+23 #8 ஊர்க்குருவி. 2011-09-29 22:23
பாவம்! அடங்க மறுப்போம் துருமா , அதுவும் இப்போ தாத்தாவால் கைவிடப்பட்ட நிலையில் திக்குத்தெரியாத காட்டில நிக்கிறாரு. இருந்தும் கேள்விகளை இடுக்கு முடுக்கா கேக்காதீங்க. கைவசம் இருக்கிற ஒரே ஒரு எம்பி பதவியையும் ராஜினாமா பண்ணிடுவாரு.
Quote
 
 
+12 #7 சிவராமன் 2011-09-29 21:48
அயோத்திதாசர் குறித்த தங்கள் கருத்து என்ன ? எழுத்தாளர் ஜெயமோகன் அவரை தமிழின் முதல் சிந்தனையாளர் என்கிறார் , ஆனால் தங்கள் சாதி மற்ற தலித் சாதிகளை விட உயர்ந்தது என தாசர் சொன்னதை எதிர்க்கிறார் ,

அயோத்திதாசர் படைப்புகளை வாசித்ததுண்டா ? அயோத்திதாசர் குறித்து ஜெயமோகனின் கட்டுரைகள் , எண்ணங்கள் குறித்த உங்கள் கருத்து என்ன ?
Quote
 
 
+20 #6 chockar 2011-09-29 21:40
முதலில் தொல் காப்பியத்திலிரு ந்து வருவோம்- சங்க காலத்தில் திராவிட இனம் ஒவ்வொரு குழுவாகவும்(சமூ கமாக)அதற்கென ஒரு தலைவர் அவர்களை ஆட்சி செய்ய ஒரு அரசர் என்று இருந்தது அப்போது தலித் சமூகம் ஒடுக்கப்பட்டதாக இருந்ததா? நீங்கள் சத்குரு அவர்களுடன் உரையாடியிருக்கி றீர்கள்,ஆகவே ஆன்மிக விசயம் முதிர்சியிருக்க ுமென நம்புகிறேன்.என் கேள்வி இதுதான் - அந்த காலத்திலிருந்து தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அறிவு,பண்பாடு,ஆ ன்மிகம்,இப்படிப ்பட்ட விசயங்களில் முன்னெடுத்து வழிகாட்டும் தலைமை அமையவில்லையா? பண்டைய சமுதாயத்தில் திராவிட இனத்தில் தலித் மக்களை பிரித்து ஒடுக்கிவைத்ததாக தெரியவில்லை செய்யும் வேலைகளில் ஏற்ற தாழ்வு இருந்தாலும் தலித் சமூக தலைவர்கள் அந்த இனத்திற்கு சிறப்பான வழிகாட்டல்களை அமைத்து தரவில்லை.இன்றும் கூட அரசியல் கணக்கு போடுகிறார்காளே தவிர அந்த மக்களுக்கு நல்ல வழிகாட்டுதல்களை யாரும் செய்யவில்லை என்பது என் எண்ணம்.என்ன சொல்கிறீர்கள்?
Quote
 
 
-12 #5 திமிரன் 2011-09-29 21:35
அடிப்பட்ட பாம்பு...... தடவினாலும் தண்ணீர் குடுத்தாலும் எழ முடியாது.... தலித்துக்கு மருத்துவர் கிருஷ்ணசாமிதான் பாதுகாப்பு......
Quote
 
 
+5 #4 rkcc 2011-09-29 21:32
நல்ல முயர்சி வெல்க

ரஜினி
Quote
 
 
-2 #3 rkcc 2011-09-29 21:31
உஙலின் முயர்சி வெல்க
Quote
 
 
+32 #2 santhosh thala fan 2011-09-29 21:30
தயவு செய்து பச்சோந்தி போல் வாழாமல் மனிதராக வாழ்வீரா திருமா, மக்கள் ஏமாளிகள் அல்ல திருந்துஙகள்
Quote
 
 
+4 #1 pattarmadam 2011-09-29 21:11
From the inception of independence of India, there have been many a movment for the betterment of dalits formed in Tamilnadu. No such movement lasted for consecutive years. Vai.Balasundaram's Ambedkar Iyakkam is an example. Do you think that your VCK would last long for the generations to come? How and wha is your strategy?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 158 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11093
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week68670
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month290930
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13207297