|
தமிழக காவல்துறையில் வம்புச் செல்வன் என்று ஒரு அதிகாரி இருக்கிறார். இந்த வம்புச் செல்வன்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான செந்தில்வேலன் ஐபிஎஸ். இவர் எம்பிபிஎஸ் படித்த டாக்டர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே எஸ்.பியாக பணியாற்றிய அனுபவம் இருந்ததால் இவரை சிறப்புப் பணியாக (!!!!????) செப்டம்பர் 11 அன்று பரமக்குடிக்கு அனுப்பினார்களாம்.

வம்புச்செல்வன் மருத்துவம் முழுமையாக படித்தாரா, இல்லை அரியர்ஸ் வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால் உயிர்காக்கும் படிப்பை படித்து விட்டு, இப்படி கொலைகாரனாக மாறுவாரா ? தன் கண் முன்னே காவல்துறையினர் வெறியாட்டம் போடுவதை இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாரா ? இவர் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்கப் படப்போவதில்லை. இறந்தவர்களுக்கு ஒரு நியாயமும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் கொலைகாரன் என்ற பட்டம் மட்டும் இவரை விட்டு என்றுமே அகலாது.
காவல்துறையின் நடவடிக்கையால் மொத்தம் 6 பேர் இறந்திருக்கின்றனர். இவர்களுள் 4 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிலும், இருவர் தாக்குதலிலும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்தேறிய அன்றே அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, “திரு. ஜான் பாண்டியன் கைதினைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி நகர போக்குவரத்தினை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர். இதனையடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.” என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் பரமக்குடியில் சென்று விசாரித்தால் உண்மைக்கு நேர்மாறாக இருக்கிறது. மேலும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த போது எடுக்கப் பட்ட வீடியோ, காவல்துறையினரின் கூற்றைப் பொய்யாக்குகிறது.
கடந்த 10 ஆண்டுகளாகவே, இமானுவேல் சேகரனின் நினைவு தினத்திற்கு பரமக்குடிக்கு வருகை தரும் தலித் மக்களின் எண்ணிக்கை வளர்ந்தே வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக 2 முதல் 3 லட்சம் வரை மக்கள் வருகை தந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஜான் பாண்டியனின் வரவால் மக்கள் கூட்டம் மேலும் அதிகமாக எதிர்ப்பார்க்கப் பட்டிருக்கிறது.
சம்பவம் நடந்த அன்று காலை 8.30 மணி முதலே மக்கள் பெருமளவில் திரண்டு, இமானுவேல் சேகரனின் சமாதியில் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்திருக்கின்றனர். ஜான் பாண்டியனின் வருகையை எதிர்ப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். சுமார் 10.30 மணி வாக்கில் ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் கைது செய்யப் பட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இந்தத் தகவல், பரமக்குடியில் கூடியிருந்தவர்களிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஐந்து முனை சாலையில் முதலில் சுமார் 60 பேர் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.
இதற்குப் பிறகு வீடியோவில் காட்சிகள் விரிகின்றன. ஐந்து முனை சாலையில் அந்தக் கும்பல் அமர்ந்ததும், எஸ்.பி செந்தில் வேலன் தலைமையிலான 100 பேர் கொண்ட காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இதன் நடுவே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களே மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசுகின்றனர். ஆனால் மறியல் செய்பவர்கள் கலைவதாக இல்லை. இந்த மறியலால் பெரிதும் பாதிக்கப் படப் போவது, இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு வருகை தரும் தலித் இன மக்கள் தான். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 11 அன்று, காலை 5 மணி முதலே பரமக்குடி நகரத்தை வந்தடையும் அத்தனை சாலைகளிலும் பொதுமக்களின் வருகை தடை செய்யப் பட்டுள்ளது. இமானுவேல் சேகரனின் நினைவிடம் பரமக்குடி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால், ஏராளமான கூட்டம் கூடும் ஒரு இடத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக, கடந்த 10 ஆண்டுகளாகவே செப்டம்பர் 11 அன்று போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்றும் போக்குவரத்து நிறுத்தப் பட்டு, இமானுவேல் சேகரனின் நினைவு நான் நிகழ்ச்சிக்கு வருகை தரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க பட்டுள்ளன.
இந்நிலையில் வீடியோ காட்சிகளின் படி, சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தலித் தலைவர்கள், சாலை மறியல் செய்வதால் நினைவு நாள் நிகழ்ச்சி பாதிக்கப் படும், ஆகையால் கலைந்து செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் மறியல் செய்யும் கும்பல், ஜான் பாண்டியனை விடுதலை செய்யாமல் கலைந்து செல்ல மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. இதற்குள், ஜான் பாண்டியன் கைது பற்றிய செய்தி பரவி, மேலும் மக்கள் கூட்டம் ஐந்து முனை சாலையில் கூடிய வண்ணம் இருக்கின்றனர்.
காவல்துறையினர் மறியல் செய்த கும்பலை மடக்கி, ஒரு பக்கமாக ஒதுக்கி விட்டு, வாகனங்களை அனுமதிக்கின்றனர். வருகின்ற வாகனங்கள் அனைத்தும் நிகழ்ச்சிக்கு வரும் ஜான் பாண்டியன் கட்சிக் கொடியோடு வருகின்றன. சிறிது நேரம் கழித்து, கொடி ஏதும் இல்லாமல் வந்த ஒரு வாகனத்தை கும்பல் மறிக்கின்றது. அந்தக் கும்பலிடம், செந்தில் வேலன் தலைமையிலான போலீஸ் டீம் பேசுகிறது. ஒரு சில வினாடிகளிலேயே தடியடி நடத்த உத்தரவிடப்பட்டு காவல்துறையினர் கடுமையாக தடியடி நடத்துகின்றனர். கும்பல் பல்வேறு திசைகளில் சிதறிச் செல்கிறது.
தடியடிக்கு பின்பு கலைந்து சென்ற கும்பல், கற்களை வீசித் தாக்கத் தொடங்குகிறது. ஒரு வயதான பெரியவர் ஒரு பெரிய சவுக்குக் கட்டையை எடுத்து காவல்துறையினரை நோக்கி வீசுகிறார். அந்த கட்டை யார் மீதும் படாமல், தரையில் விழுகிறது. இதற்குப் பிறகு நடக்கும் துப்பாக்கிச் சூட்டில், சவுக்குக் கட்டையை வீசிய அந்தப் பெரியவர் குறிபார்த்துச் சுடப் படுகிறார். இவர்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் பலி.
தடியடியையும், துப்பாக்கிச் சூட்டையும் கண்டு உயிருக்கு பிழைத்து தப்பி ஓடி, ஆங்காங்கே இருந்த சந்துகளில் நுழைந்து கொண்டவர்கள் காவல்துறையினரால் வளைக்கப் பட்டு நையப் புடைக்கப் படுகிறார்கள். இவ்வாறு காவல்துறையினரிடம் சிக்கியவர்களில் ஒருவர் வெள்ளைச் சாமி என்ற 64 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் வேட்டி கட்டிக் கொண்டு, ஜான் பாண்டியன் கட்சியின் நிறத்தில் ஒரு ரிப்பனை தலையில் கட்டிக் கொண்டு இருக்கிறார். அவரை தர தர வென இழுத்து வரும் காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். அவர் வேட்டி அவிழ்ந்து விழுகிறது. வேட்டியைக் கூட எடுக்க விடாமல் தொடர்ந்து அடித்து இழுத்து வருகின்றனர். காவல்துறை சீருடை அணியாமல் காவல்துறையினரோடு இருக்கும் ஒருவர் அந்தப் பெரியவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். பிறகு அவருக்கு சராமரியாக அடி விழுகிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரும் வெள்ளைச் சாமியை சந்தித்த போது அவர், . “ஜான் பாண்டியனை கைது செய்த விபரம் கேள்விப் பட்டதுமே நான் காவல்துறையினரை அணுகி, ஜான் பாண்டியனை ஏன் கைது செய்தீர்கள். உடனடியாக விடுதலை செய்யுங்கள். நிகழ்ச்சியை சிறப்பாக நடக்க அனுமதியுங்கள்” என்று கேட்டேன். இதைப் பார்த்து கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தடியடி தொடங்கியதும், என்னை அடையாளம் கண்டு, என்னையாடா கேள்வி கேட்கிறாய் என்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே என்னை அடித்தார். எனக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு இரவு 10.30 மணிக்கு என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்” என்றார்.
பரமக்குடியில் சம்பவ தினத்தன்று இருந்த பொதுமக்களிடம் பேசிய போது, மதியம் 2 மணிக்கு மேல், காவல்துறை கூடுதல் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டு, ஐந்து முனை சாலையை இணைக்கும் அத்தனை சாலைகளிலும் ரோந்து சென்று கையில் கிடைத்தவர்களையெல்லாம் சராமரியாக தாக்கியிருக்கிறார்கள். இவ்வாறு தாக்கப் பட்டதில், பரமக்குடி வாட்டர் டேங்கின் வாட்ச் மேனான 60 வயதான பாண்டியும் அடக்கம். அவரிடம் பேசிய போது “வாட்டர் டேங்கில் நான் மாலை 4.30 மணிக்கு நின்று கொண்டிருந்த போது, 10 பேர் கொண்ட போலீசார் சூழ்ந்து கொண்டு என்னை கட்டைகளாலும் லத்தியாலும் தாக்கினர். எனக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்றார். இவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். பிற்பகலுக்கு மேல் நடந்த இந்தத் தாக்குதலில் தான், இருவர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்கள் யார், உயிரோடு இருப்பவர்கள் யார் என்பது தெரியாமலேயே, மூன்று உடல்களை இளையான்குடி மார்ச்சுவரியில் போட்டு விட்டு சென்றிருக்கின்றனர். அதில் குமார் என்ற ஒருவர் இரவு 11 மணிக்கு தண்ணீர் என்று கத்தியதும் தான், அவரை எடுத்து சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஒரு புகாரை அளித்து அதன் பேரில் எப்ஐஆர் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அந்தப் புகாரில் சிவக்குமார் “இன்று இமானுவேல் சேகரனின் 54வது நினைவு தினம் காலை 6 மணி முதல் அனுசரிக்கப் படுகிறது. இந்த நிகழ்ச்சி, பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் மற்றும் தியாகி இமானுவேல் பேரவை என்ற அமைப்புகளால் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான இமானுவேல் ஆதரவாளர்கள் பரமக்குடிக்கு வந்து, இதில் கலந்து கொண்டு மருதுபாண்டிநகரில் உள்ள அவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அது போலவே இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது. வழக்கமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தலித் அமைப்புக்களின் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்துவர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. (அப்புறம் ஏன் சார் கலவரம் நடந்துச்சு ?) டாக்டர்.செந்தில்வேலன் ஐபிஎஸ் (வம்புச் செல்வன்) அவர்கள் ஐந்து முனை சந்திப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் சுமார் 1000 பேர் ஐந்து முனை ஜங்ஷனில் கூடி எங்கள் தலைவர் ஜான் பாண்டியனை உடனே விடுதலை செய் என்று கோஷம் போட்டு, போலீசாரை நோக்கி ஆபாசமாக திட்டினர். உடனே எஸ்பியும், பரமக்குடி தாசில்தாரும் அந்த கலவர கும்பலைப் பார்த்து இது சட்டவிரோதமாக கூடிய கூட்டம் என்று அறிவித்து உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கலவரக் கும்பல் கலைந்து செல்லாமல் வாகனங்கனை மறித்து வாகனங்களையும் கடைகளையும் சேதப்படுத்த முயன்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தாசில்தார் வாய்மொழியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவர கும்பலை கலைக்குமாறு உத்ததரவிட்டார். அதன் படி ஆயுதப் படை காவல்ர்கள் பிசி 8326 மணிமாறன், பிசி 29442 வேம்பு செல்வம், பிசி 1834 சுந்தரபாண்டி மற்றும் பிசி 1197 சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலவர கும்பலை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் கலவர கும்பல் கலைந்து செல்லாமல், பின்னால் பெயர் கேட்டுத் தெரிந்த கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தக்கனி உள்ளிட்ட (இவர்கள் துப்பாக்சிச் சூட்டில் இறந்து போனவர்கள்) பலர் கற்களை வீசி வன்முறையில் இறங்கினர்.
உடனே தாசில்தார் லத்தி சார்ஜ் செய்து கலவர கும்பலை கலைக்க உத்தரவிட்டார். ஆனால் கலவர கும்பல் கலைந்து செல்லாமல் கற்களாலும், கட்டைகளாலும் தாக்கியது. பிறகு லேசான தடியடிப் பிரயோகம் நடைபெற்றது. காவல்துறையினர் முதுகளத்தூர் சாலையிலிருந்து பின்வாங்கி ஐந்து முனை சந்திப்புக்கு வந்தனர். அதற்குள் கலவர கும்பல் 14 வாகனங்களுக்கு தீ வைத்தது.
பரமக்குடியிலிருந்து வந்த தீயணைப்பு வாகனமும் தடுத்து நிறுத்தப் பட்டு தீ வைக்கப் பட்டது. இந்த தாக்குதலில் டிஐஜி சந்தீப் மிட்டல் தலையிலும், டாக்டர் செந்தில் வேலன் வலது கையிலும், பரமக்குடி டிஎஸ்பி வலது காதிலும், நாங்குநேரி காவல் நிலைய காவலர் செல்வின் செல்வகுமார், குற்றாலம் காவல் நிலைய காவலர் மணி பார்த்திபனூர் காவல் நிலைய கான்ஸ்டபிள் பூமிநாதன், பெண் காவலர் டெய்சி மற்றும் கலைவாணி, சப் இன்ஸ்பெக்டர் நர்மதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கு இடது முக்கையிலும், வயிற்றிலும், காலிலும் காயம் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, பரமக்குடி தாசில்தார் பொதுச் சொத்தையும் உயிரையும் பாதுகாப்பதற்காக துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்க நேரிடும் என்று கூட்டத்தைப் பார்த்து எச்சரித்தார்.
செந்தில்வேலனும் கலவரக்காரர்களை கலைந்து செல்லும் படியும் இல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். கலவரக் கும்பல் கட்டுக்கடங்காமல் தாக்கியபடி இருந்தால் பரமக்குடி தாசில்தார் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்குமாறு எழுத்து பூர்வமான உத்தரவை கொடுத்தார். ராமநாதபுரம் ஆயுதப் படைக் காவலர்களிடம் கலவரத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்துபவர்களை காலுக்கு கீழே சுடும்படி உத்தரவிட்டார். ஒருவர் ஒரு வாகனத்துக்கு தீ வைக்க முயன்று கொண்டிருந்தார். அவரை குறி பார்த்துச் சுடச் சொன்னார் (வண்டி எரிஞ்சா அதுக்காக கொல்லுவீங்களா ?) நான் எனது பிஸ்டலை எடுத்து அந்த நபரை நோக்கி சுட்டேன். அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. ஆனால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கலவரக் கும்பல் தொடர்ந்து கற்களாலும், பெட்ரோல் குண்டுகளாலும் தாக்கியது. காவல் ஆய்வாளர் கலவர கும்பலை நோக்கி 30 முறை சுட்டார். ஆனால் எப்போது துப்பாக்சிச் சூடு நிறுத்தப் பட்டாலும் கலவர கும்பல் வன்முறையாக தாக்கியது. கலவர கும்பல் கலைந்து செல்லாமல் அரசு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துக் கொண்டிருந்தால் நான் என் பிஸ்டலால் கலவர கும்பலை நோக்கிச் சுட்டேன். பிறகு கலவரக் காரர்கள் கலைந்து சென்றனர். மாலை 4 மணிக்கு ஆயுதப் படை ஆய்வாளர் உதவியுடன் எத்தனை முறை சுடப்பட்டது என்று கணக்கு பார்த்த போது 30 ரவுண்டுகள் .303 துப்பாக்கியாலும், 410 மஸ்கட் துப்பாக்கியாலும் பிஸ்டலாலும் சுடப்பட்டது தெரிய வந்தது. (சிவக்குமார் சார், காவல் ஆய்வாளர் 30 முறை சுட்டார் என்று சொல்லி விட்டு மொத்தமே 30 ரவுண்டுன்னு எப்பிடி சார் சொல்றீங்க). காயமடைந்தவர்களை எண்ணிப் பார்த்ததில் 30 நபர்கள் காயமடைந்தது தெரிய வந்தது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படடனர். மேலும் 60 ஆய்வாளர்கள் காயமடைந்து சிகிச்சை எடுக்க உள்ளனர். (60 ஆய்வாளர்கள் எங்க சார் வந்தாங்க பரமக்குடிக்கு ? யாருமே மருத்துவமனைக்கு போனதாக தெரியவில்லையே). போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு நான் காவல்நிலையம் திரும்பினேன். அந்த சம்பவம் பற்றி இந்த புகாரை உங்களுக்கு அளிக்கிறேன். நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று அந்தப் புகார் மனுவில் சிவக்குமார் தெரிவித்திருந்தார். எங்கேயாவது குற்றவாளியே புகார் கொடுப்பதை பார்த்திருக்கிறீர்களா ?
பரமக்குடியில் சம்பவம் நடந்த அன்று எடுக்கப் பட்ட வீடியோ காட்சியில் முக்கிய நிகழ்வுகள், வரிசை மாறாமல் புகைப்படமாக்கப் பட்டு உங்களுக்காக அளிக்கப் படுகிறது.

சாலை மறியல் தொடங்குகிறது

சாலையில் அமர்ந்திருக்கும் மக்கள்.


மறியல் செய்பவர்களுக்கு அருகே வம்புச்செல்வன்.

பேச்சுவார்த்தையை அடுத்து அனுமதிக்கப் படும் வாகனங்கள்



தொடங்கியது தடியடி

வேட்டையாடி திரும்பி வரும் டிஎஸ்பி கணேசன்

தடியடிக்கு பதிலடி

முதல் துப்பாக்கிச் சூடு

போலீஸ் வேனுக்குள் ஒருவரை ஏற்றி நையப் புடைக்கும் போலீசார்

பொதுமக்கள் வேனை நோக்கி வருவதை பார்த்து தெறித்து ஓடும் போலீசார்

கைப்பற்றப் பட்டு துவம்சமாகும் போலீஸ் வேன்

தொடரும் துப்பாக்கிச் சூடு


கைத்துப்பாக்கியோடு டிஐஜி சந்தீப் மிட்டல்

காயம்பட்டு கைத்தாங்கலாக அழைத்து வரப்படும் சந்தீப் மிட்டல்

அழைத்து வரப்படும் 63 வயது முதியவர் வெள்ளைச்சாமி

தொடங்கியது தாக்குதல்

63 வயது முதியவரை சூழ்ந்து தாக்கும் 'வீரர்கள்'

முதியவரை முதுகில் அடிக்கும் வீரன்




மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெள்ளைச்சாமி

தூக்கி வரப்படும் பிணம்


உடல் முழுக்க எலும்பு முறிவுகளோடு இருக்கும் வாட்டர் டேங்க் வாட்ச்மேன்.
இதில் யார் வன்முறையாளர்கள் ?
|
Comments
ய்
எத்தனை துப்பக்கிசுடுகல ் தலித்துகல் மேது?
யெதனை மேல்சாதியினர் மீது என்ன்ட்ரு?...
இதைனை படிக்கும் ஒவ்வருவரும் சாதி பாராமல் மதிப்பிட்டு பார்க்க முடியுமா?
முடிந்தால் ஆசிரியர் அவர்கல் ஒரு டட செகரித்து வாசகர்கலுக்கு தெரிவிக்கவும்...
அப்படியானால், அந்த ‘ஏரியா’ தமிழ்நாட்டு எல்லைக்குள் இல்லையா? அந்த ஏரியாவில் இவர்கள் கூறும் ‘சென்சிட்டிவ்’ இல்லாத மக்களும் வசிப்பதில்லையா?
சவுக்கு ஒரு சுத்த தலித் அதரவு பத்திரிக்கை. இவருக்கு அவர்கள் செய்வது எல்லாம் அரசியல் சட்டப்படி அள்ளிக்கபட்ட உரிமை. அவர்கள் நாட்டை கொளுத்தினாலும் காவல் துறை வேடிக்கை பார்க்கவேண்டும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது அப்படி எடுத்தால் அது மிக பெரிய தேசவிரோத நடவட்டிகை. இவருக்கு அரசு கருணை அடிப்படைஇல் வேலை அளித்தது மிகபெரிய குற்றம். இவர் என்னமோ தான் மிகபெரிய திறமைசாலி என்று நினைத்துகொண்டு எல்லாவற்றையுமே பெரிய மேதவி போல எழுதுகிறார்.இந்த நபர் ஒரு வடிக்கட்டின தலித் அதரவு மனிதன் இவர் போடும் வேஷம் மிக நீண்டகாலம எடுப்படது.
பரமக்குடியில், ஆங்காங்கே அரசு டவுன் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பரமக்குடிக்கு வெளியேயும் கலவரம் தொடர்ந்தது. முதுகுளத்தூரில் கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது . கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை தவிர, பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை .
ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டன. சிக்னல்கள் இயங்காததால், ரயில்கள் ஓடுவது நின்றது. பரமக்குடி பொன்னையாபுரத்தி ல் உள்ள ரயில்வே சிக்னல்களை உடைத்து நொருக்கிய ஒரு கும்பல், ரயில்வே பாதை வீதியைக் கடக்கும் ரயில்வே கேட்டையும் உடைத்தது. அதற்கு அருகிலிருந்த கேட்-கீப்பர் அறையும் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. அடித்து நொருக்கப்பட்டது .
பரமக்குடி ஊடாக ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்ட து. அதன் விளைவாக ராமேஸ்வரம்ஸென்ன ை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்து, வெவ்வேறு மருத்துவமனைகளில ் தங்கியுள்ளனர். சேதமடைந்த சொத்து விபரம் இன்னமும் எடுக்கப்படவில்ல ை.
அரசியல் கட்சிகள் எல்லாம் சரம்சரமாக அறிக்கை விடுகின்றன. நேரம் கிடைத்த அரசியல் தலைவர்கள், நேரில் சென்று அறுதல் தெரிவிக்கின்றனர ். தமிழக அரசு, அறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதுவரை ஐந்துமுனை ரோட்டில் கும்பலாக நின்றிருந்த ஆட்கள் எல்லாத் திசையிலும் ஓடுவதும், திரும்பி வருவதுமாக இருந்தனர். வேடிக்கை பார்க்க நின்ற கூட்டமும் சிதறி ஓடியது. கூட்டத்தில் சிக்கிய பரமக்குடி டி.எஸ்.பி. கணேசனை குறிவைத்த சிலர், நேருக்கு நேராகவே அவரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டனர்.
தரையில் விழுந்த அவர் உடனடியாக எழ முடியாத நிலையில் இருக்க, அவரது தலையின் மீது, பெரிய கல் ஒன்றைப் போட்டு விட்டு, அருகில் நின்றிருந்த போலிஸாரின் கைகளில் சிக்காமல் தப்பி ஓடினர் சிலர். தலையில் காயமடைந்த டி.எஸ்.பி. கணேசனை, அங்கிருந்து சிரமப்பட்டு வெளியே கொண்டுவந்து பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர் மற்றைய போலிஸார்.
இதற்குள் சம்பவம் நடந்த இடத்தில் கல்வீச்சு உக்கிரமடையத் தொடங்கியது. ராமநாதபுரம் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் மீது குறிவைத்து கற்கள் வீசப்பட்டன. காயமடைந்த அவர், நினைவிழந்து வீழ்ந்தார். செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர்.
கலவரம் பெரிதாகிக் கொண்டே போனது. தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்தைக கொண்டு வந்தனர் போலிஸார். கூச்சலிட்டபடியே அந்த வாகனத்துக்கு தீ வைத்தனர் சிலர். அது பற்றி எரியத் தொடங்கியது. அதைப் பார்த்து உற்சாகமடைந்த சிலர், சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிர ுந்த தீயணைப்பு வண்டியை எரித்தனர்.
ஜான் பாண்டியனுக்காக காத்திருந்தவர்க ள் மற்றும் ஆதரவாளர்களைத் திரட்டி, பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில் திரட்டியவர்கள், ரோட்டை மறித்து மறியல் செய்யத் தொடங்கினார்கள். மறியல் செய்யும் ஆட்களிடையே, வன்முறைக்கு தயாராக வந்திருந்த ஆட்கள் சுலபமாக கலந்து கொண்டார்கள். சாலை மறியல் செய்தவர்களின் கோஷங்களில், “காவல்துறையை வெட்டுவோம், ஓடஓட விரட்டுவோம்“ என்ற கோஷங்களும் லைட்டாக புகுத்தப்பட்டன.
ஒரு கட்டத்தில் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் உணர்ச்சி வசப்பட்ட நிலைக்கு கொண்டுவரப்பட்டத ு. இதற்குள் ஐந்துமுனை ரோடு கடந்து, குறிப்பிட்ட சமூகத்தினரால் நன்கு அறியப்பட்ட பெட்டிக்கடை உள்ள சந்தில் மதுபான விநியோகமும் நடந்தது. காவல்துறையினர் மிக சொற்ப அளவிலேயே காணப்பட்டனர். யாரும் யாரையும் தடுக்கவில்லை.
கோஷங்கள் வலுக்கத் தொடங்கி, கூட்டம் ஓரளவுக்கு கட்டுக்கடங்காத நிலைக்குப் போகத் தொடங்கவே, அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் ஸ்பாட்டுக்கு வந்திறங்கினார். சாலை மறியலைக் கைவிடுமாறு கூறி, பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.
அவரது சமாதானப் பேச்சுக்கள் இந்தக் கூட்டத்தில் எடுபடவில்லை. ஆளாளுக்கு கூச்சல் போடத் தொடங்கினார்கள். கூட்டத்துக்குள் ஊடுருவியிருந்த ஆட்கள்வேறு உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்க ள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் காவல்துறையினரைச ் சுற்றி வளைக்கத் தொடங்கியது. அதில் இருந்த ஒருவர், செந்தில்வேலனின் சட்டையைப் பிடித்து இழுத்தார். பதிலுக்கு, செந்தில்வேலன் கையை ஓங்கினார்.
பரமக்குடி, இந்தியா: தென் மாவட்டங்களின் சில பகுதிகளில், வன்முறை அடித்தளம் கொண்ட சில ஜாதிக் கட்சிகளின் செல்வாக்கு சமீபத்தில் சரிந்து வருவதை தடுத்து தூக்கி நிறுத்தும் முயற்சிதான், இந்தக் கலவரத்தின் பேஸ் என்கிறார்கள். அதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில ், இமானுவேல் சேகரன் நினைவு தினம் வசதியாக வந்து அமைந்திருக்கிறத ு.
அன்றைய தினத்தை உபயோகித்துக் கொண்டுள்ளார்கள் .
தமிழக உளவுத்துறை, ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறை வெடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக ஏற்கனவே சென்னைக்கு அறிக்கை கொடுத்திருந்ததா க தெரிகிறது. அத்துடன், நினைவுநாள் நெருக்கத்தில் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் சனிக்கிழமை கொலை செய்யப்பட, காவல்துறை அலர்ட் ஆகியது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டது. கூடவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவும் எடுக்கப்பட்டன.
அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, வெளி மாவட்டங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள், ஜாதிக்கட்சி தலைவர்கள் யாரும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் முடியும்வரை பரமக்குடிக்கு வர காவல்துறை விதித்த தடை.
தடை இருப்பது தெரிந்தும், தூத்துக்குடியில ் இருந்து பரமக்குடிக்கு வர முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், காவல்துறையால் வல்லநாடு அருகே தடுத்து நிறுத்தப்பட்டார ். போலிஸ் தடுத்தும் கேளாமல் பரமக்குடிக்குச் செல்வேன் என்று அவர் பிடிவாதம் காட்டியதில், கைது செய்யப்பட்டார்.
ஜான் பாண்டியன் வருகிறார் என்று பரமக்குடியில் விளம்பரப்படுத்த ப் பட்டிருந்தது. இதனால் காலை 10 மணியிலிருந்தே அவரது வருகையை எதிர்பார்த்து, பரமக்குடியில் பலர் காத்திருந்தனர். மதியம் 12 மணியளவில் அவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தது.
5 நவம்பர் 2011.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம், இலங்கை, இந்தோனேசியா, சுமத்திரா, ஜாவா, பர்மா, அந்தமான் நிகோபார் லட்ச தீவுகள் ஆகிய அனைத்தையும் ஒரு குடையின் கீழ் 30 ஆண்டு காலம் திறம்பட ஆண்டவனும்,
அறுபதாயிரம் யானைப்படையும்,
ஒரு லட்சம் குதிரைப் படையும்,
ஒன்றரை லட்சம் காலாட்படையும்,
ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டவனும்,
இந்தியாவின் முதற் கப்பற்படை கட்டியவனும்,
கடல் கடந்து நாடுகளை வென்றவனும்,
தஞ்சை, உறையூர் மற்றும் காஞ்சி மூன்று தலைநகரையும் கொண்ட தமிழ் நாட்டை அமைத்தவனும்,
இந்தியாவின் தற்கால ஆட்சி முறைமையை அன்றே செயல்படுத்தியவன ும்,
தென்னிந்தியாவின ் தன்னிகரற்ற பேரரசனுமாகியவனு ம்,
மும்முடி சோழன் என்று அழைக்கப்பட்டவனு மாகிய
மாமள்ளர் இராஜராஜ சோழனின் 1026 வது (பிறந்தநாள்) சதய விழா 5 நவம்பர் 2011 அன்று தஞ்சையில் நடைபெற இருக்கிறது!!! இனமான மள்ளர்களே படை எடுத்து வா நம் மாமள்ளனின் நினைவை போற்றுவோம்!!!
By: தமிழ் மள்ளர் பொண்ணு
நம் மக்கள் இன்னும் ஜாதி மத இன மொழி அடிப்படையில் இன்னும் வேறு பட்டு கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களின் ரத்தத்தில் கல்லா கட்ட இன்னும் நிறைய தலைவர்கள் முகாம் இட்டிருக்கிறார் கள். இவர்கள் தன்னலம் ஒன்றையே பொது நலமாக கொண்டவர்கள். இவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல ் சுயமாக முன்னேற முயற்சி செய்யுங்கள். இத்தகைய தலைவர்களால் உங்களுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை என்பதை எண்ணி பாருங்கள். அவர்களிடம் இருந்து விலகி உங்களையும், உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தை காப்பற்றுங்கள். நீங்கள் இல்லையென்றால் இன்னும் ஆயிரம் பேர் இந்த தலைவர்களுக்காக உயிர் கொடுப்பார்கள். ஆனால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்க. ஒரு டாக்டர், பொறியாளர் என்று ஆக்குங்கள். உங்களின் குடும்ப வளர்ச்சிதான் உங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி. எல்லா அரசுதுறையிலும் உங்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. அதை முறையாக பயன்படுத்தி முன்னேற முயலுங்க.
தீ அணைப்பு வண்டி, வஜ்ரா வண்டி, அரசு பேருந்து போன்றவற்றை எரித்தது தவறு (எந்த சமுதாயத்தினரும் , எந்த காரணத்திற்காகவு ம்). மேலும் பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள ்ளன. இது போன்ற பொது சொத்துக்களின் சேதம், பொது மக்களை மட்டுமே பாதிக்கும். இந்த பேருந்துகள் சீர் செய்யப்படும் வரை உங்கள் ஊருக்கு பேருந்துகள் வாராது. யாருக்கு கஷ்டம்?
உங்களை வார்த்தைக்கு வார்த்தை ‘தலித்’ என்று சொல்லும் ஊடகங்கள், தலைவர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளிடம் இருந்து தள்ளியே இருங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். இன்னொருவரிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.
நன்றி,
நித்ய கல்யாணி[/ஃஉஒடெ]
மிக மிக நன்று
The comments you made show that you are brought up from a low-life culture. why are you nopt mentioning the face that a 16 year old boy was murdered a day before the incident. now compare the police actions for these two incidents there was no lathi charge or shooting for killing a 16 year school boy but everything happened for blocking the traffic.
ஒரு நாட்டின் மண்ணையும், மக்களையும், மொழியையும், பண்பாட்டையும் அம்மக்களையன்றி வேறு எவராலும் காத்திட முடியாது. அதற்க்கு அம்மக்கள் ஒவ்வொறுவரும் தங்களைப்பற்றியு ம் தன்னின் மண்ணைப்பற்றியும ் மொழியைப்பற்றியு ம் அறிந்து கொள்வதற்கு வரலாறே சிறந்த வழியாகும். வீழ்த்தப்பட்ட தமிழினம் மீண்டெழுவதற்கு வரலாறே சிறந்த படைக்கலன் ஆகும். அவ்வாறு தமிழினமும் மீண்டு எழுவதற்கும் அதன் வரலாறு அம்மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
தமிழினத்தின் வரலாறை தமிழினம் அறிவதற்கு "தமிழன்" தொலைக்காட்சி"மீண்டு எழுகிறது தமிழர் வரலாறு" எனும் வரலாற்று தொடரை ஒவொரு புதன் நாளன்று இரவு 9:00 முதல் 9:30 வரை ஒளிபரப்பப்படுகி றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள ்கிறோம். ஒவ்வொறு தமிழனும் காண வேண்டிய இன்றியமையாத வரலாற்றுப் பதிவு ஆகும்.
ந்ஹட் ஹச் பேன் தெஇர் சொன்ட்ரிபுடிஒன் டொ தெ சொசிஎட்ய் இன் நடிஒன் புஇல்டிங்?
*************** *************** *************
கள்ளர்களும் மறவர்களும் இந்த நாட்டுக்கு என்ன செய்து விட்டீர்கள் ஆரிய-திராவிடருடன் சேர்ந்து இந்நாட்டை திருடியதை விட.?மள்ளர்களான நாங்கள் இம்மண்ணின் காடு மேடுகளைத் திருத்தி கழனியாக்கினோம்.காட்டாறிற்கு அணைகளைக் கட்டி வேளாண்மை செய்து இம்மண்ணை வளப்படுத்தினோம் .உலக மக்களின் பசிப்பிணி போக்கினோம்;கள்ள ர்கள் போன்ற கொடியோரிடமிருந் து மக்களைக் காக்க பேரரசுகளைக் கட்டி ஆண்டோம்.இதற்கு ஓராயிரம் ஆதாரங்களை எங்களால் கொடுக்க இயலும். உங்களால் இம்மண்ணிற்கு என்ன பலன் என்பதை ஒன்றையாவது உங்களால் சொல்ல முடிவுமா கள்ளர்-மறவர் குல அறிவாளிகளே(!!!! )?[/ஃஉஒடெ]
இங்க பாருய்யா..? ராச வம்சத்த...! எடுத்தது பிச்சையாம் திண்ணுட்டு பேசுது கொச்சையாம்!
அகராதியில் போய் கள்ளர்களுக்கு என்ன என்ன அர்த்தம் இருக்கிறது என பாரும் தோழரே! ( தலித் அகராதியை பார்காதே.. வெறும் பொய்)
பெரிய ஆச்சிரியம் என்ன வென்றால் 1000 வருடங்களுக்கு முன்னால் நடந்த வரலாற்றிக்கிற்க ு.. 1990-ல் எழுதிய புத்தக ஆதாரம் ஆடெயப்பா.. என்ன உண்மை பாரு..!
'தேவரை' சுட்டுகொன்றிருந ்தால் இமானுவேல் இறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.இமானுவேல் இறந்திருக்காவிட ்டால் இந்த குருபூஜையும் தேவைபட்டிருக்கா து. இந்த குருபூஜை நடந்திருகாவிட்ட ால் ஜான் பாண்டியன் வந்திருக்க மாட்டார். ஜான் பாண்டியன் வரவில்லை என்றால் மறியல் நடந்திருக்காது. மறியல் நடந்திருகாவிட்ட ால் கலவரம் நடந்திருக்காது. கலவரம் நடந்திருக்காவிட ்டால் இந்த 7 பேரும் இறந்திருக்க மாட்டார்கள். ஆக, 'தேவரை' அப்பவே போட்டிருக்கனும் ....!!!
வம்புச்செல்வன் என தலைப்பிலும் கட்டுரையின் உள்ளே செய்தியிலும் தலைப்பிற்கெற்ற தகவல் இருப்பதாக தெரியவில்லை.இராமநாதபுரத்தில ் 2 வருடமாக தேவர் சமுதாயத்திற்கும ், தலித் சமுதாயத்திற்கும ் மோதலில்லை.ஜான்பாண்டியன் மனைவி 2008ல் இராமநாதபுரத்தில ் போட்டியிட்டார். அப்போது செந்தில்வேலன் தான் எஸ்.பி. அந்த நேரத்தில் எந்த வகுப்பு கலவரமும் நடைபெறவில்லை.. [/ஃஉஒடெ]
பாபு சொல்வதை முழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன் ...சவுக்கு ஏதோ அவசர கதியில் எழுதியதை போல் உள்ளது ..
அந்த வம்பு செல்வன் என்ன செய்தார் என்றே சரியாக சொல்லாமல் வம்புக்கு இழுக்கிரீரே...?
வெறுமனே இங்கே ஜாதி வெறியர் ஒருவரை ஒருவர் தூற்ற சரியாக பயன்படுத்தி கொள்வது மட்டும் தெரிகிறது ...இதற்க்கு ஏன் சவுக்கு இடம் கொடுக்கிறீர் ?
என்னதான் தவறோ தமிழினமோ ஜாதியோ - 6 பேர் உயிர் இழந்துள்ளனர் ....அட பாவிகளா ..மனித உயிர் அவ்வளவு சாதாரணமாக போய் விட்டதா ? மிக்க வேதனையுடன் எழுதுகிறேன்..
இந்த செயலை நியாய படுத்தி இங்கே எழுதி இருக்கும் எல்லோரையும் கேட்கிறேன்....உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று சவுக்கு மற்றும் மற்றவர் சொல்லுவது மனித நேய பார்வையோடு பார்க்க மறுக்கும் பிறவிகளாக தான் தோன்றுகிறீர்கள் ... என்னடா ஜாதி ? மனித உயிரே விலை மதிப்பற்றது என்று கூட தெரியாத அறிவிலிகளா நீங்கள் ? நீரே இறந்து போனாலும் நேற்று இருந்த ஒரு மனிதௌயிர் இன்று இல்லை என்று குறைந்தது ஒரு 4 பேர் துக்கபட நினைப்பாயா அல்லது இந்த ஜாதிகாரன் என்று அடையாளம் காண ஆசை படுவாயா ? உன்னுடன் இப்பூலகில் சேர்ந்து மனித இனத்தை அடுத்த அடி எடுத்து வைத்து கொண்டிருந்தவர்க ளில் இன்று 6 பேர் இல்லை...அதை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விட மனமற்ற நீங்கள் 'ஆறறிவு' படைத்தோர் அல்லர் ...
சேதுராமனையும், வாண்டையாரையும், பிற தேவரி(டியா)னத்த ை சேர்ந்தவர்களையு ம் கொன்று விட்டால், தமிழ் நாட்டில் ஜாதிக்கலவரமே வராது
I made Savukku as my favorite site for its social awareness, justice, courage in fighting the corruption and injustice during the last regime, but i am really disappointed to see the double standards/triple standards you take when its the question of caste. Its has become a practice to blame police for any action, they are blamed when they do not react and also when they give the adequate answers. Why do we need a police, who cannot safe guard their own lives and public property? They have fired only at a aggressive anti social group, who always tries to claim immunity because of their so called caste. Would have been any other caste, also Police would have taken the same action.
Please note that the group was agitating the release of an anti social element whom they claim as their leader, who was jailed for the murder of a teenager in front of public eyes in Coimbatore. May be you should write more about the involvement of this social activist turned Goon leader in the murder case than just simple blaming the police.
What should police do when a group of people will gather and ask for the release of Afsal Guru? should they wait and turn to the advise of Mr.Savukku to act further. Rules are same for every one and for people from all caste. Please do not paint the crimes done by people on caste basis.
I am upset that you are inviting Thirumavalavan for a interview in your portal, the person who betrayed the interest of Tamils in Sri Lanka along with the Congress/DMK regime, such people like Thiruma has to be denounced than being interviewed.
IT APPEARS THE CROWD ALSO BEHAVED RUDELY.
THEN WHY LAW ENFORCING OFFICERS ARE THERE?
NOW THERE IS A TREND TO SUPPORT SC/STS IN ANY INCIDENT WITHOUT VALID REASONS. WE SAW IT IN LAW COLLEGE INCIDENT.
IF PEOPLE SUPPORT ANY GROUP'S VIOLENT BEHAVIOUR, IT IS A SUICIDAL ATTEMPT FOR US.
NEUTRAL PEOPLE SHOULD SUGGEST WAYS TO IMPROVE THE SOCIAL RELATIONS AMONG VARIOUS GROUPS.
I AM NOT A MUKKULATHOR MAN. BUT IT SEEMS SAVUKKU IS HAVING HATRED TOWARDS A PARTICULAR COMMUNITY.
வம்புச்செல்வன் என தலைப்பிலும் கட்டுரையின் உள்ளே செய்தியிலும் தலைப்பிற்கெற்ற தகவல் இருப்பதாக தெரியவில்லை.இராமநாதபுரத்தில ் 2 வருடமாக தேவர் சமுதாயத்திற்கும ், தலித் சமுதாயத்திற்கும ் மோதலில்லை.ஜான்பாண்டியன் மனைவி 2008ல் இராமநாதபுரத்தில ் போட்டியிட்டார். அப்போது செந்தில்வேலன் தான் எஸ்.பி. அந்த நேரத்தில் எந்த வகுப்பு கலவரமும் நடைபெறவில்லை. மேலும் இந்த மாவட்டத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளில் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்க ள் 2 பேர் மட்டுமே.ஒன்று கண்ணப்பன். இன்னொருவர் செந்தில்வேலன்.
பரமக்குடி கலவரத்திற்கும் செந்தில்வேலனுக் கும் என்ன சம்பந்தம்?
நீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. செந்தில்வேலன் அங்கு ஸ்பெஷல் ட்யூட்டியில் தான் வந்தார்.
பரமக்குடி கலவரத்திற்கு பொறுப்பு அங்குள்ள டி.ஐ.ஜி,எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி. தான்.
நீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் டி.ஐ.ஜி கைத்துப்பாக்கிய ுடன் நிற்கிறார்.அவர்தான் கலவரக்காரர்களை சுட்டார்.செந்தில்வேலன் மக்களோடு மக்களாக பேசிக்கொண்டு தான் நிற்கிறார்.அவர் கையில் கைத்துப்பாக்கி எதுவும்கிடையாது .
டி.ஐ.ஜி-யும் எஸ்.பி-யும் 6 பேர் மடிந்தவுடன் ஓடிவிட்டனர். ஆனால் செந்தில்வேலன் மட்டும்தான் கடைசிவரை நின்று கலவரக்காரர்களை கட்டுப்படுத்தின ார்.அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு இடது கால் மற்றும் வலது கையில் காயம்பட்டு இன்றளவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.நீங்கள் வெளியிட்டுள்ள தலைப்பிலும் சரி, செய்தியிலும் சரி எந்த குற்றச்சாட்டும் அவர்மேல் சுமத்த முடியவில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை.
எனவே, செய்தி வெளியிடும்முன் சரியான தகவல்களை வெளியிடுகிறோமா? என சிந்தியுங்கள். ஒருதலைபட்சமாகவோ , ஒரு சார்பாகவோ வெளியிடாதீர்கள் .
உண்மை செய்தி வெளியிடும் சவுக்குக்கு ஏன் இந்த தடுமாற்றம். ஆசிரியர் விளக்கம் அளிப்பாரா?
பாபு,
திருநெல்வேலி-டவுண்.[/ஃஉஒடெ]
சரியான கருத்து....
நியாயமான போலிஸ்காரன் ஏன் அரசியல்வாதியின் அராஜகத்தை செயல்படுத்தும் ரௌடியாகிறான். கடமையை செம்மையாக செய்யும் காவலர்களை யார் குறைகூறுகிறார்?
Do u know one women PC was made nude and attacked..??
By doing so I am not unmindful of the fact that under this reservation regime other section of people affected across social strata inspite of their merits and qualities. But as Obama once so famously told on a student gathering at Mumbai during his visit to India that it is our duty to correct barbaric mistakes and blunders of our fore-fathers in our time.
This superiority is nothing to do with inheritance or as claimed by many so conveniently that god-blessings.
Many historians likened modern Indian with US with regard to multi-culture and prolonged migration and settlements thereof. Free societies with social, political and economical independence flourish over generations and become inventive by education and curiosity.
The castes found in TN such as Pariyar, Pallar and other in-numerous caste groups are by the virtue of their basic traits, suppression and social aversion by other dominant groups no greater than negros of North America.
(to continue)
ஒருவருக்கு ஒரு வாய்ப்பு என்பதை நானும் ஏற்கிறேன்.ஆனால் இதை பி.சி, எம்.பி.சி கோட்டாக்களில் பயன் அடைபவரும் ஏற்க வேண்டும் என்பதை இங்கு கூறாமல் ஒரு சாரர் மட்டுமே கோட்டா பெறுவதாக கூறுவது உங்களின் அறிவீனமா அல்லது அயோக்கியத்தனமா? அனைவருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது என்பது கூட தெரியாமலா ஒரு நபர் இங்கு வந்து பேசுவார் அன்பதே எமது ஐயம்!! உண்மை அறியும் குழுவின் அறிக்கை படித்தீர்களா?சுட்டு கொல்லப்பட்டவனும ் கள்ளர்களால் அடித்து கொல்லப்பட்டவனும ் ஜன்பாண்டியனின் கட்சியினரா? எமது தலைவனின் நினைவன்சலிக்கு வந்த அப்பாவிகள் அல்லவா கொலை செய்யப்பட்டனர்! ! மற்றபடி ராமதாஸ் தவறு செய்தால் வன்னியர்கள் எல்லோரையும் சுட்டுக்கொல்வீர ்களா? யார் கொடுத்தது இந்த உரிமையை இந்த தமிழினப் பகைவர்களுக்கு?
இட ஒதுக்க்கீடு எவருக்கும் வேணாம் என்று சொன்னால் உங்களின் நல்லவர் முக மூடி சபைக்கு தெரியாமல் போயிருக்கும்.நானும் அதை ஆதரிப்பேன்.ஆனால் இட ஒதுக்கீடு பி.சி , எம்.பி.சி என அனைவருக்கும் இருக்கும்போது எஸ்.சி என்று மட்டும் பேசுவதின் உள்நோக்கம் என்ன?. எஸ்.சி இடஒதுக்கீட்டை பற்றி பேசும் நீங்கள் .பி.சி , எம்.பி.சி ஒதுக்க்கீடு இருக்கிறதே அவர்களைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே?மேலும் பரமக்குடி பிரச்சனை, காவல் துறை(கள்ளர் துறை )யால் கொலை செய்யப்பட்டோர் அனைவரும் மள்ளர்கள்.தேவை இல்லாமல் இங்கு ஏன் எஸ்.சி , இடஒதுக்கீடு என்று சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்?இவ்வளவு பெரிய ஊனமான அறிவை பிறவியிலேயே பெற்றீர்களா என்ன?
Are they not using their SC status as their cover for unlawful benefits?
Will they agree to the formula of one family - one benefit?
Are they so naive to the reality that, SC families are enjoying benefits for generations together?
Can any one SC who have not had the legitimate benefit to him or his family stand up and ask the other fellow SC family which has enjoyed the benefits one after another to stop them doing so?
If this can happen, there will not be any more need for reservation in this country?
Can they (SC) unite and say we are ready to accept one benefit in family approach?
*************** *************** ***********
அட திருடர்குல திலகமே,
இட ஒதுக்கீடு அனைவருக்கும் உண்டு என்பது இவ்வுலகுக்கே தெரியும்.தெரிந்தும் ஏன் இந்த திருட்டுப் புத்தி? அதுபோக கள்ளர்கள் திருடி மக்களை துன்புறுத்துவதை த் தடுப்பதற்காகவே ' கள்ளர் சீரமைப்புத் துறை' அமைத்து கள்ளர்களை முன்னேட்ட்ற பல சலுகைகளை வெள்ளைக்காரன் வழங்கினான்.அச்சலுகை இன்றுவரை தொடர்வது உங்களின் திருட்டு புத்திக்கு ஏன் தெரியவில்லை?அதுமட்டுமின்றி நிலம் கொடுத்து தொகுப்பு வீடுகளும் கள்ளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டது வெள்ளைக்காரன் காலத்திலேயே.இட ஒதுக்கீடை அனுபத்த முன்னேறிய கள்ளர்-மறவர்கள் ஏன் பின்தங்கிய தங்களின் சமுதாயத்தினருக் கு சலுகைகளை விட்டுக்கொடுக்க வில்லை?.ஒரு குடும்பம் ஒரு சலுகை என்பதை உங்களின் திருடர் குலத்திற்கு சொல்லாமல் இங்கு சபையில் வந்து அடுத்தவனை கேலி பேசுவது ஏன்?படித்திருந்தாலு ம் சாதிய வன்மங்களை விடாத உங்களைப்போன்ற செந்தில்வேலன் போன்ற கள்ளர்-மறவர்கள் என்று இத்தமிழினத்தின் பெருங்கேடாய் இருப்பதிலிருந்த ு திருந்துகிறார்க ளோ அன்றுதான் தமிழினம் தலை நிமிரும்.
RSS feed for comments to this post