முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
என்ன ஒரு கரிசனம் ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 01 அக்டோபர் 2011 17:02

 

நேற்று சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீதான பிறந்த நாள் பரிசு வழக்கின் குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.  இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யவே 4 ஆண்டுகள் தாமதம் ஆனதோடு மட்டுமல்லாமல் புலனாய்வை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.   இந்த தாமதத்திற்கு சிபிஐ தரப்பு போதுமான காரணங்களை எடுத்து வைக்கவில்லை.  இந்த தாமதத்தால், மனு தாரர்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப் படுத்தியுள்ள அடிப்படை உரிமையான வாழும் உரிமையை பறிக்கும்.  இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதித்தால், அது நீதிப் பிறழ்வாகும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.   இந்த சிறப்பான தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் கே.என்.பாஷா.

 jaya3434

ஜெயலலிதா மீதான வழக்கு என்ன ?   1991 முதல் 1992 வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தார்.  அப்போது 1992ல் 57 நபர்களால் 87 டிமான்ட் ட்ராப்டுகள் ஜெயலலிதாவுக்கு வழங்கப் படுகின்றன.   அந்த 87 டிமான்ட் ட்ராப்டுகளும் பல்வேறு நபர்களால் வழங்கப் படுகின்றன.   இது தவிர ரொக்கமாக ஒரு 15 லட்சம் வழங்கப் படுகிறது.    இது தவிர, வெளிநாட்டில் இருந்து வந்த 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கான டிமான்ட் ட்ராப்டும் அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கப் படுகிறது.  3 லட்சம் அமெரிக்க டாலர்களை நியூயார்க் நகரத்தில் உள்ள பேங்கர்ஸ் ட்ரஸ்ட் கம்பேனி என்ற நிறுவனம்,  ஏ.என்.இஸட்.க்ரின்ட்லேஸ் வங்கியின், செயின்ட் ஹீலியா, ஜெர்சி, சேனல் தீவுகள், என்ற இங்கிலாந்தில் உள்ள கிளையில்  அன்று எடுக்கப் பட்டிருக்கிறது.

 

அமெரிக்காவில் இருந்து ஜெயலலிதாவுக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்களை டிமான்ட் ட்ராப்டாக அனுப்பியவர் கே.டி.பி.மேனன் என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்.   அவர் 1992லேயே இறந்து விடுகிறார்.

இந்தப் பணத்தை, ஜெயலலிதா மைலாப்பூர் கனரா வங்கியில் உள்ள தனது சேமிப்புக் கணக்கில் (எஸ்.பி.அக்கவுன்ட் 23282) போட்டுக் கொள்கிறார்.  இந்த 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அப்போது அமலில் இருந்த வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தொடர்பான சட்டத்தின் கீழ், வருமான வரி விலக்கு கோருகிறார்.  அப்போதுதான் இந்த விவகாரம் வெளியே வருகிறது.

கடந்த மாதம் 15ம் தேதி, போபால் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

 

பகவான் தாஸ் என்பவர் இந்திய ரயில்வே துறையில் 1984 அட்டெண்டராக பணியாற்றி வருகிறார்.    ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில்உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம்‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு,போர்வைகளை ‘இலவச’பொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு.

அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான்தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் ’வெட்டு’ விழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை.

கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப்தீக்ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப்பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாகஅந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர்அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.

தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.

‘’எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன்.உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம்ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்...”

 

bhagwandas_india_positive1_338x225

 

பகவான் தாஸ் 

ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக் கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது” என்கிறார்.

 

சரி விஷயத்துக்கு வருவோம்.    என்னடா இது ஜெயலலிதாவுக்கு போட்டி போட்டுக் கொண்டு பிறந்த நாள் பரிசு வருகிறதே என்று நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு 1991 – 1996ல் என்ன நடந்தது என்று தெரியாது.  இன்று திமுகவில் சரணடைந்திருக்கும், செல்வகணபதி, சேடப்பட்டி முத்தையா, இந்திரா குமாரி, அழகு.திருநாவுக்கரசு போன்றவர்களெல்லாம், ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று மண் சோறு சாப்பிட்டவர்கள்.  கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தவர்கள்.   ஜெயலலிதாவின் உருவத்தை கையில் பச்சைக் குத்திக் கொண்டவர்கள்.

 

சிபிஐ விசாரணையில் தெரிய வந்த விஷயம் 89 டிமான்ட் ட்ராப்டுகளை எடுத்துக் கொடுத்த 57 பேர்களில் 12 பேர் போலியானவர்கள்.  அப்படி ஒரு நபரோ முகவரியோ இல்லை.   மற்றொரு 12 பேர் எங்களுக்கும்  இதற்கும் சம்பந்தமே இல்லை, நாங்கள் டிமான்ட் ட்ராப்ட் எடுக்கவில்லை என்று கூறி விட்டனர்.  மீதம் உள்ள 33 பேர் யார் என்று பார்த்தால் அத்தனை பேரும், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மந்திரிகளாகவும், வாரியத் தலைவர்களாகவும் இருந்தனர்.  ஆக, மந்திரியாக இருப்பதற்கும், வாரியத் தலைவராக இருப்பதற்கும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சம் என்று சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததது.

 

இதுதான் வழக்கு.   இப்போது நீதியரசரின் தீர்ப்புக்கு வருவோம். இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யவே 4 ஆண்டுகள் தாமதம் ஆனதோடு மட்டுமல்லாமல் புலனாய்வை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.   இந்த தாமதத்திற்கு சிபிஐ தரப்பு போதுமான காரணங்களை எடுத்து வைக்கவில்லை.  இந்த தாமதத்தால், மனு தாரர்கள் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப் படுத்தியுள்ள அடிப்படை உரிமையான வாழும் உரிமையை பறிக்கும். மேலும், மனுதாரர் தானாக முன் வந்து, வருமான வரித் துறையினருக்கு பரிசு விவகாரத்தை தெரிவித்துள்ளார்.  அவருக்கு மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதித்தால், அது நீதிப் பிறழ்வாகும்.

 

எப்ஐஆர் பதிவு செய்ய ஏன் தாமதம் ?

92ல் ஜெயலலிதாவுக்கு இந்த பரிசுகள் கொடுக்கப் பட்டிருந்தாலும், அதை அவர் வருமான வரித் துறையினரிடம் தாக்கல் செய்திருந்தாலும், அப்போது ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நிர்ப்பந்தப் படுத்தவே நரசிம்மராவ்ண அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித் துறையினரை உசுப்பி விட்டார்.   இதனால் தான் 1996 வரை இது வழக்காக மாறவில்லை.

 

1996ல் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தற்கான முக்கிய காரணம் அதற்கு முந்தைய அதிமுக அரசின் ஊழல் தான்.  திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், வெளிநாடுகளில் புலனாய்வு நடத்த வேண்டியிருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆகஸ்ட் 1996ல் உத்தரவிடுகிறது.  இரண்டு மாதங்கள் கழித்து, சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்கிறது.

 

குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய ஏன் 10 ஆண்டுகள் ?

 

வழக்கின் புலனாய்வு, லண்டன், அமெரிக்கா, சேனல் தீவுகள் போன்ற இடங்களில் செய்யப் பட வேண்டும்.  வெளிநாட்டில் புலனாய்வு என்றாலே, அந்த நாட்டுக்கு லெட்டர் ரொகேட்டரி என்று அழைக்கப் படும் நீதிமன்றம் மூலமான கடிதம் அனுப்ப வேண்டும்.  அதற்குப் பிறகே கேட்கப் படும் ஆவணங்கள் கிடைக்கும்.

 

இவ்வாறு வழக்கின்  புலனாய்வை சிபிஐ முடிக்கும் போது, மீண்டும் திமுக ஆட்சி வந்து விடுகிறது.  லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டால், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன் அனுமதி பெற வேண்டும்.   ஜெயலலிதா 2001ல் மீண்டும் எம்.எல்.ஏவாக ஆகி விட்டதால், அப்போது சட்டசபை சபாநாயகர், ஜெயலலிதா மீது வழக்கு தொடுப்பதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.  ஜெயலலிதா ஆட்சியில் சபா நாயகரிடமிருந்து ஒப்புதல் கிடைக்குமா ?

 

மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் 2006ல் சபாநாயகர் வழங்கிய ஒப்புதலுக்குப் பிறகு ஜுலை 2006ல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

 

மனுதாரர் தானாக முன் வந்து, வருமான வரித் துறையினருக்கு பரிசு விவகாரத்தை தெரிவித்துள்ளார்.  அவருக்கு மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை

 

மனுதாரருக்கு இதை மறைக்கும் எண்ணம் இல்லையா ?  மனுதாரர் இதை எப்படி மறைக்க முடியும் என்பதுதான் வினோதமாக உள்ளது.  ரொக்கமாக இருப்பவற்றை மறைத்து பூட்டி வைத்துக் கொள்ளலாம்.   டிமான்ட் ட்ராப்டுகளை வங்கிக்குச் செல்லாமல் எப்படி மறைக்க முடியும் ? மேலும், வருமான வரிச் சலுகை பெறுவதற்காகவே ஜெயலலிதா இதை தெரிவித்தார் என்பதையும் மறுக்க முடியாது.  இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி, டிமான்ட் ட்ராப்டுகளை வங்கிக்கு செல்லாமல், எப்படி பணமாக்குவது என்ற விபரத்தையும் தனது தீர்ப்பிலேயே தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 வாழும் உரிமை பாதிக்கப் பட்டுள்ளதா ?

ஒரு குண்டு வெடிப்பு வழக்கில், அப்துல் ரஹீம், முபாரக் அலி, குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் 1997ல் கைது செய்யப் படுகிறார்கள்.  அவர்களுக்கு 13 ஆண்டுகளாக ஜாமீன் வழங்கப் படவில்லை.  2 மாதங்கள் தன் மகள் சிறையில் இருப்பதைக் கண்டு ரத்தக் கண்ணீர் விடும் இந்தக் கருணாநிதி அரசு, அவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை தடுத்ததோடு அல்லாமல், வழக்கு விசாரணையையும் தொடர்ந்து தாமதித்து வந்தது.  சாட்சிகளை ஆஜர் படுத்தாதது, நீதிபதிகளை மாற்றுவது என்று பல்வேறு இடைஞ்சல்களை செய்தது.  அப்துல் ரஹீம் மீதான ஒரே குற்றச் சாட்டு என்ன தெரியுமா ?  அல் உம்மா என்று எழுதப்பட்ட ஒரு நோட்டீசை வைத்திருந்தார் என்பது மட்டும் தான்.  இதற்காக 13 ஆண்டுகள் சிறை.

 

13 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்கள் 2009ல், ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.   தங்களது ஜாமீன் மனுவில், விரைவான நீதி விசாரணையை உத்தரவாதப் படுத்தியிருக்கும் அரசியல் சட்டப் பிரிவு 21 தங்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது.  13 ஆண்டுகளாக சிறையில் ஜாமீன் இல்லாமல் அடைத்திருப்பது கடுமையான மனித உரிமை மீறல் என்று ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.  அந்த ஜாமீன் மனு நீதியரசர் கே.என்.பாட்சா முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணை முடியும் தருவாயில் இருப்பதால், ஜாமீன் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.  ஜெயலலிதா, செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர், சிறையில் இருப்பவர்கள் அல்ல.   அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுவதே நீதிப் பிறழ்வு என்று சொல்லும் கே.என்.பாட்சா, 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களின் மனித உரிமை மீறலை கண்டுகொள்ளவில்லை.

 

அந்த வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக நாள் குறிக்கப் பட்ட பிறகு, அந்த நீதிமன்றத்தின் நீதிபதி மாற்றப் பட்டார்.   தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், நீதிபதியை மாற்றக் கூடாது என்று முற்றுகை போராட்டம் நடத்திய பிறகு அந்த ஆணை ரத்து செய்யப் பட்டது.  அவர்கள் அத்தனை பேரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப் பட்டார்கள்.  இதில் யாருடைய வாழும் உரிமை பாதிக்கப் பட்டது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

 

சரி நீதியரசர் கே.என்.பாட்சா எப்படிப் பட்டவர் ? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிலேயே மிகச் சிறந்த நீதிபதி என்று கருதிய கருணாநிதி, நீதியரசர் கே.என்.பாட்சா அவர்களுக்கு “சமூகத்தில் சிறப்பு வாய்ந்தவர்” என்பதால் சென்னை திருவான்மியூரில், உயர் வருவாய் பிரிவில் எஸ்.8 என்ற வீட்டு மனையை ஒதுக்கி கவுரவித்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

IMG

 

Comments  

 
+1 #16 ஜால்ரா 2012-02-21 21:16
//இன்று திமுகவில் சரணடைந்திருக்கு ம், செல்வகணபதி, சேடப்பட்டி முத்தையா, இந்திரா குமாரி, அழகு.திருநாவுக்கரசு போன்றவர்களெல்லா ம், ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று மண் சோறு சாப்பிட்டவர்கள் . கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தவர்கள். ஜெயலலிதாவின் உருவத்தை கையில் பச்சைக் குத்திக் கொண்டவர்கள்.//

:ட் :ட் :ட் :ட் :லொல்: ஹைய்யோ..ஹைய்யோ..
Quote
 
 
+3 #15 puthiyavan raj 2011-10-02 21:43
ராமதுரை, எத்தனை பேர் கை மாறினாலும், முதலில் அந்த காசோலை அல்லது வரைவோலை முதலில் யார் பெயருக்கு எடுக்கப்பட்டது என்பதை எளிதாக கண்டு பிடித்து விடலாம். எனவே அதை அப்படி கை மாற்றுவதை தவிர்த்து இருக்கலாம்.
Quote
 
 
+5 #14 KK 2011-10-02 20:22
எப்படிய்யா உங்களுக்கு மட்டும் இந்த ஆவனமெல்லாம் கிடைக்குது?! :roll:
Quote
 
 
-8 #13 Gurunasalam 2011-10-02 18:25
[ஃஉஒடெ நமெ="ப்ஹரத் ஆருனசலம்"]உங்களுக்கு இஸ்லாமியகர்கள் மீது எதற்கு இவ்வளவு கரிசனம்?[/ஃஉஒடெ]
உனக்கு ஏன் இவ்வளவு வெருப்பு ?. பாசிச வெரி பிடித்தவனே
Quote
 
 
0 #12 இப்னு அலிய் 2011-10-02 15:46
வாழ்வுரிமை என்பது ஆட்சியாளர்களுக் கும் அவர்களைத் தொடர்ந்து தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும்தான் என்பது அரசுப் பணியில் இருந்த சவுக்குக்குத் தெரியாதா என்ன?
http://www.hindu.com/2006/03/08/stories/2006030809270500.htm
Coimbatore serial blasts case undertrial tests HIV positive
Quote
 
 
-12 #11 samsudeen 2011-10-02 14:15
அது சரி. பணமில்லாமல் இன்று கட்சி நடத்தமுடியுமா? வைகோ ,னெடுமாறன் போல
புலிகளின் போதை மருந்து பணம் வந்தால் நடத்தலாம்.அப்படி இல்லையென்றால்? சட்ட காரணங்களுக்காக தள்ளுபடி செய்ய பட்டுள்ளது.
இதற்கு நீதிபதி எப்படி பொறுப்பு? சிபி மீதுதான் குற்றம்.சிறையில் 13 ஆண்டுகள் இருந்தவர்கள்
எந்த பிரிவில் இருந்தார்கள்? பொடாவில் என்றால் ஏது ஜாமின்?
Quote
 
 
+8 #10 கடற்க்கரைவாசி 2011-10-02 13:22
Quoting Bharath Arunachalam:
உங்களுக்கு இஸ்லாமியகர்கள் மீது எதற்கு இவ்வளவு கரிசனம்?


உங்களுக்கு ஏன் பரத் இஸ்லாமியர்கள் மீது இவ்வளவு வெறுப்பு...

ஒருவரின் தரம் தெரிய, ஒரு உண்மையை, ஆதாரமாக உதாரணம் சொன்னால், அதற்க்கு பேரு கரிசனமா?...
Quote
 
 
+3 #9 mubarak kuwait 2011-10-02 12:48
Bharath அருணாசலம் அவர்களுக்கு முஸ்லிம்கள் தவறே செய்யாமல் சிறை இல் 13 ஆண்டுகள் துன்பபடுகிரார்க ள் இதை வெளிப்படையாக சொல்வது கூட உங்களுக்கு வலிக்கிறதா? ஏன் இந்த மத துவேஷம் உங்களுக்கு, முஸ்லிம்கள் தவறு செய்திருந்தால் அவர்களை நடுத்தெருவில் வைத்து தூக்கிலிட நாங்கள் தயார், ஆனால் விசாரணை என்ற பெயரில் ஒரு தவறும் செய்யாத எத்தனை முஸ்லிம்கள் வருட கணக்கில் சிறை இல் துன்பபடுகிரார்க ள் தெர்யுமா உங்களுக்கு?
Quote
 
 
0 #8 Buddhasmiling 2011-10-02 12:30
தாஷ் மாதிரி ஒரு மனிதர், நம் அம்மா மாதிரி ஒரு மனிதர் அடுத்து நம்ம மகா கனம் பொருந்திய பாஷா போல ஒரு மனிதர்.

மனிதர் பல விதம் சவுக்கு,

அது சரி சவுக்கு எப்டி இப்டி?
கலக்குபா?
Finally, savukku, write an article about the course of trial at Bangalore. It seems this lady would be acquitted in that case also.

Going by your readership it seems you are gradually losing brahmin friends due to your articles voicing concern for that police atrocities at paramkudi, your calling voice for an interview with Thiruma and your consistent stand towards the Rajiv murder accused/Anti Jaya stand
Quote
 
 
+4 #7 PremkumarSJ 2011-10-02 09:27
Good articulation of facts .
Quote
 
 
0 #6 ramadurais 2011-10-02 07:29
all cheques and DD's are as good as currency notes and are negotiable and can be sold. If you have a cheque in US$ you can endorse it and give it to another man and he in turn can give it to another man and so on. JJ could have easily sold the DD to a hawala operator.
Quote
 
 
+4 #5 http://koothadivedda 2011-10-01 22:15
ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாயிருக்குத ு ஒண்ணுமே......................

சம்பவங்களை பார்க்கும்போது மறைந்த சந்திரபாபுவின் இந்த தத்துவ பாடல்தான் நிழலாடுகிறது.

இப்பாடலின் தத்துவம் நூறாண்டு சென்றாலும் தமிழக அரசியலுக்கு அட்சர சுத்தமா பொருந்தும்.
Quote
 
 
+3 #4 Raju 2011-10-01 21:10
excellent and detailed article. nowhere seen this details. keep it up savukku. initially we thought savukku is pro admk website and backed up by M.Natarajan(sasik ala)
Quote
 
 
+4 #3 rajesh.v 2011-10-01 20:14
super savukku,

Eventhough i am a supporter of aiadmk and amma for the past 10 years, i like your post very much. It is well written article.

All are same in front of law. It is sad that india has some corrupt officials in judiciary.
Quote
 
 
-8 #2 Bharath Arunachalam 2011-10-01 20:04
உங்களுக்கு இஸ்லாமியகர்கள் மீது எதற்கு இவ்வளவு கரிசனம்?
Quote
 
 
-3 #1 ss 2011-10-01 17:41
மாயாவதி அம்மையாரரின் குரு யார் என்பது புரிகிறது. கண்ணதாசனின் பல பாடல்கள் நினைவுக்கு வருகின்றது. வாழ்க தமிழகம் ! வாழ்க பாரதம் !!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 64 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3165
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week35805
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month248624
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12770743