முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சூடும் இல்லை. சொரணையும் இல்லை. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 41
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 23 அக்டோபர் 2010 00:49

 

யாருக்கு என்று கேட்கிறீர்களா ?   தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தான்.

ஒரு அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யும் ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை என்னவென்று சொல்வீர்கள் ?

சிவில் சர்வீஸ் என்று அழைக்கப் படும், அகில இந்தியப் பணித் தேர்வானது, இருப்பதிலேயே மிக மிக கடினமான தேர்வு. அந்தத் தேர்வை ஏன் அவ்வளவு கடினமாக வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகவோ, ஐபிஎஸ் ஆகவோ பணிக்கு வருபவர்களிடம் ஒப்படைக்கப் பட இருக்கும் பொறுப்புகள் ஏராளம்.   பலரின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பொறுப்பு அந்த அதிகாரிகளுக்கு உண்டு. அதனால்தான் அவ்வாறு மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு நியமிக்கப் பட இருப்பவர்கள், மிகுந்த கவனத்தோடும், அறிவோடும் பணியாற்ற வேண்டும் என்று கடினமான தேர்வாக இருக்கிறது.

 

ஆனால் அப்படிப் பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தறுதலைகளாக இருந்தால் ? அதுதான் நடக்கிறது தமிழ்நாட்டில்.

 letikha_saran

டிஜிபி பதவிக்கு லத்திக்கா சரணை நியமித்தது தவறு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இந்த நியமனம் நடைபெற்று உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பானது, இந்நாட்டின் சட்டமாகும். அந்தச் சட்டத்தை மதிக்காமல் லத்திக்கா சரண் நியமனம் நடைபெற்றுள்ளது, இது போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் இருந்தால், அதைச் செயல்படுத்துவது எங்களது கடமை என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 26 அக்டோபருக்குள், புதிய டிஜிபி நியமிப்பதற்கான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

 

இதை அமல்படுத்துவார்கள் என்று பார்த்தால், இதை எதிர்த்து உச்ச நிதிமன்றத்திற்கு போகிறார்களே இந்த அறிவுக் கெட்டவர்கள் ? உயர்நீதிமன்றம் செருப்பால் அடித்தது போல, இந்த நியமனம் தவறு, செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டும், உச்ச நீதிமன்றத்திலும் சென்று செருப்படி வாங்கிக் கொண்டு வரும் இந்த அதிகாரிகளை எதால் அடிப்பது ?

 

26ந் தேதிக்குள் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணைத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் எடுத்துரைத்த போது, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இதை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என்றுதானே உச்ச நீதிமன்றம் சொல்லியது…   இப்படியொரு அவமானத்தை எதற்காக இழுத்துப் போட்டுக் கொண்டார்கள் இந்தக் கயவர்கள் ?

 

அப்படி என்ன லத்திக்கா சரண் ஊர் உலகத்தில் இல்லாத தெறம வாய்ந்த அதிகாரியா ? வேறு யாருமே இல்லையா ?

 

இந்த லத்திக்கா சரண், உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு விஷயத்தில் எவ்வளவு குளறுபடிகளை செய்திருக்கிறார் தெரியுமா ?   1999ம் ஆண்டு நேரடி பெண் உதவி ஆய்வாளர்களாக தேர்ந்தேடுக்கப் பட்டவர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்காமல், 2003ல் தலைமைக் காவலராக இருந்து உதவி ஆய்வாளராக ஆன 10 பேருக்கு, விதிகளை மீறி ஆய்வாளர் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்.   இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற பெண் உதவி ஆய்வாளர்களை, அழைத்து நேரில் மிரட்டியிருக்கிறார். நீதிமன்றம் செல்வதற்கு உங்களுக்கு என்ன துணிச்சல் ? அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போடும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டதா என்று மிரட்டியிருக்கிறார்.

 

உதவி ஆய்வாளர்கள் தங்கள் பதவி உயர்வு தொடர்பாக வழக்கு போடக்கூடாதாம். இவர் மட்டும் ஜுனியர்களை முந்தி பதவி உயர்வு வாங்கிக் கொண்டு, அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால், அப்பீலுக்கு மேல் அப்பீல் செய்வாராம்.

  

உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்கிறாரே ஞானதேசிகன்… அவருக்கு இது போல நடந்திருந்தால் வழக்கு போடாமல் இருப்பாரா.. ? எப்படியாவது, மாலதி உடல் நலம் குன்றி, விருப்ப ஓய்வில் செல்லுவார். அப்போது, தலைமைச் செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்ற நப்பாசை தானே இன்று ஜாபர் சேட் சொல்லுகிற படியெல்லாம் ஆட வைக்கிறது… ?

 

ஞானதேசிகன் அவர்களே…. லத்திக்கா வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த மனு பச்சைப் பொய் என்பது நிரூபிக்கப் பட்டும் கூடவா உங்களுக்கு சொரணை இல்லாமல் போய் விட்டது ? புதிய காவல் பயிற்சிக் கல்லூரி அருகே உங்கள் தொழில் கூட்டுதாரர்களோடு நீங்கள் வாங்கியிருக்கும் 1000 ஏக்கர் நிலத்தை ஜாபர் அபகரித்துக் கொள்வார் என்ற பயமா ? இல்லை ஜாபரோடு கூட்டு சேர்ந்து நீங்கள் செய்யும் அட்டூழியங்களை வெளியில் சொல்லி விடுவார் என்ற பயமா ?

 

லத்திக்கா சரண்தான் வேண்டும் என்று ஜாபர் சேட், கே.ராதாகிருஷ்ணன், மாலதி, ஞானதேசிகன் ஆகிய அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதன் காரணம், லத்திக்கா சரண் டிஜிபியாக இருக்கும் வரை தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடலாம், யாரை வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம் என்பதுதான். லத்திக்கா ஒரு மங்குணி டிஜிபி என்பதால்தான் இவரே இருக்கட்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

 

இந்த அதிகாரிகள் தங்களுக்குள் இப்படி பதவிச் சண்டை போட்டுக் கொண்டு, நீதிமன்றம் சென்று கொண்டிருந்தால், இவர்களுக்குக் கீழே பணியாற்றும் மற்ற அதிகாரிகள் எப்படி இவர்களை மதிப்பார்கள்… ?

 

இவர்கள் இஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் எந்தப் பதவியில் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே, நீதிமன்றங்கள் உள்ளன.   அந்த நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மதிக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்தால், மக்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்கிறார்கள் ?

 

ஏதாவது ஒரு கட்டத்திலாவது தவறு செய்தவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.   அப்படி திருத்திக் கொள்ளாவிட்டால் திருத்தப் படுவார்கள்.

 

காவல்துறையில், துரை ஆடாத ஆட்டமா…. ? முத்துக் கருப்பன் ஆடாத ஆட்டமா ?   சிவணான்டி ஆடாத ஆட்டமா ? கடைசியில் துரை எப்படிப் பட்ட மரணத்தை சந்தித்தார் தெரியுமா ?

 

அந்தக் கதி இன்று அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடும் ஜாபர் சேட்டுக்கும், கே.ராதாகிருஷ்ணனுக்கும், ஞானதேசிகனுக்கும் வராது என்று என்ன நிச்சயம் ?

 

மிக மிக கடினமான ஒரு நோயோடு போராடிக் கொண்டிருக்கும் தலைமைச் செயலாளர் மாலதியும், இந்த அநியாயங்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனை.

 

இந்த ஆட்சியில் இருந்த தலைமைச் செயலாளர்களில் ஒருவர் கூட உருப்படியானவர் இல்லை. திரிபாதி ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்தார் என்றால், ஸ்ரீபதி ஊழல் வழக்கில் சிக்கிய இரண்டு திருடர்களை காப்பாற்ற முயற்சி செய்தார்.   அடுத்து தலைமைச் செயலாளர் மாலதி, ஊழல் வழக்கில் இருந்து ஜாபர் சேட் உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர்.

 Malathy_S

தமிழகத்தில் உள்ள அதிகார வர்க்கம், காங்கிரசின் கோஷ்டிச் சண்டைகளை விட, மோசமான தெருச் சண்டையில் இறங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்தான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இந்த அதிகாரப் போட்டிக்கான தீர்வு இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் தெளிவு.

 

Comments  

 
0 #32 Annamalai 2010-12-18 18:54
superb!
Quote
 
 
+1 #31 Thendral 2 puyal 2010-12-18 15:51
vanakam! ungalin ninda naal vasagaragiya naan.. indru dan endu karuthugalai pathivu seiya mun vandhulen.. aalum vargathai veta velikku konduvanatha ungalin muyarchiku enathu parattukkal..

ungalin karuthu vegujana makkalaiyum sendradaiya vendum.. satta mandra therthal nerunggi kondirukkirathu atharkulaga muzuththiraiyai yum neengal kizitherinthaga vendum.. makalin arivukku athu ettum padi seiya vendum...

vlarga nin thondu..

valthukaludan

Thendral 2 puyal
Quote
 
 
-1 #30 Panivazhan 2010-11-29 17:13
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+1 #29 N.Saravanan 2010-11-03 19:23
தமிழ்நாட்டிலுள் ள தமிழர்களை ஆட்சி செய்வது ஒன்றில் கருணாநிதி அல்லது ஜெயலலிதா. உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசித்தபோது இவர்கள் இருவரும் கடைந்தெடுத்த ஊழல் பெருச்சாளிகள், லஞ்சப் பேர்வழிகள், எமனைப் பச்சடி போட்டவர்கள் என்பது பட்டவர்த்தனமாக சிறுபிள்ளைக்கும ் தெரிகிறது. அப்படியிருக்கும ் போது இந்த இருவரையுமே ஆட்சிக்கு தெரிவு செய்யும் மக்கள் கேணயர்கள், முட்டாள்கள், அறிவிலிகள், இளிச்சவாயர்கள், மடையர்கள், என்றுதானே முடிவாகிறது.
Quote
 
 
-4 #28 Nadunilaiyalan 2010-10-30 17:31
ஜெயலலிதா தற்போது மாநிலத்திலும், மத்திய அரசிலும் எந்த செல்வாக்கும் இல்லை..அவர் வெறும் அதிகாரம் இல்லாத எதிர் கட்சி தலைவராக தான் தற்போது உள்ளார். அவரை பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறதுஓகே நான் ஒத்து கொள்கிறேன். ஆனாலும் சவுக்கு ஏன் வீரப்பன் விசயத்துல ஜெயலலிதாவ பத்தி ஒண்ணுமே சொல்லல.காவிரி விசயத்துல ஜெயலலிதா இதுக்கு முன்னாடி என்ன பண்ணினா? ஜெயலலிதா இலங்கை தமிழ் மக்களுக்கு செய்ததை சவக்கு சொல்லலாமே? ஜெயலலிதா மதுரையில் பேசியதும் இங்கே கட்டுரையாக வருவதும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்தல் யார் அந்த அம்மாவுக்கு எழுதி கொடுப்பது என்று தெரியவில்லை. இங்கே உள்ள சில மன்குனிகள் வேண்டுமானால் சவுக்கு நடுநிலை என்று சொல்லலாம். ஆனால் அது உண்மை இல்லை. இவர் ஒரு பக்கா ஜெயலலிதாவின் அனுதாபி. 1991 - 1996 மற்றும் 2001 - 2006 தமிழ்நாடு எவ்வளவு கேவலமான ஆட்சியை கண்டது என்று எல்லாருக்கும் தெரியும். இங்கே பலர் சொன்னது போல கொடநாட்டில் இருந்து எத்தன பொட்டி கை மாறியது இப்படி இந்த ஆட்சியை பத்தி எழுத. உண்மையான பதில் தேவை. Mr சவுக்கு உண்மையான பதில் தேவை மற்றும் ஜெயலலிதா பற்றிய உங்களுடைய உண்மையான நிலை என்ன?
Quote
 
 
0 #27 jeri 2010-10-27 10:29
nanba elloraiyum sammamaga aivu seiyavum karunai,jayalal itha,loosudoss, saikoo,kamadika nth,ellorai patriyum,avarga lin mooga thirayayai kiliyungal
Quote
 
 
+3 #26 பாமரன் 2010-10-25 19:19
அய்யா.. சவுக்கு பிரியரே.., ஆட்சியில் இருப்பவரை பற்றி மக்கள் நிறையவே தெரிந்து கொண்டார்கள். இந்த தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் புகுட்டுவார்கள் .. ஆட்சிக்கு வரப்போரவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா..? 4 1/2 ஆண்டுகள் யாரைபற்றிய சிந்தனையும் இல்லாமல் சிறுதாவூரில் பதுங்கி இருந்தவர் தேர்தல் நேரத்தில் மக்களுக்காக போராட வந்திருக்கிறார் . அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா..? கருணாநிதி ஆட்சி 3 மாதத்தில் முடிந்து விடும். அடுத்த 5 வருட ஆட்சியில் மக்களை காப்பாற்ற வேண்டியது சவுக்கின் கடமை அல்லவா.? களத்தில் இருக்கும் தலைவர்களை பற்றி தெரிந்து கொண்டால் தானே அவர்களின் லட்சனங்களின் அடிப்படையில் அவர்களை தேர்ந்தெடுக்க முடியும். கருணாநிதி சாக போகிற பாம்பு. ஜெயலலிதா உயித்தெழபோகிற பாம்பு. யாரைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நீங்களே சொல்லுங்கள் சவுக்கு. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பயன் தருவது போல் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன் ..
Quote
 
 
+3 #25 Pradeep_P 2010-10-25 15:40
மங்குணி டிஜிபி :D :D :D
Quote
 
 
0 #24 D.SYMANSUNDARARAJ. 2010-10-25 14:41
NOW ONLY I SAW THIS NET WORK,IT,S VERY USEFUL TO ME AND EVERY ONE,CONG SIR,
Quote
 
 
+1 #23 r.kannan 2010-10-24 12:36
friend.Now the junior vikatan has started addressing some public issues.Our blog may start the happenings in Gujarat which seems to be a better governed compared to all the other states.Let our people in Tamilnadu be informed that the people of Gujarat supports a good government even in these days.We saw a change in Bihar.Let us thrive to have these things happen in Tamilnadu too
Quote
 
 
0 #22 hari 2010-10-24 12:12
i m regular reader of ur site wen i read 1st time really very appriciate urs artile. but now i feel u r not neutral news provider, u support jayalalitha who is no.1 corruption & anti tamil politician. shame
Quote
 
 
+5 #21 ராஜ் 2010-10-23 20:31
"தமிழகத்தில் உள்ள அதிகார வர்க்கம், காங்கிரசின் கோஷ்டிச் சண்டைகளை விட, மோசமான தெருச் சண்டையில் இறங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்தான நிலையை ஏற்படுத்தியிருக ்கிறது."

நல்ல நகைசுவை
ஜனநாயகம் செத்து நாட்டில் வெகு காலம் ஆகிவிட்டது .
Quote
 
 
+5 #20 தமிழன் 2010-10-23 19:37
கோவிந்தராஜன் ராஜினாமா விபரம் என்ன? விசாரியுங்கள் தோழரே?
Quote
 
 
0 #19 தமிழ் உதயன் 2010-10-23 17:44
மக்களாட்சியின் விபரீத விளைவுகள்தான் இன்றைய அரசியல் வியாதிகளின் நடவடிக்கைகள்
Quote
 
 
+3 #18 nambiar 2010-10-23 15:46
When This Same Knanadesikan was Finance Secretary and Board Member for Finance for the last 8 years, he made several crorel loss to TNEB.
Quote
 
 
+1 #17 Nallavan 2010-10-23 15:41
வாசக பெருமக்களே, எட்டு ரூபாய்க்கு என்பது பொய்கள் கட்டுரையையும் பின்னூட்டங்களைய ும் படிங்க. படிங்க. படிச்சுகிட்டே இருங்க.
Quote
 
 
+4 #16 punnakku 2010-10-23 12:28
Jayalaitha is not in regime. So it is not time to comment her . We are in the position of karuna regime. So savukku is correct.
Quote
 
 
+9 #15 கனிமொழி கபடநிதி 2010-10-23 11:37
கருணாநிதிக்கு பயமில்லை மக்களின் அறியாமையை பயன்படுத்தி காசு கொடுத்தால் வோட் போடுவார்களென்ற திமிர், இலவசங்களால் மக்களை மந்தைகள் போல் மட்டந்தட்டி வைத்திருக்கிறார ், நுணுக்கங்கள் சகலவும் அறிந்தவர்./ஜெயலலிதாவும் கருணாவும் ஒன்றை ஒன்று வென்றவர்கள்தான் . மக்கள் சிந்திக்காதவறை தவளையும் முதலையும் ச்ன்னதமாடிக்கொண ்டேயிருக்கும். கருணாவை கட்டுப்படுத்தவே டிய தருணம் கருணா மரணமானால் அழகிரி , அழகிரிக்கு அரசியல் தெரியாது எனவே மக்களை அழித்துவிடுவார் ,
Quote
 
 
+6 #14 தமிழன் 2010-10-23 10:23
நண்பர் முஹைதீன் அவர்களுக்கு வணக்கம் .. நீங்கள் குறிப்பிட்டது தவறு.. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் என்கிறோம் .இந்திய முழுவதும் இதைவிட கேவலமாக அல்லவா உள்ளது..
Quote
 
 
+4 #13 தமிழன் 2010-10-23 10:23
நண்பர் முஹைதீன் அவர்களுக்கு வணக்கம் .. நீங்கள் குறிப்பிட்டது தவறு.. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் என்கிறோம் .இந்திய முழுவதும் இதைவிட கேவலமாக அல்லவா உள்ளது..
Quote
 
 
+5 #12 தமிழன் 2010-10-23 10:20
அனைத்து தோழர்களுக்கும் பொதுவாக !!! இங்கு ஜெயலலிதா வா? கருணா வா? என்பதில்லை பிரச்சினை? நாம் யாருடைய ஆதரவு ஆளர்கள் ஆக இருந்தாலும் இது நம் சமுகத்தின் பொதுவான விஷயம் நம் எல்லோரும் வரும் நம் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுதல் அளிக்கிறோம ? இல்லையா? இதுதான் சரியாக இருக்கும்.. தயவு செய்து நம் கடமை உணர்ந்து கருத்து சொல்வோம். தோழர் சவுக்கு விற்கு ஒரு வேண்டுகோள் உங்கள் உணர்சிகள் ஏற்றுகொள்ள கூடியது .வார்த்தைகளில் சற்று நிதானம் காட்டுங்கள் .கருத்துகளில் வேகம் கூட்டுங்கள் ..அன்புடன்...
Quote
 
 
+9 #11 அ.சந்தர் சிங். 2010-10-23 10:13
சட்டம்,ஒழுங்கு, கடமை.கண்ணியம்,கட்டுப ்பாடு-இவை அனைத்தும் தி.மு.க.அரசு என்று

தமிழ் நாட்டில் பதவி ஏற்றதோ அன்றே சமாதி கட்டி விட்டார்கள்.இன்றைய ஆட்சியாளர்களும் ,

அரசு அதிகாரிகளும் ஒரு நயா பைசாவுக்கும் லாயக்கு இல்லை என்று பிறக்கும் குழந்தைக்கு கூட தெரியும்.

--
Quote
 
 
+15 #10 Kumar.T 2010-10-23 09:40
Quoting ssr:
why are you hesitating to tell about jayalalitha.

அன்பரே, பொறுப்பில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை தான் சுட்டி காட்ட முடியும்.
கருணாநிதி மாநிலத்திலும், மத்திய அரசிலும் மிக பெரிய அதிகாரத்தில் இருப்பவர், ஆனால் அவர் அதை தன் சுயலாபத்துக்காக துஷபிரயோகம் செய்கிறார்.. இதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதுதான் உண்மையான பத்திரிகைகளின் கடமை..ஆனால் அது சில வழிகளில் முடக்கபட்டு உள்ளது அதை தான் சவுக்கு செய்து கொண்டு இருக்கிறார்.

ஜெயலலிதா தற்போது மாநிலத்திலும், மத்திய அரசிலும் எந்த செல்வாக்கும் இல்லை..அவர் வெறும் அதிகாரம் இல்லாத எதிர் கட்சி தலைவராக தான் தற்போது உள்ளார். அவரை பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது ? அது மக்களுக்கு எந்த விதத்தில் பலன் தரும்? மக்கள் அவருக்கு தர வேண்டிய தண்டனையை தான் போன சட்டமன்ற தேர்தலில் கொடுத்து விட்டார்களே. இப்போது செத்த பாம்பை அடிக்க சொல்கிறீர்களா?
கருணாநிதியை தோல் உரிக்கும் தருணம் இது..
Quote
 
 
-7 #9 ssr 2010-10-23 09:03
why are you hesitating to tell about jayalalitha.
Quote
 
 
+4 #8 savukku prian 2010-10-23 06:41
:oops: Quoting Sakthivel:
பின் வரும் மறவனின் கேள்விக்கு உங்கள் பதில்? மௌனம் சம்மதமோ? முதலில் ஜெயலலிதா பற்றிய உங்களின் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டு அடுத்தவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுங ்கள். இல்லையெனில் உங்களின் அரசு வேலை காரணமாக நீங்கள் அடைந்த குற்றச்சாட்டுகள ின்மேலான கோபமே ஜாபர்சேட், கருணாநிதி மற்றும் பதவியில் உயரியவர்களை தூற்றுவதில் முனைப்பு காட்டுகின்றீர்க ள் என்றுதான் நம்பவேண்டும்.

///////////////#33 maravan 2010-10-21 19:12

dai nathari unmaya sonna accept pannanum atha vittutu jayalaitha mosam sonia mosam innu kathathey inga savukku solluvathu karunanithi atchi mosam thats all
Quote
 
 
+3 #7 கனிமொழி கபடநிதி 2010-10-23 06:23
சவுக்கு தயவுசெய்து காக்கா ராதாகிருஷ்ணனின் படத்தை பிரசுரித்து செய்திக்கு பொலிவூட்டவும், ஆமையின் படமில்லாதது சப்பெண்டிருக்கு .பிளீஸ்.
Quote
 
 
+3 #6 rukku 2010-10-23 06:17
முதலை என்ன திங்கிறது என்பதை புலனாய்வு செய்யுங்கள் நிச்சியமாக சோறு இல்லை,
Quote
 
 
+2 #5 rukku 2010-10-23 06:15
கோப்புக்கள் எல்லாம் முதலையின் பார்வைக்கு போகாமலா அப்பீலுக்கு போகிறது,நாலுக்க ு ஐந்தாவது தடவை முதலையின் கண்ணசைவுக்கு கட்டுப்படகூடிய கறுப்பு ஆடு நீதித்துறையிலிர ுந்து சாதகமான தீர்ப்பை எழுதி முடிவுக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கைதான். மூத்த முதலை சரியாக இருந்தால் அதிகார கைத்தடிகள் பயப்பிட இடமிருக்கிறது, முதலையின் கொள்ளுப்பேத்திவ ரை ஊழலில் சன்னதமாடும்போது எதுவும் சாத்தியமில்லை, எதற்கும் முதலை நிரந்தரமாக உறங்கினால் ஒருவேளை??????
Quote
 
 
+3 #4 செந்தமிழ் 2010-10-23 03:44
சவுக்குக்கு நிகர் சவுக்கு தான் கோடான கோடி திராவிடன் இல்லாத தமிழ்சாதியின் வாழ்த்துக்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் தமிழால் தமிழரால் மீண்டும் நிமிர்வோம். இந்தியாவில் இப்படியெரு துணிவான பத்திரிகையும் துணிவான‌
செயல்பாடுகளும் சவுக்கை விட்டால் வேறு எவருக்கும் இல்லை நன்றி நன்றி வாழ்க வளர்க‌

அமெரிக்கா செந்தமிழ்
Quote
 
 
+3 #3 muhaideen 2010-10-23 02:24
ஒரு காலத்தில் அரசாங்க பணிக்கு வரக்கூடிய சகோதர சகோதரிகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சேவை நோக்கோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தார்கள், ஆனால் என்று தமிழகத்தில் திராவிட கட்ச்சிகளின் ஆட்சி ஏற்பட்டதோ அன்று முதல் இன்று வரை கையுட்டு பெறுவதற்காக மக்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களின் வயிற்றை
நிறைக்கும் செயல்களில் ஈடுபடுவதை தொழிலாக மானம் கெட்டச் செயலில் ஈடுபடுவதுதான் இவர்களின் மக்கள் பணி , இந்த ஜென்மங்களுக்கு சூடும் , சொரணையும் எது? சூடும் சொரணையும் வெட்கி தலைக் குனியும்.
Quote
 
 
+3 #2 victor 2010-10-23 02:03
இந்த நாட்டில் , தனி நபர்களுக்கும் ,பொது வாழ்வில் உள்ளவர்களுக்கும ் ஒழுக்கம் என்பதே இல்லை.அப்புறம் எப்படி சூடும் சொரணையும் இருக்கும் ??
பொது மக்கள் ஓட்டிற்கு பணம் வாங்காமல் இருந்தால் ,சிலர் தவறு செய்யாமல் இருப்பார். நாம் என்ன தவறு செய்தாலும் ,மக்களுக்கு பணம் கொடுத்தால் அனைத்தையும் மறந்துவிட்டு நமக்கு ஓட்டுப்போடுவார் கள் என்ற எண்ணம் தற்போது ஆட்சியில் உள்ளவர்களின் எண்ணம் . பணம் கொடுக்க முடியும் என்றால் ,தமிழ் நாட்டில் எதையும் சாதிக்கலாம் என்பதால் தான் மற்ற மாநிலத்தவரின் ஆதிக்கம் இங்கு அதிகமாக உள்ளது .தமிழர்களாகிய நாம் விழித்துக்கொள்வ து எப்போது ? சிந்திப்பீர் !
Quote
 
 
-9 #1 Sakthivel 2010-10-23 02:01
பின் வரும் மறவனின் கேள்விக்கு உங்கள் பதில்? மௌனம் சம்மதமோ? முதலில் ஜெயலலிதா பற்றிய உங்களின் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டு அடுத்தவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுங ்கள். இல்லையெனில் உங்களின் அரசு வேலை காரணமாக நீங்கள் அடைந்த குற்றச்சாட்டுகள ின்மேலான கோபமே ஜாபர்சேட், கருணாநிதி மற்றும் பதவியில் உயரியவர்களை தூற்றுவதில் முனைப்பு காட்டுகின்றீர்க ள் என்றுதான் நம்பவேண்டும்.

///////////////#33 maravan 2010-10-21 19:12
நீண்ட நாட்களாக வாசித்து வருகிறேன். உங்களின் ஒருபக்கசார்பு எங்களை யோசிக்க வைக்கிறது. கருணாநிதி முதலை என்பது தெரிந்ததே.
இந்த முதலை விரைவில் இறந்து விடும். ஆனால் ஜெயலலிதா என்றொரு முதலை இருகிறதே அதை பற்றி எழுத உங்களுக்கு கை வர மாட்டேன்கிறதே..
ஏன் கையில் சிறுதாவூரில் வாங்கிய பெருமுடிப்பு உள்ளதோ..? சரி சவுக்கு கருணாநிதியின் துரோகம் அனைவருக்கும் தெரிந்ததே. ஜெயலலிதா ஈழதமிழர்க்கு செய்த நலன்களை பட்டியலிடுங்களே ன் உண்மையான ஆண்பிள்ளையாக இருந்தால்...////////////
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 127 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9320
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week66222
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month268954
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12791073