முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
-சிறையிலிருந்து நளினி எழுதும் கண்ணீர் டைரி பாகம் 3 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011 19:52

வார்த்தைகள் போதாதென்று, இரவு முழுவதும் இப்படி உட்காரவிடாமல் நிற்க வைப்பது, தனியொரு மரண வேதனையாக இருக்கும். கால் வலியோடு, நா வறண்டு, உயிர் பிரிவதுபோன்ற மயக்கம் வரும். ஒருவழியாக, விடியற்காலை 4 அல்லது 4.30 மணிக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த அறையிலிருந்து வெளியேறியதும், தூக்கம் பேய் மாதிரி வந்து என்னை இழுத்துச் செல்லும். ஆனால், அரைமணி நேரம்கூட விடமாட்டார்கள். வந்து எழுப்புவார்கள். பகலிலும்கூட கண் அசரவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். காலை பத்து மணிக்கு வேறு ஒரு அதிகாரி வருவார். இரவு அந்த அதிகாரியிடம் சொன்னதையே மீண்டும் இவரிடம் சொல்ல வேண்டும்.  

உங்களால் நம்ப முடிகிறதா? இதுபோல், தொடர்ச்சியாக இருபது நாட்கள் என்னை தூங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்களை எந்த வேலையும் செய்யவிடாமல், போதுமான ஓய்வு கொடுத்து, ஆரோக்கியமான உணவு கொடுத்து பார்த்துக் கொள்வதுதான் உலக வழக்கம். நானோ, தூக்கமில்லாமல், உணவு இல்லாமல், அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, கேட்கக்கூடாத வார்த்தைகளை கேட்டுக்கொண்டு இருந்தேன். தொடர்ந்து தூக்கம் இல்லாத காரணத்தால், பகலில் என்னையறியாமல் தூங்கி வழியும் நேரங்களில் பணியில் இருக்கும் அந்த மூன்று இன்ஸ்பெக்டர்களும், ‘‘வேசிக்கு தூக்கம் ஒரு கேடா?’’ என்று சொல்லி காலால் எட்டி உதைப்பார்கள்.
nalini_3_small
தினமும் ஒரு வீடியோ கேசட்டைப் போடுவார்கள். அதில் பெண் புலிகள் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அவர்களில் சிலரை குறிப்பிட்டு, ‘இதுல யாராவது ஒரு பெண் நீதான்னு ஒப்புக்கோ’ என்று என்னை வற்புறுத்துவார்கள். என்னை எப்படியாவது போராளியாக சித்தரித்துவிட வேண்டும் என்ற போலீஸ் புத்தி எனக்கு தெரியாமல் இல்லை. அந்த வீடியோவில் வரும் பெண் நானாக இல்லாதபோது எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? ஆனால், சித்ரவதைகள் விடாமல் தொடர்ந்தன.  

தொடர்ந்து நடத்தப்பட்ட சித்ரவதைகளால், எழுந்து நிற்கக்கூட முடியாமல் மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன். மோசமான உணவு, வாந்தி, தூக்கமின்மை, சித்ரவதைகள் என்னை மேலும் பலவீனமாக்கின. நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், குளிக்கவோ, உடை மாற்றிக் கொள்ளவோ அனுமதிக்கவில்லை. வாந்தி எடுத்த இடத்திலேயே படுத்துக் கொள்ள வேண்டும். என் தலையெல்லாம் பயங்கரமாக பேன் பிடித்துக் கொட்டத் தொடங்கியது. என் உடல், துணியெல்லாம் துர்நாற்றம் வீசியது. அவர்களால், என் அருகில் நெருங்க முடியாத ஒரு  சூழல் ஏற்பட்டபோதுதான், என்னை குளிக்கவும், உடை மாற்றவும் அனுமதித்தனர்.

நான் சித்ரவதையினால் பலவீனப்பட்டு மயக்கம் அடைந்த சமயங்களில் எல்லாம் எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். என் உடலில், பெயருக்கு உயிர் ஒட்டிக் கொண்டிருந்தால் போதும் என்ற அளவிற்கே என்னை வைத்திருந்தார்கள். குளுக்கோஸ் ஏற்றும்போதுகூட, விஷ ஊசி போட்டு என் குழந்தையைக் கொன்றுவிடுவோம் என்று ஆளாளுக்கு வந்து மிரட்டினார்கள். குளுக்கோஸ் என்ற பெயரில், என் குழந்தையைக் கொல்ல விஷத்தை ஏற்றுகிறார்களோ என்ற அச்சத்தில் நான் 24 மணி நேரமும் மரண பயத்திலேயே இருந்தேன். இந்த பயமே என்னை தூங்கவிடாமல் மிகவும் கொடுமைப்படுத்தியது. விழிப்பிற்கும், தூக்கத்திற்கும் இடையில் நான் எவ்வாறெல்லாம் போராடினேன் என்பதை அனுபவித்தால் மட்டுமே உங்களால் உணர முடியும்.

ஒருநாள், மல்லிகை அலுவலகத்தில் மொட்டை மாடிக்குச் செல்லும் வழக்கமான வராந்தாவில் என்னை உட்கார வைத்தனர். அது பாதை என்பதால், எந்நேரமும் யாராவது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக என்னால் சௌகரியமாக உட்காரவோ, படுக்கவோ முடியாது. எனக்கு காவலாக இரண்டு பெண் காவலர்கள் இருந்தனர். அவர்களைத் தவிர, மத்தியப் படையைச் சேர்ந்த இரண்டு காவலர்களும், எஸ்.ஐ.டி.யைச் சேர்ந்த ஒரு காவலரும், 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக இருப்பார்கள்.  

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நேரத்தைத் தவிர, எப்போதும் என் கையில் விலங்கு மாட்டியே வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போதும், இயற்கை கடன்களை கழிக்கும்போதும்கூட என் கை விலங்கு அகற்றப்படாது. கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக விலங்கு மாட்டப்பட்டு இருந்ததால், என் கை மணிக்கட்டில் புண் ஏற்பட்டது. அந்தப் புண் எனக்கு கூடுதல் வலியை ஏற்படுத்தினாலும், விலங்கு மட்டும் கழற்றப்படவே இல்லை.

பிரமாண்ட இயக்குநர் பெயர் கொண்ட ஆய்வாளர் ஒருவர் அங்கிருந்தார். அவர் பேசிய வார்த்தைகள் இருக்கிறதே... அடிக்கடி என்னிடம் வந்து, ‘‘வேசி மகளே! உனக்கு பொம்பள குழந்தை பொறந்தா, நானே.................................. அதை ........................ஆக்குவேன். பையன் பொறந்தா, அவனுக்கு மொட்டை அடிச்சி தெருவில பிச்சை எடுக்க வைப்பேன். இது சத்தியம்டி’’ என்று சொல்லிவிட்டுப் போவார். அவரது இந்த சபதம், ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து, நிமிடத்துக்கு நிமிடம் என்னை அழ வைத்தது.

ஒருநாள், என்னை குளியலறைக்கு அழைத்துச் சென்றபோது, தற்செயலாக என் கணவரைப் பார்க்க நேரிட்டது. அவரைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருந்தது. பட்டினியால் அவர், மிகவும் பலவீனமாக நடக்க முடியாமல் இருந்தார். கண்களில் நீர் வழிய, ‘சாப்பிட்டீங்களா?’ என்று சைகையால் கேட்டேன். கேட்டதுதான் தாமதம், ‘‘ஓ... ஜாடை காட்றீங்களோ, ஜாடை! நான் ஜாடை காட்றேன், பாக்கறியா?’’ என்று அருவெருப்பான செய்கை காட்டி, ‘‘உன் புருஷன் கண்ணெதிர்லயே உன்னை............................................?’’ என்று ஆவேசமாக கத்தினார். என்றாவது ஒரு நாள் எனக்கு அப்படி ஒரு கொடுமை இழைக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் என்னுள் அதிகரிக்கத் துவங்கியது. மறு நாள்....

-இரவுகள் நீளும்

 

Comments  

 
0 #15 sathiyan 2011-11-21 13:51
[ஃஉஒடெ நமெ="வன்னியன்"]அவல் என்ன ஜாதி ?[/ஃஉஒடெ]
நி தான் டாமனித ஜாதி. உன்னைலாம் கட்டி
வைச்சி உரீக்கனும்
Quote
 
 
+3 #14 வால்டர் வணங்காமுடி 2011-11-02 15:42
திம்மா அவர்களே...

இந்திய ஊடகஙகளும்,சிங்க ள ஊடகங்கள் போன்ற பக்க சார்புடைய ஊடகங்கள் சொல்வதை அப்படியே வாந்தி எடுக்க கூடாது. கொஞ்சம் மூளையை உபயோகிக்க வேண்டும்.

புலிகள் மக்களை மனித கேடையங்களாக பயன்படுத்தினார் களா?

இது உண்மை என்று வைத்துகொள்வோம்.இந்த குற்றச்சாட்டை ஐ.நா அறிக்கை வைத்தவுடன் அதுகுறித்து விவாததிக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயார் என்று முன்வந்ததும் 'அதே புலிகள்' தான் சார். (இது போன்ற செய்திகள் உங்கள் இந்திய ஊடகங்களில் வராது). ஆனால் ஒரு பொதுமகனை கூட சிங்கள இராணுவம் இதுவரை கொல்லவில்லை என்று உலகமகா புளுகை விடும் ராஜபக்ஷேவின் பேட்டி தான் இந்திய ஊடகத்தில் வரும். ஒருத்தனை கூட ராஜபக்ஷே கொல்லவில்லை என்று சொன்னால் 'சானல் 4' வீடியோ உண்மை என்று ஐ.நா ஒத்துகொண்டது ஏன்? வெளிப்படையான ஒரு விசாரணைக்கு இலங்கை மறுப்பது ஏன்?

ஆக, புலிகள் பற்றிய உங்களை போன்ற அரைவேக்காடுகளின ் பிம்பம் மீண்டும் உடைந்துவிட்டது. மீசையில் மண் ஒட்டி இருக்கு பாருங்க.... தொடைங்க...!!! :lol: :lol: :lol:
Quote
 
 
-3 #13 Vanniyan 2011-10-29 21:07
அவல் என்ன ஜாதி ?
Quote
 
 
-2 #12 திம்மா 2011-10-24 21:16
.[/ஃஉஒடெ] புத்திசாலி தனமா பேசுறதா நெனப்போ? நான் கேட்டது 'தீவிரவாதி' என்பதன் அர்த்தம் என்ன என்று தான். இந்தியாவுக்கு வேண்டியபோதெல்லா ம் 'போராளிகள்' என்று அறிபப்பட்ட ஒரு அமைப்பு, இந்தியாவுக்கு தேவை இல்லை என்று வந்ததும் 'தீவிரவாதி' என்று முத்திரைக்குத்த பட்டதன் நோக்கம் என்ன? கேட்டா அதே பழைய பல்லவியான 'ராஜிவ் காந்தி கொலையை' இழுப்பீங்க....!!! அப்போ சீக்கியர்கள் இந்தியர்கள் கிடையாது, தீவிரவாதிகள். அப்படி தானே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒரு தீவிரவாத அமைப்பு தான். இவஙுஙளை என்ன பண்ணுனீங்க? ஒன்னும் பன்னல... அப்போ புலிகளும், தமிழனும் இளிச்சவாயனா? என்னங்கடா உங்க இந்திய நியாயம்.... காறிதுப்புற மாதிரி இருக்கு...!!![/ஃஉஒடெ]
தேவைப்படும் போதெல்லாம் புலிகளை இந்திய அரசு பயன்படுத்தியது உண்மைதான், அதுக்குப் பெயர்தான் ராசதந்திரம். ஆனால் புலிகளின் ராசதந்திரம் என்ன? அப்பாவி இலங்கை தமிழனுகளை மனித கேடயமாக பிடிப்பது, அப்புறம் சிங்கள ராணுவத்தின் மீது பழியை போடுவது. இதில் இந்திய இலங்கை அரசுகளைக்கூட மன்னிக்கலாம் ஏன்னெனில் அவர்கள் பிறமக்களை வைத்து விளையாடினார்கள் . ஆனால் புலிகும்பல் சொந்தமக்களை பணயமாக வைத்து விளையாடி தோற்றது.

அப்புறம் சீக்கிய பிரச்சனை பற்றி தெரியாமல் உளற வேண்டாம். எல்லா சீக்கயனும் எதுக்கு தீவிரவாதி ஆகனும். காலிஸ்தான் கேட்டு கொலை செய்த கொலைகாரகும்பல் மட்டுமே தீவிரவாதிகள் ஆவர். இவர்களை அழித்ததுக்கூட ஒரு சீக்கிய அதிகாரிதான் பெயர் கேபிஎஸ் கில்.

தமிழன் இளிச்சவாயந்தான் இல்லைனா, தங்களை மனித கேடயமாக பிடித்த, தங்கள் வீட்டுக்குழந்தை களை கட்டயாமாக போர்முனைக்கு அனுப்பிய, அமிர்தலிங்கம் போன்ற தம் இனதலைவர்களையே அழித்த கும்பலை நம்பி மோசம் போவானா?
Quote
 
 
-2 #11 வால்டர் வணங்காமுடி 2011-10-23 21:42
ராஜிவ் கொலை பற்றி இதுவரை எத்தனையோ கேள்விகளையும், மாற்று கண்ணோட்ட்ஙகளையு ம் இதே சவுக்கில் வைத்தாயிற்று. அதெற்கெல்லாம் எவனும் பதில் சொல்ல மாட்டான். ஆனால் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் திரும்பவும் பழைய பல்லவியை மறுபடியும், மறுபடியும் பாடுற அரைவேக்காடுகளை நினைத்தால் சிப்பு..சிப்பாத் தான் இருக்கு...!!! யார் கண்டா.... 'ராஜிவ்' செத்ததுக்கு அப்புறம் தான் 'புலிகள்' அமைப்பை இந்தியா தடைசெய்ததுதுன்ன ு கூட சொன்னாலும் சொல்வானுங்க...!!! புலிகளை பார்த்து அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ராஜிவ் பொணம் தான் கண்ணுக்கு வரும்... வேற என்னத்த சொல்ல...!!!
Quote
 
 
0 #10 வால்டர் வணங்காமுடி 2011-10-23 21:38
[ஃஉஒடெ நமெ="திம்மா"]தீவிரவாதி என்றால் யார்? இங்கு தீவிரவாதி என்று யாரை சொல்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கினால் தேவலை.[/ஃஉஒடெ]
நான் யாரைச் சொல்லுகிறேன் என்பது அறியாத அப்பாவியா நீர்? :-)
நளனி எந்த தீவிரவாத அமைப்புக்கு உதவுனாரோ, எந்த அமைப்பு 32 நாடுகளில் டெரோரிஸ்ட் அமைப்பு என தடை செய்யப்பட்டதோ, அவ்வமைப்பு எந்த மக்களுக்காக போராடியதோ அம்மக்களையே மனித கேடயமாக பிடித்து அவர்களை மிருகங்களுக்கு இரையாக்கிதோ,அவ் வமைப்பையே குறிப்பிடுகிறேன ்.[/ஃஉஒடெ]


புத்திசாலி தனமா பேசுறதா நெனப்போ? நான் கேட்டது 'தீவிரவாதி' என்பதன் அர்த்தம் என்ன என்று தான். இந்தியாவுக்கு வேண்டியபோதெல்லா ம் 'போராளிகள்' என்று அறிபப்பட்ட ஒரு அமைப்பு, இந்தியாவுக்கு தேவை இல்லை என்று வந்ததும் 'தீவிரவாதி' என்று முத்திரைக்குத்த பட்டதன் நோக்கம் என்ன? கேட்டா அதே பழைய பல்லவியான 'ராஜிவ் காந்தி கொலையை' இழுப்பீங்க....!!! அப்போ சீக்கியர்கள் இந்தியர்கள் கிடையாது, தீவிரவாதிகள். அப்படி தானே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒரு தீவிரவாத அமைப்பு தான். இவஙுஙளை என்ன பண்ணுனீங்க? ஒன்னும் பன்னல... அப்போ புலிகளும், தமிழனும் இளிச்சவாயனா? என்னங்கடா உங்க இந்திய நியாயம்.... காறிதுப்புற மாதிரி இருக்கு...!!!
Quote
 
 
-4 #9 திம்மா 2011-10-22 05:02
தீவிரவாதி என்றால் யார்? இங்கு தீவிரவாதி என்று யாரை சொல்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கினால் தேவலை.[/ஃஉஒடெ]
நான் யாரைச் சொல்லுகிறேன் என்பது அறியாத அப்பாவியா நீர்? :-)
நளனி எந்த தீவிரவாத அமைப்புக்கு உதவுனாரோ, எந்த அமைப்பு 32 நாடுகளில் டெரோரிஸ்ட் அமைப்பு என தடை செய்யப்பட்டதோ, அவ்வமைப்பு எந்த மக்களுக்காக போராடியதோ அம்மக்களையே மனித கேடயமாக பிடித்து அவர்களை மிருகங்களுக்கு இரையாக்கிதோ,அவ் வமைப்பையே குறிப்பிடுகிறேன ்.
Quote
 
 
0 #8 வால்டர் வணங்காமுடி 2011-10-21 12:29
[ஃஉஒடெ நமெ="திம்மா"]இதை படித்த பின்னர் இப்படி தீவிரவாதிகளுக்க ு துணை போவது எவ்வளவு பெரிய தவறு எனபதையும் அதன் விளைவுகளையும் தமிழ் பேசும் சமுதாயம் உணரும். :சட்:[/ஃஉஒடெ]


தீவிரவாதி என்றால் யார்? இங்கு தீவிரவாதி என்று யாரை சொல்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கினால் தேவலை.
Quote
 
 
+3 #7 வால்டர் வணங்காமுடி 2011-10-21 12:28
[ஃஉஒடெ நமெ="ரமெஷ்க்"]இவர் சொல்வதை நன்பதிர்கல் அததனையயும் பொய்.[/ஃஉஒடெ]


அய்யோ பாவம்... இவ்வளவு அப்பாவியா இருக்கியேபா? :D
Quote
 
 
+5 #6 வால்டர் வணங்காமுடி 2011-10-21 12:27
[ஃஉஒடெ நமெ="க் க்ரிஷ்னன்"]செய்த செயல் சாமானியமானதா? இதற்கு ஆதரவு தருவது தவறு. என்ன சொன்னாலும் உஙகள் கனிவு சரியானதல்ல.[/ஃஉஒடெ]


யாரு சுப்ரமணிய சாமி,சந்திராசாம ி,மரகதம் சந்திரசேகர்,மன் மோகன் சிங்,மொசாட்,நார ாயணன் இவனுங்களை சொல்றீங்களா? இவனுங்க நல்லாத் தானே இருக்குறானுங்க?
Quote
 
 
+1 #5 rameshk 2011-10-20 15:26
இவர் சொல்வதை நன்பதிர்கல் அததனையயும் பொய்.
Quote
 
 
-5 #4 திம்மா 2011-10-20 01:07
இதை படித்த பின்னர் இப்படி தீவிரவாதிகளுக்க ு துணை போவது எவ்வளவு பெரிய தவறு எனபதையும் அதன் விளைவுகளையும் தமிழ் பேசும் சமுதாயம் உணரும். :sad:
Quote
 
 
+2 #3 Ramesh K S 2011-10-19 16:52
[ஃஉஒடெ நமெ="அஹ"]ஹ்ம்ம்.என்ன பன்ரது .அவ கொலை பன்னினது ராஜீவ் காந்திய இல்ல.ஒரு சிக்னல் மீரலுக்கு ஒரு வழி பன்ன்னும் பொலிசெ சும்மாவா இருப்பானுஙக?[/ஃஉஒடெ]
முதலில் தைரியம் இருந்தால் உன்மையான பெயரில் எழுது.இப்படி பொட்டைத்தனமாக பொய்ப்பெயரில் எழுதாதே!
Quote
 
 
-6 #2 k krishnan 2011-10-19 16:05
செய்த செயல் சாமானியமானதா? இதற்கு ஆதரவு தருவது தவறு. என்ன சொன்னாலும் உஙகள் கனிவு சரியானதல்ல.
Quote
 
 
-14 #1 aha 2011-10-17 20:12
ஹ்ம்ம்.என்ன பன்ரது .அவ கொலை பன்னினது ராஜீவ் காந்திய இல்ல.ஒரு சிக்னல் மீரலுக்கு ஒரு வழி பன்ன்னும் பொலிசெ சும்மாவா இருப்பானுஙக?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 129 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5977
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week5977
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month287352
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12809471