|
அவர்கள் கைது செய்யப் படப் போவதே இல்லை. என்ன இது என்று ஆச்சர்யமாகப் பார்க்கிறீர்களா ? ஆம், நேற்று கேடி சகோதரர்கள் கைது செய்யப் படக் கூடாது என்று காலை முதல் பிற்பகல் வரை, கருணாநிதி குடும்பத்துக்கும், கேடி சகோதரர்கள் குடும்பத்துக்கும் ப்ரோக்கராக செயல்பட்டு வரும், தலைச் சிறந்த நெடுந்தொடர் நடிகை செல்வி ஏற்பாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றது. செல்வியின் கோரிக்கையின் பேரில், ,அகில இந்திய சாய் சமாஜ் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் என்பவர் இதை ஏற்பாடு செய்தார்.

இந்த விளக்கு பூஜையில், கேடி சகோதரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் திருஷ்டியை கழிக்கும் வகையிலும், அவர்கள் சிறை செல்லாமல் தடுக்கும் வகையிலும் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டன. சிறப்பு மந்திரங்கள் என்னவாக இருக்கும் ?

வேறு என்ன ? சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் படமான “காதலில் விழுந்தேன்” படத்தில் வெளி வந்த ஹிட் பாடலான “அட்றார்றா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க“ என்ற மந்திரங்கள் காலை முதல், மாலை வரை ஓதப்பட்டிருக்கும்.
இந்த மந்திரங்களைக் கேட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் மனமிறங்கி, கேடி சகோதரர்களை சிறை செல்லாமல் காப்பாற்றுவார்கள் என்று நெடுந்தொடர் நடிகை செல்வி, பெரிய கேடியின் மனைவி காவேரி மற்றும் சின்னக் கேடியின் மனைவி ப்ரியா ஆகியோரும் உறுதியாக நம்புகிறார்கள்.

இவர்கள் பூஜை செய்து, அதைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் மனமிறங்கலாம். சுப்ரமண்ய சுவாமி கூட ஏதாவது ஒரு டீலில் செட்டில் ஆகலாம். இவர்கள் மீதான வழக்குப் பதிவை தாமதம் செய்து, இவர்கள் கைதையும் தாமதம் செய்து கொண்டிருக்கும், மத்திய புலனாய்வுத் துறையின் வழக்காடும் பிரிவு (Directorate of Prosecution)ன் தலைவர், அப்துல் அஜீஸ் மனமிறங்கலாம். அந்த அப்துல் அஜீஸை, தமிழக ஐபிஎஸ் அதிகாரி, முகம்மது ஷகீல் அக்தரை வைத்து, கேடி சகோதரர்கள் தங்கள் பக்கமாக வளைக்கலாம்.
ஆனால், இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கும் மூன்று தெய்வங்கள் மனமிறங்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. யார் அந்த மூன்று தெய்வங்கள் என்று கேட்கிறீர்களா ? 2ஜி வழக்கில் இன்று வரை பல உண்மைகளை வெளிக் கொணர்வதில் முன்னணியில் இருக்கும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கங்குலி மற்றும் சிங்வி தான் அந்த மூன்று தெய்வங்கள்.
இந்த விளக்கு பூஜை இந்த மூன்று தெய்வங்களின் மனதை இறங்கச் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதனால், கேடி சகோதரர்களின் கைதுக்காக அது வரை காத்திருங்கள். |
Comments
This websiet is doing super job
http://www.whispersintamilnadu.com/
follow this
ஓம் 2ஜி யெ ஸ்வாக!
ஓம் டெலிபோன் கனக்சனே ஸ்வாக!
#வெளங்கும்
மாறானோட மாமனார் ஒரு 'அவாள்'. பேரு 'சந்து' ராம். அதாம்பா... 'இந்து'ராம்.
கவலைப் படாதீர், கூடிய சீக்கிரம் ”சாமி” தனது விளையாட்டை ஆரம்பிப்பார்..
செவி வழிச் செய்தி
ஹ்ட்ட்ப்://செவிவழிசெஇதி.ப்லொக்ச்பொட்.சொம்[/ஃஉஒடெ]
Ok... lets say ur story is true... always we are speaking we are veera thamilargal, tamilagam vetriyin vilai nilam.. but in history when tamilian won? Opposite of whom we won? never.. we dont have any strength ( in mind or body or unity) But still we are speaking veeram, vetri.. it's sad..
துனிச்சல் எனும் வானில் நீ ஒரு துருவ நட்சத்திரம்
ராஜராஜசோழன் தான் நடத்திய போர்களில் கொல்லப்பட்ட ஆன்மாக்களினால் தான் பாதிக்கப்படாமல் இருக்க தங்க பசு செய்து அதன் வயிற்றில் அமர்ந்து வெளி வந்து பிறகு தானம் செய்தானாம். அவன் அடக்கம் செய்யபட்டதாக கருதப்படும் சமாதியின் புகைபடம் இணையத்தில் தேடினால் கிடைக்கும். ஆண்டாண்ட அரசர்களுக்கு இயற்கை நீதி இவ்வாறு இருக்க எத்தனை அவாளுக்கு தானம் செய்தும் காலதேவதையிடம் தப்பிக்க முடியுமோ??...
ஆகும்:
வாழ்க பாரதம் & வளர்க தமிழகம்
[ஃஉஒடெ நமெ="கும்பிட்றேன் சாமி"]வெட்கமாக இருக்கிறது....தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் ....மாபாதகம் செய்ய மனது வந்திருக்குமா??.... இல்லை... தெய்வம் உண்டு என்று இருந்திருந்தால் இந்த பூசனையின் பலன் தெரிந்திருக்கும ே!!!!.. இரண்டுமே தெரியவில்லை... தெய்வமும் தெரிய வில்லை... முன் ஜென்ம வினை, இப்பிறவி வினை... அனைத்தும் அண்டி வரும் நேரம்...அனுபவித்து தீர வேண்டியது தான்... ஆனால் பெரியாரும் அண்ணாவும் எத்தனை முறை தான் புரண்டு படுப்பது... பேசாமல் எரித்திருக்க சொல்லி எழுதிவைத்திருக் கலாம்...[/ஃஉஒடெ :ழ்ழ்ழ் அப்பாகன்னாட்டுத ெய்
இது புதுசா இருக்கே? உன்ன்மயா ?
கலக்குஙகள் !!
There is basic undercurrent of "INDIAN IDENTITY" based on Hinduism- but not the "HINDU CHURCH" of "VHP"(vishwa hindu parishad), wgich will breal India like "UNOCOL" in Afghanistan.
If they were not arrested India is in the hand of some "UNOCOL & Dick Chenny".
This money was invested in Srilankan problem and they have taken good profit by arms and medicine sales, and thrown away the people in scrap like Taliban and Mullah mohammen Omar.That fellow Prabakaran must kill his own family because of this "BILLIONs $ TRAP"!.
கணவர் வழி மைத்துனர்மாரில் இருக்கும் ஆதங்கம் அக்கறை , தங்கை கனிமொழி மீது இந்தம்மா செல்வி அவங்களுக்கு இருந்ததாக தெரியல்ல,
முப்பது கோடி தேவர்களில் எத்தனை கோடி தேவர்களின் ஆதரவு கேடி, பிரதர்ஸ்க்கு இருக்குன்னு தெரியல்ல, நிறய தேவர்களுக்கு வயதாகி மூப்பெய்துவிடதக வும், எனது தாத்தா சமீபத்தில் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தா ர்.
அத்துடன் நிறய தேவர்கள் கேடி பிரதர்ஸின்மீது காட்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். விகிதாசரப்படி பூலோகத்தில் இருக்கும் நூற்று இருபது கோடி மக்களோட வயிற்றெரிச்சலை தேவர்கள் புறந்தள்ளவும் தயாரன மனநிலையில் அவர்கள் இல்லை என்றும் தாத்தா சுட்டிக்காட்டின ார், அவரோட வாக்குமூலத்தை "வாசகர் படைப்புகள்" பகுதியில் பதிவு செய்ய தயாரித்துக்கொண் டிருக்கிறேன். எனவே விளக்கு பூசை கேடிகளுக்கு சில நாட்களை காலங்கடத்த உதவுமே தவிர,, மக்களின் வயிற்றெரிச்சலுட ன் போட்டி போட்டு வெல்லும் என நம்ப முடியாது,
கவலைப் படாதீர், கூடிய சீக்கிரம் ”சாமி” தனது விளையாட்டை ஆரம்பிப்பார்..
செவி வழிச் செய்தி
http://sevivazhicheithi.blogspot.com
Hence hereinafter we can call KD brothers as "Emuton" KD brothers. sariyanna emutanaukappaaa !
RSS feed for comments to this post