முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சீசரின் மனைவி…… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011 22:10

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். கிறித்துவுக்கு முந்தைய 63ம் ஆண்டில், ஜுலியஸ் சீஸர் ரோம் சாம்ராஜ்யத்தின் தலைமை போதகராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  இதற்காக அவருக்கு அரசாங்கத்தால் ஒரு வீடு ஒதுக்கப் படுகிறது.   அந்த வீட்டில் சீஸரின் மனைவி போம்பியா அந்த வீட்டில் ஒரு விருந்து வைக்கிறார்.  அந்த விருந்தில் ஆண்கள் யாரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.  ஆனால் பெண் வேடமிட்டு பூப்லியஸ் க்ளோடியஸ் புல்ச்சர் என்ற இளைஞன் சீசரின் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறான்.  அவன் பிடிக்கப் பட்டு விசாரணைக்கு நிறுத்தப் படுகிறான்.   போதுமான சாட்சிகள் இல்லாததால் அவன் விடுதலை செய்யப்படுகிறான்.  ஆனாலும் சீசர் தன் மனைவி போம்ப்பியாவை விவாகரத்து செய்கிறார்.  அதற்கு சீஸர் சொன்ன காரணம், என் மனைவி சந்தேகத்தின் நிழலில் கூட இருக்கக் கூடாது.   இந்தக் கதையிலிருந்துதான் சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற வாக்கியத் தொடர் வந்தது.

 

இப்போது சந்தேகத்திற்கு உள்ளான சீஸரின் மனைவி யார் தெரியுமா ?  அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் இருந்த கிரண் பேடிதான் அது.   அன்னா ஹசாரே போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கிரண் பேடி பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.   அரசியல்வாதிகள் ஊழல் பேர்விழிகள் என்றும், அன்னா ஹசாரேதான் இந்தியாவின் விடிவெள்ளி என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் பேசினார்.

 DSC04708

அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ?   உங்களின் கடந்த கால தவறுகள் எப்படி இருந்தாலும், தோண்டி எடுத்து கண்டு பிடிக்கப் பட்டு விடும்.   மிக மிக கவனமாக, அது வெளியில் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், நிச்சயமாக அது கண்டுபிடிக்கப் படும்.  அப்போது, நீங்கள் பேசிய பேச்சுக்களும், எடுத்த நிலைபாடுகளும் உங்கள் முகத்தில் அறையும்.  இத்தனை நாட்களாக நீங்கள்  கவனமாக கட்டிக் காத்து வந்த உங்களின் இமேஜ் சரி செய்ய முடியாத அளவுக்கு அதள பாதாளத்தில் வீழ்ந்து போகும்.   அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது.

 

இப்படி ஒரு சிக்கலில்தான் கிரண் பேடியும் சிக்கியுள்ளார்.   கூட்டங்களில் பேசுவதற்காக அவரை அழைக்கும் அமைப்புகளிடமிருந்து விமான டிக்கட்டுகள் வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளது.  அதாவது விமானத்தில் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்து விட்டு முதல் வகுப்புக்கான டிக்கட்டுகளின் விலையை க்ளெய்ம் செய்துள்ளார்.  மேலும், வீர தீரச் செயலுக்கான விருது பெற்றவர் என்ற வகையில், அவருக்கு ஏர் இந்தியா விமான கட்டணத்தில் 75 சதவிகிதம் சலுகை இருந்தும், முதல் வகுப்பில் பிரயாணம் செய்தது போல போலியாக பணம் பெற்றுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.  இவ்வாறு இவர் கூடுதலாக பெற்ற பணத்தை தான் எடுத்துக் கொள்ளவில்லை மாறாக, அவரது என்ஜிஓ அமைப்பான இந்தியா விஷன் பவுன்டேஷன் என்கிற அமைப்பின் கணக்கில் வரவு வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 kiran-bedi-1

1979ம் ஆண்டில் கிரண் பேடிக்கு வீரதீரச் செயல் புரிந்ததற்கான விருது வழங்கப் பட்டுள்ளது.  பிப்ரவரி 2001ல் வெளியான சுற்றறிக்கையின் படி, வீர தீர விருது பெற்றவர்களுக்கும், அவரோடு பயணம் செய்யும் ஒருவருக்கும், ஏர் இந்தியா விமானத்தில் இரண்டாம் வகுப்பிலும், ரயிலில் ஏசி வகுப்பிலும் 75 சதவிகித கட்டணச் சலுகை உண்டு.

 1

 

29 செப்டம்பர் 2011ல் கிரண் பேடி டெல்லியிலிருந்து ஐதராபாத்துக்கும், ஐதராபாத்திலிருந்து சென்னைக்கும் பிறகு டெல்லிக்கும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.   இந்த பயணத்துக்காக கிரண் பேடி செலுத்திய சலுகை கட்டணம் 17,134/-.  ஆனால் கிரண் பேடி 73,117 ரூபாய் செலவாகியுள்ளதாக க்ளெய்ம் செய்துள்ளார்.

 

30 மே 2011 அன்று  டெல்லியிலிருந்து பூனாவுக்கும், மும்பையிலிருந்து சென்னைக்கும் தனியார் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.  இதற்கு ஆன செலவு 12,458/-.  கிரண் பேடியை அழைத்த சேரிட்டீஸ் எய்ட் பவுன்டேஷன் என்ற அமைப்பிடம் கிரண் பேடி க்ளெய்ம் செய்த தொகை 26,386/-.

 

25 நவம்பர் 2010ல் டெல்லியிலிருந்து மும்பைக்கு தனியார் விமானத்திலும், மும்பையிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்திலும் பயணம் செய்கிறார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 14,097.    கிரண் பேடி பர்ஸ்ட் மான்டிசோரி கான்பெரன்ஸ் என்ற அமைப்பிடமிருந்து க்ளெய்ம்  செய்த தொகை 42,109/-.

 

2009 மார்ச் 6 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்கு சென்று பிறகு திரும்பி ஏர் இந்தியா விமானத்தில் வந்துள்ளார் கிரண் பேடி.  இதற்கு ஆன செலவு 12,483.    நோவார்டிஸ் என்ற தனியார் நிறுவத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 32,495.

 

2008 டிசம்பர் 5 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்கு சென்று பிறகு திரும்பி ஏர் இந்தியா விமானத்தில் வந்துள்ளார் கிரண் பேடி.  இதற்கு ஆன செலவு 12,614.    கிரண் பேடி பெற்ற தொகை 31,387.

 

2007 மார்ச் 24 அன்று டெல்லியிலிருந்து பெங்களுர் சென்று பிறகு டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 9,625.  இன்டஸ் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற அமைபிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 29,872.

 

2007 மார்ச் 8 அன்று டெல்லியிலிருந்து ஐதராபாத் சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 8,331.  ஆந்திரா தலைமைச் செயலக ஊழியர் நலச் சங்கத்திலிருந்து  கிரண் பேடி பெற்ற தொகை 25,163

 

2006 நவம்பர் 21 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,689.  லீமேன் பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 30,084

 

2006 அப்டோபர் 14 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,691.  சஹாரா இந்தியா நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 30,085

 2

2006 அக்டோபர் 10 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,689.  மிடிடெக் நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 21,098

 

2006 மே 21 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 5,733.  திருபாய் அம்பானி பள்ளியிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 29,181

 

2006 மே 12 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 5,733.  திருபாய் அம்பானி பள்ளியிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 18,085

 

இந்தச் செய்தி நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லி பதிப்பில் வெளியானது. இந்தச் செய்தி வெளியானதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கிரண் பேடி, இந்தத் தொகைகள் அனைத்தும், என்ஜிஓ அமைப்புக்கு சேமிப்பாக சேர்க்கப் பட்டது என்றார்.  அந்த அமைப்பின் பொருளாளரும் இதே கருத்தை வழிமொழிந்தார்.

 

டிசம்பர் 2007ல் கிரண் பேடி ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெறுகிறார்.   டிசம்பர் 2007க்கு முன், அவர் பயணம் செய்து, தவறாக பெற்ற தொகைகள் அனைத்தும், அது அவருக்காக இருந்தாலும், வேறு ஒருவருக்காக இருந்தாலும், லஞ்ச ஒழிப்புச் சட்டப் படி தண்டனைக்குரிய குற்றம்.

 KiranBedi-seminar

லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவு 13 (1) (d) (i), (ii) மற்றும் (iii) என்ன சொல்லுகிறது தெரியுமா ?

  

13. Criminal misconduct by a public servant

 

(1) A public servant is said to commit the offence of criminal misconduct,-

 

(i) by corrupt or illegal means, obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage; or

 

(ii) by abusing his position as a public servant, obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage; or

 

(iii) while holding office as a public servant, obtains for any person any valuable thing or pecuniary advantage without any public interest; or

 

ஒரு பொது ஊழியர், தனக்காகவோ, அல்லது வேறு ஒருவருக்காகவோ விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அல்லது, பொது ஊழியராக இருக்கும் போது, வேறு யாரோ ஒருவருக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அவர் கிரிமினல் மோசடி தவறை செய்தவர் ஆகிறார் என்றுதான் சட்டம் சொல்கிறது.

 

சட்டம் தெளிவாக, “தனக்கோ அல்லது வேறு ஒருவருக்காகவோ” என்று சொல்கிறது.   அந்த வேறு ஒருவர், கிரண் பேடி தலைமையேற்று நடத்தி வரும் ட்ரஸ்டாகவும் இருக்கலாம்.  இப்படிப்பட்ட ஒரு குற்றத்தை ஒருவர் செய்து விட்டு, ஊழலைப் பற்றிப் பேசலாமா ?

 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மிகச் சரியாக, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியக் கூடாது என்று சொல்லியுள்ளார். ஒரு ட்ரஸ்டுக்கு தலைமை நிர்வாகியாக (Chairperson) இருந்து கொண்டு, அந்த ட்ரஸ்டுக்கு, போலியான பயணப் பட்டியல்களைக் கொடுத்து அதில் வரும் பணத்தை செலவிட்டேன் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் ?

 

இவரைப் போன்ற நபர்கள் ஊழலுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதால் தான் இந்தப் போராட்டம் முனை மழுங்கடிக்கப் படுகிறது.

 

1994ம் ஆண்டு என்று ஞாபகம்.  லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், வருடா வருடம் நடக்கும் ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு பணம் கொடுக்க முடியாது என்று தகராறு செய்வது வழக்கம்.   இதை கேள்விப் பட்ட அந்தத் துறையின் சட்ட ஆலோசகர், நேரில் அழைத்து, “ஏம்ப்பா தம்பி.  சாமி இல்லைன்னு சொல்றியாமே !!!” என்றார்.   ஆம் என்று பதிலளித்ததும், “எப்படிச் சொல்ற” என்று பதில் கேள்வி கேட்டார்.  “இல்லை என்று நன்றாகத் தெரியும்” என்று பதில் சொன்னதும், அவர் கோபப்படாமல், அமர வைத்து, “இந்த அறையிலிருந்து ஒரு பேனாவை நீ திருடி விட்டாய் என்று வைத்துக் கொள்வோம்.   அது யாருக்கும் தெரியாது.  எனக்கும் தெரியாது.   ஆனால், அது உனக்குத் தெரியும் அல்லவா ?  உன் மனது உன்னைக் கேள்வி கேட்கும் அல்லவா ?   அதுதான் கடவுள்” என்று சொன்னார்.   நான் மனது கேட்கும் கேள்விக்கு பயப்படுவேன் சார் என்று சொன்னதும், அதுதான் கடவுள்.  நீ அதை நம்பினால் போதும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.   இதைத்தானே வள்ளுவர் தன்னெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்று சொன்னார் ?

 

இன்று எது நேர்மை என்பதற்கான அளவீடுகள் கடுமையாக மாறி உள்ளன.    1991 முதல் 1997 வரை லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராக இருந்தவர்கள், தங்களைச் சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் காபிக்கு கூட சொந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.  கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லாத ரகசிய நிதியை கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லாத ரகசிய நிதியை தமிழகத்தில் வாங்காத அதிகாரிகள்   10க்கும் குறைவு என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ?  இது முற்றிலும் உண்மை.

 

இன்று எந்த நிலைமை இருக்கிறது என்றால், ரகசிய நிதியை வாங்காத அதிகாரிகள் நமக்கு ஆபத்து என்று, அவர்களை வாங்க வேண்டி  உயர் அதிகாரிகள் கட்டாயப் படுத்தும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.  ஏனென்றால், இவன் வாங்கவில்லையென்றால், நம்பளையும் போட்டுக் கொடுத்து விடுவானோ, பேசாமல் அவனையும், நமது கொள்ளையில் பங்குதாரராக ஆக்கி விட்டால் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த மிரட்டல்.

 

ஒரு ஐபிஎஸ் அதிகாரி சொன்ன கதை இது.   அவர் இளம் எஸ்.பியாக இருந்த போது, சேலம் மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்துக்கு டிஐஜியோடு இன்ஸ்பெக்ஷனுக்காக சென்றிருக்கின்றனர்.  அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ஷனில் ஈடுபட்டிருந்த டிஐஜிக்கு சாப்பிடுவதற்காக மாம்பழம் வைத்திருக்கின்றனர்.  அந்த மாம்பழத்தை எடுத்து, தலைக்கு மேல் உயர்த்தி, “இது என்ன வெரைட்டி ?” என்று அந்த டிஐஜி கேட்டிருக்கிறார்.    அவர்கள் அந்த மாம்பழத்தின் வெரைட்டியை சொல்லியிருக்கிறார்கள்.  அதோடு அந்த உரையாடல் முடிந்து விட்டது.   இன்ஸ்பெக்ஷன் முடிந்து, எஸ்பியும், டிஐஜியும், ஒரே காரில் திரும்பியிருக்கின்றனர்.   வண்டி நின்றதும், டிஐஜி, வண்டியின் ட்ரைவரைப் பார்த்து, கார் டிக்கியில் மாம்பழக் கூடை இருக்கும், எடுத்து வீட்டில் வையப்பா என்றிருக்கிறார்.  ட்ரைவரும், மாம்பழக் கூடையை எடுத்து டிஐஜி வீட்டுக்குள் சென்றிருக்கிறார். இதைக் கேட்ட எஸ்.பி. ஆச்சர்யப்பட்டு போய், சார் நீங்கள் யாரிடமுமே மாம்பழம் வேண்டும் என்று கேட்கவில்லை.   எப்படி சார் கார் டிக்கியில் மாம்பழம் இருக்கிறது என்று சரியாக கணித்தீர்கள் என்று கேட்டதற்கு, நீ இப்போதுதானே தமிழ்நாடு போலீசில் சேர்ந்திருக்கிறாய்… போகப் போக புரிந்து கொள்வாய்.   அதிகாரியின் கண் பார்வையை பார்த்து நடந்து கொள்பவன் வாழ்க்கை போலீஸில் செழிப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

 

இது கதை அல்ல.  உண்மையில் நடந்த சம்பவம்.    காவல்துறையில் ஒரு நபரை மடக்குவதற்கு என்ன வழிமுறைகளை வேண்டுமானாலும் கடைபிடிப்பார்கள்.    ஒரு சில அதிகாரிகள் இந்த வழிமுறைகளை கடைபிடித்து, பத்திரிக்கையாளர்களை மடக்கும் பாணியே அலாதி.  பத்திரிக்கையாளர் வீட்டு விசேஷங்களுக்கு உயர் அதிகாரிக்கு பத்திரிக்கை வைத்தால் உடனே, சம்பந்தப் பட்ட லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி வேலைக்கு ஒரு கான்ஸ்டபிளை அனுப்புவதில் தொடங்கி, நிகழ்ச்சி அன்று எதிர்ப்பார்க்காத ஒரு பெரிய தொகையை மொய்யாக அனுப்புவார்கள்.   பெரிய தொகையை மொய்யாக வாங்கி விட்டு, அந்த அதிகாரிக்கு எதிராக செய்தி போடுவீர்களா ?

 

அடுத்த படியாக உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளி அட்மிஷனில் தொடங்கி கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு போவது வரை, உயர் அதிகாரிகளின் உதவி தொடரும், நீங்கள் பத்திரிக்கையாளராக தொடர்ந்து இருந்தால்.

 

காவல்துறை அதிகாரிகளைப் பற்றி ஊழல் செய்திகள் பெரும்பாலும் வெளி வராமல் இருப்பதற்கு காரணமே இது போன்ற ஊழல்கள் தான்.  அதையும் மீறி அதிகாரிகளைப் பற்றி செய்தி சில ஊடகங்களில் வருகிறதென்றால், அது செய்தியில் அடிபடும் அதிகாரியைப் பிடிக்காத அதிகாரி, அந்த செய்தி வருவதற்காக மெனக்கிடுகிறார் என்று அர்த்தம்.

 

அரசின் ரகசிய நிதியை கையாடல் செய்வது என்பது ஒரு தவறே இல்லை என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது.   அரசின் ரகசிய நிதியை கையாடல் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொள்வதற்கும், 2001 விலையில் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கி, அதற்கு பதிலாக லஞ்சம் வாங்குவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் அளவு மட்டுமே.  இரண்டுமே மக்களுக்கு எதிராக மக்கள் வரிப்பணத்தில் அடிக்கும் கொள்ளைகள் மட்டுமே.  வேண்டுமானால் நமக்கு நாமே சே.சே… இது ஒன்னும் தப்பில்ல… நாட்டுல எவன் வாங்காம இருக்கான்.. என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

 

சுத்தமாக நம்பிக்கை இழந்து விட்ட நிலையில், ஊழலுக்கு எதிராக, குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டிய ஒரு போராட்டம் நடக்கிறது, அதற்கெதிராக ஒரு சக்தி கிளம்பியிருக்கிறது என்று நினைத்தால், அதுவும் இப்படி ஊழல் புகாரில் சிக்கியிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

 

நேர்மையாக இருப்பவர்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளும் எதிர்ப்புகளும், நேர்மையாக இருப்பது தவறோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இத்தனை ஊழல் பேர்விழிகளும், சமரசவாதிகளும் இருக்கும் இந்த உலகத்தில் எப்படி வாழ்வது என்று மலைப்பாக இருக்கிறது.

 

எவ்வளவு அவநம்பிக்கை இருந்தாலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட், பீஹார் மாநிலத்திலிருந்து வந்து வயிற்றுப் பாட்டுக்காக சென்னை நகரின் ப்ளாட்பாரங்களில் அமர்ந்திருக்கும் அந்த ஏழை உழைப்பாளி மக்களைப் பார்க்கும் போது, இவர்களுக்காகவாவது தொடர்ந்து போராட வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.     எல்லோருமே நம்பிக்கை இழந்து விட்டால் எப்படி ?

 

Comments  

 
0 #49 Saran 2011-11-01 10:28
U also in the suspicious circle, how dare u try to blame others!! Am not talking abt politics.
Quote
 
 
0 #48 k.srinivasan 2011-10-27 21:59
The congress is an expert in backstabbing its opponents. They are trying all out to tarnish the image of Team Anna stalwarts. Ms.Bedi has not utilized the excess fare so claimed for her personal use.Judged by any standard congress'loot in CWG cannot be compared to Ms.Bedi's inflated fare claim.
Quote
 
 
0 #47 MuthuSivaa 2011-10-27 11:44
I predict this will happen - the congress to dilute and pollute the movement - uses IB in this - so the time period they(congress -culprits- politicians) requested to do all this and diplomatically to pass the(their) bill.
Quote
 
 
+2 #46 பழகலாம் வாங்க 2011-10-26 11:19
[ஃஉஒடெ நமெ="கும்பிட்றேன் சாமி"]புலிகளின் வசம் இருந்த சிறை அனுபவங்களை மணியம் என்பவர் தேனீ இணையத்தில் தொடராக எழுதுகிறார். தமிழ், தமிழ் இன உணர்வு என்னும் போர்வைக்குள் சக தமிழனை புலி பாசிசிச்ட் எப்பிடி கொடுமைகளை உட்படுத்தினார்க ள் என்று தொடராக வருகிறது. சவுக்கு நீங்கள் இந்த பதிவை தைரியம் இருந்தால் நீக்கமல் வெளியிட வேண்டும்.[/ஃஉஒடெ]

ஈழத்திற்கு துரோகம் செய்த நிறைய தமிழர்கள் உள்ளார்கள் என்று தெரிகிறது. மணியம் என்பவர் எதற்காக சிறைக்கு சென்றார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அவர் உறவாடிக் கெடுப்பவராக இருந்திருப்பாரோ ?
Quote
 
 
0 #45 Raji 2011-10-26 05:26
ஆக மொத்தம்..........
மவனே..
No one should talk about the corruption. This savukku policy. Only he can talk. May be you are afraid about loosing business. There is no savukku if no corruption in the town.

This is savukku's test to gauge the readers opinion.
Quote
 
 
+1 #44 Balasubramanian 2011-10-25 23:22
ஐயா நான் யாருக்கும் அடி வருடி அல்ல நான் யெந்த இயக்கத்தையும் சேர்ந்ந்த்தவனும ில்லை நான் தமிழன் வாழ்க்கையின் அனைத்து விருப்பு வெருப்புகலயும் அரிந்தவன் இது போல் நல்லது நடக்க ஆர்வம் கொன்ட நல்ல இதயத்தை கயப்படுத்த வேன்டாம்.
Quote
 
 
0 #43 vennai 2011-10-25 17:29
today dinamnai headlines published nice article and that is perfect answer for this article. if savukku sankar has good heart he should publish that article here
Quote
 
 
0 #42 Vaedhampudhidhu 2011-10-25 16:42
Savukku edhellam ezhudhadheenga already unga readers list kurainjukitae varudhu, unmaya makkaluku thavaru ezhikuravanga naatula cancer maadiri irukaanga avungala pathi ezhudhalamae...
Quote
 
 
0 #41 Vaedhampudhidhu 2011-10-25 16:41
Nama Rahul vinci gandi kooda Boston(US) la travel panumbodhu adhigama Dollar vaichirundhar , Drug dealer ponnoda kootu vaichirundhaaar , yaen adhellam velila vara matenguthu??? 10k flight charge ku 20K charge vaangiruka, Anna hazare sappathi thirudinaanu pesuradhuku indha thev... magan+magalgalu ku ena yogiyadhai iruku. Sonia oru KGB agent , oru uzhavaliya katchi maelidathila utkaara vaicha epdi thaan irukum. James bond padathila kooda 'M' thaan adhigaaram panuvaa.. Inga...
Quote
 
 
0 #40 aha 2011-10-25 15:47
I guess Kiran Bedi is clean bold.Its not corruption.Its a fraud case,submitting over invoiced bills.I dont know how savukku wrote it as corruption issue,citing some parts of laws.She needs to be prosecuted for this.But at the same time,the opinions she expressed on corruption is still valid.If only Mahatmas should be speaking against corruption,then noone can do that in our country.It has become totally corrupt.Even members here wont file tax for bank interest.Many will be submitting fake rent receipts etc.Its interesting to know how many VIPs are doing these kind of things.Finally, If Kiran Bedi is guilt,Raul Vinci's admission to St.Stephens also needs to be brought into light.
Quote
 
 
0 #39 Sami 2011-10-25 11:19
Savukkku,
read today's dinamani editorial, Do not get de-railed from justice, otherwise you will be the loser and lose everything
Quote
 
 
+1 #38 KKR 2011-10-25 09:19
பிக்பாக்கெட்டும ் , வழிப்பரி கொலை மட்ரும் கொல்லைக்காரர்கல ும் ஒன்ட்ரா சவுக்கு அவர்கலே?
Quote
 
 
+1 #37 manasu 2011-10-25 07:55
என் எதிர்பார்புக்கு எதிர்பதமா இருகியே சவுக்கு !!!
Quote
 
 
+2 #36 ஏகா.. 2011-10-25 07:50
இப்போது காந்தி உயிரோடு இருந்து ஊழ‌லுக்கு எதிராக போராட்டம் செய்தாலும்
அவர் மீதும் ஏதேனும் குற்றசாட்டை எழுப்பு வானுங்க.. இந்த அபிஷேக்கும், திக்விஜய் சிங் பரதேசிகள்..
Quote
 
 
0 #35 Mathaiah 2011-10-25 02:48
savukku don't speard this type of news about madam. kiren bedi....plz understand such the real thing....DON'T SPOIL UR NAME........ :o
Quote
 
 
+7 #34 bala_the Broadcaster 2011-10-24 19:06
அய்யா சவுக்கு... இது ஊழலே கிடையாது...எல்லா ஐபிஎஸ் ஆபிசர்களுக்கும் இந்த 75% தள்ளுபடி கிடைத்துள்ளதா? அது கிரண்பேடி உயிரைக் கொடுத்து வேலை செய்துள்ளதற்காக க் கொடுக்கப்பட்ட பரிசு...எனக்கு என் கம்பெனியில இருந்து வெளிநாட்டுக்குப ் போனா,ஒரு நாளைக்கு நாற்பது டாலர் சாப்பாட்டுக்குக ் கொடுப்பாய்ங்க... ஆனால்,என்னால முக்கி முக்கித் தின்னாலும் இருபது டாலருக்கு மேல திங்க முடியாது.. மிச்சம் இருபது டாலர் எனக்குத்தான்.. நீங்க சொல்றதப் பாத்தா நான் கம்பெனிக் காசக் கொள்ளையடிச்சுட் டேங்கற மாதிரியில்ல இருக்கு.. சும்மா சட்டம் அது இதுன்னு ஓட்டாதீங்க.. அந்த அம்மாவக் கூப்பிடுற ஆளுங்க கொடுக்கறது அது.. அவங்க பெரும்பாலும் டிராவல் கன்சல்டன்ட்ஸ் மூலமாத்தான் அத புக் பண்ணுவாங்க.. சொல்லப்போனா,அந் த விழாவுக்குக் கூப்பிட்டவுங்கள ே,அந்தக் காசப் பத்தி கவலையே படமாட்டாங்க.. ஆமா, அத வாங்கி அந்த அம்மா என்ன, கருணாநிதி மாதிரி வப்பாட்டிக்கா கொடுத்துச்சு? அந்தம்மா திஹார் ஜெயில்ல கைதிகளுக்குப் பண்ணுன சீர்திருத்தத்து க்கு என்ன வேணும்னாலும் பரிசு கொடுக்கலாம்... இதே சட்டம், டெல்லில பதவி முடிஞ்ச பிறகும் வீட்டக் காலி பண்னாம டெல்லில உக்காந்துருக்கற காங்கிரஸ் எம்.பி நாயிங்கள ஒண்ணுமே பண்ணலியே? வெளிநாட்டிற்கு அரசு முறைப் பயணமா,வப்பாட்டி களோட போற அந்த நாயிங்கள என்ன பண்ணுச்சு?இதே அந்தம்மா பதவியில இருக்கும்போது ஜாபர்சேட் மாதிரி எவ்வளவோ சம்பாதிச்சிருக் கலாம்..அப்படி சம்பாதிச்சு,அதை அவங்களோட தொண்டு நிறுவனத்துக்குப ் பயன்படுத்துனாத் தான் அது தப்பு..அவங்களோட இந்த நடவடிக்கையினால, இந்தியாவிற்கோ,இ ந்தியப் பாதுகாப்புக்கோ எதுவும் பிரச்சினை நடந்துச்சா? அப்புறம் என்ன? இது ஊழல் கிடையாது..அவங்களோட சிக்கன நடவடிக்கை..இப்பிடி குய்யோ,முய்யோன் னு கத்துற அந்த அபிஷேக் சிங்வி நாயி அந்தம்மா ஐபிஎஸ் ஆபிஸரா இருக்கும்போது ஏதாவது காவல்துறையில் தவறு புரிந்தார்களா என்று கூறமுடியுமா? சவுக்கு இதுக்கு நீங்க நிச்சயமா மறுப்புப் போடணும்.அழகிரிக்கெல்லாம ் விமானப் பயணம் ஃப்ரீயாக் கொடுக்கும்போது, அந்தம்மா பண்ணுனது தப்பே கிடையாது??
Quote
 
 
-5 #33 Dravidan 2011-10-24 13:32
[ஃஉஒடெ நமெ="பொன்டுமனி"]அன்னா ஹசரெவின் போராட்டம் ஒரு சொர்பொரடெ ச்பொன்சொரெட் எவென்ட் .அவ்வளவு தான். அரை % அல்லது 1 %, என்பதில் தொடங்கி 5 %, 10 % ஆகி இப்போது 35 % ஏன் 50 % கூட அரசியல்வாதிகள் கேட்பதால் கோபம் வந்த முதலாளிகள் தூண்டி விட்ட போராட்டம்.[/ஃஉஒடெ]

உண்மை உண்மை உண்மை பச்சை உண்மை!!!
Quote
 
 
+25 #32 MLA 2011-10-24 12:32
இது காங்கிரஸ்காரனோட புத்தி.. தன்னை எதிர்ப்பவர்களை இப்படிதான் டீ குடிக்கிற கிளாஸை உடைச்சிட்டான், உள்பாவடையை திருடிட்டானு சொல்லி ஏதாவது சொல்லி அவர்களை வாய் மூடவைக்கும் செய‌ல்.. சவுக்கு சில நாட்களாக சரி இல்ல.. ஒன்னு சாதி சண்டையில நாறுது.. இல்ல இப்படி அப்பாடாக்கரா காட்டிக்குது
Quote
 
 
+12 #31 Tunnelvision 2011-10-24 03:51
Savukku:
I don't know if even the adage "Caesar's wife" can be applied here. Whatever Ms.Bedi did, is done by all philanthropist around the world. For example, Bill Clinton charges more than $1M/hr for speech which has to be donated to his NGO. His NGO reimburses for his expenditure. You have to separate the individual from the organization. An individual can die while an organization if run properly will live for ever (Eg. Nobel prize, Chettinadu charities). With respect to Ms.Bedi she is one of the director in an NGO. The NGO charges private donors. What NGO gives is between them where nobody has business to interfere. This is one way an NGO can recoup its administrative costs in addition to individual donations. For example, if a son is given Rs.10 /day for going to school/college by bus.If the son saves money by walking half the distance and travelling for the rest to buy a costly book is he cheating the family? Don't treat all with your Salem story. Every finger is not uniform.
If what Ms.Bedi did was corruption then every student in premier institution(IIT , AIIMS) is corrupt as their education is subsidized by tax-payers and less than 1% serve the nation. Hmm !! at-least Ms.Bedi is enjoying the benefit after serving the nation, honestly within her limits.
Quote
 
 
+15 #30 SK 2011-10-23 21:31
உலகில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் நலனுக்காக எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிரார்கல் அதில் ஒரு சிலரெ செயல்படுகிரார்க ள். தயவு செய்து அவர்கலை பாரட்ட வில்லை யென்ரலும் குரை கூராதிர்கள்
Quote
 
 
-6 #29 Corruption fighter 2011-10-23 13:45
Your mother and sister might have fell in love with others, or done some small mistake unknowingly. Do you disclose all of them in media. It's shame on you dear.It's indicated that how good you are..
Quote
 
 
+2 #28 Corruption fighter 2011-10-23 13:43
There is a simple question for savukku, Why this bad news about Madam Kiran Bedi coming out now?It's after this Corruption figth. We know the truth and its to spoil the image of Kiran Bedi. How much savkku got money for this?Pls savukku, i will give you enough money, but don't spread such news against people who fight against corruption.Pls pls pls pls pls. It all Congras Game.
Quote
 
 
+31 #27 RAJA M.R 2011-10-23 00:03
ரோஜா என்றாலும் முள் இருக்கும், கள்ளி என்றாலும் முள் இருக்கும் ! நான் அறிந்தவரை கிரண்பேடி ரோஜா, ஆனால் கள்ளிச்செடிகள் அவரிடமும் 'முள்ளுள்ளது' என்று கொக்கரிக்கின்றன !
Quote
 
 
+50 #26 Tiger & cubs 2011-10-22 22:53
கிரண் பேடியை குற்றம் சொல்ல யாருக்கும் அருகதை இல்லை, அவர் தனக்காக ஏதும் செய்து கொள்ளவில்லையே? தான் நடத்தும் பொது சேவை அமைப்புக்கு உபரி பணத்தை வழங்கி இருக்கிறார், இது அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை பணத்தில் மிச்சப்படுத்தி அதை நல்ல காரியங்களுக்கு தானே பயன்படுத்தி இருக்கிறார்? காங்கிரெஸ் களவாணி நாய்களை போல இந்திய பணத்தை அமுக்கி வெளிநாட்டில் பதுக்கினாரா? சரி இவர்கள் சொல்வது போலவே இருக்கட்டும், ஏன் கிரண் பேடி முதல் முறை அந்த தவறை செய்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுத்து அந்த தவறு மீண்டும் நடக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை? கிரண் பேடி யாரையும் வருத்தி தான் சுக வாழ்கை வாழ பணம் சேர்க்கவில்லை, தன்னை வருத்தி சமூகத்திற்கு தான் நல்லது செய்திருக்கிறார ், செய்து கொண்டிருக்கிறார ். கதைகளில் வரும் ராபின் ஹூட் கதாபாத்திரத்தை நாம் ரசிக்கிறோம் வரவேற்கிறோம், கிரண் பேடி கொள்ளை அடிக்கவில்லை, சலுகைகளை மிச்சப்படுதியிர ுக்கிறார், அதுகூட தனக்காக இல்லை , சேவை அமைப்புக்காக.. அபிஷேக் சிங்வி ஒரு எச்சை பொருக்கி அவன் சோனியா வீட்டில் கக்கூஸ் கழுவும் பன்றி அவன் பேசியதை சவுக்கு உதரனத்திற்க்கு எடுத்தது வருத்தம் அளிக்கிறது..
Quote
 
 
0 #25 Anand 2011-10-22 21:11
http://aamaadmispeaks.wordpress.com/2011/05/01/indian-express-derailed/
Quote
 
 
-2 #24 pugazhendhi 2011-10-22 20:15
Kiran bedi created bad accounts not only in her trust,but also was instrumental in creating false accounts of various organizations who invited her.She could have charged these organizations instead of following this dubious procedure.She is following the example of Anna Hazare in this respect also.
Quote
 
 
+8 #23 Mangalore Das 2011-10-22 18:17
"இந்தியா விஷன் பவுன்டேஷன்" Kindly share information about this foundation. Next we will decide kiran bedi was doing mistake or not.
I get it below information at "http://www.kiranbedi.com/ivf.htm"
India Vision Foundation was born with the receipt of the Ramon Magsaysay Award by Kiran in the year 1994 to work in the field of Prison reforms, women upliftment, education, vocational training, sports promotion and rural development. The foundation began with providing education and rehabilitation to children of prisoners in its “ Crime Home Children ” project. This project is being run by the foundation at Delhi and Mumbai and has 150 children under its aegis. Most of these children have stayed with their mothers behind bars and many have been born inside the prison.
Quote
 
 
-14 #22 கும்பிட்றேன் சாமி 2011-10-22 16:43
புலிகளின் வசம் இருந்த சிறை அனுபவங்களை மணியம் என்பவர் தேனீ இணையத்தில் தொடராக எழுதுகிறார். தமிழ், தமிழ் இன உணர்வு என்னும் போர்வைக்குள் சக தமிழனை புலி பாசிசிச்ட் எப்பிடி கொடுமைகளை உட்படுத்தினார்க ள் என்று தொடராக வருகிறது. சவுக்கு நீங்கள் இந்த பதிவை தைரியம் இருந்தால் நீக்கமல் வெளியிட வேண்டும்.
Quote
 
 
+6 #21 கும்பிட்றேன் சாமி 2011-10-22 16:38
[ஃஉஒடெ நமெ="கும்பிட்றேன்சாம ி"]""""""""""""ஒரு பொது ஊழியர், தனக்காகவோ, அல்லது வேறு ஒருவருக்காகவோ விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அல்லது, பொது ஊழியராக இருக்கும் போது, வேறு யாரோ ஒருவருக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அவர் கிரிமினல் மோசடி தவறை செய்தவர் ஆகிறார் என்றுதான் சட்டம் சொல்கிறது.""""""""

ஆனால் ஜெயலலிதா 2 கோடி ரூபா பரிசு வான்கினால் தவரு இல்லை என்டு சவுக்கு சொல்லுவாஇ.....இடு தான் ந்டு நிலைமை.[/ஃஉஒடெ]
பக்கி!! அடுத்தவன் பேரில் ஏன் எழுதுகிறாய்.
Quote
 
 
+19 #20 Force 2011-10-22 16:31
தவறுதல் மனித இயல்பு. அதனை திட்டமிட்டு கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுட ன் சேர்க்கவியலாது. டிரபிக் சிக்னலை மீறுவதும், கண்க்குப் பண்ணி ஒருவனை லாரி ஏற்றி கொல்லுவதும் (இந்திராவின் நகர்வாலா வழக்கு) வாகனச்சட்டப்படி குற்றம்தான். ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் இமயமளவு.
Quote
 
 
+39 #19 Gopinathan 2011-10-22 16:05
அண்ணா ஹசாரே ஊழல் செய்துவிட்டார் என்றும் கிரண்பேடி ஊழல் செய்துவிட்டார் என்றும் அதனால் அவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பேசக் கூடாது என்று சவுக்கு வாசகர் பலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர ். அவர்கள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே . அதைவிடுத்து அவர்கள் ஊழல் பற்றி பேசக் கூடாது என்று சொல்வது சரியில்லை. ஊழல் செய்யாதவர்கள் தான் போராடவேண்டும் என்றால் இந்தியாவில் யாருக்கும் அருகதை இல்லை. நீதிபதி படிக்கும் போது பேனா திருடிவிட்டார் அதனால் அவர் என்னை தண்டிக்க உரிமையில்லை என்று திருடன் சொன்னால் திருடனை விட்டுவிட வேண்டுமா? கருத்து சொல்லும் வாசகர்கள் அறிவிலிகள் என்றால் சவுக்கும் அவர்கள் சொல்வதை ஆதரிப்பது என்ன பேதைமை.
Quote
 
 
+9 #18 gjjp 2011-10-22 14:38
ஒன்று புரிகிறது,அதாவத ு 5 ரூபாய் வாங்கினால் அது ஊழல் இல்லை , 5000 ரூபாய் வாங்கினால் அது ஊழல்.
இப்படி தான் நம் சமுதாயம் புரை ஏரிகிடகிறது.
அப்படியானால் ஜெயலலிதா செய்தது ஊழல் இல்லை , கருணாநிதி செய்தது தான் ஊழல்.
Quote
 
 
+36 #17 Murattukaalai 2011-10-22 12:19
சவுக்கு, கிரண்பேடி என்ன கோடி கோடியா கொள்ள அடிச்சி அவங்க குடுபத்துக்கா சொத்து சேர்த்து வைச்சிருக்காங்க , ஆனா நம்ம அரசியல் நாய்கள் (சாரி பண்ணிகள் ஏன்னா நாய் ரொம்ப நன்றி உள்ளது) பத்தாவது தலைமுறைக்கு பிறக்கபோற குழந்தைக்குகூட எல்லாம் சேத்து வைக்கிறான். அவனுககூட இவங்களை சேர்த்து பேசுவதா!!!
Quote
 
 
+17 #16 Ramadurais 2011-10-22 11:06
The whole article is a non sense. Where was public money involved. Bedi got money from some institutions who are privately funded, No where government money was involved. the discount is her right for her services done.

The act of corruption will come only if bedi takes money from public funds.
Quote
 
 
+23 #15 che 2011-10-22 10:47
அதையும் மீறி அதிகாரிகளைப் பற்றி செய்தி சில ஊடகங்களில் வருகிறதென்றால், அது செய்தியில் அடிபடும் அதிகாரியைப் பிடிக்காத அதிகாரி, அந்த செய்தி வருவதற்காக மெனக்கிடுகிறார் என்று அர்த்தம்.////

ஜாபர் சேட்டுகாக மெனக்கெடும் அதிகாரி யார்?
Quote
 
 
+1 #14 ஊர்க்குருவி. 2011-10-22 09:21
பெரும்பாலான எவரும் பொதுநலன் கருதி சேவை செய்யவரவில்லை,
கொள்ளிவைத்தவர்க ளே தீயணைக்க முன்னுக்கு நிற்கின்றனர்,
எரிகிற வீட்டில் எதை பிடுங்கி தின்னலாம் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

ரஸ்ட் ஒன்றை ஆரம்பித்தாலே அவர் ஏமாற்றுவாளி என புரிந்துகொள்ளவே ண்டும்.
Quote
 
 
+9 #13 Dilip Kumar 2011-10-22 08:53
இது மட்டுமா? இந்த கிரண் பேடி தனக்கு 5 *
ஹோட்டலில் room கேட்கிரார். மேலும் 2 லட்ஷம் நனகொடை கேட்கிரார்.
Quote
 
 
+59 #12 kannankandasami 2011-10-22 08:42
சவுக்கு


யு டூ சவுக்கு ? கிரண் பேடி ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததால் இப்படி உப்பு சப்பில்லாத விடயத்தை ஏதோ பெரிய ஊழல் போல ஊதுகிறது திருட்டு காங்கிரஸ், இது தெரிந்தும் நீர் எதற்கு இதை சவுக்கில் போட்டு காங்கிரசுக்கு ஜால்ரா அடிக்கிறீர்கள் ? அதுதான் கிரண் பேடி தெளிவாக சொல்லிவிட்டாரே, தனக்கு முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்தாலும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்து பணத்தை மிச்சப்படுதியது தான் நடத்தும் சேவை நிறுவனத்திற்கு பணம் சேர்ப்பதற்கு என்று ? அவர் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்து தன்னை வருத்திதானே பணம் மிச்சம் செய்து அதை பொது சேவைக்கு பயன் படுத்தியுள்ளார் ? அந்தப்பணத்தால் தனக்கு எந்த சொந்த பயனும் இல்லை என்று தெளிவாய் சொல்லிவிட்டாரே ? பிறகு என்ன ரீப்ளே வேண்டிக்கிடக்கி றது ?
Quote
 
 
-15 #11 அன்பு 2011-10-22 08:39
முதலில் இந்த அண்ணா ஹசாரே யோக்கிய சிகாமணியா? ’எங்கள் இயக்கத்துக்கு வந்த நன்கொடைகளின் விபரங்களை இன்னும் 24 மணி நேரத்தில் எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம்,’ என்று ஆகஸ்ட் 20 2011 அன்று சூளுரைத்தார்களே ! , அதைக் காப்பாற்ற முடிந்ததா? - ஒரு வேலை அவர் கடிகாரம் நின்று விட்டதோ என்னவோ!

அன்னாவின் முகமூடியும் கிழிய ஆரம்பித்து விட்டது, அவருக்குச் சொந்தமான ஹிந்த் சுவராஜ் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் விளக்கம் அளிக்குமாறு அன்னா ஹஸாரேவுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நண்பர்கள் சிந்திப்பார்களா ?

நன்றி : http://settaikkaran.blogspot.com/2011/10/blog-post_19.html
Quote
 
 
0 #10 conscience 2011-10-22 08:37
அம்மா வெற்றி இனிக்கலயாமே

http://www.whispersintamilnadu.com/2011/10/success-is-not-so-sweet.html
Quote
 
 
+13 #9 sathish77 2011-10-22 08:10
உன்மை சவுக்கு. உழைப்பவர்களின் அன்றாட வாழ்வு பற்றி எந்த நாயும் கவலைப் படுவதாக தெரியவில்லை. மனிதர்கள் பன்றிகள் போல் ஆகிவிட்டார்கள். இறுதி 3 வரிகள் போதும் உன்னை புரிந்து கொள்ள!!!!!
Quote
 
 
+11 #8 USV 2011-10-22 06:09
சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்.. துணைவி?
Quote
 
 
+15 #7 pondumani 2011-10-22 03:50
என்ன சவுக்கு இவ்வளவு நல்லவரா இருக்கிறிர்களே! அன்னா ஹசரெவின் போராட்டம் ஒரு corporate sponsored event .அவ்வளவு தான். அரை % அல்லது 1 %, என்பதில் தொடங்கி 5 %, 10 % ஆகி இப்போது 35 % ஏன் 50 % கூட அரசியல்வாதிகள் கேட்பதால் கோபம் வந்த முதலாளிகள் தூண்டி விட்ட போராட்டம்.
Quote
 
 
-5 #6 k krishnan 2011-10-22 02:49
மிக நல்ல கட்டுரை. பாராட்டுக்கள்.
Quote
 
 
+11 #5 கும்பிட்றேன்சாமி 2011-10-22 01:44
""""""""""""ஒரு பொது ஊழியர், தனக்காகவோ, அல்லது வேறு ஒருவருக்காகவோ விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அல்லது, பொது ஊழியராக இருக்கும் போது, வேறு யாரோ ஒருவருக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அவர் கிரிமினல் மோசடி தவறை செய்தவர் ஆகிறார் என்றுதான் சட்டம் சொல்கிறது.""""""""

ஆனால் ஜெயலலிதா 2 கோடி ரூபா பரிசு வான்கினால் தவரு இல்லை என்டு சவுக்கு சொல்லுவாஇ.....இடு தான் ந்டு நிலைமை.
Quote
 
 
+47 #4 Anand 2011-10-22 01:24
உஙளுக்கு காலில்

ஒரு லேசான சிராய்ப்பு காயம் ஏற்படுகின்றது,
ஒரு வண்டி உஙகள் காலில் மோதி பெரிய வெட்டு காயத்துடன் எலும்பு முறிவு ஏற்படுகின்றது.

இரண்டுமே காயங்கள் தான்.. எந்த காயத்துக்கு முதலில் மருத்துவ உதவி எடுப்பீர்கள்??

இந்த இரண்டிற்க்கும் உள்ள வித்யாசம் தான் கிரண் பேடி ஊழல் செய்துவிட்டார்; ராஜா, கல்மாடி போன்றவர்கள் ஊழல் செய்துவிட்டார்க ள் என்பதற்க்கும் உள்ள வித்யாசம்...

எந்த பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்பது ஒரு சராசரி மனிதனின் பொது அறிவிர்க்கு எட்ட வேண்டிய விஷயம்.

அவர் பெரிய தொகையை எங்களிடம் வாங்கி கையாடல் செய்துவிட்டார் என்று அவருக்கு பணம் கொடுத்து அவரின் பேச்சை கேட்க அழைத்தவர்கள் புகார் கூறினார்களா? இல்லையே!

காங்கிரஸிடம் மண்டியிட்டு கையேந்தும் New Indian express/Times of India/CNN-IBN/NDTV போன்ற பத்திரிக்கைகள் ஏன் இந்த புலனாய்வு நிருபர் (Investigative journalism) வேலையை செய்கிறார்கள் என்று சற்றே சிந்தியுங்கள் தோழர்களே!!!
Quote
 
 
+7 #3 aha 2011-10-22 01:04
reimbursements wil b done wid the bills.so she producd fake bills(many in comps do 4 rent,petrol)?r comps knew abt it? needs 2 b inquired.
Quote
 
 
-5 #2 aha 2011-10-22 00:59
பின்னூட்டங்களில ் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.-good observation.u no longeer put comment here?
Quote
 
 
+29 #1 Unmainaa!! 2011-10-22 00:24
Naan kooda ennavo, yedho, periya oozhalonnu paathaen :zzz
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 35 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1756
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week59333
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281593
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13197960