|
சவுக்கில் ஏற்கனவே கனிமொழி மீதும் சரத்குமார் மீதும் நம்பிக்கை மோசடிக்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 409 பொருந்தாது என்பது குறித்து, புரிய வேண்டியவருக்கு புரிந்து விட்டது என்ற கட்டுரையில் விரிவாக எழுதப் பட்டிருந்தது. தற்போது, இந்த 409 பிரிவு கனிமொழிக்கும் சேர்க்கப் பட்டுள்ளது. ராசா நம்பிக்கை மோசடி செய்ய கனிமொழி, சரத்குமார் மற்றும் மற்ற குற்றவாளிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று சிபிஐ குற்றச் சாட்டுகள் சொல்கின்றன.
நம்பிக்கை மோசடி என்ற பிரிவு கனிமொழிக்கு பொருந்தாது என்பது சிபிஐக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் இந்தப் பிரிவு சேர்க்கப் பட்டுள்ளது, 2ஜி வழக்கில் சிலர் மட்டும் பலிகடா ஆக்கப் படுகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஒரு பொறுப்பை வகிக்கும் பொது ஊழியரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஒரு சொத்தை, நம்பிக்கை மோசடி செய்தால் அவர் நம்பிக்கை துரோகம் என்ற குற்றத்தை இழைத்தவராகிறார் என்ற குற்றச் சாட்டு, மற்ற அனைவரையும் விட ப.சிதம்பரத்துக்கும் மன்மோகன் சிங்குக்கும் சரிவர பொருந்துமே. கனிமொழி மற்றும் சரத்குமாருக்காவது கூட்டுச் சதியோடு சேர்ந்த நம்பிக்கை மோசடி என்று வருகிறது. மன்மோகன் சிங்குக்கும், ப.சிதம்பரத்துக்கும் நேரடியாக நம்பிக்கை மோசடி பிரிவு பொருந்தும்.
ராசா எப்படி தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் என்ற சொத்துக்கு துரோகம் இழைத்தாரோ, அதே போல, இந்த நாட்டின் நிதிக்கு பொறுப்பான ப.சிதம்பரம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்று சொல்ல முடியும் அல்லவா ?
மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பை வகித்தார். பிரதமர் பொறுப்பை வகித்ததன் மூலம் அவர் அனைத்து அமைச்சரவைகளுக்கும் பொறுப்பானவர் ஆகிறார். அந்த வகையில், ஸ்பெக்ட்ரம் மற்றும் நாட்டின் நிதி ஆகிய இரண்டுக்கும் நம்பிக்கை மோசடி செய்த வகையில் மன்மோகன் சிங்குக்கும் 409 பொருந்துமே.

அடுத்தபடியாக சிபிஐ, ஷாகீத் பல்வா, கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், சரத் குமார், ஆசிப் பல்வா, ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 193 சேர்த்துள்ளது. பிரிவு 193 என்பது, தவறான ஆவணங்களையோ, சாட்சிகளையோ தயார் செய்ததற்காக சேர்க்கப் படும் பிரிவு. இது எதற்காக என்றால், கலைஞர் டிவிக்காக கொடுக்கப் பட்ட 200 கோடி பணத்தை கடன் என்பது போல ஆவணங்களை தயார் செய்ததற்காக என்று சிபிஐ குறிப்பிடுகிறது.
கலைஞர் டிவிக்கு வழங்கப் பட்ட 200 கோடியை கடனாக நிரூபிக்க இவர்கள் முனைந்தார்கள் என்பதற்காக இவர்களுக்கு 193 பிரிவு என்றால், இந்தப் பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பித் தருவதற்காக, கலைஞர் டிவிக்கு விளம்பர அட்வான்ஸ் என்ற போர்வையில் பணம் கொடுத்து கடனை திருப்பிச் செலுத்தியதாக போலிக் கணக்குகளை தயாரித்த செட்டிநாடு சிமென்ட்ஸ் எம்ஏஎம்.ராமசாமியும், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும் அல்லவா குற்றவாளிகள் ? அவர்களை ஏன் சேர்க்கவில்லை ?
ரிலையன்ஸ் நிறுவன நிர்வாகிகள் பல மாதங்களாக சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் 2ஜி விவகாரத்தில் எடுத்த முடிவுகள் அனில் அம்பானிக்கு தெரியாமல் எடுக்கப் பட்டிருக்காது என்பது சிபிஐக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே தெரியும். ஆனால் அனில் அம்பானி ஆனந்தமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அவர் நிறுவன நிர்வாகிகள் சிறையில் வாடிக் கொண்டு, 409 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப் பட்டு நிற்கிறார்கள்.
ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களைப் போலவே சட்டவிரோதமாக லைசென்ஸ் பெற்ற ஒரு சில மாதங்களிலேயே ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ என்ற நிறுவனத்துக்கு தன் பங்குகளை பத்து மடங்கு விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தது டாடா நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, நீரா ராடியாவோடு ராசா அமைச்சராவது குறித்து உரையாடுவதும் வெளியாகியது. ரத்தன் டாடா, கருணாநிதியின் துணைவிக்கு பல கோடி மதிப்புள்ள வோல்டாஸ் நிலத்தை பரிசளித்தது எதற்காக என்பது ஊருக்கே தெரியும். ராசாவின் தொகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஸ்கேனிங் கருவியை ரத்தன் டாடா எதற்காக அன்பளிப்பாக வழங்கினார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவில் உள்ள மற்ற எந்த நிறுவனத்தையும் விட்டு விட்டு, சென்னையில் கனிமொழி இயக்குநராக உள்ள தமிழ் மையத்துக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை கொடுக்க ரத்தன் டாடா ஏன் முடிவெடுத்தார் என்பதும் வெளிப்படையான ரகசியமே. அப்படி இருக்கும் போது, ரத்தன் டாடாவையும், டாடா டெலிகாம் நிறுவனத்தையும் இது வரை ஏன் சிபிஐ விசாரிக்கவில்லை.
கனிமொழி மற்றும் சரத்குமார் மீதான குற்றச் சாட்டு கலைஞர் டிவிக்காக 200 கோடியை லஞ்சமாக பெற்றார்கள் என்பது. ஸ்பெக்ட்ரம் வழங்காமல் வேண்டுமென்றே கோப்பை நிறுத்தி வைத்து, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டி, அவரை அனந்தகிருஷ்ணனுக்கு விற்பனை செய்ய வைத்து, அதற்கு பிரதிபலனாக, வியாபாரமே தொடங்காத சன் டைரெக்ட் என்ற நிறுவனத்தில் 700 கோடி ரூபாயும், சவுத் ஏஷியன் எப்.எம் என்ற நிறுவனத்தில் 125 கோடி ரூபாயும் முதலீடு என்ற போர்வையில் லஞ்சமாக பெற்ற கேடி சகோதரர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்வதற்கு கூட சிபிஐ இத்தனை தயக்கம் காட்டுகிறதே ஏன் ? அவர்கள் வீட்டில் சோதனை நடத்துவது, முதல் நாள் இரவே தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால், கேடி சகோதரர்களுக்கு தெரிந்திருக்காதா ? இத்தனை தாமதாக எப்ஐஆர் பதிவு செய்து, (அதுவும் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு) இது வரை அவர்களை கைது செய்யாமல் பவனி வருவதற்கு அனுமதித்திருக்கிறதே… இது எந்த விதத்தில் நியாயம் ?
2ஜி வழக்கில் சம்பந்தப் பட்ட அனைவருமே தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் அது நியாயமான முறையில், சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மை தவறாமல் நடக்க வேண்டும். இதனால் தாமதமாக ஆனாலும் சரி. ஆனால், இந்த ஊழலில் மூளைகளாக செயல்பட்டவர்களை கண்டும் காணாமல் விட்டு விட்டு, கைகளாகவும், கால்களாகவும் செயல்படுபவர்களை மாதக்கணக்கில் சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லாமல், பொருந்தாத சட்டப் பிரிவுகளை உள்நோக்கத்தோடு சேர்த்திருக்கும் சிபிஐயின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது.
தற்போது சிறையில் இருக்கும் இவர்கள் அத்தனை பேரும் ஜாமீனில் விடுதலை செய்ய்ப பட வேண்டும். இவர்கள் சாட்சிகளை கலைப்பார்கள் என்றால், அவர்கள் கலைக்காமல் பார்த்துக் கொள்வது சிபிஐயின் பொறுப்பு. அப்படி முடியாது என்றால், அது சிபிஐயின் கையாலாகாத்தனத்தையே காட்டும்.
நீதியரசர் கிருஷ்ணைய்யர் சொன்ன Bail is Rule and Jail is exception என்பதை விசாரணை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மறந்து விடக் கூடாது. ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை ஜாமீனில் விட முடியாமல் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த 409 சேர்க்கப் பட்டிருக்குமோ என்று தற்போதே டெல்லி ஊடகங்களில் பேசப் படுகிறது.

காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக இப்போது மட்டுமல்ல, எப்போதுமே சிபிஐ செயல்பட்டுத்தான் வந்திருக்கிறது. அது அப்படிச் செயல்படுவதற்காக, ஆறு மாதங்களுக்கு மேல், யாரை விசாரணைக் கைதியாக வைத்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. |
Comments
On proving the crime others also will get same punishment, thats where PC will enter into the show. Lets wait and watch. And continue publishing it. At this point it looks KDs made deal with JJ too.
This is not savukku's article! It's been republish from JV!
Kani and co. must first be found guilty and jailed after that. Judges must conduct themselves without fear of the media or public perception. Delay in grant of bail in this civil case after chargesheet has been filed seems to be a mob justice. That the same supreme court judges who 'crticised' the CBI inaction in this case also expressed 'satisfaction' in the way it was acting against powerful corporates gives reason to conclude that savukku's stand a valid one.
I reiterate for all the "Anna Hazare" followers what has already been said here "trust the system more than the individual... strengthen the system.... make it work... never glorify an individual at the expense of the system"
finally ... do not expect savukku to write what u want to read..... instead read what he writes and think justly and rationally and point out logical fallacies in his argument
savukku keep up the good work.
ஈன் இன்டிஅ (ச்பெசிஃபிசல்ல் ய் இன் டமில் ணடு), எவெர்யொனெ ஹச் ஹிச் ஒந்ன் ப்ரிசெ, அன்ட் ஸவுகு ஹாஸ் ஹிச் ஒந்ன்,,,,,ம்ர். ஸவுக்கு, ந்ஹட் இச் யொஉர் ப்ரிசெ (தொஉசன்ட்ச், லக்ஹ்ச் ஒர் ச்ரொரெச்)??????????????,..............த் அன்க் யொஉ ஸவுக்கு,,,,,ஹவ் எ அ ப்ரொச்பெரொஉச் லிஃபெ அன்ட் எஞொய்,,,,,,,,
நலமுடன் சென்று வா நண்பா! உண்மை புரிதல் இல்லாத நீ எல்லாம் இந்த மாதிரி கட்டுரைகளை படித்து என்ன செய்ய போகிறாய்? பேசாமல் ஏதாவது காமக்கதை தளம் தேடி செல்லவும்![/ஃஉஒடெ]
அன்புள்ள சோழன் அவர்களே! நான் காமக்கதை தளம் செல்லும் ஒரு சாதாரண மனிதன் தான்,,,தமிழகத்த ின் சாபக்கேடான ஒரு குடும்பத்தை விமர்சிக்க ஒருவன் காம உணர்வே இல்லாமல் இருக்க வேண்டுமோ?????? விகாரமான காம எழுத்துக்கள் மூலம் வளர்ந்தது தானே திராவிட முன்னேற்ற கழகம்,,,,,,,அண் ணாவையும், கருணானிதியையும் விட காம எழுத்தைக் கொட்டியவர்கள் யார்??????? ஹிந்தி போராட்டத்தில் உபயோகித்த ஒரு "அற்புத காவிய வாக்கியத்தை" சொல்லவா?????? -- அருமை மனைவி தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க, ஊர்த்தேவடியாள் ஹிந்தி எதற்கு????? இந்த அற்புத வாக்கியத்தை முன்மொழிந்த குடும்பத்தை விமர்சிக்க நான் காம்த்தளத்திற்க ு எதற்கு செல்ல வேண்டும்?????? கனிமொழி - ராசா தொடர்பு பற்றி நீரா ராடியா, டாட்டா "கேவலமாக" பேசினார்களே,,,அ ப்பொழுது இந்த "தமிழ் கலாச்சாரத்தைக் க்ட்டிக் காப்பதற்காகவே" அவதரித்தக் குடும்பம் என்ன "கோர்ட்டிற்கு" போனதா??????
தமிழனை உலகெங்கும் தலை குனிய வைத்தவர்கல்.
நம்மை பார்த்து இந்த உலகமே சிரிக்கிரது.
சவுக்கை ஹாக் செய்யவில்லை.வாங்கி விட்டார்கள்.
dear savukku,
I can not believe this sudden support for KANI AND DMK PARTY ????
எனக்கு என்னவோ இந்த கட்டுரையை முழுதாக தெளிவாக படித்தால் கனிக்கு சப்போட் செய்வதாக தோணவில்லை! மாறாக மற்றவர்களை தப்பிக்க வைக்க சதி நடக்கிறதோ என்று சவுக்கு சொல்ல வருவதாகவே தோன்றுகிறது! எதற்கும் இன்னொரு முறை கட்டுரையை பொறுமையாக படித்து பாருங்களேன்!
நியாபகமிருக்கிற தா மாறனும், கனிமொழியும் சிறைக்கு செல்லும் போது "சவுக்கிர்க்கு கண்கள் பணிக்கும், இதயம் இனிக்கும்னு" சொன்னீர்களே மறந்துவிட்டதா?
இப்போது ஜாமீன் தரவேண்டும் என்று கூறுகிறீர்கள். ஏன்?, இதயம் இனித்து, திகட்டி விட்டதோ?
அதற்காக நான் இதில்(2Gee) தவறு செய்து வெளியில் இருப்போரை குற்றமில்லாதவரா க நினைக்கவில்லை
கனிமொழி ஒன்றும் கத்துக்குட்டி அல்ல. கருணாதியின் குடும்ப உறுபினர்களை அரசியலில் இருந்து அறவே ஒதுக்க வேண்டும். அது தான் அவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை.
ஏன், ராஜாவை அமைச்சர் ஆக்குவதில் காட்டிய முனைப்பை, ஈழத்து தமிழருக்காக இந்த கனிமொழி தன் தந்தை இடம் கூறி இருக்கலாமே?
உங்களை போன்றோர் இப்படி அவருக்காக பேசும் வரை, ஈழ மண்ணில் எத்தனை பிரபாகரன்கள் வந்தாலும் விடியாது.நீங்களும் ஒரு விதத்தில் தமிழின துரோகிதான்.
உங்களின் முந்தய கட்டுரைகளுக்கு வாசகனாக இருந்தேன்
போகிற போக்கில் இவர்(சவுக்கு) எழுதுவது எல்லாம் நியாமாக படவில்லை
இத்துடன் சவுக்கின் தளத்தை பார்க்க வேண்டாம் என்று இருக்கின்றேன்.
வாழ்க தமிழ்
In india (specifically in Tamil Nadu), everyone has his own price, and Savuku HAS his own,,,,,Mr. Savukku, what is your price (thousands, lakhs or crores)??????????????,..............Th ank you Savukku,,,,,Hav e a prosperous life and enjoy,,,,,,,,
நலமுடன் சென்று வா நண்பா! உண்மை புரிதல் இல்லாத நீ எல்லாம் இந்த மாதிரி கட்டுரைகளை படித்து என்ன செய்ய போகிறாய்? பேசாமல் ஏதாவது காமக்கதை தளம் தேடி செல்லவும்!
என்ன ஆயிற்று உங்களுக்கு? விகடன் தான் இந்த வாரம் கனிமொழியின் சிறை வாழ்க்கை பற்றியும் அவரது தன்னம்பிக்கை பற்றியும் சிலாகித்து எழுதி மக்கள் மத்தியில் அவர் மேல் அனுதாபம் வரும் வகையில் எழுதி வருகிறதென்றால், நீங்களும் அது போல செய்வது நியாயமில்லை...ஊழல் செய்த அனைவரும் தண்டிக்க படவேண்டியவர்கல் தான் அதில் மாற்று கருது இல்லை, ஆனால் அதே சமயம், ஊழல் செய்த எல்லோரையும் தண்டிக்கும் பொது கனிமொழியை தண்டியுங்கள், இப்போது அவரை ஜாமீனில் வெளியில் விடுங்கள் என்று கூறுவது அபத்தமாக தெரிகிறது... சரி உங்கள் கூடுற்படி அவர் குற்றம் செய்தது உண்மைதான், அதற்க்கு எப்படியும் நீதிமன்றம் தண்டனை கொடுக்கும், அப்போது இவர் எத்தனை காலம் விசாரணையின் போது சிறையில் இருந்தாரோ அதை கழித்து கொள்வார்கள் அல்லவா... எனவே கனிமொழி உப்பு உண்டதற்கு தண்ணீர் குடிக்கட்டும்... மேற்கொண்டு இவர்களுக்கு பரிந்து எழுதாதீர்கள்...
ஹவெவர், கருணாநிதி குடும்பம் நாசமானால் தமிழகத்திற்கு நல்லது. ஆகவே எது நடக்கிறதோ அதுவே தொடரட்டும்.
BUT THE ARTICLE IN VERY SUPER AND STRAIGHT FORWARD.,WELDON SAVUKKU....
கனிமொழியின் நோக்கத்திற்கு ராசா அசைந்து கொடுத்திருக்காவ ிட்டால் அவர் பதவியில் இருக்க கருணா அனுமதித்திருக்க மாட்டார். விஞ்ஞான திருடனான கருணா பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு இட்டுச்செல்லும் என்றும் நம்பவில்லை.
மேலாக 2G திருட்டில் 1,76 000 கோடி நஸ்டம் என்று சொல்லப்படுகிறது . இவ்வளவு பெரிய தொகை என்றதும் (ஏன்) அரசாங்கம் அதிர்ச்சியடைந்த தாக தெரியவில்லை. நிச்சியமாக எவ்வளவு இழப்பு என்பதை இதுவரை கணக்கிட்டு அறியவும் முயற்சிக்கவில்ல ை. ஏதோ சிறியதொகைபோல காண்பிக்கவே அரசின் அனைத்து பிரிவுகளும் முயற்சிக்கின்றன .
214 கோடியை மட்டும் கனிமொழி கலைஞர் ரிவி க்கு கையூட்டாக பெற்றிருக்கிறார ். மீதி 175,786 கோடி எங்கோ கைமாறியிருக்கிற து. ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகியவை ஊழலில் பெரும்பங்கு வகிக்கின்றன குறிப்பிட்ட இந்நிறுவனங்கள் அரச உயர்மட்டங்களை கையுள் போடாமல் எதுவும் சாத்தியமில்லை.
எனவே சு சுனா சொல்லுவதுபோல பசியை லாடன் கட்டி தலப்பாவை தோலுரிக்க அனைத்து திருட்டும் வெளியில் வரும்,
Savukku taking "U" turn. Very hard to believe, this thing might have not happened.
Savukku diverting from against corruption path to for corruption path. Choose the correct path, otherwise you will hit the wall where you had started and make all your past work utter waste.
கனிமொழிக்கு வேண்டுமானால் பெண் என்பதற்காக சற்று மாற்றி தண்டனை கொடுக்கலாம். எப்படி?
கனிமொழியை முதலிலேயே துடைப்பத்தால் ஊர் முச்சந்தியில் நிற்க வைத்து அடித்து சுத்தம் செய்து, கழுதையில் ஏற்றி அதற்கு பின்பு கரும்புள்ளியும் , செம்புள்ளியும் குத்தலாம்...!!!
இதற்கு மேலும் கனிமொழி பெண் என்பதால் கருணை காட்ட முடியாது.
(டவுட்டு: ஏன் சவுக்கு... உனக்கு பரிவு காட்ட வேற ஆளே கிடைக்கலியா?. கனிமொழி தப்பே செய்யாவிட்டாலும ், அவர் மு.கவின் புதல்வி என்ற காரணமே போதுமே? தண்டனைக்கு வேற் காரணமே தேவை இல்லை)
ஹாய் பக்கி உன் பேரில் எழுது....இல்லை என்றால் வேறு பெயர் வைத்துக்கொள்.... பாலா திருடிய பெயர்.... நீயும் திருடாதே!!!
கட்டுரையின் கருவில் தவறு இருந்தால் அதைதான் கருத்துக்களில் தெரிவிக்க வேண்டுமேயன்றி பத்திரிக்கையாளர ை விமர்சிப்பதில் நியாயமே இல்லை.....
ஊழல் செய்த யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும், இருப்பீனும் சட்டத்திற்கு உட்பட்டு தெளிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்திற்கு உட்பட்டு தெளிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் இந்த கட்டுரை பரிந்துரைக்கிறத ு இது மிகவும் சரியானதுவே.... காரணம், அப்படி சட்டத்திற்கு ஏற்றார்போன்ற பிரிவுகளில் வழக்கு பதியாவிடில்,
1. குற்றவாளி ‘Technical Defect’ஐ காரணம் காட்டி தப்பித்துவிடும் அபாயம் உள்ளது,
2. பிணையில் விடுவிக்காமல் விசாரணை கைதியாக வைத்து இருப்பது மக்களின் கோபத்தை தணித்து அந்த குற்றவாளிகளின் மீது பச்சாதாபம் வரவழைக்கும் சதியாகக் கூட இருக்கலாம் (அப்படிப்பட்ட சதியில் அவர்கள் வென்றுவிட்டால் ஒருவேளை அற்ப சொற்ப காரணங்கள் காட்டி வழக்கு தள்ளுபடி செய்யும்போது மக்கள் பெரிய எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் விட்டு விடலாம்),
3. கண்டிப்பு காட்டுவதாக நாடகமாடி பெரிய பங்குகள் பெற்ற தயாநிதி, ப.சி., தலப்பாகட்டி, இராபட் வத்ரா, அஃப்கோர்ஸ் அண்டோனியோ (சோனியா) போன்றவர்கள் தப்பித்துவிடும் வாய்ப்பும் உள்ளது....
மற்றொன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் தனி மனிதர்களை நம்புவதைவிட அமைப்பை (system) நம்பலாம்....
சுனா.பானா. சாமியை எல்லாம் நம்பக் கூடாது பெரிய ஆஃபர் வந்தா subtle-ஆ கழற்றிவிட்டு விடுவான் அப்போது இந்த system நம்மை கைவிடக் கூடாது என்றால் ஆரம்பத்தில் இருந்து நடக்கும் proceedings சட்டப்படி நடக்கவேண்டும்.
இது கனியா இருந்தாலும் சரி ஜெயாவா இருந்தாலும் சரி பொருந்தும் (ஆக diversion tactics செல்லாது செல்லாது).
அந்த விதத்தில் பார்க்கும்போது சவுக்கின் இந்த கட்டுரை மிகவும் அருமையானது, வாழ்த்துக்கள்.
In China or USA or Russia by this time they would have been punished. They must speed up the trail and judgement be passed soon. I do not agree for your pleading criminal to be left out.
They have not been proved guilty and CBI may even make mess but we all know what they did and what they are capable of doing. Let them be in jail for they have time to enjoy the looted wealth of the poor after judgement.
எங்கள் வீட்டுப்பெண் இப்படி திருட மாட்டார்கள்.
டாடாவையும்...அம்பானியையும் இந்த
சி.பி.ஐ-யால் தொடகூட முடியாத போது இந்த வழக்கில் எங்கே சரியான நீதி கிடைக்கப் போகிறது.இனி உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் இது குறித்து கேள்வி கேட்க வேண்டும்.
தயவுசெய்து இதையும் படிக்கவும்.
http://koothadiveddai.blogspot.com/
If Supreme court does not probe Chidu 2g case begins and ends here
ஜெ வழக்கில் பல வருடஙள் குற்ற சாட்டு பதிவு செய்யாமல், அதையே காரணம் காட்டி அவர் வழக்கில் இருந்து விடுதலை பெற மறைமுகமாக உதவியபோது இந்த வாசகர்கள் இப்படி துள்ளவில்லையே ஏன்?[/ஃஉஒடெ]
Above said question is correct? savuku please answer. u r supporting ADMK not DMK because DMK Unsupported sirlanka issue. but mind one thing savuku. DMK Supported tamil illam. But Think abt ADMK. jaya tv open in which money. 1 rupees salary how she got dis much rupees. u saw the jaya son marriage. think about that and write the message. Savuku u have to answer the above question
Kanimozhi has been dragged in to this unnecessarily.
409 கனி மொழியின் மீது பிரயோகித்தது தவறு என்பது சவுக்கின் கருத்து. ராஜாவின் மீது 409 வரும் என்றால் பலனடைந்த, உடந்தையாக இருந்த கனியின் மீதும் பிரயோகிக்கபபட்ட ுள்ளது. பசி, சிங், தயா ஆகியோர் மீது எப்போது நடவடிக்கை என்று எழுப்பும் வினா ஒன்று தான் உருப்படியானது.
என்ன ஆனது சவுக்கிர்க்கு?
ஜெ வழக்கில் பல வருடஙள் குற்ற சாட்டு பதிவு செய்யாமல், அதையே காரணம் காட்டி அவர் வழக்கில் இருந்து விடுதலை பெற மறைமுகமாக உதவியபோது இந்த வாசகர்கள் இப்படி துள்ளவில்லையே ஏன்?
RSS feed for comments to this post