முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011 21:17

நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன்.   இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன்.

தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன்.  அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்றும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

13

 

நீதியரசர் மார்கண்டேய கட்ஜு

சமீபத்தில் மத்திய அரசாங்கம் புதிதாக தொடங்கப் பட உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கென்று விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a) கருத்துச் சுதந்திரத்தோடு ஊடகத்துக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளது.  அனால் அந்த சுதந்திரம் கட்டுப்பாடற்ற வகையில் இருக்க முடியாது.   நியாயமான சில கட்டுப்பாடுகள் வேண்டும்.  பாரபட்சமில்லாமல் உண்மைத் தன்மையோடு மக்களுக்கு செய்திகளைத் தர வேண்டியது, ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கடமை.  ஆனால், இந்திய ஊடகங்கள் இந்த செயலை பொறுப்போடு செய்கின்றனவா ?

பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயல்படுவது குறித்த சில சம்பவங்களை பார்ப்போம்.

ஊடகங்கள் பல நேர்வுகளில் செய்திகளை திரித்து வெளியிடுகின்றன.

உச்ச நீதிமன்ற நீதிபதி க்யான் சுதா மிஷ்ராவோடு நான் உச்ச நீதிமன்ற டிவிஷன் பென்ச்சில் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறேன்.  ஒரு நாள் இந்தியாவின் முக்கிய செய்தித் தாள் ஒன்று முதல் பக்கத்தில் நீதிபதி மிஷ்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு “தன் மகள்கள் கடன் சுமை (liability) என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கிறார்” என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தி முழுக்க முழுக்க திரிக்கப் பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி, அதுவும் பிரபலமான ஆங்கில செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வந்தது.

உண்மை நிலவரம் என்னவென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களையும் கடன்களையும் வெளியிட வேண்டும்.  கடன்கள் என்ற பிரிவில், நீதிபதி மிஷ்ரா “இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.  மிகச் சரியாகப் பார்த்தால், இதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை.  கடன்கள் என்றால் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைதான் அடங்கும். ஆனால் நீதிபதி மிஷ்ரா எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்துக்கு ஏராளமான பணம் செலவு ஆகும் என்ற பொருளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.   அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது. மற்ற இருவருக்கும் இனிதான் திருமணம் செய்ய வேண்டும்.   நீதிபதி மிஷ்ரா நிச்சயமாக தன்னுடைய மகள்களை கடன் சுமை என்ற பொருளில் அவ்வாறு குறிப்பிடவேயில்லை. பிரசுரிக்கப் பட்ட அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய்யானதும், ஆட்சேபகரமானதும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசுரிக்கப் பட்ட செய்தி.

இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கு மட்டும் துயரத்தையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த வில்லை.  அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.    இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கும் அவர் குடும்பத்துக்கும் எத்தனை வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை அந்த செய்தித்தாளின் பொறுப்பாளர்கள் உணர்ந்திருப்பார்களா ?  நிச்சயமாக இல்லை. அவரின் நோக்கம் செய்தியை திரிப்பதன் மூலமாக பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே.

அப்படியே தன் மகள்களைப் பற்றி நீதிபதி மிஷ்ரா எழுதியது தவறு என்று வைத்துக்  கொண்டாலும், அடுத்தவருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்தும் என்று உணராமல் இந்த தவறை திரித்து செய்தியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ?  இங்கே குழுமியிருக்கும் ஊடகத்துறையினரே நீங்களே சுயபரிசோதனை செய்து இதற்கான விடையை தேடிக் கொள்ளுங்கள்.

சமீப காலமாக, பணம் வாங்கிக் கொண்டு செயிதி வெளியிடும் போக்கு வளர்ந்து வருகிறது.  2009 தேர்தலில் இது பெரிய சர்ச்சையானது.   இதை எப்படித் தடுப்பது என்பதை நாம் விவாதித்து முடிவு காண வேண்டும்.    19.09.2011 நாளிட்ட தலைமை தகவல் ஆணையரின் உத்தரவுப் படி பிரனஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் அடங்கிய, இந்த விவகாரம் குறித்து ஏற்படுத்திய ஆய்வுக் கமிட்டியின் அறிக்கை ப்ரஸ் கவுன்சிலின் இணைய தளத்தில் ஏற்றப் பட்டுள்ளது.   இந்த அறிக்கையை ப்ரஸ் கவுன்சில் தனது 26.04.2010 நாளிட்ட கூட்டத்தில் நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

அடுத்ததாக ஊடகங்கள் உண்மையான விவகாரங்களை செய்தியாக்காமல், அவசியமற்ற விவகாரங்களை செய்தியாக்குவது அடிக்கடி நடக்கிறது.   நம் நாட்டில் கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள், வறுமை, வேலையின்மை, போதுமான வீட்டு வசதி சுகாதார வசதியின்மை, 80 சதவிகித மக்கள் மோசமான பொருளாதார சூழ்நிலையில் வாழ்வது ஆகியவையே கவனிக்கப் பட வேண்டிய செய்திகள்.  ஆனால் இந்த விவகாரங்களை புறந்தள்ளி விட்டு, ஊடகங்கள் சினிமா நடிகரின் மனைவி கர்ப்பமானது, அவர் ஒரு குழந்தை பெற்றெடுப்பாரா, இரட்டை குழந்தை பெற்றெடுப்பாரா என்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.  இதுவா இந்த தேசத்தை பீடித்திருக்கும் முக்கிய பிரச்சினைகள் ?

லாக்மே இந்திய ஃபேஷன் விழா நடக்கையில் அரசு அங்கீகாரம் பெற்ற 512 செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடல்கள் பருத்தி ஆடைகளை அணிந்து அணி வகுப்பதை கவனமாக செய்தியாக்கும் செய்தியாளர்கள் அ அந்த விழா நடக்கும் இடத்திலிருந்து விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லக் கூடிய இடத்தில் ந்த பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை வசதியாக மறந்து விட்டார்கள்.  ஓரிருவரைத் தவிர விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி யாருமே கவலைப் படுவதில்லை.

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ?  இந்தியாவின் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் மோசமான பொருளாதார சூழலை கண்டுகொள்ளாமல், கவர்ச்சியும் பரபரப்பும் இருக்கும் போலியான இடங்களில் தங்கள் கவனத்தை செலுத்துவது முறையான செயலா ?  மக்களுக்கு ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொன்ன ராணி மேரி அன்டோனியெட் போல ஊடகங்கள் நடந்து கொள்ளவில்லை ?

ஊடகங்கள் விவசாயிகளின் தற்கொலைகள், விலைவாசி உயர்வு, என முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுகின்றன என்பதை மறுக்க முடியாது.  ஆனால் இது 5 முதல் 10 சதவிகிதமே.   மொத்த ஊடகத்தின் கவனமும், திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கை, பாப் இசை, பேஷன் பரேடுகள், கிரிக்கெட் மற்றும் ஜோதிடத்திலேயே இருக்கிறது.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அருகேயும், மும்பாய், பெங்களுரிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன.   குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே டிவி சேனல்கள் இந்தியன் முஜாஹிதீன் அல்லது ஜெய்ஷ் ஏ முகம்மது அல்லது ஹர்கத்துல் ஜிஹாத் ஏ இஸ்லாம் போன்ற அமைப்புகள் ஈமெயில் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொண்டன என்று செய்திகள் வெளியிடுகின்றன.   இது போன்ற இயக்கங்களின் பெயர்கள் எப்போதுமே இஸ்லாமியப் பெயர்களாக இருக்கும்.  ஒரு ஈமெயிலை யாரோ ஒரு விஷமி எளிதாக அனுப்பமுடியும்.  ஆனால் இதை டிவிக்களில் செய்தியாக காட்டுவதும், செய்தித் தாள்களில் அச்சிடுவதும் இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற போக்கு உள்ளது.

உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள்.  ஆனால் இது போலச் செய்திகள் வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கும். தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக எஸ்எம்எஸோ ஈமெயிலோ அனுப்பும் நபரின் நோக்கம் நிச்சயமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான்.  இது பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி.   தெரிந்தோ தெரியாமலோ இந்திய ஊடகம் இந்தத் தந்திரத்தை கையாளுவது சரியா ?

ஊடகத்துறையில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டினேன்.   ஊடகத்தில் மட்டுமல்லாமல், நீதித் துறை அரசு நிர்வாகம் போன்ற துறைகளிலும் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் அனைவரும் இணைந்து இந்தக் குறைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

ஊடகத்துறையில் உள்ள குறைகளைப் போக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளது.   ஒன்று பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் தீர்க்கும் ஜனநாயக வழி.  மற்றொன்று அரசு விளம்பரங்களை நிறுத்துவது, கடுமையான அபராதம் விதிப்பது என்ற கடுமையான வழி.

என்னுடைய கருத்தில் ஜனநாயகபூர்வமான வழியை முதலில் கடைபிடிக்க வேண்டும்.   இதன் பொருட்டு, நான் ஊடகத் துறையினரை, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்துறையினரை அடிக்கடி சந்தித்து உரையாடலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.  அந்த விவாதங்களின் போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமல், நாமே சுயபரிசோதனை செய்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை கண்டறியலாம்.  இந்த கலந்துரையாடல்கள் இரண்டு மாதங்களுக்கோ, மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை நடக்கலாம். அப்போதுதான் மக்களுக்கு ஊடகம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

ப்ரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் தொலைக்காட்சி ஊடகம் வராது என்றாலும் கலந்து உரையாடுவதில் தவறேதும் இல்லை.  அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் இரண்டுக்கும் சமமான பொறுப்பு உள்ளது.

ஒரு வேளை ஊடகங்கள் ஒத்துழைக்க மறுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால், அதற்கு முன்பாக விவாதங்களின் மூலம் சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ளலாம்.  இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு தொலைக்காட்சிகளுக்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளைக் கூட தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை ப்ரஸ் கவுன்சிலின் பணி தாவாக்களை தீர்த்த வைப்பது மட்டுமே.  ஆனால் நான் ப்ரஸ் கவுன்சிலை சமரச மையமாக மாற்ற வேண்டும் என்றும், அதுவே ஜனநாயகபூர்வமான வழி என்றும் கருதுகிறேன்.  இதற்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

இந்தியா மிக முக்கியமான மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.  விவசாயச் சமூகமாக இருந்து வந்த இந்தியா தற்போது தொழில் சார்ந்த சமூகமாக மாறி வருகிறது. 16 முதல் 19ம் நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய வரலாற்றைப் படித்திருப்பீர்க ளேயானால் தொழில் புரட்சி நடந்த அந்த காலகட்டத்தில் கடும் கலவரமும், குழப்பங்களும், போர்களும் நடந்தது என்பதைக் காண முடியும். அந்த நெருப்பில் குளித்த பிறகே ஐரோப்பா தற்போது உள்ளது போல நவீன சமுதாயமாக மாறியது.  தற்போது இந்தியா அந்த நெருப்பில் இறங்கியுள்ளது.   இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியா ஒரு நவீன தொழில் சார்ந்த சமூகமாக மாறும் வரை மிகுந்த வேதனையான காலகட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஊடகங்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சமூகத்திற்கு உதவ வேண்டும்.   சாதி உணர்வு, மத உணர்வு போன்றவற்றுக்கு எதிராக எழுதி நவீன விஞ்ஞான உணர்வுகளை வளர்க்கலாம்.

முடிக்கும் முன்பாக அஜ்மீர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மருத்துவர் டாக்டர் கலீல் க்ரிஸ்டியை விடுவிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்கிறேன்.  கலீல் சிஸ்டி 80 வயதானவர்.  அவர் இன்னும் நீண்ட நாள் வாழப் போவதில்லை.  அவர் மிகச் சிறந்த மருத்துவர்.   கராச்சி மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு, எடின்பர்க் பல்கலைகழகத்தில் பிஎச்டி முடித்தவர்.   அவர் ஒரு இதய நோயாளி. மேலும் பல்வேறு நோய்களும் அவருக்கு இருக்கிறது.   அவரால் நடக்க முடியாது.   மனிதத்தன்மையோடு அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  விடுதலை செய்யப் பட்டால் அவர் கராச்சியில் உள்ள தனது மனைவியோடும் மகளோடும் அவர் இறுதிக் காலத்தை கழிக்க முடியும்.   பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கோபால் தாஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்தது.  ஆனால் இந்திய அரசு பல மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர், பிரதமர், ராஜஸ்தான் மாநில ஆளுனர் ஆகியோருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நாம் இவரை விடுதலை செய்தால், இந்தியாவின் நன்மதிப்பு கூடும்.  ஆனால் இவர் இந்தியச் சிறையில் இறந்தால, நமக்கு தீராத அவப்பெயர் உண்டாகும்.

 

Comments  

 
0 #46 kathir 2011-11-10 10:54
பணம் வாங்கி கொண்டு செய்தி போடும்போது அங்கே நடுநிலைமை செத்து விடுகிறது சார். கால்பக்கம் விளம்பரம் கொடுத்தால் ஒரு செய்தி! அரை பக்க விளம்பரத்திற்கு ஒரு செய்தி!! இதில் எங்க நடுநிலைமை, புண்ணாக்கு எல்லாம். அதை விட கொடுமை தேர்தல் நேரத்தில் பேக்கேஜ் ஒரு புதி பேரை வைத்து கொண்டு விளம்பரம் கொடுத்தவன் குண்டி கழுவினாலும் செய்தியாக போடும் போது அந்த நிருபரின் மனநிலையை நினைத்து பாரு ங்கள். கவுரவமான பணி என வந்துவிட்டு விளம்பரம் வாங்க சொல்லி இவர்கள் படுத்தும் பாடு நாலு பொம்பளையை வைத்து விபச்சாரம் நடத்திவிட்டு போய் விடாம் சார். . . இந்த துறையை மாற்ற முடியாது. நான் சொல்வது நாளிதழ்களை.
Quote
 
 
0 #45 kathir 2011-11-10 10:53
பணம் வாங்கி கொண்டு செய்தி போடும்போது அங்கே நடுநிலைமை செத்து விடுகிறது சார். கால்பக்கம் விளம்பரம் கொடுத்தால் ஒரு செய்தி! அரை பக்க விளம்பரத்திற்கு ஒரு செய்தி!! இதில் எங்க நடுநிலைமை, புண்ணாக்கு எல்லாம். அதை விட கொடுமை தேர்தல் நேரத்தில் பேக்கேஜ் ஒரு புதி பேரை வைத்து கொண்டு விளம்பரம் கொடுத்தவன் குண்டி கழுவினாலும் செய்தியாக போடும் போது அந்த நிருபரின் மனநிலையை நினைத்து பாரு ங்கள். கவுரவமான பணி என வந்துவிட்டு விளம்பரம் வாங்க சொல்லி இவர்கள் படுத்தும் பாடு நாலு பொம்பளையை வைத்து விபச்சாரம் நடத்திவிட்டு போய் விடாம் சார். . . இந்த துறையை மாற்ற முடியாது. . . நான் சொல்வது நாளிதழ்களை.. .
Quote
 
 
0 #44 raje 2011-11-03 00:24
Can you something about this??http://www.youtube.com/watch?v=sK5NS_ix40s&feature=share
Quote
 
 
0 #43 arun karthick 2011-11-02 18:50
this is 100 true. but the media oweners did not follow the judge comments. there only aim to increse there circulation and revinew. they are not bather about the pepole and their econmic problems
Quote
 
 
+2 #42 மண்ணடி அம்ஜத் 2011-11-01 13:08
வாட்டர் கேட் ஊழலை உலகுக்கு அம்பலப்படுத்தி அமெரிக்க அதிபர் நிக்சன் ஐ பதவி விலக வைத்தது இரு பத்திரிக்கயாளர் கள் தான். பத்திரிக்கை என்றால் இப்படி இருக்க வேண்டும்.

கொஞ்சம் கூட சமுதாய அக்கறை இல்லாத ஊடகம் தான் இன்று நம்மிடம் இருக்கின்றன ..

மார்க்கண்டேய கட்ஜு மிகவும் சரியாக சொல்லி இருக்கிறார். இவரது இந்த பேச்சு எந்த பத்திரிக்கையும் வெளி இட்டு இருக்காது. பாவம் இவர்களுக்கு ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முக்கிய பணி இருக்கும் பொது இதை எப்படி எழுதுவார்கள்.

தீபாவளிக்கு என் ஹிந்து நண்பர்கள் கொடுத்த இனிப்பு இன்னும் என் நாவில் ஒட்டி கொண்டு இருக்கு. அவர்களுக்காக பக்ரித்.க்கு கொடுக்க பிரியாணி என் வீட்டில் தயார் ஆகி கொண்டு இருக்கு.

சில விசம பத்திரிக்கைக்கு நான் சொல்லி கொள்கிறேன். எங்களை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது டா...

இது தமிழ் நாடு டா... நாங்க தொப்புள் கோடி உறவா வாழ்ந்து கொண்டு இருக்கோம்.. எங்களுக்கு நீங்க நல்லது பண்ண வேண்டாம்.. தயவு செய்து கெட்டது பண்ணாதீங்க..
Quote
 
 
+2 #41 முகமது இக்பால் 2011-10-31 17:27
இவரைப்போல மற்ற ஒவ்வொரு துறைக்கும் ஒரு நல்லவரை தலைவராக நியமித்தால் நாடு உருப்படும் வழியை நோக்கி வீருநடைபோடும்!

அன்புடன்
முகமது இக்பால்
Quote
 
 
0 #40 AROKIARAJ 2011-10-31 14:38
Hallo Mr Honerable markandaya katjee sir Try to ask why immplemented ECNR on passports?
Due to ECNR on pasasports how much loss / year?
Why stopped the program in JAYA TV -Ine achamillai achamillai????
Why manmohan singh implemented the rules of MINISTRY OF BROADCASTING???
He is the headless chicken?????
Quote
 
 
0 #39 போதிதர்மன் 2011-10-30 01:40
அன்பின் சவுக்கு ஷங்கர் அவர்களுக்கு
தங்களுடன் இணைந்து தமிழ் ரீடர் இனயதளம் செயல்படுகிறதா? அதிமுக அபிமானி வீரா என்கிற அன்பலகன் வீரப்பன் ரியல் எஸ்டேட் துறை ஆள் தானே அவரோடு சேர்ந்து நியாயமான முறையில் செய்திகள் வெளியிடுகிறேர்க ள் என்று நாங்கல் நம்பலாம? தமிழர் விரோத கருத்துகள் வெளியிடும் வீரா போன்ற ஆக்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் நீங்கள் அன்னை படத்தை வர்த்தக நோக்கத்திற்கு பயன்படுத்த வில்லை தானே?
நீங்கள் விளக்கம் தரயில்லை எண்டால் இதை பற்றி விரிவான பதிவு எழுதப்படும்
Quote
 
 
0 #38 saran 2011-10-29 19:19
சவுக்கு சார் கூடன்குலம் பத்தியும் எதவது எழுதுன்கலேன்.
Quote
 
 
0 #37 ss 2011-10-29 17:12
சவுக்கு அவர்களே, பணத்துக்கு செய்தி ரிபோர்ட்டின் தமிழாக்கம் பதிவு செய்யுங்களேன். நன்றி.
Quote
 
 
+3 #36 மால்கம் X இராஜகம்பீர 2011-10-29 13:35
உண்மையில் தீவிரவாதம் என்பது ஒன்று இல்லவே இல்லை, ஊடகத்தீவிரவாதமு ம் அரசபயஙகரவாதமும் மட்டுமே நடைமுறையில் உள்ளது. ஊடகங்கள் அரசபயங்கரவாதத்த ிற்கு ஊதுகுழலாக செயல்படும் வரையிலும். வெறுப்பு அரசியலுக்கு ,வக்கிர அரசியலுக்கு துனை போகும் வரையிலும் நாடு அழிவினை மட்டுமே எதிர் நோக்கும். நீதியரசர் மார்கண்டேய கட்ஜு போன்ற நடு நிலையாளர்கள் பொதுதளத்திற்கு வருவது ஒரு ஆரோக்கியமான விசயமாகும்.
தொழிற்புரட்சிக் கு பிந்தைய நாடு எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை ஐரோப்பிய நாடுகளின் வரலாறுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் தொலை நோக்கு பார்வை மிகவும் சத்தியமான வார்த்தைகள்
Quote
 
 
+19 #35 soorya chandhiran 2011-10-28 21:52
நீதியரசர் மிகுந்த கவலையோடும், தீவிரமான பொறுப்புணர்வோடு ம், உண்மையான மனித நேயத்துடனும், அவசரத் தேவையையும் ஆழமாக சிந்தித்து எடுத்துரைத்துள் ளார். பொறுப்பு உணர்ந்து செயல்படவேண்டியத ு அனைவரின் தலையாய கடமையாகும்.
Quote
 
 
+4 #34 Arun Chennai 2011-10-28 16:02
இதை எத்தனை ஊடகன்கல் பின்பட்ர பொகின்ட்ரன? இவர் சொல்வது முட்ரிலும் பின் பட்ர படவென்டும்..
Quote
 
 
+2 #33 paithiam 2011-10-28 15:27
It is nice to hear golden words from judge..Media should change especially thats important..u done a great job savuku
Quote
 
 
+1 #32 Kuruvi 2011-10-28 15:14
Very good article.
Quote
 
 
+2 #31 hello 2011-10-28 11:22
அவர் சொல்வது 100 % உன்மை..
Quote
 
 
+14 #30 abu riyaz 2011-10-28 09:30
//உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள். ஆனால் இது போலச் செய்திகள் வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கும். தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக எஸெமெஸோ ஈமெயிலோ அனுப்பும் நபரின் நோக்கம் நிச்சயமாக இந்துக்களுக்கும ் முஸ்லீம்களுக்கு ம் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான ். இது பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி. தெரிந்தோ தெரியாமலோ இந்திய ஊடகம் இந்தத் தந்திரத்தை கையாளுவது சரியா ?//

மக்களே சிந்தியுங்கள். பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியைதான் சில மீடியாக்கள் பணத்திற்க்காக இன்னும் செவ்வனே செய்துகொண்டிருக ்கிறார்கள்.
Quote
 
 
+7 #29 mugavaimustafa 2011-10-27 22:50
செய்தி துறையில் இருப்பவர்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் .இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்திருக்கிற ார்.

முகவைமுஸ்தபா
Quote
 
 
+2 #28 muralikrishnan 2011-10-27 22:43
it's a real factor he has told very clearly and boldly all media houses has to watch at any cost.Let us wait and see.
Quote
 
 
+4 #27 anniayn 2011-10-27 22:06
//உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள்//
சவுக்கு,
இந்த மார்கண்டேய கட்ஜுவின் அறிவுரை அவசியம் தேவை.
நியாபகம் இருக்கா? சுப்ரமணியம் சுவாமி பார்ப்பனன், அதனாலதான் தலித்தான ராஜா மேல மட்டும் கேஸ் போட்டுட்டு கருணாநிதி , சோனியாவை எல்லாம் விட்டுட்டர்னு சொன்னீங்களே? அப்போ இந்த 1% - 99% ration தெரியலையா? இப்ப கருணாநிதி , சோனியா மேலயும் சுவாமி கேஸ் போட்டுட்டார்.. இப்போ என்ன நினைக்கறீங்க? சுவாமி மேல கேஸ் போட்டீங்களே, மத துவேஷத்த பண்ணறார்னு, சோனியா ஹிந்துக்கள் மட்டும்தான் இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையு ம் கொடுமைப் படுத்தராகன்னு சட்டம் கொண்டுவந்தப்ப என்ன பண்ணீங்க?
Quote
 
 
+10 #26 மேர்கத்திய புத்தி 2011-10-27 20:30
மறுபடியும் சன் டிவிகாரனுக்கும் போலிசாமி நித்யானந்தாவுக் கும் எதாவது பிரெச்சனை வந்தா, அந்த வீடியோவை கூசாமல் டெலிகாஸ்ட் செய்வார்கள். தமிழ்நாடே நாசமா போனாலும் தன் தொழில் லாபமா நடக்கணும்னு நெனைக்கற சன் குழுமம், நக்கீரன் போன்றவர்களை கடுமையான சட்ட வழியில் தான் கட்டுபடுத்த வேண்டும். பணப்பேய்கள் சுய பரிசோதனை முறையை கேலிக்கூத்தாக்க ி விடுவார்கள் .
Quote
 
 
+11 #25 டயாப்பர் டக் 2011-10-27 18:19
நல்ல ஆரோக்கியமான் வாதம், காசுக்கு விலைபோன எந்த பத்த்ரிக்கையிலு ம் இந்த செய்தி வெளியாகவில்லை. பத்த்ரிக்கைகள் மீண்டும் மீண்டும் திக்விஜய் சிங் போன்ற அற்ப அரசியல்வாதிகளின ் பேட்டிகள் அன்னா ஹசாரே குழுவின் மீது சேரை வார்க்கும் செய்திகள் பெய்டு நியூஸ் என்றுகொள்வதைதவி ர வேறேன்ன செய்யமுடியும்? இதைகண்டு அரைகுறை அரசியல்வாதிகளும ் அரைவேக்காடாக மாறுவார்கள்.

தஞ்சை மாவட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு திராவிட பாரம்பரியக் கட்சியின் வேட்பாளருக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிறுத்தப்பட்டார ். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு நல்ல பெயர் உண்டு. பணம் கிடையாது. இந்த நல்ல பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக, "கம்யூனிஸ்ட் வேட்பாளர் உண்மையில் ஏழை அல்ல, அவருக்கு நிறைய விளைநிலம் இன்ன ஊரில் இருக்கிறது' என்று திராவிடக் கட்சி வேட்பாளர் ஒவ்வோர் ஊரிலும் தனக்கே உரித்தான கவர்ச்சிச் சொற்பொழிவாற்றலு டன் துணிந்து பொய்யை உண்மை என்று நம்பும் அளவுக்குப் பேசத் தொடங்கினார்.தொலைக்காட்சிகளோ , பத்திரிகைகளோ அதிகம் இல்லாத காலம் அது. "என்னைத் தேர்ந்தெடுத்தால ் நான் இந்தத் தொகுதிக்கு இன்னவெல்லாம் செய்வேன்' என்று சொல்வதைவிட்டுவி ட்டு, "மாற்று வேட்பாளர் சொல்வது உண்மையல்ல. எனக்கு நில புலன்கள் கிடையாது' என்று எல்லா கூட்டங்களிலும் விளக்கம் சொல்வதிலேயே அந்தக் கம்யூனிஸ்ட் வேட்பாளரின் பொழுதெல்லாம் கழிந்து, தேர்தலில் தோற்றும் போனார்.

இப்போது கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் நிலைமையைப் பார்த்தால், இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. அவர்கள் தங்களது லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தையும் அதன் உயரிய நோக்கம் என்ன என்று விளக்குவதையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சுவாமி அக்னிவேஷ், காங்கிரஸின் திக்விஜய் சிங் போன்றவர்களுக்கு "நாங்கள் நல்லவர்கள், பிழை செய்யவில்லை' என பதில் சொல்லிக்கொண்டிர ுக்கிறார்கள். லோக்பால் என்ற சொல்லே ஏறக்குறைய எல்லோரும் மறக்கும் நிலைமைக்கு வந்தாகிவிட்டது-தினமணி.அப்துல் கலாம் கூறியதுபோல், நல்லவர்களைபற்றி செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடுங்கள். அது நல்ல பலரை ஊக்குவிக்கும், இல்லாவிடில் பாப்புலாரிட்டி என்னும் மயைக்குக்கும், பணத்திற்கும் அடிமையாகி, நாசமாவோம். நன்றி, சவுக்கு.
Quote
 
 
+2 #24 mohan jpt 2011-10-27 15:07
சரியான கருத்து. இதை ஊடகங்கள் உடனடியாக பின்பற்றுவது சமுதாயத்திற்கு நல்லது. கலீல் க்ரிஸ்டியை உடனடியாக விடுதலை செய்யவேன்டும்.
Quote
 
 
0 #23 Rangaraaj Raajendran 2011-10-27 14:06
A very good speech by a a very good judicial scholar.
Quote
 
 
+3 #22 ven 2011-10-27 12:10
ஊடகத்துறைக்கு சரியான நெத்தியடி.வாழ்க நீதியரசர் மார்கண்டேய கட்ஜு அவர்களே.
Quote
 
 
+1 #21 Gowrishankar L 2011-10-27 11:54
He seems to be very genuine, i do agree with his point of view. Press people should be unbaised.
In that case, i appreciate SAVUKKU for it's work.

All best Mr.Savukku.
Quote
 
 
+3 #20 jagant 2011-10-27 11:44
அருமையான கருத்துக்கள். ஊடகத்துறையினர் இதற்கு மதிப்பளிக்கவேண் டும்.
Quote
 
 
0 #19 MuthuSivaa 2011-10-27 11:05
Do you know that many of the Govt (both central and state govt.) give advertisement on behalf - not to project their bad administration and bad happenings in their period - using every citizen`s money paid as tax - especially congress govt in center - even big giants both TV and press are getting money - even it uses intelligent agency`s confidential money for this - Kadjoo can u regulate this - if so well and good.
Quote
 
 
-3 #18 boomi 2011-10-27 09:53
சபாஷ். சவுக்குக்கும் விழுந்த சவுக்கடி தான்
Quote
 
 
-9 #17 பொது ஜனம் 2011-10-27 08:46
எல்லா ஜாதியிலயும் கெட்டவங்க இருக்காங்க தான், ஆனா...

இங்க எவ்ளோ பிரச்சின இருக்கும் போது, அது இன்னா நைனா பாகிஸ்தான் மருத்துவரை விடுதலை பண்றத பத்தி பேசுற..

ஆரம்பமே சந்தேகமா இருக்கே!!
Quote
 
 
-8 #16 Sreenivasan 2011-10-27 08:41
//நாம் இவரை(கலீல் க்ரிஸ்) விடுதலை செய்தால், இந்தியாவின் நன்மதிப்பு கூடும். ஆனால் இவர் இந்தியச் சிறையில் இறந்தால, நமக்கு தீராத அவப்பெயர் உண்டாகும்.//

இது எப்படின்னு புரியல
Quote
 
 
+1 #15 rln swanzey 2011-10-27 00:08
நிட்சயமாக நல்ல கட்டுரை. கலீல் க்ரிஸ்டி எதர்க்காக நம் சிறையில் இருக்கிரார் ??? அதை இக்கட்டுரை சொல்ல வில்லை...
Quote
 
 
+5 #14 sathish77 2011-10-26 22:58
இந்த பேட்டியையும் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யத்தான் போகின்றன. மானங்கெட்டவர்கள ்.
Quote
 
 
+6 #13 Palaniappan 2011-10-26 22:06
//உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள். ஆனால் இது போலச் செய்திகள் வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கும்.// இது சவுக்குக்கும் பொருந்தும் தானெ....சவுக்கு ஜாதி வெறி பற்றி எழுதும் போது ஏன் இந்த நோக்கில் பார்க்கவில்லை....எல்லா ஜாதியிலும் வெறியர்கள் உள்ளனர்,கொலைகார ன் கொள்ளைக்காரன் உள்ளனர்....ஆனா; தேவர் ஜாதி பற்றி எழுதும் போது மட்டும் சவுக்கு வசதியாக இதை மறைத்து-100% தேவர் மக்களும் வெறியர் போல் எழுதுவது என்ன நியாயம்...எந்தஜாதியாக இருந்தாலும் அந்த ஜாதியில் உள்ள ஜாதி வெறியர்கள் என்றல்லவா இருக்க வேண்டும்....தமிழகம் முழுதும் கணக்கெடுத்தால் அணைத்து ஜாதியிலும் வெறியர்களும் இருப்பார்கள், நல்லவர்களும் இருப்பார்கள்-இதில் முன்னேறிய ஜாதி பிரபடுத்தப்பட்ட ஜாதி, ஒடுக்கப்பட்ட ஜாதி என வேறுபாடுகள் கிடையாது....இப்போது இருக்கும் ஜாதிய தலைவர்களில் பலர் –அவர்கள் பிற்படுத்தப்பட் டவர் அல்லது ஒடுக்க பட்டஜாதி –எதுவாகிலும் அவர்கள் ஜாதியை முற்றாக மறுக்கும் திராவிட-பகுத்தறிவு இயக்க பின்புலத்தில் இருந்து வந்தவர்களே...சவுக்கிடம் இருந்து இந்த அணுகுமுறையை ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது முறையே....
மேலும் ஜாதிய தூண்டல் தொடர்பான பின்னூட்டங்களை எந்த சாதியினராக இருந்தாலும் வெளியிடாமல் சவுக்கு சமூகத்திற்கு உதவலாமே
Quote
 
 
+4 #12 குமார. இரவிக்குமார் 2011-10-26 20:32
மிகச் சிறப்பான கட்டுரை. ஒவ்வொரு சொல்லும் பின் பற்ற வேண்டியவை. தான் ஏற்றுக் கொண்ட பணியின் பொறுப்பை மிகச் சரியாக உணர்ந்துள்ளார் மார்க்கண்டேய கட்ஜு. ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட பத்திரிக்கைப் பெருச்சாளிகள் அவ்வளவு சுலபமாக மாறிவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போம். பத்திரிக்கைகள் மாறினால் மட்டும் போதாது, வாசகனும் தன்னுடைய படிப்பு தரத்தை உயர்த்த வேண்டும்.
Quote
 
 
+4 #11 அரசை புதியவன் 2011-10-26 19:40
நல்ல கட்டுறை பத்திரிக்கைகள் பின்பற்றுமா ?
பொருத்திருந்து பார்ப்போம்
Quote
 
 
+4 #10 raju 2011-10-26 17:47
அவர் சொன்னது மிக சரி அரசியல் சார்பர்ர நடு நிலயானா பத்த்ரிகாஈ டிவி வென்டும்
Quote
 
 
+7 #9 nadunilaiyaaLan 2011-10-26 16:55
நூற்றுக்கு நூறு உண்மை. ஐஸ்வர்யா ராய்க்கு சீமந்தம், அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கும் என்பது போன்ற செய்திகளை நான் சமீபத்தில் பத்திரிகைகளில் படித்தேன். எவ்வளவோ சமூக பிரச்சினைகள் , சட்ட பிரச்சினைகள் , மருத்துவ பிரச்சினைகள் , அரசியல் பிரச்சினைகள் இவற்றை அலசுவதை விடுத்து, கள்ளக்காதல், கொலை, கொள்ளை போன்ற நிகழ்ச்சிகளுக்க ு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றன. நீதித்துறையில் பல்வேறு குறைகள், களைகள் உள்ளன. சவுக்கின் நேற்றைய பதிவில் வந்த "ஒரு விசித்திர வழக்கு" ஒரு உதாரணம். அடிப்படை ஆதார ஆவணங்கள் இல்லாமல் வாதியின் கூற்றினை அப்படியே ஏற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்வது, வாய்தா மேல் வாய்தா வழங்குவது, வழக்கை தொடுத்த வாதி, நீதி மன்றத்திற்கு ஆஜராகததால் வழக்கை தள்ளுபடி செய்வதால் எத்தனை நேர விரயம், சட்டத்திலுள்ள ஓட்டைகள், இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். இவற்றையெல்லாம் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், அந்த நடிகை நடு ரோடில் சண்டை போட்டார், அவருடைய 2 வது கணவரை விவ்வக ரத்து செய்து முதல் கணவருடன் இணைகிறார் என்பது போன்ற செய்திகளை வெளியிட்டு, சமூக பொறுப்பின்றி நடந்து கொள்கிறார்கள்.
Quote
 
 
+3 #8 noname 2011-10-26 16:41
நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து.
Quote
 
 
+7 #7 raasaa 2011-10-26 13:27
டாக்டர் கலீல் கிரிஸ்ட்டி என்ன தவறு செய்தார் எனத்தெரியவில்லை . எது எப்படி ஆயினும் 80 வயதுக்காரரை விடுதலை செய்வது சாலச்சிறந்தது. நீதி அரசர் கட்ஜு அவர்களுக்கு பாராட்டுக்கள்
Quote
 
 
+3 #6 gjjp 2011-10-26 10:57
நீதிபதி குறிபிட்டது போல் தான் இன்றைய பத்திரிகைகள் உள்ளன.
லாபம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு செய்தி வெளி இடுகின்றன.
இவர்களுக்கு உண்மையில் கடிவாளம் இட வேண்டும்.
Quote
 
 
-4 #5 vennai 2011-10-26 10:52
மருத்துவர் டாக்டர் கலீல் க்ரிஸ்டியை viduvikka nee enna PALAN ethirparkirai??? andha alavu nermayana asaamiya nee??????
Quote
 
 
+9 #4 சவுக்கின் விசிறி 2011-10-26 08:00
நல்ல கருத்துக்களை பத்திரிகையாளர்க ளுக்கு தந்திருக்கிறார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ. அவரது கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டியவர்கள் பத்திரிகையாளர்க ள் இல்லை. பத்திரிகைகளை நடத்தும் தொழிலபதிபர்கள். இந்த நாட்டுல் பத்திரிகை அதிபர்கள் நினைத்தால், 99 சதவிகிதம் ஊழலை ஒழித்துவிட முடியும். 99 சதவிகிதம் அரசு நிர்வாகம் சீராகும். 99 சதவிகித மக்கள் மகிழ்ச்சியுடனும ் அடிப்படை வசதிகளுடனும் வாழ முடியும்.
இதை எல்லாம் மார்கண்டேய கட்ஜூ சொல்லாவிடினும், பத்திரிகை அதிபர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இது செவின் காதில் ஊதிய சங்கு தானே தவிர, வேறேதும் இல்லை.
Quote
 
 
+4 #3 nsharma 2011-10-26 05:30
நல்ல கருத்துக்கள். Is there any one up there listening to this?
Quote
 
 
+13 #2 LosAngels Vasagar 2011-10-26 01:09
நன்றி . சமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகையில் வந்த செய்தியினை சொல்ல விரும்பிகிறேன் .
26-அக்டோபர் ௨011 அன்று வந்த "டூட்டி நேரத்தில் லூட்டியா? கிளுகிளு புகாரில் சேலம் எஸ்.பி.!" என்ற செய்தி தலைப்பில் ''சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இருக்கும் கூடமலை வாக்குச் சாவடிக்கு உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக போச்சம்பள்ளி 7-வது சிறப்பு காவல் படை பிரிவைச் சேர்ந்த xxxxxxxxx என்ற பெண் எஸ்.ஐ. வந்திருந்தாங்க. அந்த சமயத்தில், அங்கே ரவுண்ட்ஸ் வந்த ஆண் எஸ்.பி-யோட காருல xxxxxxxxx ஏறி போயிட்டாங்க.சாய்ந்திரம் வாக்குப் பதிவு முடியும் நேரத்தில்,ஆண் எஸ்.பி.yyyyyyyyy நோட காரில் வந்து xxxxxxxxx பெண் எஸ்.ஐ. இறங்கினாங்க".

இதில் செய்தி தலைப்பிற்கும் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை. இவர்களாக கற்பனை செய்து எழுதி இருகிறார்கள் . இதில் கண்டிக்க பட வேண்டிய விஷயம் என்ன வென்றால் அதில் சம்பந்த பட்ட ஆண் மற்றும் பெண் போலீஸ் இருவர் உடைய பெயர்களையும் வெளியிட்டு இருகிறார்கள். பத்திரிகை நிருபர் என்ன விளக்கு பிடித்து பார்த்து கொண்டு இருந்தாரா ?? அந்த செய்தி பொய் எனும் போது அதில் சம்பந்த பட்ட ஆண் மற்றும் பெண் போலீஸ் மன நிலை எப்படி வேதனை பட்டு இருக்கும் ??? அவர்களுடைய உறவினர்கள் எப்படி வேதனை பட்டு இருப்பார்கள் ?? கொஞ்சம் கூட நிருபர்கள் யோசிக்க மாட்டார் களா.

இதில் அந்த ஆண் போலீஸ் "அவங்க என் சொந்தக்காரப் பொண்ணு. எனக்கு மகள் உறவு முறை" என்று வேறு கூறுகிறார் . அப்படியும் அந்த தலைப்பு தேவையா ?
Quote
 
 
+3 #1 nellai-ppr 2011-10-25 23:23
good speech
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 480 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8065
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week29264
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month231996
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12754115